3-ஜயத்யஜோ அகண்ட குணோருமண்டல ஸ்தோதித க்ஞான மரீசிமாலி
ஸ்வபக்த ஹார்தோஸ்ச தமோ நிஹந்தா வ்ய்ஸாவதாரோ ஹரிராத்ம பாஸ்கர: II
குணபூர்ணர் (அகண்ட=அளவில்லா) ஞானம் தரவல்லவர்.,:,சூரியன் போன்றவர்.,எப்படிப்பட்ட சூரியன்? தமது பக்தர்களின் இதயத்தில் இருக்கும் தமோகுணம் என்னும் இருட்டைப் போக்கவல்ல சூரியன் அப்படிப்பட்ட ஸ்ரீஹரியின் அவதாரமேயான ஸ்ரீவியாஸரைப் பூஜிக்கிறேன்.,
நாராயணம் ஸுரகுரும் ஜகதேக நாதம்
பக்தப்ரியம் ஸகலலோக நமஸ்க்ருதம் ச I
த்ரைகுண்ய வர்ஜிதம் அஜம் விபும் ஆத்யம் ஈசம்
வந்தே பவக்னம் அமராஸுர ஸித்த வந்த்யம் II
ஸ்ரீமத்வாச்சார்யார் இந்த கிரந்தத்தில் ஸ்ரீவேதவ்யாஸர்.,ஸ்ரீராமர்., ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோரை நமஸ்கரித்து மூன்று திவ்யமான ஸ்லோகங்களைச் செய்து கொடுத்திருக்கிறார்.,அவர்களை முறையே சூரியன்., சந்திரன்., ஸமுத்திரம் ஆகியவைகளுக்கு ஒப்பிட்டு புகழ்ந்து பாடியிருக்கிறார்.
1.ஸ்ரீவேதவ்யாஸர் துதி:-
ஜயத்யஜோ அகண்ட குணோருமண்டல :ஸதோதிதோ ஞானமரீசிமாலி I
ஸ்வபக்த ஹார்தோஸ்ச தமோநிஹந்தா வ்யாஸாவதாரோ ஹரி: ஆத்ம பாஸ்கர: II
2.ஸ்ரீராமர் ஸ்துதி:-
ஜயத்யஜோ அக்ஷீண ஸுகாத்மபிம்ப: ஸ்வைஸ்வர்ய காந்தி ப்ரதத: ஸதோதித:I
ஸ்வபக்த ஸந்தாப துரிஷ்டஹந்தா ராமாவதாரோ ஹரிரீச சந்த்ரமா:II
3.ஸ்ரீகிருஷ்ணஸ்துதி:-
ஜயத்ய ஸங்க்யோருபலாம்புபூரோ குணோச்சரத்னாகர ஆத்மவைபவ:II
ஸதா ஸதாத்மக்ஞானதீபிராப்ய: க்ருஷ்ணாவதாரோ ஹரிரேகஸாகர: II
இந்த மூன்று ஸ்லோகங்களையும் ஒருசேரச் சொல்வதனால் நமக்கு ஒரே நேரத்தில்., ஸ்ரீடீகாச்சார்யர்.,ஸ்ரீமத்வாச்சார்யர்., ஸ்ரீராம.,கிருஷ்ண., வேதவ்யாஸதேவர்களின் ஸ்மரணையும்., கிருபையும் கிடைத்து விடுகிறது.,
ராமாயணத்தில் சூர்ப்பணகை ஸ்ரீராமரிடம் வந்து தன்னைக் கல்யாணம் செய்துகொள்ளும்படிக் கேட்கிறாள்.,இதை ஒரு அழகான உவமையைக் கூறி விவரிக்கிறார் ஸ்ரீமத்வாச்சார்யார்.,
ஸ்லோகம்:-
ராமம் ஸமேத்ய பவ மே பதிரித்யவோசப்தானும் யதா தம உபேத்ய ஸுயோககாமும்.,
என்ன அர்த்தம்?.,
ராமனிடம் வந்து தன்னைக் கல்யாணம் செய்துகொள்கிறாயா என்று அவள் கேட்டது.,இருட்டு(Darkness) சூரியனிடம் வந்து தன்னைக் கல்யாணம் செய்துகொள் என்று கேட்டது போல் இருக்கிறது என்கிறார் ஸ்ரீமதாச்சார்யர்.!.,
——–
சம்ஸ்கிருதத்தில் ஹார்த்(dh) என்பது இதயம்., இங்கிலீஷ்காரன் இதையே ஹார்ட்(heart) என்று காப்பி அடித்திருக்கிறான்
துவைத ஸித்தாந்தப்படி பிரம்ம சூத்திரங்கள் மொத்தம் 564.,அத்வைதசாஸ்திரம் இதை 555 என்றும்.,விசிஷ்டாத்வைதம் 545 என்றும் கூறுகிறது.
நான்கு அத்தியாயங்கள் முறையே.,1.ஸமன்வய அத்யாயம்.,2.அவிரோத அத்யாயம்.,3.ஸாதனா அத்யாயம்.,4.பலா(phalaa) அத்யாயம்.,
மூன்றாவது அத்தியாயமான ஸாதனா அத்யாயத்தில் நான்கு பாதங்கள் முறையே 1.வைராக்கியம்.,2.பக்தி 3.உபாஸனை 4.க்ஞானம் என்பன.,அதேபோல நான்காவது அத்யாயமான பலாத்யாயத்தில் நான்கு பாதங்கள் முறையே 1.கர்மக்ஷயம் 2.உத்க்ராந்தி 3.மார்க்கம் 4.போகம் (bhogam) என்பனவாகும்.,
1.பாஷ்யம்.,என்பது மூல நூலுக்கு விளக்க உரை.,
2.டீகா அல்லது டீகை., இது பாஷ்யத்துக்கு விளக்க நூல் அல்லது commentary.,
3.டிப்பணி : இது மேலே சொன்ன டீகை என்னும் புஸ்தகத்தில் சொல்லப்பட்ட விவரங்களுக்கு தரப்படும் விளக்கங்கள்.,ஆங்கிலத்தில் elucidation என்பார்கள்.,
4.சில சமயம் டிப்பணியில் இருக்கும் விஷயத்தைப் புரிந்துகொள்ள டிப்பணிக்கு ஒரு டிப்பணி இருக்கும்.,இதற்கு further elucidation என்று சொல்லலாம்
சுமார் 2000 ஸ்லோகங்கள் கொண்ட ஸ்ரீமத்வரின் சூத்ர பாஷ்யம் ஸ்ரீவேதவ்யாஸதேவர் அருளிய பிரம்ம சூத்ரங்கள் ஒவ்வொன்றிற்கும் விளக்கம் அளிக்கிறது
ஸ்ரீமத்வாச்சார்யர் பத்ரி க்ஷேத்ரத்துக்குச் சென்று திரும்பியபின் சூத்ரபாஷ்யம் எழுதினார்., இந்த கிரந்ததத்தை அவ்ர் சொல்லச்சொல்ல அவருடைய சிஷ்யரான ஸ்ரீசத்ய தீர்த்தர் அதைச் சுவடியில் வடித்தார்.,பின்னர் கோதாவரி நதி தீரத்தில் ஒரு வித்வத்ஸபை நடந்தது.,அங்கு இந்த புனிதமான கிரந்தம் அரங்கேறியது., அப்போது ஸோபன பட்டர் என்னும் அத்வைத வித்வான் ஸ்ரீமத்வரிடம் வாதம் செய்து பின்னர் ஸ்ரீமத்வரின் தத்வங்களை ஒப்புக்கொண்டு ஆசார்யரின் சீடராக ஆனார்., அதுமட்டுமின்றி ஆசார்யரின் துவைத ஸித்தாந்தத்தை நாடெங்கும் பரப்பினார்., மேலும் இவர் ஆச்சார்யரின் சூத்ர பாஷ்யத்துக்கு தாமே ஒரு விளக்க உரை எழுதினார்.,இந்த நூலுக்கு ஸத் தர்க தீபாவளி என்று பெயர்.,,
முதல் அத்தியாயத்திற்கு ஸமன்வய அத்தியாயம் என்று பெயர்.,ஸமன்வயம் என்றால் Equating.,அல்லது equalizing என்று கூறலாம்., உலகில் உள்ள எல்லா சப்தங்களும்.,பெயர்களும் ஹரி.,ஸ்ரீமன்நாராயணனையே குறிக்கின்றன என்ற விஷயத்தை ஸ்ரீமத்வர் இதில் நிரூபணம் (prove) செய்திருக்கிறார்.,இதை ஸ்ரீஹரி.,ஸர்வசப்த வாச்யன் அல்லது ஸர்வ சப்த ஸமன்வயன் என்று கூறுகிறார்கள்.,சற்று விளக்கமாகச் சொல்வதென்றால் எல்லா வேத கோஷங்களும் .,வேத வாக்யங்களும் ஸ்ரீஹரியையே குறிக்கின்றன என்று நிரூபித்திருக்கிறார் ஸ்ரீமத்வர்.,
பரமாத்மா ஸ்ரீஹரி குணபரிபூர்ணன்.,அவனே இந்தப் பிரபஞ்சத்துக்கு ஸ்ருஷ்டி .,ஸ்திதி மற்றும் லயத்துக்கு (ஆக்கல்.,காத்தல்.,அழித்தல்) காரணகர்த்தா.,இது சரியல்ல என்று மறுப்பதற்கு நான்கு காரணங்கள் காட்டப்படுகின்றன.,அவை:-
1.அறிவு பூர்வமான மறுப்புகள்
2.(வேற்று) மதங்களின் நம்பிக்கைகள்.,ஸித்தாந்தங்கள்
3.வேத வாக்கியங்கள்
4.வேத வாக்கியங்களுடன் கூடிய அறிவு பூர்வமானமறுப்புகள்
இதற்கு சம்ஸ்கிருதத்தில் யுக்தி விரோதம்., சமய விரோதம்.,ச்ருதி விரோதம்.,யுக்தி ஸஹித ச்ருதி விரோதம் என்று சொல்கிறார்கள். இவைகளின் காரணமாக பரமாத்மாவைப் பற்றித் தவறான விவரணைகளும் அத்துடன் அவனிடம் ஒரு சில தோஷங்களும் கற்பிக்கப் படுகின்றன.,இந்த நான்கு விரோதங்களும் இந்த அத்தியாயத்தின் நான்கு பாதங்களில் ஆச்சார்யரால் நீக்கப் படுகின்றன.,இந்த விரோதங்கள் நீங்கியதுமே பகவான் நிர்தோஷி (தோஷமற்றவன்)என்று நிரூபிக்கப் படுகிறது., இதுவே இந்த அத்தியாயத்தின் முக்கிய நோக்கம்.,இதையே தனது மங்கள ஸ்லோகத்தில் “தோஷவர்ஜிதம்’ என்று ஸ்ரீமத்வர் குறிப்பிட்டிருக்கிறார்.,
அடுத்த அத்தியாயம் ஸாதனா அத்யாயம்.,ஸ்ரீஹரி கடாக்ஷம் இருந்தால் மட்டுமே ஜீவனுக்கு முக்தி.,ஹரிகடாக்ஷம் பெறுவதற்கு பக்தி தேவை., பக்தியை வளர்த்துக் கொள்ள விஷயசுக(புலன் நுகர்ச்சி) வைராக்கியம் தேவை.,இவ்வாறு பக்தியை வளர்த்துக் கொண்டு பகவந்தனை உபாசனை செய்ய வேண்டும்.,இவ்வாறு செய்வதால் ஞானம் கிடைக்கும்.,இந்த நான்கு விஷயங்களே இந்த அத்தியாயத்தின் நான்கு பாதங்களில் முறையே வைராக்யம்.,பக்தி.,உபாஸனா.,மற்றும் ஞானம் என்று விளக்கப் பட்டுள்ளன., இவைகளையே ஸ்ரீஆச்சார்யர் தமது ஆரம்ப ஸ்லோகத்தில் ஞேயம் என்ற சொல்லால் குறிப்பிட்டிருக்கிறார்.,
கடைசி மற்றும் நான்காவது அத்தியாயத்தில் (பphaலாத்யாயம்) மேலே சொன்ன ஸாதனைகளினால் கிடைக்கும் பலன்கள் விவரிக்கப் படுகின்றன.,இந்த அத்தியாயம் இதை இறைவனின் சாம்ராஜ்ஜியம் என்று கூறுகிறது.,அங்கே இருப்பது குறைவற்ற ஆனந்தம்.,அதுவும் துக்கத்தின் கலப்பு சற்றும் இல்லாத ஆனந்தம்.,கர்மாவின் (வினைப்) பயன் பூரா இல்லாமல் போகவேண்டும்.,அதன்பின் ஜீவன் இந்த அவஸ்தை நிறைந்த உடலில் இருந்து விடுதலை பெற வேண்டும்.,பின் மோக்ஷத்தின் பாதையில் செல்ல வேண்டும்.,பின்னர் அங்கேபோய் குறைவற்ற ஆனந்தத்தை அநுபவிக்கவேண்டும்.,(இதுவே மனிதப் பிறவி எடுப்பதன் முழுப்பயன்) ஆகவே இவைகளையே இந்த அத்தியாயத்தின் நான்கு பாதங்களில் முறையே.,கர்மக்ஷயம்.,உத்கிராந்தி.,மார்க்கம்.,மற்றும் போகம் (Bhogam) என்று இந்த அத்தியாயம் சொல்லிக் கொடுக்கிறது., இதையே சுருக்கமாக தமது மங்கள ஸ்லோகத்தில் “கம்யம்” என்னும் வார்த்தையில் சூசித்துக் கொடுத்திருக்கிறார் ஆசார்யஸ்ரீமத்வர்.,
உத்கிராந்தி என்பது உடலை விட்டு வெளியே செல்லும்போது என்னென்ன .,எப்படியெப்படி நடக்கும் என்பன தெரிந்து கொள்வது.,அர்ச்சிராதி மார்க்கங்களை விவரிப்பது மார்க்க பாதம்.,உதாரணத்துக்கு., ஜீவன் மோக்ஷத்துக்கு செல்லும் வழியில் துருவராஜாவின் (காட்டில் தவம் செய்து இறைதரிசனம் பெற்ற அவரேதான்) ராஜ்ஜியமான துருவ மண்டலத்தைத் தாண்டிச் செல்லும்போது தேவதைகள் அதோ.,ஓஓ….பார்., அதுதான் துருவ மண்டலம் என்று காண்பித்துவிட்டு மேலே., மேலே போய்க்கொண்டே இருப்பார்கள்.,தூரத்திலிருந்து கன்னத்தில் போட்டுக்கொண்டு போகவேண்டியதுதான்., ஆனால் ஒரு ஸாதகன் மிகச் சிறப்பாக பரிபக்குவ பக்தியுடன் திடபக்தியுடன் ஞானபக்தி ஸாதனைகளைச் செய்து மிக உயர்ந்த பக்தனாக இருந்தால் அந்த ஜீவனை தேவதைகள் துருவமண்டலத்துக்குள் அழைத்துச் சென்று அங்கே இருக்கும் சிம்சுமார மூர்த்தியை தரிசனம் செய்து வைப்பார்கள்.,இது ஒரு உயர்ந்த கொடுப்பினை., அதனால்தான் பெரியோர்கள் அந்தணர்களுக்கு சாலக்கிராம தானம் கொடுக்கும்போது சின்னதாக வெள்ளியில் ஒரு சிம்சுமார பிரதிமை(விக்கிரகம்) தானமாகக் கொடுப்பார்கள்.,இந்த சிம்சுமார மூர்த்தியை (பிரதிமையை) தினசரி சாலக்கிராம பூஜையின்போது .இந்தப்பிரதிமைக்கும் பூஜை செய்து வந்தால் மனது மேலும் மேலும் ஸாதகம் புரியவேண்டும் என்று ஞாபகம் வைத்துக் கொள்ளும்.,
குறிப்பு:- சிம்சுமார மூர்த்தி என்பது பாதி விஷ்ணு உடம்பு மீதி பகுதி தேள் (scorpian)போல இருக்கும்., சாதாரணமாக பூஜா சாமான்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும்.,வாங்கி தானம் செய்வதும் சரி., வீட்டில் வைத்துப் பூஜை செய்வதும் மிக நல்லது.,
ஓம் நாராயணம் கு3ணை:ஸர்வை: உதீர்ணம் தோ3ஷவர்ஜிதம் I
ஞேயம் க3ம்யம் கு3ரூம்ஸ்சாபி நத்வா ஸூத்ரார்த்த உச்யதே II
இந்த ஸ்லோகத்துடன் பிரம்மசூத்ர பாஷ்யம் ஆரம்பிக்கிறது., இந்த ஸ்லோகம் ஒவ்வொரு மாத்வருக்கும் மனப்பாடமாகத் தெரிய வேண்டிய ஒரு ச்லோகம்.,
இந்த ஒரு ஸ்லோகத்துக்கு தாம்ரபரணி ஸ்ரீராகவேந்திரன் (Coimbatore Sri TSR ) அவர்கள் சுமார் 40- 50 பக்கங்களுக்கு விளக்கம் அளித்திருக்கிறார்கள்.,ஸ்ரீமத்வர் சாக்ஷாத் வாயுதேவரின் அவதாரம் என்பதால் அவருக்கு இந்த நாராயண சப்தம்(சொல்) மிகவும் பிடித்தமானது என்று தெரிகிறது.,ஏனெனில் பிரம்மசூத்திரத்துடன் சம்பந்தப்பட்ட(ஸ்ரீமத்வரின்) நூல்கள் மேலும் மூன்று உள்ளன. அவைகளிலும் கிரந்தம் நாராயண சப்தத்துடன் தான் ஆரம்பிக்கிறார்.,
———
1. ஸ்ரீவேதவ்யாஸர் இல்லாவிட்டால் தற்காலத்தில் வேதங்கள் இல்லாது மறைந்து போயிருக்கும்.,.,
2.வேதங்களை தவறாக வியாக்கியானம் செய்து மக்களைக் குழப்பியவர்கள்., இருந்தனர்.,
3.இதற்காக ஒரு மதாச்சார்யார் அவதாரம் தேவைப்பட்டது.,அவரே ஸ்ரீமத்வர்.,.,
ஸ்ரீமத்வருக்குப் பின்னர் வந்த குரு பரம்பரையில் ஸ்ரீ நரஹரி தீர்த்தர்.,ஸ்ரீபத்மனாப தீர்த்தர்., போன்ற மஹான்கள்., ஸ்ரீஜயதீர்த்தர் (எ) டீகாச்சார்யர்.,ஸ்ரீவாதிராஜர்.,ஸ்ரீவியாஸராஜர்.,ஸ்ரீவிஜயீந்திரர்.,ஸ்ரீரகோத்தமர்., ஸ்ரீராகவேந்திரர்.,ஆகியோரை அறியாத மாத்வர்கள் இல்லை எனலாம்.,இவர்கள் எல்லாம் மத்வமத.,.,துவைத ஸித்தாந்தத்தை மிகச் சிறந்த முறையில் பிரகடப் படுத்தினார்கள்.,
ஒரு ஸமயம்.,சில வித்வான்கள் சந்திரிகாச்சார்யர் என்றழைக்கப் படும்., ஸ்ரீவியாஸராஜரை அணுகி .,”உங்கள் மதத்தின் கொள்கைகளை எல்லாம் இரண்டே வரிகளில் கூற இயலுமா.,?” என்று கேட்டனர்.,ஸ்ரீவியாஸராஜரும் உடனடியாக கீழ்க்காணும் ஸ்லோகத்தைக் கூறி அருளினார்.,(ஸ்ரீவியாஸராஜரே அவரது அடுத்த பிறவியில் ஸ்ரீராகவேந்திரராக அவதரித்தார் என்பது நினைவு கூறத்தக்கது.,).,
இந்த ஸ்லோகத்தை ” பிரமேய நவரத்ன மாலிகா ” என்று வேதாந்த பண்டிதர்கள் மிகவும் கொண்டாடுகின்றனர்.,
இந்த ஸ்லோகம் பின்வருமாறு:-
ஸ்ரீமன் மத்வமதே ஹரி: பரதர:
ஸத்யம் ஜகத் தத்வதோ பேதோ.,.,
ஜீவ கணா: ஹரேர் அநுசரா:.,
நீசோச்ச பாவம் கதா:.,I
முக்திர் நைஜஸ் ஸுகானுபூதி;.,
அமலா பக்திஸ்ச தத்ஸாதனம்.,
ஹ்யாக்ஷ்யாதி த்ரிதயம் பிரமாணம்.,.,
அகிலாம் நியாயைக வேத்யோ ஹரி:.,.,II
இந்த ஸ்லோகம் மத்வமத தாத்பர்யத்தை அப்படியே தேன் மாதிரி.,.,ஜூஸ் மாதிரிப் பிழிந்து நமக்கு ஸுலபமாக ஜீரணிக்கும் வகையில் கொடுக்கிறது.,இந்தத் தேனை கொஞ்சம் கொஞ்சமாக ருசித்துக் குடித்துப் பார்ப்போம்.,.,
இந்தப் பதிவுகளில் இனி நாம் பார்க்கப்போகும் ஸித்தாந்தங்கள் யாவும் இந்த ஸ்லோகங்களின் விரிவுரைதான்.,
5. நியாய விவரணை., (இதற்கு ஸந்நியாய விவ்ருத்தி என்றும் பெயர் உள்ளது)
பிரம்ம சூத்ரங்களில் நாம் பார்த்த வரிசைக்கிரமம் முதலில் பிரம்மசூத்ரம்.,ஸ்ரீவியாஸதேவர் அருளியது.,
1.பிரம்ம சூத்ரங்கள்.,
2.அதற்கு ஸ்ரீமத்வாச்சார்யர் எழுதிய பாஷ்யமென்னும் விளக்க உரை.,(பிரம்ம சூத்ர பாஷ்யம்).,
3.இவை நான்கு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.,
4.ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.,
5.ஒவ்வொரு பாதமும் பல்வேறு அதிகரணங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன.,(the sub divisions of Paadhaas are called Adhikaranaas,)
6.ஒவ்வொரு அதிகரணத்திலும் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்டோ சூத்ரங்கள் இருக்கும்.,
உதாரணமாக முதலாம் அத்தியாயம்(ஸமன்வய அத்தியாயம்) .,முதலாம் பாதம் பெயர் அன்யத்ர ப்ரசித்தநாம பாதம்.,இந்த பாதத்தில் மொத்தம் 12 அதிகரணங்கள் உள்ளன., இந்தப் பன்னிரெண்டு அதிகரணங்களுக்கும் சேர்த்து மொத்தம் 31 சூத்ரங்கள் உள்ளன., (இவற்றில் நாம் சாம்பிளுக்கு ஒன்றே ஒன்றை மட்டும் பார்த்தோம்)
சில அதிகரணங்களில் ஒரே ஒரு சூத்ரம் மட்டும் இருக்கும்., சிலவற்றில் 7 அல்லது 8 சூத்ரங்கள் இருக்கும்., மொத்தமுள்ள 564 பிரம்ம சூத்ரங்கள் 220 அதிகரணங்கள் மூலம் விளக்கப்பட்டுள்ளன.,
ஆகவே இந்த அதிகரணங்களுக்கே ஒரு லிஸ்ட் போடலாம்.,இவ்வாறு அதிகரணங்களைப் பற்றிய விவரங்கள் உள்ள கிரந்தம்தான் நியாய விவரணை., இதற்கு ஏன் இந்தப் பெயர் வந்தது.?., அதிகரணங்களுக்கு நியாயங்கள் என்று ஒரு பெயர் உண்டு., ஆகவே நியாயங்களின் விவரங்கள் (விளக்கங்கள்) உள்ள கிரந்தம் நியாய விவரணை ஆயிற்று.,
அதோடு மட்டுமல்ல.,இந்த கிரந்தத்தில் வசன நடை உபயோகப்படுத்தப் பட்டுள்ளது.,சம்ஸ்கிருதத்தில் பத்யம் என்பது பாடல்(ஸ்லோகம்) வடிவம்.,கத்யம் என்பது வசன (prose) வடிவம் அல்லது நடை.,இதேபோல் வசன நடையில் ஸ்ரீராகவேந்திரஸ்வாமிகள் “ப்ராதஸ் சங்கல்ப கத்யம்” என்று வசன நடையில் ஒருகிரந்தம் எழுதி அருளியிருக்கிறார்.,
இந்த நூலிலும் ஸ்ரீ மத்வர் பல்வேறு வேற்று மத ஸித்தாந்தங்கள் ., அவை என்ன கூறுகின்றன.,அது எவ்வாறு தவறு.,மத்வஸித்தாந்தம் என்ன ., அது எப்படி சரியானது போன்றவைகளை நிரூபணம் செய்திருக்கிறார்.,
இதற்குமுன் நாம் பார்த்த அனுவியாக்கியானம் கிரந்தத்தில் நியாயமாலா என்னும் பகுதிக்கு இது விளக்க நூலாகவும் அமைந்துள்ளது.,
அதுமட்டுமல்ல., இந்த கிரந்தத்துக்கு இன்னொரு விசேஷமும் உண்டு.,அது என்ன?.,
ஸ்ரீவேதவ்யாஸரின் ஒவ்வொரு பிரம்மசூத்ரத்துக்கும் வேதங்களில் உள்ள ஒரு ” ரிக்” எனப்படும் ஒரு வேத வாக்யத்துக்கும் சம்பந்தம் இருக்கும்., ஏனெனில் வேதங்களை ., அவைகளில் உள்ள அர்த்தங்களை நமக்கு தெளிவாக்குவதற்காக (ஸ்பஷ்டம் என்று வடமொழியில் சொல்வார்கள்) ஏற்பட்டதே ஸ்ரீவியாஸரின் பிரம்ம சூத்ரங்கள்., இவ்வாறு சம்பந்தப்பட்ட ரிக் அல்லது வாக்கியத்துக்கு விஷய வாக்கியம் என்று பெயர்., அல்லது சுருக்கமாக விஷயம் என்பார்கள்.,
இப்பொழுது நாம் ஒரு சிறு பட்டியல் பார்க்கப் போகிறோம்.,அவை:-
1.விஷயம்.,
2.சந்தேஹம்.,அல்லது சந்தேகம்.,
3.பூர்வ பக்ஷம்.,
4.,ஸித்தாந்தம்.,
இவற்றில் விஷயம் என்றால் என்ன என்று சொல்லிவிட்டேன்.,
2.சந்தேஹம்:- அப்படியென்றால் ஒரு விஷயம் என்பது சரிதானா அல்லது தப்பா., அது இப்படியா.,அல்லது அப்படியா.,என்பது போன்ற ஐயங்கள்.,
உதாரணத்துக்கு முதலாம் அத்தியாயத்துக்கு பிரம்ம விசாரம் அல்லது பிரம்மன் என்பது விஷயம்.,இதைப்பற்றி ஏன் படிக்க வேண்டும்.?.,இந்த விசாரம்(விசாரணை) தேவையா., இல்லையா என்பது சந்தேஹம்.,,
3.பூர்வ பக்ஷம் என்பது பல்வேறு வேற்று மதஸ்தர்களின் கருத்துக்கள் அல்லது மாற்றுக்கருத்துக்கள்.,or objections.,
4.ஸித்தாந்தம்:- என்பது ஸ்ரீமதாச்சர்யர் நிரூபிக்கும் விஷயம்..பூர்வ பக்ஷத்துக்கு opposite ஆக இருக்கும்., இதுவே மத்வமதத்துக்கும் ஸித்தாந்தம்.,ஸ்ரீவேதவ்யாஸர் கூறியதற்கும் உண்மையான அர்த்தம்.,இதை ஸ்ரீ மத்வாச்சார்யர் பல்வேறு யுக்திகள்.புராண இதிஹாஸ quotations வேத .,உபநிஷத் வாக்யங்கள் மூலம் ஆணித்தரமாக நிரூபித்திருப்பார்.,
இதுபோல ஒவ்வொரு நியாயத்துக்கும் (அதிகரணத்துக்கும்) நிரூபணம் செய்து இருக்கிறார்., இதன் மொத்தமே நியாயவிவரணை கிரந்தம்., இதற்கு ஸ்ரீஜயதீர்த்தரின் தத்வப்ரகாஷிகா.,ஸ்ரீவ்யாசராஜரின் தாத்பர்ய சந்த்ரிகா., ஸ்ரீரகூத்த ஸ்வாமிகளின் தத்வப்ரகாசிக-பாவபோதம் ஸ்ரீசத்யநாத தீர்த்தரின் அபினவ சந்த்ரிகா.,ஸ்ரீராகவேந்திரஸ்வாமிகளின்
தத்வப்ரகாசிகா பாவதீபம்.,என்று இன்னும் பல்வேறு மஹனீயர்களின் விளக்க கிரந்தங்கள் உள்ளன.,இவற்றையெல்லாம் நாம் முழுதுமாகப் படித்து தெரிந்து கொள்வதற்கு எத்தனை ஜன்மங்கள் எடுத்தாலும் போதாது.,
அத்வைத ஸித்தாந்தம்.,”ஸத்யம் பிரம்மம்., ஜகத் மித்யை” என்று கூறுகிறது
இந்த உலகம் ஸத்யம்., உலகம் மட்டுமல்ல .,இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஸத்யமானது.,இதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.,
ஆகையால்தான் ஸ்ரீவியாஸராஜர் ” ஸத்யம் ஜகத்” என்று கூறி இருக்கிறார்.,
அத்வைதிகள் மட்டுமின்றி எல்லா மதத்தினரும் பொதுவாக ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம்.,.,இந்த உலகமும் .,அதில் உள்ள பொருட்கள் யாவும் பகவானால் உண்டாக்கப் பட்டவை என்பதாகும்.,இதில் ஒரு சிறிதும் சந்தேகம் இல்லை.,ஸ்ரீகிருஷ்ணன் பகவத்கீதையில் தனது விபூதிகளைக் கூறும்போது ., தமது கலைகள்., சக்தியின் வெளிப்பாடு எங்கெங்கு விஷேஷமாகக் காணப் படுகிறது என்பதைக் கூறிவிட்டுக் கடைசியில் ( அத்தியாயம் 10 .,ஸ்லோகம் 42ல் ) கூறுகிறார்.,
“அஹமிதம் க்ருத்ஸ்னம் ஏகாம்சேன ஸ்திதோ ஜகத்” என்கிறார்.,
இதன் அர்த்தம்:-
எனது ஒரு அம்சத்தால் ( ஒரு சிறு கலையால் ) இந்த உலகம் அனைத்தையும் தாங்கியிருக்கிறேன் என்று கூறுகிறார்.,
பகவான் ஸத்யமானவர் என்றால் ., பகவானால் செய்யப்பட்ட பொருள் எப்படி அஸத்யமாகும்.,?தன்னுடைய முழு அம்சத்தில் ஒரு மிகச்சிறு பகுதியை வைத்தே .,.,அதனாலேயே நான் இந்த உலகு அனைத்தையும் தாங்குகிறேன் என்று பகவானே கூறி இருக்கும்போது., அவர் உண்டாக்கிய இந்த உலகு ( ஜகத்- Universe ).,மற்றும் அதில் உள்ள பொருட்கள் எப்படி மாயையாகும்.,?
இதற்கு அத்வைதிகள் சொல்வது.,.,பகவான் தனது மாயையால் இவ்வுலகைப் படைத்தார் என்பதாகும்.,
பகவான் தனது மாயையால்தான் இவ்வுலகைப் படைத்தார்.,சந்தேகமில்லை.,
ஆனால்., பகவானின் மாயையால் உலகம் படைக்கப் பட்டது என்னும்போது ., மாயை என்னும் சொல்லுக்கு நீங்கள் ( அதவைதிகள் )எடுத்துக் கொள்ளும் அர்த்தம் வேறு .,இங்கு பகவானின் மாயை என்னும் சொல்லுக்கு .,.,பகவானின் இச்சை என்று அர்த்தம்., அவன் ” நான் இந்த உலகைப் படைக்கப் போகிறேன்.,” என்று இச்சைப்பட்டு அதன்படி படைத்தான்., என்பதாக ., சாஸ்திரப் பிரமாணங்களுடன் நிரூபித்திருக்கிறார்.,
ஆகையால் இந்த உலகம் மாயை இல்லை.,.,என்பதையும்., இது ஸத்தியம்.,” ஜகத் ஸத்யம்” என்பதையும் நமது மத்வ மதம் நன்றாகவே வலியுறுத்திச் சொல்லி இருக்கிறது.,
அத்வைதிகளின் வாதமான பிரம்மம் ஸத்யம்., ஜகத் மித்யை என்பதைப் பற்றி சொல்லும்போது., கோயம்புத்தூர் பண்டிதர் ஸ்ரீமான் T.S. ராகவேந்திரன் அவர்கள் ஒரு விஷயம் கூறுகிறார்.,
ஸத்யமான பொருள் ஒன்று இன்னொரு பொருளை உண்டாக்கினால் அப்பொருளும் ஸத்யமாகத்தான் இருக்கும் .,இல்லாவிட்டால் .,அதனை ” அலங்க்ருத்ய சிரச்சேதன இதி” என்று வடமொழியில் கூறுவது போலாகிவிடும்.,
அப்படியென்றால்.,?
ஒருவனை மிக அழகாக அலங்காரம் செய்து ., புதுப்பட்டாடை கட்டி., கழுத்தில் மாலை முதலியன போட்டுப் பின்னர் அவன் கழுத்தை வெட்டுவது போலாகும்.,
இன்னும் ஒரு சில பிரமாணங்கள் பார்ப்பதற்குமுன் ., நாம் முன்னர் பார்த்த அத்வைத வாதிகளின் கிளிஞ்சல் சிப்பி – வெள்ளி உதாரணத்துக்கு ஸ்ரீமத்வரின் பதில் என்ன என்று பார்த்து விடுவோம்.,.,
கிளிஞ்சலில் அந்த மனிதன் பார்த்த வெள்ளி .,அவனுக்கு வெள்ளியை ஞாபகப் படுத்தியது.,இதற்கு., அவனுக்கு வெள்ளியைப் பற்றிய அறிவு இருக்க வேண்டும் ., அவன் வேறொரு இடத்தில் கடையிலோ., கோயிலிலோ., வீட்டிலோ வெள்ளியைப் பார்த்திருக்க வேண்டும்., அந்த வெள்ளி ஸத்யமானதுதானே.,?
அடுத்து., இங்கே பார்த்த வெள்ளி.,”ஆரோபிதம்- கல்பிதம்” எனப்படும்.,
அது என்ன.,?
ஆரோபிதம்., என்றால் ஏற்றி வைக்கப் பட்டது.,அதாவது கிளிஞ்சல் சிப்பியின்மீது வெள்ளி ஏற்றி வைக்கப் பட்டது., யாரால் ஏற்றி வைக்கப் பட்டது.,?.,
அதைப் பார்த்த மனிதனால் ஏற்றி வைக்கப் பட்டது.,.,!
கல்பிதம் என்றால் ., மனதால் கற்பனையாக ஒரு பொருளை ( வெள்ளியை ) கிளிஞ்சல் மீது ஏற்றி வைக்கப் பட்டுள்ளது.,,
அப்படியென்றால் அந்த மனிதனின் பார்வையில்தான் கோளாறே தவிர அங்கு அஸத்யமான ஒரு வஸ்து இல்லை., ( Silver is not in Existance there .,) ஆகையினால் அவனுக்கு ஏற்பட்டது “பாதக க்ஞானம்” ( தவறான அறிவு)தானே தவிர அது அக்ஞானம் அல்ல.,
மேலும் ., வெள்ளியை ஒரு பொருளின் மேல் ஏற்றி வைக்க வேண்டுமென்றால் ஏற்றி வைக்கப்பட வேறு ஒரு பொருள் இருந்தாக வேண்டும் இதற்கு அதிஷ்டானம் என்று பெயர்.,
ஆரோபிதமான வெள்ளி அஸத்யம் என்றால்.,
அதிஷ்டானமான கிளிஞ்சல் ஸத்யம் என்றாகிறது.,
அதுபோல ., ஜகத் மித்யை என்றால் அது ஆரோபிதமான வஸ்து என்று ஆகிறது., அப்படியென்றால் அந்த வஸ்து ஆரோபிதம் ஆவதற்கு .,அதிஷ்டானமாக இன்னொரு ஸத்யமான வஸ்து இருந்தாக வேண்டும்., அந்த வஸ்து., மீண்டும் இந்த ஜகத் என்னும் வஸ்துவாகத்தான் இருக்கும் .,
15-மஹாவாக்கியங்கள் என்று பெயர்,.,
ஸர்வம் கல்பிதம் பிரஹ்மம்..,: தத் த்வம் அஸி..,போன்றவைகள் மஹாவாக்கியங்கள்
——————-
17-கீதை ஸ்லோகம்., அத்தியாயம் 2.,ஸ்லோகம் எண் 47 (2 – 47):-
கர்மண்யேவாதிகாரஸ்தே மா ப(Pha)லேஷு கதாசன I
மா கர்மபலஹேதுர்ப்பூர்மா தேஸங்கோsஸ்த்வ கர்மணி II 2-47 II
அர்த்தம்:-
அர்ஜுனா! உன் கடமையைச் செய்வதற்கு மட்டுமே உனக்கு அருஹதை உள்ளது.,கர்மத்தின் பலனை நிச்சயிப்பதற்கு அல்ல.,அதற்காக கடமையைச் செய்யாமலே இருந்து விடுவேன் என்பதும் சரியல்ல.,
இதற்கு பலபேர் பலவிதமாக அர்த்தம் சொல்கிறார்கள்.,பெரும்பாலானவர்கள் சொல்லும் அர்த்தம் என்னவென்றால் “நீ உன் கடமையை மட்டும் செய்., பலனை எதிர்பார்க்காதே” .,
இதனால்தான் நிறையப் பேர் கீதை என்றாலே வெகுதூரம் ஓடுகிறார்கள்.,
நானும் கேட்கிறேன் .,நீ கடமையை மட்டும் செய்து கொண்டே இரு., பலனை எதிர்பார்க்காதே என்றால் அது எப்பிடி சார்?.,ஒரு மாசம் பூரா வேலை செய்துகொண்டே இரு., ஆனால் ஒண்ணாந்தேதி சம்பளத்தை எதிர்பார்க்காதே என்றால் நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா?.,
அப்புறம் இதற்கு என்னதான் அர்த்தம்?.,
இதற்கு சரியான விளக்கத்தை ஸ்ரீ மத்வாச்சார்யர் கொடுத்திருக்கிறார்.,நாம் அதைப் பார்க்கப் போவதற்குமுன் முக்கியமான இன்னொரு விளக்கத்தையும் ஆச்சார்யர் கொடுத்திருக்கிறார்.,அதை முதலில் பார்த்துவிட்டு பின்னர் என் கேள்விக்கு மத்வமதம் கொடுத்துள்ள விளக்கத்தைப் பார்க்கலாம்.,
இந்த ஸ்லோகம் ஜீவ-ஈச்வர பேதத்தைக் காட்டுகிறது.எப்படி?
பிரம்ம சூத்ரம் எண் 362 சொல்கிறது:—IIஓம் பலமத உபபத்தே: ஓம்II
கர்மா என்பது (actions) ஒரு ஜட வஸ்து.,(It is an inanimate entity) ஆகையால் அது தானாகப் பலன் கொடுப்பதில்லை.,ஆகவே இறைவன் தான் பலன் கொடுக்கிறான்.,(உபபத்தே= It is logical that Ishwara only is the Phaladhaathaa.,) .,
அப்படியென்றால் Actions= கர்மங்களைச் செய்வது ஜீவன் (நாம்)., பலன்களைக் கொடுப்பது பரமாத்மா ஸ்ரீஹரி., ஆகவே கர்மம் செய்பவன் வேறு ஒருவன்., பலன் கொடுப்பவன் மற்றவன் ஒருவன்., ஆகையால் ஜீவாத்மா வேறு., பரமாத்மா வேறு.,ஆகவே ஜீவ- ஈச்வர பேதம் நிரூபணமாகிறது., The difference between jiiva and Ishwara is established.,
இது ஒரு முக்கியமான மத்வ ஸித்தாந்தம்.,
கர்மத்தைச் செய் ; பலனை எதிர்பாராதே என்றால் பலன் என்னவாக இருக்கவேண்டும் என்பதை அக் கர்மத்தைச் செய்யும் ஜீவன் நிர்ணயிக்க முடியாது என்று பார்த்தோம்., ஸ்ரீமத்வர் ஓர் கர்மத்திற்கு இரண்டு விதமான பலன்கள் உண்டு என்கிறார்., அவையாவன:- 1.முக்ய பலன் .,2.அமுக்ய பலன்.
பலனை எதிர்பாராதே என்றால் அமுக்ய பலனை எதிர் பாராதே,.., அதனை நினைத்து முக்ய பலனை விட்டு விடாதே என்பது பொருள்., இதை ஒரு உதாரணம் கொண்டு விளக்கி இருக்கிறார்கள்.,
ஆன்மீகத்தில் முன்னேற்றத்துக்கு பல்வேறு படிக்கற்கள் (steps) உள்ளன. ஒரு சில படிகளைத் தாண்டியவுடன் பல்வேறு சின்னச் சின்ன பலன்கள் கிடைக்க ஆரம்பிக்கும்., அவைகள் பலன்கள் அல்ல., ஆன்மீகத்தில் மேலும் முன்னேற தடைக் கற்கள்., அவற்றையும் தாண்டி ஒரு சாதகன் முன்னேற வேண்டும்.,அதைத்தான் பலனை எதிர்பார்க்காதே என்று சுருக்கமாகக் கூறியுள்ளனர்.,
இதை இன்னொரு விதமாகவும் விளக்கலாம்., சில மனிதர்களுக்கு நம் போன்ற சாதாரண ஜனங்களை விட certain extra ordinary powers இருக்கும்.,இதனால் அவர்கள் தமது பக்தர்களுக்கு வரம் கொடுத்தால் அது பலிக்கும்.,அவர்களிடம் மேலும் மேலும் பக்தர்கள் வர ஆரம்பிக்கின்றனர்.,இதனால் அப்படிப்பட்ட “ஸ்வாமிஜி” பிரபலமடைகிறார்.,பணம் .,சொத்துக்கள் .,ஆச்ரமம்.,உலகளாவிய பக்தர்கள்.,கிளைகள் (overseas Branches) மேலே மேலே வளர்ந்து கொண்டே போகும்போது அமுக்ய பலனைப் பிடித்துக் கொண்டு “ஸ்வாமிஜி” திசை மாறிப் போவதைப் பார்க்கிறோம்.,
ஆனால் ராகவேந்திர ஸ்வாமிகள் போன்றோர் தமது சக்திகளை வெளியில் காட்டாமல் யோக்யதை உள்ளவர்களுக்கு மட்டும் வழிகாட்டிக்கொண்டு தாமும் ஆன்மீகத்தில் மேலும் மேலும் முன்னேறினர்.,
முடிவாக., மேலே கூறியது போல அபரோக்ஷக்ஞானம் .,மோக்ஷஸித்திக்கான கார்யங்கள் செய்யும்போது நடுவில் வரும் ஐஸ்வர்யங்கள்.,ஸ்வர்க்கபோகம் இவற்றில் மனதை விடக்கூடாது., இதற்கு முன்னம் ஒரு பதிவில் மௌத்கல்ய முனிவர் பற்றிப் பார்த்தோம்., ஆகவே அமுக்ய பலன் மீது ஆசை வைக்கக்கூடாது என்பது தாத்பர்யம்.,
———–
25–ஆகமம் என்பது வேத.,சாஸ்திரங்கள்., சில பொருட்களை பிரத்யக்ஷத்தாலும் அறிய முடியாது.,அநுமானத்தாலும் அறிய முடியாது.,அதனை ஆகம (வேத) சாஸ்திரங்கள் மூலம் மட்டுமே அறிய முடியும்.,ஸ்ரீஹரியைப் பற்றியும்., அவனுடைய பிரபாவங்கள் ., குணங்கள்., முதலியவற்றை நாம் சரியாகத் தீர்மானம் செய்ய உதவுவது ஆகமம் என்னும் பிரமாணம்., இதையே ஸ்ருதி., ஸ்ம்ருதி.,(வேதங்கள்.,புராணங்கள்) என்று கூறுகிறோம்.,
ஸ்ருதி.,ஸ்ம்ருதிகள் மூலமாகத்தான் நாம் ஸ்ரீஹரியின் பெருமைகளை அறிகிறோம் என்பதை ஸ்ரீமதாச்சார்யர் தமது துவாதச ஸ்தோத்திரத்தில் ஒரு இடத்தில் சுலபமாக விளக்கி இருக்கிறார்.,
துவாதஸ ஸ்தோத்திரம்- 5.,4:-
கோவிந்த கோவிந்த புரந்தர வந்தே
ஸ்கந்த ஸுனந்தன வந்தித பாத I
விஷ்ணோ ஸ்ருஜிஷ்ணோ க்ரஸிஷ்ணோ விவந்தே
கிருஷ்ண ஸ்துஷ்ண வதிஷ்ணோ ஸுத்ருஷ்ணோ II
பொருள்:-
வேதங்களால் அறியப் படுபவரே! கோவிந்த!கோவிந்த! லிங்க தேஹத்தைப் பங்கப் படுத்துபவரே! ஸ்கந்தர்.,ஸுனந்தனர் இவர்களால் வணங்கப்பட்டவரே! விஷ்ணுவே! ஸ்ருஷ்டிப்பவரே! ஸம்ஹாரம் செய்பவரே! கிருஷ்ணா! சிஷ்டர்களை ஹிம்ஸிக்கும் துஷ்டர்களை வதம் செய்பவரே!
ஸ்ரீவியாஸராஜர் தமது “நியாயாம்ருத” என்ற கிரந்தத்தில் முதல் பரிச்சேதத்தில் (அத்தியாயத்தில்) முக்கியத்துவத்தை நன்கு விளக்கி உள்ளார்.,அது நமது அறிவுக்கு ஒரு சிறந்த திறவுகோல் (key) என்பதை நிரூபித்துள்ளார்.,நமது இந்திரியங்களால் அறியப்படும் வஸ்துக்களில் பிரத்யக்ஷம் என்பது .,அநுமான ஆகமங்களைவிடச் சிறந்தது என நிரூபித்து இருக்கிறார்.,(Please refer to Sri Vyasa Charithram (Tamil) by Sri .V.Seshagiri Rao-pp64).,
இறைவனை அநுமானத்தால் மட்டுமே நிரூபிக்க முடியும் என்று சில மதஸ்தர்கள் கூறியவற்றை மறுத்து., ஆகமங்களாலே மட்டுமே அவன் அறியப்படத்தக்கவன் என்று ஸ்ரீவியாஸராஜர் தமது “தர்க்கதாண்டவம்” என்னும் நூலில் நிலை நாட்டியுள்ளார்.,
மேற்கண்ட நூலில் மூன்றாம் அத்தியாயத்தில் அநுமானம் பற்றி விவரமாகக் குறிப்பிட்டு .,நையாயிகர்கள் (நியாய சாஸ்திரவாதிகள்).,மீமாம்ஸகர்கள் (மீமாம்ஸ சாஸ்திரம்-வேதத்தில் கர்மகாண்டம் பகுதியை மட்டுமே ஒப்புக் கொள்கிறவர்கள்)ஆகியோரின் கூற்றுக்களை ஆராய்ந்து அவர்கள் கூறுவது எவ்வாறு தவறானவை என்று கூறி., ஸ்ரீமத்வர்., ஸ்ரீடீகாராயர்.,போன்றோர் கூறுவன எவ்வாறு சரியாயும் பொருத்தமானதாயும் உள்ளன என்பதை நிரூபித்து இருக்கிறார்.,
28–ஸ்ரீமத்வரின் துவைத ஸித்தாந்தம்:-
த்வைதம்:-
முதலில் இருந்த சிப்பிநடுவில் கொஞ்ச நேரம் வெள்ளிபோலத் தெரிந்தது.,அது வெள்ளி இல்லை என்று ஆனவுடன் அது மீண்டும் சிப்பி(கிளிஞ்ஜல்)யாக ஆகிவிட்டது.,அப்படி இருக்கும்போது வெள்ளியை எப்படி ஜகத்துக்கு சமானமாக்குகிறீர்கள்.,? முக்தி கிடைத்தவனுக்கும் இந்த உலகம் உலகமாகத்தானே தெரிகிறது.,?.,
அத்வைதம்:- கிளிஞ்ஜல் ஸத்யம்., கிளிஞ்ஜல் இல்லாமல் இருந்தால் அது அஸத்யம்.,ஆனால் இல்லாத வெள்ளி இருப்பதுபோல் தோற்றம் அளிப்பது ஸத்யமும் அல்ல., அஸத்யமும் அல்ல.,
த்வைதம்;-அப்படியென்றால்.,?
அத்வைதம்:-அதுதான் மித்யை.,அதற்கு நாங்கள் ஸதஸத் விலக்ஷணம் என்று பெயர் கொடுக்கிறோம்.,இதற்கு அநிர்வசனீயம் என்றும் சொல்கிறார்கள்., ஏனென்றால் அது உண்மையும் அல்ல., அதே சமயம் பொய்யும் அல்ல.,(ஏனெனில் வெள்ளிபோலத் தெரியும்போது அங்கே வெள்ளி இருக்கிறதே.,?)
த்வைத ஸித்தாந்தம்:-
இதை ஸ்ரீமத்வாச்சார்யர் படு strong ஆக மறுக்கிறார்.,எப்படியெனில்., ஸத்யம் என்பது நமக்கு அநுபவஸித்தமானது.,அதாவது நமது அநுபவத்தில் இருப்பது.,சிப்பியைக் கண்ணால் பார்க்கிறோம்.,
அதேபோல அஸத்யமும் நமக்கு அநுபவஸித்தம்.,அது எப்படியென்றால்.,முயல் கொம்பு., மலடிமகன்.,ஆகியவை எப்போதுமே இருப்பதில்லை., அவை அஸத்யம்.,
ஆனால் ஸத்யமும் அல்லாத அஸத்யமும் அல்லாத ஒரு பொருள் நமக்கு அநுபவத்தில் வருவதில்லை.,அப்படிப்பட்ட ஒரு பொருள் பற்றி நமக்கு யாருக்கும் அநுபவம் கிடையாது.,
எனவே ஸதஸத்விலக்ஷணம் அல்லது அநிர்வசனீயம் என்பதாக ஒன்று கிடையவே கிடையாது.,ஆகையால் ஜகத் மித்யை என்பதை ஒப்புக்கொள்ள இயலாது.,
அத்வைதம்:- அப்படியென்றால் நாம் கண்னால் பார்த்த வெள்ளி எங்கே போயிற்று.,?
ஸ்ரீமத்வர்:- அது நமது பார்வைக்கோளாறினால் வந்தது.,இந்த தவறான க்ஞானத்துக்கு பாதகக்ஞானம் என்று பெயர்.,வெள்ளி இருப்பதுபோல தோன்றியது “ஆரோபிதம்” என்பதால் வந்தது.,அதாவது நமது மனது கிளிஞ்ஜலில் வெள்ளியை ஏற்றிவைத்து ஒரு மனப் பிரமையை உண்டாக்கியது .,அவ்வளவே.,இது வெறும் பிரமையே தவிற வேறல்ல.,பிரமை நீங்கியதும் வெள்ளி அகன்றுவிட்டது.,
அத்வைதம் விடவில்லை.,
அத்வைதம்:-அப்படியென்றால் நாம் கிளிஞ்ஜலில் பார்த்த வெள்ளி சத்யமா.,அல்லது அஸத்யமா.,?
த்வைதம்:- கிளிஞ்ஜலும் ஸத்யம்., வெள்ளியும் சத்யமே., ஏனெனில் கிளிஞ்ஜலைப் பார்த்தவனுக்கு வெள்ளியை இதற்குமுன் வேறு எங்கோ பார்த்த ஞாபகம் இருப்பதால் அதை தவறாக வெள்ளியென்று நினைத்தான்., அவன் இதற்குமுன் வேறு எங்கோ பார்த்த வெள்ளியும் சத்யமே.,
————
ஒரு ஸித்தாந்தம் அல்லது சாஸ்திரம் என்றால் அதற்கு நான்கு விஷயங்கள் இருக்க வேண்டும்.,1.அதிகாரி.,2.விஷயம்.,3.பிரயோஜனம்., & 4.,ஸம்பந்தம்.,
ஸ்ரீமத்வர் தமது விளக்கத்தில் ஜீவ-பிரம்ம ஐக்ய வாதத்துக்கு இந்த நான்குமே இல்லை.,அதனால் அது முழுக்க .,முழுக்கத் தவறு என்று இந்தக் கிரந்தத்தில் நிரூபணம் செய்திருக்கிறார்.,ஸுமத்வ விஜய மஹாகாவ்யத்தில் ., ஸ்ரீநாராயண பண்டிதாச்சார்யர்., அத்வைத வாதிகள் சுமார் 1,25,000 ஸ்லோகங்களில் கூறியுள்ள மாயாவாத ஸித்தாந்தத்தை தமது மாயாவாதகண்டன கிரந்தத்தில் ஸ்ரீமத்வர் ஒரே ஒரு வாக்கியத்தில் (அக்ஞானா ஸம்பவாதேவ தன்மதமகிலமபாக்ருதம்) என்று Disprove செய்து விட்டார்.,
ஸ்ரீமத்வரின் துவைத ஸித்தாந்தம்:-
த்வைதம்:-
முதலில் இருந்த சிப்பிநடுவில் கொஞ்ச நேரம் வெள்ளிபோலத் தெரிந்தது.,அது வெள்ளி இல்லை என்று ஆனவுடன் அது மீண்டும் சிப்பி(கிளிஞ்ஜல்)யாக ஆகிவிட்டது.,அப்படி இருக்கும்போது வெள்ளியை எப்படி ஜகத்துக்கு சமானமாக்குகிறீர்கள்.,? முக்தி கிடைத்தவனுக்கும் இந்த உலகம் உலகமாகத்தானே தெரிகிறது.,?.,
அத்வைதம்:- கிளிஞ்ஜல் ஸத்யம்., கிளிஞ்ஜல் இல்லாமல் இருந்தால் அது அஸத்யம்.,ஆனால் இல்லாத வெள்ளி இருப்பதுபோல் தோற்றம் அளிப்பது ஸத்யமும் அல்ல., அஸத்யமும் அல்ல.,
த்வைதம்;-அப்படியென்றால்.,?
அத்வைதம்:-அதுதான் மித்யை.,அதற்கு நாங்கள் ஸதஸத் விலக்ஷணம் என்று பெயர் கொடுக்கிறோம்.,இதற்கு அநிர்வசனீயம் என்றும் சொல்கிறார்கள்., ஏனென்றால் அது உண்மையும் அல்ல., அதே சமயம் பொய்யும் அல்ல.,(ஏனெனில் வெள்ளிபோலத் தெரியும்போது அங்கே வெள்ளி இருக்கிறதே.,?)
த்வைத ஸித்தாந்தம்:-
இதை ஸ்ரீமத்வாச்சார்யர் படு strong ஆக மறுக்கிறார்.,எப்படியெனில்., ஸத்யம் என்பது நமக்கு அநுபவஸித்தமானது.,அதாவது நமது அநுபவத்தில் இருப்பது.,சிப்பியைக் கண்ணால் பார்க்கிறோம்.,
அதேபோல அஸத்யமும் நமக்கு அநுபவஸித்தம்.,அது எப்படியென்றால்.,முயல் கொம்பு., மலடிமகன்.,ஆகியவை எப்போதுமே இருப்பதில்லை., அவை அஸத்யம்.,
ஆனால் ஸத்யமும் அல்லாத அஸத்யமும் அல்லாத ஒரு பொருள் நமக்கு அநுபவத்தில் வருவதில்லை.,அப்படிப்பட்ட ஒரு பொருள் பற்றி நமக்கு யாருக்கும் அநுபவம் கிடையாது.,
எனவே ஸதஸத்விலக்ஷணம் அல்லது அநிர்வசனீயம் என்பதாக ஒன்று கிடையவே கிடையாது.,ஆகையால் ஜகத் மித்யை என்பதை ஒப்புக்கொள்ள இயலாது.,
அத்வைதம்:- அப்படியென்றால் நாம் கண்னால் பார்த்த வெள்ளி எங்கே போயிற்று.,?
ஸ்ரீமத்வர்:- அது நமது பார்வைக்கோளாறினால் வந்தது.,இந்த தவறான க்ஞானத்துக்கு பாதகக்ஞானம் என்று பெயர்.,வெள்ளி இருப்பதுபோல தோன்றியது “ஆரோபிதம்” என்பதால் வந்தது.,அதாவது நமது மனது கிளிஞ்ஜலில் வெள்ளியை ஏற்றிவைத்து ஒரு மனப் பிரமையை உண்டாக்கியது .,அவ்வளவே.,இது வெறும் பிரமையே தவிற வேறல்ல.,பிரமை நீங்கியதும் வெள்ளி அகன்றுவிட்டது.,
அத்வைதம் விடவில்லை.,
அத்வைதம்:-அப்படியென்றால் நாம் கிளிஞ்ஜலில் பார்த்த வெள்ளி சத்யமா.,அல்லது அஸத்யமா.,?
த்வைதம்:- கிளிஞ்ஜலும் ஸத்யம்., வெள்ளியும் சத்யமே., ஏனெனில் கிளிஞ்ஜலைப் பார்த்தவனுக்கு வெள்ளியை இதற்குமுன் வேறு எங்கோ பார்த்த ஞாபகம் இருப்பதால் அதை தவறாக வெள்ளியென்று நினைத்தான்., அவன் இதற்குமுன் வேறு எங்கோ பார்த்த வெள்ளியும் சத்யமே.,
உபாதிகண்டனம்., மாயாவாத கண்டனம்.,மற்றும்.,பிரபஞ்சமித்யாத்வநுமான கண்டனம் ஆகிய மூன்றும் சேர்ந்து கண்டனத்ரயம் என்று அழைக்கப் படுகின்றன.,
——————
இதற்கு முந்தைய பதிவில் அத்வைத ஸித்தாந்திகளின் இரண்டு பூர்வபக்ஷங்கள் (1.ஜீவ-பிரம்ம ஐக்யம்.,2.பிரம்மம் சத்யம்-ஜகத் மித்யை) பார்த்தோம்.,
இதற்கு முன் கண்டனத்ரயம் என்பதாக ஸ்ரீமத்வரின் மூன்று கண்டன நூல்களைப் பார்த்தோம்., அவை:- 1.உபாதி கண்டனம்.,2.மாயாவாத கண்டனம்.,3.பிரபஞ்ச மித்யாத்வனுமான கண்டனம் என்பதாக.,.,
இப்போது நாம் பார்க்கப்போகும் இந்த தத்வோத்யோதம் என்ற கிரந்தம் மேலே சொன்ன பூர்வபக்ஷங்களை மறுக்கும் நூல்., மற்றும் நாம் மேலே பார்த்த மூன்று கண்டனத்ரய நூல்களுக்குமொரு இணைப்புப் புஸ்தகம் போன்றது
த்வைதிகள் அடிக்கடி உபயோகிக்கும் தத்வமஸி என்ற வேத(மஹா) வாக்கியம் ஜீவ-பிரம்ம பேதத்தைக் காட்டுகிறதே தவிர அவைகளின் ஐக்கியத்தைக்காட்டவில்லை என்பதை ஸ்ரீமத்வர் மிகச் சிறப்பாக நிரூபித்து இருக்கிறார்.,
ஆச்சார்யர் ஸ்ரீமத்வர் இவை இரண்டுமே சரியல்ல., மனிதனின் ஆன்மீக முன்னேற்றத்துக்கு Salvation க்கு கர்மமும் செய்யவேண்டும்.,ஹரிபக்தி., இறைவனைப்பற்றிய க்ஞானம் இரண்டுமே தேவை என்பதை இந்த கிரந்தத்தில் நிரூபித்து இருக்கிறார்.,
———
தந்த்ரஸாரம் என்னும் கிரந்தம் மூலகிரந்தம்.,இந்த கிரந்தம் ஸ்ரீமஹாவிஷ்ணுவால் சதுர்முகப் பிரம்ம தேவருக்கு உபதேசிக்கப்பட்ட கிரந்தம்.,இந்த கிரந்தத்தை அடிப்படையாக வைத்து 442 ஸ்லோகங்களுடன் ஸ்ரீமத்வரால் எழுதப்பட்ட கிரந்தம்தான் தந்த்ரஸார ஸங்க்ரஹம் .,இந்த கிரந்தத்தைப் பற்றி ஸ்ரீமத்வரே கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:-
க்ரந்தோயம் பாடமாத்ரேண ஸகலாபீ4ஷ்ட ஸித்தித: I
கிமு க்ஞானாத் அனுஷ்டானாத் உபயஸ்மாத்புன: கிமு: II
இதன் அர்த்தம்:-
இந்த கிரந்தத்தை வெறுமனே பாராயணம் செய்வதாலேயே ஸகல அபீஷ்டங்களும் ஸித்திக்கும்.,மேலும் இதன் அர்த்தத்தையும் உணர்ந்து உபாஸித்தால் மோக்ஷமும் ஸித்திக்கும் என்பதை திரும்பவும் கூறவேண்டுமோ.,?
த்வைத மதத்தின் ஸித்தாந்த ஸாரங்கள் அடங்கிய ஒரு கிரந்தமாகும் இது.,.,இதில் ஒரே ஒரு ஸ்லோகத்தைக் கொடுத்து இதை முடிக்கிறேன்:-
கோவிந்த கோவிந்த புரந்தர வந்தே
ஸ்கந்த ஸுனந்தன வந்தித பாத
விஷ்ணோ ஸ்ருஜிஷ்ணோ க்ரஸிஷ்ணோ விவந்தே
கிருஷ்ண ஸ்துஷ்ண வதிஷ்ணோ ஸுத்ருஷ்ணோ
இதன் அர்த்தம்:-
வேதங்களால் அறியப்படுபவரே! கோவிந்த! கோவிந்த! லிங்க தேஹத்தைப் பங்கப் படுத்துபவரே! ஸ்கந்தர்.,ஸுனந்தனர் இவர்களால் வணங்கப்படுபவரே! விஷ்ணுவே! ஸ்ருஷ்டிப்பவரே! ஸம்ஹாரம் செய்பவரே! கிருஷ்ணா! சிஷ்டர்களை ஹிம்ஸிக்கும் துஷ்டர்களை வதம் செய்பவரே!.,.,
இத்துடன் ஸ்ரீமத்வாச்சார்யாரின் ஸர்வமூலக் கிரந்தங்களின் விவரணை முடிவு பெறுகிறது.,
——————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
February 21, 2024 at 2:19 am |
Can you send shimsumara slikas