ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-9-6-8-

ஸ்ரீ ஆறாயிரப்படி –9-6-8-

கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–9-6-8-

இப்படி என்னுயிரை மாள புஜித்தே பின்னையும் புஜியாதானாய் வந்து புஜிக்கும்
-இப்படியே நாளும் நாளும் வந்து என்னை புஜித்து அருளினான் –
நான் தனக்கு அடிமையான இத்தனை அன்றோ -என்னை இங்கனே படுத்த வேணுமோ -என்கிறார்

————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –9-6-8-

நாள் தோறும் என்னை அனுபவித்து – புஜியா நின்றாலும் பெறாப்   பேறு பெற்றால் போலே வந்து புஜியா நிற்கிற இவனுடைய குணவத்தை ஒன்றும் பொறுக்க மாட்டு கிறிலேன் என்கிறார் –

கோள்  உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–9-6-8-

இதுக்கு முன்பு இப்படி இருப்பது ஓன்று பெற்று புஜித்து அறியாதாரைப் போலே என்னுயிரைத் தான் அபி நிவிஷ்டனாய் புஜித்தான் -நிர்ஹேதுகமாய் வந்து என்னை விஷயீ கரித்தான் என்றும் சொல்லுவார் -என்னால் கொள்ளப் படாதனனாய் தான் என்னை புஜிக்கும் என்று கருத்து -இப்படி நாள் தோறும் வந்து என்னை நிச்சேஷமாக புஜித்தான் –நிரதிசய போக்யனான திருக் காட்கரை அப்பனுக்கு நான் அடிமையான அத்தனை யன்றே –என்னை இங்கனம் படுத்த வேணுமோ –

————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –9-6-8-

அநந்தரம் அபேஷா நிரபேஷமாக நித்ய ஆதாரத்தைப் பண்ணுகிற இவர்க்கு
என்னாதமா பட்ட பாடே என்று ஹர்ஷத்தாலே ஈடுபடுகிறார் –

கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–9-6-8-

கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்-என்னாலே ஸ்வீ கரிக்கப் பட்டது அன்றியே என் ஆத்மாவை
தான் அபி நிவிஷ்டனாய் புஜித்தான்-அவ்வளவே அன்றி
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்-நாள் தோறும் அபூர்வமாக வந்து என்னை
ஸ்வரூபத்தோடு குணங்களோடு சரீரத்தோடு வாசியற அத்யாதரம் பண்ணி ஒன்றும் சேஷியாதபடி புஜித்தான்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு–கறுத்த நிறத்தை யுடைத்தாய் நீர் கொண்டு எழுந்த காளமேகம் போலே
திருக் காட்கரையிலே வர்த்திக்கிற என் ஸ்வாமியானவனுக்கு
ஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–அடிமைப்பட்டது இத்தனை அன்றோ -என் ஆத்மா பட்டது தான் –

——————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -9-6-8-

நாள் தோறும் என்னை அனுபவித்து – புஜியா நின்றாலும் பெறாப்   பேறு பெற்றால் போலே வந்து புஜியா நிற்கிற இவனுடைய குணவத்தை ஒன்றும் பொறுக்க மாட்டு கிறிலேன் என்கிறார் –

கோள்  உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–9-6-8-

கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்–என் பக்கல் ஒரு உபகாரம் கொண்டான் அன்றிக்கே நிர்ஹேதுகமாக வந்து என் ஆத்ம வஸ்துவை அனுபவித்தான் -இதுக்கு முன்பு இப்படி இருபத்தொரு நற் சரக்கு பெற்று அறியாதானாய் என் பக்கலிலே அபி நிஷ்டன் ஆனான் என்றுமாம் -தான் என்னால் கொள்ளப் படாதே என்னை புஜித்தான் என்றுமாம் –
நாளும் நாள் வந்து -ஒரு நாள் அனுபவித்து நம்மது அன்றோ என்று கை வாங்கி இருக்கை அன்றிக்கே நாள் தோறும் நாள் தோறும் அபூர்வமாக அனுபவியா நின்றான் –
என்னை முற்றவும் தானுண்டான்-சம்சாரத்திலே அணு பரிமாணமான இவ்வஸ்துவை விபுவான தான் விளாக்குலை கொண்டு அனுபவித்தான் என்கிற இது தனக்கு ஏற்றமாம் படி கௌரவியா நின்றான் -சிறிய என்னாருயிர் என்றது -தான் தம்மைப் பார்த்து -அவனுடைய ஆதரத்தைக் கொண்டு சொல்லுகிறார் இது –
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு-கறுத்த நீர் கொண்டு எழுந்த மேகம் போலே இருந்துள்ள வடிவை யுடையனாய் -வர்ஷிக்கைக்கு அம்மேகம் படிந்த ஸ்தலம் போலே இருக்கிற திருக் காட்கரையிலே வந்து நின்று அருளின என் ஸ்வாமிக்கு -வடிவது -வூரது -தனக்கு என்ன குறை யுண்டாய் இப்படி ஈடுபடுகிறான் –
ஆள் அன்றே பட்டது-அடிமை புக்க அத்தனை அல்லது ராவணாதிகளைப் போலே எதிர் அம்பு கோத்தேனோ
என் ஆர் உயிர் பட்டதே–-ஓர் ஆத்மவஸ்து படும்பாடு இது -எதிர்த்தார் உடம்பு இழத்தல் புண் பட்டத்துக்கு மருந்து இட்டு ஆற்றுதல் செய்யும் அளவின்றி பட்டது -குணத்தால் வரும் நோவு ஸ்வரூப கதமாய் பரிஹாரம் இல்லை இ றே –

———————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –9-6-8-

கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–9-6-8-

அபேஷா நிரபேஷமாக -இவருக்கு என் ஆத்மா பட்ட பாடே -ஹர்ஷத்தாலே -இதில் -ஈடுபட்டு அருளிச் செய்கிறார் –
தரைப் பட்டு முன்பு பேசினார்
கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்-நான் சுவீ கரிக்காமல் நீர் ஹேதுக்கமாக தானே வந்து அபி நிவேசத்துடன் புஜித்தான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்-அவ்வளவும் இன்றிக்கே நாள் தோறும் -பக்ஷம் தோறும் -மீண்டு மீண்டு
வருவதால் சேஷம் இருக்க வேண்டுமே -அபூர்வமாக வந்து -ஸ்வரூபம் குணங்கள் சரீரம் இத்துடன் என்னை அத்யாதரம் பண்ணி உண்டான்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு-ஸ்யாமள வர்ணன் -திவ்ய தேசம் நித்ய வாசம் செய்யும் என் அப்பனுக்கு
ஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–அன்றோ -என்றபடி -அடிமை பட்டது அன்றோ –ஹர்ஷத்தால் –
-நானும் உனக்கு பழ அடியேன் -தொன்மை அன்றோ சம்பந்தமும் கைங்கர்யமும் -இது அன்றோ நான் பெற்ற பாக்யம்

நாள் தொறும் என்னை அனுபவியா நின்றாலும்-பெறாப் பேறு பெற்றால் போலே
அனுபவிக்கிற இவனுடைய-குணத்தின் தன்மையை-பொறுக்க ஒண்ணுகிறது இல்லை-என்கிறார்

கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான் –
இதற்குப் பலபடியாக அருளிச் செய்வர் –
என் பக்கல் ஒரு உபகாரம் கொள்ளாமலே -ஒரு காரணமும் இன்றிக்கே –என் உயிரை அனுபவித்தான் –நிர்ஹேதுகமாக –
வெறிதே அருள் செய்வர் -8-7-5-
எந்நன்றி செய்தேனோ -4-5-9-
அன்றிக்கே –
இதற்கு முன்பு இப்படி பட்டது ஒரு சரக்கினைப் பெற்று அறியாதானாய் -பக்கம் நோக்கு அறியான் -2-5-2- போலேயும்
அனந்தன் பாலும் -பெரியாழ்வார் திருமொழி -5-4-8- போலேயும்
என் பக்கல் காதலை உடையவன் ஆனான் -என்னுதல் –
அன்றிக்கே –
என்னால் தான் கொள்ளப் படாது இருக்க-தான் யென்னைக் கைக் கொண்டான் -என்னுதல் –

உபகாரம் கொள்ளாமல் -சாதன பக்தி பண்ணாமல் -முதலில் -சொல்லி –
இத்தனை போக்கிய வஸ்து முன்பு பெற்றது இல்லையே -அடுத்து சொல்லி –
பிரதிபத்தி பண்ணாமல் வெட்டிப் போகவே -விலகிப் போகவே -நான் இருக்க -வந்து உண்டானே

நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான் –
ஒரு நாள் அனுபவித்து-இனி இது நாம் அனுபவித்தது அன்றோ -என்று-கை வாங்கி இருந்தானோ
நாள் தோறும் நாள் தோறும் வந்து –
அவனுடைய அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் இருக்கிறபடியைத் தெரிவித்தபடி –முற்றவும் தானுண்டான் –
அணு அளவிதான இவ் உயிரை-எங்கும் பரந்து இருக்கிற தான்-
விளாக்குலை கொண்டு அனுபவித்தான் என்கிற இது-தனக்கு ஏற்றமாம் படி ஆதரியா நின்றான் –
சிறிய என் ஆர் உயிரை -என்ற அது தம்மை பார்த்து-இது அவனுடைய அனுபவத்தைக் கொண்டு சொல்கிறார் –

காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு –
கறுத்த நீர் கொண்டு எழுந்த-காளமேகம் போலே இருக்கிற வடிவை உடையவனாய்
அம்மேகம் தான் மழை பெய்யும் இடத்திலே படிந்தாப் போலே
திருக் காட் கரையிலே வந்து-அண்மையிலே எழுந்து அருளி இருக்கிற-நிருபாதிக பந்துக்கு –
வடிவழகு அது
ஊர் அது
தனக்கு என்ன குறை உண்டாய் இப்படி படுகிறான் –

ஆள் அன்றே பட்டது –
அடிமை அன்றோ புக்கது -என்றது
இராவணன் முதலியோர்களை போன்று-எதிர் அம்பு கோத்தேனோ-என்றபடி –

என் ஆர் உயிர் பட்டதே –
ஓர் உயிர் படும் பாடே இது –எதிர்த்தார் உடம்பு இழத்தல்-
புண் பட்டதற்கு மருந்து வைத்து ஆற்றுதல் -செய்யும் அத்தனை அன்றோ-
இங்கு ஆர் உயிர் அன்றோ நோவு பட்டது
குணத்தால் வரும் நோவு ஸ்வரூபத்தோடு சேர்ந்ததாய்-அதற்கு மாற்று இல்லை அன்றோ –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading