ஸ்ரீ ஆறாயிரப்படி –1-3-5-
இப்படி விப்ரதிபத்தி யுண்டாய் இருந்த இடத்தில் இவனுடைய உண்மையை நிச்சயிக்கும் படி எங்கனே என்னில் –
பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே –1-3-5-
அந்த பிரதிகூல ஷட் சமயங்களுக்கும் அனுகூலரான வைதிகர்க்கும் இப்படியுள்ள விப்ரதிபத்தி தீரும்படி வேத மார்க்கத்தை உள்ளபடியே அனுசந்தித்து
சங்கமான சகல வேதங்களுக்கும் தானே ப்ரதிபாத்யன் என்னும் இடத்தையும் -அபவ்ருஷேயம் ஆகையால் நிர்தோஷமான வேதத்தோடே விரோதிக்கையாலே
இதர சமயங்கள் பிரமாணம் அன்று என்னும் இடத்தையும்
ஸ்வாபாவிக சர்வஞ்ஞாதி சகல கல்யாண குண உபேதனான தானே ஸ்ரீ கீதையில் அருளிச் செய்து அருளினான்
இப்படி வேதார்த்தத்தை உள்ளபடியே வ்யக்தமாக்கின இம் மஹா குணத்தை யுடையனான எம்பெருமான் திறமான பக்தி யோகத்தில் நின்று
பிராகிருத விஷயங்கள் ஆகிற களையைக் கடிந்து அவற்றின் சங்கத்தையும் விடுங்கோள் -எங்கனே விடும்படி என்னில் –
அவன் அருளிச் செய்து அருளின ஸ்ரீ கீதையாலே ஸமஸ்த கல்யாண குணாத்மகனான அவனை உணர்ந்து வ்யதிரிக்த சங்கத்தை விடுவது -என்கிறார் –
——————
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -1-3-5-
இப்படி அவன் தூரச்தனே யாகிலும் -ஆஸ்ரயிப்பார்க்கு துர்லபன் என்னும் இடத்தை பரிஹரித்து
ஆழ்வார் –ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த படியே பக்தி யோகத்தாலே எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –
பிணக்கற வறுவகைச் சமயமும் நெறி யுள்ளி யுரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமில் யாதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புற நெறிகளை கட்டு
உணக்கு மின்பசை யற அவனுடைய யுணர்வு கொண்டு உணர்ந்தே –1-3-5-
பிணக்கற வறுவகைச் சமயமும் நெறி யுள்ளி யுரைத்த கணக்கறு நலத்தனன்
ஷட் சமயங்களுக்கும் -வைதிக சமயத்துக்கும் -அந்யோந்ய விரோதத்தால் உள்ள பிணக்கு அறும்படி
வேத மார்க்கத்தாலே ஆராய்ந்து அருளிச் செய்த பரம உதாரன் –
அந்தமில் யாதியம் பகவன்
தனக்கு அந்தம் இன்றி எல்லார்க்கும் தான் ஆதியாய் -ஸ்வ பாவிகமாய் -ஹேய ப்ரத்ய நீகமான ஜ்ஞானாதி கல்யாண பரி பூர்ணன்
இங்கனே சொல்லிற்று -இவன் சொல்லியதை விஸ்வசிக்கலாம் படி இவனுடைய ஆப்ததமத்வம் தோற்றுகைக்காக-
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புற நெறிகளை கட்டு உணக்கு மின்பசை யற
பக்தியோகத்தை நிரந்தரமாக அனுஷ்டித்து -பாஹ்ய விஷயங்கள் ஆகிற விரோதிகளைத் தவிர்த்து அவற்றின் ருசியையும் சவாசனமாக விடுங்கோள் –
ஆஸ்ரிதர்க்கு இனிதாய் இருந்ததே யாகிலும் இத்தைப் பெரு வருத்தமாகக் கொள்ளும் பகவத் அபிப்ராயத்தாலே -தவ நெறி -என்கிறது
அவனுடைய யுணர்வு கொண்டு யுணர்ந்தே —
பக்தி ரூப தத் விஷய ஜ்ஞானத்தாலே யாதல்
அவன் அருளிச் செய்த சரம ஸ்லோக உக்தமான உபாய ஜ்ஞானத்தாலே யாதல்
——
ஸ்ரீ பன்னீராயிரப்படி -1-3-5-
அநந்தரம் இப்படி ஸூலபனானவனை ஆச்ரயிப்பது அவன் அருளிச் செய்த ஸ்ரீ கீதோபநிஷத பிராமண ஸித்தமான பஜனத்தாலே என்கிறார் –
பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே –1-3-5-
பிணக்கற வறுவகைச் சமயமும் -ஆறு வகைச் சமயமும் தன்னில் தானும் வைதிகரோடும் பிணக்கு அறும்படி
நெறியுள்ளி யுரைத்த-வேத மார்க்கத்தை ஆராய்ந்து அருளிச் செய்த
கணக்கற நலத்தனன் -எண்ணிறந்த உதார ஆஸ்ரித வாத்சல்யாதி கல்யாண குணங்களை யுடையனாய்
அந்தமில் ஆதியம் பகவன்–முடிவில்லாத முதலாக்கையாலே நித்யனாய் -அம்-ஹேய பிரதிபடனாய் கல்யாண ரூபமான ஞான சக்த்யாதி குண விசிஷ்டனான பகவானுடைய
வணக்குடைத் தவ நெறி வழி நின்று -நமஸ்யாதிகளை யுடைத்தான பக்தி மார்க்கத்தில் நிலை நின்று
புறநெறி களை கட்டு-அந்யா வாசோ விமுஞ்சாத -என்கிற அல்லாத வழிகளாகிற களையை அறுத்து
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே –அவனுடைய விஷயமான-உணர்வு கொண்டு – பக்தி ரூப ஞானத்தைக் கொண்டு–உணர்ந்து – தர்சித்து
பசை -வாசநா ரூபமான பசை -அறும்படி — உணக்குமின் -உலர்த்தி விடுங்கோள் –
——
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -1-3-5-
இப்படி ஆஸ்ரயணீயன் ஸூலபனான பின்பு ஆஸ்ரயிக்கும் வழி என் -என்ன அவன்
ஸ்ரீ கீதையில் அருளிச் செய்து வைத்த பக்தி மார்க்கத்தாலே ஆஸ்ரயிங்கோள் என்கிறார்
பிணக்கற வறுவகைச் சமயமும் நெறி யுள்ளி யுரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமில் யாதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புற நெறிகளை கட்டு
உணக்கு மின்பசை யற அவனுடைய யுணர்வு கொண்டு உணர்ந்தே –1-3-5-
பிணக்கற வறுவகைச் சமயமும்
ஆறு வகைப்பட்ட பாஹ்ய சமயத்துக்கு வைதிக சமயத்தோடு உண்டான பிணக்கு அற
நெறி யுள்ளி யுரைத்த
வேத மார்க்கத்தை ஆராய்ந்து அருளிச் செய்த படி
வாக்விவ்ருதாச்சா வேதா -என்று தான் சொன்னது அடங்க வழியாய் இருக்க பிரஜைகள் பக்கல் பரிவாலே
ஒர்ரர்த்தம் போதியாதவன் நிரூபிக்குமா போலே ஆராய்ந்து அருளிச் செய்த படி –
கணக்கறு நலத்தனன்
எல்லையிறந்த ஔதார்ய குணங்களை யுடையவன்
அந்தமில் யாதியம் பகவன்
தனக்கு முடிவு இன்றிக்கே -எல்லார்க்கும் காரண பூதனாய் இருக்கும்
ஹேய ப்ரத்ய நீகமான ஜ்ஞானாதி குண பூர்ணனாய் இருக்கை
இத்தால் -உதாரனாய் -பிராப்தனாய் -ஆப்தனாய் இருந்தவன் வார்த்தை யாகையாலே விச்வாச நீயம் என்கை –
வணக்குடைத் தவ நெறி வழி நின்று –
வணக்கத்தை யுடைய பக்தி மார்க்கம் ஆகிற வழியிலே நிலை நின்று -பக்தி சரீரத்திலே மாம் நமஸ் குரு என்கையாலே –வணக்குடை -என்கிறது
தபஸ் சப்தத்தாலே பக்தியைச் சொல்லிற்று –
பக்தி ஜ்ஞான விசேஷம் ஆகையாலே –யஸ்ய ஜ்ஞான மயந்தப -என்கிற ந்யாயத்தாலே என்னுதல்
இவனுடைய பிரேம மாத்ரத்தையே குவாலாக நினைத்து இருக்கும் அவன் அபிப்ராயாத்தாலே யாதல்
புற நெறிகளை கட்டு
இதுக்கு விரோதியான சப்தாதி விஷயங்களில் போகிற வழி யாகிற களையைக் கடிந்து பறித்து
இத்தை நெறி என்பான் என் என்னில் இருந்ததே குடியாகப் போகிற மஹாதபம் ஆகையாலே -துர்மார்க்கம் என்னக் கடவது இறே –
உணக்கு மின்பசை யற
பறித்தாலும் கிடந்திடத்தே கிடக்குமாகில் பருவம் செய்யும் இறே
அதுக்காக சவாசனமாக விடுங்கோள் -இது செய்வது என் கொண்டு என்னில்
அவனுடைய யுணர்வு கொண்டு உணர்ந்தே
தத் உக்த ஜ்ஞானம் -தத் விஷய ஜ்ஞானம் என்னுதல் –
அவனை விஷயீ கரித்த ஜ்ஞானத்தைக் கொண்டு -விலஷண விஷயத்திலே நெஞ்சை வைத்து -இவற்றின் தோஷத்தை தர்சித்து விடுங்கோள்-
அவனை சரணம் புக்கு இவற்றை சவாசனமாக விடுங்கோள் எனவுமாம்
தானி சர்வாணி சம்யம்ய -மாம் ஏவ ப்ரபத்யந்தே -சரம ஸ்லோகத்தின் படியே –
——
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி -1-3-5-
பஜியுங்கோள் ‘வழிபாடு செய்மின் என்று பன்முறையுங் கூறுகின்றீர்;
பஜன உபாயம் -வழிபாடு செய்யும் வழியினை அருளிச் செய்யீர்,’ என்ன,
‘இன்று நான் உபதேசிக்க வேண்டுமோ?
அவன் தான் ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த பத்தி மார்க்கத்தாலே அவனை அடைமின்,’ என்கிறார்.
———————
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
——————–
பிணக்கற அறு வகைச் சமயமும் நெறி உள்ளி உரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதி யம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புற நெறி களை கட்டு
உணக்குமின் பசை அற அவனுடை யுணர்வு கொண்டு உணர்ந்தே–1-3-5-
பிணக்கு அற அறுவகைச் சமயமும் – வைதிக சமயத்துக்கும்-பாஹ்ய ஷட் ஆறு புறச்சமயங்களுக்கும்
தம்மில் தாம் உண்டான பிணக்கு அறும்படியாக.
நெறி உள்ளி உரைத்த-
தான் சொல்லிய அனைத்தும்-வேதார்த்தமாக – வேதப் பொருளாக இருக்கவும், பொருளின் உண்மைத் தன்மை
தெளியப் பெறாத ஒருவன் -ஆராய்ந்து சொல்லுமாறு போன்று விசாரித்து அருளிச் செய்தான்;
‘அதற்கு நினைவு என்?’ என்னில்,-
அஹ்ருதயமாக- மனத்தொடு படாமற்கூறினும் நன்மை தரத் தக்கனவாக இருப்பினும் மக்களுடைய ஹிதத்தில் உண்டான –
ஆதார அதிசயத்தாலே -அன்பின் பெருக்காலே, சடக்கெனச் சொன்னால்
‘நிரூபியாமல் வாய் வந்தபடி சொன்னான்’ என்பர்கள் என்று ஆராய்ந்து சொன்னானாகச் சொன்னபடி.
கணக்கு அறு நலத்தனன்-
எல்லை இல்லாத குணத்தை யுடையவன்;
இனி, எல்லை இல்லாத ஸ்நேஹத்தை வாத்சல்யத்தையுடையவன் எனலுமாம்.
‘யார் இரக்கச் செய்தான்?’ என்னில், தன் வாத்சல்யத்தால் அருளிச் செய்தான் இத்தனையே.
ஆயின், வாத்சல்யத்தால் கூறிய அனைத்தும் உண்மைப் பொருள் ஆகுமோ?’ என்னில்,
அந்தம் இல் ஆதி-
ஆப்த தமன்.
எல்லார்க்கும்-உத்பத்தி விநாசங்களாலே – பிறப்பு இறப்புகளாலே யன்றோ-ஞான சங்கோசம் – ஞானத்திற்குக் குறைவு உண்டாவது?
இவனுக்கு அவை இல்லாமையாலே-அகர்ம வச்யன் – கர்மங்களுக்குக் கட்டுப்பட்டவன் அல்லன் ஆதலின்,
இவன் யாங்ஙனும் கூறினும் உண்மைப் பொருளேயாம் என்க.
அம் பகவன் –
ஞானம், சத்தி, செல்வம் முதலியவைகளால்-அல்பம் உத்கர்ஷம் – சிறிது மேன்மையுடையவர்களையும்
பகவான் என்ற பெயரால் கூறும் வழக்கு உண்டாதலின்,
அந்யத்ர ஹ்யுபசாரத (‘பகவான் என்னும் பெயர் முக்கியமாக வசிப்பது இவன் பக்கலிலே:
அல்லாதார் பக்கல் ஒளபசாரிகம்’ )என்பார், ‘அம் பகவன்’ என்கிறார்.
அம் பகவன் வணக்குடைத் தவநெறி வழி நின்று-
வணக்கத்தை யுடைய பத்தி மார்க்கமாகிற வழியிலே நின்று;
ஸ்ரீ பகவத் கீதையில் பத்தியைப் பற்றிக் கூறுமிடத்தில்
நமஸ் யந்தச்ச மாம் பக்த்யா (‘பத்தியினால் என்னை வணங்கி வழிபடுகின்றார்கள்,’ )என்று கூறி,
பின்னர்,(மாம் நமஸ்குரு )‘என்னை வணங்குதலைச் செய்வாய்,’ என்றும் கூறுவதால்,
இவரும் பத்தியை ‘வணக்குடைத் தவ நெறி’ என்கிறார்.
பத்தியானது –அங்கனா பரிஷ்வ்ங்கம் -காதலியோடு கலக்கும் கலவி போன்று போக ரூபமாய் -இன்ப மயமாக இருக்குமாதலின்
‘அம் பகவன் தவநெறி’ என்கிறார்.
பத்தி, ஞானத்தின் விசேடமாகையாலே, ‘தவம்’ என்ற சொல்லால் பக்தியைச் சொல்லுகிறார்;
யஸ்ய ஞான மயம் தப (‘அவனுக்குத் தவமானது ஞானத்தின் மயமாய் இருக்கிறது,’) என்கிற நியாயத்தாலே யாதல்,
இவனுடைய பிரேம மாத்ரத்தையே -அன்பினையே தவமாக நினைக்கின்ற பகவானுடைய அபிப்பிராயத்தாலே யாதல்.
புறம் நெறி களை கட்டு –
புறநெறியாகிற களையைக் கடிந்து. அதாவது,-கடிந்து – பறித்து. கட்டல் -களைதல்
பத்தி விஷயமான போது வேறு பலன்களிற்செல்லும் விலக்கடிகளைத் தள்ளி’ என்றும்,
பிரபத்தி விஷயமானபோது மற்றைச் சாதனங்களைத் தள்ளி’ என்றும் பொருள் கொள்க
உணக்குமின் பசை அற –
ரஸ வர்ஜம் (‘ருசி வாசனைகளும் நீங்குகின்றன,) என்கிறபடியே, புறம்பான விஷயங்களில் உள்ள ஆசையை
ருசி வாசனையோடே விடுங்கோள். ‘இவை எல்லாம் விடுவது எப்படி?’ என்னில்,
அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து –
அவன் விஷயமான ஞானத்தைக் கொண்டு உணர்ந்து;
அதாவது, ‘பத்தி மார்க்கத்தைக் கொண்டு உணர்ந்து’ என்றபடி.
இனி,தத் யுக்த – அவன் அருளிச் செய்த ஞானத்தைக் கொண்டு உணர்ந்து;
அதாவது, ‘அவன் அருளிச் செய்த ஸ்ரீ சரம ஸ்லோகத்தின் படியைப் பற்றி நின்று’ என்னுதலுமாம்-
—————
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
சாக்ய -உலுக்ய-அஷ பாத-ஷாபனக-கபில -பதஞ்சலி -இத்யாதி மதாநி
அத்வா -லோகாயத ஆர்த்த புத்த மதாநி மூன்றும் – நையாயிக வைசேஷிக ஒன்றும் –
சாங்க்ய யோக மதம் ஒன்றும் -பாஸூ பதம் ஒன்றும் இப்படி ஆறும் –
உயர்வற உயர் நலம் -நலம் என்றது குண வாசகமாகக் கண்டோம்
மயர்வற மதி நலம் -நலம் -ஸ்நேஹ வாசகமாகக் கண்டோம் –
இரண்டையும் பற்ற வாக்ய த்வயம் -சிஷ்யஸ் தேஹம் என்றது வியாச மாத்திரம் –
அஸ்தாந ஸ்நேஹ -வாத்சல்யம் –
பகவான் என்று மட்டும் இல்லாமல் அம் பகவான் -என்றதுக்கு வியாக்யானம்
குணவத் விஷயம் ஆகையால் போக ரூபமாய் இருக்கும்
பகவத் அபிப்ராயத்தாலே யாதல் -என்றது சாதன பக்தி பக்ஷத்தில் அங்குராவஸ்த்தையைப் பற்ற –
சாத்ய பக்தியான போது ஸ்வ ரசம் -அன்றிக்கே யோஜனத்வயமும் பக்தி பிரபத்தி ப்ரயோஜநாத் வயத்தைப் பற்றவாதல் –
தவ நெறி -என்கிற இடத்தில் தபஸ் சப்தம் பிரபத்தி பரம் என்று தாத்பர்யம் —
இந்தப் பக்ஷத்தில் வணக்கம் ப்ரஹ்வீ பாவம்-சேஷத்வ அனுசந்தானம் என்றபடி –
ஆக சேஷத்வ அனுசந்தான பூர்வக அத்யாவசிய ரூப பிரபத்தி -வணக்குடைத் தவ நெறி -என்றதுக்கு அர்த்தம் —
மேலே அவனுடை உணர்வு கொண்டு -என்றத்தோடு புநர் யுக்தமாகாமைக்காக -தவ நெறி வழி நின்று -என்றது அத்யவசித்து -என்றபடி –
கச்சத்வ மேநம் சரணம் -என்று உபதேசிக்க திரௌபதியா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ருர் ஜனார்த்தனம்-
அனுஷ்டான தசையில் காயிக நமஸ்காரம்
தபாசா மதிரிக்தமா ஹூ -என்று தபஸ் சப்த வாஸ்யமான அத்வேஷ ரூப பிரபத்தியைச் சொல்லுகிறது –
பசை அற உணக்குமின் -பகவத் சாஷாத்காரதாலே ருசி வாசனைகளோடு போக்கிக் கொள்ளுங்கோள் என்றபடி –
வேதாந்தங்கள் பக்தி விதியில் பிரதானங்கள் –
பிரபத்தி விதியில் சரம ஸ்லோகமே பிரதானம் -ஸ்ரீ கீதைக்கு எல்லாம் இதிலே இறே தாத்பர்யம்-
ஆகையால் தத் யுக்த ஞானம் என்கிறது ப்ரபத்தியை –தத் விஷய ஞானம் என்று பக்தியைச் சொல்லுகிறது –
பக்தி பரமான போது -கணக்கறு நலத்தனன் அந்தமில் யாதி யம் பகவன் அறுவகைச் சமயமும் பிணக்கற
நெறி யுள்ளி உரைத்த வணக்குடைத் தவ நெறி வழி நின்று -அதாவது
உபக்ரம தசையில் அத்யவசித்து-அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து -அனுஷ்டான தசையில் ஞானத்தை பிராபித்து-
புற நெறி களை கட்டுப் பசை யற உணக்குமின் -என்று அன்வயம் –
பிரபத்தி பாரமான போது -அறுவகைச் சமயமும் பிணக்கற-என்று தொடங்கி -அம் பகவானுடைய உணர்வு கொண்டு
உணர்ந்து வணக்குடைத் தவ நெறி வழி நின்று புற நெறி களை கட்டுப் பசையற உணக்குமின் என்று அன்வயம்
உணக்குமின் -உலர்த்தி விடுங்கோள்-
—————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply