கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா – ‘சொல்லில், தாமரைச் சாதியாக உன்னுடைய திருக்கண்களுக்கும் திருவடிகளுக்கும் திருக்கைகளுக்கும் ஒப்பாக மாட்டாது. அனுபவித்துக் 2குமிழிநீர் உண்டுபோம் இத்துணையே அன்றிச் சொல்லப் போகாது,’ என்பார், ‘கட்டுரைக்கில்’ என்கிறார். கட்டுரைக்கில் – கட்டுரை என்பது ஒரு சொல். ‘தாமரைச் சாதியாக ஒப்பாக மாட்டாது,’ என்பார், அடைகொடுத்து விதந்து கூறாது, வாளா ‘தாமரை’ என்றும், ‘தனித்தனியே ஒவ்வோர் உறுப்புக்குங்கூட ஒப்பாகமாட்டாது’ என்பார், ‘கண் பாதம் கை’ எனத் தனித்தனியாக விதந்தும் அருளிச்செய்கிறார். ‘ஆயின், பாதாதி கேசமாகக் கூறாது, ‘கண் பாதம் கை’ எனக் கூறல் யாது கருதி?’ எனின், குளிர நோக்குவன கண்கள்; நோக்கிற்குத் தோற்று விழுமிடம் திருவடிகள்; விழுந்தவனை எடுத்து அணைப்பன திருக்கைகள். ஆதலின், இம்முறையே ஓதுகிறார். இனி-அத்யந்த பக்தி யுக்தஸ்ய ந ஸாஸ்த்ரம் நைவச க்ரம: ‘மேம்பட்ட பத்தியையுடையவனுக்குச் சாஸ்திரமும் இல்லை, முறையும் இல்லை,’ என்பவாகலின், பிரபத்தி நிஷ்டரான இவர் திருவாயிலும் அம்முறை கெட வருகின்றன என்று கோடலுமாம்
சுட்டு உரைத்த நன்பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது – காய்ச்சி ஓடவைத்து உரைத்த நன்றான பொன்னானது உன்னுடைய சுவபாவிகமான திவ்விய விக்கிரகத்தின் ஒளிக்கு ஒப்பாகாது. சாதாரணமான பொன் உவமை சொல்லத் தக்கதன்றாதலின், ‘சுட்டு உரைத்த நன்’ என்று மூன்று அடைகொடுத்து விதந்து ஓதுகிறார், இத்தனை அடை கொடுத்தாலாயிற்று ஒப்பாகச் சொல்லப் 2பாத்தம் போராதது;-ருக்மாபம் ஸ்வப்ந தீகம்யம் வித்யாத்து புருஷம் பரம்’ மநு ஸ்மிருதி,12: 122 ‘பரம்பொருள் ஓடவைத்த பொன்னின் நிறமுடையவன்’ என்பது மநு ஸ்மிருதி
இவ்வுலகு புகழ்வு–யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ.-அந்த ஆனந்த குணத்தினின்றும் வாக்குகள் திரும்புகின்றனவோ?’ என்னும்படி மீளும்படியான உன்னை-அந்த ஆனந்த குணத்தினின்றும் வேத வாக்குகள் மனத்தாலுங்கூட நினைக்க முடியாமல் திரும்புகின்றனவோ’ என்கிறபடியே, பேசித் தலைக்கட்ட ஒண்ணாத உன்னை-‘வேதங்களும் பேச முடியாமல் மீளும்படியான பரமன் அன்றோ அவன்-ஏற்கும் பெரும்புகழ் ஆயிரம் 3‘அந்த ஆனந்த குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின்றன,’ என்னும்படியான பரம்பொருளை விளாக்குலை கொண்ட பிரபந்தம் என்றால் அதற்குப் போரும்படியான ஆயிரம்.
நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண:பர: நாராயண பரோஜ்யோதி: ஆத்மா நாராயண:பர: தைத்திரீய நாராயண. அநு. 11.- பரஞ்சோதீ – 2’நாராயணன் மேலான ஒளியுருவன்’ என்கிறபடியே, அவன் எல்லாப் பொருள்கட்கும் வேறுபட்ட சாதியான்
தமேவ பாந்தம் அநுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வம் இதம் விபாதி.-அந்தப் பர ப்பிரஹ்மத்தினுடைய பேரொளியால் இவை யெல்லாம் பிரகாசிக்கின்றன,’ என்பது கடோபநிடதமாகும்
‘மாட்டாய’ என்பதனை ‘மட்டு ஆய’ என்ற சொல்லின் நீட்டல் விகாரமாகக் கொண்டு, ‘திருவடிகளில் தேனினுடைய வெள்ளம் பெருகுகிறது,’-விஷ்ணோ: பதே பரமே மத்வ உத்ஸ:
ஸ்மிருதி ப்ரம்ஸாத் புத்திநாஸ: புத்திநாஸாத் ப்ரணஸ்யதி.–ஸ்ரீ கீதை, 2 : 69.-நினைவு தவறுவதால் புத்தி நாசமடைகிறது; புத்தி நாசத்தினால் நாசமடைகின்றான்,’ என்கிறபடியே ‘புத்தி நாசமடைவதற்குரிய பொருள்களில் இவர்கள் பிரவணர்களாய் இங்ஙனம் நோவு பட்டே போமித்தனையாகாதே!’ என்கிறார்
நாகாரணாத் காரணாத்வா காரணா காரணாந்நச
ஸரீரக்ரஹணம் வ்யாபிந் தர்மத்ராணாய கேவலம்.ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 1 : 50.
அகாரணம்’ என்றது, காரியத்தை;
‘காரணம் என்றது, மூலப்பிரகிருதியை;
‘காரணாகாரணம்’ என்றது, மகத்து முதலான தத்துவங்களை.
இதனால், ‘நீ சரீரத்தை மேற் கொள்ளுவது இவைகளினாலே யன்று; தர்மத்திற்காகவே,’ என்பதனைக் குறித்தவாறு
எங்கும் நிறைந்தவனாய் உலகமே உருவனாயிருக்கிற இறைவன் சரீரத்தை மேற்கொள்ளுவது, 1‘காண வாராய்’ என்று விடாய்த்திருப்பார் கண்டு அனுபவிக்கைக்குத் தண்ணீர்ப் பந்தல் வைத்தபடியேயாம் என்றபடி-அவன் திருமேனியை விரும்பி மேற்கொண்டதும் 5‘பக்தாநாம் – பத்தர்களுக்காகவே’ என்கிறபடியே, அடியார்களுக்காக அன்றோ?.ஆழிப்பிரான்தன்னை – 3‘நாயுதாநி – ஆயுதங்கள் உனக்காக இல்லை’ என்கிறபடியே, தன்னோடு ஆயுதத்தோடு வாசி அற ‘பக்தாநாம் – பக்தர்களுக்காகவே’ என்று இருக்குமவனை 2தேவரீருடைய திவ்விய மங்கள விக்கிரகமும் தேவரீருக்கன்று; தேவர் அடியர்களுக்காகவே பிரகாசிக்கின்றீர்,’ என வருதல் காண்க.–நதேரூபம் நசாகாரோ நாயுதாநி நசாஸ்பதம் ததாபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே.-ஜிதந்தா ஸ்தோத்திரம், 5.
வர்ஷபிந்தோ: இவ அப்தௌ ஸம்பந்தாத் ஸ்வாத் மலாப:’–ஸ்ரீரங்கராஜ ஸ்தவம். 1 : 12.-கடலிலே ஒரு மழைத்துளி விழுந்தால், கடலை எங்கும் வியாபிக்க மாட்டாதே? அதைப்போன்று தன் சத்பாவத்துக்கும் அழிவில்லை
‘மலராது குவியாது’ என்பதற்கு, 3’தன் சொரூபத்திற்குத் துல்லியமான ஒரே தன்மையையுடைய திவ்விய மங்கள விக்கிரகத்தையுடையவன்’ என்கிறபடியே, 4குறைதல் வளர்தலின்றி இருக்கின்ற திருமேனியையுடையையாய்’ என்று பொருள்–அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே
ஸதைகரூபரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே.–ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 2 : 1.
மாசூணா வான்கோலத்து அமரர்கோன்’ என்றதனால் கற்பிக்கப்பட்ட பிரமன் என்பது போதரும். ‘எவ்வாறு?’ எனில், இப்பொழுதுள்ள பிரமனுக்குத் தனது அதிகாரத்தின் முடிவிலே ஞானத்துக்கு மறைப்பு உண்டு; இவனுக்கு அது இல்லை என்று கூறப்படுதலின். வழிபடுதற்கு உறுப்பாகச் சொல்லப்படுகின்ற இடமாதலின், ‘கோலம்’ என்பது ஈண்டு வழிபடுதற்கு உறுப்பான ஞானத்தைக் காட்டுகின்றது. ‘பிரமனுடைய ஆயுளை யுடையவனும் கோடிக்கணக்கான முகத்தையுடையவனும் மிகவும் சுத்தமான மனத்தையுடையவனுமான ஒரு மனிதன் இருப்பானேயானால், அவன், உம்முடைய குணங்களில் பதினாயிரத்தில் ஒரு குதியைச் சொல்லுவானோ, சொல்லமாட்டானோ அறிகிலோம்!’ என்பது வராஹ புராணம். –சதுர்முகாயு: யதிகோடிவக்த்ர: பவேந்நர:
க்வாபி விஸூத்த சேதா: ஸதேகுணாநாம் அயுதைகதேஸம் வதேந்நவா தேவவர ப்ரஸீத
மறையாய நால்வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே – வேதங்களிலே எல்லாரைக்காட்டிலும் அதிகனாகவும் நிரதிசய போக்கியனாகவும் பிரகாசிக்கின்றவனே! புறம்பானவர்களாய் நாஸ்திகராயிருப்பார்க்குத் தன் படிகளை மறைக்கையாலே, ‘மறை’ என்றும், ‘ஆஸ்திகராயிருப்பார்க்குத் தன் பொருளை வெளியிட்டுக் காட்டுகையாலே ‘வேதம்’ என்றும் இரண்டு படியாகச் சொல்லப்படுதலின் ‘மறையாய நால்வேதம்’ என்கிறார்: முற்பகுதி – ஆராதன சொரூபத்தைச் சொல்லுகிறதாய், பிற்பகுதி – ஆராதிக்கப்படுகின்ற இறைவனுடைய சொரூபத்தைச் சொல்லுகிறதாய், 2’பூர்வபாகம் என்றும், உத்தரபாகம் என்றும் பிரிவுபட்டுள்ள எல்லா வேதங்களாலும் நான் அறியப்படுபவன்,’ என்கிறபடியே, எல்லா வேதங்களும் தன்னையே சொல்லும்படி இருக்கையாலே உண்டான புகரையுடையவன்
ஆதௌவேதா: ப்ரமாணம் ஸ்மிருதி: உபகுருதே ஸேதிஹாஸை: புராணை: ந்யாயை: ஸார்த்தம்
த்வத் அர்ச்சரவிதிம் உபரி பரிக்ஷீயதே பூர்வபாக: ஊர்த்வோபாக: த்வத் ஈஹா குணவிபவ பரிஜ்ஞாபநை:
த்வத்பதாப்தௌ வேத்ய: வேதை: ச ஸர்வை: அஹம்இதி பகவந் ஸ்வேநச வ்யாசகர்த்த.-ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம், 1 : 19.
அஸந்நேவ ஸபவதி அஸத் ப்ரஹ்மேதி வேதசேத்
அஸ்திப்ரஹ்மேதி சேத் வேத ஸந்தமேநம் ததோவிது:-தைத்திரீய ஆனந். 6.ஆயிரத்திலும் இப்பத்தும்-ஒலி முந்நீர் ஞாலத்தே உய்யக்கொண்டு பிறப்பு அறுக்கும் -, ஒலியையுடைத்தான முந்நீரையுடைய பூமியிலே 2‘பரம்பொருள் இலன் என்று அறிவானாகில் அவனும் இல்லாதவனாகிறான்,’ என்கிறபடியே, அசத்துக்கு ஒப்பானவர்களை, ‘பரம்பொருள் உளன் என்று அறிவானாகில் அவனும் உள்ளவனாகிறான்,’ என்கிறபடியே, உய்வு பெறச் செய்து விரோதிகளையும் போக்கும்-என்றும் ஒக்க உள்ளவர்கள் என்பார், ‘உள்ளவர்’ என்கிறார். ‘சொரூபமான அடிமை ஞானம் அழியாமையாலே உள்ளவர்கள்-தான் உளன் ஆகையாவது, பிரஹ்மஞானம் உண்டாகை அன்றோ– தன்னைக் கிட்டாத அன்று சமுசாரி சேதநருடைய இருப்பு இல்லாதது போன்று, தான் என்னைக் கிட்டாத அன்று தன் இருப்பு இல்லையாம்படி அவன் வந்து நிற்க நான் வேறு ஒருவரைக் கவி பாடுவேனோ?’
அபஏவ ஸஸர்ஜாதௌ தாஸூ வீர்யம் அவாஸ்ருஜத்– மனு ஸ்மிருதி, 1 : 8.இறைவன் முதலிலே தண்ணீரையே படைத்தான்,’ என்கிறபடியே, முதன் முன்னர்த் தண்ணீரைப் படைத்துப் பின்னரே அண்டத்தைப் படைத்தானாதலின், முந்நீர்-4முன்னே படைத்த நீர் –
அந்நாள். நீ – இந்நிலையிலே 4‘பிரகிருதியில் லயப்பட்டிருந்த அக்காலத்தில் ஆத்துமவர்க்கமில்லாமையால் –‘ஸ ஏகாகீநரமேத’- மஹோபநிடதம்.-அவன் தனியனாக மகிழ்ச்சியடைந்தானில்லை,’ என்கிறபடியே, இழவு உன்னதாக முகங்காட்டின நீ. தந்த – திருவடிகளிலே தலைசாய்த்து உன்னைப் பெறுகைக்கு உறுப்பாக உடம்பை உதவி செய்த
அசித் அவிஸேஷிதாந் ப்ரளய ஸீமநி ஸம்ஸரத: கரணகளேபரை: கடயிதும் தயமாந மநா:
வரத நிஜேச்சயைவ பரவாந் அகரோ: ப்ரக்ருதிம் மஹத் அபிமாநபூத கரணாவளி கோரகிணீம்.–ஸ்ரீரங்கராஜ ஸ்தவம், 2 : 41.
வரதனே! பிரளய காலத்தில் அசேதனத்திற்காட்டிலும் வாசி அற்றவர்களாய்த் துவள்கின்ற ஆத்துமாக்களை இந்திரியங்களோடும் சரீரங்களோடும் சேர்ப்பதற்கு விரும்பித் திருவுள்ளமிரங்கி உன்னுடைய சங்கற்பத்தின் வசப்பட்டு மூலப்பகுதியை ‘மஹாந்’ என்ன, அகங்காரமென்ன, ‘ஐம்பூதங்கள்’ என்ன, ‘இந்திரியங்கள்’ என்ன இவற்றினுடைய வரிசையாகிற அரும்புகளையுடையதாம்படி செய்தாய்,’ என்றார் பட்டர்.-நிர்ஹேதுக கிருபையாலே படைத்தான் என்பதற்கும், ‘யௌகபத்யம் அருளின் காரியம்’ என்பதற்கும் மேற்கோள். யௌகபத்யம் – ஒருசேரப் படைப்பது
ராக்ஷஸாநாம் க்ஷயம் க்ருத்வா ஸூதயித்வாச ராவணம்
லங்காம் உந்மூலிதாம் க்ருத்வா கதா த்ரக்ஷ்யதிமாம் பதி:–ஸ்ரீராமா, சுந். 37 : 6.-என் கணவர், இராக்கதர்களுக்கு அழிவினைச்செய்து, இராவணனையும் கொன்று, இலங்கையையும் வேரோடு அழித்து, எப்பொழுது என்னைப் பார்ப்பார்?’ என்று பிராட்டி கூறியது போன்று ‘எந்நாள் இனி வந்து கூடுவன்?’ என்கிறார்.
பூர்ணே சதுர்தஸே வர்ஷே பஞ்சம்யாம் லக்ஷ்மணாக்ரஜ:
பரத்வாஜாஸ்ரமம் ப்ராப்ய வவந்தே நியத: முநிம்.–ஸ்ரீராமா. யுத்த. 127 : 1.-பதினான்கு வருடங்கள் நிறைந்திருக்க, பஞ்சமி திதி யன்று’ என்கிறபடியே, ‘ இன்ன நாள் பெறக்கடவை’ என்று ஒரு நாளிட்டுத்தர அமையும்.-உன்னை எந்நாள் கண்டுகொள்வன் – வடிவழகும் குணங்களும் விடலாய் இருந்தன இல்லை; காலக் கழிப்புச் சொல்ல ஒண்ணாதபடியாய் இருந்தது; ஆனபின்பு, நான் உன்னைக் காண்பது என்று சொல்லாய்? என்றது
எனது மாயையினை ஒருவராலும் தாண்ட முடியாது,’ என்று சொன்ன இது என் ஒருவனுக்கும் பலித்துவிட்டது. பன் மா மாயம் – பல விதமான பெரிய மூலப்பகுதி-தைவீஹி ஏஷா குணமயீ மம மாயா துரத்யயா-ஸ்ரீ கீதை, 7 : 14.
விலங்கு. நின் மா தாள் சேர்ந்து – 1பரமப் பிராப்பியமாய் நிரதிசய போக்கியமாயிருக்கிற திருவடிகளைக் கிட்டி. நிற்பது -எஞ்ஞான்று கொலோ -நித்திய சமுசாரிகளுக்குப் பகவானையடைதல்-அபயம் ப்ரதிஷ்டாம் விந்ததே அத ஸ: அபயம் கதோபவதி.-(தைத்திரீய உபநிடதம், 7.)-பயமில்லாமைக்காகப் பரம்பொருளிடத்தில் இடைவிடாத நினைவின் ரூபமான நிஷ்டையை யடைகிறவன் பயமின்மையை அடைகிறான்,’
அபீதாநீம் ஸ கால: ஸ்யாத் வநாத் ப்ரத்யாகதம் புந:
யத்த்வாபுத்ரக பஸ்யேயம் ஜடாமண்டலதாரிணம்.–ஸ்ரீராமா. அயோத். 24 : 37.-நிற்பது எஞ்ஞான்றுகொலோ – 4‘அது எந்நாளாக வற்றோ? ‘காட்டினின்றும் மீண்டு வருகிற உன்னை எந்த நாளில் பார்ப்பேனோ, அந்தநாள் இந்த நாளாகவேண்டும்,’ (கௌசல்யா தேவியார் கூறிய வார்த்தை)என்பதுபோன்று ‘எஞ்ஞான்று கொலோ!’ என்கிறார்
படைத்துணை வேண்டி வந்து, துரியோதனன் திருமுடிப் பக்கத்தேயிருந்தான்; அருச்சுனன் திருவடிகளின் பக்கத்திலேயிருந்தான்; பள்ளியுணர்ந்தருளி, ‘இராசாக்கள் போந்தது என்?’ என்ன, ‘துரியோதனன் நான் முற்பட வந்தேன்,’ என்ன,பவாந் அபிகத: பூர்வம் அத்ர மே நாஸ்தி ஸம்ஸ்ய: மயாதுத்ருஷ்ட: ப்ரதமம் குந்தீபுத்ரோ தநஞ்சய:–(பாரதம், உத்தியோகபர். 6).- 1‘நீர் முற்பட வந்ததற்குக் குறையில்லை. நம் கண் முற்பட்டது இவன் பக்கலிலே,’ என்று, அவனுக்காகத் தான் சில வழக்குச் சொல்லி, ‘உங்களுக்கு வேண்டுவது என்?’ என்ன
சூழ்ச்சி சொல்லாய்’-ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூச:(ஸ்ரீ கீதை, 18 : 66.)எல்லாப் பாவங்களினின்றும் உன்னை விடுவிக்கிறேன்; நீ துக்கப்படாதே!’ என்று அருளிச்செய்யவேண்டும்–திருத்தேர்த்தட்டிலே நின்று எல்லா ஆத்துமாக்களும் உய்வு பெறும்படி சரம சுலோகத்தைக் கூறி வழி காட்டியவன் அவனேயன்றோ?’-கண்ணன் என்கோ – 3’உனக்கு நான் இருந்தேனே’ என்று ‘மாசுச:- நீ துக்கப்படவேண்டா’ என்னும் கிருஷ்ணன் என்பேனோ!
பிறரிடம் சேவிப்பது நாய்த் தொழில்-ஸர்வம் பரவஸம் துக்கம்; ஸர்வம் ஆத்மவஸம் ஸூகம்.-மநு ஸ்மிருதி, 4 : 6.நாய்த்தொழிலே அன்றோ புறம்பு தொழுவது?
யதா தருணவத்ஸா வத்ஸம் வத்ஸோவா மாதரம் சாயாவா ஸத்வம் அநுகச்சேத்.(மூலசம்ஹிதை).-நிழலானது பொருள்களைத் தொடர்வது போல’ என்ற இதனைச் சொல்லுகையாலே, இதனை, ‘வாழ்ச்சி’ என்றும் அருளிச் செய்கிறார்.
எங்கு வந்து அணுகிற்பன்–அந்தப் பரமாத்துமா எவனை வரிக்கிறானோ, அவனால் அடையத்தக்கவன்; பரமாத்துமா அவனுக்கே தன் சொரூபத்தைக் காட்டுகிறான்–யம்ஏவஏஷ வ்ருணுதே தேந லப்ய: தஸ்யஏஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்.–முண்டக உபநிடதம், 3. 2 : 3.
மெய்ஞ்ஞானம் இன்றி –ததஜ்ஞாநம் அஜ்ஞாநம் அத: அந்யத் உக்தம்.(ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 5 : 87.) 2பரம்பொருளையறியும் அந்த ஞானமே ஞானமென்று சொல்லப்படும்; மற்றை ஞானமெல்லாம் அஞ்ஞானமென்று சொல்லப்படும்’,-ஆயாஸாய அபரம் கர்ம வித்யா அந்யா ஸில்பநைபுணம்.(ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 19 : 41.)3மோக்ஷத்தைக் கொடுக்கக்கூடிய வித்யையே வித்யை; மற்றையவை தொழில் திறமையைக் காட்டக் கூடியவை,’ என்கிறபடியே, புறம்பே சில ஞானம் உண்டு அத்தனையல்லது சம்யக் (உண்மை) ஞானமில்லை கண்டாயே
ஏக: அஹம் அஸ்மீதிச மந்யஸே த்வம்
நஹ்ருச்சயம் வேத்ஸி முநிம் புராணம்.
யோவேதிதா கர்மண: பாபகஸ்ய
தஸ்யாந்தி கேத்வம் வ்ருஜிநம் கரோஷி.(பாரதம், சம்பவ பர். 38 : 29.–(துஷ்யந்த மகாராசனை நோக்கிச்) சகுந்தலை. )நீ, நான் ஒருவன் தான் இருக்கிறேன் என்று எண்ணுகிறாய்; மனத்தில் நித்தியவாசம் செய்கிற ஆதிபுருஷனாகிய பகவானை நீ அறியவில்லை; எவர் பாப காரியங்களை அறிகின்றவரோ, அவருடைய அண்மையில் நீ பாவத்தைச் செய்கிறாய்,’ என்றாள்
மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன் – திலதைலவத் தாருவஹ்நிவத் துர்விவேச.ஸ்ரீரங்க கத்யம்–2எள்ளில் எண்ணெய் போலவும், மரத்தில் நெருப்புப் போலவும்’ என்கிறபடியே, இவ்வாத்துமாவோடு பிரிக்க வொண்ணாதபடி யிருப்பதாய், துக்கத்தை விளைப்பதாயிருக்கிற பாவங்களைத் –தர்மேண பாபம் அபநுததி.–(தைத்திரீயம்)3‘தர்மம் செய்வதனால் பாவங்களைப் போக்கடிக்கிறான்’ என்கிறபடியே, விதித்தனவான கர்மங்களைச் செய்வதனாலே போக்கிற்றிலேன்.
ஓவுதல் இன்றி உன் கழல் வணங்கிற்றிலேன் – ஆத்மாவா அரே த்ரஷ்டவ்யா: ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: நிதித்யாஸிதவ்ய:4(பிருகதாரண்ய உபநிட. 4 : 5.)‘இடைவிடாது தியானம் செய்வதனால் அறியத் தக்கவன்’ என்கிறபடியே, எப்பொழுதும் தியானித்து உன்னை நேரே காணுவதற்கு விரகு பார்த்திலேன். ‘ஓவுதல் இன்றி மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன், ஓவுதல் இன்றி உன்கழல் வணங்கிற்றிலேன்’ என்று ‘ஓவுதலின்றி’ என்பதனை முன்னும் பின்னும் கூட்டிப் பொருள் அருளிச்செய்வர் எம்பார். ‘கண்ணாலப் பெண்டாட்டிக்கு உண்ண அவசரம் இல்லை,’ என்னுமாறு போன்று, 5‘இந்திரியங்களுக்கு இரையிட்டுத் திரிந்தேனித்தனை; எனக்கு ஒன்றும் நன்மை பார்த்திலேன்,’ என்கிறார் என்றபடி. ‘
பாவு தொல் சீர்க் கண்ணா விதித: ஸஹி தர்மஜ்ஞ: ஸரணாகதவத்ஸல:
தேந மைத்ரீபவதுதே யதி ஜீவிதும் இச்சஸி.(ஸ்ரீராமா. சுந். 21 : 20.) பெருமாள் நியாயம் அறிந்தவர்; சரணம் புகுந்தவரிடத்தில்
அன்புடையவர்; எல்லாராலும் அறியப்பட்டவர். ஆதலால், நீ பிழைத்திருக்க விரும்புவாயாகில், உனக்கு அவரோடு நட்பு உண்டாகட்டும்,’
அன்று மேவி ஆ நிரை காத்தவன் – தத: தத்கோகுலம் ஸர்வம் கோகோபீஜந ஸங்குலம்
அதீவார்த்தம் ஹரி: த்ருஷ்ட்வா மைத்ரேய அசிந்தயத்ததா.(ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 11 : 13.)1இந்திரன் கல் மழை பெய்த போது பசுக்கள் ஆயர்கள் ஆய்ச்சிகள் எல்லோரும் நோவுபட, அந்த ஆயர்பாடியைப் பார்த்துச் சிந்தித்தான் கிருஷ்ணன்,’ என்கிறபடியே, நோவு பட்டவன்று ஒரு பசுவின்மேலே ஓர் ஆயன் மேலே ஒரு துளி விழாதபடி, தோன்றியதொரு மலையை எடுத்து உதவி செய்தவனை
ஸர்வஸ்ய ச அஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்ட:
மத்த: ஸ்மிருதி: ஜ்ஞாநம் அபோஹநம்ச
கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு – வேதைஸ்ச ஸர்வை: அஹமேவ வேத்யோ
வேதாந்தக்ருத் வேதவித் ஏவசஅஹம்.(ஸ்ரீ கீதை, 15 : 15.)2’எல்லா வேதங்களாலும் அறியத்தக்கவனும், வேதங்களைச் செய்தவனும், வேதங்களையறிந்தவனும் நானே,’
‘நாலு வேதப் பயன்’ என்கிறார் வேதைஸ்ச ஸர்வை: அஹமேவ வேத்யோ
வேதாந்தக்ருத் வேதவித் ஏவசஅஹம்.(ஸ்ரீ கீதை, 15 : 15.)2’ 3‘பூர்வபாகம் உத்தரபாகம் என்று பிரிவுபட்டுள்ள எல்லா வேதங்களாலும் நான் அறியப்படுமவன்’ என்பது ஸ்ரீ கீதை
(கடோபநிடதம், 1. 2 : 15.) எந்தப் பரம்பொருளை எல்லா வேதங்களும் சொல்லுகின்றனவோ’ என்றும், *தைத்திரீய ஹோதாரே. ஆர. பிர. 3.)2‘எல்லா வேதங்களும் எந்தப் பரம்பொருளிடத்தில் ஒரே முகமாய் ஆகின்றனவோ’ என்றும்
உயிர் நீடு பெற்றது –வெட்டத்தகாததாய் எரிக்கத் தகாததாயிருக்கிற ஆத்துமாவும்’ அழியப் புக்கது; அங்ஙனம் அழியப்புக்க ஆத்துமாவும் இப்போதாயிற்று அழிவின்மையைப் பெற்றது. ‘ஆயின், ஆத்துமாவிற்கு அழிவு உண்டோ?’ எனின்–அச்சேத்ய: அயம் அதாஹ்ய: அயம் அக்லேத்ய: அஸோஷ்ய ஏவச
நித்ய:ஸர்வகத:ஸ்தாணு: அசல:அயம் ஸநாதந:(ஸ்ரீ கீதை, 2 : 24.), ‘சேதிக்க முடியாத வேறுபட்ட சிறப்பினையுடையது’ என்ற இத்துணையேயல்லது, தன்னில் சூக்ஷ்மமாய்ப் புக்கு எங்கும் பரந்து அழிக்க வல்ல பகவானுடைய குணங்களுக்கு அழியாமையில்லை
அகாலபலிநோ வ்ருக்ஷா: ஸர்வேச அபிமது ஸ்ரவா:
பவந்துமார்கே பகவந் அயோத்யாம் ப்ரதிகச்சத:
இனித்தான் அங்குப் போனாலும் —ஸ: அஸ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹமணா விபஸ்சிதா(ஆனந்தவல்லி, 1 : 2.)5‘அவன் கல்யாண குணங்களனைத்தையும் முற்றறிவினனான இறைவனோடு அனுபவிக்கிறான்,’ என்கிறபடியே, குண அனுபவமன்றோ பண்ணுகிறது?
பாரிக்கிறது என்? அடிமை செய்யவொண்ணாதோ?’ எனின், இவ்விஷயத்தில் அடிமை செய்ய ஒருப்படுவார்க்கெல்லாம் உள்ளது ஒன்றாயிற்று முன்பே பாரித்துக் கொண்டு இழியுமது;பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஹாநுஷூ ரம்ஸ்யதே
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதஸ்ச தே.-ஸ்ரீராமா. அயோத். 31 : 25.3‘நான் எல்லாக்காலத்திலும் எல்லா அடிமைகளும் செய்வேன்,’ என்பதன்றோ இளைய பெருமாள் படி? 4உணவையே முக்கியமாகக் கொண்ட ஒருவன், ஊண் அத்தியாயம் படிக்குமாறு போன்று இருப்பது ஒன்றாயிற்று இவருடைய கைங்கரிய மனோரதம்.
ஸ: உத்தம: புருஷ: தத்ர பர்யேதி ஜக்ஷத் க்ரீடந்
ரமமாண: ஸ்திரீபி: வா யாநைர்வா ஜ்ஞாதிபி:
வாநஉபஜநம் ஸ்மரந் இதம் சரீரம்.(சாந்தோக்யம், 8. 12 : 3.)ஜனங்களின் நடுவிலிருந்தும் இச்சரீரத்தை நினையாமலே நாலு பக்கங்களிலும் சஞ்சரிக்கிறான்,’ என்கிறபடியே, கழிந்த காலத்தில் இழவு நெஞ்சிற்படாதபடி மறப்பிக்கையேயன்றோ உள்ளது
நமேதுக்கம் ப்ரியாதூரே நமேதுக்கம் ஹ்ருதேதி வா
ஏததேவ அநுஸோசாமி வய: அஸ்யா: ஹி அதிவர்த்தே.ஸ்ரீராமா. யுத். 5 : 5.)இது ஒன்றே எனக்குத் துக்கத்தைத் தருகிறது; அது யாதெனில், ‘பிராட்டியினுடைய வயதானது வீணே கழிகின்றதே! போன காலத்தை மீட்க முடியாதே!’ என்று வருந்தினார் பெருமாள்;
ரம்யம் ஆவஸதம் க்ருத்வா ரமமாணா: வநேத்ரய:-பெருமாள் பிராட்டி இளைய பெருமாள் ஆகிய மூவரும், அழகிய பர்ணசாலையைக் கட்டிக்கொண்டு காட்டில் மகிழ்ந்தவர்களாயிருந்தார்கள்,’ என்று இருவர்க்கு உண்டான அனுபவத்திலே மூவரைச் சொல்லுகிறார்; அவ்விருவர்க்கும் பரஸ்பரம் கலவியால் பிறக்கும் ரசம் அச்சேர்த்தியைக் கண்டவனுக்கும் பிறக்கையாலே
இனி, 4‘சுவர்க்க அனுபவம் பண்ண வேணும்’ என்று புக்கால்–நகேவலம் த்விஜஸ்ரேஷ்ட நரகே துக்கபத்ததி:
ஸவர்க்கேபி பாதபீதஸ்ய க்ஷயிஷ்ணோ: நாஸ்தி நிர்விருதி:ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 5 : 50.–சுவர்க்கத்திலும், நாசமடையக் கூடியவனுக்குக் கீழே விழுந்துவிடுவோம் என்ற பயத்தினால் சுகமில்லை,’ என்கிறபடியே, அருகே சிலர் நரகானுபவம் பண்ணக் காண்கையாலே, இருந்து அனுபவிக்கிற இதுதானும் உண்டது உருக்காட்டாதபடியாயிருக்கும்
விலலாப ஸபாமத்யே ஜகர்ஹேச புரோஹிதம்.
உத்திஷ்ட உத்திஷ்ட கிம்ஸேஷே ராஜ புத்ரமஹாயஸ:
த்வத்விதா நஹிஸோசந்தி ஸந்த: ஸதஸிஸம்மதா:-ஸ்ரீராமா. அயோத். 72 : 24.ஸ்ரீ பரதாழ்வானைக் கைகேயி 2‘ராஜந்’ என்ன, அப்போது சுவாதந்தரியம் பொறுக்கமாட்டாமல் படுகுலைப்பட்டாற்போன்று ‘கதறினான்’ என்கிறபடியே, கூப்பிட்டான் அன்றோ? இதனால், 3பாரதந்திரிய ரசம் அறிவார்க்குச் சுவாதந்திரியம் கேடு என்று தோற்றும்
ஏபிஸ்சஸசிவை: ஸார்த்தம் ஸிரஸா யாசிதோமயா
ப்ராது: ஸிஷ்யஸ்ய தாஸஸ்ய ப்ரஸாதம் கர்த்தும் அர்ஹதி. – (ஸ்ரீராமா, அயோத். 101 : 12.)சமீபத்தில் இருக்கிற மந்திரிகளோடுங்கூட’ – தன்னிற்காட்டிலும் கண் குழிவுடையார் இத்தனை பேர் உண்டாயிற்று. தன்னோடு ஒத்த ஆற்றாமையுடையார் பலரைக் கூட்டிக்கொண்டு போந்தான்-கைங்கரியம் பிரார்த்தித்துப் பெறத் தக்கது என்பதற்கு மேற்கோள் ‘ஸிரஸா யாசித : – தலையால் வணங்கி யாசிக்கப்பட்ட நீர்’ – என் பேற்றுக்குத் தாம் விரும்பித் தருமவர் யான் என் தலையால் இரந்தால் மறுப்பரோ? ‘மயா-என்னாமல்’ – அத் தலை இத்தலையானால் செய்யாதொழிவரோ? ‘ப்ராது: – பின் பிறந்தவன்’யத்விநா பரதம் த்வாம்ச ஸத்ருக்நம் சாபி மாநத பவேத் மமஸூகம் கிஞ்சித் பஸ்மஸாத்குரு தாம்ஸிகீ. -(ஸ்ரீராமா. அயோத். 97 : 8.) 2‘பரதனையும் உன்னையும் சத்துருக்கனனையும் நீங்கி எனக்குச் சிறிது சுகம் உண்டாகுமேயாயின், அந்தச் சுகத்தை நெருப்பானது சாம்பலாக்கட்டும்!’ என்னும்படி தம் பின், பிறந்தவனல்லனோ நான்? இதனால், என் தம்பிமார்க்கு உதவாத என் உடைமையை நெருப்புக்கு விருந்திட்டேன்,’ என்கிறார் என்றபடி, ‘சிஷ்யஸ்ய -சிஷ்யன்’ -‘தம்பியாய்க் கூறு கொண்டு முடி சூடியிருக்குமவனோ நான்? எல்லா ரஹஸ்யமும் தம்மிடமே அன்றோ பெற்றது? ‘தாசஸ்ய – அடியவன்’ – சிஷ்யனாய்க் கிரய விக்கிரயங்கட்குத் தகுதியில்லாதவனாயிருந்தேனோ? ஆன பின்னர், நான் விரும்பியகாரியத்தை மறுப்பரோ? இதுவன்றோ கைங்கரியத்தில் சாபலமுடையார் இருக்கும்படி?’
தம் ஈஸ்வராணாம் பரமம் மஹேஸ்வரம்
தம்தேவ தாநாம்பரமம் ச தைவதம்.
பதிம் பதீநாம் பரமம் பரஸ்தாத்
விதாம தேவம் புவனேஸம் ஈட்யம்.–ஸ்வேதாஸ்வதர உபநிடதம், 6. –அப்பரம்பொருள் ஈசுவரர்களாய் உள்ளவர்கட்கும் மேலான ஈசுவரனாவான்,’ என்று கூறப்பட்டுள்ளதன்றோ?
அந்தமில் புகழ்’ என்கிறது.ஸமஸ்த கல்யாண குணாத்மக: அஸௌ. (ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 5 : 84.), 3‘ஈசுவரன் சமஸ்தமான கல்யாண குணங்களையும் இயல்பாகவேவுடையவன்,’ என்றபடி. இதனால், ஸ்ரீவைகுண்டத்தில் புகழ்க்கு முடிவு உண்டு போலும்!’ என்றவாறு
எல்லா உலகும் தொழும் ஆதிமூர்த்தி என்றால் அளவு ஆகுமோ?’ என்றதிற்காட்டில் ஏற்றமாகச் சொன்ன பொருள் என்?’ என்னில், ‘ஈசன் வானவர்க்கு என்பன்’ என்பதைக்காட்டிலும், ‘என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச்சோதி’ என்ற இடத்தில் ஏற்றங்கண்டோம்; அதைப்போன்று, ‘எல்லா உலகுந்தொழும்’ என்பதனைக் காட்டிலும் ‘தீதில் சீர்த்திருவேங்கடத்தான்’ என்ற இடத்தில் ஏற்றம் யாது?’ எனின், ‘என்னை அங்கீகரித்தான் என்ற இது ஒரு ஏற்றமோ? என்னைக்காட்டிலும் தாழ்ந்தாரைத் தேடிக் கிடையாமையாலே பட்டினி விட்டு,(ஸ்ரீராமா. அயோத். 59 : 3. இது, சுமந்திரன் கூற்று.) 5‘பெருமாள் மீண்டும் என்னைக் கூப்பிடுவாரோ என்ற ஆசையினால் இருந்தேன்’ என்பது போன்று, காலத்தை எதிர்நோக்கிக்கொண்டு நிற்கின்றவனுக்கு. ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன்’ என்ற இவருடைய குற்றங்களைக் குணமாகக்கொண்டு அங்கீகரித்து, இவருக்கு அவ்
எண் இல் தொல் புகழ்–யதா ரத்நாநி ஜலதே: அஸங்க்யேயாநி புத்ரக
ததா குணாஹி: அநந்தஸ்ய அஸங்க்யேயா மஹாத்மந:ஸ்வேதாஸ்வதர உபநி. 6.–சிறுவனே! கடலில் இரத்தினங்கள் எப்படி அளவில்லாமல் இருக்கின்றனவோ அப்படியே, மஹாத்துமாவான பகவானுடைய குணங்களும் அளவிறந்தன,’ என்கிறபடியே, கணக்கு இல்லாதவையாய் இயல்பாகவே அமைந்த குணங்களையுடைய. வானவர் ஈசன் – குணங்களை அனுபவிப்பித்து நித்தியசூரிகளையுடைய ஸத்தையை நோக்கிக்கொண்டு செல்லுகிறவன்
அமர்யாத: க்ஷூத்ர: சலமதி: அஸூயா ப்ரஸவபூ:
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மரபரவஸ: வஞ்சநபர:
ந்ருஸம்ஸ: பாபிஷ்ட: கதம் அஹம் இத: துக்கஜலதே:
அபாராத் உத்தீர்ண: தவபரிசரேயம் சரணயோ:
தாய்க்கும் மற்றொரு பொருளுக்கும் வேற்றுமை வையாது செயல் புரியும் சென்மம்; சாஸ்திரங்கள் ‘ஆகாதன’ என்று விலக்கியனவற்றைச் செய்து அவற்றினின்றும் மீளமாட்டாமல் போந்தேன்; ‘சாஸ்திர மரியாதையைத் தப்பி நிற்றல் ஆகாதுகாண்’ என்று ஒருவன் சொன்னால், அதனைக் கைக்கொள்ளுந்துணை நெஞ்சில் அறிவில்லாதானொருவன்; அப்படியின்றி, சொல்லுவாரையும் பெற்று, அது நெஞ்சில் படவும் பெற்றதாகில், அதுதன்னை நம்புதல் செய்யாது ‘நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன்’ ஆனவன்; நன்மை சொன்னவனுடைய உயர்வினைப் பொறாதவன்; உபகரித்த விஷயத்திலே அதனை இல்லை செய்து அபகாரங்களைச் செய்து போந்தவன்; அபகாரங்களைச் செய்து போதலேயன்றி நன்மை சொன்னவர்களுக்கும் மேலாக என்னை நினைத்துப் போந்தவன்; அறிவுடையார்க்கு மேலாகவும் காமுகர்க்குக் கீழாகவும் நினைத்திருப்பவன்; புறம்பே பறித்துக்கொண்டு வந்து ஒரு பெண் பக்கலிலே சேர்த்து அங்கே திரண்டவாறே அவ்விடந்தன்னில்நின்றும் அபகரிப்பவன்; ‘நம்மை விரும்பினவர்களிடத்தில் வஞ்சனையைச் செய்தோம்’ என்ற இரக்கமுமின்றியிருப்பவன்; இவை தாம் உருவச் செல்லும்படி மேன்மேலெனக் காரியம் பார்ப்பவன்’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும். 1‘இது ஆளவந்தார் அருளிச்செய்ததேயாகிலும், நான் என் வாயால் இப்பாசுரம் சொல்லமாட்டேன்,’ என்பராம் அனந்தாழ்வான். ஆக, ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன்’ என்றதனால், ஆத்துமாவிற்குத் தகுதியில்லாத குணங்களே என் பக்கல் உள்ளன; ஆத்தும குணங்கள் ஒன்றுமில்லை என்பதனைத் தெரிவித்தபடி. ‘என் தண்மையும் நிறைவு இல்லாமையுமன்றோ நான் 2இவ்வார்த்தை சொல்லிற்று என்கிறார்’ என்பராம் பிள்ளை திருநறையூர் அரையர்.
சோதியாகி – தனக்குமேல் ஒன்று இல்லாத பேரொளியுருவமான திருமேனியையுடையவனாய்.- தம் த்ருஷ்ட்வா தே ததா தேவா: ஸங்க சக்ர கதா தரம்
அபூர்வ ரூப ஸம்ஸ்தாநம் தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்.-ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 9 : 63. வன்மையுள்ள பேரொளிகளின் கூட்டமாயுள்ள அந்த விஷ்ணு’
‘ஒளியாகில் சிவந்தன்றோ இருப்பது? நீல நிறத்தையுடைய திருமேனியைச் சிவந்த சோதியாகச் சொல்லக் கூடுமோ?’ என்ன, திருமேனிக்கு
நீலநிறமுமுண்டு, ஒளியுமுண்டு: இரண்டும் ஒன்றை ஒன்று விட்டிரா; இரண்டும் உண்டானாலும் ஒளியே விஞ்சியிருக்கும் என்னுமதனை வேத
வாக்கியத்தைக்கொண்டு விளக்குகிறார்
தஸ்ய மத்யே வஹ்நி ஸிகா அணீயோர்த்வா வ்யவஸ்தித:
நீல தோயத மத்யஸ்தாத் வித்யுல்லேகேவ பாஸ்வரா
நீவார ஸூகவத் தந்வீ பீதாபா ஸ்யாத் தநூபமா.தைத்திரீய நாராயண உபநி. 11. –நீல நிறத்தையுடைய மேகத்தை நடுவிலேயுடைய மின்னற்கொடி போன்று ஒளியுடன் கூடியதாயும், நீவாரதானியத்தின் வால் போன்று மெல்லியதாயும், உருக்கிய தங்கம் போன்று காந்தியையுடையதாயும் இருக்கிற ஒரு சிகையிருந்தால், அது பரமாத்துமாவின் சரீரத்திற்கு ஒப்பாகலாம்’ ஆக இவ்விரண்டு நிறத்தையும் தனித்தனியே பார்த்தால், ‘இதுவே ஸ்வரூபம், இதுவே ஸ்வரூபம்’ என்னும்படி தோன்றும் என்பதாம். ‘மயிலின் கழுத்தைப்போன்று இருக்கும்’ என்றபடி.இதனால், சிரமத்தைப் போக்கும் வடிவைப் புகர் முட்டாக்கிட்டிருக்கும் என்கையும், அப்புகர்தன்னைச் சிரமத்தைப் போக்கும் வடிவு தன்னுள் அடக்கிக்கொண்டிருக்குமென்கையும் போதரும். இத்தால், ‘ஒன்றையொன்று விடாதே இரண்டும் வேறொன்றை வேண்டாதிருக்கும்’ என்றபடி. ஆயினும், ‘நீல நிறத்தையுடைய மேகத்தை நடுவிலேயுடைய மின்னல் போன்று’ என்று கூறி, ‘உருக்கின தங்கம் போன்று காந்தியையுடையதாய்’ என்றும் கூறுதலின், ஒளியே விஞ்சியிருக்கும் என்பது போதருதலின், இவரும் ‘சோதியாகி’ என்கிறார்.
த்ருஷ்ட்வா க்ருஷ்ணம் ததாயாந்தம் ப்ரதபந்தம் இவ ஓஜஸா
யதார்ஹம் கேஸவே விருத்திம் அவஸா: ப்ரதிபேதிரே.(பாரதம், சா பர். 75.)கிருஷ்ணனிடத்தில் பரவசப்பட்டவர்களாய்த் தகுந்தவாறு செயலை அடைந்தனர்’ என்கிறபடியே, தொழக்கடவோமல்லோம் என்ற நினைவினைச் செய்துகொண்டிருந்தவர்களுங்கூடக் கண்டவாறே தொழுதார்களாதலின், ‘எல்லா உலகும் தொழும்’ என்கிறார்-சோதியாகையாலே எல்லா உலகும் தொழும் என்கிறார்,’ என்றபடி.
கங்கை மகன்கதி ரோன்மகன் அம்பிகை காதன் மகன்தனயர்
அங்கவை யின்க ணிருந்த நராதிப ரடைய எழுந்தடைவே
செங்கை குவித்த சிரத்தின ராயுணர் வொன்றிய சிந்தையராய்
எங்கள் பிழைப்பினை இன்று பொறுத்தருள் என்று பணிந்தனரே.’- (வில்லிபா. கிருஷ். 211.)
பிறஹ்மத்துக்கு லக்ஷணம் யாது?’ என்ன–யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாகாநி ஜீவந்தி
யத் ப்ரயந்தி அபி ஸம்விஸந்தி தத் விஜிஞ்ஜாஸஸ்வ தத் ப்ரஹ்ம–தைத்திரீய. பிருகு. 1.-எதனிடத்தினின்றும் இந்தப் பூதங்கள் உண்டாகின்றனவோ, எதனால் உண்டானவை பிழைத்திருக்கின்றனவோ, இவையெல்லாம் அழிந்து பிரளய காலத்தில் எதனை முற்றிலும் சேர்கின்றனவோ, அதனை அறிவாயாக; அதுதான் பரப்பிரஹ்மம்’ என்பதாக உலகங்களெல்லாம் உண்டாதல் முதலானவற்றிக்குக் காரணம் பிரஹ்மம் என்று கூறியது
அடையத்தக்க பொருள் யாது?’ என்ன, காரணம்து த்யேய:-(அதர்வசிகை.)2‘காரணமான பொருளே தியானத்திற்கு உரியது என்றும்,யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை. (ஸ்வேதாஸ்வதரம்.)3‘எவன் உலகங்களையெல்லாம் படைப்பதற்கு முன்னே நான்முகனைப் படைத்தானோ, எவன் அந்த நான்முகனுக்கு வேதங்களை உபதேசித்தானோ’ என்றும் உலகங்கட்கெல்லாம் காரணப் பொருளே தியானத்திற்கு உரியது என்று கூறியது. அப்படியே, இவரும் ‘எல்லா உலகுந் தொழும்’ என்று அடைகின்ற பொருள்களைக் கூறி, ‘ஆதிமூர்த்தி’ என்று அடையக்கூடிய பொருளை அருளிச்செய்தார்.
இனி, ‘அளவாகாது’ என்று சொல்லும்போதும் சிறிதளவு சொல்லிப் பின்னர்,. (தைத்திரீய ஆனந். 9 : 1.)4‘அந்த ஆனந்த குணத்தினின்றும் வாக்குகள் மீளுகின்றனவோ என்னும் வேதம் வேண்டாவோ?’ என்கிறார்
மேல்; வேதியர் முழு வேதத்து அமுதத்தை –ஸாஹி ஸ்ரீ: அம்ருதா ஸதாம். (யஜூஷி.)5‘அந்த வேதமானது பெரியோர்கட்கு அழிவற்ற தனமாய் இருக்கிறது,’ என்கிறபடியே, வேதங்களைச் செல்வமாகவுடைய பிராமணருடைய எல்லா வேதங்களாலும் சொல்லப்படுகின்ற இனிமை மிகுதியையுடையவனை.ஆநந்தோ ப்ரஹ்மேதி வ்யஜாநாத் (தைத்திரீய. பிருகு. 6 : 1.)6‘பிரஹ்மம் ஆனந்தமானது’, ரஸோ வை ஸ:(தைத்திரீய உபநி.)7‘அந்தப் பிரஹ்மமானது ரச மயமாய் இருக்கிறது,’ என்பன உபநிடத வாக்கியங்கள்
வேதியர் முழுவேதத்து அமுதத்தை’ என்பதற்கு இரண்டு வகையில் பொருள் அருளிச்செய்கிறார்: முதலது, ஸ்வரூபத்தில் இனிமை; இரண்டாவது குணத்தில் இனிமை
ஸர்வே வேதா யத் பத்மாமநந்தி தபாம்ஸி
ஸர்வாணி ச யத்வதந்தி, யத் இச்சந்த: ப்ரஹ்ம சர்யம்
சரந்தி தத்தே பதம் ஸங்க்ரஹேண
ப்ரவீமி ஓம் இதி.-கடோபநிடதம், 1. 2 : 15.எந்தப் பரம்பொருளை எல்லா வேதங்களும் சொல்லுகின்றனவோ’ என்றும்–ஸர்வே வேதா யத்ர ஏகம் பவந்தி.-தைத்திரீய ஹோதாரே. ஆர. பிர. 3.-எல்லா வேதங்களும் எந்தப் பரம்பொருளிடத்தில் ஒரே முகமாய் ஆகின்றனவோ’ என்றும்-எல்லா வேதங்களாலும் அறியப்படுமவன் நானே’ (ஸ்ரீகீதை, 15 : 15.)என்றும் வருகின்றவாற்றால் எல்லா வேதங்களாலும் சொல்லப்படுகின்ற ஆனந்த குணத்தை யுடையவனை என்னுதல்
என்னை அங்கீகரித்தான் என்ற இது ஒரு ஏற்றமோ? என்னைக்காட்டிலும் தாழ்ந்தாரைத் தேடிக் கிடையாமையாலே பட்டினி விட்டு,-குஹேந ஸார்த்தம் தத்ரைவ ஸ்தித: அஸ்மி திவஸாந் பஹூந், ஆஸயா யதி வா ராம: புந: ஸப்தாபயேதிதி.–(ஸ்ரீராமா. அயோத். 59 : 3. இது, சுமந்திரன் கூற்று.)பெருமாள் மீண்டும் என்னைக் கூப்பிடுவாரோ என்ற ஆசையினால் இருந்தேன்’ என்பது போன்று, காலத்தை எதிர்நோக்கிக்கொண்டு நிற்கின்றவனுக்கு. ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன்’ என்ற இவருடைய குற்றங்களைக் குணமாகக்கொண்டு அங்கீகரித்து, இவருக்கு அவ்வருகு குற்றமுடையாரைத் தேடிக் கிடையாமையாலே நிற்கிறான் என்பதனைத் தெரிவித்தமையால், அவ்வாறு நிற்றலே ஓர் ஏற்றம் என்க
பாதுகாக்கிறவனுக்குப் பாதுகாக்கப்படும் பொருள் பெற்ற அளவிற்கு மனநிறைவு வருதல் பாதுகாத்தலுக்குக் குற்றமாமாதலின், ‘தீதில்சீர்’ என்கிறார் என்னுதல்;அஸந்துஷ்ட: த்விஜோ நஷ்ட: ஸந்துஷ்ட: க்ஷத்ரியஸ்ததா ஸலஜ்ஜா கணிகா நஷ்டா நிர்லஜ்ஜாச குலாங்கநா. 1‘க்ஷத்திரியன் பெற்றதைக்கொண்டு திருப்தியடைவானாயின் நஷ்டமடைவான்,’ என்பது பொதுவான தர்மம்.-சுலோகத்தின் பொருள் :- ‘பிராஹ்மணன் பெற்றதற்கு
மகிழானாயின், நஷ்டமடைவான்; அப்படியே, க்ஷத்திரியன் பெற்றதைக் கொண்டு திருப்தியடைவானாயின் நஷ்டமடைவான்; பொதுமகள் நாணத்தை யுடையவளாயின் நஷ்டமடைவாள்; நற்குலப்பெண் நாணத்தை விடுவாளாயின் குற்றமுடையவளாவள்,’ என்பது
கடங்கள் வேம் – த்ரிபி: ருணவா ஜாயதே ப்ரஹ்மசர்யேண ருஷிப்ய: யஜ்ஞேந தேவேப்ய: ப்ரஜயா பித்ருப்யா.(யஜூஷி காண்டம், 6.)2‘ஒருவன் மூன்று கடனுள்ளவனாக வந்து பிறக்கிறான்; பிரஹ்மசர்யத்தாலே முனிவர் கடனையும், யாகத்தாலே தேவர் கடனையும், பெறுகின்ற புத்திரனாலே பிதிரர் கடனையும் தீர்க்கக் கடவன்,’ என்றும்,ருணாநி த்ரீணி அபாக்ருத்ய மநோ மோக்ஷே நிவேஸயேத் அநபாக்ருத்ய மோக்ஷம்து ஸேவமாநோ வ்ரஜத்யதா:(மநு ஸ்மிருதி, 6 : 35)3‘மூன்று கடன்களையும் தீர்த்து மனத்தை மோட்சத்திலே வைத்தல் வேண்டும்; இக்கடன்களைத் தீர்க்காமல் மோட்சத்தையடைய விரும்புகிறவன் கீழே விழுகிறான்,’தத் அதிகம உத்தர பூர்வாகயோ: அஸ்லேஷ விநாஸௌ தத் வ்யபதேஸாத். (பிரஹ்ம சூத்திரம், 4. 4 : 13.)என்றும் சாஸ்திரங்களாலே விதிக்கப்படுகின்ற கடன்கள்வேம். ‘கடங்கள்’ என்றது, ‘கடன்கள்’ என்றபடி.
ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந: ப்ரதூயந்தே ய ஏதமேவம் வித்வான் அக்நிஹோத்ரம் ஜூஹோதி (சாந்தோக்கிய உபநிட. 5 -25.)ஞானத்தை யடைந்தவுடன் (ஞானத்தின் மஹாத்மியத்தாலே) உத்தர பூர்வாகங்களில், உத்தராகத்திற்குச் சம்பந்தப்படாமலிருத்தலும், பூர்வாகத்துக்கு நாசமும் உண்டாகும்’ என்றும்-இந்த விதமாகச் செய்கின்ற வேதாந்த ஞானமுடையானுக்கு எல்லாப் பாவங்களும் நெருப்பிற்போடப்பட்ட பஞ்சு தூசி போன்று அழிகின்றன; ஆச்சரியம்’ என்றும் சொல்லுகிறபடியே ‘வேம் என்கையாலே பூர்வாகத்துக்கு அழிவும், உத்தராகத்துக்குச் சம்பந்தியாமற்போய்விடுகையும் சொல்லுதல். அன்றி, பூர்வாகத்துக்குச் சொன்ன அழிவுதானே உத்தராகத்துக்கும் உபலக்ஷணமாய், சம்பந்தியாமற்போதலைச் சொல்லிற்றாகவுமாம்.
யதா பூதவாதி ஹி ஸாஸ்த்ரம்.இப்படிச் செய்கின்றவனுடைய எல்லாப் பாவங்களும் அழிகின்றன ‘என்பது உபநிடத வாக்கியம். ‘
பூயிஷ்டாந்தே நம உக்திம் விதேம.(யஜூஷி)நம:’ என்ற சொல்லைக் கனக்க நினைத்திருக்கும் பகவானுடைய கருத்தாலே சொல்லுகிறோம் என்னும்படியன்றோ அவன் இருப்பது?
கோவிந்தேதி யத் ஆக்ரந்தத் க்ருஷ்ணமாம் தூரவாஸிநம்
ருணம் ப்ரவ்ருத்தம் இவமே ஹ்ருதயாத் ந அபஸர்பதி.( பாரதம் உத்தியோக பர். 58 : 22.)திரௌபதி வெகுதூரத்தில் வசிக்கின்ற என்னைக் ‘கோவிந்தா!’ என்று கூவி அழுதாள் என்பது யாதொன்று உண்டு; அது வட்டிக்கு வட்டி ஏறின கடன் போன்று என்னுடைய மனத்தினின்றும் நீங்கவில்லை,’ என்கிறபடியே-நினைத்திருக்கை மாத்திரமன்றி, அநுஷ்டானமும் உண்டு,’ என்கிறார்-, ‘கோவிந்தா!’ என்று நம் பேரைச் சொன்னாள்; நாம் ஒன்றும் செய்திலோம் என்று அவளைக் கொண்டாடி, தன்னை நிந்தித்துத் திருவுள்ளம் புண்பட்டிருக்குமவனன்றோ? அப்போது சபையில் பிறந்த பரிபவம் நீக்கப்பட்டிருந்தும், ‘நம் பேரைச் சொல்லிக் கூப்பிட்டவளுக்கு ஆற்றாமையிலே முகங்காட்டப் பெற்றிலோம்’ என்று தான் உள்ளதனையும் இழவுபட்டிருந்தான் என்றபடி. ‘இழவுபடுகிறது என்? காரியம் செய்யப்படவில்லையோ?’ எனின், 3‘நம்முடைய பெயர் தன் காரியம் செய்ததத்தனை போக்கி, நாம் இவளுக்கு ஒன்றும் செய்திலோமே!’ என்று இருந்தான். ‘
நங்கட்கு – கைங்கரிய ருசியையுடைய நமக்கு. சமன் கொள் வீடு தரும் –ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி.(முண்டக உபநிட, 3 : 2.)3‘பிரஹ்மத்தையறிந்தவன் பிரஹ்மம்போல ஆகிறான்,’ என்றும்-ததா வித்வாந் புண்யபாபே விதூய நிரஞ்ஜந: பரமம் ஸாம்யம் உபைதி.(முண்டக உபநிட. 3. 1 : 3.)4‘பிரஹ்ம வித்தையால் குற்றம் அற்றவன் பூர்ண ஒப்புமையையடைகிறான்,’ என்றும், இதம் ஜ்ஞாநம் உபாஸ்ரித்ய மம ஸாதர்ம்யம் ஆகதா:(ஸ்ரீ கீதை, 14 : 2.)5‘இந்த ஞானத்தையுடையவர்கள் எனக்குச் சமமான உருவம் முதலியவற்றை அடைந்தவர்கள்,’ என்றும், 6‘தம்மையேயொக்க அருள் செய்வர்,’ (பெரிய திருமொழி, 11. 3 : 5.)என்றும் சொல்லுகிறபடியே, அவன், ‘அவனோடு
சமன் கொள் வீடு’ என்பதற்கு மூன்று வகையாகப் பொருள் அருளிச் செய்கிறார். முதற்பொருளும், மூன்றாவது பொருளும் சாம்யாபத்தி ரூபமான
மோக்ஷம் என்பது. இரண்டாவது பொருள், ஸ்வரூபத்துக்குத் தகுதியான மோக்ஷம் என்பது. சமம் – ஒத்தல்; தகுதி.–ஏஷ ஸம்ப்ரஸாத: அஸ்மாத் ஸரீராத் ஸமுத்தாய பரஞ்ஜ்யோதி: உப ஸம்பத்ய ஸ்வேந ரூபேண அபிநிஷ்பத்யதே.–. சாந்தோக்யம்.-இவ்வாத்துமாவானது சரீரத்தை விட்டுக் கிளம்பி ஒளியுருவமான பிரஹ்மத்தையடைந்து தனது உருவத்தோடு கூடுகிறான்,’ என்கிறபடியே,
தடங்குன்றம் – திருவேங்கடமுடையானுக்குத் தன் விருப்பின்படி சஞ்சாரம் பண்ணலாயிருக்கும்படி இடமுடைத்தாயிருக்கை–ஸூபக: சித்ரகூடோயம் கிரிராஜோபமோ கிரி: யஸ்மிந் வஸதி காகுத்ஸ்த்த: குபேர இவ நந்தநே.-ஸ்ரீராமா. அயோத். 98 : 12. 3‘ஸீபக: – வீறுடைத்தாயிருக்கை. கிரிராஜ உபம: – திருமலையோடு ஒத்திருக்கை. யஸ்மிந்வஸதி – அதற்கு ஏது சொல்லுகிறது. காகுஸ்த்த: – போகத்துக்கு ஏகாந்தமான இடம் தேடி அனுபவிக்கும் குடியிலே பிறந்தவர் விடாதே விரும்பி வசித்தார் என்பது யாதொன்று உண்டு? குபேர இவ நந்தநே – தன் அரண்மனையை நீங்கித் துஷ்ட மிருகங்கள் நிறைந்த நந்தவனத்திலே துஷ்ட மிருகங்கள் மிகுதியாகவுள்ள தேசத்திலே செருக்கனான குபேரன் போது போக்குகைக்காகத் தன் உத்தியானத்திலே உலாவுமாறு போன்று சஞ்சரித்தார்.’
விசித்ரா தேஹ ஸம்பத்தி: ஈஸ்வராய நிவேதிதும் பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மந் ஹஸ்த பாதாதி ஸம்யுதா.–விஷ்ணு தத்துவம்.–ஓ பிரமனே! திருமகள் கேள்வனை வணங்கும்பொருட்டு, கை கால் முதலிய உறுப்புகளுடன் கூடின விசித்திரமான இச்சரீரம் முற்காலத்தில் உண்டாக்கப்பட்டது’ என்கிறபடியே, ‘சர்வேசுவரன் இவ்வாத்துமாவிற்குச் சரீர சேர்க்கையைக் கொடுத்தது, நரகத்திற்குக் காரணமான விஷயங்கள் இருந்த இடம் தேடிப் போகைக்காக அன்று; திருமலைக்குப் போகைக்கு’ என்கிறார்.-சர்வேசுவரனை வணங்குவதற்காகவே கை கால் முதலிய அவயவங்களோடு கூடின விசித்திரமான இந்தச்சரீரம் ஆதிகாலத்தில் உண்டாக்கப்பட்டது,’ என்கிறபடியே, ‘கை வந்தபடி செய்ய அன்றோ இவர் ஆசைப்படுகிறது? வாய்க்கு ஏத்துதல் போன்று கைக்குத் தொழுகையும் ஆதலின், வாய் வந்தபடி சொல்லவும் கை வந்தபடி செய்யவுமே அன்றோ இவர் ஆசைப்படுகிறார்?’ என்றபடி. வேறு ஒரு பிரயோஜனத்துக்காகத் தொழுதால் பிரயோஜனத்தளவிலே மீளும்; சாதனம் என்ற எண்ணத்தோடு தொழில் பெற வேண்டிய பயன் கிடைத்த அளவிலே மீளும்; அங்ஙன் அன்றிக்கே, இதுவே செயலாய் இருத்தல் என்பார், ‘தொழுது தொழுது’ என்கிறார்.
ஸ்ருஷ்ட:த்வம் வநவாஸாய ஸவநுரக்த: ஸூஹ்ருஜ்ஜநே ராமே ப்ரமாதம் மாகார்ஷீ: புத்ர ப்ராதரி கச்சதி.ஸ்ரீராமா. அயோத். 40 : 5. அவர் காட்டிலே எழுந்தருளாநிற்கப் படை வீட்டிலே இருக்கைக்கோ, நான் உன்னைப் பெற்றது? நீ இப்படிச் செய்தாயாகில் நான் உன்னைப் பெற்ற பயன் பெற்றேனாகிறேன்; அவர்க்கு யாதொருபோது துணை வேண்டியிருந்தது, அப்போது நீ துணையாகைக்காகவன்றோ நான் உன்னைப் பெற்றது? நீ சினேகிதர்கள் பக்கல் அன்பு உடையையன்றோ? ஆகையாலே, எல்லார்க்கும் வேர்ப்பற்றான பெருமாளை நோக்கித் தாராய்; அன்றிக்கே, பெருமாள் பக்கல் பண்டே அன்புடையவனாயன்றோ நீ இருப்பது? இப்போது ‘போ’ என்று நான் உனக்குச் சொல்லவேண்டியிருந்ததோ? ‘இல்லை என்றபடி’ என்னுதல். இப்படி இருக்கிற உன்னை நியமிக்க வேண்டுவது ஒன்று உண்டு; ‘அது யாது?’ எனின், ‘அஜாக்கிரதையாய் இராதேகொள்’ என்பது. ‘என் தான் அஜாக்கிரதை?’ என்னில், ‘உன் தமையனார் நடப்பர் அன்றோ? 1‘அவர் நடையிலே நடைகொள்வர்; அவர் நடை அழகிலே கண்வைத்துக் காவற்சோர்வு பட விடாதே கொள்வாய்,’ என்றாள் தேவி சுமித்திரை. ‘அப்படியே, இவ்வாத்துமாவையும் இங்கு வைத்தது திருமலைக்குப் போகைக்காக ஆயிற்று,’ என்றபடி.
அன்னான் அவர்தங் தனஆ தரத்தோடும் ஏந்தி
இன்னா இடர்தீர்ந் துடனே கெனஎம்பி ராட்டி
சொன்னா லதுவே துணையா மெனத்தூய நங்கை
பொன்னார் அடிமேல் பணிந்தான்; அவளும் புகன்றாள்.
‘ஆகாத தன்றா லுனக்கவ் வனம்இவ் வயோத்தி
மாகாத லிராமன் நம்மன் னவன்வையம் ஈந்தும்
போகா உயிர்த்தாயர் நம்பூங் குழற்சீதை என்றே
ஏகாய் இனிஇவ் வயின்நிற் றலும்ஏதம் என்றான்.
‘பின்னும் பகர்வாள்: மகனே யிவன்பின்செல்; தம்பி
என்னும் படியன்று; அடியா ரினில்ஏவல் செய்தி;
மன்னும் நகர்க்கே இவன்வந் திடின்வா; அதன்றேல்
முன்னம் முடிஎன் றனள்பால் முலைசோர நின்றாள்.’(கம். அயோத். 150-152)
முத்தன் 3‘இச்சரீரத்தை நினையாமலே நான்கு பக்கங்களிலும் சஞ்சரிக்கின்றான்,’ என்று கூறப்பட்டுள்ளதே?’ எனின், அவ்விடத்தில் கர்மம் காரணமான உருவத்தை நினையான் என்கிற இத்தனையேயாம். ஆக, கர்மங்காரணமான உருவம் நினைவிற்கு விஷயம் ஆகாதபடியான பாகம் பிறந்தால், எல்லாம் அவனுடைய பொருள் என்றே தோன்றி, எல்லாம் ஒக்க அனுபவிக்கப்படும் பொருளாகவே இருக்கும். இவர்க்கு அவன் குணங்களோடு விபூதியோடு வேற்றுமை அற அனுபவிக்கப்படும்
அந்யத் பூர்ணாத் அபரம் கும்பாத் அந்யத் பாதா வநேஜநாத்
அந்யத் குஸல ஸம்ப்ரஸ்நாத் நசேச்சதி ஜநார்தந:– பாரதம், உத்தியோக பர். 87 : 13.–ஜனார்த்தனன் ஒன்றையும் விரும்புவது இல்லை,’ என்கிறபடியே, எளிய முறையில் ஆராதிக்கத் தக்கவனாய் இத்தலையில் பெற்றதுகொண்டு மனம் நிறைவு பெறுமவனே அவ்விறைவன்; 4‘புனையும் கண்ணி எனதுடைய வாசகஞ்செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே,’ என்கிற இவருடைய சொல் அளவையே எல்லாமாகக் கொள்ளும் தன்மையனேயன்றோ அவ்விறைவன்,
த்வா ஸூபர்ணா ஸயுஜா ஸகாயா ஸமாநம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே
தயோ: அந்ய: பிப்பலம் ஸ்வாது அத்தி அநஸ்நந் [அந்யோ அபிசாகஸீதி.-இருக்கு வேதம்.–சிறைக்கூடத்திலே சிறையனும் கிடந்தான்; அரசகுமாரனும் இருந்தான்; சிறையன் கர்மமடியாகப் பிரவேசிக்கையாலே துக்கத்திற்கு ஏதுவாயிற்று; அரசகுமாரன் இச்சையாலே பிரவேசிக்கையாலே போகரூபமாயிருந்தது. 1‘ஆத்துமாவும் இறைவனும் ஒரு சரீரத்தைப் பற்றித் தங்கியிருக்கின்றார்கள்; அவர்களுள் ஆத்துமாவானது கர்ம பலத்தை அனுபவிக்கின்றது; இறைவன் கர்ம பலத்தை அனுபவியாமல் மிக அதிகமாகப் பிரகாசிக்கிறான்,’ என்பது மறை மொழி.ஈசுவரன் தான் கர்மபலத்தைப் புசியாமல் மிக அதிகமாகப் பிரகாசிக்கிறான்,’ என்கிற பிரமாண பலத்தாலே இவ்வாத்துமாவுக்கு வரக்கூடியதான இன்ப துன்பம் முதலானவைகள் தன்பக்கல் தட்டாதபடி நிற்கையன்றிக்கே, எல்லாப்பொருள்களையும் ஏவுகின்ற தன்மையால் வந்த புகரையுடையவனுமாய்-அவை அல்லனாய் – கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாய்; 4‘வேறாக ஈசுவரன் கர்ம பலன்களைப் புசியாமல் மிகவும் பிரகாசிக்கிறான்
பொரு இல் சீர்ப் பூமி என்கோ-ஒப்பில்லாத பொறுமை முதலிய குணங்களையுடைய பூமி என்பேனோ! இனி,பத்ப்யாம் பூமி: 2‘பூமி திருவடியிலே பிறந்தது’ என்கிறபடியே பூமி அடியிலே பிறந்துடையது ஒன்று ஆகையாலே ‘பொரு இல் சீர்ப்பூமி’ என்கிறார் என்னுதல்.முதற்பொருளில், ‘பொரு இல்’ என்பது, சீர்க்கு அடை; இரண்டாவது பொருளில், பூமிக்கு அடை.
இகழ்வு இல் இவ்வனைத்தும் என்கோ – ஒன்று ஒழியாமே எல்லாம் என்பானோ! யச்சாபி ஸர்வபூதாநாம் பீஜம் ததஹம் அர்ஜூந நததஸ்தி விநா யத்ஸ்யாத் மயா பூதம் சராசரம்.(ஸ்ரீ கீதை, 10 : 39.)3‘எல்லாப் பூதங்களுக்கும் காரணமான வித்து யானே; என்னை அன்றிச் சராசரங்கள் இல்லை,’ என்றான் இறைவனும். இனி, இவைதாம் சில பொருள்களாகத் தோன்றுகை யன்றிக்கே அவனுடைய செல்வமாகத் தோன்றுகையாலே, விடத்தக்கது ஒன்றுமின்றிக் கொள்ளத்தக்கனவாகவே இருத்தலின், ‘இகழ்வு இல்’ இவ்வனைத்தும்’ என்கிறார் என்னுதல்.–இகழ்வில்’ என்பதற்கு, ‘ஒன்றும் ஒழியாமல்’ என்றும், ‘இகழ்ந்து தள்ளப்படாத’ என்றும் இரு வகையான பொருள் கொள்க.
அவனுக்கேயுரிய நாமத்தையிட்டுக் கண்ணனைக் கூவவொண்ணாதோ? ‘பூமி’ என்பான் என்?’ எனின், ஸகேதி மத்வா ப்ரஸபம்யதுக்தம் ஹே க்ருஷ்ண
ஹே யாதவ ஹே ஸகேதி. அருச்சுனன், ‘ஏ கிருஷ்ண’ என்றத்தோடு தாம் ‘பொரு இல் சீர்ப் பூமி’ என்றத்தோடு ஒரு வேற்றுமையற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு.
வேதாந்த ஸ்ரவணேந ஹி வ்யுத்பத்தி: பூர்யதே.‘வேதாந்தத்தைக் கேட்பதனால்தான் ஞானம் நிறைவு பெறுகின்றது,’ என்னா நின்றதன்றோ? இதனால், எல்லாப் பொருள்களும் பிரகாரமாக, தான் பிரகாரியாயிருக்கும்படியைச் சொல்லுகிறது.
யத் யத் விபூதிமத் ஸத்வம் ஸ்ரீமத் ஊர்ஜிதமேவ வா தத் தத் ஏவ அவகச்ச த்வம் மம தேஜோம்ஸ ஸம்பவ–ஸ்ரீ கீதை, 10 : 41.–இவ்விபூதியிலும் 3‘விபூதியோடு கூடினவும் செல்வத்தையுடையனவும் நல்ல காரியங்களைச் செய்ய முயற்சி செய்வனவுமான பொருள்கள் எவை எவை உளவோ, அவையெல்லாம் என்னுடைய தேஜஸ்ஸின் ஒரு கூற்றிலிருந்து உண்டானவை என்று நீ அறிவாயாக,’ என்கிறபடியே, எல்லாம் தனக்கு விபூதியாய் இருந்தும், சிறப்புடைய சில பொருள்களை எடுத்து ‘என்னுடைய விபூதி’ என்றானன்றோ இறைவன்? அப்படியே இவரும் பேரொளியையுடைய மாணிக்கம் முதலான பொருள்கள் அவனுக்கு விபூதியாயிருக்கிறபடியை அனுபவிக்கிறார்.சாதி மாணிக்கம் என்கோ-இத்யாதியால்
ஆதி அம் சோதி என்கோ —கார்யாணாம் காரணம் பூர்வம் வசஸாம் வாச்யம் உத்தமம் யோகாநாம் பரமாம் ஸித்திம் பரமம் தே பதம் விது:–ஜிதந்தா.–1‘பரமபதத்தைக் காரியங்களுக்கெல்லாம் முற்பட்ட காரணமாக அறிகின்றார்கள்’ என்கிறபடியே, இவ்வருகுண்டான காரியங்களுக்கெல்லாம் தான் காரணமாய், இவற்றினுடைய தோற்றத்திற்கு முன்னே உண்டாய்த் தான் ஒரே தன்மையாய்ச் ( பாரதம், ஆரண்யபர்வம்.)2சூரியன் சந்திரன் அக்நி இவர்களைக்காட்டிலும் கோடி மடங்கு அதிகமாய் விளங்குகின்ற பரமபதம்’ என்கிறபடியே, எல்லை இல்லாத பேரொளி உருவமாய் விளங்குகின்ற பரமபதத்தை விபூதியாகவுடையவன் என்பேனோ! ‘ஆயின், பரமபதம் காரணமானபடி என்?’ எனின், (காரிய நியத பூர்வ விருத்தி காரணம் – காரியத்திற்கு இன்றியமையாததாய் முன் கணத்திலே இருக்கக் கூடியதாயிருப்பது காரணம்,’ என்று காரணத்திற்கு இலக்கணம் கூறப்படும்.)3காரியத்துக்கு நியமமாக முன் கணத்தில் இருப்பது ஒன்றற்கன்றே காரணமாம் தன்மை உள்ளது? அன்றி, ஆதி என்கிறது, அஸ்த்ர பூஷண அத்தியாயத்தின்படியே சொல்லிற்றாகவுமாம். என்றது, 4ஸ்ரீ வத்சரூபத்தாலே பிரகிருதி அமிசத்தைத் தரிக்கும் என்றும், ஸ்ரீ கௌஸ்துபத்தாலே உயிர்களின் கூட்டத்தைத் தரிக்கும் என்றும் சொல்லா நின்றதே
‘புருடன்மணி வரமாகப் பொன்றா மூலப் பிரகிருதி மறுவாக மான்தண் டாகத்
தெருள்மருள்வாள் உறையாக ஆங்கா ரங்கள் சார்ங்கஞ்சங் காகமனம் திகிரி யாக
இருடிகங்கள் ஈரைந்தும் சரங்க ளாக இருபூத மாலைவன மாலை யாகக்
கருடனுரு வாமறையின் பொருளாங் கண்ணன் கரிகிரிமேல் நின்றனைத்தும் காக்கின் றானே.’
மொய் கொள் சோதியோடு ஆயினான் –அத்யார்க்காநல தீப்தம் தத்ஸ்தாநம் விஷ்ணோ: மஹாத்மந: ஸ்வயைவ ப்ரபயா ராஜந் துஷ்ப்ரேக்ஷம் தேவதாநவை:(பாரதம் ஆரண்ய பர்வம்.)3’சூரியன் சந்திரன் அக்நி இவர்களைக்காட்டிலும் கோடி மடங்கு அதிகமாய் விளங்குகிற, மஹாத்துமாவான விஷ்ணுவினுடைய அந்த ஸ்ரீ வைகுண்டம்’ என்கிறபடியே, செறிந்துள்ள ஒளியை உடைத்தான நித்திய விபூதியையுடையனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது. சுடர் ஒளியாய் நின்ற–சூரியன் சந்திரன் அக்கினி இவர்களைக் காட்டிலும் கோடி மடங்கு அதிகமாய் விளங்குகிற, மஹாத்துமாவான நாராயணனுடைய வைகுண்டமானது தன்னுடைய ஒளியினாலே தேவர்கள் முதலியோர்களாலும் காண்டற்கு அரியதாகி விளங்குகிறது,’ என்கிறபடியே, ஆயிரம் கோடி அக்கினி ஆதித்தியர்களுடைய ஒளியை ஓடவைத்து ஒரு தேசமாக வகுத்தாற் போலே இருக்கையாலே இவர்களுக்குக் கண்கொண்டு பார்க்க வொண்ணாது;
சமய நீதி நூல் என்கோ – வைதிக சமயத்துக்கு நிர்வாஹகமான இதிகாச புராணங்கள் என்பேனோ! இவை வேதங்களின் பொருள்களை விரித்துக் கூறுவனவாதலின், ‘நீதி நூல்’ என்கிறார். நீதி – நிர்வாஹகம்.இதிஹாஸ புராணாப்யாம் வேதம் ஸமுப ப்ருஹ்மயேத் பிபேதி அல்ப ஸ்ருதாத் வேதோ மாம் அயம் ப்ரதரிஷ்யதி.(பார்ஹஸ்பத்ய ஸ்மிருதி.)4‘வேதமானது இதிகாசங்களாலும் புராணங்களாலும் விவரிக்கப்பட வேண்டியது’ என்பது ஸ்மிருதி வாக்கியம்.
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் ஸதாம் ஏதத் அகர்ஹிதம்(ஸ்ரீராமா. யுத். 18 : 3. இது, ஸ்ரீராமபிரான் கூற்று.) சினேகிதன் என்று நெருங்கி வந்த இவனை, என் உயிருக்குக் கேடு வருவதாக இருப்பினும் விடமாட்டேன்; அவனிடம் தோஷம் இருப்பினும் இருக்கட்டும்; இந்த விபீடணனை ஏற்றுக்கோடலைப் பெரியவர்கள் நிந்திக்கமாட்டார்கள்,’ என்னும் தானும்–இறைவன், ரக்ஷிக்கைக்கு (ஸ்ரீராமா. யுத். 18 : 33.)1‘அது எனக்கு விரதம்,’ என்று அறுதியிட்டு இருக்குமாறு போன்று, இவர்கள் பிறரை நலிவதற்கு அறுதியிட்டு வீரக்கழலைக் கட்டியிருப்பவர்கள்’ என்பார், ‘கழல் கால் அசுரர்’ என்கிறார்.
மற்றினி யுரைப்ப தென்னை? மாருதி வடித்துச் சொன்ன
பெற்றியே பெற்றி யன்ன தன்றெனில் பிறிதொன் றானும்
வெற்றியே பெறுக தோற்க வீகவீ யாது வாழ்க
பற்றுத லன்றி உண்டோ அடைக்கலம் பகர்கின் றானை?’– என்றார் கம்ப நாட்டாழ்வார்
‘நான் இருக்கிறேன் நீ துக்கப்படாதே’ என்று அருச்சுனனை நோக்கிக் கூறியவன், உடனே இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந நாச ஸூஸ் ரூஷவே வாச்யம் நசமாம் யோப்யஸூயதி.-ஸ்ரீ கீதை, 18 : 67. 4‘உனக்கு ஞானமுண்டாகும் நிமித்தமாகச் சொன்ன இந்தக் கீதை, தவஞ்செய்யாதவனுக்கும் பத்தி இல்லாதவனுக்கும் சிரத்தை இல்லாதவனுக்கும் என்னிடத்தில் அசூயையுடையவனுக்கும் உபதேசிக்கத் தக்கதன்று,’ என்று கூறினானாதலின், ‘அடியார்களிடத்தில் வியாமோகத்தையுடையவன் என்பேனோ!’ என்கிறார். 1‘‘இதம் து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாமி அநஸூயவே ஜ்ஞாநம் விஜ்ஞாந ஸஹிதம் யத் ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே ஸூபாத். ( இது, ஸ்ரீ கீதை. 9 : 1.) எதனை அறிந்து அநுஷ்டித்துப் பாவங்களினின்றும் விடுபடுவாயோ, அப்படிப்பட்ட அதிரகசியமான பத்தி ரூபமான உபாசனை என்கிற பெயரையுடைய ஞானத்தை அசூயை இல்லாத உன்பொருட்டு நன்றாகச் சொல்லுகிறேன் -நம்முடைய சொரூப ரூப குண விபூதிகளைச் சொன்னவிடத்தில் சிவீல் என்று இருந்திலை; உன்தனை அதிகாரிகளைக் கண்டிலோம்; இன்னம் சொல்லிச் சொல்லாதவைகளையும் சொல்லும்படி கிட்ட வாராய்,’ என்றானே யன்றோ ஸ்ரீ கீதையில்– 2‘இதம் தே நாத பஸ்காய’ என்ற சுலோகத்தையும் முன்னரன்றோ சொல்லல் வேண்டும்? அங்ஙனஞ்செய்யாது, ‘சர்வ தர்மாந்’ என்ற சுலோகத்தை முந்துறச் சொல்லிப் பின்னர், ‘இதந் தே நாத பஸ்காய’ என்றான்; இதற்கு அடி என்?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, ‘திரௌபதி குழலை விரித்துக் கிடக்கையாலே அது முடிக்கைக்காக, செய்வது அறியாமையாலே மூலையில் கிடந்தாரை முற்றத்தே இட்டான்; பின்னை அர்த்தத்தின் சீர்மையை அநுசந்தித்து, ‘ஆர் அதிகாரிகளாகச் சொன்னோம்? கைப்பட்ட மாணிக்கத்தைக் கடலிலே போகட்டும்,’ என்று 3பதண்பதண் என்றான்காணும்,’ என்று அருளிச்செய்தார்.
மாயன் என்கோ – அடியார்கட்குத் தூது போதல் சாரதியாதல் முதலியவற்றைச் செய்யும் ஆச்சரியத்தையுடையவன் என்பேனோ!க்ருதார்தா புஞ்ஜதே தூதா: பூஜாம் க்ருஹ்ணந்தி சைவஹி க்ருதார்த்தம் மாம் ஸஹாமாத்ய: த்வம் அர்ச்சிஷ்யஸி பாரத.(பாரதம், உத்தியோகபர்வம்.) 4‘தூதர்கள் தாம் வந்த காரியம் முடிந்த பின்னர்த் தூது வந்த வீட்டில் உண்பர்கள்; ஆதலால், யானும் வந்த காரியம் முடிந்த பின் உன் வீட்டில் உண்கிறேன்,’ என்று கூறியதனால் தூது சென்றமை உணரலாகும்.
என்னி னின்னிலொரு பேத மில்லையிது என்னி னின்னிலது என்னினும்
மின்னின் முன்னிலகு விறல்நெ டும்படைவி தூரன் வந்தெதிர் விளம்பினான்;
உன்னி வின்னமுள தொன்று: பஞ்சவ ருரைக்க வந்தவொரு தூதன்யான்;
நின்னி லின்னடிசி லுண்டு நின்னுடன்வெ றுக்க எண்ணுவது நீதியோ?’–பாரதம், உத்தியோகபர்வம்.–வில்லி பாரதச் செய்யுள்
வானவர் போகம் என்கோ வானவர் முற்றும் என்கோ–நித்திசூரிகளுக்கு ‘எல்லாம் கண்ணன்’ என்கிறபடியே, எல்லாம் தானேயாய் இருப்பான்; அவர்களும் வாஸூ தேவ: ஸர்வம்.-‘எல்லாம் வாசுதேவனே’ என்கிறபடியே, ‘எல்லாம் வாசுதேவனே’ என்று நினைத்திருப்பார்கள்;-அவர்களுக்கு 3உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாமானவன் என்பேனோ! -தாரக போஷக போக்கியங்கள் எல்லாம் தானேயாக இருப்பான்,’அவர்களுக்குச் சொல்லப்படாத எல்லாப் பொருள்களும் என்பேனோ என்றபடி
விபூதி விஷயமாகப் பரக்கச் சொல்லிக்கொண்டு போந்து ஹந்த தே கதயிஷ்யாமி விபூதி: ஆத்மந: ஸூபா: ப்ராதாந்யத: குரு ஸ்ரேஷ்ட நாஸ்தி அந்த: விஸ்தரஸ்யமே.–ஸ்ரீ கீதை, 10 : 19.2‘அருச்சுனா! முக்கியமானவற்றைச் சொல்லுகிறேன்; ஏனென்றால், என் விபூதியின் விரிவிற்கு முடிவு இல்லை,’ என்றானன்றே? அப்படியே, இவரும் மேலே சிலவற்றைச் சொல்லி, ‘இவனைச் சொல்லும் வகையினை அறிகின்றிலேன்,’ என்கிறார்.
முத்தரும் பகவானுடைய அனுபவத்திலே–அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம்; அஹமந்நாத: அஹமந்நாத: அஹமந்நாத:(தைத்திரீய உபநி. பிருகு. 10.) 4‘நான் பரமாத்துமாவுக்கு இனியவனாய் இருக்கிறேன்; நான் பரமாத்துமாவாகிற இனிய பொருளை அனுபவிக்கிறவன்,’ என்று களியாநிற்பர்கள் அன்றோ? அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம்’ என்றும் பாடப் புகுகிற எனக்கு, பகவானுக்கு வேறுபட்டிருக்கிற பொருள்களைப்பற்றிக் கவி பாடுகை போருமோ?
ஆவித்யத் அஜிநம் ஹ்ருஷ்ட: பவிஷ்யத் பூத ஜல்பக: ஸர்வ ஸம்ஸய நிர்முக்த: நாரத: ஸர்வதர்மவித்.(பாரதம், ராஜசூ. 21.)–இறந்தகாலம் எதிர்காலம் இவற்றில் நடந்த நடக்கும் காரியங்களைச் சொல்லுகிறவராயும், ஒன்றிலும் ஐயம் இல்லாதவராயும், எல்லாத் தர்மங்களையும் அறிந்தவராயுமுள்ள நாரதர்’ என்று சொல்லப்படுகிற நாரதர் முதலிய முனிவர்களும் பகவானுடைய சந்நிதியில் வந்தவாறே ஆடுவது பாடுவது ஆகா நிற்பர்கள் அன்றோ?
விரக்தரில் முதல்வனான திருவடியும் பிராட்டியைக் கண்டுவந்த மகிழ்ச்சியினாலே முதலிகளைப் பார்த்து,இஷ்டம் மதுவநம் ஹிஏதத் பக்ஷயிஷ்யத வாநரா:
அஹம் ஆவாரயிஷ்யாமி யுஷ்மாகம் பரிபந்திந: 2‘நீங்கள் மதுவனத்தை அழித்து உண்ணுங்கோள்! நான் உங்களுடைய விரோதிகளைத் தடுக்கிறேன்!’ (விரோதிகளாவார், காத்திருந்த ததிமுகன் முதலியோர்) என்றானன்றோ? மஹாராஜர்க்கு, ‘உம்முடைய காவற்காடு அழிந்தது’ என்று அறிவிக்க, ‘நம்மோடு கூறிப்போந்த காலமுந்தப்பி, நாந்தாம் ‘தீக்ஷ்ண தண்டர்’ என்று அறிந்திருந்தும், இவர்கள் காவற்காட்டை அழிக்கும் போது,- நைஷாம் அக்ருத க்ருத்யாநாம் ஈத்ருஸ: ஸ்யாத் உபக்ரம:(ஸ்ரீராமா. சுந். 63 : 15. )3‘செய்யவேண்டிய காரியத்தைச் செய்யாதவர்கட்கு இப்படிப்பட்ட ஆரம்பம் உண்டாகமாட்டாது. ஆதலால், எல்லாப்படியாலும் பிராட்டியைத் திருவடி தொழுதார்களாக வேண்டும்,’ என்று அப்போது உண்டான மகிழ்ச்சி, இருந்த இடத்தில் இருக்கவொட்டாமல், வாலானது ருஸ்யமூக பர்வதத்தின் கொடுமுடியிலே சென்று அறைந்ததாயிற்று. 1நடுவே ‘காவற்காடு’ என்று ஒன்று உண்டாயிற்று, ராஜபுத்திரர்களுடைய ஜீவன அத்ருஷ்டமாயிற்று; அன்றாகில், முதலிகளுடைய மகிழ்ச்சி இராஜபுத்திரர்கள் முதுகோடே போமாயிற்று.
ஏம்பலோ டெழுந்துநின் றிரவி கான்முளை
பாம்பணை அமலனை வணங்கிப் பைந்தொடி
மேம்படு கற்பின ளென்னும் மெய்ம்மையைத்
தாம்புகன் றிட்டதிச் சலமென் றோதினான்.
‘பண்டரு கிளவியாள் தன்னைப் பாங்குறக்
கண்டன ரன்னதோர் களிப்பி னாலவர்
வண்டுறை மதுவன மழித்து மாந்தியது
அண்டர்நா யக!இனி அவலம் தீர்கெனா.’ என்ற செய்யுள்களை ஒப்பு நோக்கலாகும்.
மேலும், ‘ஏம்பலோடெழுந்து’ என்ற பகுதியில், அப்போதுண்டான மகிழ்ச்சி இருந்த இடத்தில் இருக்க வொட்டாமல் வாலானது ருஸ்யமுக பர்வதத்தின் கொடுமுடியிலே சென்று அறைந்ததாயிற்று,’ என்ற வியாக்கியானத்தின் கருத்துத் தொனித்தல் காணலாகும்.
என்றலும் கரங்கள் கூப்பி எழுந்தனர் இறைஞ்சித் தாழா
நின்றனர் உவகை பொங்க விம்மலால் நிமிர்ந்த நெஞ்சர்.’- என்றும்,
‘போயினர் களிப்பி னோடும் புங்கவன் சிலையி னின்றும்
ஏயின பகழி என்ன எழுந்துவிண் படர்ந்து தாவி’- என்றும் வரும் கவிச்சக்கரவர்த்தியின் வாக்குகள்
பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற —கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹ ஆகர்ஷதே ஜலே தயோ: த்வந்த்வஸமம் யுத்தம் திவ்யம் வர்ஷஸஹஸ்ரகம்:–விஷ்ணு தர்மம்.–5தன் நிலம் அல்லாமையாலே வேறுபட்ட சாதியது ஒன்றன் கையிலே அகப்பட்டது; வெளி நிலமாகில் யானையே வெல்லுமன்றோ? யானைக்கு யானை யன்று; யானைக்குச்சிங்கம் அன்று; அற்பமாய் இருப்பதொரு நீர்ப்புழுவின் கையிலே அகப்பட்டது என்பார், ‘முதலைச் சிறைப்பட்டு’ என்கிறார்.
யானையின் காலில் ஸ்தலஸ்தம் தாரயாமாஸ க்ராஹம் சக்ரேண மாதவ: (விஷ்ணு தர்மம்.) 2விலங்கை அன்றோ வெட்டிவிட்டது? ‘கொடிய வாய் விலங்கே’ அன்றோ? ஆக முதலையின் வாயிலே அகப்பட்ட யானையின் காலைத் திருக்கையாலே தொட்டு, 3திருமால் சக்கரத்தால் முதலையைப் பிளந்தார்’ என்கிறபடியே, அதனுடைய 4கிராஹத்தைப் போக்கி நின்ற நிலையைத் தெரிவித்தபடி.-ஸ்ரீ கஜேந்திராழ்வானுக்கு உதவின உதவி, நித்தியசூரிகட்கு உதவிய உதவி என்னலாம்படியன்றோ, தங்களுக்கு இடர் உண்டு என்று அறியாத சமுசாரிகளுடைய விரோதியைப் போக்கி உதவி செய்வது? அங்ஙனம் உதவி செய்யும் அந்நீர்மையை அநுசந்தித்தால், விகாரமில்லாத வராயிருப்பவர்கள் மஹா பாவம் அனுபவிக்கப் பிறக்கிறவர்கள்,’ என்கிறார்.
தண் கடல் வட்டத்துள்ளார் – ஒரே தேசத்தில் வசிக்கும் காரணத்தால் வந்த சம்பந்தமே காரணமாக ஆயிற்று நலிவது. சர்வேசுவரன் ரக்ஷிக்கைக்கு ஏது யாது ஒன்று? அதுவே ஆயிற்று இவர்கள் நலிவதற்குக் காரணமும்.தே வயம் பவதா ரக்ஷ்யா பவத்விஷய வாஸிந: நகரஸ்தோ வநஸ்தோவா த்வம்நோ ராஜா ஜநேஸ்வர:(ஸ்ரீராமா. ஆரண்ய. 1 : 20.) 2‘தேவரீருடைய தேசத்திலே வசிக்கின்ற நாங்கள் உம்மாலே ரக்ஷிக்கத் தகுந்தவர்கள்,’ என்பது ஸ்ரீராமனைப் பார்த்த மகரிஷிகள் கூற்று. ஆக, ‘இவர்கள், தங்கள் கண் வட்டத்திலே உண்டு உடுத்துத் திரிகிற இதுவே காரணமாக நலிவர்கள்,’ என்பதாயிற்று
இறைவன், ரக்ஷிக்கைக்கு–ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே அபயம் ஸர்வபூதேப்ய: ததாமி ஏதத் விரதம் மம.( ஸ்ரீராமா. யுத். 18 : 33.)-1‘அது எனக்கு விரதம்,’ என்று அறுதியிட்டு இருக்குமாறு போன்று, –இச்சக்கரவர்த்தி திருமகன் ‘என்னை அடைந்தவர்களைப் பாதுகாத்தல் எனக்குவிரதம்’ என்கிறானோ?
தத: ஸா ஹ்ரீமதீ பாலா பர்த்து: விஜயஹர்ஷிதா
அவோசத் யதி தத்தத்யம் பவேயம் ஸரணம்ஹி(ஸ்ரீராமா. சுந். 58 : 44.)-திரிசடை சொன்னவைகள் உண்மையாக இருக்குமேயாயின், அபயம் தந்து உங்களைப் பாதுகாக்கிறேன்,’ என்னுமவளும் கூட இருந்து எண்ணுவார்கள் ஆயிற்று.
கதாந் பஸூநாம் ஸஹ்ஜன்ம பந்துதாம் க்ருஹாஸ்ரயம் ப்ரேம வநேஷூபிப்ரத: ததர்ஸ கோபாந் உபதேநு பாண்டவ: க்ருதாநுகாராந்இவ கோபி: ஆர்ஜவே.–பசுநிரைதன்னைத் தொலைவு தவிர்த்த’ என்பான் என்?’ என்னில், 2பாதுகாக்கப்பட்டவர்களில் பிரதானரைச் சொல்ல வேணுமே? செய்த உபகாரத்தை அறிந்திருப்பாரைச் சொல்ல வேணுமே! ஆதலால், சொல்லுகிறது. ‘பசுக்களால் பரிகாசம் பண்ணப்பட்டவர்கள் போல இருக்கிற ஆயர்கள்’ என்கிறபடியே, ஆயர்களுடைய இளிம்பு கண்டால் சிரிப்பன பசுக்களேயன்றோ?
அவாகீ அநாதர:–சாந்தோக்ய உபநிடதம், 3 : 4, மௌனமாக இருப்பவன், ஒன்றிலும் ஆசை இல்லாதவன்,’ என்கிறபடியே, இருக்கக்கூடிய பரம்பொருள்,
யஸ்த்வயா ஸஹ ஸ ஸவர்க்க: நிரய: யஸ்த்வயாவிநா இதி ஜாநந்பராம் ப்ரீதிம் கச்ச ராம மயாஸஹ.–ஸ்ரீராமா. அயோத். 30 : 18.-ஸ்ரீராமா! உம்மோடு கூடியிருக்கும் இருப்பு யாது ஒன்று உண்டு? அது சுவர்க்கம்; உம்மைப் பிரிந்திருக்கும் இருப்பு யாது ஒன்று உண்டு? அது நரகம்,’ என்றார்
ஸ்ரேயாம்ஸி பஹூவிக்நாநி பவந்தி மஹதாமபி
அஸ்ரேயஸி ப்ரவ்ருத்தேது குத்ரயாந்தி விகாதகா:
தம் த்ருஷ்ட்வா ஸத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸூகாவஹம்
பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே.
தந் திருஷ்ட்வா – பிரணயதாரையில் ரசிகத்வமேயாயிற்று முன்பு கண்டு போந்தது, ‘அந்தப் போகத்துக்கு விரோதிகளானவற்றைப் போக்க வல்லர்’ என்று கண்டது இன்றாயிற்று. வேட்டைக்குப் போனால், ‘இன்ன துஷ்டமிருகத்தைக் கொன்றார்; இன்ன ராக்ஷசனைக் கொன்றார்,’ என்று கூடப்போனவர்கள் சொல்லக் கேட்குமத்தனை முன்பு; அவ்வளவன்றிக்கே, கண்ணாலே கண்டது இன்றாயிற்று. ஸத்ருஹந்தாரம் – தம் திருமேனியில் ஒரு வாட்டம் வாராமே எதிரிகளே நோவுபடும்படியாக. அம்போடே வெட்டோடே போகாமே எதிரிகளை முதல் அற மாய்த்து வந்தவரை. மஹர்ஷீணாம் சுகாவஹம் – பார்யை பக்கல் முகம் பெறுகைக்குப் பிரஜையை எடுத்துக்கொண்டு போவாரைப்போலே, இருடிகட்கு விரோதிகளான ராக்ஷசரைக் கொன்று பிராட்டியை அணைக்கைக்கு அது பச்சையாக வந்தார். பபூவ – ராக்ஷசருடைய குரூரத் தன்மையையும் பெருமாள் சௌகுமார்யத்தையும் அநுசந்தித்து, ‘என் புகுகிறதோ!’ என்று ‘சத்தையில்லை’ என்னும்படியிருந்தவள், வெற்றியோடே கண்டு உளளானாள், ஹ்ருஷ்டா – தர்மியுண்டானால் தர்மங்களும் உண்டாமிறே. வைதேஹீ – ‘வீரவாசியறியும் குடியிலே பிறந்தவள்’ என்னுதல்; அன்றிக்கே, ‘ஒரு வில்லை முரிக்க என்னைக் கொடுத்த எங்கள் ஐயர், தனியே நின்று பதினாலாயிரம்
ராக்ஷசரைக் கொன்ற வீரவாசியைக் கண்டாராகில், என்படுவரோ!’ என்று அவரை நினைத்தாளாகவுமாம். பர்த்தாரம் – ‘ஐயர் நீர் வார்த்துக் கொடுத்தவர்’ என்று விரும்பிப் போந்தாள் முன்பு: இப்போதாயிற்று ‘ஆண்பிள்ளை’ என்று அணைத்தது; கிம் த்வாமந்யத வைதேஹ: பிதாமே மிதிலாதிப: ராமஜாமாதரம் ப்ராப்ய ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம்.(ஸ்ரீராமா. அயோத். 30 : 3.)‘ஆண் வடிவாக இருக்கின்ற பெண்’ என்றவளேயன்றோ முன்பு? பரிஷஸ்வஜே – யுத்தவடு உள்ள இடமெங்கும் திருமுலைத் தடத்தாலே வேது கொண்டாள். அப்படியே. நப்பின்னைப் பிராட்டி அணைக்க நின்றபடி.
சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு – சாது சனத்தை நலிந்த கஞ்சனை அழிக்கைக்காக; ‘சாதுசனம்’ என்றது, ஸ்ரீ வசுதேவரையும் தேவகியாரையும். ‘கஞ்சன் இவர்களை நலிந்தானோ?’ எனின், பத்மபத்ர விஸாலாக்ஷ: க்ருத்வாத்மாநம் சதுர்விதம் பிதரம் ரோசயாமாஸ ததா தஸரதம் ந்ரூபம்.(ஸ்ரீராமா. பாலகாண். 77 : 26.)2‘தந்தையாக அடைய வேண்டும் என்று நிச்சயித்தார்’ என்று தான் அவதரிக்க நினைத்த இவர்களையன்றோ அவன் நலிந்து நெடுநாள் சிறையிட்டு வைத்தது? பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாயச துஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்த்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே.(ஸ்ரீகீதை, 4 : 8.)3‘சாதுக்களுடைய நலத்திற்காகவும் துஷ்டர்களுடைய நாசத்திற்காகவும் தர்மத்தை நிலை நிறுத்தும்பொருட்டும் ஒவ்வொரு யுகத்திலும் அவதரிக்கிறேன்’ என்கிற பிரமாணப் பிரசித்தியைப் பற்ற ‘சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்குப் பிறந்த வேத முதல்வன்’ என்கிறார்.
அங்கு வைத்து இங்குப் பிறந்த – அங்கு இருந்தபடியே வைத்துக்கொண்டு இங்கே வந்து பிறந்த;அஜோபிஸந் அவ்ய்யாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந்
ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்மமாயயா.(ஸ்ரீகீதை, 4 : 6.)4‘என்னுடையதான தன்மையை நிலைக்களமாகக் கொண்டு என்னுடைய சங்கற்பத்தினால் அவதரிக்கிறேன்,’ என்றான் ஸ்ரீ கீதையில். ‘நித்திய விபூதியில் உள்ளார் 5அனுபவிக்கிறபடியே (அனுபவிக்கிற படியே’ என்றது சிலேடை; அனுபவிக்கிற பிரகாரமும், அனுபவிக்கிற திருமேனியும்.)லீலா விபூதியில் உள்ளாரும் அனுபவிக்கும்படியாக அவதரித்தான்,’ என்றபடி.
படி – திருமேனி; 1‘படிகண்டு அறிதியே’,(முதல் திருவந். 85.) 2‘செவ்விப் படிக்கோலம்’ என்பன அருளிச்செயல்.(இரண்டாந்திருவந். 82.) 3‘பல படிகளாலும் இவர்களை நாம் பாதுகாக்க வேணும்,’ என்று அவன் வந்து அவதரித்தால் ஒரு படியாலும்(பலபடிகளாலும்’, ‘ஒருபடியாலும்’ என்பனவும் சிலேடை) திருந்தாதபடியே அன்றோ இவர்கள் படி இருப்பது? ‘ஆயின், பல படிகளால் அவதரிக்குமோ?’ எனின்,-அஜாய மாநோ பஹீதா விஜாயதே
தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்.( யஜுர் வேதம்ஆ. பிர, 3. 8 : 17. )4‘கர்மம் காரணமான பிறப்பு இல்லாமலிருக்கிற சர்வேசுவரன் இச்சையடியாக அநேக விதங்களாக மற்றைய இனத்தினனாய் வந்து அவதரிக்கிறான்,’ என்றும்,நதஸ்ய ப்ராக்ருதா மூர்த்தி: மாம்ஸமேதோஸ்தி ஸம்பவா (பாரதம்)5‘அந்தப் பரமாத்துமாவினுடைய சரீரமானது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டாயது அன்று,’ என்றும், ‘அந்தப் பரமாத்துமாவுக்குச் சதை கொழுப்பு எலும்பு இவைகளால் உண்டான இவ்வுலக சம்பந்தமான சரீரம் இல்லை,’ என்றும், திவ்யம் ஸ்தாநம் அஜரம் சாப்ரமேயம் தூவிஜ்ஞேயம் சாகமை:கம்யம் ஆத்யம் கச்சப்ரபோ ரக்ஷச அஸ்மாந் ப்ரபந்நாந் கல்பே கல்பே ஜாயமாந: ஸ்வமூர்த்யா.(பாரதம்)7‘கல்பந்தோறும் கல்பந்தோறும் உம்முடைய திருமேனியோடு அவதரித்தவராய் அடைந்தவர்களான எங்களைக் காப்பாற்றவேண்டும்,’ என்றும், 8‘முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற, பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம்’ (பெரிய திருமொழி, 4. 9 : 8.)என்றும், 9‘பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும்புறம், போலு நீர்மை பொற்புடைத் தடத்து வண்டு விண்டு உலாம் நீல நீர்மை’ (திருச்சந்தவிருத்தம், 44.)என்றும் சொல்லுகிறபடியே பல படிகளாலே அன்றோ திருவவதரிப்பது?‘பல விக்கிரஹங்களாலே’ என்றபடி. இப்படிப் பிறவா நின்றாலும்,ப்ராதுர்பவதி லோகாநாம் பாலநார்த்தம் ஸ்வலீலயா நைஷ கர்ப்பத்வம் ஆபேதே நயோந்யாம் அவஸத் ப்ரபு:(பாரதம், மௌஸல பர்வம்) 6 10‘பிரபுவான கிருஷ்ணன் கர்ப்பவாசம் செய்யும் தன்மையை அடையவில்லை; யோனியிலும் வசிக்கவில்லை’ என்கிற படியே, கர்ப்பத்தில் சம்பந்தமில்லை.
‘இதுதான் கூடுமோ?’ என்ன ஒண்ணாது; ‘என்னை?’ எனின், இக்ஷ்வாகு வமிசத்திலே யுவநாஸ்வான் என்பான் ஒருவன் மந்திரத்தாலே சுத்தம் செய்யப்பட்ட தண்ணீரைக் குடிக்க, அவன் வயிற்றிலே கர்ப்பம் உண்டாயிற்றேயன்றோ ஒரு சத்தி விசேஷத்தாலே? அங்கு ஆணும் பெண்ணுமாய்க் கலந்து பிறந்தமை இல்லையே? அப்படியே, இங்கும் சர்வ சத்தி யோகத்தாலே இவ்வர்த்தம் பொருத்தமாகத் தட்டு இல்லையேயன்றோ? இதற்குப் பிரமாணம் 1‘அஜாய மாநோ பஹீதா விஜாயதே தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்.:( யஜுர் வேதம்ஆ. பிர, 3. 8 : 17. )’ என்ற சுருதியேயன்றோ?
மனிசரும் மற்றும் முற்றுமாய் —இயம் வையூஹிவை ஸ்திதி: அதகில இச்சாவிஹ்ரு தயே விபூதீநாம்மத்யே ஸூர நரதிரஸ்சாம் அவதரந்.–(வரதராஜஸ்தவம், 18.)2‘தேவர்கள் மனிதர்கள் விலங்குகள் தாவரங்கள் இவற்றின் நடுவே அவதரித்தவனாய்’ என்கிறபடியே, மனிதர் தேவர்கள் சொல்லப்படாத விலங்கு தாவரங்கள் எல்லாமாய். மாயப் பிறவி பிறந்த – ஆச்சரியமான பல அவதாரங்களை எடுக்குமவன். கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாய் இருந்து கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களும் பிறக்கமாட்டாத பிறவிகளிலே பிறக்கின்றானாதலின், ‘மாயப்பிறவி’ என்கிறது. ‘ஒரு காரணமும் இல்லாமல் காரணமுடையார்க்கும் அவ்வருகே பிறக்க வல்லவன்’ என்பதாம்.
தாஸ்யம் ஐஸ்வர்ய வாதேந ஜ்ஞாதீநாஞ்ச கரோம்யஹம் அர்த்தபோக்தாச போகாநாம் வாக்துருக்தாநிச க்ஷமே.(ஸ்ரீ கீதை, 9 : 1. )நம்முடைய சொரூப ரூப குண விபூதிகளைச் சொன்னவிடத்தில் சிவீல் என்று இருந்திலை; உன்தனை அதிகாரிகளைக் கண்டிலோம்; இன்னம் சொல்லிச் சொல்லாதவைகளையும் சொல்லும்படி கிட்ட வாராய்,’ என்றானேயன்றோ ஸ்ரீ கீதையில்?
முழுது உணர் நீர்மையினாரே –ஏக விஜ்ஞாநேந ஸர்வ விஜ்ஞாநம். ‘ஒன்றை (பரம்பொருளை) அறிந்ததனாலே எல்லாம் அறிந்தவர் ஆகிறார்கள்,’ என்கிறபடியே, அவர்கள் எல்லாவற்றையும் அறிந்தவர்கள் ஆகிறார்கள்; அவர்கள் முற்றறிவினர்கள் ஆகிறார்கள்: ஞானபலமான இது உண்டான போதே ஞான விசேடத்தில் இல்லாதது இல்லையன்றே? ‘ஆயின், மனத்தின்கண் உள்ள ஞானத்தை அறிந்தவாறு என்?’ எனின், அவர்கள் சரீரத்தில் பிறந்த விகாரத்தைக்கொண்டே அவர்களுடைய ஞானமிகுதியை அறியலாம்.
பாண்டவர்களைப் பாதுகாத்தற்குக் காரணம், ‘நாங்கள் பந்துக்களையொழிய ஜீவிப்பது இல்லை’ என்றது. யேஷாம் அர்த்தே காங்க்ஷிதம்நோ ராஜ்யம் போகா: ஸூகாநிச த இமே அவஸ்திதா யுத்தே ப்ராணாந் த்யக்த்வா தநாநிச.(ஸ்ரீ கீதை, 1 : 33.)2’நம்மால் இராச்சியமும் போகங்களும் சுகங்களும் யாருக்காக விரும்பப்படுகின்றனவோ’ என்றபடியே, 3‘நாட்டார் பொருள் தேடுவதும் இராச்சியங்கள் சம்பாதிக்கிறதும் எல்லாம் பந்துக்களும் தாங்களும் கூட ஜீவிக்கைக்கு அன்றோ? ஆன பின்னர், நாங்கள் பந்துக்களைக் கொன்று ஜீவிக்கப் பார்க்கிலோம் என்னும் நீர்மையாலேயாயிற்று; அவர்கள் இங்ஙன் அன்றிக்கே, ‘இவர்களுக்கு 4ஒரு கோல் குத்து நிலமும் கொடுப்பது இல்லை; அவர்கள் ஜீவிக்கில் நாங்கள் ஜீவியோம்,’ என்ன, ‘இவர்கள் அசுரத்தன்மை வாய்ந்தவர்களாய் இருந்தார்கள்; இவர்களை அழியச் செய்யாவிடின் விபூதியும் அழியும்,’ என்று பார்த்து அதற்குத் தகுதியாக ஒருப்பட்டான்,’ என்றபடி.
ஐவர்க்கு அருள் செய்து – தான் அல்லது தஞ்சம் இல்லாத பாண்டவர்களுக்கு. க்ருஷ்ணாஸ்ரயா. க்ருஷ்ணபலா: க்ருஷ்ணநாதாஸ்ச பாண்டவா:
க்ருஷ்ண: பராயணம் தேஷாம் ஜயோதிஷாமிவ சந்த்ரமா:(பாரதம், துரோண பர். 183. 24. )5‘பாண்டவர்கள் கண்ணனையே சரணமாக அடைந்தவர்கள்; கண்ணனையே துணையாக உடையவர்கள்; கண்ணனையே நாதனாக உடையவர்கள்; பூர்ணசந்திரன் நக்ஷத்திரங்களுக்குத் தலைவனாய் இருத்தலைப் போன்று, அந்தப் பாண்டவர்களுக்குக் கண்ணன் சிறந்த உபாயமாய் இருக்கிறான்,’ என்பது பாரதம். யஸ்ய மந்த்ரீச கோப்தாச ஸூஹ்ருச்சைவ ஜநார்த்தந:
ஹரி: த்ரைலோக்யநாத: ஸகிந்து தஸ்ய ந நிர்ஜிதம்.(ராஜ சூய யாகத்தில் சஞ்சயன் வார்த்தை.)6‘மூன்று உலகங்கட்கும் நாதனும் ஜனாத்தனனுமான கிருஷ்ணன், தர்மபுத்திரனுக்கு மந்திரியாயும் பாதுகாப்பவனாயும் சினேகிதனாயும் இருப்பதனால், அந்தத் தருமனுக்கு வெற்றி கொள்ள முடியாதது யாது உளது?’ என்கிறபடியே, அவர்கள் இழந்த பரிகரம் எல்லாம் தானேயாய் நின்றானாதலின், ‘நின்று’ என்கிறது
நினைந்து ஆடி – அவன் அடியார்கட்குப் பரதந்திரப்பட்டு இருக்குங்குணத்தை அநுசந்தித்து, அவ்வநுசந்தானம் இருந்தவிடத்தே இருக்கவொட்டாமையால் ஆடி. நீர் மல்கு கண்ணினராய் –ஆஹ்லாத ஸீத நேத்ராம்பு: புளகீக்ருத காத்ரவாந் ஸதா பர குணாவிஷ்ட: த்ரஷ்டவ்ய: ஸர்வதேஹிபி:(விஷ்ணு தத்துவம்.)2‘பகவானுடைய அனுபவத்தால் உண்டான சந்தோஷத்தாலே குளிர்ந்த கண்ணீரையுடையனாய், மயிர்க்கூச்சோடு கூடின சரீரத்தையுடையனாய், எப்பொழுதும் பரமாத்துமாவின் குணங்களால் ஆவேசமடைந்தவனாய் இவ்விதமாய் எல்லா மக்களாலும் பார்க்கத் தக்கவனாய் இருப்பான் ஞானியானவன்,’ என்கிறபடியே, கண்ணநீரை இட்டு நிரூபிக்க வேண்டும்படியான கண்ணையுடையராய்.
வைஷ்ணவர்கள் அங்கீகாரம் பெறுமதிலும் வைஷ்ணவர்கள் அல்லாதார் ‘இவன் நமக்கு உடல் அல்லன்’ என்று கைவிடுகைதான் உத்தேஸ்யமாதலின், ‘பிறர் கூற’ என்கிறார்.-இராவணன் —அந்யஸ்து ஏவம்விதம் ப்ரூயாத் வாக்யம் ஏதத் நிஸாசர அஸ்மிந் முஹூர்த்தே நபவேத் த்வாம்து திக் குலபாம் ஸநம்.-ஸ்ரீராமா. யுத். 16 : 15.3‘இராக்கதர் குலத்தில் தள்ளுண்ட உன்னை’ என்றதனை உத்தேஸ்யமாக நினைத்திருந்தான் அன்றோ ஸ்ரீ விபீஷணாழ்வான்?
அவன்தன்னோடு ஒன்றாக அமரத் துணிய வல்லார்கள் ஒழிய – இறுதிக்காலத்தில் வந்தவாறே, அவனோடே இவ்வாத்துமவஸ்து சமானம் என்று புத்தி பண்ண வல்ல தாழ்ந்தவர்களை ஒழிய. ‘ஒன்றாக’ என்பதற்குச் ‘சமானமாக’ என்பது பொருள். ‘‘ஒன்றாக’ என்பது, சமானம் என்னும் பொருளைக் காட்டுமோ?’ என்னில், ஸர்வ பூதஸ்திதம் யோமாம் பஜதி ஏகத்வம் ஆஸ்தித: ஸர்வதா வர்த்தமாநோபி ஸயோகீ மயி வர்த்ததே.(ஸ்ரீ கீதை, 6 : 31.-இது, கிருஷ்ணன் கூற்று )2‘எல்லாப் பொருள்களிலும் இருக்கிற என்னை எவன் ஒருவன் ஒன்றாக இருக்கும் தன்மையை அடைந்தவனாய்ப் பூஜிக்கின்றானோ, அவன் எப்பொழுதும் என்னிடத்திலே இருக்கிறான்,’ என்று ஒன்றாயிருக்குந்தன்மையைச் சொல்லி, பின்னர் அதுதன்னை மீண்டும் எடுத்துச் சொல்லும் இடத்தில்-யோயம் யோகஸ்த்வயா ப்ரோக்த: ஸாம்யேந மதுஸூதந ஏதஸ்ய அஹம் நபஸ்யாமி சஞ்சலத்வாத் ஸ்திதிம் ஸ்திராம்.(ஸ்ரீகீதை, 6 : 33. இது, அருச்சுனன் கூற்று.) 1‘மதுசூதநா! எந்த யோகமானது சமமாக உள்ள தன்மை என்று உன்னால் சொல்லப்பட்டதோ, அது செய்ய முடியாததாய் இருக்கிறது,’ என்று ‘சமமாக உள்ள தன்மை’ என்று சொல்லப்பட்டதன்றோ? ஆக, இறுதிக்காலத்தில் இவ்வாத்துமா அவனோடு ஒத்த சுத்தியை உடைத்தாக நினைக்க வல்ல துணிவுள்ள கேவலரை ஒழிய’ என்றபடி.-இவ்விடத்தில், 31ஆம் ஸ்லோகத்தில் ‘ஏகத்துவத்தைச் சொல்லி, அதனையே, 33ஆம் சுலோகத்தில் ‘சாம்யேந’ என்று கூறுவதால், ஒன்று என்பதும், சமம் என்பதும் ஒரு பொருளைக் குறிப்பனவாம் என்றபடி. ‘
இராவணன் பிராட்டிபக்கல் 1‘பெற்றதாய்’ என்ற நினைவு இன்றிக்கே திருமுன்பே நின்று சிலவற்றைப் 2பிதற்றப் புக்கவாறே–யதா த்ருப்தஸ்ச மாதங்க: ஸஸ:ச ஸஹிதௌவநே ததா த்விரதவத்ராம: த்வம் நீசஸஸவத் ஸ்ம்ருத:(ஸ்ரீராமா சுந். 22 : 16.) 3‘ஸ்ரீராமபிரான் யானையைப் போல எண்ணப்படுகிறார்; நீ மிகச் சிறிய முயலைப்போல எண்ணப்படுகிறாய்,’ என்று வெறுத்து வைத்து, பின்னையும் ‘ஐயோ! இவன் நினைவு இருந்தபடி என்? 4இவனுக்கு ஒரு நல்வார்த்தை சொல்லுவார் இன்றிக்கே ஒழிவதே!’ என்று இரக்கங்கொண்டு மித்ரம் ஒளபயிகம் கர்த்தும்ராம: ஸ்தாநம் பரீப்ஸதா
வதம்சஅ நிச்சதா கோரம் த்வயா அஸௌ புருஷர்ஷப:(ஸ்ரீராமா சுந். 21 : 19.)5‘நீ ஸ்ரீராமபிரானோடு தோழமை கொள்,’என்று அவன் தனக்கே நலத்தை அருளிச்செய்தாற்போன்று, இவரும் மேல் திருவாய்மொழியில் அவர்களை நிந்தித்து வைத்து, இரங்கி இத்திருவாய்மொழியில் நலத்தை அருளிச்செய்கிறார்.
மித்ரம் ஒளபயிகம் கர்த்தும் ராம :- ‘பெருமாளைச் சரணம் புகு’ என்றால் அப்பையல் அதனைத் தனக்கு எளிவரவாக நினைத்திருக்குமே? அதற்காகத் ‘தோழமை கொள்’ என்கிறாள். தங்களைச் சரணம் புக்காரைத் தங்களிற் காட்டில் குறைய நினைத்திருப்பதில்லையே இவர்கள்; ‘மித்ரபாவேந’ என்றும்,
‘மித்ரம் ஒளபயிகம் கர்த்தும்’ என்றுமிறே இருவர் படியும். ஸ்தாநம் பரீப்ஸதா – வழியடிப்பார்க்கும் தரையிலே கால் பாவி நின்று வழியடிக்கவேணுமே?
உனக்கு ஓர் இருப்பிடம் வேண்டியிருந்ததேயாகிலும் அவரைப் பற்ற வேணுங்காண். எளிமையாக எதிரி காலிலே குனிந்து இவ்விருப்பு இருப்பதில்
பட்டுப் போக அமையும் என்றிருந்தாயோ? வதஞ்சாநிச்சதா கோரம் – அப்படி உன்னை நற்கொலைப்பட விடுவரோ? உன்னை வைத்து உன்
முன்னே உன் சந்தான கூட்டத்தைக் கொன்று பின்னை உன்னைச் சித்திரவதை பண்ணுகையாகிற இவ்வதத்தை இச்சித்திலையேயாகிலும் அவரைப்
பற்ற வேணுங்காண். த்வயா – உன் நிலை இருந்தபடியால் விசேடித்து உனக்கு அவரைப் பற்றவேணும். அசௌ-உருவெளிப்பட்டாலே
முன்னிலையாயிருக்குமிறே இவளுக்கு; அவனுக்கும் தானே மாயாமிருகத்தின் பின்னே போகிற போது கண்ட காட்சியாலே அச்சத்தாலே எப்போதும்
முன்னிலையாயிருப்பரிறே. புருஷர்ஷப:- ‘நான் பண்ணின அபராதத்துக்கு என்னை அவர் கைக்கொள்ளுவாரோ?’ என்றிருக்க வேண்டா; இவற்றை
ஒன்றாக நினைத்திரார்காண்; அவர் புருஷோத்தமர்காண். அசௌ புருஷர்ஷப: ராம: த்வயா மித்ரம் கர்த்தும் ஒளபயிகம்.
கோநகர் முழுவதும் நினது கொற்றமும்
சானகி யெனும்பெயர் உலகின் தம்மனை
ஆனவள் கற்பினால் வெந்த தல்லதோர்
வானரஞ் சுட்டதுஎன் றுணர்தல் மாட்சித்தோ?’– என்றார் கம்பநாட்டாழ்வார்.
கடிக்கும்வல் லரவும் கேட்கும் மந்திரம்; களிக்கின் றோயை
அடுக்குமீ தடாதென் றான்ற ஏதுவோ டறிவு காட்டி
இடிக்குந ரில்லை; உள்ளா ரெண்ணிய தெண்ணி யுன்னை
முடிக்குந ரென்ற போது முடிவின்றி முடிவ துண்டோ?’- என்பது கம்பராமாயணம்.
அர்ச்ய: ஸர்வஸஹிஷ்ணு: அர்ச்சக பராதீந அகிலாத்மஸ்திதி: ப்ரிணீஷே ஹ்ருதயாளுபி: தவதத: ஸீலாத் ஜடீபூயதே.(ஸ்ரீ கீதை, 4 : 11.)எவர் சிலர் அதிகாரிகள் யாதொருபடியாக வேண்டும் என்று நம்மை வணங்குகிறார்கள்? அவர்களைக் குறித்து அப்படிக் கிட்டலாம்படிக்கு ஈடாக நம்மை அமைத்துக்கொண்டு நிற்போம்; இப்படி அவர்கள் நினைவே நமக்கு நினைவாம்படி இருக்கையாலே அவர்கள் எல்லாரும் நம் வழி போனார் ஆவர்கள்,’ என்பது இறைவன் திருவாக்கு
பாபம் ஹரதியத்பும்ஸாம் ஸ்மிருதம் ஸங்கல்பநாமயம் தத்புண்டரீக நயநம் விஷ்ணோ: த்ரக்ஷ்யாமி அஹம்முகம்.1. (ஸ்ரீ விஷ்ணு புரா. 5 : 17.)-சங்கல்பத்துக்குத் தகுதியாக நினைக்கப்படுகின்ற விஷ்ணு’ என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம். ‘நன்று; ‘சங்கல்பத்துக்குத் தகுதியாக’ என்பது, பரத்துவம் முதலான நிலைகளைச் சொல்லுகிறது என்று கொள்ளாமல், அர்ச்சாவதார விக்கிரஹத்தைச் சொல்லுகிறது என்று கொள்ளுதற்குக் காரணம் யாது?’ எனின், பரமபதத்தில் அசாதாரண விக்கிரஹத்தோடும் குணங்களோடும் இருக்கும்; விபவங்களில் வந்தால் அதுதன்னைத் தன்னின் வேறுபட்ட மற்றைச் சாதிகட்குத் தகுதியாக ஆக்கிற்றாய் இருக்கும்; இங்ஙன் அன்றிக்கே,யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாமி அஹம் மம வர்த்ம அநுவர்த்தந்தே மநுஷ்யா: பார்த்த ஸர்வஸ: 2அடியவன் தான் உகப்பது யாதேனும் ஒரு பொருளைத் திருமேனியாகக் கோலினால், அதனையே தனக்குத் திருமேனியாகக் கொண்டு, அதிலே அசாதாரண விக்கிரஹத்தில் பண்ணக்கூடிய அபிமானத்தைப் பண்ணி, இவ்வழியாலே முகங்கொடுக்கும்படியாய் இருப்பது இந்நிலை.
அருச்சுனா! எவர்கள் எவ்விதமாய் என்னை வணங்குகிறார்களோ, அவர்களுக்கு அவ்விதமாகவே இருந்து நான் அருள் புரிகிறேன்,’ என்றும்,(தைத்திரீய நாராயண உபநிடதம். இவ்வுபநிடத வாக்கியத்தோடு, ‘மனக்கோள் நினக்கென வடிவு வேறிலையே’ என்ற பரிபாடற்பகுதி ஒப்பு நோக்குக. )2‘சலனம் அற்ற மனத்தினால் செய்யத்தக்கவன்’ என்றும்,ஹ்ருதா மநீஷா மநஸா அபிக்லுப்த: (ஸ்ரீ விஷ்ணு புரா. 5 : 17.) 3‘சங்கற்பத்துக்குத் தகுதியாக நினைக்கப்படுகின்ற விஷ்ணு’ என்றும், ஸூரூபாம் ப்ரதிமாம் விஷ்ணோ: ப்ரஸந்ந வதநேக்ஷணாம் க்ருத்வா ஆத்மந: ப்ரீதிகரீம் ஸூவர்ண ரஜதாதிபி: தாமர்ச்சயேத்.(ஜிதந்தா ஸ்தோத்திரம், 5.)4‘பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்படுகின்ற திருமேனி’ என்றும், பிரமாணங்கள் கூறாநிற்கும். ‘
செய்ய தாமரைக் கண்ணனாய்–தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ.(சாந்தோக்ய உபநிடதம், 1 : 6.)சூரியனுடைய ஒளியால் மலர்ந்த தாமரை மலர் எவ்வண்ணம் இருக்கும்? அவ்வண்ணமே அந்தப் பரம்பொருளான நாராயணனுடைய திருக்கண்கள் இருக்கின்றன-ஸ்ரூயதாம்து நரவ்யாக்ர வேதவேதாந்த நிஸ்சய: யஞ்ஜேஸோ யஞ்ஜபுருஷ: புண்டரீகாக்ஷ ஸம்ஜ்ஞித: ஸவிஷ்ணு: பரமம் ப்ரஹ்ம யதோ நாவர்த்ததேபுந:(விஷ்ணு தர்மம்)யாகங்களுக்கு ஈஸ்வரனாயும் யாகபுருஷனாயும் தாமரைக்கண்ணன் என்னும் பெயரையுடையவனாயுமிருக்கிற அந்த விஷ்ணு’ என்றும் சுருதி ஸ்மிருதி முதலியவைகளில் சொல்லப்படாநின்றுள்ள அப்போது அலர்ந்த செவ்வித்தாமரை போலே இருந்துள்ள திருக்கண்களையுடையவனாய்.
மண்பா லமரர் வரம்பாருங் காணாத
எண்பா லுயர்ந்த எரியோங்கு நல்வேள்வி
உண்பாய்நீ ஊட்டுவாய் நீஇரண்டும் ஒக்கின்ற
பண்பா ரறிவார் பகராய் பரமேட்டி!’- என்றார், கம்பநாட்டாழ்வார்.
பஹூஸ்யாம் ப்ரஜாயேயேதி.(தைத்திரீய ஆனந். 6 : 91.)பல பொருள்களாக ஆகக்கடவேன்’ என்றும் சொல்லுகிற
செய்ய சூழ் சுடர் ஞானமாய் – ஞானத்துக்குச் செவ்வையாவது, வருத்தம் அற்று இருக்கை. அன்றியே,தாதா யதாபூர்வம் அகல்பயத்.(தைத்திரீய நாராயண உபநிடதம், 1.)‘முன்பு படைத்த வண்ணமே படைத்தார்’ என்கிறபடியே, ‘அதனுடைய கர்மத்துக்குத் தகுதியாகப் படைத்த செவ்வை’
சோதி – குணம். ‘சோதி’ என்றது, குணங்களுக்கெல்லாம் உபலக்ஷணம். 4‘இப்போது குணங்களைச் சொல்லுகிறது என்?’ என்னில், குணங்களையுடைய பொருள் அன்றோ பற்றத்தக்கது? ஆதலால், சொல்லுகிறது.
எனவிவை யன்ன மாற்றம் இயைவன பலவுங் கூறிப்
புனைகழல் புலவு வேற்கைப் புளிஞர்கோன் பொருவில் காதல்
அனையவற் கமைவிற் செய்தான்; ஆரவற் கன்பி லாதார்?
நினைவருங் குணங்கொ டன்றோ இராமன்மேல் நிமிர்ந்த காதல்?’– என்றார், கம்பநாட்டடிகள்.-அயோத். குகப். 37
தனக்குக் காரணன் ஆகையாவது என்?’ என்னில், தான் இவர்களுக்குக் காரணனாய் இருப்பது போன்று தனக்கு அவ்வருகு வேறொரு காரணம் இன்றியே இருத்தலைத் தெரிவித்தபடி.பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் ஸாஸ்வதம் ஸிவம் அச்யுதம். ‘ஆத்மேஸ்வரம் – தனக்குத் தானே தலைவன்’ என்பது உபநிடத வாக்கியம்.
வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி ஆபத் விமோசந மஹிஷ்டபல ப்ரதசநை:-ஸ்தோத்திரரத்நம். 13.-வேதங்கள் கொள்ளை கொள்ளப்பட்டது என்ன, தமப்பனாகிய பிரமனிடத்திற்செய்த பிரமஹத்தி என்ன, அசுரர்களால் உண்டான துன்பங்கள் என்ன’ என்பன போன்று சொல்லுகின்றவற்றைப் போக்கும் தன்மையனாய் உள்ளவனை. போக்குகிற அவன் பாரிப்புக்கு இவை மிக அற்பமாய் இருக்கிறபடியைத் தெரிவிப்பார் ‘உள்ளன’ என்கிறார்.
வெந்தார் என்பும் சுடுநீறும் மெய்யிற் பூசிக் கையகத்தோர்
சந்தார் தலைகொண் டுலகேழும் திரியும் பெரியோன் தான்சென்று
‘எந்தாய் சாபம் தீர்’ என்ன இலங்கு அமுதுநீர் திருமார்பில்
தந்தான் சந்தார் பொழில்சூழ்ந்த சாளக் கிராமம் அடைநெஞ்சே!’- என்றார், திருமங்கை மன்னன்.
பாவநாசனை – கையும் வில்லுமாய் இருக்கிறபடியைக் காண எல்லாருடைய பாவங்களும் போம். என்றது,-அத்யத்புதம் இதம் வாக்யம் தவராம ஸூபாக்ஷரம் பாவந: ஸர்வலோகாநாம் த்வமேவ ரகுநந்தந.-(ஸ்ரீராமா, உத். 82 : 9.) 1‘இரகு நந்தன! நீதான் எல்லா உலகத்தாருடைய பாவங்களையும் போக்குகிறவன்,’ என்கிறபடியே, அந்நிலையிலே மக்கள் எல்லாருடைய பாவங்களையும் போக்கும் தன்மையன் ஆனவனை என்றபடி
ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வபாவந.–தாமரைக் கண்ணரே! தேவரீருக்கு வெற்றி!’ என்று முறைகெடப் புகழுங்கோள்.
பரஞ்சோதியை – அவர்கள் ஏத்த, அதனாலே ஒளியை உடையவனாயிருக்கிறவனை; என்றது, தத்விப்ராஸ: விபந்யவ: ஜாக்ருவாம்ஸ: ஸமிந்ததே விஷ்ணோ: யத்பரமம் பதம்.(இருக்கு வேதம்.)2‘பரமபதத்திலே இருக்கின்ற நித்தியசூரிகளும் துதி செய்துகொண்டேயிருக்கின்றார்கள்,’ என்கிறபடியே, அவர்கள் ஏத்துமது தன் பேறாக நினைத்து, அது தன் வடிவிலே தோன்ற இருக்கின்றமையைத் தெரிவித்தபடி.-ஏஷ ஸம்ப்ரஸாத: அஸ்மாத் ஸரீராத் ஸமுத்தாய பரஞ்ஜ்யோதி: உபஸம்பத்ய ஸ்வேந ரூபேண அபிநிஷ்பத்யதே.(சாந்தோக்யம்) 3‘பரஞ்சோதி என்னும் சொல்லின் பொருளான பரம்பொருள்’ என்பது உபநிடத வாக்கியம்.
அருள் பெற்றவன் அடிக்கீழ்ப் புக நின்ற –உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்.(இது, நரசிம்ஹ மந்த்ரஸ்தபதம்.) 1ஒரு விக்கிரஹத்தையுடையனான அதற்கு மேலேயும் ஒன்றே அன்றோ, சீற்றத்தையும் அருளையும் ஒரே காலத்தில் உடையனானதுவும்? இரணியன் பக்கல் சீற்றமும் செல்லாநிற்கச்செய்தே, திருவருளுக்கும் பாத்திரனான ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் திருவடிகளின் கீழே வந்து புகுரலாம் படி நின்ற. இரணியன் துவேஷத்திற்கு விஷயம் ஆனாற்போலே இவன் அருளுக்கு விஷயமானான் ஆதலின், ‘சீற்றத்தோடு அருள் பெற்றவன்’ என்கிறது
ததா வித்வாந் புண்ய பாபே விதூய நிரஞ்ஜந: பரமம் ஸாம்யம் உபைதி.–(முண்டகோபநிடதம், 3. 1 : 3.)புண்ணியத்தையும் பாவத்தையும் நீக்கி விட்டு முற்றுவமையை அடைகிறான்,’ என்பது உபநிடத வாக்கியம்.
(இருக்கு வேதம்.)வேறாக ஈசுவரன் கர்ம பலன்களைப் புசியாமல் மிகவும் பிரகா
உயர நின்றது ஓர் சோதியாய் – தம் த்வா க்ருணாமி தவஸம் அதவீயாந் க்ஷயந்தம் அஸ்ய ரஜஸ: பராகே.(யஜீர் வேதம், 2. 2 : 12.)1‘ரஜோ மயமான இந்தப் பிரபஞ்சத்திற்கு மேலே உள்ள பரமபதத்தில் நித்திய முத்தர்களோடு எழுந்தருளியிருக்கின்ற தேவரீரை’ என்றும்,தமஸ: பரஸ்தாத்.(சாந்தோக்யம்) ‘பிரகிருதியைக்காட்டிலும் மேலே இருக்கின்றார் பரமாத்துமா,’ என்றும் சொல்லுகிறபடியே, இங்குள்ளாராற் சென்று கிட்ட ஒண்ணாததாய் இருக்கிற பிரகிருதிக்கு மேலே இருக்கிற பரமபதத்திலே எல்லை இல்லாத ஒளி உருவமான திவ்விய விக்கிரகத்தை உடையனாய் இருக்கிற இருப்பைச் சொல்லுகிறது.
விஸ்வத: ப்ருஷ்டேஷூ ஸர்வத: ப்ருஷ்டேஷூ.
பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களாநாம்ச மங்களம் தைவதம் தேவதாநாம்ச பூதாநாம்ய: அவ்யய: பிதா.(பாரதம்)சர்வேசுவரன் எல்லா ஆத்துமாக்களுக்கும் அழிவற்ற தந்தையாய் இருக்கின்றான்,’ ஸர்வேஷாமேவ லோகாநாம் பிதா மாதாச மாதவ: கச்சத்வம் ஏநம் ஸரணம் ஸரண்யம் புருஷர்ஷபா:(பாரதம்)3‘உலகத்தில் இருக்கிற எல்லாப் பிராணிகளுக்கும் திருமகள் கேள்வன் தந்தையும் தாயுமாய் இருக்கின்றான்,’ என்கிறபடியே, உள்ளனவான எல்லாப் பிராணிகளுக்கும் தந்தையாய் இருக்கின்றவன்
அவை அல்லனாய் – தந்தை, தாய், தான் என்னும் இவ்வளவு அன்றிக்கே மாதா பிதா ப்ராதா நிவாஸ: ஸரணம் ஸூஹ்ருத் கதி: நாராயண:(விஷ்ணு தத்துவம்)4‘தாயும் தந்தையும் உடன் பிறந்தவனும் இருப்பிடமும் காப்பவனும் நட்டோனும் பேறும் ஆகிய எல்லாம் நாராயணனே,’ என்றும்,
பித்ரு மாத்ரு ஸூத ப்ராத்ரு தார மித்ர ஆதயோபிவா ஏகைக பல லாபாய ஸர்வ லாபாய கேசவ:(சுபாலோபநிடதம்)-தந்தை தாய் மகன் உடன் பிறந்தவன் மனைவி நட்டோன் இவர்கள் எல்லாரும் ஒவ்வொரு பலத்தின் பொருட்டு; கேசவன் எல்லா லாபத்தின்பொருட்டு,’
அக்நௌ திஷ்டதி விப்ராணாம் ஹ்ருதி திஷ்டதி யோகிநாம் ப்ரதிமாஸூ அப்ரபுத்தாநாம் ஸர்வத்ர ஸமதர்ஸிநாம்.-‘பிராஹ்மணர்கள் அக்நியில் பார்க்கிறார்கள்; யோகிகள் இருதயத்தில் பார்க்கிறார்கள்; அறிவில்லாதவர்கள் பிம்பங்களிலே; சமமாகப் பார்க்கும் ஞானிகள் எங்கும் பார்க்கிறார்கள்,’ என்று ரிஷிகளைப் போலே தம் வாயாற்சொல்ல மாட்டாமையாலே ‘அவன், இவன்’ என்கிறார்.
ஸ்நேஹோ மே பரமோ ராஜந் த்வயிநித்யம் ப்ரதிஷ்டித: பக்திஸ்ச நியதா வீர பாவ: ந அந்யத்ர கச்சதி.(ஸ்ரீராமா. உத். 40 : 16.)சுவாமி! எனக்குத் தேவரீரிடத்தில் மேலான பிரீதியானது நிலைத்துவிட்டது; ‘பத்தியும் எப்பொழுதும் இருக்கின்றது; சூரரே! என்னுடைய மனமானது வேறிடத்தில் செல்லுகிறதில்லை,’ என்றனேயன்றோ திருவடி
ஏஷ ஸர்வாயுதோபேத: சதுர்பி: ஸஹ ராக்ஷஸை: ராக்ஷஸ: அப்யேதி பஸ்யத்வம் அஸ்மாந் ஹந்தும் நஸம்ஸய:–(ஸ்ரீராமா. யுத். 17 : 5.)விபீஷணன் நான்கு அரக்கர்களோடு நம்மைக் கொல்லுதற்கு எதிர்முகமாய் வருகிறான்; சந்தேகம் இல்லை; பாருங்கள்!’ என்பது போன்று, அங்கே நலிய வருகிற இது, தம்மை முடிக்க வந்தது போன்று இருத்தலின், 2‘சென்ற படை’ என்னாது, ‘வருபடை’ என்கிறார்,
பார்த்தம் ரதிநம் ஆத்மாநம் ச ஸாரதிம் ஸர்வலோக ஸாக்ஷிகம் சகார.- ஸ்ரீராமா. யுத். 17 : 5.-அருச்சுனனை ரதியாகவும் தன்னைச் சாரதியாகவும் எல்லா உலகத்துள்ளவர்கள் கண்களுக்கும் இலக்காக்கினான்,’
ஸ ஸ்வப்ரபாவம் அதிவேலம் அபுத்யமாந: லக்ஷ்மீ ஸஹாய குணமங்கள பங்கலக்ந:
தத் பக்தி நிக்ந மநஸாம் க்ரய விக்ரயார்ஹ: வாரிப்ரதாரித இவத்வரித: பபூவ.அநந்யார்ஹ சேஷத்துவமாவது, ததீயர்க்குக் கிரய விக்கிரயங்கட்குத் தகுதியாம்படியாகை. ‘அந்தப் பகவானுடைய பத்தியில் ஈடுபட்ட மனத்தையுடைய ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குக் கிரய விக்கிரயங்களுக்குத் தகுந்தவராய்’ என்றும், ‘எந்தம்மை விற்கவும் பெறுவார்களே’ (பெரியாழ்வார் திருமொழி, 4. 4 : 10.)என்றும் வருகின்ற பிரமாணங்களைக் காண்க.
ஸம்ஸார விஷ விருக்ஷஸ்ய த்வே பலேஹி அம்ருதோபமே கதாசித் கேஸவே பக்தி: தத் பக்தைர்வா ஸமாகம:சமுசாரமாகிற விஷமரத்துக்கு அமிருதத்திற்குச் சமானமான இரண்டு பழங்கள் உண்டு; அவை ஒரே காலத்தில் கிருஷ்ணனிடத்தில் பத்தியும் அவன் அடியார்களிடத்திலேயே எப்பொழுதும் கூடியிருத்தலுமாம்,’ என்னும் பொருளையுடைய சுலோகத்தில் ‘தத்பக்தைர்வா ஸமாகம: பத்தர்களிடத்திலேயே கூடியிருத்தல் ‘என்கிற இடத்தில் ‘வா’ என்றதனை தேற்றேகாரத்திலே ஆக்கி, ‘உத்தேஸ்யந்தானே இங்கே சித்திக்குங்காண்’ என்று எம்பெருமானார் அருளிச்செய்வர். பெறத்தக்க பேற்றிக்கு முதல் எல்லை பகவானுக்கு அடிமை என்ற அளவிலே நிற்றல்; முடிவின் எல்லை, பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடிமை அளவும் வருகை.
கச்சதா மாதுலகுலம் பரதேந ததா அநக ஸத்ருக்நோ நித்ய ஸத்ருக்ந: நீத: ப்ரீதி புரஸ்க்ருத:-(ஸ்ரீராமா. அயோத். 1 : 1.)–கச்சதா-போகின்ற. இதற்கு எம்பெருமானார், பயிலுஞ்சுடரொளி’ என்ற திருவாய்மொழியிலும் ‘நெடுமாற்கடிமை’ என்ற திருவாய்மொழியிலும் சொல்லுகின்ற அர்த்தத்தை ஸ்ரீ சத்ருக்னாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்’ என்று அருளிச்செய்வர்.
ஆசாரத்தை முக்கியமாகக் கொண்ட அவதாரமாய், அதில் பெருமாள் ‘பிதா சொல்லிற்றுப் புத்திரன் செய்யக்கடவன்,’ என்கிற மரியாதை குலையாதே அதனை நிலைநிறுத்துகைக்காகப் பித்ருவசன பரிபாலனம் முதலான சாமாந்ய தருமத்தை அநுஷ்டித்தார்; 2குருஷ்வமாம் அநுசரம் வைதர்ம்யம் ந இஹ வித்யதே க்ருதார்த்த: அஹம் பவிஷ்யாமி தவ சார்த்த: ப்ரகஸ்பதே.’இதுதான் செய்யத்தக்க விஷயத்தில் செய்யக்கடவது’ என்னுமிடத்தை அநுஷ்டித்துக் காட்டினார் இளையபெருமாள்; ‘அது செய்யுமிடத்தில் அவன் உகந்த அடிமை செய்யக்கடவது,’ என்னுமிடத்தை ஸ்ரீ பரதாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்; ‘அதுதான் பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடிமையை முடிவாகக் கொண்டு இருக்கும்,’ என்னுமிடத்தை ஸ்ரீ சத்ருக் நாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்.
நற்றா தையும்நீ; தனிநா யகன்நீ; வயிற்றில்
பெற்றாயும் நீயே; பிறரில்லை: பிறர்க்கு நல்கக்
கற்றா யிதுகா ணுதிஇன் றெனக்கை மறித்தான்
முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை யன்னான்.’(கம்ப அயோத்: நகர் நீங்கு. 136)
அநந்யா: சிந்தயந்த: மாம் யே ஜநா: பர்யுபாஸதே தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோகக்ஷேமம் வஹாமி அஹம்.–(ஸ்ரீ கீதை 9 : 22.)அநந்யா – இறைவனைத் தவிர வேறொன்றனையும் விரும்பாத’ என்கிற நிலை இவர்களுக்கு உண்டானால் இவர்களைப் பின்பற்றுகிறது அவனைப் பற்றியதாம் அன்றோ?
விப்பிரர்க்குக் கோத்திர சூத்திர சரண கூடஸ்தர் பராசர பாராசர்ய போதாயநாதிகள்,’ என்பர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். (ஆசார்ய ஹ்ருதயம், பிரதமப் பிரகரணம், 36.)
கோத்திர சூத்திரங் குடியு ரைத்துளார் வேத்திர கீயமா நகரின் மேயினார்.’- என்பது, வில்லி பாரதம்.
சத்ருக்ந:’ – பிறந்த போதே ‘எதிரிகள் மண்ணுண்ணும்படி வளரும்’ என்று தோற்றியிருக்கையாலே, இப்படித் திருநாமம் சாற்றினான் வசிஷ்டன். ‘நித்ய சத்ருக்ந:’ரூப ஒளதார்ய குணை: பும்ஸாம் த்ருஷ்டி சித்தாப ஹாரிணம்.(ஸ்ரீராமா. அயோத்.) 2புறம்பேயுள்ள பகைவர்களை வெல்லுதல் அன்றியே, உட்பகைவர்களான இந்திரியங்களை வென்றிருப்பவன். என்றது, 3‘பும்சாம் திருஷ்டி சித்தா பஹாரிணம் – ஆடவர்களுடைய கண்களையும் மனத்தையும் கவரக்கூடியவன்’ என்கிற விஷயத்தில் கண் வையாமையைத் தெரிவித்தபடி. அங்கும் ‘இவனுக்கு இனிது’ என்று இவ்வழியாலே புகுவானித்தனை.
ஆடவர் பெண்மையை அவாவுந் தோளினாய்! தாடகை என்பதச் சழக்கி நாமமே.’ என்பர் கம்ப நாட்டாழ்வார்.
முத்துருக் கொண்டுசெம் முளரி அலர்ந்தால்
ஒத்திருக் கும்எழி லுடையஇவ் வொளியால்
எத்திருக் கும்கெடும் என்பதை உன்னாச்
சத்துருக் கன்எனச் சார்த்தினன் நாமம்.’- என்ற கம்பராமாயணச் செய்யுள்
தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத்
தீவினை யென்ன நீத்துச் சிந்தனை முகத்திற் றேக்கிப்
போயினை என்ற போது புகழினோய்! தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின்கே ழாவரோ தெரியி னம்மா!’–என்றார் ஸ்ரீ குகப்பெருமாள்.
என்றும் உளதாவதாவது, எல்லாக்காலத்திலும் இருப்பது ஒன்று ஆகையாலே, ‘பயிலும்’ என நிகழ் காலத்தால் அருளிச்செய்கின்றார். 1ஆக, ‘சுத்த சத்துவமயமாய்ச் சொரூபப் பிரகாசகமான விக்கிரகத்தையுடையவன்’ என்கை. 2நிஷ்கிருஷ்ட சத்துவமேயாய்(அறுதி செய்யப்பட்ட சத்துவம்.) தத்ர ஸத்வம் நிர்மலத்வாத் ப்ரகாஸகம் அநாமயம் ஸூக ஸங்கேந பத்நாதி ஜ்ஞாந ஸங்கேந சாநக.-ஸ்ரீ கீதை, 14 : 6. 3‘அந்த முக்குணங்களுக்குள்ளே பரிசுத்தமாயிருப்பதனாலே ஸ்படிகம் போன்று பிரகாசிக்கிறதும் சாந்தமாயிருப்பதுமான சத்துவகுணம்’ என்றும், தத் த்ருஷ்ட்வா தே ததா தேவா: ஸங்க சக்ர கதாதரம் அபூர்வ ரூப ஸம்ஸ்தாநம் தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்.–(ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 9 : 63.)4‘கிளர்ச்சியோடு இருக்கிற ஒளிகளினுடைய கூட்டமாய் இருக்கிற அந்த விஷ்ணு’ என்றும்,திவி ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய பவேத் யுகபத் உத்திதா யதி பா: ஸத்ருஸீ ஸா ஸ்யாத் பாஸ: தஸ்ய மஹாத்மந:-(ஸ்ரீ கீதை, 11 : 12)5‘ஆகாயத்தில் அநேகம் ஆயிரம் சூரியர்களுடைய ஒளியானது ஒரே காலத்தில் உண்டானால் அது அம்மகாத்துமாவினுடைய ஒளிக்கு ஒப்பாகும்’ என்றும் சொல்லுகிறபடியே, எல்லை இல்லாத ஒளி உருவமாய் ‘ஆறு குணங்களுடைய விக்கிரஹம்’ என்று மயங்குவார்க்கு மயங்கலாம்படியாய், ஞானம் முதலான குணங்களுக்கும் சொரூபத்துக்கும் பிரகாசகமான விக்கிரகம் என்பதனைத் தெரிவித்தபடி.
பங்கயக்கண்ணனை – 6வடிவழகு எல்லாம் பாதியும், கண்ணழகு பாதியுமாயிருக்கும்.ராம: கமல பத்ராக்ஷ: ஸர்வ ஸத்வ மநோஹர: ரூப தாக்ஷிண்ய ஸம்பந்ந: ப்ரஸூத: ஜநகாத்மஜே.(ஸ்ரீராமா. சுந். 53. 3.)என்னு‘பயிலும் சுடரொளி மூர்த்தி’ என்றதனால், ‘ராம:’ என்றதன் பொருளையும், ‘பங்கயக்
கண்ணனை’ என்றதனால் ‘கமல பத்ராக்ஷ:’ என்றதன் பொருளையும் அருளிச்செய்தார் என்றபடி-வடிவிலே துவக்கு உண்பாரை வளைத்துக்கொள்வது கண் அழகாயிற்று. ஒரு சுடர்க்கடல் போலே ஆயிற்று வடிவு; அது பரப்பு மாறத் தாமரை பூத்தாற்போலே ஆயிற்றுக் கண் அழகு. வடிவுதானே கவரும் தன்மையது? அதற்கு மேலே அகவாயில் வாத்சல்யம் முதலிய குணங்களுக்கும் பிரகாசகமாய் இருக்குமன்றோ திருக்கண்கள்? ஆக, ‘என்றும் உள்ளதாய் எல்லை இல்லாத ஒளி உருவமான விக்கிரஹத்தையும் அதிலும் கவர்ச்சிகரமான கண்ணழகை யுடையவனை’ என்றபடி.
அப்ரவீச்ச ததா வாக்யம் ஜாதக்ரோத: விபீஷண: அந்தரிக்ஷகத: ஸ்ரீமாந் ப்ராதா வை ராக்ஷாஸாதிபம்(ஸ்ரீராமா. யுத். 16 : 17.)அந்தரிக்ஷ கதஸ் ஸ்ரீமான் – ஆகாயத்தை அடைந்தவன் ஸ்ரீமானாக உள்ளவன்’, பரமாபதம் ஆபந்ந: மநஸா அசிந்தயத் ஹரிம் ஸது நாகவர: ஸ்ரீமாந் நாராயண பாராயண:(விஷ்ணு தர்மம். 68.)ஸது நாகவரஸ் ஸ்ரீமான் – அந்தக் கஜேந்திர ஆழ்வான் ஸ்ரீமானாய் இருந்தான்,’ ஸர்வ ப்ரியகர: தஸ்ய ராமஸ்ய அபி ஸரீரத:லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந: பஹி: ப்ராண இவாபர(ஸ்ரீராமா. யுத்த.)4‘லக்ஷ்மணோ லக்ஷ்மி சம்பந்ந:’ என்னும் இடங்களில் இதனைத் திருவாகக் கூறப்பட்டுள்ளமை காண்க. ‘அந்தரிக்ஷ கதஸ் ஸ்ரீமான்’ – இலங்கைவிட்டுப் பெருமாள் திருவடிகளில் வர என்று ஓரடி இட்டபோதே, இராவண சம்பந்தத்தால் வந்த திருவின்மை நீங்கிச் சொரூபத்திற்குத் தகுந்ததான ஸ்ரீ குடி புகுந்தது என்றபடி. ‘சதுநாகவரஸ் ஸ்ரீமான்’ – சர்வேசுவரன் அரைகுலையத் தலைகுலைய வந்து விழ வேண்டும்படியான ஆர்த்திதன்னை ஒரு செல்வமாகச் சொல்லப்பட்டது அன்றோ ஸ்ரீ கஜேந்திராழ்வானுக்கு? ‘நீர் இளவரசாக முடி சூடாவிடில் நாம் முடி சூடோம்,’ என்று பெருமாள் அருளிச் செய்யவும் 1ஸர்வாத்மநா ப்ரயநுநீயமாநோ யதாந ஸௌமித்ரி: உபைதியோகம் நியுஜ்யமாநோபிச யௌவராஜ்யே தத: அப்யஷிஞ்சத் பரதம் மஹாத்மா.(.ஸ்ரீராமா. யுத்த. 131 : 88).–முடி சூட இசையாத இளைய பெருமாளை அன்றோ, ‘இலக்ஷ்மணன் ஐஸ்வரியத்தால் நிறையப்பெற்றவன்,’ என்றது?
மற்றும், ஸ்ரீ பரதாழ்வானை, ‘பிள்ளாய்! உன் உள் வெதுப்பு ஆறுவது எப்போதோ!’ என்று கேட்க, யாவத்ந சரணௌ ப்ராது: பார்த்திவ வ்யஞ்ஜநாந்விதௌ ஸிரஸா தாரயிஷ்யாமி நமே ஸாந்தி: பவிஷ்யதி(ஸ்ரீராமா, அயோத். 98 : 8.)2‘இராஜ இலக்கணம் பொருந்திய தமையனாருடைய திருவடிகளைத் தலையிலே எதுவரையிலும் தாங்கமாட்டேனோ, அது வரையிலும் எனக்கு நிம்மதியானது உண்டாகமாட்டாது,’ என்கிறபடியே, பெருமாளும் தமக்கு வகுத்த முடி சூடி, நானும் எனக்கு வகுத்த முடி சூடின அன்று ஆறும்,’ என்றான் அன்றோ? 3‘அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு’ என்றார்(பெருமாள் திருமொழி, 10 : 7. ஸ்ரீ குலசேகரப் பெருமாள்.) ‘அடியிலே தலையாக வாழ அடியிடுகிறார்,’ என்றபடி.–‘அடியிலே தலையாக வாழ அடியிடுகிறார்’ என்றது, சிலேடை: திருவடிகளிலே தலையை வைத்துக்கொண்டு வாழ’ என்றும், ‘முன்னே சிறப்பாக வாழ’ என்றும் பொருள்படும்.
இதீதம் உக்த்வா ஸ மஹாநுபாவ: ஸஸ்மார சக்ரம் நிஸிதம் புராணம்
ஸூதர்சநம் சிந்திதமாத்ரம் ஆஸூ தஸ்ய அக்ரஹஸ்தம் ஸ்வயம் ஆரூரோஹ.(பாரதம், வீடும பர்வம்.)-தான் தாழ நின்று ஆட்கொள்ளுமிடத்து, பகலை இரவாக்குகைக்கும், ‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுக்கைக்கும் பெருநிலை நிற்கும் கருவியை உடையவனை. ‘நினைத்த மாத்திரத்தில் உடனே கண்ணபிரானுடைய திருக்கையில் உச்சியில் தானாகவே வந்து அடைந்தார்’ என்கிறபடியே, ஒரு கையிலே ஏறி விரோதிகளை அழியச் செய்பவன் அன்றோ? ‘நினைவு அறிந்து காரியம் செய்யுமவன்’ என்பதாம். கையும் திருவாழியுமான அழகினை அடியார்கட்கு ஆக்கி அதனைக்கொண்டு விரோதியைப் போக்குவார்க்கு விரோதியைப் போக்கி அதுதன்னைக் கையில் கண்டு அனுபவிப்பார்க்கு அனுபவிப்பிக்கும் உபகாரகன் ஆதலின், ‘ஆழிப்பிரான்’ என்கிறார்.
தோளும் ஓர் நான்குடை – விரோதி போக்குகைக்கும் அழகுக்கும் வேறொன்று வேண்டாதே, தோள்கள்தாமே அமைந்திருக்கை00ஆயதாஸ்ச ஸூவ்ருத்தாஸ்ச பாஹவ: பரிகோபமா: ஸர்வபூஷண பூஷார்ஹா: கிமர்த்தம் ந விபூஷிதா:(ஸ்ரீராமா. கிஷ். 3 : 14.)‘நீண்டனவாயும் அழகோடு திரண்டனவாயும் இரும்புத்தூண்களை ஒத்தனவாயும் எல்லா ஆபரணங்களாலும் (கண்ணெச்சில் வாராதபடி) அலங்கரிக்கப்படத் தக்கனவாயுமிருக்கிற திருத்தோள்கள் என்ன பிரயோஜனத்திற்காக அலங்கரிக்கப்படவில்லை?’
நான்காகத் தோன்றுகைக்கு நாற்றோளனாய் அவதரித்தானோ?’ எனின்-ஜாதோஸி தேவ தேவேஸ ஸங்க சக்ர கதா தர
திவ்யம் ரூபம் இதம் தேவ ப்ரஸாதேந உபஸம்ஹர.(வசுதேவர் கூற்று. இது, பாகவதம், 5 : 3.)ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்தவிடத்து நாற்றோளனாய் அன்றோ வந்து அவதரித்தது? ‘மறைத்துக்கொள்க’ என்ன, மறைத்தான் மற்றைத் தோள்களை
நிலாத்துக்குறிப் பகவர், பட்டரை நோக்கி, ‘ஸ்ரீவைகுண்டத்தில் நாற்றோளனாய் இருக்கும் என்னுமிடத்துக்குப் பிரமாணம் உண்டோ?’ என்ன,-தமஸ: பரமோ தாதா ஸங்க சக்ர கதா தர: ஸ்ரீ வத்ஸ வக்ஷா நித்யஸ்ரீ: அஜய்ய: ஸாஸ்வத: த்ருவ:(ஸ்ரீராமா. யுத். 114 : 15. இது மண்டோதரி கூற்று.) 2‘பிரகிருதி மண்டலத்திற்கு மேலேயுள்ள ஸ்ரீ வைகுண்டத்தில் இருப்பவர், சங்கு சக்கரம் கதை இவற்றைத் தரித்திருப்பவர், போஷகர்’ என்று உண்டாய் இருந்ததே?’ என்ன, வேறு பதில் சொல்ல முடியாமையாலே வேறுபட்டவராய் இருக்க, ‘பிரமாணப்போக்கு இதுவாயிருந்தது பொறுக்கலாகாதோ?’ என்று அருளிச்செய்தார்.
ததோ ஹர்ஷ ஸமுத்பூதோ நிஸ்வந:திவம் அஸ்ப்ருஸத் ஸ்த்ரீ பாலயுவ வ்ருத்தாநாம் ராமோயமிதி கீர்த்திதே.(ஸ்ரீராமா, யுத். 130 : 32.)-தத்தமது கற்பு அழியும் வார்த்தை சொன்னால் என்றிருக்கும் பெண்கள், முதலிலே வார்த்தை சொல்ல அறியாத பாலகர்கள், வாய்விட்டு ஒன்றும் சொல்லாத யுவாக்கள், உறுப்புகளின் சத்தி குறைந்த முதியோர்கள் இவர்கள் அனைவரும் வாய்விட்டு ஏத்தும்படி ஆயிற்றுப் பெருமாள் அழகு,’ என்றார் ஸ்ரீ வால்மீகி பகவான்
தேவாநாம் தாநவாநாம்ச ஸாமாந்யம் அதிதைவதம்
ஸர்வதா சரணத்வந்தம் வ்ரஜாமி ஸரணம் தவ.(ஜிதந்தா)-திருமகள் கேள்வன், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பொதுவான தெய்வம்,’ என்கிறபடியே, பொதுவான தலைவனாந்தன்மையே அன்றோ இறைவனுக்கு
ஆழி கடைந்தமுதம் எங்களுக்கே ஈந்தாய்
அவுணர்கள்தாம் நின்னடிமை அல்லாமை யுண்டோ?’–கம்பரா. ஆரணி.)
உடை ஆர்ந்த ஆடையன் – திரு அரை பூத்தது போன்று இருக்கிறபடி. ‘திருஅரை மலர்ந்தது போன்று இருக்கின்ற பட்டாடை’,-தாஸாம் ஆவிரபூத் ஸௌரி: ஸ்மயமாந முகாம்புஜ: பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாத் மந்மதமந்மத:(ஸ்ரீ பாகவதம்)0 2‘பீதாம்பரத்தைத் தரித்திருப்பவர்’ என்பது
தாஸாம் ஆவிரபூத் – ஸ்ரீ பிருந்தாவனத்திலே உலாவாநிற்கச்செய்தே, அவர்கள் படும் அலமாப்புக் காண்கைக்காக மறைய நின்றான்; ‘இனி,
இவர்கள் தரிக்கமாட்டார்கள்,’ என்று தோற்றினவாறே வந்து தோற்றினான்.தாஸாம் – கமர் பிளந்தவிடத்தே ஒரு பாட்டம் மழை விழுந்தாற்போலே இருக்கை. ஸ்மயமான முகாம்புஜ: – தன்னையொழியச் செல்லாமையுண்டானால், பின்பு அவன் முகம் இருக்கும்படி இதுபோலே காணும். பீதாம்பரதர: – இவன்பக்கல் இடைப்பெண்கள் நெஞ்சிற்பிறந்த பிரணய ரோஷத்தாலுள்ள மறமெல்லாம் ஆறும்படியாயிற்று உடை வாய்ப்பு இருப்பது; நெஞ்சுகளிற் பிறந்த புண்களெல்லாம் தீர்ந்து இத்தோடே பணி போரும்படியாயிற்று இருப்பது. (பணி போருதல் – அந்த விஷய விகாரமேயாய்ச் செல்லுதல். அதனை விரிக்கிறார் ‘படிச்சோதி’ என்று தொடங்கி.) ‘படிச்சோதியாடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன், கடிச்சோதி கலந்ததுவோ?’ என்று இதுவே பணிபோந்திருக்குமிறே. (‘இங்ஙனம் கவர்ச்சிகரமாயிருப்பது பெண்களுக்குமாத்திரமேயோ?’ என்னில்,) ‘சாக்ஷாத் மந்மத மந்மத:’, ‘பும்சாம் திருஷ்டி சித்தாபஹாரிணம்’ என்கிறபடியே என்பது.)
பெருமக்கள் – நித்தியசூரிகள்; ‘பெரியோர்’ என்றபடி. 2‘பேராளன் பேர் ஓதும் பெரியோர்’ (பெரிய திருமொழி, 7. 4 : 4.)என்பது அன்றோ மறைமொழி? மஹாத்மாநஸ்து மாம்பார்த்த தைவீம் ப்ரக்ருதிம் ஆஸ்ரிதா:
பஜந்தி அநந்ய மநஸோ ஜ்ஞாத்வா பூதாதிம் அவ்யயம்.(ஸ்ரீ கீதை, 9 : 13.)3‘மஹாத்துமாக்களோ என்றால்’ என்றும்,பஹூநாம் ஜந்மநாம் அந்தே ஜ்ஞாநவாந் மாம் ப்ரபத்யதே வாஸூதேவ: ஸர்வம்இதி ஸ மஹாத்மா ஸூதுர்லப:(ஸ்ரீ கீதை, 7 : 19.) 4‘என்னையே அடைகின்றவன் மஹாத்மா ஆவான்; அவன் கிடைப்பது அரிது,’என்றும், ‘இவர்கள் நல்ல மஹாத்மாக்கள்,’ என்றும் வருவன இறைவன் வார்த்தை அலவோ? 1சமுசாரத்திலே முமுக்ஷீவாய் எதிர்முகம் பண்ணின மாத்திரத்திலே சொல்லுகிறபடி இதுவானால், நித்தியசூரிகளை இப்படிச் சொல்லக் கேட்க வேண்டா அன்றே? (மேற்காட்டிய பிரமாணங்கள் எல்லாம் நித்தியசூரிகளைக் குறிப்பன அல்லவே? முமுஷுக்களையல்லவோ குறிப்பனவாகும்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘சமுசாரத்திலே’ என்று தொடங்கி.)
பெருமை – உதாரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீது ஆத்மைவ மே மதம் ஆஸ்தித: ஸஹியுக்தாத்மா மாமேவ அநுத்தமாம் கதிம்.(ஸ்ரீ கீதை, 7 : 18. )4‘உதாரர்கள்’ என்கிறபடியே, தன்னையே பிரயோஜனமாகப் பற்றினார்க்குப் போலே, செல்வம் முதலியவற்றை விரும்பியவர்கட்கும் ‘இதனையாகிலும் நம் பக்கல் கொள்ளப்பெற்றோமே! இவர்கள் நமக்குச் சர்வஸ்வதானம் பண்ணுகிறார்கள் அன்றோ?’(சர்வஸ்வ தானம் – எல்லாவற்றையும் கொடுத்தல்.) என்று இருக்கும் பெருமை. 5நாட்டார் படி அல்ல இவனது: நாட்டில் கொடுப்பார் உதாரராயிருப்பார்; இங்குக் கொள்வார் உதாரராயிருப்பார். யாதேனுமாகக் குறை தீர்ப்பார் உதாரராமித்தனை அன்றோ?
இவர்கள் உத்தேசியராவது எத்தனை நாள்களுக்கு?’ என்ன, வருமையும் இம்மையும் –தஸ்மை நமோ மதுஜித் அங்க்ரி ஸரோஜ தத்வ ஜ்ஞாந அநுராக மஹிமாதிஸய அந்தஸீம்நே நாதாய நாதமுநயே அத்ர பரத்ரசாபி நித்யம் யதீய சரணௌ ஸரணம் மதீயம்.( ஸ்தோத்திர ரத்நம்.) 1‘இவ்வுலகம் மேலுலகம் இரண்டிலும்’ என்கிறபடியே, இவ்வுலகம் மேலுலகம் என்னும் இரண்டிலும். இவ்வுலகத்தில் 2நாட்டாரோடு இயல்வொழித்து, அவ்வுலகத்தில் நாரணனை நண்ணுவித்து(திருவாய். 10. 6 : 2.), 3அடியார்கள் குழாங்களிலே உடன்கூட்டும் உபகாரகர். நம்மை அளிக்கும் பிராக்கள் – நம்மை உஜ்ஜீவிக்கும் ஸ்வாமிகள். சர்வேசுவரன் ஒரு நாள்வரையிலே தன்னிடத்தில் ஒடுக்கி வைத்து, ஒரு நாள் வரையிலே சமுசாரத்திலே 4தரு துயரம் தடாதே வைப்பான் அன்றோ? ஸ்ரீ வைஷ்ணவர்களோடே சேர்ந்து வசிக்கப்பெறில் ‘சமுசாரந்தானே நன்று’ என்னும்படி அன்றோ அவர்கள் படி? ஆதலின், ‘அளிக்கும் பிராக்களே’ எனத் தேற்றேகாரங் கொடுத்து ஓதுகிறார். மேலே 5‘நறு மா விரை நாண்மலர் அடிக் கீழ்ப் புகுதல் உறுமோ?’ (திருவாய். 8. 10 : 3.)என்றாரே அன்றோ?
தன்மை பெறுத்தித் தன் தாள் இணைக்கீழ்க் கொள்ளும் அப்பனை – 1‘மரணமானால்’ என்கிறபடியே, சரீரம் பிரியுமளவும் பொறுத்திருந்து உயிர் உடம்பின் நீங்குங் காலத்து நினையும் நினைவையும் பத்தியையும் இவர்களுடைய பணியாக்காமல் ததஸ்தம் ம்ரியமாணம்து காஷ்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மதபக்தம் நயாமி பரமாம் கதிம்.(ஸ்ரீ வராக சரமம். ‘பின்னர் கட்டையைப் போன்றும் கல்லைப் போன்றும் பரதந்திரனாயிருக்கிற என் பத்தனை உயிர் உடலை விட்டு நீங்குங் காலத்து நானே நினைக்கிறேன்; மேலான கதியை அடையச் செய்கிறேன்,’)2’அஹம் ஸ்மராமி – நானே நினைக்கிறேன்,’ என்கிறபடியே, தானே நினைத்து, வழி தெரியாதபடி இருக்றேன்’ என்கிறபடியே, தானே வந்து 1‘மாதவன் தன் துணையா நடந்தாள்’ (பெரிய திருமொழி. 3. 7 : 4.)என்கிற ‘கள்வன்கொல்’ என்கிற திருப்பதிகத்திலே பிராட்டியைப் போலே தன் சிறகின்கீழே கொண்டு, வழியிலுள்ளார் தலைமேல் தாங்கும்படி இவ்வருகுள்ளவற்றைக் கழித்துப் பரமபதத்திலே கொண்டு புக்கு,ஏஷ ஸம்ப்ரஸாத: அஸ்மாத் ஸரீராத் ஸமுத்தாய
பரஞ்ஜோதி: உபஸம்பத்ய ஸ்வேந ரூபேண அபிநிஷ்பத்யதே.(சாந்தோக்யம்)2’இந்த உயிர் இந்தச் சரீரத்திலிருந்து புறப்பட்டுப் பரஞ்சோதியாய் உள்ள பரம்பொருளையடைந்து’ என்கிறபடியே தனக்கே உரியதான உருவத்தோடு விளங்கும்படியாகச் செய்து, பின்னையும் விடாதே திருவடிகளே அணையாகத் தன் திருவடிகளின் கீழே இட்டுக்கொண்டு, இதுதான் இவனுக்கு உபகரித்தானாய் இருத்தல் அன்றிக்கே, தன் பேறாக நினைத்திருக்கும் மஹோபகாரகனை.ஸாயுஜ்யம் ப்ரதிபந்நா: யே தீவிரபக்தா: தபஸ்விந: கிங்கரா மம தே நித்யம் பவந்தி நிருபத்ரவா. 3‘எவர் ஒருவர் மிக்க பத்தியையுடையவராய் உபாசனை செய்து எனது சாயுஜ்ய பதவியை அடைகின்றாரோ அவர் விரோதி கழிந்தவராய் எப்பொழுதும் என்னுடைய கைங்கரிய பரர் ஆகின்றார்,’ எனப்படுதலால் ‘தன் தாளிணைக் கீழ்க்கொள்ளும்’ என்கிறார். ‘தன்மை பெறுத்தி’ என்றது, ‘தனது சொரூபம் தோன்றும்படி செய்து’ என்றவாறு
நடைபெற அங்கி பகல்ஒளி நாள்உத்த ராயணம்ஆண்டு
இடைவரு காற்றுஇர விஇர வின்பதி மீன்வருணன்
குடையுடை வானவர் கோன்பிர சாபதி என்றிவரால்
இடையிடை போகங்கள் எய்தி எழிற்பதம் ஏறுவரே.’(ஸ்ரீ தேசிகப் பிரபந். அதிகார சங். 28)
தொன்மை பிதற்ற வல்லாரை – இயற்கையாக அமைந்த வள்ளல் குணத்திலே ஈடுபட்டு முறை கெடப் புகழுமவர்களை-தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷூ நராதமாந் க்ஷிபாமி அஜஸ்ரம் அஸூபாந் ஆஸூரீஷ்வேவ யோநிஷூ.(ஸ்ரீ கீதை, 16 : 19.) 1‘என்னைத் தூஷித்தவர்களையும் துவேஷம் செய்தவர்களையும் கொடிய தன்மையுடையவர்களையும் பிறப்பு இறப்பு வழிகளிலே என்னை அடைவதற்குத் தடையாகவுள்ள பிறவிகளிலே எப்பொழுதும் தள்ளுகிறேன்,’ என்று தள்ளுமது இவன் செய்த குற்றங்களைக் கண்டு ஆகையாலே, அது ஒரு காரணம் பற்றி வந்த தன்மையே; இயற்கையான நிலையாவது, இப்படிப் பாதுகாத்தலேயாம்
நம்பனை – நம்பப்படுமவனை; 2‘எத்தகைய தீய நிலையிலும் ஆத்துமாவுக்குத் தஞ்சமானவனை’ என்றபடி. ‘மேற்பாசுரத்திலே அடியார்களை நம்பர் என்றாரே?’ எனின், ‘மேற்சொன்னவர்களும் நம்பர் ஆகைக்கு அடியானவனை என்கிறார்’ இப்பாசுரத்தில். இதனால், 3‘இவனை ஒழிந்த பந்துக்கள் நம்பத் தகுந்தவர்கள் அல்லர்’ என்கை; ஸபித்ராச பரித்யக்த: ஸூரைஸ்ச ஸமஹர்ஷிபி:
த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ ஸரணம் கத:(ஸ்ரீ ராமா, சுந், 38 : 33.)4‘அந்தக் காகாசுரன் தகப்பனாலும் மஹரிஷிகளோடு கூடியிருக்கின்ற தேவர்களாலும் விடப்பட்டவனாய் மூன்று உலகங்களிலும் நன்றாகத் திரிந்து பின் அந்தப் பெருமாளையே புகலிடமாக அடைந்தான்,’ பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றனாய் வளர்த்து என்னுயிராகி நின்றானை’ என்றார் திருமங்கை மன்னன். ஆக, இப்படி, எல்லா நிலைகளிலும் நம்பத்தகுந்தவன் சர்வேசுவரனே என்பதனைத் தெரிவித்தபடி
ஸபித்ராச – ஈசுவரன் தனக்கும் ஆகாதவன்றும் தஞ்சமாவான் தானேயாயிற்று. ‘பெருமாள் பக்கல் பண்ணின அபராதத்தைக் கண்டு தமப்பன் கை விட்டான். சகாரத்தாலே தாயும் கைவிட்டாள்,’ என்கிறது; அவள் பற்று முன்னாகப் பற்றும் இவன் விடும் போது அவளும் விட்டாளாக வேணுமிறே. வாத்சல்யம் உறைத்த இடத்திலேயிறே முந்துற விழுவது; ஆகையாலே, அவன் காலிலே முந்துற விழுந்தான்; அவன் மையெழுதி மஞ்சள் பூசிப் புறப்பட்டு நின்றாள்; இவனும் குடநீர் வழித்து நின்றான், பரித்யக்த: – இவன் விருத்தஹாநி கண்டு ‘பண்டே விட்டிலோமோ?’ என்றார்கள். ஸீரைஸ்ச – மாதா பிதாக்கள் கைவிட்டாலும் சஜாதீயர் விடாதே கைக்கொள்ளுவர்களாயிற்று, ‘இவர்கள் முடிய விடுகிறார்களோ?’ என்னுமத்தாலே ‘அவர்களுக்குப்பிரியம்’ என்று நினைத்து. ஸ மஹர்ஷிபி: – அவர்கள் விட்டாலும் விடாத ஆந்ருஸம்ஸ்யப் பிரதானரான ருஷிகளும் விட்டார்கள். ஆந்ருஸம்ஸ்யத்துக்கு விஷய வியவஸ்தை உண்டிறே. பெற்றவர்கள் கைவிட்டால் நாட்டார்க்குப் பணியன்றிறே காக்கை நோக்குகை; ஆகையாலே, த்ரீந்லோகாந் ஸம் பரிக்ரம்ய – லோகங்களில் திறந்து கிடந்த வாசல் எல்லாம் ஒரு கால் நுழைந்தாற்போலே ஒன்பதின்கால் நுழைந்தானாயிற்று; ‘ஒரு கால் அல்லா ஒரு காலாகிலும் கிருபை பிறக்கக் கூடுமோ?’ என்று; இவன் புகப்புகத் தள்ளிக் கதவை அடைத்தார்கள். தமேவ சரணம் கத: – தன் மேலே பிரஹ்மாஸ்திரத்தைத் தொடுத்துக்கொண்டு நிற்கிறவர் திருவடிகளிலே வந்து விழுந்தானாயிற்று. அதாவது, ‘அரிசினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள்தன் அருள் நினைந்தே
அழுங்குழவி’ (பெருமாள் திருமொழி) என்கிறபடியே; அவன் திருவடிகளை ஒழியப் புகல் இல்லாமை.
மஹாவியாதியாளனானவன், ‘எனக்கு இன்ன போது இன்ன வியாதி வந்து நலியும்; அப்போது நான் என்னை அறியேன்; பிரானே! அப்போது ரக்ஷிக்கவேணும்,’ என்று ஸ்வஸ்த தசையிலே அறிவித்து வைத்தால் அவர்கள் உணர்ந்திருந்து நோக்குமா போலே, தான் தனக்கு உதவாத தசையிலும் ஈசுவரன் ரக்ஷிக்கும்படி. இது, பெரிய திருமொழி, 8. 9 : 7.
திருமார்பனை – அவளுக்குப் பிரியமாக.யஸ்யா வீக்ஷ்ய முகத் தத் இங்கித பராதீந: விதத்தே அகிலம், க்ரீடா இயம்கலு ந அந்யதா அஸ்ய ரஸதா ஸ்யாத் ஐகரஸ்யாத் தயா (ஸ்ரீஸ்தவம், 1.)2‘பிராட்டியினுடைய முகத்தை நோக்கிக்கொண்டு அந்த முகத்தின் குறிப்புகளைப் பின் சென்றவனாய்ப் படைத்தல் முதலான காரியங்களைச் செய்கிறான்,’ என்னக் கடவதன்றோ?
அடி ஆர்ந்த ஆயிரத்துள் – இருக்கு வேதம் போலவும்,பாதபத்த: அக்ஷரஸம: தந்திரீலய ஸமந்வித: ஸோகார்த்தஸ்ய ப்ருவ்ருத்த: மே ஸ்லோக: பவது நாந்யதா.( ஸ்ரீராமா. பால. 2 : 18.) 1‘நான்கு அடிகளோடு கூடியதும் ஒவ்வோரடியும் எழுத்துக்களால் ஒத்திருப்பதும்’ என்கிற ஸ்ரீ ராமாயணம் போலவும் அடிகள் நிறைவுற்ற ஆயிரம்.
யதா தம் புருஷ வ்யாக்ரம் காத்ரை: ஸோகாபிகர்ஸிதை:
ஸம்ஸ்ப்ருஸேயம் ஸகாமா அஹம் ததா குரு தயாம் மயி.(ஸ்ரீராமா. சுந். 40 : 3, இது, திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.)மிக்க அன்போடு கூடின யான் துக்கத்தால் மிக இளைத்திருக்கிற உறுப்புகளால் ஆடவர் திலகனான அவ்விராமபிரானைத் தொடுவதற்குத் தகுதியாக நீ என்னிடத்தில் அருளைச் செய்’ என்றாள் அன்றோ பிராட்டியும்? ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், சிலர் பட்டினி கிடக்கச் சிலர் ஜீவிக்குமாறு போன்று, இவ்வுடம்பைக்கொண்டு அணைய ஆசைப்பட்டு, இவ்வாசையோடே முடிந்துபோய் இனி வேறு ஒரு சரீரத்தை மேற்கொண்டு அவரை அனுபவிக்க இராமல், ஆசைப்பட்ட இவ்வுறுப்புகளைக்கொண்டே நான் அநுபவிக்கும்படி செய்து தரவேண்டும் என்றாள்
இதர விஷயங்களைப்போன்று இவ்விஷயம் ரசிக்க வேண்டும் என்று.-யாப்ரீதி: அவிவேகாநாம் விஷயேஷூ அநபாயிநீ
த்வாம் அநுஸ்மரத: ஸாமே ஹ்ருதயாத் மாபஸர்பது.(ஸ்ரீ விஷ்ணு புரா. 12. 20 : 19.) 1’அறிவில்லாதவர்களுக்குச் சிற்றின்பங்களில் இடையீடு இல்லாத பிரீதி இருப்பதைப் போன்று, தேவரீரை நினைக்கிற எனக்கு அத்தகைய பிரீதியானது மனத்தில் நீங்காதிருக்க வேண்டும்,’ என்றான் ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான்.
ஆழ்கடலைக் கடைந்தாய் –ஸமுத்ரம் ராகவோ ராஜா ஸரணம் கந்துமர்ஹதி
காநித: ஸகரேணாயம் அப்ரமேயோ மஹோததி:(ஸ்ரீராமா. யுத். 19 : 31.)3‘அளவிட முடியாத கடல் என்கிறபடியே, ஒருவரால் அளவிடப்போகாதபடி இருக்கிற கடலைக் குளப்படி போலே கலக்கினவனே! மேல் திருவாய்மொழியில் ‘ஆர் அமுது ஊட்டிய அப்பனை’ என்றது, பின்னாடுகிறபடி
கருமுகில் தாமரைக் காடு பூத்துநீடு
இருசுடர் இருபுறத்து ஏற்றி ஏடுஅவிழ்
திருவொடும் பொலியஓர் செம்பொற் குன்றின்மேல்
வருவபோற் கலுழன்மேல் வந்து தோன்றினான்.’–கம்பநாட்டாழ்வாருடைய திருவாக்கு
மலையின் மேலே இருக்கின்ற நீர் உண்ட மேகம் போல’ என்பது 1பாரதம். –ததோ மஹதி பர்யங்கே மணிகாஞ்சந சித்ரிதே த்தர்ஸ க்ருஷ்ணம் ஆஸீநம் நீலம்மேரௌ இவ அம்புதம்.
நெடியானே!’ என்றால் காணவேணும் கேட்கவேணும் என்கிற சொல்லால் தலைக்கட்டமாட்டுகின்றது இல்லை; ‘நெடியானேஎ!’ என்று பாடு ஓடிக் கிடக்கின்றது. துக்காபிதப்த: பரத: ராஜபுத்ரஹ மஹாபல: உக்த்வா ஆர்ய இதி ஸக்ருத்தீநம் புந: நுவாச கிஞ்சந.(ஸ்ரீராமா. அயோத். 99 : 88.)5‘துக்கத்தால் மிகுதியும் தபிக்கப்பட்டவராயும் மிக்க பராக்கிரமத்தையுடையவராயும் இருக்கிற ஸ்ரீ பரதாழ்வான் ஒரு முறை தீனசுரத்தோடு ‘ஆர்யா!’ என்று கூறி, வேறு வார்த்தை ஒன்றையும் கூற இல்லை,’ என்று சொல்லப்பட்ட ஸ்ரீ பரதாழ்வானைப் போன்று கிடக்கிறது என்றபடி.
மந: பூர்வோ வாக்உத்தர:(யஜீஷீயம் சுருதி.)மனம் முன்னே வாக்குப் பின்னே’ என்கிறபடியே, ‘மனத்துக்குப் பின்னதான வாக்கு, மனத்தின் தொழிலையும் தன் தொழிலையும் ஆசைப்படாநின்றது,’ என்கிறார்.
ஒன்றுக்கும் வேறுபடாதவனான திருவடியும் இலங்கையில் கட்டளையைக் கண்டு,அஹோ வீர்யம் அஹோ தைர்யம் அஹோ ஸத்வம்
அஹோ த்யுதி: அஹோ ராக்ஷஸ ராஜஸ்ய ஸர்வ லக்ஷ்ண யுக்ததா.(ஸ்ரீராமா. சுந்த. 49 : 17.) 4‘இது என்ன வீர்யம்! இது என்ன தைர்யம்! இது என்ன பலம்! இது என்ன ஒளி! அரக்கர் தலைவனான இராவணனுக்கு எல்லா இலக்கணங்களும் பொருந்தி இருப்பது ஆச்சரியம்!’ என்று மதித்த ஐஸ்வர்யமாதலின், ‘தண் இலங்கை’ என்கிறார். ‘தண்’ என்பது ஆகுபெயரால் கட்டளைப்பாட்டைக் காட்டுகிறது.
என்று தடவும் என் கைகள் – படலை அடைத்து உள்ளே புக்குக் 4கொண்டியிலே பிடிக்கக் காணும் தேடுகிறது. அன்றிக்கே, ‘வெண்ணெய் களவு கண்டு புசித்த விருத்தாந்தத்தை நினைந்தவாறே கைகளுக்குக் கண் தோற்றுகிறது இல்லை; அதனாலே, தேடுகின்றன’ என்னுதல்.ராமம்மே அநுகதா த்ருஷ்டி: அத்யாபி ந நிவர்த்ததே நத்வா பஸ்யாமி கௌஸல்யே ஸாதுமா பாணிநா ஸ்ப்ருஸ.(ஸ்ரீராமா. அயோத். 42 : 34.) 5‘கடல் கொண்ட பொருள் மீளுமோ? அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்று பட்டினி விட்ட என் கண்கள் மீளுமோ? நல்லது கண்டு கால் தாழ்ந்தத்தை இனி நம்மது என்று வழக்குப் பேசினால் பசை உண்டோ? தன்னைக் கொண்டு காரியம் கொள்ள வேண்டும் இன்றைக்கும் உதவுகிறது இல்லை; அவரைக் காணாவிட்டால், அவரைப் பெற்ற சௌபாக்யமுடைய உன்னைக் கண்டு தரிக்க வேண்டும் இவ்வளவிலும் மீளுகிறது இல்லை,’ என்றான் தசரத சக்கரவர்த்தி.
என்னுடைய பார்வையானது ஸ்ரீராமனைப் பின் சென்றது, இப்போதும் திரும்பவில்லை; கௌஸல்யே! உன்னைப் பார்க்கிறேன் இல்லை; என்னைக்
கையினால் நன்றாகத் தொடு,’ என்பது. ‘கடல் கொண்ட வஸ்து மீளுமோ?’ என்பது, ‘ராமம்’ என்ற சொல்லிற்கு பாவம், ‘அறுபதினாயிரம்’ என்றது முதல் ‘பசையுண்டோ?’ என்றது முடிய, ‘மே’ என்ற சொல்லிற்கு பாவம். பசை – பிரயோஜனம். ‘தன்னைக்கொண்டு’ என்ற இடத்தில் ‘தன்னை’ என்றது கண்களை.
:(ஸ்ரீ விஷ்ணு தத்துவம்.)3சர்வேசுவரனை வணங்குவதற்காகவே கை கால் முதலிய அவயவங்களோடு கூடின விசித்திரமான இந்தச்சரீரம் ஆதிகாலத்தில் உண்டாக்கப்பட்டது,’ என்கிறபடியே, ‘கை வந்தபடி செய்ய அன்றோ இவர் ஆசைப்படுகிறது? வாய்க்கு ஏத்துதல் போன்று கைக்குத் தொழுகையும் ஆதலின், வாய் வந்தபடி சொல்லவும் கை வந்தபடி செய்யவுமே அன்றோ இவர் ஆசைப்படுகிறார்?’ என்றபடி. வேறு ஒரு பிரயோஜனத்துக்காகத் தொழுதால் பிரயோஜனத்தளவிலே மீளும்; சாதனம் என்ற எண்ணத்தோடு தொழில் பெற வேண்டிய பயன் கிடைத்த அளவிலே மீளும்; அங்ஙன் அன்றிக்கே, இதுவே செயலாய் இருத்தல் என்பார், ‘தொழுது தொழுது’ என்கிறார்.
முத்தர்களுக்கு இலக்கணம் சொல்லும் போது–முக்தாநாம் லக்ஷணாம் ஹி ஏதத் ஸ்வேத் த்வீபநிவாஸிநாம்
நித்யாஞ்ஜலிபுடா ஹ்ருஷ்டா: நம இதி ஏவ வாதிந (நாராயணீயம்)4சுவேதத் தீவில் வசிக்கின்றவர்களுக்கு எது இலக்கணமோ, அதுவே முத்தர்களுக்கு இலக்கணமாம்; ‘அவர்கள் தன்மை என்னை?’ எனில், எக்காலத்திலும் கைகூப்பி வணங்கிக்கொண்டே இருப்பார்கள்; அவ்வாறு செய்தலே தமக்கு விருப்பம் என்று சந்தோஷத்துடன் இருப்பார்கள்; ‘நம:’ என்று எப்பொழுதும் சொல்லிக்கொண்டேயிருப்பார்கள்,’ என்று சுவேதத்தீவில் வசிக்கின்றவர்கள் படியைச் சொல்லியிருத்தல் ஈண்டு நினைத்தல் தகும்.
முக்தாநாம் லக்ஷணம் ஹ்யேதத் – என்று முத்தர்க்கு லக்ஷணம் சொல்லுகிறவிடத்தில் ஸ்வேத த்வீப வாசிகள் படியாகச் சொல்லி அவர்களையிறே நித்யாஞ்சலிபுடா: என்கிறது. ஹ்ருஷ்டா: – பசியிலே உண்ணப்பெற்றாற் போலேயாயிற்றுத் தொழுதால் இருக்கும்படி. நம இத்யேவ வாதிந: – இதுவே சீலமாயிருக்கை.
சக்ஷூஸ்ச த்ரஷ்டவ்யஞ்ச நாராயண: ஸ்ரோத் ரஞ்ச ஸ்ரோதவ்யஞ்ச நாராயண:(சுபாலோபநிடதம்.)-பார்க்கின்ற கண்களும் பார்க்கப்படுகிற பொருள்களும் நாராயணனே,’ என்கிறபடியே, ‘கண்ணுக்கு வகுத்த அப்பரமனைக் காண வருமோ?’ என்னாநின்றது -ஆயின், அறிவு இல்லாத கரணங்களுக்கு ‘வருங்கொல்’ என்று விடாய்க்கை கூடுமோ? எனின்,(ஸ்ரீராமா. சுந். 40 : 3.) 4‘அன்போடு கூடின யான் துக்கத்தால் மிக இளைத்திருக்கிற அவயவங்களால் ஆடவர் திலகனான ஸ்ரீ ராமபிரானை எப்படித் தொடுவேனோ?’ என்றாள் பிராட்டி.
நஇஹ அபிக்ரமநாஸ: அஸ்தி ப்ரத்யவாய: நவித்யதே
ஸ்வல்பமபி அஸ்யதர்மஸ்ய த்ராயதே மஹத: பயாத்.-(ஸ்ரீகீதை, 2 : 40.)-சாஸ்திரங்களிற் கூறப்பட்ட காரியங்களைத் தொடங்குவது வீண் ஆகாது; தோஷமும் இல்லை,’ என்பது ஸ்ரீகீதை
பாவியேன் நெஞ்சம் புலம்ப’ என்கிறார்.மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹத் அஸ்தி நஸம்ஸய: ஸமர்த்தாவபி தௌ யத் மாம் நாவேக்ஷேதே பரந்தபௌ.(ஸ்ரீராமா. சுந், 38, 48.)1‘என்னுடைய தீவினைகள்தாம் காரணம்’ என்றாள் பிராட்டி
ஸரைஸ்து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந:
மாம்நயேத் யதி காகுத்ஸ்த: தத்தஸ்ய ஸத்ரு ம் பவேத்.(ஸ்ரீராமா, சுந். 9 : 30.)இராக்கதர்களைக் கொன்று என்னை அழைத்துச் செல்வாராயின், அது அவருக்குத் தக்க செய்யலாம்,’ என்று இருக்கப் பெற்றேன் அல்லேன்;
காலஸ்ய ச ஹி ம்ருத்யோஸ்ச ஜங்கம ஸ்தாவரஸ்யச
ஈஸதே பகவாந் ஏக: ஸத்யமேதத் ப்ரவீமி தே.(பாரதம் உத்தியோகபர். 68: 13.)-காலத்திற்கும் எமனுக்கும் இயங்கியற்பொருள் நிலையியற்பொருள்கட்கும் பகவான் ஒருவனே ஏவுகின்றவன் ஆகிறான்; உனக்குச் சொல்லுகிறேன்; இது சத்தியம்,’ என்பது சஞ்சயன் கூற்று
பதார்த்தங்களினுடைய உற்பத்திக்கு முன்பும் நின்று இவையழிந்தாலும் நிற்கக் கடவ காலத்துக்கும், இவற்றையெல்லாம் அழிக்கின்ற தேவர்களுக்கும்
இவற்றை எல்லாம் படைக்கின்ற தேவர்களுக்கும், ம்ருத்யு: யஸ்ய உபஸேசநம் க இத்தா வேத யத்ரஸ:(ஆயின், ‘மிருத்யு’ என்ற சொல்லானது யமன் ஒருவனைக் குறிக்குமேயன்றி அழிக்கின்றவர்களைக் காட்டுமோ?’ எனின்,) ‘ம்ருத்யு: யஸ்ய உபசேஸநம்’ என்று ‘ம்ருத்’ சப்தத்தாலே அழிக்கின்ற தேவர்களைச் சொல்லக் கடவதிறே.
(படைக்கின்ற தேவர்கள் என்ற பொருள் ‘மிருத்யஸ் ச’ என்ற பதத்திலேயுள்ள ‘சகாரத்’தால் கொள்ளப்பட்டது.) சிருஷ்டிக்குக் கர்மீபவித்த
பதார்த்தங்களினுடைய உற்பத்திக்கு முன்பும் உளனாய், அழிந்தாலும் உளனாய், என்றும் ஒக்க உணர்ந்திருந்து சிரஷ்டாக்களுக்கும்
ஸம்கர்த்தாக்களுக்கும் ஸ்ருஞ்சயருமான இவற்றையடையத் தன்புத்தி அதீனமாக நியமிக்கிறான் ஒருவனே! ‘சத்யம் இத்யாதி’ – பகவத்விஷயத்தில் அர்த்தவாதமில்லை; தன்னை ‘ஆப்தன்’ என்று விஸ்வசித்தவனுக்குப் பொய் சொல்வாரில்லை என்பது. ((‘மிருத்யு’ இது, கடவல்லீ உபநிடதம், 1 : 2.)
உன்னை எந்நாள் கண்டு கொள்வன் – வடிவழகும் குணங்களும் விடலாய் இருந்தன இல்லை; காலக் கழிப்புச் சொல்ல ஒண்ணாதபடியாய் இருந்தது; ஆனபின்பு, நான் உன்னைக் காண்பது என்று சொல்லாய்? என்றது, (ஸ்ரீராமா. யுத். 117 : 1.) 2‘பதினான்கு வருஷங்களும் முடிவுற்ற பின்னர், பஞ்சமி திதியில்’ என்றாற்போன்று, நீயும் ‘நம்மை இந்நாள் காணக் கடவை என்று சொல்லாய்’ என்றபடி.
வாணன் உள் வன்மை தீர ஓர் ஆயிரம் தோள் துணித்த புள் வல்லாய் –அத ஸ: அபயங்கதோ பவதி.(தைத்திரீயம்)1‘சர்வேசுவரனை அடைந்த பிறகு அந்த சீவாத்துமா பயம் இல்லாதவன் ஆகிறான்’ என்கிறபடியே, பகவானுடைய அடியார்கள் இருப்பது போன்று, புன் சிறு தெய்வத்தைப்பற்றி இருந்த வாணனுடைய நெஞ்சுவலி 2கைமேலே போகும்படியாகப் பெரிய திருவடியின்மேலே ஏறிச் சாரிகை வந்தவனே(கைமேலே’ என்றது, சிலேடை: ‘உடனே’ என்பதும், ‘கையோடே’ என்பதும் பொருள். ‘)
உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே –ஸக்யா லோபயிதும் ந அஹம் ஐஸ்வர்யேண தநேந வா
அநந்யா ராகவேண அஹம் பாஸ்கரணே ப்ரபா யதா.(ஸ்ரீ ராமா. சுந். 21 : 15.)4சொரூபஞானம் பிறந்தவாறே அவன்பக்கல்நின்றும் பிரிந்தாற்போலே இருக்கிறது காணும் இவர்க்கு. 5‘சூரியனோடு சேர்ந்த ஒளியைப் போன்று நான் ஸ்ரீராமபிரானோடு சேர்ந்தேயிருக்கிறேன், வேறுபட்டவள் ஆகேன்,’ என்கிற பிராட்டி அசோகவனத்திலே பிரிந்திருந்தாற் போலே இருக்கிறதுகாணும், சொரூபஞானம் பிறந்தவாறே உடம்புடன் இருக்கும் இருப்பு,’ என்றபடி
உன் கழல் காணிய –தத: கடகடாஸப்த ஸமாகர்ணந தத்பர: ஆஜகாம வ்ரஜஜந: ததர்ஸச மஹாத்ருமௌ. 2‘அப்போது கடகட என்ற ஓசையைக் கேட்டுப் பரவசப்பட்டு’ என்கிறபடியே, கடகட என்று அவைமுரிந்து விழுகிற போதை ஓசையைக் கேட்டுப் புரிந்து பார்த்து முன் இல்லாத காட்சியைக் கண்ட காரணத்தால் மலர்ந்த அக்கண் போலே சிவந்திருக்கிற திருவடிகளைக் காணவேண்டும் என்று ஆசைப்பட்டு. என்றது,வ்யக்ராயாம் அத தஸ்யாம் ஸ கர்ஷமாண உலூகலம் யமளார்ஜூநயோ:மத்யே ஜகாம கமலேக்ஷண:(ஸ்ரீ விஷ்ணு புரா. 5 : 6.மஹரிஷி’ என்றது, ஸ்ரீ பராசரபகவானை.) 3‘தாமரைக் கண்ணரான அந்தக் கண்ணபிரான் சென்றார்’ என்று புரிந்து பார்த்த கண்களைக் காண ஆசைப்பட்டான் மஹரிஷி; தவழ்ந்து போகிற போதைத் தம்முடைய
சேஷத்துவத்திற்குத் தகுதியாகத் திருவடிகளைக் காண ஆசைப்படுகிறார் இவர்,’ என்றபடி
ஸ ஏகதாபவதி த்ரிதாபவதி பஞ்சதா.(சாந்தோக்யம், 26.)அந்த முத்தன் பல சரீரங்களை மேற்கொள்ளுகிறான்,’ என்கிறபடியே, பல சரீரங்களை மேற்கொண்டு அவ்வச்சரீரங்களில் உறுப்புகளும் பூர்ண அனுபவம் பண்ணலாம்படியான தேசத்திலே புகப்பெறுவர்,’
ப்ராத: தேவேதி க்ருஷ்ணேதி கோவிந்தேதிச ஜல்பதாம்
மத்யாஹ்னேச அபராஹ்ணே சய: அவஸாத:ஸ உச்யதாம்.(ஸ்ரீ விஷ்ணு புராணம்.)-காலையிலும் நடுப்பகலிலும் மாலையிலும் தேவா என்றும், கோவிந்தா என்றும் சொல்லுகின்றவர்கட்கு ஏதேனும் குறை உண்டோ? இருந்தால் சொல்லப்படட்டும்,’ என்கிறபடியே, திருநாமத்தைச் சொன்னால் உடனே இடிவிழும் என்று வரும் கேட்டினைச் சொல்லுங்கோள்; இன்றேல் திருநாமத்தைச் சொல்லுதல் செய்யுங்கோள்,’ என்றான் அன்றோ ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் அசுரர் குழந்தைகளை?
அன்றிக்கே,ஸ்வபுருஷம் அபிவீக்ஷ்ய பாஸஹஸ்தம் வததியம: கில தஸ்ய கர்ணமூலே.பரிஹர மதுஸூதந ப்ரபந்நாந்
ப்ரபு: அஹம் அந்யந்ருணாம் ந வைஷ்ணவாநாம்.(ஸ்ரீ விஷ்ணு புராணம்-3. 7 : 14.) )2‘காதுகளின் மூலத்தில்’ என்கிறபடியே, ‘அரசனுடைய மனைவியின் மேல் வைக்கும் விருப்பம் விலக்கத்தக்கது,’ என்பது போன்று, ஓலக்கத்திற்சொல்லும் வார்த்தையன்று இது. சேவிக்கத் தகாதாரைச் சேவித்தல் விலக்கத்தக்கது என்பதாகவும் என் வாயாற்சொல்ல ஒண்ணாது; ஆகையாலே, நான் சொன்னால் அது எனக்கு விரோதமாம் அன்றோ? யமன்,
கையில் பாசத்தைத் தரித்த தன் கிங்கரனைப் பார்த்துப் ‘பகவானிடத்தில் பத்தியுள்ள பாகவதர்களை விட்டுவிடு; நான் மற்றையோர்க்கே எஜமானன்
பாகவதர்களுக்கு எஜமானன் அலன்’ என்று அவனுடைய காதின் அடியில் சொன்னான் அல்லவா?
திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம்
மறந்தும் புறந்தொழா மாந்தர் – இறைஞ்சியும்
சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும்தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு.’– என்றார் திருமழிசைப்பிரான்.
என் நா –த்ரய ஏவாதநா ராஜந் பார்யா தாஸ: ததா ஸூத:
யத்தே ஸமதிகச்சந்தி யஸ்யைதே தஸ்யதத்தநம்.(பாரதம், உத்தியோகபர்வம்.)-1இவர்கள் யாருக்கு உரிமைப் பட்டவர்களோ, இவர்களுடைய செல்வமும் அவருடையது,’ என்கிறபடியே, நான் அவனுக்கு அடிமை ஆகையாலே, எனக்குக் கரணமாய் அவனுக்கு அடிமை ஆன என் நா.
உளன் ஆகவே எண்ணி – 1இலன் ஆகவே அறுதியிட்டு இருக்கிறார் ஆயிற்று இவர். ‘அந்தப் பரம்பொருளைத் தவிரப் பலவகைப்பட்ட பொருள்கள் ஒன்றும் இல்லை,’ என்கிறபடியே, அவனுக்குப் புறம்பாய் இருப்பது ஒரு பொருள் இல்லை என்று இருக்கும்படியாலே.மநஸைவ இதம் ஆப்தவ்யம்ந இஹ நாநாஸ்தி கிஞ்சந ம்ருத்யோ: ஸம்ருத்யும் கச்சதி ய இஹ நாநேவபஸ்யதி.( 2‘நினைக்கின்ற காலத்திலும் அவனை உளன் ஆக நினையாத போது ‘இவனும் இல்லாதவன் ஆகிறான்’ என்கிறபடியே, தாம் உளர் அன்றிக்கே இருப்பர் அன்றோ? அவனை ‘உளன்’ என்று நினைத்துத் தான் உளனாக வேண்டியிருக்க, அவனை ‘இலன்’ என்று தான் உளனாக விரகு இல்லையே?’ என்றபடி. 3தான் உளன் ஆகையாவது, பிரஹ்மஞானம் உண்டாகை அன்றோ?நேயம் அஸ்தி புரீ லங்கா நயூயம் நச ராவண: யஸ்மாத் இக்ஷ்வாகு நாதேந பத்தம்வைரம் மஹாத்மநா.(ஸ்ரீராமா. சுந். 43 : 25.)4தன்னைக் கட்டிக்கொண்டு போகாநிற்க, ‘எந்தக் காரணத்தால் மஹாத்துமாவான பெருமாளோடு விரோத உணர்ச்சி உண்டாயிற்றோ, அந்தக் காரணத்தால் இலங்கை என்ற நகரமும் இல்லை; நீங்களும் இல்லை; இராவணனும் இல்லை,’ என்றானே அன்றோ திருவடி?அழிவு அண்மையில் இருப்பதனாலே ‘நேய மஸ்தி’ என்று திருவடி சொன்னாற்போன்று, இவரும் இவர்களுடைய நிலையாமையைத் திருவுள்ளம் பற்றி, ‘இவர்கள் தங்களை நித்தியராக நினைத்திருப்பதே!’ என்கிறார் என்பது கருத்து. ஓர் ஊசி நிற்கிறதாகவும், அதன்மேலே ஒரு மேரு நிற்கிறதாகவும் நினைக்குமாறு போன்று குவாலாக மதிக்கிறான் என்பார்,
ஒன்று ஒழிவு இல்லாத பல் ஊழிதோறு ஊழி நிலாவ – காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையும் இடைவிடாமல் தங்கும்படி. என்றது,
ஸகலு ஏவம் வர்த்தயந் யாவதாயுஷம் ப்ரஹ்மலோகம்
அபிஸம்பத்யதே நசபுநராவர்த்ததே நசபுராவர்த்ததே.(சாந்தோக். உப. 8 : 15.) 2’மீண்டும் வருகிறான் இல்லை’ என்கிறபடியே, ‘உயிர் உள்ள காலம் வரையிலும் சரீரத்தின் சம்பந்தம் அற்று வழுவிலா அடிமை செய்கைக்கு’ என்றபடி. காலத்தால் வேறுபாடு இல்லாத தேசத்திலே (பரமபதத்தில்) அனுபவத்தைச் சொல்லாநிற்கச்செய்தேயும், காலம் நடையாடும் தேசத்திலே வாழ்கின்றவர்
இதி உக்த்வா பருஷம் வாக்யம் ராவணம் ராவணாநுஜ:
ஆஜகாம முஹூர்த்தேந யத்ர ராம:ஸலக்ஷ்மண:(ஸ்ரீராமா. யுத். 17 : 1.)ஆஜகாம – வந்தார்’ இளையபெருமாளோடு கூடின பெருமாள் எங்கு இருப்பாரோ அங்கு ஸ்ரீ விபீஷணாழ்வான் வந்தார்
வான் கவி – கனத்த கவி. அதாவது,தத் உபகத ஸமாஸ ஸந்தியோகம், ஸம மதுர உபநதார்த்த வாக்ய பத்தம் ரகுவர சரிதம் முநிப்ரணீதம், தஸஸிரஸஸ்சவதம் நிஸாமயத்வம்.(ஸ்ரீராமா. பால. 2 : 48.) 1‘சேர்க்கப்பட்ட தொகை சந்தி இவைகளையுடையதும்’ என்கிறபடியே, சொற்செறிவுடைத்தாய் இருக்கை. ஆக, ‘மிகவும் நல்லவாய் அரணியவான கவிகளைக்கொண்டு’ என்றபடி.
தன்னாகவே கொண்டு –இதம் ஜ்ஞாநம் உபாஸ்ரித்ய மம ஸாதர்ம்யமாகதா.(ஸ்ரீ கீதை, 14 : 2.)1‘என்னுடைய உருவம் முதலானவைகளை அடைந்தவர்கள்’ என்றும், 2‘மேலான ஒப்புமையை அடைகிறார்கள்’ என்றும், 3‘தம்மையே ஒக்க அருள்செய்வர்’ என்றும் கூறப்படுகின்றவாறே தன்னோடு ஒக்கச் செய்து. அன்றிக்கே, ‘தனக்கே உரியவனாகக் கொண்டு’ என்னுதல். சன்மம் செய்யாமையும் கொள்ளும்
பௌமம் மநோரதம் ஸ்வர்க்யம் ஸ்வர்க்கி வந்த்யம் ச யத்பதம்
ததாதி த்யாயிநாம் நித்யம் அபவர்க்க ப்ரதோ ஹரி:(விஷ்ணு தர்மம்._-மோக்ஷத்தைத் தருபவரான பகவான், தியானம் செய்கின்றவர்களுக்கு இவ்வுலகில் விருப்பமானவற்றையும், சுவர்க்கங்களில் உள்ள பேறுகளையும், சுவர்க்கத்தில் உள்ளவர்களால் சேவிக்கப்படுகின்ற அந்தப் பரமபதத்தையும் கொடுக்கிறார்’,
தேவேந்த்ர: த்ரிபுவநம் அர்த்தம் ஏகபிங்க:
ஸர்வத்திம் த்ரிபுவநகாம் ச கார்த்தவீர்ய:
வைதேஹ: பரமபதம் ப்ரஸாத்ய விஷ்ணும்
ஸம்ப்ராப்த: ஸகல பலப்ரத: ஹி விஷ்ணு:- (விஷ்ணு தர்மம்.)3‘விஷ்ணு பகவான் எல்லாப் பலன்களையும் கொடுக்கிறார்’
யே யஜந்தி பித்ரூந் தேவாந் ப்ராஹ்மணாந் ஸஹூதாஸநாந்
ஸர்வபூதாந்தராத்மாநம் விஷ்ணுமேவ யஜந்திதே.(தக்ஷஸ்மிருதி.) எவர்கள், பிதிரர்களையும் தேவர்களையும் அக்கினியோடு கூடின பிராமணர்களையும் பூஜிக்கின்றார்களோ, அவர்கள், எல்லாப் பூதங்கட்கும் அந்தரியாமியாய் இருக்கிற விஷ்ணுவையே பூஜித்தவர்கள் ஆவர்கள்,’ என்பது ஸ்மிருதி.
பாடிப் போய்க் காயம் கழித்து –இதம் ஸரீரம் க்ருத்ஸ்நஸ்ய லோகஸ்ய சரதாஹிதம்
பாண்டரஸ்ய ஆதபத்ரஸ்ய சாயாயாம் ஜரிதம் மயா.(ஸ்ரீராமா. அயோத், 2 : 7.) 1‘சக்கரவர்த்தி மக்களுடைய காவல் நிமித்தம் சுற்றும் பயணம் திரிந்து முத்தின் குடை நிழலிலே இருந்து சரீரத்தால் முதுமைப்பருவத்தை அடைந்தார்,’ என்றது போன்று, பகவானுடைய குணங்களைப் பிரீதியினாலே தூண்டப் பட்டவனாய்க்கொண்டு சொல்லி இதுவே வாழ்க்கையாகச் சரீரத்தை விட்டு
ஏத்துகைக்குத் தந்த வாயைக்கொண்டு புல்லரைக் கவி பாடுகைக்குப் பிறந்தவன் அல்லேன்; 1‘நான் பிறரைக் கவி பாடினால் என்னைப் படைத்ததனால் ஆய பயனை அவன் பெற்றானாம்படி என்? படைப்பிற்குப் பயன் பகவானை அடைதலேயோ?’ எனின், ஸ்வம் உத்திஸ்ய ஸ்ரீமாநிதி வததி வாகௌபநிஷதீ.2தன்னை உத்தேசித்தே அன்றோ படைப்பு? 3‘புத்திரனே! அழகாலே துவக்க வல்ல ஸ்ரீ ராமபிரானிடத்தில் மிக்க பற்றுதலையுடைய நீ, காட்டில் வசிக்கும்பொருட்டே உண்டுபண்ணப்பட்டாய்;
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்த: லக்ஷ்மணோ லக்ஷ்மிவர்த்தந:
ராமஸ்ய லோகராமஸ்ய ப்ராது: ஜ்யேஷ்டஸ்ய நித்யஸ:(ஸ்ரீராமா. பாலா. 18 : 27.)_
அக்ரத: ப்ரயயௌ ராம: ஸீதாமத்யே ஸூமத்யமா
ப்ருஷ்டதஸ்து தநுஷ்பாணி: லக்ஷ்மண: அநுஜகாமஹ.(ஸ்ரீராமா. ஆர. 11 : 1.)
ஸ்ருஷ்டஸ்த்வம் வனவாஸாய – ‘ஐயரையும் ஆச்சியையும் அநுவர்த்தித்துப் பெருமாள் காடேற எழுந்தருளா நின்றார்; நானும் அவரை அநுவர்த்தித்துப் போகிறேன்,’ என்று இளைய பெருமாள் அறிவிக்க, ‘உமக்கு முடி வேணும் என்று அபேக்ஷை உண்டாகில், முடி சூடுகைக்கு யோக்கியனாயிருப்பான் ஒருவன் வேணும்’ என்றதற்கு ஈடாக நோன்பு நோலேனோ? அவரை அநுவர்த்திக்கைக்காக அன்றோ நான் உம்மைப் பெற்றது? ஸூஹ்ருஜ்ஜநே ராமே – ஸ்வநுரக்த: – உபதேச நிரபேக்ஷமாகப் பெருமாள் திருவடிகளுக்கு நீரே பரிவரிறே; நான் இன்று இருந்து சொல்ல வேண்டுவது ஒன்று உண்டோ? அடிமையில் உண்டான ருசி செவி கண்ணாகக் கண்டு அடிமை செய்யுமவரிறே. அன்றிக்கே, ஸ்வநுரக்த: ஸூஹ்ருஜ்ஜநே – ‘கருமுகை மாலையை வெயிலிலே இட்டாற்போலே, பெருமாள்தம் சௌகுமார்யம் பாராதே பித்ரநுவர்த்தநம் பண்ணிக் காட்டிலே போகாநின்றார்; என் புகுகிறதோ!’ என்று வயிறு எரிந்திருக்கின்ற ஸூஹ்ருஜ்ஜநங்களுக்கு நல்லீரிறே. ‘ஸூஹ்ருஜ்ஜனம்’ என்றது, திருத்தாயார் தொடக்கமான படை வீட்டில் உள்ளாரை. ‘அவர்களுக்கு வேர்ப்பற்றான இவரை நோக்கித் தாரீர்’ என்றுமாம். ராமே – நடக்கை மிகையாம்படி, வெறுமனே இருந்தாலும் ஆகர்ஷ்கமான வடிவழகையுடையவர், ராமே ப்ரமாதம்
மாகார்ஷீ: – ‘பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்த்த:’ (ஸ்ரீராமா. பாலா. 18 : 27.) என்று, அவதார காலமே தொடங்கி அந்வயத்தில் தரித்து வியதிரேகத்தில்
தரியாதவர்க்கு இன்றாக ஒரு பிரமாதம் புகுருகைக்கு ஒரு சங்கை இல்லையிறே; சம்பாவிதமானது ஒன்றைச் சொல்லுகிறாளாக வேணுமே.
பிராதரி கச்சதி – அவர் உம்முடைய முன்னே நடப்பர் கிடீர்; அவ்வழகிலே கண்வைத்து, நீர் அதிகரித்ததற்குச் சோர்வு பிறவாதபடி குறிக்கொள்ளும்.
அக்ரத: ப்ரயயௌ – (ஸ்ரீராமா. ஆர. 11 : 1.) நடைச் சக்ரவத்துப் பிடிக்கலாம்படி. ‘ஆடல் பாடல்’ இத்யாதி(பெரியாழ்வார் திருமொழி, 3. 6 : 4.)
தேவரீருடைய தேசத்திலே வசிக்கின்ற நாங்கள்’ (ஸ்ரீ ராமபிரானைப் பார்த்து முனிவர்கள் கூறுவது. ஸ்ரீ ராமா. ஆரண். 1 : 20.)என்னுமதுவும் தன் பக்கலிலேயாய் இருக்கிறது. நீ கண்டுகொள் என்று –அவேக்ஷதாம் பவாந் கோஸம் கோஷ்டாகாரம் புரம் பலம் பவத: தேஜஸா ஸர்வம் க்ருதம் தஸகுணம் மயா.(ஸ்ரீ ராமா யுத். 127 : 55.) 2‘தேவரீர், பொக்கிஷத்தையும் பசுக்கொட்டிலையும் நகரத்தையும் பலத்தையும் பார்த்தருள வேண்டும்; தேவரீருடைய ஒளியால் எல்லாம் பத்துமடங்கு அதிகமாக என்னால் செய்யப்பட்டது,’ என்கிறபடியே, ஸ்ரீ பண்டாரத்தை வளர்த்து வைத்து, பெருமாள் மீண்டும் எழுந்தருளின போதே ஸ்ரீ பரதாழ்வான் காட்டிக் கொடுத்தாற்போலே வானவர் நாட்டை நீ கண்டுகொள்’ என்கிறார்.
இதாநீம் மாக்ருதா வீர ஏவம் விதம் அசிந்திதம்
த்வயி கிஞ்சித் ஸமாபந்நே கிம் கார்யம் ஸீதயா மம.(ஸ்ரீ ராமா. யுத். 41 : 4. இது, சுக்ரீவ மஹாராஜரைப் பார்த்து ஸ்ரீ ராமபிரான் கூறியது)ஏ வீரனே! நீ சிறிது வருத்தமுற்று இருந்தால் சீதையால்தான் எனக்கு என்ன பயன்?’ என்றார் பெருமாள். என்று – இப்படி அன்போடே சொல்லி. வீடும் தரும் – 1கைங்கரிய சுகத்தைத் தரும்.
இந்நிலை விரைவின் எய்தாது இத்துணை தாழ்த்தி யாயின்
நன்னுதற் சீதை யால்என்? ஞாலத்தாற் பயன்என்? நம்பி!
உன்னையான் தொடர்வல்; என்னைத் தொடரும்இவ் வுலக மென்றால்
பின்னைஎன் இதனை நோக்கி விளையாடிப் பிழைப்பச் செய்தாழ்?’- என்றார் கம்பநாட்டாழ்வார்.
ஏதத் ஸாம காயந் ஆஸ்தே.(தைத்திரீய. பிரு. 10.) 1‘மேல் சொல்லப்போகிற சாமத்தைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்றும், 2‘அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம்’ (தைத்திரீயம்.)நான் பரமாத்துமாவுக்கு இனியன்; நான் இனியனாகிற பரமாத்துமாவை அனுபவிக்கிறவன்-என்றும் பாடப் புகுகிற எனக்கு, பகவானுக்கு வேறுபட்டிருக்கிற பொருள்களைப்பற்றிக் கவி பாடுகை போருமோ
சன்மம் பலபல செய்து – பலப்பல அவதாரங்களை எடுக்கின்றான் ஆயிற்று. 1இவ்வவதாரங்களின் அடி அறியுமவர்கள் அவதாரத்துக்கு அப்பால் பரத்துவத்திலும் போகமாட்டாதே அன்றோ இருப்பது? 2‘கர்மம் காரணமான பிறப்பு இல்லாத சர்வேசுவரன் இச்சை அடியாகப் பல விதமாக மற்றை இனத்தினனாய் வந்து அவதரிக்கிறான்; அவ்வவதாரத்தின் காரணத்தை ஞானிகள் நன்கு அறிகின்றார்கள்,’ என்பது மறை மொழி.
ஜந்ம கர்மசமே திவ்யம் ஏவம்யோ வேத்தி தத்வத:
த்யக்த்வா தேஹம் புநர்ஜன்ம நைதி மாமேதி ஸோர்ஜூந.(ஸ்ரீ கீதை, 4 : 9.)என்னுடைய அவதாரமும் அவதாரத்தில் நிகழ்த்தும் செயல்களும் தெய்வத்தன்மை வாய்ந்தவை,’ என்று அவன் தானும் நெஞ்சு உளுக்கி அன்றோ இருப்பது
கர்மங்கட்குக் கட்டுப்பட்டவன் பத்து மாதங்கள் கர்ப்ப வாசம் செய்தால்ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதௌ.(ஸ்ரீராமா. பால.), 4‘பிறகு பன்னிரண்டாவது மாதமாகிய சித்திரை மாதத்தில் நவமி திதியில் ஸ்ரீராமனைப் பெற்றாள்’ என்கிறபடியே, பன்னிரண்டு மாதங்கள் கர்ப்பவாசம் செய்து வந்து அவதரித்தானாதலின், ‘செய்து’ என்கிறார்
பிதா புத்ரேண பித்ருமாந் யோநி யோநௌ ந அவேதவித் மநுதே தம் ப்ருஹந்தம்.-காடகம், 3 : 9.உலகிற்கு எல்லாம் தமப்பனான சர்வேசுவரன், தனது ஒவ்வொரு பிறவியிலும் தன் புத்திரர்களைத் தான் தமப்பனாக உடையவனாய் இருக்கிறான்; அந்தச் சர்வேசுவரனுடைய அவதாரத்தின் பெருமையை அறிவில்லாதவர்கள் அறியார்கள்,’ என்கிறபடியே, ‘எல்லாப் பொருள்கட்கும் காரணனாய் இருக்கின்ற தான் தன்னுடைய காரியங்களிலே
வெளிப்பட்டு – ந சக்ஷூஷா க்ருஹ்யதே நாபி வாசா ந அந்யை: தேவை: மநஸா கர்மணாவா ஜ்ஞாந ப்ரஸாதேந விஸூத்த ஸத்வ:
தத: துதம் பஸ்யதே நிஷ்களம் த்யாயமாந:-முண்டகோபநிடதம், 3 : 1.7‘கண்களுக்குக் காணப்படுமவன் அலன்’ என்கிற தன்னைக் கண்களுக்கு விஷயமாக்கி. என்றது, ‘இச் ‘சரீரத்தோடு சம்பந்தம் இல்லாத கண்களாலே எப்பொழுதும் காணக்கூடிய வடிவை ஊன் கண்களுக்கு விஷயமாக்கிக் கொண்டுவந்து காட்டுகை. 1‘என்றேனும், கட்கண்ணாற் காணாத அவ்வுருவை’ அன்றோ கண்ணுக்கு இலக்கு ஆக்கினான்?’ *பெரிய திருவந் 28.)என்றபடி
ஸ: அஸ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ராஹ்மணா விபஸ்சிதா.(ஆனந்த வல்லி, 1 : 2.)அவன் எல்லா விதமான கல்யாண குணங்களை பரமாத்துமாவோடு கூட அனுபவிக்கின்றான்,’ என்கிறபடியே, ‘பரமபதத்திலே அனுபவிக்கக் கூடிய குணங்களின் அனுபவத்தை இங்கே அனுபவிக்கப்பெற்ற எனக்குப் ‘பரமபதத்திற் போகப்பெற்றிலேன்’ என்ற குறை உண்டோ?’ என்கிறார்
தயா ஸஹ ஆஸிநம் அநந்த போகிநி
ப்ரக் ருஷ்ட விஜ்ஞாந பல ஏக தாமநி
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாசமா நோதர திவ்ய தாமநி.-(ஸ்தோத்திர ரத்நம்.)சிறந்த ஞானத்துக்கும் ஆற்றலுக்கும் இருப்பிடமான ஆதிசேடன்’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும். மென்மை நாற்றம் குளிர்த்தி இவற்றை இயற்கையாக உடையவன் ஆதலின், ‘அரவு’ என்கிறார்.
ஓர் யோகு புணர்ந்த – ‘எல்லா ஆத்துமாக்களும் நம்மைக் கிட்டிக் கரைமரம் சேர்தற்கு உரிய விரகு யாதோ?’ என்று இவற்றைக் காத்தலுக்கு உரிய வழியைச் சிந்தை செய்தல்; அன்றிக்கே, இப்படிக் காத்தலுக்கு உரிய வழியைச் சிந்தை செய்தவாறே அந்நினைவு பொறாமையாலே நாக்கு உலரும்; அப்போது, கர்ப்பூரத் திரள் வாயிலே இடுவாரைப் போலே ஆத்ம மாயா மயீம் திவ்யாம் யோக நித்ராம் ஸமாஸ்த்தித: ஆத்மாநம் வாஸூதேவாக்யம் சிந்தயந் மதுஸூதந:(ஸ்ரீவிஷ்ணு. 6. 4 : 6.)2‘வாசுதேவனாகிய தன்னைச் சிந்தித்துக் கொண்டு’ என்கிறபடியே, தன்னைத்தானே சிந்திப்பான்; ‘அவ்வாறு சிந்தித்தலைக் கூறுகிறார்’ என்னலுமாம். இப்படித் தன்னைத் தானே நினைத்தவாறே காத்தற்கு உரிய உபாயம் தோன்றுமே? தோன்றினவாறே கண்ணனாய் அவதரித்தான் என்கிறார் மேல்:
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா த்வத் அங்க்ரி ஸம்மர்த்த கிண அங்க ஸோபிநா(ஸ்தோத்திரரத்நம்)-தேவரீருடைய திருவடிகள் தாக்குவதால் தன்மேல் உண்டாகின்ற தழும்புகளின் அழகையுடைய பெரிய திருவடி’ என்னக் கடவதன்றோ?
ஒத்தாரும் மிக்காரும் இல்லாத தனி நாயகன். என்றது, அநுரூப: ஸவை நாத: லக்ஷ்மீவாந் லக்ஷ்மணாக்ரஜ: த்ரைலோக்யமபி நாதேந யேந ஸ்யாத் நாதவத்தரம்( ஸ்ரீராமா. அயோத். 2. 13.)3‘எந்த நாதனால் மூன்று உலகமும் நல்ல நாதனை உடையன ஆகுமோ, அந்த இராமபிரான் தகுந்த நாதன்,’ என்கிறபடியே, 4தன்னை நாயகன் என்றால், பின்னர் இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதபடி இருக்கை. பிரமன் சிவன் முதலானோர்கட்கும் முதன்மை சொல்லுவார்கள் ஆதலின், அவர்களை வேறுபடுத்துவதற்காக ‘ஒரு தனி நாயகன்’
ஸர்வலோக ஸரண்யாய ராகவாய மஹாத்மநே நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷணம் உபஸ்திதம்.( ஸ்ரீராமா. யுத்-இது, வானர முதலிகளைப் பார்த்து ஸ்ரீ விபீஷணாழ்வான் கூறியது)-எல்லா உலகங்களும் அடைக்கலமாக அடையத் தக்கவரும் மஹாத்துமாவுமான ஸ்ரீ ராமபிரான்’ என்று, என்னைப் போன்று பெருமாளுக்கு உங்களால் சொல்லலாவது உண்டோ?’ என்னும்படி அன்றோ இருப்பது?
யத்வா ஏதத் ஸூக்ருதம், ரஸோ வை ஸ:, ரஸம் ஹி ஏவ அயம் லப்த்வா ஆநந்தீ பவதி.(தைத்திரீயம்.)‘அந்தப் பரம்பொருள் சுவை உருவம்’ என்கிறபடியே, உள்ளோடு புறம்போடு வேற்றுமை அறச் சுவையின் கனமாய் இருத்தலின்’ ‘கட்டியை’ என்கிறார்
பாரவஸ்யம் ஸமாயாத: ஸூலி ஜ்ரும்பண தேஜஸா
பாஞ்ச ஜன்யஸ்ய கோஷேண ஸார்ங்க விஸ்பூர்ஜிதேநச.
க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநே த்வாம் புருஹோத்தமம்
பரேஸம் பரமாத்மாநம் அநாதிநிதநம் பரம்.–ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 33 : 41. இது சிவபிரான் கூற்று.
பொன் சக்கரத்து அரியினை – அனுகூலர்க்கு விரும்பத்தக்க திருவாழியைத் தரித்துப் பகைவர்களுக்குச் சிரமப்பட்டும் காண முடியாதவனை. 4‘ஓ கிருஷ்ணனே! ஓ கிருஷ்ணனே! நீண்ட திருக்கைகளையுடையவனே! புருஷோத்தமனாயும் எல்லாரையும் நியமிக்கின்றவனாயும் பிறப்பு இறப்பு இல்லாதவனாயும் எல்லார்க்கும் மேலானவனாயும் இருக்கும் தன்மையை அறிவேன்,’ என்கிறபடியே, தோள்வலி கண்ட பின்பு ஆயிற்றுச் சர்வேசுவரன் என்று அறிந்தது. அச்சுதனை – அடியார்களை நழுவ விடாதவனை.-சிவபிரான், தன்னை அடைந்த வாணனைக் கைகழிய விட்டு ஓடினான் அன்றோ
தத: அகில ஜகத் பத்ம போதாய அச்யுத பாநுநா
தேவகீ பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்ப்பூதம் மஹாத்மநா.- ஸ்ரீ விஷ்ணு பரா. 5. 3 : 2.
துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றி – துக்கக் கடலிலே அழுந்தாநின்றுள்ள மனிதர்களுடைய பிறவிகளிலே தோன்றி. 2‘எல்லா உலகங்கள் ஆகிற தாமரை மலரும்படி தேவையாகிற கீழைச்சந்நிதியில் மிக்க ஒளியையுடைய கிருஷ்ணன் ஆகிற சூரியன் உதித்தான்,’ என்கிறபடியே, தோன்றினவன் ஆதலின், ‘தோன்றி’ என்கிறார்.
க்ருத்வா பாராவதாரணம் ப்ருதிவ்யா: ப்ருதுலோசந:
மோஹயித்வா ஜகத் ஸர்வம் கத: ஸ்வம் ஸ்தாநம் உத்தமம்.பாரதம்
கண் காண வந்து – ஊனக்கண்களுக்குப் புலப்படுதல் இன்றி நித்தியசூரிகளுக்கு எப்பொழுதும் காண்பதற்கு விஷயமான தன்னை ஊனக்கண்களுக்குப் புலப்படச் செய்து. துயரங்கள் செய்து – அடியார்களை அழகாலே நோவுபடுத்தியும்; பகைவர்களை ஆயுதத்தாலே நோவுபடுத்தியும்; 3‘நீண்ட கண்களையுடைய கிருஷ்ணர் பூமியினுடைய பாரத்தைப் போக்கி, எல்லா உலகத்தையும் மயங்கச் செய்து, தம்முடைய மேலான இருப்பிடத்தை அடைந்தார்,’ என்கிறபடியே, பகைவர்களை முட்கோலாலே சாடியும் அடியார்களை கண்ணழகாலே சாடியும் போனபடி. 4‘ஏழையர் ஆவி உண்ணும் இணைக்கூற்றங்கொலோ அறியேன்! ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்கொலோ அறியேன்!’ (திருவாய். 7. 7 : 1. )என்னும்படி அன்றோ கண்ணற்று நலியும்படி?
ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மபலே ஸ்ப்ருஹா
இதி மாம் ய: அபிஜாநாதி கர்மபி: ந ஸ பத்யதே.-ஸ்ரீ கீதை, 4 : 14.
தைவீ ஹி ஏஷா குணமயீ மம மாயா துரத்யயா
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தே.–ஸ்ரீ கீதை, 7 : 14.
ஏதும் அல்லல் இலனே – ‘அவனுடைய கர்மங்கட்குக் கட்டுப்படாத தன்மையைச் சொல்லிய எனக்குக் கர்மங்கட்குக் கட்டுப்படுதலாகிய துக்கம் இல்லை,’ என்கிறார். என்றது, 2‘என்னைக் கர்மங்கள் ஒட்டுவது இல்லை; கர்மபலத்தில் எனக்கு ஆசை இல்லை; இவ்விதமாய் என்னை எவன் அறிகின்றானோ, அவன், கர்மங்களினால் கட்டுப்படுகிறது இல்லை,’ என்கிறபடியே, அறிந்தவன் கர்மங்கட்குக் கட்டுப்படமாட்டான் ஆகையாலே, எனக்கும் கர்மங்கட்குக் கட்டுப்படுதல் இல்லை,’ என்கிறார் என்றபடி. அன்றிக்கே, ‘உலகத்தின் படைப்பு முதலானவைகளை அவனுடைய விளையாட்டாக நினைக்கின்ற எனக்கு இந்த லீலா விபூதியில் சேர்தலாகிற துக்கம் இல்லை,’ என்கிறார் என்னலுமாம். என்றது, 1‘‘நான் கட்டிய கட்டினை எவன் ஒருவன் என்னையே கால் கட்டி அவிழ்த்துக்கொள்ளப் பார்க்கிறான்? அவன் இதனைக் கடப்பான்,’ என்று அவன் சொல்லி வைத்தபடியே, அவன்றன்னையே பற்றி விடுவித்துக்கொள்ள இருக்கிற எனக்கு ஒரு துன்பமும் இல்லை,’ என்கிறார் என்றபடி.
க்ருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திரபி ச அப்யய;
க்ருஷ்ணஸ்யஹி க்ருதே பூதம் இதம் விஸ்வம் சராசரம். ஏஷ ஹி ஏவ ஆநந்தயாதி.-பாரதம்
எல்லை இல் மாயனை – நினைவின் உருவமான ஞானத்தாலே படைத்தல் முதலிய காரியங்களைச் செய்ய வல்ல ஆச்சரியமான சத்திகளோடு கூடியவனை. ‘இப்படிப்பட்டவன் யார்?’ என்னில், கண்ணனை – கிருஷ்ணனை. ‘ஆயின், கிருஷ்ணனுக்குப் படைத்தல் முதலான தொழில்கள் உண்டோ?’ எனின், 1‘உலகங்களினுடைய உற்பத்தியும் கிருஷ்ணனேயாவன்; உலகங்கள் பிரளயத்தால் அழிவதும் கிருஷ்ணனேயாவன்,’ என்பது பாரதம்
——————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply