மதுப்பாலே இருவர் சேர்த்தியும் நித்யம் என்கிறது –சூரணை -130
ஆக ஸ்ரீ மத் பதத்தில் பிரக்ருத்யம்சத்தை அருளி செய்தார் கீழ்-
பிரத்யயாம்சத்தை அருளி செய்கிறார் மேல் –
அதாவது
இம் மதுப்புத்தான் நித்ய யோக மதுப்பு ஆகையாலே -இத்தால்
புருஷகார பூதையான பிராட்டியும் ஈஸ்வரனுமான இவருடைய
சேர்த்தியும் எப்போதும் உண்டு என்னும் இடம் சொல்லுகிறது -என்கை-
(பிரக்ருத்யம்சத்தை அருளி செய்தார் கீழ்—ப்ரக்ருதி அம்சமான ஸ்ரீ மச் ஸப்தார்த்தை
பிரத்யயாம்சத்தை–மதுப்பர்த்தத்தை)
———————————————–
இவளோடு கூடிய வஸ்து வினுடைய உண்மை –சூரணை -131
இந் நித்ய யோகத்தை உபபாதிக்கிறார் –
அதாவது ஸ்ரீ ய பதிர் நிகில ஹேய பிரத்யநீக கல்யாணை கதாந ஸ்வேதர
சமஸ்து வஸ்து விலஷண ஞான ஆனந்த ஏக ஸ்வரூப -என்று
ஸ்வரூப நிரூபகமான ஞான ஆனந்தாதிகளுக்கு முன்னே –
ஸ்ரீ யபதித்வத்தை சொல்லும்படி அவன் ஸ்வரூபத்துக்கு பிரதான
நிரூபகையாய் இருக்கையாலே -இவளோடு கூடிய வஸ்துவினுடைய சத்பாவம் இருப்பது -என்கை-
—————————————————–
ஈஸ்வரனுடைய ஸ்வாதந்த்ர்யத்தையும் -சேதனன் உடைய அபராதத்தையும்
கண்டு அகல மாட்டாள் –சூரணை -132
ஆக ஸ்வரூப அனுபந்தித்வ பிரயுக்தமான நித்ய யோகத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –
இனி இவளுடைய குண பிரயுக்தமான நித்ய யோகத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
அபராதங்களை பத்தும் பத்தாக கணக்கிட்டு நிறுத்து அறுத்து தீர்க்கும் ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யத்தையும் –
யத் ப்ரஹ்ம கல்ப நியுத அனுபவேப்ய நாச்யம்-இத்யாதிப்படியே
கால தத்வம் உள்ள அனைத்தும் அனுபவியா நின்றாலும் -சிறிது வரை இட்டுக் காட்டக் கடவது
அல்லாதபடி பண்ணி வைத்த இச் சேதனனுடைய அக்ருத்ய கரண இத்யாதி அபராதத்தையும் கண்டு –
என்னாகப் புகுகிறதோ -என்னும் பயத்தாலே ஈஸ்வரனை விட்டு ஒரு ஷண காலமும் அகல மாட்டாள் -என்கை-
——————————————————–
சேதனனுக்கு இவை இரண்டையும் நினைத்து அஞ்ச வேண்டா –சூரணை -133
இத்தால் சேதனனுக்கு பலிக்கும் அதை அருளிச் செய்கிறார் –
அதாவது
இப்படி இவள் இருந்து நோக்குகையாலே -சேதனனுக்கு ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யமும்
ஸ்வ அபராதமும் ஆகிற இவை இரண்டையும் நினைத்து -என்னாய் விளையப் புகுகிறதோ –
என்று அஞ்ச வேண்டா -என்கை–
——————————————–
இத்தால் ஆஸ்ரயிக்கைக்கு ருசியே வேண்டுவது -காலம் பார்க்க வேண்டா -என்கிறது –சூரணை -134
இனி இம் மதுப்பின் தாத்பர்ய அம்சத்தை அருளிச் செய்கிறார் –
இப்படி புருஷகார உபாய வஸ்துக்களின் உடைய நித்ய யோகத்தை பிரதி பாதிக்கிற
இம் மதுப்பால்-இவ் விஷயத்தை ஆஸ்ரயிப்பாருக்கு-ஆஸ்ரயிக்கையில் ருசியே வேண்டுவது –
இரண்டு தலையும் கூடி இருக்கும் தசையிலே ஆஸ்ரயிக்க வேணுமே -என்று ஆஸ்ரயணத்துக்கு காலம்
பார்த்து இருக்க வேண்டா என்கிறது -என்கை-
—————————————————-
இவள் சன்னதியால் காகம் தலைப் பெற்றது –
அதில்லாமையால் ராவணன் முடிந்தான் –சூரணை -135
இனி இவள் புருஷ காரத்வத்தின் அவஸ்ய அபேஷித்வத்தை அறிவிக்கைகாக –
இவள் சந்நதிக்கும் அசந்நதிக்கும் உண்டான வாசியை அருளிச் செய்கிறார் –
தேவ்யா காருண்யா ரூபய-என்கிறபடி கிருபை தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருப்பாளாய்-
ஸ்வதந்த்ரனான ஈஸ்வரனுக்கு ஸ்வாதந்த்ர்யத்தை அமுக்கி கிருபையைக் கிளப்பும் அவளான இவள் சந்நிதியாலே –
அபராதத்தை தீரக் கழியச் செய்து -ப்ரஹ்ம அஸ்த்ரத்துக்கு இலக்காய்-தலை அறுப்பு உண்ணத் தேடின காகம் –
க்ருபயா பர்யபாலயத் -என்கிறபடி க்ருபா விஷயமாய் தலைப் பெற்றுப் போயிற்று –
அப்படி இருக்கிற இவள் சந்நிதி இல்லாமையாலே போக்கற்று செயல் மாண்டு நின்ற நிலை
ஒத்து இருக்க செய்தேயும் -காகத்தோபாதி அபராதம் இன்றிக்கே இருக்க –
ராம சரத்துக்கு இலக்காய் ராவணன் முடிந்தே போனான் -என்கை –
ஆகையால் ஆஸ்ரயிப்பாருக்கு இவள் சந்நிதியே வேணும் என்று கருத்து –
ஆக ஸ்ரீ மத் பதார்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –
———————————————————-
புருஷ கார பலத்தாலே ஸ்வாதந்த்ர்யம் தலை சாய்ந்தால்-தலை எடுக்கும்
குணங்களைச் சொல்லுகிறது நாராயண பதம் –சூரணை -136-
அநந்தரம் நாராயண பத அர்த்தத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது
உபதேசத்தாலும் அழகாலும் கண் அழி வற வசீகரித்து கார்யம் கொள்ள வல்ல புருஷகார பலத்தாலே –
ஆஸ்ரயண உந்முகனான சேதனன் அநாதி காலம் பண்ணின அபராதங்களைப் பார்த்துச் சீறி –
அங்கீகரியேன்-என்று இருக்கும் ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யம் தலை மடிந்தால் அதன் கீழ்
தலை எடுக்கப் பெறாத செறிப்பு தீர்ந்து தலை எடுக்கும் குணங்களைச் சொல்லுகிறது -நாராயண பதம் -என்கை –
———————————————————-
அவை யாவன -வாத்சல்யமும்-ஸ்வாமித்வமும்-சௌசீல்யமும் -சௌலப்யமும் -ஞானமும் சக்தியும் –சூரணை -137
அவை தாம் எவை என்ன அருளிச் செய்கிறார் –
இவற்றில் வத்சத்தின் பக்கல் தேனு இருக்கும் இருப்பு -அதாவது –
அதனுடைய தோஷத்தை போக்யமாகக் கொள்ளுகையும் –
ஷீரத்தை கொடுத்து வளர்க்கையும் –
எதிரிட்டவரை கொம்பிலும் குளம்பிலும் கொண்டு நோக்குகையும் -இறே
அப்படியே -ஈஸ்வரனும் தோஷத்தை போக்யமாகக் கொண்டு –
பாலே போல் சீர் –பெரிய திரு அந்தாதி -58–என்கிற குணங்களாலே தரிப்பித்து –
கதஞ்சன ந த்யஜேயம்-என்றும் அபயம் சர்வ பூதேப்ய -என்றும் சொல்லுகிறபடி
அனுகூலர் நிமித்தமாகவும் -பிரதி கூலர் நிமித்தமாகவும் நோக்கும் –
(மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் -மேலால்
பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று
மறப்பின்மை யான் வேண்டும் மாடு –58-)
(மித்ர பாவேந ஸ்லோகத்தில் அருளிச் செய்ததற்கு அனுகுணமாக ப்ரதிஜ்ஜை செய்கிறார் ஸத்ருத் ஏவ -இத்யாதி சரம ஸ்லோகத்தால்
ஸக்ருத் ஸ்ப்தத்துக்கு ஸஹஸா ஆதேசமாய் -ஸஹஸைவ ப்ரபந்நாய -என்றபடி -அதாகிறது
தன் அயோக்யதையைப் பாராமல் என் குணத்தையே விஸ்வஸித்து ப்ரபன்னனாகை -என்று ஆழ்வான் நிர்வாஹம்
கீழ் அநாதி காலம் சம ஸரித்துப் போந்தவன் மேல் அநந்த காலம் பல அனுபவம் பண்ணப் புகுகிறவனாகையாலே
யாவதாயுஷம் அநு வர்த்தித்தாலும்
ஸ கர்த்த என்கைக்குப் போருமத்தனை அன்றோ என்று எம்பார் நிர்வாஹம்
ஈஸ்வர விஷயீ காரத்துக்கு ஒருக்காலே அமையும் -பின்பு ஆவர்த்திக்கிறது உபாய வைபவத்தால் வந்த ரஸ்யதையாலே என்று பட்டர் நிர்வாஹம்
ஸக்ருத் ஏவ என்கையாலே உபாயத்துக்கு விஹிதமான அஸக்ருத் ஆவ்ருத்தியை வ்யாவர்த்திக்கிறது
தவாஸ் மீதி சாயசதே–என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தாலே அனவ்ரத பாவன ரூபமான பக்தியைச் சொல்லுகிறது – என்று நிர்வஹிப்பாரும் உண்டு
அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி –ஸர்வ பூதங்கள் நிமித்தமாக பய நிவ்ருத்தியைப் பண்ணிக் கொடுப்பன்
மஹா ராஜர் எதிரிடிலும் காட்டிக் கொடோம் -இவன் தான் அகலும் அளவிலும் இவன் கையிலும் காட்டிக் கொடோம்
ஏதத் விரதம் மம -நமக்கு அநு பால நீயமான ஸங்கல்பம் இது
அமோக ஸங்கல்பனான நமக்கு ஸங்கல்பங்கள் அடையக் குலையிலும் குலையாத ஸங்கல்பம் இது)
ஸ்வாமித்வமாவது-இவள் விமுகனான தலையிலும் விடாதே நின்று -சத்தையை நோக்கிக் கொண்டு
போருகைக்கு ஹேதுவான ஒரு பந்த விசேஷம் -அதாவது உடையவனாய் இருக்குமிருப்பு –
அத்வேஷம் தொடங்கி கைங்கர்ய பர்யந்தமாக உண்டான ஸ்வபாவ விசேஷங்களை எல்லாம்
உண்டாக்குகிறது இந்த பந்த விசேஷம் அடியாக –
சௌசீல்யமாவது -உபயவிபூதி யோகத்தாலும் -பெரிய பிராட்டியாரோடு சேர்த்தியாலும்-நிரங்குசமாய் இருக்கிற
ஈஸ்வரனுடைய மேன்மையையும் தங்கள் சிறுமையையும் பார்த்து -அவன் எவ்விடத்தான் நான் யார் –திரு வாய் மொழி -5-1-7-என்று
பிற்காலிடாதபடி எல்லோரோடும் ஒக்க மேல் விழுந்து புரை அறக் கலக்கையும்-
அது தன் பேறாக இருக்கையும் –
எதிர் தலையிலே அபேஷை இன்றியிலே இருக்க கலக்கையும் –
(புரை அறக் கலக்கையும்–ஸ்வ உத் கர்ஷமும் பர நிகர்க்ஷமும் நெஞ்சில் தட்டாதபடி)
(எல்லோரோடும் ஒக்க மேல் விழுந்து தன் பேறாக புரை அறக் கலக்கை என்றது ஞானிகள் விஷயத்தில்
எதிர் தலையிலே அபேஷை இன்றியிலே இருக்க கலக்கை-என்றது ஸம் சாரிகள் விஷயத்தில்)
(அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதிவாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கைம் மா துன்பொழித்தாய்! என்று கைதலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும்என் மேலானே.–5-1-7)
சௌலப்யமாவது -கண்ணுக்கு விஷயம் இன்றிக்கே இருக்கிற தான் கண்ணாலே கண்டு
ஆஸ்ரிக்கலாம் படி எளியனாய் இருக்கை-
ஞானமாவது -இச் சேதனனுக்கு கழிக்க வேண்டும் அநிஷ்டங்களையும்
கொடுக்க வேண்டும் இஷ்டங்களையும் நேராக அறிகைக்கு ஈடான ஸ்வ வ்யதிர்க்த சமஸ்த
பதார்த்தங்களையும் ஒரு காலே அபரோஷிக்க வல்ல அறிவு –
சக்தியாவது -ஹேயரான நித்ய சம்சாரிகளை உபாதேய தமரான நித்ய சம்சாரிகளோடு ஒரு கோர்வை ஆக்க வல்ல
அகடிதகடிந சாமர்த்தியம் –
இவற்றில் வாத்சல்யாதிகள் நாலும் ஆஸ்ர்யண சௌகர்ய ஆபாதிகம்
ஞானாதிகள் இரண்டும் ஆஸ்ரித கார்ய ஆபாதிகம் –
நிகரில் புகழாய் -திரு வாய் மொழி -6-10-10-என்று தொடங்கி -வாத்சல்யாதிகள் நாலும் இறே –
ஆஸ்ரயணதுக்கு உடலாக ஆழ்வார் அருளிச் செய்தது –
ஞான சக்திகள் இரண்டும் சொன்ன இது -ப்ராப்தி பூர்த்திகளுக்கும் உப லஷணம் –
கார்யகரத்வதுக்கு அவையும் அபேஷிதங்கள் ஆகையாலே –
(அகல கில்லேன் இறையும்என்று அலர்மேல் மங்கை உறைமார்பா!
நிகரில் புகழாய்! உலகமூன் றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல்ஒன் றில்லா அடியேன்உன் னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.-6-10-10)
——————————————-
குற்றம் கண்டு வெறுவாமைக்கு வாத்சல்யம் –
கார்யம் செய்யும் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம் –
ஸ்வாமித்வம் கண்டு அகலாமைக்கு சௌசீல்யம் –
கண்டு பற்றுகைக்கு சௌலப்யம் –
விரோதியைப் போக்கி தன்னைக் கொடுக்கைக்கு ஞான சக்திகள் –சூரணை -138-
இக் குணங்களுக்கு இவ் இடத்தில் விநியோகங்கள் எவை என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது –
ஆஸ்ரயணோந்முகனான இச் சேதனன் தன் தோஷத்தை பார்த்து அஞ்சாமைக்கு உறுப்பு –
தோஷத்தை போக்யமாகக் கொள்ளும் வாத்சல்யம் –
நம் கார்யம் செய்யுமோ செய்யானோ -என்று சங்கியாதே கார்யம் செய்யும் என்று
விஸ்வசிக்கைக்கு உறுப்பு இழவு பேறு தன்னதாம் படியான ஸ்வாமித்வம் –
உபய விபூதிக்கும் கடவனாய் இருக்கும் பெருமைக்கு பிரகாசமான ஸ்வாமித்வத்தை
கண்டு ஸ்வ நிகர்ஷ அனுசந்தானத்தாலே அகலாமைக்கு உறுப்பு தாழ நின்றவர்களோடு
புரை அறக் கலக்கும் ஸ்வபாவமான சௌசீல்யம்
அதீந்த்ரியம் என்று பிற்காலியாமல் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கைக்கு உறுப்பு
தன் வடிவை சஷூர் விஷயம் ஆக்குகை ஆகிறது சௌலப்யம் –
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்கிறபடியே ப்ராப்தி விரோதியைப் போக்கி
ப்ராப்யனான தன்னை உபகரிக்கைக்கு உறுப்பு -ப்ராப்தா வான இவன் கீழ் நின்ற நிலையும்
மேல் போக்கடியும் அறிகைக்கும்-அறிந்தபடியே செய்து தலைக் கட்டுகைக்கும் – ஏகாந்தங்களான ஞான சக்திகள்-என்கை-
——————————————————-
இங்கு சொன்ன சௌலப்யதுக்கு எல்லை நிலம் அர்ச்சாவதாரம்–சூரணை -139
சௌகர்ய ஆபாதங்களான குண சதுஷ்ட்யத்திலும் சௌலப்யம் பிரதானம் ஆகையாலும் –
அந்த சௌலப்ய காஷ்டையை அருளிச் செய்கிறார் –
அதாவது –
இப் பதத்தில் ஆஸ்ரயண உபயோகியாய் சொன்ன சௌலப்யம்- ஆஸ்ரிதர் உகந்தது ஒன்றை திரு மேனியாகக்
கொண்டு -சதா சந்நிதி பண்ணி இருக்கும் அர்ச்சாவதாரம் என்கை –
——————————————–
இது தான் பர வ்யூஹ விபவங்கள் போல் அன்றிக்கே
கண்ணாலே காணலாம் படி இருக்கும் –சூரணை -140-
இது தன்னை உபபாதிக்கிறார் –
அதாவது –
இச் அர்ச்சாவதாரம் தான் தேச விப்ரக்ருஷ்ட்தையாலே கண்ணுக்கு விஷயம் ஆகாத
பர வியூஹங்களும் கால விப்ரக்ருஷ்ட்தையாலே கண்ணுக்கு விஷயமாகாதபடி போன
விபவமும் போல் அன்றிக்கே
ஆசன்னமாய் அநவரத சந்நிதி பண்ணிக் கொண்டு இருக்கையாலே -அநவரதம் கண்ணாலே
காணலாம்படி இருக்கும்-என்கை-
(நாம் இருக்கிற பூமி முதல் கொண்டு கீழ் சேஷ லோக பர்யந்தம் பூ லோகம் என்று வியாஹரிக்கப்படும்
இந்த பூமி முதல் கொண்டு ஸூர்ய லோகம் பர்யந்தம் லக்ஷ யோஜந பர்யந்த விப்ர க்ருஷ்டதையை யுடைத்தாய் இருக்கும்
புவர் லோகம் ஸூர்ய லோகம் முதல் கொண்டு சந்த்ர மண்டலம் பர்யந்தம் பதினாலு லக்ஷம் யோஜனையை யுடைத்தாய் இருக்கும்
ஸூவர் லோகம் துருவ மண்டலத்துக்கு மேலே கோடி யோசனையை யுடைத்தாய் இருக்கும்
மஹர் லோகம் அதற்கு மேல் இரண்டு கோடி யோஜனையை யுடைத்தாய் இருக்கும்
ஜனோ லோகம் அதுக்கு மேலே எட்டுக்கோடி யோஜனையை யுடைத்தாய் இருக்கும்
தபோ லோகம் அதுக்கு மேலே பன்னிரண்டு கோடி யோஜனையை யுடைத்தாய் இருக்கும்
ஸத்ய லோகம் அதுக்கும் மேல் கொஞ்சம் குறைச்சலாக இரண்டு கோடி யோஜனையை யுடைத்தாய் இருக்கும்
அதுக்கும் மேலே அந்த தமஸ்ஸு
அதுக்கும் மேலே அண்ட கடாஹம் கோடி யோஜனையை யுடைத்தாய் இருக்கும்
அதுக்கும் மேலே ஜல ஆவரணம் பத்துக்கோடி யோஜனையை யுடைத்தாய் இருக்கும்
இந்தப்பிரகாரம் அவ்யக்தம் பர்யந்தம் பத்துப் பத்துக் கோடி யோஜனை தூரமாய் உள்ளது என்று அறியத் தக்கது
இதுக்கும் மேலே ஸ்வயம் ப்ரகாசகமான பரமபதத்தில் பஞ்ச உபநிஷத் மயமான திவ்ய மங்கள விக்ரஹ விஸிஷ்டனாய்
ஸர்வ வியாபகனான பர வாஸூ தேவன் தீர்க்கமாய் அதி விசாலமான இந்த லோக ஸ்தியைப் பாரா நின்று கொண்டு ஹ்ருஷீ கேசனாய் எழுந்து அருளி இருக்கின்றான்
இதுவாய்த்து பரத்வம்)
——————————————————–
இவை எல்லாம் நமக்கு நம்பெருமாள் பக்கலிலே காணலாம் –சூரணை -141-
இக் குணங்கள் எல்லாம் அர்ச்சாவதாரத்திலே காணலாமோ என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது சௌகர்ய ஆபாதகமாகவும் கார்ய ஆபாதகமாகவும் சொன்ன
இக் குணங்கள் எல்லாம்-இவை காண்கையாலே அபேஷை உடைய நமக்கு
நம்முடைய பெருமாள்-உரிமையாக நம்பெருமாளை மா முனிகள் அருளும் ஸ்ரீ ஸூக்தி – பக்கலிலே காணலாம் -என்கை-
(நம்பெருமாள் என்னுமத்துக்கு ஐதிக்யம்
முன்பொரு காலத்திலே கலாபத்த்திலே க்ரூரராய் இருப்பார் சிலர் பெருமாளையும் அத்தேசத்திலுள்ள எம்பெருமான்களையும் வாரிக்கொண்ட போக
அப்போது பெருமாள் திருவடிகளுக்கு நல்லராய் இருக்கும் ராஜ கண்ட கோபாலர் என்கிற விண்ணப்பம் செய்வார் பெருமாளைப் பிரிய ஷமர் இன்றிக்கே
அங்கே சென்று அவனைக்கண்டு தம்முடைய பண்களாலே அவனை வசீகரிக்க அவனும் அதி ப்ரீதனனாய் உமக்கு வேண்டுவது என் என்ன
நம்முடைய பெருமாள் இங்கே வந்தார் அவரைத்தர வேணும் என்ன
ஆகில் கொண்டு போம் என்று பல விக்ரஹங்களைக் காட்ட-அப்போது அவர்கள் நடுவே தேடிக் காணாமையாலே கிலேசித்து இருக்க
அப்போது அவனுடைய பெண் பிள்ளை அழகிய மணவாளப் பெருமாளான இவரை தனது அந்தப் புரத்திலே ஆதரித்துக் கொண்டு போரா நிற்க
அச்செய்தியை அறிந்து அவன் அவள் அறியாமல் கொண்டு வந்து இவரோ உம்முடைய பெருமாள் என்று காட்டிக் கொடுக்கக் கண்டு
இவர் தாம் நம் பெருமாள் என்று அணைத்து எடுத்துக் கொண்டு அதி த்வரையுடன் கோயில் ஏற எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு வந்தார் என்று ப்ரஸித்தம் இறே
அப்போது அனைவரும் பெருமாள் அன்று என்று சங்கித்ததுக்கு
திருவாழி யாழ்வான் பின்னையும் -இவர் நம்முடைய பெருமாள் என்று மேல் எழுத்து இட்டு அருளினாராம்
அன்று தொடங்கி அதுவே அவருக்கு நிரூபகமாய்த்து என்று அருளிச் செய்வார்கள் -)
(உபதேச ரத்ன மாலை வியாக்யானத்தில் பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்தவை -அன்புடையோர் சாத்துகை யாவது –
இவை எல்லாம் நமக்கு ஸ்ரீ நம் பெருமாள் பக்கலிலே காணலாம் -என்று அருளிச் செய்தார் இறே –)
(அன்புடையாரான பிள்ளை லோகாச்சார்யார் முமுஷுப்படியில் சாத்தினாரே
இவர் அன்றோ பரிவுடன் நம்பெருமாளை எழுந்து அருளப் பண்ணினவர் )
முன்பு ஒரு காலத்திலே ஒரு கலபையிலே க்ரூரராய் இருப்பார் சிலர்
ஸ்ரீ பெருமாளையும் அத் தேசத்தில் உண்டான ஸ்ரீ எம்பெருமான்களையும் கொண்டு போந்து –
கெட்டேன் -என்னும்படி -வாரி வடக்கே கொண்டு போக
(ஸ்ரீ ரெங்கத்தில் மூன்று படை எடுப்புக்கள் -1311-1323-உண்டே )
அப்பொழுது ஸ்ரீ பெருமாள் திருவடிகளுக்கு போர நல்லராய் இருக்கிற
ஸ்ரீ ராஜ கண்ட கோபாலர் என்கிற விண்ணப்பம் செய்வார் (அரையர் ஸ்வாமி )
எங்கனே தரிக்கேன் உன்னை விட்டு -(7-2)–என்கிறபடியே ஸ்ரீ பெருமாளைப் பிரிய ஷமர் அன்றிக்கே
இது நிலம் கை துழாவிக் கொண்டு போய்
அங்கே சென்று அவனைக் கண்டு
தம்முடைய நுடங்கு கேள்வி இசை (3-4-6)-என்னலாம் படியான பண்களாலே
அவனைப் பண்படுத்த –
அவனும் அதி ப்ரீதனாய்
உமக்கு வேண்டுவது என் என்ன –
நம்முடைய ஸ்ரீ பெருமாள் இங்கே வந்தார் அவரைத் தர வேணும் -என்ன
ஆகில் கொண்டு போம் என்று பல விக்ரஹங்களையும் கொடு வந்து காட்ட –
அப்பொழுது அவர்கள் நடுவே தேடிக் காணாமல்
சிந்திக்கும் திசைக்கும் இத்யாதிப் படியே-( 7-2-) கிலேசித்து இருக்க –
அப்பொழுது அவனுடைய பெண் பிள்ளை ஸ்ரீ அழகிய மணவாள பெருமாளான இவரைத்
தம் அந்தப்புரத்திலே ஆதரித்துக் கொண்டு போரா நிற்க
அச்சேதியை அறிந்த அவன்
அவள் அறியாமல் கொண்டு வந்து இவரோ உம்முடைய பெருமாள் -என்று காட்டிக் கொடுக்கக் கண்டு
(ராமபிரியனை ராமானுஜர் மீட்டால் போல் இங்கும் –
இது நம்பெருமாளை அரையர் மீட்டது -காலத்தால் பின்னால் )
ஸ்ரீ ரெங்க நாத மம நாத (கத்யம்)-என்றும்
அரங்கமாளி என்னாளி -(திருமங்கை ஆழ்வார் )-என்றும்
என் அரங்கத்து இன்னமுதர் குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர்-(நாச்சியார் -11) -என்றும்
சொல்லுகிறபடியே ஸ்ரீ அழகிய மணவாள பெருமாளை அதி ப்ரீதியுடன்
இவர் தாம் ஸ்ரீ நம் பெருமாள் -என்று அணைத்துக் கொண்டு
அதி த்வரையுடன் ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு வந்தார் என்று பிரசித்தம் இறே
அப்போது அனைவரும் ஸ்ரீ பெருமாள் அன்று என்று சங்கித்ததுக்கு
ஸ்ரீ ஆயி ஆழ்வார் பிள்ளையும் -இவர் நம்முடைய பெருமாளாம் -என்று
மேல் எழுத்து இட்டு அருளினாராம்
அன்று தொடங்கி அவருக்கு அதுவே நிரூபகமாய்த்து என்று அருளிச் செய்வார்கள் –
(1371-நம்பெருமாள் -48- வருஷங்கள் பின்பு எழுந்து அருள -ஈரம் கொல்லி -வ்ருத்தர் –
கண் தெரியாதவர் -திருவாடை கந்தம்-நம்பெருமாள் பெயர் உறுதிப்படுத்தப் பட்டது-
திருவரங்க மாளிகையார் உத்சவர் இடைக்காலத்தில் –
அரையர் ஸ்ரீ சடகோபன் சாதிக்கும் நாள்கள் விசேஷம் –
திருப்பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் )
இனி ஸ்ரீ நம் ஆழ்வார் -என்ற
திரு நாமம் ஆகைக்கு அடி முற்காலத்திலே
ஸ்ரீ பெருமாள் அல்லாத ஆழ்வார்களைக் காட்டிலும்
ஸ்ரீ ஆழ்வாரை ஸ்ரீ நம் ஆழ்வார் என்று அபிமானித்து அருளி
பெரிய திரு அத்யயனத்துக்கும் அப்படியே திருமுகம் எழுதி
ஸ்ரீ திரு நகரிக்குப் போக விட்டு அருளுவர் என்றும் உண்டு இறே –
(ஆழ்வாரைக் கொண்டு வர சென்ற நாள் கார்த்திகை கார்த்திகை –
திரும்ப எழுந்த பண்ணும் வரை அத்யயன காலம் ஆனது
செங்கழு நீர் திருவாசி கொடுத்து நம்மாழ்வாரை எழுந்து அருளப் பண்ண சொல்லி
தாம் திருக்கைத்தலை சேவை அருளி உள்ளே எழுந்து அருளுவார்
ராமானுஜர் கருட மண்டபம் பக்கம் தனியாக சந்நிதி ஏற்படுத்தி நம்மாழ்வார் ப்ரதிஷ்டை செய்து அருளினார் – )
————————————–
திருக் கையில் பிடித்த திவ்ய ஆயுதங்களும்
வைத்து அஞ்சேல் என்ற கையும் –
கவித்த முடியும்
முகமும் முறுவலும்
ஆசன பத்மத்திலே அழுத்தின திரு வடிகளுமாய் நிற்கிற
நிலையே நமக்கு தஞ்சம் –சூரணை -142-
பெருமாள் பக்கலிலே இக் குணங்களுக்கு பிரகாசங்களாய் உள்ளவற்றைச் சொல்லி –
இவற்றுடனே நிற்கிற நிலையே நமக்கு தஞ்சம் -என்கிறார் –
அதாவது
கார்யகரத்வ உபயோகியான ஞான சக்திகளுக்கு பிரகாசகமாம் படி
திருக் கைகளிலே தரித்துக் கொண்டு இருக்கிற சங்கு சக்ராதி திவ்ய ஆயுதங்களும் –
வாத்சல்ய பிரகாசகமாம் படி வைத்து அஞ்சல் என்ற கையும் –
ஸ்வாமித்வ பிரகாசகமாக கவித்த முடியும் –
சௌசீல்ய ப்ரகாசகமான முகமும் முறுவலும் –
அனைவருக்கும் கண்டு பற்றலாம் படி சௌலப்ய ப்ரகாசகமான ஆசன பத்மத்திலே அழுத்தின திரு வடிகளுமாக-
கொண்டு எழுந்து அருளி இருக்கிற நிலையே அநந்ய கதிகளான நமக்கு ரஷகம் -என்கை –
——————————————————-
ரஷகத்வ போக்யத்வங்கள் இரண்டும் திரு மேனியிலே தோற்றும் –சூரணை -143-
உபாய உபேய நிஷ்டருக்கு அபேஷிதமான ஆகாரங்கள் இரண்டும் கீழ்ச் சொன்னபடியே
நிற்கிற திரு மேனியிலே தோற்றும் என்கிறார் –
அதாவது
ரஷண பரிகரமான திவ்ய ஆயுதங்களோடும் ரஷணத்துக்கு கவித்த முடியோடும் கூடி இருக்கையாலே –
ரஷகத்வம் தோற்றுகையாலும் –
அணியார் ஆழியும் சங்கும் ஏந்தும் -திரு வாய் மொழி -8-3-6-
முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ -திரு வாய் மொழி -3-1-1–என்கிறபடி
அவை தானே அழகுக்கு உடலாய் -வைத்தஞ்சல் என்று கையும் முகமும் முறுவலும் ஆசன பத்மத்தில்
அழுந்தின திரு அடிகளும் -ஓர் ஒன்றே அழகுக்கு எல்லை நிலமாய் இருக்கையாலே போக்யத்வம் தோற்றுகையாலும் –
இரண்டும் திரு மேனியிலே பிரகாசிக்கும் -என்கை –
ஆக நாராயண பதார்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று .
(உபாய உபேய நிஷ்டருக்கு–உபாய அத்யவசாய நிஷ்டரையும் –ஆர்த்த ப்ரபன்னரான ப்ராப்ய த்வரா நிஷ்டரையும் சொன்னவாறு
உபாய நிஷ்டருக்கு அபேக்ஷிதங்களானவை -வாத்சல்யாதிகளும் ஞான சக்தி யாதிகளும்
உபேய நிஷ்டருக்கு அபேக்ஷிதங்களானவை -திவ்ய ஆயுதங்கள்
அணியார் ஆழியும் சங்கும்–ஆபரண தயா பூர்ணமான திரு ஆழியும் திருப்பாஞ்ச ஜன்யமும்
இரண்டும் திரு மேனியிலே பிரகாசிக்கும்-என்றது ரக்ஷகத்வமும் போக்யத்வமும் ஆகிய இரண்டும் என்றவாறு)
(பணியா வமரர் பணிவும் பண்பும் தாமேயாம்
அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல
மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–8-3-6-)
(முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –3-1-1-)
———————————————————————————————————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply