ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-9-6-7-

ஸ்ரீ ஆறாயிரப்படி –9-6-7-

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-

இப்படி அவனைக் காண வேணும் என்னும் ஆசையால் அவனை நினைத்து அலற்றி அவசன்னமானவாறே
பின்னையும் பண்டு போலே என்னை அடிமை கொள்வாரைப் போலே வந்து புகுந்து
என்னுயிரை மாள புஜித்து பின்னையும் புஜியாதானாய் இருக்கும் என்கிறார் –

———

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –9-6-7-

எம்பெருமான் என்னை அடிமை கொள்வாரைப் போலே வந்து புகுந்து என்னுயிரை மாள நேரே  புஜித்து பின்னையும் புஜியாதானாய் இருக்கும் –

காட்கரை  ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-

வேட்கை நோய் கூர-அபி நிவேசம் மிக / கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே-நிச்சேஷமாக புஜிக்கப் பட்டே பின்னையும் சிறிது சேஷித்தது -தான் சாபேஷனாய் போகையாலே –

—————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –9-6-7-

அநந்தரம் அவனுடைய அதி வ்யாமோஹத்தினுடைய அபர்யவசானத்தாலே என் ஆத்மாவானது
புக்தமாய் இருக்கச் செய்தேயும் அவசிஷ்டம் யுண்டு என்னலாம் படி இரா நின்றது என்கிறார் –

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-

ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்-அடிமை கொள்வாரைப் போலே புகுந்து என் ஆத்மாவை
தன் பக்கலிலே க்ரஹித்துக் கொண்ட ஆச்சர்ய பூதனாலே புஜித்துக் கொள்ளப் படச் செய்தேயும்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–போகம் அவைசேஷிக்கப் பட்டது என்னலாம் படி இருக்கிற என் ஆத்மாவானது
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்-அவன் இருக்கிற திருக் காட்கரையை ஏத்தா நிற்கும் –
அதுக்குள்ளே நிற்கிற கண்ணா என்று பவ்யனான அவன் தன்னை அழையா நிற்கும் -அவ்வளவில் நில்லாதே
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்–அபி நிவேசம் ஆகிற ஈடுபாடு மேற்கொள்ள
அவன் பரிமாற்றத்தை நினைத்து சிதிலமாய் த்ரவித்து மங்கா நிற்கும் –

—————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -9-6-7-

காட்கரை  ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-

காட்கரை ஏத்தும் –அவனிலும் அவன் இருந்த வூரை ஏத்தும் –அதனுள் கண்ணா என்னும்-பரத்வத்தில் காட்டில் அவ்வூரில் புகுந்த பின்பு யுண்டான ஏற்றம் -என் கண்ணன் -என்னா காட்கரை ஏத்தும் -அவ்வூரை ஏத்தா அவன் தன்னை ஏத்தும் -இரண்டுக்கும் புறம்பு போகிறதில்லை –
வேட்கை நோய் கூர நினைந்து–அபி நிவேசம் மிகும் படி அனுசந்தித்து
கரைந்து உகும்--சிதிலமாய் -ஓர் அவயவி பிரதிபத்தி பண்ண ஒண்ணாத படி உகும் –
ஆட் கொள்வான் ஒத்து-அடிமை கொள்வாரைப் போலே புகுந்து – என் உயிர் உண்ட மாயனால்-என்னை வெறும் தரை யாக்கின ஆச்சர்ய பூதனாலே -கீழே திருவருள் என்று மறைத்துச் சொன்ன வார்த்தையை வெளியிடுகிறார் -கிட்டின போது தாழ நின்று மின்மினி பரக்க பரிமாறும் ஆச்சர்யம்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–என்னாத்மாவை நிச்சேஷமாக புஜிக்க செய் தேயும் இத்தலையிலே சிறிது சேஷித்தது –அவன் சாபேஷனாய்ப் போகையாலே இத்தலையிலே சிறிது சேஷித்தது என்று இருக்கிறார் -இப்போது இருந்து கிலேசப்படக் காண்கையாலே சிறிது தொடங்கிற்று உண்டு என்கிறார் -ஒரு சர்வஞ்ஞான் இல்லாத ஒன்றிலே இத்தனை வியாமோஹம் பண்ணக் கூடாது என்று இருக்கிறார் –

———–

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –9-6-7-

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-

உயிரான பாசுரங்கள் இது முதல் மூன்றும் –
திவ்ய தேசம் -பிரதானம் -இங்கே நித்ய வாசம் செய்வதால் அவனுக்கும் கும்பீடு –
ஈஸ்வரன் தனக்கேயாய் இருக்கும் -அசித்துப் பிறக்கேயாய் இருக்கும் -ஆத்மா தனக்கும் பிறர்க்கும் பொதுவாய் இருக்கும் —
என்ற முற்பட்ட நினைவு -அங்கண் இன்றிக்கே அசித்தைப் போலே தனக்கே யாக எனைக் கொள்ள வேணும் என்கிறது நமசாலே
அதாவது போக தசையில் ஈஸ்வரன் அழிக்கும் போது நோக்க வேணும் என்று அழியாது ஒழிகை –
அழிக்கைக்கு ஹேது கீழே சொல்லிற்று -மேலும் சொல்லும் -பிரணவத்திலும் -நாராயணாயா என்றத்திலும் —சூர்ணிகை -91-93-
அகாரம் இல்லாத பிரணவம் இல்லையே -அவன் விருப்பம் செய்வதே அடிமைத் தன்மை -திரு உள்ளம் படியே வேதம் சொல்லும் –
எதிர் விழி கொடுக்கும் பார தந்தர்யம் -அவனுக்கு பிடித்ததே செய்ய வேண்டும் –
அசித்து போலே பாரதந்தர்யம் -அவனுக்கே என்ற நினைவால் -அவன் அனுபவம் வளர்க்க -இதுவும் வேண்டுமே -அவன் போகம் அழிக்க கூடாதே –
அவனுடைய அதி வியாமோகத்தின் -ஆத்மா உண்டாய் பட்டாலும் மீதி உள்ளது என்னும் படி
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்-திவ்ய தேசம் ஏத்தும் -பவ்யன் கண்ணா என்று கூப்பிடும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்-அபி நிவேசம் -பரி மாற்றம் நினைத்து -மங்கா நிற்கும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்-ஆச்சர்ய பூதன்
எதிர் விழி இருக்கும் பார தந்தர்யம்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–கோள் உண்டே உண்ணப் பட்டாலும் -மீதி உள்ளதே –

அடிமை கொள்வாரைப் போலே புகுந்து-என் உயிரை நேராக உண்டு-
பின்னையும் உண்ணாதாரைப் போலே-இருக்கும் -என்கிறார் –

காட்கரை ஏத்தும் –
அவனிலும் அவன் இருந்த ஊரை ஏத்தும் –

அதனுள் கண்ணா என்னும் –
பரத்துவத்தைக் காட்டிலும்-அவ் ஊரில் புகுந்த பின்பு உண்டான ஏற்றம் –
என் கண்ணா என்ன -மேல் பாசுரத்தில் சொல்லி-இதில் -காட் கரை ஏத்தும்-
அவ் ஊரை ஏத்தா அவனை ஏத்தும் –இவ்விரண்டுக்கும் புறம்பே போகிறது இல்லை –

வேட்கை நோய் கூர நினைந்து –
ஆசை மிகும்படி நினைந்து –

கரைந்து உகும் –
உருக் குலைந்து-ஒரு அவயவி என்று நினைக்க ஒண்ணாத படி உகும் –

ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால் –
அடிமை கொள்வாரைப் போலே புகுந்து-என்னை வெறுந்தரை ஆக்கின-ஆச்சர்யத்தை உடையவனாலே
மேலே -திருவருள் -என்று மறைத்துக் கூறியதை-வெளியிடுகிறார் –
கிட்டின போது தாழ நின்று மின்மினி பறக்க-செயல் புரிந்த ஆச்சர்யத்தை நினைந்து -மாயனால் -என்கிறார் –

கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே –
என் ஆர் உயிர் கோள் உண்டே -கோட் குறை பட்டது-
என் உயிரைக் குறை இல்லாதபடி உண்ணச் செய்தேயும்-அவன் குறைவாளனாய்-விருப்பம் உள்ளவனாய்
போகையாலே-இத்தலையில் இன்னம் சிறிது குறைந்தது உள்ளது-என்று இருக்கிறார் –
அன்றிக்கே
இப்போது இருந்து துக்கப் பட்டு காண்கையாலே-சிறிது தொங்கிற்று உண்டு -என்று இருக்கிறார் -என்னுதல்
ஒரு முற்றறிவினன்-சர்வஞ்ஞன் –இல்லாதது ஒன்றிலே இத்தனை காதல் செய்யக் கூடாது-என்று இருக்கிறார் –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading