ஸ்ரீ ஆறாயிரப்படி –6-3-6-
மூ வுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்
பூவிலவாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே.–6-3-6-
நிகில லோக தத் அந்தர் வர்த்தி ப்ரீதி அப்ரீதி லஷ்மீ அலஷ்மீ கீர்த்தி அகீர்த்தி ப்ரக்ருதி கல்யாண ஹேய சகல பதார்த்த
அந்தராத்ம பூதனாய் – கல்யாண பதார்த்த அந்தர்வர்த்திதையாலே யாதொருபடி தோஷம் தட்டாதே இருக்கும் அப்படியே
ஹேய பதார்த்த அந்தரவர்த்திதையாலும் நிர்த்தோஷனாய் இருக்கும்
அது எங்கனே அறிந்த படி என்னில் –
ஸமஸ்த ஹேயாஸ் பதமான என்னுடைய நெஞ்சிலே புகுந்து வைத்து ஒரு தோஷமும் தட்டாதே
நிரதிசய தீப்தி யுக்தனாய் இருக்கையாலே -என்கிறார் –
————
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-3-6-
மூ வுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்
பூவிலவாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே.–6-3-6-
மூவுலகங்களுமாய் அல்லனாய் -அவ்வளவு அன்றிக்கே மற்றும் விலக்ஷணமான விபூதியை உடையனாய் –
பூவிலவாழ் மகளாய்த் தவ்வையாய்ப்-ஸ்ரீயும் அஸ்ரீயுமாய்
புகழாய்ப் பழியாய்த்-கீழ் சொன்ன இரண்டையும் உடையவர்களுக்கு வரும் இரண்டையும் சொல்லுகிறது
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர்ச்-அயர்வறும் அமரர்களும் வந்து தொழும் படியான திரு விண்ணகர் -எம்பெருமான் மேல் விழ செய்தே-தாம் அல்லேன் என்று இருந்த இருப்பை நினைத்து பாவியேன் என்கிறார் –
————
ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-3-6-
அநந்தரம் விலக்ஷண அவிலக்ஷண பதார்த்தங்களை விபூதியாக யுடைய சர்வேஸ்வரன்
ஆஸ்ரித பவ்யத்தையால் வந்த உஜ்ஜ்வல்யத்தை யுடையவன் என்கிறார்
மூ வுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்
பூவிலவாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே.–6-3-6-
மூ வுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்–ஸ்ருஜ்யத்வ கர்ம வச்யத்வ குணத்ரயாத்மகத் வாதிகளால்
அவிலக்ஷணமான த்ரை லோக்யமும் -தத் பிரதிபட நித்ய விபூதி யுக்தனுமாய் -அப்படி விலக்ஷண அவிலக்ஷணாத்மக ராக த்வேஷங்களுமாய்
பூவிலவாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்–ப்ரீதி ஹேதுவான ஸ்ரீ லஷ்மியையும் அப்ரீதி ஹேதுவான ஜ்யேஷ்டையையுமாய்
தத் தத் கார்யமான புகழையையும் பழியையும் பிரகாரமாக யுடையனாய்
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்-இந்த விபூதி யோகத்தால் வந்த நீர்மையை அநு பவிக்கைக்காக
ஸூரிகள் பொருந்தி தொழா நிற்கிற திரு விண்ணகரிலே சேர்ந்த சர்வேஸ்வரன்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே.–தான் மேல் விழுந்து வரிலும் வைமுக்யம் பண்ணும் பாபத்தை யுடையேனான
என் நெஞ்சிலே நித்ய வாசம் பண்ணா நின்று கொண்டு அத்தாலே நிரதிசய உஜ்ஜ்வல்யத்தை யுடையனானான் –
———
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-3-6-
நான் அல்லேன் என்ன செய்தே தன்னுடைய குண சேஷ்டிதங்களை காட்டி மறக்க ஒண்ணாத படி என்னோடே கலந்து அத்தாலே க்ருதார்த்தனாய் அத் உஜ்ஜவலனாய் இருக்கிறவன் திரு விண்ணகர் சேர்ந்த பிரான் கண்டீர் என்கிறார் –
மூவுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்
பூவிலவாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே.–6-3-6-
மூவுலகங்களுமாய் அல்லனாய்
க்ருதகம்-அக்ருதகம் – க்ருதாக்ருதகம் -இவற்றைச் சொல்லி அல்லனாய் என்கையாலே -இவ்வளவு அன்றிக்கே அசாதாரணமான நித்ய விபூதியை யுடையவனாய்
உகப்பாய் முனிவாய்-ராக த்வேஷங்களாய்
பூவிலவாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்
ஸ்ரீ யும் –அஸ்ரீயும் -தவ்வை – அஸ்ரீ -பிராட்டி கடாக்ஷத்தால் வந்த புகழாய்-அ ஸ்ரீ சம்பந்தத்தால் வந்த பழியாய்-
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர்ச்
நித்ய சூரிகள் நித்ய விபூதி போலே பொருந்தி தொழும் -ப்ரஹ்மாதிகள் வரை நாற்றம் பொறுக்க மாட்டாத தேசத்திலே -திரு விண்ணகரின் நீர்மையை அனுபவிக்க நித்ய ஸூ ரிகள்படுகாடு கிடக்கிற படி
திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்-திரு விண்ணகரிலே நித்ய வாசம் பண்ணுகிற உபகாரகன் -நித்ய ஸூ ரிகள் மேல் விழ இருக்கிறவன் தான் மேல் விழ -அல்லேன் என்று இருக்கிற படியை நினைத்து பாவியேன் என்கிறார்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே.–-போகு நம்பீ என்று சொல்லிற்று என் நெஞ்சை விட மாட்டாதவனைக் கிடீர் -நித்ய ஸூ ரிகளோடு கலந்ததில் காட்டில் கிடீர் என்னைப் பெற்ற பின்பு பிறந்த புகர்-நின்று இலங்கு முடியினாய் -என்றது இ றே-
——
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-3-6-
மூவுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்
பூவில் வாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்
தேவர் மேவித் தொழும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ் சுடரே.–6-3-6-
விலஷண அவிலஷண பதார்த்தங்கள் -விபூதியாக உடைய சர்வேஸ்வரன் -ஆஸ்ரிதற்கு
மூவுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்-ஸ்ருஜ்யத்வ -கர்ம வஸ்யத்வ -குண த்ரயாத்மகத்வ பெருமை இல்லாத
தத் பிரதிபட நித்ய விபூதி ராக த்வேஷங்கள்-குணம் இங்கு கீழே த்ரவ்யம்
பூவில் வாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்-ஸ்ரீ லஷ்மி -சேஷ்டை சேட்டை தன் மடி அகத்து செல்வம் பார்த்து –
தத் தத் கார்யமான புகழுமாய் பழியுமாய் -பிரகாரம்
தேவர் மேவித் தொழும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்-இந்த விபூதி யோகம் -நீர்மையை அனுபவிக்க
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ் சுடரே.-மின்னிடை மடவாரில் விலகிய பாவி -சேர்ந்ததால் வந்த ஔஜ்வல்யம்
மூன்று உலகங்களை யுடையனாயும் அல்லாத பரமபதத்தை யுடையனாகியும், மகிழ்ச்சியாகியும் சீற்றமாகியும், தாமரைப் பூவில் வசிக்கின்ற
திருமகளாகியும் மூதேவியாகியும், புகழாகியும் பழிப்பாகியும், தேவர்கள் மனம் மகிழ்ந்து தொழுகின்ற திரு விண்ணகர் என்னும் திவ்விய தேசத்தில்
எழுந்தருளி யிருக்கின்ற உபகாரகன், பாவியேனாகிய என்னுடைய மனத்தின் கண்ணே நித்திய வாசம் செய்கின்ற மேலான ஒளி யுருவன் ஆவான்.
ஆய், சேர்ந்த பிரான் உறைகின்ற பரஞ்சுடர் என்க. தவ்வை – தமக்கை; மூதேவி.
‘நான் அல்லேன்’ என்னச் செய்தே தன் குணங்களையும் செயல்களையும் காட்டி மறக்க ஒண்ணாதபடி கலந்து அதனாலே
பேரொளிப் பிழம்பா யிருக்கிறவன் திரு விண்ணகரிலே நின்றருளின சர்வேஸ்வரன் கண்டீர் என்கிறார்.
மூன்று உலகங்களுமாய் –
மூன்று உலகங்கட்கும் நிர்வாஹகனாய்.
அன்றிக்கே,
கிருதகம் அகிருதகம் கிருதாகிருதகம் என்னும் மூன்று வகைப்பட்ட உலகங்களுமாய் என்னுதல்.
க்ருதகம் -அவாந்தர பிரளயம் -அழிந்து -கீழ் ஏழு லோகங்கள் மேல் மூன்று லோகங்கள்
மேல் உள்ள மக -க்ருதக்ருதகம் -ஆள் இல்லை -லோகம் இருக்கும் –
அவாந்தர பிரளயத்தில் மேல் லோகம் போவார்கள் -க்ருஹங்களுக்கு ஸ்வரூப நாசம் இல்லையே
ஜன தப சத்யம் -மூன்று லோகங்கள்-அக்ருதகம் –
அல்லனாய் –
அல்லாத மேலே யுள்ள உலகங்கட்கும் நிர்வாஹகனாய்.
அன்றிக்கே,
இந்த உலகங்களைச் சொல்லி ‘அல்லனாய்’ என்கையாலே,
இவ்வளவு அன்றிக்கே அசாதாரணமான நித்திய விபூதியையுடையவன் என்னுதல்.
உகப்பாய் முனிவாய் –
மகிழ்ச்சியும் முனிவுமாய்.
பூவில் வாழ் மகளாய்த் தவ்வையாய் –
திருமகளும் திருமகள் அல்லாதவளுமாய்.
தவ்வை – திருமகள் அல்லாதவள்.
புகழாய்ப் பழியாய் –
திருமகளினுடைய கடாக்ஷ முடையார்க்கு வரும் புகழ்,
தவ்வையினுடைய கடாக்ஷமுடையார்க்கு வரும் பழி.
தேவர் மேவித் தொழும் திரு விண்ணகர் சேர்ந்த பிரான் –
இந்திரன் முதலான தேவர்கள் இங்குள்ளாரால் கொடுக்கப்படுகின்ற ஹவிஸ்ஸினைக் கொள்ளும் போது
மூன்று யோஜனை தூரம் அவ்வருகே நின்று முகத்தைத் திரிய வைத்து வாங்கி வாந்தி பண்ணியாயிற்றுப் போவது;
அப்படி இருக்கிறவர்களுடைய வாசனையும் பொறுக்க மாட்டாத நித்திய ஸூரிகள்,
திருவிண்ணகர் பூமியிலே ஆகையாலே இங்கே வந்து பொருந்தி வசிப்பர்கள்.
அப்படிப்பட்ட திரு விண்ணகரிலே நித்திய வாசம் செய்கிற உபகாரகன்.
பாவியேன்-
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியிலே அவன் மேல் விழத் தாம் இறாய்த்த படியை நினைத்துப் ‘பாவியேன்’ என்கிறார்.
நித்திய ஸூரிகள் தன் பக்கலிலே வந்து மேல் விழ, அதனைத் தள்ளித் தான் என் பக்கலிலே வந்து
மேல் விழா நிற்கக் கண்டீர் நான் ‘அல்லேன்’ என்றது.
மனத்தே உறைகின்ற-
இப்போது, நித்திய ஸூரிகளும் அந்த இருப்பும் கிடக்கக் கண்டீர் என் நெஞ்சிலே புகுந்து நித்திய வாசம் செய்யா நின்றான்.
பரஞ் சுடரே –
தனக்குப் புறம்பே உண்டான வசிக்கும் இடங்கள் கிடக்க, என் நெஞ்சிலே புகுந்து நின்றது
எனக்குக் காரியம் செய்தானாய் இருக்கை யன்றிக்கே ‘தன் பேறு’ என்று தோற்றும்படி பேர் ஒளியன் ஆனான். என்றது,
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியிலே, ‘இவரை இழக்கிறோமோ?’ என்று வந்த உறாவுதல் தீர,
இவரைப் பெற்ற பின்பு அதனாலே
“நின்றிலங்கு முடியினாய்!” –திருவாய். 6. 2 : 8.-என்கிறபடியே வடிவிலே பிறந்த வேறுபாடு இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.
——————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply