1. பத்தம் காலஸ்ய பாஸேந ஸர்வபூதாபஹாரிணா
நநஸ்யந்தம் உபேக்ஷேயம் ப்ரதீப்தம் ஸரணம் யதா:-ஸ்ரீராமா. யுத். 16 : 21.
பிராட்டியும் ஸ்ரீ விபீஷணாழ்வானும் இராவணனை நோக்கி நலத்தைக் கூறினாற்போன்று இருப்பது ஒன்றேயன்றோ இவருடைய பரோபதேசம்? 1‘எல்லா ஆத்துமாக்களையும் கவரக்கூடியதான காலபாசத்தினால் கட்டு உண்டவனும் நாசத்தை அடைகின்றவனுமான இராவணனை – பற்றி எரிகின்ற வீட்டினைப் போன்று – உபேக்ஷை செய்யமாட்டேன்’ என்பது ஸ்ரீ விபீஷணாழ்வான் வார்த்தை. ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், ‘வெந்து அற்ற வீட்டிலே ‘ஒரு கம்பாகிலும் கிடைக்குமோ?’ என்று அவிக்கப் பார்ப்பாரைப் போன்று, நானும் நலத்தைக் கூறுவேன்’ என்கிறார்
2. ஸ்ரீவத்ஸ வக்ஷா நித்யஸ்ரீ: அஜய்ய: ஸாஸ்வத: த்ருவ:(ஸ்ரீ ராமாயணம் யுத்தகாண்டம். இது, மண்டோதரி வார்த்தை.)
முதற்பாட்டில், 1‘சார்வபௌமராய்ப் போந்தஇராசாக்கள் அந்த இராச்சிய ஸ்ரீயை இழந்து இரந்து உயிர் வாழ வேண்டும்படி வறியர் ஆவார்கள்; ஆன பின்பு, 2‘ஸ்ரீவத்ஸவக்ஷா நித்யஸ்ரீ – ஸ்ரீவத்சத்தை மார்பிலேயுடையவன், நித்தியமான ஸ்ரீயையுடையவன்’ என்கிறபடியே, அழியாத செல்வமான ‘சர்வேசுவரனைப் பற்றப் பாருங்கோள்,’ என்கிறார்.
3. பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் ஸாஸ்வதம் ஸவம் அச்யுதம்.-தைத்திரீய நாராயண. உப. 11 : 8.
ஒரு நாயகமாய் – தனி அரசாக. 3‘உலகங்கட்கு எல்லாம் தலைவன்’ எனப்படுகின்ற சர்வேசுவரனுடைய ஐஸ்வரியத்தைப் 4பௌண்ட்ரகவாசுதேவன் பின்பற்றினாற் போலே பின் பற்றுகிறவாற்றைத் தெரிவித்தபடி. நிலை
செங்கதிர்க் கற்றை காலும் திகிரியஞ் செல்வன் யானே!
சங்கொடு தழல்வாய் நேமி தாங்குதல் விடுத்தால் உய்ந்தான்;
அங்கவை விடுக லானேல் ஆடமர்க் கெழுக’ என்னா
வெங்கடக் களிறட் டார்க்கு விடுத்தனன் தூது மன்னோ.’ ( என்பது பாகவதம். -10-88)
4. யாவத் ஸூர்ய: உதேதிஸ்ம யாவச்ச ப்ரதிதிஷ்டதி
ஸர்வம் தத்யௌவ நாஸ்வஸ்ய மாந்தாது: க்ஷேத்ரம் உச்யதே.(ஸ்ரீ விஷ்ணு புரா. 4. 2 – 65.)
உலகு – கடல் சூழ்ந்த பூமிப்பரப்பு அடங்கலும்; 2‘எங்கிருந்து சூரியன் உதிக்கின்றானோ, எங்கு மறைகின்றானோ, அதற்கு இடைப்பட்ட பூமி முழுதும் யுவநாஸ்வனுடைய புதல்வனான மாந்தாதா என்ற அரசனுடைய பூமி என்று சொல்லப்படுகிறது,’ என்கிறபடியே, 3முந்திரிகை நிலம் உடையவனைப் போலே ஆயிற்று ஆள்வது. உடன் ஆண்டவர் – இந்தப் பூமிப்பரப்பில் ஓர் இடம் குறை கிடவாதபடி ஆண்டவர் என்னுதல். அன்றிக்கே, 4‘பாப காரியங்களை நினைத்தவர் முன்பே கையும் வில்லுமாய் நின்று நோக்கிக்கொண்டு போந்த கார்த்தவீரியார்ச்சுனனைப் போன்று ஆண்டவர்கள்’ என்னுதல்.
5. அகாயசிந்தா ஸமகாலமேவ
ப்ராதுர்ப்பவம்ஸ்சாபதர: புரஸ்தாத்
அந்த: ஸரீரேஷூ அபிய: ப்ரஜாநாம்
பிரத்யாதி தேஸாவிநயம் விநேதா.
‘இப்படிச் சக்கரவர்த்திகளாய் இருந்துகொண்டு தனி அரசாக நெடுநாள் உலகத்தை ஆண்டு போந்தவர்கள் பின்னை என் செய்வார்கள்?’ என்னில், 5‘இராச்சியம் என்பது, வைத்யம் செய்யமுடியாததும் நாசத்தை விளைவிப்பதுமான பெரியது ஒரு நோய்; அதன்பொருட்டு அரசர்கள் சகோதரனையும் பிள்ளையையும் விடுகிறார்கள் அல்லவா?’ என்கிறபடியே, அவற்றை இழந்து வருந்துவார்கள் என்கிறார் மேல்: கருநாய் கவர்ந்த காலர்
7. தத்ர நாராயண: ஸ்ரீமாந்மயா பிக்ஷாம் ப்ரயாசித:
தத: தேந ஸ்வகம் பார்ஸ்வம் நகாக்ரேண விதாரிதம்.( மச்ச புராணம்.)
அங்கு ஸ்ரீமந் நாராயணனிடத்தில் நான் பிச்சையை யாசித்தேன்,’ என்றும் வருகின்ற பிரமாணங்களைக் காணல் தகும். இதனால், 2ஓடு கொண்டு இரப்பார்க்கு எல்லாம் இவனை ஒழியக்கதி இல்லை என்பது போதரும்
8. யாவத் நசரணௌப்ராது: பார்த்திவ வ்யஞ்ஜ நாந்விதௌ
ஸிரஸா தாரயிஷ்யாமி நமே ஸாந்தி: பவிஷ்யதி.(ஸ்ரீராமா. அயோத். 98 : 8. )
பிள்ளாய்! உன் உள்வெதுப்பு ஆறுவது எப்போது?’ என்ன, ‘நானும் எனக்கு வகுத்த முடி சூடி அவரும் தமக்கு வகுத்த முடி சூடின அன்றே,’ என்றான் அன்றோ ஸ்ரீ பரதாழ்வான்? -ஸ்ரீ ராமபிரானுடைய திருவடிகள் என் தலையினால் தாங்குகின்றவரையில் எனக்குச் சாந்தி உண்டாக மாட்டாது’ என்று இருக்கின்ற என் தலைக்குக் கோலமாம்.
9. ஜீவிதம் மரணாந்தம் ஹி ஜராந்தே ரூப யௌவநே
ஸம்பதஸ்ச விநாஸாந்தா: ஜாநந்க: த்ருதிம் ஆப் நுயாத்.
காலம் பெற – அரை நாழிகையாகிலும் முற்பட்டது உடலாக; 7‘வாழ்வு சாதலை முடிவாக உடையது; உருவம் யௌவனம் இவைகள் முதுமையை முடிவாக உடையன; செல்வம் நாசத்தை முடிவாக உடையது,’ என்னும் இவற்றை அறிந்த எவன் தான் தைரியத்தை அடைவான்?’ என்ப ஆதலின், நாளைச் செய்கிறோம் என்னுமது அன்று என்பார், ‘காலம் பெற’ என்கிறார்
10. யந்முஹூர்த்தம் க்ஷணம் வாபி வாஸூதேவோ ந சிந்த்யதே
ஸாஹாநி: தந்மஹச்சித்ரம் ஸாப்ராந்தி: ஸாச விக்ரியா.
ஒரு முகூர்த்த காலமாவது ஒரு கணநேரமாவது வாசுதேவனை நினைக்கவில்லை என்பது யாது ஒன்று உண்டு? அதுவே, இவனுக்கு ‘அஸந்நேவபவதி – இல்லாதவன் ஆகிறான்’ என்னும்படி வருகிற கேடு ஆகிறது
11. அஸந்நேவஸபவதி அஸத்ப்ரஹ்மேதி வேதசேத்
அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத ஸந்தமேநம்ததோ விதுரிதி.(தைத்திரீய. ஆந. 6.)
தொழுது எழு என் மனனே’ என்று, அநாதிகாலம் 6‘பரம் பொருளைப் பற்றிய அறிவு இல்லாதவன், இல்லாதவன் போலே ஆகிறான்,’ என்னும்படி போந்தவர் அவனைத் தொழுது உய்வு பெற்றாற் போலே காணும், இவர் பாடின திருவாய்மொழியைக் கற்றவர்களைத் தொழுது நித்திய சூரிகள் உய்வு பெறும்படி. வீற்றிருப்பாரே
12. ஆயாஸ: ஸ்மரணேக: அஸ்ய ஸ்மிருத:யச்சதி ஸோபநம்
பாபக்ஷய: ச பவதி ஸ்மரதாம் தம் அஹர்நிஸம்.(ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 17 : 78.)
அந்தப் பகவானை நினைப்பதில் என்ன சிரமம் இருக்கிறது? நினைத்தால் மங்களத்தைக் கொடுக்கிறார்; இரவு பகல் எந்நேரத்திலும் அவரை நினைக்கின்றவர்களுக்குப் பாவங்களின் நாசமும் உண்டாகின்றன,’ என்றான் ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான்.
13. ஆபதர்த்தம் தநம் ரக்ஷேத் தாராந் ரக்ஷேத் தநைரபி
ஆத்மாநம் ஸர்வதாரக்ஷேத் தாரைரபி தநைரபி.
ஆபத்தின்பொருட்டுச் செல்வத்தைச் செலவு செய்யாமல் காக்கக் கடவன், அப்பொருள்களைச் செலவு செய்தாகிலும் மனைவிமார்களைக் காக்கக் கடவன், அம்மனைவிமார்களைக் கொண்டும் அப்பொருள்களைக் கொண்டும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளக் கடவன்,’ என்றார் பிறரும்.
14. மாம் நிவர்த்தயிதும் ய : அஸௌ சித்ரகூடம் உபாகத:
ஸிரஸா யாசத: தஸ்ய வசநம் நக்ருதம் மயா. (ஸ்ரீராமா. யு. 24 : 19).
தலையாலே யாசித்த அந்தப் பரதாழ்வானுடைய வேண்டுகோள் என்னால் முடிக்கப்படவில்லை,’ என்கிறபடியே, ‘பிள்ளை தலையாலே இரக்க, நாம் மறுத்துப் போந்தோம்’ என்று புண்பட்டுத் தலை சீய்க்கும் இறைவனைத் தொழுகிறார்கள் அன்றோ
தொழுகின்றவன் ஆதரத்தோடு தொழ, தொழப்படுகின்றவன் குணஹீநன் ஆகையாலே அநாதரித்திருக்கின்றான் என்பதனை உதாரண முகத்தாலே விளக்குகிறார்.
15. ஸ்வபுருஷம் அபிவீக்ஷ்ய பாஸஹஸ்தம்
வததியம: கில தஸ்ய கர்ணமூலே
பரிஹர மதுஸூதந ப்ரபந்நாந்
பிரபு: அஹம் அந்யந்ருணாம் ந வைஷ்ணவாநாம்.(ஸ்ரீ விஷ்ணு புரா. 3. 71 : 14. )
‘இவ்வடியை நினைக்கவே சமுசாரம் அடி அறும்’, என்னுதல். என்றது, 3‘யமன், கையில் பாசத்தைத் தரித்த தன்னுடைய கிங்கரனைப் பார்த்து, ‘பகவானிடத்தில் பத்தியுள்ளவர்களை விட்டுவிடு; நான் மற்றையோர்க்கே எஜமானன்;
16. ஸஹஸ்ர யுகபர்யந்தம் அஹ: யத் ப்ரஹ்மணோவிது:
ராத்ரிம் யுகஸஹஸ்ராந்தாம் தே அஹோராத்ர விதோ ஜநா :(ஸ்ரீ கீதை. 8 : 17. )
பிரமாவினுடைய ஒரு பகலை ஆயிரம் சதுர்யுகம் உள்ளதாகவும் ஓர் இரவை ஆயிரம் சதுர்யுகம் உள்ளதாகவும் அறிகிறார்கள்,’ என்கிறபடியே, 4ஆயிரம் சதுர்யுகம் கூடியது ஒரு பகலாய், இப்படி இராத்திரியாய், இங்ஙனம் நூறு ஆண்டு இருந்து துவிபரார்த்தகாலம் உயிர் வாழ்ந்து முடிந்து போகும் பிரமன் முதலானோர்’ என்கிறார் மேல்
15 நிமிஷம் ஒரு காஷ்டை; 30 காஷ்டை ஒரு கலை; 30 கலை ஒரு முகூர்த்தம்; 30 முகூர்த்தம் ஒரு நாள்; 15 நாள் ஒரு பக்ஷம்; 2 பக்ஷம் ஒரு
மாதம்; 2 மாதம் ஒரு ருது; 2 ருது ஓர் அயனம்; 2 அயனம் ஒரு வருஷம்; இப்படி மனித வருஷம் 360 கொண்டது ஒரு தேவ வருஷம்; தேவ வருஷம்
12000 கொண்டது ஒரு சதுர் யுகம்; 71 சதுர் யுகம் ஒரு மந்வந்தரம்; 14 மந்வந்தரம் ஆயிரம் சதுர்யுகம்; இது பிரமனுக்கு ஒரு பகல்; இரண்டாயிரம்
சதுர்யுகம் பிரமனுக்கு ஒரு நாள். இந்த நாள்களால் மாதங்களையும், மாதங்களால் வருஷங்களையும் பெருக்கி, அதனால் வருகின்ற வருஷம் நூறு
ஆனால், பிரமனுடைய ஆயுள் முடிவாகும் என்பர்.
17. கங்காயா: ஸிகதா தாரா யதா வர்ஷதி வாஸவே
ஸக்யா கணயிதும் லோகே ந வ்யதீதா: பிதாமஹா(வைஷ்ணவ தர்ம சாஸ்திரம்.)
உலகில் கழிந்த பிரமர்கள் கங்கையிலே உள்ள மணல் போலவும் இந்திரனாலே பெய்விக்கப்படுகின்ற மழைத்தாரைகள் போலவும் எண்ணுதற்கு முடியாதவர்கள் ஆவர்,’ எனப்படுதலால். ‘கழிந்தவர் நுண்மணலிற்பலர்’ என்கிறார்.
18. ஸபார்யாவசநம் ஸ்ருத்வா ஸாடீம் ஆச்சாத்ய துஸ்சதாம்
ஸப்ராதிஷ்டத பந்தாநம் யத்ர ராம நிவேஸநம்.(ஸ்ரீராமா. அயோத். 32 : 32)
துணி முன்பு நால – 1‘அந்தத் திரிஜடன் என்னும் பிராஹ்மணன் மனைவியின் வார்த்தையைக் கேட்டு உடுத்துவதற்குப் போராத துணியை உடுத்திக்கொண்டு புறப்பட்டான்,’ என்கிறபடியே, பின்பு கொண்டு இணைக்க எட்டம் போராமையாலே முன்னே தொங்காநிற்கும்
20. நதேரூபம் நசாகாரோ நாயுதாநி நசாஸ்பதம்
ததாபி புருஷகாரோ பக்தாநாம்த்வம் ப்ரகாஸஸே.(ஜிதந்தா ஸ்தோத்திரம், 5.))
தேவரீருடைய திவ்யாத்ம சொரூபமானது தேவரீருக்கு அன்று; திவ்ய மங்கள விக்கிரஹமும் தேவரீருக்கு அன்று; திருவாழி முதலான
ஆயுதங்களும் தேவரீருக்கு அன்று; அப்படியிருந்தும், திவ்ய மங்கள விக்ரஹத்தையுடையவராகவே இருக்கிறீர்; தேவரீர் பத்தர்களுக்காகவே
பிரகாசிக்கின்றீர்,’ பக்தாநாம் – ‘பக்தர்களுக்காகவே என்று இருக்கிற உடம்பைப் பற்றப் பாருங்கோள்’ என்கிறார் மேல் : மணி மின்னு மேனி
19. ஜீர்யந்தி ஜீர்யத: கேஸா: தந்தாஜீர்யந்திஜீர்யத:
சக்ஷூ: ஸ்ரோத்ரேச ஜீர்யேதே த்ருஷ்ணைகா நிருபத்ரவா.
21. ஏஷ ஸர்வஸ்வபூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத:
மயாகாலமிமம் ப்ராப்ய தத்த: தஸ்ய மஹாத்மந:- (ஸ்ரீராமா. யுத். 1 : 13.)
திருமேனி பத்தர்களுக்காகவே இருக்குமோ?’ எனின், 3‘இரண்டு சரீரங்களைக் கொடுத்து உதவிய மகாத்துமாவான அந்த அனுமானுக்கு, விலக்காதது ஒரு சமயத்தைப் பெற்று, என்னால் கொடுக்கப்பட்டதான இந்த ஆலிங்கனமானது எல்லாக் கொடைக்கும் சமானமாகக் கடவது என்று 1கொடுக்கும்படி அன்றோ? நம் மாயவன் – அடியார்கள் விஷயத்தில் அவன் இருக்கும்படி எல்லை காணப் போமோ?
ஏஷ : – தாம் அனுபவித்துத் தமக்கு ரசித்தது என்று பிறர்க்குக் கொடுப்பாரைப் போலே; இச்சா க்ருஹீதாபிமதோருதேஹ’: (விஷ்ணு புரா. 6. 5 : 84.) என்னக் கடவதிறே. ‘இச்சா க்ருஹீதம்’ என்கையாலே, கர்ம நிபந்தனம் அல்ல என்று தோற்றுகிறது; ‘அபிமதம்’ என்கையாலே, தனக்கும் போக்கியம் என்று தோற்றுகிறது; சர்வ ஸ்வபூத : – இது ஒழிய மற்றொன்றைக் கொடுத்தாலும் இது கொடாததால் வரும் குறை கிடக்குமே? திருமேனியைக் கொடுக்கவே எல்லாம் கொடுத்ததாமிறே; சர்வஅபாஸ்ரயமாயன்றோ திருமேனிதான் இருப்பது! மற்றுக் கொடுக்குமதிலும் இதுக்கு உண்டான வியாவிருத்தி தோற்றி இருக்கிறது பரிஷ்வங்கோ ஹநூமத : – அமிருதாசிக்குப் புல்லையிட ஒண்ணாதே! ஸ்நேஹோமே பரம : – (உத்தரராமாயணம்) – என்று இவ்வுடம்பை
விரும்பினவனுக்கு இத்தையே கொடுக்கவேணுமே. மயா காலமிமம் பிராப்ய தத்த: ‘இவன் ஒன்று கொள்வான் ஒருவன் அல்லன்; நாம் இவனுக்கு ஒன்று
கொடுக்கப் பெறுவதுகாண்,’ என்று குறைபட்டிருந்தவர், இவன் விலக்காததொரு சமயம் பெற்று இப்படிக் கொடுத்துக்கொண்டு நின்றார்.
தஸ்ய மஹாத்மந : – ஒரு படி கொடுத்தாராய் ஒன்று செய்த இத்தனை போக்கி, இரண்டு உடம்பு கொடுத்தவனுக்கு ஓர் உடம்பு தரம் அன்றிறே.
வேணி உத்க்ரதனத்திலே பிராட்டி ஒருப்பட்ட அன்று அவளை உளள் ஆக்கினான்; ‘அவகாஹ்யார்ணவம் ஸ்வப்ஸ்யே’ (ஸ்ரீராமா. யுத்.) என்ற பெருமாளை மீட்டு அவரை உளராக்கி இப்படி இவர்க்கு இரண்டு உடம்பு கொடுத்தானிறே அவன். அவன் பல படி உபகரிக்கையாலே இவர் ஒருபடி உபகரித்தார்,’
22. தத் க்ரமேண விவ்ருத்தம் ஸஜ்ஜல புத்புதவத்ஸமம்.(ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 2 : 55)
மா மழை மொக்குளின் – பெருமழைக் குமிழி போலே. 2‘தண்ணீரில் தோன்றுகிற குமிழிக்குச் சமம்’ என்றார் பிறரும். ‘பின் விழுந்த துளியோடே நசிக்கும்,’ என்பார், ‘மாமழை’ என்கிறார்.
23. அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம்
அஹமந்நாத: அஹமந்நாத: அஹமந்நாத:(தைத்திரீய உப. பிரு. 10.)
24. ஸ: அஸ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதா.(ஆனந்த வல்லி, 1 : 2.)
ஆதி அம் சோதி குணங்கள் கோமின் – எல்லா ஐஸ்வர்யத்திற்கும் அறிகுறியான திருத்துழாய்மாலையைத் திருமுடியிலே உடையனாய், உலக காரணனாய், எல்லை இல்லாத ஒளி உருவமான விக்கிரஹத்தையுடையவனாய் இருந்துள்ளவனுடைய குணங்களைச் சேர்த்து அனுபவியுங்கோள். 1‘சொரூபத்தைப் பற்றியதாயும் விக்கிரஹத்தைப் பற்றியதாயும் உள்ள கல்யாண குணங்கள்’ என்பார், ‘ஆதி அம் சோதி குணங்கள்’ என்கிறார். 2‘நான் பரமாத்துமாவாகிய இனிய பொருளை அனுபவிக்கிறவன்,’ என்றும், 3‘அவன் எல்லாக் கல்யாண குணங்களையும் பரமாத்துமாவோடு அனுபவிக்கிறான்,’ என்றும், 4‘ஓவாத் தொழிற்சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே, ஓவாத ஊணாக உண்’ (பெரிய திருவந்தாதி, 78.)என்றும் சொல்லப்படுகின்றவாறே’ அனுபவியுங்கோள்’
துணைநாள் பெருங்கிளையும் தொல்குலமும் சுற்றத்
திணைநாளும் இன்புடைத்தா மேலும் – கணைநாணில்
ஓவாத் தொழிற்சார்ங்கன் தொல்சீரை நல்நெஞ்சே!
ஓவாத ஊணாக உண்.’(பெரிய திருவந்தாதி, 78.)
25. ராமோ ராஜ்யம் உபாஸித்வா ப்ரஹ்மலோகம் கமிஷ்யதி.(சங்க்ஷேப ராமாயணம்.)
‘ஸ்ரீராமபிரான் இராச்சியத்தை எல்லாரையும் அநுசரித்துக்கொண்டு ஆண்டார்,’ என்கிறபடியே, சேர்த்துக்கொண்டு அரசு ஆண்டார்களேயாகிலும்’ என்றபடி
26. ஸகலு ஏவம் வர்த்தயந் யாவதாயுஷம் பிரஹ்மலோகமபி
ஸம்பத்யதே நசபுநராவர்த்ததே நசபுநராவர்த்ததே.(சாந்தோக்யம், 8 – 15.)
மீள்வு இல்லை – 4‘பின்னர் மீண்டு வருகிறான் இல்லை’ என்கிற பேற்றைப் பெற அமையும். ‘எத்தால்?’ என்னில், பணம் கொள் அரவு அணையான் திருநாமம் படிமின் – தன்னுடைய பரிசத்தாலே விரிந்த படங்களையுடைய திருவனந்தாழ்வானை நிரூபகமாகவுடையவனுடைய திருநாமங்களிலே மூழ்குங்கோள். ‘திருநாமத்திலே மூழ்கினவர்களைத் திருவனந்தாழ்வானைப் போன்று விடான்’ என்பார். ‘அரவணையான் திருநாமம் படிமின்’ என்கிறார்.
27. ஏவம்வித் பாதேந அத்யாரோஹதி.
அன்றிக்கே, ‘இவ்விதமாக அறிந்தவர்கள் பாதங்களால் ஏறுகிறார்கள்,’ என்கிறபடியே, துகைத்து ஏறலாம்படியான படுக்கையையுடையவன் என்பார், ‘அரவணையான் திருநாமம் படிமின்’ என்று அருளிச்செய்கிறார் என்னுதல்.
28. இந்த்ரியாணி புராஜித்வா ஜிதம் த்ரிபுவநம்த்வயா
ஸ்மரத்பிரிவ தத்வைரம் இந்த்ரியை: ஏவநிர்ஜித:(ஸ்ரீராமா. யுத். 114 : 18. மண்டோதரி கூற்று.)
ஐம்புலன் வென்று – அவற்றில் ருசிக்குக் காரணமான ஐம்பொறிகளும் விஷயங்களிற்போகாதபடி வென்று. 3‘உன்னால் முன்பு இந்திரியங்கள் வெல்லப்பட்டு மூன்று உலகங்களும் வெல்லப்பட்டன,’ என்றாள் மண்டோதரி.
உபாசகன் ஐம்பொறிகளையும் அடக்கி ஆள வேண்டும்; ‘செல்வத்தை விரும்புகின்றவனுக்கு விஷய அனுபவமன்றோ பலம்? அவனுக்கு
இந்திரியங்களை அடக்குதல் வேண்டாவே?’ என்னும் வினாவைத் திருவுள்ளம் பற்றி, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘உன்னால்’ என்று
தொடங்கி. இங்கு, செல்வத்தை விரும்பிய இராவணன் இந்திரிய நிக்ரஹம் செய்தமை கூறப்பட்டுள்ளவாறு காண்க.
29. ஸாகரம் தர்த்தும் உத்யுக்தம் ரூபம் அப்ரதிமம் மஹத்
த்ருஷ்டும் இச்சாமி தேவீர—–
திருவடியைக் கண்ட வீமசேனன், ‘இவன் சத்திமான்’ என்று தோற்றுகையாலே, 2‘ஓ வீரனே! கடலைத் தாண்டுதற்கு முயற்சி செய்யப்பட்டதும் ஒப்பு இல்லாததும் பெரியதுமான உனது சரீரத்தைக் காண விரும்புகிறேன்,’ என்கிறபடியே, ‘நீ முன்பு கடல் கடந்த வடிவை நான் இப்போது காண வேண்டும்,’ என்றானே அன்றோ? அப்படியே, இவளும் பகவானுடைய சத்தியை அறிந்தபடியாலேயும், தன் ஆசையின் மிகுதியாலேயும் இறந்த காலத்தில் உள்ளவற்றையும் இப்போதே பெற வேண்டும் என்று ஆசைப்படாநின்றாள் என்கிறாள்.
‘நீட்டு மவ்வரம் அவனுக்கு நேர்ந்தனன் அனுமான்;
மீட்டும் நல்வரம் ஒன்றுமுன் வேண்டினன் வீமன்;
ஈட்டு மாநிதி இலங்கைதீ இட்டநாள் இசைந்த
மோட்டு ருத்தனைக் காட்டுகென் றிறைஞ்சினன் முதல்வன்.’(வில்லி பா.ஆரணிய பர்.புட்ப யாத். செய். 49.
30. ஆத்மாநம் மா நுஷம் மந்யேராமம் தஸர தாத்மஜம்
யோஹம் யஸ்ய யதஸ்சாஹம் பகவாந் தத் ப்ரவீதுமே.(ஸ்ரீராமா. யுத். 120 : 11.)
என்னை மனிதனாகவே எண்ணுகிறேன்,’ என்கிறபடியே, இந்த நிலை ஒழிய முன் நிலை நெஞ்சிற்படாமல் இருந்தானாதலின், ‘பாலனாய்’ என்கிறாள்.
31. பதிஸம்யோக ஸூலபம் வயோ த்ருஷ்டவாச மேபிதா
சிந்தார்ணவகத: பாரம் நாஸஸா தாப்லவோயதா.(ஸ்ரீராமா. அயோத். 119 : 36. )
மடம் வல்லி – ஒரு கொள்கொம்போடே சேர்க்க வேண்டும் பருவமாதலின், ‘வல்லி’ என்கிறாள். 1‘தமப்பபனாரான ஜனகமஹாராஜர் நாயகனை அடைவதற்குத் தக்க என்னுடைய வயதினைப் பார்த்து வியசனமாகிற கடலில் மூழ்கினார்,’ என்கிறபடியே இருக்கையைத் தெரிவித்தவாறு. மடம் – பற்றிற்று விடாமை.
32. அத்ருஷ்ட பூர்வ வ்யஸநா ராஜபுத்ரீ யஸஸ்விநீ
தேநதுக்கேந ருததீ நைவமாம் கிஞ்சித் அப்ரவீத்.( ஸ்ரீராமா. அயோத். 58 : 85.)
சூழ் வினையாட்டியேன் – தப்பாதபடி அகப்படுத்திக் கொள்ளும்படியான பாபத்தைப் பண்ணினேன். 3‘பிராட்டி துக்கத்தால் அழுதுகொண்டு என்னைப் பார்த்து வார்த்தை ஒன்றும் சொல்லவில்லை,’ என்பது போன்று இருக்குமவள் வார்த்தை சொல்லுகிறது என் பாபமே அன்றோ என்பாள், தன்னைச் ‘சூழ் வினையாட்டியேன்’ என்கிறாள்
33. ஸர்வே வேதா யத்பதம் ஆமநந்தி
தபாம்ஸி ஸர்வாணிச யத்வ தந்தி.( கடவல்லி உபநிடதம், 1. 2 : 15.)
34. வேதைஸ்ச ஸர்வை: அஹமேவ வேத்ய:
வேதாந்தக்ருத் வேதவித் ஏவச அஹம்.(ஸ்ரீகீதை, 15 : 15.)
நல் மாலை பல கொண்டு – அதிலே நன்றான மாலைகளைக் கொண்டு; என்றது, ஸ்ரீ புருஷசூக்தம் முதலியவைகளை. 3‘யாதொரு அடையத் தக்க பரம்பொருளின் சொரூபத்தை எல்லா வேதங்களும் சொல்லுகின்றனவோ’ என்றும், 4‘எல்லா வேதங்களாலும் அறியப்படுகின்றவன் யானே’ என்றும் சொல்லப்படுகின்றவாறே மற்றைய இடங்களிலும் சொல்லப்படுகின்றவன் அவனேயாகிலும், சொரூப ரூப குணங்களுக்கு நேரே வாசகங்களாக இருக்கையாலே, அவற்றை நன்மாலைகள்’ என்கிறார். 1அன்றிக்கே, ‘ஆராதனத்திலும் விபூதி விஷயமாகவும் பரந்திருக்கும் வேதத்தையும் ஸ்ரீ புருஷசூக்தம் முதலானவைகளையும் கொண்டு’ என்னலுமாம்.(இப்பொருளில் வேதங்களும் நன்மாலைகளும் என்று உம்மைத் தொகை. முன்னைய பொருளில் வேற்றுமைத் தொகை; ‘வேதத்திலேயுள்ள நன்மாலைகள்’ என்பது பொருள்.)
35. ஸங்கை: ஸூராணாம் திவி பூதலஸ்தை:
ததாமநுஷ்யை: ககநேச கேசரை:ஸ்துத: க்ரமாந்ய: ப்ரசகார ஸர்வதா
மமாஸ்து மாங்கள்யவிவ்ருதயே ஹரி:
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற – தேவர்களும் சனகன் முதலிய முனிவர்களும் 2‘சுவர்க்கத்திலுள்ள தேவ கூட்டத்தாலும் பூமியிலுள்ள மனிதர்களாலும் ஆகாயத்தில் திரிகின்ற வைமாநிகர்களாலும் துதிக்கப்பட்டவனாய் உலகத்தை அளந்த அந்தத் திரிவிக்கிரமன், எப்பொழுதும் எனக்கு மங்களம் உண்டாகுமாறு துணையாக வேண்டும்,’ என்கிறபடியே துதித்துப் பற்றும்படி திரு உலகு அளந்து நின்ற. சே அடி
36. துல்யஸீல வயோவ்ருத்தாம் துல்யாபிஜநலக்ஷணாம்
ராகவ: அர்ஹதி வைதே ஹீம்தம்சேயம் அஸிதேக்ஷணா.(ஸ்ரீராமா. சுந். 16 : 5.)
தோளி சேர் பின்னை – 2‘ஒத்த சீலம் வயது ஒழுக்கம் இவற்றையுடையவளும், ஒத்த குலம் இராஜ லக்ஷணம் இவற்றையுடையவளுமான பிராட்டிக்குப் பெருமாள் தக்கவர்; பெருமாளுக்குப் பிராட்டியும் தக்கவள்,’ என்கிறபடியே, குடிப்பிறப்பு முதலியவைகளால் பெருமாளுக்கு ஒத்தவளாய்க் ‘கறுத்த கண்களையுடையவள்’ என்று அவரிலும் இவளுக்கு ஏற்றமானாற்போலே, மற்றை அழகு எல்லாம் கிருஷ்ணனோடு ஒத்திருக்கும்; தோள் அழகு அவனைக் காட்டிலும் இவளுக்கு விஞ்சி இருக்கும் ஆதலின், ‘தோளி’ என்கிறது. (சேர் பின்னை’ என்னாது, ‘தோளி சேர் பின்னை’ என்றதற்கு பாவம் அருளிச் செய்கிறார். ‘ஒத்த’ என்று தொடங்கி)
37. உத்திஷடத: தஸ்ய ஜலார்த்ர குக்ஷே
மஹாவராஹஸ்ய மஹீம் ப்ரக்ருஹ்ய
விதூந்வதோ வேதமயம் ஸரீரம்
ரோமாந் தரஸ்தா: முநய: ஸ்துவந்தி.(ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 4. 29.)
அகல் இடம் கீண்டவர் பாதங்கள்மேல் அணி பைம்பொன் துழாய் என்றே ஓதும் மால் எய்தினள் – பெரிய இவ்வுலகத்தை அண்டப்பித்தியினின்றும் ஒட்டு விடுவித்து எடுத்துக்கொண்டு ஏறினவனுடைய திருவடிகளிலே 5‘அந்த வராக நயினாருடைய மயிர்க் கால்களில் உள்ள மஹரிஷிகள் துதி செய்கிறார்கள்,’ என்கிறபடியே, ‘சனகன் முதலானோர் இட்ட திருத்துழாயை ஆயிற்று இவள் ஆசைப்படுகிறது. இதனையே எப்போதும் சொல்லும்படி பிச்சு ஏறினாள்’ என்பாள், ‘மால் எய்தினள்’ என்கிறாள்.
38. திவ்ய மால்ய அம்பரதரா ஸ்நாதா பூஷணபூஷிதா
பஸ்யதாம் ஸர்வதேவாநாம் யயௌவக்ஷஸ்தலம் ஹரே:(ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 9 : 105.)
மார்பினில் வைத்தவர் தாளின்மேல் வடம்கொள் பூந்தண் அம் துழாய் மலர்க்கே இவள் மடங்குமால் – 2‘மஹா லக்ஷ்மியானவள் பார்த்துக் கொண்டிருக்கின்ற எல்லாத் தேவர்களுக்கும் நடுவில் பகவானுடைய திருமார்பை அடைந்தாள்’ என்கிறபடியே, அமிர்தத்திற்காகக் கடைகிற காலத்தில் 3‘அம்மா நமக்கு இம்மார்பு பெறவேண்டும்’ (அம்மா’ என்றது, சிலேடை : ‘ஸ்வாமி’ என்பதும், ‘அந்தத் திருமகள்’ என்பதும் பொருளாம்.)என்று தன்பாடு ஏற வர, அவளையும் மார்பிலே வைத்துக் கொண்டவனுடைய திருவடிகளின் மேலே செறியத் தொடை உண்டு காட்சிக்கு இனியதாய்க் குளிர்ந்து செவ்வியை யுடைத்தான திருத் துழாய்ப் பூவை ஆசைப்பட்டுக் கிடையாமையாலே சுருண்டு விழுந்து கிடவா நின்றாள்.
வெருவு மாலமும் பிறையும்வெவ் விடையவற் கீந்து
தருவும் வேறுள தகைமையும் சதமகற் கருளி
மருவு தொல்பெரு வளங்களும் வேறுற வழங்கித்
திருவு மாரமும் அணிந்தனன் சீதர மூர்த்தி.’– என்பது (கம்ப ராமாயணம் பால காண். வேள். 26)
39. ஸக்யா லோபயிதும் நாஹம் ஐஸ்வர்யேண தநேநவா
அநந்யா ராகவேண அஹம் பாஸ்கரணே ப்ரபா யதா.(ஸ்ரீராமா. சுந். 21 : 15. )
கொம்பு போல் – ‘வஞ்சிக்கொம்பு போலே’ என்னுதல்; 3‘அநந்யா – வேறுபட்டவள் ஆகேன்’ என்கிறபடியே, ஒரு பொருளில் ஒரு பகுதியான உறுப்பு’ என்னுதல்.(சூரியனுடைய ஒளியைப் போன்று ஸ்ரீராகவனை விட்டுப் பிரியாமல் இருப்பவள் நான்,’ என்பது அப்பகுதியின் பொருள்.- கொம்பு என்பது மரத்தினது ஓர் உறுப்பு ஆகையாலே, ‘ஒரு பொருளில் ஒரு பகுதியான உறுப்பு’ என்கிறார்.)
40. யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ.( தைத்திரீய உப. ஆந. 9 : 1. )
இவள் படி பேச்சுக்கு நிலம் ஆகில் அன்றோ நான் சொல்லுவது? என்றது, 3‘மனத்தாலுங்கூட நினைக்க முடியாமல் வேதவாக்குகள் அந்த ஆனந்த குணத்தினின்றும் திரும்புகின்றன,’ என்கிற பகவானுடைய குணங்களை நிலமாகப் பேசிலும், நற்குணக் கடலிலே ஆடுகின்றவர்களுடைய (ஆழ்வார்களுடைய) படி பேச்சுக்கு நிலம் அன்றே?’ என்றபடி
41. ஆஹ்லாத ஸீத நேத்ராம்பு: புளகீக்ருத காத்ரவாந
ஸதா பரகுணாவிஷ்ட: த்ரஷ்டவ்ய: ஸர்வ தேஹிபி🙁ஸ்ரீவிஷ்ணு தத்துவம்.)
42. தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த: ஏகபத்தி: விஸிஷ்யதே
ப்ரிய: ஹி ஜ்ஞாநிந: அத்யர்த்தம் அஹம் ஸ சம மப்ரிய🙁ஸ்ரீகீதை. 7 : 17.)
பகவானுடைய குணங்களில் ஈடுபட்டவனாய் எல்லாராலும் எப்பொழுதும் பார்க்கத் தகுந்தவனாய் இருப்பான்’ என்கிறபடியே, கண்டிருக்கும் அத்தனை போக்கிப் பேச முடியாது. 5‘என் ஒருவனிடத்திலேயே பத்தியுடைய ஞான சிரேஷ்டன் ஆகிறான்; அத்தகைய ஞானிக்கு நான் மிகவும் பிரியமுள்ளவன்; அவனும் எனக்குப் பிரியமுள்ளவன்,’ என்பதே அன்றோ அவன் வார்த்தையும்? தேசத்தாலும் காலத்தாலும் கைகழிந்த பொருள்களை அந்த அந்தத் தேசத்தோடும் காலத்தோடும் கூடினதாகப் பெறவேண்டும் என்கிற இவள் படி என்னாலே பேசலாய் இருந்ததோ?
43. ஸங்க சக்ர கதாபாணே த்வாரகாநிலயாச்யுத
கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் ஸரணாகதாம்.(இது, துச்சாதனனால் துகில் உரியப்படுகின்ற காலத்தில் திரௌபதி கூறியது.)
சங்கு என்னும் – 2மலையை எடுத்தாற்போலே பெரு வருத்தத்தோடே சங்கு என்னும். அது பொறுத்தவாறே, சக்கரம் என்னும் – 3மீளவும் மாட்டுகின்றிலள், சொல்லவும் மாட்டுகின்றிலள். இரண்டற்கும் நடுவே கிடக்கிற மாலையை நினைத்து, துழாய் என்னும் – 4‘சங்கு சக்கரங்கள்’ என்றும், 5‘கூரார் ஆழி வெண் சங்கு’ என்றும் சொல்ல மாட்டுகின்றிலள். 6ஆபத்து மிக்கவாறே ஒருத்தி, ‘சங்க சக்ர கதா பாணே – சங்கையும் சக்கரத்தையும் கதையையும் கைகளில் தரித்திருப்பவனே!’ என்றாள் அன்றோ? இங்ஙனே சொல்லும் -சொல்லத் தொடங்குவது, சொல்லித் தலைக் கட்ட மாட்டாது ஒழிவதாய்ப் படா நின்றாள்.
44. ததாகதாம் தாம் வ்யதிதாம் அநிந்திதாம்
வ்யபேதஹர்ஷாம் பரீதீந மாநஸாம்
ஸூபாந்நிமித்தாநி ஸூபாநி பேஜிரே
நரம்ஸ்ரியா ஜூஷ்டமிவ உபஜீவிந:(ஸ்ரீராமா. சுந். 29 : 1. )
நிந்திக்கப் படாதவள்’ என்னுமாறு போலே. அவன் புருஷத் தன்மைக்கு இலக்கணமான கௌஸ்துபம் போலே ஆயிற்று, பெண் தன்மைக்கும் பசலை; ஆதலின், ‘மின் செய் பூண் மார்பினன் – பொன் செய்பூண் முலை’ என்று விசேடித்துக் கூறுகின்றாள். 1காதலனைப் பிரிந்ததால் உளதாய விரகத்தில் இப்படிப் பொன் பயக்கையே அன்றோ பெண் தன்மைக்கு இலக்கணம்? 2தனம் படைத்தாரில் இவளைப் போன்று தனம் படைத்தார் உளரோ? 3‘தன் காதலனைப் பிரியமாட்டாமையாலே பொன் இட்டுக்கொள்ளுகிறது’ என்பாள், ‘மென்முலை’ என்கிறாள். மெலியும் – ‘மென்முலைக்கு வேண்டும்’ என்று சொல்லப்புக்கு மெலிவோடே தலைக்கட்டும்.
(பசலையே ஆபரணமாக இருத்தற்கு மேற்கோள், ‘நிந்திக்கப்படாதவள்’ என்பது.-பெருமாளைப் பிரிந்து அழகு அழிந்திருக்கிற நிலையிலே பிராட்டியை ‘நிந்திக்கப்படாதவள்’ என்று ஸ்ரீவால்மீகி பகவான் கூறுவதால், பசலை நிறமும் ஆபரணமாக இருக்கும் என்பது கருத்து. பசலையாவது, பிரிவாற்றாமையான் வருவதோர் நிறவேறுபாடு. இந்நிறம் பீர்க்கம்பூவின் நிறத்தைப்போன்றது என்பர்.)
45. தாஸாம் ஆவிரபூத்ஸௌரி: ஸ்மயமாந முகாம்புஜ:
பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாத் மந்மத மந்மத🙁ஸ்ரீ பாகவதம், 10.)
நம் கண்ணன் -இப்படிப்பட்ட ஆபத்துகளிலே வந்து முகங்காட்டுவான் என்னும் பிரமாண பிரசித்தியைப்பற்ற, ‘நம் கண்ணன்’ என்கிறது. 3‘புன்முறுவலோடு கூடின தாமரை போன்ற திருமுகமண்டலத்தையுடையவனாயும் பீதாம்பரத்தைத் தரித்தவனாயும் அணிந்த புஷ்பமாலையை உடையவனாயும் மன்மதனுக்கும் மன்மதனாயும் இருக்கிற கண்ணன் அந்தக் கோபஸ்திரீகளுக்கு மத்தியில் வந்து தோன்றினான்’ என்பது ஸ்ரீபாகவதம்.
46. ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்ய: மோக்ஷயிஷ்யாமி மாஸூச:( ஸ்ரீ கீதை, 18 : 66.)
47. நஷ்ட: மோஹ: ஸ்மிருதி: லப்தா த்வத் ப்ரஸாதாத் மயாஅச்யுத
ஸ்திதோஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசநம்தவ.(ஸ்ரீ கீதை, 18 : 73.)
ஸ்ரீ கிருஷ்ணன், ‘மாசுச – சோகத்தைக் கொள்ளாதே’ என்று ஒரு வார்த்தை அருளிச் செய்ய, அருச்சுனன்,- 2‘சந்தேகங்கள் எல்லாம் நீங்கினவனாய் நிலைத்து நிற்கிறேன்; உனது வார்த்தையின்படி செய்கிறேன்,’ என்று தரித்தானே அன்றோ? பட்டர், ‘முக்காலத்தில் உள்ளவற்றையும் இப்போதே பெறவேண்டும் என்று விடாய்த்த இவர்க்கு அப்படியே அனுபவிக்கலாம்படி, 3கால சக்கரத்தன் ஆகையாலே, கால வேறுபாட்டிற்குரிய காரணங்களைக் கழித்து, நிகழ்காலத்திற்போலே அனுபவத்திற்குத் தகுதியாகும்படி காலத்தை ஒரு போகி ஆக்கிக் கொடுக்க அனுபவிக்கிறார்,’ என்று அருளிச் செய்வர்.
48. யதா ராகவ நிர்முக்த: ஸர: ஸ்வஸந விக்ரம:
கச்சேத் தத்வத் கமிஷ்யாமி லங்காம் ராவண பாலிதாம்.(. ஸ்ரீராமா. சந். 1 : 39.)
‘மதிள் இலங்கைக் கோ’ என்றதனால், 3‘இராவணனால் ஆளப்படுகின்ற இலங்கை’ என்கிறபடியே, மண்பாடு தானே ஒருவர்க்கும் புகுவதற்கு அரிது; அதற்கு மேலே உள் நின்று நோக்குகின்றவனுடைய வலிமையைக் கூறியபடி
கறங்கு கால்புகா, கதிரவன் ஒளிபுகா, மறலி
மறம்பு காது,இனி வானவர் புகாரென்கை வம்பே;
திறம்பு காலத்துள் யாவையுஞ் சிதையினுஞ் சிதையா
அறம்பு காதுஇந்த அணிமதிட் கிடக்கைநின் றகத்தின்’– கம்ப ராமாயணச் செய்யுள்
49. ஸ்தலஸ்தஸ்யச ராமஸ்ய ரதஸ்தஸ்யச ரக்ஷஸ:
ந ஸமம்யுத்தம் இத்யாஹூ: தேவகந்தர்வ தாநவா:(ஸ்ரீ ராமா. யுத்தகாண்டம். )
ஸ்ரீமதுரையில் உள்ள பெண்களைப் போல நின்று, 3 ‘தரையில் உள்ள இராமனுக்கும் தேரில் உள்ள இராக்கதனுக்கும் போர் ஏற்றது அன்று,’ என்று சொல்லப் பெற்றிலேன்.
சுகந்தமேதத் ராஜார்ஹம் ருசிரம் ருசிராநநே
ஆவயோ : காத்ர சத்ருசம் தீயதா மநுலேபநம்.’(ஸ்ரீவிஷ்ணு புரா. 5 )
செயற்கை வாசனையையுடைய இந்தச் சந்தனமானது அரசர்க்கு உரியது. எங்கள் இருவருடைய சரீரங்கட்கும் தகுந்ததான சந்தனத்தைக் கொடுப்பாய்,’
பூவை வீயாம் நின் மேனிக்கு -பூவால் அல்லது செல்லாத நின் திருமேனிக்கு. அன்றிக்கே, ‘பூவைப்பூவோடு ஒத்த திருமேனி’ என்னுதல். என்றது, ‘மலர்ந்த மலரைப் போன்ற மிருதுத் தன்மையை யுடைய திருமேனிக்கு’ என்றபடி. வீ என்பது பூவுக்குப் பேர். மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே -திருமேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமாய்விடுவதே! நம்பி மூத்த பிரானும் தானுமாக ஸ்ரீ மதுரையிற்போய்ப் புக்கவாறே கூனியைக் கண்டு, ‘அண்ணர்க்கும் நமக்கும் பூசலாம்படி சாந்து இட வல்லையோ?’ என்ன, 1வழக்கனாய் இருக்கிற சாந்தைக் கொடுத்தாள்; ‘இது உனக்காய் இருந்தது’ என்ன, அதற்குமேல் தரமாய் இருப்பது ஒன்றனைக் காட்டினாள்; ‘இது கம்சனுக்கு ஆம்’ என்ன, அதற்கு மேல் தரமாய் இருப்பது ஒன்றனைக் காட்டினாள்; ‘நிறமே இதில் கொள்ளக் கூடியது’ என்ன, இப்படி அருளிச் செய்தவாறே, ‘வெண்ணெய் நாற்றத்திலே பழகினார் இளம் பருவமுடையார் இருவர் சாந்தின் வாசி அறிந்தபடி என்?’ என்று, அதனால் வந்த உவகை தோன்றப் புன் முறுவல் செய்தாள்; ‘நல்ல சாந்து இடுக்கைக்காக இது ஒரு முகம் இருந்தபடி என்தான்!’ என்கிறான். ஆக, ‘நற் சரக்குப் பரிமாறுவார். அது கொண்டு பயன் கொள்ளுவார் உடம்பின் வாசி அறிய வேண்டுங்காண்; நம் அண்ணர் உடம்புக்கும் நம் உடம்புக்கும் ஈடான சந்தனம் தா,’ என்று, இப்படித் தரம் இட்டுப் பூசப்படுகின்ற திருமேனி என்பதனைத் தெரிவிக்கும்பொருட்டு, 2 ‘மேனி’ என வேண்டாது கூறுகிறார்.
50. ஸர்வகந்த: ஸர்வரஸ: ஸர்வமிதம் அப்யாத்த: அவாகீ அநாதர:
பூசும் சாந்து என் நெஞ்சமே – 1‘‘சர்வகந்த :’ என்கிற திருமேனியை உடையவனுக்குப் பூசும் சாந்து என் நெஞ்சம் ஆவதே! இது சேருமே!’ என்கிறார்(சேருமே’ என்றது, ‘சேராது’ என்றபடி.)
51. ஸதேவ ஸோம்யஇதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்.(சாபால உபநி. 6. 2 : 1.)
ஏக மூர்த்தி – 3‘சோமபானம் செய்தற்குரிய சுவேத கேதுவே! காணப்படுகிற இந்த உலகமானது படைப்பதற்கு முன்னே ‘சத்’ என்று சொல்லக்கூடியதாயும் நாமரூபங்கள் இன்மையால் ஒன்றாகவும் அடையக்கூடிய வேறு பொருள் இல்லாததாயும் இருந்தது,’ என்கிறபடியே, படைப்பதற்கு முன்னே ‘இது’ என்ற சொல்லுக்குரிய பொருளாய்க் கிடந்த உலகமுழுதும், அழிந்து ‘சத்’ என்று சொல்லக்கூடிய நிலையாய் நீறு பூத்த நெருப்புப்போலே இவை அடையத் தன் பக்கலிலே கிடக்கத் தான் ஒருவனுமேயாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறது. ஆக, ‘படைப்புக்கு முன்னே இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது,’ என்றபடி
52. ஸூர்யா சந்த்ரமஸௌ தாதா யதாபூர்வம் அகல்பயத்.(தைத்திரீய உபநிட, 1.)
இரண்டு சுடராய் – 1‘பிரமாவானவர் சூரிய சந்திரர்களை முன்பு போலே படைத்தார்,’ என்கிறபடியே, படைத்த சூரிய சந்திரர்களைச் சொல்லுகிறது. இவற்றைக் கூறியது, காரியமான பொருள்கள் எல்லாவற்றிற்கும் உபலக்ஷணம். (ஐந்து பூதமாய்’ என்றது முடிய, சமஷ்டி சிருஷ்டியை அருளிச்செய்தது. ‘இரண்டு சுடராய்’ என்றது முதல் வியஷ்டி சிருஷ்டியை அருளிச்செய்தபடி. சமஷ்டி – கூட்டம். வியஷ்டி – வேறு வேறு.)
53. தத் ஸ்ருஷ்ட்வா, ததேவ அநுப்ராவிஸத்,
தத் அநுப்ரவிஸ்ய, ஸச்ச த்யச்ச அபவத்.(தைத்திரீய ஆனந். 6.)
அருவாகி – 2‘அவற்றைப் படைத்து அவற்றுக்குள் அநுப்பிரவேசித்தார்; அவற்றுக்குள் அநுப்பிரவேசித்துச் சேதனமாயும் அசேதனமாயும் ஆனார்,’ என்றபடியே, இவற்றை உண்டாக்கி இவைகள் பொருள் ஆகைக்காகவும் பெயர் பெறுகைக்காகவும் தான் அவ்வவ்வுயிருக்குள் அந்தராத்துமாவாய் அநுப்பிரவேசித்து நிற்கும் நிலையைச் சொல்லுகிறது.
54. அநேந ஜீவேந ஆத்மநா அநுப்ரவிஸ்ய நாமரூபே வ்யாகரவாணி.( சாந்தோக்ய உபநிட, 6 : 3.)
நன்று; மேலே, அசித்தை அருளிச் செய்தாராதலின், அங்கு ‘அரு’ என்பதற்கு ஆத்துமா என்று பொருள் கூறுதல் ஏற்புடைத்தாம் அன்றோ?’ என்னில், 3‘இந்த ஆத்துமாக்களை எல்லாம் சரீரமாகவுடைய நான் அந்தரியாமியாய்ப் புகுந்து நாம ரூபங்களை உண்டு பண்ணுகிறேன்,’ என்கிறபடியே, இந்த ஆத்துமாக்களை யெல்லாம் சரீரமாக வுடைய சர்வேசுவரனுக்கு அநுப் பிரவேசமாகையாலே அப் பொருளும் சொல்லிற்றாயிற்று.
(அரு என்பதற்கு ஆத்துமா என்று பொருள் கூறில், அநுப்பிரவேசம் சித்தியாமையாலும், அநுப்பிரவேசத்தைச் சொல்லுகிறவிடத்தில் ஜீவனுக்கு
அந்தரியாமியாய் இருக்கிற இறைவனுக்கு அநுப்பிரவேசமாகையாலே ஆத்துமா சித்திக்கையாலும் அநுப்பிரவேசத்தையே சொல்லுகிறது என்றபடி.)
55. ஏஷ ஸர்வாயுதோபேத: சதுர்பி: ஸஹராக்ஷஸை:
ராக்ஷஸ: அப்யேதி பஸ்யத்வம் அஸ்மாந் ஹந்தும் நஸம்ஸய🙁ஸ்ரீராமா. யுத். 17 : 5.-)
ஓர் உயிரே அன்றோ அவன்? 1‘நம்மைக் கொல்ல வருகின்றான்; சந்தேகம் இல்லை,’ என்றாரே அன்றோ மஹாராஜர்? ஆக, ‘அவள் கோலி வந்த படி அவசியம் சிலர் பரியவேண்டியதாக இருந்ததாதலின்’ ‘மாய்த்தல் எண்ணி’ என்கிறார் என்றபடி
ஸ்ரீகிருஷ்ணனைக் கொல்ல வந்தது, தம்மைக் கொல்ல வந்ததாகத் திருவுள்ளம் பற்றி, ‘மாய்த்தல் எண்ணி’ என்றார் என்னலுமாம்’ என்று
பொருள் கூறத் திருவுள்ளம் பற்றி அப்பொருளுக்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘நம்மைக் கொல்ல வருகின்றான்’ என்று தொடங்கி. இது,
விபீஷணனைக் குறித்துச் சுக்கிரீவன் கூறியது.
56. தஸ்யஹை தஸ்ய புருஷஸ்ய ரூபம்யதா மஹாரஜதம் வாஸ🙁பிருஹதாரண்ய உபநிடதம், 4 : 3.)
ஏலும் ஆடையும் அஃதே’ என்பதற்கு, 2‘சிறந்த பொன்னாடை’ என்கிறபடியே, ‘புருடோத்தமனுக்கு இலக்கணமான திருப்பீதாம்பரமும் அந்த அன்பேயாம்’ என்னலுமாம். இவர் பல காலம் கூடிப் பண்ணுகிற திரு ஆபரணமும் திருப்பரிவட்டமும் அன்றோ? 3‘அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து’ (திருவாய்மொழி, 2. 3 : 3.)என்கிறபடியே, இவருடைய அன்பு அடியே தொடங்கியுள்ளது அன்றோ?
57. கலௌ ஜகத்பதிம் விஷ்ணும் ஸர்வஸ்ரஷ்டாரமீஸ்வரம்
நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்ட உபஹதாஜநா:( ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 1 : 41.)
கால சக்கரம் – ‘காலத்தை நடத்துகின்ற சக்கரம்’ என்றபடி. அன்றிக்கே, 4‘கலிகாலத்தில் பாஷண்டிகளால் கெடுக்கப்பட்ட மக்கள் விஷ்ணுவாகிய சர்வேசுவரனைப் பூஜிக்கின்றார்கள் இல்லை,’ என்கிற காலத்திலும், இருள் தரு மா ஞாலத்திலும் இருளை ஓட்டி, 5அருளார் திருச்சக்கரமாய்த் திருக்கரத்திலே விளங்கிக்கொண்டிருப்பவன் ஆதலின்,(அருளார் திருச்சக் கரத்தால் அகல்விசும்பும் நிலனும் இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர்’) ‘காலத்திற்குக் கட்டுப்பட்டிருக்குந்தன்மையைப் போக்கும் சக்கரம்’ என்னுதல். சர்வேசுவரன் திருக்கரத்தைத் தான் பிரியாமல் இருத்தல் போலே, திருவடிகளைத் தாம் பிரியாதபடியான ருசியை உண்டாக்கக்கூடிய திருவாழி என்பதனைத் தெரிவித்தபடி. அவனுடைய திருக்கையிலே நின்ற அழகாலே மக்கள் சென்று காலிலே விழும்படி செய்யுமவன் என்பதாம்.
58. உபப்லாவ்யாத் இஹ க்ஷத்த: உபயாத: ஜநார்த்தந:
குஸஸ்தலே நிவஸதி ஸச ப்ராத : இஹ ஏஷ்யதி.(பாரதம் உத்தியோக பர்வம்.)
ஒன்றும் வாராயாகிலும் – 1‘உபப்பிலாவியம் என்ற நகரத்திலிருந்து வந்தவரான ஸ்ரீ கிருஷ்ணன் குசஸ்தலம் என்கிற இடத்தில் தங்கியிருக்கிறார்; அவர் காலையில் இங்கு வருவார்,’ என்கிறபடியே, அங்குநின்றும் புறப்பட்டான், இங்கே வந்துவிட்டான் என்று வருகைக்குக் காரணம் இல்லையேயாகிலும். 2அன்றிக்கே, ‘கிருஷ்ணனுடைய திருப்பெயரை நினைவு ஊட்டுகின்ற திருச்சின்னத்தின் ஓசையானது குளிர்ந்திருக்கும்’ என்னக்கடவதன்றோ?
என் சென்னிக்குக் கோலமாம். – (ஸ்ரீராமா. அயோத். 98 : 8.)3‘ஸ்ரீராமபிரானுடைய திருவடிகள் என் தலையினால் தாங்குகின்றவரையில் எனக்குச் சாந்தி உண்டாக மாட்டாது’ என்று இருக்கின்ற என் தலைக்குக் கோலமாம்.
59. நாமக்ரா ஹம்ச நாதஸ்ய ஸீதள: காஹளத்வநி:
கிருஷ்ணனுடைய திருப்பெயரை நினைவு ஊட்டுகின்ற திருச்சின்னத்தின் ஓசையானது குளிர்ந்திருக்கும்’ என்னக் கடவதன்றோ?
60. ஸிஞ்சந்து வஸூதாம் க்ருத்ஸ்நாம் ஹிமஸீதேந வாரிணா
தத: அப்யவகிரந்து அந்யே லாஜை: புஷ்பை: ச ஸர்வத:
விரை கொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் – வாசனையையுடைத்தான பூவையும் நீரையும் கொண்டு 5‘எல்லாமாய் இருக்கிற பூமியைப் பனி போன்று குளிர்ந்திருக்கின்ற தண்ணீரால் நனைக்கட்டும்; பின்னர், மற்றவர்கள் எங்கும் பொரிகளாலும் மலர்களாலும் வாரி இரைக்கக் கடவர்கள்,’
61. ராமோ ராமோ ராமஇதி ப்ரஜாநாம் அபவன் கதா:
ராமபூதம் ஜகத் அபூத் ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி(ஸ்ரீ ராமா. யுத். 130 : 6.)
உரை கொள் சோதித் திரு உருவம் – 1‘சக்கரவர்த்தி திருமகன் இராச்சியத்தை ஆளுகின்ற காலத்தில் மக்களுக்கு இராமன் இராமன் இராமன் என்று எல்லா வார்த்தைகளும் உண்டாயின; உலக முழுவதும் இராமன் சொரூபமே ஆயிற்று,’ என்பது போன்று, 2‘அது அது’ என்று வாய் புலற்றும்படி இருக்கிற சோதி மயமான திருமேனி’ என்னுதல். அன்றிக்கே, ‘பேச்சுக்கு அப்பாற்பட்ட திருமேனி’ என்னுதல். அன்றிக்கே, ‘மாற்றும் உரையும் அற்ற திருமேனி’ என்னுதல்; 3‘சுட்டு உரைத்த நன்பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது,’ என்பது தமிழ் மறை அன்றோ?
62. அகால பலிநோ விருக்ஷா: ஸர்வே சாபி மது ஸ்ரவா:
பவந்து மார்க்கே பகவந் அயோத்யாம் ப்ரதி கச்சத🙁ஸ்ரீராமா. யுத். 127 : 17.)
செய்ய தாமரைப் பழனம் தென் நல் குருகூர்ச்சடகோபன் – சிவந்த தாமரையை யுடைய பழனங்களை யுடைத்தாய்த் தெற்குத் திக்கிற்குச் சிறந்ததாயுள்ள திருநகரியை யுடைய ஆழ்வார் அருளிச் செய்த. அவனுடைய காதல் குணத்தைச் சொல்லுதலாலே இவர் தரித்தவாறே 2‘எல்லா மரங்களும் காலம் அல்லாத காலத்திலும் பழங்களை யுடையன ஆகக் கடவன,’ என்கிறபடியே ஆயின ஆதலின், ‘செய்ய தாமரைப் பழனம்’ என்கிறது.
63. ந தே வாக் அந்ருதா காவ்யே காசித் அத்ர பவிஷ்யதி
குரு ராம கதாம் புண்யாம் ஸ்லோக பத்தாம் மநோரமாம்.(ஸ்ரீராமா. பால. 2 : 37.)
பொய் இல் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் – 3‘இந்தக் காவியத்தில் உம்முடைய வாக்கு ஒன்றேனும் பொய்யாக மாட்டாது,’ என்கிறபடியே, ‘பொய்யில்’ என்பதனைத் திருவாய்மொழி எல்லாவற்றுக்கும் அடைமொழியாகக் கொள்க. ‘பொய்யில்லாத ஆயிரம்’ என்ற போதே 4அவ்வோபாதி இப்பத்துப் பாசுரங்கட்கும் வருமே அன்றோ? அன்றிக்கே, ‘அவாப்த சமஸ்த காமனான சர்வேசுவரன் ஒரு நித்திய சமுசாரியோடே இப்படி விரும்பி வந்து கலந்து இவருடைய உயிர் முதலானவற்றையே தனக்கு உரிய இன்பப் பொருள்களாக இருந்தான் என்கிற காதல் குணத்தில் பொய் இன்றிக்கே இருக்கிற பத்து’ என்னுதல்
64. க்வசித் உத்ப்ரமதே வேகாத் க்வசித் விப்ரமதே பலாத்
க்வசித் மத்த இவாபாதி காந்தாந்வேஷண தத்பர🙁ஸ்ரீ ராமா. ஆரண்ய. 60 : 35.)
பிராட்டியைத் தேடுவதில் நோக்கமுடைய பெருமாள் ஓரிடத்தில் சுற்றும் முகத்தைத் திருப்பி மேலே பார்க்கிறார்; ‘ஓரிடத்தில் தம் வலிமையால் நாலு பக்கங்களிலும் சுழலுகிறார்; ஓரிடத்தில் பித்தனைப் போலத் தோற்றுகிறார்,’ என்கிறபடியே, பிராட்டியைப் பிரிந்த பின்னர் ஆற்றாமையாலே மேல் நோக்கிப் பார்த்து விலங்கச் சஞ்சரிப்பது, அதுதானும் மாட்டாது ஒழிவது, ‘ஒரு மரத்தினின்றும் வேறு மரத்திலே சென்று கிட்டுவது, ‘மைதிலியைக் கண்டீர்களோ?’ என்று கேட்பது, ஆணாறு பெண்ணாறுகள் ஒன்று இன்றிக்கே தேடுவதாய், அவர் பட்டாற்போலே இவளும் அப்படியே படுகிறாள்
65. தேந ஏஷ பூர்வம் ஆக்ராந்த ஆஸ்ரம: ஸ்ரம நாஸந:
மயாது பக்த்யா தஸ்யைவ வாமநஸ்ய உபபுஜ்யதே.(ஸ்ரீராமா. பால.- 29 : 22 ; விஸ்வாமித்திர முனிவர் ஸ்ரீ ராமனைப் பார்த்துக் கூறியது.)
அவன் சம்பந்தங்கொண்டே இதனை விரும்புகிறது; 1‘அது ஓரிடத்தில் இருப்பது அன்றே?’ என்றது, ‘எங்கும் இருப்பது’ என்றபடி. ‘முன்பு தோற்றுகின்ற சோலை என் என்பது?’ என்று பெருமாள் கேட்டருள. 2‘பண்டு ‘சித்தாஸ்ரமம்’ என்று ஸ்ரீ வாமனன் எழுந்தருளியிருந்த தேசமாயிற்று; அவன் எழுந்தருளின பின்பு அவன் பக்கல் பத்தியாலே விடமாட்டாமே அம்மண்ணை மோந்துகொண்டு கிடப்பேன்,’ என்றான் அன்றோ விசுவாமித்திரன்?
66. அத தாஸரதி: வீர: ராமோநாம மஹாபல;
விஷ்ணு: மாநுஷ ரூபேண சசார வஸூதாதலே.( பாரதம், ஆரணியபருவம். இது, வீமசேனனைப் பார்த்து அனுமான் கூறியது)
விஷ்ணு பகவான் மனித உருவத்தோடு சக்கரவர்த்தி திருமகனாய் இராமன் என்ற பெயரோடு இப்பூமியில் சஞ்சரித்தார்,’ என்றான் திருவடி. ஆகையாலே, அவன் பக்கல் ருசியுடையார் விடமாட்டார்கள் அன்றோ?
இராமன் என்ற பெயரோடு இப்பூமியில் சஞ்சரித்தார்’ என்றதனானே ‘பெருமாள் சஞ்சரித்த இடத்தை விடமாட்டாமையால், இங்கேயே தங்கியிருக்கிறேன்,’ என்பது திருவடியின் உட்கோள்.
அந்த வார்சிலை இராமனுக்கு அடிமையாய் என்றும்
சிந்தை யால்அவன் திருப்பதம் சிந்தைசெய் பவனும்
முந்தை யாகிய வாயுவுக்கு உற்பவித் தவனும்
இந்த வாழ்வுடை அனுமனே என்றனன் இகலோன்.’(வில்லிபா. ஆரணிய. புட்பயாத். 36.)
67. கந்தவதீ ப்ருதிவீ.
வாமனன் மண் இது என்னும் – ‘வாமனன் மண் அன்றோ இது?’ என்னா நின்றாள். 3‘திருவடியிலே பிறந்ததனால் உண்டான வாசனையையுடைய பூமி அன்றோ?’ என்னாநின்றாள் என்றபடி, 4‘பூமியானது வாசனையையுடையது’ என்றே அன்றோ நாட்டில்
விண்ணொலி தழுவும், காற்று மேவுறும் ஒலியு மூறும்,
நண்ணுமால் ஒலியும் ஊறும் நலந்திகழ் உருவும் செந்தீ,
தண்ணறல் ஒலியும் ஊறு முருவமுஞ் சுவையும் சாரும்,
மண்ணிதை நான்கி னோடு மணத்தையும் புணர்ந்து மன்னும்.’– ( பாகவதம், சுகமுனி தத்துவமுரைத்த அத்தியாயம்.)
68. யுவதிஸ்ச குமாரிணீ.
என் பெண்ணை – 2‘யுவதியாயும் குமாரிணியாயும் இருப்பவள்’ என்றபடியே, கலவியிலும் உட்புக மாட்டாத பருவமாயிற்று இவளது
69. ஸக்யா லோபயிதும் நாஹம் ஐஸ்வர்யேண தநேநவா
அநந்யா ராகவேண அஹம் பாஸ்கரேண ப்ரபா யதா
பெருமயல் செய்தார்க்கு – 1‘தம்மைக் கலந்து பிரிந்தார் படும் வியசனத்தளவும் அன்றுகாணும் இவளைப் படுத்தியது,’ என்பாள், ‘பெருமயல்’ என்கிறாள். அவனை ஒத்த பொருள்களைக் கண்டு கலங்கினாள் இவளே அன்றோ?
70. யத்ர ரிஷய: ப்ரதமஜா யே புராணா:
1‘மைத்ரேய!’ என்னுமாறு போலே, தனக்கு ஓர் ஊற்றங்கோல் தேடுகின்றாள். என் தெய்வ உருவின் – ஒப்புமையுள்ள பொருள்களையும் நினைக்க நினைக்க, நித்தியானுபவம் பண்ணுகின்ற நித்திய சூரிகள் வடிவில் பிறக்கும் 2ஒளி பிறவாநின்றதாயிற்று இவளுக்கு; ஆதலின், ‘தெய்வ உருவின்’ என்கிறாள்.ஆயின், அவர்களில் இவளுக்கு வாசி உண்டு; சிறுமான் – 3‘புராணா: – பழையர்’ என்றும், 4‘விண்ணாட்டவர் மூதுவர்’ (திருவிருத்தம், 2.) என்றும் சொல்லுகின்றபடியே, பழையராய் இருப்பார்களே அன்றோ அவர்கள்-‘இவள் சிறுமி ஆகையாலே கலங்குகிறாள்,’ என்றபடி
71. தம் த்ருஷ்வா தே ததா தேவா: ஸங்க சக்ர கதாதரம்
அபூர்வரூப ஸம்ஸ்தாநம் தேஜஸாம் ராஸிமூர்ஜிதம்.
செந்தீயைத் தழுவி – எரிக்கின்ற நெருப்பைத் தழுவாநின்றாள்; ‘மந்திரம் மருந்து முதலியவைகளால் தடைசெய்யப்பட்ட ஆற்றலையுடையது’ என்றுதான் தழுவுகிறாளோ?’ 2‘ஒளிகளின் நிலையான திரள்’ என்கிறபடியே, ஒளியுடைமையையே பார்த்துத் தழுவாநின்றாள். அன்றிக்கே, 3‘பொருநீர்க் கடல் தீப்பட்டு எங்கும், திகழும் எரியோடு செல்வது ஒப்ப’ (திருவாய்மொழி, 8. 9 : 3.)என்னுமாறு போன்று, இப்போது தனக்காக ஒரு மாணிக்கப்படி (இரத்தினாங்கி;
இரத்தினத்தாலாய சட்டை.)சார்த்தி அணைக்கைக்காக வந்தான் என்று பார்த்துத் தழுவுகின்றாள் என்னுதல்
72. முகாத் இந்த்ர: ச அக்நி: ச.
73. ஸது ஆஸக்தமதி: க்ருஷ்ணே தஸ்யமாந: மஹோரகை:
நவிவேத ஆத்மந : காத்ரம் தத்ஸ்மிருதி ஆஹ்லாத ஸம்ஸ்தித:(ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 17 : 39. )
74. தாத ஏஷ வஹ்நி: பவநேரிதோபி
ந மாம் தஹதி அத்ர ஸமம் ததோஹம்
பஸ்யாமி பத்மாஸ்தரணாஸ்த்ருதாநி
ஸீதாநி ஸர்வாணி திஸாம் முகாநி.(ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 17 : 47. இது, அவன் நினைவாலே சுடாதிருப்பதற்குப் பிரமாணம்.)
அந்நெருப்புத் தன் காரியம் செய்யாது ஒழிவான் என்?’ என்னில், 1‘அந்த விராட்புருஷனுடைய முகத்திலிருந்து இந்திரனும் அக்கினி தேவனும்உண்டானார்கள்,’ என்கிறபடியே, அச்சுதன் முகத்தாலே வந்தது ஆகையாலே எரித்திலது. (அச்சுதன் முகத்தாலே’ என்றது, சிலேடை : ‘அச்சுதன் காரணத்தால்’ என்பதும், ‘அச்சுதனுடைய முகத்திலே’ என்பதும் பொருள்.)அன்றிக்கே, ‘செந்தீயைத் தழுவி அச்சுதன் என்னும்; மெய்வேவாள்’ என்கிறாள் ஆகையாலே, 2இவளுடைய அக்கினி ஸ்தம்பந மந்திரம் இருக்கிறபடி என்னுதல். (சப்த மாத்திரமே போதுமாயிற்று வேகாமைக்கு’ என்றபடி.)அன்றிக்கே, 3‘அந்தப் பகவானை நினைப்பதனால் உண்டான சந்தோஷத்தோடு கூடினவனாய்’ என்கிறபடியே, ‘அவனுடைய நினைவாலே நனைந்திருக்கையாலே சுட மாட்டுகிறது இல்லை,’ என்னுதல். 4‘தந்தையே! இந்த நெருப்புக் காற்றாலே தூண்டப்பட்டதாக இருப்பினும், இங்கு என்னைக் கொளுத்த இல்லை; நான் நான்கு பக்கங்களிலும் எல்லாத் திக்குகளிலும் தாமரைப்பூக்களாகிற விரிப்பினால் பரப்பப் பட்டனவாயும் குளிர்ந்திருப்பனவாயும் பார்க்கிறேன்,’ என்றான் அன்றோ ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான்?
திண்சுட ராழி அரங்கேசர் திக்குத் திருச்செவியில்,
மண்கழ லில்,சத்ய லோகஞ் சிரத்தின், மருத்துயிரில்,
தண்கதி ருள்ளத்தில், வானுந்தி யில்,செந் தரணிகண்ணில்,
ஒண்கன லிந்திரன் வான்முகப் போதி லுதித்தனரே.’(திருவரங்கத்து மாலை)
75. யதி அஸ்தி பதிஸூஸரூஷா யதிஅஸ்தி சரிதம்தப:
யதிவா அஸ்தி ஏகபத்நீத்வம் ஸீதோபவ ஹநூமத🙁ஸ்ரீராமா. சுந். 53 : 28.)
76. வாயோரக்நி.(தைத்திரீய உபநிடதம்.)
77. பிராணாத் வாயு: அஜாயத.
ஸீதோபவ – தண்ணிது ஆகக்கடவாய்’ என்றவளும் இல்லை அன்றோ? ‘தண்ணிதாகக் கடவாய்’ என்றவள் தானே இங்ஙனம் செய்கிறாள்? ஆதலின், எரித்திலது’ என்னுதல்
பிரிவு காலத்தில் வாயு புத்திரனைத் தழுவுகை (வாயு புத்திரன் – நெருப்பும், அனுமானும்.)நாயகனுக்கும் நாயகிக்கும் பணி’ என்றபடி. 3‘ஹநுமானான திருவடிக்கு என்னால் கொடுக்கப்பட்ட இந்த ஆலிங்கனமானது’ (ஸ்ரீராமா. யுத். 1 : 13.)என்றதனால், நாயகன் தழுவினமை உணரலாகும். 4‘வாயுவினின்றும் நெருப்பு உண்டாயிற்று,’ என்றதனால், நெருப்புக் காற்றின் புத்திரனாதல் உணர்தல் தகும்.
தாயே யனைய கருணையான் துணையே! ஏதுந் தகைவில்லா
நாயே யனைய வல்லரக்கர் நலியக் கண்டால் நல்காயோ?
நீயே உலகுக் கொரு சான்று, நிற்கே தெரியுங் கற்பு,அதனில்
தூயேன் என்னில் தொழுகின்றேன்; எரியே! அவனைச் சுடல்,’ என்றாள்’ என்றார் கம்பநாட்டாழ்வார்.
ஆய காலையின் அமரர் ஆர்த்தெழத்
தாயின் அன்பனைத் தழுவி னான்தனி
நாய கன்பெருந் துயர நாமறத்
தூய காதல்நீர் துளங்கு கண்ணினான்.’கம்பநாட்டடிகள்.
தலைமைசால் சிறப்பு வாய்ந்த தாமத அகங்கா ரத்தின்
ஒலிஎழும்: ஒலியிற் றோன்று மோங்குவான்; வானிற் றோன்றும்
மலியுமூறு; ஊற்றிற் றோன்றும் வளி;எறி வளியிற் றோன்றும்
நிலவொளி; ஒளியி னின்று நிமிர்சுடர்க் கனலி தோன்றும்.’- என்பது பாகவதம்
78. சிரம் ஜீவதி வைதேஹீ யதிமாஸம் தரிஷ்யதி
ந ஜீவேயம் க்ஷணமபி விநா தாம் அஸிதேக்ஷணாம்.(ஸ்ரீ ராமா. சுந். 66 : 10. )
என்னுடைக் கோவிந்தன் என்னும் – 2‘நீங்கி ஒரு கணநேரமும் உயிர் பிழைத்திருக்கமாட்டேன்!’ என்கிறபடியே, ‘பிரிவில் பொறுக்க வல்லனோ? அவன் உண்மை பிறர்பொருட்டாக அன்றோ இருப்பது?’ என்று சொல்லாநிற்கும். அன்றிக்கே, ‘கன்று மேய்த்த வடிவோடே என் துன்பம் தீர அணைக்க வந்தான் என்று சொல்லாநின்றாள்,’ என்னுதல். 3‘உலகத்தார் படியும் அன்று; விரஹநோயினர்கள் படியும் அன்று; உலகத்தார் படியாகில் நெருப்புச் சுடவேண்டும்; விரஹநோயினர்கள் படியாகில் காற்றுச் சுடவேண்டும்; இரண்டும் கண்டிலோம்,’ என்கிறாள்.
79. ஸ ததர்ஸ ததா தத்ர க்ருஷ்ணம் ஆதோஹநே கலாம்
வத்ஸ மத்யகதம் பாலம் நீலோத்பல தளச்சவிம்.(விஷ்ணு புரா. 5. 17 : 19.)
கோவிந்தன் மேய்த்தன என்னும் – 2‘கன்றுகளின் நடுவில் உள்ளவனும் இளமைப் பருவமுடையவனுமான கிருஷ்ணன்’ என்றும், 3‘கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்’ என்றும் வருகின்றவாறே. ‘இவற்றினுடைய பாதுகாவலுக்கு முடி சூடினவன் உகந்து காப்பாற்றினவை’ என்பாள். 4‘உரியவன் உணர்ந்து நோக்கினவை என்று தோற்றுகிறதாயிற்று இவற்றின் வடிவில் அழகின் நிறைவு. 5கன்றின் கழுத்தினைக் கட்டிக்கொண்டவாறே – அது துள்ளிப் போகா நிற்குமே – அதனைக் கண்டு, ‘அவன் பரிகரமாகவே இருந்தது’ என்பாள்.(அவன் ஓடுமாறு போலே இவையும் ஓடாநின்றன,’ என்பது கருத்து.)
80. விஷ்ணோ: ஸகாஸாத் உத்பூதம் ஜகத் தத்ரைவச ஸ்திதம்
ஸ்திதி ஸம்யமகர்த்தா அஸௌ ஜகத: அஸ்ய ஜகத்சஸ🙁ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 1 : 32)
எல்லா உலகங்களும் மஹாவிஷ்ணுவின் சமீபத்தினின்றும் உண்டாயின; அந்த விஷ்ணுவினிடத்தில் தானே எல்லா
உலகங்களும் லயமாகின்றன?’ என்னா நின்றாள்.
81. க்ருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திரபி சாப்யய:
க்ருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதம் இதம் விஸ்வம் சராசரம்.(இது, பாரதத்தில் ராஜசூய யாகத்தில் வீடுமன் கூறியது.)
உலகங்களினுடைய பிறப்பும் கிருஷ்ணனே, பிரளயமும் கிருஷ்ணனே என்னும் இவை பிரசித்தம்’ என்கிற இதில் ஒருக்காலும் கலக்கமில்லை என்றபடி
82. உத்த்ருதா அஸி வராஹேண க்ருஷ்ணேந ஸதபாஹூநா.(தைத்ரீய உபநிடதம்.)
நீறு செவ்வே இடக் காணில் நெடுமால் அடியார் என்று ஓடும் – நீற்றினைச் செவ்வே இட்டிருத்தலைக் கண்டால் மேல் நோக்கியிருக்கும் அத்துணை மாத்திரத்தையே கொண்டு2 ‘மகா வராஹத்தை எடுத்த மஹாவிஷ்ணுவினால் தூக்கப்பட்டவள் ஆகிறாய்’ என்கிறபடியே, என்றும் ஒக்க பகவானுடைய சம்பந்தம் மாறாத தேசத்தில் மண்ணைக்கொண்டு தரித்துப் போருமவர்களாகக் கொண்டு மயங்கி, ‘இவர்கள் சர்வேசுவரன் அடியார்’ என்று ஓடாநிற்கும்
83. மஹதா தபஸா ராம மஹதா சாபி கர்மணா
ராஜ்ஞா தஸரதேந அஸி லப்த: அம்ருதமிவ அமரை🙁ஸ்ரீராமா. ஆரண். 66 : 3.)
அரும் பெறல் பெண்ணினை – 2ஸ்ரீராமா! தசரத சக்கரவர்த்தி செய்த மஹத்தான தவத்தாலும் மஹத்தான யாகம் முதலிய செயல்களாலும் அவருக்குப் புத்திரன் ஆனாய்,’ என்கிறபடியே, தம்மைப் பெற்றவர்கள் பட்ட வருத்தம் அல்லகண்டீர் நான் இவளைப் பெறுதற்குப் பட்டது; 3அடியிலே பல காலம் தவம் செய்தே அன்றோ இவளைப் பெற்றது இவள்
84. குரூணாம் அக்ரத: வக்தும் கிம் ப்ரவீஷி நந: க்ஷமம்
குரவ: கிம் கரிஷ்யந்தி தக்தாநாம் விரஹாக்நிநா.( ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 6 : 27. இது, கோபிகைகள் வார்த்தை.)
மாயோன் – 4‘குரவர்களாகிய தாய் தந்தையர்கள் நம்மை என் செய்வார்கள்?’ என்கிறபடியே, பெற்றவர்களைக் கைவிடும்படி செய்ய வல்லவன். அலற்றி அயர்ப்பிக்கின்றான் – எப்போதும் தன்னையே வாய் வெருவும்படி செய்து, அத்துணையில் நில்லாது மயங்கும்படி பண்ணாநின்றான்.
85. ஸ ஸ்வராட்பவதி.(வேதவாக்கியம்.)
வீற்று இருக்கப் பெறுவர்கள். 1‘அந்த முத்தன் சுதந்தரன் ஆகிறான்,’ என்னக் கடவதன்றோ? என்றது, ‘கர்மம் அற்றவன் ஆகின்றான்’ என்றபடி. வீற்று -வேறுபாடு.
86. தஸவர்ஷஸஹஸ்ராணி தஸவர்ஷ ஸதா நிச
ராமோ ராஜ்யம் உபாஸித்வா ப்ரஹ்மலோகம் கமிஷ்யதி:(ஸ்ரீராமா. பா. 1 : 97.)
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான் – 2‘ஸ்ரீராமபிரான் இராச்சியத்தை விநயத்தோடு கூடினவராய் நடத்துகையாலே இராச்சியத்தை உபாசித்தார்’ என்பது போன்று ‘செருக்கு அற்றவனாய் ஆளுகின்ற அம்மான்’ என்கிறார். என்றது, 1வழி அல்லா வழியே வந்த ஐசுவரியமுடையவன் பிறர்க்குத் திரிய ஒண்ணாதபடி நடப்பான் என்பதனையும், உடையவனுடைய ஐசுவரியமாகையாலே தகுதியாய் இருக்கின்றமையையும் தெரிவித்தபடி. அன்றிக்கே, ‘ஆற்றல்’ என்றது, வலியாய், ‘இவ்வுலகமனைத்தையும் நிர்வஹிக்கைக்கு அடியான தரிக்கும் ஆற்றலைச் சொல்லுகிறது’ என்று சொல்லுவாரும் உளர். இனி, ‘அம்மான்’ என்பதற்கு, ‘எல்லாரையும் நியமிக்கின்ற தன்மையால் வந்த ஐசுவரியத்தையுடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.
——————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply