ஸ்ரீ ஈட்டில் பூர்வாச்சார்யர்களின் விலக்ஷண நிர்வாஹங்கள் –இரண்டாம் பத்து –

தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்துக் கலந்தோம்’ என்கிறார். இதற்கு, ‘ஒரு சாதிப் பொருள்கள் தம்மில் ஒன்றனோடு ஒன்று கலந்தது போன்று கலந்தோம்’ என்று ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் பொருள் அருளிச்செய்வர். அதாவது, தேனும் தேனும் கலந்தாற் போலவும், பாலும் பாலும் கலந்தாற்போலவும், கன்னலும் கன்னலும் கலந்தாற்போலவும் அமுதும் அமுதும் கலந்தாற்போலவும் என்பதாம்.

    2இதற்கு இவற்றைச் சுவையுடைப்பொருள்களுக்கு எல்லாம் உபலக்ஷணமாக்கித் ‘தானும் நானுமாக கலவிக்குள்ளே எல்லா ரசங்களும் பிறக்கும்படி கலந்தோம் என்கிறார்’ என்று எம்பெருமானார் பொருள் அருளிச்செய்வர். 1‘சர்வ ரஸ: சர்வ கந்த:’ என்கிற இறைவனோடே கலக்கும் கலவி ஆதலானும், ஞான ஆனந்தங்களையுடைய இறைவனும் ஆத்துமாவும் கலக்கிற கலவி ஆதலானும் சர்வ ரகங்களும் பிறக்கத் தட்டு இல்லை

ஆளவந்தார் நிர்வாஹத்தில், ‘தானும் யானும் எல்லாம் தன்னுள் தேனும்பாலும் நெய்யும்  கன்னலும் அமுதும் ஒத்துக் கலந்தொழிந்தோம்’ என்று கூட்டிப் பொருள் காண்க.
எம்பெருமானார் நிர்வாஹத்தில், ‘தானும் யானுமான தன்னுள் (கலவிக்குள்) தேனும்  பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் எல்லாம் ஒத்து (உண்டாம்படி) கலந்தொழிந்தோம்’  எனக் கூட்டிப் பொருள் காண்க.

ஆளவந்தார் நிர்வாகத்திலே, ‘தேனும் தேனும் கலந்தாற்போலே கலந்தோம்’ எனின், 2இவ்விரண்டனையும் சேர்த்துச் சொல்லும்போது, வருவது ஓர் அளவின் மிகுதி உண்டு அன்றே? அவ்வளவின் மிகுதிதானே பொருள்கள் இரண்டு என்பதற்கு ஏற்ற பிரமாணமாம்


2. ‘அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்புசெய்வித்து, அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்’ 

அறிவு நடையாடாத பருவத்தில் சம்பந்த ஞானத்தினைப் பிறப்பித்தாய்; பிறப்பித்த ஞானத்தினை அழிக்கக்கூடிய இச்சரீரத்தோடே பின்னையும் வைத்தாய்,’ என்னும் 1இன்னாப்பாலே சொல்லுகிறார் என்று ஆளவந்தார் அருளிச் செ்யாதாராகத் திருமலையாண்டான் அருளிச்செய்வர். இதனை, எம்பெருமானார் கேட்டருளி, ‘முன்னிற்பாட்டுகளும் பின்னிற்பாட்டுகளும் பிரீதியோடே நடவாநிற்க, நடுவே பிரீதியின்மை தோற்றச் சொல்லுமது சேராது; ஆன பின்னர், இங்ஙனேயாமித்தனை. ‘அறியா மா மாயத்து அடியேனை அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து வைத்தாயால் என்கிறார்,’ என்று இதனையும் ஓர் உபகாரமாக்கி அருளிச்செய்தார்.


3. ‘அம் தாமம் வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள

இதற்கு, 1‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைபட்டபடியே, நித்தியசூரிகளோடே வந்து கலந்தான்,’ என்று ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் அருளிச்செய்வர். ‘ஆயின், அவர்களை 2‘ஆழி நூல் ஆரம்’ என்று சொல்லுவது என்?’ என்னில், ஞானவான்களாய் இருக்கச்செய்தே, பாரதந்திரிய சித்திக்காகத் தங்களை இங்ஙனம் அமைத்துக்கொள்கிறார்கள் இத்தனையே. இனி, இதற்கு எம்பெருமானார், இவரோடு கலப்பதற்கு முன்பு இறைவனைப் போன்றே இவையும் ஒளி இழந்தவையாய்ச் சத்தை அற்ற பொருளுக்குச் சமமாய், இவரோடு கலந்த பின்பு ஒளிப்பொருளாகிச் சத்தை பெற்ற படையைச் சொல்லுகிறது’ என்று பொருள் அருளிச்செய்வர். ‘ஆயின், இறைவன் ஒளியிழந்தால் இவையும் ஒளியிழக்க வேண்டுமோ?’ எனின், கற்பகத்தரு  வாடினால் அதில் பூவும் தளிரும் வாடுவன அன்றோ? அம் தாமம் வாழ் முடி – அழகிய மாலையானது முடியிலே சூடப்பட்டதனால் வாழத் தொடங்கிற்று

அம் தாமம்  சங்கு – ஒளி உருவமான திருஆழி. நூல் – திருப்பூணூல். ஆரம் – திரு ஆரம். உள – உள்ளவைகள் ஆயின. இவற்றைக் கூறியது நித்தியசூரிகட்கு உபலக்ஷணம். ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்திலே, ‘அந்தாமம் வாழ்முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள’  என்பதற்கு, ‘இவைகள் உண்டு’ என்பது பொருள். அதாவது, ‘இவற்றோடே வந்து  கலந்தான்’ என்பது கருத்து.-எம்பெருமானார் நிர்வாகத்திலே ‘உள’ என்பதற்குச் ‘சத்தை பெற்றன’ என்பது பொருள்.


ஆடி ஆடி’ என்னும் திருவாய்மொழியில் உண்டான துன்பம் தீர வந்து கலந்தபடியை ‘அந்தாமத்து அன்பு’ என்ற திருவாய்மொழியில் அருளிச்செய்தார்; அச்சேர்க்கையால் பிறந்த பிரீதி அவனது என்னுமிடத்தைச் சொல்லுகிறார் இத்திருவாய் மொழியில்

பிரணயி பிரீதி அநுசந்தானங்காண் இது என்று ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்வர். அதாவது, ஆழ்வார் விஷயமாகச் சர்வேஸ்வரனுக்கு உண்டான பிரீதி சொல்லுகிறது இத் திருவாய்மொழியில் என்றபடி. இனி, ‘ஊனில் வாழ்’ என்ற திருவாய்மொழியில், ‘ஆழ்வார், தாம் பகவானை அனுபவித்துத் தமக்கு அவன் பக்கலுண்டான பிரேமம் அவன் அளவில் முடிவு பெறாது, ‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று அவன் அடியார் அளவும் சென்றபடியை அருளிச்செய்தார்; இத்திருவாய்மொழியில், ‘சர்வேஸ்வரன் ஆழ்வார் பக்கல செய்த பிரேமம் இவர் ஒருவர் அளவில் நில்லாது, சம்பந்திகள் அளவும் வெள்ளம் இடுகிறபடியை அருளிச்செய்கிறார்’ என்று இயைபு கூறலுமாம்-இரண்டு தலைக்கும் ரசம் மிகுந்தால் சம்பந்தி சம்பந்திகள் அளவும் செல்லும் அன்றே? ‘எமர் கீழ் மேல் எழு பிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினர்’ என்பது இவருடைய திருவாக்கு.

உன்னை நான் பிடித்தேன், கொள் சிக்கெனவே’  என்ற பாசுரப் பகுதியை நோக்கி, ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹம். இனி, ‘ஊனில் வாழ்’  என்றது முதல் ‘வெள்ளம் இடுகிறபடியை அருளிச்செய்கிறார்’ என்றது முடிய, ‘எமர் கீழ்  மேல் எழு பிறப்பும். விடியா வெந்நகரத்து என்றும் சேர்தல் மாறினரே’ என்ற
பாசுரப்பகுதியை நோக்கிய வேறு நிர்வாஹம்.


5. ‘எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில்–வானே ஏத்தும் எம் வானவர் ஏறே – அவர்கள் தங்கள் அடிமைத் தன்மைக்குத் தகுதியாக அடிமை செய்யாநிற்க, இவனும் தன் சேஷித்துவத்தால் வந்த உயர்வு தோற்ற இருக்கும் இருப்பு. ‘எனக்கும் அவர்களோடு ஒத்த சம்பந்தம் உண்டாயிருக்க, இழந்து கேட்டினை அடைந்தேன்’ என்பார், ‘எம் வானவர் ஏறே’ என்கிறார்

——-

6. ‘எம் மாவீடு’ முன்னுரை‘–எம் மா வீடு’ என்னும் திருவாய்மொழியிலே ‘அறுதியிட்ட பேற்றினைப் பெறுகைக்குத் திருமலையை அடைகிறார்’ என்று ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தாராகத் திருமலையாண்டான் பணிப்பர். எம்பெருமானார், ‘அங்ஙனம் அன்று; இவர் மேல் திருவாய்மொழியிலே பாட்டுகள் தோறும் ‘ஒல்லை’, ‘ஒல்லை’ என்றும், ‘காலக் கழிவு செய்யேல்’ என்றும் விரையப் புக்கவாறே, 2‘நமக்கும் அறிவித்து, 3நாமும் இவர் காரியம் செய்வதாக அறுதியிட்டால், அதனைக்கொண்டு சரீரத்தின் முடிவில் பேறு தப்பாது’ என்று அறுதியிட்டு வாளா இருக்கலாய் இருக்க, இவர் இப்படி விரைவது இச்சரீரத்தோடே இவரை நாம் அடிமை கொள்ள வேண்டும் என்று போலே இருந்தது; இனி இவர்க்கு நாம் நினைத்தபடி பரிமாறுகைக்கு ஏகாந்தமான இடம் ஏதோ’ என்று ஞாலத்தூடே நடந்து உழக்கிப் பார்த்து வரச்செய்தே  ‘இவ்விடம் சால ஏகாந்தத் தலமாய் இருந்தது’ என்று திருமலையிலே சந்நிதி பண்ணியருளி, ‘நாம் உமக்கு முகந்தருகைக்காக வந்து நின்றோம்; நீர் இங்கே வந்து நினைத்த வகைகள் எல்லாம் பரிமாறி அனுபவியும்’ என்று தெற்குத் திருமலையிலே நிற்கின்ற நிலையைக் காட்டிக்கொடுக்க, இவரும் அதனை அநுசந்தித்துப் பகவான் பிராப்பியனானால் அவன் வாழும் தேசமும் பிராப்பியமாகக் கூடியதாதலின், திருமலையோடு, அதனோடு சேர்ந்த அயன்மலையோடு புறமலையோடு, திருப்பதியோடு, போம் வழியோடு, ‘போகக்கடவோம்’ என்று துணியும் துணிவோடு வேற்றுமை அறப் பிராப்பியாந்தர்க்கதமாய் அனுபவித்து இனியர் ஆகிறார்’ என்று அருளிச்செய்வார்.

இத்திருவாய்மொழியில் வருகின்ற ‘சார்வது சதிரே’ ‘அடைவது திறமே’ என்பன போன்ற  பாசுரங்களைத் திருவுள்ளம்பற்றிப் பிராபகபரமாக ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹம். ‘எழுவது  பயனே’ என்பது போன்ற பாசுரங்களைத் திருவுள்ளம் பற்றிப் பிராப்பிய பரமாக} எம்பெருமானார் நிர்வாஹம்.


ஆறு ஐதிஹ்யங்கள் ஆளவந்தாரது கீழ் பார்த்தோம்
மேல் எம்பெருமானாரது ஐதிஹ்யங்கள் –1. ‘தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்துக் கலந்தோம்—2-அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்புசெய்வித்து, அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்–3. ‘அம் தாமம் வாழ்முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள–4. ‘எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில்’-5. ‘எம் மாவீடு’ முன்னுரை-கீழ் ஐந்திலும் பார்த்தோம்–

6–. ‘விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதங் கைகள் கண்கள்’ முன்னுரை

திருமலையாண்டானிடத்தில் எம்பெருமானார் திருவாய்மொழி கேட்டருளுகிற காலத்தில் பாசுரந்தோறும் சில வார்த்தைகளை அருளிச்செய்து, ‘இது அர்த்தம் ஆனாலோ?’ என்றால், ‘இது விஸ்வாமித்திர சிருஷ்டி; ஆளவந்தார் அருளிச்செய்யக் கேட்டறியேன்’ என்று பணிக்குமாம் ஆண்டான். ஆண்டான் ‘இப்பாசுரத்திற்கு விஸ்வாமித்திர் சிருஷ்டி வேண்டாவாய் இருந்ததீ’ என்ன, எம்பெருமானார் 1இப்பாசுரத்தால், தன் அவயவ சௌந்தர்யத்தால் என்னைத் தனக்கு ஆக்கினான் என்கிறார்’ என்று அருளிச்செய்தனராம். அதுவும் கிடக்க, பட்டர், ‘ஆழ்வாரையும் ஆழ்வார் சம்பந்தி சம்பந்திகளையும் அங்கீகரித்ததனால் திருமேனியிற்பிறந்த பேரொளியைச் சொல்லுகிறது’ என்று அருளிச்செய்வர்;

தன்னுடைய அவயவ  சௌந்தர்யத்தாலே என்கிறார்’ என்பது எம்பெருமானாருடைய திருவுள்ளம். ‘எமர்  ஏழெழு பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கின குணத்துக்குத் தோற்று, ‘விட்டிலங்கு’  என்று இன்னோரன்ன விசேஷணங்களை இட்டு ஏத்துகிறார்,’ என்பது   திருமாலையாண்டான் நிர்வாஹம்.


7. ‘கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே’

திருமலையை அடையுமது ஒழிய இது நம்மாற்செய்து தலைக்கட்டப்போமோ?’ என்று இங்ஙனம் 2ஆழ்வான் ஓர் உருவிலே பணித்தாராம்; அங்ஙனமும் கொள்க. இனி, எம்பெருமானார் ‘கருமவன் பாசம் கழிககைக்காகவும், கழித்து உய்கைக்காகவும்’ என்று இங்ஙனம் அருளிச் செய்வார். அதாவது, ‘கர்மமாகிற வலிய பாசங்களைக் கழிககைக்காகவும், தன் பக்கல் கைங்கரியத்தைச் செய்து உய்வு பெறுகைக்காகவும்’ என்றபடியாம்

ஆழ்வான் நிர்வாகத்தில் ‘உய்யவே’ என்றதிலுள்ள ஏகாரம், எதிர்மறை; ‘உய்யப்போகாது’  என்றபடி.

எம்பெருமானார் நிர்வாகத்தில் ஏகாரம், தேற்றம்; ‘உய்யவே உறைகின்ற கோயில்’  என்பதுபொருளாம்.


திருக்குருகைப்பிரான் பிள்ளான்:

1. ‘மேல் திருவாய்மொழியின் ஈற்றில் ‘மூவா முதல்வா’ என்றார்; அங்கு ‘முதல்வா’ என்றதனால் தோன்றிய முதன்மையினை இத்திருவாய்மொழியில் விரித்து அருளிச்செய்கிறார்.


2. கண்ணீர் மல்கி –இங்கு ‘ஆனந்தாஸ்ருவுக்கு யோக்கியமான கண்களாலே ஸோகாஸ்ரு பிரவஹிக்கிறது 5யார் குடி வேர் அற?’ என்று பட்டர் அருளிச்செய்வர். 6‘யாரைச் சேதநராகக் கொண்டு?’என்று திருக்குருகைப்பிரான் பிள்ளான் பணிப்பர்


3. ‘மலம் அறு மதிசேர் மாலிருஞ்சோலை-மலமறு மதிசேர்’ என்பதற்குத் ‘திருமலையாழ்வார் தாம் ஞான லாபத்தை உண்டாக்குவர்’ என்று, திருக்குருகைப்பிரான் பிள்ளான் அருளிச்செய்வர்


IV -கூரத்தாழ்வான்:

1. ‘கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே – திருமலையை அடையுமது ஒழிய இது நம்மாற்செய்து தலைக்கட்டப்போமோ


V எம்பார்

1. ‘எம்பார் இத்திருவாய்மொழிக்குப் பொருள் அருளிச்செய்து வருங்கால், இப்பாசுரம் வந்தவளவில்’ எம்பார் கோஷ்டியிலே ‘இவ்வாத்துமாவுக்குப் பிரதம் குரு யார்?’ என்ற ஒரு வினா எழுந்தது; இருந்த 2முதலிகளிற்சிலர், ‘ஆசாரியன்’ என்றனர்; சிலர், ‘ஆசாரியன் திருவடிகளிலே அடைவதற்கு வா என்று அழைத்துக் கொண்டு போய்ச் சேரவிட்ட ஸ்ரீவைஷ்ணவர்,’ என்றனர்; எம்பார், ‘அங்ஙன் அன்றுகாண்; அவன் இவனை அழைத்தாலும் இவன் ‘அல்லேன்’ என்னாதபடி 3‘இசைவித்து’ என்கிறபடி, அகவாயிலே இருந்து இசைவித்த சர்வேஸ்வரன்காண் பிரதம குரு’ என்று அருளிச்செய்தார்.


2. ‘தவளவண்ணர் தகவுகள் என–1 ‘சுத்த சுவபாவரான உம்முடைய தகவுகள் எங்கே போயின?’ என்று எம்பார் அருளிச் செய்வர். ‘உம்மைப் போலே நாலு சிஷ்டர்கள் அமையும் அபலைகள் குடிகெட’ என்று பட்டர் அருளிச்செய்வர்.


VI பட்டர்:

    1. ‘எங்கும் நாடி நாடி’ ’ என்பதற்கு, தன் கொய்சகம் உட்படப் பாராநின்றாள்’ என்று பட்டர் அருளிச்செய்வர். ‘அதற்குக் கருத்து என்?’ என்னில், 3‘கண்ணன் என் ஒக்கலையானே’ என்கிறபடியே, அவன் இருந்த இடமாகையாலே

    2. ‘எரியணை அரக்கும் மெழுகும் ஒக்கும்.’  – எரியை அணைந்த அரக்கும் மெழுகும் போலே உருகா நின்றாள். அரக்கும் மெழுகும் என்னும் இவற்றை நெஞ்சுக்கு ஒன்றும், இவள் தனக்கு ஒன்றுமாகக் கொண்டு பொருள் கூறுவர் பிள்ளை திருநறையூர் அரையர். நெஞ்சும் இவள் தனக்குக் 3கையடைப்பு ஆகையாலே இவள் தனக்கே இரண்டையும் அடை ஆக்கி அருளிச் செய்வர் பட்டர். 

    3. ’தவள வண்ணர் தகவுகள் என’ 

     4. ‘நீரான தன்மையாகிறது ஆஸ்ரிதபரதந்திரராகை.–தேவும் என்றது, இறைமைத் தன்மையினை. தன்னை என்கிறது, அடியார்கட்குப் பரதந்திரப்பட்டிருக்கும் தன்மையை; அது அன்றோ 1தானான தன்மை? ‘ஆத்மாநம் நாதி வர்த்தேதா: – நீரான தன்மையை இழவாதே கொள்ளும்’ என்றார் வசிஷ்ட பகவானும். இச்சுலோகத்திலுள்ள ‘ஆத்மாநம்’ என்பதனை ஸ்ரீ பரதாழ்வானுக்கு அடைமொழியாக்கி, ‘ஆத்துமாவைப் போன்ற பரதனை இழவாதே கொள்ளும்’ என்று இதற்கு வேறு வகையாகப் பொருள் கூறுவர் சிலர். ‘நீரான தன்மையாகிறது, அடியார்கட்குப் பரதந்திரப்பட்டவராய் இருத்தல்; ‘உம்முடைய தம்பி சொன்ன வார்த்தையை மறுத்து, நீரான தன்மையை இழவாதே கொள்ளும் 2என்கிறான்’ என்று பொருள் அருளிச்செய்வர் பட்டர்.

    5. ‘விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதங் கைகள் கண்கள்’ 

    6. ‘சிரீதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்றென்று இராப்பகல் வாய் வெரீஇ’– – இதற்கு, ‘இவர் பத்தி பரவசர் ஆகையாலே இவருடைய தேக யாத்திரை இருக்கும்படி’ என்று முன்புள்ள முதலிகள் அருளிச்செய்வர். இனி, பட்டர் ‘இராப்பகல் வாய்வெரீஇ’ என்றது முதல் ‘மரீஇய தீவினை மாள’ என்றது முடிய, 2‘ஆடிஆடியில்’ இவர்க்கு ஓடின நிலையினைக் கூறுகின்றது என்றும், ‘இன்பம் வளர’ என்றது, 3‘அந்தாமத்தன்பு’ தொடங்கி, ‘கேசவன் தமர்’ முடிய உண்டான பிரீதியைச் சொல்லுகிறது என்றும் அருளிச்செய்வர்.

அதாவது, ‘இராப்பகல் வாய் வெரீஇ’ என்றது, 4‘இவள் இராப்பகல் வாய் வெரீஇ’ என்றதனை. ‘அலமந்து’ என்றது 5‘எங்கும் நாடி நாடி’ என்றதனை. ‘கண்கள் நீர் மல்கி’ என்றது, 6‘தனகுவளை ஒண்கண்ண நீர்கொண்டாள்’ என்றதனை. ‘வெவ் வுயிர்த்து’ என்றது, 7‘உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும்’ என்றதனை. ‘மரீஇய தீவினை மாள’ என்றது, ஆயிரம் யாண்டு முதலையின் வாயிலே யானை இடர்ப்பட்டது போன்று, ‘ஆடியாடி’ யில் இவர்க்குப் பிறந்த ஆற்றாமையினை

    7.‘அணைவதரவணை’-‘இத் திருவாய்மொழி மோக்ஷப் பரதத்துவம் சொல்லுகிறது, –சர்வேஸ்வரன் தம் பக்கல் செய்த வியாமோகம் தம் ஒருவர் அளவிலும் அன்றிக்கே, தம்மோடு சம்பந்தம் உடையாரளவிலும் வெள்ளம் இட்டபடியைச் சொன்னார் மேல் திருவாய்மொழியில்; ‘நம்முடைய சம்பந்தமே ஏதுவாக இறைவன் இப்படி அங்கீகரிப்பவனான பின்பு சம்சாரிகளுக்கும் 1நம்மோடு ஒரு சம்பந்தத்தை உண்டாக்கி அவன் திருவருளுக்கு விஷயமாக்குவோம்’ என்று, அவர்களுக்கு மோக்ஷப் பரதத்துவத்தை அருளிச்செய்கிறார் இத் திருவாய்மொழியில். இத்திருவாய்மொழி 2‘ஈஸ்வரத்துவம் சொல்லுகிறது,’ என்று நிர்வஹிப்பாரும் உண்டு. ஆனால், மோக்ஷப் பரத்தத்துவம் சொல்லுகிறது என்று பட்டர் அருளிச்செய்யும்படி. 3இவைதாம், ஒன்றை ஒன்று விட்டு இரா; ஈஸ்வரன் ஆவான் மோக்ஷத்தைக் கொடுப்பவனேயாவன்; மோக்ஷத்தைக் கொடுப்பவன் ஆம்போது ஈஸ்வரன் ஆக வேண்டும்.


VII பிள்ளை திருநறையூர் அரையர்:

1. ‘.’ எரியை அணைந்த அரக்கும் மெழுகும் போலே உருகா நின்றாள். அரக்கும் மெழுகும் என்னும் இவற்றை நெஞ்சுக்கு ஒன்றும், இவள் தனக்கு ஒன்றுமாகக் கொண்டு பொருள் கூறுவர் பிள்ளை திருநறையூர் அரையர். நெஞ்சும் இவள் தனக்குக் 3கையடைப்பு ஆகையாலே இவள் தனக்கே இரண்டையும் அடை ஆக்கி அருளிச் செய்வர் பட்டர். 


அம்மங்கி அம்மாள் : இவர், எம்பெருமானாரால் திருத்திப் பணிகொள்ளப்பட்ட அருளாளப்பெருமாள் எம்பெருமானாருடைய மாணாக்கர்; அன்பில் தாய் ஒத்தவர் ஆதலின், ‘அம்மாள்’ என்று வழங்கப்பட்டார்.

ஏழாம் பாட்டு. 1‘மதி கெட்டவாறே அந்தகாரம் வந்து மேலிட்டது,’ என்கிறாள்.

தோற்றோம் மடநெஞ்சம் எம்பெருமான் நாரணற்குஎம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீநடுவே
வேற்றோர் வகையிற் கொடிதாய் எனைஊழி
மாற்றாண்மை நிற்றியோ? வாழி! கனைஇருளே!

    இப்பாசுரத்திற்கு, 2முன்னும் பின்னும் போருகிறபடி ஒழிய, 3சொற்களின் நயத்தைத் திருவுள்ளம் பற்றி எம்பெருமானார் அருளிச் செய்து போருவது ஒன்று உண்டு: அம்மங்கியம்மாளும் அதனையே நிர்ப்பந்தித்துப் போரும். அதாகிறது, தான், பிரிவாற்றாதார் பலர் கூடக் கட்டிக்கொண்டு கூப்பிடாநிற்க, இருள் வந்து முகத்தை மறைக்க, அத்தைப்பார்த்து, 4‘ஆற்றாமைக்குப் போக்குவிட்டுத் தரிக்க ஒட்டாதே நீ வந்து நலியக்கடவையோ?’ என்கிறாள் என்பதாம்.

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading