ஸ்ரீ முமுஷுப்படி -த்வய பிரகரணம்-ஸூர்ணிகை –144–159–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

சரணவ்-திரு அடிகளை –சூரணை -144–

இனி -சரணவ்-என்கிற பதத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –
தனியாக இல்லை

————————————————-

இத்தால் சேர்த்தி அழகையும் -உபாய பூர்த்தியையும் -சொல்லுகிறது –சூரணை -145

இந்த த்வி வசனத்தால் சொல்லுகிற அர்த்தத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது
சரணவ்–என்று இரண்டு திரு அடிகளையும் சொல்லுகிற இத்தால்-
இணைத் தாமரை அடி-பெரிய திரு மொழி –1-8-3-என்கிற படி இரண்டு தாமரைப் பூவை நிறைத்து வைத்தால் போலே
இருக்கிற சேர்த்தி அழகையும் -த்வி வசனம் -இரண்டுக்கு மேல் மற்று ஓன்று புகுர
சஹியாமையாலே சஹாயாந்தர நிரபேஷமான உபாய பூர்த்தியையும் சொல்லுகிறது -என்கை –

(நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கை தொழும் இணைத் தாமரை யடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திடக் கடிதாநிரைக் கிடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே —-1-8-3-)

————————————————-

பிராட்டியும் அவனும் விடிலும் திரு அடிகள் விடாது -திண் கழலாய் இருக்கும் –சூரணை -146

இனி உபாயத்வ ஏகாந்தமான இதன் குணாதிக்யத்தை அருளிச் செய்கிறது –

அதாவது
ஸ்ரீ மத் பதத்திலே புருஷகார பூதையாக  சொன்ன பிராட்டியும் அவள் தானே சிதகுரைக்கிலும் -பெரிய ஆழ்வார் திரு மொழி -4-9-2-என்னும் படி
நாராயண -பதத்தில் சொன்ன -குண விசிஷ்டனான அவனும்
கைவிடிலும் -திரு அடிகள் தன் வை லஷண்யத்தாலே-துவக்கிக் கொள்ளுகையாலே கை விடாது-

வண் புகழ் நாரணன் திண் கழல் -திரு வாய் மொழி -1-2-10-என்கிறபடியே
பற்றினாரை நழுவ விடாதே திண்மையை  உடைத்தாய்  இருக்கும் -என்கை-

(சிதகுரைக்கிலும்–சிதகு–குற்றம் உரைக்கிலும்)

(தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்
மன்னுடைய விபீடணர்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த
என்னுடைய திருவரங்கர்க்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே – 4-9 -2-)

(எண் பெருக்கு அந் நலத்து*  ஒண் பொருள் ஈறு இல*
வண் புகழ் நாரணன்*  திண் கழல் சேரே)

—————————————————

சேஷி பக்கல் சேஷ பூதன் இழியும் துறை –சூரணை -147

பிரஜை முலையிலே  வாய் வைக்குமா போலே –
இந்த குணாதிக்யத்தை பற்றவும் அன்றிக்கே -இவன் தன் ஸ்வரூப அநு குணமும் திரு அடிகளிலே
இழிகை என்னும் அத்தை சத்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –

அதாவது
சேஷி பக்கல் ஆஸ்ரயிக்க இழியும் சேஷ பூதன்
தன் ஸ்வரூப அநு குணமாக இழியும் துறை திரு அடிகள்-
ஸ்தந்த்ய பிரஜை தாயினுடைய அவயவம் எல்லாம் கிடக்க
தனக்கு வகுத்ததாய் உள்ள முலையிலே வாய் வைக்குமா போலே –

——————————————————–

இத்தால் பிராட்டிக்கு இருப்பிடமாய் –
குண பிரகாசமுமாய் –
சிசுபாலனையும் -அகப்பட திருத்தி சேர்த்து கொள்ளும்
திரு மேனியை நினைக்கிறது –சூரணை -148-

திரு அடிகளை சொன்ன இது -திரு மேனிக்கு உப லஷணம் என்கிறார் மேல் –

அதாவது
சரணவ் -என்று விக்ரக ஏகதேசமான திரு அடிகளைச் சொன்ன இத்தால் –
திரு இருந்த மார்வன்–மூன்றாம் திரு அந்தாதி –57-என்னும்படி ஸ்ரீ மத் -பதத்தில் சொன்ன
புருஷ கார பூதையான பிராட்டிக்கு இருப்பிடமாய் –
நாராயண பதத்தில் சொன்ன குணங்களுக்கு பிரகாசமாய் –என்கிறபடியே
பிரத்வேஷ பரனாய் நிந்தோக்திகளை பண்ணித் திரிந்த சிசுபாலனையும் -உள் பட –
அலவலைமை தவிர்த்த அழகன்-பெரிய ஆழ்வார் திரு மொழி-4-3-5-என்கிறபடி தன் அழகாலே
த்வேஷாதிகள் போம்படி திருத்தி -திரு அடி தாள் பால் அடைந்த -திரு வாய் மொழி -7-5-3-என்கிறபடி
சேர்த்து கொள்ளும் ஸ்வபாவத்தை உடைத்தான திவ்ய மங்கள  விக்ரகத்தை நினைக்கிறது -என்கை –

(திரு இருந்த மார்வன்–பெரிய பிராட்டியாராலே வஸிக்கப் பெற்ற திரு மார்பு யுடையவன் -லஷ்மீ க்ருஹ -லஷ்மீ நிவாச நிரவத்ய குணைக சிந்தோ -இத்யாதி)

(நாழம்-தோஷம்
அலவலைமை=பஹு ஜல்பம்)

(பொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி
மலிந்து திருவிருந்த மார்வன் -பொலிந்த
கருடன் மேல் கண்ட கரியான் கழலே
தெருடன் மேல் கண்டாய் தெளி ——–57-)

(பல பல நாழம் சொல்லி பழித்த சிசுபாலன் தன்னை
அலை வலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை
குலமலை கோலமலை குளிர் மா மலை கொற்ற மலை
நிலமலை நீண்டமலை திரு மால் இரும் சோலை யதே – 4-3 -5-)

(கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே .–7-5-3-)

————————————————————

சரணம்-இஷ்ட ப்ராப்திக்கு
அநிஷ்ட நிவாரணத்துக்கு
தப்பாத உபாயமாக –சூரணை -149-

அநந்தரம்-சரணம்-பதார்த்தத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
உபாயே க்ருக ரஷித்ரோச் சப்தஸ் சரணம் இத்யயம்
வர்த்ததே சாம்ப்ரதஞ்சைஷா உபாயார்தைக வாசக -என்கிறபடியே –
சரண -சப்தம் ரஷிதாவுக்கும் க்ருஹத்துக்கும் உபாயத்துக்கும் -வாசகமே ஆகிலும் –
இவ் இடத்தில் உபாயத்துக்கே வாசகம் ஆகையாலும் –
உபாய க்ருத்யம்-இஷ்டாநிஷ்ட ப்ராப்த பரிஹார கரணம் ஆகையாலும் –
இஷ்ட ப்ராப்திக்கும் அநிஷ்ட நிவாரணத்துக்கும் தப்பாத உபாயமாக -என்று –
இப் பதத்துக்கு அர்த்தம் அருளி செய்கிறார் –

இஷ்ட அநிஷ்டங்கள் தாம்  இன்னவை என்னுமத்தை பரந்த படியிலே விஸ்தரேண அருளி செய்தார் –

(அநிஷ்டமாவது–நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து -என்றும் –அநாத்மன் யாத்மா புத்திரா -என்றும் சொல்லுகிறபடியே அனாத்மன்யாத்ம புத்தி ரூபமாயும் –
அஸ்வே ஸ்வ பிரதிபத்தி ரூபமாயும் இருக்கிற அவித்யையும்
அவித்யா கார்யமான ராகத்வேஷங்களும் -கரண த்ரயத்தாலும் கூடு பூரித்து வைக்கும் தத் கார்யங்களான புண்ய பாப ரூப கர்மங்களும்
கர்மத்வயத்தினுடைய பல போகார்த்தமாகப் பரிக்ரஹிக்கும் தேவ திர்யகாதி யான நாநா வித சரீரங்களும்
அச் சரீரங்களைப் பரிக்ரஹித்து அனுபவிக்கும் ஆத்யாத்மிகாதி துக்க பரம்பரைகளும் தொடக்கமானவை –

இஷ்டமாகிறது -புண்ய பாப கர்ம விதூந நப்ரகாரமும் -ஹாரத்த மார்க்க விசேஷ பிரகாரமும் –ஹ்ருதய குஹா நிர்க்க மனனும்-
அர்ச்சிர்வாசரோத்தராயண ஸூ கள பஷாத்யாதி வாஹிக சத்காரமும் -சலில தகன பவ நாத்யாவரண சப்தகாதி லங்கநமும் -த்ரிகுணாதிரமணமும்-
விரஜாக்யாப்ரக்ருத நதீ விசேஷா வகாஹா நமும் -ஸூ ஷ்ம சரீர விமோசனமும் -அமானவா கர ஸ்பர்சமும் –
அபஹத பாப்மத்வாதி குணகண ததாஸ்ரைய ஸ்வரூப பிரகாசமும் -பஞ்சோப நிஷன்மயமான திவ்ய விக்ரஹ பரிக்ரஹமும் -ஜரமதீய திவ்ய சர பிராப்தியும் –
திவ்ய அப்சரஸ் சங்க சத்காரமும் -ப்ரஹ்ம அலங்கார லங்கரணமும் -ப்ரஹ்ம கந்த ரச தேஜ பிரவேசமும் –
திவ்ய கோபுர பிராப்தியும் -ஸூ ரி சங்க சத்காரமும் -ராஜ மார்க்க கமனமும் -ப்ரஹ்ம வேசம பிரவேசமும் -திவ்ய மண்டப பிராப்தியும்
திவ்ய பர்யங்க நிரீஷணமும் -சபத்நீக சர்வேஸ்வர தர்சனமும் -ஆனந்த மய பரமாத்மா சமீபஸ்திதியும்-பாதபீட பர்யங்கோத் சங்காரோகணமும் –
ஆலோகாலாபா லிங்க நாத்ய நுபவமும் -ஸ்வரூப குண விக்ரஹாத்ய நுபவ ஜனித ப்ரீதி பிரகர்ஷமும்
நாநாவித விக்ரஹ பரிக்ரஹ பூர்வக சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தோசித சர்வ பிரகார கைங்கர்ய கரணமும் –
இதில் பிரதானமான இஷ்டமாய் இருப்பது கைங்கர்யம் -அதுக்கு உப யுக்தங்கள் ஆகையாலே இஷ்டங்களாய் இருக்கும் மற்றும் உள்ளவை
ஆக
இப்படிக்கொத்த அநிஷ்டத்தை நிவர்ப்பித்து இஷ்ட ப்ராப்தியைப் பண்ணுகை உபாயமாகை யாகிறது –)

ஸ்ரீ ய பதி படியிலும் –

அநிஷ்டம் ஆகிறது அவித்யையும் –
அவித்ய ஆகாரமான ராக த்வேஷங்களும் –
புண்ய பாப ரூபமான கர்மங்களும் –
தேவாதி சதுர்வித சரீரங்களும் –
ஆத்யாத்மிகாதி துக்க பரம்பரைகளும் –

இஷ்டம் ஆகிறது –
அர்ச்சிராதி மார்க்க கமநமும்-
பரமபத பிராப்தியும் –
பரமாத்ம தர்சனமும் –
குண அனுபவ கைங்கர்யங்களும் -என்று
சங்கரஹேண அருளி செய்தார் –
ஆகையால் இவ் இடத்திலும் அவை வக்தவ்யங்கள் –

——————————————————————

இத்தால் ப்ராப்யம் தானே ப்ராபகம் என்கிறது –சூரணை -150-

கீழே  நிர்தேசித்த வஸ்துவை உபாயமாக சொன்னதன் தாத்பர்யத்தை
அருளிச் செய்கிறார் –

அதாவது –
கீழ் சொன்ன விஷயத்தை உபாயமாக சொல்லுகிற இத்தால்
ப்ராப்ய வஸ்து தானே ப்ராபகம் என்னும் இடம் சொல்லுகிறது -என்கை –

(கீழே  நிர்தேசித்த வஸ்து–ஸ்ரீ யபதியாய் -ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் திவ்ய மங்கள விக்ரஹ விஸிஷ்டனான -ஸ்ரீ மன் நாராயணன்)

——————————————————–

கீழ் சொன்ன மூன்றும் ப்ராப்யம் இறே–சூரணை -151

கீழ் பிராப்ய பிரசங்கம் உண்டோ -என்ன அருளி செய்கிறார் –

அதாவது
சமஸ்த பதமான பூர்வ பதத்தில் சொன்ன –
லஷ்மீ விசிஷ்டத்வமும் –
கல்யாண குண யோகமும் –
திவ்ய மங்கள விக்ரஹ உபேதத்வமும்-
ஆகிய மூன்றும்
ஸ்ரியா ஸார்த்தம் ஆஸ்தே
சர்வான் காமான் அஸ்நுதே
சதா பஸ்யந்தி-என்று இவனுக்கு அனுபவ விஷயமாகச் சொல்லப் படுகிறவை ஆகையாலே
ப்ராப்யம் இறே -என்கை –

——————————————————-

இவன் செயல் அருதியாலே உபாயம் ஆக்குகிறான் இத்தனை-சூரணை -152-

ஆனால் இத்தை உபாயம் ஆக்குகிறது தான் என் -என்ன அருளிச் செய்கிறார் –

அதாவது –
அகிஞ்சனனாய் -அநந்ய கதியாய் இருக்கிற இவன்-தன் செயல் மாட்சியாலே
போக்யமான பாலை மருந்து ஆக்குவாரைப் போலே
ப்ராப்யமானது தன்னை ப்ராபகம் ஆக்குகிறான் இத்தனை -என்கை-

———————————————————-

சரணவ் சரணம் -என்கையாலே உபாயாந்தர வ்யாவ்ருத்தமான உபாயம் -என்கிறது –சூரணை -153-

இது தன்னாலே இவ் உபாயத்துக்கு ஓர் அதிசயம் சொல்லுகிறது -என்கிறார்

அதாவது
சரணவ் சரணம் –என்று ப்ராப்ய வஸ்து தன்னையே ப்ராபகமாகச் சொல்லுகையாலே –
ப்ராப்யம் வேறும் தான் வேறுமாய் இருக்கும்  உபாயாந்தரங்கள் காட்டிலும் -வ்யாவ்ருத்தமான
உபாயம் இது என்னும் இடம் சொல்லுகிறது -என்கை –

—————————————————-

ப்ரபத்யே -பற்றுகிறேன் –சூரணை -154-

அநந்தரம்-க்ரியா பதத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –
இப் பதம் -பத கதவ்-என்கிற தாது சித்தம் ஆகையாலே –
கதி வாசி யாகையாலும் -உத்தமன் -ஆகையாலும் -பற்றுகிறேன் -என்று
இதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –

(உத்தமன் -ஆகையாலும்–உத்தம புருஷ தாது வாகையாலும்)

—————————————————–

வாசிகமாகவும் -காயிகமாகவும் -பற்றினாலும் பேற்றுக்கு அழிவு இல்லை -இழவு இல்லை –சூரணை-155-

ஞானான் மோஷம் -ஆகையாலே மானசமாக கடவது –
இது தான் மானசக வாசக காயிக ரூபையான த்ரிவித கதியையும் காட்டவற்று ஆகையாலே –
அதில் எந்த கரணத்தால் உண்டான பற்றுதலை சொல்லுகிறார் -என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது -பவ சரணம் -இத்யாதி படியே-ரஷிக்க வேணும் -என்று பிராதிக்கை ஆகிற கேவல வாசிகமாகவும் –
அஞ்சலி பரமா முத்ரா ஷிப்ரம் தேவ பிரசாதிநீ -என்கிறபடியே -பகவத் பிரசாத ஹேது பூதமான
அஞ்சலியை பிரயோகித்தல் –நிஷாத காகாதிகளை போலே ரஷக வஸ்து இருந்த இடத்தே வருதல் செய்கை யாகிற –
கேவல காயிகமாகவும் பற்றினாலும் -பல சித்திக்கு அழிவு இல்லை –
ஞானான் மோஷ-என்கிறபடியே ஞானத்தால் மோஷம் -என்கையாலே -மானசமான பற்றுதல் ஆக கடவது -என்கை-

அதாவது -ஒரு புத்தி விசேஷம் –
இந்த புத்தி விசேஷம் தன்னை பரந்த படியிலே விஸ்தரேண அருளிச் செய்தார் –

ஸ்ரீ யபதி படியிலும் –
இந்த புத்தி விசேஷம் ஆகிறது -அனந்யார்ஹ சேஷத்வ -ஞான கார்யமாய் –
இதர உபாய வ்யாவ்ருத்தமாய் -பகவத் ரஷகத்வ அநுமதி ரூபமாய் -சக்ருத அனுஷ்டேயமாய்-
வ்யபிசார விளம்ப விதுரமாய் -சர்வாதிகாரமாய் -நியம ஸூன்யமாய் -அந்திம ஸ்ம்ருதி நிர பேஷமாய்-
ஸூசுகமாய் -யஜ்ஞா கர்ப்பமாய் -திருட அத்யவச்ய ரூபமாய்-இருப்பதொரு ஞான விசேஷம் -என்று
அருளிச் செய்தார் –

ஆகையால் இவ் இடத்தே அதுவும் அனுசந்தேயம் –

————————————————————

உபாயம் அவன் ஆகையாலும் -இவை நேரே உபாயம் அல்லாமையாலும் –
இம் மூன்றும் வேணும் என்கிற நிர்பந்தம் இல்லை –சூரணை -156-

இப்படி மானச மாத்ரமே அமையுமோ-சிந்தையாலும் -திரு வாய் மொழி -இத்யாதி படியே
த்ரிவித கரணத்தாலும் ஸ்வீகரிக்க வேண்டாவோ -என்ன அருளி செய்கிறார் –

அதாவது
பல சித்திக்கு உபாயம் -பற்றப் படும் ஈஸ்வரன் ஆகையாலும் –
கரண த்ரயத்தாலும் உண்டான பற்றுதல்கள் ஆன இவை ஆபாத ப்ரதீதியிலே உபாயம் போல்
தோற்றக் கழி உண்டு போம் அது ஒழிய சாஷாத் உபாயம் அல்லாமையாலும் –
பல சித்திக்கு அத்யாவசயாத்மகமான ஸ்வீகாரம் ஒன்றே அமையும் –
இம் மூன்றும் வேணும் என்கிற நிர்பந்தம் இல்லை -என்கை-

(சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்*  தேவ பிரானையே,*
தந்தை தாய் என்று அடைந்த*  வண் குருகூரவர் சடகோபன்,*
முந்தை ஆயிரத்துள் இவை*  தொலை வில்லிமங்கலத்தைச் சொன்ன,*
செந்தமிழ்ப் பத்தும் வல்லார்*  அடிமைசெய்வார் திருமாலுக்கே)

அதவா-
இப்படி ஓர் ஒன்றில் ஒதுக்கிச் சொல்லுகிறது என் -த்ரிவித கரணத்தாலும்  பற்றுதலை சொன்னாலோ என்ன –
உபாயம்-இத்யாதியாலே அருளிச் செய்கிறார் ஆகவுமாம்-அப்போதைக்கு ஓர் ஒன்றே அமையும் -இம் மூன்றும்
வேணும் என்கிற நிர்பந்தம் இல்லை -என்கை-

நிர்பந்தம் இல்லை என்கையாலே இந்த ஸ்வீகாரம் த்ரிவித கரணத்தாலும் உண்டானாலும்
குறை இல்லை என்னும் இடம் தோற்றுகிற -இப் பிரபதனம் கரண த்ரயத்தாலும் உண்டாகவுமாம்-
ஏக கரணத்தாலே உண்டாகவுமாம் -பல சித்திக்கு குறை இல்லை –

அதிகாரி பூர்த்திக்கு கரண த்ரயமும் வேணும் –
பல சித்திக்கு ஏக கரணமே அமையும் -உபாய பூர்த்திக்கு ஸ்ரீ யபதித்வமும் -வாத்சல்யாதி குண யோகமும் –
திவ்ய மங்கள விக்கிரகமும் -கரண த்ரயமும் -அபேஷிதமாய் இருக்கும் -என்று இறே பரந்த படியில் இவர்
தாம் அருளிச் செய்தார் –

(பரந்த படியில் இவர் தாம் –பிராட்டியுடைய புருஷகார பாவமும் -ஈஸ்வரனுடைய உபாய பாவமும் கார்யகரமாம் போது இவனுடைய பிரதிபத்தி வேணும் இறே –
இந்த பிரதிபத்தி ராஹித்யத்தாலே இறே நித்யங்களாய் இருக்கிற இவை இது பூர்வம் அகிஞ்சித் கரங்கள் யாய்த்து –
ஆகையாலே அவை இரண்டையும் கார்யகரமாம் படி பண்ணக் கடவதான இவனுடைய பிரதிபத்தி விசேஷத்தைச் சொல்லுகிறது –
பத்லு கதௌ-என்கிற தாதுவுக்கு அர்த்தம் -கதி -இவ்விடத்தில் கதியாக நினைக்கிறது –கத்யர்த்தா புத்த்யர்த்தா -என்கிற புத்தி விசேஷத்தை
இந்த புத்தி விசேஷம் ஆகிறது -அனன்யார்ஹ சேஷத்வ ஜ்ஞாநாத்யநந்தர பாவியாய் -சாத்திய சாதனா வ்யாவ்ருத்தமாய் –
சேவா நாம் குஹ்யமாய் பகவத் ரஷகத்வ அனுமதி ரூபமாய் சக்ருதநுஷ்டேயமாய்-அவிளம்ப பல பிரதமாய் -சர்வாதிகாரமாய் -ஸ்வரூப அனுரூபமாய்
நியம விதுரமாய் -அந்திம ஸ்ம்ருதி நிரபேஷமாய்-ஸூ சகமாய் -யாச்ஞா கர்ப்பமாய் –த்ருடாத்யவ சாயமுமாய் இருப்பதொரு ஜ்ஞான விசேஷம் –
இந்த ஜ்ஞான விசேஷத்தில் பிரயோஜனாம்சம் இருப்பது ஒரு விசுவாசம் -கிரயோ வர்ஷதாராபி -என்கிறபடியே
திரைமேல் திரையாகப் பொறுக்க ஒண்ணாத படி வந்து மேலிடுகிற வியசன பரம்பரைகளாலும் யுக்த்யாபாச வசநாபாசங்களாலும் –
ஈஸ்வரன் பரீஷை தொடக்க மானவற்றாலும் இவ்வத்யவசாய விசேஷம் அப்ரகர்ப்யமான போது இறே பல சித்தி உள்ளது –

இப்பிரபதனம் கரண த்ரயத்தாலும் உண்டாக வுமாம் -ஏக கரணத்தாலும் உண்டாக வுமாம் பல சித்திக்கு குறை இல்லை –
அதிகாரி பூர்த்திக்கு கரண த்ரயம் வேணும் -பல சித்திக்கு ஏக கரணமே அமையும்
உபாய பூர்த்திக்கு ஸ்ரீ யபதித்வமும் -வாத்சல்யாதி குண யோகமும் -திவ்ய மங்கள விக்ரஹமும் அபேஷிதமாய் இருக்கிறாப் போலே
அதிகாரி பூர்த்திக்கு கரண த்ரயமும் அபேஷிதமாய் இருக்கும்
உபாய வரணத்துக்கு ஏகாந்தமான அனன்யார்ஹ சேஷத்வ ஜ்ஞானமும் ப்ராப்ய ருசியும் தொடக்கமான குண விசேஷங்கள்
இன்னார்க்குப் பிறக்கக் கடவது என்கிற நியமம் இல்லாமையாலும்
இங்குப் பிறக்கிற பிரதிபத்தி விசேஷம் தனக்கு இதர சாதனங்கள் போலே அக்னி வித்யா சாபேஷதை இல்லாமையாலும்
உபாசனம் போலே த்ரைவர்ணி கர்க்கே அதிகாரமாய் இருக்கை யன்றிக்கே சர்வாதிகாரம் ஆகையாலே ஆச்ரயண விதுரமாய்க் கிடக்கிறது –

பிரபத்யே என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தாலே நாட்கடலைக் கழிமின் என்று இருக்கும் நான் காலம் செல்ல விட அரிதாய் இருக்கையாலும்
சம்சாரத்தின் உடைய தோஷத்தையும் பகவத் விஷயத்தினுடைய வைலஷண்யத்தையும் அனுசந்தித்தால் இப்போதே
சம்சார சம்பந்தம் அற்று பகவத் விஷயத்தை லாபிக்க வேணும் என்னும் படியான த்வாதிரேகம் பிறக்கக் கடவதாகையாலும்
இவ்வுபாய விசேஷம் தான் அனந்யாஸ் சிந்தயந்த -என்கிறபடியே நிரதிசய ப்ரீதி ரூபமான உபாசனத்தளவன்றிக்கே அதிலும் காட்டில்
அத்யர்த்த ப்ரீதி ரூபமாய் இருக்குமாகையாலும் -த்வயமர்த்தா நுசந்தா நேன சஹ -என்கிறபடியே –
யாவச்சரீர பாதம் அனுவர்த்திக்கும் என்னும் இடம் ஸூ சிதமாகிறது –பல சித்திக்கு சக்ருத் கரணம் அமையும் –
கால ஷேபாதிகளுக்கு அசக்ருத் கரணம் அபேஷிதமாய் இருக்கும்
இப்படிக் கொள்ளாத போதே சக்ருதேவ பிரபன்னாய என்கிற பிரமாண்த்தோடு விரோதிக்கும் இறே
ஆக
பூர்வ வாக்யத்தாலே ஸ்வீகாரத்தையும் -ஸ்வீகார பிரகாரத்தையும் -ஸ்வீகார்ய வஸ்து விசேஷத்தையும் பிரதிபாதிக்கிறது —

—————————————————-

வர்த்தமான நிர்த்தேசம் -சத்வம் தலை எடுத்து அஞ்சின போது அனுசந்திக்கைகாக –சூரணை -157-

சக்ரு தேவஹி சாச்த்ராத்த  க்ருதோயம் தார யேன்னரம் சக்ருதேவ பிரபன்னாய -இத்யாதிகளில்
சொல்லுகிறபடியே பிரபத்தி சக்ருத் கரணீயையாய் இருக்க வர்த்தமானமாகச் சொல்லுகிறது
எதுக்கு என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது
லோக விக்ராந்த சரனௌ சரணம் தேவ்ரஜம் விபோ –
நின் அடி இணை அடைந்தேன் –
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன் –
என்கிறபடி சொல்லாதே -ப்ரபத்யே -என்று வர்த்தமானமாகச் சொல்லுகிறது –

பிரகிருதி யோடே இருக்கிற இவன் ரஜஸ் தமஸ் களாலே கலங்கி -உபாய உபாயங்களில்
ஏதேனும் ஒன்றில் அன்வயித்து -பின்னம் சத்வம் தலை எடுத்து -அனுதாபம் பிறந்து –
பயப்பட்ட காலத்திலேயே -பிராயச் சித்திரியம் -சாத்ர யத்புநஸ் சரணம் வ்ரஜேத் -என்கிறபடியே
பிரபத்தி ஒழிய அதுக்கு பரிகாரமில்லாமை ஆகையாலும் -அது தான்
சக்ருத்  க்ருதமான பின்பு புன காரணம் -ஆகாமையாலும் -பூர்வ பிரபதனத்தை
அனுசந்திக்கைகாகக் கொழுந்து படக் கிடக்கிறது -என்கை –

(இவ்வாறு ஸ்வ கர்த்ருத்வமாக ஆழ்வாராதிகள் அருளிச் செய்கைக்கு அடி என் என்னில்
புத்ர ப்ரேஷ்யஸ் ததா ஸிஷ்ய இத்யே வஞ்ச நிவேதயத் –ஸாண்டில்ய ஸ்ம்ருதியில்
ஆச்சார்யர் அனுஷ்டித்த ஸரணாகதியே முக்கியம் என்று சொல்லுகையாலே இதுவே ஸத் ஸம்ப்ரதாயம் என்று அனுஷ்ட்டித்துப் போருகிறார்கள்
அதுவும் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே என்று ஆழ்வார் அனுஷ்டித்ததே சிஷ்ய பரம்பரைக்கு எல்லாம் போரும் என்று சில ஆச்சார்யர்கள் நிர்வஹிப்பர்கள்

(ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது  இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி உன் தோழி  உம்பி எம்பி என்று ஒழிந்திலை உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின் அடி-இணை அடைந்தேன்-   அணி பொழில் திருவரங்கத்து அம்மானே  )

(அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே!
புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே–6-10-10-)

காலத்ரயேঽபி கரணத்ரயநிரமிதாதி-
பாபக்ரியஸ்ய ஶரணம் ப⁴க³வத்க்ஷமைவ ।
ஸா ச த்வயைவ கமலாரமணேঽர்தி²தா யத்-
க்ஷேம: ஸ ஏவ ஹி யதீந்த்³ர ப⁴வத்ச்²ரிதாநாம் –ஸ்ரீ யதிராஜ விம்சதி ॥ 18॥)

யதீந்த்ரரே முக் காலத்திலும் முக் கரணங்களாலும் பாபங்களை செய்பவனுக்கு பகவானின் ஷமா குணமே தான் தஞ்சமாகும்
அந்த ஷமை குணமும் ஸ்ரீ காந்தன் இடம் உம்மாலேயே பிரார்த்திக்க பட்டது –
அதுவே உம்மை ஆச்ரயித்தவர்களுக்கு மோஷம் என்னும் ஷேமம் ஆகும்

கால த்ரேய அபி
பூத காலத்தில் உள்ள பாபம் மாத்திரம் அன்றிக்கே கால த்ரயத்திலும் உண்டான பாபங்களுக்கும் ஆய்த்து
பொறை கொள்ள வேணுமாய்த்து
க்ருதான் க்ரியமாணான் கரிஷ்யமாணாம் ஸ்வ -என்றதைச் சொன்னபடி –

கரண த்ரய
ஒரு கரணத்தால் பண்ணினவற்றுக்கு பொறை கொள்ளுகை அன்றிக்கே கரணத்ரய
உபார்ஜிதங்களானவற்றுக்குப் பொறை கொள்ள வேணும்
இத்தால் மநோ வாக் காயை -என்றத்தைச் சொல்கிறது –

நிர்மிதாதி
இவை தான் சங்கல்பம் மாத்திரம் அன்றிக்கே பத்தும் பத்தாக செய்தவை என்கை

கால த்ரேய அபி –
பூத பவிஷ்யத் வர்த்தமான ரூபேண-மூன்று வகைப் பட்டு இருந்துள்ள கால த்ரயத்திலும்
கரண த்ரய –
மநோ வாக் காய ரூபேண மூன்று வகைப் பட்டு இருந்துள்ள கரண த்ரயத்தாலே
நிர்மிதாதி பாப க்ரியஸ்ய –
செய்யப்பட மஹா பாதக உபபாதங்களை உடையவனுக்கு

கால த்ரேய அபி –
ஒரு காலம் இல்லா ஒரு காலத்திலே யாகிலும் -சாதன அனுஷ்டானம் இன்றிக்கே எல்லாக் காலத்திலும்
பாபங்களையே யாய்த்து இவன் செய்வது
கரண த்ரய –
அது தான் ஒவ்வொரு கரணத்தால் அன்றிக்கே கரண த்ரயத்தாலும் யாய்த்து பாபங்களைச் செய்வது

நிர்மிதாதி
சங்கல்பித்து விடுகை யன்றிக்கே அனுஷ்டான பர்யந்தமாகச் செய்வது –
அன்றிக்கே
ஆரம்பித்து விடுகை யன்றிக்கே முட்ட முடிய வாய்த்துச் செய்வது

பாப க்ரியஸ்ய
என்று அக்ருத்ய கரணத்தையும்
அதி பாப
என்று பகவத் அபராதிகளையும் சொல்லுகிறது –
இத்தால் அக்ருத்ய கரண க்ருத்ய அகரண பகவத் அபசார பாகவத அபசார அஸஹ்யா அபச்சார ரூப
நாநா வித அநந்த அபசாரான்-என்றதைச் சொன்னபடி –

சரணம் பகவத் ஷமைவா
இப்படி இருந்துள்ள பாபத்தை யுடையவனுக்கு ஸ்ரீ எம்பெருமானுடைய அபராத சஹத்வம் ஆகிய
க்ஷமை ஒழிய வேறு புகல் இல்லை –

அதி பாப க்ரியஸ்ய-
பிராயச் சித்த அனுபவ விநாச்யங்களான பாபங்களை செய்கை மாதரம் அன்றிக்கே —
அவற்றால் நசியாத பாபங்களையும் யாய்த்துச் செய்வது

பிராயச் சித்த அனுபவ விநாச்யம் இல்லாத பாபம் உண்டோ என்னில்
கோக் நே சைவ ஸூ ராபே ஸ ஸ்தேய பக்ந வ்ரதே ததா -நிஷ்க்ருதிர் விஹிதா சத்பி கருதக் நே நாஸ்தி நிஷ்க்ருதி -என்றும்
யத் ப்ரஹ்ம கல்ப நியுதா நு பவேப்ய நாச்யம் -என்றும் சொல்லுகையாலே உண்டு –
அதில் க்ருதக் நதையாவது –
பிராயச்சித்த நாச்யம் யன்றிக்கே அனுபவ ஏக நாச்யமாய் இருக்கும் –

இனி பிராயச் சித்த அனுபவ நாச்யம் அல்லாததாய் –
புண்ய பாபங்களுடைய அனுஷ்டானத்துக்கு காரணமாய் உபாசக பர்யந்த
அனுதாவனமாய் இருப்பதொரு பாபம் உண்டு -அப்பாபத்தையும் யாய்த்து இவன் செய்வது –

கரண த்ரய என்கையாலே
இவன் செய்த குற்றம் எல்லாம் புத்தி பூர்வகம் என்கிறது —
நிர்மித என்கிறது பூத காலத்துக்கு சேருமே யாகிலும் -வர்த்தமான பவிஷ்ய காலங்களுக்கும் உப லஷணமாகக் கடவது –
கருதான் க்ரியமாணான் கரிஷ்யமாணாம்ச-என்று இறே ஸ்ரீ பாஷ்ய காரரும் அருளிச் செய்தது –

அன்றிக்கே –
பூத கால அபராதங்கள் போலே வர்த்தமான பவிஷ்யத் பாபங்களும் இன்னபடி செய்யக் கடவோம் என்று சங்கல்ப்பித்து
வைத்தவையாய் அவை தான் பாவன பிரகர்ஷத்தாலே அனுஷ்டித்தவை போலே தோற்றுகையாலே-நிர்மித -என்கிறார்

அதுவும் அன்றிக்கே –
ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே சஹச்ர ஸோ யன்னமயா வ்யதாதி -ஸ்தோத்ர ரத்னம் -23-என்றும்
பூர்வம் யத் சமபூத்ததேவ ஹி புநர் —பவேத் -என்றும் சொல்லுகிறபடியே
வர்த்தமான பவிஷ்யத் பாபங்களும் பூத காலத்தில் பண்ணின பாபங்களுக்கு சஜாதீயங்கள் யாகையாலே –
நிர்மித -என்கிறார் ஆகவுமாம் –

அங்கன் அன்றிக்கே –
கால த்ரயமாவது -ப்ராதர் -மத்யந்தி ந சாய்ந்த ரூபமான காலமாய் –
அபி -சப்தம் அநுக்த சமுச்சாயகமாய்
காலத் த்ரேயேஅபி என்று பஞ்ச காலத்திலும் என்னவுமாம் –

ப்ராஹ்மே முஹூர்த்தே ஸோத்தாய சிந்தயேத் ஆத்மனோ ஹிதம் -என்றும் –
ப்ராதர்த்யூத பிரசங்கே ந மத்யாஹ்னே ஸ்திரீ பிரசங்கே தாராத் ரௌ சோர பிரசங்கே ந என்றும் –
யத்சாயம் ப்ராதர்மத் யந்தி நம் ச -என்றும்
இத்யேவ மாதிகளாலே பகவத் த்யான ஆராதன குண அனுபவாதிகளுக்கு உபயுக்ததயா சாஸ்த்ர விஹிதமான
ப்ராதர் மத்யந்தி ந சாய்ந்த ரூபமான கால த்ரயத்திலே -என்னுமாம் –

பரேத் யுபச்சிமே யாமே யாமின்யாஸ் சமுபஸ்தி தோ பிரபுத்ய சரணம் கதவா பரம் குரு பரம்பராம் -என்று தொடங்கி
தத் ப்ரத்யுஷ சிஸ் நாத்வா க்ருத்வா பௌர்வாஹ்ணி கீ க்ரியா யதீந்திர சரணத் வந்தவ ப்ரவணே நைவ சேதஸாம்
அத ரங்க நிதிம் சமயக் அபிகம்ய நிஜம் பரப்பும் ஸ்ரீ நிதானம் சனைச் தஸ்ய சோதயித்வா பதத்த்வயம் ஆராத்ய ஸ்ரீ நிதிம்
பஸ்சாத் அனுயாகம் விதாய ச ததஸ் சேதஸ் சமாதாய புருஷே புஷ்கரே ஷணே உத்தம் சித கரத் வந்தவம் உபவிஷ்ட முபஹ்வரே
ததஸ் ஸூ பாஸ்ரயே தஸ்மின் நிமக்னம் நிப்ருதம் மன யதீந்திர பிரவணம் கர்த்தும் யதமானம் நமாமி தம் -என்றும்

சாய்ந்த நம் தத க்ருத்வா சம்யகாராதனம் ஹரே -என்றும் இப்படி இறே இவர் விஷயமான தினசரியிலே
ஸ்ரீ அப்பா பஞ்ச கால பராயணத்வத்தை அருளிச் செய்தது –
இத்தால் -அக்ருத்ய கரணம் மாதரம் அன்றிக்கே க்ருத்ய அகர்ண ரூப பாபமும் உண்டு என்கிறது –

அங்கனும் அன்றிக்கே –
தேஹாத்மா அபிமானியாய் இருக்கும் காலமும் –
ஸ்வஸ்மிந ஸ்வா தந்த்ர்ய அபிமானியாய் இருக்கும் காலமும்
அந்ய சேஷமாய் இருக்கும் காலமும் என்று கால த்ரைவித்யம் சொல்லவுமாம்

அப்போது இம் மூன்று காலத்திலும்
தத்தத் அபிமான அனுகுணமாக சாத்திய சாதனங்களிலே ஸ்வயமே பிரவர்த்திக்கை நிஷ்க்ருஷ்ட ஸ்வரூப விரோதி யாகையாலும் –
தத்தத் அதிகார அணுகுண சாஸ்திர அதிக்கிரமம் வருகையாலும் பாபம் உண்டு என்று கொள்ள வேணுமாம்

அன்றிக்கே
தமக்கு பூர்வ காலத்திலும் சம காலத்திலும் தமக்கு உத்தர காலத்திலும் உள்ள சாபராத சேதனருக்கு என்றும் ஒக்க
பகவத் ஷமையே இஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிஹாரங்களுக்கு உபாயம் என்று அனுசந்திக்கிறார் ஆகவுமாம்

இப்படி இன்றிக்கே -கால த்ரயமாவது –
நாஸ்திகனாய்-சாஸ்திர வச்யன் அன்றிக்கே இருக்கும் காலமும்
ஆஸ்திகனாய் சாஸ்திர வச்யனாய் இருக்கும் காலமும் –
ஜ்ஞானாதிகனாய் ஸ்வரூப வச்யனாய் இருக்கும் காலமும் -என்று காலத்தை பேதித்து
இம் மூன்று வகைப்பட்டு இருந்துள்ள காலத்திலும் என்றும் சிலர் சொல்லுவார்கள் –

அவர்கள் பஷத்தில் நாஸ்திகனான தசையில் விதி நிஷேதங்களை அதிக்ரமித்து வர்த்திக்கையாலும் –
ஆஸ்திகனான தசையில் விதி பரதந்த்ரனாய் ஸ்வரூப விருத்தங்களைச் செய்கையாலும்
ஸ்வரூப வச்யனான தசையிலும் சாஸ்திர விசயத்தை இல்லாமையாலே விதி நிஷேதங்களை அதிக்ரமித்து வர்த்திக்கையாலும்
அபராதம் உண்டு என்பார்கள் -அது கூடாது –

ஸ்வரூப வச்யனான தசையில் சாஸ்திர வச்யதை இல்லாமையாலே விதி நிஷேத அதிக்கிரமம் பாபமாக மாட்டாது
அத ஏவ துஷ்க்ருதா சரணத்தால் அனுதாபம் பிறந்து ஸ்வரூப வச்யன் ஆகையாலே ஸ்வரூப விருத்தங்களைச் செய்து
அனுதபிக்க விரகு இல்லை –
சாஸ்திர வச்யனுக்கு சாமான்ய விசேஷ ந்யாயத்தாலே ஸ்வரூப விருத்தமான விதி அதிக்கிரமம் கூடும்
இவன் தனக்கு விதி நிஷேத அதிக்கிரமம் ஸ்வரூப விரோதியாய் ராக பிராப்தம் ஆகையாலே தவிர விரகு இல்லை

ஸ்வரூப வச்யனுக்கு சாஸ்திர வச்யதை இல்லை என்கிறதும் கூடாது -ஸ்வரூப வச்யனுக்கு பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் உண்டு இறே-
அவர்களுக்கு விஷயம் ஸ்ரீ பகவத் இஷ்ட அநிஷ்டங்கள் என்று கொள்ளும் அளவில் அவற்றை நேர் கொடு நேரே அறியப் போகாமையாலே
சாஸ்திர முகமாகவே அறிய வேண்டும் -அப்போது சாஸ்திர வச்யதை தன்னடையே உண்டாமாகையாலே
நாஸ்திகத்வாதிகளை இட்டு கால த்ரைவித்யம் சொல்லுகை அசங்கதம்-
சாஸ்திர வச்யதை உண்டாகில் இறே விசேஷ சாஸ்திர வச்யதை உண்டாவது
ஸ்வரூப வச்யனுக்கும் விதி பாரவச்யம் உண்டு -ஆகை இறே த்யஜ -வ்ரஜ -என்று த்யாக சவீ காரங்களை விதித்தது

அனுகூலங்களாக தோற்றுகையாலே ராக பிராப்தங்களாய் இருக்கும் -ஆகையாலே நாஸ்திகத் வாதிகளை
இட்டு காலத்தைப் பிரிக்கும் போது
இரண்டு என்றே கொள்ள வேணும் -ஆகையாலே கால த்ரேயேபி என்றதுக்கு கீழ்ச் சொன்ன படியே பொருளாகக் கடவது –
பவிஷ்யத் காலம் சரணாகத யுத்தர காலமாகையாலே அதில் புத்தி பூர்வகம் கொள்ளும் அளவில்
சாஸ்திர விரோதம் வாராது என்னில் -வாராது
பூர்வம் மானசமாக சங்கல்பிதமான வற்றுக்கே உத்தர காலத்தில் ப்ராமாதிக அனுஷ்டானம் கூடுகையாலே –

அன்றிக்கே –
ஜாதேபி -கௌடில்யே சதி சிஷ்யாப்ய நகையன் -தத்வ சாரம் -என்கிறபடியே புத்தி பூர்வகமாக உத்தராகத்திலே
பிரவ்ருத்திக்கும் படி மாத்ருச கடின சித்தரும் உண்டாகையாலே பவிஷ்ய காலத்திலும் புத்தி பூர்வாகம் உண்டு என்னுமாம் –
அது ஷமா விஷயம் அன்றிக்கே சிஷா விஷயமாய் யன்றோ சொல்லப் படுகிறது என்னில் –
அந்த சிஷை தானும் -லகுர் தண்ட பிரபன்னச்ய ராஜ புத்ர அபராதவத் -என்கிறபடியே –
கல்ப கோடி சதே நாபி ந ஷமாமி வ ஸூ ந்தரே -என்னும்படியான பாபத்தை இஸ் சரீரத்தோடு அல்ப காலத்தில் அனுபவிக்கும் படி
பண்ணுகையாலே ஷமா கார்யமாகக் கடவது -ஆக கால த்ரயத்தாலும் சாபராதியான இச் சேதனனுக்கு

சரணம்
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் -இஷ்ட பிராப்திக்கும் தப்பாத உபாயம் –

சா ச த்வயைவ கமலாரமணே அர்த்தி தாயத்
அந்த பொறை தானும் தேவரீர் தம்மால் ஸ்ரீ யபதி திருவடிகளில் மநோ வாக் காயை -என்று தொடங்கி
சர்வான் அசேஷதஸ் க்ஷமஸ்வ -என்று பிரார்திக்கப்பட்டது யாது ஓன்று உண்டோ –
அது தேவரீரைப் பற்றி இருக்கும் ஆஸ்ரித ஜனங்களுக்குப் பிழைக்கலாம் படி தேவரீர் வைத்த தண்ணீர் பந்தல் இறே

த்வயைவ
அபிமான அந்தர் பூதருக்குக் கார்யம் செய்ய வேணும் என்று ஈஸ்வரனோடு மன்றாடும்படியான ஸ்வரூபத்தை யுடைய
தேவரீர் அன்றோ பிரார்த்தித்து அருளிற்று –
இனி யாம் உறாமை –அடியேன் செய்யும் விண்ணப்பமே–மெய் நின்று கேட்டு அருளாயே -என்று ஸ்ரீ பிரதம ஆச்சார்யர்
பிராரத்த படி கண்டால் அவர் அடி பணிந்த இவர்க்கும் இது அன்றோ அனுஷ்டானம் –

கமலாரமணே
அஹ்ருதயமான யுக்தியையும் சஹ்ருதயமாக்கிக் கார்யம் கொள்ளும் அவளும்
அவள் தன்னையும் அதி சங்கை பண்ணி ஆஸ்ரிதரை நோக்குமவனான சேர்த்தியில் அன்றோ பிரார்தித்தது –

அர்த்தி தாயத்
தாமும் அவனுமாக அறிந்து நெஞ்சால் அபேக்ஷித்தது அளவும் அன்றிக்கே பின்புள்ளவருக்கும் இது கொண்டு
வழக்கு பேசலாம் படி பாசுரம் இட்டு அன்றோ பிரார்த்தித்தது
அர்த்தித்தார் கார்யம் செய்தே நிற்க வேண்டும் படி பல் காட்டி அன்றோ போந்தது

ஷேமஸ் ஸ ஏவ ஹி யதீந்திர பவச்ச்ரிதாநாம்–
தேவரீருடைய ஸ்வ பாவத்தையும் அபிமான விஷய ஸ்வபாவத்தையும் பிரார்த்தனா பிரகாரத்தையும் அனுசந்தித்தால்
தேவரீர் திருவடிகளைப் பற்றினவர்களுக்கு ஆனைக் கழுத்தில் இருப்பாரைப் போலே
நிர்ப்பரராய் இருக்கைக்கு உறுப்பான ரக்ஷை அதுவே இறே –

பகவத் ஷமைவ-
ஆஸ்ரித கார்ய கரத்வோபயோகிகளான ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குணங்களை யுடையனான ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய
பொறுத்தோம் என்கிற ஷமை தானே –
ஏவ காரத்தாலே மற்று ஓன்று இல்லை என்கிறது –சரணாகதி தானும் ஷமாவ்யஞ்சகம் இறே –
இத்தை இறே ஷாம் யஸ்யஹோ ததபி ஸந்தி விராம மாத்ராத் -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -61-என்று
ஸ்ரீ ஆழ்வான் அருளிச் செய்தது

சா ச –
எப்பேர்பட்ட அபராதங்களுக்கும் புகலிடமாக பிரசித்தமான அந்த ஷமை தானும்

த்வயைவ
சம்சாரிகள் துர்கதி கண்டு பொறுக்க மாட்டாதே -இவர்கள் துர்கதியில் நின்றும் நிவ்ருத்தராய் ஸ்வரூப அனுரூபமான
தாச்யத்திலே அன்வயித்து வாழும்படி எங்கனே என்று கரை புரண்ட கிருபையை உடைய தேவரீராலேயே
ஏவ காரத்தாலே
இன்று ஒருவன் அறிவுடையவனாய் பிரார்த்திக்க வேண்டாத படி ஸ்வ ஆஸ்ரித சகல சேதன விஷயமாக
தேவரீராலே பிரார்த்திக்கப் பட்டது என்கிறது

இத்தால் ஸ்ரீ எம்பெருமானார் தாமே ஸ்வ சம்பந்தி சர்வ சேதன விஷயமாக பிரபத்தி செய்து அருளுகையாலே
தனித்து ஒருவர் பிரபத்தி பண்ண வேண்டா என்கிறது –
இவ்வர்த்தம் ஸ்ரீ எம்பெருமானார் தம் சரம தசையிலே ஸ்ரீ பெரிய பெருமாள் திரு முன்பே சென்று சேவித்து நிற்க அவ்வளவிலே
ஸ்ரீ பெரிய பெருமாளும் அருளப் பாடிட்டு ஓன்று சொல்வான் போலே இருந்தாயீ-என்ன
நாயந்தே அடியேன் சம்பந்தி சம்பந்திகளும் தேவரீர் ஷமைக்கு விஷயராய் உஜ்ஜீவிக்கும் படி கிருபை செய்து அருள வேணும் என்ன
ஸ்ரீ பெருமாளும் அப்படியே யாகக் கடவது என்று அனுக்ரஹித்தார் என்று பிரசித்தம் இறே

நாம் பிரார்த்தித்தமை யுண்டு -அவன் ஸ்வா தந்த்ர்யத்தால் செய்யா விடில் செய்வது என் என்ன –

கமலா ரமேண-
தேவரீர் சொல்லிற்றை மறுக்கும் விஷயத்திலேயோ தேவரீர் பிரார்த்தித்து
அவன் தேவரீர் பிரார்த்த படி செய்யா விடில் ஸ்ரீ பெரிய பிராட்டியார் அவனுக்கு முகம் கொடுப்பாளோ என்னுதல்

தேவரீர் பிரார்த்தனையை செய்விக்கும் சாஷி உண்டு என்னுதல் -கமலத்தில் திரு வவதரிக்கையாலே கமலை என்று
திரு நாமம் உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான ஸ்ரீ எம்பெருமான் இடத்திலே என்னுதல்

கஸ்ஸ மஸ்ஸ கமௌ கமௌ லாதீதி கமலா என்று வ்யுத்பத்தியாய் அத்தாலே ஸூக பிரதனான ஸ்ரீ ஈஸ்வரனையும்
ஜ்ஞான பிரதனனான சேதனனையும் உபதேசத்தாலும் சௌந்தர்யாதி களாலும் -ஸ்வ வசமாக்கிக் கொள்ளும்
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான ஸ்ரீ எம்பெருமான் இடத்திலே என்னுதல் –

அர்த்திதா
மநோ வாக் காயை -என்கிற சூர்ணிகையாலே பிரார்த்திக்கப் பட்டது

இதியத் –
என்கிறது யாதொன்று உண்டு

ச ஏவ
லிங்க வ்யத்யயம்-விதேய பிரதான்யத்தாலே ஸ்வ சம்பந்தி சர்வ சேதன விஷயமாக தேவரீர் –
மநோ வாக் காயை -என்று தொடங்கி-
க்ருதான் க்ரியமாணான் கரிஷ்ய மாணாம்ச சர்வா ந சேஷாத ஷமஸ்வ -என்று
இருவருமான சேர்த்தியிலே பிரார்த்தித்த பிரார்த்தனை தானே

ஷேம
ரஷை-ரஷையாவது -ஸ்வ சம்பந்திகளுக்கு சர்வ அநிஷ்டங்களையும் போக்கி ரஷகமாம் போலே தேவரீருடைய பிரார்த்தனையும்
தேவரீர் சம்பந்திகளுக்கு சர்வ அநிஷ்டங்களையும் போக்கி தானே ரஷகம் ஆகிறது –

பவச்ச்ரிதா நாம் –
ஸ்வ அனுவ்ருத்தி நிரபேஷராய் கிருபா மாத்திர பிரசன்னாசார்யாரான தேவரீரை ஆஸ்ரயித்தவர்களுக்கு -என்னுதல்

தேவரீர் சம்பந்தி பரம்பரையும் உஜ்ஜீவிக்கும் படி பகவத் விஷயீ காரம் பெற்ற தேவரீரை ஆஸ்ரயித்தவர்களுக்கு என்னுதல்
இத்தால் ஸ்ரீ எம்பெருமானார் சம்பந்தம் உண்டாகவே பகவத் ஷமை இவன் பிரார்த்திக்க வேண்டாத படி தன்னடையே யுண்டாம் என்கிறது –

இத்தால் ஸ்ரீ ஈஸ்வர சம்பந்திகளுக்கு ஸ்வ அபராதங்களை ஸ்ரீ ஈஸ்வரன் ஷமிப்பனோ ஷமியானோ என்று சம்சயிக்கவும் கூடும்
அஸ் சம்சயமும் இல்லை ஸ்ரீ எம்பெருமானார் சம்பந்திகளுக்கு என்கிறது –
ஏவ காரத்தாலே இதா நீந்தனை பிரார்த்தனை ரஷகம் என்கிறது

ஹி
இவ்வர்த்தம் அடியேன் விண்ணப்பம் செய்ய வேணுமோ
அர்வாஞ்ச இத்யாதியால் பிரசித்தம் அன்றோ என்கிறார்

இத்தால் ஸ்ரீ ஆசார்ய அபிமானமே உத்தாரகம் என்கிறது
இப்படி இவர் விண்ணப்பம் செய்த வாறே நம்முடைய யத்னம் சபலமாய்த்து என்று திரு உள்ளம் உகந்தபடி இருக்கக் கண்டு
ஸ்ரீ யதீந்திர
என்கிறார்
பவாச்ச்ரிதா நாம்
ஸ்வ யத்னமே ஸ்வ ஆஸ்ரிதர் ரஷகமாம் படி இருக்கிற தேவரீர் சம்பந்திகளுக்கு என்னவுமாம் –)

ஒரு மலையில் நின்றும் ஒரு மலைக்குத் தாவும் ஸிம்ஹ ஸரீரத்திலே ஜந்துக்கள் போல்
பாஷ்யகாரர் ஸம்ஸார லங்கனம் பண்ண அவரோடே உண்டான குடல் துவக்காலே நாமும் உத்தீர்ணர் ஆவுதோம் என்று முதலியாண்டான் அருளிச் செய்வர்

———————————————————–

உபாயாந்தரங்களில் நெஞ்சு செல்லாமைக்கும்
கால ஷேபத்துக்கும்
இனிமையாலே விட ஒண்ணாமை யாலும்
நடக்கும் –சூரணை -158-

இன்னமும் இவ் வர்த்தமானத்துக்கு சில பிரயோஜனங்களை அருளிச் செய்கிறார் –

அதாவது –
பூர்வ வாசனையாலே அவசமாக உபாயாந்தரங்களிலே மனஸ் செல்லாமைக்காகவும்
இவ் அனுசந்தானத்தால் ஒழிய போது போக்க அரிதாகையாலே-கால ஷேபதுக்காகவும் –
இதனுடைய ரஸ்யத்தை யாலே விட மாட்டாமையலும்
இவ் அனுசந்தானம் இடைவிடாமல் நடக்க கடவதாய் இருக்கும் -என்கை-

———————————————————-

பேற்றுக்கு பல காலும் வேணும் என்று நினைக்கில் உபாயம் நழுவும் –சூரணை -159

இங்கன் அன்றிக்கே பல சித்திக்கு பல காலம் அனுசந்திக்க வேணும் என்றாலோ என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது
கீழ் சொன்ன பிரயோஜனங்களுக்காக அன்றிக்கே பேற்றுக்கு உறுப்பாக பல காலும்
அனுசந்திக்க வேணும் என்று பிரபத்தி பண்ணில்
சஹாயாந்தர சம்சர்க்க அசஹமான சித்த உபாயம் -சணல் கயிறு கண்ட ப்ரஹ்ம அஸ்தரம் போலே தன்னைக் கொண்டு நழுவும் -என்கை –

ஆக பூர்வ வாக்யத்துக்கு அர்த்தம் அருளிச் செய்தார் ஆயிற்று –

———————————————————————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading