ஸ்ரீ ஆறாயிரப்படி –6-3-10-
நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய்வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண்இலம்; காண்மின்களே.–6-3-10-
சாயா தப அல்ப மஹத் தீர்க்க ஹ்ரஸ்வ சராசரங்களை பிரகாரமாக வுடையனாய் -மதுரமாகப் பாடுகிற வண்டுகள் வாழுகிற
திரு விண்ணகர் என்னோடு ஸம்ஸ்லேஷிக்கப் பெற்ற தேசமாகையாலே இனி
ஆத்மார்த்தமாக இவ்விடத்தை விடேன் என்று எழுந்து அருளி இருந்த எம்பெருமானுடைய
திருவடிகள் அல்லது நமக்கு மற்றொரு கதி இல்லை –
அவனுடைய கடாக்ஷம் பெறுவதற்கு முன்பு என்னுடைய சத்தை இல்லாமையாலும்
அவன் கடாக்ஷித்து அருளினவாறே நான் உளனாகையாலும்
நமக்கு அவன் அல்லது கதியில்லை என்னும் இடம் எல்லாருக்கும் ப்ரத்யஷிக்கலாம் -என்கிறார் –
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-3-10-
அவனுடைய திருவடிகள் அல்லது மற்றொரு ரக்ஷகம் இல்லை என்னும் இடத்தை புத்தி பண்ணுங்கோள் என்கிறார் –
நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய்வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண்இலம்; காண்மின்களே.–6-3-10-
சிறுமை பெருமை– அணுத்வ மஹத்வங்கள் /
குறுமை நெடுமையுமாய்ச்– நடுவுள்ள ஹரஸ்வ தீர்க்கங்கள் / -சுழல்வன நிற்பன- ஸ்தாவர ஜங்கமங்கள் /
அவை அல்லனுமாய்-இவற்றில் இவனுக்கு வியாப்தி கர்ம நிபந்தம் அல்லாமையாலே -தன் பக்கல் அவற்றின் தோஷம் தட்டாது ஒழிகை
மழலை வாய்வண்டு-இனிய மிடற்று ஓசை யுடைய வண்டு-
———
ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-3-10-
அநந்தரம் -இப்படி பரஸ்பர விருத்த ஆகாரமான சகல சராசரங்களையும் விபூதியாகயுடைய சர்வேஸ்வரன் திருவடிகள்
அல்லது வேறு ரக்ஷகமுடையோம் அல்லோம் -இத்தை நிரூபித்துக் கொள்ளுங்கோள் என்று உபதேசித்து முடிக்கிறார் –
நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய்வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண்இலம்; காண்மின்களே.–6-3-10-
நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்–தாப சாந்திகரமான சாயையும் -தாபகரமான ஆதபமும் –
சிறுமைக்கு எல்லையான அணுத்வமும் பெருமைக்கு எல்லையான மஹாத்த்வமும் –
மத்யம பரிமாணங்களில் யுண்டான ஹ்ரஸ்வத்மமும் தீர்க்கத்வமுமாய்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்-சராசராத்மகமான மற்றுமுள்ள பதார்த்தங்களுமுமாய் –
இப்படி ஸர்வ சரீரியாகா நிற்கச் செய்தே அவற்றினுடைய ஸ்வ பாவத்தை யுடையவன் அல்லாதவனுமாய் —
மழலை வாய்வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்–மௌக்யமான வாக் வ்யவஹாரத்தை யுடைய வண்டுகள்
ஸ்வ போக்ய லாபத்தாலே வாழும்படியான திரு விண்ணகரிலே நித்ய வாசம் பண்ணுகிற சர்வேஸ்வரனுடைய
கழல்கள் அன்றி மற்றோர் களை கண்இலம்; காண்மின்களே.–திருவடிகளை ஒழிய வேறு ஒரு ரஷக வஸ்துவை யுடையோம் அல்லோம் –
இது நிரூபித்துக் கொள்ளுங்கோள் –
——
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-3-10-
அவனுடைய திருவடிகள் அல்லது மற்றொரு ரக்ஷகம் இல்லை என்னும் இடத்தை புத்தி பண்ணுங்கோள் என்கிறார் –
நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய்வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண்இலம்; காண்மின்களே.–6-3-10-
நிழல்வெய்யில்-சீத ஹே துவான நிழலும் -உஷ்ண ஹேதுவான வெய்யிலும்
சிறுமை பெருமை -அணுத்வ மஹத்வங்கள்
குறுமை நெடுமையுமாய்ச்-மத்யம பரிமாண வஸ்துக்களில் உண்டான ஹரஸ்ய தீர்க்கங்கள்
சுழல்வன நிற்பன -ஸ்தாவர ஜங்கமங்கள்
மற்றுமாய் -அ நுக்தமான சர்வமுமாய்
அவை அல்லனுமாய்-தத் கத தோஷைரஸம்ருஷ்டனாய் இருக்கை
மழலை வாய்வண்டு வாழ் திரு விண்ணகர்
மழலை பேச்சையுடைய வண்டுகள் தம்தாம் அபிமதங்கள் பெற்று வாழ்கிற ஊர்
மன்னு பிரான்-கழல்கள் அன்றி மற்றோர் களை கண்இலம்; காண்மின்களே.–நித்ய வாசம் பண்ணுகிற உபகாரகன் திருவடிகள் அல்லது வேறு புகல் இல்லை -மாம் ஏக சரணம் வ்ரஜ -என்கிறவன் அன்றிக்கே -திருவடிகள் தானே தஞ்சம் என்கை
காண்மின்களே.-இத்தை எல்லோரும் புத்தி பண்ணுங்கோள் –
———
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-3-10-
நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய் வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம்; காண்மின்களே.–6-3-10-
பரஸ்பர வ்ருத்த ஆகாரமான -சகல சராசரங்கள் -விபூதி -சர்வேஸ்வரன் திருவடிகளைத் தவிர
வேறு ரஷகம் இல்லை-காண்மின்களே.- நீங்களே நிரூபித்திக் கொள்ளலாம்
நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்-அணு மஹத்-எல்லை -நடுவில் குறுமை நெடுமை -அனைத்துமாய்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்-சரம் ஜங்கமம் அசரம் ஸ்தாவரம் -சர்வ சரீரி -ஸ்வ பாவம் இல்லாதவன் –
மழலை வாய் வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்-முக்தமான வாய் வியாபாரம் -பாடும் -போக்யத லாபத்தாலே வண்டுகள் வாழும் நித்ய வாசம்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம்; காண்மின்களே.-வேறே ரஷகத்வம் இல்லையே -மனசால் காண்மின்கள்-
நிழலும் வெய்யிலுமாகி, சிறுமையும் பெருமையுமாகி, குறுமையும் நெடுமையுமாகி, திரிகின்றவையும் நிற்கின்றவையுமாகி, மற்றுமாகி,
அவை அல்லனுமாகி, இசை பாடுகின்ற இளமை பொருந்திய வண்டுகள் வாழ்கின்ற திரு விண்ணகரில் எழுந்தருளியிருக்கின்ற பிரானுடைய
திருவடிகளே அல்லாமல் மற்றும் ஒரு பற்றுக்கோடு இலோம்; நீங்களே காணுங்கோள்.
அல்லனுமாய் மன்னு பிரான் என்க. களைகண் – பற்றுக்கோடு.
அவன் திருவடிகள் அல்லாமல் வேறு ஒரு ரக்ஷகம் இல்லை என்னுமிடத்தைப் புத்தி பண்ணுங்கோள் என்கிறார்.
நிழல் வெய்யில் –
குளிர்ச்சிக்குக் காரணமான நிழலும். உஷ்ணத்திற்குக் காரணமான வெய்யிலும்.
சிறுமை பெருமை –
சிறுமைக்கு எல்லையான அணுத்வமும், பெருமைக்கு எல்லையான மகத்வமும்
குறுமை நெடுமை
மத்திம அளவிலுண்டான குறுகுதல் நீளுதல்கள்.
சுழல்வன நிற்பன –
ஜங்கமங்களும், தாவரங்களும்.
மற்றுமாய் –
சொல்லப்படாதன எல்லாமாய். ‘மற்றும்’ என்றது சொல்லப்படாதனவற்றைத் தழுவுகின்றது.-
அநுக்த சமுச்சயம்-
அவை அல்லனுமாய் –
அவற்றுக்கு அந்தர்யாமியாய் நிற்கச்செய்தே அவற்றின் தோஷங்கள் தட்டாதபடி நிற்பான் என்று
மூவுலகங்களுமாய் அல்லனாய்-6-3-6- சொல்லப்பட்டதே அன்றோ;
இனி, இங்கு என்? என்னில்,
அவற்றிற்கு வரும் அவஸ்தைகளை யுமுடையனல்லனாய் நிற்பன் என்பதனைத் தெரிவித்தபடி.
அவை: சேதனனிடத்தே உள்ள சுக துக்கங்களும்,
அசேதனத் திடத்தேயுள்ள வளர்தல் முதலானவைகளுமாம்.
அகர்ம வச்யத்வம் அங்கே சொல்லி –
அவற்றுக்கு வரும் அவஸ்தைகள் –
பாப புண்ய ரூப கர்மங்களுக்கு வரும் சுக துக்கங்களும் அல்லன் என்கிறார் இங்கே
மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னு பிரான் –
பருவத்தின் இளமையாலே இனிய பேச்சுக்களை யுடைத்தான வண்டுகள் வாழா நின்றுள்ள திருவிண்ணகரிலே
நித்திய வாசம் செய்கிற உபகாரகன்.
கழல்கள் அன்றி மற்று ஓர் களை கண் இலம் –
அவன் திருவடிகளை ஒழிய வேறு ரக்ஷகத்தையுடையோம் அல்லோம்.
“என்னையே சரணமாகப் பற்று” என்னுமவன் அன்றிக்கே,
திருவடிகள் தாமே தஞ்சம் என்பார் ‘கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம்’ என்கிறார்.
“மா மேகம் சரணம் வ்ரஜ”-என்பது, ஸ்ரீ கீதை, 18 : 66.
“மறு பிறப் பறுக்கும் மாசில் சேவடி”- என்பது, பரிபாடல்.
காண்மின்களே –
இது அர்த்த வாதம் சொல்லுகிறேன் அல்லேன்; நீங்களும் பாருங்கோள் என்கிறார்.
அர்த்தவாதம் – புனைந்துரை.
சமன் கொள் வீடு கொடுக்கும் தடம் குன்றம் போலே திருவடியே சரண் –ஆசன பத்மத்திலே அழுத்தின திருவடிகள் –
அவன் விட்டாலும் அவள் விட மாட்டாள் -இருவரும் விட்டாலும் விடாத திண் கழல் –
ததீய சேஷத்வமே திண்மை என்றபடி –
——————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply