ஸ்ரீ குழைக்காதர்‌ சந்தானப்பந்து — ஸ்ரீ ராமையங்கார்‌

ஸ்ரீ  ராமையங்கார்‌ அருளியுள்ள இந்தப்‌ பதின்மூன்று செய்யுட்‌ களையும்‌ தினந்தோறும்‌ ஏகாக்ர சித்தத்துடன்‌
பிள்ளைப்பேறு இல்லாதவர்கள்‌ பாராயணம்‌ செய்தால்‌ நன்மகவைப்‌ பெற்று இன்புற்று வாழ்வார்கள்‌ என்பது அநுபவசித்தம்‌.

சந்தான மூர்த்தி மகரக்‌ குழையர்‌ தம்‌ மேலடியேன்‌
சந்தானப்‌ பத்துத்‌ தமிழ் மாலை பாடத்‌ தயவருள்வாய்‌
சந்தான மாகுந்‌ தமிழ்ப்பேரை நங்கை தவத்துதித்த
சந்தான மாஞ்சட கோபா மகிழ்மலர்த்‌ தாமத்தனே.–1-

செந்தார்‌ மணிமகிழ்‌ சேர்மணி மார்பன்‌ திருப்புயத்திற்‌
கொந்தாரும்‌ பச்சைத்‌ துழாயணி கேசவ கொண்டல் வண்ண
பிந்தாமல்‌ நான்வந்து பொன்னடி போற்றப்‌ பிரியமுடன்‌
சந்தானந்‌ தா குழைக்‌ காதா தென்‌ பேரைத்‌ தயா நிதியே–2-

முந்தித்த காலம்‌ பொருநாநதியினின்‌ மூழ்கியுமே
வந்தவென் பாவம்‌ தவிர்ந்திலை நீயதை மாற்று கண்டாய்‌
உன்பதி யார்பதம்‌ போற்றுந்‌ தமியன்‌ உளமகிழச்‌
சந்ததி பாக்கியந்‌ தந்தருள்‌ பேரைத்‌ தயா நிதியே,–3-

பாகார்ந்த செந்தமிழ்ப்‌ பாமாலை பாடிய பாவலர்க்குப்‌
போகாத வல்வினை போக்குவித்‌ தாயிந்தப்‌ பூதலத்தில்‌
வாகார்‌ மகரக்‌ குழையாயடியன்‌ மனமகிழச்‌
சாகாத சந்ததி தந்தருள்‌ பேரைத்‌ தயாநிதியே.–4-

கையார வாரி யெடுத்தணைத்‌தே முத்தங்‌ காதலுடன்‌
பொய்யாமல்‌ மைந்தன்‌ அருள்புரிவா யிந்தப்‌ பூதலத்தில்‌
அய்யா மகரக்‌ குழையா அடிமைக்‌ கிரங்கியிப்போ
மெய்யான சந்ததி தாருந்தென்‌பேரையில்‌ வித்தகனே.–5-

கூர்க்காயு மாழிக்‌ கரத்தா யினியுன்‌ குரைகழலே
யார்க்கார மாகத்‌ தொழுமடியேனுக்‌ கருன்புரிவாய்‌
நீர்க்கார மேனி யழகா எனக்கின்று நிச்சயமாய்‌
தீர்க்காயு ஞுள்ள மகன்தாதென்‌ பேரையில்‌ ஸ்ரீதரனே–6-

அத்திர வேல்விழி மின்னார்கள்‌ தந்த விரகத்தினால்‌
தெத்திலும்‌ தீவிழுந்‌ தெரியாமல்‌ உன்தன்‌ திருவுளத்தால்‌
பத்திர மாக அடியேன்‌ தனக்கோர்‌ பலமிகுந்த
புத்திர சம்பத்தை ஈவாய் தென்‌பேரையில்‌ புண்ணியனே.–7-

மீனம்பு நீர்விழி யனார்கள்‌ தந்த விரகத்தினால்‌
ஊனம்‌ படுந்துயர்‌ ஒன்றொழிப்‌பாயுயர்‌ வானறலே
வானம்பு பூமி வளர்பயிர்‌போலுன்‌ மலர்ப்பதத்தை
நான்நம்பி னேன்குழைக்‌ காதாயினியுன்ற னடைக்கலமே.–8-

நத்தூர நேமிக்‌ கரத்தாய்‌இனியுந்தன்‌ நாமத்தைநான்‌
எத்தூரம்‌ போயினும்‌ நான்மற வேனிடை. மாதர்தனில்‌
முத்தூருங்‌ கொங்கைய சோதைப்‌பிராட்டி முகத்திலிட்ட
கத்தூரி நாமத்‌ தழகாதென் பேரையில்‌ காதலனே–9-

மாந்திக்‌ கிடக்கும்‌ அடியேனுடைய மனமகிழ
சாந்தி முனிக்கருள்‌ செய்தது போலத்‌ தயவு செய்து
ஏந்தி மதிக்க விளையாடப்‌பிள்ளை எனக்கருள்வாய்‌
காந்தி மதிக்கு நிகராகியமுகக்‌ காகுத்தனே.–10-

ஒருமைந்‌ தனுக்கு வரம்வேண்டிப்‌ பெற்ற உடையநங்கைக்‌
கருமைந்த னாகி யவதரித்‌ தாயய்யன்‌ ராமனுக்கு
திருமைநீ தனாகிய ஸ்ரீராமன்‌ செல்வக்‌ குடிதழைக்கக்‌
கருமைந்தன்‌ தந்தருள்‌ பேரை வகுள திவாகரனே.–11-

மாவுக்கு வாசந்‌ திருமால்‌ உரையடி மாதர்மகிழ்‌
‘பாவுக்கு வாசமகிழ்‌ மாறன்‌செய்பாடல்‌ பைந்துளவத்‌
தேவுக்கு வாச மடியார்கள்‌ சிந்தையில்‌ சேர்ந்திருந்தும்‌
நாவுக்கு வாசம்‌ புகழ்பேரை வந்தருள்‌ நாரணனே.–12-

சந்தானப்‌ பத்துந்‌ தமிழ்மாலை நூறுந்‌ தரித்தவர்கள்‌
அந்தா ரணியில்நல்‌ லாண்பிள்ளை தான்பெற்‌ றகமகிழ்ந்து
கொந்தார்‌ துளவமணி மால்குழைக்‌ காதரைக்‌ கும்பிட்டுடன்‌
மந்தாத வாழ்வும்‌ பெறுவார்‌ அவரிந்த மாநிலத்தே.–13-

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading