மஹர்ஷி கபிலாசார்யா க்ருதஜ்ஞோ மேதிநீ பதி
த்ரிபதஸ் த்ரிதசாத்யஷோ மகாஸ்ருங்க க்ருதாந்தக்ருத் –57-
இந்த ஐம்பத்தேழாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
534-மஹர்ஶி: 535-கபிலாசார்ய:, 536. க்ருதக்ஞ:, 537. மேதினீபதி: |
538. த்ரிபத:, 539. த்ரிதஶாத்யக்ஷ:, 540- மஹாஶ்ருங்க:, 541. க்ருதாந்தக்ருத் ||
பகவான் மகரிஷி, ஏனென்றால், கபில முனிவரின் அவதாரத்தில், அவர் மூன்று வேதங்களையும் உள்ளுணர்வு உணர்வால் உணர்ந்தார். கபில முனிவர் தனது பளபளப்புடன், எரியும் மற்றும் புகையற்ற தீக்குச்சியைப் போல, ஞானத்தின் (அறிவின்) உருவகமாக இருந்தார், இது அவரது குறைபாடற்ற பண்புகளைக் குறிக்கிறது. கிருதம் என்பது அவர் உருவாக்கிய உலகம், ஜ்ஞா என்றால் உலகத்தை அறிந்தவர், அவர் கிருதஜ்ஞா, ஏனென்றால் அவர் உலகமும் அதை அறிந்தவர். அவர் உலகின் இறைவன் (மற்றும் பாதுகாவலர்) ஆவார். அவர் மூன்று தத்துவங்களால் (பிரதானம், புருஷன் மற்றும் பரமாத்மா) முன்வைக்கப்பட்டவர். அவர் தனது மூன்று மாபெரும் முன்னேற்றங்களால் மூன்று உலகங்களையும் வென்றார். விழிப்பு, உறக்கம், கனவு ஆகிய மூன்று நிலைகளுக்கும் அதிபதியாக பகவான் இருக்கிறார். அவர் தனது மத்ஸ்ய மற்றும் வராஹ அவதாரங்களில் தனது பெரிய கொம்பினால் பூமியைப் பாதுகாத்தார்.
மஹர்ஷி: கபிலாசார்ய: — வேதங்கள் அனைத்தையும் முழுவதும் உணர்ந்து தூய ஆத்ம ஞானத்தையே உபதேசித்த கபில மஹர்ஷி என்னும் ஆசார்யர்
க்ருதக்ஞ: — தம் ஆத்மாவைப் போல் பிறரையும் உணர்வதால் சினம் போன்று தோன்றினும் அருளே நிறைந்தவர்
மேதிநீபதி: — கபிலரின் உருவில் பூமியைக் காப்பாற்றும் அருள்வடிவம் அவர்
த்ரிபத: – சித் அசித் ஈச்வரன் என்று தத்வத்ரயமாகத் தாம் ஆனவர்; பிரணவத்தின் மூன்று எழுத்துக்கள் ஆனவர்
த்ரிதசாத்யக்ஷ: — முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்ப்பவர்; மூன்று அவஸ்தைகளிலும் நிலைத்தவர்
மஹாச்ருங்க: — உலகத்தைத் தன் ஒரு கோட்டிடைக் கொண்டு காத்த கோலவராகர்
க்ருதாந்தக்ருத் — அழிவையும் அழித்த அழகு வராகர்
(வேதங்களை மொத்தமாக அறிந்து வைத்திருக்கும்) முனிவர்களில் முதல்வன் {மஹர்ஷி},
ஆசான் கபிலராக இருப்பவன் {கபிலாசார்யன்},
அண்டத்தை அறிந்தவன் {க்ருதஜ்ஞன்},
பூமியை ஆள்பவன் {மேதிநீபதி},
மூன்று பாதங்களைக் கொண்டவன் {த்ரிபதன்},
தேவர்களைப் பாதுகாப்பவன் {த்ரிதசாத்யக்ஷன்},
(அண்டப் பேரழிவின் போது, மனுவின் படகைத் தன் கொம்புகளில் கட்டி இழுத்துச்சென்ற மீன் வடிவில் இருந்த போது)
பெரும் கொம்புகளைக் கொண்டவன் {மஹாஸ்ருங்கன்},
செயல்பட்டவர்களை இன்பத்தை அனுபவிக்கவோ, துன்பத்தைத் தாங்கிக் கொள்ளவோ செய்து செயல்களைத் தீர்ப்பவன் {க்ருதாந்தக்ருத்};(70)
ஸ்ரீ கபில அவதாரம் –
534-மஹர்ஷி -அனைத்து வேதங்களையும் நேராக அறிந்த கபில மூர்த்தியானவர் –
535-கபிலாசார்ய-கபிலாசார்யராக இருந்து சாங்க்ய முறைப்படி தத்தவங்களை விளக்கியவர் –
537-மேதிநீபதி -கபிலராக உலகத்தையே தாங்கியபடியால் பூமிக்குத் தலைவர் –
538-த்ரிபத -அனுபவிக்கப் படும் பொருளான அசித் -அனுபவிப்பவனான ஜீவன் –
இரண்டையும் ஆணை இடுபவரான பகவான் ஆகிய மூன்று தத்வங்களையும் அறிபவர்
ஸ்ரீ வராஹ அவதாரம் –
539-த்ரித ஸாத் யாஷ -பிரளய ஆபத்தில் இருந்து முப்பத்து மூன்று தேவர்களையும் வராஹ உருவத்தில் ரஷித்து அருளிய ஸ்வாமி-
540-மஹா ஸ்ருங்கா -உலகமே சிறு பொருளாக ஒட்டிக் கொள்ளும்படி பெரும் கோரைப் பல்லை -தந்தத்தை உடையவர் –
541-க்ருதாந்தக்ருத் -யமனைப் போன்ற ஹிரண்யாஷனை ஒழித்தவர்-
3-34–ஸ்ரீ கபில அவதாரமாய் ரஷணம் -529-538 திருநாமங்கள் –9-திரு நாமங்கள்
3-35-வராஹ அவதார -539-543-திரு நாமங்கள்–4-திரு நாமங்கள்-
534-மஹர்ஷி பெரிய ஞானி-மந்த்ர த்ருஷ்டா ரிஷி –மஹர்ஷி-வேதங்களை ஞான த்ருஷ்டியால் கண்டவர் – தேவ பூதி கபிலர் ஸம்வாதம்
யதோ₂க்த வேத₃த₃ர்ஶநாத்
மஹர்ஷி꞉–
கபில மூர்தி꞉ । ஸ்ருதீ ருகாத்யா வக்த்ரேப்ய ப்ரோத் கிரந்தமதா ஸ்மரேத்–கபில த்யான ஸ்லோகம்
ருக் முதலிய மூன்று வேதங்களையும் தனது வாய் மொழியால் உரைப்பவனை எப்போதும் த்யானிக்கக் கடவன்
ருஷிம் ப்ர ஸூதம் கபிலம் மஹாந்தம் –ஸ்வேதாஸ்வரம் -5-2-
கபிலர் பிறப்பிலேயே -ரிஷியாக -தத்வ தர்சியாக -இருந்தார்-ஸஹஜ பக்தர் ஆழ்வார் போல்
சாங்க்யஸ்ய வக்தா கபில பரமர்ஷி ச உச்யதே
அவரே சாங்க்ய தர்சன ப்ரவர்த்தகர் -மஹ ரிஷி என்று போற்றப்படுபவர்
சகர மன்னர் பிள்ளைகள் தேடிப் போன கபிலர்
நிரீஸ்வர -ப்ரஹ்ம ஸூத்ர கபிலர்-சாங்க்ய மத ப்ரவர்த்தகர் –
தேவபூதைக்கு உபதேசம் கபிலர் -ஸ ஈஸ்வர கபிலர்
ஜெபா குசும்பம் – செம்பருத்தி பூ ஸ்படிக மணி சம்பந்தம் போல் பிரகிருதி புருஷ சம்பந்தம்
தன்மைகள் ஏறிடப்படுகிறது என்று அறிந்து விவேக ஞானம் வர வேண்டும்
புருஷ ப்ரக்ருதி -தன்னைப் போல் ஆக்கும்-வாசி அறிந்து -விவேகம் வந்தாலே மோக்ஷம் –
நாமோ இது வந்தால் பக்தி வரும் அது வளர்ந்து மோக்ஷம்
நொண்டி கண் பார்வை இல்லாதவன் -கர்ம ஞானம் -சேர்ந்து மோக்ஷம் –
மேல் இருப்பவனுக்கு கர்மா இல்லையா -பார்ப்பதே கர்மம் தான்
கீழ் உள்ளவன் இடது பக்கம் போக ஞானம் வேண்டுமே
ப்ரஹ்ம ஸூத்ரம் விளக்கும்
அங்கம் ஆறும் வேத நான்கும் ஆகி நின்று அவற்றுள்ளே தங்கு கின்ற தன்மையான் -திருச் சந்த -15
ருஷி பிர ஸூதம் கபிலம் மஹாந்தம்
மெய் ஞான வேதியன் -3-1-11-
வேத வேதாந்த தர்ச -மந்த்ர த்ருஷ்டா -வேதங்கள் அனைத்தையும் நேராகக் கண்ட கபில மகரிஷி –ஸ்ரீ பராசர பட்டர் –
ரிஷி மெய்ஞ்ஞான வேதியன் -வேதம் அளித்தவன் -வேத ப்ரதிபாத்யன்
ப்ரக்ருதி புருஷவிவேகம் அளித்தவன்
பண்ணலார் பயிலும் பரமன்
ஊற்றமுடையாய் பெரியாய்
வேத ஒலி அறாத
தெருள் கொள் திரு நான்மறை மலி –செய்த வேள்வியர் -மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு
மகரிஷி -கபிலாசார்யா -என்று ஒரே திரு நாமம் -வேதத்தைப் பார்த்தவரான கபிலாசார்யராக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
சிறந்த ரிஷி -சம்சார நடுக்கத்தை அழிப்பவர்-பிரமனையும் ருத்ரனையும் சீராட்டுபவர் –
மஹர்ஷி கபிலாசார்யா -ஒரே திரு நாமம் — ஸ்ரீ சத்ய சந்தர் –
————-
ஓம் மஹர்ஶயே கபிலாச்சார்யாய நம:
‘மஹர்ஶி கபிலாச்சார்ய:’ என்ற இந்த பதம்
ஸவிஶேஶணம் பகவானை (பகவானின் ஸ்ரீகபிலாவதாரத்தை) தனித்துக் குறிப்பதான
ஏகம் நாம: ஒரே திருநாமமாகும்.
மஹாம்ஸ்சாஸாவ்ருஶிஸ்சேதி எவரொருவர் மிகச்சிறந்தவராகவும் (மஹான்) முனிவராகவும் (ரிஷி) உள்ளாரோ
மஹர்ஶி: அவரை ‘மஹரிஷி’ என்று அழைப்பர்.
க்ருத்ஸனஸ்ய முழுமையாக (பூரணமாக)
வேதஸ்ய தர்ஶனாத் வேதத்தை உணர்ந்ததால் (உணர்ந்ததாலும் அவர்கள் மஹரிஷிகள் என்று அழைக்கப்படுவர்).
அன்யே து வேதைகதேஶ (அவ்வாறு முழுமையாக வேதங்களை அறியாது) வேதத்தின் ஒரு பகுதியை மட்டும் அறிந்தோரை
ரிஶய: ரிஷிகள் என்று மட்டும் அழைப்பர்.
கபிலஸ்சாஸௌ ‘கபிலர்’ என்ற பெயருடனும்
ஸாங்க்யஸ்ய ஶுத்ததத்வ ‘ஸாங்க்யம்’ எனும் தூய்மையான தத்துவத்தை
விஞ்ஞானஸ்ய அறிந்தவரும்
ஆச்சார்யஸ்சேதி (அதனால்) ஆசார்யருமான
கபிலாசார்ய: பகவான் ‘கபிலாசார்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் ‘கபிலர்’ என்ற பெயருடன் ஸாங்க்ய தத்துவ ஆச்சார்யராக விளங்கினார். வேதத்தை, ஒரு பகுதியை மட்டும் பயிலாது, முழுமையாக உணர்ந்ததனாலும், மிகச்சிறந்தவரானதாலும் ‘மஹர்ஶி’ என்ற அடைமொழியுடன் பகவான் ‘மஹர்ஶி கபிலச்சார்யர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். இது பகவானை தனித்துக் குறிப்பதான திருநாமமாகும்.
‘ஶுத்தாத்மதத்வவிஞ்ஞானம் ஸாங்க்யமித்யபிதீயதே |’
தூய்மையான ஆத்ம தத்துவத்தை விளக்கும் அறிவிற்கு ஸாங்க்யம் என்று பெயர்.
இதி ஸ்ம்ருதே | இவ்வாறு ஸ்ம்ருதிகள் கூறுகின்றன.
‘ரிஶி ப்ரஸூதம் கபிலம்’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 5.2)
ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ரிஷியாகப் பிறந்த கபிலர்…
இதி ஶ்ருதேஸ்ச | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
‘ஸித்தானாம் கபில முனி:’ (ஸ்ரீமத் பகவத்கீதை 10.26)
ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: சித்தர்களில் (நான்) கபில முனி
இதி ஸ்ம்ருதேஶ்ச | இவ்வாறு (ஸ்ரீமத் பகவத்கீதை) போன்ற ஸ்ம்ருதிகளிலும் கூறப்பட்டுள்ளது.
கபிலாவதார சுருக்கம்: பகவான் கர்த்தம ப்ரஜாபதிக்கும், ஸ்வயம்புவ மனுவின் மகளான தேவஹூதிக்கும் மகனாக ‘கபிலர்’ என்ற பெயருடன் தோன்றினார். தனது தாயாரான தேவஹூதிக்கு ‘ஸாங்க்ய’ யோகத்தை விளக்கினார். பகவான் கபிலாவதாரமும், அவரது போதனைகளும், அவர் பரப்பிய ஸாங்க்ய யோகமும் பாகவதம் மூன்றாவது ஸ்கந்தம் அத்யாயம் 21ல் இருந்து, அத்யாயம் 33 வரை விவரிக்கப்பட்டுள்ளது.
——–
- பெரிய பார்ப்பனர்
ஸ்ரீ ஆதிசங்கரர் மகரிஷி கபிலாச்சார்யாவை ஒரே நாமமாக எடுத்துக்கொள்கிறார். இதை அவர் ‘மஹர்ஷி கபிலாச்சார்யா இதி சவிஷேணம் ஏகம் நம – இது மகரிஷி என்ற பெயரடையில் கட்டப்பட்ட ஒரே நாம கபிலாச்சார்யா’ என்று விளக்குகிறார். மகரிஷி என்ற சொல்லுக்கு ‘மஹான் சாஸௌ ரிஷிஷ்ச மகரிஷி – அவர் ஒரு சிறந்த ஞானி’ என்று பொருள் கொள்ள வேண்டும். ஒரு சாதாரண ரிஷி வேதங்களின் சில பிரிவுகளில் மட்டுமே நிபுணத்துவம் பெற்றவர், ஆனால் ஒரு மகரிஷி முழு வேதத்திலும் தேர்ச்சி பெற்றவர். ஆச்சார்யா ஒரு சிறந்த ஆசிரியர் மற்றும் கபில சாங்கிய தத்துவம் பற்றிய சிறந்த உரையை எழுதியவர் என்பதால் கபிலா ஆச்சார்யா என்று அழைக்கப்படுகிறார். மொத்தத்தில் இந்த பெயர் பகவானின் தோற்றத்தை பெரிய ரிஷியாகவும், சிறந்த ஆசான் கபிலராகவும் குறிக்கிறது.
இதற்கு ஆதரவாக ஸ்ரீ ஆதிசங்கரர் பின்வரும் நூல்களை மேற்கோள் காட்டுகிறார். முதலாவது ‘சுத்தஆத்மவிஜ்ஞானம் சாங்க்யம் இதி அபிதீயதே – சுயத்தைப் பற்றிய தூய்மையான அறிவு சாங்க்யா’ எனப்படும். இரண்டாவது (ஸ்வேதாஸ்வதார உபநிஷத் 5.2) “ரிஷிம் ப்ரசூதம் கபிலம் – கபில முனிவர் பிறந்தார்.
பகவான் மகரிஷி, ஏனெனில், கபிலராக அவதாரத்தில், அவர் மூன்று வேதங்களையும் உள்ளுணர்வு மூலம் உணர்ந்தார் (ரிஷிர்-தர்சன்அத் -நிரு. 2.11 – சத்யதேவோ வசிஷ்ட). அவர் அனைத்து வேதங்களையும் இடைவேளையின்றி உச்சரிப்பதில் பெயர் பெற்றவர் – ஸ்ருதி ரிக் அத்யாஹ் வக்த்ரேப்யஹ் ப்ரோத்கிரந்தம் அத ஸ்மரேத்.
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வேதாஷ்வதார உபநிஷத் 5.2 – ரிஷிம் ப்ரசூதம் கபிலம் மஹாந்தம் – கபிலரைக் குறிப்பிடுகிறார். அவர் சாங்கிய அமைப்பை முன்வைத்ததற்காக ஒரு மகரிஷியும் ஆவார் – ஸாங்க்யஸ்ய வக்தா கபிலஹ பரமர்ஷி ச உச்யதே .
ஸ்ரீ சங்கரரைப் போலவே ஸ்வாமி சிமைஆனந்தா, மகரிஷி கபிலாச்சார்யா என்று இரண்டு நாமங்களையும் ஒருங்கே எடுத்து, முழு வேதங்களிலும் தேர்ச்சி பெற்று, சாங்கிய தத்துவத்தை முன்வைத்த ஆசான் கபிலராகவும், மகா முனிவராகவும் விளங்கியவர் அவர் என்று விளக்குகிறார்.
535-கபிலாசார்ய-கபில நிறம் உடையவன் -brown -கையில் சங்கு ஜெப மணி மாலை
இந்த நிற பசு தான் விஸ்வரூபத்துக்கு வேண்டும் என்பர்
கபிலஶ் ச ஸாவாசார்யஶ் சேதி
கபிலாசார்ய: ।
“கப்ரு வர்ணே ” கபே ꞉ பஶ்ச இதீலச் ப்ரத்யய꞉ பகாரஶ் சாந்தா தே ₃ஶ꞉ ।
நிர் தூமம் அங்கார வர்ணாபம் சங்க பத்மாஷ ஸூத்ரினாம்-த்யான ஸ்லோகம்
யார் புகையற்ற நெருப்பு போன்று பிரகாசத்துடன் உள்ளாரோ
யார் தனது கையில் சங்கம் பத்மம் போன்ற ஜப மணி மாலைகளை வைத்துள்ளாரோ
ஸ்வ தத்த்வ ஸம்விதா ₃சயநாதா ₃சார்ய꞉
சம்வித் பிரகாச நாய –மந்தர வர்ணயம்-
யார் தனது சாங்க்யத்தை ப்ரகாஸம் அடையச் செய்தாரோ
சாங்க்ய தத்வம் வெளி இட்டு அருளி-இரண்டையும் பிரித்து அறிந்தால் தத்வ த்ரயம் அறிய முடியுமே
கபிலர் என்னும் ஆச்சார்யராக இருப்பவர்–ஸ்ரீ பராசர பட்டர் –
சங்கம் பத்ம அஷி தாமரை மணி மாலை
வித்யைக்கு சங்கம் -ஸ்பரிசத்தால் ஞானம் அளிக்கும்
————-
ஓம் மஹர்ஶயே கபிலாச்சார்யாய நம:
‘மஹர்ஶி கபிலாச்சார்ய:’ என்ற இந்த பதம்
ஸவிஶேஶணம் பகவானை (பகவானின் ஸ்ரீகபிலாவதாரத்தை) தனித்துக் குறிப்பதான
ஏகம் நாம: ஒரே திருநாமமாகும்.
மஹாம்ஸ்சாஸாவ்ருஶிஸ்சேதி எவரொருவர் மிகச்சிறந்தவராகவும் (மஹான்) முனிவராகவும் (ரிஷி) உள்ளாரோ
மஹர்ஶி: அவரை ‘மஹரிஷி’ என்று அழைப்பர்.
க்ருத்ஸனஸ்ய முழுமையாக (பூரணமாக)
வேதஸ்ய தர்ஶனாத் வேதத்தை உணர்ந்ததால் (உணர்ந்ததாலும் அவர்கள் மஹரிஷிகள் என்று அழைக்கப்படுவர்).
அன்யே து வேதைகதேஶ (அவ்வாறு முழுமையாக வேதங்களை அறியாது) வேதத்தின் ஒரு பகுதியை மட்டும் அறிந்தோரை
ரிஶய: ரிஷிகள் என்று மட்டும் அழைப்பர்.
கபிலஸ்சாஸௌ ‘கபிலர்’ என்ற பெயருடனும்
ஸாங்க்யஸ்ய ஶுத்ததத்வ ‘ஸாங்க்யம்’ எனும் தூய்மையான தத்துவத்தை
விஞ்ஞானஸ்ய அறிந்தவரும்
ஆச்சார்யஸ்சேதி (அதனால்) ஆசார்யருமான
கபிலாசார்ய: பகவான் ‘கபிலாசார்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் ‘கபிலர்’ என்ற பெயருடன் ஸாங்க்ய தத்துவ ஆச்சார்யராக விளங்கினார். வேதத்தை, ஒரு பகுதியை மட்டும் பயிலாது, முழுமையாக உணர்ந்ததனாலும், மிகச்சிறந்தவரானதாலும் ‘மஹர்ஶி’ என்ற அடைமொழியுடன் பகவான் ‘மஹர்ஶி கபிலச்சார்யர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். இது பகவானை தனித்துக் குறிப்பதான திருநாமமாகும்.
‘ஶுத்தாத்மதத்வவிஞ்ஞானம் ஸாங்க்யமித்யபிதீயதே |’
தூய்மையான ஆத்ம தத்துவத்தை விளக்கும் அறிவிற்கு ஸாங்க்யம் என்று பெயர்.
இதி ஸ்ம்ருதே | இவ்வாறு ஸ்ம்ருதிகள் கூறுகின்றன.
‘ரிஶி ப்ரஸூதம் கபிலம்’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 5.2)
ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ரிஷியாகப் பிறந்த கபிலர்…
இதி ஶ்ருதேஸ்ச | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
‘ஸித்தானாம் கபில முனி:’ (ஸ்ரீமத் பகவத்கீதை 10.26)
ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: சித்தர்களில் (நான்) கபில முனி
இதி ஸ்ம்ருதேஶ்ச | இவ்வாறு (ஸ்ரீமத் பகவத்கீதை) போன்ற ஸ்ம்ருதிகளிலும் கூறப்பட்டுள்ளது.
கபிலாவதார சுருக்கம்: பகவான் கர்த்தம ப்ரஜாபதிக்கும், ஸ்வயம்புவ மனுவின் மகளான தேவஹூதிக்கும் மகனாக ‘கபிலர்’ என்ற பெயருடன் தோன்றினார். தனது தாயாரான தேவஹூதிக்கு ‘ஸாங்க்ய’ யோகத்தை விளக்கினார். பகவான் கபிலாவதாரமும், அவரது போதனைகளும், அவர் பரப்பிய ஸாங்க்ய யோகமும் பாகவதம் மூன்றாவது ஸ்கந்தம் அத்யாயம் 21ல் இருந்து, அத்யாயம் 33 வரை விவரிக்கப்பட்டுள்ளது.
——–
- கபிலாச்சார்யா – அவர் பழுப்பு நிறம் மற்றும் ஒரு ஆச்சார்யா
ஸ்ரீ பராசர பட்டர் கூறுகிறார் கபிலாஷ்சாஸௌ ஆச்சார்யஶ்ச இதி கபிலாச்சார்யஹ் – கபிலம் என்பது மரத்தின் உட்புற நிறத்தைக் குறிக்கிறது; கபில முனிவரின் பெயர் அவரது நிறத்தைக் குறிக்கிறது, இது புகையற்ற நெருப்பைப் போன்றது. அவரை தியானிக்க மந்திரம் “நிர்துமாங்கார வர்ணாபம் சங்க பத்மாக்ஷ சூத்ரிணாம்” – எரியும் மற்றும் புகையற்ற எரிக்கரின் பளபளப்பைக் கொண்டவர், கையில் சங்கு மற்றும் பத்ம மணிகள் கொண்டவர். கபில ஆச்சார்யா, எரியும் மற்றும் புகையற்ற தீக்குழம்பு போன்ற அவரது பொலிவுடன், ஞானத்தின் (அறிவின்) உருவகமாக இருந்தார், மேலும் இந்த நாமம் அவரது குறைபாடற்ற பண்புகளைக் குறிக்கிறது. இந்த பண்பைக் குறிப்பிடும் மந்திரம் “சம்வித் பிரகாசனாயா” – அறிவைப் பரப்புபவர்.
536-க்ருதஜ்ஞ- நன்மை அறிந்தவன் –க்ருதம் த்யானாதி -செய்தவற்றை நினைப்பவன்
ஸாபராத₄ஸாக₃ரா பத்யே (அ)ப்யம்ஶுமதி ஸ்வாமிநம் ரத்வ ஸுக்ருதமேவ ஜ்ஞாதவா நிதி
க்ருதஜ்ஞ꞉
கிஞ்சித் செய்தாலும் மறக்காமல் சக்ரவர்த்தி திரு மகன்
அபராதங்கள் பல செய்தாலும் மறப்பவன்
கபிலமுப கம்ய பக்திநம் ரஸ்ததா துஷ்டாவ ச சைவம் பகவாநாஹ-
அம்சுமான் கபிலரை வணங்கி ஸ்துதிக்க
அவர் உரைக்க தொடங்கினார்
கபிலமம் உபக₃ம்ய ப₄க்திநம் ரஸ்ததா ₃
துஷ்டாவ ஸ ஸைநம் ப₄க₃வாநாஹ வரம் வ்ருஷ்ணிவ -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
வேண்டிய வரம் கேட்ப்பாயாக என்று அம்சுமான் இடம் உரைத்தார்
இஷ்வாகு வம்ச சகரன்-கரம் விஷம் சகரம் விஷத்துடன் பிறந்த அரசர் -அஸ்வ மேத யாகம் -பிள்ளைகள் 60000 பேர் -குதிரையை
கபிலர் ஆஸ்ரமத்தில் கண்டு -எரிக்கப் பட்டனர் –சாம்பல் ஆனார்கள்-சகர மன்னர் பிள்ளைகள் தோண்டி தேடியதால் சாகரம் பெயர்
அம்சுமான் கபிலரை வணங்கி -60000 பேர் செய்த அபராதங்கள் மறந்து வரம் தந்த அந்த ஸூஹ்ருதம் வணக்கத்தையே கண்டு அருள் புரிந்தார் கபிலர்-குதிரையைக் கொடுத்தார்
இவர்கள் பிழைக்க கங்கையை வரவழைக்க வேண்டும் என்றார்
அவன் பிள்ளை திலீபன்- அவர் பிள்ளை பகீரதன் -ஹரித்வார் ப்ரஹ்ம காடில் தபம் செய்து-கங்கையைக் கொண்டு வந்த வ்ருத்தாந்தம்
தெளிவுற்று வீவின்றி நின்று அவர்க்கு இன்பக் கதி செய்யும் கண்ணன் -7-5-11-
சகர புத்ரர்கள் அபராதம் செய்திருப்பினும் அம்சுமான் தன்னை வணங்கிய நல்வினையை
மட்டுமே அறிந்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
கார்யமான உலகமாகவும் ஆத்மாவாகவும் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
பக்தர்கள் செய்பவைகளை அறிபவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
————–
532. ஓம் க்ருதஜ்ஞாய நம:
க்ருதம் கார்யம் ஜகத் ‘க்ருத’ அதாவது காரியமான (விளைவான) இந்தப் ப்ரபஞ்சத்தை
ஞ ஆத்மா ‘ஞ’ ஆத்மாவை குறிக்கும்
க்ருதம் ச காரியமான இந்தப் ப்ரபஞ்சமாகவும்
தஜ் ஞஸ்சேதி ஆத்மாவாகவும் இருப்பதனால்
க்ருதஜ்ஞ: பகவான் ‘க்ருதஜ்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் காரிய வடிவான இந்தப் ப்ரபஞ்சமாகவும் (க்ருத), அந்தப் ப்ரபஞ்சத்தை அறியும் ஆத்மாவாகவும் (ஞ) இருப்பதனால் ‘க்ருதஜ்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———
- கிருதஜ்ஞா – அவர் படைப்பவர் மற்றும் படைக்கப்பட்டவர்
நாம 83 என்று முன்பு ஏற்பட்ட இந்தப் பெயரை நாம் முன்பே பார்த்தோம். கிருதா, ஜ்ஞா என்ற இரண்டு சொற்களின் கலவையாக இதைப் பார்ப்பதுதான் இங்கு கொடுக்கப்பட்ட பொருள். ஸ்ரீ ஆதிசங்கரர் இதை ‘கிருதம் காரியம் ஜகத், ஜ்ஞா ஆத்மா, கிருதம் ச தத் ஜ்ஞா ச இதி கிருதஜ்ஞா – கிருதம் என்பது அவர் படைத்த உலகம், ஜ்ஞா என்றால் உலகத்தை அறிந்தவர், அவர் கிருதஜ்ஞர், ஏனெனில் அவர் உலகமும் அதை அறிந்தவர். ‘. உலகமே ஜடமானது மற்றும் உணர்வு இல்லை. உலகை உணர்ந்து அறியும் ஒரு யுனிவர்சல் நனவு உள்ளது. பகவான் இரண்டும் இணைந்தவர் அவர் பிரகிருதி மற்றும் புருஷன். அவனே படைப்பவனும் படைக்கப்பட்டவனும் ஆவான்.
ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர் விளக்கம் தருகிறார் – கிருதம் ஜானாதி இதி க்ருதஜ்ஞா – தனது படைப்பைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் துல்லியமாக அறிந்தவர். அவர் படைத்த அனைத்தையும் ஏன், எப்போது, எப்படி, எங்கே, என்ன, மற்றும் துல்லியமாக எவ்வளவு காலம் என்று அவர் அறிவார்.
ஸ்வாமி சின்மயாநந்தா இதைப் படைத்தவர் மற்றும் படைக்கப்பட்டவர் என்று பொருள்படும்.
ஸ்ரீ பராசர பட்டர் இந்த நாமத்தை சுக்ருதமேவ ஜ்ஞாதவான் இதி கிருதஜ்ஞா – செய்த நற்செயல்களை நினைவு செய்பவர் என்று விளக்குகிறார். இச்சூழலில் ஸ்ரீ பட்டர், இக்ஷ்வாகு இனத்தைச் சேர்ந்த சாகர மன்னனின் மகன்கள் மற்றும் பேரனுடன் கபில முனிவர் சந்தித்ததைக் குறிப்பிடுகிறார்.
கிருதஜ்னா, இந்த சூழலில், அவர் செய்த நல்ல செயல்களை நினைவில் கொள்கிறார்.
537-மேதிநீ பதி – பூமிக்கு அதிபதி –
யஸ்யேயம் வஸூதா சர்வா வாஸூ தேவஸ்ய தீமத கபிலம் ரூபமாஸ்தாய தாரயத் யநிசம் தராம் –
இந்த உலகங்கள் அனைத்தும் சர்வஞ்ஞான எந்த வாஸூ தேவருக்கு உடைமையாக உள்ளனவோ
அவனே கபில ரூபம் அடைந்து இந்த உலகங்களைத் தரிக்கிறான் என்பதால் இந்தத்தொரு நாமம்
பெரிய வப்பன் -அமரர் அப்பன் உலகுக்கு ஓர் தனி அப்பன் -8-1-11-
பூமிக்கு நாதர் -இந்தப் பூமி முழுதும் எந்த வாசு தேவருடையதோ அவரே கபில மூர்த்தியாய் பூமியை எக்காலமும்
தாங்கிக் கொண்டு இருக்கிறார் –ஸ்ரீ பராசர பட்டர் –
பூமிக்கு நாதர் –ஸ்ரீ சங்கரர் –
பூமிக்குப் பதி– ஸ்ரீ சத்ய சந்தர் –
————–
ஓம் மேதினீபதயே நம:
மேதின்யா பூம்யா: ‘மேதினி’ என்றால் பூமியைக் குறிக்கும்
பதி: பூமாதேவியின் (நிலமகளின்) கணவராதால்
மேதினீபதி: பகவான் ‘மேதினீபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மேதினி என்றழைக்கப்படும் பூமாதேவியின் (நிலமகளின்) கணவராதால் பகவான் ‘மேதினீபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
- பதி – பூமியின் இறைவன் (அல்லது பாதுகாவலர்).
ஸ்ரீ ஆதிசங்கரர் இதை ‘மேதின்யா பூமியாஹ் பதிஹ் மேதிநீபதிஹ் – அவர் பூமியின் இறைவன்’ என்று விளக்குகிறார். உலகைப் படைத்து, அதன் பராமரிப்பிற்கான உரிமையையும் முழுப்பொறுப்பையும் பகவான் தொடர்ந்து சுமக்கிறார், எனவே அவர் மெதினீபதி ஆவார்.
இந்த நாமம் மஹி பர்தாவைப் போலவே உள்ளது, இது நாம் முன்பு படித்தது (நாமா 184).
படைப்பின் போது, பூமி தண்ணீருக்கு அடியில் மூழ்கியபோது, பிரம்மாவின் வேண்டுகோளின்படி, பகவான் வராஹ அவதாரமாக, பூமியை மீட்டு அதை ஆதரித்தார்.
ஸ்ரீமத் ராமாயணத்தில் இது கூறுகிறது:
யஸ்யேயம் வசுதா சர்வ வாசுதேவஸ்ய தீமதஹ் |
மஹிஷிஹ் மாதவஸ்ய ச ஏஷா ச ஏவ பகவான் ப்ரபுஹ்|| (பால காண்டம் 1.40.2)
கபிலம் ரூபம்அஸ்தாய தாரயத்யநிஷம் தாரம் |
தஸ்ய கோபகினா தக்தா பவிஷ்யந்தி ந்ருபத்மஜா || (பால காண்டம் 1.40.3) இந்த அன்னை பூமி முழுவதுமாக யாருக்கு உரியதோ, அவனே அந்த பூர்வபுண்ணிய வாசுதேவா, அவள் அந்த மாதவனின் மனைவியும், அந்த விஷ்ணுவும் அன்னை பூமிக்கு நித்தியமாக முட்டுக்கட்டை போடுகிறாள். எனவே, அந்த மரியாதைக்குரிய விஷ்ணு, கபில முனிவரின் சாயலை அணிந்து, சாகர சக்கரவர்த்தியின் மகன்களை கோபத்தின் தீயில் எரித்து சாம்பலாக்குவார்.
பெரிய அப்பனைப் பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை, முனிவர்க்
குரிய அப்பனை அமரர் அப்பனை உலகுக்கோர் தனியப்பன் தன்னை,
பெரியவண் குருகூர் வஞ்சட கோபன் பேணின ஆயிரத் துள்ளும்,
உரியசொந்த மாலை இவை–(8.1.11):
அவர் பெரிய தந்தை, பிரம்மாவின் தந்தை, ருத்ர தந்தை, முனிவரின் தந்தை, கடவுள்களின் தந்தை மற்றும் உலகின் ஒரே தந்தை, பக்தர்களே, ஆழ்வார் பாடிய ஆயிரம் பாசுரங்களில் இந்த தசாப்தத்தில் தேர்ச்சி பெறுங்கள். விடுதலை அடைய முடியும்.
534-மஹர்ஷி –
வேதங்கள் அனைத்தையும் நேராகக் கண்ட கபில மகரிஷி –ஸ்ரீ பராசர பட்டர் –
மகரிஷி -கபிலாசார்யா -என்று ஒரே திரு நாமம் -வேதத்தைப் பார்த்தவரான கபிலாசார்யராக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
சிறந்த ரிஷி -சம்சார நடுக்கத்தை அழிப்பவர்-பிரமனையும் ருத்ரனையும் சீராட்டுபவர் –
மஹர்ஷி கபிலாசார்யா -ஒரே திரு நாமம் — ஸ்ரீ சத்ய சந்தர் –
————————————————————-
535-கபிலாசார்யா –
கபிலர் என்னும் ஆச்சார்யராக இருப்பவர்–ஸ்ரீ பராசர பட்டர் –
————————————————————
536-க்ருதஜ்ஞ-
சகர புத்ரர்கள் அபராதம் செய்திருப்பினும் அம்சுமான் தன்னை வணங்கிய நல்வினையை மட்டுமே அறிந்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
கார்யமான உலகமாகவும் ஆத்மாவாகவும் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
பக்தர்கள் செய்பவைகளை அறிபவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————
537-மேதி நீ பதி –
பூமிக்கு நாதர் -இந்தப் பூமி முழுதும் எந்த வாசு தேவருடையதோ அவரே கபில மூர்த்தியாய் பூமியை எக்காலமும்
தாங்கிக் கொண்டு இருக்கிறார் –ஸ்ரீ பராசர பட்டர் –
பூமிக்கு நாதர் –ஸ்ரீ சங்கரர் –
பூமிக்குப் பதி– ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————
538-த்ரிபத-
போக்கியம் -அசேதனம் போக்தா -சேதனம் -நியந்தா -ஈஸ்வரன் -ஆகிய மூன்று தத்தவங்களை அறிவிப்பவர் –
மூன்று பதங்களை உடைய பிரணவம் ஆனது தம்மைக் குறிப்பதாக இருப்பவர் –
ஸ்ரீ வராஹாவதாரத்தில் மூன்று ககுத் திமில் முசுப்பு களை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
ஸ்ரீ வாமனாவதாரத்தில் மூன்றடிகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –
ஸ்ரீ வைகுண்டம் -அனந்தாசனம்-ச்வேதத்வீபம் -என்னும் மூன்று இடங்களை யுடையவர் -காயத்ரி மந்த்ரத்தின் மூன்று
பாதங்களாலும் தெரிவிக்கப் படுபவர் -மூன்று பாதங்களால் ஞானத்தை அருள்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
————————————————————-
539-த்ரித சாத்யஷா –
பிரளய ஆபத்தில் பிரம்மா முதலியவர்களை உட்பட ஸ்ரீ பூமி தேவியை – ஸ்ரீ வராகமாய் திருவவதரித்து காத்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
ஜாக்ரத் ஸ்வப்ன ஸூஷுப்தி என்னும் மூன்று நிலைகளையும் நடத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –
படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத் தொழில்களுக்குத் தலைவர் -மூன்றடிகளை அளந்தவர் -மூன்றாவது
நிலையான யௌவன பருவத்தை எப்போதும் யுடைய தேவர்களுக்குத் தலைவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————————
540-மஹா ஸ்ருங்க –
பூ மண்டலம் அனைத்தும் ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டு இருக்கும்படி பெரிய கோரைப் பல்லை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
மத்ஸ்ய ரூபத்தில் பிரளய சமுத்ரத்தில் ஓடமாகிய பூமியைக் கட்டி விளையாடிய சிறந்த கொம்பு யுள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –
மிகுந்த ஞானம் உள்ளவர் -மிகவும் பிரதானமானவர் -மத்ஸ்ய திரு வவதாரத்தில் பெரிய கொம்பை யுடையவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
———
ரிஷி என்றால் சாமானியரின் கண்களுக்குத் தெரியாத விஷயங்களையும், காணவல்ல நுண்ணிய பார்வை உடையவர் என்றும் பொருள். சாமானியரால் காணமுடியாத குழந்தையின் உற்பத்தி, கருவின் வளர்ச்சி போன்ற விஷயங்களில் இருந்து தொடங்கி, ஆத்மா முக்தி அடைவது வரை அனைத்து சூட்சுமமான விஷயங்களையும் பிரத்தியட்சமாகக் கண்டு அவற்றை உபதேசமும் செய்தபடியால், கபில வாசுதேவர் `மஹர்ஷி’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 534-வது திருநாமம்.
`மஹர்ஷயே நமஹ’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல நுண்ணிய பார்வை கிட்டும்படித் திருமால் அருள்புரிவார்.
கபில என்ற சொல் பழுப்பு நிறத்தைக் குறிக்கும். ஆசார்யர் என்றால் குரு. பழுப்பு நிறம் கொண்டவராகத் தோன்றி, சிறந்த ஆசார்யராகத் திகழ்ந்து, தேவஹூதி உள்ளிட்ட பலரை பக்தியோகத்தில் நிலைநிறுத்தி அவர்களின் முக்திக்கு வழிகாட்டியதால், கபில மூர்த்தி, `கபிலாசார்யா’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 535-வது திருநாமம்.
`கபிலாசார்யாய நமஹ’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குக் குருவருளும், திருவருளும் நிறையும்.
பூமியில் எல்லா வளங்களும் நிறைய வேண்டும் எனப் பாதாளத்தில் உலக நன்மைக்காக தவம் புரிந்தும், அறிவுரைகளை வழங்கியும் உலகத்தைப் பாதுகாக்கும் கபில வாசுதேவர் மேதினீபதி என அழைக்கப்படுகிறார். மேதினீ – பூமி, பதி – தலைவர், மேதினீபதி – பூமிக்குத் தலைவர்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 537-வது திருநாமம்.“மேதினீபதயே நமஹ’’ என்று தினமும் சொல்லி வருவோர்க்கு எல்லா வளங்களும் நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.
வராகப் பெருமானின் முதுகிலே மூன்று திமில்கள் உண்டு. அந்தத் திமில்கள் ஓம்காரமாகிய பிரணவத்தில் இருக்கும் மூன்று எழுத்துக்களைக் குறிக்கின்றன. ஓம் என்னும் பிரணவத்தை அ, உ, ம என்று மூன்று எழுத்துகளாகப் பிரிப்பார்கள்.அவற்றுள் அ என்பது பராமாத்வைக் குறிக்கிறது, ம என்பது ஜீவாத்மாவைக் குறிக்கிறது, உ என்பது பரமாத்மாவுக்கே ஜீவாத்மா தொண்டன் எனக் காட்டுகிறது.
இத்தத்துவத்தை உணர்த்தும் ஓம் என்னும் பிரணவம் வேதங்களிலும், வேள்விகளிலும் முக்கியப் பங்கு வகிப்பதால், அந்த வேதங்களையும் யாகங்களையும் தனது திருமேனியாகக் கொண்டிருக்கும் வராகப் பெருமாள், பிரணவத்தை தனது முதுகில் மூன்று திமில்களாகக் கொண்டிருக்கிறார்.த்ரிபத என்றால் மூன்று திமில்களை உடையவர் என்று பொருள். பிரணவத்தில் உள்ள மூன்று எழுத்துக்களைக் குறிக்கும் மூன்று திமில்களை முதுகிலே கொண்டிருக்கும் வராகப் பெருமாள் த்ரிபத என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 538-வது திருநாமம்“த்ரிபதாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால் பிரணவத்தின் ஆழ்பொருளை உணரும் ஞானநிலையை ஞானப் பிரானாகிய வராகமூர்த்தி நமக்குத் தந்தருள்வார்.
போக்தா என்பது உலகிலுள்ள இன்பங்களை அனுபவிக்கும் ஜீவாத்மாக்களைக் குறிக்கும். போக்யம் என்பது இவ்வுலகில் நம்மால் அனுபவிக்கப்படும் ஜடப்பொருள்களைக் குறிக்கும். நியந்தா என்பது இவர்களை இயக்கி ஆளும் இறைவனைக் குறிக்கும். இந்த மூன்று தத்துவங்களையும் தமது உபதேசங்கள் மூலம் தெளிவாக விளக்கியதால், கபில வாசுதேவர் த்ரிபத – மூன்று தத்துவங்களை விளக்கியவர் என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 538-A திருநாமம்.“த்ரிபதாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால், நமக்கும் மூன்று தத்துவங்களைப் பற்றிய தெளிந்த ஞானம் திருமாலின் திருவருளால் உண்டாகும்.
தன் திருமேனியிலேயே யாக யஜ்ஞங்களைக் கொண்டவராக வராகர் விளங்கியதால், பெரிதாக வேத அறிவில்லாத நம் போன்றோரும் அவர் வடிவைக் காணும் போதே வேதங்களைப் பற்றியும் யாகங்களைப் பற்றியும் அறியும்படிச் செய்கிறார் வராகப் பெருமான். இப்படி தேவர்களுக்கு ஆபத்து ஏற்படும்போது உடனே அவர்களை வந்து காப்பதால், வராகர் `த்ரிதசாத்யக்ஷ’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 539-வது திருநாமம். த்ரிதச என்ற சொல் தேவர்களைக் குறிக்கிறது. தச என்றால் பத்து, த்ரி என்றால் மூன்று, த்ரிதச என்றால் முப்பது என்று பொருள். மொத்தம் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தாலும், அந்த 33 கோடி என்ற எண்ணிக்கையைச் சுருக்கமாக 30 என்று குறிப்பிட்டு த்ரிதச என்று சொல்வது வழக்கம்.
அத்யக்ஷ என்றால் பொதுவாகத் தலைவர் என்று பொருள். இங்கே ஆபத்தில் உதவுபவர் அத்யக்ஷ என்று பொருள்படுகிறது. அந்த வகையில் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் உடனே வந்துதவும் தலைவராக விளங்கும் வராகப் பெருமாள் த்ரிதசாத்யக்ஷ என்று அழைக்கப்படுகிறார்.
“த்ரிதசாத்யக்ஷாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை வராகப் பெருமாள் அனைத்து ஆபத்துகளில் இருந்தும் காத்தருள்வார்.
பூமியின் வடிவைக் கருத்தில் கொள்ளாமல், பூமியை மீட்க இந்த வடிவம் போதும் என்று கணக்கிடாமல், தன் அளவற்ற கருணையின் அளவைக் கருத்தில் கொண்டு பூமியே தன் பற்களில் சிறுமணி போல் இருக்கும்படித் தோன்றியதால், வராகப் பெருமாள் மஹாச்ருங்க என்று அழைக்கப்படுகிறார். மஹாச்ருங்க என்றால் பெரிய கோரைப் பல்லை உடையவர் என்று பொருள்.
மஹா என்றால் பெரிய, ச்ருங்க என்றால் கோரைப்பல். அதுவே ஸஹஸ்ர நாமத்தின் 540-வது திருநாமம்.
“மஹாச்ருங்காய நமஹ’’ என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்குத் தனது அருள் பன்மடங்கு கிட்டும்படித் திருமால் அருள்புரிவார்.
பூமியில் உள்ள உயிர்களை அழிப்பவன் எமன் என்றால், மொத்த பூமியையும் அழிக்கப் பார்க்கும் எமனாக இருந்தான் இரணியாட்சன். அந்த எமனாகிய இரணியாட்சனைச் சக்கராயுதத்தாலே வெட்டிச் சாய்த்தபடியால் வராகப் பெருமாள் க்ருதாந்தக்ருத் என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 541-வது திருநாமம். க்ருதாந்த என்றால் எமன். க்ருத் என்றால் வெட்டி வீழ்த்தியவர். க்ருதாந்தக்ருத் என்றால் எமன் போன்றவனை வெட்டிச் சாய்த்தவர்.
க்ருதாந்தக்ருதே நமஹ என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களின் அனைத்துத் துன்பங்களையும் தன் சக்ராயுதத்தால் வெட்டி வீழ்த்துவார் திருமால்
வராகப் பெருமாள் ஒருபடி மேலே போய், தனது சரம சுலோகத்தில் – என்னைச் சரணடைந்த பக்தன் என்னை மறந்தே போனாலும் கூட, நான் அவனை மறவாமல் நினைவில் கொண்டு காத்தே தீருவேன் என்று கூறியுள்ளார்.
இத்தகைய தனது அற்புதமான சித்தாந்தத்தை வழங்கியதாலே வராகப் பெருமாள் க்ருதாந்தக்ருத் என்று அழைக்கப்படுகிறார். க்ருதாந்தம் என்றால் சித்தாந்தம், க்ருத் என்றால் வழங்கியவர். தனது உபதேசத்தின் மூலமாகவும், வராக புராணத்தின் வாயிலாகவும் தனது சித்தாந்தத்தைத் தெளிவாக வழங்கியபடியால் வராகப் பெருமாள் க்ருதாந்தக்ருத் என்று அழைக்கப்படுகிறார்.அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 541-வது திருநாமம்.க்ருதாந்தக்ருதே நமஹ என்று தினமும் சொல்லி வந்தால் நமக்கும் வாழ்வில் சித்தாந்தத் தெளிவு ஏற்படும்படி வராகர் அருள்புரிவார்.
—————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply