ஸ்ரீ அருணாசல கவி நாடக ராமாயணம் -பகுதி -1

இராமநாடக நூலாசிரியர் வரலாறு 

சோழ நாட்டின்கண் ஞானத்தின் திருவுருவாகவும் கானத்தின் ஏழுபிறப்பாகவும் வந்த 
திருஞானசம்பந்தப் பெருமான் தோன்றிய சீர்காழிப்பதியின் பால் உள்ள தில்லையாடி என்னும் 
சிற்றூரில் வாழ்ந்த வேளாளர் குடிப்பெருமகனார் நல்லதம்பிப் பிள்ளைக்கும் அவர்தம் 
அருமை மனைவி வள்ளியம்மைக்கும் தமிழும் இசையும் செய்ததவப் பயனாய் அவர்களுக்கு 
நான்காவது திருமகனாகத் தோன்றியவர் அருணாசலக்கவிராயர் . 

இவர் சாலிவாகனசகம் 1884 விஜய ஆண்டு ( கி பி . 1711 ) பிறந்தார் . இவருடைய 
முன்னோர் சைனசமயத்திலிருந்து சைவசமயத்தைத் தழுவியவர் என்பர்
ஏன்பள்ளி கொண்டீர் அய்யா  ஏன் பள்ளி கொண்டீர் அய்யா ஆம்பல் பூத்தசய பருவத மடுவிலே 
அவதரித்த இரண்டாற்று நடுவிலே
கோசிகன் சொல் குலையில் அம்பு ஈசன் வில்லை ராமன் உரம் குளித்ததற்கோ - அரக்கிக் தெறித்தற்கோ முளித்ததற்கோ 
பரசு பறித்ததற்கோ மாசிலாதமிதி லேசன் பெண்ணுடனே வழிநடந்த களைப்போ 
தூசிலாதகுகன் ஓடத்திலே கங்கை துறை கடந்த இளைப்போ மீசரமாம்சித்ர கூடச்சிகரக்கல் மிசைகடந்த இளைப்போ 
காசினிமேல் மாரீசன்ஓடிய கதிதொடர்ந்த இளைப்போ ஓடிக் களைத்தோ 
தேவியைத் தேடி இளைத்தோ மரங்கள் ஏழும் தொளைத்தோ கடலைக்கட்டி வளைத்தோ இலங்கை என்னும் காவல் மாநகரை இடித்த வருத்தமோ 
ராவணாதிகளை அடித்த வருத்தமோ மதுரையி லேவரும் களையோ 
முதலை வாய்மகளைத் தரும் களையோ எதிர் எருதைப் பொரும் களையோ 
எடுத்தெறிந்த பெரும் களையோ கன்றை புதுவை ஆனமுலை உண்டுபேயினுபிர் போக்கி அலுத்தீரோ 
அதிர ஓடிவரும் குருவிவாயை இரண்டாக்கி அலுத் தீரோ துதி செய் ஆயர்களைக் காக்க வேண்டிமலை தூக்கி அலுத்தீரோ 
சதி செய் காலினால் காளிங்கன் மணிமுடி அலுத்தீரோ மருதம் தாக்கி சாய்த்தோ மேய்த்தோ தேய்த்தோ மாய்த்தோ 
ஆடுமாடுகள் சகடுருளை கஞ்சன்உ பிரை அர்ச்சுனனுக்காச் சாரதியாய்த் தேர்விடுத்த போரிலே சக்கரம் எடுத்த 

( ஏன் )
படிதனிலே மெத்தவும் நானே - உம்மைப் பரமெனவே அடுத்தேனே 
அடிமை கொள்வீர் என்னைத் 
செம்பொன் அணியரங் கப்பெருமானே 
தடம் உறைந்தகரும் பாறை சாபமது தடுத்து 
ரட்சித்தீரே விட ஒணாதகாகா சூரனுக் கொருகண் ரட்சித்தீரே 
கொடுமை கொண்டழுந்துரோ பதைக்குத்துகில் கொடுத்து ரட்சித்தீரே 
மடுவில் ஆனைமுன் ஓடிமுதலையை மடித்து ரட்சித்தீரே 
துபோல விடுத்து 
வாரும் பாரும் தீரும் கிருபைக் கண்ணாலே மனக்கவலை நினைத்தவரம் தாரும் என்சாமி 
தாரும் வட்சழி மேவும்மக லட்சுமியுடன் பெரும் மட்ச மாகவென்னை ரட்சிக்க எழுந்திரும் 

( ஏன் )
இவ்வாறான கவிராயருடைய உருக்கமான வேண்டுகோளுக்குப் பெருமான் இரங்கி அவருடைய கனவில் தோன்றிக் கம்பர் சடகோடாழ்வாரைப் பாடிப் பெருமை செய்து பின் 
இராமாயணத்தை அரங்கேற்றியது போல நீரும் நம் பரிசனங்களைப் போற்றிப் பாடி உமது இராமாயணத்தை அரங்கேற்றுவீராக என்று அருளிச் செய்து அவ்வாறே ஸ்ரீவைஷ்ணவர் 
களின் கனவிலும் தோன்றி இராம நாடகத்தை நம்சந்நிதியில் அரங்கேற்றி உபசரியுங்கள என்று கூறியருளினார் . 

பின்னர் அவர்கள் ஒருவரோடொருவர் தங்கள் கனவில் பெருமானருளிச் செய்தவற்றைக் கலந்துரையாடி மகிழ்ந்தனர் . கவிராயரும் கெருடாழ்வாரையும் 
சேனைமுதலியாகிய விநாயகரையும் சடகோபரையும் பஞ்சாயுதங்களையும் போற்றித் 
தோடயத்தில் அமைத்துப்பாடி அரங்கேற்றினார் . கோவிலாரும் கவிராயரை கவுரவித்துப் பல பரிசுகளைத் தந்து போற்றினார் .
பன்னீராயிரம் பாடல்களால் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தன்னூலை இயற்றியுள்ளார் . 
காப்பிய நயங்கள் சுவைகள் வருணனைகள் நிரம்பிய தன்னூலில் உவமமுதலாய அணி 
நயங்கள் , சொல்லணித் திறங்கள் சந்த நயங்கள் முதலியவற்றைக் கையாண்டுள்ளார் . 
அவையாவும் விளங்கக் கவிராயர் தருக்களும் திபதைகளுமாப் புனைந்த நூற்றுத் 
தொண்ணூற்றேழு கீர்த்தனைகளுள் அமைத்துள்ள திறன் போற்றத்தக்கதாகும்

சீதையிடம் ராமன் விடைபெற்றுச் சொல்ல வருகிறான்.  “நான் கானகம் போகிறேன்; பதினான்கு வருடத்தில் திரும்பி வந்து விடுவேன், நீ வருத்தப் படாமல் இரு” என்கிறான். அப்போது சீதை கேட்கிறாள்:

எப்படி மனம் துணிந்ததோ சாமி  வனம்போய் வருகிறேன்
என்றால் இதை ஏற்குமோ  பூமி        (எப்படி)

கரும்பு முறித்தாப் போலே சொல்லல் ஆச்சுதோ – ஒரு
காலும் பிரியேன் என்று சொன்ன சொல்லும் போச்சுதோ
வருந்தி வருந்தி தேவரீர்             வெல்ல
வார்த்தையால் கொல்லாமல்         கொல்ல
இரும்பு  மனதுண்டாச்சு              தல்லோ
என்னை விட்டுப் போகிறேன் என்று  சொல்ல (எப்படி)

 
சித்திரகூடத்தின் வளத்தைச் சீதைக்கு இராமன் காட்டிக் கூறும் பாடலிற் சில அடிகள் 


“ பாராய் பெண்ணே பாராய் 
சீராக நமக்குநேர் ஆகிறசித்திர கூடமலை 
ரத்தினபீடம் போலே 
மாதவர் முனிவர்சொல் வேதங்களைக் கிளி 
வாடிக்கையாற் கற்று வனமெங்கும் படிப்பதும் 
கோதும் தினைக் கொல்லையினிற் பம்பைகள் 
எடுத்துக் குரங்குகள் அடிப்பதும் 
ஆதவன் குதிரையைப்போல் பசும்பாறை ஒளிபாய்ந்த 
ஆடுகள் பசுமையாய்க் கோடேறி நடிப்பதும் 
பேதமில்லாமல் மேல்ஓடும் மேகத்தைப் 
பெண்யானை எனக்கையால் யானைகள் பிடிப்பதும் ” 
பாராய் பெண்ணே ! எனக்கூறும் கற்பனை பயிலத்தக்கதாம் . இவ்வாறே ஏனைய சரணங்களும் அமைந்துள்ளன .
இராமனைச் சீதையிடத்து அனுமான் வருணிக்குமிடத்து 

" அந்தராம சௌந்திரியம் என்னால் அறிந்து சொல்லப்போமோ 
எனத் தொடங்கி 

கந்தமேவுமர விந்தமலரும் அவர் 
காலுக்கு நிகராமோ , கைக்குத்தான் சொல்லப்போமோ 
உருண்ட மணிமுழங் காலுக்குவமை அவர் 
உடைய அட்சய தூணி ஏற்குமே 
திரண்ட பெருந்தொடை இரண்டுக்கும் எட்டுத் 
திசையானை துதிக்கையும் தோற்குமே
பூணும் 
விரிந்த மார்புக்கிணை பூமி அகலங் காணும் 
விளங்குங் கழுத்துக்குநேர் இளங்க முகே 
பரந்த புசங்களுக்கு மேரு மலையும் நாணும் 
பார்க்கப் பார்க்கப் பதினாயிரங் கண்சுள் வேணும் ( சுந் - தரு 8
சூர்ப்பணகை இராமனைக்கண்டு அவன் பேரழகில் மயங்கிக்  கூறுகின்ற விடத்து
தேவனோ மனிதன் தானோ யாவனோ யௌனமுள்ள 
சித்தனோ இவன் கர்த்தனோ பிரமன் 
பாவனையாற் கண்ட பெண்கள் 
ஆவியைக் கொள்ளை கொள் என்று 
படைத்தானோ என்னை உடைத்தானோ ? என்கிறாள்-( ஆரணி - திப 3 ) 
இவ்வாறே ஏனைய திபதைகளும் அமைந்துள்ளன .
அவளே சீதையின் பேரழகை 

காணவேண்டும் லட்சம் கண்கள் . 
சீதா தேவிதன் காலுக்கு நிகரோ பெண்கள் 
குவளை விழிகளோ பாணம் அவள் தன் 
வார்த்தை கொண்டால் அதுவே கல்யாணம் 
நவரத்தினத் தங்கத்தோடு 
நடையா லே அன்னப் பேடு 
அவனியிலே இல்லைஈடு . அவளுக்கவளே சோடு 
தங்கக் கொடி போல் இடையும் - சீவிவகிர்ந்து 
சாய்ந்த பின்னலின் சடையும் 
இங்கித மிருது வாக்கியம் 
இவளே தேவதா போக்கியம் 
மங்கையர்க் குள்ளே சிலாக்கியம் 
வாய்ச்சொல் உன்னதே பாக்கியம் ( ஆர . திரு . 8 )
இந்திரசித்து இலக்குமணன் இரண்டாம் முனறப் போர் வருணனையுள் . 

பெருஞ் சண்டை கேளீர்கள் அருஞ்சண்டை யாளிகள் 
தருந் திண்டேர் யானைகள் கருந்துண்ட சேனைகள் 
பெருஞ் சண்ட மாருதம் போல் நெருங் குண்டவாசிகள் 
மருங் கண்டவே தந்திரத் தோடு 
வருங் கண்டக இந்திரசித்தோடு . 

சிரத்தினில் மணிமகுடம் தரித்து மார்பிற் கவசம் 
பரித்துப் பணிகள் அலங் கரித்து வலியபெரும் 
கரத்தில் தனுவைக்கொண்டு சிரித்துமுப் புரங்களை 
எரித்த ருத்திரனைப் போல் பரித்து விக்கிரமத்துடன் என்கிறார்
மேலும் துங்கத்தைக் கோரி ஓராயிரம் 
சிங்கத்தேர் ஏறி அலையெறியும் 
சீர்கொள் எழுகடலின் நீர்கள் கரைபுரளப் 
பார்கள் கிடுகிடெனச் சூர்கள் விடவிடென 
ஊர்கொள் பகுதிநிகர் ஏர்கொள் குடைகள் மலர்த் 
தார்கள் அசையு மணித்தேர்கள் ஆயிரங்கோடி 
புடைசுற்றித்தரவே அறுபது வெள்ளம் 
படைதத்தி வரவே  --என்கிறார் .
எதுகைச் சிறப்புச்சந்தம் : -- 
எனக்குன் இருபதம் நினைக்க வரமருள் 
இனித்த தசரதன் தனக்கு மகனெனும் 
மனத்தின் உடனவ தரித்து முனிவரன் 
மகத்தில் அரக்கியை வதைத்த - அரசே ( பாயிரம் பெருமாள் தோத்திரம் - சரணம் 1 )
தேவி இவள் ராமா கௌதமன் - ஆவி இவள் ராமா 
ஆவலினாற் பண்டுமேவல் மனங்கொண்டு 
அந்தரம் நாடிய இந்திரன் கூடிய தேவி ( பாலகாண்டம் தரு - 11 )
சடாயு ராசன் 
கொத்திக் கொத்தி அடித்தானே 
கொத்திக் கொத்தி அடித் தானே 

பத்துச்சி ரத்திலும் தாளிலும் தோளிலும் 
பற்றிக் கரத்தனில் மாரிலும் தேரிலும் 
தத்தித் தத்திப்பறந் தெத்தி எத்திக் கையால் 
குத்திக் குத்தி எங்கும் சுற்றிச் சுற்றி மூக்கால் , கொத்தி " ( அயோத்தியா காண்டம் தரு -- 12 )
தேடித் திரிந்தானே சீதாதேவி - தன்னை அனுமானே 
ஆடிப் பறக்கின்ற காற்றும் நுழையாத 
அங்கக்கொத் தளந்தங்கும் 
இலங்கைப்பட் டணமெங்கும் - ( தேடி ) 
இடுக்குகளும் இருட் டொடுக்குகளும் இருட்டுறி 
அடுக்குகளும் மூலை முடுக்குகளும் பாய்ந்து " ( தேடி ) ( சுந்தரகாண்டம் தரு - 3 )
இராம ராவணயுத்தம் 
அப்புறம் மலைதாவும் அலைதாவும் கடல்தாவும் 
இப்புறம் செவிதாவும் புவிதாவும் கெவிதாவும் 

அன்று முனிவர் பயந்து கடகட 
என்று பரிந்து நடுங்கி விடவிட 
அண்டுமுகடுபி ளந்து நிலை கெட 
மண்டலமும் மிசை விண்டு தலைகெட 

அதிரமலைகளும் அதிரநிலைகளும் 
அதிர வெகுதிசை அதிரமழையிடி, 
அதிர உத்திகள் அதிர மதிகதிர் 

அதிர உடுவினம் அதிர இப்படி 
ராகவனுக்கும் ராவணனுக்கும் நடந்ததே சண்டை ( யுத்தகாண்டம் சரணத்தில் ஒன்று தரு - 80 )
மாணிக்க தீபங்கள் ஏற்றினார் நல்ல 
வாடைகள் தூரிகள் தீற்றினார் 
ஆணிப் பொன்னாடைகள் சாத்தினார் பன்னீர் 
ஆலைத் தெருவெங்கும் ஊற்றினார் 
சந்தனத்தைக் கோலம் தீட்டினார் 

பஞ்ச 
தருவையும் நன்றாக நாட்டினார் 
சுந்தர பாலிகை கூட்டினார் - நறுந் 
தூபமும் தீபமும் காட்டினார் " ( பாலகாண்டம் திபதை -2 )
ஆழநெடுந்திரை கங்கை ஆறுகடந்தாலு மென்ன 
தோழன் என்றுராமன் என்னைச் சொல்லியருளிய தொரு 
சொல்லேனோ சொன்னபடிக்கு 
நில்லேனோ நான் பிடித்தகை 
வில்லேனோ இவரைக் கொல்லேனோ ( அயோத் - தரு -- 15 )
அந்தராமத் துரோகி இவன்பலம் குறியேனோ 
ஆத்திநார் கிழித்தாற்போல் கிழிக்கநான் அறியேனோ 
புவியடங்கலும் கிட்டவே 

மண்டோதரி 
புலம்பும் ஓசை முட்டவே கண்டவர்கள் 
எவரும் செக்கலி கொட்டவே வாலினாலே 
முழுதும் பிடித்துப் பொட்டவே 

கட்டி 
இறுக்குறேன் 

தோள் ஒடிய 
முறுக்குறேன் தலைபத்தும் 
அறுக்குறேன் தேங்காய் போல 
நொறுக்குறேன் " 
( சுந்தரகாண்டம் தரு 
கண்டேன் கண்டேன் - சீதையைக் - கண்டேன் ராகவா 
அண்டரும் காணாத இலங்கா புரத்திலே 
அரவிந்த வேதாவைத் தரவந்த மா தாவை கண்டேன்
மின்ன 
பன்ன 
காவி விழிகளில் உன்உரு ஒளி 
கனிவாய் தனலே உன் திருநாமமே 
ஆவித் துணையைப் பிரிந்த மட 
வன்ன 
மானாலும் நான் சொல்லுவ 
தென்ன 
பூவைத் திரிசடை நித்தம் நித்தம் 
சொன்ன 
புத்திவழியே தன்புத்தி நிலை 
மன்ன 
பாவியாக்கியர் காவல் சிறை 
துன்ன 
பஞ்சு படிந்த பழஞ்சித்திரம் 
என்ன - 
கண்டேன் ( சுந்தரகாண்டம் தரு - 26 ) 
இந்த சேதுவைக் கண்டால் - சனகன் பெண்ணே 
கபர சித்தியாமே 
நிந்தை யானகள்ளைக் குடிப்பதும் - 
மந்தை உரிஞ்சு கல்லை இடிப்பதும் - நடுச் 
சந்தி விருட்சங்களை ஒடிப்பதும் - பிறர் 
சொந்தப் பெண்களைக்கை பிடிப்பதும் 
( இந்த ) 
பசு 
நொந்த பேர்பொருளைக் கொண்ட தோஷமும் 
நோன்புகளை நடுவில் 
விண்ட தோஷமும் 
வந்தபேர் பசிக்க 
உண்ட 
தோஷமும் 
மடிநழுவும் பெண்களைக் 
கண்ட தோஷமும் - இந்த ( யுத்த காண்டம் - தரு - 87 ) 

வழியெதுகைச் சிறப்பு : 

“ பட்டபாடு கேளாய் - பணைத்தோளாய் - பிடித்த வாளாய் 
குட்டிமனிதன் தன்னை கட்டியிழுக்கப் பின்னை 
பெட்டிப் பாம்பு போலே சுட்டி அண்ணனாலே ( ஆரண்யகாண்டம் - தரு - 6 )
எட்டுநாளையில் பாருமம்மா 
இராவணப் பேரும் இவன் ஊரும் -------
முட்டர்கள் துட்டர்கள் கெட்டபலிட்டர்கள் 
இட்டிடு கட்டுகள் ஒட்டுகள் கெட்டபின் 
நெட்டுள பட்டின மட்டியரக்கியர் 
கட்டிய பொட்டுகள் தொட்டறு பட்டிடும் எட்டு " ( சுந்தரகாண்டம் - தரு - தரு - 12 )
" நாயகன் சொல் மறந்தாய் அண்ணாவென்று 
பேயனைப் போல் பறந்தாய் 
தாயரையும் துறந்தாய் - பழிபோட 
நீயிதற் கோபிறந்தாய் 
சேயின் முகம்பார்க்கும் தாயின் முகம் போலே 
காயும் புழுவுக்குச் சாயும் நிழல்போலே 
தீயும் பயிருக்குப் பேயும் மழைபோலே 
மாயன் கஜேந்திரனுக் காய்வந்தது போலே ( யுத்தகாண்டம் தரு - 92 )
ஆனை முகனே அரனார் திருமகனே 
சேனையர்கோ னாகவலஞ் செய்வோனே 
நாடகத்தைக் கொண்டஉன்றன் நல்லருளா லேராம 
நாடகத்தைச் சொல்லுவேன் நான் --விநாயகர் தோத்திரம்
கம்பரா மாயணப் பாற்கடலை உண்டு 
நம்பவரும் ராம்நா டகமாம்மா மழையை 
அம்புவியில் காழி அருணாசல மேகம் 
கும்பும் உயிர்ப்பயிர்க்குப் பெய்து வினை கொய்ததுவே--ஆக்கியோன் பெருமை
ஏர்கொண்ட நான் மறையின் பொருளை எல்லாம் 
இனியதமி ழாற்செய்து தொண்டர்க் கீந்த 
பார்கொண்ட குருகூர்வாழ் சடகோ பாழ்வார் 
பதமலரைப் பணிந்து திருச் சென்னை மேவும் 
தார்கொண்ட புயாசலன் ஒப் பில்லா வீரன் 
சதுரன் அயன் தொழும்ராமச் சந்திர மாலின் 
சீர்கொண்ட திருவருளின் பெருமை தன்னைத் 
தேறுவேன் மன மகிழ்ந்து கூறு வேனே
பூதகி முலையுண்ணல் போல் ஆவி உண்டொருக் 

போற்றும் யாதவர்க்கின்பம் தேக்கச் செய்தாய்பரி 
புத்தமு தத்தினை நற்கரருக்குமுன் 
உற்றிட மிக்க அளித்திடும் சற்குண 

பூஜிதம் பெறு ராமச்சந்திர 
னேசவுந்தர ரூபரஞ்சித 
புகழலர் மகள் தழு விய அதி புஜபல 

மிகுபரி மளமுறு துளவணி ரவிகுல 
புண்யம் நீடும் அண்ட பகிரண்டங்களை உண்ட 
திண்ய னே அகண்ட புகழ் கொண்ட பிர சண்ட 
உதித்து 
தசரதன் சுதனா 
தரணி மன்னர்மன் னதிபுஜபல 
தசரதன் சுதனா 
தகைமை வாய்ப்ப உயர் மனு நெறி முறைகொடு 
தரும் அயோத்திநகர் அரசுசெய் ரவிகுல 
உதித்து 
உதித்து 
உதித்து 

தசரதன் சுதனா 
சர்ப்ப ராஜசயனத்தின் மீதுதுயில் 
உற்று வீறுபர வஸ்து வானதொரு 
தசரதன் சுதனா 
தசமுக னால் இடர் படும்உயர் அமரர்கள் 
நசையுட னே துதி தரநர உருவொடு 

தசரதன் சுதனா 
தார்புனை ஈசனும்விண் சூரியனும் வேதனும் 
மாமக வானும் அவன் பாலனும் தேயுவும் 
சீர் அனு மான்சுக்கி ரீவனர் சாம்பவன் 
வாலியங் கதன் நீலன் ஆய்வர வானவர் 
உதித்து 
மட்டி 
வானரங்க ளாய்மண்ணில் வந்திடச்செய்து , 
தானவர் குலத்தைவிண்ணில் சார்ந்திடக் கங்கணங்கட்டி 
தசரதன் சுதனா 
உதித்து 
சங்கு சங்கரமும் மங்களத்தினில் மி 
குந்த அற்புத அனந்த நற்றவனும் 
வந்துதித்திடநி னைந்திடத் தரையில் 
சம்ப்ரமத்தில் இல குஞ்சுமித் திரையின் 

தன்னிடம் லட்சுமணன் சத்துருக்கனும் கைகேசி 
மின் வயிற்றிற் பரதனும் தம்பியராய் சனிக்கத் 
தான் எண்ணிக் கோசலை வயிற்றிற் சித்திரைமாதம் 
ஆனநவமி புனர் பூசநக்ஷத்திர நாளில் 
தசரதன் சுதனா 

உதித்து 
சந்திர விம்பமுகம் கிருபைவளர்தரு 
கின்ற கண்களும் நெடுஞ்சிலை எனும் நுத 
லுஞ் சிறந்த பவ ளந்தனை நிகர் அத 
ரம்தகுந்த ஒளிர் குண்டலம் அணி செவி 
களுநில வெறிகமு கினை நிகர் களமொடு 
விரைகமழ் துளவணி புயமலைகளும் நெடு 
உலகமதனையுணும் அழகிய வயிறொடு 
தாரணி மார்பும் வண்டாமரைத் தாள் களும் 
சாமள மேனியும் ராமநன் நாமமும் 
தயங்க அரு மறையுணர் புங்கவர் மிகு 
ஜெயம் விஜயபவ எனமங் களமொடு 
தசரதன் சுதனா 

உதித்து , 
தனுவிற்கதித்து , 
தாடகைப் பாவியை 
வதைத்து 
விசுவா மித்திரனுடன் மிதிலைக்குச் செல்லும் 
வேதச் சிரத்தில் நடமாடும் சீர்பாதப் 
இசைவுறப் பட்டளவில் அகலிகை என்னும் 
எழுந்தாள் கல்உருமாறி ; அதுவல்லாமல் மண் 

போது 
போது 
மாது 
இந்திர போகசன கன்வில்லை ரண்டு 
துண்ட மாஒடித்தான் அதைக் கண்டு 
சுந்தரி சீதையைத் தந்தனனே மகிழ் 
கொண்டிட வேமண மானபின்னே வரு 
கின்ற வழியதனில் பரசுர மன் வில்மு 
றிந்திட வேசெய்து சனகியோ டயோத்தி 
தந்து கூனிகல கந்தனால் அரசி 
ழந்து நீடுபுகழ் தம்பியோடு மலர் 
மங்கை சீதை பதம் நொந்து வாடிவர 
கங்கை மாந்தி கடந்து வாசமலர்க் 
காவிரி தருசித்ரக் கூடபர் வதத்தில் 

மேவிய பரதனுக்குப் பாதுகை யளித்தபின் 
விரிதண்டகவன வழி கொண்டதில் அத் 
திரி என்றிடுதவ முனிவன் கிருபை பெற் 
றிட்டபின்பு விரா தன் இருகையது 
முட்ட விண்டி.டவே செய்து சரபங்க 
முனிவன் ஆசிரமந் தனிலே எழிற் 
சனகியோ டெய்தி இந்திரன் போனபின் 
தண்டகாரண்ய வாசிகள் படு துயர் 
கண்டன் னோரிடர் தீர்தர இணையறு 
கருணைகொண்டே அந்த வனமதிற்பத்து 
வருடம் நின்று வரும் வழியிற்சுதிட்ட 
மாமுனி வரங்கொண்டே அகஸ்தியன் றனைக்கண்டு 
சேமவிற் சரங்கொண்டு துதித்தவன் றனை விண்டு 
சென்று சடாயுஉற வாடப் பஞ்ச வடியில் 
நின்று விடாதமய லோடு கெஞ்சிய பெரு 
நீலி சூர்ப்பணகை காது மூக்கரிந்து 
கால னார்க்குநிக ராகப் போர்க்குவந்த 
கர தூஷணத் திரிசிரசன் ஆதியரை 
அரைநாழி கைதனில் மறலி நாடதனில் 
அனுப்பி மானுரு வாய்வந்த மாரீ 
சன்கையாற் பிடித்திட வேபோன 
தருணங்கண் டிராவணன் தபசி போல் 
விரைவில் வந்து சீதையை நிலத்தினொடு 
மேலெடுத்துச் செல்லும் போது சடாயுவின் 
ஆவியினை வதைத் தசோக வனந்தனில் 
அரிய சிறையிலிட வேசானகி தன்னைப் 
பிரியும் அதிகதுயர் ஆலோசினம் பண்ணிப் 
பின்மதிக் கவந்தனை சொர்க்கம் ஏற்றிச்சவரி 
சொன்ன விதங்கொடு சுக்கிரீ வனைத் தனது 
சொந்தம் ஆக்கி அக்ரமமிகு வாலிதனை 
முந்த வாட்டி விக்ரம அனுமானை , அளி 

மொய்த்த குழற்சிதைதனைத் தேட விடுக்க அவன் 
உத்தமசம் பாதி தன்னால் உளவறிந்து கொண்டு 
ஒப்பில்லாத விஸ்வரூபங் கொண்டு மயேந்திரம் ஏறிச் 
செப்பமாய்க் கடலைத் தாண்டி லங்கையிற் சேர்ந்து 
திடமுறு லங்கணியை முதற்பலி யிட்டுச் சீதையை
கடி பெமறு லங்கை எங்கும் தேடிக் காணாமற் பின்பு 
காவல் மிகும் அசோக வனத்தில் திரிசடை யன்பு 
மேவக்காத் திடவட முகம் பார்த் திருக்கக் கண்டு 
விசையகோ தண்டராம தூதன் நான் என்று சொல்லி 
நசைதரும் கணையாழி கொடுத்துத் திடமுங் கூறி 
நாயகி சீதைதந்த சூடாமணிகைக் கொண்டு 
தீயகிங் கரர்எண்ப தாயிரம் பேர்களொடு 
செழித்த அசோக வனத்தையும் அழித்திடக் கண்டெதிர்த்த 
கொழுத்த ராக்ஷத சேனையொடு சம்புமாலி மிகுத்த 
கொடுமை செய் பஞ்சசேனா திபர்களும் அக்ஷதனும் 
மடியநாற் பது வெள்ளம் அரக்கரோ டிந்திரசித்தன் 
வந்து போர் செய்ய அனு மந்தன் அந்தத்தளத்னதச் 
சிந்துசிந் தாக்கி இந்திர சித்தன்தேரை யழித்துச் 
சிலையை முறித்து முடித் தலையை உடைக்க அவன் 
வலிய பிரம்ம பாசத்தால் கட்டராவணனப்போ 
வாலில் நெருப்பையிட அந்த நெருப்பைலங்கையின் 
மூலைக்கு மூலையிட்டுக் கொளுத்திநீ றாக்கிவிட்டு 
உள மிகிழ் கொண்டு மீண்டு வந்து சாமினயச் சேவித்து 
அளிதிகழ் சூடாமணி தரக்கொண்டு மகிழ்ந்த பின்பு 
அடல் மிகுந்த எழு பதுவெள்ளம் வானரப் 
படையும் ஒப்பிலதின் அதிபரும் நீடிய 

பரிவொடு தென்கடல் அருகில் நிறைந்த பின் 
சரணம் அடைந்து நின் துணையடி தந்தருள் 
சாமி என்றவிபீ ஷணன் தனக்கு லங்கா 
பூமிதந்து விகா தஞ் செய்தவருணன்மேல் 
பொற்கணை விடுத்தவனை வரச்செய்து புஜபல 
சித்திரக் கவியினங்கள் அதைக்கொடு விரைவொடு 
சேது பந்தனஞ் செய்வித்து நீள் கடல் வளைந்திடு 
மாதிரம் பயந்திடச்செய் ராவணன் இலங்கைதன்னை 
வந்து முத்திகை செய்து கொண்டு தும்பி அங்கதன் மீதும் 
முந்து விக்ரம அனுமந்தன் அம்புயந் தன்னிலும் ஏறி 
மூதண்டம் திகில் மேவி யதிர்ந்திட 
கோதண்டந்தனில் நாணொலி கொண்டுற 
குரைகடல் வெருவிட நெடுநிலம் அது தனை 
ஒருசுமை என உறும் உரகன் உடல் நெளிய 
உயர்மதி கதிர்வழி பிசகிட நெடுவரை 
அயர்தர உடுஇனம் அது தரையில் உதிர 
அணி ரதகஜபரி பரிசன வகை மிக 
அணி அணியொடுவர அதிவலிமைகள் சொலி 
அனல் கக்கிடும் அத்திர சத்திர மழு 
கனசக்கரம் நெட்டயில் பட்டய மொடு 
கதிர் வீசும் கதிர்முத்தலை சூலம் 
கதைவார் அஞ்சிலை கைக் கொடு தாளம் 
காளஞ் சின்னந் தாரைகள் மத்தள பேரிகள் பலவித 
மேளம் பின்னும் நாக சுரத்தொடு பூரிகை ஒலிதர 
வீரராவணன் தேரில் ஏறி போர்க்களத்தில் வந்து 
சேரவே அவன் சேனை வீரர் யாரும் போரில் முந்த 

தீய வச்சிரமுஷ்டி துன்முகன் சுபாரிசன் 
மாய பிரகஸ்தன் கெட்டவன் மனங் கொள் நீசரை 
வானர வீரர்கள் கொல்ல ராவணன் இவரை வெல்ல 
சானகி மணாளன் வில்லிற் சோணை மாரி என்று சொல்லத் 
தகுஞ்சரங் களைவிட்டு அவன் தேர்வில்லை முறித்துத் 
திகழ்மணி முடிபத்தும் தரைமேல் உருளச் செய்து 
திடமொடு சண்டை செய்ய நாளைவா இன்றுபோ வென்று 
விடைதர மனம் நொந்து தனியாய்ப் போய் லங்கை சேர்ந்து 
விட யாவரும் எழுந்து போரில் வீறிக்கதிக்க 
வெற்றிசேர் கும்பகர்ணனை நித்திரையில் இருந்தெழுப்பி 
அத்ததியில் சண்டைக்கு விடுத்திட அவன் களத்தை 
அடுக்க ராகவன் அம்பு தொடுக்கவே கும்பகர்ணன் 
நொடிக்குள் காலும் கையும் போய்படிக்குள்ளேமுண்டமாகி 
நொந்து பின் சாமிதனைச் நிந்தனை பேசி 
இறந்ததை ராவணன் அறிந்ததி காயனை 
அனுப்ப அவன் பரிசனத் திரளினொடு 
முனைத் தலைவர்களும் சமர்க்களம் அணு 
முச்சிரத்தன் வயமஸ்தன் கும்பன் தேவாந்தகனும் 
அச்சமற்ற ரண மஸ்தன் வம்பன் நராந்தகனும் 
அனுமான் முதலோர் கையால் மடிந்திட அதிகாயன் 
சின மாகி இளை யோனோ டமர் செய்துமுடிவாகச் 
செய்தி தெரிந்திந்திரசித்தன் தேரில்ஏறி 
வெய்ய சதுரங்கம் மொய்க்கப் போரில் வீறி 
விஞ்சுஞ்சுக் ரீவன் பனசன் சாம்பன் அனுமன் 
வஞ்ச மற்ற நீலன் முதலினோர்கள் தமையும் 
வாட்டக் கண்டு லட்சுமணன் தன் வில்லினிற்சரம் 
பூட்ட இந்திரசித்தன் ரத கஜபரி சனம் 
புரவி யாவற்றும் மாண்டு தானும் மிக மெலிந்து 
இரவில் நாகபாசத்தை ஏந்த அதனால் நொந்து 
லக்குமணன் முதலோர் களத்திற்படுக்க ராமன் 
அக்கணம் அவ்விடம் மேவிதிகைத்து வருந்தும் வேளை 
அடல் சேர் கருடன் வர நாகபாசம் தெறித்து 

மிதமற்ற சேனை சூழ உக்கிரங் கொண்டுவந் தெதிர்ந்த 
மதம் உற்ற சூரியகேது வச்சிர தந்தன் பெரும்பக்கன் 
மாலிசிங்கன் பேயன் பரிதிக்கண்ணனையும் 
ஆலம் அஞ்சும் தீய குருதிக்கண்ணனையும் 
ஆர்க்குங் கவித்தலைவர் மாய்க்கராம லட்சுமணர் 
தாக்க மகரக்கண்ணன் அக்கினி கேதுமடிய 

தசமுகன் அதைத் தெரிந்து இந்திரசித்தனைவிட 
வசை கொள்ளும் அவன்களம் வந்து லட்சுமணனுடன் 
வாது செய்ய இளையோன் அப்போது சரமாரி வெய்யன் 
மீதில் எய்ய அதனால் அப்பாதகன் திரேகம் நைய 
விண்ணில் மறைந்து தன் ஊரைச் சேர்ந்து சூது 
பண்ணி வெல்ல எண்ணி போருக்க கம்பனோடு 
பாவி மகோதரனை ஏவ அவர்கள் களம் 
மேவி பலத்துடனே ராவில் அமர்புரிய 
வீறும் அனுமன் தன்னால் அகம்பன் நிகும்பன் சிரங்களுருண்டபின் 
சீறும் மகோதரன் கைச்சரங்கள் அழுந்திட வருந்தி இளையவன் 
திகைக்கும் வேளையில் இந்திரசித்தன் அங்குவந்து சோபித 
மிகுத்த பிர்மாஸ்திரம் விடுக்கத்தம்பி முதலோர் சாய்ந்திட 
வித்தகஸ்ரீ ராமன்கண்டு மெத்தவும் ஆகுலங் கொண்டு 
சித்தப்பிர மையாக அன்று உத்தம அனுமான் சென்று 
செழித்த சஞ்சீவி பருவதத்தைக் கொண்டு வந்தபின் 
பிழைத்தனைவரும் போருக் கெதிர்க்க இந்திரசித் தென்னும் 
பித்தன் மாயா சீதையை வெட்டி நிகும்பலை யா 
கத்தின் சாலை சேர அதைத் தெரிந் திளையவன் 
கணை மழை பொழிந்தரக்கன் செய்யும் யாக மழித்து 
க்ஷணமதில் அவன் சிரத்தைக் கொய்து தேவர் துதிக்கச் 
சாமிபாத நேரில்வைக்க ராவணனறிந்ததன் மேலமர் செயவிட 
பூமிபாரமான துஷ்ட மூலபலங்கள் ஓர் ஆயிரம் வெள்ளமும் 
போரி லேறுதல் கண்டு வானர வீரரோடவே ஒன்றியாகிய 
தீரராகவன் சண்டமாருதம் ஆகிநீசர்கள் பஞ்சுபோலே கெட 
திவ்விய மோகனாஸ் திரம் ஏவி எங்கும் ராமனாகத்தோன்றிட 
வெய்யர் யாரும் பார்க்குள் தாவி தங்களில் தாங்களே மாண்டபின் 
வேதனை யேசெய்யும் ஜாதக காதக 
பாதக னானம கோதரன் போர் செய்து 
படையும் போய் ராகவன் கைக்கணை தன்னால் ஆவிவிண்டு 
மடிய , ராவணன் துர்ச்சகுனம் மென்மேலுங் கண்டு 

பெருஞ் சண்டை செய்ய சாமி ராவணன் பத்துச் சிரத்தையும் 
விந்தை அம்பு கொண்டு கொய்யக் கொய்ய மீண்டும் மீண்டும் முளைக்க அவ் 
வேளையிலே இதமாக பிராதபகு 
ணாள விபீஷணன் ஓதும் உபாயத்தி 
னால் இணையறு பிரம்மாஸ்திரம் அதனை விட்டு 
ஆலம் அனையவிழி ராவணன் நாபியில் வைத்த 
அமிர்த கலசத்துடன் முடிகள் சிதறச் செய்து 
இமையவர் முனிவர்கள் படுதுயரம் ஒழித்து 
இணையில் எழிற் சனகி தீயினிற் குளித்த பின்பு 
துணைவன் கவிப்படை விபீஷணனும் கற்பிலங்கு 
தூயசீதை தன்னொடு புஷ்பக மீதிலேறி முன்வினை முற்றிலும் 
மாயவே செய்கின்ற மகத்துவமான சேது அண்டையில் ஒப்பறு 
மாதேவற் கன்று நீராட்டி இறைஞ்சி திரும்பிமுன் வந்த வழிகளை 
சீதேவிக் கன்பொடு காட்டி மகிழ்ந்து நடந்து பன்னருந் தல நிலை 
திகழும் பரத்துவாசன் மடத்தினிற் சேர்ந்தபின் திடத்துடன் அனுமானைப் 
புகழும் பர தராசன் இடத்தினிற் கேவிட நொடிக்குள்ளே அவன் போன 

போது சாமி வரவைக் காணே னென்று பரதன் 

ஓதுந் தீயினில் விழப் போகக் கண்டு அனுமன் 
மோதிரந்தந்து பதறாதே ரகுபதி வரமுனி மடம் வந்து சேர்ந்தா னென்று 
ஆதரவும் சுபமும்கூறி பரதனிடம் விரைவில் விடை கொண்டு ஆஞ்சநேயன் 
அக்கணம் திரும்பி லோக ரக்ஷகன் உண்ணும் வேளைக்க 
ரைக் கணம் முந்திவந் தோதப்பஷங் கொண்டவனைக் கூட 
வைத்து வரதன் பொசித்துப் புஷ்பக மதிற்கதித்து 
சத்திய பர தன் துதிக்க உத்தம குகன் மதிக்க 
தகைமை மேவிய அயோத்தி நகரில் வந்து 
திகழும்மூ வுலகம் போற்ற ஒளி சிறந்த 
சித்திர மிகுந்த சிங்காசன மீதினில் 
அற்புதம் உற்றசெந் தேன்மொழியாள் , எம 
தன்னை சீதையோ டமர்ந்து பேரிகையும் 
மன்னு தாளமிரு தங்க நாகசுர 

வாத்தியம் ஒலிக்க வருசுரர் மருமலர்கொடு 
நாற்றிசை இறைக்க வெகு முனிவர்கள் மணிமுடி 

நரபதிகளும்வானரபதிகளும் பூ 
சுரர் துதி சொலவே கவரிகள் அருகே 
தூயலட் சுமணனுடன் சத்துருக்கனும் வீசிட 
நேயம் உற்றபர தன் உட் களித்திதம் பேசியே 
நிலவெறி தருசந்திர வட்டக் குடை கவிக்க 
பலமிகு அனுமந்தன் நற்றுணையடி பிடிக்க 
பகர் வசிட்டனால் மகுடாபி ஷேகம் கொண்டு 
செகதலத்துளோர் துதி பேசச் சேவைதந்த 
தீனதயா நிதியே அடியார்உள 
மேநிலையாய் நிதம் வாழ்வர தாஉயர் 
வேதர் அரியணை மேவு வினோதா 
தாதா சுரர் முதலோர் துதிபாதா 
சதுரனே சராசரங்களைத் தருமூலா 
துதி செய் ராஜசேகரன் த மிழ்க் கனுகூலா 
சுமுக சுகுண சுந்தராங்க சுகிர்தநய 
விமல விபவ விந்தை யோங்கிடு மிகுஜய 

கோதண்ட தீக்ஷா குருவே - பக்தரிரு தய 
கோகனக மலர் மருவே 

(கோதண்ட )
ராவணன் முன் நின்ற ஹனுமனை ராவணன் கேட்கச் சொன்னதால் ப்ரஹஸ்தன் என்ற ராக்ஷச அதிகாரி கேட்கிறான்:
”ஏ, வானரா, நீ யார், யாரால் அனுப்பப்பட்டவன்? பயப்படாமல் உண்மையைச் சொல், உன்னை விடுவிக்கிறேன்.’

இது தான் அந்த பாடல்:
செஞ்சுருட்டி : ஆதி தாளம்
” ஆரடா குரங்கே – இங்கே வந்த நீ – ஆரடா குரங்கே”
வார் சிங்காசனம் போல், – வால் இட்டென்னிலும் மேல் இட்டிருகிறாய் ”
கம்பத்தின் மேலே காலனைப் போலே
செம்புமாலியையும் சேனாதிபரையும் கொன்றொருக்காலெ
சிட்சை செய்வேன் என்று கட்சி உடனே வந்த
அட்சதனைக் கூட பட்சணம் செய்த நீ…. ஆரடா குரங்கே…..

(ராவணன் எதிரில் தனது வாலைச்சுற்றி உயரமான ஆசனம் அமைத்து ராவணனை விட மேலே உயரமாக அனுமன் அமர்ந்திருக்கிறானாம்) ( செஞ்சுருட்டி ராகத்தில் ஆதி தாளத்தில் — ராவணன் கேட்பது )

அதற்கு அனுமார் பதில்: மோகனம்: ஆதி தாளம்

”ராமசாமியின் தூதன் நான் அடா — அடடா ராவணா
நான் அடா என் பேர் அனுமான் அடா ( ராவணன் ஒரு அடா போட்டால் அனுமன் பல அடா போடுகிறான்!!)
கொடுத்த வரமும் தனமும் கனமும் வீணிலேன் போக்குகிறாய்
குடிக்கும் பாலை அய்யோ கமர் வெடிக் குளேன் வார்க்கிறாய்
துடுக்குடன் பரஸ்த்ரி செனங்களை தொடர்ந்தேன் பழி ஏற்கிறாய்
தூக்கி ஏறவிட்டேணியை வாங்கும் துர்த்தர் வார்த்தையைக் கேட்கிறாய் …( . ராம )

ராமாயண ஓரடிக் கீர்த்தனை முற்றிற்று 
-----------
 . 
இராம நாடகம் 
பாயிரம் 
ஏற்புடைக் கடவுள் வணக்கங்கள் . 
அனுமார் தோத்திரம் 
நேரிசை வெண்பா 

கோதண்ட தீக்ஷா குருராம நாடகத்தைத் 
தீதண்டா வாறடியேன் செப்பவே - கோ தண்டா 
மாருதியே அஞ்சனையாள் மைந்தனே நற்கருணை 
வாருதியே நீதுணையா வா ! --கலியாணி ராகம் --ரூபகசாப்புத் தாளம் 


பல்லவி 
அனுமந்தா நீ 
துணைவந் தருள் புரிகுவாய் 
துணை வந் தருள்புரிகுவாய் (துணை ) 

அநுபல்லவி 
துணைவந் தருள்வாய் நல்ல சொற்பொருளது புல்ல 
இணையொன் றிலாத வல்ல ராமநாடகம் சொல்ல ( துணை ) 

விண்டு சரணங்கள் துஷ்டவாலி தோழமையை விண்டோனே 
சுக்கிரீவன் தோழமையைக் கொண்டேனே 
வெகு திட்டமா ராகவனைப் போய்க் கண்டோனே 
அவன் செப்பிய சொல்மிர்தத்தை உண்டோனே 
சுக்கிரீவன் கஷ்டமும் அரசிழந்த நஷ்டமும் அவனிருப்பும் சட்டமாச் சொன்ன இட்ட கருணை மாருதி வாருதி (துணை ) 
தூயனே --- அஷ்ட திக்கில் தென் திசை உகந்தோனே 
சீதைக்கா அரிய பிலத்தினுட் புகுந்தோனே 
அப்போது பொட்டெனப் பூமியினைப் பிளந்தோனே 
உயிரைப் போக்கவே மிகமனம் தளர்ந்தோனே 
சம்பாதி எட்டவே இருந்து மென்ன கட்டவே வர அவற்குப் பட்டதைச் சொல்லும் முட்டிலா ஆஞ்ச நேயனே ( துணை ) 

-----
3 உக்கிரமா விஸ்வ சொரூபம் எடுத்தோனே 

மயேந்திரத் துதைந்து சடலைத்தாண்டி விடுத்தோனே 
பொல்லாத அக்கிரம லங்கணியைக்கீழ்ப் படுத்தோனே  
நற்றிரு ஆழியைத் தேவிகையினில் கொடுத்தோனே ஆறுபோல் 

கக்கவே ராட்சத ரெல்லாம் மக்கவே செய்யும் ருத்திரனே 
முக்கிய மாம்வாயு புத்திரனே 

( துணை ) 
----------
4 தேவி சூடாமணி கையில் தரித்தோனே 
சொன்ன சேதிகள் எல்லாம் அங்கி கரித்தோனே - படுபாவிராவணன் லங்கையை எரித்தோனே 
ராமன் பக்கல்வந்துற்ற சேதிகள் விரித்தோனே 
பூவுலகத் தோரும் தேவர் கோவும் முனிக்கணமும் பராவிய சிரஞ் சீவியே மேவிய (துணை ) 

-- + - 
என தாவியே 
5 அருமையாம் சஞ்சீவி மலையை ஏற்றோனே - பிர்ம்ம அஸ்திர வேதைக ளெல்லாம் தீர்த்தோனே - சீதையை 
உரிமையாம் ராகவன் பக்கல் சேர்த்தோனே - பரதன் உயிரை விடுமுன்னமே போய்க் காத்தோனே தவத்தில் 
பெருமை யார்முனி விருந்தினில் தரும ராமனோ டருந்தின ஒருமையாற் சஞ்சீவி ராயனே 
பிரம பட்டம் பெறும்உ பாயனே ( துணை ) 

பெருமாள் தோத்திரம் --விருத்தம் - 1 
அண்டர்தம் துயரம்தீர அயோத்திமா நகரில் வந்து 
தண்டகா ரணியம் சென்று சமுத்திரமீ தணையைக் கட்டி , 
கொண்டுரா வணனை மாட்டக் கோதண்டம் கையில் ஏந்தும் 
புண்டரீ கக்கண் ணாளி பொன்னடி க்கமலம் போற்றி --சௌராஷ்டிர ராகம் --திரிபுடை தாளம் 

பல்லவி 
எனக்குன் இருபதம் நினைக்க வரம் அருள்லாய் - ஸ்ரீராமச்சந்திரா 
எனக்குன் இருபதம் நினைக்க வரம் அருள்வாய் ( எனக் ) 

சரணங்கள் 

எனக்குன் இருபதம் இனித்த தசரதன் மனத்தினுடன் அவ மகத்தில் அரக்கியை 
நினைக்கவரம் அருள் தனக்கு மகன் எனும் தரித்து முனிவரன் வதைத்த அரசே ! ( எனக் ) 
நடக்கையிலே அகலிகைக் நடத்திச் சனகன்வில் பிடித்துப் பரசுராம 
பிரித்து நகரில் வந் கிருபை செய்து ஒடித்துச்சனகிகை மனுக்குமமதையைப் திருக்கும் அய்யனே ( எனக் ) 


3. தரிக்கும் முடிபர தடத்தில் குகனுடன் வரைக்குள் சனகியோ 
வணக்கம் செயமகிழ் தனுக்கு தவி நதித் அடுத்துச்சித்திரகூட டிருக்கத் துணைவன் நல் குணக்குஞ்சரமே ( எனக் )  

4. துடித்த பரதனும் ஒடுக்கமுடன் வர தொடுத்தமிதியடி கொடுத்தரசுசெய 
வடக்கில் அவனையும் விடுத்து நடுவிலே வனத்தில் வரும் விரா தனைக் கொன்றவனே 
5. வீடுக் கரிய சடா யுவுக்குறவு சொலி 
விடுத்துக்கொண்டுபஞ்ச வடிக்குச் சென்றவுடன் அடுத்த சூர்ப்பநகி 
கொடுத்த கரதூ ஷணத்திரிசிரர்முடி துணித்த ராகவா ( எனக் ) 

6. தனித்து வருமாரீ சனைக் கொன்றொருகவந் தனுக்கருளி அனுமனைக் கண்டொருசுக்ரீ வனுக்குதவி வாலி தனைப்பொருதிவா னரப்படையை ஆ தரித்ததுரையே ( எனக் ) 

7. இருக்கும் அனுமன்வந் ருக்கை அறிந்தபின் 
பெருக்க அணைசெய்து பெலத்த அரக்கரைத் 
துரைக்க நிசிசரர் எரித்த கடலிலே வருக்கம் வருக்கமா 
தொலைத்த தெய்வமே ( எனக் ) 

8. கொடிய இந்திரசித்தன் கொள்ளும் மூலபல 
முடியும் கும்பகர்ணன் முடியும் பொடியாக 
பிரகஸ்தன் முதலாகக் வெள்ள அரக்கர்தம் 
முடியும் ராவணன்  விடுபுங் கவனே ( எனக் ) 


9 நினைத்தபடி விபீ நிறுத்தி ஒருபுஷ்ப தனத்தில் உயர் தரும் 
தனத்தி ருக்கும்ரகு ஷணற் கரசுபெற ரதத்தில் ஏறிவந்து 
அயோத்தியிலே சிமா குலக்குமரனே ( எனக் ) 

அபசாரக்ஷயை -விருத்தம் - 2 
கனமான வால்மீகர் சுலோகம் செய்தார் 

கம்பரும் ராமாயணத்தைக் கவியாச் செய்தார் 
உனதாசை யாலேநா டகமாச் செய்தேன் 
உளறினால் என்ன பலன் உண்டாம் என்றால் 
முனிமார்சொல் லியராம மந்திரத்தை 

மூவரும் ஓதியராம மந்திரத்தை 
வனவேடன் மராமார் என்றே முத்தி 
வழிகண்டான் அது கொண்டே மொழிகின் றேனே . 

அடதாளசாப்பு -தரு- 3 -சாவேரி ராகம் 

பல்லவி 
ஐயனேரகு ராமனே என்சொல் அபசாரம் 
உபசாரம் ஆக்கிக் கொள்வாயே 

அநுபல்லவி 

கையில் ஆகாதநான் ஏதேது சொன்னாலும் 
காக்கக் கடன் என் பிழையை நீக்கக்கடன்உன்பாரம் ( ஐய ) 

சரணங்கள் 

எள்ளத் தனையும் இல்லாத சுப தெள்ளத் தெளியேன் செய்தேன் இதோ 

குத்தம் 
சத்தம் 
மொத்தம் 
சுத்தம் 

வெள்ளைக் கவி பிள்ளைக் 
விள்ளத் 
உள்ளத் 
தள்ளத் 
கொள்ளத் தகுமோ 


கவி 
தகுமோ 
தகுமோ 
தகுமோ 

என்றும் - இது சொன்ன 
என்றும் - சொல்வதல்லால் 
பழுதுகள் 
சாமிநீ 
திருவுளம் 
அறிகிலேன் 

( ஐய ) 

நற்பொருள் நவரச வைப்புள்ள வண்ணவி 
ஒப்புத் தப்புத் 
சொற்பிக் கறியேன் 
கற்பிக் கறியேன் 
மெய்ப்பிக் கறியேன் 
ஒப்பிக் கறியேன் 

நீதமும் 
பேதமும் 
கீதமும் 
நோதமும் 
தெரிவேனோ - அதிலுள்ள 
தெரிவேனோ - இலக்கணச் 
உன் புகழ் சொல்லி சாமி எங்கள் ( இய ) 
முன்னம் சொன்ன  உத்தம முனி உரைக்கக் கம்பர் நற்றமிழ் தன்னைச் 
 
சின்ன வைத்திப்படிக் 
புத்திப்பிழைபித்துச்சொல தென்ன கண்டேன் - பெரியோர்முன் 
கொண்டேன் . என்சாமி வைப்போலே 

சத்திக்க ஒ 
நத்திச்சொலும் 
சித்தத்தில் இருக்காலே 
என்மேலே 
தத்தாலே ( ஐய ) 

நூற்பெருமை -விருத்தம் - 3 

சதிர்பெறும் ராம காதை சதகோடி பிரபந்த மாகும் 
அதிலோர் அட் சரம்சொன் னாலும் அருவினை போகும் என்றே 
விதியினால் முனிவால் மீகி விளம்பிய உறுதி கொண்டு 
மதியினால் அறிந்த மாத்திரம் வகுத்துநா டகஞ்சொல் வேனே --சாவேரி ராகம் --திரிபுடை தாளம் 

பல்லவி 
முனி 
மகத்துவம் உள்ளகதை ராமகதை இதுவேகேட்க வேணும் 
வருக்கும்பலமனி தருக்கும் இது பொதுவே 

( மகத் ) 
அநுபல்லவி 
மிகுத்த மிகுத்த புராணம் சொல்லும் கதை 
விரும்புமோ மறுநாள் சொன்னாள் அதை 
அகத்தினில் ஆனந்தம் தருமே 
இது சொல்ல 
அடிக்கடி சொல்லினும் வெறுக்கு மோ நல்ல 

( மகத் ) 
சரணங்கள் 
1. சேர்க்கும் பொருள்களில் என்ன இணைச்செவி 
ஏற்கும் பொருளிது மாத்திரம் 
செபமும் இது பெருந் தபமும் இதுவென்று தெளிவதே நல்ல 
சூத்திரம் பார்க்குள் இதையறி யார்க்கெ லாம்பிறந் தெடுத்தஉடம்பவ 

பாத்திரம் 
பத்தியாலிது கற்றவர்க்குப் பலிப்பது பரமபத க்ஷேத்திரம் 
தீர்க்க மா இதைக் கேட்கின் றோர்பெரும் 
திருமனையில் வரு வாரே தேவரும் 
ஏற்கும் இதன் குணமும் யார்க்குச் 
இகபரங்களிற் சகல 
சொல்லவரும் முந்தரும் 


(மகத் ) 

தருமராஜன்கை நேரும் போதினில் ஒருமையாயதைத் 
சற்றே படிக்கினும் புத்திரபாக்யமும் சகலபாக்யமும் 
பெருகுநவக்கிரக ஏகாதசப் பலனைப்பிரியமுடன் வந்து 
பேயும்பூதமும் நோயும் சூனியமும் பிணிசெய்யாதபடி 

தடுக்குமே 
அடுக்குமே 
கொடுக்குமே 
விடுக்குமே 

கின்னம் 
இன்ன 
மரணசெனன வியாதி தமக் 
வருந்துவார் வருந்தாதபடி 
அரிய மருந்திது ஆமென்றே 
ஆதியிலயன்சுகர் காதிலே 

முன்னம் 
சொன்ன 

( மகத் 
சீமைதனிற் கங்கையமுனைமுதற் பெருந்திவ்ய தெய்வந்தி ஸ்நானமும் 
சேனைமா நிலம் யானை முதலாகச்செய்யும் பலபல தானமும் 
ஆமிதாமென்று தேறுகின்றவே தாந்தம் முதற்கலைக் கியானமும் 
அதுவுமல்லாமல் எது நினைந்தாலும் உதவும் அந்தநி தானமும் 
சாமிநாரத முனிவன் சொல்லி னவத்த சரித்திரம் வால்மீகர் உரைத்தபடி 

கொற்றி 
ராமன் அவதாரம் ஆம்முன்னே 

மெத்த 
நயங்கொண் டாதிகாவியம் என்றே பெற்ற ( மகதி ) 


அனவயடக்கம் --விருத்தம் -4 


முத்து முதல் விலையில்லா மணிகள் பெற்ற 
முதியகடல் ஆடுகின்றார் அதிலே ஏழு 
சற்றும் உதவாதமணி யாம் பருக்கை 
தான் போடக் களிப்பான சமுத்திரம் போல் 
கர்த்தன் எனும் ராமச்சந்திரன் கதைப்பா கேட்கும் 
காதிலே நாடகமா அதனைச் சொல்லிக் 
குற்றமிகச் செய்தாலும் குணமாக் கொண்டு 
கூட்டுவீர் என்கவிபா ராட்டு விரே . 

விருத்தம் - 5 

அரன்முடிமேல் கங்கைபகீ ரதன்கொ ணர்ந்தே 
அந்நாள் செய் தர்ப்பணம்போல் இந்நாள் இந்த 
நரரும் அந்தக் கங்கையிலே தர்ப்ப ணத்தை 
நடத்திமுத்தி பெறுகின்றார் அதுபோல் ஆதிப் 
பிரமன்முகத் தினில்வந்த ராமகாதை 
பெருமுனிவால் மீகிசொல்லக் கம்பர் சொன்னார் 
விரவுதமிழ்ப் பதத்தாலே நானும் சொன்னேன் 
மேற்கொள்வீர் என் பிழைதீர்த் தாட்கொள் வீரே --மத்தியமாவதி ராகம் --ஆதி தாளம் 


பல்லவி 

பிழை பொறுக்கவேணும் - பெரியோரே பிள்ளை உமக்கு நான்காணும் 

( பிழை ) 

அநுபல்லவி 

மழை நிறத்த ராம சாமிகதை 
வகையென்றறிந்தும் அறியாமலும் நான் 
இன்ன 
சொன்ன ( பிழை ) 


சரணங்கள் 

மதித்தாரே 
விதித்தாரே 
இக்கதையைப் 
துதித்தாரே 

ஆதியில் பிர்ம்மதேவர் நூறு கோடி விஸ்தாரம் 
ஆதிகாவியம் என்றித்தை 
பேதமில் இருபத்து நாலாயிரமாகப் 
பிறகு வால்மீகர் சொல்லி 
போதாயனர்முதல் மாதவர் 
புனைந்துவட மொழியால் 
தியகம்பர் பன்னீராயிரம் கவியாக 
உரைசெய்து தமிழிலே 
காதலால் இவர் செய்ய நான் அதுக் 
கருடன் பறக்க ஒருகொசுவும் பறந் 
ஈதொரு நாடக மாகஓதினேன் 
எட்டும் ரண்டும் தெரியாத ஏழைநான் ஆ பதித்தாரே 
சிப்பாலே தாற்போலே புவிமேலே கையினாலே ( பிழை ) 

வாவிய பெருவெள்ளம் வாவும் கடலிலே 
வாய்க்காலும் பாயுமல்லோ நில்லாமல் 
யாவதும் கற்றோர் சொல்லை கேட்கிற நீங்களும் 
என் சொல்லும் கேளும் தடை 

இல்லாமல் காவியமும் பஞ்ச லட்சணமுந் தெரிய 
கற்ற உங்களைப் போலே 
சொல்லாமல் 
கேவலம் நான் இதைப் பாகவதர்படிக்கும் 
கீர்த்தனையாச் சொன்னேன் 
தல்லாமல்  என்று 
தேவராமன் பேரே உற்றது 
தேடி அந்தப்பேர் இந்த நாடகத்தில் வைத்தது 
பூவோடே கூடிய நாரும் மணம் பெற்றது 
போலே விளங்கும் அதினாலே சொன்னேன் 
கற்றது ( பிழை ) 
3. திருந்தும் நமசிவாய நாராயணா 
செபிக்கும் மந்திரம் இரண்டும் மெய்தானே 
உரைக்கும் மந்திரம் இரண்டில் இரண்டாம் எழுத் திரண்டும் 
ஒருராமன் ஆகிவந்த பெருமானே 
அருள் செய்த சுதையிதை லக்கண சால்ல 
அறிவேனோ சின்னஞ் சிறியனே 
பரப்பிய பாலையும் சோற்றையும் குழந்தைகள் 

பாச்சி சோச்சியெனும் 
பொருத்தம் இல்லாச்சொல்லால் உரைசெய்தாலும் தள்ளப் 
போமே உங்களால் ஆமே திருத்திக் கொள்ள 
அரைச்சொல் கொண்டம்பலம் ஏறினால் மெள்ள மெள்ள 
அரைச்சொல்லும் முழுச்சொல்லாம் ஆகையால் இதில் உள்ள (பிழை ) 

மாகச படி நானே மங்களம் 

விருத்தம் - 6 
வருக்கும் தேவியர்க்கும் தேவ ரோடு 
முனிவர்க்கும் முன்னிந்தக் கதையைச் சொன்ன 
நாவருக்கும் தசரதற்கும் தேவி மார்க்கும் 
நற்றம்பி மார்களுக்கும் சீதை 

சீதை யோடு 
வ நக்கும் கோவருக்கும் அனுமான் மற்றோர் 
ஆழ்வார்கள் ஆரியர் ஐம் பனட அ னந்தன் 
மா வருக்கம் இதைப்படிப்போர் கேட்போர்க் கெல்லாம் 
வளஞ்சொல்வான் ராகவன்மங் களஞ்சொல் வேனே . --ஆதி தாளம் -அசாவேரி தாகம் 

பல்லவி 
ஸ்ரீராமச்சந்திரனுக்கு செயமங்களம் - 
நல்ல திவ்யமுகச் சந்திரனுக்கு சுபமங்களம் 

அநுபல்லவி 
மாராபி ராமனுக்கு மன்னுபரந்தாமனுக்கு 
ஈராறு நாமனுக்கு ரவிகுல சோபனுக்கு 

சாணங்கள் 
கொண்டல்பணி வண்ணனுக்கு கண் மங்களம் 
கோசலை குமாரனுக்கு வீரனுக்கு மங்களம் 
புண்டரீகத் தாளனுக்கு 
பூச்சக்கிர ஆளனுக்கு 
தண்டுளவத் தோளனுக்கு 
சானகிம ணாளனுக்கு 
கோவைமணி வாயனுக்கு மாயனுக்கு மங்களம் 
கோதண்ட கையனுக்கு மெய்யனுக்கு மங்களம் 
தாவுகுண சீலனுக்கு சத்தியவி லாசனுக்கு 
தேவர் அனு கூலனுக்கு 
தெசரதன் பாலனுக்கு 
பகிரண்ட நாதனுக்கு வேதனுக்கு மங்களம் 
பரதனாம் அன்பனுக்கு முன்பனுக்கு மங்களம் 
( ஸ்ரீராம ) 
( ஸ்ரீராம ) 

சகல உல் தருமந்த அகிலவி அயோத்தியா 
லாசனுக்கு 
காசனுக்கு 
லாசனுக்கு 
வாசனு பக்கு 
( ஸ்ரீராம் பாயிரம் முற்றிற்று . 

------------------
 
கம்பராமாயண ஒப்புமைப் பாடல்கள் 


இராம நாடகம் --பாயிரம் --அனுமார் தோத்திரம் 

வெண்பா -1 
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி 
அஞ்சிலே ஒன் றாறாக ஆருயிர் காக்க ஏகி 
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்கண் டயலார் ஊரில் 
அஞ்சிலே ஒன்றுவைத்தான் அவன் நம்மை அளித்துக்காப்பான் 

காப்பு - மிகைப்பாடல் 10 

பெருமாள்  தோத்திரம் -விருத்தம் -2 
உலகம் யாவையும் தாமுள வாக்கலும் 
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா 
அலகிலா விளை யாட்டுடை யார் அவர் 
தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே 

ஆதி யந்தம் அரிஎன யாவையும் 
ஓதினார் அல குள்ளன இல்லன 
வேதம் என்பன மெய்ந்நெறி நோன்மையான் 
பாதம் அல்லது பற்றிலர் பற்றிலார் 

பாயிரம் - கடவுள் வாழ்த்து 

ஒன்றாய் இரண்டு சுடராய் ஒருமூன்றுமாகிப் 
பொன் றாதவேதம் ஒருநான்கொடு ஐம்பூதமாகி 
ன்றாகி அண்டத்தகத்து ஆகி அப்புறத்துமாகி 
நின்றான் ஒருவன் அவன் நீள்கழல் நெஞ்சில் வைப்பாம் 
நீலமாம் கடல் நேமியந்தடக்கை 
மாலைமால்கெட வணங்குதும் மகிழ்ந்தே 

பராவ அரு மறைபயில் பரமன் பங்கயக் 
கராதலம் நிறைபயில் கருணைக் கண்ணினால் 
அரா அணைத் துயில் துறந்து அயோத்திமேவிய 
இராகவன் மலரடி இறைஞ்சி ஏத்துவாம்  

முத்தமிழ்த் துறையின் முறை போகிய 
உத்தமக் கவிஞர் கட்கொன்று ணர்த்துவென் 
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் 
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ 

தேவ பாடையின் இக்கதை செய்தவர் 
மூவ ரானவர் தம்முளும் முந்திய 
நாவி னான் உரை யின்படி நான் தமிழ்ப் 
பாவி னாலிது உணர்த்திய பண்பரோ 
 
நாராயணாய நமவென்னும் நன்னெஞ்சர் 
பாராளும் பாதம்பணிந்து ஏத்துமா றறியேன் 
காராரும் மேனி கருணாகரமூர்த்திக்கு 
ஆராதனைஎன் அறியாமை ஒன்றுமே 

இறுவ ரம்பில் இராமஎன் றோர்உம்பர் 
நிறுவர் என்பது நிச்சயம் ஆதலால் 
மறுவில் மாக்கதை கேட்பவர் வைகுந்தம் 
பெறுவர் என்பது பேசவும் வேண்டுமோ 

அன்ன தானம் அகில நல் தானங்கள் 
கன்னி தானம் கபிலையின் தானமே 
சொன்ன தானப் பலன் எனச் சொல்லுவர் 
மன்னி ராமன் கதைமற வார்க்கரோ 

ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு 
பூசை முற்றவும் நக்குபு புக்கென 
ஆசை பற்றி அறையலுற் றேன்மற்றிக் 
காசில் கொற்றத்து இராமன் கதையரோ 

நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற் றேன் எனை 
வைத வைவின் மராமரம் ஏழ்துளை 
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை 
செய்த செய்தவன் சொல்நின்ற நேயத்தே 

ஆதியாய் நடுவாகி முடிவுமாகி 
அண்டப கிரண்டமுமாய் அனைத்துமாகிப் 
போதினை ஆலினை வெள்ளிப் பொருப்பை விட்டுப் 
புகழ்பொறைகள் தருமமெலாம் பொலிந்து நல்ல 
நீதிசேர் அயோத்தியில்வாழ் தசர தேந்திரன் 
நெடியமா தவத்தினில்வந் துதித்தஎங்கள் 
சோதியா கியராமன் நாடகத்தைச் 
சுயஞ்சொல் வான் மகிழ்ந்து தோடயஞ் சொல்வேனே . 

எவரும் வணங்கிய ரகுராமன் எதுவும் நினைத்தது தருராயன் 
ரவிகுலசுந்தா செயராமன் நாடகத்தைச் சொல்லவே ஆஆ ! 
கவளநெடுங்கர தலசாமி கமலதிரியம்பகம் உளசாமி 
பவனிவரும்கெச முகசாமி பா தபற்பந்துணையே யெ செயா ! 

துணிவுள புசபெல ராவணே கரன்முடி பொடிபட மோதுமால் 
அணிபெறு தசரத ராமநா கமதுஉரைசெயவேவ ஆ ஆ ! 
திணிதரு புயமிரு நாலுசேரி திசைமுகன் இசைபெறு நாவில்வாழ் 
மணமிகு சரஸ்வதி பாத்தா மரை எனதுதுணையே செய் செயா ! 

கோனொடு வானவர் தேடவொரு கோசலை யாள்விளையாட வரு 
ஞானகிரு பாகர ராமகதை நாடகமா சொலவே ஆஆ ! 
வானவ னாம் மண வாளமுனி மாருதி நீர் கரு டாதிபதி 
சேனையர் கோனுடனே பதின்மர் சேவடிகள் துணையே செய செயா ! 

வாசவன்மாகாரொடு லோகாந்திர வாசிகள் பூசுரர் இவர் ஏகாந்த 
பூசிதராகவனிட ஆராய்ந்த புகழது உரைசெயவே ஆ ஆ 
காசினி மீதனில் மிகுமூடாந்த காரம் தோடவே வருதோந்த 
தேசிகர் தாமரை மலரே போன்ற திருவடிகள் துணையே செய செயா 

திருமகள் சானகிசேரும் வாமன் செயமொடு கோசலம் வாழும் நேமன் 
கருமணியே நி க : 21 கும் ராமன் கதையது உரை தெ GFS ஆஆ ! 
குருகையில் மேவிய காரிமாறர் குணநிதியாகிய பாஷ்யகாரர் 
மருளறு தேசிசர் மாசிலாத மலரடிகள் துணையே பெயசெயா 

மைக்கடல் வாய்விண்டு பொங்கவே வைத்தொரு பாணம் துரந்தமால் 
விக்ரமராமன் பிரபந்தம் ஆம் விந்தையது சொலவே ஆ ஆ 
பக்குவமாம் அன்பு கொண்டுவாழ் பத்தரை ஆளும் திறங்கள் சேர் 
சக்கர கோதண்டம் தண்டம்வாள் சங்கம் இவை துணையே செய செயா . 

அரசியல் கட்டியம் வசனம் 

அசோடாதிராசன் மகாதேசப் பி , க சன் 
ராச பரமோன் தேசநர மீசுரன் 
ராச மார்த்தாண்டன் ரணரங்கோத் தண்டன் 
ராச கெம்ரன் நேச சபீரன் 
பாஸ்கர குலதிரன் சிலாக்யமுள வீரன் 
புத்தியில் கஸ்பதி வித்தையில் சரஸ்வதி 
நயகுண சீலன் பாலன் 
நல்லார்க்கு மித்துரு பொல்லார்க்குச் சத்துரு 
சுசரிதசண நேசன் தசரத மகராசன் 
மனு நீதி கோணாமல் சனவேதை தோணமல் 
ஆறில் ஒரு கடமைகொண்டு மாறு டு பகையை 
திங்கள்மும் மாரிபெய்ய எங்கும் முப்போகஞ் செய்ய 
செங்கோல் முகம் சாயாமல் வெங்கோல் முகம் பாயாமல் 
பயன அறு தினாயிரம் வருஷம் பகவும் புலியும் ஒருதுறையில் நீர்உண் 
ராச்சிய பரிபாலனம் பண்ணின கீர்த்தியைச் சொல்லுகிற மார்க்கம் 
மகராசன் அசமகா ராசன் ஈன்ற 
மகராசன் மிகு சூரிய வங்கிச ராசன் 
சுகராசன் கௌசலைநா யகிகைகேசி 
சுமித்திரையாம் தேவியர்கை தொட்டராசன் 
மிகராசர் பணிந்திட இந்திரனைக் காத்த 
விசயதசரத ராசன் அயோத்தி வாழும் 
செகராசன் ஒருவன் மனு நீதி யாலே 
தேசமெல்லாம் ஒரு குடைக்கீழ்ச் செய்தாண் டானே -தரு -1 --சாவேரி ராகம் -திரிபுடை தாளம் 


பல்லவி 

ராசரா சர்க்கும் ராசன் - தசரத ராசன் இருந்தானே 
( ராச ) 

அநுபல்லவி 

தேச் திலகன் அ யோத்தி நகர்க் கொரு திலகன் ரவிகுல திலகன் ஆகவே 
( ராச ) 
சரணங்கள் 

செழிக்கவே 
ஒரிக்கவே 
மந்திர தந்திரமும் நித்திய நைமித்தமும் 
மகங்களும் தினம் 
வன்புலி யோடு பசுவும் ஓர் துறை நீர் 
உண்டு கொண்டு பயம் 
இந்திர பதமும் குபேர கனங்களும் 
எவரும் சிறிதென்று 
எங்கெங்கும் மூப் போகம் விளையவே 
திங்கள் தோறும் மும்மாரி 
பழிக்கவே 
கொழிக்கவே 
( ராக ) 
பாயாமலே 
நாலு வர்ணா சிரமங்களும் சொன்ன 
நடை புரண்டு 
நரர்க்கும் வேறுள உயிர்க்கும் வயதுகள் 
நடுவிலே 
கோலமாகிய மிருகமும் பறவையும் 
குறிகடந்து 
தேயாமலே 
மேயாமலே 

குடியில் ஆறிலொரு கடமை கொண்டுசெங் 
கோலின் முகம்  சாயாமலே 

(ராச ) 

மறுமங்கை யருக்கும் மறுமன்ன வருக்கும் 
மார்பும் முதுகும் கொடாமலே 
வளரும் அஷ்ட லட்சுமியும்தன் அர 
மனையைவிட்டடி எடாமலே 
அறுபதாயிரம் வருஷமும் ஏ காதிபத்தியம் விடாமலே 
ஆரும் மனதில் விசாரத்தால் ஆ ராய்ச்சி மணியைத் தொடாமலே 

சக்கிரவர்த்தி மக்கள் வேண்டி வருந்தல் 

இருந்த தசரத ராசன் நெடுநாளாய்ப் புவியா ண்டோன் இடையே இந்தப் 
பெரும் புவியை ஆள்வதற்கும் முத்தியிலே சேர்ப்பதற்கும் பிள்ளை காணேன் 
அருந்தவனே குலகுருவே குலகுருவே வதிஷ்டமுனி யேபிள்ளை அதைநான் காண 
வருந்துவதில் லா வகையை மொழியென் றான் இதற்கென்ன வழியென் றானே- 

பல்லவி 

நான் பிள்ளையில்லாத பாக்கியம் 
பெற்றிருந் தென்னசி லாக்கியம் 

அநுபல்லவி 

வள்ளலே சென்மமலடன் என் 
வசைகொண்டேன் தசரதன் நான் 
சுள்ளியானது நெடுகள் 
காய் உண்டோ கனிஉண்டோ 
றொருகாலே 
புவிமேலே 
ளர்ந்ததாலே 
அதுபோலே 
மறுவில்லாது இந்தசூரிய வங்கிசம் இது 
வளரும் வங்கிசம் 
ஆச்சே - இது 
மழைபேய்ந் தடிமறைந்தாற் போல என் 
மட்டிலே நின்று 
போச்சே 
அறுபதி னாயிரம் வருஷமும் 
வருந்தும் 
அரசுதான் இனி ஆரைக்கொண்டு திருந்தும் 
குறைவில்லாத அந்த சஞ்சீவி 
மருந்தும் 
கொடுக்கும் தெய்வமும் நீதானே கிடைத் திருந்தும் 
( பிள் ) 
ஆனேன் 
பெருக்கக் காண்பதே காண்பதல்லால் 
பெறுவதொன்றும் காணேன் - மிகு 
பிச்சர்போல நெடுநாளும் உண்டஉண்ட 
எச்சிலை உண்ணல் 
விருத்தன் நான் இனித்தவ சில்லே 
வேணும் அல்லாமல் புவி ஆள்வதும் சிறப் பல்ல 
இருத்தும் வாழையடி வாழையாய்ப் 

புல்ல 
இவன் மகன் இவன் ஆம் என்று சொல்ல 

( பிள் ) 
மோந்தால் முத்தியும் வரும் பரத்திலே 
முத்தியும் கூட 
வருமே - மேலே 
காய்ந்தால் உடம்பெங்கும் குளிருமே 
தழுவஇன்பம் தருமே 
வாய்ந்த பொன்னுலகளவும் போய்ச்சனி 
மண்டலமும் திருத்திக் கொண்டேன் 
புவிதனி 
ஏந்தினேன் இல்லையே ஒருபிள்ளைக்கனி 
என்னவீ டென்ன வாசல் 
எனக்கினி 
( பின் ) 
பெருமாள் சந்நிதியில் தேவர்கள் முறையீடு 
விருத்தம் -4 
மன்னவனாம் தசரதபூ பதியிவ் வாறு 
மக்களில்லாத் துன்பத்தை வதிஷ்ட னோடே 
சொன்னவுடன் அந்தமுனி வனும்தியானித்தான் 
சுரர்முதலா னவர்கள் மக மேருமேலே 
சின்ன அரக் கரைநடுங்கி வாழ்த்தும் போது 

சிறைக்கருடன் மீதினில் அச சுதனும் வந்தான் 
பொன்னின் மலர் அவன் பதத்தில் இறைத்தே கண்ணீர் 
பொழிகின்றார் அரக்கர் துன்பம் பொழிகின் றாரே --அசாவேரி ராகம் --ஆதி தாளம் 

பல்லவி 
கடைக்கண்ணால் இரங்கிப் 
காவாவிட்டால் இனிமேல் 
பார் அய்யா - பார்த்துக் 
ஆர் அய்யா 
( கடை ) 

அதுபல்லவி 
அடைக்கலம் என ஓட்ட 
ஆலைக் கரும்பு போல 
வந்தோமே - நாங்கள் 
நைந்தோமே (கடை ) 

சரணங்கள் 
சொர்க்காதி புவனமெல்லாம் 
துரத்தக் கும்பகர்ணன்தனை 
பக்கம் இந்திர சித்தென்னும் பெருங் 
பண்ணிவைத்தானே ராவணன் 
செக்குள்ளே அகப்பட்ட எள்ளுப் 
கைக்குள்ளே அகப்பட்ட எங்கள் 
தாவிக் - கொண்டு 
ஏவி - மற்ற 
கோவி ஆளப் 
பாவி போலே - அரக்கர் 
மேலே உனது ( கடை ) 


மெத்தத் அளகேசன் புஷ்பகம் கையிலே சூரியன்தேரும் 
தளர இந்திரனனக் கூடச் சருவகொள்ளை யடிக்கத் 
தனைவிட்டான் 
இலங் வரவொட்டான் 
சிறையிட்டான் - அரக்கன் தலைப்பட்டான் 
ஆமோ 
எளியோர்களை இப்படிஈனர் 
கிளியை வளர்த்துப் பூனை கிட்டக் 
ஒடுக்கல் கொடுக்கல் ஆமோ ( கடை ) 

பாவி அரக்கன் பேச்சே 
படைத்த பலங்கள் எல்லாம் 
பூவைவண்ணா அரக்கன் 
பொருப்பே அறியும்இனி 
மேலாச்சு - தாங்கள் 
மேல்பூச்சு - நல்ல 
கைவிச்சு . வெள்ளிப் 
ஏன் பேச்சு 

ராவணன் வதைக்கின் றான் எங்கள்மேல் என்ன கண்டோ 
தேவ நீ கேளா விட்டால் தீக்குத்திசை இன்னமுண்டோ ( கடை ) 

தேவர்களுக்குப் பெருமாள் அருளிப்பாடு 

 
இசையும்வா னவர்கள் கூடி இப்படிச் சொல்ல மாயோன் 
அசையும்வா ளரக்கர் தம்மை அகற்றுவோம் அஞ்ச வேண்டாம் 
தசரதன் மதலை பாகித் தரணியில் ளருவோம் கள் 
திசைதொறும் கவிகளாகிச் சேருமென் றுரைசெய்வானே -- 

அவதாரஞ்செய் அரக்கர் பயத்தை 

பல்லவி 

திடுவீரே 
விடுவீரே 
கனக 

அநுபல்லவி 
வாலியும் சுக்கி ரீவணும் ஆகிக் 
கண்ணா யிரவ னும்கதி ரோனும் போகி 
( அள ) 


சரணங்கள் 
சீலன் 
நீலன் 
காலன் 
பாலன் - 

ஆக 
அதிகமான ருத்திரன் அங்க சன் எனும் 
அக்கினி யேசேனைக் கதிபனான 
சதுர்முகப் பிரம்மாவே சாம்பவன் எனும் 
தரும்உ பேந்திரன் வாலிதனக்குப் 
சங்கமும் சக்கிரமும் சேஷனும்பரி 
தம்பியர் ஆய்வரத்தானே நாம்பூ 
துங்கனான தசரத ராசன் குறை 
சுருக்கா வருவோம் எவரும் அதின் முன் 
வானர வடிவாலும் மானிடவடி தானல்லா தரக்கன் சாகானே ஒரு 
ஆன படியினாலே அனைவரும்புலி கானிலும் இரும் காட்சி தருவோம் மென் 


வாகத் 
லோகத் 
போகச் 
பாகப் - போய் 


வாலும் 
காலும் 
போலும் 
மேலும் - எ ந்து 
 
பெருமாள் திரு அவதாரம் 

விருத்தம் - 6 


இவ்வகையா மாயவன் முன் நடந்த தென்றே 
எண்ணிமுனி கலைக்கோட்டு முனிவ னாலே 

அவ்வகையம் புத்திரகாமேஷ்டி தன்னை 
அயோத்தியா சனைக்கொண்டுசெய் வித்த போதின் 
பைவளரும் பாம்பணைமேல் பள்ளி கொள்ளும் 
பரமனே தசரதன்செய் பாக்கியத் தாலே 
மெய் வகை சேர் உலகெல்லாம் மனு விக்கியான 
விதிசெய்வான் அவதாரம் அது செய்வானே 


1) கௗலிபந்து ராகம் தி பல்லவி 
ஸ்ரீராமனாகப் பரப்பிரம்ம சொரூபமே பாரில் வந்தது பாரும் 
அதுால் ரவி வரத்தினால் அரக்கனர வானத்தில் ஏற்றவும் 
வானத்தில் தேவர்கள் மலர்மாரி தூற்றவும் ( பரட் ) சரணங்கள் தேற வேற

1. பத்தி முனிவன் கலைக்கோட்டு மா முனி பண்ணிய யாக பலன் 
சத்திய தசரதற் கறுபதினாயிரம் சம்வச்ர பலன் நிறை 
சித்திரை மாசம் நவமி கடகம் செழும் புனர் பூசம்தேன் 
ஒத்த கிரகங்கள் நால்வரும் பதினொன்றில் உச்சத்தில் ஐவரும் - ஆதி ஊற ( பரப் ) சேர



2. சீராரும் லட்சுமணன் சத்துருக்கன் சுமித் திரை வயிற்றில் நின்று பேர 
பாரார் புகழ் கைகேசி வயிற்றில் நின்று பரதன் வந்து புவி 
ஆராலும் கொள்ளாத ஆனந்தம் மேற்கொண்டு அம்புவியோர் இடர் தீர 
காராரும் குழல் வல்லி இருவர்க்கும் மேலான கௌசலைக் கண்களி கூர - ஆதி ( பரம் ) முடிக்க படிக்க


3. தேவர் முனிவர்பகை தீர்ந்தோம் என்று சென்னியில்பூந் துழாய் 
பூவுல கத்துள் வேதியர் எல் லோரும் புகழம்வே தாகமம் 
பாவி இலங்கையின் மேல் சூரியன் தேரிலுள்ள பச்சைப்பரி ஏழும் 

னாத இருக்கின்ற ராட்சதர் 
யாவர்க்கும் இடக் கண்கள் துடிக்க - ஆதி 
நடிக்க 
ராவண ( பரப் ) 

கௌசிகர் இராமனைக் குறித்துக் கேட்குதல் 

விருத்தம் - 7 
மைந்தர் இவ் வாறு வந்து வதிஷ்டனால் பேரும் பெற்றார் 
அந்த நாள் விசுவா மித்திரன் அணிதச ரதன் முன் வந்தான் 
இந்த நாள் எனது வேள்வி இராமனால் முடியவேணும் 
தந்திட இது நல் வேளை தாவென்றான் காவென்றானே 


தரு - 6 -மோகன ராகம் -அடதாளச்சாப்புத் தாளம் 

பல்லவி 
செகரட்சக 
ராமனைத் தருவாய் 
ராமனைத் தருவாய் ( ராம ) 

அநுபல்லவி 
தசரதேந்திரா 
தாமசம் செப்பாதே 
இப்போதே (ராம ) 


சரணங்கள் 
அரன்பக்கம் செல்வேன் 
அரிமுன்னே சொல்வேன் 
ரண்டும் தப்பினால் உனைவிட் டெவரால் பகை வெல்வேன் ( ராம ) 

பாவி வேள்வி தாடகைப் தவிர்த்தாள் என் 
பீடைவராமற் காத்தாற் பிழைக்குமென் 
ஆவி ( ராம ) 
( ராம ) 

உம்பர் விசாரம் ஒழிக்க அந் நேரம் 
சம்பர னைக் கொன்றாயே தயவாய் இந் நேரம் 
4. கோபத்தில் ருத்திரன் 
(சருவிசுவா மித்திரன் ஆபத்துக் காக்க வேணும் 
அதனால் உன் புத்திரன் (ராம ) 

சக்கிரவர்த்தி அதை மறுத்தல் 

விருத்தம் - 8 
சொல்லிது முனிவன் சொல்லத் துடித்தனன் தசர தேந்திரன் 
சில்லிது வேள்விக் காகச் சிறுபிள்ளை ராமன் ஏன் தான் 
சல்லியம் செய்யும் அந்தத் தாடகை தனைநான் கொல்வேன் 
பல்பல உரையேன் திராணி பார் என்பான் நேர் என் பானே . 
 
பல்லவி 
ராமன் இதுக்கோ அவன் வர 
நான் வருகிறேன் 
வேணும் 
காணும் (ராம ) 

அநுபல்லவி 
பூமி அரச னென்று நான் இருந்தென்ன 
சாமி.அவன்கை ஏந்துகுழந்தைப் கொள்ளை பிள்ளை ( ராம ) 

சரணங்கள் 
1. ஏனிந்த தோத்திரம் - தாடகை 
எனக்கெம் மாத்திரம் 
வானுளோர் வந்து தடுத்தாலும் அடிக்கிறேன் 
நானே வந்துன் வேள் வியை முடிக்கிறேன் (ராம ) 


2. பேயைக் கொல்வ தரிதோ - காரியம் 
பெரிதோ வீரியம் பெரிதோ 
ஆயுதம் பிடிக்கறியான்கேளாய்ஒரு சொல்லை 
வாயில் முலைப்பால் மணம்மாற வில்லை (ராம ) 

3. கவலை ஏன் கொண்டாய் - என் முன் ஒரு 
காலும் வராள் கண்டாய் 
அவளையும் படையையும் அடிக்கிறேன் பாராய்பாராய் 
இவனால் என்ன எழுந்திரு வாராய்வாராய் ( ராம ) 


வதிஷ்டர் தகவுரைத்தல் 

விருத்தம் - 9 
இனமதில் அயோத்தி வேந்தன் இதுசொல்ல விஸ்வா மித்திர 
முனிவனும் கோபம் செய்தான் முன்னின்ற வதிஷ்டன் கண்டான் 
உனதுமைந் தனுக்கு மன்னா யோகநாள் வந்த தென்று 
கன மு ... ன் விரித்துச் சொல்லிக் காட்டுவான் கூட்டு வானே 

முரி ராகம் ஆதி தாளம் 
பல்லவி 
மோசம் வாரா தைய்யா நான் சொன்ன வார்த்தை 
மோசம் வாரா தைய்யா 

அநுபல்லவி 
கோசிகன் பின்னே ராமனைக் 
கூட்டி விடுவாய் சொன்னேன் ( மோச ) 

உப்பு நீர் மேகம் சேர்ந்தால் உலகிற்பிரவாகம் 
அப்படிஉன் மகனுக்கு அடித்ததே யோகம் ( மோச ) 
றுவுண்டோ வதிஷ்டன்சொல் வாத்தைக்கும் ரண்டோ 
பொறு பொறு முளைப்பாரைப் புதைப்பாரும் உண்டோ ( மோச ) 
போதிக்க வேண்டாம் நாள் சொல்வதே லேம் 
ஆதித்தன் குலத்திற்கின் றனு கூல ( மோச ) 

கௌசிகர் இராமனுக்கு நீதி சொல்லுதல் 
விருத்தம் - 10 
முனிவ நிஷ்டன் இவ்வாறு சொல்ல வேந்தன் 
முறையாலே ராமனைலட் சுமண னோடே 
இனிதழைத்துக் கூட்டி விட்டான் வழிக்கிவேண்டி 
இருவரும்மந் திரங் கொண்டார் வெயில் படாமல் 
தனிநடந்தார் வேள் வியில் தா டகையும் வந்தாள் 
சாமியும் பெண் என நினைந்தான் முனிவன் அந்த 
நினைவறிந்தான் பெண் இவளோ அல்ல ராமா 
நில் என்றான் இப்பொழுதே கொல் என்றானே 
 
கலியாணி ரகம் -ஆதி தாளம் 
பால் சவி பெண் இவள் அல்ல 
வண்ணங் கெசண்டநமன் இவள் 
மண்ணில் மெத்த உயிரை வதைத்த நிர்ம் 
கண்ணில் கண்டது கோடி காணாத னந்தம் கோடி ( பெண் )  

சரணங்கள் 
இஷ்டமா முனிவர் என்றொரு திருக்கும் கடலுக் கிவள் பெருத்தமந் 
ஷ்டகாசம் செய்தால் அதுவொரு அண்டகூட மெங்கும் இடியுமே 
எட்டுத் திசையிலும் ஓடி முட்டுமே 
முட்டினால் மலையும் பிளந் திட்டுமே 
எட்டியும் பார்க்கக் கூடுமோ கிட்டி ஒரு 
விட்டு நான் சொல்ல வேணுமோ மட்டில்லாப் 
இவள் ஆதாளி 
தூளி தூளி 
காளிகூளி 
பாவசண்டாளி ( பெண் ) 

ஆயிரம் குணம் ஒரு லோப குணத்தால் தட்டும் 
அதுபோல் இம் மருதத்தை அழித்தாலும் அழிக் கட்டும் 
இவள் பேர் சொன்னால் முனிவர்க்கும் பல்லு கிட்டும் 
வற்றல் என்றெம் மைத்தள்ளி வைத்தாலே இம் மட்டும் 
தூயதிசையானை எட்டும் ஈயெறும் பாய் விழக் காட்டி 
வாயில் ஒருபல் லிடுக்கிலே அடக்குவாளே கூட்டி 
தீயவடவாக் கினிபோல் பாயுவாள் கைகளை நீட்டி 
பேயையும் பிடுங்கித் தின்னும் பேயென வந்த வெள் ளாட்டி ( பெண் ) 
3. ஒரு குமதி யென்னும் பெண்ணைப் பிளந்தான் இந்திரன் அப்போது 
ஒரு பெண் கிய தியை மாயன் ஒழித்தானே 
புவிமீது பெருமானே இவள் அந்தப் பெண் எனவும் கூடாது 
பெண் என்றால் பேயும் இரங்குமே அதிவ ரூக்கேது 
இருடிகள் உடம்பை மெத்த உருகை என்று கண்டுகொண்டே 
பெருமகம் செய் வோரைக் கொல்ல வருகிறாள் இதென்னமுண்டே 
நிருதி இவளைப் பெண் ணென்று கருதுகிறாய் என்ன கண்டோ 
ஒரு நொடியில் கொல்ல வேணும் குருமொழி தனக்கும்ரண்டோ ( பெண் ) 


தாடகை முதலானவர்கள் வதம் 
 
செய்தி களை இவ் வாறுரைக்கச் சிரமேற் கொண்ட ரகுராமன் 
வெய்து வணங்கிக் குருவிசுவா மித்திரன் சொல்லே வேதச்சொல் 
மையம் எனவே மகங்காக்க வரிவில் வளைத்தான் தாடகையும் 
எய்த பாணம் பட்டுருவி எழுந்தாள் மலைபோல் விழுந்தாளே 

 
நாமநாதக்கிரியைராகம் -அடதாளசாப்புத்தாளம் 
பல்லவி 
பொல்லாக் கொடிய தாடகை பா வி விழுந்தாள் 
கொடிய தாடகைபாவி விழுந்தாள் ( கொடி ) 

அநுபல்லவி 

கொடிய தாட கைபாவி விழுந்தாள் - செம்பொன் 
முடியன் ராவணன் வெற்றிக் கொடிவிழுந்தாற்போல் ( கொடி ) 

சரணங்கள் 
 
காலன் உரைத்த தேவர் துன்பம் 
ஒருக்காலும் காணாத ருசிகண்டு 
அரக்கர் ஆதிக்கங்கள் அனுகூல காலங்கள் முனிவர்க்குப் 
பறக்க 
இறக்க 
நல்ல ( கொடி ) 

மூதண்ட கோடிக்கப் 
முழங்கவிசுவாமித்திரன் சாலைக்கிய 
கோதண்ட பாணியம் 
குலைந்து புரண்டலறிக் கொண்டு மட் 
பாலே 
பாலே 
நிலை ( கொடி ) 

நடலை வஞ்சனை மாயம் 
நான் கொண்டு முதற்பலி அரக்கரைக் 
கடின சுவா குபட்டுப் 
கணையாலே மாரீசன் கடலோட்டம் 
படுக்க - ராமன் எடுக்க ( கொடி ) 

அகலினக சாபவிமோசனமும் சரித்த்ரமும் விருத்தம் - 12 
தாடகைதான் விழுந்தபின் தேவர் சொல்லச் 
சகலபடை . கரும் கொடுத்தே முனிவர் எல்லாம் 
கூடவரக் கௌசிகையே முதலாம் தீர்த்தம் 
கொண்டாடிக் கௌதமன் ஆ சிரமம்சேர் போதில் 
காடதிலே ரகுராமன் பதத்தூள் சிந்தக் 
கல்லுருப் போய் நல்லுருளாய் விளங்கிநின்ற 
பாடகக்கால் அகலிகையை இவள் ஆர் என்னப் 
பரந்துவிகவா மித்திரமுனி பகர்கின் றானே , 
 
தேவி இவள் ராமா கௌதமன் 
ஆவி இவள் ராமா ( தேவி ) 
 
சரணங்கள் 
மாபத்தியால் கங்கை ஆடத்தடை 
மாமுனிகண்டு வெகுண் டுபயஞ் 
கோபத்தினால் இடு சாபமொழி 
கூறையிலே கரும் பாறைவடி 
பெற்ற 
சுற்ற 
மெத்த 
வுற்ற ( தேவி ) 

வெம்பிய மாமுனி கண்ணில் எதிர்ப் பட்ட 
வேளையிற் கண்டு பொறாமல் முனி திட்ட 
அம்பொன் முடிதொட் டடியளவும் முட்ட 
ஆயிரங்கண் அந்த வாசவனுக் ( தேவி ) 

கெந்த ஞானத்தினால்உன்னை ஓதினபேர்க் 
நன்மையுண் டாமோ அறி யேன் இப்போ திந்த 
கானத்திலே உந்தன் பாதத் தூள்கள் 
கல்உரு மாறி அகலியை யாய் வந்த 
சிந்த ( தேவி ) 


ஸ்ரீராமர் சீதையைக் கண்டு ஐயுறல் 
விருத்தம் - 13 
இட மாம் விசுவா மித்திரன் இந்தச் சேதி உரைக்க லட்சுமண 
னுடனே நடந்து மிதிலையிற் போய் ஒரு மா மணிமேடையில் சீதை 
மடவாள் காணத் தனையந்த மயிலைத் தானும் ரகுராமன் 
கடல்வாய் வருசெந் திருவெனவே கண்டான் விரகம் கொண்டானே 

பல்லவி 
ஆரோ இவர் யாரோ - என்ன 
பேரோ அறியேன் ( ஆரோ ) 


அநுபல்லவி 
கார் உலாவும் சீர் உலாவும் மிதிலையில் 
கன்னி மாடந்தனில் முன்னே நின்றவர் ( ஆரோ ) 

பண்ணிப் பதித்தாற் போல் இரு பாங்கியர்கள் இன்ன முந்துரைத் 
எண்ணத்தாலும் வண்ணத்தாலும் 
பெண்ணைப் போல் கண்ணிற் காணும் 
ஸ்தனமும் -- 
தனமும் 
பங்கயப் 
மங்கையார் ( ஆரோ )

சனமே- அதிங்கே 
மனமே 
பெண்கள் 
கண்கள் ( ஆரேயா ) 

பாக்கியம் என்ப திவர் தெரி 
பலித்ததென்ன புண்ணியமோ 
மூக்கும் முழியும் தீர்க்கமாய் இன்னமும் 
பார்க்கப் பார்க்க நோக்கம் கொள்ளுமோ 
சந்திர விம்பமுக தானே பார்க்கிறார் 
அந்த நாளில் தொந்தம் போலே 
இந்த நாளில் வந்து சேவை 
மலராலே - என்னைத் 
ஒருகாலே 
உருகிறார் 
தகுகிறார் ( ஆரோ ) 

கௌசிகர் ஸ்ரீராமர் வரலாறு சொல்லுதல் 

விருத்தம் - 14 
மனதில் இந்தப் படி நினைந்து மறுநாள் எழுந்து மகஞ்செய்யும் 
கனக மணியன் டபத்தினிற்போய் காகுத்தனும் தம்பியு மிருந்தார் 
அனைய காலத் திவர்பெருமை அருமை தெரிய உரையு மென்றே 
சனகன் உரைப்பக் கௌசிகன்உத் தரிப்பான் விவரம் விரிப்பானே . 


பல்லவி 
( ஆரெ ) ரென் றெண்ணாமலே - நாளுமிவன் 
அதிசயங்களைச் சொல்லக் கேளும் 

அநுபல்லவி 
சூராதி சூரன் ராமன் எனும் பேரன் 
சுகுண தீரன் ரவிகுலகு மாரன் - இவனை ( ஆரெ )  
சியில் தசரதன் புத்திர காமேஷ்டி யாகம் செய்ய வென் 
பூதந் தந்தபர மானந்தத்தை நாலாகப் 
பொன்னின் கமலத்திலே 

எடுத்தான் அதில் 
சோதி கோசலைக்கொன்று கைகேசிக்கொன்றும் 
சுமித்திரைக் கிரண்டுமாக் கொடுத்தான் மூத்த 
பேதை கோசலை இடந்திந்த ராகவன் 
பிறந்தான் என்கவலையை விடுத்தான் வனை ( ஆரெ ) 
நான் தலையாம் பரதன் லட்சுமணன் சத்துருக்கன் 
தம்பியர் இவனுக்கு 
நேயம் மிகக் கொலையாளன் சுவாகுவையும் சேனையையும் இவனம்பு 
கொண்டுபோனதென்ன மாயம் - 
உலையா தென்வேள்வியை முடித்தானே இவனம்பால் 
உருண்ட தே தாடகை காயம் 
மலைபோலே வந்ததும் பனிபோலே போச்சிந்த 
மகராசன் செய்தச காயம் இவனை ( ஆரெ ) 

துரத்தும் சாபம் அகலிகைக்குக் காலினாலே 
துடைத்தானே அவள் உடல் 
சொல்லும் 
பெருக்கம் என்ன . இவன் பிறக்கவே உலகெங்கும் 
பிறந்ததே மங்கல ஓசை - உங்கள் 
பருத்தவில் இவன் கைக்குப் போதுமோ போதாதோ 
பார்க்கவேணும் இன்னோர் 
ஆசை இங்கே 
வரச் சொன்னாலும் வரக் கிடைக்குமோ வலிவிலே 
வந்தானே நீங்கள் செய்த பூசை எனை ( ஆரெ ) 

ஸ்ரீ ராமர் வில்வளைத்தல் 

புங்கவனாம் முனிவனிந்த வாறு சொல்லப் 
போர்வில்லை அறுபதினா யிரம் . பேராலே 
அங்குவரும் படி செய்தான் இதைநாண் ஏற்ற 
ஆகுமென்றால் மருமகனே ஆகும் என்றன் 
சிங்கமெனும் சனகனுடன் விண்ணும் மண்ணும் 
திடுக்கிடவே எல்லோரும் ராமன் கையால் 
துங்கமுள்ள அந்தவில்லை வளைவு காணத் 
தொடக் கண்டார் இரண்டுதுண்டாய் விடக்கண் டாரே 

பல்லவி 
வில்லானது ரண்டாய் ஒடிந்து விழுந்ததே பாரில் ( வில் ) 

அநுபல்லவி 
கலியான ராமன் அனகன் கையால் 
மிதிலையில் வாழ் சனகன் ( வில் ) 


சரணங்கள் 
சுத்திப்பெறும் முனிலோர்கள் மங்கள சோபனங்கள் கூற 
பத்துத் திசை வானவர் எல்லோரும் பனிமலர்மாரிகள் தூற 
சித்தப் பிரமையாலே நாலிரு திசையானைகள் தலை பீற 
கத்திப் பிடியிடையாள் சானகி காதலெண்ணம் நிறை வேற ( வில் ) 

சிங்கார மகா ரவிகுலமே சிலாக்கியம் என்ன ஒளி வீச 
உங்காரம் செய்தரசர் எல்லோரும் ஒருத்தர் போல முகம் 
இங்கே பெண் சீதை செய்தவப்பலன் லபிச்சுதென்று பலர் பேச 
கெங்கா தரனல்லால் ஒருவருக்கும் கிளப்பொண்ணா தமகாப்பிர யாச ( வில் ) 

தருமாகம சாஸ்திரகோடிகளும் சகல வேதங்களும் 
வருமா முனிவிசுவாமித்திரன் சொல் மறுவில்லாதபடி 
ஒருகாலனும் இந்தஓசைதனை ஓர்க்கொணாமல் செவி 
திரமா இனி இவனே கோ தண்ட தீட்சா குரு என்று கொண்டாட ( வில் ) 


மிதிலைக்குச் சக்கிரவர்த்தியின் எழுச் 
நண்ணரிய வில்லது நாண் ஒடிந்த பின்பு 
நடைத்தூதர் கலியாண ஓலை காட்ட 
அண்ணல்எனும் தசரதனும் பயண பேரி 
அதுமுழங்கத் தேவியரும் படையுங் கூடத் 
தண்ணுலவு சந்திரகிரி பிறவும் சென்றான் 
சனகேசன் சதுரங்க தளத்தி னோடே 
எண்ணரிய களிப்பாக வழிமேற் கொண்டே 
எதிர் வந்தான் உடன்மிதிலைப் பதிவந் தானே . 
 
பல்லவி 
சனகமகா ராசனாம் தசரத ராசன் 
ராசன் பதிக்கு வந்தானே ( ராச ) 
அநுபல்லவி 
வாசவன் பணிராக 
வாசகம் கண்டுவிசு 
வேசன் கல்யாண ஓலை 
வாசநேசம் உண்டாகி ( ராச ) 


சரணங்கள் 
கொட்டமிடுங் கெசமும் 
அட்டமிடுந்துசமும் 
எட்டிய குதிரையும் 
கட்டிய தேர் நிரையும் 
இட்டமுள்ள ராசரும் 
அட்டாள தேசருமாய்ப் 
பட்டவர்த்தனர் 
ணங்க கப்பணம் 
இட்டு மறவர் 
வணங்க 
வட்ட வெண் குடையும் முடிகளும் துலங்க 
மகர தோரணங்கள் முறை முறை லங்க 
சட்டபான திசை எட்டின் மேலும் படை 
மட்டில்லாமல் 
கட்டியம் 
பெண்கள் 
கொண் 

உச்ச மாணிக்கத்தாலே அச்சுதன் தாய்முதலா 
இச்சையால் முன்னேபோ தச்சபல்லக்கின் மேலே 
மெச்சிய தேவிமார்கள் கச்செய்து பின்னாகவே பாங்கியர் 
பச்சைப் பைங்கிளி மொய்ச்சுக் கொண்டு என்னவே துன்னவே 
வச்சிர பாணி என்ன மலர் முகம் மின்னலே 
பண்ணும் விண்ணும் என்ன அதிசயம் என்னவே 
உச்சி மீது கரம் வைச்சு மன்னவர்கள் 
பேச எச்சரிக்கை கவரி  வெகுவி 


மெத்தப் பெருஞ்சேனைகள் 
சத்த மேகம் போல் ஆர்க்க 
சத்திர பதி சனகன் 
முற்றிய கடல் 
மற்றொரு கடல் 
சுற்றத் துந்துமிபேரி 
அத்திசையிலே நின்று 
நெற்றிநேராகவர 
மேலே புகுந்த 
போலே கலந்து 
மலர்ந்து 
பத்தியாக இரு படைகளும் 
பார்த்திரண்டுராசரும் முகம் 
வெற்றி ஏறியபு சத்திலே 
ஒற்றியணைத்து அவனை மிகுந்த 
மாற்றி 
கீர்த்தி 
மூர்த்தி 
யோத்தி 
படைத்த ( ராச ) 


ஸ்ரீராமர் பவனிவருதல் 

வந்ததச ரதராசன் தன்னை முன்னே 
வந்திருந்த ராமனும் தம் பியும் போய்க் கண்டார் 
அந்த இரு வருந்தந்தை அருளைக் கொண்டார் 
அரசர் இரு வரும்பின்னே வரமுன் சென்றார் 
பந்தமுள்ள மிதிலை வீதியிலே தே மேல் 
பவனி வரும் ராமனைக்கண் டாசை கொண்டு 
செந்திருவை நிகரான பெண்கள் பின்னே 
செல்லுவார் மதிமயங்கிச் சொல்லுவாரே 

வெகுமாதர் சோதி நெடுந் தேர்மிதிலை வீதியினில் வரக் கண்டு 
சுவாமி முகம் காணவந்தார் 
பூதலந் தனில் இந்தவூர் மாதவம் என் செய்ததோ புண்ணியன் வந்தான் என்றார் 

வெகுமாதர் 
ஆடகலோகத்தமுதை ஈக்கள் மொய்த்துக் கொண்டதைப் போல் 
ஐயனை மொய்த்துக் கொண்டார் 

வெகுமாதர் 
கோடைதனிலே தண்ணீர் ஓடைகண் ! - மான்கள் போலக் 
கூடிக் கொண்டோடி வந்தார் 

வெகுமாதர் 
ஆழியும் வளையும் செம்பொன் ஓலையும் மாலையும் விட்ட பின் 
ஆடை விடாமல் நின்றாள் 

ஒருமாது 
கேள்வி முறை யில்லையோ சுவாமி உன் முன்னே : அம்பாலே 
கிழிக்கின்றான் மாரன் என்றாள் 

ஒருமாது 
பெருத்த மலைபோல் வில்லை ஒடித்தாயே சீதைக்காக 
பெலத்தவன் நீயே என்றாள் 

ஒருமாது 
வருத்தமோ மாரன் கையில் கருப்பு வில்லை ஒடிக்க 
மாட்டாயோ சுவாமி என்றாள் 

ஒருமாது 
கண்ணுக்கோர் உருவாய்ப் பார்ப்போர் கண்ணிலெல்லாம் தோன்றுமிவன் 
கண்ணனே யாகுமென்றாள் 

ஒருமாது 
மண்ணும் விண்ணும் கடந்தானை கண்ணால் வளைத்துக் கொண்டாளே 
வைதேகியே பெண்ணே என்றாள் 

ஒருமாது 
சாய்த்தொருவரையும் காணாள் சாமிதனையே கண்டாள் 
தனியனோ ராமன் என்றாள் 

ஒருமாது 
வார்த்தையும் உடைமைகளும் பூந்துகிலும் சோர்ந்தாளுயிர் 
மாத்திரம் சோராமல் நின்றாள் 

ஒருமாது 
இங்கேயென் உளம் புகுந்தால் கண் கதவினாலே மூடி 
இறுக்குவேன் இவனை என்றாள் 

ஒருமாது 
மங்கையரே என் மனது வள்ளல் பின்னே போச்சு தங்கே 
வரக் கண்ட துண்டோ என்றாள் 

ஒருமாது 
தன் மருக னாக இந்த மன்னனைப் பெற்ற சனகன் 
தர்மவான் என்று சொன்னாள் 
கன்மனதுக் காரனிவன் தன் மகளுக்காகவில்லை 
ஏன்வளைக்கச் சொன்னான் என்றாள் 

ஒருமாது -சீதை சபாமண்டபத்துக்கு வருதல் 

பாவையர் இப் படியுருகப் பவனி வந்தான் 
படையரசர் தசரதனும் பலரும் வந்தார் 
மாவிசுவா மித்திரனுடன் தம்பி மாரும் 
மருங்கிருக்க ராகவனும் இருந்தான் இப்பால் 
தாவு புகழ் வதிஷ்டமுனி வார்த்தை கொண்ட 
சனகன்உரை கொண்டு மணி மண்ட பத்தில் 
பூவுலகில் தேவர் சிறை மீட்க வந்த 
பொருளினால் சீதையெழுந் தருளி னாளே 

பல்லவி 
அன்னை சானகி வந்தாளே ராசாதிராசர் 
அனைவர்க்கும் காட்சி தந்தாளே ( அன் ) 

அநுபல்லவி 
கன்னிமார் என்னும் தாரா கணத்தில் சந்திரனை நேரா 
பொன்னின் ஒளியும் பூமணமும் கொண்டு தொடர்ந்து 
மன்னன் சனகமணி மண்டபத்தில் நடந்து ( அன் ) 


சரணங்கள் 
சுந்தரப் பாதம் வைக்கவே 
சோதி நிலத்தில் மொய்க்கவே 
தந்தாய் மகளுக் கென்னவே 
தளிர்போல எங்கும் மின்னவே 
அந்த அமிர்தங் கொண்ட ஆகிய ராமர் முன்னே 

ரத்தினச் சிலம்பின் பூமியாகிய விரித்ததேமாந் 
இந்திரன் போலே தாகம் தோகையர் நடுவாக 
கந்தமலர்க் கைவளைச் சோதியினாலே ரண்டு 
கடைக் கண்கள் கொண்டு ராமன் 
வடிப்பங்கள் கண்டு கொண்டு ( அன் ) 
இடும்போதவன் 
அம்மன்கையான 
காட்டும் சூரியன் போல் 

வீரராமன் கை தீண்டியே 
மென்கை பிடிக்க வேண்டியே 
வாரீச மலர் விரித்துக் 
மாணிக்கக் கங்கணம் தரித்து 
சோர நடைகண்டு 

துவளும் அன்னங்கள் போலக் 
ஸ்ரீராமனை விடுத்து 

தெய்வம் இவள் என்றெண்ணிக் 
கைகள் அஞ்சலி செய்ய 
நேராகாமல் மெத்த 
கவரி மங்கையர் சுற்ற 
ஆர் ஆருக்கும் துய்ய ( அன் ) 
பூர்ணச் சந்திரன் போல் மாலிகைசூடி தேவர்கள் செய்த னாலே 

சீவிய கூந்தல் மேலே தெரிந்திட ஒருக் 
காலே தரவில்லாமல் முன் 
தவம் வெளி வந்தாற் போலே 
மூவுலகும் செலுத்தும் 
முத்தி கொடுக்க வந்த 
தேவி இவள் என்றால் 
சிலையோ ஒடி 
மலையும் ஒடிப்பான் என்ன 
ராவணனுக்குப் 
பண்டு 
சித்திரவடிவைக் கொண்டு 
ராகவன் இந்தச் சின்ன உப்பான் ஏழு ( அன் ) 

சொல்ல என்றாலும் இந்திரா ணி முதல்  ராமனும் காண 
நாணுமே 

தெரிசனம் காணப் போகுமோ சேஷனாலேயும் ஆகுமோ 
அரிவையர்க்கும் மெய் அனந்தம் கோடிக்கண் வேணுமே 
பிரமன் முதல் எதுவும் உருவினில் இனிவேறு 
அருமையா உலகிற் கல் திருமங்கிலியத்தில் இடும் 
பெற்றவளுக்கு நல்ல உடைமைகள் என்னசொல்ல 
யாணத்திற் பெண்கள் திருவாகிய எங்கள் ( அன் ) 


ஸ்ரீ ராமர் மணக் கோலம் கொள்ளுதல் 

விருத்தம் -.19 
சீலம் கொண்டிப்படி வந்த சீதை மாதரொடும் சென்றாள் 
மூலங் கொண்ட கௌசிகனும் முகுர்த்தம் நாளை என்று சொன்னான் 
ஓலங்கொண்ட வேதன் முதல் ஓராயிரத் தெட்டண்ட மும்தன் 
கோலங் கொண்ட ராமன் மணக் கோலங் கொண்டான் கொண்டானே 
ராமசாமி கொண்ட கோலம் என்னாலே சொல்லப் போமோ 

அனுபல்லவி 
கோமிதிலை ராசன் முன் அனேக  கோடி மன்மதனே நிகராக 

சணங்கள் 
பாத சடகம் சேர்த்திரு மருங்கினில்  பசும் பொன்னாடை  போர்த்தி மார்பின் 
மீது பொன்னூல்  ஏற்றிதன் நாமமும்  விளங்கவே  சார்த்தி 
சீதை ஆசையிது  எனப்பா ராட்டி தெரிந்த சந்திர சூரியர் 
அதை நாட்டி ஓதிமாறு காதிலே ஒளிக் காட்டி குண்டலங்கள் பூட்டி (ராம ) 

வரித்து நவரத்தின தொங்கள் மாலை 
பரித்து முடிமேல் விமல மகுடம் 
தரித்து பீதாம்பரம் மேனிமேலே கமல மாமலர் நாண 
கங்கணங்கள் செங் கையினிற் பூண 
அமிர்த முகச்சீந்திரன் போல் முகங் காண 
யோககல் யாண் வன்ன வன்னம் ஆனமணிகள் 
பச்சை மேகம் போலே காந்தி விளங்கும் மேனியிற் கலவை ஏந்தி (ராம ) 

வாகுமந்தர கிரிமுறுக் வாசுகீஎன மணிவகை 
நாகரீக கேயூரம் ஒளி வீரகோ 
குண்ட 
கொண்ட 
மண்ட 
தண்ட 
லியாணச் சடங்கு செய்தல் 
 
சக்கிரபதி ஆகிய ராகவன் இவ்வாறு 
சமைத்தநல்ல மணவாளக் கோலங்கொண்டான் 
அக்கணமே தம்பியரும் கோலங்கொண்டார் 
அரசர்களும் தசரதனும் மந்திரிமாரும் 
திக்கில் உள்ள முனிவரும்வே தியருங்கூடித் 
திரைகடல்போல் மிகப்பொங்கி மிதிலைதன்னில் 
முக்கியமுள்ள பலசடங்கின் விதிகள் எல்லாம் 
முறைசெய்தார் கலியாணத் துறை செய்தாரே 


கண்ணிகள் 
கல்யாண பேரிகை அடித்தார் - சனகன் 
சொல்லிய வார்த்தையைப் படித்தார் 
எல்லோரும் ஆனந்தம் கூடினார் - அவர் 
எங்கெங்கும் நின்றுகூத் தாடினார் 


வாழை கமுகுகள் நாட்டினார் - நெடு 
வானமட்டும் பந்தல் ஓட்டினார் 
ஆழிபோலே திரை அமைத்தார் - அலங் 
கார வேதிகை சமைத்தார் 
தூணுக்குத் தூண்உறை பூட்டினார் - சந்திர 
சூரியர் போற் கண்ணாடி மாட்டினார் 
காணுக்குச் சாண்மாலை தொடுத்தார் - தங்கத் 
தாலமும் கும்பமும் எடுத்தார் 

பொன்னரி மாலைகள் பொன்னும் பவளமும் கின்னரி வீணைகள் 
கேளிக்கை மாதர்கள் வீக்கினார் - முத்தும் தூக்கினார் மெத்த 
பாடினார் ஆடினார் பூரண கும்பங்கள் பூசுரர் வேதத்தால் 
தோரணத் தால்வெளி சொர்ண வருஷமா பதித்தார் முக்கிய 
துதித்தார் மறைத்தார் - எங்கும் இறைத்தார்  

மாணிக்கத் தீபங்கள் வாடை கஸ்தூரிகள் ணிப்பொன் னாடைகள் 
ஆலைத் தெருவெங்கும் ஏற்றினார் நல்ல தீற்றினார் சாத்தினார் -பனிநீர் ஊற்றினார் 
தீட்டினார் - பஞ்ச 
நாட்டினார் 
கூட்டினார் - நறுந் 
காட்டினார் 

சந்தனத்தால் கோலம் தருவையும் நன்றாக  சுந்தரப் பாலிகை தூபமும் தீபமும் 
பொன்னால வட்டமும் புஷ்பமும் விந்தமும் தன்னார வண்ணமாக் தங்கப் பொடிகளாக் 
பட்டமும் திவ்விய குந்தமும் கட்டினார் எங்கும் கொட்டினார் 
மத்தளம் மல்லரி வாத்தியம் நரகெச தித்திகளால் சக்கிர செவிடு படுமே அண்ட 
தாளங்கள் பஞ்ச மேளங்கள் வாளமும் திக்கும் கோளமும் 
சனகனும் தசரத சவனுடனே அள கனிவுள சந்தோஷம் 
கலியாண மண்டபம் பாசனும் கேசன்போல் மீறினார் வந்து ஏறினார் 

வெள்ளை விடையினை வேணி யரன்வந்து வள்ளியும் கந்தனும் மைந்தன் வல்லபையும் 
ஊர்ந்தார் - உமை 
நேர்ந்தார் 
சேர்ந்தார் - மூத்த 
கார்ந்தார் 

வேதனும் வாணியும் நாடினார் - தேவேந்திரன் இந்திராணியும் கூடினார் 
மாதவர் தேவர் மென்மேலே -அந்த மண்டபம் சேர்ந்தார் இப் பாலே 
மங்களம் ஆம் ராமச் வங்கிச மணியான கங்கைமுதல் தீர்த்தம் கலவைச் சலவைகள் 
சந்திரன் - சூரிய 
தந்திரன் 
ஆடினான் - மிகக் 
சூடினான் 
 
மாலை மகுடமு வாகு வலயம்ச காலணி கைவளை கங்கள் முதல் அலங் 
கத்தணி - பட்டம் ரப்பணி பாரித்தார் - பதக் காரித்தார் 
தனதாம் பரதன்கை தம்பியர் சாமரை கனக ரதங்கண்டு கலியாண வேதிகை 
நீட்டவே - மற்ற ஆட்டவே தாவினான் - ராமன் மேவினான் 

எப்பொ ருளும்பெற்ற கோதையை - அஷ்ட லட்சுமியும் ஆன சீதையை ஒப்பனை செய்யவும் 
தேடுமோ - என் ஒருத்தனாலே சொல்லக் கூடுமோ 

பூமியுள் ளோர்க்கெல்லாம் ஆவியை - நல்ல பூவைஎனும் சீதா தேவியை சாமி அருகினி லே தந்தார் --வ திஷ்டரும் தருப்பை கொண் டூவந்தார் 


முத்தான தண்டுலம் விரித்தார்- வேத முறையே சடங்கெல்லாம் தரித்தார் 
உத்தம மந்திரம் விளைத்தார் - முனிவர் ஓமாக்கினியை வளர்த்தார்  
தான தருமங்கள் ஓங்கவே - ரா க்ஷதர்போய்ப் பூமிபாரம் வாங்கவே 
வானவ ருக்கின்பம் சுற்றவே - ஓமம் வலங்கொண் டெழுந்தது மெத்தவே 
சல்லாபன் ஆகிய தன்னை அந்தமிதி எல்லாரும் காண முன் ஈந்தானே ராமன்கை 
நேசன் - சீதை லேசன் னாலே - சொல்லி மேலே 
அய்யனும் தையல்கைப் பிடித்தான் - கலி யாணவிதி யெல்லாம் முடித்தான் 
செய்யவ ளுந்திரு மாலே - போலச் சேர்ந்தெழுந் தாரேமென் மேலே 


ஸ்ரீ ராமர் அக்கினி வலம் வருதல் முதலிய துகள் 
 
ராகவன் சீதையைப்பாணி கிராணம் செய்து 
நற்றியை வலம் வந்தான் சீதை பாதம் 
மோகமுடன் பற்றி அம்மி மீதில் வைத்தான் 

முக்காலும் அருந்ததிமுன் காட்டினான் பின் 
ஏகமன துடன்முனிவர் தந்தை தாய்மார் 

எல்லார்க்கும் சேவித்தான் அப்பால் இன்பம் 
கவொரு நன்மணையில் சீதை யோடும் 
அமர்ந்திட்டான் அண்டமெல்லாம் சுமந்திட்டானே . 

சோபனம் பாடுதல் 

விருத்தம் - 22 
மணம்உள்ள மலர்மாரி அந்த வேளை 

வானவர்கள் பாழிந்திட்டார் முனிவர் எல்லாம் 
கணம்உள்ள ஆசீர்வா தங்கள் சொன்னார் 

காவலர்கள் பொன்மலர்கள் சொரிந்தார் தாய்மார் 
பணம்உள்ள நல்வரிசை பலவும் ஈந்தார் 
பத்தியுள்ள பந்துக்கள் எல்லாம் மொய்த்தார் 
குணம்உள்ள சுமங்கலிகள் அங்கே வந்து 
கூடினாார் சோபனங்கள் பாடி னாரே 

பல்லவி 

சோபனம் சோபனம் சோபனம் சோபனம் சாமிக்கும் சீதைக்கும் ( சோ ) 
 
அநுபல்லவி 

பூபன் தசரத மதிக்கும்  புண்ணிய சனகபூபதிக்கும் 
சோபனம் சோபனம் ( சோ ) 

சரணங்கள் 

தாமம் மேவிய ரதிக்கும் ரதிசுந் தரனுக்கும் 
சீர்மகள் இந்திராணிக்கும் இந்திரனுக்கும் 
மாமதி பெருகும் வாணிக்கும் அவள் வரனுக்கும் 
தாமரை மலர்த் திருவுக்கும் தாமோதரனுக்கும் 

தேவிக்கும் அரனுக்கும் சோபனம் சோபனம் சோபனம் 
சோபனம் ( சோ )

நேர்வரும் சுமந்திரன் முதல் மந்திரி நேசர்க்கும் சோபனம் 
நேர் பெறு வதிஷ்டன் கௌசிகன் முதலாம் யோகீசர்க்கும் சோபனம் 
வார்முலை அரம்பை மாதர்க்கும் எண்டிசைவாசர்க்கும் சோபனம் 
சேவை செய்து மனம் மகிழும் ஐம்பத்தாறு தேசர்க்கும் சோபனம் 
ராசாதி ராசர்க்கும் சோபனம்( சோ )


வருகௌசலை கைகை சுமித்திரை எனும் தாய் மாருக்கும் 
பெருகு பரதன் முதலாகிய மூன்று பேருக்கும் 
ஒருமையால் இது சொன்ன வால்மீகிகம்பரிரு வோருக்கும் 
அருணாசலகவி நாடகம் இதுபடிப் பாருக்கும் கேட்கும் எல் லாருக்கும் ( சோ ) 


ஸ்ரீ ராமருக்கும் பரசுராமருக்கும் சம்வாதம் 


திருமகளாம் சானகிகல் யாணம் செய்து செயமுள்ள தம்பியர்க்கும் விவாகம் செய்து 
வரும்வழியிற் சகுனவிரோ தத்தி னாலே மலைபோலே முனிபரசு ராமன் வந்தான் 
பெருகு தச ரதன்கண்டு நடுங்கும் போது பிரசண்ட கோதண்டகுரு ராமன் தானும் 
ஒரு வரும்நேரில்லை என வில்லை ஏந்தி உரஞ்சொல்வான் உடனேஉத் தரஞ்சொல் வானே . 


ஆசீர் மண்ணில் அரசர்போலக் காணுகின்றாயே வாதம் ரகு 
கண்ணில் வேதியர் போல் தோணுகின் றாயே நமஸ் பாரம் பரசு ராமரி 
தாடகை எனும்பெண்மேல் சண்டை கொள்ளராசர்க்கு 
தான் விதி யோ வேடர்கள் தொடுக்கும்வில்லை பிராமணர் தொடத்தலை 
விதியோ பரசு ராமா ராமா 
ஆனாற்பெண் கொலைசெய்யல் ஆமோ உனக்கிது அடைவோ ரகு 
தானாகப் பெற்றெடுத்த தாயைக் கொலை செய்தாயே தகுமோ பரச ராமா 
தருமமா என்னைப்பெற்றதகப்பன் சொற்படி செய்தேன் 
தாய்க்கொலையோ குருவார்த்தை தடுக்காமல் நானும் செய்தேன் பெண் கொலையோ பரசு ராமா 
ராமா ராமா 
சொத்தைவில் ஒடித்தத்தை மெத்த மெத்தவே எண்ணித் துள்ளாதே ரகு 
கற்ற வேதியன் என்று பொறுத்தேன் பொறுத்தேன் குதிக் காதே பரசு ராமா 

அந்தவில் வளைத்தாயே இந்தவில் வளை இந்தா அடடாரது 
இந்தா வளைத்தேன் இதில் வைத்த அம்புக்கு வழி எங்கே பரசு ராமா ராமா 
அம்புக்கு வழியில்லை நான் பிராமணன் இனி அனுக்கிரகம் செய் 
பின் புத்திக் காரன் இரு பிறப்பன் உன் னொ டென்ன ராமா 
பேச்சு பரசு ராமா ராமா 
சந்தி செபதங்கள் எல்லாம் உன் சரத்துக்கே தந்தேன் ரகு 
வந்தவழி பார்த்துக் கொண்டோடிப் போவதே நல்ல மார்க்கம் பரசு 

ஸ்ரீ ராமர் திரு அயோத்தியைச் சேர்தல் 

இன்னவகை சொன்னரா கவனை வாழ்த்தி 
இனியதவம் செயப்பரசு ராமன் போனான் 
அன்னவன்கைக் கொண்ட வில்லை வருண ராசன் 
அடைக்கலமா வைத்துவிட்டு ராமச் சந்திரன் 
மன்னவரும் தேவியரும் தேர்மேற் கொண்டு 
வர அருகே தானும்மணித் தேர் மேல் ஏறி 
மின்னனைய சீதையுடனே சந்தோஷம் 
மிகவந்தான் அயோத்திமா நகர்வந் தானே 

பாலகாண்டம் முற்றிற்று . 
சக்கிரவர்த்தித் திருமகனார் திருவடிகளே சரணம் 

--------------- 


தழை செவி சிறுகண் தாழ்கை தந்தசிந் துரமும் தாரை 
மழைமதத் தறுகண் சித்ர வாரண முகத்து வாழ்வை 
இழையிடைக் கலசக் கொங்கை இமகிரி மடந்தை ஈன்ற 
குழவியைத் தொழுவன் அன்பால் குறைவர நிறைக என்றே (பாயிரம் - மிகை - 13 ) 


பொத்தகம் படிக மாலை குண்டிகை பொருள்சேர் ஞான 
வித்தகம் தரித்த செங்கை விமலயை அமலை தன்னை 
மொய்த்த கொந் தனக பார முகிழ்முலை தவள மேனி 
மைத்தகு கருங்கண் செவ்வாய் அணங்கினை வணங்கல் செவ்வாம் ( பாயிரம் மிகை 12 )  


தருகை நீண்ட தயரதன் தான் தரும் 
இருகை வேழத் திராகவன் தன் கதை 
திருசை வேலைத் தரைமிசைச் செப்பிட 
குருகை நாதன் குறைகழல் காப்பதே (பாயிரம் - மிகை --9 ) 


அரசியல் 
 
ஆதிம் மதியும் அருளும் அறனும் அமைவும் 
ஏதில் மிடல் வீரமும் ஈகையும் எண்ணில் யாவும் 
நீதிந் நிலையும் இவை நேமியி னோர்க்கு நின்ற 
பாதிம் முழுதும் இவற்கே பணிகேட்ப மன்னோ ( அரசியற்படலம் 2 ) 


தாயொக்கும் அன்பின் தவம் ஒக்கும் நலம் பயப்பின் 
சேய்ஒக்கும் முன்னின் றொருசொல் கதியொக்கும் நீரால் 
நோய் ஒக்கும் என்னின் மருந்தொக்கும் நுணங்குகேள்வி 
ஆயம் புகுங்கால் அறிவொக்கும் எவர்க்கும் அன்னான் ( அரசியற்படலம் 57 


வெள்ளமும் பறவையும் விலங்கும் வேசையர் 
உள்ளமும் ஒருவழி ஓட நின்றவன் 
தள்ளரும் பெரும்புகழ்த் துயரதப்பெயர் 
வள்ளல் வள் ளுறைஅயில் மன்னர் மன்னனே ( அரசியற்படலம் 6 ) 


குன்றென உயரிய குவவுத் தோளினான் 
வென்றிவெம் திகிரிவெம் பருதி யாமென 
ஒன்றென உலகிடை உலாவி மீமிசை 
நின்றுநின் றுயிர்தொறும் நெடிது காக்குமே ( அரசியற்படலம் 11 ) 
துனியின்றி உயிர்களிப்பச் சுடராழிப் படைவெய்யோன் 
பனிவென்ற படியென்ன பகைவென்று படி காப்போன் 
தனுவன்றித் துணையில்லான் தருமத்தின் கவசத்தான் 
மனுவென்ற நீதியான் மகவின்றி வருந்துவான் 


சக்ரவர்த்தி மக்கள் வேண்டி வருந்தல் 

அறுபதி னாயிரம் ஆண்டும் மாண்டுற 
உறுபகை ஒடுக்கியிவ் வுலகை ஓம்பினேன் 
பிறிதொரு குறையிலை என்பின் வையகம் 
மறுகுறும் என்பதோர் மறுக்கம் உண்டரோ 

( திருவவதாரப்படலம் 3 ) 
அருந்தவ முனிவரும் அந்த ணாளரும் 
வருந்துதல் இன்றியே வாழ்வின் வைகினார் 
இருந்துயர் வழக்குநர் என்பின் என்பதோர் 
அருந்துயர் வருத்தும் என் அகத்தை என்றனன் 

(திருவவதாரப்படலம் 4 ) 
பெருமாள் சந்நிதியில் தேவர்கள் முறையீடு 

விருத்தம் -4 - தரு - 3 
பொன்வரை , இழிவதோர் புயலின் பொற்புற 
என்னை ஆள் உடையவன் தோள் நின்று எம்பிரான் 
சென்னிவான் தடவும் மண்டபத்தில் சேர்ந்து அரி 
துன்னுபொற் பீடமேல் பொலிந்து தோன்றினான் (திருவவதாரப் படலம் 13 ) 


ஐயிரு தலையினோன் அனுசர் ஆதியாம் 
மெய்வலி அரக்கரால் விண்ணும் மண்ணுமே 
செய்தவம் இழந்தன திருவின் நாபக 
உய்திறம் இல்லை என்று உயிர்ப்பு வீங்கினார் ( திருவவதாரப்படலம் 15 ) 
எங்கள் நீள் வரங்களால் அரக்கர் என்றுளார் 
பொங்குமூ வுலகையும் புடைத்தழித்தனர் 
செங்கண் நாயக இது தீர்த்தி இல்லையேல் 
நுங்குவர் உலகைஓர் நொடியில் என் றனர் ( திருவவதாரப்படலம் 16 ) 

தேவர்களுக்குப் பெருமாள் அருளிப்பாடு 
 
வானுளோர் அனைவரும் வான ரங்களாய் 
கானிணும் வரையினும் கடித் டத்தினும் 
சேனையொ டவதரித் திடுமின் சென்கிறன 
ஆனனம் மலர்ந்தனன் அருளின் ஆழியான் (திருவவதாரப்படலம் 18 ) 
மசரதம் அனையவர் வரமும் வாழ்வுமோர் 
நிசரத கணைகளால் நீறு செய்யயாம் 
கசரதத் துரகமாக் கடல் கொள் காவலன் 
தசரதன் மதலையாய் வருதும் தாரணி (திருவவதாரப்பட லம் 19 ) 
வளையொடு திகிரியும் வடவை தீதர 
விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும் 
இளையர்கள் என அடி பரவ ஏகிநாம் 
வளைமதில் அயோத்தியில் வருதும் என்றனன் ( திருவவதாரப்படலம் 20 ) 
என்னையா ளுடைய ஐயன் கலுழன் மீ தெழுந்து போய 
பின்னர் வா னவரை நோக்கிப் பிதாமகன் பேசு கின் றான் 
முன்னரே எண்கின் வேந்தன் யான் என முடுகினேன் மற்று 
அன்ன வா றெவரும் நீர்போய் அவதரித் திடுமின் என்றான் 

தருவுடைக் கடவுள் வேந்தன் சாற்றுவான் எனது கூறு 
மருவலர்க் கசனி யன்ன வாலியும் மகனும் என்ன 
இரவிமற் றெனது கூறங் கவர்க்கிளை யவன் என்று ஓத 
அரியும்மற் றெனது கூறு நீலன் என் றறைந்திட் டானால் 


வாயுமற் றெனது கூறு மாருதி எனலும் மற்றோர் 
காயும்மற் கடங்க ளாகிக் காசினி அதனின் மீது 
போயிடத் துணிந்தோ மென்றார் புராரிமற் றியானும் காற்றின் 
சேயெனப் புகன்றான் மற்றைத் திசையுளோர்க்கவதி யுண்டோ (திருவவதாரப்படலம் 23 , 24 , 25 ) 

பெருமாள் திரு அவதாரம் 

தெரிவையர் மூவரும் சிறிதுநாள் செலீ 
மருவிய வயாவொடு வருத்தம் துய்த்தபின் 
பொருவரு திருமுகம் அன்றி பொற்பு நீடு 
உருவமும் மதியமொடு ஒப்பத் தோன்றினார் ( திருவவதாரப்படலம் 19 ) 
ஒருபகல் உலகெலாம் உதரத்துள் பொதிந்து 
அருமறைக் குணர்வரும் அவனை அஞ்சனக் 
கருமுகிற் கொழுந்தெழில் காட்டும் சோதியை 
திருவுறப் பயந்தனள் திறங்கொள் கோசலை 


ஆசையும் விசும்பும் நின்று அமரர் ஆர்த்தெழ 
வாசவன் முதலினோர் வணங்கி வாழ்த்துறப் 
பூசமும் மீனமும் பொலிய நல்கினார் 
மாசறு கேகயன் மாது மைந்தனை 


தளையவிழ் தருவிடைச் சயில் கோபனும் 
கிளையும் அந்தரமிசைக் கெழுமி ஆர்ப்புற 
அளைபுகும் அரவினோடு அலவன் வாழ்வுற 
இளையவற் பயந்தனள் இளைய மென்கொடி 


படங்கிளர் பல்தலைப் பாந்தள் ஏந்துபார் 
நடங்கிளர் தரமறை நனிமகிழ்ந்திட 
மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட 
விடங்கிளர் விழியினாள் மீட்டும் ஈன்றனள் 
ஆடினர் அரம்பையர் அமுத ஏழ் இசை 
பாடினர் கின்னரர் துவைத்த பல் இயம் 
வீடினர் அரக்கர் என்று உவக்கும் விம்மலால் 
ஓடினர் உலாவினர் உம்பர் முற்றுமே (திருவவதாரப்படலம் 101 -- 105 ) 

கௌசிகர் ஸ்ரீ ராமரைக் குறித்துக் கேட்குதல் 
 
நிலம்செய்தவம் என்றுணரின் அன்று நெடி யோய்என் 
நலம் செய்வினை உண்டெனினும் அன்று நகர் நீயான் 
வலம்செய்து வணங்கஎளிவந்த இது முந்து என் 
குலம்செய்தவம் என்றினிது கூறமுனி கூறும் 

என் அனைய முனிவரரும் இமையவரும் இடையூறுஒன்று உடைய ரானால் 
பன்னகமும் நகு வெள்ளிப் பனிவரையும் பாற்கடலும் பதும பீடத்து 
அந்நகரும் கற்பகநாட் டணிகவரும் மணிமாட அயோத்தி என்னும் 
பொன்னகரும் அல்லாது புகல்உண்டோ இகல் கடந்த புலவு வேலோய் , ( கையடைப் படலம் 7 , 8 ) 


தருவனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு இடையூறாத் தவம்செய் வோர்கள் 
வெகுவரச்சென் றடைகாம வெகுளியென 
நிருதர் இடை விலக்கா வண்ணம் 
செருமுகத்துக் காத்தியென நின்சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் 
ஒருவனைத்தந் திடுதியென உயிர் இரக்கும் 
கொடுங்கூற்றின் உளையச் சொன்னான் ( கையடைப்படலம் 11 ) 


சக்கரவர்த்தி அதை மறுத்தல் 
 

எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பியசொல் மருமத்தின் எறிவேல் பாய்ந்த 
புண்ணிலாம் பெரும்புழையில் கனல் நுழைந்தா லெனச்செவியில் புகுத லோடும் 
உண்ணிலா விய துயரம் பிடித்துந்த ஆருயிர் நின்று ஊச லாடக் 
கண்ணிழந்தான் பெற்றிழந்தான் எனவுழந்தான் கடுந்துயரம் காவ வேலான் தொடையூற்றின் தேன்துளிக்கும் நறுந்தாரான் 
ஒருவண்ணம் துயரம் நீங்கி  படையூற்றம் இலன் சிறியன் இவன்பெரியோய் பணி இதுவேல் பனிநீர்க் கங்கை புடையூற்றும் சடையானும் நான்முகனும் புரந்தரனும் புகுந்து செய்யும் 
இடையூற்றுக் கிடையூறாய் யான் காப்பென் 
பெருவேள்விக்கு எழுக என்றான் ( கையடைப்படலம் 13 ) 

வதிஷ்டர் தகவுரைத்தல் 

கறுத்த மாமுனி கருத்தை உன்னி நீ 
பொறுத்தி என்றவற் புகன்று நின் மகற்கு 
உறுத்த லாகலா உறுதி எய்தும்நாள் 
மறுத்தி யோஎனா வசிட்டன் கூறுவான் 


பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம்போய் 
மொய்கொள் வேலைவாய் முடுகும் ஆறுபோல் 
ஐய நின்மகற்கு அளவில் விஞ்சைவந்து 
எய்து காலமின்று எதிர்ந்தது என்னவே ( கையடைப்படலம் 15 , 16 ) 


அன்ன தம்பியும் தானும் ஐயனாம் 
மன்னன் இன்னுயிர் வழிக்கொண் டாலெனச் 
சொன்ன மாதவன் தொடர்ந்து சாயைபோல் 
பொன்னின் மாநகர்ப் புரிசை நீங்கினான் (கையடைப்படலம் 21 ) 


களசிகர் ஸ்ரீ ராமருக்கு நீதி சொல்லுதல் 


சிலம்புகள் சிலம்பிடை செறித்தகழ லோடும் 
நிலம்புக மிதித்தனள் நெளிந்த குழிவேலைச் 
சலம்புக அனல் தறுகண் அந்தகனும் அஞ்சிப் 
பிலம்புக நிலக்கிரிகள் பின் தொடர வந்தாள் 


இறைக்கடை துடித்தபுரு வத்தள் எயி றென்னும் 
பிறைக்கடை பிறக்கிட மடித்தபில வாயாள் 
மறைக்கடை அரக்கிவட வைக்கனல் இரண்டாய் 
நிறைக்கடல் முளைத்தென நெருப்பெழ விழித்தாள் ( தாடகைவதைப்படலம் 29 , 30 ) 

மேகமவை பற்றுபு பிழிந்தனள் விழுங்கா 
மாகவரை இற்றுக உதைத்தனள் மதித்திண் 
பாகமெனும் முற்றெயிறு அதுக்கி அயில்பற்றா 
ஆகமுற உய்த்தெறிவென் என்றெதிர் அழன்றாள் 

அண்ணல்முனி வற்கது கருத்தெனினும் ஆவி 
உண் என வடிக்கணை தொடுக்கிலன் உயிர்க்கே 
துண்ணெனும் வினைத்தொழில் தொடங்கியுள ளேனும் 
பெண்என மனத்திடை பெருந்தகை நினைத்தான் ( தாடகை வதைப்படலம் 34 , 35 ) 


தீது என்று உள்ளவை யாவும் செய்து எமைக் 
கோதென்று உண்டிலன் இத்துணையே குறை 
யாதென்று எண்ணுவது இக்கொடி யாளையும் 
மாது என்று எண்ணுவ தோமணில் ணினாய் ( தாடகைவதைப்படலம் 37 ) 


மன்னும் பல்லுயிர் வாரிதன் வாய்ப் பெய்து 
தின்னும் புன்மையின் தீமையது ஏது ஐய 
பின்னும் தாழ்குழல் பேதமைப் பெண் இவள் 
என்னும் தன்மை எளிமையின் பாலதே 


ஈறில் நல்லறம் பார்த்திசைத் தேன் இவட் 
சீறி நின்றிது செப்புகின் றேன் அலென் 
ஆறி நின்றது அருளன்று அரக்கியைக் 
கோறி என்று எதிர் அந்தணன் கூறினான் ( தாடகைவதைப்படலம் 42 , 43 ) 

தாடகை முதலானவர்கள் வதம்  


மாலும் அக்கணம் வாளியைத் தொட்டதும் 
கோல வில்கால் குனித்ததும் கண்டிலர் 
காலனைப் பறித்து அக்கடி யாள்விட்ட 
சூலம் அற்றுவீழ் துண்டங்கள் கண்டனர் 


அல்லின் ஆயது அனைய நிறத்தவன் 
சொல்லும் மாத்திரை யின் கடல் தூர்ப்பன 
கல்லின் மாரியைக் கைவகுத் தாள் அவை 
வில்லின் மாரியின் வீரன் விலக்கினான் 


சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசரம் கரிய செம்மல் 
அல்லொக்கும் நிறத்தி னாள்மேல் விடுத்தலும் வயிரக் குன்றக் 
கல்லொக்கும் நெஞ்சில் தாங்காது அப்புறம் கழன்று கல்லாப் 
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற் றன்றே 
பொன்னெடும் குன்றம் அன்னாள் புகர்முகப் பகழி என்னும் 
மன்நெடுங் கால வன்காற்று அடித்தலும் இடித்து வானில் 
கல்நெடு மாரி பெய்யக் கடையுகத் தெழுந்த மேகம் 
மின்னொடும் அசனி யோடும் வீழ்வதே போல வீழ்ந்தாள் 

( தாடகை .. வதைப் படலம் 47-50 ) 
திருமகள் நாயகன் தெய்ல வாளிதான் 
வருவரு தாடகை பயந்த வீரர்கள் 
இருவரில் ஒருவனைக் கடலில் இட்டது அங்கு 
ஒருவனை அந்தக புரத்தின் உய்த்ததே ( வேள்விப்படலம் 41 ) 


அகலிகை சாபவிமோசனமும் , சரித்திரமும் 


கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல் துகள் கதுவ 
உண்ட பேதைமை மயக்கற வேறுபட் டுருவம் 
கொண்டு மெய்உணர் பவன் கழல் கூடியது ஒப்பப் 
பண்டை வண்ணமாய் நின்றனள் மாமுனி பணிப்பான் 


மாயிரு விசும்பின் கங்கை மண்மிசை கொணர்ந்தோன் மைந்த 
மேயின உவகை யோடு மின் என ஒதுங்கி நின்றாள் 
தீவினை நயந்து செய்த தேவர்கோன் தனக்குச் செங்கண் 
ஆயிரம் அளித்தோன் பன்னி அகலிகை ஆகும் எள்றான் ( அகலிகைப்படலம் 14 , 15 ) 


தையலாள் நயன வேலும் மன்மதன் சரமும் பாய 
உய்யலாம் உறுதிநாடி உழல்பவன் ஒருநாள் ற்ற 
மையலால் அறிவு நீங்கி மாமுனிக்கு அற்றம் செய்து 
பொய்யிலா உள்ளத் தான் தன் உருவமே கொண்டு புக்கான் 


புக்கவ ளோடும் காமப் புதுமண மதுவின் தேறல் 
ஒக்கவுண் டிருந்த லோடும் உணர்ந்தனள் உணர்ந்த பின்னும் 
தக்கதன் றென்ன ஓராள் தாழ்ந்தனள் இருப்பத் தாழா 
முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும் முடுகி வந்தான் 


சரந்தரு சாபமல்லால் தடுப்பரும் சாபம் வல்ல 
வரந்தரு முனிவன் எய்த வருதலும் வெருவி மாயா 
நிரந்தரும் உலகில் நிற்கும் நெடும்பழி பூண்டாள் நின்றா 
புரந்தரன் நடுங்கி ஆங்கோர் பூசையாப் போக லுற்றாள் 


தீவிழி சிந்த நோக்கிச் செய்ததை உணர்ந்து செய்யத் 
தூயவன் அவனை நின்கைச் சுடுசரம் அனைய சொல்லால் 
ஆயிரம் மாதர்க்குள்ள அறிகுறி உனக்குண் டாகஎன்று 
ஏயினன் அவையெ லாம் வந்து இயைந்தன இமைப்பின் முன்னம் 


எல்லையில் நாணம் எய்தி யாவர்க்கும் நகைவந் தெய்தப் 
புல்லிய பழியி னோடும் புரந்தரன் போய பின்றை 
மெல்லிய லாளை நோக்கி விலைமகள் அனைய நீயும் 
கல் இயல் ஆதி என்றான் கருங்கல்லாய் மருங்கு வீழ்வாள் 


பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே , அன்பால் 
அழல் தரு கடவுள் அன்னாய் முடிவிதற்கு அருள்க என்ன 
தழைத்துவண் டிமிருந் தண்தார் தசரத ராமன் என்பான் 
கழல்துகள் கதுவ இந்தக் கல் உருத் தவிர்தி என் என்றான் 


இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனியிந்த உலகுக் கெல்லாம் 
உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவ துண்டோ 
மைவண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன் 
கைவண்ணம் அங்குக் கண்டேன் கால்வண்ணம் இங்குக் கண்டேன் ( அகலிகைப் படலம் 18 - 23 ) 


ஸ்ரீ ராமர் சீதையைக் கண்டு ஐயுறல் 


கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவையெல்லாம் 
வெல்லும் வெல்லும் என்ன மதர்க்கும் விழிகொண்டாள் 
சொல்லும் தன்மைத் தன்றது குன்றும் சுவரும்திண் 
கல்லும் புல்லும் கண்டுரு கப்பெண் கனிநின்றாள் 


வெங்களி விழிக்கொரு விழவும் ஆயவர் 
கண்களின் காணவே களிப்பு நல்கலால் 
மங்கையர்க்கு இனியதோர் மருந்தும் ஆயவள் 
எங்கள் நா யகற்கு இனி யாவ தாங்கொலோ 


இழைகளும் குழைகளும் இன்ன முன்னமே 
மழைபொரு கண்ணினை மடந்தை மாரொடும் 
பழகிய எனினுமிப் பாவை தோன்றலால் 
அழகெனும் அணியும்ஓர் அழகு பெற்றதே 


எண்ணரு நலத்தினாள் இணைய நின்றுழிக் 
கண்ணொடு கண்ணிணைக் கவ்வி ஒன்றையொன்று 
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட 
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் 


நோக்கிய நோக்கெனும் நுதிகொள் வேல் இணை 
ஆக்கிய மதுகையான் தோளில் ஆழ்ந்தன 
வீக்கிய கனைகழல் வீரன் செங்கணும் 
தாக்கணங் கனையவள் தனத்தில் தைத்தவே 

பருகிய நோக்கெனும் பாசத் தாற்பிணித்து 
ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால் 
வரிசிலை அண்ணலும் வாட்சண் நங்கையும் 
இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார் 


மருங்கிலா நங்கையும் வசையில் ஐயனும் 
ஒருங்கிய இரண்டுடற்கு உயிர் ஒன் றாயினார் 
கருங்கடற் பள்ளியில் கலவி நீங்கிப்போய்ப் 
பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ ( மிதிலைக்காட்சிப் படலம் 32-38 ) 


கௌசிகர் ஸ்ரீ ராமர் வரலாறு சொல்லுதல் 


அயன் புதல்வன் தயரதனை அறியாதார் இல்லை அவன் 
பயந்தகுலக் குமரரிவர் தமக்குள்ள பரிசெல்லாம் 
நயந்துரைத்துக் கரையேறல் நான்முகற்கும் அரிதாம் , பல் 
இயந்து வைத்த கடைத்தலையாய் யானறிந்த படி கேளாய் 


துனியின்றி உயிர்களிப்பச் சுடராழிப் படைவெய்யோன் 
பனிவென்ற படியென்ன பகைவென்று படிகாப்போன் 
தனுவின்றித் துணையில்லான் தருமத்தின் கவசத்தான் 
மனுவென்ற நீதியான் மகவின்றி வருந்துவான் ( வரலாற்றுப்படம் 15-16 ) 


காதலரைத் தரும்வேள்விக்கு உரியவெலாம் கடிதமைப்ப 
மா தவரிற் பெரியோனும் மாமகத்தை முற்றுவித்தான் 
சோதிமணிப் பொற்கலத்துச் சுதையனைய வெண்சோறுஓர் 
பூதகணத் தரசேந்தி அனல் நின்றும் போந்ததால் 

பொன்னின் மணிப்பரிகலத்தில் புறப்பட்ட இன்னமுதைப் 
பன்னுமறைப் பொருளணர்ந்த பெரியோன் றன் பணியினால் 
தன்னனைய நிறைகுணத்துத் தசரதனும் வரன்முறையால் 
நன் னுதலார் மூவருக்கும் நாலுகூறு இட்டு அளித்தான் 


கன் விரிந்திடுதீ வினைசெய்த வெவ்விய தீ வினையாலும் 
அருங்கடையில் மறையறைந்த அறஞ்செய்த தவத்தாலும் 
இருங்கடகக் கரதலத்து இவ் எழுதரிய திருமேனிக் 
கருங்கடலைச் , செங்கனிவாய்க் கவுசலை என் பாள் பயந்தாள் 


தள்ளரிய பெருநீதித் தனியாறு புகமண்டும் 
பள்ளமெனும் தகையானை , பரதன் எனும் பெயரானை 
எள்ளரிய குணத்தாலும் எழிலாலும் இவ்விருந்த 
வள்ளலையே அனையானை கேகயர்கோன் மகள் பயந்தாள் 


அருவலிய திறலினராய் அறங்கெடுக்கும் விறலரக்கர் 
வெருவருதிண் திறலார்கள் வில்லேந்தி வரும் மேருப் 
பருவரையும் நெடுவெள்ளிப் பருப்பதமும் போல்வார்கள் 
இருவரையும் இவ்விருவர்க்கு இளையாளும் ஈன்றெடுத்தாள் ( வரலாற்றுப்படலம் 20-4- ) 


ஈங்கிவரால் என் வேள்விக்கு இடையூறு கடிதியற்றும் 
தீங்குடைய கொடியோரைக் கொல்விக்கும் சிந்தையனாய்ப் 
பூங்கழலார்க் கொண்டுபோய் வனம்புக்கேன் புகாமுன்னம் 
தாங்கரிய பேராற்றல் தாடகையே தலைப்பட்டாள் 

அலைஉருவக் கடல் உருவத்து ஆண்தகைதன் நீண்டுயர்ந்த 
நிலைஉருவப் புயவலியை நீ உருவ நோக்கையா 
உலைஉருவக் கனல் உமிழ்கண் தாடகைதன் உரம் உருவி 
மலைஉருவி மரம்உருவி மண் உருவிற்று ஒருவாளி ( வரலாற்றுப்படலம் 27 , 28 ) 


கோதமன்றன் பன்னிக்கு முன்னையுருக் கொடுத்ததிவன் 
போது வென்ற தெனப்பொலிந்த பொலங்கழற்காற் பொடிகண்டாய் 
காதல் என் றன் உயிர்மேலும் இக்கரியோன் பால்கண்டால் 
ஈதிவன்றன் வரலாறும் புயவலியும் எனவுரைத்தான் ( ஆற்றுப்படலம் 31 ) 

நினைந்தமுனி பகர்ந்தவெலாம் நெறியுன்னி அருந்தவனும் 
புனைந்தசடை முடிதுளக்கிப் போரேற்றின் முகம் பார்த்தான் 
வனைந்தனைய திருமேனி வள்ளலும் அம் மாதவத்தோன் 
நினைந்தவெலாம் நினைந்தந்த நெடுஞ்சிலையை நோக்கினான் (கார் முகப் படலம்  )


ஸ்ரீ ராமர் வில் வளைத்தல் 

விருத்தம் - 15 
உறுவலி யானையை ஒத்த மேனியர் 
செறிமயிர்க் கல்எனத் திரண்ட தோளினர் 
அறுபதி னாயிரர் அளவில் ஆற்றலர் 
தறிமடுத் திடையிடைத் தண்டில் தாங்கினார் 


நெடுநில மகள் முதுகு ஆற்ற நின்றுயர் 
தடநிமிர் வடவரை தானும் நாண்உற 
இடமிலை உலகென வந்தது எங்கணும் 
கடல் புரை திருநகர் இரைத்துக் காணவே ( கார்முகப் படலம் 3,4 ) 


தோகையர் இன்னன சொல்லிட நல்லோர் 
ஓகை விளம்பிட உம்பர் உவப்ப 
மாக மடங்கலும் மால்விடையும் , பொன் 
நாகமும் நாகமும் நாண நடந்தான் 


ஆடக மால்வரை அன்னது தன்னை 
தேடரு மாமணி சீதையெ னும்பொன் 
சூடக வால்வளை சூட்டிட நீட்டும் 
ஏடவிழ் மாலையிது என்ன எடுத்தான் 


தடுத்திமை யாமல் இருந்தவர் , தாளில் 
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார் 
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால் 
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார் ( கார்முகப் படலம் 32-34 ) 


பூமழை சொரிந்தார் விண்ணோர் பொன்மழை பொழிந்த மேகம் 
பாமமா கடல்கள் எல்லாம் பன்மணி தூவி ஆர்த்த 
கோமுனிக் கணங்கள் எல்லாம் கூறின ஆசி கொற்ற 
நாமவேல் சனகற்கு இன்று நல்வினை பயந்த தென்னா ( கார்முகப் படலம் 36 ) 


தயரதன் புதல்வர் என்பார் தா மரைக் கண்ணன் என்பார் 
புயலிவன் மேனி என்பார் பூவையே பொருவும் என்பார் 
மயல் உடைத்து உலகம் என்பார் மானிடன் அல்லன் என்பார் 
கயல்பொரு கடலுள் வைகும் கடவுளே காணும் என்பார் 


நம்பியைக் காண நங்னகக்கு ஆயிரம் நயனம் வேண்டும் 
கொம்பினைக் காணுந் தோறும் குரிசிற்கும் அன்ன தேயாம் 
தம்பியைக் காண்மின் என்பார் தவமுடைத்து உலகம் என்பார் 
இம்பர் இந் நகரில் தந்த முனிவனை இறைஞ்சும் என்பார் ( கார்முகப் படலம் 42 , 43 ) 


மிதிலைக்குச் சக்கரவர்த்தியின் எழுச்சி  


கூறிய தூதரும் கொணர்ந்த ஓலையை 
ஈறில்வண் புகழினாய் இது அது என்றனர் 
வேறொரு புலமகன் விரும்பி வாங்கினான் 
மாறதிர் கழலினான் வாசி என்றனன் ( எழுச்சிப் படலம் 3 ) 


என்றுரைத்து எதிர் எதிர் இடைவி டாதுநேர் 
துன்றிய கனைகழல் தூதர் கொள்கஎனா 
பொன்திணி கலங்களும் தூசும் போக்கினான் 
குன்றென உயரிய குவவுத் தோளினான் ( எழுச்சிப் படலம் 5 )


விடை பொரு நடையினான் சேனை வெள்ளம் ஓர் 
இடையிலை உலகினில் என்ன ஈண்டிய 
கடையுக முடிவினில் எவையும் கால்படப் 
புடைபெயர் கடலென எழுந்து போயதே ( எழுச்சிப் படலம் 9 ) 


உழுந்திட இடமிலை உலகம் எங்கணும் 
அழுந்திய உயிர்க்கெலாம் அருட்கொம் பாயினான் 
எழுந்திலன் எழுந்துஇடைப் படரும் சேனையின் 
கொழுந்து போய்க் கொடி மதில் மிதிலை கூடிற்றே ( எழுச்சிப் படலம் 23 ) 
பொய்கையம் கமலக் கானில் பொலிவதோர் அன்னம் என்ன 
கைகயர் வேந்தன் பாவை கணிகையர் ஈட்டம் பொங்கி 
ஐயிரு நூறு சூழ ஆய்மணிச் சிவிகை தன்மேல் 
தெய்வமங் கையரும் நாணத் தேன் திசை முரலப் போனாள் 

விரிமணித் தார்கள் பூண்ட வேசரி வெரிநில் தோன்றும் 
அரிமலர்த் தடங்கண் நல்லார் ஆயிரத் திரட்டி சூழ 
குருமணிச் சிவிகை தன்மேல் கொண்டலின் மின் இது என்ன 
இருவரைப் பயந்த நங்கை யாழிசை முரலப் போனாள் 


வெள்ளெயிற் றிலவச் செவ்வாய் முகத்தைவெண் மதியம் என்று 
கொள்ளையின் திரள் வான்மீன்கள் குழுமிய அனைய ஊர்தி 
தெள்ளரிப் பாண்டிற் பாணிச் செயிரியர் இசைத்தேன்சிந்த 
வள்ளலைப் பயந்த நங்கை வானவர் வணங்கப் போனாள் ( எழுச்சிப்படலம் 63 - 65 ) 


பொற்றொடி மகளிர் ஊரும் பொலன் கொள் தார்ப் புரவி வெள்ளம் 
சுற்றுறு கமலம் பூத்த தொடுகடல் திரையின் செல்ல 
கொற்றவேல் மன்னர் செங்கைப் பங்கயக் குழாங்கள் கூம்ப 
மற்றொரு கதிரோன் என்ன மணிநெடுந் தேரிற் போனான் ( எழுச்சிப்பட லம் 75 ) 


ஸ்ரீராமர் பவனிவருதல் --விருத்தம் - 17 -- திபதை - 1 

மானினம் வருவ போன்றும் மயிலினம் திரிவ போன்றும் 
மீனினம் மிளிர வானில் மின்னினம் மிடைவ போன்றும் 
தேனினம் சிலம்பி ஆர்ப்பச் சிலம்பினம் புலம்பி ஏங்கப் 
பூநனை கூந்தல் மாதர் பொம்மெனப் புகுந்து மொய்த்தார் 

விரிந்து வீழ் கூந்தல் பாரார் மேகலை அற்றம் நோக்கார் 
சுரிந்தபூந் துகில்கள் தாங்கார் இடைதடுமாறத் தாழார் 
நெருங்கினர் நெருங்கிப் புக்கு நீங்குமின் நீங்குமின் என்று 
அருங்கலம் அனைய மாதர் தேன் நுகர் அளியின் மொய்த்தார் (உலாவியற்படலம் 1 , 2 ) 

வீதிவாய்ச் செலகின் றான் போல் விழித்திமையாது நின்ற 
மாதரார் கண்க ளூடே வாவும்மான் தேரிற் செல்வான் 
தூது பெற்றிலள் இன்னுயிர் சோர்கின்றாள் 
யாதினும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்குல் கண்ணன் என்றே 
ஓதிய பெயர்க்குத் தானே உறுபொருள் உணர்த்தி விட்டான் (உலாவியற்படலம் 6 ) 

சொன்னலம் கடந்தகாமச் சுவையை ஓர் உருவமாக்கி 
ன்னலம் தெரியவல்லார் எழுதியது என்னநின்றாள் 
பொன்னையும் பொருவும் நீராள் புனைந்தன எல்லாம்போகத் 
தன்னையும் தாங்கலாதாள் துகில் ஒன்றும் தாங்கிநின்றாள் (உலாவியற்படலம் 12 ) 

மைக்கருங் கூந்தற் செவ்வாய் வாள் நுதல் ஒருத்தி உள்ளம் 
நெக்கனள் உருகு கின்றாள் நெஞ்சிடை வஞ்சன்வந்து 
புக்கனன் போகாவண்ணம் கண்ணெனும் புலம்கொள் வாயில் 
சிக்கென அடைத்தேன் தோழி சேருதும் அமளி என்றாள் ( உலாவியற்படலம் 14 ) 

தோள்கண்டார் தோளேகண்டார் தொடுகழற்கமலம் அன்ன 
தாள்கண்டார் தாளேகண்டார் தடக்கை கண்டாரும் அஃதே 
வாள்கொண்ட கண்ணார்யாரே வடிவினை முடியக் கண்டார் 
ஊழ்கொண்ட சமயத் தன்னான் உருவுகண் டாரை ஒத்தார் (உலாவியற் படலம் 19 ) 

மாது ஒருத்தி மனத்தினை யல்லதோர் 
போதரிக் கண்பொலன் குழையப் பூண்முலைச் 
சீதை எத்தவம் செய்தனளோ என்றாள் (உலாவியற்படலம் 23 ) 

கனக நூபுரம் கைவளை யோடு உக 
மனம் நெகும்படி வாடி ஓர் வாணுதல் 
அனகன் இந்நகர் எய்தியது ஆதியில் 
சனகன் செய்த தவப்பயனால் என்றாள் ( உலாவியற் படலம் 26 ) 

சீதை சபா மண்டபத்துக்கு வருதல் -விருத்தம் - 18 -தரு - 16 

சிந்தொடு குறளும் கூனும் சிலதியர் குழாமும் தெற்றி 
வந்தடி வணங்கிச் சுற்ற மணியணி விதான நீழல் 
இந்துவின் கொழுந்து விண்மீன் இனத்தொடும் வருவ தென்ன 
நந்தலில் விளக்கம் அன்ன நங்கையும் நடக்க லுற்றாள் ( கோலங்காண் படலம் 23 ) 

தொழுந்தகைய மென்னடை தொலைந்துகளி அன்னம் 
எழுந்திடை விழுந்து அயர்வது என்ன அயலெங்கும் 
கொழுந்துடைய சாமரை குலாவ ஓர்கலாபம் 
வழங்கு நிழல் மின்னவரும் மஞ்ஞைஎன வந்தாள் ( கோலங்காண் படலம் 25 ) 

பொன்னின் ஒளி பூவின்வெறி சாந்துபொதி சீதம் 
மின்னின் எழில் அன்னவள் தன் மேனியது மான 
அன்னமும் அரம்பையரும் ஆரமிழ்தம் நாண 
மன்னவை இருந்தமணி மண்டபம் அடைந்தாள் (கோலங்காண் படலம் 28 ) 

ஸ்ரீராமர் மணக்கோலங் கொள்ளுதல் விருத்தம் - 19 - தரு - 17 

அழிவருந் தவத்தினோடு அறத்தை ஆக்குவான் 
ஒழிவருங் கருணைஓர் உருவு கொண்டென 
எழுதரு வடிவுகொண்டு இருண்ட மேகத்தைத் 
தழுவிய நிலவெனக் கலவை சாத்தியே 

மங்கல முழுநிலா மலர்ந்த திங்களைப் 
பொங்கிருங் கருங்கடல் பூத்த தாம் எனச் 
செங்கிடைச் சிகழிகை செம்பொன் மாலையும் 
தொங்கலும் துயல்வரச் சுழியம் சூடியே 

ஏதமில் இருகுழை இரவு நன்பகல் 
காதல் கண் டுணர்ந்தன கதிரும் திங்களும் 
சீதைதன் கருத்தினைச்செவியின் உள்ளுறத் 
தூதுவத் துரைப்பன போன்று தோன்றவே ( கடிமணப் படலம் 50-52 ) 

பந்திசெய் வயிரங்கள் பொறியின் பாடுற 
அந்தமில் சுடர்மணி அழலின் தோன்றலாம் 
சுந்தரத் தோளணி வலயம் தொல்லைநாள் 
மந்தரஞ் சுற்றிய அரவை மானுமே ( கடிமணப் படலம் 55 ) 

முகைவிரி சுடரொளி முத்தின் பத்திவான் 
தொகைவிரி பட்டிகைச் சுடரும் சுற்றிடத் 
தகைஉடை வாளெனும் தயங்கு வெய்யவன் 
நகை இன வெயிலென தொங்கல் நாற்றியே ( கடிமணப் படலம் 64 ) 

கலியாணச் சடங்கு செய்தல் விருத்தம் - 20 --- திபதை - 2 

மன்னவர் வருவாரும் மறையவர் நிறைவாரும் 
இன்னிசை மணியாழின் இசைமது நுகர்வாரும் 
சென்னியர் திரிவாரும் விறலியர் செறிவாரும் 
கன்னலின் மணவேலைக் கடிகைகள் தெரிவாரும் 
கணிகையர் தொகுவாரும் 

கலைபல பயில்வாரும் 
பணியணி இனமுத்தம் பல இரு நிலமன்னர் 
அணிநெடு முடியொன்று ஒன்று அறைதலின் உரும் அம்பொன் 
மணிமலை எனமன்ன வாயிலின் மிடை வாரும் ( கடிமணப்படலம் 3!, 32 ) 

தேர்மிசை வருவாரும் சிவிகையில் வருவாரும் 
ஊர்தியில் வருவாரும் ஒளிமணி நிரை ஓடைக் 
கார்மிசை வருவாரும் கரிணியில் 
வருவாரும் 
பார்மிசை வருவாரும் பண்டியில் வருவாரும் ( கடிமணப்படலம் 35 } 

ந்திரன் சசியொடு எய்தி னான் இளஞ் 
சந்திர மௌலியும் தைய லாளொடும் 
வந்தனன் மலரயன் வாக்கி னாளுடன் 
அந்தரம் புகுந்தனன் அழகு காணவே 
நீந்தருங் கடலென நிறைந்த வேதியர் 
தோய்ந்த நூல் மார் பினர் சுற்றத் , தொல்நெறி 
வாய்ந்த நல் வேள்விக்கு வசிட்டன் மையற 
ஏய்ந்தன கலப்பையொடு இனிதின் எய்தினான் 

தண்டிலம் விரித்தனன் தருப்பை சாத்தினன் 
மண்டலம் விதிமுறை வகுத்து மென்மலர் 
கொண்டுநெய் சொரிந்து எரி குமும மூட்டினான் 
பண்டுள மறைநெறி பரவச் செய்தனன் 

மன்றலின் வந்து மணத்தவிசு ஏறி 
வென்றி நெடுந்தகை வீரனும் ஆர்வத்து 
இன் துணை அன்னமும் எய்தி யிருந்தார் 
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார் 

கோமகன் முன் சன கன்குளிர் நல்நீர் 
பூமக ளும் பொரு ளும் என நீ என் 
மாமகள் தன்னொடும் மன்னுதி என்னா 
தாமரை யன்ன தடக்கையின் ஈந்தான் (கடிமணப்படலம் 82-86 ) 

வெய்ய கனற்றலை வீரனும் அந்நாள் 
மையறு மந்திரம் மும்மை வழங்கா 
நெய்யமை யாவுதி யாவையும் நேர்ந்தே 
தையல் தளிர்க்கை தடக்கை பிடித்தான் ( கடிமணப்படலம் 89 ) 

ஸ்ரீராமர் அக்கினி வலம் வருதல் முதலியவைகள் --விருத்தம் - 21 

இடம்படு தோளவ னோடு இயைய வேள்வி 
தொடங்கிய வெங்கனல் சூழ்வரு போதின் 
மடம்படு சிந்தையள் மாறு பிறப்பின் 
உடம்புஉயி ரைத்தொடர் கின்றதை ஒத்தாள் 

வலங்கொடு திடை வணங்கினர் வந்து 
பொலம்பொரி செய்வன செய்பொருள் முற்றி 
இலங்கொளி அம்மி மிதித்து எதிர் நின்ற 
கலங்கலில் கற்பின் அருந்ததி கண்டார் 

மற்றுள செய்வன செய்து மகிழ்ந்தார் 
முற்றிய மாதவர் தாள்முடி சூடி 
கொற்ற வனைக்கழல் கும்பிடலோடும் 
பொற்றொடி யைக் கொடு நன்மனை புக்கான் ( கடிமணப்படலம் 90 - 92 ) 

சோபனம் பாடுதல் -விருத்தம் - 22 
 
அந்தணர் ஆசி அருங்கல மின்னார் 
தந்தபல் லாண்டிசை தார் முடி மன்னர் 
வந்தனை மாதவர் வாழ்த்தொலி யோடு 
முந்திய சங்கம் முழங்கின மாதோ ( கடிமணப்படலம் 87 

ஆர்த்தன பேரிகள் ஆர்த்தன சங்கம் 
ஆர்த்தன நான்மறை ஆர்த்தனர் வானோர் 
ஆர்த்தன பல்கலை ஆர்த்தன பல்லாண்டு 
ஆர்த்தன வண்டினம் ஆர்த்தன வேலை ( கடிமணப்படலம் 93 } 

ஸ்ரீராமருக்கும் பரசுராமருக்கும் சம்வாதம் -விருத்தம் - 23 திபதை - 3 

ற்றோடிய சிலையின் திறம் அறிவென் இனி யானுன் 
பொற்றோள்வலி நிலைசோதனை புரிவான் நசையுடையேன் 
செற்றோடிய திரள்தோள்உறு தினவும் சிறிதுடையேன் 
மற்றோர்பொருள் இலையிங்கு இது என் வரவு என்றனன் உரவோன் ( பரசுராமப் படலம் 18 

மானம்ம ணி முடிமன்னவன் நிலை சோர்வுறல் மதியான் 
தானந்நிலை உறுவான்று வினைஉண்டது தவிரான் 
ஆனம்உடை உமையண்ணலை அந்நாள் உறுசிலைதான் 
ஊனம்உளது அதன் மெய்ந்நெறி கேள் என்றுரை புரிவான் ( பரசுராமப்படலம் 25 

உலகெலாம் முனிவற் கீந்தேன் உறுபகை ஒடுக்கிப் போந்தேன் 
அலகில் மா தவங்கள் செய்து ஓர் அருவரை இருந்தேன் ஆண்டை 
சிலையை நீ இறுத்த ஓசை செவியுறச் சீறிவந்தேன் 
மலைகுவென் வல்லையாகின் வாங்குதி தனுவை என்றான் ( பரசுராமப்படலம் 34 ) 

பூதலத் தரசையெல்லாம் பொன்றுவித் தனை என்றாலும் 
வேதவித் தாயமேலோன் மைந்தன் நீ விரதம் பூண்டாய் 
ஆதலின் கொல்லல் ஆகாது அம்பு இது பிழைப்பதன்றால் 
யாதிதற்கு இலக்கம் ஆவது இயம்புதி விரைவின் என்றான் ( பரசுராமப்படலம் 36 ) 

எய்த அம்பு பழுது எய் திடாமல் என் 
செய்தவம் யாவையும் சிதைக்க வே எனக் 
கையவண் நெகிழ்தலும் கணையும் சென்றவன் 
மையறு தவமெலாம் வாரி மீண்டதே ( பரசுராமப்படலம் 39 ) 

ஸ்ரீராமர் அயோத்தியைச் சேர்தல் விருத்தம் -24 

எண்ணிய பொருளெலாம் இனிது முற்று 
மண்ணிய மணி நிற வண்ண வண் துழாய்க் 
கண்ணிய , யாவர்க்கும் களைக் 
புண்ணிய , விடையெனத் தொழுது போயினான் 
ணாகிய ( பரசுராமப்படலம் 40 ) 

பூமழை பொழிந்தனர் புகுந்த தேவருள் 
வாமவேல் வருணனை மான வெஞ்சிலை 
சேமி என் றுதவி தன் சேனை ஆர்த்தெழ 
நாமநீர் அயோதிமா நகரம் நண்ணினான் ( பரசுராமப்படலம் 45 ) 

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –




								
				

			

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading