ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது –துஷ்கரம் க்ருதவான் ராமோ-சுந்தர -15-23-

துஷ்கரம் க்ருதவான் ராமோ ஹீநோ யத நயா ப்ரபு
தாரயத் யாத்மநோ தேஹம் ந சோகே நா வசீததி-சுந்தர -15-23-

துஷ்கரம் க்ருதவான் ராமோ -ஸ்ரீ ராமபிரான்  செயற்கரிய செயலை செய்தார்
ஹீநோ யதநயா ப்ரபு -அநயா ஹீ ந -ப்ரபு -இந்த சீதா தேவியைப் பிரிந்து இருந்த போதிலும் பிறர் வருத்தம் அறியாத ப்ரபுவாய்
தாரயத் யாத்மநோ தேஹம் -ஆத்மந   தேஹம் -தாரயதி யத் -தன் திருமேனியைத் தரிக்கிறார் என்பதுவும்
ந சோகே நாவசீததி-சோகேந ந அவசீததி யத் -துன்பத்தால்-நசிக்க வில்லை என்பதும் செயற்கரிய செயல் –

அவதாரிகை –
அந்யத்ர பீஷ்மாத் காங்கேயா  தந்யத்ர ச ஹநூமத -ஹரிணீ குரமாத்ரேண சர்மணா மோஹி தம் ஜகத் -என்று
பீஷ்மனோடு ஒக்க மான் குளப்படியோடு ஒத்த ஸ்திரீயின் அவயவ விசேஷத்தில் அகப்படாதே
அத்யந்த விரக்தனான திருவடி அகப்பட பிராட்டியைத் திருவடி தொழுது
பிராட்டி வை லஷண்யத்தையும்
இவள் எழுந்து அருளி இருக்கிற தைன்யத்தையும் கண்டு
இவளை இப்படி இருத்துவதே -என்று
பெருமாளை சிஷ்ட கர்ஹை பண்ணுகிறான் –

துஷ்கரம் க்ருதவான் ராமோ-
நாம் பெரிய கடலைக் கடந்து அரும் தொழில் செய்தோமாக நினைத்து இருந்தோம் –
பெருமாள் நம்மிலும் அரும் தொழில் செய்தாராய் இருந்தது –
1-ராம –
ஏக தார வ்ரதராய்
பிராட்டியை ஒழிய வர்த்தியாத பெருமாளுக்கு துஷ்கரம் பிரணயிகளாய்ப் பிறந்தாராகச் செய்ய அரிது ஒன்றைச் செய்தார்
துஷ்கரம் –
காட்டுக்குப் போகிற போது அகப்பட கூடக் கொண்டு போன பெருமாள் தமக்கும்
இதுக்கு முன்பு செய்ய வரிது
இஸ் சாஹசத்தைச் செய்யக் கோலி தவிர்ந்தாரோ என்னில்
க்ருதவான்
பத்தும் பத்தாக அனுஷ்டித்திலரோ
இப்படி இவர் செய்தது தான் ஏது என்னில்
2-ராம –
பிராட்டியைப் பிரிந்து குறி அசங்காமல் இருந்தார்
3-ராம –
பிராட்டியைப் பிரிந்தால் புகர் அழிந்து எழில் குலைந்து முகம் வெளுத்து உடம்பு இளைத்து
இட்ட கால் இட்ட கைகளாய் -திருவாய் -7-2-4-இருக்க வேண்டாவோ –
இத்தைப் பற்ற இ றே பிராட்டியும்
கச்சினன தத்தேம சமாந வர்ணம் தஸ்யா நநம் பத்ம சமாந கந்தி -சுந்தர -37-28-என்று
அம்முகத்தில் ஒளியும் மணமும் மாறாதே  -பொன் போல ஒளியும் -தாமரை போலே மணமும் -செல்லா நின்றதோ என்று கேட்டது
4- ராம –
பொடி மூடு தணலாய் இருந்தார்
வடிவில் பச்சையைக் காட்டித் துவக்குக் கொண்டு போய் நடுக் காட்டிலே தள்ளுவதே –

கர்மத்தாலே அபஹ்ருதை யானாள் அல்லது இவர் தள்ளினாரோ -என்ன
இவளைக் கண்டு வைத்தால் அவர் தாம் அகலப் பெறுவாரோ
1-ஹீநோ யத நயா-
இவர் இவளை விட்டு மான் பின்னே போகப் பட்டன்றோ இவ்வபஹாரம் தான் பிறந்தது –
2-அநயா ஹீந –
இறையும் அகலகில்லேன் -திருவாய் 6-10-10–என்கிற இவளையா பிரிவது
3-அநயா ஹீந –
மதுப்பினுடைய நித்ய யோகத்தையும் குலைத்திலரோ
4-அநயா ஹீந —
அநந்ய பாவாம நு ரக்த சேத நாம் த்வயா விஹீ நாம் மரணாய நிச்சிதாம் -அயோத்யா -27-22-என்று
சொன்ன இவளை யன்றோ பிரிவது
5- அநயா ஹீந —
ச்ரத்தயா தேவோ  தேவத்வமச்நுதே -யஜூ காட -3-3-என்றும்
அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய சா ஜனகாத்மஜா -ஆரண்ய -37-18-என்றும்
அனந்யா ராகவேணாஹம பாஸ்கரேண ப்ரபாயதா -சுந்தர -21-16-என்றும்
எல்லாப் படியாலும் தனக்கு மினுக்கம் உண்டாக்குகிற இவளையா விடுவது-
1-ப்ரபு-
ஒன்றும் அறியாதாரே இருந்தார் –
ப்ரபுத்வமாவது அறியாத்தனம் இ றே-
2- ப்ரபு –
மேன்மை யுண்டு இத்தனை போக்கி நீர்மை இல்லையே இருந்தது
3- ப்ரபு –
ஆனை குதிரை கட்டவும்
படையாளவும்
கணக்குக் கேட்கவும்
ஆயுதம் வஹிக்கவும்
கற்றார் இத்தனை போக்கி பிரணயித்வத்தில் புதியது உண்டிலராய் இருந்தது
4-ப்ரபு –
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் -நாச் திரு -13-1-என்றும்
பஹூதா விஜாயதே -புருஷ ஸூ க்தம் -என்றும்
ப ஹூநி மே வ்யதீதாநி ஜன்மாநி -ஸ்ரீ கீதை -4-5-என்றும்
பிறப்பில் பல்பிறவிப் பெருமான் -திருவாய் -2-9-5-என்றும்
பிறக்கிற பிறவி வெள்ளத்தில் ஒரு பெண் பிறவி பிறந்தானாகில்  இ றே
இவ்வினையாளனாய் பெண் பிறந்தார் எய்தும் பெரும் துயர் அறிவது-

இப்படி பிரபுக்களாய் இவர் செய்ததுஎன் என்னில்
1-தாரயத் யாத்மநோ தேஹம் –
பிராட்டியைப் பிரிந்த பெருமாள் கடலிலே புக்காராய் முடிந்தார் என்று பேர் படைக்க வேண்டாவோ
2-தாரயதி –
தரித்து இருப்பதே
இத்தனை போது சத்தை அழிய வேண்டாவோ
நித்தியமான ஸ்வரூபத்தை அழிக்கப் போமோ -என்ன
3-ஆத்மா நோ தேஹம் –
நித்தியமான ஸ்வரூபம் இருக்க
இச்சா க்ருஹீதாபி மதோருதேக-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-84-என்று
வந்தேறியான உடம்பை விடலாகாதோ –
நித்யம் நித்யாக்ருதிதரம் -சாத்வதம் -என்று  -ஸ்வரூபத்தோபாதி ரூபமும் நித்யம் அன்றோ என்ன
4-ராம ஆத்மா நோ தேஹம் –
அப்ராக்ருதமான சரீரத்தைச் சொன்னேனோ –
ஆதி அஞ்சோதி வுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த படியை விட்டால் ஆகாதோ
5- ஆத்மா நோ தேஹம –
தாம் ஒரு பிராட்டி யாய்-
பராதீ நா ஸ்த்ரிய சர்வா -என்றும்
மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தே -திருவாய்-5-4-3-என்றும்
பரத்ரவ்யமாய் நோக்கி  இருக்கிறாரோ
தம்மைத்தான உடம்பைப் போக விட்டால் ஆகாதோ
6- ஆத்மா நோ தேஹம்
தம்முடம்பு தம்மதோ
பக்தா நாம் -ஜிதந்தே -1-5-என்று பிறரது அன்றோ
பிறர் உடம்பை என் செய்யச் சுமக்கிறார் –

அவர் செய்வது என் முடிக்கைக்கு கருவி இல்லை யாகில் -என்ன
1-ந சோகே நா வசீததி-
சோகம் இருக்க வேறு கருவி வேணுமோ –
2- ந சோகே நா வசீததி-
சோகாக்நி பிரதஷ்யதி -என்று சோகம் ஆகிற பெரு நெருப்பு இருக்க வேறு கேட்க வேணுமோ –

——————

து3ஷ்கரம் க்ருதவாந் ராமம் ஹீநோ யத3நயா ப்ரபு4: |

தா4ரயத்யாத்மநோ தே3ஹம்  ஶோகேநாவஸீத3தி ||

பொழிப்புரை:
ஶ்ரீராமபிரான் செயற்கரிய செயலைச் செய்தார். இந்த ஸீதாதேவியைப் பிரிந்திருந்த போதிலும்,
(பிறர் வருத்தமறியாத பிரபுவாய்) தன் திருமேனியைத் த4ரிக்கிறார் என்பதுவும்,
துன்பத்தால் நஶிக்கவில்லை என்பதுவும் (செயற்கரிய செயல்கள்).

அஶோக வனத்தில் பிராட்டியின் பெருமையைக் கண்டும், அவள் எழுந்தருளி யிருந்த நிலைமையைக் கண்டும்
அநுமான் இப்படி எண்ணிச் சொல்கிறார். நான் பெரிய கடலைக் கடந்து அரிய பெரிய செயலைச் செய்துமுடித்துவிட்டதாக நினைத்திருந்தேன்.
ஆயின், இராமபிரான் என்னிலும் அரிய காரியத்தைச் செய்தாரென்று இப்போது தெரிகிறது.
ஏகதா4ரவிரதன் என்று பிரஸித்3தி4 பெற்ற ராமனுக்கு இவளைப் பிரிந்திருப்பது அரிய செயல். செய்யவரியதை
(துஷ்கரம்) இதுக்கு முன்பு இவருக்கும் இக்காரியம் செய்யமுடியாது.
அதனாலன்றோ காட்டுக்குப் போகும் போது இவளைத் தன்னுடனே கூட்டிக் கொண்டு போனார்.
இந்த ஸாஹஸமான காரியத்தைச் செய்தே முடித்து விட்டார் (க்ருதவாந்).

இவர் இப்படி செய்தது தான் ஏதென்னில் ராமனாக (அழகனாக) இருந்ததே முதல் குற்றம்.
பிராட்டியைப் பிரிந்த பின்னர் ஒரு சிறிதும் மாறுபட வில்லை.
பிராட்டியைப் பிரிந்து ஒளி யிழந்து, அழகு குறைந்து, முகம் வெளுத்து, உடல் இளைத்து
‘இட்டகால் இட்டகையளாய்’ [திருவாய் 7-2-4] என்கிறபடியே கை, கால்களை அசைக்கமுடியாமல் இருக்க வேண்டாவோ?
அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமலிருந்தாரே! நிறத்தை இழக்காமல் குணத்தை இழந்தாரே.
இத்தை நினைத்தன்றோ பிராட்டியும், அவருடைய ‘திருமுகம் பொன்போல் ஒளிவீசுவதாய், தாமரைபோல் மணம் கமழ்வதாயுமுள்ளதா?’
[கச்சிந்ந தத்3தே4மஸமாந வர்ணம் தஸ்யாநநம் பத்3ம ஸமாந க3ந்தி4; ஸு.கா. 36-28] என்று
முகத்தில் ஒளியும் மணமும் மாறாதே இருந்ததோ என்று கேட்டது!
ராமன் அழகில் அழகியவரா யிருந்தாரே ஒழிய நெஞ்சில் ஈரமில்லை. நீறு பூத்த நெருப்பாயிருந்தார்.
வடிவழகைக் காட்டி ஈடுபடுத்திக் கொண்டு போய் நடுக் காட்டில் தள்ளி விடுவதே!

‘என்னுடைய பெரிதான பாபம் ஒன்று இருக்கிறது. இதில் ஸந்தேஹமே இல்லை’
[மமைவ து3ஷ்கரம் கிஞ்சித் மஹத3ஸ்தி ந ஸம்ஶய: ஸு.கா 38-48] என்று பிராட்டி அருளிச் செய்தபடி,
தன் கர்ம பலனாய் அபஹரிக்கப்படாளேயன்றி இவரால் தள்ளிவிடப்படவில்லை;
‘இறையும் அகலகில்லேன்’ [திருவாய் 6-10-10] என்ற இவளையா பிரிந்து செல்வது?
‘ஶ்ரீமந்நாராயண’ [த்வயம்] என்கிற ததத்தின் ‘மதுப்’ ப்ரத்யயத்தினால் சொல்லப்படும் நித்யயோகத்தையும் (பிரியாதிருக்கும் தன்மை) அழித்து விட்டாரே!
‘வேறொன்றையும் நினையாதவளும், உம்மிடமே ஈடுபட்டவளும், உம்மைப் பிரிந்தால் இறப்பதென்று உறுதி
பூண்டவளுமான என்னை உம்முடன் காட்டுக்கு அழைத்துச் செல்வீர்’
[அநந்ய பா4வாமநுரக்தசேதஸம் த்வயா வியுக்தாம் மரணாய நிஶ்சிதாம்; அயோ.கா. 27-22] என்று சொன்ன இவளையன்றோ பிரிந்து விட்டார்!
‘ஶ்ரத்தை எனப்படும் ஶ்ரீதேவியாலே தேவனான நாராயணன் தேவனாயிருக்கும் தன்மையை அடைகிறான்’
[ஶ்ரத்3த4யா தே3வோ தே3வத்மஶ்நுதே; யஜு.காட 3-3] என்றும்,
‘ஜனகராஜன் திருமகளைத் தன்னுடையவளாகக் கொண்ட தத்துவத்தின் தேஜஸ் அளவிடவெண்ணாதது’
[அப்ரமேயம்ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஜநகாத்மஜா; ஆர.கா. 37-18] என்றும்,
‘ஸூரியனை விட்டுப் பிரியாத ஒளி போல் ராமனை விட்டுப் பிரியாதவள் நான்’
[அநந்யா ராக4வேணாஹம் பா4ஸ்கரேண ப்ரபா4யதா2; ஸு.கா.21-16 ] என்றும்
எல்லா விதத்திலும் தனக்குப் பெருமை தருகிற இவளை யன்றோ விடுவது!

பிறர் காரியம் ஒன்றும் அறியாத பிரபுவாக இருந்தார் (ப்ரபு:)
பிரபுக்களாயிருப்பவர் பிறர் வருத்தமறியாதவர்களாயிருப்பதையே உலகில் காண்கிறோம்.
பிரபுவாக இருப்பவரின் மேன்மை இருந்ததே வொழிய நீர்மை இருக்கவில்லை.
அரசர்க்குரிய காரியங்களிலே ஈடுபட்டாரே யன்றி, ப்ரணயித்துவத்திலே
‘பெண்ணின் வருத்தமறியாத பெருமான்’ [நாச்.திரு.13-1] என்ற பெருமையுடனே இருந்தார்.
‘பிறப்பில் பல்பிறவிப் பெருமான்’ [திருவாய் 2-9-5] என்றபடி பல அவதாரங்களைச் செய்திருப்பினும்,
ஒரு பெண் பிறவியாகிலும் எடுத்திருப்பானே யாகில் பெண் பிறந்த வருத்தம் அறிவான்!

இப்படிப் பிரபுவாய் இருந்துகொண்டு இவர் செய்தது என்னவெனில்,
தனது தேஹத்தைத் த4ரித்துக் கொண்டதே [தா4ரயதாத்மனோ தே3ஹம்; ] ஆகும்.
பிராட்டியைப் பிரிந்த ராமன் கடலிலே புக்கு இறந்தார் என்ற பெருமையன்றி இன்னமும் தனது தே3ஹத்தைத் த4ரித்து நிற்கிறாரே!
நித்யமான ஸ்வரூபமும் அல்லதே இந்த அவதாரம்.
ராமபிரான் தன் தே3ஹத்தை ப்ரகிருதி தே3ஶத்தின் ஸம்பந்தமற்ற பரமபத3த்திலே வைத்து,
[ஆதியஞ்சோதி உருவை அங்குவைத்து இங்குப்பிறந்த; திருவாய்: 3-5-5] என்கிறபடியே இங்குப் பிறந்தவனன்றோ!
‘மாயும் வகையறியேன் வல்வினையேன் பெண்பிறந்தே’ [திருவாய்: 5-4-3] என்று பர த்3ரவ்யமாய் நினைத்திருக்கிறாரோ?
அவர்தான் ஸ்வதந்த்ரராயிற்றே! ஒருவேளை தம்முடம்பு தம்மதோ, பக்தர்களுடையதன்றோ!
[ந தே ரூபம்  ப4க்தாநாம்; ஜிதந்தே; 1-5] என்ற ஸந்தேஹம் வந்திருக்குமோ?
அப்படியானால் பிராட்டியான ப4க்தைக்காகவன்றோ? அவளுக்காகாதபின், இன்னும் ஏன் தம்முடம்பைத் த4ரித்துக் கொண்டிருக்கிறார்?
உடம்பைப் போக்கிக் கொள்ள வழி தெரியாமல் இருக்கிறாரோ?
ஶோகம் என்னும் நெருப்பு சுட்டெரிக்க [ஶோகாக்3நி: . . . ப்ரத4க்ஷ்யதி; அயோ.கா.24-8] இருக்கும்போது,
இன்னும் ஶரீரத்தைவிட வேறு ஸாத4நம் வேண்டுமோ?

———————————————————————————————————
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading