ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பல ஸ்ருதிகள்–ஸ்ரீ பட்டர் பாஷ்யம் —
————-
வநமாலீ கதி சார்ங்கி சங்கீ சக்ரீ ச நந்தகீ
ஸ்ரீ மான் நாராயணோ விஷ்ணு வாஸூ தேவோபி ரஷது
“வனமாலீ கதீ சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ, ஸ்ரீமான் நாராயணோ விஷ்ணுர் வாசுதேவோ அபிரக்ஷது.”
என்ற ஆதிசங்கரரின் ஸ்லோகம்
இங்கு ஆதிசங்கரர் விஷ்ணுவின் வியாபக நாமங்களான நாராயண, விஷ்ணு மற்றும் வாசுதேவ என்ற மூன்றையும் குறிப்பிட்டு உள்ளார்.
‘வனமாலி என்ற மாலையை அணிந்து
கௌமோதகி என்னும் கதை,
பாஞ்சசன்னியம் என்னும் சங்கு,
சுதர்சன என்னும் சக்கரம்,
சார்ங்கம் என்னும் வில்,
நந்தகம் என்னும் வாள்
ஆகியவற்றுடன் விளங்கும் நாராயண, விஷ்ணு, வாசுதேவன் என்ற நாமங்களைக் கொண்ட
திருமால் என்னைக் காக்க வேண்டும்’ என்பது இதன் பொருள்.
————–
யதிதம் கீர்த்த நஸ்ய கேசவஸ்ய மஹாத்மந
நாம் நாம் சஹஸ்ரம் திவ்யானாம் அசேஷண ப்ரகீர்த்திதம்
நாம ஸங்கீர்த்தனம் செய்யத்தக்கவனும்
மிகுந்த மஹிமை பொருந்தியவனுமான
கேஸவனுடைய திரு நாமங்கள் ஆயிரமும் ஓன்று விடாமல் கூறப்பட்டன
கீர்த்த நஸ்ய –என்பதன் மூலம்
இன்று முதல் நீ பகவானைக் கீர்த்தனம் செய்ய வேண்டும் என்பதும்
கேஸ வஸ்ய மஹாத்மந-என்பதால்
கீர்த்தனம் செய்ய வேண்டியதன் காரணம் என்பதும்
திவ்யா நாம்-என்பதன் மூலம்
முக்தர்களால் பரமபதத்தில் கீர்த்தனம் செய்யப்பட வேண்டும் என்பதையும்
அசேஷேண-என்பதால்
இனி உனக்கு அறிய வேண்டுவது வேறே ஒன்றும் இல்லை என்பதுவும் கூறப்பட்டன
அதா₂ஸ்ய நாம ஸஹஸ்ரஸ்ய கௌரவம் க்₃ராஹயன் ஸாந்தநவ꞉ கௌந்தேய மாஹ
இதீத₃ம்
இதி । யதே ₃தத் கீர்தநம் ப₄க₃வந் மஹிம்நி, அத்₃ய ப்ரப்₄ருதி ப₄க₃வான் கீர்தநாரம்ப₄ மர்ஹதீத்
யுக்தம்
கீர்தநீயஸ்யேதி ।
அத்ர காரணம்
கேஸவஸ்ய மஹாத்மந இதி ।
நாம்நாம் ப்ராக்ருத பரம பத₃ வ்யவஹார யோக்₃யத்வமாஹ
தி₃வ்யாநாமிதி ।
த்வ கௌரவாத் கிஞ்சித₃பி
ஜ்ஞாதவ்யம் ந ஹாபிதமித்யாஹ
அஸேஷேணேதி ॥
—————–
அவதாரிகை
அடுத்து அதிகாரி யார் என்பதும்
பயனும் கூறப்படுகின்றன
யதிதம் ஶ்ருணுயாந் நித்யம் யச்சாபி பரிகீர்த்தயேத்
ந சுபம் ப்ராப்னுயாத் கிஞ்சித் சோமுத்ரேஹ சமாநவ –இங்கும் அங்கும் உள்ள அசுபங்கள் நீங்கி விடும்
அதா₂தி₄காரிப₂லாங்க ₃நிர்ணய ꞉ । ய இத₃ம்
ஶ்ருணு யாதி₃த் யாதி₃ ।
யதா₂தி₄காரம் ஶ்ரவண
மநநயோ ꞉ ஸாமாந்யே நோப₄ய லோகா ஸூப விரோதித்வம் தாவத்ப₂ல முக்தம் ॥
இந்த ஸஹஸ்ர நாமத்தை எப்போதும் கேட்டபடி உள்ளவனும்
கீர்த்தனம் செய்தபடி உள்ளவனும்
பரலோகம் மற்றும் இந்தப் பூமியில் சிறிதும் கெடுதலை அடைய மாட்டான் –
இதம் ஸ்ருணு யாத் இத்யாதி –மூலம்
அவரவர் தகுதிக்கு ஏற்றபடி கீர்த்தனம் செய்தால்
இங்கும் அங்கும் உள்ள அஸூ பங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்று கருத்து
————-
வேதாந்தகோ ப்ராஹ்மண ஸ்யாத் ஷத்ரியோ விஜயீ பவேத்
வைஸ்யோ தன சம்ருத்தஸ் ஸ்யாச் சூத்ர ஸூகம் அவாப்னுயாத்-3-
அத₂ சதுர்ணாம் வர்ண விஸேஷாணா மநதி₄ரூட₄ப₄க₃வத்₃ப₄க்தீ நாம நா காங்க்ஷித ப₂ல
விஸேஷாணாம் யதா யோக்யம் ப₂லமாஹ
வேதா₃ந்தக ₃ இதி ॥
இந்த ஸஹஸ்ர நாமத்தை அந்தணன் ஜபித்தால் வேதாந்த ஞானம் கிட்டும்
ஷத்ரியன் ஜபித்தால் வெற்றி கிட்டும்
வைஸ்யன் ஜபித்தால் செல்வம் கிட்டும்
ஸூத்ரன் ஜபித்தால் இன்பம் கிட்டும்
அந்தணர்கள் முதலான நான்கு வர்ணத்தாருக்கும்
பகவத் பக்தி திடமாக உண்டாகாத போது
அவர்கள் எந்தவித பலனையும் எதிர்பாராமல் இந்த ஸஹஸ்ர நாமத்தை ஜபித்தாலும் கேட்டாலும்
அவர்களுக்கு ஏற்படும் பலன்கள் கூறப்படுகின்றன –
——
த₄ர்மார்தீ₂ ப்ராப்நுயாத்₃த₄ர்மமர்தா₂ர்தீ₂ சார்த₂மாப்நுயாத் ।
காமாநவாப்நுயாத் காமீ ப்ரஜார்தீ₂ ப்ராப்நுயாத் ப்ரஜா꞉ ॥ 4 ॥
அத₂ வர்ண விஸேஷேண யதா₂காமமப்₄யுத₃ ய ப₂லமாஹ
த₄ர்மார்தீ₂தி ॥
தர்மத்தைக் கோரியவன் தர்மத்தையும்
பொருளை விரும்புபவன் பொருளையும்
போகத்தைக் கோரியவன் போகத்தையும்
குழந்தைகளைக் கோரியவன் குழந்தைகளையும் பெறுவான்
நான்கு வர்ணத்தினரும் ஏதேனும் பலனை எண்ணி ஜபித்தால் அவர்கள் விரும்பும் பலனை அடைவார்கள் என்று கூறப்படுகிறது
————
அடுத்து சில விதி முறைகளுடன் ஸஹஸ்ர நாமத்தை ஜபித்தல் என்னும் ஸங்கீர்த்தனம் செய்யும் ஒருவனுக்கு
அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் உண்டாகும்
என்பதை அடுத்துள்ள நான்கு ஸ்லோகங்களும் கூறுகின்றன
பக்திமான் ய ஸ்தோத்தாயா சுசி தத்கத மனச
சஹஸ்ரம் வாஸூ தேவஸ்ய நாம் நாம் ஏதத் ப்ரகீர்த்தயேத்–5-
யசஸ் ப்ராப்னோதி விபுலம் ஞாதி ப்ராதான்ய மேவச
அசலாம் ஸ்ரியம் ஆப்நோதி ஸ்ரேயஸ் ப்ராப்நோத் யநுத்தமம்–6-
ந பயம் க்வசிதாப்நோதி வீர்யம் தேஜஸ் ச விந்ததி
பவத்ய ரோகோ த்யுதிமான் பல ரூப குணாந்வித-7-
ரோகார்த்தோ முச்யதே ரோகாத் பத்தோ முஸ்யேத பந்தனாத்
பயான் முஸ்யேத பீதஸ்து முஸ்யே தாபந்ந ஆபத–8-
அத₂ நியம விசேஷ வஜ் ஜப ரூப ஸங்கீர்தநே ப₄க்தஸ்ய ஸர்வ ஸம்ருத்₃தி₄மாஹ
ப₄க்திமான்
இத்யாதி₃பி₄ஶ் சதுர்பி₄꞉ । அநுத்தமம் ஶ்ரேயோ முக்தி꞉ । அந்யே (அ)ப்₄யுத₃ யா விசேஷா ꞉ ॥
யார் ஒருவன் அன்றாடம் உறங்கி எழுந்த பின்னர் நீராடுதல் முதலான கர்மங்களைச் செய்து -பரி ஸூத்தனாகி
பக்தியுடன் வாஸூ தேவன் இடம் மனஸை நிலை நிறுத்தி
அவனுடைய இந்த ஆயிரம் திரு நாமங்களையும் நன்றாகக் கீர்த்தனம் செய்வானோ
அவன் மிகுந்த கீர்த்தியையும்
மனிதர்களில் முதன்மையாக உள்ள நிலையையும்
அழியாத செல்வத்தையும்
அனைத்தையும் காட்டிலும்ம் உயர்ந்த மோக்ஷத்தையும் பெறுகிறான்
அவனுக்கு எங்கும் எப்போதும் எதற்கும் பயம் இல்லை
அவன் சக்தி மற்றும் தேஜஸ்ஸை அடைகிறான்
நோய் அற்றவனாகவும் காந்தி உள்ளவனாகவும் பலம் ரூபம் குணம் கொண்டவனாகவும் ஆகிறான்
நோயாளி ஒருவன் அந்த நோய்கள் அனைத்தும் நீங்கப் பெறுகிறான்
பந்தத்தில் அகப்பட்டவன் அந்தப் பந்தத்தில் இருந்து விடுதலை அடைகிறான்
பயத்தில் உள்ளவன் பயம் இல்லாதவன் ஆகிறான்
ஆபத்திலுள்ளவன் ஆபத்தில் இருந்து விடுபெறுகிறான்
—————
அடுத்து பகவானை மட்டும் விரும்பி நின்று மற்ற எதிலும் பக்தி இல்லாமல் உள்ளவனுக்கு
அவன் பிரார்த்தனை செய்யாமலேயே தீயவைகளை அவனிடம் இருந்து அகன்று விடுகின்றன என்கிறது
துர்க்காணி அதி தரத் யாசு புருஷஸ் புருஷோத்தமம்
ஸ்துவன் நாம ஸஹஸ்ரேண நித்யம் பக்தி சமன்வித–9-
அத₂ ப₄க₃வதே ₃கார்தி₂நோ (அ)நந்ய ப₄க்தேர ப்ரார்தி₂தாமப்ய நர்த₂ நிவ்ருத்திமாஹ
து₃ர்கா₃ணீதி ॥
பக்தியுடன் கூடியவனாக இந்த ஸஹஸ்ர நாமங்களால் புருஷோத்தமனை ஸ்துதிக்கும் ஒருவன்
அனைத்து கஷ்டங்களையும் கடக்கிறான்
————–
அப்படிப்பட்டவர்களுக்கு உரிய பலன்கள் கூறப்படுகின்றன
வாஸூ தேவ ஆஸ்ரயோ மர்த்யோ வாஸூ தேவோ பராயணா
சர்வ பாப விசுத்தாத்மா யாதி ப்ரஹ்ம சனாதனம்–10-
வாஸூ தேவனையே அண்டியவனாக -வாஸூ தேவனை மட்டுமே பரமகதியாய் நம்பியுள்ளவனாக இருக்கும் ஒருவன்
அனைத்து பாபங்களில் இருந்தும் விடுபட்டவனாக எப்போதும் உள்ள ப்ரஹ்மத்தை அடைகிறான்
————-
நியமங்களுடன் கூடிய பக்தனுக்கு இடையே வந்து சேரும் பலன்கள் கூறப்படுகின்றன
ந வாஸூ தேவ பக்தானாம் அசுபம் வித்யதே க்வசித்
ஜென்ம ம்ருத்யு ஜரா வியாதி பயம் நைவோப ஜாயதே–11-
அத₂ தேஷாம் தத் ப்ராப்திமாஹ வாஸுதே ₃வாஶ்ரய இதி ॥
இதம் ஸ்தவம் அதீ யான ஸ்ரத்தா பக்தி சமன்வித
யுஜ்யேத ஆத்ம ஸூக ஷாந்தி ஸ்ரீ த்ருதி கீர்த்திபி–12-
நியமவதோ ப₄க்தஸ்யாநுஷங்கி₃ணீமப்₄யுத₃ யஸித்₃தி₄மாஹ
இமம் ஸ்தவமிதி ।
ஶ்ரத்₃தா₄ – ஸ கௌரவ த்வரா । ப₄க்திர்வ்யாக்₂ யாதா । ஆத்மா சேதந꞉ । ப₄க₃வதி ப₄க்திர் மஹத꞉
ஸுக்ருதஸ்ய ப₂லம் * கோ₃விந்த₃ப₄க்த் ப்₄ தி₄கம் ஶ்ரேயஶ் சாந்யந்ந வித்₃ யதே , இதி ।
வாஸூ தேவனிடம் பக்தி கொண்டவர்களுக்கு எப்போதும் தீமை வருவதில்லை
அவர்களுக்கு பிறப்பு இறப்பு மூப்பு பிணிகள் குறித்த பயமும் உண்டாவது இல்லை
மிகுந்த ஸ்ரத்தை பக்தி இவற்றுடன் கூடி இந்த ஸஹஸ்ர நாமத்தை அத்யயனம் செய்யும் ஒருவன்
ஸூகம் பொறுமை செல்வம் தைர்யம் ஞாபகத் திறன் புகழ் ஆகியவற்றை அடைகிறான்
—————-
பகவத் பக்தியானது மிகுந்த புண்ணியங்களுடைய காரணத்தால் உண்டாலும் பயனாகும்
அது உண்டானால் குரோதம் முதலான தோஷங்கள் தாமாகவே விலகும் என்று கூறப்படுகிறது
ந க்ரோதோ ந ச மாத்சர்யம் ந லோபோ ந அஸுபா மதி
பவந்தி க்ருத புண்யா நாம் பக்தானாம் புருஷோத்தமே–13-
தத்த்வத ஏதே தோஷா ஸ்வபா₄வத ஏவ நிவர்தந்த இத்யாஹ
ந க்ரோத₄ இதி ।
புண்ணியம் செய்வதன் காரணமாக புருஷோத்தமனை அடைந்தவர்களுக்கு கோபம் உண்டாவது இல்லை
ஆசை ஏற்படுவது இல்லை -தீய எண்ணங்கள் ஏற்படுவது இல்லை
—————–
மேலே கூறப்பட்ட பலன்கள் அனைத்தும் புனைந்துரை என்னும் அர்த்த வாதமோ என்று பக்தி அயற்றவர்கள்
சந்தேகம் அடையக்கூடும் என்று எண்ணி
எம்பெருமானுடைய பெருமை காரணமாக கைகூடாதது எதுவுமே இல்லை
ஆகவே இவை அர்த்த வாதம் என்றோ வேறே விதமாகவோ எண்ணக் கூடாது என்பதற்காக அவனுடைய பெருமையை விவரிக்கிறார்
த்யவ் ச சந்த்ர அர்க நக்ஷத்ரா கம் திசோ பூர் மஹோததி
வாஸூ தேவஸ்ய வீர்யேண வித்ருதானி மஹாத்மன–14–
நாயம் ப₂லார்த₂வாத₃ஶ்ங்கயோ நிர்பா₄க்₃யை ꞉ குதார்கிகை ꞉, ப₄கவத் ப்ரபா₄வஸ்யா
ஸம்பா₄வ்யாபா₄வேநாதிவாதா₃பவாத₃ யோர ஸம்ப₄வாதி₃த்ய பி₄ப்ரயன் தஸ்ய தம் ப்ரபா₄வமாஹ
த்₃யவ்ஸ் ஸத சந்த்₃ரேதி ।
வித்₄ருதாநீதி நாநாலிங்கா ₃நாம்
* நபும்ஸக மநபும்ஸகேநைக
வச்சாஸ்யாந்ய தரஸ்யாம், இதி நபும்ஸக லிங்க ₃சேஷதா ॥
சந்திரன் சூர்யன் நக்ஷத்திரங்கள் ஆகியவற்றுடன் கூடிய மேல் லோகமும்
இடைவெளியான ஆகாசமும் திசைகளும் பூமியும் கடலும் மஹாத்மாவான வாஸூ தேவனுடைய சக்தியாலேயே தாங்கப் பட்டுள்ளன
————
அனைத்தும் அவன் சக்தியாலேயே தரிக்கப் பட்டுள்ளன என்று கூறிய பின்னர்
அனைத்துமே அவனுக்கு வசப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது –
ச ஸூரா அஸூரா கந்தர்வம் ச யஷோரக ராக்ஷஸம்
ஜகத் வஸே வர்த்ததேதம் க்ருஷ்ணஸ்ய ச சராசரம்–15-
ஸர்வஸ்ய தச் ச₂க்தி வித்₄ரு தத்வ முக்த்வா தத்₃வஸ வர்த்தித்வமாஹ
ஸஸுராஸுரேதி ।
வர்ததே த ₃மித்யார்ஷீ ஸம்ஹிதா । அவர்ததேத₃மிதி வா ॥
தேவர்கள் அஸூரர்கள் கந்தர்வர்கள் யக்ஷர்கள் நாகர்கள் ராக்ஷஸர்கள் சராசரங்கள்
ஆகிய அனைத்தும் கிருஷ்ணனுடைய கட்டுப்பாட்டில் உள்ளன
————-
இவ்விதம் அவை அனைத்தும் வசப்பட்டுள்ளவை என்பது ஆத்மா -சரீரம் என்ற சம்பந்தம் போன்றதாகும் எனப்படுகிறது
இந்திரியாணி மநோ புத்தி சத்வம் தேஜோ பலம் த்ருதி
வாஸூ தேவாத் மகானி ஆஹு க்ஷேத்ரம் ஷேத்ரஞ்ஞ ஏவ ச–16–
இத₃ம் தத்₃வஸ வர்த்தித்வம் ஸாரீராத்ம பா₄வேந விஶிநஷ்டி
இந்த்₃ரி யாணீதி ।
வாஸுதே ₃வாத்மகாநி – தச்ச₂ரீராணீத் யர்த₂꞉ । ஆஹு꞉ ஸாஸ்த்ராணீதி சேஷ ꞉ ।
இந்திரியங்கள் மனம் புத்தி ஸத்வ குணம் தேஜஸ் சக்தி தைர்யம் ஆத்மா ஆகிய அனைத்தும்
வாஸூ தேவனுடைய சரீரங்கள் ஆகும் என்று ஸாஸ்த்ரங்கள் கூறுகின்றன
———-
இவ்விதம் தத்வ ஸாஸ்த்ரங்கள்
அனைத்தும் அவன் வசப்பட்டவை என்று கூறிய பின்னர் மந்தமான புத்தி உள்ளவர்களுடைய
பயத்தை நீக்குவதற்காக அனுஷ்டான ஸாஸ்த்ரங்களும் அவன் வசப்பட்டவை என்கிறது
சர்வ ஆகமானாம் ஆசார ப்ரதமம் பரிகல்பித
ஆசார பிரபவோ தர்மோ தர்மஸ்ய பிரபு அச்யுத–17–
சர்வ ஆகமானாம் –ப்ரமாணமான சாஸ்திரங்கள்
ப்ரதமம் பரிகல்பித -மிகவும் முக்கியமாக உபதேசிக்கும் தர்மம்–
ஆசார -நல் நடத்தை -ஒழுக்கம்
ஆசார பிரபவோ தர்மோ தர்மஸ்ய பிரபு அச்யுத–தர்மத்தால் போற்றப்பட வேண்டியவன்
ஏவம் தத்த்வ ஸாஸ்த்ரார்தா₂நாம் தாத₃தீ₄ந்யமபி₄தா₄யா நுஷ்டா₂நா ஸாஸ்த்ரார்தா₂நாமபி
தாத₃தீ₄ந்யம் மந்தா₃தி₄காரிணாம் ப₄ யமபநேதுமாஹ –
ஸர்வாக ₃மாநாமிதி ।
ஸர்வாக ₃மாநாம்-ஸர்வ த₄ர்ம ப்ரமாணாநாம் ப்ரத₂மம் பரகல்பித꞉ – ப்ரத₂ம ப்ரதிபாத்₃ய த₄ர்ம꞉ ஆசார꞉
சவ்சாதி₃꞉, தத₃ங்க ₃꞉ ஶ்ரௌதோ த₄ர்ம இதி, தஸ் யாராத்₄ ய꞉ ப₂லத₃꞉ ஸஹாயஶ் சாச்யுத இதி ॥
ஸாஸ்த்ரங்கள் அனைத்திற்கும் சிறந்த ஒழுக்கமே முதன்மையாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது
அந்த ஒழுக்கத்தில் இருந்து உண்டாவது தர்மம் ஆகும்
அந்த தர்மத்துக்கு அச் யுதனே ஸ்வாமி யானான்
ஸர்வ ஆகமா நாம் –என்றால் தர்மத்துக்கான பிரமாண ஸாஸ்த்ரங்கள் ஆகும்
ப்ரதமம் பரி கல்பித –என்றால் மிகவும் முக்கியமான உபதேசிக்கப்படும் தர்மம் ஆகும்
ஆசார -என்றால் ஒழுக்கம் மற்றும் நன்னடத்தை ஆகும்அச் யுதனே யாவான்
அவனே அந்த ஒழுக்கத்தில் நிலை நிற்கவும் அதற்கான பலனை அளிப்பவும் உதவுபவனும் ஆவான்
——-
தர்மத்தைப் பற்றி நிற்பவர்களும் அவனிடம் இருந்தே உண்டானவர்கள் என்கிறது
ரிஷப பிதரோ தேவா மஹா பூதாநி தாதவ
ஜங்கம அ ஜங்கம சேதம் ஜெகன் நாராயண உத்பவம்–18–
ரிஷிகளும் பித்ருக்களும் தேவர்களும் பஞ்ச பூதங்களும் அவற்றின் செயல்களாகிய இன்பங்களும்
ஸ்தாவரங்களுமாகிய அனைத்து உலகங்களும் நாராயணன் இடம் இருந்தே உண்டாயின
ரிஷய –என்றால் ஸ்ம்ருதிகள் போன்றவற்றை யுண்டாக்கின மநு முதலானவர்கள்
மற்றும் அவற்றைத் தியானித்து பின்பற்றுவார்கள் ஆவர்
பிதரோ தேவ –என்றால் மற்ற தேவதைகள் ஆவர்
மஹா பூதாநி -என்றால் ஆகாசம் மற்றும் உள்ள நான்கு பூதங்களும் ஆகும்
தாதவ –என்றால் தர்மங்களை அனுபவிப்பதற்காக உண்டான தோல் முதலியவை
ஜங்கமா ஜங்கம் –என்றால் பலன்களை அனுபவிக்கும் அசையும் மற்றும் அசையாத பொருள்கள் நிறைந்த உலகம் ஆகும்
————–
அடுத்து அனைத்து ஞானத்திற்கும் அவனே காரணம் என்கிறது
யோகோ ஞானம் ததா சாங்க்யம் வித்யா சில்பாதி கர்ம ச
வேதா சாஸ்த்ராணி விஞ்ஞான மேதத் சர்வம் ஜனார்த்தநாத்–19–
கர்மயோகம் பக்தி யோகம் ஆகியவற்றின் அறிவும்
சாங்க்யம் எனப்படும் ஞான யோகமும்
தர்க்கம் வியாகரணம் போன்ற வித்யைகளும்
சில்பங்களும்
வர்ணாஸ்ரம தர்மங்களும்
வேதங்களும்
ஸ்ம்ருதிகளும்
இதிஹாஸ புராணங்கள் என்னும் ஸாஸ்த்ரங்களும்
ஆகிய பலவிதமான ஞானமும் ஜனார்த்தனன் இடம் இருந்தே உண்டாயின
ஞானம் என்றால் ஸாஸ்த்ரம்
யோகோ ஞானம் என்றால் ஸாஸ்த்ரங்கள் குறித்த ஞானம்
யோகம் என்பது இரு விதம் -சமாதி யோகம் -கர்ம யோகம்
சாங்க்யம் -என்றால் தத்வங்களைப் பற்றிய அறிவிக்கும் பிரிவு
வித்யா -இலக்கணம் போன்றவை குறித்த அறிவாகும்
மேலும் வில் வித்தை மருத்துவம் இசை ஆடல் போன்றவையும் வித்யையாகும்
சில்பம் -செதுக்குதல் கட்டுமானம் போன்றவை ஆகும்
கர்மம் என்றால் அனைத்து செயல்பாடுகளும் ஆகும்
வேதங்களே அனைத்திற்கும் முன்னோடி ஆகும்
ஸாஸ்த்ரங்கள் என்றால் ஸ்ம்ருதி இதிஹாஸம் புராணம் ஆகும்
இவை அனைத்தும் ஜனார்த்தனிடம் இருந்தே வருகின்றன
————–
அடுத்து மஹா விஷ்ணுவின் இரண்டு விபூதிகளையும் நிர்வஹிக்கும் தன்மையை அருளிச் செய்கிறார்
ஏகோ விஷ்ணுர் மஹத் பூதம் ப்ருதக் பூதான் யநேகச
த்ரீன் லோகான் வ்யாப்ய பூதாத்மா புங்க்தே விஸ்வ பூ கவ்யய–20–
அவனே ஏகம் -அநேகம் -சேஷீ- நியாமகன்–ஆத்மா -ரக்ஷகன் -வ்யாப்த கத தோஷம் தட்டாதவன் –
புங்க்தே-லீலா ரசமும் போக ரசமும் அனுபவிப்பவன்
வாக்குக்கும் மனசுக்கும் கோசரம் அல்லன்
பெரும் பொருளாகிய மஹா விஷ்ணு பலவாகப் பிரிந்துள்ள பூதங்களையும்
மூன்று உலகங்கள் எனப்படும் பத்தர் முக்தர் நித்யர் என்னும் மூன்று வகை சேதனர்களையும் வியாபித்து
அனைத்து பிராணிகளுக்கும் அந்தர்யாமியாக யுள்ள போதிலும் அவற்றின் தோஷங்கள் ஏதும் அடையாதவனாக
அனைத்தையும் காப்பாற்றி அனுபவிக்கிறான்
ஏக -என்றால் மஹா விஷ்ணு தனித்தன்மை உள்ள ஒருவன்
அநேக என்றால் எண்ணற்ற ரூபம் செயல்பாடுகள் மாறுபாடுகள் ப்ரயோஜனங்கள் கொண்டுள்ள தனித்தனியான வேறுபட்ட பூதங்கள்
இவை அனைத்திலும் மூன்று லோகங்களிலும் அவன் பரவி நிற்கிறான்
பந்தத்தில் உள்ள ஜீவாத்மா முக்தாத்மா மற்றும் நித்யர் ஆகியவையே மூன்று லோகங்களிலும் உள்ள ஆத்மாக்கள்
அவை அனைத்தையும் கட்டுப்படுத்தி அவற்றின் எஜமானனாக உள்ளதால் அவையுடைய ஆத்மாவாக மஹா விஷ்ணுவே உள்ளான்
அவனே அவற்றைக் காப்பவன் ஆவான்
ஆனால் அவற்றின் தோஷங்களால் தீண்டப்படாதவன் ஆகிறான்
தனது மேன்மை காரணமாக மஹத் பூதம் ஆகிறான்
வாக்கு மற்றும் மனம் ஆகியவற்றுக்கு அப்பால் உள்ளவன்
புங்க்தே என்றால் லீலா ரஸம் மற்றும் போக ரஸம் ஆகியவற்றை அனுபவிக்கிறான் என்றவாறு
———
அடுத்து அளவற்ற மஹிமை யுள்ள பகவான் இந்த சுலோகத்துக்கு விஷயம் ஆகிறான்
அவனைக் காட்டிலும் உயர்ந்த ஞானம் மற்றும் வாக்கு கொண்டவரான வேத வ்யாஸர் இந்த ஸ்லோகத்தை உரைத்தார்
அவர்கள் இருவர் யுடைய மங்களகரமான மஹிமையை இந்த ஸ்லோகம் கூறுகிறது
இதனைக் கொண்டு தங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ள நிற்கும் அனைவருமே இதற்கு அதிகாரிகள் ஆவர்
ஆகவே உயர்ந்தும் தாழ்ந்தும் உள்ளதான அனைத்து விதமான பொருள்களையும் அடைய விரும்பும்
ஒருவன் யாராக இருந்தாலும் இந்த ஸ்லோகத்தை ஐயம் இன்றிக் கூறலாம்
இமம் ஸ்தவம் பகவதோ விஷ்ணோ வ்யாஸேன கீர்த்திதம்
படேத்ய இச்சேத் புருஷஸ் ஸ்ரேயஸ் ப்ராப்தும் ஸூகாநி ச
ஸ்ரேயஸ் எனப்படும் முக்தியையும் மற்ற பல ஸூ கங்களையும் அடைய எண்ணும் ஒருவன்
வேத வ்யாஸரால் அருளிச் செய்யப்பட்டதும் பகவானாகிய மஹா விஷ்ணுவைக் குறித்தும்
உள்ளதான இந்த ஸ்தோத்ரத்தைப் படிப்பானாக
———
ஸ்வ பாவத்தாலேயே ஸூகம் துக்கம் நன்மை தீமை என்பது போன்ற இரட்டைகளாக உள்ள அனைத்து
கல்யாண குணங்களுக்கும் இருப்பிடமாக உள்ளவனும்
அடியார்களுக்கு கற்பக மரம் போன்றவனும்
தாமரை போன்ற சிவந்த திருக்கண்கள் கொண்டவனும்
மஹா லஷ்மியின் நாயகனுமான ஸர்வேஸ்வரனை வணங்குபவர்களுக்கு அவனே அனைத்துமாக உள்ளான்
ஆகவே அவனை வணங்குபவர்களுக்கு கிட்டக்கூடியவை சொல்வதற்கே எட்டாதபடியே உள்ளன
இப்படி உள்ள போது அவனை வணங்காமல் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் உலாவது ஏனோ என்று நிறைவு செய்கிறார்
விஸ்வேஸ்வரம் அஜம் தேவம் ஜகத ப்ரபும் அவ்யயம்
பஜந்தி யே புஷ்கராக்ஷம் நதே யாந்தி பராபவம்
நதே யாந்தி பராபவம் ஓம் நம இதி
இப்படி ஆயிரம் திரு நாமங்களால் -ஸ்ரீ மன் நாராயணனே புருஷோத்தமன் -ஸ்ரீ யபதி –
சரணா கதர்களுக்கு உயிர் அளிக்கும் மருந்தாயும்-
எல்லையில்லா மங்களமான இயற்க்கை நிலை -ஸ்வரூபம் -வடிவம் -ரூபம் -பண்புகள் திரு விளையாடல்கள் –
பரத்வம் சௌலப்யம் ஆகியவற்றை உடையவன் –
அநிஷ்டங்களை களைந்து இஷ்டங்களை வழங்கும் வள்ளல் -சர்வ ரஷகன் -இவனுடைய சஹஸ்ர நாமங்களைச் சொல்பவர்
செங்கண் திரு முகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் –
அனைத்து உலகங்களுக்கும் ஈஸ்வரனும்
பிறப்பற்றவனும்
அனைத்து ஆனந்தங்களைக் காட்டிலும் ஆனந்தம் உள்ளவனும்
இந்த உலகங்களின் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ஸம்ஹாரம் ஆகியவற்றுக்கு காரணமானவனும்
செந்தாமரைக் கண்கள் கொண்ட வானுமாகிய ஸ்ரீ மன் நாராயணனை உபாஸிப்பவன்
யாராக இருந்தாலும் அவன் எதிலும் தோல்வியே அடைய மாட்டான் -அவமானம் அடைய மாட்டான்
இரண்டாவது முறையாக இறுதியாக உள்ள வரியைக் கூறியதால்
தோல்வி அடைய மாட்டான் அவமானம் அடைய மாட்டான் என்று உறுதிபடக் கூறியதாயிற்று
அனைத்து விதமான நன்மைகளை அளிக்க வல்லதும்
ஸ்ருதி மற்றும் ஸ்ம்ருதியில் உள்ளவற்றை ஆதாரமாகக் கொண்டதும்
ஆகிய இந்த ஸஹஸ்ர நாமத்தைக் குறித்த வ்யாக்யானம்
ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளில் ஸமர்ப்பிக்கப் பட்டது
அஸ்மாகம் அத்ர ச பரத்ர ச ஸர்வ துக்கம்
உன் மூல்ய ஸம் பதம் அசேஷ விதாம் விதாய
ஸ்ரீ ரெங்க ராஜ மஹிஷீ ஸ ச வைஷ்ணவா நாம்
சங்காத் ஸூகம் ஸஹ ஐயேந ஸதா க்ரியாஸ்தாம்
ஸ்ரீ ரெங்கநாதனுடைய பட்ட மஹிஷீ யான ஸ்ரீ ரெங்க நாச்சியாரும்
ஸ்ரீ வைஷ்ணவர் களுடைய சேர்க்கையும்
நமக்கு இம்மையிலும் மறுமையிலும் அனைத்து துன்பங்களையும் நீக்கி
அனாசித்து விதமான ஐஸ்வர்யங்களையும் உண்டாக்கி
எப்போதும் வெற்றியுடன் கூடிய இன்பத்தை அளிப்பதாக
———
அஸ்மாகம் அத்ர ச பரத்ர ச சர்வ துக்கம்
உன்மூல்ய சம்மதம் அசேஷ விதாம் விதாய
ஸ்ரீ ரெங்கராஜ மஹிஷீ ச ச வைஷ்ணவா நாம்
சங்காத் ஸூகம் ஸஹ ஐயேன சதா க்ரியாஸ்தாம்
ஹாரீத குல திலகம் -ஸ்ரீவத்சாங்கர் -திருக்குமாரர்–ஸ்ரீ பராசர பட்டர் -ஸ்ரீ ரெங்கநாதன் திவ்யாஜ்ஜையால் அருளிச் செய்த
ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம் -ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாஷ்யம் சம்பூர்ணம்
ஒழுக்கத்தில் நிலை நிற்கவும் பலனை அளிக்கவும் காரணம் அச்யுதனே
அஸ்மாக மத்ர ச பரத்ர ச ஸர்வது₃꞉க்க ₂-
முந்மூல்ய ஸம்பத₃ம் அசேஷ விதா₄ம் விதா₄ ய।
ஶ்ரீரங்க ₃ராஜ மஹிஷீ ஸ ச வைஷ்ணவாநாம்
ஸங்கா₃த் ஸுக₂ம் ஸஹ ஜயேந ஸதா₃ க்ரி யாஸ்தாம் ॥
இதி ஶ்ரீஹரித குலதிலக ஶ்ரீவத் ஸாங்க மிஶ்ர ஸூநோ ꞉ ஶ்ரீரங்க ₃ராஜ தி₃வ் யாஜ்ஞா-
லப்₃த₄ ஶ்ரீபராஸர ப₄ட்ட அபர நாமதே ₄ யஸ்ய ஶ்ரீரங்க நாத₂ஸ்ய க்ருதௌ
ஶ்ரீமத்₃விஷ்ணு ஸஹஸ்ர நாம விவரணம் ப₄க₃வத்₃கு₃ண த₃ர்பணாக்₂ யம்
பா₄ஷ்யம் ஸமாப்தம் ।
॥ ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் அஸ்து ॥
———————————–
பத்ம பத்ர விசா’லாக்ஷ
பத்ம நாப ஸுரோத்தம |
பக்தானா மனுரக்தானாம்
த்ராதா பவ ஜநார்த்தன ||23-அர்ஜுனன் உவாச
தாமரைக் கண்ணனே -உந்தியிலே தாமரையைக் கொண்டவனே –
மனிதர்களுக்குத் தேவர் போல் தேவர்களுக்கும் தேவனான வனே
சேதனர்களுடைய ஜனியை அறுப்பவனே-ரக்ஷித்து அருள்வாய்
ஸ்ரீ பகவானுவாச-
யோ மாம் நாம ஸஹஸ்ரேண
ஸ்தோதுமிச்சதி பாண்டவ |
ஸோ(அ)ஹம் ஏகேந ஸ்லோகேன
ஸ்துத ஏவ ந ஸம்ச’ய: ||24
ஸ்துத ஏவ ந ஸம்ச’ய ஓம் நம இதி
இவ்வளவும் கேட்டதும் அர்ஜுனனுக்கு பயம் ஆஸ்வாஸம் படுத்திய கண்ணனைப் போல்
ஆசை ஒன்றே போதும்-ஸோ(அ)ஹம்-அந்த நான் -முதல் ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்த உடனேயே
அதே பூர்ண ஆனந்தம் அடைகிறேன் -இதில் சங்கை ஒன்றுமே வேண்டாம்-மீண்டும் சொல்லி உறுதி படுத்துகிறான்
உதாசீனன் அனுமந்தா தூண்டும் நிலை மூன்றும் உண்டே-செய்வார்களைச் செய் வேனும் யானே என்னும்
ஜீவர்களின் ஸ்வா தந்திரம் மதித்து முதல் ப்ரவ்ருத்தியில் உதாஸீனன்
வ்யாஸ உவாச-
வாஸனாத் வாஸுதேவஸ்ய
வாஸிதம் தே ஜகத் (புவன )த்ரயம் |
ஸர்வபூத நிவாஸோ(அ)ஸி
வாஸுதேவ நமோ(அ)ஸ்துதே ||25
ஸ்ரீ வாஸுதேவ நமோஸ்துத ஒம் நம இதி
எங்கும் நீக்கமற நிறைந்து -முன்னும் பின்னும் இருக்க வணங்க வேண்டுமே
ஸ்ரீ பார்வத்யுவாச-
கேனோபாயேன லகுனா
விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம் /
பட்யதே பண்டிதைர் நித்யம்|
ச்’ரோதுமிச்சாம்யஹம் ப்ரபோ ||26–லகு உபாயம் நமக்காக கேட்டு
ஸ்ரீ ஈ’ஸ்வர உவாச-
ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே |
ஸஹஸ்ரநாம தத் துல்யம்
ராம நாம வரானனே ||27–ஆயிரத்துக்கும் நிகர்
ஸ்ரீராம நாம வரானன ஓம் நம இதி
ராமன் இடத்தில் –மனோரமே-மனதுக்கு இனியான் –ராம ராம ராம சொல்லி ரமே-ஆனந்திப்போம்
இத்தைக் கேட்டதும் –வரானனே-உனது முகத்தில் மகிழ்ச்சி துள்ளுகிறதே
ஸ்ரீ ப்ரஹ்மோவாச-
நமோ(அ)ஸ்த்வநனந்தாய ஸஹஸ்ர மூர்த்தயே
ஸஹஸ்ர பாதாக்ஷி சிரோரு பாஹவே |
ஸஹஸ்ர நாம்னே புருஷாய சா’ஸ்வதே
ஸஹஸ்ர கோடி யுகதாரிணே நம: ||28
ஸ்ரீஸஹஸ்ரகோடி யுகதாரிண ஒம் நம இதி
கால தேச வஸ்து அபரிசசேத்யன்
ஆயிரமான -திருமேனிகள் திருத் தொடைகள் திருக்கைகள் இத்யாதி -திரு நாமங்கள் –
அனைத்தையும் தரிக்கும் அவனுக்கு நமஸ்காரங்கள்
ஸஞ்ஜய உவாச-
யத்ர யோகேச்’வர: க்ருஷ்ணோ
யத்ர பார்த்தோ தனுர்த்தர: |
தத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர்
த்ருவா நீதிர் மதிர் மம ||29-
இது என்னுடைய மதம்-நான் கண்ட நல்லதுவே
பார்த்த சாரதி பெயரிலே பாதி கொண்டானே
ஸ்ரீ பகவானுவாச-
அனன்யாஸ் சிந்தயந்தோமாம்
யே ஜனா: பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபி யுக்தாநாம்
யோக க்ஷேமம் வஹாம் யஹம் ||30
பரித்ராணாய ஸாதூனாம்
விநாசா’ய ச துஷ் க்ருதாம் |
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய
ஸம்பவாமி யுகே யுகே ||31
ஸ்ரீ கீதா ஸ்லோகங்களை இங்கு சேர்த்து அனுசந்தேயம்-கத்ய த்ரயத்திலும் இதே போல் உண்டே
ஆர்த்தா விஷண்ணா: சி’திலாஸ்ச பீதா:
கோரேஷுச வ்யாதிஷு வர்த்தமானா: |
ஸங்கீர்த்ய நாராயண ச’ப்த மாத்ரம்
விமுக்தது: கா: ஸுகினோ பவந்து ||32
திருநாம சப்தம் ஒன்றாலே -துடிப்பு -குழப்பம் -மனம் உடைந்து -பயம் மிக்கு வியாதில் அகப்பட்ட -அனைத்தும் தொலைந்து நித்ய ஸூ கம் ஏற்படும்
அந்த அன்னை நரகம் புகாள் போல் இங்கும்
காயேன வாசா மனஸாஇந்த்ரியைர்வா
புத்த்யாத்மனாவா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி..
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் அஸ்து
இதி ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.
————————————————
ஸுதர்சனம் சக்ரம்
ஸ்புரத் ஸஹஸ்ரார ஸுகாதி தீவ்ரம்
ஸுதர்ஸநம் பாஸ்கர கோடி துல்யம்
ஸுரத்விஷாம் ப்ராணவிநாஸி விஷ்ணோ:
சக்ரம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே
மிமிதீச்சுடரைப் போல பல மடங்கு ஒளி விட்டு பிரகாசிப்பதும், வல்லமை பொருந்தியதும்,
கோடி சூரியர்களின் கதிர்கள் ஒன்றாகத் திரண் டது போல பிரகாசமானதும் –
ஸுரத்விஷாம்-அசுரர்களை ப்ராணவிநாஸி-நாசப்படுத்துவதுமான ஸ்ரீவிஷ்ணு பகவானின் சுதர்சனம் என்னும் சக்கரத்தைப் போற்றி வணங்குகிறேன்.
ஆயிரமாயிரம் ஆதவன் கதிரென–சுதர்சனம் சொலித்திடும் தீச் சுடராய் –
தேவர் தம் பகைவரை அழித்து நிற்கும் பெருமான் கைச் சக்க்ரத்தைச் சரணடைவோம்
பாஞ்சஜன்யம் சங்கு
விஷ்ணோர் முகோத்தாநில பூரிதஸ்ய
யஸ்ய த்வநிர் தானவ தர்ப்பஹந்தா:
தம் பாஞ்ச ஜன்யம் சசி கோடி சுப்ரம்
சங்கம் ஸதா அஹம் சரணம் ப்ரபத்யே
மகாவிஷ்ணுவின் பவளச் செவ்வாய் வழியே வெளிவரும் பூரிதஸ்ய-காற்றினால் ஒலி எழுப்பப்படுவதும் தன் கம்பீர ஓசையால் –தானவ தர்ப்பஹந்தா-அசுரர்களுக்கு ஒலி அச் சத்தைக் கொடுக்கக்கூடியதும், சுப்ரம்-வெண்மை வண் ணத்தில் சசி கோடி –ஒரு கோடி நிலவுகளின் ஒளிக்கு ஈடானதுமான பாஞ்சஜன்யம் என்ற சங்கை எப்போதும் சரணமடைகிறேன்.
கடலில் பிறந்து பாஞ்சஜன்யம் உடலில் வளர்ந்து
கோடி மதியின் வெள்ளொளியாய் – பெருமான் கோவைச் செவ்வாய் காற்றொலியால் தானவர் தன்குலம் கலங்கடிக்கும் – சங்கு பாஞ்சஜன்யத்தைச் சரணடைவோம்
தாமஸ அஹங்காரத்துக்கு பிரதிநிதி
பஞ்ச பூதங்கள் பஞ்ச தன்மாத்திரைகள் பிறக்கும்
த்வனி அதனால்
கௌமோதகம் கதை
ஹிரண் மயீம் மேரு ஸமான ஸாரம்
கௌமோதகீம் தைத்ய குலைக ஹந்த்ரீம்
வைகுண்ட வாமாக்ரகராபிம்ருஷ்டாம்
கதாம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே
புத்திக்கு -உறுதிக்கு பிரதிநிதி
பொன் மயமான மேரு மலையைப் போன்ற ஒளி யுள்ளதும், தைத்ய குலைக ஹந்த்ரீம்-அசுரர்களின் குலத்தையே அழிக்கக் கூடியதும், வைகுண்ட வாசனின் வாமாக்ர-இடது திருக்கை–நுனிகளின் ஸ்பரிச பாக்யம் பெற்றதுமாகிய கௌமேதகம் என்ற கதையை சதா சரணமடைகின்றேன்.
பொன்னென மின்னும் மேருவைப் போல் – கெட்ட தைத்யர் தன் குலம் அழித்து நின்று வைகுந்த வாசனின் கரந்தவழும் – கதை கௌமோதகீயைச் சரணடைவோம்
நந்தகம் வாள்
ரக்ஷோ ஸுராணாம் கடிநோக்ர கண்டச்
சேத க்ஷரச் சோணித திக்த தாரம்
தம் நந்தகம் நாம ஹரே ப்ரதீப்தம்
கட்கம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே
ஞானம் வித்யை -பிரதிநிதி
அஞ்ஞானம் உறை
வாள் உறையில்
ஞானான் மோக்ஷம்
கொடிய அரக்கர்களின் கழுத்தைத் துண்டிப்ப தால் பிரவாகிக்கும் ரத்தத்தில் மூழ்கி செந்நிற ஒளியுடன் காட்சி தரும் நந்தகம் என்னும் பெயருடைய வீர வாளை என்றும் சரணமடை கிறேன்.
தேவர் தம் குடியை காத்திடவே – கொடிய ராக்கதர் தந்தலை கொய்தவர் தம்-உதிரத்தில் குளித்த செவ் வாளாம்-நந்தகம் தன்னை சரணடைவோம்
சார்ங்கம் வில்
யஜ் ஜ்யாநீ நாத ஸ்ரவணாத் ஸுராணாம்
சேதாம்ஸி நிர் முக்த பயாநி ஸத்ய:
பவந்தி தைத்யாஸநி பாண வர்ஷ
ஸார்ங்கம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே
ஸாத்விக அஹங்காரத்துக்கு பிரதிநிதி வில்-பஞ்ச கர்ம ஞான இந்திரியங்கள்-அம்புகள்
அஸநி பாண வர்ஷ -இடி போன்ற அம்பு வர்ஷம்
தேவர்களின் மனதிலிருந்து அச்சத்தைப் போக்குவதும், எதிரிகளை அச்சுறுத்துவதுமான-யஜ் ஜ்யாநீ நாத- நாணோசை உடையதும், மின்னல் ஒளி வேகத்தில் அம்புகளை மாரியாகப் பொழியக் கூடிய வல்லமை மிக்கதுமான சார்ங்கம் என்னும் வில்லை எப் போதும் சரணமடைகிறேன்.
மின்னலாய் பய இருள் போக்கி நின்று – பகைவர் பின்னமாய் இடிந்திட நாணொலிக்க சாரமாய் அம்பு மாரியை பொழிந்திடும் சாரங்கத்தை என்றும் சரணடைவோம்
இமம் ஹரே: பஞ்ச மஹாயுதாநாம
ஸ்தவம் படேத் யோ அநுதிநம் ப்ரபாதே
ஸமஸ்த து:காநி பயாநி ஸத்ய:
பாபாநி நஸ்யந்தி ஸுகாநி ஸந்தி
ஸத்ய:-உடனே
பயாநி-பாபாநி-அனைத்துக்கும் பஹு வசனம்
உயர்வானவையும் பரந்தாமனின் கரங்களில் இருக்கும் பாக்யத்தைப் பெற்றவையுமான பஞ்ச மகா ஆயுதங்களைப் போற்றும் இந்தத் துதியை தினந்தோறும் படித்து வணங்குபவர்களும் அதைக் கேட்பவர்களும் எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபட்டு சகல பாக்யங்களையும் அடைகின்றனர்.
காலையில் அனு தினம் கருத்துடனே – ஆயுத மாலையிதை ஓதி நின்றால் துன்பங்கள் அனைத்தும் நீங்கி யிங்கு – நித்ய தூயன் அருளில் துய்த்திடலாம்.
வநே ரணே சத்ரு ஜலாக்நி மத்யே
யத்ருச்ச யாபத்ஸு மஹா பயேஸுமி
இதம் படன் ஸ்தோத்ர மாகுலாத்மா
ஸுகி பவேத் தத் க்ருத ஸர்வரக்ஷ:
வனங்களிலும் யுத்த யூமியில் சத்ருக்களின் மத்தியிலும், எதிர்பாரா விபத்துகளின் போதும், அதீத பயத்தின் போதும் இந்தத் துதியைச் சொன்னாலும் படித்தாலும் ஆபத்துகளிலிருந்து விடுபட்டு சகல நன்மைகளையும் அடைவர்.
போரினில் எதிரிகள் சூழ்ந்திடினும் – கெட்ட பேரிடர் பொழுதின் பயங்களிலும் தோத்திரம் இதனை ஓதி நின்றால் – சுகம் மாத்திரம் கிட்டிங்கு வாழ்ந்திடலாம்.
———————–
|| ஸ்ரீ த்வாதச நாம பஞ்ஜரம் ||(பஞ்ஜரம்-கூண்டு )
புரஸ்தாத் கேசவ: பாது சக்ரீ ஜாம்பூநதப்ரபு: |
பஸ்சாந் நாரயண: சங்கீ நீலஜீமூத ஸந்நிப: || 1 ||
இந்தீவர தளஸ்யாமோ மாதவோர்த்வம் சுதாதர: |
கோவிந்தோ தக்ஷிணே பார்ச்வே-
-தந்வீ சந்த்ரப்ரபோ மஹாந் || 2 ||
உத்தரே ஹலப்ருத் விஷ்ணு: பத்பகிஞ்ஜல்க ஸந்நிப: |
ஆக்நேயாம் அரவிந்தாபோ முஸலீ மதுஸூதன: || 3 ||
த்ரிவிக்ரம: கட்கபாணிர் நிர்ருத்யாம் ஜ்வலநப்ரப: |
வாயவ்யாம் வாமநோ வஜ்ரீ தருணாதித்ய தீப்திமாந் || 4
ஜசாந்யாம் புண்டரீகாப: ஸ்ரீதர: பட்டஸாயத: |
வித்யுத்ப்ரபோ ஹ்ருஷீகேசோ– ஹ்யவாச்யாம் திசிமுத்கரீ || 5 ||
ஹ்ருத்பத்மே பத்மநாபோ மே ஸஹஸ்ரார்க்க ஸமப்ரப:|
ஸர்வாயுத: ஸர்வசக்தி: ஸர்வக்ஞ: ஸர்வதோமுக: || 6 ||
இந்த்ரகோபக ஸங்காச: பாசஹஸ்தோ ऽபராஜித: |
ஸ பாஹ்யாப்யந்தரம் தேஹம்-
– வ்யாப்ய தாமோதரஸ்தித: || 7 ||
ப்ரவிஷ்டோऽஹம் ந மே கிஞ்சித் பயமஸ்தி கதாசந: || 8 ||
பயந்நாஸ்தி கதாசந ஓம் நம இதி |
|| ஸ்ரீ த்வாதச நாம பஞ்ஜரம் ஸம்பூர்ணம் ||
——————-
புரஸ்தாத் கேசவ பாது , சக்ரீ ஜாம்பு நாத பிரபா, பச்சன் நாராயண சங்கீ நீலா ஜீமூத சன்னிபா. 1
கிழக்கே முகமாய், உருகிய தங்கச் சக்கரத்தை ஏந்திய -பொன்னின் நிறம் கொண்டவன் என்றுமாம் -கிலேச நாசகன் -கேசவனால் நான் காக்கப்படுகிறேன், மேற்கில் நான் நாராயணனால் காக்கப்படுவேன்.-சங்கு வைத்திருப்பவர், செழுமையான நீலமேகத்தை ஒத்தவர்.
இந்தீவர தல ஷ்யாமோ மாதவோ ஊர்த்வா கதாதர,
கோவிந்தோ, தக்ஷிணே பார்ஸ்வே தந்வீ சந்த்ர ப்ரபோ மஹான். 2
உச்சியில் இருந்து, நீல அல்லி நிறமும் கதையைத் தரித்தவராய் கொண்ட மாதவனால் என்னைக் காக்கட்டும்,
தெற்கில் சந்திரனின் குளிர்ந்த பிரகாசத்தை உடையவனும் அம்பு ஏந்தியவனுமான கோவிந்தனால் என்னைக் காக்கட்டும்.
உத்தரே ஹல ப்ருத் விஷ்ணு, பத்ம கிஞ்சல்க சன்னிபா,
ஆக்நேயம் அரவிந்தபோ முசலீ மதுசூதனா. 3
வடக்கே என்னை விஷ்ணு பகவான் காக்கட்டும்.
தாமரை இழையின் நிறமுடையவனும், கலப்பையை வைத்திருப்பவனும்,
தென் கிழக்கில், தாமரையைப் போன்றவனும், ஏந்தியவனுமான மதுவைக் கொன்றவனே என்னைக் காக்கட்டும்.
த்ரிவிக்ரம கட்க பாணி, நிர்யாத்யம் ஜ்வலனா பிரபா,
வாயவ்யம் வாமனோ வஜ்ரி தருணாதித்ய தீப்திமான். 4
தென் மேற்கில் திரிவிக்ரமனால் என்னைக் காக்கட்டும்.
வாளை ஏந்தி நெருப்பு போல் பிரகாசிப்பவன்,
வட மேற்கில் வாமனனால் காக்கப்படுபவன்,
வஜ்ராயுதம் ஏந்தி இளம் சூரியனைப் போல் பிரகாசிப்பவன்.
ஜசாந்யாம் புண்டரீகாப: ஸ்ரீதர: பட்டஸாயத: |
வித்யுத் ப்ரபோ ஹ்ருஷீகேசோ– ஹ்யவாச்யாம் திசிமுத்கரீ || 5 ||
வட கிழக்கில் தாமரையின் நிறமும் ஈட்டியும் ஏந்திய ஸ்ரீதரால் என்னைக் காக்கட்டும்,
கீழே இருந்து மின்னலைப் போலவும் சம்மட்டியை -சுத்தியலைப் பிடித்தவனுமான ஹிருஷிகேசனால் என்னைக் காக்கட்டும் .
ஹ்ருத் பத்மே பத்மநாபோ மே ஸஹஸ்ர அர்க ஸம ப்ரபா, ஸர்வாயுத ஸர்வ சக்தி ஸர்வஜ்ஞ ஸர்வதோ முக. 6
கோடி சூரியங்களின் பிரகாசத்துடன், என் இதயத்தை ஆக்கிரமித்து, அனைத்து ஆயுதங்களுடனும், அனைத்து சக்திகளுடனும், அனைத்தையும் அறிந்தவராகவும், பத்மநாபா பகவான், எல்லாத் திசைகளிலும் முகங்களுடன் என்னை எப்போதும் காக்கும்.
இந்த்ர கோப ஸங்காஸ பாஸ ஹஸ்தோ அபராஜித,
ஸ பாஹாய அந்தரம் தேஹம் வ்யாப்ய தாமோதர ஸ்திதா. 7
எனக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் தாமோதரன்,
பட்டாம் பூச்சி வண்ணம் -நீலத் தேனீயின் நிறத்தை உடையவனும்,
கைகளில் பாசக் கயிறுகளை உடையவனும்,
வெல்ல முடியாதவனுமான தாமோதரன் என்னை எப்போதும் காக்கட்டும்.
ஏவம் ஸர்வத்ரம் அச் சித்ரம் நாம த்வாதச பஞ்சரம்,
ப்ரவிஷ்டோஹம் ந மே கிஞ்சித் பயமஸ்தி கதாச்சன. 8
இவ்வாறு உடைக்க முடியாத –அச் சித்ரம்-கவசத்துக்குள் கூண்டுக்குள் நுழைந்து,
எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் பன்னிரண்டு பெயர்களில்,
நான் எப்போதும் எல்லா இடங்களிலும் பாதுகாக்கப்படுகிறேன்,
பயம் நாஸ்தி கதாசன ஓம் நம இதி.
எந்த நேரத்திலும் பயப்பட வேண்டாம்.–நிச்சயம்
எந்த நேரத்திலும் பயம் இல்லை.
துஞ்சும் போது அழைமின் துயர் வரும் பொழுது நினைமின்
——————–
1) கேசவா – நீண்ட கேசத்தை உடையவன்; கேசி என்ற அரக்கனை வென்றவன்.-பிரமனுக்கும் சிவனுக்கும் ஈசன்
2) மாதவா – திருமகள் மணாளன்
3) நாராயணா – உயிருக்கு ஆதாரமாக இருப்பவன்
4) கோவிந்த-பூமியைப் பிரளயத்திலிருந்து காத்தவன்; பசுக்களை மேய்த்தவன்
5) விஷ்ணு – அனைத்துப் பொருள்களிலும் நிறைந்திருப்பவன்
6) மதுஸுந-இந்திரியங்களை ஈர்ப்பவன்; மது என்னும் அரக்கனை வென்றவன்
7) திரிவிக்ரமா – மூன்றடிகளால் உலகங்களை அளந்தவன்
8) வாமனா – குள்ளமான உருவம் உடையவன்
9) ஸ்ரீதரா – ஸ்ரீயான திருமகளைத் தரிப்பவன்
10) ருஷீகேசா – தன் ஆணைப்படி புலன்களை நடத்துபவன்
11) பத்மநாபா – நாபியில் தாமரையை உடையவன்
12) தாமோதரா-கயிற்றால் கட்டப்பட்ட தழும்பு கொண்ட வயிறு உடையவன்.
இப்பன்னிரு திரு நாமஙகளை “வைகுந்தவாசன், வாமனாவதாரன், கிருஷ்ணாவதாரன் நாமங்கள்” என மூன்று வகையாக பிரிக்கலாம்.
வைகுந்தவாசன்: நாராயணா, விஷ்ணு.
வாமனாவதாரன்: திரிவிக்ரமா, வாமனா.
கிருஷ்ணாவதாரன்: கேசவா, மாதவா, கோவிந்தா, மதுசூதனா, ஸ்ரீதரா, ருஷீகேசா, பத்மநாபா, தாமோதரா.
துவாதச புண்டரம் :
[ஶ்ரீசூர்ணம் (தாயார்) – திருமண் (பெருமாள்) – ஸ்தாநம் – நிறம்]
நீள்திரு மார்பில் மலர்மகள்சேர் — வேள்வித்தீ
பொன்னன்! அடியார் திரு நெற்றிக் கேசவன் !
அன்னை சிரிதேவி யாம்!
மங்கலத் தாளினன்! தேவியும் — பொங்கலைவாய்
தோன்றினாள்! வான்நீல வண்ணத்தெம் அண்ணல்மால்
ஒன்றுமிடம் பத்தர்(மேல்) வயிறு!
கமலையும் சேரிடம் மார்பு!
ஸ்ரீ ராம த்யான ஸ்லோகங்கள்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம் யஹம் ||
ஆர்த்தாநாம் ஆர்த்தி ஹந்தாரம் பீதனாம் பீதி நாச’னம் |
த்விஷதாம் கால தண்டம் தம் ராமசந்த்ரம் நமாம்யஹம் ||
அந்த ஸ்ரீ ராமசந்த்ரனை நமஸ்கரிக்கிறேன்
கண்டித அகில தைத்யாய ராமாயா ‘ஆபந் நிவாரிணே ||
சரங்கள் பூட்டியே உள்ள ஸ்ரீ கோதண்ட ராம சந்த்ரனை நமஸ்கரிக்கிறேன்
ரகு நாதாய நாதாய ஸீதாயா: பதயே நம: ||
அந்த ஸ்ரீ ஸீதா ராமத் சந்த்ரனை நமஸ்கரிக்கிறேன்
ஆகர்ண பூர்ண தன்வாநௌ ரக்ஷேதாம் ராம லக்ஷ்மணௌ ||
அடியேனை எல்லா திக்குகளிலும் ரக்ஷித்து அருளட்டும்
கச்சன் மம அக்ரதோ நித்யம் ராம: பாது ஸ லக்ஷ்மண: ||
கவசம் அணிந்து வாளும் வில்லும் அம்புடன் அடியேனுடன்
எந்நேரமும் எனக்குப் பாதுகாப்பாக கூட வரும்
ராமா லஷ்மணா அடியேனை ரக்ஷித்து அருள்வீராக
அகார உகார மகாரங்கள் ராமன் சீதா லஷ்மணன் ஓங்காரம் போல் நடந்து –
ஸன்னத்த-விழிப்புடன் முதலிகளை கடற்கரையில் ரஷித்த்தை நினைத்து தஞ்சம்
அச்யுதாநந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத் |
நச்’யந்தி ஸகலா ரோகா: ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம் ||
அச்யுதாநந்த கோவிந்த-ஆசமனம் பண்ணும் பொழுது சொல்லும் மூன்று திரு நாமங்கள் –
திரு நாம உச்சாரணமே மருந்து
அனைத்து ரோகங்களுக்கும் இதுவே மருந்து -ஸம்ஸாரமும் போகுமே
ஸத்யம் ஸத்யம் புனஸ் ஸத்யம் உத்ருத்ய புஜமுச்யதே |
வேதாச்’சா’ஸ்த்ராத் பரம் நாஸ்தி ந தைவம் கேச’வாத் பரம் ||
கையைத் தூக்கி ஸத்யம்
வேதம் ஒன்றே ஸாஸ்த்ரம்
கேசவன் ஒருவனே தெய்வம்
ச’ரீரே ஜர்ஜரி பூதே வ்யாதி க்ரஸ்தே களே பரே |
ஔஷதம் ஜாந்ஹவீ தோயம் வைத்யோ நாராயணோ ஹரி: ||
ஸ்ரீ பாத தீர்த்தம் கங்கை
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்-யார் மருந்து இனி யாகுவார்
ஜாந்ஹவீ தோயம்-கங்கை கங்கை என்னும் வாசகத்தால் கருவினை களையலாம்
ஆலோட்ய ஸர்வ சா’ஸ்த்ராணி விசார்ய ச புன: புன: |
இதமேகம் ஸுநிஷ் பந்நம் த்யேயோ நாராயணோ ஹரி: ||
காரணந்து த்யேய
சிற்ற வேண்டாம் சிந்திப்பே அமையும்
காயேந வாசா மநஸா இந்த்ரியைர்வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||
யதக்ஷர பத ப்ரஷ்டம் மாத்ரா ஹீனம்து யத் பவேத் |
தத் ஸர்வம் க்ஷம்யதாம் தேவ நாராயண நமோஸ்துதே ||
குற்றங்களுடன் சொன்னோம்
எழுத்து-சொல் அசை உச்சரிப்பு -மாத்ரா -இவற்றால் பலவும் செய்துள்ளோம்
நாராயணனே க்ஷமிக்கட்டும்
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே –குறைவாகச் சொன்னாலும் பேறு தப்பாதே
விஸர்க்க பிந்து மாத்ராணி பத பாத அக்ஷராணி ச |
ந்யூநாநி ச அதிரிக்தாநி க்ஷமஸ்வ புருஷோத்தம ||
ந்யூநாநி ச அதிரிக்தாநி-குறைத்தும் கூட்டியும் சொல்லி இருந்தாலும்
——————————————-
ஸ்ரீ இராமாயண அனுபவ துவாதச நாம ஸ்தோத்ரம் -ஸ்ரீ உ -வே -கார்ப்பங்காடு ஸ்வாமிகள் –
ஸ்ரீ ராம தாசரதே ஸ்ரீ மன் பரத ப்ரிய ஸத்ரு ஹந்த
ஸூ க்ரீவ மித்ர லங்க அக்நே ராஜன் திவ்ய நமஸ்துதே –1-
நமஸ்கார ஆஸீஸ் ரூப மங்களம்
ஏழு காண்டங்கள் அர்த்த சுருக்கம்
ஸ்ரீ ராம தாசரதே ஸ்ரீ மன் -பால காண்ட சுருக்கம் -திரு அவதாரம் -ஸ்ரீ ஸீதா பிராட்டி திருமணம்
பரத ப்ரிய -அயோத்யா காண்டம் -பாரதந்தர்ய சிறப்பைக் காட்டும்
ஸத்ரு ஹந்த -ஆரண்ய காண்ட சுருக்கம்
ஸூக்ரீவ மித்ர -கிஷ்கிந்தா காண்ட சுருக்கம்
லங்க அக்நே -ஸூந்தர காண்ட சுருக்கம் -திருவடி மூலம் இலங்கா தகனம்
ராஜன் -யுத்த காண்ட சுருக்கம் -ஸ்ரீ பட்டாபிஷேகம்
திவ்ய -உத்தர காண்ட சுருக்கம் -தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளினது
நமஸ்துதே
———-
ஸ்ரீ கேஸவ
ஸ்ரீ மன் வரத தேவைஸ் த்வம் ப்ரஹ்மாத்யை ப்ரார்த்திதோ திவி
அவதீர்னோ தசராதாத் லோக த்ராணாய கேஸவ -2-
ஸ்ரீ ப்ரஹ்மாதிகளால் பிரார்த்திக்கப் பட்டு ஸ்ரீ வரத லோக ரக்ஷண அர்த்தமாகவே அன்றோ
ஸ்ரீ சக்ரவர்த்தி திரு மகனாய் அவதரித்து அருளினீர்
க இதி ப்ரஹ்மணோ நாம ஈஸோஹம் ஸர்வ தேஹி நாம்
ஆவரம் தவாங்கே ஸம்பூதவ் தஸ்மாத் கேஸவ நாம பாக்
———
ஸ்ரீ நாராயண
பிதுர் மதே ஸ்திதோ ராம ஸ அநுஐ கௌசிகம் கத
ததத்வரம ரக்ஷஸ் தவம் நாராயண ரிபோர் வதாத் -3-
தந்தை சொல் படி தம்பியுடன் விசுவாமித்திரர் யாக ரக்ஷணம் –
தாடகை ஸூபாஹு -நிரஸனம் -நார ரக்ஷணம் -என்பதால் நாராயண
—————-
ஸ்ரீ மாதவ
ஜனகஸ்ய மீ கே பங்க்த்வா துரா ரோபம் பரைர் தநு
ஸஹ தர்ம ஸரீம் ஸீதாம் பிராப்தஸ் த்வம் மாதவ ஸ்ரீயம் -4-
ஸ்ரீ சீதாப் பிராட்டியைத் திருக்கைப் பற்றி மாதவன் ஆனார்
———-
ஸ்ரீ கோவிந்த
கைகேய்யா ப்ரிய பர்த்ருஸ் த்வம் பிதுர் வசன கௌரவாத்
அபிஷேகம் ஹி கோவிந்த த்யக்த்வா ப்ராப்தோ வநம் முதா -5-
ஹர்ஷத்துடன் வனம் போய் புக்கு –
ராஜ்ஜியம் வா வன வாஸோ மஹோ தய
கோவிந்தா -காம் விந்ததீதி கோவிந்த -வாக்குகளை ரஷிப்பவன்
————
ஸ்ரீ விஷ்ணு
குஹம் க்ருதார்த்தம் குர்வம்ஸ் சித்ர கூடம் கதோ கிரிம்
பாதுகே பரத யாதா விஷ்ணு ஸர்வ அபி ரஷகே -6-
குஹனை க்ருதார்த்தன் ஆக்கி அருளி சர்வ ரக்ஷகமான ஸ்ரீ பாதுகையை பரதனுக்கு அருளி –
ஸ்ரீ விஷ்ணு ஆனீர்
——————–
ஸ்ரீ மது ஸூதனன்
விராதஸ்ய கராதீநாம் தமஸா மிவ பாநுமான்
சேத்தா க்ருத்ர பவஸ்யாபி விபாஸி மது ஸூதந -7-
விரோதன் கரன் போன்றவர் நிரஸனம்
ஜடாயு மோக்ஷம் -அருளியதால் மது ஸூ தனன் ஆனீர்
பிரகிருதி சம்பந்தம் போக்கி -விரோதி நிரஸந சீலத்வம்
—————-
ஸ்ரீ த்ரிவிக்ரம
ஸூக்ரீவேண க்ருபாவத்யை ஸீதாயை ப்ரேஷித கபி
த்ரி விக்ரம அப்திம் வவ்ருதே லங்கிதும் த்வமி வா த்வரே -8-
முதல் பிரிவால் சிறை இருந்தவள் கிருபையை வெளியிட்டு அருளி ஏற்றம் காட்டி அருளினாரே
உம்மைப் போலவே திருவடி வளர்ந்து அருளி த்ரிவிக்ரமனும் நீரே என்று காட்டி அருளினாரே
———-
ஸ்ரீ வாமன
லங்காம் விசித்ய ஹநுமான் த்வத் ரூபோ வாமன அகிலாம்
ஸீதாம் த்ருஷ்ட்வா அக்ஷதாம் தேவீம் ஜகாத ச தவ பிரியம் -9-
உம்மைப் போன்ற வடிவைக் கொண்டு உம்முடைய பிரியத்தை பிராட்டி இடம் அறிவித்த திருவடி
நியதாம் அக்ஷதாம் தேவீம் ராகவாய நிவேதயத் -கற்பு நிலை நின்றதைச் சொல்லிற்றே –
———-
ஸ்ரீ தர
ப்ரபந்நாப்ய தாயீ த்வம் ராவணா தீன் நிஹத்யச
அபி ஷிக்தஸ் ஸீத ஸ்த்வம் ஸ்ரீ தர ஆப்தோ மஹீ மிமாம் -10-
அபய பிரதானம் அளித்த சீர்மை
குண ஸ்ரீ -வீர ஸ்ரீ-ராஜ்ய ஸ்ரீ அனைத்தும் கொண்ட சீர்மை –
பட்டாபிஷேகம் செய்து அருளி பிராட்டி உடன் கூடிய சீர்மை –
————–
ஸ்ரீ ஹ்ருஷீ கேஸ
பார தந்தர்ய ப்ரகாசாய த்வத் விஹீ நாபி ஜாநகீ
கங்கா யாம் நாஜஹத் ப்ராணான் ஹ்ருஷீ கேஸ தவ ப்ரியா -11-
இரண்டாம் பிரிவால் பாரதந்தர்யம் வெளியிட்டு அருளினாள் பிராட்டி
அவனே ஹ்ருஷீ கங்களுக்கு எல்லாம் -ஞான கர்ம இந்திரியங்களுக்கும் அந்தக்கரணத்துக்கும்
அனைத்துக்கும் -ஈசன் –
——————–
ஸ்ரீ பத்ம நாப
ப்ரஹ்மாதீ நாம் ச ஸர்வேஷாம் பஸ்யதாம் ஜாநகீ தவ
ப்ரகாஸ்யா நாய சேஷத்வம் பத்ம நாப புவம் கதா –12-
மூன்றாம் பிரிவால் -அநந்ய சேஷத்வம் –பத்ம சம்பவனான -ப்ரஹ்மாதிகள் பார்க்க
பூமிக்குள் சென்று வெளியிட்டு அருளினாள்
நாபி பத்ம கமலம் உடைய பத்ம நாபன் –
————————–
ஸ்ரீ தாமோதர
த்வம் ஸிராத் பரிபால் யாத ஸா கேதம் தச் சராசரை
ப்ரஹ்மாத் அபிஷ்டுத ப்ராப்த நாகம் தாமோதர ஸ்வகம் -13-
துக்க பூயிஷ்டமான இருள் தரும் மா ஞாலத்தில் அவதரித்ததே ஸுலப்யம் காட்டவே தாமோதரா
அன்று சாரா சரங்களை வைகுந்தத்து ஏற்றி அருளி
ப்ரஹ்மாதிகள் ஸ்துதி செய்ய ஸ்வ பரம பதம் எய்திற்றே –
————-
ஏதத் துவாதச நாமார்ந்த தேவ ராஜ வர பிரத
ஸர்வதா தவ ஸர்வம்ச ஸர்வேப்யோபி பவேஸ் ஸூபம் –14-
ஸ்ரீ தேவாதி தேவனே எல்லா வற்றாலும் மங்களம் உண்டாகட்டும் –
———————————-
நெற்றியில் இடும் திருநாமம். பகவானின் திருவடிகளையே குறிக்கும்.
அதை மெய்ப்பிக்கும் வகையில் வெள்ளை நிறக்கோடுகள் இரு பக்கமும் இருக்கும்.
நடுவிலே சிவப்பு நிற ஸ்ரீ சூர்ணம் மகா லட்சுமியை குறிக்கும்.
தான் திருமாலின் அடியவர் என்பதைக் காட்டும் விதமாகவும், அவரது திருவடியை தன் தலைக்கு மேல் ஏந்திக்கொள்கிறேன் என்று கூறுவதுமாகும்.
நெற்றியுள் நின்றென் னை யாளும் நிரை மலர்ப் பாதங்கள் சூடி,
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ணபிரானைத் தொழுவார்,
ஒற்றைப் பிறை யணிந்தானும் நான்முகனும் இந்திரனும்,
மற்றை யமரருமெல்லாம் வந்தென துச்சி யுளானே.
-என்று நம்மாழ்வார் நெற்றியில் திருநாமம் இட்டுக் கொள்வதில் பெருமையை பறை சாற்றுகிறார்.
திருநாமம் இடும்போது நடுவே இடும் ஸ்ரீ சூர்ணம் மகாலட்சுமியோடு பகவான் கூடி இருக்கிறார் என்று காட்டுகிறது.
திருநாமத்தை இடும்போது கீழியிருந்து மேல் நோக்கி இடுகிறோம். இது நாமம் இடுபவருக்கு மேன்மையான எண்ணங்களை உருவாக்கும்.
வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு அதாவது அவரது நிலையை மேல்நோக்கி கொண்டு செல்லும்.
திருநாமத்தை நெற்றியில் மட்டுமன்றி உடலில் பல்வேறு இடங்களில் இட்டுக்கொள்ளலாம். அதாவது 12 இடங்களில் திருநாமம் இடவேண்டும்.
ஒவ்வொரு பகுதியிலும் திருநாமம் இடும்போது பகவான் நாமத்தை சொல்ல வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு நாமம்.
நெற்றி – கேசவன்
வயிற்றின் மத்தியப்பகுதி – நாராயணன்
மார்பு மத்தியப் பகுதி – மாதவன்
கழுத்து மத்தியப் பகுதி – கோவிந்தன்
வயிற்றின் வலதுபுறம் – விஷ்ணு
வலது தோள் – மதுசூதனன்
வலது கழுத்து – திருவிக்ரமன்
இடது வயிறு – வாமனன்
இடது தோள் – ஸ்ரீ தரன்
இடது கழுத்து – ரிஷிகேசன்
கீழ்முதுகு – பத்மநாபன்
கழுத்துக்கு பின்புறம் – தாமோதரன்
என சொல்ல வேண்டும்.
இதுபோல் ஸ்ரீ சூர்ணம் இடும் போதும் மகாலட்சுமி தாயாரின் பன்னிரெண்டு நாமங்களை கூற வேண்டும்.
நெற்றி – ஸ்ரீ
வயிற்றின் மத்தியப்பகுதி – அம்ருத்தோற்பவா
மார்பு மத்தியப் பகுதி – கமலா
கழுத்து மத்தியப் பகுதி – சந்திரசோபனா
வயிற்றின் வலதுபுறம் – விஷ்ணு பத்தினி
வலது தோள் – வைஷ்ணவி
வலது கழுத்து – வராரோஹா
இடது வயிறு – ஹரி வல்லபா
இடது தோள் – சார்ங்கிணி
இடது கழுத்து – தேவ தேவிகா
கீழ்முதுகு – மகா லட்சுமி
கழுத்துக்கு பின்புறம் – லோகசுந்தரி
திருநாமம் அணிந்த பிறகு கை அலம்பக்கூடாது.
திருமாலும் திருநாமம் இடுவதன் காரணம், தனது பக்தர்கள் எதைச் செய்தாலும் அதை தானும் செய்து பார்த்து மகிழ்வதுதான் திருமாலுக்கு விருப்பமானது.
அந்த வகையில் அவரும் நாமம் இட்டுக்கொள்கிறார்.
தானே தனது திருவடிகளை நெற்றியில் நாமமாக இட்டுப் பார்க்கிறார்
த்ரைலோக்ய பூஜிதே தேவி கமலே விஷ்ணு வல்லபே
யதாத்வாம் ஸூஸ்திரா கிருஷ்ணே ததா பவ மயி ஸ்திரா
ஈஸ்வரீ கமலா லக்ஷ்மீஹ் சலா பூதிர் ஹரி ப்ரியா
பத்மா பத்மாலயா ஸம்யக் உச்சைஹ் பத்ம தாரிணீ ||–ஸ்ரீ லக்ஷ்மி த்வாதச நாம ஸ்தோத்ரம்.
ஸ்ரீ தேவிம் பிரதமம் நாமம்
த்விதீயம் அம்ருத உத்பவ
த்ருதீயம் கமலா ப்ரோக்தா
சதுர்த்தம் சந்த்ர சோபனா
பஞ்சமம் விஷ்ணு பத்னீ ச
ஷஷ்டம் வைஷ்ணவீ ததா
சப்தமம் து வராரோஹா
அஷ்டமம் ஹரி வல்லபா
நவமம் சார்ங்கிணீ
தசமம் தேவ தேவிகா
ஏகாதசம் மஹா லஷ்மீ
த்வாதசம் லோக ஸூந்தரீ –-ஸ்ரீ லஷ்மீ ஹ்ருதய ஸ்தோத்ரம்
ஸ்ரீ தேவீ பிரதமம் நாம த்விதீய அம்ருதோத்பவா
திருதீயம் கமலா ப்ரோக்தா சதுர்த்தியும் லோக ஸூந்தரீ
பஞ்சமம் விஷ்ணு பத்நீ ச ஸஷ்டம் ஸ்யாத் வைஷ்ணவீ ததா
ஸப்தமம் து வராரோஹா அஷ்டமம் ஹரி வல்லபா
நவமம் ஸார்ங்கிணீ ப்ரோக்தா தஸமம் தேவ தேவிகா
ஏகாதஸம் து லஷ்மீ ஸ்யாத் த்வாதஸம் ஸ்ரீ ஹரி ப்ரியா
த்வாதஸை தாநி நாமாநி த்ரி ஸந்த்யம் ய படேந் நர
ஆயுர் ஆரோக்யம் ஐஸ்வர்யம் தஸ்ய புண்ய பல பரதம் –இதி லஷ்மீ த்வாதஸ நாம ஸ்தோத்ரம்
—————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply