ஸ்ரீ திவ்ய தேசங்களில் கிடந்த திருக்கோல வகைகளும் –திரு ஹஸ்த வகைகளும் –ஆகம வகைகளும் —

பெருமையைக் கூறுவர். இறைவன், விஷ்ணு பண்புகளோடு கூடியவன் என்பது வைணவ அடிப்படைக் கொள்கை மேன்மையும், நீர்மையும்,
வடிவழகும் கூடிய பசுங்கூட்டமாயிற்று பரத்துவம் என்பது வ்யாக்யானம்.

மேன்மைக்குத் துணையானவை, உலகத் தோற்றத்திற்கு உதவுபவை,
அடியாரை உய்விக்க அமைந்தவை என இறைவனுக்குரிய பண்புகளை மூவகையாகக் கூறுவர்.

மேன்மைக்குத் துணையானவை-எம்பெருமானைச் சேரவேண்டுமென்று முக்தி ஒன்றையே குறிக்கோளாக் கொண்ட பக்தன் அடையக்கூடிய “பரத்வ” நிலையான அமர்ந்த திருக்கோலம்.

உலகத் தோற்றத்திற்கு உதவுபவை-தன்னை வியூகப்படுத்தி திருப்பாற்கடலில் எழுந்தருளி அபயக் குரல் கேட்கும் போதெல்லாம் ஆதரவளிக்கும் சயன திருக்கோலம். (பிரம்மனும்
உலகைப் படைக்கும் முன் சயன திருக்கோலத்திய பெருமானைத் தரிசித்த பின்பே உலகு படைக்கலுற்றான் என்பர்)

அடியாரை உய்விக்க அமைந்தவை-இதுவே விபவ அவதாரமாகவும், அர்ச்சாவதாரமாகவும், அந்தர்யாமியாகவும் இருந்து உலகு நடைபெற பக்தர்கட்கு அருளும் நின்ற திருக்கோலம்.

இந்த மூன்று குணங்கள் வைணவத்தில் எம்பெருமானின் கல்யாண குணங்களாச் சித்தரிக்கப்படுகின்றன. இந்த மூன்று குணங்களின்
பண்புகளைத் தான்

சௌல்ப்யம் – எளிமை–யசோதையின் கயிற்றுக்கு கட்டுண்டு நின்ற காட்சியை எளிமைக்கும்
சௌசீல்யம் – நீர்மை–மூவுலகும் இருள்தீர நடந்தமையை நீர்மைக்கும்
ஆர்ஜவம் – செம்மை-இலங்கையை கட்டழித்த நீர்மையை செம்மைக்கும்
வாத்ஸல்யம் – பரிவு–பாண்டவர்கட்காக தூது நடந்து சென்றதை பரிவுக்கும்
சுவாமித்வம் – தலைமை–அமரர்கள் தொழுதேத்த நிற்கும் தன்மையை தலைமைக்கும் என்றனர்.

கிடந்த திருக்கோலம் அல்லது சயன திருக்கோலம் -27 திவ்ய தேசங்கள்
வீற்றிருந்த திருக்கோலம் அல்லது அமர்ந்த திருக்கோலம் – 21 திவ்ய தேசங்கள்
நின்ற திருக்கோலம் – 60 திவ்ய தேசங்கள்

கிழக்கு திசையை நோக்கி – 79 திவ்ய தேசங்கள்
மேற்குத் திசையை நோக்கி – 19 திவ்ய தேசங்கள்
வடக்குத் திசையை நோக்கி – 3 திவ்ய தேசங்கள்
தெற்குத் திசையை நோக்கி – 7 திவ்ய தேசங்கள்

மகாவிஷ்ணுவின் சயனதலங்கள்:

ஸ்ரீரங்கம் – வீர சயனம்
மகாபலிபுரம் – தல சயனம்
திருமயம் – போக சயனம்
திருக்கோஷ்டியூர் – பால சயனம்
கும்பகோணம் – உத்தான சயனம்
திருவனந்தபுரம் – அனந்த சயனம்

திருமோகூர் – பிரார்த்தனா சயனம்
திருப்புல்லாணி – தர்ப்ப சயனம்
திருச்சித்திரக்கூடம் – போக சயனம்
திருநீர்மலை – மாணிக்க சயனம்
ஸ்ரீவில்லிபுத்தூர் – வடபத்திர சயனம்

1. ஜல சயனம்
2. தல சயனம்
3. புஜங்க சயனம் (சேஷசயனம்)
4. உத்தியோக சயனம்
5. வீர சயனம்

6. போக சயனம்
7. தர்ப்ப சயனம் (தர்ப்ப எனில் தர்ப்பை புல்)
8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை)
9. மாணிக்க சயனம்
10. உத்தான சயனம்

மனிதனாகப் பிறப்பெடுத்தவர்கள் அனைவரும் காண விரும்பும் அற்புதக் காட்சி இது.
திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருக்கும் திருமாலின் சயனக் கோலமே, ஜல சயனம்.
ஜல சயனத்தில் பெருமாள் கடல் மகள் நாச்சியார், பூமி தேவி மற்றும் திருமகளுடன் காட்சி தருவார்.
மண்ணில் பிறந்தவர்கள், தங்கள் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாத பெருமாளின் சயனக் காட்சி இது ஒன்று மட்டுமே.

புஜங்க சயனம் – திருவரங்கம்*
‘அரங்கனைக் கண்டதும் பண்ணிய பாவமெல்லாம் என்னை விட்டுப் பறந்தோடிவிட்டது’
என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட பெருமாளின் சயனம் தான்,
திருவரங்கம் புஜங்க சயனம். இதை, சேஷ சயனம்’ என்றும் கூறுகிறார்கள். `
பூலோக வைகுண்டம்’ எனப் போற்றப்படும் திருவரங்க நாதனைத் தரிசித்தால்,
பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் ஜல சயனப் பெருமாளை வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.

அனந்த சயனம் – பத்மநாபசாமி, திருவனந்தபுரம்
*அனந்த சயனம்*
அனந்தன்’ எனும் ஆதிசேஷன். ஆயிரம் தலைகொண்ட ஆதி சேஷ நாகத்தின் மீது, பெருமாள் பாற்கடலில்
யோக நித்திரை கொள்வதையே அனந்த சயனம்’ என்பார்கள்.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி, அனந்த சயனக் கோலத்தில் தான் பக்தர்களுக்குக் காட்சிதருகிறார்.
தூய்மையான பக்தியுடன் அனந்த பத்மநாபரை வணங்கினால் பாவம் நீங்கி, செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

தல சயனம் – மாமல்லை*
திருமால், உபதேச முத்திரையுடன் வலது கையை மார்பின் மீது வைத்தபடி ஆதிசேஷன் மீது
கடல் மல்லையில் பள்ளிகொண்டிருக்கும் காட்சியை தல சயனம்’ என்பார்கள்.
இங்கு, மூலவரே ஸ்தல சயனப் பெருமாள்’ என்றுதான் அழைக்கப்படுகிறார்.
புண்டரீக மகரிஷிக்குக் காட்சி யளித்ததைப் போலவே தரையில் படுத்து, பக்தர்களுக்கும் காட்சியளிக்கி றார்.
ஸ்தல சயனப் பெருமாளை வணங்கினால் முற்பிறப்பில் செய்த பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

உத்தியோக சயனம் – சாரங்கபாணிப் பெருமாள் கோயில்-*சாரங்கபாணி கோயில்*
சாரங்கபாணிப் பெருமாள் திருமழிசையாழ்வாருக்காக சயனத்திலிருந்து எழுந்து பேசுவது போலவே, உத்தியோக சயனத்தில் காட்சி தருகிறார்.
வேறெங்கும் காண முடியாத இந்த அற்புதக் காட்சியை திருக்குடந்தை சாரங்கபாணிப் பெருமாள் கோயிலில் மட்டுமே தரிசிக்க முடியும்.

வீர சயனம் – வீரராகவப் பெருமாள் கோயில், திருவள்ளூர்
*வீரராகவப் பெருமாள்*
உண்ட மயக்கத்தில் ‘எங்கு உறங்கலாம்?’ என்று  சாலிஹோத்ர முனிவரிடம் பெருமாள் கேட்க,
முனிவர் சுட்டிக் காட்டிய இடத்தில் தெற்கு நோக்கி ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டார் பெருமாள்.
‘ராவணனைக் கொன்ற ராமன் தான் பெருமாளாகக் காட்சியளிக்கி றார்’ என்று பாடிய திருமங்கை ஆழ்வாருக்கு,
வீரராகவப் பெருமாளாகவே திருவள்ளூரில் காட்சி யளிக்கிறார்.
வீரராகவப் பெருமாளின் சயனம் ‘வீர சயனம்’ எனப்படுகிறது. இங்கு, வீர சயனத்தில் பள்ளிகொண்டிருக்கும்
பெருமாளை வணங்கி, தானம் செய்தால், பலன் பன்மடங்காகப் பெருகும் என்பது நம்பிக்கை.

யோக சயனம் – கோவிந்தராஜப் பெருமாள், திருச்சித்திரக் கூடம்*ஆதிஜகந்தார்*
சிதம்பரம் திருச்சித்திரக்கூடத்தில், கோவிந்தராஜப் பெருமாள் யோக சயனத்தில், தாயார் புண்டரீக வல்லியுடன் காட்சியளிக்கிறார்.
ஆதிசேஷன்மீது பள்ளி கொண்டிருக்கும் கோவிந்தராஜப் பெருமாள் யோக நிலையில் காணப்படுவதால்,
இவரது சயனத்தை ‘யோக சயனம்’ என்று கூறுகிறார்கள்.
யோக சயனப் பெருமாளை வணங்கினால், அனைத்துப் பாவங்களும் விலகும் என்று கூறுகிறார்கள்.

தர்ப்ப சயனம் – ஆதிஜகந்நாதர், திருப்புல்லாணி-*ஆதிஜகந்நாதர்*
மற்ற தலங்களில், பெருமாள்தான் பல்வேறு சயனக் கோலங்களில் அருள்கிறார்.
ஆனால், திருப்புல்லாணி திருத்தலத்தில் மகாவிஷ்ணுவின் அவதாரமான ஶ்ரீராமபிரான் சயனக் கோலத்தில் அருள்கிறார்.
ஆதிசேஷன் லட்சுமணனாக அவதரித்திருந்தபடியால், ராமபிரான் இந்தத் தலத்தில் தர்ப்பைப் பாயில் சயனக் கோலம் கொண்டிருக்கிறார்.
இந்தத் தலத்து ஆதிஜகந்நாத பெருமாளை வழிபட்ட பிறகே, தசரதர் புத்தி ரகாமேஷ்டி யாகம் செய்ததாகச் சொல்லப்படுகிறது.
சயன திருக்கோலம் -சரணாகத திருக்கோலம் -தர்ப்பை சயனம் -ஆதி ஜெகந்நாத பெருமாள்
சேது அணை –3 யோஜனை அகலம் -10 யோஜனை-100 மைல் நீளம்
திரு உள்ளத்துடன் உள்ளத்துடன் பேசுவது போல் திருப்புல்லாணி அனுபவம் —

பத்ர சயனம் (ஆலிலை சயனம்) – வடபத்ர சாயி, ஸ்ரீவில்லிப்புத்தூர்
பத்ர’ என்றால் ஆலமர இலை என்று பொருள். பெயருக்கு ஏற்ப பெருமாள் வடபத்ர சயனத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் காட்சியளிக்கிறார்.
அதனால், மூலவரும் ‘வடபத்ர சாயி’ என்றே வணங்கப்படுகிறார்.
பக்தர்களின் பாவத்தைப் போக்கவே வடபத்ரசாயி பெருமாள் சுதபா முனிவரின் வேண்டுகோளின்படி காட்சியளித்தார் என்கின்றன புராணங்கள்.
இவரை வழிபட்டால், கல்யாண வரம் கூடும் என்பது ஐதீகம்

மாணிக்க சயனம் –  நீர் வண்ணன், திருநீர்மலை
*திருநீர்மலை*
நீர் வண்ணன்’, `நீலமுகில் கண்ணன்’ என பக்தர்களால் அழைக்கப்படும் பெருமாள், நான்கு கரங்களுடன் மாணிக்க சயனத்தில் திருநீர்மலையில் காட்சியளிக்கிறார்.
பூலோக அவதாரத்தை முடித்த பிறகு வைகுண்டம் செல்லும் பெருமாள் இங்கு நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான்
என்று அனைத்து நிலைகளிலும் காட்சிதருவதைத் தரிசிக்கலாம்.
மாணிக்க சயனப் பெருமாளை வணங்கினால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பாம்பணை சயனம்
திரு மெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி பெருமால் 43வது திவ்ய தேசமாகும்.
இங்கு சத்திய மூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர்.
.இங்கு பள்ளி கொண்ட நிலையில் இருக்கும் பெருமாள் அரைக்கண்ணை மூடிய நிலையில் இதழ்களில்
மென்மையான நகைப்புடன் பாம்பணை மேல் வலது கரம் ஆதிசேசனை அணைத்தபடி காட்சி தருகிறார்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை புஷ்கரணியில் இருந்து வெளியே வந்து தரிசனம் தரும் அத்தி வரதர்,
நகரேஷூ காஞ்சி என்று போற்றப்படும் காஞ்சி மாநகரில் உள்ளது வரதராஜ பெருமாள் கோயில். விஸ்வகர்மாவால்
அத்திமரத்தால் செய்யப்பட்ட வரதராஜர்தான் இந்தக் கோயிலின் மூலவர்.
அந்நியப் படையெடுப்பின் போது, அத்தி வரதரின் திருமேனியைப் பாதுகாக்கும் பொருட்டு,
ஆலயத்தின் புஷ்கரணியில், நீருக்குள் ஒளித்து வைத்திருந்ததாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு.

பிறகு பல வருடங்கள் கழித்து, காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள பழைய சீவரத்தில் உள்ள மலையில் வரதராஜரின் திருமேனி கண்டெடுக்கப்பட்டது.
பின்னர், எல்லோரும் கூடி, ‘இவரே இனி மூலவர்’ என உறுதி செய்து, ஆலயத்தின் கருவறையில் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினார்கள்.

ஒரு கட்டத்தில், தன்னை வெளிப்படுத்திக் கொள்ள திருவுளம் கொண்டார் அத்தி வரதர்.
கோயிலின் குளமானது, வற்றவே வற்றாது என்பார்கள். ஆனால், குளத்தில் நீர் வற்றியது. உள்ளிருந்த அத்தி வரதர் அகிலத்து மக்களுக்கு திருக்காட்சி தந்தார்.
அப்போது ஊர்ப்பெரியவர்களும் நிர்வாகிகளும் கூடிப் பேசினார்கள்.
‘இப்போது அத்தி வரதருக்கு பூஜைகள் செய்துவிட்டு, ஒருமண்டல காலத்துக்குப் பிறகு, மீண்டும் புஷ்கரணியில் நீருக்குள் விட்டுவிடுவோம்.
அதன் பின்னர், 40 வருடத்துக்கு ஒருமுறை வெளியே எடுத்து, பூஜைகள் செய்வோம்’ என முடிவு செய்தார்கள்.

அதன்படி இன்றளவும் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே வந்து, மக்களுக்கு சேவை சாதிக்கிறார் அத்தி வரதர்.

இத்தனை பெருமை மிகுந்த வரதராஜர் ஆலயத்துக்கும் வலிமை மிக்க காயத்ரி மந்திரத்துக்கும் பல தொடர்புகள்  உள்ளன.
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலின் மதில், மிகப்பிரமாண்டமாக உயர்ந்து நிற்பதைப் பார்க்கலாம்.

காயத்ரி மந்திரத்தின் எழுத்துகள் 24. இந்தப் பிரமாண்டமான மதிலும் 24 அடி உயரங்களைக் கொண்டது.

இந்தக் கோயிலில் இரண்டு திருக் குளங்கள் உள்ளன. கோயில் குளத்துக்கான படிக்கட்டுகள் 24 என்றே அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டு அடுக்குகள் கொண்ட சந்நிதி இங்கே அமைந்துள்ளது.
நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் வரதராஜரைத் தரிசிப்பதற்கு 24 படிகளைக் கடந்து செல்ல வேண்டும்.

இன்னொரு சுவாரஸ்யம்… திருக்குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு காட்சி தந்து கொண்டிருக்கிறாரே அத்தி வரதர். .
முதல் 24 நாட்கள், சயன திருக்கோலத்தில்  தரிசனம் தருவார்
பிறகு அடுத்த 24 நாட்களுக்கு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருவார் .

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெற்றுவரும் ஆடிப்பூர திருவிழாவில் 7-ம் திரு நாளில்
ஆண்டாள் மடியில் வியூக சுந்தரராஜப் பெருமாள் சயன திருக்கோலத்தில் காட்சி தந்து அருள்கிறார்

108 திவ்ய தலங்களில் ஒன்றான விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில்
ஒவ்வொரு வருடமும் ஆடிப்பூர திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அன்று திருத்தேரோட்டம் நடைபெறும். மொத்தம் பத்து நாட்கள் நடைபெறும்
இந்த திருவிழாவில் 7 ஆம் திருநாள் அன்று நடக்கும் சயன திருக்கோல சேவை மிகவும் புகழ் பெற்றதாகும்.
இந்த சயன திருக்கோல சேவை எனப்படும் வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டுமே நடைபெறும் என்பதால்
நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

திரு வெஃகா,
பிரம்மா அஸ்வமேத யாகம் நடத்த சத்யா விரத தலமான காஞ்சிக்கு வந்து, உத்தரவேதி என்னும் யாகசாலையில் யாகம் வளர்த்தார்.
ஆனால் தனது மனைவியான சரஸ்வதியை விட்டு யாகம் தொடங்கினர்.
இதனால் வெகுண்ட சரஸ்வதி உலகை இருளாக்க, நாராயணன் விளக்கொளி பெருமாளாக திருதன்காவில் தோன்றினர்.
யாகத்தை தொடர்ந்த பிரம்மாவை தடுக்க, சரஸ்வதி சரபம் எனும் பறவை மிருக உருவில் அசுரனை ஏவ,
நாராயணன் எட்டு கைகளில் திவ்ய ஆயுதங்களுடன் அட்டபுயகரனாய் வந்து சர்பத்தை அழித்தார்.
பின்னர் பிரம்மா மீண்டும் தொடர்ந்த யாக தீயை அழிக்க, சரஸ்வதி தேவியே வெள்ளப்பெருக்காய் வேகவதி ஆறாய் பெருகிவர,
பெருமாள் தானே அணையாய் நதியின் குறுக்கே கிடந்து நதியின் போக்கை மாற்றி யாகத்தின் புனிதத்தீயை காத்த தலமே திருவெக்கா ஆகும்.
இதனாலே பெருமாள் வெக்கணை கிடந்தான் என அழ்வர்களால் அருளப்படுகிறார்.
மூலவர் – யதோத்தகாரி பெருமாள் ,சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
தாயார் : ஸ்ரீ கோமள வல்லி நாச்சியார்

தீர்த்தம் – பொய்கை ,புஷ்கரணி
மங்களா சாசனம் -பொய்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பேயாழ்வார், திருமங்கை ஆழ்வார்

இசைந்த வரவமும் வெற்புங் கடலும் பசைந்தாங் கமுது படுப்ப-
அசைந்து கடைந்த வருத்தமோ கச்சி வெஃகாவில் கிடந்ததிருந்து நின்றதுவு மங்கு ~ பேயாழ்வார்
என்று வேண்ட திருமகள்நாதனும் அவ்வண்ணமே செய்தான் என்பது வரலாறு.
இதனாலே பெருமாள், சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என போற்றப்பெருகிறார்.
தல பெருமை
பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. பொய்கையாழ்வார் இத்தலத்தில் அவதாரம் செய்தார்.
இங்குள்ள பொய்கையாற்றின் பொற்றாமரையில் அவதாரம் செய்ததால் பொய்கை ஆழ்வார் எனப்பட்டார்.
எல்லா கோயில்களிலும் பெருமாளின் சயன திருக்கோலம் இடமிருந்து வலமாக இருக்கும்.
ஆனால் திருமழிசை ஆழ்வாருடன் சென்று, மறுபடி வந்து படுத்ததால் இத்தலத்தில் பெருமாள் வலமிருந்து இடமாக சயனித்திருப்பார்.
சரஸ்வதி தேவி வேகவதி ஆறாக மாறி விரைந்தோடி வரும்போது, அந்த நதியை தடுக்க மூலவரே சயனத்தில் இருப்பதாக கூறுவர்.
வேகவதி ஆறே “வெக்கா’ என அழைக்கப்படுகிறது.தல வரலாறு
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 51வது திவ்ய தேசம்.
பார்க்கவ மகரிஷியின் மகனாக பிறந்தவர் திருமழிசை ஆழ்வார். இவர் திருமழிசை என்னும் ஊரில் அவதரித்தார்.
பிரம்பறுக்க வந்த திருவாளன் என்பவர் இவரை வளர்த்தார்.
பிறந்தது முதல் பால் கூட குடிக்காத குழந்தையை கண்ட வேளாளர் தன் மனைவியுடன் பசும்பால் எடுத்துவந்து கொடுத்தார்.
அந்த நாள் முதல் தொடர்ந்து அவர்கள் கொடுத்த பாலை அருந்தி வளர்ந்தார்.

ஒருநாள் பாலை மீதம் வைத்து விட்டார் திருமழிசை. அப்போது வேளாளர் தன் மனைவியுடன் மீதமுள்ள பாலை சாப்பிட்டவுடன் முதுமை மாறி இளமை பெற்றனர்.
பின் இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது அதற்கு கனிகண்ணன் என பெயரிட்டு ஆழ்வார் உடனே வளர்ந்து, பின் ஆழ்வாரின் சீடரானார்.
ஒரு முறை காஞ்சிபுரம் வந்த திருமழிசை ஆழ்வார், திருவெக்கா தலத்திற்கு வந்த பெருமாளுக்கு பல ஆண்டுகள் சேவை செய்தார்.
ஆசிரமத்தை சுத்தம் செய்யும் மூதாட்டி தான் இளமையாக இருக்க விரும்பியதால் ஆழ்வார் அவரை இளமையாக்கினார்.
இவளது அழகை கண்டு மயங்கிய பல்லவ மன்னன், அவளை தன் மனைவி ஆக்கினார்.
காலம் செல்ல செல்ல மன்னர் முதியவரானார், அவரது மனைவி இளமையாகவே இருந்ததால், இதை கண்டு கவலைப்பட்டு
தனக்கும் இளமை வேண்டும் என ஆழ்வாரின் சீடரான கனி கண்ணனிடம் வேண்டினர்.
அதற்கு, கேட்டவர்க்கு எல்லாம் அந்த வரம் தர முடியாது என்றார் சீடர்.
மன்னருக்கு கோபம் வந்து கணிக்கண்ண சீடரை நாடு கடத்தும் படி உத்தரவிட்டார்.
இதை அறிந்த ஆழ்வார் சீடனுடன் தானும் வெளியேற முடிவு செய்தார்.
நாங்கள் இல்லாத இடத்தில் உனக்கும் வேலை இல்லை எனவே நீயும் எங்களுடன் வந்துவிடு என பெருமாளிடம் கூறினார்.
கணி கண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணி வண்ணா நீ கிடக்க வேண்டா – துணிவுடைய
செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்

என்று விண்ணப்பம் செய்தார்.
அப்பெருமானும் அப்படியே செய்து திருமழிசைப்பிரானைத் தொடர்ந்து சென்றார்.
பெருமாளை தொடர்ந்து திருமகளும் செல்ல காஞ்சி நகரம் இருண்டு மங்கலம் குறைந்து.
இதை மறுநாள் அறிந்த அரசன் வருத்தமுற்று கணிகண்ணனைத் தேடிச்சென்று
அவரையும் அவர் குரவரையும் காஞ்சிப்பதிக்குத் திரும்பும்படி வேண்டிக் கொண்டனர்.
கணிகண்ணன் திருமழிசைப் பிரானை வேண்ட அவரும் ஆண்டவனை நோக்கி வேண்ட திருமகள்நாதனும் அவ்வண்ணமே செய்தான் என்பது வரலாறு.
இதனாலே பெருமாள், சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என போற்றப்பெருகிறார்.

எல்லா கோயில்களிலும் பெருமாளின் சயன திருக்கோலம் இடமிருந்து வலமாக இருக்கும்.
ஆனால் திருமழிசை ஆழ்வாருடன் சென்று, மறுபடி வந்து படுத்ததால் இத்தலத்தில் பெருமாள் வலமிருந்து இடமாக சயனித்திருக்கிறார்.

சரஸ்வதிதேவி, வேகவதி ஆறாக மாறி விரைந்து ஓடி வரும்போது அந்த நதியை தடுக்க மூலவரே சயனத்தில் இருப்பதாகக் கூறுவர்.
வேகவதி ஆறே “வெக்கா’ என அழைக்கப்படுகிறது.

இத்தல பெருமாள் மேற்கு பார்த்த கோலத்தில் புஜங்க சயனத்தில் காட்சி தருகிறார்.
இத்தல பெருமாளை பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், கணி கண்ணன், பிரம்மா, சரஸ்வதி ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர்.
இங்கு ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் ஆகியோர் தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.
இத்தல மூலவரின் விமானம் வேதசார விமானம் எனப்படும்.

—————–

பல திருக் கோயில்களில் இருக்கும் எம்பெருமான்கள் ஒவ்வொரு விதமாக தம் திருக் கரங்களை வைத்துக் கொண்டு இருப்பார்கள்.

இவற்றை ஹஸ்தம் என்று வழங்குவர். பலவகை ஹஸ்தங்களில் மிகவும் பரவலானவை சில-

1. அபய ஹஸ்தம்
2. வரத ஹஸ்தம்
3. ஆஹ்வான ஹஸ்தம்

1. அபய ஹஸ்தம்
பெருமாள் தன் வலது திருக்கரத்தின் விரல்களை மேல் நோக்கி வைத்து இருப்பார்.
இதற்கு பொருள் “அஞ்சேல்! பயப்பட வேண்டாம். அபயம் தருகிறேன்” என்பதாகும்.
இது பல கோயில்களில் காணப்படும் ஹஸ்தம்.
திருவரங்கம் உற்சவர் நம்பெருமாள் அபய ஹஸ்தம் வைத்துள்ளார்.

இறைவனின் அல்லது இறைவியின் வலக்கை விரல்கள் மேல்நோக்கி நீட்டிய நிலையிலும்,
உள்ளங்கை எதிரில் இருக்கும் பக்தர்களுக்கு அடைக்கலம் தரும் நிலையிலும் இருப்பது அபய ஹஸ்தம் அல்லது அபய முத்திரை எனப்படும்.
இதில் இறைவன் அல்லது இறைவி தன் எதிரில் நின்று தன்னை வழிபடும் பக்தர்களுக்கு, ‘‘நான் உங்களுக்கு அடைக்கலம் தருகிறேன்.
நான் உங்களைக் காப்பாற்றுகிறேன், நான் இருக்கும்போது நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை;
கவலைப்பட வேண்டியதில்லை’’ என்று உணர்த்தும் கருத்துகள் அடங்கியுள்ளன.

2. வரத ஹஸ்தம்
பெருமாள் தன் வலது திருக்கரத்தின் விரல்களை தன் திருவடியை காட்டி வைத்திருப்பார்.
இதன் பொருள், “தன் திருவடியை சரணம் என்று அடைந்தவருக்கு, சரணாகதி தருவேன்” என்பதாகும்.
திருப்பதி மூலவர், வேங்கடநாதன் வரத ஹஸ்தம் வைத்துள்ளார்.

வரத ஹஸ்தம் – இறைவனின் கை விரல்கள் கீழ் நோக்கி நீட்டியபடியும், உள்ளங்கை எதிரில் இருக்கும் பக்தர்களை நோக்கியும் இருக்கும்.

ஊரு ஹஸ்தம் – இறைவனின் கையானது தொடையில் வைத்தபடி இருக்கும். ஊரு என்றால் தொடை என்று பொருளாகும்.

இறைவன் அல்லது இறைவியின் இடது உள்ளங்கை எதிரில் இருக்கும் பக்தர்களின் பக்கமும்,
விரல்கள் திருவடிகளைச் சுட்டிக் காட்டும் நிலையிலும் இருக்கும் வடிவம் வரத ஹஸதம் அல்லது வரத முத்திரை எனப்படும்.
இதில் இறைவன் அல்லது இறைவி, ‘‘என் திருவடிகளை நீங்கள் சரணடைந்தால், அனைத்து நன்மைகளையும் அடைவீர்கள்;
முழுமை பெறுவீர்கள்’’ என்று உணர்த்தும் கருத்துகள் அடங்கியுள்ளன.

3. ஆஹ்வான ஹஸ்தம்
பெருமாள் தன் வலது அல்லது இடது திருக்கரத்தின் ஆள்காட்டி விரலை சற்று மடக்கி நம்மை நோக்கி வைத்திருப்பார்.
இதன் பொருள், “அவர் நம்மை அருகில் வா நான் ரக்ஷிக்கிறேன் ” என்பதாகும்.

திருவல்லிக்கேணி தெள்ளிய சிங்கர் உற்சவர் ப்ரஹலாத வரதன் ஆஹ்வான ஹஸ்தம் வைத்துள்ளார்.

திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே எம்பெருமான் அழகியசிங்கராக சேவை சாதிக்கிறார்.
மூலவர் யோகநரசிம்ஹர்  –
உத்சவர் தெள்ளியசிங்கர்
அழைத்து, அருள் பாலிக்கும் பெருமாள் – ஒரு கை பக்தர்களை அழைக்கும் ‘ஆஹ்வான ஹஸ்தம்’
மற்றொன்று – பக்தர்களை பாதுகாத்து அரவணைக்கும் அபய ஹஸ்தம்.
ஸ்ரீநரசிம்மர் என்றால் உக்கிரம் .. அரக்கனை சிம்ம உருவாய் அழித்த அவதாரம் அல்லவா !

————

ஹஸ்த முத்திரைகள் மொத்தமாக 32 வகைகள் இருக்கின்றன.

ஹஸ்த முத்திரைகள் மொத்தமாக 32 வகைகள் இருக்கின்றன.
அவற்றில் 24 முத்திரைகள் தொழிற்கை முத்திரைகள் ஆகும்.
மீதம் எழிற் கை முத்திரைகள் என நான்கும்,
இரட்டை கை முத்திரைகள் நான்கும் உள்ளன.

தொழிற் கை முத்திரைகள்–

  1. அபய ஹஸ்தம்
  2. வரத ஹஸ்தம்
  3. கடக ஹஸ்தம்
  4. சிம்மகர்ண ஹஸ்தம்
  5. வியாக்யான ஹஸ்தம்
  6. சூசி ஹஸ்தம்
  7. தர்ஜனி ஹஸ்தம்
  8. கர்த்தரீமுக ஹஸ்தம்
  9. அலபத்ம ஹஸ்தம்
  10. விஸ்மய ஹஸ்தம்
  11. பல்லவ ஹஸ்தம்
  12. நித்ரா ஹஸ்தம்
  13. அர்த்த சந்திர ஹஸ்தம்
  14. அர்த்த பாதக ஹஸ்தம்
  15. திரிசூல ஹஸ்தம்
  16. முஷ்டி ஹஸ்தம்
  17. சிகர ஹஸ்தம்
  18. பூ ஸ்பரிச ஹஸ்தம்
  19. கடி ஹஸ்தம்
  20. ஊரு ஹஸ்தம்
  21. ஆலங்கன ஹஸ்தம்
  22. தனுர் ஹஸ்தம்
  23. டமரு ஹஸ்தம்
  24. தாடி ஹஸ்தம்
  • ஸூசி ஹஸ்தம் – ஆள் காட்டி விரலை மேல் நோக்கி காட்டிய நிலையும், மற்ற விரல்கள் மடித்தும் உள்ளதாக இருக்கும்.
  • தர்ஜனி ஹஸ்தம் – ஆள் காட்டி விரலை மேல் நோக்கி காட்டிய நிலையும், மற்ற விரல்கள் மடித்தும் உள்ளதாக இருக்கும்.
  • கடி ஹஸ்தம் – சிலை தன்னுடைய இடக்கையை இடையின் மீது பற்றியபடி இருக்கும்.
அபய முத்திரை
  • அபய ஹஸ்தம் – சிலையின் கை விரல்கள் மேல் நோக்கி நீட்டிய நிலையிலும், உள்ளங்களை எதிரில் இருக்கும் பக்தர்களை நோக்கியும் இருக்கும். [1]
வரத முத்திரை
  • வரத ஹஸ்தம் – சிலையின் கை விரல்கள் கீழ் நோக்கி நீட்டியபடியும், உள்ளங்கை எதிரில் இருக்கும் பக்தர்களை நோக்கியும் இருக்கும். [1]
  • ஊரு ஹஸ்தம் – சிலையின் கையானது தொடையில் வைத்தபடி இருக்கும். ஊரு என்றால் தொடை என்று பொருளாகும்.
  • கடக ஹஸ்தம்
சிம்ம கரண ஹஸ்தம்
  • சிம்ம கர்ண ஹஸ்தம்
  • அஞ்சலி முத்திரை
  • இரு கை முத்திரைகள்

    கோட்டோவியங்களுடன் விளக்கம்
    வரிசை எண் முத்திரைகள் கோட்டோவியம்
    1 அஞ்சலி ஹஸ்தம்
    2 தியான ஹஸ்தம்
    3 புஷ்பபுட ஹஸ்தம்
    4 தர்மசக்கர ஹஸ்தம்

    எழிற் கை முத்திரைகள்[தொகு]

    கோட்டோவியங்களுடன் விளக்கம்
    வரிசை எண் முத்திரைகள் கோட்டோவியம்
    1 கஜ ஹஸ்தம்
    2 தண்ட ஹஸ்தம்
    3 டோல ஹஸ்தம்
    4 பிரசாரித ஹஸ்தம்

ஆகமங்கள்
—————
ஆகமங்கள் என்பது இந்து சமயத்தின் முப்பெரும் பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம் ஆகிய
சமயங்களின் கொள்கை விளக்கங்களையும் வழிபாட்டு முறைகளையும் கூறும் நூல் வகை ஆகும்.
இவை பொதுவாகத் தென்னிந்தியாவிலேயே புழக்கத்தில் உள்ளன. இவை வேதங்களை அடிப்படையாகக் கொள்ளாதவை.
எனினும் இவை வேதங்களுக்கு மாறானவையும் அல்ல.
ஆகமங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்குவகையான வழிபாட்டு முறைகள் பற்றிக் கூறுகின்றன.
ஆகமம் (ஆ=அண்மை சுட்டும் உபசர்க்கம் + கம்=போதலை உணர்த்தும் வினையடி) என்னும் வடசொல்
‘போய்ச் சேர்தல்’, ‘வந்தடைதல்’ என்னும் பொருளைத் தருவது.
இதற்குத் “தொன்று தொட்டு வரும் அறிவு” என்றும் “இறைவனை அடைவதற்கான வழியைக் கூறும் ஞான நூல்” என்றும் அறிஞர் பொருள் கூறுவர்.
‘ஆகமமாகி நின்று அண்ணிப்பான்’ என வரும் மாணிக்க வாசகர் கூற்றிலே ‘ஆகம வழி நிற்பார்க்கு இறைவன் அணுகி வந்து அருள்புரிவான்’ என்னும்
பொருள் பெறப்படுகின்றது. ஆகமங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவை,

1. சைவ ஆகமங்கள்
2. வைஷ்ணவ ஆகமங்கள்
3. சாக்த ஆகமங்கள் என்பனவாகும்.

சைவ ஆகமங்கள் 28 ஆகும். அவையாவன,

1. காமிகம் – திருவடிகள்
2. யோகஜம் – கணைக்கால்கள்
3. சிந்தியம் – கால்விரல்கள்
4. காரணம் – கெண்டைக்கால்கள்
5. அஜிதம் அல்லது அசிதம் – முழந்தாள்
6. தீப்தம் – தொடைகள்
7. சூக்ஷ்மம் – குய்யம் (அபான வாயில்)
8. சகஸ்ரகம் அல்லது ஸ்ஹஸ்ரம் – இடுப்பு
9. அம்சுமதம் அல்லது அம்சுமான் – முதுகு
10. சுப்ரபேதம் – தொப்புள்
11. விஜயம் – வயிறு
12. நிஷ்வாசம் அல்லது நிச்வாசம் – நாசி
13. ஸ்வயம்புவம் அல்லது ஸ்வாயம்புவம் – முலை மார்பு
14. அனலம் அல்லது ஆக்னேயம் – கண்கள்
15. வீரபத்ரம் அல்லது வீரம் – கழுத்து
16. ரௌரவம் – செவிகள்
17. மகுடம் – திருமுடி
18. விமலம் – கைகள்
19. சந்திரஞானம் – மார்பு
20. பிம்பம் – முகம்
21. புரோத்கீதம் – நாக்கு
22. லளிதம் – கன்னங்கள்
23. சித்தம் – நெற்றி
24. சந்தானம் – குண்டலம்
25. சர்வோக்தம் அல்லதி ஸர்வோத்தம் – உபவீதம்
26. பரமேஸ்வரம் அல்லது பரமேசுரம் – மாலை
27. கிரணம் – இரத்தினா பரணம்
28. வாதுளம் – ஆடை

வைஷ்ணவ ஆகமங்கள்
1. பாஞ்சராத்திரம்
2. வைகானசம் என்பனவாகும்

——————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading