ஸ்ரீ பாஷ்யம்-மங்கள ஸ்லோஹம்-
இஷ்ட தேவதா ஸ்தோத்திரம் மங்களம். மங்கள ஆஸி – நமஸ்காரம் .
இதர தேவதா மங்கள ஸ்லோகம் ; சமுசித தேவதா தியானமாகும்.
சங்கீதத்துக்கு ஸரஸ்வதி , ஆயுர் வேதத்துக்கு தன்வந்திரி .
இஷ்ட தேவதையே சமுசித்த தேவதையாகும் போது , சமுசித்திஷ்ட தேவதா தியானமாகும்.
அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||
இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.
———
இரண்டாவது மங்கள ச்லோஹம்-
பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சாராக்நி விதீபன வியபகத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
பகுமதிம் வியாஸாத தூரஸ்திதாம் (5)
அநீதாந்து நிஜாக்ஷரைஹி மனஸோ பௌமாஸ்து பிபந்வஹம் ||
பாராசார்யா வசஸ்துதாம்-வியாசர் -அமிருத ரூபமான வாக்கு-மரணம் ஜனனம் இல்லாத -அபாவம் தானே மோஷம்
பிபந்வஹம்-பிபந்து குடிக்க வேண்டும்-விசேஷணங்கள் மேலே சொல்லி
ஸ் பகவத் ராமானுஜர் வேதாந்த ஸங்க்ரஹம் -முதலில் திருவேம்கடமுடையான் சந்நிதியில் அருளி
யஸ் ஸ்ரீ சைல- இஷ்ட தேவதா-அவர் அங்கீகாரம் பெற்று இத்தை அருளி –அதன் அனுவர்த்தி ஸ்ரீ பாஷ்யம் –
பாதாராயண -பராசரர் புத்ரர் – பூமியில் உள்ள எல்லாரும் இந்த அம்ர்தத்தை பானம் செய்யட்டும்
பிபந்து -ஆசீர்வாதம் செய்கிறார்
———–
ப்ரபத்யே ப்ரணாவாகரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் –
ப்ரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே –
இது ஸுதர்ஸன ஸூரியினாலே அருளிச் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கவிமாநமான ப்ரணவாகார விமானத்தைப் போல்
ஸ்ரீபாஷ்யம் விளங்குகிறது என்கிறார்.
ப்ரஹ்மத்தின் சேஷித்வம் ஸ்பஷ்டமாகக் காணப்படும் -அபர ஸ்ரீ ரெங்க விமானம் போலே –
பிரணவ ஆகாரமாகவே பிரகாசிக்கிற ஸ்ரீ பாஷ்யத்தை சரணமாக வரிக்கிறேன்
ப்ரணவமாகிற ஓங்காரத்திலும்
ஸ்ரீ பாஷ்யத்திலும் பிரகாசிக்கும் பரமாத்மாவுடைய சேஷித்வம்
பிறரால் உண்டு பண்ணப்பட்டு இருக்கிற அதிசயத்தை -மேன்மையைத் தங்கி இருப்பது
ஸ்ரீ ரெங்கத்தில் பிரகாசிக்கும் சேஷித்வம் சேஷசாயித்வம் என்று கண்டு கொள்வது
திருமந்திரத்தில் பத த்ரயத்தாலே
ஜீவாத்மாக்களுடைய
அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரணத்வம் -அநந்ய போக்யத்வம் -ஆகிய -ஆகார த்ரயம்
ஸாப்தமாக ப்ரதிபாதிதம்
பரமாத்மாவின்
சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வங்கள் ஆகிய ஆகார த்ரயம்
ஆர்த்தமாகக் கிடைக்கும்
—————–
ஸ்ரீ ப்ரஹ்மஸூத்ரமும் ஸ்ரீ திருவாய்மொழியும்
“புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதி ஶத சஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுளதரதாமேத்ய ஸ புந: |
உபா வேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்தி பிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”
வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் |
ததர்தஹாரிணஸ் ஸர்வாந் வ்யாஸ ரூபி மஹேஶ்வர: ||
வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே,
அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து
உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.
அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தர மீமாம்ஸையைக் கொண்டேயாகும்.
அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி
திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.
பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது
கீழ் உதாஹரித்த *புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும்.
இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் * (65) என்று காட்டியருளினார்
ஆசார்ய ஹ்ருதயத்திலே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.
—————
சாரீரக மீமாம்ஸா ஸாஸ்த்ரமான ப்ரஹ்ம ஸூத்ரத்தில்
முதல் இரண்டு அத்தியாயங்களில் பர ப்ரஹ்மம் ஜகத் ஏக காரணமாயும்
சேதன அசேதன விலக்ஷணமாயும் ஸர்வ சேஷியாகவும் –அறுதியிட்டார்-இதுவே பிரணவத்தின் அர்த்தம்
மூன்றாவது அத்தியாயத்தில் ப்ரஹ்மமே உபாயம் என்று அறுதி இட்டார் -இதுவே நமஸ்ஸின் அர்த்தம்
நான்காம் அத்தியாயத்தில் பர ப்ரஹ்மம் ப்ராப்யம் என்று அறுதியிட்டார் -இதுவே த்ருதீய பதார்த்தம்
காரணத்வமும்
அபாத்யத்வமும்
உபாயத்வமும்
உபேயத்வமும்
ஆகிய நான்குமே அத்யாய சதுஷ்ட்யார்த்தம்
காரணந்து த்யேயம் —ஜகத் காரண வஸ்துவே த்யானிக்கப்பட வேண்டியது என்பதே உபநிஷத்
பக்தியாகவும் ப்ரபத்தியாகவும் பர ப்ரஹ்மத்தின் இடமே செய்ய வேண்டியது என்பதே வேதாந்த ஸித்தம்
தன்னோடு ஒத்த மற்ற பத்த ஜீவனைப் பற்றுவது ஓட்டை ஓட்டத்தோடு ஒழுகல் ஓடமாம் அத்தனை அன்றோ
தாபத் த்ரயா துரைஸ் அம்ருதத்வாய ஸ ஏவ ஜிஞ்ஞாஸ்ய
யோ ப்ரஹ்மாணம் விதாதா பூர்வம் முமுஷுர்வை சரணம் அஹம் ப்ரபத்யே –
இப்படி உள்ள வேதாந்த கோஷ சித்தாந்த ஸ்தாபனமே வியாசர் அருளிச் செய்த ப்ரஹ்ம ஸூத்ரம்
ஸுத்ரீ சங்க்யா ஸூபாஸீ அதி க்ருதி கணநா சிந்மயீ ப்ரஹ்ம காண்டே –அதிகரண ஸாரா வளீ -என்கிறபடியே
545 ஸூத்ரங்கள் –156-அதிகரணங்கள் –16 பாதங்கள் –4 அத்யாயங்கள்
ஜைமினி அருளிச் செய்த 12 அத்தியாயங்கள் கொண்ட கர்ம மீமாம்ஸை யில் விசாரித்த கர்மாக் களுக்கு ஆராத்யமாயும்
மேல் 4 அத்தியாயங்கள் கொண்ட தேவதா மீமாம்ஸை யில் விசாரித்த தேவதைகளுக்கு அந்தராத்ம பூதமாயும்
உள்ள ப்ரஹ்மத்தை இந்த 4 அத்யாயங்களால் விசாரித்து நிஷ்கர்ஷிக்கிறார்
ஆக ஸர்வ கர்ம ஸமாராத்யம்
ஸர்வ தேவதாந்த்ர அந்தர் பூதம்
பர ப்ரஹ்ம வேதாந்த வேத்யம் –என்பதே வேத வ்யாஸருடைய ஸித்தாந்தம்
அர்த்தைகத்வாத் ஏகம் வாக்யம் ஸ ஆகாங்க்ஷம் சேத் – என்கிற பூர்வ மீமாம்ஸா சாஸ்த்ர ஸூத்ரத்தின் படி
ஏகார்த்திக ப்ரதிபாத்யம் -ஒரே ஸாஸ்த்ரம்
பூர்வ கண்ட யுக்த கர்மங்கள் ஆராதன கருமங்கள்
ஆராத்ய வஸ்து என்னும் ஆகாங்க்ஷம் வர அதுக்கு சாந்தி உத்தர காண்டமாகிய உபநிஷத் ப்ரதிபாத்யமாகிற பர ப்ரஹ்மம்
கர்ம அங்கம் ஞானம் உபாயம்
கர்ம ஞானங்களுக்கு அங்க அங்கி பாவம் சமுச்சயம்
வித்யாம் ச அவித்யாம் ச யஸ் தத் வேத உபயம் ஸஹ
அவித்யயா ம்ருத்யம் தீர்த்வா வித்யயா அம்ருதம் அஸ் நுதே –உபநிஷத்
ஆனால் அத்வைதிகள் இந்த வாக்யத்துக்கு வியாக்யானம்
கர்ம ஞானங்கள் பரஸ்பர வ்ருத்தங்கள்
கர்மம் -பேத அவலம்பி
ஞானம் -அபேத அவலம்பி
ஆகவே இவற்றுக்கு அனுஷ்டானத்தில் ஸாஹித்யம் -ஒரு சேர இருக்கை -பொருந்தாது
ஆயினும் ஞாத்வயத்வே ஸாஹித்யம் பொருந்தும்
உபாதேயத்வேந ஞாதவ்யம் -ஞானம்
த்யாஜ்யத்வேந ஞாதவ்யம் -கர்மம்
இந்த வியாக்யானம் அயுக்தம் என்று ஸ்ரீ பாஷ்யகாரர் திரு உள்ளம்
கர்மங்கள் கர்தவ்யங்களாக வேத விகிதங்கள் என்பதால் த்யாஜ்யம் அன்று
மேலும் இவ்வாக்கியத்தில் உள்ள தீர்த்வா -என்ற பதத்துக்கு அடைந்து என்று பொருள் கூறுவது அப்ரஸித்தி தோஷ பராஹதம்
ம்ருத்யும் தீர்த்வா -என்கிற இடத்தில் ஸ்த்தித சேத் என்று இரண்டு பதங்களைச் சேர்த்து
வியாக்யானிக்கிற படியால் அத்யாஹார தோஷ ப்ரசங்கமும் உண்டாம்–ஆகையால் அத்வைதி வியாக்யானம் அஸங்கதம்
மேற் கூறிய வாக்யத்துக்கு யாதவ ப்ரகாசனின் வியாக்யானம்
ஞான கர்மாக்கள் சம பிரதான உபாயங்கள் -உபாயமும் இரண்டு -ஞானமும் கர்மமும்
உபேயமும் இரண்டு -அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும்
அநிஷ்ட நிவ்ருத்தி ரூப பலத்துக்கு கர்மம் உபாயம்
இஷ்ட பிராப்தி ரூப பலத்துக்கு ஞானம் உபாயம்
சாதன ஸாத்ய த்வித்வ அங்கீ காரேண பூர்வ உத்தர வாக்யங்களுக்கு அர்த்தம் கூறுவது யுக்தம் என்பர்
இந்த வியாக்யானமும் அயுக்தம் என்பதே பாஷ்யகாரர் திரு உள்ளம்
ஞானம் ஒன்றே ஏக உபாயம்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயனாய விதயதே -என்பதால் உபாயம் ஞானம் ஒன்றே
அநிஷ்ட நிவ்ருத்தி பலமும் ஞான ஸாத்யமே
சேது பங்க ஸ்ரோத ப்ர ஸ்ருதி நியாயத்தாலே இஷ்ட பிராப்தி தன்னடையே ஏற்படும்
ஆக அங்க அங்கி பாவேந ஸாஹித்யமே -ஆதரணீயம்
பாஸ்கரனும் இத்தை ஆதரித்தாலும்
அவன் கர்மத்தை ஞான உத்பாகத்வேந அங்கம் என்று அங்கீ கரியாமல்
உத்பன்ன ஞானத்துக்கு அனுக்ராஹகம் -என்றான்
கர்மம் ஞான உத்பாதகம் -உத்பன்ன ஞான வர்த்தகம் -என்பதே பாஷ்யகாரர் திரு உள்ளம்
ஆகவே ஏக ஸாஸ்த்ரம்
சாரீரிக மீமாம்ஸ சாஸ்திரத்தில் நான்கு அத்தியாயங்களும்
விஷய த்விகம் -ஸித்த த்விகம் என்றும்
விஷயீ த்விகம் -ஸாத்ய த்விகம் என்றும் உண்டு
மூன்றாம் அத்தியாயத்தில் பக்தி ரூப ஞானம் விஷயி
நான்காம் அத்தியாயத்தில் ப்ரஹ்ம அனுபவ ஸ்வரூப ஞானம் விஷயி ஆகும்
வேதார்த்த விசாரம் -ஒரே ஸாஸ்த்ரம்
4 அத்தியாயங்கள் –
1-சமன்வய -காரணத்வ
2-அவிரோதித்தவ -அபாத்யத்வ
3-உபாயத்வ
4-பலத்தவ –அதிகாரங்கள் நான்கும்
16 பாதங்கள்
1-ஜீவ மிக அஸ்பஷ்ட மாயும்
2-ஜீவ அஸ்பஷ்ட மாயும்
3-ஜீவ ஸ்பஷ்ட மாயும்
4-ஜீவ மிக ஸ்பஷ்ட மாயும்
5-ஸாங்க்யாதி ஸ்ம்ருதி மூலமான தோஷ பரிஹாரம் காட்டுவது
6-ஸாங்க்யாதி பக்ஷங்கள் கண்டனம்
7-ஆகாசாதி த்ரவ்யங்களுக்கு ஸ்வரூப பரிணாம ரூபமான கார்யத்வம் கூறுவது
ஆத்மாக்களுக்கு ஸ்வ பாவ அந்யதா பாவ ரூப கார்யத்வம் கூறுவது
8-ஜீவ உபகரணமான இந்திரியாதிகளின் உத்பத்தி க்ரமம் கூறப்படுவது
9-வைராக்ய நிமித்தமாக புருஷனுக்கு ஏற்படும் தோஷங்கள்
10-ப்ராப்யத்தில் ஆசை தோன்ற ப்ரஹ்மத்துக்கு நிர்த்தோஷமும் கல்யாணைக தானத்வமும்
11-பகவானிடம் செய்யும் பக்தியின் பிரகாரங்கள்
12–பக்திக்கு வர்ணாஸ்ரம தர்மங்களை அங்கங்களாக விதித்தல்
13-உபாஸனா ஸ்வரூபமும் அநுஷ்டான க்ரமமும் விளக்கப்படுத்தல் -வித்யா மகிமையும் கூறுதல்
14-ஜீவன் உடலை விட்டுப் புறப்படுதல் -உத் க்ரமணம்
15-ஜீவனின் மோக்ஷ கதி சிந்தனம்
16-பிராப்தி -பலம் -மோக்ஷம் –
ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வநிஷ்ட: நிரவதிகமஹிமாபாஸ்தபாத: ஶ்ரிதாப்த:
காத்மாதே: இந்த்ரியாதே: உசிதஜநநக்ருத்ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ |
நிர்த்தோஷத்வாதிரம்ய: பஹுபஜநபதம் ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய:
பாபச்சித் ப்ரஹ்மநாடீகதிக்ருததிவஹந் ஸாம்யதஶ்ச அத்ரவேத்ய: || (19)
ஸ்ரஷ்டா – உலகைப் படைப்பவன்(1-1),
தேஹீ – தன்னையொழிந்த அனைத்தையும் தனக்குச் சரீரமாகக் கொண்டவன் (1-2);
ஸ்வநிஷ்ட: – -அந்நிய ஆதரேண–தன்னையே ஆச்ரயமாகக் கொண்டவன் (1-3);
நிரவதி மஹிமா – எல்லையற்ற பெருமைகளை உடையவன் (1-4);
அபாதஸப்தபாத: – ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளால் கலக்கமுடியாதவன் (2-1);
ச்ரிதாப்த: – பஞ்ச கால பராயணர்க்கு ஆப்தன் –அண்டியவர்களுக்கு நண்பன் (2-2);
காத்மாதே: உசித ஜநந க்ருத் (2-3) –ஆகாசம் ஆத்மா முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன் –அசேதன ஸ்வரூப விகார -சேதன ஸ்வரூப ஸ்வ பாவ ஜனன கர்த்தா
இந்திரியாதே: உசித ஜநந க்ருத் (2-4)- இந்த்ரியம் முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன்;-
ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ – ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷூப்தி மூர்ச்சா மரணம் ஆகியவைகளை நிர்வஹிப்பவன் (3-1);
நிர்தோஷத்வாதி ரம்ய: (3-2) – தோஷங்கள் தட்டாதவன் -ரம்யன்;அகில ஹேய ப்ரத்ய நீகன் கல்யாண குணைகநாதன்
பஹுபஜனபதம் (3-3) –பல உபாஸநத்திற்கு இருப்பிடமாக அறியத் தக்கவன்;
ஸ்வார்ஹ கர்ம ப்ரஸாத்ய: (3-4) – ஜீவர்கள் தம் தம் ஆச்ரமங்களுடன் அநுஷ்டிக்கப்படும் கர்மாக்களால் ஸந்தோஷப்படுத்தப்படுபவன்;
வர்ணாஸ்ரம ஸாஸ்வதா புருஷேண பர புமான் விஷ்ணுர் ஆராத்யதே பந்தா நரந்ய தத் தோஷ காரக -ஸ்ரீ விஷ்ணு புராணம்
பாபச்சித் (4-1) – பாபங்களை நீக்குபவன்;-உத்தர பூர்வ பாபங்களில் அஸ்லேஷ விஸ்லேஷ கர்த்தா
ப்ரஹ்மநாடீகதிக்ருத் (4-2)- மோக்ஷத்தை அடைவிப்பவன்;
இதுவரை ஸ்தூல தேஹ விஸிஷ்டனுக்கு பலம்
மேல் ஸூஷ்ம தேஹ விஸிஷ்ட னுக்கு பலம்
அதிவஹந் (4-3) – அழைத்துச் செல்பவன்;
ஸாம்யத: (4-4)- தனக்கு ஸமமான யோகத்தைத் தருபவன்.-நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபைதி
இங்கு ஸாம்யா பத்தி சொல்லி இருந்தாலும் —பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவமும்
அனுபவ ஜெனித ப்ரீதியும்
ப்ரீதி காரித ஸர்வ வித ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தா அசேஷ கைங்கர்யமும் -பரம புருஷார்த்தம்
இப்படி மொத்தம் 16 திருக் குணங்கள் சொல்லப்பட்டுள்ளன.
* வேத வேத்ய * ந்யாயத்தால் வேத்யனான எம்பெருமான் பெருமாளாக (ஸ்ரீ ராமபிரானாக) திருவவதாரம் செய்தருளின பொழுது,
வேதமும் ஸ்ரீராமாயணமாக அவதாரம் செய்தது.
ஸ்ரீராமாயணமும் பெருமாளுக்கு * குணவாந் கச்ச வீர்யவாந் * என்று 16 திருக்குணங்களே இருப்பதாகப் ப்ரதிபாதித்தது!
—–
முதல் அத்யாயம் –11–6–10-8-அதிகரணங்கள் —-35–அதிகரணங்கள்
இரண்டாம் அத்யாயம் –10–8–7–8- அதிகரணங்கள் -33—அதிகரணங்கள்
மூன்றாம் அத்யாயம் –6–8–26–15–அதிகரணங்கள் —55–அதிகரணங்கள்
நான்காம் அத்யாயம் –11-11-5-6-அதிகாரணங்கள் -33–அதிகரணங்கள்
3-அத்யாயம் –வைராக்ய பாதம் /-உபய லிங்க பாதம் / குண உப சம்ஹார பாதம் / அங்க பாதம்
பக்தியை அனுஷ்ட்டிக்க பரம அவசியக்கம் -ப்ராப்யாந்தர வைராக்கியமும் -ப்ராப்ய திருஷ்ணையும் -இந்த இரண்டும் சித்திக்க இரண்டு பாதங்கள் –
முதல் பாதம் அனுசந்திக்க இதர விஷய வைராக்கியமும் -இரண்டாம் பாதம் அனுசந்திக்க பகவத் விஷய திருஷ்ணையும் -பிறக்கும் படி
இதர விஷய தோஷங்களையும் பரமாத்மாவின் கல்யாண குணங்களையும் நிரூபிக்கிறார் –
ப்ரஹ்ம அனுபவ முக்தி -ஞான சங்கோச நிவ்ருத்தி ரூபம் -ஞான சங்கோச த்வம்சம்–த்வம்ச ரூப அபாவம் உண்டாவதானாலும் அனந்தமாகையாலே அழிவற்றது –
இப்படிச் சொல்லுகிறது பர பஷத்தை அனுசரித்ததே யாகும் -வஸ்துதஸ்து ஸ்ரீ ராமானுஜ மதத்தில் பாவாந்தரம் அபாவம் -என்று அங்கீ கரிக்கப் பட்டுள்ளது ஆகையால்
ஞான சங்கோச நிவ்ருத்தி என்கிற அபாவம் ஞான விகாச ரூப பாவமே யாகும் –
அது நித்யம் என்று -நச புனராவர்த்ததே -இத்யாதி ஸ்ருதி சித்தம் -ஞானத்துக்கு விகாசம் ஸ்வாபாவிகம் என்பது வேதாந்த சித்தம் –
அது கர்மம் அடியாக சுருக்கம் -ஞான சங்கோசமே சம்சாரம் -பகவத் அனுக்ரஹ விசேஷத்தால் கர்மம் ஆகிற உபாதிக்கு நிவ்ருத்தி ஏற்பட
ஸ்வாபாவிகமான விகாசமே அமையும் –ச நந்த்யாய கற்பதே ஸ்ருதியாலே ஸ்பஷ்டம் உக்தம்-
ப்ரஹ்ம அனுபவ ரூப பலம் நான்காம் அத்தியாயத்தில் நிரூபிக்க போகிறவராய் -தத் உபாயத்தை மூன்றாம் அத்தியாயத்தில் நிரூபிக்கிறவராய்
விஷயாந்தர வைராக்யம் விளைந்து -பகவத் விஷய திருஷ்ணை விளைய விஷயாந்தர தோஷங்களையும்
பகவத் விஷய குணங்களையும் முதல் இரண்டு பாதங்களால் நிரூபிக்கிறார் –
வைராக்ய பாதம்
விரக்தன் தானே வேதாந்த ஸ்ரவணத்துக்கு அதிகாரி -வேதாந்த ஸ்ரவண காலத்திலேயே வைராக்யம் ஏற்பட்டு இருக்கிறபடியால்
இங்கு வைராக்யம் விளைவிக்கிறது என் என்ற சங்கை வருமே என்னில்
வைராக்யம் இரண்டு வகை -சாஸ்திர ஸ்ரவண உபயுக்த வைராக்யம் -உபாசன அனுஷ்டான உபயுக்த வைராக்யம் –
முதல் வகை வைராக்யம் இவ்வதிகாரிக்கு ஏற்கனவே சித்தமானாலும் இரண்டாவது வைராக்யம் விளையவே இந்த பாதத்தை அருளுகிறார் ஸ்ரீ வியாசர்
சம்சார தோஷங்களைக் காட்டும் இத்தால் -பழகிப் போகும் சம்சார யாத்திரையிலும் ஜூகுப்சை பிறக்கும் படி பகவத் விஷயம் இனியது
கல்யாண குணாகரம் -நிர்மலம் என்கிற இத்தால் அதனுடைய போக்யதா பிரகர்ஷத்தைச் சொல்லுகிறது
ஜீவனுடைய தோஷங்களை நிரூபிக்கிறார் வைராக்ய பாதத்தில் -இதனால் ஜாக்ரதாதி அவஸ்த்தா தோஷங்கள் பலிதங்கள் என்றபடி
சாந்தோக்ய உபநிஷத் -பஞ்சாக்கினி வித்யா பிரகரணம் ஸ்பஷ்டமாக வைராக்யம் விளைவதற்காக –
த்யவ் / பர்ஜன்ய / ப்ருத்வீ / புருஷன் / யோஷித் — இவை ஐந்தும் அக்னிகள்
ஸ்ரத்தா / சோமம் / வர்ஷம் / அன்னம் / ரேதஸ்ஸூ /இவை ஐந்தும் ஹோதவ்யங்கள்
பித்ரு தேஹ தாரக மருத்துக்கள் ஹோதாக்கள் என்றபடி
பஞ்சம ஆஹூத்ய பேஷா வசனம் ப்ராயிகம் எனக் கொள்ளத் தக்கது
ஸ்ரத்தை என்கிற ச ஜீவ பூத ஸூஷ்மம் ஸ்வர்க்க ரூபமான அக்னியில் ஹுதமாய் -சோமம் என்கிற அம்ருத தேஹமாய் பரிணமித்து
பர்ஜன்ய ரூப அக்னியில் ஹுதமாகிறது -அந்த சோமம் வ்ருஷமாக பரிணமித்து ப்ருத்வீ ரூப அக்னியில் ஹுதமாகிறது
வ்ர்ஷம் அன்னமாக பரிணமித்து புருஷ அக்னியில் ஹுதமாகிறது -அன்னம் ரேதா ரூபமாகப் பரிணமித்து யோஷித் அக்னியில் ஹுதமாகிறது –
இப்படி க்ரமமாக ரேத பர்யந்தமாக பரிணதமான ஜீவ ஸஹித ஹோதவ்ய வஸ்துக்களை ஹோதாக்களான தேஹ தாரக மருத்துக்கள்
ஹோமம் பண்ணுகிறார்கள் -யோஷித அக்னியில் ஹுதமானதே புருஷன் என்று வழங்க தக்கதாகிறது என்றபடி –
ஜீவர்களுக்கு வ்ரீஹ்யாதி பாவம் ஓதப்பட்டுள்ளது -அந்த தானியத்தை சரீரம் என்று அபிமானித்து இருக்கும் ஜீவாத்மா வேறு பட்டவன்
தூமாதி மார்க்கத்தாலே அவரோஹணம் செய்யும் இந்த ஜீவனுக்கு அந்த வ்ரீஹியில் சம்ச்லேஷ மாத்திரமே கொள்ளத் தகும்
அறுவடை காலத்தில் தானியத்தை அறுக்கும் போதே அவனை சரீரமாக அபிமானித்த ஜீவனுக்கு வியோகம் –
இவன் மட்டும் அறுக்கும் காலத்தோடு -உரலில் குத்தும் காலத்தோடு -புடைத்து பிசைந்து தளிகை பண்ணும் காலத்தோடு
வாசி அற ஒட்டிக் கொண்டே புருஷ கர்ப்பத்தை அடைகிறான் என்று கொள்ள வேண்டும்
ஆக வ்ரீஹ்யாதி பாவேந ஜனனம் ஓவ்பசாரிகம் என்றபடி
இப்படி சம்சாரி ஜீவக தோஷங்களை வைராக்ய பாதத்தில் வியாசர் நிரூபிக்கிறார் –
இந்த வைராக்ய பாதம் சாங்க்யர்களுக்கும் மாயாவாதிகளுக்கும் அசங்கதம் என்பர் நம் பெரியோர்
சாங்யாதிகள் -ஆகாசம் உலக்கை அடியால் எப்படி பாதிக்கப் படாதோ அப்படியே தேஹாதிகளால் ஆத்மா பாதிக்கப் படான்
இவனுக்கு பல போக்த்ருத்வம் இல்லாதாப் போலே கர்த்ருத்வமும் இல்லை
ஆகையால் பலம் ஜீவ உபாதியான அஹங்காரத்துக்கே -மோக்ஷமும் பிரக்ருதிக்கே என்பர்
வியாசர் ஜீவனுக்கு சம்சார பந்தத்தையும் தோஷ சாஹித்யத்தையும் சொல்லி அவர்கள் பஷத்தை நிரசித்தார்
சாங்க்யன் பிரகிருதி சத்ய பதார்த்தம் -தத் ப்ரயுக்த ஸூக துக்காதி தோஷங்கள் பொய் என்றான் / மாயாவதி மாயையும் பொய் என்றான் –
வியாசர் பாரமார்த்திக சம்சார சம்பந்தத்தை ஜீவனுக்குச் சொல்லி அவ்விரு பக்ஷங்களையும் நிரசித்தார் என்றபடி
————————
உபய லிங்க பாதம்
அகில ஹேய ப்ரத்ய நீகத்வமும் கல்யாண குணை கதா நத்வமும் -பரமாத்மாவுக்கு அசாதாரணங்கள்
ப்ருஹத்வ பிரும்ஹணத்வங்கள் ஆகிற ப்ரஹ்ம சப் தார்த்தமும் இவ் உபய லிங்கம் எனக் கொள்ளலாம்
உபாயத்வ அனுகுணமான ஹேய ப்ரத்ய நீகத்வமும் -உபேயத்வ அனுகுணமான கல்யாண குணை கதா நத்வமும்
உபாய உபேயத்வ ஸ்வ பாவமான ப்ரஹ்மத்துக்கு அசாதாரணங்கள் –
சாதன அத்யாயம் ஆதலால் சாதனத்தை நிரூபணம் செய்வது உக்தமே -சாஷாத் சாதனம் ப்ரஹ்மம் இறே
சேஷியாக பிரணவத்தில் நிரூபிதம் -பிரப்யமாக த்ருதீய பத்தில் -உபாயம் என்று நமஸ்ஸில் –
ஆகையால் இப்பாதத்தில் பரமாத்மாவை உபாயமாகவும் உபேயமாகவும் சகல பல பிரதனாகவும் அறுதி இடுகிறார் வியாசர்
இவ்விஷயங்களை பராதிகரணத்திலும் பலாதிகரணத்திலும் காணலாம் -ப்ரஹ்மம் ச குணம் நிர்தோஷம் என்று நிரூபிக்கிறார்
அசேஷ விசேஷ ப்ரத்ய நீக சின் மாத்திரமே ப்ரஹ்மம் -அதற்கு பாரமார்த்திக குணங்கள் கிடையாது -ப்ரஹ்மம் உண்மையான நிர்குணமே-என்பற்கு
இப்பாதமும் மேல் பாதமான குண உப சம்ஹார பாதமும் எல்லாப் படியாலும் அசங்கமாகும்
ச குணத்தை இதில் நிரூபித்து உபாஸ்ய குண பேதத்தால் வித்யா பேதத்தை மேல் ஸ்தாபிக்கிறார்
குணங்கள் சைத்யங்கள் என்று சொல்லப் பார்க்கில் தங்கள் ஒப்புக் கொண்டுள்ள ஸ்வயம் பிரகாசத்வம் ஆனந்தத்வம் இவை இல்லையாய் விடுமே
இவையும் இல்லை என்றால் புத்த மத பிரவேச பிரசங்கம் ஏற்படும்
கல்யாண குண விசிஷ்டன் -ச குண வாக்கியம் சொல்லி -அபகுண ரஹிதன் -நிர்குண வாக்யத்துக்கு விஷயம்
கல்யாண குண பிரகரணங்களில் -குணங்களுக்கு ஒரு உபாதி -ஹேது -சொல்ல வில்லை
ஆகையால் கல்யாண குண யோகம் நிருபாதிகம் ஸ்வா பாவிகம் என்று தேறும்
ப்ரஹ்ம ஸ்வரூபம் போலே கல்யாண குணங்களும் நித்யம் -ப்ரஹ்ம ஸ்வரூபத்தை காட்டிலும்
ப்ரஹ்ம கல்யாண குணங்களில் அத்யாதாரத்தை பூர்வர்கள் காட்டுவார்கள்
உபாஸனார்த்தம் குணம் கல்பிதம் என்ன ஒண்ணாது-
யாவதாத்ம பாவித்வாத் -2–3–30-என்று குண குணிகளுக்கு பேதத்தை ஸ்பஷ்டமாக சொல்லி அபேத வாதம் அயுக்தம்
ப்ரஹ்மம் ஆனந்த ஸ்வரூபமாயும் ஆனந்த குணகமாயும் இருக்குமே
குண குணிகளுக்கு அபேதம் கொள்ளில் அருணாதிகரண விரோதம் பிரசங்கிக்கும்
அவ்வதிகரணத்தில் ஆருண்ய குணத்துக்கு த்ரவ்ய த்வாரா க்ரய சாதனத்வம் சித்தாந்தம் -சாமா நாதி கரண்ய நிர்வாகமும் சம்பவியாது
இதில் -8- அதிகரணங்கள் /முதல் நான்கில் ஜீவ தோஷங்களை மறுபடியும் சொல்லி -ஜீவ ஸ்வப்னாதி தோஷ நிரூபண முகேன
ஸ்வப்ன பதார்த்தங்களை ஸ்ருஷ்டிப்பதாய் இருக்கும் பரமாத்மா மஹாத்ம்ய ப்ரதிபாதமே பலிக்கிற படியால் இவை சங்கதமே
சர்வ அவஸ்தைகளிலும் ஜீவன் பரதந்த்ரனே -ஏகி பூதன் அல்லன்-
விசித்திர பதார்த்த ஸ்ருஷ்ட்டிக்கும் தண்மை ஸூ ஷூ ப்தி ஸ்தானமாய் இருக்கும் தன்மை-ஆகிய இரண்டு ஆகாரங்களை
பரப்ரஹ்மத்துக்கு மஹிமையாக பிரதிபாதிக்கப் படுகிறது இந்த பாதத்தில்
இப்பாதத்தில் முதல் அதிகரணம் –ஸந்த்யாதிகாரணம் -சந்தயே-என்று தொடங்கி
இரண்டு ஸூத்ரங்களாலே –ஜீவனே ஸ்வப்ன பதார்த்த ஸ்ரஷ்டா -பூர்வ பக்ஷம் காட்டி
மேலே -மாயா மாத்திரம் என்று தொடங்கி -நான்கு ஸூத்ரங்களால் பரமாத்மாவே ஸ்வப்ன விசித்திர பதார்த்த ஸ்ரஷ்டா என்று சித்தாந்தீ கரிக்கிறார்
மாயா -மித்யார்த்தம் இல்லை –சத்தியமே –ஆச்சர்யத்வமே மாயா சப்த ப்ரவ்ருத்தி நிமித்தம்
இரண்டாம் அதிகரணம் –ததபாவாதி கரணம் -ஸூ ஷூப்தி ஸ்தானம் பகவான் என்று அறுதி இடுகிறார் –
உறங்கும் சம்சாரி ஜீவர்களுக்கு நாடிகள் மாளிகை ஸ்தானத்திலும் -புரீதத் என்னும் நாடி கட்டில் ஸ்தானத்திலும்
பரமாத்மா படுக்கை ஸ்தானத்திலும் அமைகின்றன என்கிறார் இந்த அதிகாரணத்தில் -இதுவே ப்ரசாத கட்வா பரியங்க நியாயம்
இம்மூன்றும் கூடியே ஸூஷூப்தி ஸ்தானம்
தூ மணி மாடத்து –கோட்டுக்கு கால் கட்டில் –மெத்தென்ற பஞ்ச சயனம் -என்றால் போலே இங்கே கொள்ளத் தகும்
மூன்றாவது அதிகரணத்தில் ஆத்ம நித்யத்வம் கூறப்படுகிறது -முன்பே ஜீவ நித்யத்வம் -நாயத்மா ஸ்ருதே-நித்யத்வாச்ச தாப்ய –என்று முன்னமே கூறப்பட்டு உள்ளதே –
மோக்ஷ காலத்தில் ஜீவன் பாஷாண துல்யன் என்கிற பஷத்தை ப்ராஹ்மணே ஜைமினி என்று வியாசர் நிரசிக்கப் போகிறார் –
பூர்வ மீமாம்சையில் கூறப்பட்டுள்ளது –அநு ஸ்ம் ருதே –2–2–24-என்று க்ஷணிக விஞ்ஞான வாத பங்கை பிரகாணத்தில் ஆத்ம நித்யத்வம் கூறப்பட்டுள்ளது
கல்பாந்தத்திலே -ஏகமேவ என்று ஓதப்படும் ஐக்கியம் ஸ்வரூப ஐக்கியம் அன்று நாம ரூப பிரஹரணமேயாகும் -என்றும் சித்தாந்தம் –
ஆக இப்படி அநேக ஸ்தலங்களில் நித்யத்வம் ஸித்தமாய் இருக்க இங்கே சொல்வது பிரளய சமமான இந்த ஸூஷூப்தி பரம ஹேயம் என்று
இதன் தோஷத்தைக் காட்டவே இந்த பிரசங்கம்
ஸூஷூப்தி தசையில் சர்வ ப்ரவ்ருத்தி ஸூ ந்யதவமும் தர்ம பூத ஞான அத்யந்த சங்கோசமும் அமையும்
மோக்ஷ தசையில் பகவத் கைங்கர்ய ரூப பிரவ்ருத்தியும் தர்ம பூத ஞான அத்யந்த விகாசமும் அமையும் என்று பேதம் காட்டி
அருளிச் செய்கிறார் இவ்வதிகரண பாஷ்யத்தில் எம்பெருமானார்
நான்காவது அதிகரணம் மூர்ச்சா அவஸ்தை விசார பரம் -பூர்வ பாதத்தில் ஜாக்ரத அவஸ்தையும் மரண அவஸ்தையும் விசாரிக்கப் பட்டன
இப்பாதத்தில் ஸ்வப்ன அவஸ்தையும் ஸூஷூப்த அவஸ்தையும் விசாரிக்கப் படுகின்றன
மூர்ச்சை ஸூஷூப்தாதிகளில் ஒன்றே -பூர்வ பக்ஷம் -அது ஸூஷூப்த்யாதி பின்னம் -சித்தாந்தம் –
இந்த அதிகரணம் பகவத் கல்யாண குண அதிசய ஸ்தாபகம் அன்று
மூர்ச்சை ஸூஷூப்தியிலும் சேராது -மரணத்திலும் சேராது -நிமித்த வைரூப்யத்தையும் ஆகார வைரூப்யத்தையும்
இதுக்கு காரணமாக எம்பெருமானார் அருளிச் செய்கிறார்
ஸூஷூப்திக்கு நிமித்தம் இந்திரிய சிரமம் -மூர்ச்சைக்கு நிமித்தம் உலக்கை இவற்றால் அடிபடுதல் –
மேல் நான்கு அதிகரணங்களால் -நிர் தோஷத்வத்தையும் – கல்யாண குணாகாரத்வத்தையும் நிரூபிக்கிறார் -அமலன் -ஆதி போலே
தோஷமுடைய வஸ்துவினுடைய சம்சர்க்கத்தாலே சங்கிக்கப்படும் தோஷங்களை சுருதியில் கூறும் பகவத் ஸ்வ பாவங்களை கொண்டு நிரசித்து
மேலே ஜகத் ப்ரஹ்ம மூல ஐக்கியமாக கூறப்படும் தோஷங்களை பர ப்ரஹ்ம ஸ்வபாவ கதன முகத்தால் நிரசிக்கிறார்
ப்ரஹ்மம் உபாஸ்யம் இல்லை உதாரன் இல்லை என்கிற பக்ஷங்களை -பராதிகரணத்தால் பரத்வ பூர்த்தியையும் –
பலாதி கரணத்தால்- நிரதிசய உதார குணத்தையும் உபபாதிக்கிறார் -பர ப்ரஹ்மமே உபாஸ்யம் -என்று அறுதி இடுகிறார் –
பர சமயிகள் ஜீவ ஈச ஸ்வ பாவங்களை அழிக்கப் பார்க்கிறார்கள் -அத்தை நிரசிக்கவே -ந ஸ்த்தானதோ அபி -என்று
வேத வியாசர் அதிகரண ஆரம்பம் செய்கிறார் -உபய லிங்கத்வம் —ந ஸ்த்தானதோ அபி -என்கிற ஸூத்ரத்தாலும்-
உபய விபூதித்வம்-ப்ரக்ருத்தை தாவத்த்வம் -என்கிற ஸூ த்ரத்தாலும் அறுதியிடப் படுகிறது
ய ப்ருதிவ்யாம் திஷ்டன் –ய ஆத்மநி திஷ்டன் –சுருதியில் பிரதி பர்யாயம் அந்தர்யாமி அம்ருத
அம்ருத -சப்தம் தத் தத் வஸ்து கத தோஷ விசேஷ சம்பந்தம் இல்லாமையைக் காட்டும்
அதாத ஆதே ஸோ நேதி நேதி -ஸ்ருதி வாக்கியம் விபூதி நிஷேத பரம் அன்று
ப்ரஹ்மத்துக்கு ரூபங்கள் நிஷேதம் -பூர்வ பக்ஷம் -ரூப இயத்தா நிஷேத பரம் -சித்தாந்தம் -முன் சொல்லப் பட்ட அளவே உடையதோ- இல்லை என்கிறது-
பராதிகரணம் –பிரமேயம் பார்ப்போம் -அவைதிக விப்ரபத்தி மூன்று விதம் –
1-ப்ரக்ருதி உபாதான காரணம் ருத்ரன் நிமித்த காரணம் /நாராயணன் ஜகத் காரண பூதன் என்ற ஸ்ருதிகளால் இது கழியும் –
2-நாராயணன் உபாதான காரணன் -ருத்ரன் நிமித்த காரணம் -நிமித்த உபாதானங்களுக்கு ஐக்யமே பேதம் இல்லை என்ற ஸ்ருதி வாக்யங்களால் கழியும்
3-நிமித்த உபாதான காரணமாயும் முக்திதமாயும் உள்ள பர ப்ரஹ்மம் நாராயணன் ஆயினும் முக்தர்களுக்கு ப்ராப்ய பூதன் வேறு ஒருவன் என்பர்
இத்தை ஒழித்து பரம காரணமான பர ப்ரஹ்மமே பரம பிராப்யம் என்று அறுதியிடுகிறார் பராதிகரணத்தில்
முதல் ஸூ த்ரம் -பூர்வ பாஷா சங்கா பரம்–நான்கு ஹேத்வ ஆபாசங்களைக் காட்டி – மேல் நான்கு ஸூத்ரங்களால்
இவற்றை நிரசித்து வேதாந்த சித்தாந்த ஸ்தாபனம் செய்கிறார்
ஸ்தான விசேஷாத் -3–2–33-என்ற ஸூத்ரம் பூர்வ ஸூத்ர சேஷம் -பூர்வ ஸூ த்ரங்களால் அதிக வஸ்து வாதத்தில் தூஷணம் கூறிய வியாசர்
அநேக சர்வ கதத்வம் -என்கிற அந்திம ஸூ த்ரத்தால் ஸ்வ பக்ஷ பிராமண பிரதர்சனம் -இவ்வாறு -7-ஸூத்ரங்கள்
நான்கு ஹேது ஆபாசங்களில் மூன்றாவது -சம்பந்த வ்யபதேசம் —ப்ரஹ்மம் ஹேதுவாய் -ப்ராபகமாய் -மற்ற ஓன்று இந்த பிராப்பகத்தால்
அடையப்படும் ப்ராப்யம் -அம்ருதஸ்ய ஏஷ சேது -ஸ்ருதி வாக்கியம் -உபபத்தேஸ்ச -என்ற ஸூத்ரத்தால் உபாயத்துக்கே உபேயத்வ சாதன பரம் -இந்த ஸூத்ரம் என்றபடி
அநந்ய உபாயத்வ சிரவணாத்–ப்ராப்யத்துக்கே உபாயத்வம் -ப்ரஹ்மத்தின் ஸ்வரூபமே ப்ராப்யத்வமும் ப்ராபகத்வமும் –
பகவான் சேதனனை வரிப்பது மூன்று வகை -1- நிராங்குச ஸ்வா தந்திரத்தால் உண்டான பாரதந்தர்யத்தால் செய்யப்படும் வரணம்-
2-கிருபையால் உண்டான பாரதந்தர்யத்தால் செய்யப்படும் வரணம்
புல்லைக் காட்டி அழைத்து புல்லை இடுவாரைப் போலே பல சாதனங்களுக்கு பேதம் இல்லை
பிரசாத விசிஷ்ட ப்ரஹ்மம் உபாயம் -போக்யதா விசிஷ்ட ப்ரஹ்மம் உபேயம்
இத்தையே இரக்கம் உபாயம் இனிமை உபேயம் -ஆக பகவத் உபாயத்வ உபேயத்வங்கள் பராதிகரண சித்தாந்திதங்கள்-
கடைசி அதிகரணம் பலாதிகரணம் பிரமேயம் –பத்து பாதங்களால் காரணத்வ ப்ராப்யத்வ ப்ராபகத்வ விசிஷ்டமாக அறுதியிடப்பட்ட ப்ரஹ்மமே
ஐஹிக ஆமுஷ் மிக போக மோக்ஷ ரூப சகல பல ப்ரதம்-பரம உதாரன் -என்று அறுதியிடுகிறார் –
கீழே ப்ரஹ்மம் ஹேய ரஹிதம் என்றார் –பலத்வம் உக்தம் -அங்கு -இதில் ஹேய நிவர்த்தகம் என்கிறார் -பல தத்வம் உக்தம் இங்கு
தத்வ ஞானம் மித்யா நிவர்த்தகம் என்பதால் மோக்ஷம் ப்ரஹ்ம அதீனம் அல்ல என்கிற மாயாவதி நிரஸனம்
பகவத் அனுக்ரஹத்தை முன்னி டாதே கேவல தத்வ ஞானத்தால் மோக்ஷம் தார்கிகர் வாதம் நிரஸனம்
ஜைமினி மத அநு யாயி கண்டனம்
மேலே புருஷார்த்ததிகரணத்திலும் –3–4–1-இதே போலே -பூர்வ மீமாம்சையில் அபூர்வாதிகாரணம் அபூர்வம் துவாரம் தேவதா அனுக்ரஹம்
கர்மமே காலாந்தரபாவி பலத்தை கொடுக்கும் பூர்வ பக்ஷம் -கர்மம் நசித்து பிரத்யக்ஷம் என்பதால் அபூர்வம் கல்பம்
ச ஏனம் ப்ரீத ப்ரீணாதி -ப்ரீதி அடைந்த தேவதையே இவனை உகப்பிக்கிறது -போக்தா -ஆராத்யன் -பிரபு பல ப்ரதன்-சாஸ்திர விதிகள் அவன் கட்டளைகள் –
வீடு முதல் முழுவதுமாய் –2–2–1-என்றும் வீடு முதலாம் –2–8–1-போலே அகில பல ப்ரதன் என்றவாறு –
————————
இனி மேல் ஆறு பாதங்களால் சாத்தியமான பரமாத்மா உபாசனத்தையும் சாத்தியமான பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவத்தையும் விவரித்து அருளுகிறார்
3–3-குண உபஸம்ஹார பாதம் –
அநேக சாகைகளில் ஓதியுள்ள வைஸ்வநராதி வித்யை -அபேதமா பேதமா என்கிற விசாரம் -அபேதமானால் குண உப சம்ஹாரம் -பேதமானால் விகல்பம் –
வேத்ய அநு ரூபமாக வித்யா நியமம் -வேத்ய பேதம் குண பேதத்தால் அல்லது ப்ரஹ்ம பேதத்தால் அல்ல
நிர்விசேஷ வஸ்துவை தெரிவிப்பதில் தாத்பர்யம் சொல்லுபவர்களுக்கு இந்த பாதம் அங்கதமாம் –
குண விசிஷ்ட ப்ரஹ்ம உபாசனமான தஹர வித்யையினால் பரஞ்சோதி பிராப்தியும் -பரஞ்சோதிஸான பர ப்ரஹ்மத்தை அடைந்தவனுக்கு
நிராங்குச ஐச்வர்ய பிராப்தியும் அன்றோ ஸ்ருதி ஓதிற்று -பரம ப்ராப்திக்கு மேற்பட்ட மற்று ஒரு மோக்ஷம் இல்லையே
ஆகையால் க்ர்ம முக்தி நிரூபணம் அயுக்தம்-ச குண உபாசனத்தாலே நிர் குண வித்யா பிராப்தி -நிர் குண வித்யா ப்ராப்தியால்
மோக்ஷ பிராப்தி -இங்கனே க்ரம முக்தியாகவும் என்ன ஒண்ணாதே
ஆனந்தாதய பிரதானஸ்ய –3- 3–11-என்று பர வித்யா சாமான்யத்துக்கு ச குண விஷய கத்வத்தை அறுதியிட்டு -நிர் குண வித்யை என்பது ஒன்றே கிடையாதே
இப்பாதத்தில் -26-அதிகாரணங்கள்
சில -வித்யா பேத அபேத விசார பரங்கள்
சில பர வித்யைக்கு அநு பந்திகளான அர்த்தங்கள் விசாரம்
சில த்ருஷ்ட்டி உபாசன பரங்கள்
19th -அதிகரணம் லிங்க பூயஸ்த்வாதி கரணம் -சகல பர வித்யா உபாஸ்யம் -ஸ்ரீ மன் நாராயணா தேவதா விசேஷம் –
ஆனந்தாதிகரணம் -பகவத் ஸ்வரூப நிரூபக தர்மங்கள் உபாஸ்யங்கள் -ஸ்ரீ யபதித்தவம் அருளிச் செய்யாமல் -அதி பிரசித்தம் என்பதால் -அதி ரகஸ்யம் என்பதாலுமாம்
சத்யம் ஞானம் அநந்தம்–நிர்விகாரத்வ -ஞான ஸ்வரூபத்வம் ஞான குணகத்வம் -தேச கால வஸ்து பரிச்சேத ரஹிதன்
காரணத்வ சங்கித தோஷ பரிஹார்த்தம் சத்யதவாதிகள் -ஸ்ரீ பாஷ்ய சாரம் –
லிங்க பூயஸ்த்வாதி கரணம் -தர்மியான பர ப்ரஹ்மம் நாராயண தத்வம் சகல பர வித்யா உபாஸ்யம்
ஹான்யதிகரணம் தொடக்கமான மூன்று அதிகரணங்கள் வித்யைக்கு அங்கமான சிந்தனை விசேஷ விசார பரங்கள் –
இவற்றுள் முதலில் -ஹான்யதிகரணம்-ஹானி சித்தனமும் -உபாயன சந்தனமும் -/ ஹாநாமாவது கர்ம விமோசனம் -உபாயனம்-அந்யத்ர பிரவேசம்
அதாவது கர்மாதிகள் மற்றோர் இடத்தில் சம்பந்திப்பது –
இந்த சிந்தனம் அங்கமானாலும் ஞான ஸ்வரூபம் ஆகையால் வித்யா துல்யமாக இங்கே விசாரிக்கப் படுகிறது –
ஆகையால் க்ரியா ஸ்வரூபங்களான அங்கங்களை விசாரிக்கும் நான்காம் பாதம் -அங்க பாதத்தில் -இது விசாரிக்கப் படுவது இல்லை
அமூர்த்தங்களான புண்ய பாபங்களுக்கு கணமும் உபாயனமும் கூடுமோ -மற்றொருவர் கர்மம் மற்றொருவர் பலத்துக்கு ஹேது வாகுமோ என்னில்
வித்யா நிஷ்டன் இடம் உள்ள ப்ரீதியால் சர்வேஸ்வரன் அனுகூலர் பிரதிகூலர் இடம் புண்ய அபுண்ய பல துல்யம் கொடுக்கிறான் –
சாம்பராயாதி காரணத்தில் தேகம் பிரிந்த பின்னை கர்ம ஷயம் என்னப்படுகிறது –
தததிகமாதி கரணத்தில்–4–1–13–தேகம் இருக்கும் காலத்தில் கர்ம ஷயம் கூறப்படுகிறது
இரண்டும் பொருந்தும் -உபாசன ஆரம்ப காலத்தில் கர்ம ஷயம் -ஷமிஷ்யாமி -பொறுப்பேன் -என்னும் அவன் சங்கல்பம் /
தேக வியோ க சமயத்தில் கூறப்படும் கர்ம ஷயம் -ஷாந்தம் -பொறுத்தேன் -என்கிற அவன் சங்கல்பம் –
இந்த அதிகரணத்தில் முதல் இரண்டு ஸூத்ரங்கள் சித்தாந்தம் -மேலே பூர்வ பக்ஷ அனுவாதம் –கதேரர்த்தவதத்வம்
அதுக்கு மேலே சித்தாந்தம் -உப பன்ன–வித்யா மஹாத்ம்யத்தாலே ஸூஷ்ம சரீர ஸ்திதி
அக்ஷரத்யதி கரணத்தில் அமலத்வம் சர்வ பர வித்யா உபாஸ்ய குணமாக நிரூபிக்கப் படுகிறது -அமலத்வம் நித்ய ஸூரி வியாவர்த்தகம்
லிங்க பூயஸ்த்வாதி கரணத்தில் சகல பர வித்யா உபாஸ்யம் நாராயண தத்துவமே –
அக்ஷர சிவ சம்பு பர ப்ரஹ்ம பரஞ்சோதி பரதத்வ பரமாத்மா சப்தங்கள் நாராயணனே
முதலாம் திரு உருவம் மூன்று என்பர் ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா நிகர் இலகு காருருவா நின்னகத்தன்றே புகர் இலகு தாமரையின் பூ –
சப்தாதி பேதாதி கரணத்தில் சத் வித்யா தஹர வித்யாதிகளுக்கு பேதம் சமர்ப்பிக்கப் படுகிறது -இதிலும் நிர் விசேஷ ஞானவாதி நிரஸனம்
விகல்பாதி கரணத்தில் சகல பர வித்யைகளுக்கும் மோக்ஷ ரூப ஏக பலம்
கூடியே மோக்ஷ ஹேது பூர்வ பக்ஷம் -தனித்தனியே மோக்ஷ ஹேது சித்தாந்தம் -உபாயம் பல விதம் -அவற்றுக்கு விகல்பம் என்று அறுதியிடுகிறார் வியாசர் –
3–4-அங்க பாதம் –வித்யா அங்கமான கர்மாதிகள் விசாரம் -வர்ணாஸ்ரம தர்மம் -சம தமாதிகள் -பாண்டித்யம் -பால்யம்
-மௌனம்–த்யானம் அர்ச்சனை -பிரணாமாதிகள் போல்வன
1-ஞான மாத்திரம் உபாயம் இல்லை –அது உபாஸனாத்மகம் –2-அது பக்தி ரூபம் -3-அது நாராயண விஷயகம் -4-அதுவும் கர்மாங்ககம்
மூன்று உபநிஷத் வாக்கியங்கள் உதாகரிக்கப் படுகின்றன -ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்று ப்ரஹ்ம வித்யையினால் புருஷார்த்த பிராப்தி
வேதாஹமேதம் -பிரதி பந்தக நிவ்ருத்தமும் திவ்ய மங்கள விக்ரஹ யோகமும் உபாயாந்தர நிஷேதமும்
யதா நத்ய-வாக்யத்தால் ப்ராப்ய லாபமும் பிரதிபந்தக நிவ்ருத்தியும்
15-அதிகரணங்கள் இந்த பாதத்தில் /
முதல் அதிகரணம் முதல் ஸூ த்ரம் -வித்யையினாலே ப்ராப்ய லாபம் என்று காட்டி –
மேலே ஆறு ஸூ த்ரங்களால் பூர்வ பக்ஷம் –
மேலே பல ஸூ த்ரங்களால் சித்தாந்தம் –
ஜைமினி மகரிஷி -இவர் சிஷ்யர் பூர்வ பஷி இங்கு / பர ப்ரஹ்ம அங்கீகாரம் செய்தவர் தானே இவரும்-சரஷாதப்ய விரோதம் ஜைமினி /
பரம் ஜைமினிர் முக்யத்வாத்-இத்யாதி ஸூ த்ரங்களில் ஸ்பஷ்டம் –
அவர் பூர்வ பஷி ஆவாரோ என்னில் வியாசரை ஆச்ரயிப்பதற்கு முன் உபநிஷத் துக்களுக்கு செய்த நிர்வாகங்கள் பூர்வ பக்ஷம் என்றபடி –
சர்வ உபேஷாதி கரணத்தில் -வித்யைக்கு அங்கம் கர்மம் என்னும் விஷயத்தில் அஸ்வத்வத் த்ருஷ்டாந்தம் காட்டப் பட்டு /
அஸிநாஜிகாம்சதி -கத்தி ஹனன சாதனம் அல்லது ஹனன இச்சா சாதனம் இல்லை –
இதே போலே யஜ்ஜேன விவிதி ஷந்தி -சுருதியில் – யஞ்ஞாதிகள் வேதன சாதனம் அல்லது வேதன இச்சா சாதனம் இல்லை என்று சித்தாந்தம்
ஞான இச்சைக்கு கர்மம் சாதனம் என்னவும் ஒண்ணாது -கர்மம் இச்சையை உண்டாக்காதே இறே
விஷய வை லக்ஷண்ய ஞானத்தை பிறப்பிக்கவும் ஒண்ணாதே -ஞானத்துக்காக கர்மம் என்னுமது பர சமயிகளுக்கு அபசித்தாந்தம் இறே
கமன சாதன பூதமான குதிரை பரிகரங்களை அபேக்ஷிக்குமா போலே மோக்ஷ சாதனமான ப்ரஹ்ம வித்யையும் கர்மங்களை அபேக்ஷித்து இருக்கும் –
பல உத்பத்தியில் கர்ம அபேக்ஷை இன்றிக்கே ஒழிந்தாலும் ப்ரஹ்ம வித்யை உத்பத்தியில் கர்ம அபேக்ஷை உண்டு என்பதை
சர்வ அபேக்ஷை என்று ஸூத்ரகாரர் சொல்லி உள்ளார் –
முன்னமே யஞ்ஞாதிகளையும் சமாதிகளும் வித்யா அங்கமாக நிரூபித்த வியாசர் -ஸஹ கார்யந்த்ர வித்யதிகரணத்தில்
பாண்டித்ய பால்ய மௌனங்களை வித்யா அங்கமாக நிரூபிக்கிறார் –
இந்த த்ரயமும் வித்யா அங்கம் சித்தாந்தம் -பாண்டித்யம் மட்டுமே பூர்வ பக்ஷம்
ஸ்ரவண மனன லப்த ஞான விலக்ஷணம் ஞானம் பாண்டித்யம் -வேதாந்திகள் தங்கள் பெருமைகளை மறைத்து கொண்டு இருப்பார்களே -இதுவே பால்யம் இப்படி இருப்பதும் லோகத்தார் செய்யும் சம்மானத்தை இல்லை செய்கைக்காகவும்-பரம ஞானிகளுக்கு ஸமமாஆக மூன்றுமே வித்யா அங்கங்கள் -என்பர் வியாசர்
மேலே வித்யா நிஷ்பத்திக்கு தடையை தெரிவிக்கிறார் அதிமாதி கரணத்தில்
பிரதிபந்தக அபாயமும் ஸாமக்ரியை அந்தர்பூதம் ஆகையால் -பாகவத அபசாரம் இல்லையாகில் வித்யா நிஷ்பத்தியாம் –
பாகவத பேற்றுக்கு பாகவத சம்பந்தம் போலே இழவுக்கு அபசாரம் அன்றோ
வாக்யார்த்த ஞான மாத்திரம் உபாயம் என்பர் ம்ருஷாவாதிகள் – கர்ம ஞான சமுச்சயம் என்பர் யாதவர்கள் -/
கர்ம பிரதான வாதிகள் நிரீஸ்வர மீமாம்சகர்கள் -ஜீவன் நித்ய முக்தன் ஆகையால் -முக்தி ஸாத்யை அல்ல என்பர் சாங்க்யர்/
இந்த நான்கு பக்ஷங்களையும் கண்டித்து கர்ம அங்கமான உபாசனம் மோக்ஷ ஹேது -சித்தாந்தீ கரிக்கிறார் –
————
இனி மூன்றாம் அத்யாயம் –
முதல் அத்யாயத்தில்
பர ப்ரஹ்மமே ஜகத் ஜென்மாதி காரணமாய் -சர்வ சேஷியானவன் -என்றும்
தன்னுடைய லீலைக்காக -நான்முகன் சிவன் இந்த்ரன் முதலானவர்கள்சிருஷ்டிக்கப் பட்டு உப சம்ஹரிக்கப் படுகிறார்கள் -என்றும்
அந்த பரம புருஷன் பிரகிருதி மண்டலத்துக்கு புறம்பாய்
நிதர சூரி சேவிதமான ஸ்தான விசேஷத்திலே
ஸ்வ இச்சையினாலே சுடர் ஒளி மயமான திவ்ய மங்கள விக்ரஹத்தை பரிக்ரஹித்து
அப்ரமேயமான ஆனந்தத்தை யுடையனாய்
தன்னடி பணிந்தார்க்கும் அபரிமித ஆனந்தத்தை அளிப்பவனாய்
சம்சார பந்தத்தில் நின்றும் விடுபட்ட முக்த புருஷர்களினால் அனுபவிக்கப் பட்டுக் கொண்டு
இரா நின்றான் என்று தெரிவிக்கும் முகத்தாலே
சம்சாரிகளுக்கு பகவத் அனுபவ குதூஹலத்தை உண்டாக்குவதற்காக
பரம புருஷார்த்தமான பகவத் ஸ்வரூப ஸ்வ பாவாதிகள் நிரூபிக்கப் பட்டன-
பிறகு இரண்டாம் அத்யாயம் செய்தது என் என்னில்
முதல் அத்யாயத்தினால் நிரூபிக்கப் பட்ட அர்த்தம்
சர்வாத்மனா அசைக்க முடியாதது என்று
பிரதி பஷ பிரதி ஷேப பூர்வகமாக சாதிதததுடன்
ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் என்கிற பகவத் பரணீத சாஸ்திர விசேஷத்தினாலே தேறிய பொருள் என்றும் நிரூபித்து
சகல சேதன அசேதன பொருள்கள் பரம புருஷ கார்ய பூதங்களே என்பதை
நன்கு சோதிக்கும் முகத்தாலே
கார்ய சாமான்யமும் பர ப்ரஹ்ம கார்யமே என்பதும் ஸ்தாபிக்கப் பட்டது –
ஆக –
இரண்டு அத்யாயங்களால் –
புருஷார்த்த ஸ்வ ரூபம் நிச்சயிக்கப் பட்டதாக தேறிற்று
இப்படி புருஷார்த்த ஸ்வரூபம் நிச்சயிக்கப் பட்டாலும்
அநாதி வாசனா பலத்தாலே
சூத்திர புருஷார்த்தங்களையே நச்சிக் கிடக்கும் சம்சாரிகளுக்கு
பரம புருஷ பிராப்தியில் பதற்றம் உண்டாகாமைக்கு காரணம்
தாங்கள் விரும்பிய புருஷார்த்தங்கள் அல்பம் அஸ்தரம்
என்பதை ஆராய்ந்து உணராமையே என்று கருதிய சாஸ்திர காரர்
அந்த சம்சாரிகளுக்கு ‘இதர விஷயங்களில் வைராக்யத்தையும்
பரம புருஷார்த்தத்தில் மிக்க ருசியையும் உண்டாக்குவதற்காக
கர்ம பலன்கள் எல்லாம் ஷயிஷ்ணுக்கள் என்றும்
பரம புருஷ உபாசன பலமான அப வர்க்கம் ஒன்றே நித்ய புருஷார்த்தம் என்றும் -தெரிவித்து
இவ் வழியாலே –
பரம புருஷ பிராப்தியில் த்வர அதிசயத்தை உண்டாக்கவே
பின்னிரண்டு அத்யாயங்களை அவதரிப்பிகின்றார்-
ஆக –
ஏற்கனவே கர்ம விசாரம் செய்து
அதன் பலன்களை நஸ்வரம் என்று அறிந்து வைராக்கியம் பெற்றவனுக்கே ப்ரஹ்ம மீமாம்சையில் அதிகாரம் என்று
ஜிஞ்ஞாசா சூத்ரத்திலே நிரூபிக்கப் பட்டு இருப்பதனால்
மறுபடியும் வைராக்யத்தை உண்டாக்குவதற்காக –
இந்த பிரயத்னம் வீண் அல்லவோ என்று சங்கை வரலாம்
பஞ்சாக்னி வித்யா நிரூபணத்தாலே விஷயங்களில் எப்படிப் பட்ட வைராக்கியம் உண்டாகுமோ
அது கர்ம விசாரத்தினால் -உண்டாக மாட்டாது என்று கருதி
இங்கு புநர் பிரயத்னம் கொள்ளப் படுகிறது
ஆகவே இது நிஷ் பலம் அற்று -ச பலமே
இந்த மூன்றாம் அத்யாயத்தின் முதல் பாதத்தில்
பஞ்சாக்னி வித்யா நிரூபணம் செய்து
கர்ம பலன்கள் எல்லாம் நஸ்ரவங்கள் என்றும் நரக துல்யங்கள் என்றும் தெரிவிக்கப் படுகிறது
அசுத்தமிதி சேந் ந சப்தாத் -மூன்றாம் அத்யாயம் முதல் பாதம் –முடிவில் உள்ள -அந்யா திஷ்டிதாத கரணம் -இரண்டாது சூத்ரம்
ஷீணே புண்யே மர்த்ய லோகம் விசந்தி -ஸ்ரீ கீதை -சவர்க்க லோக அனுபவம் பண்ணி கீழே வருபவர்களுக்கு
சாந்தோக்யம் –த இஹ வ்ரீஹியவா ஔ ஷதி வனச்பதயச் தில மாஷா ஜாயந்தே –நெல் முதலனவாகப் பிறப்பது சொல்கிறது
மனு ஸ்ம்ருதி –சரீரஜை கர்ம தோஷைர் யாதி ஸ்தாவரதாம் நர -ஸ்தாவர ஜன்மம் பாப பலம் –ஸ்வர்க்கத்தில் இருந்து
இறங்குபவனுக்கு பாபம் இருக்குமா — அக்நீஷோமீயம் கருமம் பாப மிஸ்ரம் ஆகையாலே
உபபத்தேச்ச -ஸ்ரீ பாஷ்யம் –3-2-4-
ப்ராப் யஸ்ய பரம புருஷஸ்ய ஸ்வ ப்ராப்தௌ ஸ்வஸ்யைவ உபாயத்வோ பபத்தே
நாயமாத்மா பரவச நேன லப்ய தநும் ஸ்வாம் -என்றும்
அம்ருதஸ் யைஷ சேது -இதி அம்ரு தஸ்ய ஸ்வஸ்ய ஸ்வ யமேவ பிராபக இதி சேதுத்வவ்
யபதேசோ பபத்தேச்ச –என்றும் ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூ கதிகள்
பலமத உபபத்தே –3-2-37-
ச ஏவ ஹி சர்வஜ்ஞஸ் சர்வ சக்திர் மஹோ தாரோ யாகதான ஹோமாதிபிருபாசா நன்ச ஆராதிதா
ஐஹிக ஆமுஷ்மிக போக ஜாதம் ஸ்வ ஸ்வரூப அவாப்திரூபம் அபவர்க்கஞ்ச தாது மீஷ்டே
நஹி அசேதனம் கர்ம ஷணத் வம்சி காலான் தர பாவிபபல சாதனம் பவிது மர்ஹதி -என்றும் ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூ கதிகள்
மூன்றாம் அத்யாயம் -பரம புருஷ ப்ராப்திக்கு உபாயத்வத்தை தெரிவிப்பது என்றும்
நான்காம் அத்யாயம் எனபது உபாய பலமான உபேயத்தை தெரிவிப்பது என்றும் நெஞ்சில் கொள்க –
உபய லிங்காதி கரணத்தின் பிரமேயம் -பார்ப்போம் –
மூன்றாம் அத்யாயம் -இரண்டாம் பாதம் –
ஜீவாத்மா வானவன்
ஜாக்ரத் ஸ்வப்ன ஸூ ஷுப்தி மூர்ச்சாதி அவஸ்தைகளுக்கு
ஹேதுவான நாநா வித சரீரங்களை
ஏற்றுக் கொண்டு -அவ்வவச்தைகளிலே சுக துக்கங்களை அனுபவிக்கிறான்
என்னும் இடம் கீழே நிரூபிக்கப் பட்டது
அப்படிப் பட்ட சரீரத்தில் பரமாத்மாவும் சம்பந்தப் பட்டு இருந்தாலும்
தத் பிரயுக்தமான சுக துக்காதி அபுருஷார்த்த லேசமும் தன்னிடத்தில் ஓட்டப் படாமல் இருக்கிறான் என்றதையும்
கல்யாண குண கடலாய் இருக்கிறான் என்றதையும்
நிரூபிக்க இந்த அதிகரணம் தோன்றியது –
பல அத்யாயம் -ப்ரஹ்ம வித்யா பலம் -த்ருதீய நாராயணாய -பதார்த்தம் –
ஆவ்ருத்தி பாதம் –கர்ம நிவ்ருத்தி பலம் / உத்க்ராந்தி பாதம் -ஸ்தூல தேஹ நிவ்ருத்தி / கதி பாதம் -ஸூஷ்ம தேஹ நிவ்ருத்தி பலம்
பிராப்தி பாதம் -பர ப்ரஹ்ம பிராப்தி -ஸ்வ ஸ்வரூப ஆவிர்பாவம் -அபு நா வ்ருத்தி -இத்யாதி பலம் –
முதல் பாதம் -11-அதிகரணங்கள் –முதல் -6-வித்யா ஸ்வரூப விசாரம் /மேல் -5-வித்யா பல விசாரம்
உபாசனமும் கர்ம யோகத்துக்கு சாத்தியம் ஆகையால் ஸாத்ய பரமான இந்த அத்தியாயத்தில் உபாசன விசாரம் உக்தமே
புல்கு பற்று அற்றே என்று பக்தியை அங்கநா பரிஷ்வங்கம் போலே ஸ்வயம் பிரயோஜனம் அன்றோ –
ஆவ்ருத்தி -அஸக்ருத் உபதேசாத் –4–1–1-மோக்ஷ சாதனமான ஞானம் அஸக்ருத் ஆவ்ருத்தம் -புன புன சிந்தனம் -ஸ்ம்ருதி சந்ததி ரூபம்
த்ருவா ஸ்ம்ருதி -நிதித்யாஸிதவ்ய . தைலதாரை போலே அவிச்சின்ன ஸ்ம்ருதி ரூபம் -/ ப்ரீதி ரூபா பன்னம்-
இரண்டாவது அதிகரணம் –ஆத்மத்வ உபாசநாதி கரணம் –ப்ரஹ்மம் நானே என்றே உபாஸிக்க வேணும் -அந்தராத்மாவாக உணர்ந்து -என்றபடி
ஐக்கிய ஞான பிரமம் கொண்டு அல்ல -பர ப்ரஹ்மத்துக்கு அத்யந்த பரதந்த்ரன் என்ற ஞான லாபத்தால் –ஆக்ருத்யதிகரண நியாயம்
அஹம் க்ரஹ உபாசனம் ஜீவ பர அத்வைத ஞானம் –என்பர் ம்ருஷ வாதிகள் -அது அயுக்தம்
சாஸ்திர த்ருஷ்ட்யா / ஆத்மேதி து / அவிபாகேன/ஸூத்ர த்ரயத்திலும் சரீராத்மா பாவத்தால் வந்த ஜீவ பர ஆத்மத்தையே
ஆகிருதி நியாயத்தாலே திரு உள்ளம் பற்றி -இதை சர்வம் சமஞ்ஜஸம் -என்பர் நம் ஸ்ரீ பாஷ்யகாரர்
இப்படி வித்யா ஸ்வரூப விசோதனம் செய்து தததிகமாதி கரணம் தொடங்கி -5-அதிகரணங்களால் வித்யா பலத்தை நிரூபிக்கிறார் –
ததிதகமே –சாஷாத்கார தசா பன்ன ப்ரஹ்ம வித்யா பிராப்தி ஏற்படும் போது -உத்தர பூர்வாகயோ –அஸ்லேஷ விநாஸவ் /
நா புக்தம் ஷீயதே -கர்ம பல ஜனக சக்தி பல அனுபவ பர்யந்தம் நிலை நிற்கும் -என்றதே
ப்ரஹ்ம வித்யை கர்மங்களுக்கு பல ஜனன சக்தியை உண்டாகாமல் தடுத்து விடும்
மாதவன் என்று என்று ஓத வல்லீரேல் தீது ஒன்றும் அடையா ஏதம் சாராவே –10–5–7-
ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுடைய கர்மங்களுக்கு நான்கு அவஸ்தா விசேஷங்கள் –விநாசம் -அஸ்லேஷம் -தூநநம் -உபாயநம் —
க்ரியா சாமான்யம் அழிவது ப்ரத்யக்ஷம் / எனவே இந்த அவஸ்தா விசேஷங்களை கிரியைக்கு சொல்லாமல் கிரியா சக்திக்கு
அந்த சக்தியும் பகவத் ப்ரீதி அப்ரீதி ரூபையாம் –
புண்யமும் மோக்ஷ விரோதி என்பதால் அவற்றுக்கும் அஸ்லேஷ விநாசங்கள் என்பதை இதராதி கரணத்தில் ஸ்தாபிக்கிறார் –
ஸூபாஹுவுக்கு நாசமும் மாரீசனுக்கு அஸ்லேஷம் போலே /
வித்யா நிஷ்டனுடைய புண்யம் தத் அனுகூலம் இடத்தும் -பாபம் தத் பிரதிகூலன் இடத்தும் சங்க்ரமிக்கும்
உத்தர பூர்வாகயோ –4–1–13-பாப பரம் / இதரஸ்யாபி-4–1–14-புண்ய பரம் / அநாரப்த கார்யே –4–1–15-புண்ய பாப பரம்
ஒடுங்க அவன் கண் ஒடுங்கலும் எல்லாம் விடும் -பிரகார பூதரான நீங்கள் பிரகாரியான அவன் பக்கல் சென்று சேர
பிராப்தத்தைச் செய்யவே அப்ராப்தம் எல்லாம் விடும்
ஸ்வரூப அனுரூபத்தைச் செய்யவே ஸ்வரூப விரோதிகள் அடங்க விட்டுப் போகும்
ஒடுங்க -என்று வித்யையும் விடும் என்று வித்யா பலமும் கூறப்பட்டது இறே –
உத்க்ராந்தி பாதம் -ஸ்தூல தேஹ நிவ்ருத்தி -வித்யா பலம் –
ப்ரஹ்ம வித்துக்களை மரணம் ஸூக ரூபம் -மஹாநுபாவர்கள் இருந்தால் மரணம் இல்லை என்னும் பிராந்தியை போக்க
பிராரப்த அவசானத்தில் ப்ரஹ்ம வித்யா நிஷ்டனான உபாசகனுக்கு மரணம் என்று நிரூபிக்கிறார்
ஜீவன் முக்திவாதிகள் சாங்க்யர் -ஜீவன் முக்தி வாதம் அஸங்கதம் -பிரத்யக்ஷ விரோதம் -சாஸ்திர விரோதம் –
ஜீவன் முக்தி வாதத்தை சாஷாத்தாக நிரசிக்கும் ஸூத்ரம்-நோப மர்தே நாத –4–2–10-
ஜீவன் முக்தி மதம் நஜீவதி யத சஸ்த்ரேன சாஸ்திராத்மநா லுநம் லோக விருத்த சித்தி ஸ யதஸ்தேநேத மாதாவபி
ஆபஸ்தம்ப நிரஸ்தம் உபநிஷத பிரஸ்தானமா தஸ்து ஷாம் ஆச்சாரயோ அபி நிராசகார கலு தத்வைபாய நாக்யோ முனி -என்று
ஸ்ரீ வாத்ஸ்ய வரத குரு -ஸ்ரீ நடாதூர் அம்மாள் -அருளிச் செய்த தத்வ சார ஸ்லோகம் –
அத்ர ப்ரஹ்ம சமஸ் நுதே –சுருதியில் வித்யா நிஷ்டனுக்கு இங்கேயே ப்ரஹ்ம அனுபவம் -என்பதால்
உக்ராந்தி இல்லை என்பர் பூர்வ பஷி -வாத நிரஸனம் -ஆஸ்ருத்யதி கரணத்தில்
வித்வான் அவித்வான் வாசி இன்றிக்கே சர்வருக்கும் உத்க்ராந்தி சமானை
மேலே ததோகோ அதிகரணத்தில் ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு அசாதாரணமான நாடீ விசேஷ பிராப்தி உண்டு என்பர்
கார்த அனுக்ரஹ லப்த மத்யதம நித்வாரா பஹிர் நிர்கத-என்பர் ஸ்ரீ நடாதூர் அம்மாள்
அத்ர ப்ரஹ்ம சமஸ் நுதே -ஸ்ருதிக்கு வியாசர் -அம்ருதத்வம் ஸ அநு போஷ்ய—4–2–7-என்று
அநு போஷ்ய ஏவ அம்ருதத்வம் -உபாசன காலத்தில் உள்ளதொரு ப்ரஹ்ம அனுபவத்தை சொன்ன படி –
தஷிணாயநாதி கரணத்தில் -தஷிணாயணத்தில் மரித்தவனுக்கு மோக்ஷ பிராப்தி இல்லை என்னும் பக்ஷம் -நிரஸனம்-
நர ராத்திரி -இரவிலும் /பித்ரு ராத்திரி -கிருஷ்ண பக்ஷம் /தேவ ராத்திரி -தஷிணாயம் -மரித்தவராயினும் வித்வான்கள் ப்ரஹ்ம பிராப்தி உள்ளவரே
யோக யுக்த -மார்க்க சிந்தனை -தஸ்மாத் அஹரஹ அர்ச்சிராதிகதி சிந்தனாக்ய யோக யுக்தோ பவ – / பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே –
கதி பாதம் –
அர்ச்சிர் அஹஸ் சீதா பாஷாந் உதகய நாப்த மருதர்க் கேந்தூன்
அபி வைத்யுத வருண இந்திர ப்ரஜாபாதீன் ஆதி வாஹிகான் ஆஹூ –ஸ்ரீ வரத குரு ஸ்லோகம் -ஸ்ருதி பிரகாசிகை –
சத் சங்காத் பவநிஸ்ப்ருஹ குரு முகாத் ஸ்ரீ சம் பிரபத்யாத்மவான்
ப்ராரப்தம் பரி புஜ்ய கர்ம சகலம் ப்ரஷீண கர்மாந்தர
ந்யாஸா தேவ நிரங்குசேஸ்வர தயா நிர் லூன மயான்வய-ஸ்ரீ வாத்ஸ்ய வரத குரு ஸ்லோகம்
முக்தோ அர்ச்சிர் தின பூர்வ பக்ஷ ஷடுதங்மாஸாப் தவா தாம் ஸூ மத்
க்லவ் வித்யுத் வருண இந்திர தாத்ரு மஹித சீமாந்த சிந்த்வாப் லுத
ஸ்ரீ வைகுண்டம் உபேத்யே நித்யமஜடம் தஸ்மிந் பர ப்ரஹ்மண
சாயுஜ்யம் சமவாப்ய நந்ததி சமம் தேநைவ தன்ய புமான்–ஸ்ரீ வாத்ஸ்ய வரத குரு ஸ்லோகம் –
அர்ச்சிராதி கதி -விவரணம் -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்து உள்ளார் –
—————————–
பிராப்தி பாதம் –
அனைத்து உலகம் யுடைய அரவிந்த லோசனனைத் தினத்தனையும் விடாள்-பரி பூர்ண ப்ரஹ்ம அனுபவம் –பரம ப்ராப்யம் -சர்வோத்தர ஸ்தானம் -பரம பதம் –
சர்வ பிரகார விசிஷ்ட நாராயணன் ப்ராப்யன்
ஜகத் வியாபார வர்ஜம் / போக மாத்ர சாம்ய லிங்காச்ச –/
முக்தனை ஸ்வ தந்த்ரன் என்கிறது கர்ம வஸ்யம் அல்ல என்றபடி
அத ஏவ ஸ அநந்யா திபதி –4–4–9-
அத்ர அநதிபதி இதை நோக்தம்-கிந்து அநந்யாதி பதிரிதி அத்ராயம் அபிப்ராய ஸ்வாபாவிக சேஷிண
பரம புருஷா தன்யோ நாதிபதி முக்தஸ்ய இதி–ஸ்ருதி பிரகாசர் ஸ்ரீ ஸூக்திகள் –
போக ஸாம்யமே ஐக்கியம் -முக்தனுக்கு ஸ்வ ஸ்வரூப ஆவிர்பாவம் பலம் என்று முதல் அதிகரணத்திலும்
பரமாத்வா உடன் ஆனந்தத்தில் பரம ஸாம்யாபத்தி பலத்தை அந்திம அதிகரணத்திலும் நிரூபிக்கிறார்
அபுநரா வ்ருத்தியை அந்திம ஸூத்ரத்தால் நிரூபிக்கிறார்
மீட்சியின்றி வைகுண்ட மா நகர் / நாரணன் திண் கழல் / அநா வ்ருத்தி சப்தாத் / ஸ கலு ஸ்ருதி / மாம் உபேத்ய ஸ்ம்ருதி வசனம் /
அத்யர்த்த பிரியம் ஞானிநம் லப்த்வா / சேதன லாபம் ஈஸ்வரனுக்கு –
சித்தாந்தம் –
பூர்வ பாபங்களுக்கு விநாசமும்
உத்தர பாபங்களுக்கு அச்லேஷமும்
ப்ரஹ்ம வித்யா பிரபாவத்தாலே நேருவதாக பல உபநிஷத்துக்கள் கூறி இருப்பது அப லபிக்க முடியாதது –
நா புக்தம் ஷீயதே கர்ம –என்ற வசனமும் உக்தமானதே
அது ப்ரஹ்ம வித்துக்கள் அல்லாத சாமான்யர் விஷயமாக ஒதுக்கத் தகும்
ஆகவே பரஸ்பரம் அவிருத்தங்களான வசனங்களேயாம்
நெருப்பு வீட்டைக் கொளுத்தியே தீரும் -என்று ஒருவன் சொல்லுகிறான்
பற்றி ஏற்கிற நெருப்பை தண்ணீர் அணைத்தே தீரும் -என்று மற்று ஒருவன் சொல்லுகிறான்
இவற்றில் பரஸ்பர விரோதம் சிறிது ஏதேனும் உண்டோ
தண்ணீர் இல்லையானால் படர்ந்து எரிகிற நெருப்பு வீட்டை கொளுத்தியே தீரும் -என்றும்
தண்ணீரை இட்டு அணைத்தால் நெருப்பு ஓய்ந்து விடும் என்றும் அர்த்தமாக வில்லையோ
அது போலே
ப்ரஹ்ம வித்யை இல்லாத அளவில் கர்மங்கள் பலனைக் கொடுத்தே தீரும் என்றும்
ப்ரஹ்ம வித்யை உண்டாகில் கருமங்களின் சக்தி பிரதிஹதமாய் விடும் என்றும் எளிதாக அர்த்தம் ஆகும் அன்றோ —
——————————————————————————————–
இனி
நிசாதி கரணத்தைப் பற்றி பேசுவோம்
ஒரே சூத்தரம் கொண்டது இந்த அதிகரணம்
இரவில் இறப்பதற்கு ப்ரஹ்ம பிராப்தி உண்டா இல்லையா என்று விசாரிக்கப் படுகிறது
நிசி மரணத்தைப் பற்றி சாஸ்த்ரங்களில் இழிவாக சொல்லப் பட்டு இருக்கையாலே
பரம புருஷார்த்தமான மோஷமானது சம்பவிக்க மாட்டாது
பகலில் மரணமே சாஸ்த்ரங்களில் பிரசச்தமாக காண்கிறது
நிசா மரணம் இதுக்கு விபரீதமானது
ஸ்பஷ்டமாக சாஸ்திரம் சொல்லி இருப்பதால் அதமகதிக்கே ஹேதுவாகும்
இரவில் இறப்பதற்கு ப்ரஹ்ம பிராப்தி சம்பவிக்க மாட்டாது -இது பூர்வ பஷம்
சித்தாந்தம் –
ப்ரஹ்ம வித்துக்களுக்கு கர்ம சம்பந்தம் தேகம் உள்ள வரைக்குமே யாதலால்
நிசி மரணம் ப்ரஹ்ம வித்துக்களுக்கு பாதகம் ஆகமாட்டாது –
பாக கர்மங்கள்
ஆரப்த கார்யங்கள் என்றும்
அநாரப்த கார்யங்கள் என்றும்
இரு வகைப்படும்
இன்னமும்
பூர்வ பாபங்கள் என்றும்
உத்தர பாபங்கள் என்றும்
இருவகைப்படும்
பலன் கொடுக்கத் தொடக்கி விட்ட கருமங்கள் ஆரப்த கார்யங்கள் -இவையே பிராரப்த கர்மம் எனப்படும்
பலன் கொடுக்கத் தொடங்காத தீ வினைகள் அநாரப்த கார்யங்கள் –சஞ்சித கர்மமும் இதுவே
ப்ரஹ்ம வித்யை சம்பாதிப்பதற்கு முன்னே செய்யப் படும்
பாபங்கள் பூர்வ பாபங்கள்
அதற்க்கு பின்பு புத்தி பூர்வகமான பாபங்கள் நேருவதற்கு பிரசக்தி இல்லாமையாலே
அபுத்தி பூர்வகமாகவும் அகதிகதமாகவும் நெருமாவை உத்தர பாபம்
இவற்றுள்
அநாரப்த கார்யங்களான கர்மங்கள் ப்ரஹ்ம வித்யை சம்பந்தம் உண்டான அன்றே தொலைந்து போயின வாதலாலும்
உத்தர பாபங்கள் ப்ரஹ்ம வித்துக்களின் இடத்தில் ஓட்ட மாட்டா என்று சொல்லப் படுகையாலும்
பிராரப்த கர்மம் ஒன்றே சேஷித்து நிற்கிறது
அக்கர்மம் கர்ம தேகத்தோடு கழியும் ஆதலால் பந்த ஹேது வாக மாட்டாது
ஆகவே ப்ரஹ்ம வித்துக்களுக்கு நிசி மரணம் நேர்ந்தாலும்
பரம புருஷார்த்தமான
ப்ரஹ்ம பிராப்திக்கு குறை இல்லை என்றதாயிற்று
திவா ச சுக்ல பஷ ச -என்று கீழே காட்டின வசனம்
ப்ரஹ்ம வித்துக்கள் அல்லாதார் விஷயம் என்றதாயிற்று-
———————————————————————————————–
இனி
தஷிணாயநாதி கரணம் –
இதிலும் ஒரே சூத்திரம்
நிதி மரணம் அடைந்தாலும் ப்ரஹ்ம பிராப்திக்கு குறை இல்லை என்று
முந்திய அதிகரணத்தில் சொன்ன ஹேது
அந்த ஹேதுவினாலேயே தஷிணாயனத்தில் மரணம் அடைந்ததற்கும் குறை இல்லை என்ற தாயிற்று
ஆனாலும் இதில் அதிகப் படியான சங்கை –
தைத்ரிய உபநிஷத்தில் தஷிணாய னத்தில் மரணம் அடைந்ததற்கு சந்திர பிராப்தி சொல்லப் படுகிறது
சந்திர பிராப்தி பெற்றவர்களுக்கு புனராவ்ருத்தியும் சொல்லப் படுகிறது
பீஷ்மர் முதலான சில ப்ரஹ்ம வித்துக்களும் உத்தராயண ப்ரதீஷை பண்ணினதாகத் தெரிய வருகிறது
இதற்க்கு பரிஹாரம் ஆவது
சந்திர பிராப்தியினால் புநரா வ்ருத்தி எனபது ப்ரஹ்ம வித்துக்கள் அல்லாதார்க்கு ஒழிய
ப்ரஹ்ம வித்துக்களுக்கு அன்று
ப்ரஹ்ம வித்துக்களுக்கு சந்திர பிராப்தி இளைப்பாறும் ஸ்தானம் அத்தனை
ப்ரஹ்ம பிராப்தி அவர்ஜநீயமாகவே தேறும்
பீஷ்மர் மது வித்யா நிஷ்டர்
மது வித்யா ப்ரபாவத்தினால் ஸ்வ சந்த மரணத்வம் உள்ளது
ஆனாலும் உத்தரயாணத்தின் மேன்மையைக் காட்ட வேண்டியும்
அவர் உத்தராயண தீஷிதை பண்ணின அளவில்
தஷிணாயத்தினில் மரணம் அடைந்தவர்களுக்கு ப்ரஹ்ம பிராப்தியில் கண் அழிவு சொல்ல முடியாது
ஆக
இவ்வளவால்
ப்ரஹ்ம வித்துக்களுக்கு
நிசி மரணமோ
கிருஷ்ண பஷ மரணமோ
தஷிணாய மரணமோ
நேர்ந்தாலும் கூட பர புருஷ பிராப்தியில் குறை இல்லை என்றதாயிற்று –
——————————————————————————————–
இனி முடிவான அதிகரணத்தில் –ஜகத் வியாபார வர்ஜ அதிகரணம் –
முக்த புருஷனுக்கு ஜகத் சிருஷ்டியில் அதிகாரம் இல்லை என்பதும்
பரமபதத்தின் நின்றும் மீட்சி இல்லை என்பதும்
இவ் வதிகரணத்தில் தெரிவிக்கப் படுகின்றன –
முக்தன் உடைய ஐஸ்வர்யம் ஜகன் நியமனத்தை தவிர்த்தேயாம்
ஏன் என்னில்
பர ப்ரஹ்மத்தை குறித்துச் சொல்லும் பிரகரணங்களிலேயே
ஜகத் சிருஷ்டி முதலானவற்றை சொல்லி இருக்கிற படியாலும்
அவற்றைச் சொல்லும் பிரகரணங்களிலே ஜீவன் ப்ரஸ்துதம் இல்லாமையாலும் -என்பதாம் –
பூர்வ பஷம் –
முண்டக உபநிஷத்தில் முக்தனுக்கு பர ப்ரஹ்மத்தோடு சாம்யம் ஓதப்படுகிறது –
சாந்தோக்ய உபநிஷத்தில் முக்த புருஷனுக்கு சத்ய சங்கல்பத்வமும் ஒதப் படுகிறது
இவ்விரண்டும் முக்தனுக்கு ஜகத் நியாமகத்வ ரூபமான ஜகத் ஈச்வரத்வம் இருந்தால் ஒழிய பொருந்த மாட்டாது
முக்தனைப் பற்றி ஓதும் இடங்களில்
சர்வ லோக சஞ்சாரமும் காமான் நித்வமும் காம ரூபித்வமும் பொருந்துகின்றன
சர்வ லோக சஞ்சாரம் எனபது -சர்வ லோக நியமனத்தக்கு தானே
அது தவிர மற்ற ஒரு பலனும் தருகின்றது இல்லை யாகையாலே ஜகன் நியமனம் முக்தனுக்கு சித்தித்தே தீரும்
காமான் நித்வாதிகள் சொன்ன போதே லோகங்கள் அவனுக்கு ஆதீனம் எனபது தேறி நிற்கும்
முக்தனுக்கு சர்வ லோக சஞ்சாரம் அங்கு உள்ள போகங்களை அனுபவிக்க தான்
உலகங்களை நியமிக்க இல்லை என்றால்
அதுவும் சொல்ல முடியாது
விகாராச்பதங்கள் ஆகையாலே ஹேயங்களாய் இருக்கும் லோகங்களையும்
அவற்றில் உள்ள பொருள்களையும் போகங்களாக கொள்ள பிரசக்தி இல்லை
அவை ஹேயங்கள் ஆனாலும் பரம புருஷன் விபூதி யாகையாலே அவற்றில் போக்யதா புத்தி சம்பவிக்கலாம் ஆகையாலே
அவற்றை புஜிக்கைகாகவே சஞ்சாரம் பிராப்தம் என்னும் வாதமும் ஒவ்வாது –
சாந்தோக்யத்தில் – ஸ ஸ்வராட் பவதி -என்று ஸ்பஷ்டமாக சொல்லி இருக்கையாலே
முக்தனுக்கு வேறு யாரும் அதிபதி அல்ல
அதனால் பர ப்ரஹ்ம விபூதிகளை அனுபவிக்க சஞ்சாரம் என்பதும் பொருந்தாது
அது நியமன அர்த்தமாக்கத் தான்
ஆகவே முக்தனுக்கு ஜகத் வியாபாரமும் உண்டு -இது பூர்வ பஷம்
இனி சித்தாந்தம் –
யதோ வா இமானி பூதானி ஜாயந்தே -இத்யாதி சுருதியால்
ஜகத் ஸ்ருஷ்ட்யாதி ரூபமான நியாமகத்வத்தை
பர ப்ரஹ்ம லஷணமாக சொல்லி இருக்கையாலே
அது பர ப்ரஹ்மத்துக்கு அசாதாராணம் ஆனது -எனபது விளங்குகிறது
அசாதாராணமான தர்மமே லஷணமாக இருக்க முடியும்
ஆகவே இது முக்தனுக்கு சம்பவிக்க மாட்டாது
மற்றையோர்க்கு நியாமகத்வம் இல்லை என்று ஸ்ருதிகள் ஸ்பஷ்டமாக சொல்லுமே
பரமம் சாம்யம் உபைதி -என்று
வெறும் சாம்யம் இல்லாமல் பரம சாம்யா பத்தி சொல்லி இருக்கையாலே
இவனுக்கு உள்ளது எல்லாம் இவனுக்கும் பிராப்தம் ஆனால் ஒழிய பரம சாம்யா பத்தி வாராது என்னில்
வித்வான் புண்யே பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்ற சொல் செறிவால் கிடைப்பது
வித்யா சாத்தியமான யாதொரு புண்ய பாப விது நனம் உண்டோ அதனால் ஆகும் பலனில் சாம்யம் என்றதாயிற்று
வித்யை எனபது ப்ரஹ்ம பிராப்தி பிரதிபந்தகமான
புண்ணிய பாப கர்மத்துக்கு பிராயச் சித்தம் ஆனது –
ஏவஞ்ச புண்ய பாப கர்ம விதூ நன சாத்திய மான பலன் ப்ரஹ்ம அனுபவமே என்று தேறிற்று
அதில் தான் சாம்யம் விவஷிதம் ஆகும்
முன்னே பரம புருஷ பிரஸ்தாபம் இருக்கையாலே அவனோடு தான் சாம்யம் என்று நிச்சயிக்கப் படுகிறது
இந்த சாம்யத்தில் பாரம்யமாவது ப்ரஹ்ம அனுபவம் செய்யும் இடத்து
தத் குணங்களிலும்
தத் விபூதிகளிலும்
ஏக தேசத்தையும் விடாமல் பூர்த்தியாக அனுபவிப்பதே யாம்
ஆக
சமஸ்த கல்யாண குண விபூதி விசிஷ்ட ப்ரஹ்ம அனுபவத்தில் சாம்யம் -என்னும் இடம் தேறுகிறது
ஆக முக்தனுக்கு பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவம் சித்தித்த போது ஆனந்த சாம்யமும் இந்த ஸ்ருதியினாலே சித்தம்
ஸ ஸ்வராட் பவதி -என்றதும் கர்ம வச்யத்தை இல்லாமையைச் சொல்லிற்று
ஏஷ ஹ்யேவா நந்தயாதி -இத்யாதிகளாலே
முக்தனுடைய சத்தா ஸ்திதி பிரவ்ருதிகள் எல்லாம் பரம புருஷ அதீனம் என்று தேறுகையாலும்
முக்தனுக்கு சத்ய சங்கல்பத்வம் இயற்கையாய் இருந்தாலும்
கருமங்களினால் மறைந்து இருந்த அது
பரம புருஷனுடைய அனுக்ரஹத்தாலேயே ஆவிர்பவிப்பதாக ஒதுகையாலும்
முக்த ஐஸ்வர்யம் முழுவதும் பகவத் இச்சா அதீனமாய் அறுகையால்
பரம புருஷனுடைய அசாதாரண ஜகன் நியமன ரூப ஐஸ்வர்யம் முக்தனுக்கு இல்லை என்று முடிந்தது-
———————————————————————————————-
இப்படி முக்தன் உடைய ஐஸ்வர்யம் பரம புருஷன் அதீனம் ஆகில்
அவன் ஸ்வ தந்த்ரன் ஆகையாலே தன் சங்கல்பத்தாலே
ஒரு சமயம் முக்தனை
பரம பதத்தில் நின்றும் திருப்பி அனுப்ப கூடும் ஆகையாலே
மோஷ புருஷார்த்தமும் அநித்தியமாக வேண்டி வரும் சங்கையில்
அநாவ்ருத்திச் சப்தாத் அநாவ்ருத்திச் சப்தாத்-சரம சூத்தரம் அவதரிக்கிறது
அனந்ய சித்தமான சுருதி வாக்யங்களைக் கொண்டே அறியக் கடவதான பொருளை
சாஸ்திரம் சொன்ன படியே தான் அறிய வேண்டும்
பரம புருஷன் உளன் என்பதை எதை கொண்டு அறிகிறோமே அதே சாஸ்திரம் முக்தர்களுக்கு மீட்சி இல்லை என்பதையும் அறிவிகின்றது
அவனோ ஸ்வ தந்த்ரன்
சாஸ்திரம் மீறியும் கார்யம் செய்ய வல்லவன்
அசக்தன் அல்லன்
அவன் செய்யப் புக்கால் சாஸ்திரம் குறுக்கே நிற்குமோ
ஆழ்வார்கள் ஸ்ரீ ஸூ கத்திகளைக் கொண்டே இங்கும் ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்கிறார்
அவன் ஸ்வ தந்த்ரன் ஆகிலும்
உன்மத்தன் அல்லன்
மூர்க்கன் அல்லன்
அரசிகன் அல்லன்
சத்ய சங்கல்பன் என்று பேர் பெற்றவன்
தன்னுடைய மநோ ரத்தத்துக்கு மாறுபாடாக நடந்து கொள்பவன் அல்லன்
ஒரு சேதனனை பெறுகைக்கு எப்பாடு பட்டான்
எவ்வளவு கிருஷி பண்ணுகிறான்
அவன் சிருஷ்டி பண்ணுவதும் அவதரிப்பதும் சேதனர்களை லபிக்கைக்கு அன்றோ
தவப் பயனாக லபித்த பின்பும் இழப்பனோ –
பரம புருஷம் ஜ்ஞாநினம் லப்த்வா -என்ற ஸ்ரீ ஸூ கதி
யானொட்டி என்னுள் இருத்துவம் என்றிலன்
தானொட்டி வந்து என் தனி நெஞ்சு வஞ்சித்து
ஊனொட்டி நின்று என் உயிருள் கலந்து இயல்
வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே-என்றும்
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் பாரித்து
தான் என்னை முற்றப் பருகினான் கார் ஒக்கும் ‘
காட்கரை அப்பன் கடியனே –
ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்திகள்
யதா–நிகில ஹேய ப்ரத்ய நீக –கல்யாணை கதான–
ஜகஜ் ஜன்மாதிகாரணம் -சமஸ்த வஸ்து விலஷணம் — சர்வஜ்ஞ– சத்யசங்கல்ப –ஆஸ்ரித வாத்சல்யை கஜலதி–
நிரஸ்த சமாப்யதிக –சம்பாவன பரம காருணிக –பர ப்ரஹ்ம அபிதான –பரம புருஷ
நச பரமபுருஷ சத்யசங்கல்ப அத்யர்த்தப்ரியம் ஜஞாநினம் லப்த்வா கதாசிதாவர்த்தயிஷ்யதி
சேதன லாபம் எம்பெருமானுக்கு பரமபுருஷார்தம் அன்றோ
எல்லாம் மிகவும் ஸமஞ்சஸம்
இந்த கடைசி ஸூத்ரத்தை தனி அதிகரணமாக சிலர் கொள்கிறார்கள்
ஸ்ரீ பாஷ்யகாரருக்கு அது திரு உள்ளம் அன்று
இது பூர்வ அதிகரண சேஷமாகவே கொள்ளத் தக்கது
ஆகவே
ஸர்வ ஸ்வாமியான பரம புருஷனுக்கு அசாதாரண சிஹ்ன மான
ஜகத் காரணத்வம்
மோக்ஷ ப்ரதத்வம்
ஸ்ரீ யபதித்தவம்
சேஷ ஸாயித்த்வம்
முதலியவற்றுடன்
ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தைகளிலும்
ஸர்வ வித கைங்கர்யமே முக்தனுக்கு உரியது
என்று இந்த அதிகரணத்தின் அர்த்தம் நிலை பெற்றது
இந்த திவ்யார்த்த சௌரபத்தோடு ஸ்ரீ பாஷ்யம் தலைக் கட்டி அருளுகிறார் –
—————————————————————————-—————————————————————————————————————————-—————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply