ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-–1-3-4-

ஸ்ரீ ஆறாயிரப்படி –1-3-4-

யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய வெம்பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய வெம்பெருமான்
பேருமோர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான்
பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே
–1-3-4-

பிரதிகூலர்க்கு அறிய அரியனாம் இடத்தில் அவர்கள் எத்தனையேனும் உத்க்ருஷ்டரே யாகிலும் அவர்களுக்கு -இன்ன ஸ்வ பாவத்தை யுடையவன் -என்று அறிய அரியன்-
அனுகூலர்க்கு அறிய எளியனாம் இடத்தில் அவர்கள் எத்தனையேனும் தண்ணியரே யாகிலும் -இன்ன ஸ்வ பாவத்தை யுடையன் -என்று அறிய
எளியனாவது என் என்னில் -அஸங்யேய கல்யாண குண விசிஷ்டனாய் மற்றும் ஆஸ்ரித பரித்ராண அர்த்தமாக அஸங்யேய திவ்ய ரூப விசிஷ்டன் என்று அறிய எளியனாம்
இப்படி ஓர் பேரும் ஓர் உருவமும் தங்களுக்குத் தோற்றாமையாலே பிரதிகூலர் இல்லை என்ன அனுகூலர்க்குத் தோற்றுகையாலே
அவை உண்டு என்ன இப்படி விப்ரதி பன்னங்களாய் இருக்கும் என்கிறார் –

————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -1-3-4-

இப்படி இருக்கிற திவ்ய அவதாரங்கள் ஒருவருக்கும் நிலம் அன்றோ என்னில்
இது எல்லாம் ஆஸ்ரிதர்க்கு அத்யந்த ஸூ லபனாய் -அநாஸ்ரிதற்கு அத்யந்த துர்லபமாய் இருக்கும் என்கிறார் –

யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான்
பேரும் ஓர் ஆயிரம் பிற பல வுடைய வெம்பெருமான்
பேரும் ஒரு உருவமும் உளதில்லை யிலதில்லை பிணக்கே
–1-3-4-

யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான் -யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான்
எத்தனையேனும் அறிவுடையாரே யாகிலும் அநாஸ்ரிதரால் ஒரு ஸ்தூல ஆகாரமும் அறிய அரியனாய்
ஒன்றும் அறிவிலர் ஆகிலும் ஆஸ்ரிதர்க்கு இப்படிப்பட்டான் என்று பரிச்சேதிக்கலாம் படி இருக்கும் ஸ்வ பாவனாய்
பேரும் ஓர் ஆயிரம் பிற பல வுடைய வெம்பெருமான்
தன் குண சேஷ்டி தாதிகளுக்கு வாசகமான அநேகத் திரு நாமங்களையும் மற்றும் அநேக விக்ரஹங்களை யுமுடையவன்
பேரும் ஒரு உருவமும் உளதில்லை யிலதில்லை பிணக்கே –
இப் பேர்களில் ஒரு பேரும் ஒரு வடிவும் மாதரம் கூட அநாஸ்ரிதர் இல்லை என்று இருப்பர்-
ஆஸ்ரிதர் இவை எல்லாம் உண்டு என்று இருப்பர் –
இப்படி நித்ய விப்ரதிபன்னமாய் இருக்கும்
பலகாலும் -எம்பெருமான் -என்று -ஆஸ்ரிதற்கு எளியனாய் அநாஸ்ரிதர்க்கு அரியனான படியை அனுசந்தித்து இருக்கிற படி –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி -1-3-4-

அநந்தரம் -அவதார க்ருதமான அஸங்யேய ரூப நாமங்களை யுடையவனை பிரதிகூலர் அறிய மாட்டாதே
அனுகூலர் அறிய வல்லராய் நித்ய விவாதமாய் நடக்கும்
-என்கிறார் –

யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய வெம்பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய வெம்பெருமான்
பேருமோர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான்
பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே
–1-3-4-

பேருமோர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான்—பேரும் விக்ரஹ வாசகமான திரு நாமங்களும்/ பிற -அந்த நாம வாசயங்களான மற்ற விக்ரஹங்களும் /
பல ஆயிரம் -உடைய எம்பெருமான் – அநேக ஆயிரம் யுடையவனாய்க் கொண்டு தோற்றி எனக்கு நாதனானவனாய் –
யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய வெம்பெருமான்–எத்தனையேனும் ஞானாதிகளால் அதிகராகிலும் அநாஸ்ரிதரால்-ஒரு படியை யுடையவன் என்று
அறிய அறியனாம்படியைக் காட்டி என்னை அடிமை கொண்ட நாதனாய்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய வெம்பெருமான்-எத்தனையேனும் அறிவிலிகள் ஆகிலும் ஆஸ்ரிதர்க்கு வ்யவஸ்தித ஸ்வபாவன் என்று
அறிய எளியனாம்பட்டியைக் காட்டி என்னை அடிமை கொண்ட நாதனானவனுக்கு
பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே –ஒரு பேரும் ஓர் உருவமும் உளதில்லை-உண்டாய் இருப்பது இல்லை என்று பிரதிகூலர்க்கும்
ஒரு பேரும் ஓர் ரூபமும் பிள்ளையாய் இருப்பது இல்லை என்று அனுகூலர்க்கும் நித்ய பிணக்காய் இருக்கும் –

இங்கு பல இடத்திலும் எம்பெருமான் -என்றது அந்த அந்த உபகாரங்களால் யுண்டான உகப்பாலே

——

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -1-3-4-

இப்படி இருக்கிற அவதார சௌலப்யம் ஒருவருக்கும் நிலம் அன்றோ என்னில் –ஆஸ்ரிதர்க்கு அத்யந்த ஸூ லபமாய்
அநாஸ்ரிதர்க்கு அத்யந்த துர்லபமாய் இருக்கும்
என்கிறார்-

யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான்
பேரும் ஓர் ஆயிரம் பிற பல வுடைய வெம்பெருமான்
பேரும் ஒரு உருவமும் உளதில்லை யிலதில்லை பிணக்கே
–1-3-4-

யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய-
அநாஸ்ரிதர் எத்தனையேனும் அதிசயித ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகளே யாகிலும் ஒரு ஸ்தூல ஆகாரமும் அறிய அரியனாய் இருக்கும் –
தன்னை உட்புக்கு அறிய மாற்றிற்று இலர்களே யாகிலும் ஆபாதப்ரதீதி யாகவும் அறியப் போகாத படியாய் இருக்கும் –
நேரே கடிக்கமலத்து உள்ளிருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை யான் -என்னக் கடவது இறே
எம்பெருமான்
உகவாதார் கண் படாதபடி இருக்கிற இடம் தன் பேறாக உகக்கிறார்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய
அறிவில் குறைந்த இடைச்சிகள் -குரங்குகள் -ஆகிலும் ஆஸ்ரிதர்க்கு இப்படிப் பட்டான் என்று பரிச்சேதிக்கலாம் படி இருக்கும்
எம்பெருமான்
ஆஸ்ரிதர்க்கு கை புகுந்து இருக்கிற இடமும் தம் பேறாக உகக்கிறார்

நமோ நமோ வாங்மனசாதி பூமயே -இத்யாதி
பேரும் ஓர் ஆயிரம்
ஆஸ்ரிதர்க்கு அனுபாவ்யமான குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான அநேகம் திரு நாமங்களை யுடையவன்
பிற பல வுடைய –
இத் திரு நாமங்களைச் சொல்லி கூப்பிட்டாருக்குக் காட்டும் வடிவைச் சொல்லுகிறது
பிற -என்ன வடிவைக் காட்டுமோ என்னில் -நாமத்தைச் சொன்ன அநந்தரம்-பிற-என்றால் ரூபத்தைக் காட்டும் இறே
நாம ரூபே வ்யாகரவாணி
வெம்பெருமான்

பேரும் ஒரு உருவமும் உளதில்லை
இவற்றில் ஒரு பேரும் ஒரு உருவமும் அநாஸ்ரிதர்க்கு பிரகாசியாமையாலே இல்லை என்று இருப்பார்கள்
யிலதில்லை
ஆஸ்ரிதற்கு இவை எல்லாம் பிரகாசித்து இருக்கையாலே உண்டு என்று இருப்பார்கள்
பிணக்கே
இப்படி நித்ய விப்ரதிபன்னமாய்ச் செல்லா நிற்கும் –

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி -1-3-4-

தானாம் அமைவுடை நாரணன்’ உடைய அவதாரத்தின் ஸுலப்யம் – எளிமை ஒருவர்க்கும் அறிய நிலம் அன்றோ? என்னில்,-
ஆஸ்ரிதற்கு அத்யந்த ஸூலபனாய் அநாஸ்ரிதற்கு அத்யந்த துர்லபனாய் என்கிறார்.

———————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

யஸ்ச ராமம் ந பஸ்யேத்து யஞ்ச ராமோ ந பஸ்யதி -நிந்திதஸ் ச வசேல் லோகே ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே-இப்பாட்டுக்கு சம்வாதம்
ய என்கையாலே ஞானாதிகளையும் யம் என்கையாலே ஞான ஹீனனையும் சொல்லுகிறது –
அறிய நிலம் அன்று அறியவும் நிலம் அன்றோ -என்றபடி -அறிய நிலம் அன்று என்று அறிகைக்கு ஸூலபனாய் இருக்குமே

———————

யாரும் ஓர் நிலைமையன் என அநி வரிய எம் பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறி வெளிய எம் பெருமான்
பேரும் ஓர் ஆயிரம் பிறபல உடைய எம் பெருமான்
பேரு மோர் உருவமும் உளது இல்லை இலது இல்லை பிணக்கே
–1-3-4-

யாரும் ஓர் நிலைமையன் என அறிவு அரிய எம்பெருமான்
எத்துணை வியக்கத்தக்க ஞானத்தினை யுடையவர்களே யாகிலும் ஸ்வ யத்னத்தால் – தன் முயற்சியால் காணும் அன்று
‘இன்ன படிப்பட்டு இருப்பது ஒரு ஸ்வபாவத்தை – தன்மையையுடையவன்’ என்று அறிய ஒண்ணாத என் ஸ்வாமியானவன்.

யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான்-
இந்த யச் யாரும்’ என்ற உம்மை-சப்தம் -தாழ்ச்சியின் எல்லையில் நிற்கிறது
பிறப்பு ஒழுக்கம் ஞானம் இவைகளில் ஓர் அளவும் இல்லையேயாகிலும் தானே காட்டக் காணுமவர்களுக்குத்
தன் படிகள் எல்லாம் அறியலாம்படி இருப்பன்.
‘எங்கே கண்டோம்?’ என்னில்,
ஒரு குரங்கு, வேடச்சி, ஆய்ச்சி இவர்களுக்கு எளியனாய் இருக்கக் கண்டாமே!
எம்பெருமான்’ என்ற சொல்லால்,
ஆஸ்ரிதற்கு- ‘அடியார்க்கு எளியனாய் -அநாஸ்ரிதற்கு – அடியர் அல்லாதார்க்கு அரியனான
என் நாயன்- – நிலை இருந்தபடி என்னே!’ என்று ஈடுபட்டு எழுதிக் கொடுக்கிறார்.
நமோ நமோ வாங் மனசாதி பூமயே -நமோ நமோ வாங் மனசைக பூமயே

(‘மனம் வாக்கு இவற்றிற்குப் புலனாகாத உனக்கு வணக்கம் வணக்கம்; மனம் வாக்கு இவற்றிற்குப் புலனாகின்ற
உனக்கு வணக்கம் வணக்கம்’ )என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும்.

பேரும் ஓர் ஆயிரம் –
அநுபவிதாக்களுக்கு -அனுபவிக்கின்ற அடியார்கட்கு இழிந்த இடம் எல்லாம் துறையாகும்படி பல திரு நாமங்களை யுடையவனாய் இருக்கை.
குணம் பற்றி வருவனவும், ஸ்வரூபம் பற்றி வருவனவும் ஆன பெயர்களுக்கு ஓர் எல்லை இல்லை ஆதலின், ‘பேரும் ஓர் ஆயிரம்’ என்கிறார்.
தேவோ நாமோ சஹஸ்ரவான் (‘தேவனுடைய பெயர்கள் ஆயிரமாக இருக்கின்றன,’ )எனப் புகலும் பாரதம்.

பிற பல உடைய எம்பெருமான்-
அந் நாம த்வாரா காணும் -அப் பெயர்களின் மூலமாகக் காண்கின்ற -பல திருமேனிகளை யுடையனாய் இருக்கை.
‘பிற’ என்பது ஈண்டுத் திருமேனியைக் காட்டுகிறது.
‘ஆயின், ‘பிற’ என்ற சொல் திருமேனியைக் காட்டுமோ?’ எனின்,
நாம ரூபஞ்ச பூதானாம் (‘உயிர்கட்குப் பெயர்களையும் உருவங்களையும் உண்டு பண்ணினான்’ )என்றும்.
நாம ரூபே வியாகரவாணி ( பெயர்களையும் உருவங்களையும் உண்டு பண்ணுகிறேன்,’ )என்றும்
பெயரோடு உருவமும் சேரக் கூறப்பட்டிருத்தலின்; ஈண்டுப் ‘பிற’ என்பது திருமேனியைக் காட்டுகிறது.
மற்றும், இவர்தாமும் இதனைப் பின்னர்க் கூறுமிடத்து-அநு பாஷிக்கிற இடத்தில் –
பேரும் ஓர் உருவமும்’ என்று அருளிச் செய்தல் காண்க.

பேரும் ஓர் உருவமும் –
இவற்றுள் ஒரு திருப்பெயரும் ஒரு திரு உருவமும்.
உளது இல்லை-
அடியர் அல்லாதார்க்குத் ஸ்தூலமாக நினைப்பதற்கும்-பிரதிபத்தி பண்ணுவதற்கு – அரியனவாய் இருக்கும்.
இலது இல்லை –
அடியார்க்கு எல்லாம் காணலாம் ஆகையாலே இல்லது இல்லை.
பிணக்கே-
இதில் மாறுபாடு உண்டோ? இல்லை என்றபடி.
அடியார்கள் எல்லாம் காண்கையாலே மங்களா சாசனம் பண்ணி நிற்பார்கள் –
அடியர் அல்லாதார் இவை இல்லை என்று இருக்கையாலே முதலிலேயே கிட்டார்கள்; ‘
இவ் விருவர்க்கும் நடுவே பொருள் நித்தியமாகப் பெற்றோமே!’ என்று தாம் இனியர் ஆகிறார்.

இனி, ‘பேரும் ஓர் உருவமும் உளது, இலது இல்லை, இல்லை பிணக்கே’ என்பதற்கு,
பேரும் ஓர் உருவமும் உளது-
திருப்பெயரும் திருபெயருக்குப் பொருளான திருமேனியும் நித்தியம்;
இல்லது இல்லை; இல்லை பிணக்கே;
ஆதலால், இவ் விடையாட்டத்தில் -இவ் விஷயத்தில் விவாதம் வேண்டா
என்கிறார் –

———————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

முந்தின யச் சப்தம் உதகர்ஷ பரம் -ஸ்வ யத்ன பரரை ஒழிய ந நமேயம்-என்கிற ராவணாதிகளைப் போலே இருக்கிற
அநாஸ்ரித்தற்கு இன்னபடிப்பட்டு இருக்கும் என்று அறிய ஒண்ணாத படி இருக்கும் என்று ஓர் அர்த்தம் கூட்டி நிர்வஹிக்கக் கடவது –
ஆஸ்ரிதர் ஆகிறார் அவனே காட்டக் காணுமவர்கள்

கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான் –
நேரே கடிக்கமலத்துக்குள்ளிருந்தும் காண்கிலான் –
நீராடி தான் காண மாட்டாத –
கட்கரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவருக்கும் கட்கரிய கண்ணானை –
யமேவேஷ வ்ருணுதே தேந லப்ய
-இத்யாதி அனுசந்தேயம் –

பிற -திரு நாமங்களுக்கு அந்யமாய் இருக்கிற திரு மேனிகள் -என்றபடி –

சஹஸ்ராஸ்ய –சஹஸ்ர சப்தார்த்தம் அநந்தம்

ஓர் பேரும் ஓர் உருவமும் -இங்கு ஓர் அத்விதீயம்-ஸ்லாக்யதை

பிணக்கே -பிணக்கு உண்டோ இல்லை என்று சப்தார்த்தம் -இல்லை என்று உகக்கிறார்
அதவா-ஆஸ்ரிதற்கும் அநாஸ்ரிதற்கும் நித்ய விவாதமாய் இருக்கும் -என்றுமாம் –

—————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading