ஸ்ரீ திருவேங்கடமும் ஸ்ரீ திருவரங்கமும் ஆழ்வார்கள் ஒரே அருளிச் செயல் பாசுரத்தில் மங்களா சாசனம்–

காவேரி விராஜா சேயம் வைகுண்டம் ரெங்க மந்திரம் 
ஸ வாஸூதேவோ ரங்கேஸே ப்ரத்யக்ஷம் பரமம் பதம்–

விமாநம் ப்ரணவாகாரம் வேத ஸ்ருங்கம் மஹாத்புவம்
ஸ்ரீரெங்கசாயீ பகவான் ப்ரணவார்த்த ப்ரகாஸஹா-—–

வேங்கடாத்ரி சமம் ஸ்தானம் ப்ருஹ்மாண்டே நாஸ்தி கிஞ்சன வேங்கடேச சமோ தேவோ ந பூதோ ந பவிஷ்யதி –திருமலை மஹாத்ம்யம்

தேசாந்தர கதோ வாபி த்வீ பாந்தர கதோபிவா ஸ்ரீ ரெங்காபி முகோ பூத்வா ப்ரணிபத்ய ந சீததி –ஸ்ரீ ரெங்கம் மஹாத்ம்யம்

ஸ்ரீ திரு அரங்கம்- மங்களா சாஸன -பரமான ஸ்ரீ அருளிச் செயல்கள்–

ஸ்ரீ பெரியாழ்வார் -35-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ ஆண்டாள் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் -14-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -31-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -55-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் 10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -73-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ நம்மாழ்வார் -12-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் 1-பாசுரம் மங்களாசாசனம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் 4-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பேயாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்

மொத்தம் –247–பாசுரங்கள் மங்களாசாசனம்

———

ஸ்ரீ பெரியாழ்வார் -7-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ ஆண்டாள் -16-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -11-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமழிசைப் பிரான் -15-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -61-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ நம்மாழ்வார் -52-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் பாசுரம் -9-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பேயாழ்வார் -19-பாசுரங்கள் மங்களாசாசனம்

மொத்தம் -202-பாசுரங்கள் மங்களாசாசனம்

———

ஹம்ஸ -மத்ஸ்ய -ஹயக்ரீவ –கூர்மம் -அரங்கன்-ஐந்தாவதாக பிரமன் உணர்கிறான் -தஸாத்யாயி -சிவன் நாரதர் இடம் -10 அத்தியாயங்கள் ப்ரஹ்மாண்ட புராணம்-ஆறு முறை தபஸ்ஸு செய்து-அஷ்டாக்ஷர மந்த்ரம் கூர்ம ரூபி உபதேசிக்க -ஸ்வா பாவிக திவ்ய மங்கள விக்கிரஹ ஸேவை பெற்றான் –

அரங்கனை வழி பட்டு மோக்ஷம் பெற சுனந்தர் உபதேசிக்க பிரமன் மோக்ஷம் பெற்றதும் அடுத்த பிரமன் வருவான்

வேதம் அம்சமாக பிரணவம் அருளி தானாகவே படைக்கப் பார்த்து-ஆச்சார்ய முகமாக ஹயக்ரீவர் உபதேசிக்க

ஐப்பசி ரோஹிணி -ஸத்ய லோகத்திலேயே ப்ரஹ்மோத்ஸவம் செய்து
ஸூர்யனுக்கு பாஞ்சராத்ரம் உபதேசம் செய்து -அவனும் அங்கு திரு வாராதானம்
வைவஸ்த்வ மநு -விவஸ்வான் -அவனும் ஆராதிக்க
முன்பு ஸ்ரீ ரெங்கத்திலும் ஐப்பசி ப்ரஹ்மோத்சவம் இருந்ததாம் –
இஷ்வாகு வைவஸ்ய மனு பிள்ளைக்கு உபதேச -கீதையில் 4 அத்யாயம் பரம்பரா பிராப்தம்-கர்மயோக பரம்பரை போல் பாஞ்சராத்ர ஆகமும் –

7 அத்யாயம் -ப்ரஹ்ம புத்திரரான வசிஷ்டர் சிஷ்யரான -இஷுவாகு அயோத்யைக்குக் கொண்டு வந்த விருத்தாந்தம்

நான்முகனைப் போல் நீயும் தவம் செய்தால் -அவனே இங்கே வருவான் -உன் வம்சத்தில் தானே வருவான் -ராவணனை வென்று விபீஷணனுக்கு வழங்குவான்
அனைத்தும் அறிந்த வசிஷ்டர் வரப்போகும் -உனது வம்ச சோழ வம்சர் ஆராதிப்பார் என்று சொன்னார் –
கலிங்கத்து பரணி ஸூர்ய வம்சம் என்றும் சொல்லும்

கல்பம் -1000 சதுர்யுகம் பூர்த்தி ஆகும் வரை இங்கேயே இருப்பர்
பின்பு பிரளயம் காலத்தில் சத்ய லோகம் சென்று -1000 சதுர்யுகம் நான்முகன் ஆராதிப்பார்
மீண்டும் படைக்கும் பொழுது இங்கே வருவார்-பிரமனின் 100 வயசில் ஸ்ரீ வைகுண்டம் செல்வார் -இப்படி தொடர்ந்து இங்கேயே இருப்பார்

நான்கு சதுர் யுகம் அயோத்யையில் இருப்பேன்-சரயு தபஸா நதிக்கு இடையில் -அயோத்தியை வடக்கில் 1-5 கிலோ மீட்டர் தூரம் -பங்குனி ரோஹிணி அயோத்யையில் ப்ரதிஷ்டை –பின்பு சந்த்ர புஷ்கரணியில் ஏழு மன்வந்தரங்கள் -ஒரு மன்வந்தம் 71 சதுர் யுகம்
பின்பு பிரளயம் வரும்-பகலில் மனிதர் இரவில் பிரமன் ஆராதனம் -அவனுக்கு பகல் இரவு

தர்ம வர்ம சோழன் -அஸ்வ மேத யாகம் முடியும் பொழுது அழைப்பு பெற்று அயோத்யைக்கு சென்றான்
தசரதன் யாகம் முடியும் பொழுது முறைக்கடவுள் குலதெய்வம் சமர்ப்பித்து ஆராதனம் செய்ததை கம்பரும் சொல்வார்

ராமர் அஸ்வமேத யாகம் செய்த போது விபீஷணனுக்கு பங்குனி கிருத்திகை சனி காலையில் கொடுத்தான்
இந்த அஸ்வமேத யாகத்துக்கு தர்ம வர்மன் அழைப்பு வர வந்தானாம்
கல்பம் தோறும் வேறே வேறே மாதிரி இருக்கும்
மற்ற இடங்களில் பட்டாபிஷேகம் ஆன பின்பு என்பர்

காவேரி நீராடி திருவாராதனம் செய்ததும் நாளை ரோகிணி -ப்ரஹ்மோத்ஸவம் செய்ய இன்றே இலங்கை போக வேண்டும் என்றான்
இங்கேயே பண்ணலாமே என்று தர்ம வர்மன் பிரார்த்திக்க
விதிப்படி செய்தார்கள்

இந்த பெருமாள் இட்சுவாகு மன்னன் முதல் ராமபிரான் வரை சூரிய குலமன்னர்கள் வழிபட்டு வந்த குலதெய்வம். திரேதா யுகத்தில் ராமாவதாரம் எடுத்த திருமால், ராவணனை அழித்தபின் அயோத்திக்கு பட்டம் சூட்ட தன்னோடு அழைத்து வந்த விபீஷணனுக்கு விடைகொடுத்து அனுப்பும்போது முன்னோர் பூஜித்த பெருமாள் விக்ரகத்தை விபீஷணனுக்கு அன்பாக கொடுக்கிறார். அதை தலையில் சுமந்தவாறு இலங்கை புறப்பட்ட விபீஷணன் களைப்பால் ஸ்ரீரங்கத்தில் தரையில் வைக்கிறார். பின்னர் விக்ரகத்தை எவ்வளவு முயன்றும் அங்கிருந்து எடுக்கமுடியவில்லை. அப்பகுதியை ஆண்ட சோழமன்னன் தர்மவர்மன் பெருமாளையும் தொழுதுவிட்டு விபீஷணருக்கு ஆறுதல் கூறி இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் தர்மவர்மன் பெருமாள் விக்ரகத்தை சுற்றி சிறிய கோயில் எழுப்பி வழிபட்டார். பின்னர், காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கோயில் மணலால் மூடி இருந்த இடம் தெரியாமல் போனது. தர்மவர்மனுக்கு பின் அவரது வழியில் வந்த கிள்ளிவளவன் காடாக இருந்த ஸ்ரீரங்கத்தில் வேட்டையாட வந்தபோது ஒரு மரத்தின் நிழலில் தங்கி இருந்த போது மரத்தில் இருந்த கிளி ஒன்று கோயில் இருந்த இடம் இது தான் என்று தெரிவிக்கிறது. அந்த கிளியின் சேவையை நினைவு கூறும் வகையில் கோயிலில் கிளி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
கிள்ளிவளவன் பெருமாளை தொழுது மதில்சுவரும், கோபுரமும் கட்டினான். கிள்ளிவளவனுக்கு பின் வந்த சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள்,ஆழ்வார்கள், ஆச்சார்யார்களின் தொடர்பணியால் தற்போது இருக்கும் நிலையில் ஸ்ரீரங்கம் கோயில் உயர்ந்தோங்கி நிற்கிறது. வைணவத்தின் மையத் தலைமைச்செயலகமாக ஸ்ரீரங்கம் திகழ்ந்தது. ஸ்ரீராமானுஜர் பரப்பிய விசிஷ்டாத்வைதம் நெறிக்கு ஸ்ரீரங்கமே நிலைக்களம். சிலப்பதிகாரம், நாலாயிர திவ்யபிரபந்தத்தில் இக்கோயில் குறித்த வர்ணனைகள் உள்ளன. கோயில் தோன்றிய விதத்துக்கு ஆதாரத்துடன் கூடிய கல்வெட்டு எதுவும் இல்லை. இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோயில்தான் ஏழு பிரகாரங்களுடன் அமைக்கப்பட்டு உள்ளது. கோயிலை சுற்றி 21 கோபுரங்கள் உள்ளது.
கோயிலின் நாழிக்கேட்டான் வாயிலில் வெளிப்புற முகப்பின் இருபக்கங்களிலும் உள்ள மாடங்களில் பத்திரர், சுபத்திரர் ஆகிய துவார பாலகர்கள் உள்ளனர். உள்புற முகப்பில் பெரியபெருமாள் மூலஸ்தானத்தை நோக்கி மகாவிஷ்ணுவுக்கு உரியவனாய் முறையே சங்கு, தாமரை வடிவங்களில் சங்கநிதி, பதுமநிதி உருவங்கள் இருபக்கங்களிலும் உள்ளன. மூலஸ்தானம் மேற்கே உள்ள மேடையில் விஜயரங்கசொக்கநாத நாயக்கர், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் உருவங்கள் தந்தத்தால் இயற்கை அளவில் செய்து, வண்ணம்தீட்டி வைக்கப்பட்டுள்ளது.
மூலவர், உற்சவர், தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மாமண்டபம் ரோட்டில் உள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்படுகிறது. பெருமாளுக்கு நைவேத்தியம் செய்ய சமைப்பதற்கு மடப்பள்ளியில் மண்பாத்திரங்களே தற்போதும் பயன்படுத்தப்படுகிறது. மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்வதில்லை. அதற்கு பதில் கோயில் பணியாளரை கொண்டு ஆண்டுக்கு இருமுறை கோயில் ஊழியர்களால் இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட தைலம் பூசப்பட்டு(தைலக்காப்பு) உலர்ந்தபின் நீக்கப்பட்டு மெருகூட்டப்படுகிறது.
இத்தலத்தில் ஆண்டாள், திருப்பாணாழ்வார், துலுக்கநாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர்.
கோயில் கருவறை மேலே தங்கத்தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தில் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன. ஆண்டுதோறும் துலா மாதத்தில்(ஐப்பசி) பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் பூஜைக்கு தங்கத்தில் செய்யப்பட்ட பொருட்களையே பயன்படுத்தப்படுகிறது. துலாமாதம் 30 நாட்களும் மூலவருக்கும், உற்சவருக்கும் சாளக்கிராம மாலை அணிவிக்கப்படும். கோயில் தல விருட்சம் புன்னை மரம், மூலவர் ஸ்ரீரங்கநாதர், உற்சவர் நம்பெருமாள், தாயார் ஸ்ரீரங்கநாச்சியார்.
கோயில் தீர்த்தங்கள்: சந்திர புஷ்கரணி, சூர்ய புஷ்கரணி, வகுள தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவத்த தீர்த்தம், பலாச தீர்த்தம், புன்னாக தீர்த்தம், பில்வ தீர்த்தம், கதம்ப தீர்த்தம், ஆம்பர தீர்த்தம், தென்திருக்காவிரி, வட திருக்காவிரி கோயிலில் நிர்வாக முறையை ஏற்படுத்திய இராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார். அவரது திருமேனி 5வது திருச்சுற்று எனப்படும் அகளங்கன் திருச்சுற்றில் வசந்தமண்டபத்தில் புதைக்கப்பட்டது. பிறகு தானாகவே அவரது திருமேனி பூமிக்கு வெளியே தோன்றியது. அதுவே தற்போது ராமானுஜர் சன்னதி மூலஸ்தானமாக உள்ளது. தான் ஏற்படுத்திய நிர்வாகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை கண்காணித்து வருகிறார் ராமானுஜர் என்பது ஐதீகம்.
ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரம் என்ற பெருமைக்குரியது ஸ்ரீரங்கம் ராஜகோபுரம். உயரம் 236 அடி. 13 நிலைகளுடன், 13 கலசங்களுடன் கம்பீரமாய் காட்சி அளிக்கிறது. 1987ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தெற்கு ராய கோபுரமே பிரதான நுழைவாயில். கிருஷ்ணதேவராயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாதிருந்த தெற்குராயகோபுரம் முன்பு மொட்டை கோபுரமாக இருந்தது. ராயர் கோபுரத்தில் திருஷ்டிபரிகாரத்திற்காக முனிக்கு அப்பனான ஸ்ரீனிவாசனை எழுந்தருள செய்தனர். நித்ய வழிபாடுகள் இன்று நடந்து வருகிறது. இந்த ராஜகோபுர வாசலை முனியப்பன் கோட்டை வாசல் எனவும் அழைக்கின்றனர்.
ஆண்டுக்கு ஒருமுறை தான் பெருமாளும், தாயாரும் பங்குனி உத்திரதினத்தன்று தாயார் சன்னதியில் உள்ள சேர்த்தி சேவை மண்டபத்தில் சேர்ந்து எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். 2ம் பிரகாரத்தின் நடுவில் பரமபதவாசல் கோபுரம் உள்ளது. இக்கோபுர வாயில்கள் ஆண்டு முழுவதும் மூடப்பெற்றே இருக்கின்றன. வைகுந்த ஏகாதசி விழாவின்போது மட்டும் இதன் கதவு திறக்கப்படுகின்றது. ஸ்ரீரங்கத்தில் எல்லாமே பெரியவை தான். ராமரால் தொழப்பட்ட ஸ்ரீரங்கநாதர் பெரிய பெருமாள். கோயில் பெரிதென்பதால் பெரிய கோயில் ஆயிற்று. 7மதில்களும், எண்ணற்ற மண்டபங்களும் பெரிது.
கோபுரம் ஆசியாவிலேயே பெரிது.இங்கிருந்த ஜீயரும் பெரிய ஜீயர். திருமதில்கள் பெரிது. தாயாருக்கு பெரிய பிராட்டி என்பது பெயர். இங்கு செய்யப்படும் தளிகைக்கு பெரிய அவசரம், வாத்தியத்திற்கு பெரிய மேளம், பட்சணங்களுக்கு பெரிய திருப்பணியாரங்கள் என்று பெயர். ஆண்டாளை வளர்த்தெடுத்து அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்து மாமனார் ஸ்தானம் வகிக்கும் ஆழ்வாரோ பெரிய ஆழ்வார். ஆழ்வார்களின் மங்களாசாசனங்களோ பெரிய மங்களாசாசனங்கள். 108 திவ்யதேசங்களில் 11 ஆழ்வார்களால் 247 பாக்களால் பெரிய மங்களாசாசனம் பெற்றவர் இப்பெருமாள்.
ஸ்ரீரங்கம் கோயில் நகைகளின் மதிப்பு பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். திருமங்கையாழ்வாரால் கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆயிரம் தூண்கள் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் 951 தூண்கள் மட்டுமே கட்டப்பட்டு இருக்கும். மீதமுள்ள 49 தூண்கள் வைகுண்ட ஏகாதசி விழா காலங்களில் மணல்வெளியில் 49 மரத்தூண்கள் நடப்பட்டு ஆயிரம் தூண்களாக கணக்கிடப்பட்டு விழா நடைபெற்று வருகிறது.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : வைகுந்த ஏகாகதசி பெருவிழா … பகல் பத்து 6-ம் நாள்  ஸ்ரீ நம்பெருமாள்
பெரிய திருமொழி தொடகத்திற்கு ஏற்க, இராமானுஜருக்கு காஞ்சி வரதராஜ ராக கருட வாகனத்தில் கீழப்படியில் காட்சி கொடுத்தது போல்,  சிகப்பு சிக்குத் தாடையில் வரதன் கலிங்கத்துராய் , சூரிய சந்திர வில்லைகள், ஓட்டியாண காப்பு சாற்றி, பங்குனி உத்திர பதக்கம், வைஜயந்தி பதக்கம், அடுக்கு பதக்கங்கள், அரைச் சலங்கை, மகர கர்ண பத்ரம், வைர அபயஹஸ்தத்துடன், வெண்பட்டு வஸ்திரம், 2 வட பெரிய முத்து சரம் சாற்றி, நெல்லிக்காய் பொட்டு மாலை, தங்கப்பூண் பவள மாலை,
பின் சேவையாக – மகரி பதக்கம், புஜ கீர்த்தி, தாயத்து தொங்கல் கைகளில் சாற்றி, சேவை சாதிக்கிறார் 🙏🏻

———————————-

ஸ்ரீ வேங்கடேச புராணம்

த்ரை லோக்யம் கிம் சிரேஷ்ட ஸ்தலம் வால்மீகி நாரதர் இடம் வாமன புராணம்
சங்கர ஸ்கந்த -இதே கேள்வி உத்தம ஸ்ரீ வைஷ்ணவ ஸ்தலம் -பிரகலாதன் அம்பரீஷன் -வழியில்
அம்பரீஷ வனம் இங்கும் உண்டே
விஷ்ணுவே திருமலை வடிவம்ன் -தபஸ்
அகஸ்தியர் உபாசிட்டவசுக்கு உபதேசம் -சார்ங்கம் ஏந்திய வாசுதேவனுக்கு உகந்த
வராஹ புராணம்
ரிஷிகள் வியாசர் -அதி ப்ரேசியமான ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரம்
பூமி தேவி வராஹ –
ஸ்ரீ வேங்கடேசன் வாசுதேவா ஆலயம்
பாத்திமா புராணம்
நாராயணன் ஆவிபிரபாவம் செய்த திருமலை
கருட புராணம்
அருந்ததிக்கு வசிஷ்டர் -நித்ய விபூதி விடவும் ஸூர்ய மண்டலம் விடவும் ஸ்வேதா தீபம் விட இங்கு உகந்து
ப்ருஹ்மாண்ட மாண்ட ப்ருகுவுக்கு நாரதர் புண்ய க்ஷேத்ரம் -ஸ்ரீ வைகுண்ட விரக்த்தாய
ரிக் வேதம் -அராயி காணே விகடே கிரீம் கச்ச யவிஷ்யோத்தர புராணம் 14-21) 6160. சொல்லப்பட்ட திருமலையே …ஸ்ரீம் பீடன் -வேதமே சொல்லுமே

ரிக் வேதத்தில் உள்ள,
“அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே
சிரிம்பிடஸ்ய ஸத்வபி: தே பிஷ்ட்வா சாதயாமஸி”என்ற மந்திரம்,
“மனிதா! நீ செல்வமில்லாதவனாகவோ, எதிர்காலம் பற்றிய பார்வை இல்லாதவனாகவோ, உலகியல் வாழ்க்கையில் தவிப்பவனாகவோ,
சுற்றி உள்ளவர்களால் ஒதுக்கப்படுபவனாகவோ இருக்கிறாயா? வருந்தாதே!
அலர்மேல் மங்கைத் தாயாரைத் திருமார்பில் கொண்ட திருவேங்கடமுடையானின் மலையைச் சென்று அடைவாயாக!
பக்தர்களோடு இணைந்து கோவிந்தா! கோவிந்தா! என கோஷம் இட்டபடி அந்தப் பெருமாளிடம் சென்றால்,
அவர் உன்னைக் காப்பார்! திருப்பதி வந்தால் திருப்பம் வரும்!” என்று சொல்கிறது.

ரிக்வேதம் போற்றும் திருவேங்கடம்

“அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே, சிரிம்பிடஸ்ய ஸத்த்வபி: தேபிஷ்ட்வா சாதயாமஸி” என்ற ரிக் வேத மந்திரம் திருமலையைப் புகழ்கிறது. ஏழைகள், எதிர்காலம் பற்றிய அறிவில்லாதவர்கள், துன்பப்படுபவர்கள், சுற்றதாரின் ஆதரவுஅற்றவர்கள் ஆகிய அனைவரும் பக்தர்களோடு இணைந்து ஸ்ரீநிவாசன் திகழும் திருமலைக்குச் சென்று, அப்பெருமாளின் திரு வடிகளில் அடைக்கலம் புகுந்தால் அவன் காத்தருள்வான் என்பது இம்மந்திரத்தின் பொருள்.

சிலப்பதிகாரத்தில் திருமலை

சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தில் காடு காண் படலத்தில் திருமலையைப் புகழ்ந்து இளங்கோவடிகள் பாடியுள்ளார். வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்குயர் மலயத்து உச்சி மீமிசை என்று அப்பாடல் தொடங்குகிறது.

திருமலை ஸ்ரீநிவாசன், முதலில் அங்கே அவதாரம் செய்தபோது விபவ அவதாரமாகத் தோன்றி, பத்மாவதியை மணம் புரிந்து, அதன் பின் அர்ச்சாவதார நிலைக்கு மாறிக் கோயில் கொண்டவர். விபவம், அர்ச்சை ஆகிய இருநிலைகளும் இணைந்திருப்பது ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கே உண்டான தனிச்சிறப்பு.

திருமலை கோயிலில் ஒரு மண்வெட்டி திருமலையப்பனுக்கான புஷ்பங்கள் அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராமாநுஜரின் சீடரான அனந்தாழ்வான் அமைத்த நந்தவனத்தில் இருந்துதான் இன்றளவும் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு சமயம் திருமலையப்பனே சிறுவன் வடிவில் அனந்தாழ்வானுடன் லீலை புரியச் சென்றான். அப்போது அந்தச் சிறுவனைத் தன் மண்வெட்டியால் அனந்தாழ்வான் அடித்தார். சிறுவனின் தாடையில் இருந்து ரத்தம் பெருகி வந்தது. அத்துடன் அச்சிறுவன் ஓட, அவனை அனந்தாழ்வான் துரத்தி வந்தார்.

மலையப்பனின் கருவறைக்குச் சென்று அச்சிறுவன் மறைந்து போனான். வந்தவன் மலையப்பனே என உணர்ந்தார் அனந்தாழ்வான். மலையப்பனின் தாடையிலிருந்து ரத்தம் வந்தபடியால், அவ்விடத்தில் பச்சைக் கற்பூரம் வைக்கப்பட்டது. அதனால் தான் இன்றளவும் மலையப்ப சுவாமியின் தாடையில் பச்சைக் கற்பூரம் இருப்பதைக் காணமுடிகிறது. பெருமாளை அடிப்பதற்கு அனந்தாழ்வான் பயன்படுத்திய மண்வெட்டி இன்றளவும் சந்நதி நுழைவாயிலில் பராமரிக்கப் பட்டு வருகின்றது.

திருமலையில் உள்ள ராமாநுஜர் சந்நதியில் ராமாநுஜர் பெருமாளுக்குக் குருவாக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு எதிரே சீடனாகப் பெருமாள் நிற்பதாக ஐதீகம். அதனால் தான் அமர்ந்திருக்கும் ராமாநுஜருக்கு எதிரே நின்றிருக்கும் பெருமாளின் திருவடிச் சுவடுகள் மட்டும் இருப்பதைக் காணலாம். பெருமாளுக்குச் சங்கு சக்கரங்கள் தந்தபடியாலும், வேதார்த்த சங்கிரகத்தை உபதேசம் செய்தபடியாலும், பெருமாள் தனக்குக் குருவாக ராமாநுஜரை அங்கீகரித்தார்.

திருமலையில் கோயில் கொண்டிருக்கும் நரசிம்மர் நிவாசனால் பூஜிக்கப்பட்டவர். ஸ்ரீநிவாச கல்யாணம் நடைபெறுவதற்கு முன் இந்த நரசிம்மரைப் பூஜித்து, அவருக்குப் பிரசாதங்களை நிவேதனம் செய்துவிட்டுத்தான் பத்மாவதியை மணந்துகொள்ளச் சென்றார் ஸ்ரீநிவாசன்.

விமான வேங்கடேசன்

பொன்மயமான ஆனந்த நிலைய விமானத்தின் வடக்குப் பகுதியில் விமான வேங்கடேச னாகப் பெருமாள் காட்சிஅளிக்கிறார். முன்பு ஒரு பொய்கைக் கரையில் கஜேந்திரன் என்ற யானை துயருற்றபோது அதைக் காத்த பெருமாள், சுவாமி புஷ்கரிணிக் கரையிலும் அப்படி அடியார்களின் குரல் ஏதும் கேட்டால், உடனே ஓடோடிச் சென்று காக்க வேண்டும் என்ற எண்ணத்திலே விமான வேங்கடேசனாக, விமானத்தின் மேல் தயார் நிலையில் காத்திருக்கிறார்.

தெய்வீக மலை

‘கட்டெதுர வைகுண்டமு’ என்ற கீர்த்தனையில், திருமலையில் உள்ள ஒவ்வொன்றுமே தெய்வீகமானது என்று அன்னமாச்சாரியார் பாடியுள்ளார். வைகுண்ட லோகமே திருமலை, வேதங்களே அதன் பாறைகள், பிரம்மா உள்ளிட்ட தேவர்களின் லோகங்கள் இம்மலையின் நான்கு மூலைகள், தேவர்களே இம்மலையில் வாழும் உயிரினங்கள் என்றெல்லாம் கொண்டாடியிருக்கிறார் அன்னமாச்சாரியார்.

வேங்கடம் என்றால் என்ன?

வடமொழியில் வேம் என்றால் பாபம், கடம் என்றால் போக்குவது. வேங்கடம் என்றால் பாபத்தைப் போக்குவது என்று வடமொழியில் பொருள்படும். தமிழில் வேம் என்றால் போக்குவது, கடம் என்றால் பாபம். எனவே தமிழிலும் வேங்கடம் என்றால் பாபத்தைப் போக்குவது என்றே பொருள்படும். நம் அனைத்துப் பாபங்களையும் தீர்க்கவல்ல மலை திருவேங்கட மலை.

ஒலியும் ஒளியும்

ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச என்பது கீதையில் கண்ணன் கூறிய சரம ஸ்லோகம் ஆகும். அதாவது, இறைவனை அடைவதற்கான மார்க்கங்களாகப் பிற தர்மங்களை எண்ணாமல், இறைவனே அவனை அடைவதற்கான வழியாவான் என்பதை உணர்ந்து, அவன் திருவடிகளை அடைக்கலமாக நாம் பற்றினால், அவன் நம்மை அனைத்துப் பாபங்களில் இருந்தும் போக்கி, நமக்கு முக்தி அளிப்பான் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

ஒலி வடிவில் உள்ள இந்த சுலோகத்தின் ஒளி வடிவமாகத் திருமலையப்பன் திகழ்கிறார். அவரது வலக்கரத்தைத் திருவடிகளை நோக்கிக் காட்டி, தன்னிடம் அடைக்கலம் புகுமாறு அறிவுறுத்து கிறார். இடக்கரத்தைத் தொடை அருகே வைத்துக் கொண்டு, அவ்வாறு நாம் அடைக்கலம் புகுந்தால், பிறவிப் பெருங்கடலை நம் தொடை அளவுவறச் செய்வதாக உறுதி அளிக்கிறார்.

சுக்ரீவன் கூற்று சீதையைத் தேடுவதற்காக வானர வீரர்களை ஏவிய சுக்ரீவன், “வடசொற்கும் தென்சொற்கும் வரம்பிற்றாய் நான்மறையும் மற்றை நாலும் இடைசொற் பொருட்கெல்லாம் எல்லையதாய் நல்லறத்துக் கீறாய வேறு புடைசுற்றுந் துணையின்றிப் புகழ்பதிந்த மெய்யேபோல் பூத்துநின்ற வடைகற்றுந் தண்சாரல் ஓங்கிய வேங்கடத்தில் சென்றடைதீர் மாதோ தோடுறு மால்வரை அதனைக் குறுகுதிரேலும் நெடிய கொடுமை நீங்கி வீடுறுதிர் ஆதலினான் விலங்குதிர் அப்புறத்து நீர்” என்று அவர்களைப் பார்த்துச் சொல்வதாகக் கம்பன் பாடுகிறான்.

அதாவது, “திருமலையில் மட்டும் சீதையைத் தேடாதீர்கள். ஏனெனில், அங்கே சில காலம் இருந்தாலே நீங்கள் பாபம் நீங்கி முக்தி அடைந்து விடுவீர்கள். நீங்கள் எல்லோரும் முக்திக்குச் சென்று விட்டால் அதன் பின் யார் சீதையைத் தேடுவது எனவே திருமலையைத் தவிர்த்த பிற இடங்களில் மட்டும் சீதையைத் தேடுங்கள்!” என்று அறிவுறுத்துகிறான் சுக்ரீவன்.

கோவர்த்தன மலையே திருமலை

கண்ணன் ஏழு நாட்கள் கோவர்த்தன மலையைத் தாங்கிப் பிடித்து ஆயர்களையும் ஆநிரைகளையும் காத்தான் என்பதை நாம் அறிவோம். அந்த மலை கண்ணனுக்குக் கைம்மாறு செய்ய விழைந்ததாம். அதனால் அந்த கோவர்த்தன மலையே திருமலையில் ஏழு மலைகளாக மாறியது என்றும், தன்னை ஏழு நாட்கள் சுமந்த கண்ணனை ஏழு மலைகளாக மாறிக் காலந்தோறும் அது தாங்கி நிற்கிறது என்றும் சொல்வார்கள்.

கலியுக வைகுண்டம்

வைகுண்ட லோகத்தில் உள்ள திருமாலை நேரில் சென்று தரிசிக்கும் பேறு பெறாதவர்களுக்கு இந்தக் கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக, கலியுக வரதனாகத் திருமலையப்பன் தரிசனம் தருவதால், திருமலையைக் கலியுக வைகுண்டம் என்று சொல்வார்கள்.

யசோதையே வகுளமாலிகை

கண்ணனின் வளர்ப்புத் தாயான யசோதையால், கண்ணன் செய்து கொண்ட பதினாறாயிரத்து நூற்றெட்டுத் திருமணங்களில் ஒன்றைக் கூடக் காண இயலவில்லை. அதை எண்ணி அவள் வருந்திய நிலையில், அந்த யசோதையையே வகுளமாலிகையாகத் திருமலையில் பிறக்க வைத்தார் திருமால். வகுளமாலிகை ஸ்ரீநிவாசனுக்கும் பத்மாவதிக்கும் திருமணத்தை ஏற்பாடு செய்து, தானே முன்நின்று நடத்தி வைத்துக் கண்ணாரக் கண்டு களித்தாள்.

வேதவதியே பத்மாவதி

திருமாலை மணக்க விரும்பிக் கடுந்தவம்புரிந்து வந்தாள் வேதவதி என்ற பெண். ராமாயணக் காலத்தில் ராவணன் சீதையை அபகரிக்க வந்தபோது, சீதையை அக்னி லோகத்துக்குப் பாதுகாப்பாக அனுப்பிவிட்டு, போலிச்சீதையாக இந்த வேதவதி வந்து ராவணனுடன் சென்றதாகப் பாத்ம புராணம் போன்ற நூல்கள் சொல்கின்றன. அந்த வேதவதிக்கு அருள்புரிய நினைத்தார் திருமால். அதனால் தான் அந்த வேதவதியைப் பத்மாவதியாகத் திருமலையில் அவதரிக்க வைத்து, தானே ஸ்ரீநிவாசனாக வந்து அவளை மணந்து கொண்டார்.

வேங்கடேச சுப்பிரபாதம்

மணவாள மாமுனிகளின் சீடரான பிரதிவாதி பயங்கரம் அண்ணா என்பவர் திருவேங்கடமுடையானுக்காக வேங்கடேச சுப்பிரபாதம் இயற்றினார். ராமனுக்குச் சுப்பிரபாதம் பாடும் விதமாக விசுவாமித்திரர் கூறிய,கௌசல்யா ஸுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர சார்தூல கர்தவ்யம் தைவம் ஆஹ்நிகம்என்ற ஸ்லோகத்தையே முதல் ஸ்லோகமாகக் கொண்டு, மேலே வேங்கடேசனின் சுப்பிரபாதம் இயற்றப்பட்டது.

திருமலையப்பன் நெற்றியில் இருப்பது என்ன?

திருமலையப்பன் நெற்றியில் அணிந்திருக்கும் திருமண் காப்புக்கு ஸ்ரீபாத ரேணு என்று பெயர். இறைவனின் பாதத்தூளியை நாம் நெற்றியில் திலகமாக அணிகிறோம். பக்தர்கள் மேல் பேரன்பு கொண்ட திருவேங்கடமுடையான், தன் பக்தர்களின் பாதத்தூளியைத் தன் நெற்றியில் திருமண் காப்பாக அணிகிறானாம்.

அதனால் தான் ஸ்ரீபாத ரேணு – அடியார்களின் பாதத் தூளி எனத் திருமலையப்பனின் திருமண் காப்பை அழைக்கிறார்கள்.

—————————-

திரு விருத்தம் முதலில் திருவேங்கடம் -8 தடவை உண்டு -திருவரங்கம் ஒரே
திருவாசிரியம் நேராக இல்லை -மறைமுகமாக திருவேங்கடம்
கண்ணாவான் முதல் மங்களா சாசனம் திருவேங்கடம்
இரண்டு பதிகம் -ஒவ்வொரு பத்திலும்
கல்லும் -பெரிய திருவந்தாதி

கோவில் திருவாய் மொழியிலும் இரண்டு பதிகம் திருவேங்கடத்துக்கு-த்வயார்த்தம் விவரணம்

வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும்
ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால்
வளர்த்த இதத்தாய் இராமானுசன்– ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த தனியன்

திலதம் உலகுக்கான திரு வேங்கடத்தானை
அலகில் புகழ் அந்தாதி ஆயிரமும் -உலகில்
உரைத்தான் சடகோபன் உத்தமர்கள் நெஞ்சில்
விரித்தான் பெரும் பூதூர் வேந்து–ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்

———–

வேங்கட மா மலை …அரவின் அணையான் -3
பைத்த பாம்பணையான் திருவேம்கடம் -திருவாய் மொழி -3-3-10-

அரவின் அணையான் தான் திரு வேம்கடத்தான் என்று ஆழ்வார்கள் அனுபவித்த படி –

—————

நிலையார நின்றும் கிடந்ததோர் கிடக்கையும்

மந்தி பாய் வட வேங்கடம் -அரங்கத்து அரவின் அணையான் –3
செழும் கொழும் வேம்கடத்துள் குடந்தை -திருச் சந்த விருத்தம் -60-

வடக்கு வாசலாலே வந்து புகுந்து படுக்கையிலே சாய்ந்து அருளினான் –
நிலையார நின்றான் என்று நின்ற அழகில் துவக்கு உண்பார்க்கு திரு மலையிலே நின்று அருளியும் –
கிடந்ததோர் கிடைக்கை -என்று கிடை அழகில் துவக்கு உண்பார்க்கு திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளியும் –
திரு வேம்கடத்தான் திருமலையில் நின்று திருக் குடந்தையிலே சாய்ந்து அருளினான் –

———–

ஸ்ரீ பெரியாழ்வார்  மங்களாசாசனம்

உலகம் அளந்த பொன்னடியே அடைந்து –திரு வரங்கத்து அம்மானே -5-8-9-
வேங்கட மா மலை நின்றான் அரங்கத்து அரவின் அணையான் -அமலனாதி பிரான் -3
உலகம் அளந்து –அரங்கத்தம்மான் -என்கிறார் –
அன்று ஞாலம் அளந்த பிரான் சென்று சேர் திருவேங்கடம் –திருவேங்கடமுடையான் திருவடிகளை அடைய பாரிக்கும் ஸூரிகளும்
எந்நாளே நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு-என்று பிரார்த்திக்க –
தாள் பரப்பி மண் தாவிய ஈசன் -பூமியை அடைய தன் திருவடிகளால் ஆக்கிரமித்து
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் -என்று தனது திருக்கையாலே
உலகம் அளந்த பொன்னடியைக் காட்டி -தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடம் –
அவன் தானும் இங்கே கண் வளர்ந்து அருளும் பெரிய பெருமாள் -நீள் மதிள் அரங்கம்
என்று திருப் பாண் ஆழ்வார் அருளிச் செய்ததை கேட்டு திரு மங்கை ஆழ்வார் திரு மதிள் செய்து அருளியது –
திருப் பாண் ஆழ்வார் பாசுரம் ஒட்டியே துளங்கு பாசுரத்தில் திரு வேங்கடமுடையான் சரித்ரத்தை கூறி
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே -என்று
திருவரங்கன் திருவடிகளை சரணாக பற்றுகிறார் -இருவரும் கார்த்திகை மாதத்தில் அவதரித்த சேர்த்தியும் உண்டு இ றே –
திரு நஷத்ரங்களும் அடுத்து அடுத்து நஷத்ரங்கள் இ றே-

கட்டு எழில் சோலை நல் வேங்கட வாணனை -கட்டு எழில் தென் குருகூர் சடகோபன் சொல்
கட்டு எழில் ஆயிரம் -என்றும் -முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரம் -என்றும் -இ றே நம் ஆழ்வாரும் அருளிச் செய்கிறார் –
திரு வேங்கடத்து என்னானை –உளனாகவே என்னாவில் இன் கவி யான் ஒருவருக்கும் கொடுக்கிலேன் -என்றார் ஆழ்வார் –
வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன் -என்றார் ஸ்ரீ பராசர பட்டர் –
திருவேங்கடவன் வடவானை -திருவரங்கன் குடபாலானை -இருவரும் ஒருவரே –

—————

ஸ்ரீ ஆண்டாள் –பாசுரங்கள் மங்களாசாசனம்

நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்து உரை செய்
மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்துரைப்பார் அவர் அடியார் ஆகுவரே–8-10-

————-

ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் – மங்களாசாசனம்

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——1-

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே–3–

—————–

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்-மங்களாசாசனம்

பள்ளியாவது பாற் கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட வெந்தை பிரானவன் பெருகுமிடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள் தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே –1-8-2-

வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
மருவாள் என் குடங்கால் வாள் நெடுங்கண் துயில் மறந்தாள் வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர் தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே–5-5-1-

சிந்தனையைத் தவநெறியைத் திருமாலைப் பிரியாது
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டார்
கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
வந்தணனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே-5-6-7-

துளங்கு நீண்முடி யரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு நாழிகை ஏழுடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்தவாறு அடியேன் அறிந்து
உலகம் அளந்த பொன்னடியே யடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-9-

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள்
என்னோ கழன்ற விவை யென்ன மாயங்கள்
பெண்ணானோம் பெண்மையோம் நிற்க வவன் மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே–11-3-7-

இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற மெய்ம்மையை விரிந்த சோலை
வியன் திருவரங்கம் மேய செம்மையைக் கருமை தன்னைத்
திருமலை ஒருவனையானை தன்மையை நினைவார் என் தன் தலை மிசை மன்னுவாரே–திருக் குறும் தாண்டகம் -7-

உலகம் ஏத்தும் தென்னானாய் வடவானாய் குடபாலனாய் குண பாலமதயானாய்–திரு நெடும் தாண்டகம் -9-

உலகமுண்டா பெருவாயா–திருவேங்கடத்தானே –உலகுண்ட பெருவாயர் இங்கே வந்து
என் பொரு கயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து புனல் அரங்கமூர் என்று போயினாரே-24-

——————

அன்று ஞாலம் அளந்த பிரான் சென்று சேர் திருவேங்கடம் –திருவேங்கடமுடையான் திருவடிகளை அடைய பாரிக்கும் ஸூரிகளும்
எந்நாளே நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு-என்று பிரார்த்திக்க –
தாள் பரப்பி மண் தாவிய ஈசன் -பூமியை அடைய தன் திருவடிகளால் ஆக்கிரமித்து
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் -என்று தனது திருக்கையாலே
உலகம் அளந்த பொன்னடியைக் காட்டி -தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடம் –
அவன் தானும் இங்கே கண் வளர்ந்து அருளும் பெரிய பெருமாள் -நீள் மதிள் அரங்கம்
என்று திருப் பாண் ஆழ்வார் அருளிச் செய்ததை கேட்டு திரு மங்கை ஆழ்வார் திரு மதிள் செய்து அருளியது –
திருப் பாண் ஆழ்வார் பாசுரம் ஒட்டியே துளங்கு பாசுரத்தில் திரு வேங்கடமுடையான் சரித்ரத்தை கூறி
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே -என்று
திருவரங்கன் திருவடிகளை சரணாக பற்றுகிறார் -இருவரும் கார்த்திகை மாதத்தில் அவதரித்த சேர்த்தியும் உண்டு இ றே –
திரு நஷத்ரங்களும் அடுத்து அடுத்து நஷத்ரங்கள் இ றே-

கட்டு எழில் சோலை நல் வேங்கட வாணனை -கட்டு எழில் தென் குருகூர் சடகோபன் சொல்
கட்டு எழில் ஆயிரம் -என்றும் -முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரம் -என்றும் -இ றே நம் ஆழ்வாரும் அருளிச் செய்கிறார் –
திரு வேங்கடத்து என்னானை –உளனாகவே என்னாவில் இன் கவி யான் ஒருவருக்கும் கொடுக்கிலேன் -என்றார் ஆழ்வார் –
வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன் -என்றார் ஸ்ரீ பராசர பட்டர் –
திருவேங்கடவன் வடவானை -திருவரங்கன் குடபாலானை -இருவரும் ஒருவரே –

பள்ளியாவது பாற்கடல் அரங்கம் –நாடொறும் தெள்ளியார் வணங்கும் மலைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே -1-8-2-

திருவோணத் திரு விழாவில் காந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை–தர்மி ஐக்கியம்

திருவோணத் திரு விழவில் படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே –தர்மி ஐக்கியம்

திருவுடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய் -2-7-2-/நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேங்கத்து எந்தாய் -2-7-3-

குலமுடைக் கோவிந்தா கோவிந்தா -இவனே திருவேங்கடத்தான் -என்று அழைத்தக்கால்
நலமுடை நாரணன் -இவனே ஜகந்நாதன் -பெரிய பெருமாளானார்-நம்மன்னை நரகம் புகாள்-4-6-5-

அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உரை மார்பன் அன்றோ திருவேங்கடமுடையான் –
திருவாளர் திருப்பதியே திருவரங்கம் – 4-8-10-

———

ஸ்ரீ பூதத்தாழ்வார்  -மங்களாசாசனம்

மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான் மற்றும்
நினைப்பரிய நீளரங்கத்துள்ளான் – எனைப்பலரும்
தேவாதி தேவனெனப் படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன். –இரண்டாம் திருவந்தாதி – 28

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்றது
அணி திகழுஞ்சோலை அணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால். —இரண்டாம் திருவந்தாதி – 46

தமருள்ளம் தஞ்சை தலை யரங்கம் தண்கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை – தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிட் குடந்தை யென்பரே
ஏவல்ல வெந்தைக் கிடம்.–இரண்டாம் திருவந்தாதி – 70

———–

ஸ்ரீ பேயாழ்வார் – மங்களாசாசனம்

பண்டெல்லாம் வேங்கடம் பாற் கடல் வைகுந்தம்
கொண் டங்குறைவார்க்குக் கோயில் போல் – வண்டு
வளங்கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர். –மூன்றாம் திருவந்தாதி – 61

விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி
தண் குடங்கை நீரேற்றான் தாழ்வு.–மூன்றாம் திருவந்தாதி – 62

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading