ஸ்ரீ ஈட்டில் வியாக்கியானத்தில் வந்துள்ள உவமைகள் –மூன்றாம் பத்து –

 கற்பகத் தரு பல கிளைகளாய்ப் பணைத்துப் பூத்தாற் போன்று நிற்கிற அழகருடைய அழகினை அனுபவிக்கிறார் இத்திருவாய்மொழியில்.

அடிச்சோதி 3நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ – திருவடிகளின் பேரொளியானது தேவர் நின்ற ஆசனமான தாமரையாய்க் கொண்டு மலர்ந்ததுவோ! ஒரே தன்மையனான இறைவனும் நீரிலே நின்றாற் போன்று ஆதரித்து நிற்கின்றானாதலின், ‘நீ நின்ற’ என்கிறார்-மலர்ந்த தாமரை நீரிலே செவ்வி பெறுமாறு போன்று, திருவடிகளும்  ஆசனபதுமத்தினது சம்பந்தத்தாலே செவ்வி பெற்று வருகிறது என்றபடி.

திருவடிகளின் பேரொளியானது மேல் ஏறக் கொழித்தது. 2கடலுக்குள் பட்டதொரு துரும்பு ஒரு திரை ஒரு திரையிலே தள்ளக்கிடந்து அலையுமாறு போன்று, ஓரழகு ஓரழகிலே தள்ளக் கிடந்து அனுபவிக்கிறார் இதில்-ஒவ்வோர் அவயத்தின் அனுபவமே போதியதாக நிறைந்திருக்க, வேறு  அவயவங்களிற் செல்லுதல் எப்படி?’ என்னும் வினாவிற்கு விடையாகக்  ‘கடலுக்குள் பட்டதொரு துரும்பு’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.-ஆக. ஓர் அழகு ஓர் அழகிலே தள்ளப்போகிறாரித்தனை ஒழிய, அருசி  பிறந்தாதல், முற்றும் அனுபவித்தாதல் போகிறார் அல்லர் என்றபடி.

தோள்கண்டார் தோளே கண்டார் ; தொடுகழற் கமல மன்ன
தாள்கண்டார் தாளே கண்டார் ; தடக்கைகண் டாரும் அஃதே ;
வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார் ?
ஊழ்கொண்ட சமயத் தன்னான் உருவுகண் டாரை ஒத்தார்.’-கம்பநாட்டடிகள். (பால. உலாவியற். 19.)

படிச்சோதி கலந்ததுவோ!’ என்பதற்குப் படியாணியான ஒளி என்னவுமாம். ஆக, ‘நீரிலே நீர் கலந்தது போன்று வேற்றுமையறிதற்குப் பொருத்தமற்றதாயிருக்கிறது ; முடியவில்லை,’ என்றபடி.

கட்டில் கத்துகிறது’ என்பது போன்று, 4’இவ்வுலகு புகழ்வு’ என்கிறார்-இடவாகு பெயர்’ என்றபடி.

இவன் தோன்றியதைச் சொன்னானாய் விஷயத்தில் தீண்டாமலே 1இருக்குமாகில், அங்குத்தைக்குப் புன்மையே காட்டும்படி என்?’ என்னில், இரத்தினத்தை அறியாதான் ஒருவன், ‘குருவிந்தக் கல்லோடு ஒக்கும் இது,’ என்றால், அவ்வளவே அன்றோ அவனுக்கு அதனிடத்தில் மதிப்பு? அவ்வழியாலே அதற்குத் தாழ்வேயாகும். அப்படியே, இவன் பண்ணும் துதிகள் இங்குத்தைக்குத் தாழ்வேயாக முடியும். இங்குத்தைக்குப் புன்மையாகக் காட்டுகைக்குக் காரணம் என்?’ என்னில், பரஞ்சோதீ – 2’நாராயணன் மேலான ஒளியுருவன்’ (தைத்திரீய நாராயண. அநு. 11.)என்கிறபடியே, அவன் எல்லாப் பொருள்கட்கும் வேறுபட்ட சாதியான் ஆகையாலே.

நின்னுள்ளே படர் உலகம் படைத்த எம் பரஞ்சோதி – உன்னுடைய சங்கற்பத்தின் மிகச்சிறியதொரு கூற்றிலே காரியத்தின் உருவமாகி விரிந்து நின்றுள்ள உலகங்களை எல்லாம் உண்டாக்கின எம் பரஞ்சோதி. ‘தனக்குங்கூட உரியன் அல்லாதான் ஒருவனை, ‘நீயேயன்றோ நாட்டுக்கெல்லாம் உரியவன்?’ என்று கூறுவர்களன்றே? அங்ஙனல்லன் இறைவன்,’ என்பார், ‘நின்னுள்ளே படருலகம் படைத்த எம் பரஞ்சோதி’ என்கிறார். இனி, இதற்கு, ‘உனக்கு மகன் பிறந்தான்’ என்னுமாறு போன்று, உலகங்களை யுண்டாக்கின பின்னர்த் திருமேனியிலே பிறந்த புகரையுடையவன் என்று பொருள் கூறலுமாம். ஆக, சுவாபாவிகமான மேன்மை அது; காரணனாயுள்ள தன்மையால் வந்த புகர் இது

சாதுவாய் நின் புகழின் தகை அல்லால் பிறிதில்லை – உன்னுடைய கல்யாண குண விஷயமான இத்தனை போக்கிப் புறம்பு போயிற்றில்லை;-கல்யாண குணங்களை எங்குமொக்க 1விளாக்குலை கொண்டதுமில்லை. ‘கடலிலே ஒரு மழைத்துளி விழுந்தால், கடலை எங்கும் வியாபிக்க மாட்டாதே? அதைப்போன்று தன் சத்பாவத்துக்கும் அழிவில்லை,’ என்றபடி.

கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து சூழ்த்து அமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசு உணாதே – கிளர்ந்த ஞான முதலான குணங்களையுடையனான சிவபிரான் தொடக்கமாக, சர்வேசுவரனோடு மசக்குப்பரலிடலாம்படி கிளர்ந்த தேவதைகள், முசு வால் எடுத்தாற்போன்று கிளர்ந்து 3ஒருவர் சொன்னவிடம் ஒருவர் சொல்லாமல் (சூழ்த்து’ என்றதன் பொருள், ‘ஒருவர் சொன்னவிடம் ஒருவர் சொல்லாமல்’  என்பது, சூழ்த்து – கூறிட்டு. ‘ஏக தேசத்தை வளைத்துக் கொண்டு’ என்றபடி.)ஒரோ பிரயோஜகங்களிலே (பிரயோஜகம் – காரணம்,)மிகைத்த ஆயுள்களை உடையராய் இருக்கிறவர்கள் (அமரர்’ என்றதனை நோக்கி மிகைத்த  ஆயுள்களையுடையராய்’ என்கிறார்.)துதி செய்தால், உன்னுடைய சுபாவிகமான கல்யாண குணம் மாசு உண்ணாதோ! 1’இவர்கள் ஏத்துமளவேயோ இவன் குணங்கள்!’ என்ற அவ்வழியாலே தாழ்வாய்த் தலைக்கட்டாதோ?’ என்றபடி.

மழுங்காத வை நுதிய சக்கர நல் வலத்தையாய் – மழுங்குதலில்லாத கூரிய முனையையுடைய திருவாழியை 2’வடிவார் சோதி வலத்துறையும் சுடராழி’ என்கிறபடியே, வலவருகே உடையையாய். பகைவர்களின் உடல்களிலே படப்படச் சாணையிலே இட்டாற்போன்று புகர் பெற்று வருமாதலின், ‘மழுங்காத வைந்நுதிய’ என்கிறார்.

துன்பப்பட்டவனுடைய துன்ப ஒலி செவிப்பட்டவாறே தன்னை மறந்தான்; கையில் திருவாழியிருந்தது அறிந்திலன்; அறிந்தானாகில், இருந்தவிடத்தேயிருந்து அதனையேவிக் காரியம் கொண்டிருப்பான்,’ என்பார், ‘வலத்தையாய்த் தோன்றினையே’ என்கிறார். ‘அறிந்தாலும் இருந்தவிடத்தேயிருந்து துக்கத்தைப் போக்கவொண்ணாது,’ என்பார், ‘தொழுங் காதற்களிறு’ என்கிறார். கையுந்திருவாழியுமான அழகு காண ஆசைப்பட்டிருக்கும் களிறு ஆதலின், ‘காதல் களிறு’ என்கிறார். 3சதுர்த்தந்தி’ என்னுமாறு போன்று, (நான்கு தந்தங்களையுடைய யானை; ஐராவதம்.)காதல் இதற்கு நிரூபகமாக இருக்கிறபடி. இதன் கையில் பூ செவ்லியழியாமல் திருவடிகளில் இடுவித்துக்கொண்டானாதலின் ‘அளிப்பான்’ என்கிறார்.

 முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய் – கரண களேபரங்கள் அற்றனவாய்ப் போக மோக்ஷங்களில்லாதனவாய்க் கிடந்த அன்று இவற்றை உண்டாக்கி, படைத்த உலகத்தைப் பிரளயங்கொள்ள மஹா வராகமாய் இடந்து, மீண்டு பிரளயம் வர வயிற்றினுள்ளே வைத்து நோக்கி, பின்னர் வெளிநாடு காண உமிழ்ந்து, மஹாபலி போல்வார் பருந்து 2இறாஞ்சினாற்போன்று அபஹரிக்க எல்லை நடந்து மீட்டு, இப்படி எல்லா விதமான ரக்ஷணங்களையும் செய்தவனே! ‘

ஏத்த, அதனாலே உன்னுடைய வேறுபாடு தோன்ற இருந்தாய் என்றால் இது உனக்கு ஆச்சரியமோ! அதாவது, ஒருவன் ஒரு 1குழமணனைச் செய்து அதன் கழுத்திலே காக்கைப்பொன்னைத் தொற்றி அதன் தலையிலே காலை வைத்து, ‘இது என்னை வணங்கிற்று’ என்று இறுமாந்திருக்குமாறு போன்று2’நன்மைப்புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி’ என்கிறபடியே, உன்னாலே மனையப்பட்ட பிரமனும், அவனாலே உண்டாக்கப்பட்ட இவர்களும் உன்னையேத்த, அதனாலே இறுமாந்திருந்தாயென்றால் அது உனக்கு ஏற்றமோ! நகையாய் முடியுமத்தனையன்றோ!’ என்றபடி.

துய்க்கு இன்றித் தொழுது உரைத்த ஆயிரத்துள் இப்பத்தும் ஒலி முந்நீர் ஞாலத்தே உய்யக்கொண்டு பிறப்பு அறுக்கும் – ஐயம் திரிபுகள் இல்லாமம் உள்ளதை உள்ளவாறு அறிந்து அருளிச் செய்த ஆயிரத்திலும் இப்பத்தும், ஒலியையுடைத்தான முந்நீரையுடைய பூமியிலே 2‘பரம்பொருள் இலன் என்று அறிவானாகில் அவனும் இல்லாதவனாகிறான்,’ என்கிறபடியே, அசத்துக்கு ஒப்பானவர்களை, ‘பரம்பொருள் உளன் என்று அறிவானாகில் அவனும் உள்ளவனாகிறான்,’ என்கிறபடியே, உய்வு பெறச் செய்து விரோதிகளையும் போக்கும். என்றது, ‘அரசன் இல்லாத தேசத்திலே அரசபுத்திரன் தலையிலே முடியை வைத்து விலங்கு வெட்டிவிடுமாறு போன்று, அழகர் திருவடிகளிலே செய்யும் தொண்டிலே சேர்ப்பித்துப் பின்பு அதற்கு விரோதியான சமுசார சம்பந்தத்தை அறுத்துக்கொடுக்கும் என்கிறார்,’

பெருவிடாய்ப்பட்டவன், சேர்ந்த குளிர்ந்த தண்ணீர் அண்மையிலிருக்க, வியாதியினாலே வாய் மூடப்பட்டால் அதனைக் குடிக்க முடியாது துடிக்குமாறு போன்று, விஷயமும் அண்மையிலிருந்து விடாயும் மிக்கிருக்கச் செய்தே, அளவிற்கு உட்படாத விஷய மாகையாலே பரிச்சேதித்து அனுபவிக்க வொண்ணாதொழிய நோவு படுகிறார்.

ஒரு பொருள்தானே ஒருபோது தாரகமாய், மற்றைப்போது அதுதானே பாதகமாகக் காணாநின்றோம்; பசியில்லாத காலத்தில் பாதகமான சோறுதானே அது கழிந்தவாறே தாரகம் ஆகாநின்றதே? ‘இவர்க்கு இன்னது இன்ன போது தாரகமாம்: இன்னது இன்ன போது பாதகமாம்’ என்று தெரியாது; குணங்களின் 1ஆவிஷ்காரத்தாலே தரிப்பித்துக்கொண்டு செல்லுகிற ஈசுவரனுக்கும் தரித்த இவருக்கும் தெரியுமத்தனை இதுதான். 2மற்றும், மக்களுக்கு மட்டும் முகங்கொடுத்துக்கொண்டிருக்கிற நீர்மை அங்கு; கானமும் வானரமும் வேடுமானவற்றுக்கு முகங் கொடுத்த நீர்மை உண்டே இங்கு.

எம் முகில் வண்ணனே – 2அவன் எல்லாப் பொருள்கள் நிமித்தமாக உதவியைச் செய்தான்; அவ்வுதவியைத் ‘தன் பொருட்டு’ என்றிருக்கிறார் செய்ந்நன்றியறியுமவராதலின். ஒருவன் சாதநாநுஷ்டானங்களைச் செய்து மழையைப் பெய்விக்க உலகம் வாழ்ந்து போமாறு போன்று, அவன் எனக்காக உலகத்தைப் படைத்தான்; உலகம் வாழ்ந்துபோயிற்று என்று இருக்கிறார். சர்வ விஷயமாக உதவி செய்தபடியும், பிரதியுபகாரங்கொள்ள இராமையும் நோக்கி, ‘முகில் வண்ணனே’ என்கிறார்.    (வண்ணம் என்பது ஈண்டுத் தன்மையைக் குறித்தது; நிறம் அன்று

தந்த; அதாவது, ‘இவை விரும்பாமலிருக்கவும் தனது அருளாலே தந்த இத்தனை,’ என்னுதல். ‘இதனை உபகாரமாகச் சொல்லுகிறது என்? கர்மங்கட்குத் தகுதியாக அன்றோ படைத்தல் இருப்பது?’ என்னில், 1படைப்பது கர்மங்களை நோக்கியேயாயினும், யௌகபத்யம் அருளின் காரியம்; 2ஒவ்வொரு கால விசேடங்களிலே சிறை வெட்டி விடுமாறு போன்று தன் பேரருளாலே உண்டாக்குமத்தனை. 3‘வரதனே! பிரளய காலத்தில் அசேதனத்திற்காட்டிலும் வாசி அற்றவர்களாய்த் துவள்கின்ற ஆத்துமாக்களை இந்திரியங்களோடும் சரீரங்களோடும் சேர்ப்பதற்கு விரும்பித் திருவுள்ளமிரங்கி உன்னுடைய சங்கற்பத்தின் வசப்பட்டு மூலப்பகுதியை ‘மஹாந்’ என்ன, அகங்காரமென்ன, ‘ஐம்பூதங்கள்’ என்ன, ‘இந்திரியங்கள்’ என்ன இவற்றினுடைய வரிசையாகிற அரும்புகளையுடையதாம்படி செய்தாய்,’ என்றார் பட்டர்.-ஸ்ரீரங்கராஜ ஸ்தவம், 2 : 41. இது, ‘நிர்ஹேதுக கிருபையாலே படைத்தான்’
  என்பதற்கும், ‘யௌகபத்யம் அருளின் காரியம்’ என்பதற்கும் மேற்கோள்.

ஆக்கையின் வழி உழல்வேன் – 1நீ ஒன்றை நினைத்துத் தந்தாய்; நான் சரீரத்தின் வழியே போந்தேன். ‘தெப்பத்தை நூக்கிச் சென்று பெருமாளைச் சேவிக்கலாயிருக்க, ‘சரீரம் பாங்கன்று’ என்று நீரின் வழியே சென்று கடலிலே புகுவாரைப் போலே, இதர விஷயப் பிராவண்யத்துக்கு உறுப்பாக்கிக் கேட்டினை விளைத்துக்கொண்டேன்,’ என்கிறார் என்பர் எம்பார். வெந்நாள் – சொரூப ஞானம் பிறந்த பின்பு சமுசாரத்திலிருக்கிற இருப்பு, பிராட்டி இலங்கையிலே இருந்தாற்போன்று தோற்றாநின்றது காணும் இவர்க்கு; ஆதலின், ‘வெம்நாள்’ என்கிறார்.

நின் மா தாள் சேர்ந்து – 1பரமப் பிராப்பியமாய் நிரதிசய போக்கியமாயிருக்கிற திருவடிகளைக் கிட்டி. நிற்பது – நித்திய சமுசாரிகளுக்குப் பகவானையடைதல்; 2பறக்கிற தொன்றிலே பாரம் வைத்தாற்போலே இருப்பதொன்று’ ஆதலின், ‘நிற்பது’ என்கிறார்.

புணர்வினை என்பதற்குச் சரீர சம்பந்தந்தன்னை என்னுதல். யான் – சிறையிலே கிடப்பாரைப் போன்று பிரகிருதியோடே பிணையுண்டிருக்கிற நான்.

ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வளைவாரைப் போன்று எங்கும் பரந்திருத்தலும் தமக்காக என்றிருக்கிறாராதலின், ‘எந்தாய்’ என்கிறார். ‘ஆக, உன் பக்கல் அகப்படுத்திக்கொள்ள விரகு தேடி உணர்ந்து என்னைச் சூழ்ந்து கொண்டு நீ நிற்கச்செய்தேயும், விஷயப் பிரவணனாய்த் தப்பினேன்,’ என்கிறார்.

நீர் ‘வந்தே அருளவேண்டும்’ என்கிறீர்; இது நமக்குத் தட்டுப்படும்; ஒரு முறை பதினாயிரம் ஆண்டு இருந்தோம்; ஒரு முறை நூறு ஆண்டு இருந்தோம்; வருகை நமக்குப் பணியுண்டுகாணும்’ என்ன, ‘எனக்கும் அவ்வவதாரங்கள்போன்று சிலநாள் இருந்து உதவப்பெறில் அழகியது; அது செய்யத் திருவுள்ளமின்றாகில், யானைக்குத் தோன்றியது போலேயும், பிரஹலாதனுக்குத் தோன்றியது போலேயும் எனக்கும் ஒரு தோற்றரவு தோன்றியேயாகிலும் உதவவேண்டும்,’ என்கிறார்.

அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்றொழிந்தேன் – முள்ளிப்பூவில் ரசம் போலே அல்பமாய், அவைதாம் பலவாய், 3தன் நாவில் பசை கொடுத்துப் புசிக்க வேண்டும்படி இருக்கிற பொருள்கள்தோறும் கால் தாழ்ந்து சர்வ சத்தியான தேவரை 4‘ஓடினேன் என்கிறபடியே கைகழியப் போனேன்

  மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன் – 2எள்ளில் எண்ணெய் போலவும், மரத்தில் நெருப்புப் போலவும்’ என்கிறபடியே, இவ்வாத்துமாவோடு பிரிக்கவொண்ணாதபடியிருப்பதாய், துக்கத்தை விளைப்பதாயிருக்கிற பாவங்களைத் 3‘தர்மம் செய்வதனால் பாவங்களைப் போக்கடிக்கிறான்’ என்கிறபடியே, விதித்தனவான கர்மங்களைச் செய்வதனாலே போக்கிற்றிலேன்.

காண்பான் கூவுகின்றேன் – ஒரு சாதனத்தைச் செய்து பலம் கைப்புகுராதார் கூப்பிடுமாறு போன்று, காண வேண்டும் என்று கூப்பிடுகிறேன். எங்கு எய்தக் கூவுவன் – ‘ஒரு கொசுக்கூப்பிட்டது’ என்று பிரமனது ஓலக்கத்திலே கேட்கப் போகின்றதோ? எங்ஙனே வந்து கேட்கக் கூப்பிடுகிறேன்?

அங்குள்ளாரும் வந்து அடிமை செய்வதும் இங்கேயாகில், நாமும் அங்கே சென்று புக்கு அடிமை செய்வோம்,’ என்று கொண்டு, பசியுமிருந்து கையிலே சோறும் உண்டாயிருக்குமவன், 2நீரும் நிழலும் கண்டால் உண்ணப் பாரிக்குமாறு போன்று, இவரும் அடிமை செய்யப் பாரிக்கிறார். ‘பாரிக்கிறது என்? அடிமை செய்ய வொண்ணாதோ?’ எனின், இவ்விஷயத்தில் அடிமை செய்ய ஒருப்படுவார்க்கெல்லாம் உள்ளது ஒன்றாயிற்று முன்பே பாரித்துக் கொண்டு இழியுமது; 3‘நான் எல்லாக்காலத்திலும் எல்லா அடிமைகளும் செய்வேன்,’ என்பதன்றோ இளைய பெருமாள் படி? 4உணவையே முக்கியமாகக் கொண்ட ஒருவன், ஊண் அத்தியாயம் படிக்குமாறு போன்று இருப்பது ஒன்றாயிற்று இவருடைய கைங்கரிய மனோரதம்.

சுவர்க்கத்திலிருப்புக்கு அடியான புண்ணியமானது சாலில் எடுத்த நீர்போலே குறைந்தவாறே ‘த்வம்ஸ’ என்று முகம் கீழ்ப்படத்  தள்ளுவார்கள்

அவருடைய பிரிவால் தனக்கு உண்டான ஆற்றாமையை அறிவிக்கப் போகிறானாகில், தனியே போய் அறிவிக்கவுமாமன்றோ? இவர்களையெல்லாம் திரட்டிக்கொண்டு சென்றதற்குக் கருத்து என்?’ என்னில், ‘நம் ஒருவர் முகத்தில் கண்ணீர் கண்டால் பொறுக்கமாட்டாதவர், தம்மைப் பிரிந்த பிரிவு பொறுக்கமாட்டாமல் கண்ணும் கண்ணீருமாயிருப்பார், இத்துணைப் பேரைக் கண்டால் மீளாரோ?’ என்னுங் கருத்தாலே. போருக்குப் போவாரைப் போன்று யானை குதிரை அகப்படக் கொண்டு போகிறான்; 1அவற்றுக்கும் அவ்வாற்றாமை உண்டு ஆகையாலே.

 தெழி குரல் அருவி – கம்பீரமான ஒலியையுடைத்தான அருவிகளையுடைய. 3திருஅருவியின் ஒலியுங்கூடக் கொள்ளத் தக்கதாயிருக்கிறது இவர்க்கு, அந்நிலத்திலுள்ளதொன்றாகையாலே. இந்த ஒலி, இவர்க்குக் ‘கைங்கரிய ருசியுடையார் அடிமை செய்ய வாருங்கோள்’ என்றாற்போலே இருக்கிறது. 4சிலைக்கை வேடர் தெழிப்பு அறாத’ என்று திருவேங்கட யாத்திரை போகிறவர்களைப் பறிக்கிற வேடருடைய ஆரவாரமும் உத்தேஸ்யமாயிருக்கிறதன்றோ அந்நிலத்திலுள்ளதொன்றாகையாலே? ஆக, அங்குத்தைத் திருவேடர் பறிக்கிற ஆரவாரமுங் கூட உத்தேஸ்யமாயிருக்கும்போது இவர்க்கு இந்தத் திருஅருவியின் ஒலியுங்கூட உத்தேஸ்யமாகச் சொல்லவேணுமோ?

எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை – 2அடியார் அடியார்தம் அடியார் அடியார் தமக்கடியார் அடியார் தம் மடியார் அடியோங்களே’ என்கிறபடியே, ஆத்தும சொரூபத்தை நிரூபிக்கப் புக்கால், அத்தலையே பிடித்து இவ்வளவும் வர நிரூபிக்குமாறு போலேயாயிற்று, பரம்பொருளின் சொரூபத்தை நிரூபிக்கப் புக்காலும் இத்தலையே பிடித்து அவ்வளவும் செல்ல நிரூபிக்கும்படி.

வானவர்க்கு ஈசன் என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதி – ‘நித்தியசூரிகளுக்கு ஈசனாயிருந்தான்; என் பக்கலிலே பற்றை வைத்தான். அவர்களுக்கு இருப்பு உண்டாகைக்காக அவர்களோடே கலந்தான்: தன் இருப்பைப் பெறுகைக்காக என்னோடே வந்து கலந்தான்; பிராதம்யத்துக்கும் பழிக்கும் செங்கல் சீரைக்கும் ஜீவனம் வைப்பாரைப் போன்று அவர்கள் பக்கல்; நெஞ்சும் உடம்பும் தந்தது எனக்கு’ என்கிறார்

தம்மை ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன் ‘என்றாரேயன்றோ? இதனால் தம்மைத் தாழ்வுக்கு இவ்வருகாகச் சொன்னாராவர்; மிகத்தாழ்ந்தவரான தாம் தொழுத போதே எல்லா உலகங்களும் தொழுதமை விழுக்காட்டாலே பெறுதும்; ‘எல்லாவற்றுக்கும் மேல்படி அமிழ்ந்தது’ என்றால், ‘கீழ்ப்படி மூழ்கினமை’ சொல்ல வேண்டா அன்றே?

நம்முடைய பெயர் தன் காரியம் செய்ததத்தனை போக்கி, நாம் இவளுக்கு ஒன்றும் செய்திலோமே!’ என்று இருந்தான். ‘ஆயின், கிருஷ்ணனையொழியவும் திருப்பெயரே காரியம் செய்யவற்றோ?’ எனின், பொருத்தமில்லாமல் இரண்டு சொற்களைச் சேர்த்துச் சொல்ல அது விஷத்தைப் போக்குதற்குக் காரணம் ஆகாநின்றதே சொற்களின் சத்தியால்? அதைப் போன்றும் போராமை இல்லையன்றே திருநாமம்?வாச்யப் பிரபாவம் போல அன்று, வாசகப் பிரபாவம்’, ‘அவன்  தூரஸ்தனானாலும் இது கிட்டி நின்றுதவும்’, ‘திரௌபதிக்கு ஆபத்திலே புடைவை சுரந்தது திருநாமமிறே’ என்பன முமுட்சுப்படி, 14-16.

 நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்திருவுலகு அளந்தருளின திருவடிகளுக்கு 1அணுக்கன் இட்டாற் போன்று நிழல் செய்யும்படி வளர்ந்த (அணுக்கன் – குடை.)பொழிலையுடைய திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச்செய்த.-ஆயின், திருவேங்கடமுடையானையன்றோ பாடிற்று இத்திருவாய்மொழியில்? மண்தாவிய ஈசனைப் பாடிற்று என்றல் யாங்ஙனம்?’ எனின், 2’கொண்டாய் குறளாய் நிலம் ஈரடியாலே, விண் தோய் சிகரத் திருவேங்கடம் மேய, அண்டா!’ (பெரிய திருமொழி. 1. 10 : 4.)என்றும், 3’மண் அளந்த இணைத்தாமரைகள் (திருவாய். 6. 10 : 6.)’ என்றும், 1‘உலகம் அளந்த பொன்னடியேயடைந்து உய்ந்து’ (பெரிய திருமொழி, 5. 8 : 9.)என்றும் 2ஆழ்வார்கள் அருளிச்செய்வர்கள்; அன்றியும், எல்லாரையும் கிரமத்திலே திருவடிகளின் கீழே இட்டுக் கொள்ளுகைக்காக நிற்கிற நிலையாலும், வரையாமல் கானமும் வானரமுமான இவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற படியாலும் திருவேங்கடமுடையானை ஸ்ரீவாமனனாகச் சொல்லப்படும்.

அவன் சொரூபத்தோடு குணத்தோடு விபூதியோடு செயல்களோடு வேறுபாடு இல்லாமலே எல்லாம் உத்தேஸ்யமாய் இருக்கின்றது இவர்க்கு; ‘இறைவனுடைய குணங்களுக்கும் விபூதிக்கும் இவர்க்கு வேற்றுமை இல்லை,’ என்பது கருத்து. 2அவை தம்மைக் கண்ட கண்ட இடங்களில் அனுபவிக்கையன்றிக்கே, மாணிக்கத்தையும் வயிரத்தையும் முத்தையும் ஓர் ஆரத்திலே சேர்த்து அனுபவிப்பாரைப் போலே அவற்றை அடைய அவன் பக்கலிலே சேர்த்து அனுபவிக்கிறார்.குணங்களுக்குப் பிரித்து நிலையுதலாதல் தோன்றுதலாதல் இல்லையாமாறு போன்று, விபூதிக்கும் அவனை ஒழிய நிலையுதலாதல் தோன்றுதலாதல் இல்லாமையாலே, சேர்த்து அனுபவிக்கிறார்,’

தோளில் கிடக்கிற தோள் மாலையைப்போன்று

என்கோ!’ என்பது ஐயப்பொருளதாதலின், அதனை உதாரண முகத்தால் விளக்குகிறார், ‘மஹாவாதத்திலே பலோபாதாநம் பண்ணுவாரைப் போன்று’என்று.
மஹாவாதம் – பெருங்காற்று; பல உபாதாநம் – பழங்களைச் சேகரித்தல். என்றது, பெருங்காற்று அடிக்கின்ற காலத்தில் மரங்களினின்றும் கீழே விழுந்து
சிதறிக் கிடக்கின்ற பழங்களை எடுக்கின்றவர்கள் ‘இதனை எடுப்போமா, அதனை எடுப்போமா!’ என்று மனம் சுழன்று அலைவது போன்று’ என்றபடி.

நுடங்கு கேள்வி இசை என்கோ – கேட்டாரை நஞ்சுண்டாற் போன்று மயங்கச்செய்கிற கேள்வியையுடைத்தான இசை என்பேனோ!

வினையில் மிக்க பயன் என்கோ – சிறிய முயற்சியால் பல விதமான பலத்தைப் பலிப்பது ஒன்று என்பேனோ! ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், கலநெல்லை வித்தி நூறாயிரக் கலமாக விளைத்துக்கொள்வாரைப் போன்று, இத்தலையிலுள்ளது மித்ர பாவேந -நட்புத்தன்மையேயாய் அதற்கு 2நத்யஜேயம்-நான் விடமாட்டேன்’ (ஸ்ரீராமா. யுத். 18 : 3)என்னும்படி இருக்கையைக் கூறியபடி.

மண் கொள் உலகில் வல் வினை மலைந்து மோதப் பிறப்பார் – வல்வினை மலைந்து மோத மண் கொள் உலகிற்பிறப்பார். என்றது, ‘பகவானுடைய குண அனுபவம் பண்ணும் போது ‘நாம் விகாரமில்லாதவர்களாய் இருக்கவேணும்,’ என்று குறிக்கொண்டு இறுக்குவாதம் பற்றினாற் போலே இருப்பவர்கள்

தான் பிறந்து வளருகிற ஊரிலே ஒரு பொருளை வேறு ஒரு தேவதை கொள்ளுகையாகிற இது 1மஹிஷீ ஸ்வேதம் பிறரதானதைப் போன்றது’ (மனைவிக்குச்  செய்யும் சேவையைத் தான் செய்யாது பிறரைக்கொண்டு செய்விப்பதைப்  போன்றதாகும்’ என்றபடி. மஹிஷீ ஸ்வேதம் – மனைவியின் வியர்வை)என்று பார்த்து, 2‘அவ்வாகாச வாயனுக்கோ இடுவது? (ஆகாசத்தை இருப்பிடமாகவுடையவன்; இந்திரன்.  ‘இருப்பிடம் இல்லாதவன்’ என்பது தொனி.)நமக்கும் மழைக்கும் காற்றுக்கும் இடம் தந்து பசுக்களுக்கும் புகலாய்ப் புல்லும் தண்ணீரும் உண்டாய் இருக்கிற இம்மலைக்கு அன்றோ இடுவது?’ என்று அருளிச்செய்ய, ஆயர்கள் ஆகையாலே ‘அப்படியே செய்வோம்’ என்று அவர்களும் இசைந்து, துன்னு சகடத்தாற்புக்க பெருஞ்சோற்றை அம்மலையைப்போன்று குவித்தார்கள்;

கல் மழையைப் பெய்விக்க, ‘பாதுகாப்பது’ என்று சொன்ன மலையை எடுத்துப் பாதுகாத்தான். வீரராயிருப்பார் 3வினை முடுகினால் எதிரியுடைய ஆயுதந்தன்னைக் கொண்டு அவரை வெல்லுவார்களே அன்றோ? அப்படியே, முன்னே நின்ற கல்லை எடுத்துக் கல் மாரியைக் காத்தான்.

கல்லை எடுத்துக் 4கல் மாரி காத்து’ என்னும் இவ்விடத்தில் ‘நீராலே வர்ஷித்தானாகில் கடலை எடுத்துக் காக்குமித்தனைகாணும்’ என்று பட்டர் அருளிச்செய்வர். 1யானையையும் சமுசாரிகளையும் காத்தது தான் நித்தியசூரிகளைக் காத்தது போன்றதே யன்றோ? ‘ஆயர்களுடையவும் பசுக்களுடையவும் நிலை’ என்பார், ‘பசுநிரை தன்னை’ என்கிறார். -ஆயர்களை நோக்கும்போது பசுக்களுக்கு விலக்காமை உண்டு ஆகையாலே, அவ்விலக்காமையாகிய முதன்மையை நோக்கிப் ‘பாதுகாக்கப்பட்டவர்களில்  பிரதாநரைச் சொல்ல வேண்டுமே

வம்பர் – என்றும் ஒக்க யமதூதர்க்குப் புதியராவர். முன நாள் நலிந்தால், பிற்றை நாள் வந்து தோன்றினால், ‘முனநாள் நம்மால் நலியப்பட்டவன்’ என்று அருள் செய்யாதே, ‘மோம் பழம் பெற்றாற்போலே, (நறுமணமுள்ள பழம்; மோந்து கொண்டே இருக்க  வேண்டும்படியான பழம்.)‘வாரீரோ! உம்மையன்றோ தேடித் திரிகிறது?’ என்னும்படியாவர் ஆதலின், ‘வம்பர்’ என்கிறார். வம்பு – புதுமை.

பிரானை – 2நிலா, தென்றல், சந்தனம், தண்ணீர் போலே பிறர் பொருட்டாக ஆயிற்று வஸ்து இருப்பது

பர்த்தாரம் – ‘ஐயர் நீர் வார்த்துக்  கொடுத்தவர்’ என்று விரும்பிப் போந்தாள் முன்பு: இப்போதாயிற்று  ‘ஆண்பிள்ளை’ என்று அணைத்தது; ‘ஆண் வடிவாக இருக்கின்ற பெண்’  என்றவளேயன்றோ முன்பு? பரிஷஸ்வஜே – யுத்தவடு உள்ள இடமெங்கும்  திருமுலைத் தடத்தாலே வேது கொண்டாள். அப்படியே. பிராட்டி பெருமாளை அணைத்தது போன்று நப்பின்னைப் பிராட்டி அணைக்க நின்றபடி’ என்றவாறு.

கர்ப்பத்தில் சம்பந்தமில்லை. ‘இதுதான் கூடுமோ?’ என்ன ஒண்ணாது; ‘என்னை?’ எனின், இக்ஷ்வாகு வமிசத்திலே யுவநாஸ்வான் என்பான் ஒருவன் மந்திரத்தாலே சுத்தம் செய்யப்பட்ட தண்ணீரைக் குடிக்க, அவன் வயிற்றிலே கர்ப்பம் உண்டாயிற்றேயன்றோ ஒரு சத்தி விசேஷத்தாலே? அங்கு ஆணும் பெண்ணுமாய்க் கலந்து பிறந்தமை இல்லையே? அப்படியே, இங்கும் சர்வ சத்தி யோகத்தாலே இவ்வர்த்தம் பொருத்தமாகத் தட்டு இல்லையேயன்றோ? இதற்குப் பிரமாணம் 1‘அஜாயமாந:’ என்ற சுருதியேயன்றோ?

ஐவர்க்கு அருள் செய்து – தான் அல்லது தஞ்சம் இல்லாத பாண்டவர்களுக்கு. 5‘பாண்டவர்கள் கண்ணனையே சரணமாக அடைந்தவர்கள்; கண்ணனையே துணையாக உடையவர்கள்; கண்ணனையே நாதனாக உடையவர்கள்; பூர்ணசந்திரன் நக்ஷத்திரங்களுக்குத் தலைவனாய் இருத்தலைப் போன்று, அந்தப் பாண்டவர்களுக்குக் கண்ணன் சிறந்த உபாயமாய் இருக்கிறான்,’ என்பது பாரதம்

பூமி நெளியும்படிக்குத் தகுதியாக மிகைத்துவந்த அசுரகூட்டங்களை விளக்கை அவித்தாற்போன்று, பிணங்காணவொண்ணாதபடி முடித்துப் போகட்ட. பரஞ்சுடரை – 1‘ஆயுதம் எடுக்க ஒண்ணாது’ என்றார்களே? அதற்காக, சேநாதூளியும் முட்கோலும் சிறுவாய்க்கயிறும் தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளும் சிறு சதங்கையுமாய்ச் சாரதி வேஷத்தோடே நின்ற நிலையைச் சொல்லுகிறது.

அத்தா அரியே என்று உன்னை அழைக்கப் பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை’ என்றும், 2பேயரே எனக்கு யாவரும்; யானும் ஓர் பேயனே எவர்க்கும்’ என்றும் சொல்லுகிறபடியே, அவர்கள் செயல் இவர்கட்கு அடைவு கேடாய்த் தோன்றுமாறு போன்று, இவர்கள் செயலும் அவர்கட்கு அடைவு கேடாய்த் தோன்றுமே அன்றோ? வைஷ்ணவர்கள் அங்கீகாரம் பெறுமதிலும் வைஷ்ணவர்கள் அல்லாதார் ‘இவன் நமக்கு உடல் அல்லன்’ என்று கைவிடுகைதான் உத்தேஸ்யமாதலின், ‘பிறர் கூற’ என்கிறார்

 கருமமும் கருமபலனும் ஆகிய – புண்ணிய பாவ ரூபமான கர்மங்களுக்கும் கர்மபலங்களுக்கும் ஏவுகின்றவனாய்; 1கருமங்கள் உண்டானாலும் கருமங்களைச் செய்கின்றவன் ஒருவன் வேணுமே? ஆதலின். ‘கருமங்களைச் செய்கின்றவனுமாயிருக்கின்றான்’ என்பார், ‘கருமமும் ஆகிய’ என்கிறார்; என்றது, ‘கருமங்களைச் செய்கின்றவன் வழியாகக் கருமங்களை நிர்வஹிக்கிறவன்’ என்றபடி. கருமங்களைச் செய்தாலும் அவற்றிற்கு ஒருவன் பலன் கொடுக்காத போது அவை பழுதையைப் போன்று கிடக்குமத்தனையேயன்றோ, அவை அசேதநக்கிரியை ஆகையாலே? ஆதலால், ‘அவற்றிற்குப் பலத்தைக் கொடுக்கின்றவனுமாய் இருக்கிறான்,’ என்பார், ‘கரும பலனுமாகிய’ என்கிறார்.

திரு மணிவண்ணனை – 3உபாசகனுக்கு விக்கிரஹத்தைப் பற்றுக் கோடாகச் சொல்லா நின்றதே யன்றோ? ஆதலின், அவனுக்கு உத்தேஸ்யமாய் இருந்துள்ள விக்கிரஹத்தை யுடையவனை; ஒளி மிக்கிருந்துள்ள நீலமணி போலே சிரமத்தைப் போக்குகிற வடிவையுடையவன் என்றபடி.

நாம் இவர்களைக் கைவிட ஒண்ணாது; நலத்தைச் சொல்லுவோம்,’ என்று பார்த்து, 2பிராட்டி நலம் அருளிச் செய்தாற்போலே நலத்தை அருளிச்செய்கிறார் இத்திருவாய்மொழியில்.-ஆறாந்திருவாய்மொழி – ‘செய்ய தாமரை’-பிராட்டி அவன்தனக்கே நலத்தை அருளிச்செய்தாற்போன்று, இவரும் மேல் திருவாய்மொழியில் அவர்களை நிந்தித்து வைத்து, இரங்கி இத்திருவாய்மொழியில் நலத்தை அருளிச்செய்கிறார்.

‘நண்ணாதார் மெய்யில் ஊன் ஆசை நிர்வேதத்தோடே ஆஸ்திக்ய  அமாநித்வாதிகள் விஞ்சின பிரணிபாத அபிவாதந பரிப்ரச்ந சேவாபரர்க்கு
உளங்கொள் பேசுமளவன்று என்னும் அர்த்தத்தை வம்மின் விரோதம் ஈனச் சொல் எவ்வுயிர்க்கும் அறிய என்று அடைவுகெட அதபஸ்கர்க்கு
உபதேசிக்கிறது ஞாலத்தார் பந்தபுத்தியும் அநர்த்தங்கண்டு  ஆற்றாமையும் மிக்க கிருபையுமிறே.’ ‘தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும்
 இவர்க்கும் இவர் அடிபணிந்தவர்க்குமே இவையுள்ளது’ என்னும் ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீசூக்தி-திருதீயபிரகரணம். சூ. 54, 55)

இராவணன் பிராட்டிபக்கல் 1‘பெற்றதாய்’ என்ற நினைவு இன்றிக்கே திருமுன்பே நின்று சிலவற்றைப் 2பிதற்றப் புக்கவாறே 3‘ஸ்ரீராமபிரான் யானையைப் போல எண்ணப்படுகிறார்; நீ மிகச் சிறிய முயலைப்போல எண்ணப்படுகிறாய்,’ என்று வெறுத்து வைத்து, பின்னையும் ‘ஐயோ! இவன் நினைவு இருந்தபடி என்? 4இவனுக்கு ஒரு நல்வார்த்தை சொல்லுவார் இன்றிக்கே ஒழிவதே!’ என்று இரக்கங்கொண்டு 5‘நீ ஸ்ரீராமபிரானோடு தோழமை கொள்,’என்று உபதேசித்து அருளினாள் அன்றோ

உபாயங்களில் பிரபத்திமார்க்கம் போன்றது, சௌலப்யங்களில் அர்ச்சாவதார சௌலப்யம்.

வேறு பலன்களைக் கருதும் தன்மையும் நெஞ்சிலே கிடக்கச்செய்தே வேறு பலனைக் கருதாதவர்களைப் போல வந்து பற்றாநிற்பர்கள்-ஆதலின், ‘செம்மையால் திரிவர்’ என்கிறது; ‘வேறொரு பயனை விரும்புகிற விருப்பமும் உள்ளே கிடக்கச்செய்தே அது இன்றித் தன்னையே பற்றினாரைப் போலே இருக்க, புகுவது புறப்படுவதாய்த் திரியும்படி அன்றோ அவன்படி இருக்கிறது?’ என்றபடி. செம்மை – செவ்வை; அதாவது, வேறொரு பயனையும் கருதாமை.

அண்ணல் தோற்றம் மற்றும் மற்றும் முற்றுமாய் இருக்கும்-வாத்சல்யத்தாலே எப்போதும் விபூதியோடே கூடி மயில் தோகை விரித்தாற்போலே விபூதியோடு கூடினவனாய்க் கொண்டு அவனுடைய தோற்றரவு இருப்பது’ என்னுதல்; அன்றியே, 1‘பூதங்களுக்கு ஈசுவரனாய் இருந்தாலும், என்னுடைய நினைவினாலே அவதரிக்கிறேன்,’ என்கிறபடியே, ஐஸ்வரியம் முதலியவைகளோடே வந்து அவதரிக்கும்,’ என்னுதல்.-மயில் தோகை விரித்தாற்போலே விபூதியோட  கூடினவனாய்க் கொண்டு அவனுடைய தோற்றரவு இருப்பது’ என்றது, ‘தன்  உடலில் சேர்ந்து சுருங்கிக் கிடக்கின்ற தோகையை மிகப்பெரியதாகவும்
அலங்காரமுடைத்தாகவும் விரித்துக்கொண்டு விளங்குகின்ற மயிலைப்  போன்று உலகத்தோடு கூடித் தோன்றுகின்றான் இறைவன்,’ என்றபடி.

கண்டார் கண்களுக்கு அஞ்சனம் இட்டாற்போலே குளிர்ந்திருந்துள்ள மயிர் முடியையுடையவனாய். எங்கள் சுடர் முடி அண்ணல் தோற்றம் – வேறுபயனைக் கருதாதவர்கட்கு அனுபவிக்கத் தக்கதாய் ஆதிராஜ்ய சூசகமான ஒளியையுடைத்தான திருமுடியை உடைய சர்வேசுவரனுடைய தோற்றம். 2தோற்றம் – பிரகாசம்’ என்னுதல்; ‘அவதாரம்’ என்னுதல்.

இரணியன் துவேஷத்திற்கு விஷயம் ஆனாற்போலே இவன் அருளுக்கு விஷயமானான் ஆதலின், ‘சீற்றத்தோடு அருள் பெற்றவன்’ என்கிறது.இரணியன் பக்கல் சீற்றமும் செல்லாநிற்க, ஸ்ரீ பிரஹ்லாதாழ்வானுக்குக் கிட்டலாய் இருந்தபடி எங்ஙனே?’ என்று எம்பெருமானாரைச் சிலர் கேட்க, ‘சிம்ஹம் யானைமேலே சீறினாலும் குட்டிக்கு முலை உண்ணலாம்படி இருக்கும் அன்றோ?’ என்று அருளிச்செய்தார். ‘அடியாரிடத்துள்ள அன்பினாலே அவர்கள் விரோதி மேலே சீறின சீற்றமானால், பின்னை அவர்களுக்கு அணைய ஒண்ணாதபடி இருக்குமோ?’ என்று அருளிச்செய்தார் என்றபடி.

எழுமைக்குமே – 2காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும். அவன் நித்தியசூரிகள் பக்கலிலே இருக்கக்கடவ இருப்பை என் பக்கலில் இருக்க, நான் வேறொன்றை இனிய பொருளாக நினைத்திருப்பேனோ? அவர்கள் அவனை ஒழிய வேறொன்றை இனிய பொருளாக நினைக்கில் அன்றோ நான் வேறொன்றை இனிய பொருளாக நினைப்பது?

உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான்தன்னை – இப்படி எல்லாம் நிறைந்தவனாய் இருந்தானேயாகிலும், தன் விபூதியில் ஒரு கூறான இவ்வுலகத்தைப் பிரளயங்கொண்டது என்றால், இங்கே வந்து வயிற்றிலே எடுத்து வைத்து நோக்கி, ‘இத்தனை போதும் காணப்பெறாமையாலே இவை என்படுகின்றனவோ!’ என்று உமிழ்ந்து பார்க்குமவனை; 3வழிபறிக்கும் நிலத்திற் போவார் சீரிய தனங்களை விழுங்கி பின்னை அமர்ந்த நிலத்திலே புக்கால் புறப்பட விட்டுப் பார்க்குமாறு போலே

விண்ணவர் கருமாணிக்கம் படம் அரவின் அணைக்கிடந்த பரஞ்சுடர் கடல் வண்ணன் கண்ணன் – நித்தியசூரிகளுக்கு இனியனானவன், கலங்காப் பெருநகரத்தை விட்டு, பிரமன் முதலியோர்கட்கு அடையத்தக்கவன் ஆகைக்காகத் தன்னுடைய பரிசத்தாலே விரித்த படங்களையுடைய திருவனந்தாழ்வான்மேலே திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருளி, அவனுடைய பரிசத்தாலே தகட்டில் அழுத்தின மாணிக்கம்போலே மிக்க அழகையுடையனாய், ‘அறப்பெரியன்’ என்று தோன்றும்படியாய் சிரமத்தைப் போக்கும்படியான வடிவையுடையனாய், அளவற்ற பெருமையனான கிருஷ்ணன்

பை கொள் பாம்பு ஏறி உறை பரனே – திருமேனியின் பரிசத்தாலே விரிந்திருக்கிற பணங்களையுடைய திருவனந்தாழ்வான்மேலே சாய்ந்தருளுகையாலே தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே இருக்கையாலே ‘பரன்’ என்கிறது

பண் கொள் சோலை – வண்டுகளின் மிடற்று ஓசையாலே பண் மிக்கிருந்துள்ள சோலை; 2முக்கோட்டை போலே காணும் சோலை இருப்பது.(முக்கோட்டை – ‘. ‘இதனை நினைத்தவர்கட்கும்  பார்த்தவர்கட்கும் இங்கு சென்றவருக்கும் கவித்துவசத்தி உண்டாம்,’ என்று சொல்லுவர்.-வண்டுகளின் நினைவின்றியே  இன்றியே அவற்றின் மிடற்றோசை பண் ஆனாற்போன்று, பகவானுடைய குணங்களை அனுபவித்த அனுபவம் வழிந்த பேச்சுகள் விழுக்காட்டாலே பண்ணானபடி.

பயிலுமின்’ என்றால், பயில்வர்களோ?’ எனின், ‘நிதி இங்கே உண்டு’ என்ன, அவ்விடத்தைத் தோண்டுவார்களே அன்றோ? அப்படியே, ‘பத்தி உண்டாம்’ என்ன, கற்பார்கள் என்று அருளிச்செய்கிறார்.

அநக: – பாபம் அற்றவன்’ – அப்படை வீட்டில் அல்லாதார் எல்லாம் பாபம் கலந்த ஜீவனம் போலே காணும். என்றது, இராம பத்தி கலந்திருத்தலைக் குறித்தபடி. ‘ஆயின், இராம பத்தியைப் பாபம் என்னலாமோ?’ எனின், ‘இருவினைகளில் புண்ணியம் உத்தேஸ்யமாயினும், மோக்ஷ உலகிற்கு விரோதி என்னும் முறையாலே இரு வினையும் விடத்தக்கது என்னாநின்றதே அன்றோ? இங்கும், உத்தேஸ்ய விரோதியாகையாலே சொல்லலாம்,’ ‘நித்ய சத்ருக்ந:’ என்னுமிதனால், 1இனிமையில் ஸ்ரீ பரதாழ்வானை ஒவ்வார் பெருமாள் என்கிறது. ‘நீத: – அழைத்துச் செல்லப்பட்டான்’ – ஒரு குற்றுடைவாள், நிழல் உள்ளிட்டவையைப் போன்று போனான். என்றது, ‘ஒருவனோடு மற்றொருவன் சேர்ந்து செல்லுகின்ற காலத்துச் செல்லுதலாகிய அத்தொழில் செல்லுகின்ற இருவர் இடத்திலும் இருக்குமே? தான் வேறு ஒருவனாக இருந்தும், ஜாதி குணங்களைப் போன்று பரதந்திரனாய்ப் போனான்,’‘பிரீதி புரஸ்க்ருத: – தமையன் பின்னே தம்பி போகக் கடவன்’ என்னும் முறையாலே தேவை போன்று இருக்குமோ?’ என்னில், அங்ஙன் அன்று; ‘படைவீட்டிலே இருந்தால் ஒருவன் சோற்றைப் பகுந்து உண்ணுமாறு போன்று படை வீடாகப் பெருமாளுக்கு அடிமை செய்வார்கள்; ஏகாந்தமான இடத்தில் நாம் எல்லா அடிமைகளையும் செய்யலாம்,’ என்று, 2‘அஹம் சர்வம் கரிஷ்யாமி – நான் எல்லா அடிமைகளையும் செய்வேன்’ என்று இளைய பெருமாள் காடேறப் போயினமை போன்று, இவனும் ‘நாம் எல்லா அடிமைகளையும் செய்யலாம்’ என்கிற பிரீதி பிடரி தள்ளத்தள்ளப் போனான்.

அநந்யா – இறைவனைத் தவிர வேறொன்றனையும் விரும்பாத’ என்கிற நிலை இவர்களுக்கு உண்டானால் இவர்களைப் பின்பற்றுகிறது அவனைப் பற்றியதாம் அன்றோ?-    2பிராஹ்மண சாதி ஒன்றாய் இருக்கவும், குலம் சரணம் கோத்திரம் முதலியவைகளால் பிரித்துச் சம்பந்திக்குமாறு போன்று, வைஷ்ணவர்களுக்கு நிரூபகம், அவனுடைய குணங்கள் செயல்கள் முதலியவைகளால் ஆம். அவ்வழியாலே, அவனுடைய வடிவழகிலே துவக்குண்டிருக்குமவர்கள், குணங்களிலே துவக்குண்டிருக்குமவர்கள், செயல்களிலே துவக்குண்டிருக்குமவர்கள் என்று இவ்வழியாலே அவர்களைப் பிரித்து, அவர்கள் எல்லாரோடும் தமக்கு ஒரு சம்பந்தத்தை ஆசைப்பட்டு, ‘அவர்கள் எல்லாரும் எனக்கு ஸ்வாமிகள்’ என்கிறார்.

இவ்விஷயத்தில் அனுபவித்த அழகை நோக்க அனுபவிக்கும் அழகு, 1முத்தன் இச்சரீரத்தை நினையாதவனாகி’ என்கிறபடியே, முத்தன் சமுசார வாழ்க்கையை மறக்குமாறு போன்று, அனுபவித்த தன்மையை நினைக்க ஒண்ணாதபடி அன்றோ இருப்பது? ஆதலால் அன்றோ, 2பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் யாம் என்றே பயில்கின்றாளால்’ என்றார் மாறன் பணித்த தமிழ் மறைக்கு ஆறங்கம் கூற அவதரித்த ஆலிநாடரும்? என்றது, ‘முதல் நாள் கண்டால், இயற்கையில் அமைந்த இறைமைத்தன்மையாலும் முகத்தில் தண்ணளியாலும் ஆக, காணாது கண்டவனுக்கும் ‘பண்டு கண்டு விட்ட முகமோ?’ என்று தோன்றியிருக்கும்; சில நாள் பழகினால், ‘பண்டு இவரை நாம் கண்டு அறியோமே!’ என்று தோன்றியிருக்கும்’ என்றபடி.

ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப் போதனைதோளும் தோள்மாலையுமான அழகைக் கண்டால் திருத்திரை நீக்கின பின்னர் போலே, நித்தியசூரிகளோடு நித்திய சமுசாரிகளோடு வாசி அறப் புகழாநிற்பர்கள். திருமேனியின் பரிசத்தால் நறு நாற்றத்தை உடைத்தாய்ச் செவ்வி பெற்றிருக்கின்ற திருத்துழாய்ப் பூவை உடையவன் ஆதலின், ‘நறுந்துழாய்ப் போதன்’ என்கிறார்

புடையார் பொன் நூலினன் – தான் கிடந்த பக்கத்தில் வேறோர் ஆபரணம் வேண்டாதே, காளமேகத்திலே மின்னியது போன்று இருக்கின்ற பூணூலையுடையவன். இந்த அழகுக் கடலின் நடுவே அலையப் புக்கவாறே, தமக்குப் பற்றுக்கோடாக ஒரு 2நூலைப் பற்றினார்காணும்.

நூற்றோராவது நாடியாலே 1‘ஆர்த்தனான பரம புருஷனால் அநுக்கிரஹிக்கப்பட்டவனாய்’ என்கிறபடியே, தான் கூடக் கொண்டு புறப்பட்டு, அச்சரீரத்தின் பிரிவு சமயத்திலே இவன்பட்ட வருத்தமெல்லாம் தீரும்படியாக அவ்வளவிலே ஒரு பரமாத்தும பிரவேசத்தைப் பண்ணுவித்து, சிறு குழந்தைகள் நொந்தால் தாயானவள் குளிர்ந்த உபசாரம் பண்ணுமாறு போன்று அவ்வளவிலே மேல் வழி போகைக்குத் தரிப்பு உண்டாம்படி செய்து, 2’உயிர்கொண்டு உடல் ஒழிய ஓடும்போது ஓடி, அயர்வென்ற தீர்ப்பான்’ என்கிறபடியே, சென்று முகங்கொடுத்து, கர்ம சம்பந்தம் அற்றிருப்பினும் வித்யா மஹாத்மியத்தாலே விரஜையளவும் 3சூக்ஷ்ம சரீரம் நிற்கும்படி பண்ணி, 4அர்ச்சிராதி கணங்களோடு ஒக்க ஆள் இட்டிராமல், ‘நயாமி – அடையச்செய்கிறேன்’ என்கிறபடியே, தானே வந்து 1‘மாதவன் தன் துணையா நடந்தாள்’ என்கிற ‘கள்வன்கொல்’ என்கிற திருப்பதிகத்திலே பிராட்டியைப் போலே தன் சிறகின்கீழே கொண்டு, வழியிலுள்ளார் தலைமேல் தாங்கும்படி இவ்வருகுள்ளவற்றைக் கழித்துப் பரமபதத்திலே கொண்டு புக்கு, 2’இந்த உயிர் இந்தச் சரீரத்திலிருந்து புறப்பட்டுப் பரஞ்சோதியாய் உள்ள பரம்பொருளையடைந்து’ என்கிறபடியே தனக்கே உரியதான உருவத்தோடு விளங்கும்படியாகச் செய்து, பின்னையும் விடாதே திருவடிகளே அணையாகத் தன் திருவடிகளின் கீழே இட்டுக்கொண்டு, இதுதான் இவனுக்கு உபகரித்தானாய் இருத்தல் அன்றிக்கே, தன் பேறாக நினைத்திருக்கும் மஹோபகாரகனை. 3‘எவர் ஒருவர் மிக்க பத்தியையுடையவராய் உபாசனை செய்து எனது சாயுஜ்ய பதவியை அடைகின்றாரோ அவர் விரோதி கழிந்தவராய் எப்பொழுதும் என்னுடைய கைங்கரிய பரர் ஆகின்றார்,’ எனப்படுதலால் ‘தன் தாளிணைக் கீழ்க்கொள்ளும்’ என்கிறார்.

பிராட்டியும் ஸ்ரீ விபீஷணப் பெருமாளும் இலங்கையினின்றும்  புறப்பட்டாற்போலே ஹ்ருதய கமலத்தினின்றும் புறப்பட்டு,
‘சதஞ்சைகாசஹ்ருதயஸ்ய நாட்ய:’ என்கிறபடியே, ஹ்ருதயத்தைப் பற்றிக்  கிடக்கிற நூற்றொரு நாடியிலும் ஸீஷீம்நை என்று பேரையுடைத்தான
மூர்த்தந்ய நாடியாலே வித்யா மகாத்மியத்தாலும் தேவயாநாநுஸ்மிருதியாலும் பிரசந்நனான ஹார்த்தன் கைவிளக்குப் பிடித்துக்கொண்டு போகப் போய்ச்
சிரக்கபாலத்தைப் பேதித்து,’ என்றார் பிள்ளைலோகாசாரியர். (அஷ்டாதச ரஹஸ்யம், அர்ச்சிராதி, முதல் பிரகரணம்.)

நன்னில மாமது நற்பக லாமது நன்னிமித்தம்
என்னலு மாமது யாதானு மாம்அங் கடியவர்க்கு
மின்னிலை மேனி விடும்பய ணத்து விலக்கிலதோர்
நன்னிலை யாம்நடு நாடி வழிக்கு நடைபெறவே.’அதிகார சங். 27

நடைபெற அங்கி பகல்ஒளி நாள்உத்த ராயணம்ஆண்டு
இடைவரு காற்றுஇர விஇர வின்பதி மீன்வருணன்
குடையுடை வானவர் கோன்பிர சாபதி என்றிவரால்
இடையிடை போகங்கள் எய்தி எழிற்பதம் ஏறுவரே.’ஸ்ரீ தேசிகப் பிரபந். அதிகார சங். 28

குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து – 2முறைப்படி நடக்கும் விவாகத்தாலும் அநுலோம பிரதிலோம விவாகத்தாலும் உள்ள குலங்களைத் தரிப்பதான பிராஹ்மண வருணம் முதலான நான்கு பிறவிகளிலும் கீழே கீழே போய். எத்தனை நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்-அந்தச் சண்டாள ஜன்மத்துக்கு அடைத்த ஞான ஒழுக்கங்கள் இன்றியே இருப்பாருமாய், ‘சண்டாளர்’ என்றால் நாம் நோக்காமல் போமாறு போன்று அந்தச் சண்டாளர்களும் விலகிச் செல்லக் கூடியவர்களாகிலும். ‘இவர்கள் உத்தேஸ்யர் ஆகைக்கு என்ன 3வலக்குறி உண்டு?’வலக்குறி என்ன, விருத்தவான்கள் அன்றோ இவர்கள் என்று கைமேலே காட்டிக்கொடுக்கிறார் மேல். – வலப்பக்கத்தில் திருவாழி: அன்றி, அடையாளம். விருத்தவான்கள் – ஆசாரமுடையவர்கள்; அல்லது, திருவாழியை  ரக்ஷகமாகவுடையவர்கள். ‘கைமேலே’ என்பது சிலேடை.

 முறைப்படி நடக்கும் விவாகமாவது, ஒவ்வொரு சாதியினரும் அவ்வச்சாதியில்  செய்துகொள்ளும் மணம். அநுலோம விவாகமாவது, மேல் சாதியினன்,
தனக்குக் கீழ்ப்பட்ட சாதிகளில் செய்துகொள்ளும் மணம். பிரதிலோம  விவாகமாவது, கீழ்ச்சாதியினன், தனக்கு மேற்பட்ட சாதிகளில்  செய்துகொள்ளும் மணம். கலைக்கோட்டு முனிவர் பக்கலிலும், யயாதி  பக்கலிலும் காணலாம்.

அடியார் அடியார்தம் அடியார் அடியார்தமக்கு அடியார் அடியார்தம் அடியார் அடியோம் – 3‘அந்தப் பரம்பொருள் ஈசுவரர்களான சிவன் முதலியோர்களுக்கும் மேலான ஈசுவரன்’ என்கிறபடியே, இறைமைத் தன்மைக்கு அவனுக்கு அவ்வருகு இல்லாதது போன்று, அடிமையாம் தன்மைக்குத் தமக்கு அவ்வருகு இல்லாதபடி அதன் எல்லையிலே நிற்கிறார். ஐஸ்வரியத்தை ஆசைப்பட்டவர்கள் தம்மோடு ஒத்த இனத்தாரில் ஏற்றத்தை ஆசைப்பட்டு, க்ஷத்திரியர்க்கு மேலே ஆசைப்பட்டு, இந்திர பதத்தை ஆசைப்பட்டு, பிரஹ்மாவின் அளவில் ஆசைப்படுமாறு போன்று, இவரும் இவ்வருகில் எல்லையை ஆசைப்படுகிறார்.

அடி ஆர்ந்த ஆயிரத்துள்இருக்கு வேதம் போலவும், 1‘நான்கு அடிகளோடு கூடியதும் ஒவ்வோரடியும் எழுத்துக்களால் ஒத்திருப்பதும்’ என்கிற ஸ்ரீ ராமாயணம் போலவும் அடிகள் நிறைவுற்ற ஆயிரம்.

மற்றை இந்திரியங்களினுடைய தொழிலை மற்றை இந்திரியம் ஆசைப்பட்டும், 1அவை எல்லாவற்றினுடைய தொழில்களையும் தாம் ஆசைப்பட்டும், தம்மிலும் விடாய்த்த உறுப்புகளும் உறுப்புகளிலும் விடாய்த்த தாமுமாய், பல குழந்தைகளைப் பெற்றான் ஒருவன், வற்கடம் உண்டான காலத்திலே தன் பசிக்கு ஆற்றமாட்டாமல் அவற்றின் வாயிற் சோற்றைத் தான் பறித்து ஜீவிப்பது, தன் வாயிற்சோற்றை அவை பறித்து ஜீவிப்பதாய், ‘என் பசிக்கு என் செய்வேன்? என் குழந்தைகளின் பசிக்கு என் செய்வேன்?’ என்னுமாறு போன்று, தாமும் தம்முடைய இந்திரியங்களின் கூட்டமுமாக நோவுபட்டுக் கூப்பிடுகிறார்.

மிக்க அன்போடு கூடின யான் துக்கத்தால் மிக இளைத்திருக்கிற உறுப்புகளால் ஆடவர் திலகனான அவ்விராமபிரானைத் தொடுவதற்குத் தகுதியாக நீ என்னிடத்தில் அருளைச் செய்’ என்றாள் அன்றோ பிராட்டியும்? ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், சிலர் பட்டினி கிடக்கச் சிலர் ஜீவிக்குமாறு போன்று, இவ்வுடம்பைக்கொண்டு அணைய ஆசைப்பட்டு, இவ்வாசையோடே முடிந்துபோய் இனி வேறு ஒரு சரீரத்தை மேற்கொண்டு அவரை அனுபவிக்க இராமல், ஆசைப்பட்ட இவ்வுறுப்புகளைக்கொண்டே நான் அநுபவிக்கும்படி செய்து தரவேண்டும் என்றாள் என்பது. (உறுப்புகளும் தாமும் தனித்தனியே விடாய்த்தமைக்குத் திருஷ்டாந்தம்  அருளிச்செய்கிறார், ‘மிக்க அன்போடு கூடின யான்’ என்று தொடங்கி.  ஸ்ரீராமா. சுந். 40 : 3, இது, திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.)அப்படி இவரும் நோவுபட்டு, 3ஆயுதங்களையும் ஆபரணங்களையும் அவற்றுக்குப் பற்றுக்கோடான திருமேனியையும் குணங்களையும் செயல்களையுமுடைய எம்பெருமானைக் காணவேண்டும் என்று, ‘ஈசுவரனால் முன்பு போலே குணங்களை அனுபவிப்பித்தல் முதலியவைகளாலே பட்டினியைப் போக்க ஒண்ணாது’ என்னும்படி, கேட்டார் எல்லாம் நீராகும்படி பெருந்தானத்திலே (பெருந்தானம் – பெரிய ஸ்வரம்.)பெருமிடறு செய்து கூப்பிடுகிறார்.

பொன்னெடுஞ் சக்கரத் துன்னையே’ என்பது போன்றவைகளை நோக்கி,  ‘ஆயுதங்களை’ என்றும், ‘முடியானே’ என்றதனை நோக்கி, ‘ஆபரணங்களை’  என்றும், ‘மூவுலகும் தொழுதேத்தும் சீர்’ என்பது போன்றவைகளை நோக்கி,  ‘குணங்களை’ என்றும், ‘கொள்வன் நான் மாவலி’ என்பது போன்றவைகளை
நோக்கிச் ‘செயல்களை’ என்றும் அருளிச் செய்கிறார்

பகவத் விஷயத்தில் வாசனை பண்ணுகிறார் பண்ணுகிறது ஒரு பயனைப் பெறுவதற்காக அன்று; இதர விஷயங்களைப்போன்று இவ்விஷயம் ரசிக்க வேண்டும் என்று. 1அறிவில்லாதவர்களுக்குச் சிற்றின்பங்களில் இடையீடு இல்லாத பிரீதி இருப்பதைப் போன்று, தேவரீரை நினைக்கிற எனக்கு அத்தகைய பிரீதியானது மனத்தில் நீங்காதிருக்க வேண்டும்,’ என்றான் ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான்.

ஓர் இந்திரியத்தின் தொழிலை மற்றை இந்திரியம் ஆசைப்படக் கூடுமோ?’ எனில், 2பாம்பு கண்ணாலே காண்பதுஞ்செய்து கேட்பதுஞ்செய்யாநின்றதே அன்றோ? அதுவும் அவன் கொடுத்ததே; அவன் தந்தால் அது நமக்குத் தட்டு என்? ‘அடியார்கட்கு அவன் கொடுக்க எங்கே கண்டோம்?’ என்னில், 3தம்மையே ஒக்க அருள வேண்டுகையாலே, ஒரு தேச விசேஷத்திலே தன்னை அனுபவிப்பார்க்குக் கொடா நின்றானே அன்றோ?-(தூது செய் கண்கள்  திருவாய்மொழி, 9. 9 : 9.)

கரணங்களும் அறிவுடைப் பொருள்களைப் போன்று விடாய்த்தால், தம் காதல் குறையாதோ?’ என்னில், ஆறு கிண்ணகம் எடுத்தால் பல வாய்த் தலைகளாலும் போகச் செய்தேயும் கடலில் புகும் பகுதி குறைவற்றுப் போமாறு போன்று, இவருடைய காதலின் மிகுதி இவருடைய கரணங்களாகிற வாய்த்தலைகளாலே பெருகினாலும் காதல் குறையற்றே நிற்கும்.

நெடியானே!’ என்றால் காணவேணும் கேட்கவேணும் என்கிற சொல்லால் தலைக்கட்டமாட்டுகின்றது இல்லை; ‘நெடியானேஎ!’ என்று பாடு ஓடிக் கிடக்கின்றது. 5‘துக்கத்தால் மிகுதியும் தபிக்கப்பட்டவராயும் மிக்க பராக்கிரமத்தையுடையவராயும் இருக்கிற ஸ்ரீ பரதாழ்வான் ஒரு முறை தீனசுரத்தோடு ‘ஆர்யா!’ என்று கூறி, வேறு வார்த்தை ஒன்றையும் கூற இல்லை,’ என்று சொல்லப்பட்ட ஸ்ரீ பரதாழ்வானைப் போன்று கிடக்கிறது என்றபடி.

கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும், புல்லென்று ஒழிந்தன கொல்? ஏ பாவம்!’ என்னுமாறு போன்று ‘பரமபதமும் அவ்விருப்பும் என்படுகின்றதோ?’ என்றபடி. ‘கலங்காப் பெரு நகரத்திற் பண்ணும் ஆதரத்தை என் நெஞ்சிலே பண்ணா நின்றான்,’ என்பார், ‘நகராக’ என்கிறார். பரமபதத்தில் 2இட்டளமும் தீர்ந்தது (இட்டளம் – குறைவு.)இவர் நெஞ்சிலே ஆதலின், ‘நீள் நகராக’ என்கிறார்.

இவ்வஞ்சனத்தை அநுசந்தித்த பின்பு 2இராமாவதாரத்தின் செவ்வையிலும் போகிறது இல்லை,’ என்பார், ‘வஞ்சனே என்னும்’ எனப்பிரிநிலை ஏகாரங்கொடுத்து ஓதுகிறார். ‘இராமாவதாரத்திலும் இதற்குப் பெருமை என்?’ எனின், தன் பெருமை அழியாமற்செய்த இடம் அன்றோ இராமாவதாரம்? தன் பெருமை அழிய மாறின இடம் அன்றோ இது? எப்போதும் – 3கலியர் (பசியுள்ளவர்.)‘சோறு சோறு’ என்னுமாறு போன்று.

நாள் இளந்திங்களைக் கோள் விடுத்து–புதிய சந்திரனைப்போலே ஆயிற்று முறுவல் -இளந்திங்கள்-இருக்கிறது; 4‘செக்கரிடை நுனிக்கொம்பில் தோன்றும் சிறு பிறை முளைப் போல், நக்க செந்துவர்வாய்த் திண்ணைமீதே நளிர் வெண்பல் முளை இலக’ என்றார் பட்டர்பிரான்-பெரியாழ்வார் திருமொழி, 1. 7 : 2.. திங்கள் போல் என்னாது, ‘திங்கள்’ என்றது,‘தாவி வையம் கொண்ட தடம் தாமரை’ (திருவாய். 6. 9 : 9.)என்னுமாறு போன்று முற்றுவமை இருக்கிறபடி

ஒரு மேருவைக் கினிய காளமேகம் படிந்தாற்போலே

கைகளால் ஆரத்தொழுது – ‘பசியர் வயிறு ஆர உண்ண’ என்னுமாறு போன்று, உன்னைத் தொழவேண்டும் என்று ஆசைப்பட்டுப் பெறாமையாலே உறாவிக் கிடக்கிற இக்கைகளானவை நிறையத் தொழுது.-இவற்றுக்குத் தொழாதொழிகை 1காதலையுடையவளாய் முலையெழுந்து வைத்துக் கணவனுடைய கைகளால் தீண்டப் பெறாததைப் போன்றதாதலின்2கைகளால்’ என்று வேண்டா கூறுகிறார். 3சர்வேசுவரனை வணங்குவதற்காகவே கை கால் முதலிய அவயவங்களோடு கூடின விசித்திரமான இந்தச்சரீரம் ஆதிகாலத்தில் உண்டாக்கப்பட்டது,’ என்கிறபடியே, ‘கை வந்தபடி செய்ய அன்றோ இவர் ஆசைப்படுகிறது? வாய்க்கு ஏத்துதல் போன்று கைக்குத் தொழுகையும் ஆதலின், வாய் வந்தபடி சொல்லவும் கை வந்தபடி செய்யவுமே அன்றோ இவர் ஆசைப்படுகிறார்?’ என்றபடி. வேறு ஒரு பிரயோஜனத்துக்காகத் தொழுதால் பிரயோஜனத்தளவிலே மீளும்; சாதனம் என்ற எண்ணத்தோடு தொழில் பெற வேண்டிய பயன் கிடைத்த அளவிலே மீளும்; அங்ஙன் அன்றிக்கே, இதுவே செயலாய் இருத்தல் என்பார், ‘தொழுது தொழுது’ என்கிறார்.

வைகலும் ஓர் மாத்திரைப் போதும் வீடு இன்றி – நாள்தோறும் அதுதன்னிலும் ஒரு கணமும் இடைவிடாதே. ‘ஒரு நாளைக்கு ஒருகால் தொழுது தேவை அற்று இராதே இடை விடாதே தொழுது’ என்பார், ‘ஓர் மாத்திரைப் போதும் வீடின்றி’ என்கிறார். 2நித்யாக்நி ஹோத்ராதிகளைப் போன்று செய்யலாகாது’ என்றபடி

என் கண்கள் தம் கைகளாலே தொழவும் தாம் காணவும் ஆசைப்படா நின்றன. ‘ஸ்ரீபரதாழ்வான் பெருமாள் பின்னே போன இளைய பெருமாளை 3அவரும் ஒருவரே’ என்று கொண்டாடி, அவர் போய்ச் செய்த அடிமையையும் தான் செய்ய ஆசைப்பட்டாற் போலே ஆசைப்படாநின்றன,’ என்றபடி.

மண் கொண்ட வாமனன் – முடி சூடின பின்பும் 2கருந்தரையில் (பாழ்நிலம்; என்றது, முடி சூடுதற்கு முன் உள்ள நிலையைக்  குறித்தது.)பேர் சொல்லும் அந்தரங்கரைப் போலே மண் கொண்ட பின்பும் ‘வாமனன்’ என்கிறார்காணும்

செவிகளால் ஆர – செவிகள் வயிறு நிறையும்படியாக. நின் கீர்த்திக் கனியென்னும் கவிகளே – கீர்த்தி உருவமாய்க் கனி போலே இருக்கிற கவிகளை. ‘கவி கனிபோல் இருக்கையன்றிக்கே, இனிமையின் மிகுதியாலே கனி கவியாயிற்று,’ என்கிறார். காலம் பண் தேன் உறைப்பத் துற்று – செருக்கராய் இருக்கும் அரசபுத்திரர்கள் நல்ல பழங்களைத் தேனிலே தோய்த்து உண்ணுமாறு போன்று, உன் கீர்த்தியாகிற கனிகளைக் 2காலங்கட்கு அடைத்த பண்களாகிற தேனிலே, அத்தேன் மிஞ்சும்படி கலந்து அனுபவித்து.

காலங்கட்கு அடைத்த பண்’ என்றது, ஒவ்வொரு காலத்திற்கும் பண்களைப்  பாகுபடுத்தி வரையறை செய்துள்ளார்கள்; அதனைத் திருவுள்ளம் பற்றி
அருளிச்செய்தபடி, பகற்காலத்திற்குரிய பண்கள்: புறநீர்மை, காந்தாரம்,  பியந்தைக் காந்தாரம், கௌசிகம், இந்தளம், தக்கேசி, சாதாரி, நட்டபாடை,
நட்டராகம், பழம்பஞ்சுரம், பஞ்சமம், காந்தார பஞ்சமம் என்னும்  பன்னிரண்டுமாம். இராக்காலத்திற்குரிய பண்கள்: தக்கராகம், பழந்தக்கராகம்,
சீகாமரம், கொல்லி, கொல்லிக்கௌவாணம், வியாழக்குறிஞ்சி,  மேகராகக்குறிஞ்சி, அந்தாளிக்குறிஞ்சி, குறிஞ்சி என்னும் ஒன்பதுமாம்.
இவ்விருவகைக் காலத்திற்கும் பொதுவான பண்கள்: செவ்வழி, செந்துருத்தி,  தாண்டகம் என்னும் மூன்றுமாம். வேறு வகையாகவும் பிரித்துக் கூறுவர்.

பாவியேன் கூவியும் காணப் பெறேன் – 2‘ஆரே துயர் உழந்தார்?’ என்கிறபடியே, பகவத்விஷயத்தை ஆசைப்பட்டாரில் இழந்தார் இல்லைகண்டீர்; ஆதலால், கூவியும் காணப் பெறாத தாம் தம்மைப் ‘பாவியேன்’ என்கிறார். பாவியேன் நெஞ்சம் – 3நந்தன் பெற்றனன்; நல்வினை இல்லா நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே!’ என்கிறபடியே, ‘தமப்பனான சம்பந்தம் ஒத்திருக்க, புண்ணியம் செய்யாத என்னைக் கைப்பிடிக்கையால் அன்றோ ஸ்ரீ வசுதேவர் இழந்தது?’ என்று தேவகி கூறியது போன்று-

உன்னை எந்நாள் கண்டுகொள்வன் – வடிவழகும் குணங்களும் விடலாய் இருந்தன இல்லை; காலக் கழிப்புச் சொல்ல ஒண்ணாதபடியாய் இருந்தது; ஆனபின்பு, நான் உன்னைக் காண்பது என்று சொல்லாய்? என்றது, 2பதினான்கு வருஷங்களும் முடிவுற்ற பின்னர், பஞ்சமி திதியில்’ என்றாற்போன்று, நீயும் ‘நம்மை இந்நாள் காணக் கடவை என்று சொல்லாய்’ என்றபடி.

கொள்வன் – 2மலையாளர் வளைப்புப் போலே கொண்டு அல்லது போகேன் என்றானாயிற்று. அன்றிக்கே, இவனுடைய வாமன வேஷத்தைக் கண்டு ‘இவன் நம் பக்கல் ஒன்று கொள்வதுகாண்’ என்று நினைந்தமை தோன்ற இருந்தான் ஆயிற்று மகாபலி; நினைத்ததை அறிந்து, ‘நான் கொள்வேன் என்கிறான்’ என்னுதல். அன்றிக்கே, இவன் ஒன்றிலும் பற்று இல்லாதவனாய் இருத்தலை வடிவில் கண்டு, ‘இவன் நம் கையில் ஒன்று கொள்ளுமோ?’ என்று இருந்தான் மஹாபலி; ‘நீ அங்ஙன் நினைக்க வேண்டா; நான் விருப்புடையேன்,’ என்கிறான் என்னுதல்

வாணன் உள் வன்மை தீர ஓர் ஆயிரம் தோள் துணித்த புள் வல்லாய் – 1சர்வேசுவரனை அடைந்த பிறகு அந்த சீவாத்துமா பயம் இல்லாதவன் ஆகிறான்’ என்கிறபடியே, பகவானுடைய அடியார்கள் இருப்பது போன்று, புன் சிறு தெய்வத்தைப்பற்றி இருந்த வாணனுடைய நெஞ்சுவலி 2கைமேலே போகும்படியாகப் பெரிய திருவடியின்மேலே ஏறிச் சாரிகை வந்தவனே-இவன் கைவிஞ்சினான்’ என்று இவனைக் கை கழிய விட்டான் என்றபடி. ‘வாள் வல்லாய், தோள் வல்லாய்’ என்பன போன்று ‘புள் வல்லாய்’ என்கிறார்.

உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே – 4சொரூபஞானம் பிறந்தவாறே அவன்பக்கல்நின்றும் பிரிந்தாற்போலே இருக்கிறது காணும் இவர்க்கு. 5‘சூரியனோடு சேர்ந்த ஒளியைப் போன்று நான் ஸ்ரீராமபிரானோடு சேர்ந்தேயிருக்கிறேன், வேறுபட்டவள் ஆகேன்,’ என்கிற பிராட்டி அசோக வனத்திலே பிரிந்திருந்தாற் போலே இருக்கிறது காணும், சொரூபஞானம் பிறந்தவாறே உடம்புடன் இருக்கும் இருப்பு,’ என்றபடி. ‘

பத்தரும் முத்தரும் நித்தியரும் என்கிற பிரிவைப் போன்றதே யன்றோ?   பிராட்டிமார்களும்?

வாசகமாலை கொண்டு – 5ஒருமலை எடுத்தாற் போலே ஆயிற்று, இவர்க்கு ஒரு சொற்கொண்டு சொல்லுகை.

சமுசாரிகளைப் பார்த்தார்; அவர்கள் பேற்றுக்குக் கூட்டு இல்லாததைப் போன்று இழவுக்கும் கூட்டு இன்றிக்கே இருந்தார்கள்

அவர்கள் தாங்கள் முற்றறிவினர்’ என்னும்படி ஐம்புல இன்பங்களைப் பற்றி அவற்றைப் பெறுகைக்காகப் பிறரைக் கவி பாடித் திரிகின்றவர்களுமாய் இருந்தார்கள்.-அவர்களைக் கண்டவாறே, 3வாளேறு படத்தேள் ஏறு மாயுமாறு போன்று தம் இழவை மறந்தார்; 4பிறர் கேட்டினைக் கண்டால் அதனை நீக்கிப் பின்பு தம் இழவை நீக்க நினைப்பார் ஒருவர் ஆகையாலே, ‘இவர்கள் கேட்டினை நீக்கி இவர்களையும் கூட்டிக் கொண்டு போவோம்’ என்று அவர்களுக்குப் பரமஹிதமான 5நல்வார்த்தை அருளிச்செய்ய, அவர்கள் அது கேளாமல் பழைய படியே நிற்க, அவர்களை விட்டுத் தம் நிலையிலே போருகிற இவர், அவர்களில் 6தமக்கு உண்டான வேறுபட்ட சிறப்பினைப் பேசிக் கொண்டு போருகிறார்.அவனுக்கு இழவோடே தலைக்கட்டும்படியாய்; கவி பாடி ஒரு பயன் பெறாது ஒழிகை அன்றிக்கே, கவி பாட்டுண்கிறவனுக்கு இல்லாத நன்மைகளையிட்டு, 4இருமருங்கும் துய்யான்’ என்னுமாறு போன்றே அன்றோ கவி பாடுவது? ‘இருமருங்கும் துய்யான்’ என்றது, ‘தாய் மரபினாலும் தந்தை மரபினாலும்  தூய்மை பெற்றவன்’ என்றபடி. ‘உபய குலோத்துங்கன்’ என்பதனைத்
தெரிவித்தவாறு. ‘இருவர்ச்சுட்டிய பல்வேறு தொல்குடி – தாயும்  தந்தையுமாகிய இருவர் குலத்தையும் உலகத்தார் நன்று என்று மதித்த  பலவாய் வேறுபட்ட பழைய குடியிற்பிறந்த இரு பிறப்பாளர். குடி –  குண்டினர், காசிபர் என்றாற்போல்வன.

இவர்கள் நடுவே இத்தேசத்தில் இச்சரீரத்தோடே வாசிக்கிற நாம் முந்துற முன்னம் பகவானுக்குத் தக்கனவான உறுப்புகளையுடையோமாகப் பெற்றோம் அன்றே!’ என்று, வழி பறிக்குமிடத்துத் தம் கையிற் பொருள் கொண்டு தப்பிப் போனார் மகிழுமாறு போன்று 1தமக்கு உண்டான வேறுபாட்டினை நினைந்து தம் இலாபத்தைப் பேசிப் பிரீதியோடே தலைக்கட்டுகிறார். வழி பறிக்கும் நிலத்தில் தன்கைப்பொருள்கொண்டு தப்பினவன் மகிழுமாறு போன்று, இவர்களைப் போல அன்றிக்கே பகவானை ஒழிய வேறு சிலரைக் கவிபாடுகைக்கு நான் ஆற்றலன் அன்றிக்கே ஒழியப் பெற்றேன்,’ என்று பிரீதர் ஆகிறார்.

காதுகளின் மூலத்தில்’ என்கிறபடியே, ‘அரசனுடைய மனைவியின்மேல் வைக்கும் விருப்பம் விலக்கத்தக்கது,’ என்பது போன்று, ஓலக்கத்திற்சொல்லும் வார்த்தையன்று இது. சேவிக்கத் தகாதாரைச் சேவித்தல் விலக்கத்தக்கது என்பதாகவும் என் வாயாற்சொல்ல ஒண்ணாது; ஆகையாலே, நான் சொன்னால் அது எனக்கு விரோதமாம் அன்றோ

உங்கள் கேட்டினைப் பொறுக்க மாட்டாமையாலே சொல்லுகிறேன்; ஆகையால் அதற்குப் பரிகாரம் பிறக்குமளவும் சொல்லுகை தவிரேன். என்றது, நீங்கள் உங்களுக்கு விருப்பமானவற்றினின்றும் மீளமாட்டாதது போன்று, நானும் உங்களுக்கு உரிய நன்மையைச் சொல்லுவதினின்றும் மீளமாட்டாதபடி என்கிறார் என்றபடி

கேடு எல்லார்க்கும் ஒத்திருக்கையால், எல்லார்க்கும் சொல்லுகிறார் ஆதலின், ‘கேண்மின்’ எனப் பன்மை வாய்பாட்டால் அருளிச்செய்கின்றார். பால் குடிக்கக் கால் பிடிப்பாரைப் போன்று பகவத் விஷயத்தைக் கேட்பதற்குக் கால் பிடிக்கிறார் இவருடைய செல்லாமையாலே

இறைவனுடைய பொருளை ‘நான் என் பொருளைக் கொடுத்தேன்’ என்னலாம்படி அன்றோ சம்பந்தம் இருப்பது? கோதானத்திலே பிதா புத்திரன் கையில் நீர் வார்த்துக் கொடுத்து, மீளவும் அவன் கொடுக்க, அவன் கையிலே தான் பெற்றானாய் இருக்குமாறு போன்று, இவனும் தனக்கே உரித்தான செல்வத்தைத் தந்தானாய், இவன் சர்வஸ்வதானம் பண்ணத் தான் பெற்றானாக நினைத்திருக்கும் இறைவனுடைய அபிப்பிராயத்தாலே சொல்லுகிறார்.

‘வண்டுகள் மதுவைக் குடித்த மயக்கத்தாலே பிரீதிக்குப் போக்கு விட்டு முரன்றது இசையாய் விழுந்தாற்போலே ஆயிற்று, இவரும் பகவானை அனுபவித்தலால் உண்டாகும் உவகைக்குப் போக்கு விட்டது கவி ஆயிற்று,’ என்றபடி. பறவைகளோடு முமுக்ஷீக்களோடு அவன்தன்னோடு வாசி அறத் தென்னா தெனா’ என்னுமித்தனை.பகவானுடைய அண்மையில் இருப்பார் எல்லார்க்கும் இதுவே பாசுரமானால், அவன் (இயற்கையிலேயே
ஆனந்த சொரூபமாயுள்ள இறைவனுக்கு)தனக்குச் சொல்ல வேண்டாவே அன்றோ? ‘தென்னா என்னும் என் அம்மான்’ அன்றோ அவன்?இது, திருவாய். 10. 7 : 5.

திருவேங்கடத்து என் ஆனை – வேதத்தைக்காட்டிலும் ஸ்ரீராமாயணத்துக்கு உண்டான ஏற்றம் போலே, ஸ்ரீ வால்மீகி பகவான் கவி பாடின விஷயத்தைக் காட்டிலும் தாம் கவிபாடின விஷயத்திற்கு உண்டான 3ஏற்றம் சொல்லுகிறார். எப்பொழுதும் துதிக்கலாம்படி இருப்பவன். 4யானை பெறக் கவி பாடுமவர் காணும் இவர்; இவர் கவி பாடிக் கட்டின யானை ஆயிற்று அவன்; கவி பாடினவர்கட்குத் தன்னை ஒழிய வேறு ஒரு யானையைக் கொடுத்து விடுமவன் அல்லன் ஆதலின், ‘என் ஆனை என்கிறார்

அஸந்நேவ – இல்லாதவன் ஆகிறான்’ என்கிறபடியே, ‘தன்னைக் கிட்டாத அன்று சமுசாரி சேதநருடைய இருப்பு இல்லாதது போன்று, தான் என்னைக் கிட்டாத அன்று தன் இருப்பு இல்லையாம்படி அவன் வந்து நிற்க நான் வேறு ஒருவரைக் கவி பாடுவேனோ?’

ஓர் ஊசி நிற்கிறதாகவும், அதன் மேலே ஒரு மேரு நிற்கிறதாகவும் நினைக்குமாறு போன்று குவாலாக மதிக்கிறான் என்பார், எண்ணி’ என்கிறார்.

அரசபுத்திரன் தலையில் முடியை வைத்துப் பின்னை விலங்கு வெட்டி விடுமாறு போன்றும், ஸ்ரீ விபீஷணாழ்வானை முடி சூட்டிப் பின்பு இராவணனைக் கொன்றாற்போலவும், நித்திய சூரிகள் தரத்தைக் கொடுத்துப் பின்னை சமுசார சம்பந்தத்தை அறுப்பான் ஆதலின், ‘தன்னாகவே கொண்டு சன்மஞ்செய்யாமையும் கொள்ளும்’ என்கிறார்.

‘‘ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு’ என்கிறபடியே, ஞானமாகில் அவனையே நோக்குமாறு போன்று கவிகளானவை சொற்களின் சேர்க்கையாய் இருக்கையாலே எல்லாச் சொற்களுக்கும் பொருளாக உள்ளவன் அவன் ஆகையாலும் அவனுக்கே சேரும்,’

இந்தச் சரீரத்தைக் கழித்த பின்னர், ஆத்தும அனுபவம் பண்ணி யிருத்தல், வேறு பிரயோஜனங்களைக் கொள்ளுதல் செய்ய இராமல், அடிமைக்குப் பாங்கான சரீரத்தைப் பெற்று, தாய் முலைக்கீழே போய் ஒதுங்கும் இளங்குழவியைப் போன்று திருவடிகளின் கீழே ஒதுங்குவேன் என்னும் ஆசையை யுடைய யான்.

அன்று ஈன்ற கன்றின் பக்கல் வாத்சல்யத்தாலே முன் ஈன்ற கன்றைக் காற்கடைக் கொள்ளும் பசுவின் தன்மையைப் போன்ற வாத்சல்யத்தின் மிகுதியே காரணம்’ என்க

இவ்வுடல் – 3கூற்றம் கண்டாற் போன்று அச்சத்திற்குக் காரணமாய் இருக்கிறபடி. 4இவ்வுடல்’ என்றதனால் இப்பொழுது இருக்கிற சரீரத்தையும், இதனைப் போன்ற முன்புள்ள சரீரங்களையும் நினைக்கின்றார். ‘முன்புள்ள சரீரங்களையும் ‘இவ்வுடல்’ என்றதனால் சொல்லும்படி என்?’ என்னில், முன்புள்ள சரீரங்களும் இவ்வுடல் போலே இடையீடு இன்றி ஒரே அனுபவம் உள்ளவனவாகத் தோன்றுகிறதாயிற்று இவர்க்கு.

சோம்பாது இப்பல் உருவை எல்லாம் படர்வித்த வித்தா’ என்கிறபடியே, ஒருகால் படைத்துப் பலியாவிட்டால் சோம்பிக் கைவாங்காதே ஒருப்பட்டு ஒருப்பட்டு உலகங்களைப் படைத்தவனுடைய; கிருஷிகன் ஒருகால் பயிர் செய்து, பதர்த்தால் பின்பும் பயிர் தன்னையே செய்யுமாறு போன்று, இவனும் ‘ஒருநாள் அல்லா ஒரு நாளாலும் ஆம்’ என்றே அன்றோ படைப்பது?

ஒரு கற்பகத்தரு பணைத்துக் கணுத்தோறும் அரும்பினாற்போலே ஆயிற்று வடிவும் திவ்விய ஆயுதங்களும் சேர்ந்த சேர்த்தி இருப்பது,’

தடம் கடல் – குறைவு இல்லாமல் கண்வளர்ந்தருளுவதற்கு இடமுடைத்தான கடல். ‘தடம் கடல்’ என்றவர், ‘குறைவு இல் தடம் கடல்’ என்கிறார்; ஈண்டுக் குறைவு இல்லாமையாவது, 2‘திருமேனி நீ திண்டப் பெற்று, மாலும் கருங்கடலே என் நோற்றாய்’ என்னுமாறு போன்று, அவனுடைய பரிசத்தால் குறைவு அற்று இருக்கை. 3யசோதைப்பிராட்டி ஸ்ரீ கிருஷ்ணனைத் தன் மடியிலே வளர்த்தி உவக்குமாறு போன்று, சர்வேசுவரனைத் தனக்குள்ளே இட்டுக்கொண்டு அத்தாலே உவந்து குறைவு அற்று இருக்கை.

கர்ப்பூரத் திரள் வாயிலே இடுவாரைப் போலே 2‘வாசுதேவனாகிய தன்னைச் சிந்தித்துக் கொண்டு’ என்கிறபடியே, தன்னைத்தானே சிந்திப்பான்

திருமேனியினுடைய பரிசத்தால் திமிர்ந்து செல்லாது நிற்றலின், தேர் முதலிய பொருள்களை நடத்துமாறு போன்று வடிம்பிட்டுத் தாக்கி நடத்த வேண்டி இருத்தலின், ‘கடாவி’ என்கிறார். 1‘தேவரீருடைய திருவடிகள் தாக்குவதால் தன்மேல் உண்டாகின்ற தழும்புகளின் அழகையுடைய பெரிய திருவடி’ என்னக் கடவதன்றோ?

வீட்டிற்குள்ளே இருந்து தம்தம் வீரத்தைப் பேசுவோரைப் போலே3இச்சக்கரவர்த்தி திருமகன் ‘என்னை அடைந்தவர்களைப் பாதுகாத்தல் எனக்கு விரதம்’ என்கிறானோ?

கடல் கடைகிற காலத்தில்  எட்டு வடிவு கொண்டு  நின்று கடைந்தது போன்று, 1முப்புரங்களை எரித்த சமயத்திலே வில்லுக்கு மிடுக்காயும், நாணிக்குத் திண்மையாயும், அம்புக்குக் கூர்மையாயும், சிவனுக்கு உள்ளுயிராயும் இருந்து எதிரிகளைத் தலை சாயும்படி செய்து முப்புரத்தை அழித்துக் கொடுத்தான்; அச்செயலை அறியாமல் அறிவில்லாதவர்கள் அதனை அவன் தலையில் வைத்துக் கவி பாட, அதனைத் தானும் கேட்டு ‘உண்மையே அன்றோ’ என்று மயங்கி, ‘அது செய்த நமக்கு இவனை வெல்லத் தட்டு என்?’ என்று வந்து எதிர் இட்டான் ஆயிற்று என்றபடி.

ஓருரு வெற்பைத் தரித்தது; தானவர் உம்பருள்ளாய்
ஈருகு நின்று கடைந்தது; வேலை யிதனிடையோர்
பேருரு இன்னமு தோடே பிறந்தது: பெண்மை கொண்டுஓர்
நாருரு நின்றது; அரங்கா! இதுஎன்ன நற்றவமே!’–திருவரங்கத்து மாலை, 25)

அல்லி மலர் மகள் போக மயக்குகள் – 3இதனால், இவ்வழகு காட்டில் எறித்த நிலவு ஆகாதபடி நெஞ்சோடே (நெஞ்சோடே’ என்றது, சிலேடை; ‘மார்பிலே
இருந்துகொண்டு’ என்பதும், ‘மனத்தோடு’ என்பதும் பொருள்.)அனுபவவிப்பாரைச் சொல்லுகிறது. மலரில் வாசனை வடிவு கொண்டு இருப்பதைப் போன்று தனக்கு மேல் ஓர் இனிய பொருள் இல்லாதவளான பெரிய பிராட்டியுடைய சேர்க்கையாலே பிறந்த ஆச்சரியமான ஆனந்தத்தை யுடையனான சர்வேசுவரன் மயக்குகள்

ஒடுங்க விழுங்குகையாவது2‘ஏழுலகும் உண்டும் இடமுடைத்து’ என்கிறபடியே, சிறிய வயிற்றிலே பெரிய உலகங்களை வைத்தால், ஈர்க்கில் அத்திக்காய் கோத்தது போன்று 3விசைத்து வேறாய் இராமல், அடங்கித் தகுதியாய் இருக்கை.

உழக்காலே கடலை முகக்க ஒண்னாதது போன்று, அளவிற்கு உட்பட்ட பொருள்களை அறியும் இந்திரியங்களாலே அளவிற்கு உட்படாத பரம்பொருளை அறிய முடியாது அன்றோ? ஆதலால், ‘ஐம்புலன்கள் அறியா வகையால்’ என்கிறார்.

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading