கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்
வைதேஹீ ஸஹிதம் சுரத்ரும தலே ஹைமே மஹா மண்டபே,
மத்யே புஷ்பகமாஸனே மணி மயே வீராஸனே சுஸ்திதம்,
———-
ஸ்ரீ ராமர் மந்திரம்
ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்
ஆர்த்தா நாமார்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதநாசனம்
த்விஷதாம் காலதண்டம் தம் ராமச்சந்த்ரம் நமாம்யஹம்
ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:
———
ஏக ஸ்லோக ஸ்ரீ ராமாயணம்
ஆதௌ ராம தபோவனாதி கமனம், ஹத்வா ம்ருகம் காஞ்சனம்,
வைதேஹி ஹரணம், ஜடாயு மரணம், சுக்ரீவ சம்பாஷணம்,
வாலி நிக்ரஹணம், சமுத்ர தரணம், லங்காபுரீ தாஹனம்,
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம், சைதத்தி ராமாயணம்
ஆதியில் ராமன் காடு செல்லல்-பொன் மானைக் கொல்லல்-சீதா தேவி கடத்தல்–ஜடாயு இறத்தல்
சுக்ரீவன் சந்திப்பு-உரையாடல்-வாலீ அழிவு,-கடல் தாண்டல்-இலங்கை எரிப்பு-பின்னர் ராவணன், கும்பகர்ணன் மரணம்
இதுவே ஸ்ரீ ராமாயணம்
—————
ஏக ஸ்லோக ஸ்ரீ ராமாயணம்
ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவ தனுசா க்ருஹீத சீதா ஹஸ்த கரம்
அங்குல்யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேகி மனோகரம்
வானர தைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராம சந்த்ர பாலய மாம்.
—————
ஸ்ரீ ஸுந்தர காண்ட மஹிமை ஸ்லோகம் –
ஸுந்தரே ஸுந்தரோ ராம:
ஸுந்தரே ஸுந்தரி கதா
ஸுந்தரே ஸுந்தரி ஸீதா
ஸுந்தரே ஸுந்தரம் வநம்
ஸுந்தரே ஸுந்தரம் காவ்யம்
ஸுந்தரே ஸுந்தரோ கபி:
ஸுந்தரே ஸுந்தரம் மந்த்ரம்
ஸுந்தரே கிம் ந ஸுந்தரம்
————
ஒரே சுலோகத்தில் ஸ்ரீ சுந்தரகாண்டம்
யஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா
லங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான்
அக்ஷõதீன் விநிஹத்ய வீக்ஷ?ய தசகம் தக்த்வா புரீம் தாம்புள:
தீரணாப்தி கபிபிர்யுதோ யமநமத்தம் தாமசந்த்ரம்பஜே
க்ருத வீர்ய சுதோ ராஜ சகஸ்ர புஜ மண்டல:
அவதாரோ ஹரே சாக்ஷõத் பாவயேத் சகலம் மம
கார்த்த வீர்யாஜுனோ நாமா ராஜா பாஹு ஸகஸ்ரகவாத்
தஸ்ய ஸ்மரண மாத்ரேண நஷ்டத்ரவ்யம் ச லப்யதே
——————
ஸ்ரீ வால்மீகி ராமாயணம்
பால காண்டம் –77-சர்க்கங்கள் –2266-ஸ்லோகங்கள்
அயோத்யா காண்டம் –119-சர்க்கங்கள் –4185-ஸ்லோகங்கள்
ஆரண்ய காண்டம் –75-சர்க்கங்கள் –2441-ஸ்லோகங்கள்
கிஷ்கிந்தா காண்டம் –67-சர்க்கங்கள் –2453-ஸ்லோகங்கள்
ஸூ ந்தர காண்டம் –68-சர்க்கங்கள் –2807-ஸ்லோகங்கள்
யுத்த காண்டம் –128-சர்க்கங்கள் –5675-ஸ்லோகங்கள்
உத்தர காண்டம் -111 சர்க்கங்கள் -3373-ஸ்லோகங்கள்
மொத்தம் -645 சர்க்கங்கள் –23200 ஸ்லோகங்கள்
————
ஸ்ரீ ராமாயணத்தை இயற்றிய ஸ்ரீ வால்மீகி முனிவரின் அவதார தினம் வட இந்தியாவில் இந்த தினத்தை ‘பர்கத் திவாஸ்’
எனும் பெயரில் சிறப்புடன் கொண்டாடுவார்கள். ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திர தினத்தன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ வால்மீகியின் இயற்பெயர் ஸ்ரீ ரத்னாகர்.
ஸ்ரீ திருநீர்மலை திவ்வியதேசத்தை தரிசிக்க வந்த ஸ்ரீ வால்மீகி முனிவர், தனது காவிய நாயகனாம் ஸ்ரீராமனுக்கு
இந்தக் கோயிலில் சந்நிதி இல்லாதது கண்டு, தாமே ஸ்ரீராம லட்சுமண சீதாபிராட்டியுடன் சந்நிதி நிர்மாணித்து,
ஸ்ரீகல்யாண ராமர் என்று திருப்பெயரும் சூட்டினாராம்.
———–
ஸ்ரீ ராம பக்தி ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகம்
1-ஸ்ரீ ராம பட்டாபிஷேகம்
2-ராம பக்தி பட்டாபிஷேகம்
3-பக்தி ஸாம்ராஜ்யம் பட்டாபிஷேகம்
4-ஸ்ரீ ஸாம்ராஜ்யம் பட்டாபிஷேகம்
5-ராம ஸாம்ராஜ்யம் பட்டாபிஷேகம்
6-பக்தி ஸாம்ராஜ்யம் பட்டாபிஷேகம்
7-ஸாம்ராஜ்ய சாம்ராஜ்யம்பட்டாபிஷேகம்
ஏழு காண்ட அர்த்தங்களும் இதில் உண்டே
கைங்கர்ய ஸாம்ராஜ்யம் -ராம பக்தி பரதாழ்வான் -குடி கொண்ட கோயி -ராமானுஜர் ஸாம்ராஜ்யம் -அர்ச்சா ஸாம்ராஜ்யம் -மோஷ -பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்ய சாம்ராஜ்யம்
படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடி கொண்ட கோயிலில் இராமானுசன் குணம் கூறும்
கடி கொண்ட மா மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே – 37-
வால்மீகி கிரி சம்பூதா ராம சாகரகாமி நீ புனாதி புவனம் புண்யா இராமாயண மகா நதீ–என்று
வால்மீகி என்னும் மலையில் தோன்றி இராமபிரான் என்னும் கடலை நோக்கி செல்லும்
இராமாயணம் என்னும் புண்ணிய நதி உலகத்தை சுத்தம் ஆக்குகிறது
ஸ்லோக சார சமாகீர்ணம் சர்வ கல்லோல சங்குலம்-காண்டாக்ராஹா மகாமீனம் வந்தே இராமாயண ஆர்ணவம் -என்று
ஸ்லோகங்களின் சாரத்தினால் நிறைந்ததும்-சர்க்கம் என்கிற அலைகள் நெருங்கினதும்
காண்டம் ஆகிற முதலையாம் பெரு மீன்கள் உடையதுமான இராமயணமாம் கடலினை வந்திக்கிறேன்
ய பிபன்சத்தம் ராம சரிதாம் ருத சாகரம் அத்ருப்தச்தம் முனிம் வந்தே ப்ராசெதசம கல்மஷம் -என்று
எவர் எப்பொழுதும் ராம சரித்ரம் ஆகிய அமுதக் கடலை குடித்தும் -போதும் என்று திருப்திஅடையாது இருக்கிறாரோ –
குற்றம் அற்ற அந்த வால்மீகியை வணங்குகிறேன்
கோயில் இராமானுசன் என்பதற்கு
கோயிலில் -ஸ்ரீ ரங்கத்தில் -வாழும் இராமானுசன் என்று-பொருள் ஆகவுமாம் –
இதனால் அயோத்தியில் வாழ்ந்த இராமானுசனை -இளைய பெருமாளை -விலக்குகிறது
கோயில் அண்ணன் -என்று ஆண்டாள் அருளிச் செய்ததற்கு இது பொருந்தி இருப்பது காண்க –
அடி கண்டு கொண்டு உகந்து
இவ் ஆத்மா வஸ்துவும் எம்பெருமானார்க்கு சேஷப் பட்டது அன்றோ -என்று இதனுடைய
அடியாகிய சேஷத்வத்தை தர்சித்து அந்த சம்பந்தமே ஹேதுவாக விரும்பி அங்கீகரித்து -என்றபடி-
என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினர் –
உம்மை-எச்ச உம்மை-என்னையும் தங்களைப் போலே அவர்க்கு ஆள் ஆக்கினர் என்றபடி –
————
ஸ்ரீ அபூர்வ ராமாயணம் -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –
ஸ்ரீ ராமச்சந்திரன் –
கோநு அஸ்மின் சாம்ப்ரதம் லோகே குணவான் கச்ச வீர்யவான் –என்று தொடங்கி-
16-திருக் குணங்கள்-16-கலைகள் நிறைந்த பூர்ண சந்த்ரன் அன்றோ –
குண பரிவாஹ ஆத்மநாம் ஜென்மநாம் –ஸ்ரீ பராசர பட்டர் – திருக் குணங்களை வெளியிட்டு அருளவே ஸ்ரீ ராமாவதாரம் –
——————
1-கோ குணவான் —
கோ குணவான் –
வசீ வதான்ய –குணவான் ருஜு சுசி ஸமஸ்த கல்யாண குண அம்ருதோதி -ஸ்ரீ ஸ்லோக ரத்னம் —
குணவான் -விசேஷ ஸுசீல்ய குணவான் என்றவாறு –
சீல க ஏஷ தவ ஹந்த—அத்ர அவதீர்ய- நநு லோசன கோசரோ பூ — ஸ்ரீ அதிமானுஷ ஸ்தவம் -10-
ஆசூரா ப்ரக்ருதிகளுடைய கண்ணுக்கு இலக்கான கட்கிலி அன்றோ -பிறந்தவாறும் -என்று அனுசந்தித்தவாறே மோகிக்கப் பண்ணுமே –
நீராய் நிலனாய் –தாயாய் தந்தையாய் –அனைத்துமாயுள்ளவன் ஸ்ரீ ராமனாக திருவவதாரம் –
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி –
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்
தத்ர ராஜா குஹோ நாம ராமஸ்ய ஆத்ம ஸமஸ் சகா –தம் ஆர்த்தஸ் சம்பரிஷ்வஜ்ய குஹோ ராகவம் அப்ரவீத் —
உயிர்த் தோழன் -முன்பே பிடித்த தோழமை –
குகனோடும் ஐவரானோம் முன்பு பின் குன்று சூழ்வான்
மகனோடும் அறுவரானோம் எம்முழையன் பின் வந்த
அகனமர் காதல் ஐய நின்னோடும் எழுவரானோம்
புகலரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் உந்தை — ஸ்ரீ கம்பர்
எந்தை எண்ணாமல் ஸ்ரீ விபீஷண ஆழ்வானது தந்தையாகவே உந்தை –
இவ்வாறு சீல குணம் குகன் சுக்ரீவன் விபீஷணன் இடம் காட்டி அருளி –
மேலே -சபரி இடமும் –நிஷாதாநாம் நேதா கபி குலபதி காபி சபரி -ஸ்ரீ தயா சதகம் –
ரகு குல திலகராய் ஆசார பிரதானரான பெருமாள் –
சபர்யா பூஜிதஸ் சம்யக் ராமோ தசரதாத்மஜ -என்னும்படியாய் வேடுவிச்சியாய் வைத்தே குரு சுஸ்ரூஷையிலே பழுத்து-ஞானாதிகையாய்
தன் நாவுக்கு இனிதாய் இருந்த பல மூலாதிகள் எல்லாம் இங்குத்தைக்கு என்று சஞ்சயித்துக் கொண்டு
வரவு பார்த்து இருந்த ஸ்ரீ சபரி தன் ஆதார அனுகுணமாகத் தன் கையாலே அமுது செய்யப் பண்ண
அதி ஸந்துஷ்டாராய் அமுது செய்தார் -மா முனிகள் ஸ்ரீ ஸூக்திகள்
சம்யக் -என்பதே நாவுக்கு இனிதாய் இருந்த -என்றவாறு
குகனிடம் நஹி வர்த்தே ப்ரதிக்ரஹே -என்று மறுத்த பெருமாள்
இவள் இடம் அர்ச்சிதோஹம் த்வயா பக்த்யா -என்று உகந்து கூறி அவளுடைய சமர்ப்பணையை ஏற்றுக் கொண்டார் –
குரு ஸுஸ்ரூஷையிலே பழுத்த ஞானாதிகை யாகையாலே –
பகவதி பரத்வாஜே புக்திஸ் ததா சபரி க்ருஹே -இது என்ன நீர்மை -என்று
ஸ்ரீ சங்கல்ப சூர்யோதயத்தில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார் ஸ்ரீ தேசிகரும் –
கோயம் குண கதர கோடிகத கியான் வா கஸ்ய ஸ்துதே பதம் அஹோ பத கஸ்ய பூமி -என்று
திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை அரக்கன் -பாவையைப் பிரித்த பாவி வஞ்சனாக இருந்தும்
கச்ச அனுஜா நாமி –இன்று போய் நாளை வா என்றதும் இந்த சீல குணத்தைக் காட்டுமே –
சீலவத்தை யாகிறது அபிஷேக விக்னம் பிறந்தது என்று வெறுப்பு இன்றியே வனவாசோ மஹோதய என்று காடேறப் புறப்பட்டுப் போவது –
ரிஷிகள் பக்கலிலே சென்று தாழ நிற்பது
கிங்கரவ் சமுபஸ்திதவ்-என்பது
ஜென்ம விருத்தங்களில் குறைய நிற்கிறவர்களை உகந்த தோழன் நீ -என்பது
இப்படிகளாலே சீலவத்தையை மூதலித்தது -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்ரீ ஸூக்திகள்-ஸ்ரீ தனி த்வயத்தில் –
இவ்வாசகம் உரைக்கக் கேட்ட அப்பொழுது அலர்ந்த செந்தாமரை வென்றதம்மா -ஸ்ரீ கம்பர் –
—————————————–
2–க வீர்யவான்
சீலவத்யை நினைத்து நீர்பண்ட மாகும் அவர்கள் இந்த வீர்யத்தை அனுசந்தித்து தரிக்க இத்தை அடுத்து அருளிச் செய்கிறார்
ஜெய ஜெய மஹா வீரன் – ஸ்ரீ ரகுவீர கத்யம்
சென்று கொன்று வென்றி கொண்ட வீரன் அன்றோ
சத்ரோ ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரஞ்சநீயஸ்ய விக்ரமை –யுத்த -106-6-
வீர்யம் -எதிரிகள் சேனை எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் அத்தை கண்டு சிறிதும் அஞ்சாமை –
ஸுர்யம் -எதிரிகளை அனாயாசமாகக் கொன்று முடிக்கும் வல்லமை —
பராக்ரமம் -அப்படி செய்யுமளவில் தனக்கு ஒரு பங்கமும் இன்றிக்கே சகலவித பங்கங்களும் எதிரிகளுக்கே சார நிற்றல்-
சின்னம் பின்னம் சரைர் தக்தம் பிரபக்னம் சஸ்த்ர பீடிதம் பலம் ராமேண தத்ருசுர் ண ராமம் சீக்ர காரிணம்-என்றும்
தே து ராம சகஸ்ராணி ரணே பஸ்யந்தி ராக்ஷஸா -என்றும்
புன பஸ்யந்தி காகுத்ஸ்தம் ஏகமேவ மஹாஹவே-என்றும்
செருக்கடுத்து அன்று திகைத்த அரக்கரை உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே
ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று உருவு கறந்து உள்ளும்தோறும் தித்திப்பான் -என்றும்
வியாபாரித்த சடக்காலே ரூபம் கண்ணுக்கு பிடிபடாது ஒழிகை-
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்த வீரம் அன்றோ-அசாஹாய சூரன்
மரணாந்தாநி வைராணி நிவ்ருத்தம் ந பிரயோஜனம் -இவன் ஜீவித்து இருக்கிற நாளிலே
நாம் செய்யும் நன்மையை இவன் விலக்காது ஒழிய வேணும் என்று இத்தனையே பெறப் பார்த்து இருந்தோம் –
அது அந்நாளில் பெற்றிலோம் -நாம் தேடி இருந்த அது முந்துற முன்னம் சித்திக்கப் பெற்றோம் இறே-ஸ்ரீ நம்பிள்ளை ஸ்ரீ ஸூக்திகள் –
தத் அபிசந்தி விராம மாத்ராத் –அப்ரதிஷேதம் -ஒன்றே வேண்டுவது –
அஹம் வேத்மி மஹாத்மாநம் ராமம் சத்யா பராக்ரமம் –
ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜஸ் -ஷட் குணங்கள் -கஸ்தூரி பரிமளம் தான் விகாரப்படாமல்
சகல பதார்த்தங்களையும் விகாரப்படுத்துவது போலே தானே –
அபி வ்ருஷா பரிம்லாநாஸ் ச புஷ்பாங்குர கோரகா-சேதன அசேதன வாசியற சகல பதார்த்தங்களையும் விகாரப்படுத்தும் குணமே வீர்யம் –
—————————————————–
3-—க தர்மஞ்ஞ –
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம த்வத்த ஏவ மயா ஸ்ருத–சுந்தர -38–41-
தருமம் அறியாக் குறும்பன் இல்லையே
கருணா காகுத்ஸ்த–
காருண்யம் கருணா க்ருணா க்ருபா தயா அநுகம்பா ஸ்யாத் அனுக்ரோச அபி -ஏழு பதங்களும் பர்யாயம்
தர்மம் என்பதே கருணை -பர துக்கத் துக்கித்வம்
ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயாத் —
இயம் சீதா மம ஸூதா ஸஹ தர்மசரீதவ –
விதிதஸ் ச ஹி தர்மஞ்ஞஸ் சரணாகத வத்ஸல-
சரணாகத பரித்ராணமே பெருமாளுடைய தர்மம்
சர்வ அவஸ்த சரத் ப்ரபந்ந ஜனதா சம்ரக்ஷணைகவ்ரதி தர்மோ விக்ரஹவான் –
ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை –
வதார்ஹம் அபி காகுத்ஸ்த க்ருபயா பர்ய பாலயத் –தேவ்யா காருண்ய ரூபயா —
இவள் சந்நிதியாலே காகம் தலைப் பெற்றது –
அது இல்லாமையால் ராவணன் முடிந்தான் -தான் செய்யும் பிரவிருத்தியில் இருந்து விலகி நிற்பதே சரணாகதி –
——————————————————
4–க க்ருதஞ்ஞ
நின்று தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால் –
கதஞ்சித் உபகாரணே க்ருதே நைகேந துஷ்யதி நஸ்மரத்யபகாராணாம் சதமபி ஆத்மவத்தயா–
லோக நாத புரா பூத்வா ஸூக்ரீவம் நாதம் இச்சதி -பம்பாதீரே ஹநுமதா சங்கதோ வானரேண ஹ என்று
சுக்ரீவன் கட்டளையால் தானே பெருமாள் திருவடி சங்கம் உண்டாயிற்று -அதுக்கு க்ருதஞ்ஞதையாக பெருமாள் –
அதே போலே சர்வ லோக சரண்யாய ராகவாய மஹாத்மனே -என்று தன் இருப்பிடம் தேடி வந்த சிறிய செயலுக்கு
க்ருத்ஞ்ஞதையாக பெருமாள் இஷுவாகு வம்சயராக நினைத்து வார்த்தை அருளிச் செய்தார் –
செல்வ விபீடணற்கு வேறாக நல்லானை-
க்ருதம் ஞானாதி இதி க்ருதஞ்ஞ -அஞ்ஞாத ஸூஹ்ருதம் –
சாஸ்திரமும் விதியாதே நாமும் அறியாதே இருக்கிற இத்தை ஸூஹ் ருதம் என்று நாம் பேரிடுகிறபடி என் என்னில்
நாம் அன்று ஈஸ்வரன் என்று கேட்டு இருக்கையாய் இருக்கும்
யாத்ருச்சிக ஸூஹ்ருதம் -ஆனுஷங்கிக ஸூஹ்ருதம் –ப்ராசங்கிக ஸூஹ் ருதம் –
என்னூரைச் சொன்னாய் என் பேரைச் சொன்னாய் -என் அடியார்களை நோக்கினாய் -என் அடியார்களின் விடாய் தீர்த்தாய் –
என் அடியார்கள் ஒதுங்க நிழல் கொடுத்தாய் –
ஆநயைநம் ஹ்ரிஸ்ரேஷ்ட தத்தமஸ்ய அபயம் மயா–
விபீஷனோ வா ஸூக்ரீவ யதிவா ராவணஸ் ஸ்வயம் -போன்ற இடங்கள் இதுக்கு உதாஹரணம்
—————————————————
5–க சத்ய வாக்ய –
உள்ளதை உள்ளபடியே கண்டு சொல்வது சத்யம் என்னாமல்-தான் கண்டபடியே சொல்வது சத்யம் –
கயிற்றை பாம்பு என்று பிரமித்து பாம்பு என்று சொல்வதும் சாத்தியமே -மருள் அடியாக –
தான் கண்டபடியே சொல்வதும் சத்தியமாகாது -சத்யம் பூதஹிதம் ப்ரோக்தம் –
சத்யம் ப்ரூயாத் பிரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் சத்யம் அப்ரியம் –
ராமோ த்விர் நாபி பாஷதே –
அன்ருதம் நோக்த பூர்வம் மே நச வஷ்யே கதாசன
ஏதத் தே ப்ரதிஜானாமி சத்யே நைவச தே தப -கிஷ்கிந்தா-7-22-/-14-14-
ராமோ விக்ரஹவான் தர்ம –சக்ரவர்த்தி ஆபாசமான சத்ய தர்மத்தைப் பற்றி இழந்தான்
அவன் இங்கு இல்லை என்று சொன்ன ததிபாண்டன் தயிர் தாழி க்கும் பேறு பெற்றுக் கொடுத்தான்
சத்யேன லோகான் ஜயதி தீனான் தானேன ராகவ
குரூன் சுச்ருஷ்யா தீரோ தனுஷா யுதி ஸாத்ரவான் -நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர் -நம்பிள்ளை –
——————————————————–
6–க த்ருட வ்ரத–
விதி தஸ் சஹி தர்மஞ்ஞ –சரணாகத வத்ஸல –
நிஷ்கிஞ்சன ஜன ஸ்வயம் ரஷா தீஷா சமதிக சமிந்தா நாயசசே–அபயப்ரதான சார ஸ்லோகம்
சர்வ அவஸ்த ஸக்ருத் ப்ரபந்ந ஜனதா சம்ரக்ஷண ஏக வ்ரதீ -தசாவதார ஸ்லோகம்
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே ச லஷ்மணாம்
ந து ப்ரதிஞ்ஞாம் ஸம்ஸ்ருத்ய பிராஹ்மனேப்யோ விசேஷத்தை –ஆரண்ய -10-10-
சத்ருசஞ்ச அனுரூபஞ்ச குலஸ்ய தவ சாத்மன
ச தர்ம சாரிணீ மே த்வம் ப்ரானேப்யோபி கரீயசி–ஆரண்ய -10–22-
சிபி சக்ரவர்த்தி கதை -இந்திரன் பருந்தாகவும் யமன் புறாவாகவும் -வந்து சோதிக்க
பருந்து சரண் அடைய உடம்பின் தசை அறுத்து கொடுத்து ரக்ஷணம்
கபோத உபாக்யானம்
வ்யாக்ர வானர சம்வாதம் –
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன
தோஷயத்யபி தஸ்ய ஸ்யாத் சதா மேதத கர்ஹிதம்
சக்ருதேவ பிரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே
அபயம் சர்வ பூதேப்யோ தாதாமி ஏதத் விரதம் மம —
———————————————————
7–சாரித்ரேண ச கோ யுக்த —
ஆத்மாநாம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம் –
இமவ் ஸ்ம முனிசார்தூல-கிங்கரவ் சமூபஸ்திதவ் ஆஞ்ஞாபய யதேஷ்டம் வை சாசனம் கரவாவை கிம்
ந மே ஸ்நாநம் பஹுமதம் வஸ்த்ராணி ஆபரணாநி ச
தம் விநா கைகேயீ புத்ரம் பாரதம் தர்ம சாரினம்-
பரத்வாஜஸ்ய சாஸனாத்
பிதுர்வசன நிர்தேசாத்
விச்வாமித்ரஸ்ய வஸனாத்
அகஸ்ய வஸனாத் சைவ
கர்தவ்யம் தைவமாஹ்நிகம்–வர்ணாஸ்ரம தர்ம நிஷ்டர் பெருமாள் -ஆஹ்நிகம் -பஞ்ச மஹா யஞ்ஞாதி அனுஷ்டானங்கள்
ஸ்ரீ கீதாச்சார்யனும் -ந மே பார்த்தாஸ்தி கர்தவ்யம் –வர்த்த ஏவ ச கர்மணி –
வேல்வெட்டிப் பிள்ளைக்கு பிள்ளை அருளிச் செய்த வார்த்தை –
ஸஹ பத்நயா விசாலாஷ்யா நாராயணம் உபாகமத் –
த்யாயன் நாராயணம் தேவம் –
மைதிலி ரமண வபுஷா ஸ்வேந ஸ்வார்ஹானி ஆராதநாநி அஸி லம்பித
ஏக தார வ்ரதன்
——————————————————–
8–சர்வ பூதேஷு கோ ஹித —
தற்கால இனிமை தான் பிரியம் -பிற்கால நன்மை பயப்பது ஹிதம் –
மேலாய்த் தாய் தந்தையும் இவரே இனி யாவாரே–தஞ்சமாகிய தந்தை தாயோடு தாணுமாய் –
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் –
மாதா பிதா பிராதா நிவாசஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண –
கருணா காகுஸ்தன் –
ஹரிர் துக்கானி பக்தேப்யோ ஹித புத்தயா கரோதி வை —
கர்மம் அடியாக செய்து மண் தின்ற பிரஜையை நாக்கிலே குறியிட்டு அஞ்சப்பண்ணும்
மாதாவைப் போலே ஹித்பரனாகவே செய்து அருளுகிறார் –
———————————————————————
9–க வித்வான் —
வேத வேதாந்த தத்வஞ்ஞ தனுர்வேதேச நிஷ்டித
சர்வ சாஸ்த்ரார்த்த தத்ளஞ்ஞ ஸ்ம்ருதிமான் பிரதிபாநவான் —
வேதமுரை செய்தால் வெள்காரோ வேறுள்ளார்-
வேத வேத்யே பர் பும்சி ஜாதே தசரதாத்மஜே
அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் ஸத்ய பராக்ரமம்
சஹி தேவை ருதீர்ணஸ்ய ராவணஸ்ய வாதார்த்திபி -அர்த்தீதோ மானுஷே லோகே ஐஜ்ஜே விஷ்ணுஸ் சனாதன
வித்வான் -சர்வஞ்ஞன் -பகவான் -ஞானம் பலம் ஐஸ்வர்யம் சக்தி வீர்யம் தேஜஸ் –
பச்யதி அசஷூஸ் -உள்ளூர் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி
யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே —
வித்வான் விபச்சித் தோஷஞ்ஞ-துஷ்டனாகையாலே கொள்ள வேணும் -பெருமாள் பக்ஷம்
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதாம் ஏதத கர்ஹிதம் -கைக்கொள்வதற்காக தோஷம் காணும் வித்வான் அன்றோ பெருமாள்
குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும் வாத்ஸல்ய நிதி அன்றோ –
———————————————————–
10—க சமர்த்த –
இளையவர்கட்க்கு அருளுடையாய் ராகவன் -தம்பி என்றும் இளைத்தவர்கள் என்றுமே சுக்ரீவன் விபீஷணன் இருவருக்கும் அருள்
அங்குல்ய அக்ரேன தான் ஹந்யாம் கிச்சன் ஹரி கணேஸ்வர –
அசமர்த்தம் விஜானாதி மாமயம் மகராலய-கொண்ட சீற்றம் ஓன்று உண்டே கடல் அரசன் மீது –
————————————————–
11–ஏக ப்ரிய தர்சன க –
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் அன்றோ
ரமயதி ராம -ரூப உதார குணை -பும்சாத் த்ருஷ்ட்டி சித்த அபஹாரி
சந்த்ரகாந்தானனம் ராமம் அதீவ ப்ரிய தர்சனம்
கண்ணில் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்
உன் வடிவு கண்டால் மன்மதனும் மடவாராக ஆதாரம் செய்வான்
முனிவன் உன்னைப் புக்கு வாயை மறப்பாரைப் போலே
கௌசல்யா ஸூப்ரஜா ராமா-பெற்ற திருவயிற்றுக்குப் பட்டம் கட்டுகிறான் -வடிவு அழகு படுத்தும் பாடு
ஒரு நாள் முகத்தில் விழித்தாரை–குகனும் குகப் பரிக்ரங்களும்
தோள் கண்டார் தோளே கண்டார்
வா போகு வா இன்னம் வந்து ஒரு கால் கண்டு போ
தருணவ் ரூப சம்பன்னவ்
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்
சர்வ பூஷண பூஷார்ஹா
பத்மதள பத்ராக்ஷம் –பத்மதளம் பத்ம பத்ரம் இரண்டையும் ஆழ்வார் அருளிச் செய்தது போலவே
செங்கமலத்தலர் போலும் கண் கை கால் செங்கனிவாய் அக்கமலத்து இலை திருமேனி அடிகளுக்கே
கிள்ளிக் களைந்தவனே மனத்துக்கு இனியான் போலும்
புந்தியில் புகுந்து தன்பால் ஆதாரம் பெறுக வைத்த அழகன்
சஷுஷா தவ ஸும் யேன பூதாஸ்மி ரகு நந்தன -பூதராக்கும் நெடும் நோக்கு அன்றோ
—————————————————–
12–ஆத்மாவான் க —
ஆத்மா ஜீவே த்ருதவ் தேஹே ஸ்வ பாவே பரமாத்மனி –ஜீவாத்மா தைர்யம் உடல் இயல்பு பரமாத்மா -ஐந்து பொருள்கள்
ஜீவாத்மாக்களை சொத்தாக யுடையவன் -ஜீவாத்மாவாக இருக்கும் தன்மையை யுடையவன் –
தேகமுடையன் –ஆத்மாக்களை தேகமாகக் கொண்டவன் –
பிதரம் ரோசயாமாச–ஆத்மாநாம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம் –
கைங்கர்யம் செய்வதே ஜீவனுடைய இயல்பான தன்மை
இச்சா க்ருஹீத அபிமதொரு தேஹ –உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய்ப் பிறந்த இமையோர் தலைவன்
தேவும் தன்னையும் -திருவாய் -2-7-4-தேவு ஐஸ்வர்யம் -தன்னை -நீரான தன்மை -ஆஸ்ரித பரதந்த்ரம் -பக்த பராதீனன் –
கச்ச லோகான் அநுத்தமான் -என்ற இடம் பரமாத்மாவின் தன்மையை ஸ்பஷ்டமாக்கும் –
————————————–
14–க த்யுதிமான் —
கோ ஜீதக்ரோத-13-குணம் மேலே கஸ்ய பிப்பதி தேவாச்ச ஜாத ரோஷஸ்ய ஸம்யுகே -16-உடன் விவரிக்கப்படும்
த்யுதி -ஓளி–ராம திவாகரன் அன்றோ -ராம ரத்னம் -மணியே மணி மாணிக்கமே –
அநந்யா ராகவேனா அஹம் பாஸ்கரேண பிரபா யதா –
அநந்யா ஹி மயா சீதா பாஸ்கரேண பிரபா யதா –
நித்ய அநபாயினீ -கிருஷ்ணாஜிநேந சம்வ்ருன்வன் ச்ரியம் வக்ஷஸ் தலஸ் திதாம்
இவளோடு கூடியே வஸ்துவின் உண்மை
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை யுறை மார்பன்
திரு இல்லாத்தேவரை தேறேன்மின் தேவு
ஒளியின் ஸ்தானத்தில் திருக்குணங்களையும் கொள்ளலாம் -பரமபதத்தில் விலை செல்லா குணங்களைக் காட்டி அருளவே திருவவதாரங்கள்
பிராட்டியும் குணங்களும் சேர்ந்தே த்யுதி -புருஷகார பலத்தால் ஸ்வா தந்தர்யம் தலை சாய்ந்தால் தலையெடுக்கும் குணங்கள் அன்றோ –
பால்யாத் ப்ரவ்ருத்தி ஸூஸ்நிக்த –சிசுக்களை ஈடுபடுத்த வல்ல அழகும் குணமும் -பால பருவம் தொட்டில் பருவம் –
—————————————————-
15–க அநஸூயக–
வாத்சல்யமும் அனசூயையும் பர்யாய சப்தங்கள் –
நற்றங்களைக் குற்றமாகக் கொள்ளும் அஸூயை இல்லாதவன் –
குற்றங்களைக் குற்றமாக கொள்ளும் அவஸ்தைக்கு மேலே நற்றமாக கொள்வதே வாத்சல்யம்
தன்னடியார் திறத்தகத்து இத்யாதி
விபீஷணன் தோஷாவாகனாகையாலே கைக் கொள்ளத்தத்தக்கவன் -பெருமாள் பக்ஷம் -சுக்ரீவ பஷமும் இல்லாமல் மாருதி பஷமும் இல்லாமல் –
மித்ரா பாவேந -தோஷோயத்யபி -குற்றம் குறைகளையே பச்சையாக கொண்டு –
பிறருக்கு யுண்டான பெருமையை பொறுக்கும் தன்மை இல்லாமையும் அஸூயை –
இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏற்றம் அறிந்து உகந்து இருப்பது அரிதாய் இருப்பது ஓன்று அன்றோ -மா முனிகள்
சாஸ்த்ரா உக்தங்களான விஷயங்களைக் கேட்டால் இது பொருந்தாது என்று குதர்க்கம் செயபவன் அஸூயை யுடையவன் என்றுமாம்
பெருமாள் ஜபாலி சம்வாதம் – அறிவோம் –
———————————————-
13–கோ ஜித க்ரோத /16— கஸ்ய பிப்யதி தேவாச்ச ஜாத ரோஜஸ்ய ஸம்யுகே —
கோபத்தை வெல்வதாவது ஸ்வ அதீனமாக்குகை
அம் கண் மா ஞாலம் அஞ்ச
முனைத்த சீற்றம் விண் சுடப்போய் மூவுலகும் பிறவும் அனைத்தும் அஞ்ச –
உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
சதைவ பிரிய தர்சன –சோமவத் பிரிய தர்சன –காலாக்னி சத்ருச க்ரோத –
க்ரோதம் ஆஹாரயத் தீவ்ரம் வதார்த்தம் சர்வ ரக்ஷஸாம் ஜனஸ்தானத்தில் கோபத்தை வரவழைத்துக் கொண்டார்
கோபஸ்ய வசமேயிவான்-இரண்டும் உண்டே பெருமாள் இடம் –
——————————————————-
ஸ்ரீ ராமாயணத்தில் 18 குஹ்ய தம விஷயங்கள்
1-வித்யா ஸர்வாபி -வேத அங்கங்களின் பெருமை
2-பாஹ்ய த்யஜனம் -வேதங்களுக்கு புறம்பான -பேசும் -ஸஹ வாசம் தவிர்க்க வேண்டும்
3-அகில ஸத் தர்மம் நித்ய வாழ்வில் கடைப் பிடிக்க வேண்டியவை
4-ஆத்யாத் மிகம் –ஆத்ம விஷய ஞானம் -4–ராவணன் மனஸ் -10 இந்திரியங்கள் -திருவடி ஆச்சார்யர் -இலங்கை -பிறவி பெரும் கடல் ஸம்ஸார சாகரம் -அசோக வனம் சரீரம்
5- அர்த்த பஞ்சக ஞானம் -காண்டம் தோறும் உண்டே
6–ஸ்ரீ ரகுபதி பரத்வம் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
7-பிரபத்தி சரணாகதி சாஸ்திரம் -தொட்ட இடம் தோறும் உண்டே
8—கிம் அர்த்த -புருஷார்த்தம் –அநுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே
9-ஸ்வா பாவிக சேஷத்வம் பிரதானம் -பர கத அதிசய ஆதேய
10-பாரதந்தர்யம் -இஷ்ட விநியோஹ அர்ஹத்வம்
11-தத் அவதி -பக்தியின் எல்லை நிலம் -அடியார் அடியார் அடியோங்களே -சரம பர்வம்
12-அகதித்வம் -புகல் ஒன்றும் இல்லாமல் இருக்க வேண்டுமே
13-விரக்தி -உலகியல் ப்ராவண்யம் இல்லாமல்-வைராக்யம் மிக்கு இருக்க வேண்டுமே
14-குரோர் கடாக்ஷ மஹிமை
15–ஸ்ரீ ப்ராதான்யம்-ஆச்சார்ய அபிமானம் கிட்டிய உடன் ஸ்ரீ
16-நிர் பரத்வம்-மஹா விஸ்வாஸம்
17- ஸூ வஸிதி
18—ஸத் த்யானமீ கால ஷேபம் உத்தர க்ருத்யம் -ஸத் த்யானம் -குண சிந்தனை
1-வேத அங்கங்களின் பெருமை
அயோத்யா 91-19-சிஷா ஸ்வர ஸமா யுக்தம் பரத்வாஜர் சொல்ல தேவதைகள் வந்து உணவு பரத்தாழ்வான் உடன் வந்த அயோத்யா ஜனங்களுக்கும் சமர்ப்பித்தார்கள் அன்றோ
ஆயதாஷவ் -dual இல்லாமல் பன்மை -நான்கு திருத்தோள்களை ஸேவித்து திருவடி -இலக்கணம்
ஜடாயு -பெருமாள் இடம் -ஆயுஷ்மன் -விந்தோ நாம முஹூர்த்தம் -ராவணான்கொண்டு -காணாமல் போனாய் மாறாமல் அப்படியே கிடைக்கும் -ஜ்யோ திஷம்
2-வேதங்களுக்கு புறம்பான -பேசும் -ஸஹ வாசம் தவிர்க்க வேண்டும்
தசரதனையும் ஒரே இடத்தில் நிந்தை -ஜாபாலி வார்த்தை கேட்டு
ஐயர் பார்த்து வைத்த திருக் கல்யாணம்
தந்தை சொல் மிக்க மந்த்ரம் இல்லை -அனுஷ்டித்துக் காட்டிய பெருமாள்
அரச தர்மங்கள் -ராமன் பரதன் ஸம்வாதம்
ஸத்வ குணம் விபீஷணன் -ரஜோ குணம் கும்பகர்ணன் -தமோ குணம் சூர்ப்பணகை
நல்ல சிஷ்யனைத்தேடி ஆச்சார்யன் -சங்கு சக்கர லாஞ்சனை -செய்து உபதேசித்து பரமாத்மாவிடம் சேர்த்து வைக்கிறார்
5- அர்த்த பஞ்சகம் -காண்டம் தோறும் உண்டே
ப்ராப்துபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா ப்ராப்திவிரோதி ச ||
வதந்தி ஸகலா வேதாஸ் ஸேதிஹாஸபுராணகா: |
முநயஶ்ச மஹாத்மநோ வேதவேதார்த்தவேதிந: || [ஹாரீத ஸ்ம்ருதி 8-141]
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்
- ஜீவாத்மா (ஆத்மா) ஐவகையினர்:
-
- நித்ய ஸூரிகள் – ஸ்ரீ வைகுண்டம் ஆகிய பரமபதத்தில் எப்போதும் வசிக்கும் வைகுண்ட வாசிகள்
- முக்தாத்மாக்கள் – வைகுண்டம் சென்று சேரும் தளைகள் நீங்கிய ஆத்மாக்கள்
- பத்தாத்மாக்கள் – உலகியலில் ஸம்ஸாரத்தில் கட்டுண்டுழலும் ஆத்மாக்கள்
- கேவலர்கள் – ஸம்ஸாரத் தளைகளிலிருந்து விடுபட்டு, பகவத் கைங்கர்யமாகிற பெரும் பேற்றில் ஆசையின்றி மிகத் தாழ்ந்ததான ஆத்மானுபவம் எனும் கைவல்ய மோக்ஷம் பெற்ற கேவலர்கள்
- முமுக்ஷுக்கள் – ஸம்ஸாரத்தில் இருக்கும், பகவத் கைங்கர்யப் பேற்றினை விரும்பி வேண்டிக் கிடக்கும் ஆத்மாக்கள்.
-
- ப்ரஹ்மம், பரமாத்மா, இறைவன். இவனது ஐந்து நிலைகள்:
-
- பரத்வம் – பரம பதத்திலுள்ள மிக உயர்ந்த நிலை
- வ்யூஹம் – க்ஷீராப்தியில் உள்ள ஸங்கர்ஷண, ப்ரத்யும்ன, அநிருத்தாதி ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாராதிகள் செய்யும் நிலைகள்
- விபவம் – ராம க்ருஷ்ணாதி அவதாரங்கள் (பல)
- அந்தர்யாமித்வம் – அவனே உள்ளுறையும் பரமனாக ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் இருத்தல்
- அர்ச்சை – எம்பெருமான் கோயில்களிலும், மடங்களிலும், க்ருஹங்களிலும் இருக்கும் நிலை
-
- புருஷார்த்தம் – புருஷனால் விரும்பப்படுபவை:
- தர்மம் – எல்லா ஜீவர்களின் மங்களம் பொருட்டும் செய்யப்படும் கர்மங்கள்
- அர்த்தம் – சாஸ்த்ரம் விதித்தபடி பொருள் ஈட்டி அதை சாஸ்த்ரோக்தமாகச் செலவிடுவது
- காமம் – உலக இன்பங்கள் அநுபவித்தல்
- ஆத்மாநுபவம் – தன்னைத் தானே அனுபவிக்க ஸம்ஸாரத்தில் இருந்து விடுபட்ட நிலை
- பகவத் கைங்கர்யம்: இதுவே பரம புருஷார்த்தம். யாவச் சரீர பாதம் (சரீரம் இருக்கும் வரை) இங்கு எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்து, சரீரம் வீழ்ந்தபின் பரமபதத்தில் சென்று அவனுக்கு நித்ய கைங்கர்யம் செய்தல்
- உபாயம் – வழி – ஐந்து வகை உண்டு:
- கர்ம யோகம் – யாகம் (வேள்வி), தானம்(ஈகை), தபஸ் (தவம்) முதலியவற்றால் ஆத்ம ஞாநம் பெறல். இது ஞான யோகத்துக்கு உபாங்கம். உலகியலில் நோக்குள்ளது.
- ஞான யோகம் – கர்ம யோகத்தால் பெற்ற ஞானத்தை உபயோகித்து ஹ்ருதய சுத்தியோடு பகவானை த்யானித்துத் தன ஹ்ருதயத்தினுள்ளே அவனையே சிந்தித்து எப்போதும் அவனுள் ஆழ்தல். இது கைவல்யத்தில் சேர்க்கும்.
- பக்தி யோகம் – ஞான யோகத்தின் உதவியோடும் இடையறாத ஈச்வர த்யானத்தாலும் மலங்கள் அறுத்து எம்பெருமானின் உண்மை நிலையை அறிந்து இருத்தல்.
- ப்ரபத்தி – எல்லாவற்றிலும் எளிதும், இனிமையானதும் எம்பெருமானிடம் சேர்ப்பது. ஒரு முறையே செய்யப்படுவது. பின் செய்வன எல்லாம் இதை நமக்கு நினைவுபடுத்திக் கொள்வதவ்வளவே. கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்ய அசக்தர்க்கும், அவற்றை அனுஷ்டிப்பது ஸ்வரூப விரோதம்/ஸ்வரூப நாசம் என்றிருப்போர்க்கும் எம்பெருமானே யாவும் என்றிருக்கும் இதுவே நெறி. இதில் இரு வகை: ஆர்த்த ப்ரபத்தி இனி ஒருக் கணமும் எம்பெருமானை விட்டிருக்கலாகாது என ஸம்ஸாரத்தில் அடிக்கொதிப்பு ஏற்பட்டுத் தவிப்பது; த்ருப்த ப்ரபத்தியாவது ஸம்ஸாரம் கொடிது ஆகிலும் எம்பெருமான் விட்ட வழி என அவன் அருளையே எதிர் நோக்கி பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யம் செய்து இருத்தல்.
- ஆசார்ய அபிமாநம்:- இவ்வொன்றையும் அனுஷ்டிக்க இயலாதோர்க்குக் கருணையே வடிவெடுத்த ஆசார்யன், தம் கை தந்து, பூர்வாசார்யர்கள் காட்டிய நெறியில் சிஷ்யனைப் புருஷகாரம் செய்து மந்த்ரோபதேசம் முதலியவற்றால் வழி நடத்தி, பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணிகொண்டருள்தல். குறிப்பு: இங்கே நாம் எம்பெருமானாரையே நம்மை ஸம்ஸாரத்தில் இருந்து மீட்டெடுத்து உஜ்ஜீவித்து அருளும் உத்தாரக ஆசார்யனாகவும், நம்முடைய ஸமாச்ரயண ஆசார்யனை எம்பெருமானாரிடம் நம்மைச் சேர்க்கும் உபகாரக ஆசார்யனாகவும் எண்ணுவது பொருந்தும். நம் ஸம்ப்ரதாயத்தில் பற்பல ஆசார்யர்கள் எம்பெருமானார் திருவடியே தஞ்சம் என்பதைப் பல இடத்திலும் எடுத்துக் காட்டியுள்ளனர். இது பற்றி மேலும் அறிய http://ponnadi.blogspot.in/p/charamopaya-nirnayam.html பார்க்கவும். மணவாள மாமுநிகள் ஆர்த்தி பிரபந்தத்திலே எம்பெருமானாரை ஸர்வவித பந்துவாகக் கொண்ட வடுக நம்பியை உதாஹரித்து இதைக் காட்டியுள்ளார்.
- விரோதிகள் – உஜ்ஜீவனத்துக்குத் தடைகளாய் வருவன.இவை ஐந்து:
- ஸ்வரூப விரோதி – சரீரத்தை ஆத்மா என மயங்குதல், எம்பெருமானை விட்டுப் பிறர்க்கும் அடியனாய் இருத்தல்.
- பரத்வ விரோதி – தேவதாந்தரங்களையும் பெரிதாக எண்ணி அவற்றை எம்பெருமானொடொக்க நினைத்தல், வணங்கல்; அவதாரங்களை மானிடப் பிறப்பாய் மயங்குதல்; அர்ச்சாவதார எம்பெருமானுக்கு முழு சக்தி உண்டென்று நம்பாதிருத்தல்.
- புருஷார்த்த விரோதி – பகவத் கைங்கர்யம் தவிர இதர விஷயங்களில் பற்றோடு ஏங்கி இருப்பது.
- உபாய விரோதி – ப்ரபத்தி மிக எளிதாகையால் பேற்றுக்கு உதவ வல்லதன்று எனப் பிற சாதனங்களை உபாயம் என மயங்குதல்.
- ப்ராப்தி விரோதி – ஆத்மாவின் அபிலாஷையாகிய ஈச்வர ப்ராப்தியை உடனே தடுக்கும் விரோதி நம் சரீரம். இது உள்ளவரை பகவத் ப்ராப்தி நடவாது. மேலும் பாபங்கள், பகவதபசாரம், பாகவதபசாரம், அஸஹ்யாபசாரம் முதலியவை.
வில் தடை உடைத்து சீதா கல்யாணம் -பால காண்டம் –
பாரத கைங்கர்யம் -கைகேயி வரன்கள் விரோதி -பாதுகை -அடி சூடும் அரசு -உபாயம் சரணாகதி -அயோத்யா ஆணிடம்
ஆரண்ய காட்டும் -ரிஷிகள் -அரக்கர்கள் தடை -சரணாகதி உபாயம் கர தூஷணாதிகள் வதம்
கிஷ்கிந்தா வாலி தடை -சரணாகதி –
ஸூந்தர காண்டம்
யுத்த காண்டம் -ஆச்சார்யர் பரிந்துரை உபாயம் -ராவணன் போல் பாபக்கூட்டங்கள்
காகாஸுர வ்ருத்தாந்தம்–வித்தகனே நின் அபயம் -ஜடாயு மோக்ஷம் -ப்ரஹ்மா-ருத்ரன் -இந்த்ரன் -யாராலும் -சர பலம் -மிக்கது
7-பிரபத்தி சரணாகதி சாஸ்திரம் -தொட்ட இடம் தோறும் உண்டே
பால -தேவர் நாராயணன் -விசுவாமித்திரர் இடம் -திரிசங்கு -பரசுராமன் இடம் சக்ரவர்த்தி
அயோத்யா -லஷ்மணன் -பெருமாள் இடம் -பரதன் சரணாகதி
ஆரண்யன் -ரிஷிகள்
கிஷ்கிந்தா சுக்ரீவன்
ஸூ ந்தர -காகாசுரன் -அடையாளமாக பிராட்டி
யுத்த -விபீஷணன் சரணாகதி-கண்டவர் பேச்சைக் கேட்க்காமல் கண்ட திருவடி பேச்சையம் கேட்க்காமல் மித்ர பாவேந –ஸக்ருதேவ –ஏதத் விரதம் மம
8—புருஷார்த்தம் –அநுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை -அவன் உகப்புக்காகவே கைங்கர்யம்
கைங்கர்ய சாம்ராஜ்யம் இழக்காமல் லஷ்மண லஷ்மி ஸம் பன்னன்
9-சேஷத்வம் பிரதானம் -பர கத அதிசய ஆதேய -பூ பரிமளம்-மணி தேஜஸ் –
திருவடி இடம் -லஷ்மணன் பேசுவது அஹம் அஸ்ய அவரோ ப்ராதா -குணைர் தாஸ்யம் உபாகதா -பெருமாள் பார்வையில் தம்பி -நான் அவருக்குத் தொண்டன்
10-பாரதந்தர்யம் -இஷ்ட விநியோஹ அர்ஹத்வம்–போக்த்ருத்வ சேஷத்வம் போல் அன்றே போக்யத்வ பாரதந்தர்யங்கள்
பரதாழ்வான் -உயர்ந்தவன் -பாதுகா தேவி மிக உயர்ந்தவள்
லஷ்மணன் -25-%-சீதா –50-%-பரதன் -75- %-பட்டாபிஷேகம் செய்து கொள்ளவில்லையே -பாதுகா தேவி -100%-சொன்னது எல்லாம் செய்து இட்ட வழக்காக இருந்ததால் –
11-பக்தியின் எல்லை நிலம் -அடியார் அடியார் அடியோங்களே-சரம பர்வம் -பாகவத பாரதந்தர்யம் -சத்ருக்ந ஆழ்வான்
கச்சதா மாதுல குலம் பரதேன ததா அநக சத்ருக்நோ நித்ய சத்ருக்நோ நீத ப்ரீதி புரஸ்க்ருத –அயோத -1-1-
அநக -தோஷம் அற்றவரும்
நித்ய சத்ருக்ந-எப்போதும் எதிரிகளான இந்த்ரியங்களையும் ஜெயித்து இருப்பவரும்
சத்ருக்ந -எதிரிகளை மண் உண்ணப் பண்ண வல்லவர் ஆகையாலே சத்ருனன் என்று பெயரிட்டவருமானவர்
ப்ரீதி புரஸ்க்ருத -அன்பினால் முன் உந்தப்பட்டவராய்
ததா -பரதன் சென்ற அப்போதே
மாதுல குலம் -மாமாவின் வீட்டுக்கு
கச்சதா -போகா நிற்கிற
பரதேன -பரதனால்
நீத -அழைத்துச் செல்லப் பட்டார் –
கச்சதா –
போகா நிற்கிற என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தாலே போகிற விடத்தில்
தனக்கு ஒரு பிரயோஜனம் உண்டாதல்
இங்கே மாதா பிதாக்களை கேள்வி கொள்ளுதல்
பூர்வஜரான பெருமாளைக் கேள்வி கொள்ளுதல்
இவ்வளவும் அன்றிக்கே அவனை ஒழிய ஜீவிக்க மாட்டாத படியாலே போனான் -என்கை-
மாதுல குலம் –
யுதாஜித் அழைத்தது அவனை யாகையாலே போக்கில் உத்தேச்யதையும் அவனுக்கு .
இவனும் அவன் உத்தேச்யனாய் போனான் என்கை –
பரதேன –
சக்ரவர்த்தியும் துஞ்சி
பெருமாளும் ராஜ்யத்தைப் போகட்டுப் போய்
இளைய பெருமாள் அடிமை செய்ய வேணும் என்று தொடர்ந்து போய்
சத்ருந ஆழ்வானும் -ராமனை அல்லாது அறியாத பரதா -நின்னை அல்லது அறியேன் என்று இருக்கும் தசையிலும்
ராஜ்யத்தை பரிக்கக்-தாங்கக் -கடவன் என்று ஆயிற்று ஸ்ரீ வசிஷ்ட பகவான் திரு நாமம் சாத்திற்று –
பரதன் இதி ராஜ்யஸ்ய பரணாத்-என்றான் இ றே ஸ்ரீ சதா நீகன்-
ததா -அப்போதே
இருவரும் ராஜ புத்ரர்களாய் நஷத்ர பேதம் உண்டானால் பிரித்து முஹூர்த்தம் இட்டுப் போக ப்ராப்தமாய் இருக்க
அவன் போனதுவே முஹூர்த்தமாகப் போனான் -என்கை –
கச்சதா -என்கிறதிலே அர்த்த சித்தம் அன்றோ –
ததா என்றது என் என்னில்
அங்கு மமதா நிவ்ருத்தியைச் சொல்லிற்று -தனக்கே ஒரு பிரயோஜனம் இன்றி சென்றமை சொல்லி –
இங்கு அதுக்கு ஆச்ரயமான அஹங்கார நிவ்ருத்தியைச் சொல்லுகிறது -தான் ஒருவன் உளன் என்கிற நினைவும் இல்லாமல் –
ஆகையாலே புநருக்தி தோஷம் இல்லை
சேஷத்வ விரோதி இ றே இரண்டும் –
அநக –
பாபம் அற்றவன்
அகம் இல்லாதது இவனுக்கே இ றே
அகம் -உத்தேச்ய விரோதி
இவ்விடத்தில் அகமாவது ராம பக்தி
இத்தைப் பாபம் என்னப் போமோ என்னில்
பாபத்தில் புண்யம் நன்றாய் இருக்க மோஷ விரோதி யாகையாலே புண்யமும்
அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம் -சாந்தோக்யம் -8-13-1-என்று பாப சப்த வாஸ்யமாய் ஆயிற்று இ றே –
ஆகையால் பரத அநு வ்ருத்தி யாகிற உத்தேச்யத்துக்கு விரோதி யாகையாலே ராம சௌந்தர்யத்தில் கால் தழுவும் அதுவும் பாபமாம் அத்தனை இ றே –
ராமோ பிரமாத மம கார்ஷீ -என்று ராம அநு வ்ருத்திக்கு இடைச் சுவராக சொல்லிற்று இ றே ராம சௌந்தர்யத்தை –
பரத அநு வ்ருத்திக்கு இடைச் சுவர் என்னும் இடம் சொல்ல வேண்டா வி றே
சத்ருக்ந –
பிள்ளைகள் உடைய சந்நி வேசங்களைப் பார்த்து திரு நாமம் சாத்துகிற ஸ்ரீ வசிஷ்ட பகவான்
பெருமாள் கண்டாரை அழகாலே துவக்க வல்லராகத் தோற்றுகையாலே ராமன் -என்றும்
இளைய பெருமாளுக்கு கைங்கர்யமே நிரூபகமாகத் தோற்றுகையாலே -லஷ்மணன் -என்றும் திரு நாமம் சாத்தினாப் போலே
இவனுடைய சந்நி வேசததைக் காணவே சத்ருக்கள் மண் உண்ணும்படி இருக்கையாலே-சத்ருக்னன் -என்று திரு நாமம் சாத்தினான் –
நித்ய சத்ருக்ந –
பாஹ்ய சத்ருக்களைப் போலே அன்றிக்கே ஆந்திர சத்ருக்களான இந்த்ரியங்களை ஜெயித்து இருக்கும் -என்கை –
அவ் விந்த்ரிய ஜெயத்தின் எல்லை எவ்வளவோ என்னில்
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்-அயோத்யா -3-29-என்கிற ராம சௌந்த்ர்யத்திலும் துவக்கு ஒண்ணாது ஒழிகை –
அதாகிறது
பெருமாளைப் பற்றும் போதும் -தன உகப்பாலே யாதல் –
அவருடைய வை லஷ்ண்யத்தாலே ஆதல் அன்றிக்கே
தனக்கு உத்தேச்யனான இவன் உகந்த விஷயம் என்று பற்றுகை –
நீத –
அழைத்துச் செல்லப் பட்டான் –
ராஜாக்கள் போகும் போது உடைவாள் மற்று ஓன்று கொண்டு போமோபாதி
அவன் கொடுபோகப் போனான் –
த்ரவ்யத்துக்கு த்ரவ்யாந்தரங்களோட்டை சம்யோகம் உபய நிஷ்டமாய் இருக்கும் இ றே
அது போல் அன்றிக்கே ஜாதி குணங்களோ பாதி -கடமும் கடத்வமும் போலே -போனான் –
ப்ரீதி புரஸ்க்ருத –
அன்பினால் முன் தள்ளப் பட்டான் –
ஜ்யேஷ்ட அநு வ்ருத்தி கர்த்தவ்யம் என்று போனான் அல்லன் –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -அயோத்யா -31-27- என்று போன இளைய பெருமாளைப் போலே போன இடத்தில்
சர்வ சேஷ வ்ருத்தியும் பண்ணலாம் என்று பாரித்துக் கொண்டு ப்ரீதி பிரேரிக்க போனான் –
படை வீட்டில் இருந்தால் பலர் உண்டாகையாலே விழுக்காட்டோ பாதி இ றே சித்திப்பது
நீத -என்கையாலே
சேஷத்வத்தில் அசித் கல்பனாய் இருக்கக் கடவன் -படியாய்க் கிடந்தது உன் பவளவாய் காண்பேனே
அடிமைத்தனத்தில் அசித் சமனாயும் கைங்கர்யம் செய்யும் பொழுது சேதனத்வமும் -பெருமாள் திரு -4-9-
ப்ரீதி புரஸ்க்ருத -என்கையாலே
ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தியிலே சைதன்ய பிரயுக்தமான தர்மங்கள் உண்டாய் இருக்கை-
அநக -என்கையாலே
பாவநத்வத்தாலும்
நித்ய சத்ருக்ந-என்கையாலே
போக்யதையாலும்
அவனையே பற்றினான் -என்னவுமாம் –
அநக நித்ய சத்ருக்ந -என்கிறதுக்கு பிரயோஜனம் என் என்னில்
ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் பெருமாளுக்கு நல்லனான படி
அவனை அல்லது அறியாத ஸ்ரீ பரத ஆழ்வானை அல்லது வேறு ஓன்று அறியாத படியானை -என்று எம்பெருமானார் அருளிச் செய்தார் –
இதுவே பிரயோஜனம் ஆனால் பரதனுக்கு பெருமாள் விட சொன்ன மிகை எல்லாம் பொறுக்கும் இ றே-
12-அகதித்வம் -புகல் ஒன்றும் இல்லாமல் இருக்க வேண்டுமே
விபீஷணன் சொல்படி பெருமாள் -தர்ப்ப சயனம் -கருணைக்கடல் கரும் கடலை நக்கி – சமுத்திர ராஜன் இடம் சரணாகதி –
கைம்முதல் இல்லாமல் இருக்க வேண்டுமே -து பெருமாள் இடம் இல்லையே
என் நான் செய்கேன் உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -இருக்க வேண்டுமே
பக்தி பாரவசயத்தால் ஆழ்வார்கள் சரணாகதி –என் நான் செய்கேன்
ஆச்சார்யர்கள் ஞாணாதிக்யத்தால் ப்ரபன்னர்கள் -என் நான் செய்கேன்
அஸ்மாதாதிகள் அஞ்ஞானத்தால் ப்ரபன்னர்கள் -என் நான் செய்கேன்
ஒரே தொடர் மூவருக்கும் ஸ்வரத்தால் மட்டுமே மாற்றி –
13- விரக்தி -உலகியல் ப்ராவண்யம் இல்லாமல்–வைராக்யம் மிக்கு இருக்க வேண்டுமே
நல்ல பதத்தால் -கொண்ட பெண்டிர் –
நித்ரா தேவி -தூக்கம் இல்லாமல் -இருக்க வேண்டும் -14 வருஷம் அருகி வராத
உறங்கா வில்லி -இவனுக்கு
அதே பெயரில் உறங்கா வில்லி தாஸர் ஆச்சார்யர்
அயோத்யா மக்கள் தூக்கத்தால் பெருமாளை இழந்தார்கள்
14-குரோர் கடாக்ஷ மஹிமை
ஏக கண் -ஸஹஸ்ர கண்களும் -மூன்று -அஷ்ட -சேர்ந்து வந்தாலும் ஒப்பாகாதே
சபரி -சாக்ஷியாகவே பெருமாள் -சபரி மோக்ஷ சாக்ஷி பூதா -ரகுவீரா கத்யம்
முனி ஜன பஜன் –முஷித ஹ்ருதய கலுஷம் -ஸ்ரீ முஷ்ணம் -பாபங்கள் நமக்கே திரியாமல் களவு பண்ணுவதே முஷணம்
ஆச்சார்யர் திருவடி அடைந்தார்கள் என்றே சொல்கிறோம்-தானே வைகுந்தம் தரும் -அன்றோ
15–ஸ்ரீ ப்ராதான்யம்
சூர்ப்பணகை -ராவணன் இழக்க –காகாசூரன் விபீஷணன் பேறு -இவள் ஸந்நிதியால்
ரக்ஷணம் -வார்த்தை கைவிட மாட்டேன் -உயிரை விட்டாலும் பிராட்டி ஆதி சேஷனை விட்டாலும்
இத்தைச் சொல்லியே சமாஸ்ரயணம் செய்து வைக்கிறார்கள்
தன்னடியார் –சிதைகு உரைக்குமேல் –ஸ்திரமாக இருக்கிறதா பார்க்கவே -என்னடியார் அது செய்யார் என்பானே
ராமானுஜர் திருமலையில் சீதா ராமன் பிரதிஷ்டை
புனர்பூசம் புறப்பாடு உண்டு
16-நிர் பரத்வம்-மஹா விஸ்வாஸம்
தத் தஸ்ய ஸத்ருசம் பவத்
சொல்லினால் சுடுவேன் -வில்லின் மாசு படக்கூடாதே
ப்ரபன்னன் கரைந்தான் ஆகில் நாஸ்திகனாம் அத்தனை ராமாநுஜர்
17- ஸூ வஸிதி
குண அனுபவம் பண்ணி -தேசோயம் சர்வ காம துக்
பவத் விஷய வாஸினா -ரிஷிகள் பெருமாள் இடம்
ராமானுஜர் ஆறு கட்டளைகளில் ஓன்று திவ்ய தேசத்தி வஸிக்க வேண்டும்
அன்று சராசரங்களை வைகுந்தத்தில் ஏற்றி –
18-உத்தர க்ருத்யம் -ஸத் த்யானம் -குண சிந்தனை
நிச்சயதார்த்தமான பெண் போல்
சீதா பிராட்டி -கணையாழி பெற்று நம்பி இருந்து சூடா மணி சமப்பித்து பொறுத்து இருந்தது போல்
சங்கு சக்கர லாஞ்சனை பெற்று நிம்மதியாக இருப்போம்
முழு ராமாயணத்திலும் ஒவ்வொரு குஹ்ய ரஹஸ்யம் சொல்லி 18 தடவை ஆவ்ருத்தி திருமலை நம்பி ராமானுஜருக்கு அருளிச் செய்தாராம்
———–
ராமரின் முன்னோர்கள்–
1. பிரம்மாவின் மகன் -மரீசீ
2. மரீசீயின் மகன்- கஷ்யபர்
3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான்
4. விவஸ்வானின் மகன்- மனு
5. மனுவின் மகன் -இஷ்வாகு
6. இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி
7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா
8. புரண்ஜயாவின் மகன் -அணரன்யா
9. அணரன்யாவின் மகன் -ப்ருது
10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா
11. விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா
12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1
13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட்
14. ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா
15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா
16. குவலஷ்வாவின் மகன் – த்ருதஷ்வா
17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத்
18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா
19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப்
20. நிகும்பின் மகன் -சன்டஷ்வா
21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா
22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத்
23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா-2
24. யுவான்ஷ்வாவின் மகன் மன்தாத்தா
25. மன்தாத்தாவின் மகன் அம்பரீஷா
26. அம்பரீஷாவின் மகன் ஹரிதா
27. ஹரிதாவின் மகன் த்ரதஸ்யு
28. த்ரதஸ்யுவின் மகன் -ஷம்பூத்
29. ஷம்பூத்தின் மகன்- அனரண்யா-2
30. அனரண்யாவின் மகன் – த்ரஷஸ்தஸ்வா
31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் ஹர்யஷ்வா 2
32. ஹர்யஷ்வாவின் மகன் -வஸுமான்
33. வஸுமாவின் மகன்- த்ரிதன்வா
34. த்ரிதன்வாவின் மகன் த்ரிஅருணா
35. த்ரிஅருணாவின் மகன் -திரிசங்கு
36. திரிசங்கு வின் மகன் ஹரிசந்திரன்
37. ஹரிசந்திரநநின் மகன் ரோஹிதாஷ்வா
38. ரோஹிதாஷ்வாவின் மகன் ஹரித்
39. ஹரித்தின் மகன் -சன்சு
40. சன்சுவின் மகன் -விஜய்
41. விஜயின் மகன் -ருருக்
42. ருருக்கின் மகன் -வ்ருகா
43. வ்ருகாவின் மகன் -பாஹு
44. பாஹுவின் மகன்- சாஹாரா
45. சாஹாராவின் மகன் -அசமஞ்சன்
46. அசமஞ்சனின் மகன் -அன்ஷுமன்
47. அன்ஷுமனின் மகன் -திலீபன்
48. திலீபனின் மகன்- பகீரதன்
49. பகீரதனின் மகன் -ஷ்ருத்
50. ஷ்ருத்தின் மகன் -நபக்
51. நபக்கின் மகன்- அம்பரீஷ்
52. அம்பரீஷனின் மகன் -சிந்து த்வீப்
53. சிந்து த்வீப்பின் மகன்- ப்ரதயு
54. ப்ரதயுவின் மகன் -ஸ்ருது பர்ணா
55. ஸ்ருது பர்ணாவின் மகன் சர்வகாமா
56. சர்வகாமாவின் மகன்- ஸுதஸ்
57. ஸூதஸின் மகன் -மித்ரஷா
58. மித்ராஷாவின் மகன்- சர்வகாமா 2
59. சர்வகாமாவின் மகன் அனன்ரண்யா3
60. அனன்ரண்யாவின் மகன் -நிக்னா
61. நிக்னாவின் மகன்- ரகு
62. ரகுவின் மகன் -துலிது
63. துலிதுவின் மகன் – கட்வாங் திலீபன்
64. கட்வாங் திலீபனின் மகன் – ரகு2
65. ரகுவின் மகன் – அஜன்
66. அஜனின் மகன் – தசரதன்
67. தசரதனின் மகன்
68. ஸ்ரீ ராமன் அவர் பரம்பரையில் 68வது அரசன்.
———————–
ஸ்ரீ ராம பட்டாபிஷேக சர்க்கம்:-
தத ஸ ப்ரயதோ வ்ருத்தோ வஷிஷ்டோ பராஹ்மனை ஸஹ
ராமம் ரத்னமயே பீடே ஷஹஸீதம் ந்யவேசயத்
வஷிஷ்டம் வாம தேவ ச ஜாபாலிரத காயப
காத்யாயன ஸுயஜஞ்ச கௌதமோ விஜயஸ்ததா
அப்யஷிஞ்சந் நரவ்யாக்ரம் ப்ரசந்த்னேன ஸ்கந்தினா
ஸலிலேன ஸஹஸ்ராஷம் வஸவோ வாஸவம் யதா
ரித்விக்பி ப்ராஹ்மனை பூர்வம் கன்யாபிர் மந்த்ரிபிஸ்ததா
யோதை சைவாப்யஷிஞ்சம்ஸ்தே ,ஸம்ப்ரஹ்ருஷ்டா ஸனைகமை
———-
ஸ்வஸ்தி ப்ரஜாப்⁴ய꞉ பரிபாலயந்தாம்ʼ ந்யாய்யேன மார்கே³ண மஹீம்ʼ மஹீஶா꞉ .
கோ³ப்³ராஹ்மணேப்⁴ய꞉ ஶுப⁴மஸ்து நித்யம்ʼ லோகா꞉ ஸமஸ்தா꞉ ஸுகி²னோ ப⁴வந்து .. 1 ..
காலே வர்ஷது பர்ஜன்ய꞉ ப்ருʼத்²வீ ஸஸ்யஶாலினீ .
தே³ஶோ(அ)யம்ʼ க்ஷோப⁴ரஹிதோ ப்³ராஹ்மணா꞉ ஸந்து நிர்ப⁴யா꞉ .. 2 ..
அபுத்ரா꞉ புத்ரிண꞉ ஸந்து புத்ரிண꞉ ஸந்து பௌத்ரிண꞉ .
அத⁴னா꞉ ஸத⁴னா꞉ ஸந்து ஜீவந்து ஶரதா³ம்ʼ ஶதம் .. 3 ..
சரிதம்ʼ ரகு⁴நாத²ஸ்ய ஶதகோடிப்ரவிஸ்தரம் .
ஏகைகமக்ஷரம்ʼ ப்ரோக்தம்ʼ மஹாபாதகனாஶனம் .. 4 ..
ஶ்ருʼண்வன் ராமாயணம்ʼ ப⁴க்த்யா ய꞉ பாத³ம்ʼ பத³மேவ வா .
ஸ யாதி ப்³ரஹ்மண꞉ ஸ்தா²னம்ʼ ப்³ரஹ்மணா பூஜ்யதே ஸதா³ .. 5 ..
ராமாய ராமப⁴த்³ராய ராமசந்த்³ராய வேத⁴ஸே .
ரகு⁴நாதா²ய நாதா²ய ஸீதாயா꞉ பதயே நம꞉ .. 6 ..
யன்மங்க³லம்ʼ ஸஹஸ்ராக்ஷே ஸர்வதே³வநமஸ்க்ருʼதே .
வ்ருʼத்ரநாஶே ஸமப⁴வத்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 7 ..
யன்மங்க³லம்ʼ ஸுபர்ணஸ்ய வினதா அகல்பயத் புரா .
அம்ருʼதம்ʼ ப்ரார்த²யானஸ்ய தத்தே ப⁴வது மங்க³ளம் .. 8 ..
மங்க³லம்ʼ கோஸலேந்த்³ராய மஹனீயகு³ணாப்³த⁴யே .
சக்ரவர்திதனூஜாய ஸார்வபௌ⁴மாய மங்க³ளம் .. 9 ..
அம்ருʼதோத்பாத³னே தை³த்யான் க்⁴னதோ வஜ்ரத⁴ரஸ்ய யத் .
அதி³திர்மங்க³லம்ʼ ப்ராதா³த்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 10 ..
த்ரீன் விக்ரமான் ப்ரக்ரமதோ விஷ்ணோரமிததேஜஸ꞉ .
யதா³ஸீன்மங்க³லம்ʼ ராம தத்தே ப⁴வது மங்க³ளம் .. 11 ..
ருʼதவ꞉ ஸாக³ரா த்³வீபா வேதா³ லோகா தி³ஶஶ்ச தே .
மங்க³லானி மஹாபா³ஹோ தி³ஶந்து ஶுப⁴மங்க³ளா: .. 12 ..
காயேன வாசா மனஸேந்த்³ரியைர்வா பு³த்³த்⁴யாத்மனா வா ப்ரக்ருʼதே꞉ ஸ்வபா⁴வாத் .
கரோமி யத்³யத் ஸகலம்ʼ பரஸ்மை நாராயணாயேதி ஸமர்பயாமி .. 13 ..
————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப்பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகப் பெருமாள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply