ஸ்ரீ யாதவாப்யுதம் திருஅவதரித்த வ்ருத்தாந்தம் -பிரபல இலக்கிய  சம்வாதங்கள்–ஸ்ரீ கவி தார்த்திக சிங்கமும், ‘டிண்டிம்’ கவியும்!–ஸ்ரீ உ வே கண்ணன் ஸ்வாமிகள் —

ஸ்ரீ க்ருஷ்ணாய பரப்ரம்ஹணே நமஹ

ப்ரமாணம் லக்ஷ்மண முநி: ப்ரதிக்ருஹ்யாத மாமகம்
ப்ரஸாதயதி யத்ஸூக்தி: ஸ்வாதீந பதிகாம் ஸ்ருதிம்

ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேஸரி
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹரி:

ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹஸ்ய ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரஸ்ய
ஸ்ரீமத் வேங்கடநாயகஸ்ய வேதாந்தாசார்யஸ்ய யாதவாப்யுதய காவ்ய க்ருதிஷு

—————

  ஓம் ராகவா அப்யுதயோ உத்க்ருஷ்ட யாதாவா அப்யுதய ப்ரதாய நம:

{திருக்குடந்தை தேசிகர், அபரதேசிகர் என்று அறியப்படும் கோபால தேசிகர் இயற்றிய வேதாந்த தேசிகர் சஹஸ்ரநாமம் (706)}

தென்னிந்தியாவின் இந்து சமஸ்தான மன்னர்கள் தங்கள் அரசவையில் தமிழ்ப் புலவர்கள், கவிஞர்களை ஆதரித்து வந்துள்ளனர் என்பதை நாம் அறிவோம். அரசாங்க அலுவல்களுக்கு அப்பாற்பட்டு ஒதுக்கப்படும் ‘கேளிக்கை’  இடைநேரத்தில் புதிய நூல் அரங்கேற்றம், புலவர்களுக்குள் சூடான வாத,பிரதிவாதம், கிளுகிளுக்க வைக்கும் தற்புகழ்ச்சி விவாதங்கள் நடந்தேறுவதுண்டு. அவற்றில் நாட்டின் பிற பிர தேசங்களைச் சேர்ந்த அறிஞர்களும் அவ்வப்போது உற்சாகமுடன் பங்கேற்பர்.நக்கீரர்- தருமி, ஒட்டக்கூத்தர்-புகழேந்தி, அருணகிரிநாதர்-வில்லிபுத்தூரர் சம்வாதங்கள்,மதுரை மாம்பழக் கவிசிங்க நாவலர்- வடநாட்டுக் கவிஞன் விஸ்வநாத பாரதி, நைஷதசரித் திரம் இயற்றிய ஶ்ரீஹர்ஷர்- கன்னோஜ் மன்னன் ஜெயச்சந்திரன், வசிஷ்ட ஶ்ரீகணபதி சாஸ்திரி- அம்பிகாதத்தா, வேதாந்த தேசிகர்-சமண முனிகள், ஆதிசங்கரர்-மண்டன மிஸ்ரர் ஆகியோரது விவாதங்கள்  மிகவும் புகழ் பெற்றவை. இவற்றுள் சிலவற்று டன் பங்கேற்று இதுவரை அறியாத வேறு சில முக்கியமானச் சம்பவங்களைப் பற்றி யும் இப்போது பார்ப்போம்.

கிருஷ்ணமிஷ்ரர் ஒரு சிறந்த அத்வைதி.. ப்ரபோத சந்த்ரோதயம் எனும் நாடகத்தை எழுதி தேசிகருடன் வாதத்திற்கு வந்தபோது, தேசிகர் அந்நூலை மறுத்து, சங்கல்ப சூர்யோதயம் எனும் நாடகத்தை இயற்றினார். இந்நாடகத்தின் சிறப்பைக் கண்டு கிருஷ்ணமிஷ்ரர், தேசிகருக்கு கவிதார்க்கிக கேசரி எனும் பட்டத்தை அளித்தார்.

முதலில் பிரபல வைணவ ஆச்சாரியார் ஶ்ரீவேங்கடநாதா எனும் ஶ்ரீவேதாந்த தேசிக ரின் வாழ்வில் நடந்த நிகழ்வு ஒன்றைக் கவனிப்போம்….

ஶ்ரீதேசிகரின் வாழ்வில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. பல வாதப் பிரதிவாதங்களில் கலந்துகொண்டு வெற்றிவாகையும் சூடியுள்ளார். அதனா லேயே “கவி தார்க்கிக சிங்கம்” என்ற விருதையும் பெற்றுள்ளார்.  சுவாமி தேசிகர்-டிண்டிமா பட்டா (திண்டிமா என்றும் மருவி அழைக்கப்படுகிறது) கவி இடையே அவர்களின் புத்திசாதுரியத்தை வெளிப்படுத்தும் விதமாக, அழகானக் கவிதை வாயி லாக நடந்ததாகக் கூறப்படும் அருமையான விவாதமும் இதில் ஒன்றாகும். யார் இந்த டிண்டிமா கவி?

டிண்டிமா கவி என்பது ஒருவரது பெயரைக் குறிக்கவில்லை. மாறாக ஒரு குறிப்பிட் டப் புலவர்கள் குலத்தை அடையாளம் காட்டுவதாக அமைந்துள்ளது. விஜயநகர அர சர்கள் அவர்களுக்கு ஒரு சிறப்பான அந்தஸ்தத்தையும் அளித்தனர்.அவர்களின் வருகையைத் தெரிவிக்க “டிண்டிம்” என்று முரசில் ஒலி எழுப்புவார்களாம்,அதனால்தான் தங்கள் பெயரின் பின்னொட்டாக (SUFFIX) “டிண்டிமா கவி” என்ற பட்டப் பெயரையும் இணைத்துக் கொண்டார்கள்.

இவர்கள் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டு, தற்போதைய வட ஆற்காடு பிரதே சத்தில் விஜயநகரப் பேரரசர்களின் ஆதரவில் 14-16ம் நூற்றாண்டு வரை மிக்கப் புகழுடன் விளங்கினார்கள். இரண்டாம் ராஜநாதா டிண்டிமா மன்னன் சாளுவ நரசிம்ம னின் போர்க்களத் தீரச் செயல்களைப் பற்றியும், ராஜநாதா டிண்டிமா(3) ராஜா அச்சு தராயர் பிரபாவங்கள் பற்றியும் காவியங்கள் இயற்றியுள்ளனர். கௌடா டிண்டிமா என்பவரும் இக்காலத்தைச் சேர்ந்த ஒரு சிறந்த புலவர் ஆவார். எந்த முரண்பட்டச் சச்சரவுக்குள்ளும் சிக்காமல் இவர்களுள் ஒரு டிண்டிமா பட்டா தான் தர்க்க சாஸ் திர கவிசிம்மத்துடன் வாதித்தார் என்பதாக எடுத்துக் கொள்வோம். மேலே கட்டுரைத் தலைப்பில் கொடுத்துள்ள ஶ்ரீதேசிகர் சஹஸ்ரநாமம் 706-ம் துதியே இதற்குச் சான்று! மேலும், வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் இந்த டிண்டிமா பட்டா, சுவாமி தேசிகர் காலத்துக்கு இரு நூற்றாண்டுகள் பிற்பட்டவர். மன்னன் சாளுவ நரசிம்மனு டன் தொடர்புடையவர் என்றும் அறியப்படுகிறார்.

இந்த டிண்டிமா புலவர், தான் இயற்றிய ஶ்ரீராமர் சரிதத்தை கூறும் அபிநவ ராமாப் யுதயம் என்ற காவியமே மிகச் சிறந்தது எனத் தற்பெருமை அடித்துக் கொண்டு, அகங்காரத்துடன் நடந்து கொண்டார். ஒருமுறை ஶ்ரீரங்கம் சென்றவர் சுவாமி தேசிகரிடம் தனது நூலைக் காட்டிப் பீற்றிக் கொண்டார். சூடான வாதப் பிரதிவாதமும் நடந்தது. நூலை முழுதும் ஆராய்ந்துவிட்டுத் தன் அபிப்பிராயத்தைச் சொல்வதாகத் தேசிகர் கூறிவிட்டார். அந்தப் புலவர் திரேதாயுத நாயகன் ஶ்ரீராமனின் மீது காவியம் இயற்றியிருந்தார் என்றால், தேசிகரோ, துவாபரயுக நாயகன் ஶ்ரீகிருஷ்ணனின் லீலை களைச் சுவைபடக் கூறும், 24சர்க்கங்கள் கொண்ட யாதவாப்யுதயம் கிரந்தத்தை ஒரே இரவில் இயற்றிக் காட்டினார்.

கிரந்தத்தின் ஆரம்பமே அவரைப் புரட்டிப் போட்டுவிட்டது என்றால் அது மிகையாகாது மங்கல ஸ்லோகத்தைப் படித்து, அதில் அடங்கியுள்ளத் தத்துவப் பொருளைப் புரிந்து கொண்டதும் அவரது சப்தநாடிகளும் ஒடுங்கி விட்டன. மேலும், ஆறாவது அத்தியாயம், சித்திரக் கவிப் பாடல்கள் அடங்கிய கோவர்தனக் கிரி அருமைப் பெரு மைகளைக் கூறும் சித்திரச் சர்க்கத்தைப் படித்ததும் அவரது தலைக் கனம் சிதறுக் காயைப் போல் சுக்கு நூறாகத் தெறித்து விழுந்து விட்டது. அதன் நடையழகை முற் றிலும் உணர்ச்சிபூர்வமாக ரசித்துப் படித்தவர், அதுவே ஒரு தலைசிறந்த காவியம் என்று தீர்மானித்து மேலே என்ன சொல்வது எனப்புரியாமல் வாயடைத்துப் போனார்  வீராவேசமெல்லாம் காற்றிழந்தப் பலூன் மாதிரி ஆகி, கூனிக்குறுகி, பெட்டிப்பாம்பாக மாறிவிட்டார். தேசிகரின் கிரந்தத்துக்கு முன் தனது காவியம் ஒரு பொருட்டேஅல்ல என்பதை நன்கு புரிந்து கொண்டவர், சுவாமிகளைச் சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்து, தன்னை மன்னித்தருளுமாறு வேண்டினார்………

அவர்களிடையே நடந்த செய்யுள் வடிவ விவாதம் இதோ.…

சித்வா சர்வான் ஆரண்யான்யதி விஷமலதாகுல்ம துர்காணி சத்ய:

ப்ராப்தம் மாம் பக்கணாந்தம் பத பஷக: ததிர்புக்கணை அதிக்கரோதி|

லஜ்ஜந்தே ஹந்துமேனாம் மதகர(ட்)டிகடா கும்பபீடிவிபாட்

க்ரீடா தௌரேயதாரா மம களு நக்ரா: கிம் கரோமி க்வயாமி||

 (சித்வா=அபாயகரம்,

விஷமலதாகுல்ம=மரம்,முள்செடிகொடி,சத்ய:=குறுக்கிடும்,

 பத=பச்சாதாபம், பஷக:=நாய், ததிர்புக்கணை=புலையன் வீட்டைக் காவல் காக்கும்,

 மதகர(ட்)டி= மதம் பிடித்தயானை,கடா கும்ப=பானைபோன்ற மத்தகம், தௌரேய

 தாரா=கொஞ்சம் காயப்படுத்தி, களு=முறையிடு, நக்ரா:=நகம் )

அவர் தேசிகரிடம் செருக்குடன் சொல்கிறார்-அடர்ந்தக் காட்டுப் பாதையில், வெகு வேகமாக  வழியில் குறுக்கிடும் மரம், முள் செடிகொடிகளை அகற்றியபடி வந்திருக்கிறேன். நடுவே, ஒரு புலையன் வீட்டைக் காவல் காக்கும் நாய் வடித்த சோற்றை வயிறு முட்டச்  சாப்பிட்ட பிறகும், அதன் மீது பச்சாதாபப்படும் என்னைப் பார்த்துக் குரைக்கிறது. மதம் பிடித்த யானைகளின் மத்தகத்தை இந்தக் கூரிய நகங்களால் அனாயாசமாகக் கிழித்துச் சாகடித்திருக்கிறேன். இப்போது அதே நகங்களால் அல்ப சுவானம் ஒன்றைச் சிறிது கேலியாகக் காயப்படுத்தித் துவம்சம் செய்ய வெட்கப்படுகிறேன். ஐயகோ, என்ன செய்வேன் யாரிடம் போய் முறையிடுவேன்!

இங்கு,அவருடன் வாதிட்ட அதிமேதாவி, இறுமாப்பு மிக்கப் புலவர்களை மதம் கொண்ட யானைக்கு ஒப்பிடுகிறார். கூரிய நகங்கள் அவரது வாதத்திறமை, இலக்கி யப் புலமைக்கு உவமையாகச் சொல்லப்படுகின்றன. தேசிகரை மிகவும் மட்டம் தட்டிப் பேசுகிறார்.

பிரக்ஞானாமேவ ராஞாம் சதஸி ந சக்தே ஜல்பமல்பேதரேஷாம்
க்ஷுத்ரேஷ்வ ஆக்ஷேபமுத்ராம் ந களு கணயதே டிண்டிம:சார்வபௌம:|
பாங்குர்வத பேக குக்ஷிம்பரிஷு பயபரோத் ப்ராந்த போகீந்த்ர சுப்ரூ
ப்ரூணப்ரம்ஷீ கிமம்ப: ஃபணிஷு பதகராட் சம்ப்ரமீ பம்ரமீதி||

(பிரக்ஞானாம்=பண்டிதர்கள், ஜல்பமல்பேதரேஷாம்=பல அர்த்தமற்றப் பேச்சுகள், க்ஷுத்ரேஷ்வ=வாதமிடும், களு=உண்மையில்/சும்மா, கணயதே=பொறுத்துக் கொள்வது, சார்வபௌம:=சாம்ராட், பா(ங்)=பளபளக்கும், பேக:= தவளை, குக்ஷிம் பரி=நேர்மை/ வயிறு நிரம்ப, பயபரோத்=அநேக பயங்கர, ப்ராந்த=தவறாக, போகீந்த்ர=பாம்பின் உடல், சுப்ரூ=சுபர்ணன், ப்ரூண=கருமுட்டை, ப்ரம்ஷீ=கொல்ல, அம்ப: ஃபணிஷு=தண்ணீர் பாம்பு, ஃபணிஷு==HOOD,பேட்டை, தொப்பி, பதகராட்= முழுங்கு, சம்ப்ரமீ=குழப்பத்தில் வட்ட மிடும், பம்ரம்=வண்டு)

பண்டிதர்கள் நிரம்பிய ராஜசபையில் தங்களை அதிமேதாவிகள், எல்லாம் அறிந்த சூரர்கள் என்று எண்ணிக்கொண்டு, பலதரப்பட்ட அர்த்தமற்ற முட்டாள்தனமான வாதங்களை வாய்க்கு வந்தபடி உளறி வைப்பவர்களின் நடத்தையைக் கவிசாம்ராட் டிண்டிமா என்கிற இந்தப் புலவன் சும்மா பார்த்துக் கொண்டு செவிடன் போலிருக்க மாட்டான்,சிறிதும் பொறுத்துக்கொள்ளவும் மாட்டான். சாமானிய மனிதர்கள் என்மீது வைக்கும் விமரிசனங்களுக்கு  நான் ஏன் செவி சாய்க்க வேண்டும்? அழகிய பளபளக்கும் இறக்கைகளையுடைய சுபர்ணா (கருடன்) பெரிய பேட்டைகளுடைய அநேக பயங்கரப் பாம்புகள் மற்றும் அதன் கருமுட்டைகளை வயிறுமுட்டமுழுங்கியுள்ளான். அப்படிப்பட்டவன், வட்டமிடும் வண்டுபோல் குழப்பத்தில் மெய்மறந்துத் தவளையை உண்ணும் தண்ணீர்ப் பாம்பைக் கொல்வதில் நேர்மையாகப் பெருமைப் படுவானா?என்று மேலும் இகழ்ந்து பேசுகிறான்.

தன்னைப் பெரியதிருவடிக்கும், தேசிகரைத் தண்ணீர்ப் பாம்புக்கும் ஒப்பிடுவதைப் பாருங்கள்!

எவ்விதச் சலனமுமின்றி அவ்வளவையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ஶ்ரீதேசிகர், பழத்தில் ஊசியேற்றுவது போல் புலவனுக்குத் தக்கப் பதிலடியும் கொடுத் தார்…. அவர் காட்டும் உவமையைப் பாருங்கள்!

ஸ்பர்தந்தாம் சஹஜம் நு குஞ்சரதயா திக்குஞ்சரை: குஞ்சரா

கிராம்யா வா வனவாசினோ மதஜல ப்ரஸ்வின்ன கண்டஸ்தலா: |

ஹா காலஸ்ய விபர்யயம் ஸ்ருணு சகே ப்ராசீன பள்ளிமல

ஸ்வாதஸ்நிக்த கபோலபித்தி தம: கோலோ அபி சம்ஸ்பர்ததே ||

(ஸ்பர்த=போட்டி,சஹஜ்=சேர்ந்து, நு=எதுவாய் இருந்தாலும்,

குஞ்சரா=யானை/வேழம்

ப்ரஸ்வின்ன= வியர்வை, கண்டஸ்தலா=நெற்றி, விபர்யயம்=மாற்றம்/கோலம்

பள்ளிமல=கிராமத்துக் கழிவு ஓடை, ஸ்நிக்த=மூழ்கித் திளைத்து, கபோலபித்தி=

முகமெல்லாம், தம:=ஊதி,குழப்பி, கோலோ=பன்றி/ கேழல்/ வராகம்)

பட்டணத்தில் வாழும் பழக்கப் படுத்தப்பட்டப் பிராணியானாலும், காட்டில் வெறியு டன் அலையும் அபாயகரமான மிருகமானாலும் தங்களை மதம் பிடித்த,நெற்றியில் வியர்வை ஒழுகும் பலம் வாய்ந்த வேழம் என்று பீற்றிக் கொள்ளட்டும்; எண் திசை களைக் காக்கும் குஞ்சரங்களுடன் போட்டியிடட்டுமே! ஆனால் காலம் செய்யும் கோலத்தைக் கேள், தோழா! கிராமத்துக் கழிவுநீர் ஓடைச் சகதியில் சாவகாசமாக,  உற்சாகமாய்த் தலை மூழ்கித் திளைத்துக் கும்மாளமிடும் வராஹங்கள் கூட திக்கஜங் களுடன் போட்டி போடத் துடிக்கின்றனவே, என்ன செய்வது?

மேலும் தொடர்கிறார்

பாஹ்யை வர்ணாடம்ப ரைர்மா ப்ரமந்து

ச்சித்வா கர்பாப்யந்தரம் ஷோதயந்து |

நிர்ணேதாரோ நீரசத்வேன கோ வா

டிண்டிராணாம்  டிண்டிமாநாம் ச பேத: || (4)

(பாஹ்யை= வெளிப்பாடு/ அந்நியம், வர்ணாடம்ப=தரம் பொருந்திய, ரைர்மா=பண்பு, இயல்பு, ப்ரமந்து=மயங்கி, ச்சித்வா=பரிசீலனை, ஷோதயந்து=விளக்கம், நிர்ணே தாரோ= தீர்மானித்தல், நீரசத்வேன=குறைகளின்றி, டிண்டிராணாம்=நீர்க்குமிழி, டிண்டிமாநாம்= மத்தளம் பேத:= (இரண்டுக்குமுள்ள) வித்தியாசம்

(ஓரு பொருளின் புறத் தோற்றத்தைக் கண்டு மயங்கிவிடுதல் போற்றுதற்குரிய விஷயமல்லவே) ஒரு கிரந்தத்தை ஆராயும் விமர்சகர்கள் அது எடுத்துக் காட்டும் வெளிப்படையான இயல்பு, பண்புகளால் மட்டும் ஈர்க்கப்படாமல் அதில் அடங்கி யிருக்கும் சாராம்சம் எந்தக் குறைபாடு இன்றிச் சொல்லப் பட்டிருக்கிறதா என்பதையே தேட வேண்டும்- தொட்டால் உடையும் நீர்க்குமிழியா, தொடுவதால் நாதமெழுப்பும் மத்தளமா என அப்போதுதானே தெரியும்?

இப்படியாகத்தானே அவர்களிடையே கடுமையானச் சொற்போர் விவாதம் நடந்தது. சிங்கத்தின் முன் குள்ளநரி எதிர்த்துப் போராட முடியுமா? சுவாமிதேசிகரே முடிவில் வெற்றிவாகைச் சூட, தவறை உணர்ந்த டிண்டிமா கவி அவரிடம் சரணடைந்து, சுவா மியைப் போற்றிப் புகழ்ந்தார், இதோ இப்படித்தான்……

கோடீதாடீ கடோரஸ்ஃபுடவிகடகதாடோப வாசாடகோடீ

கோடீராகாடபேடீ புடகடிதமணீ சங்கசங்கடிட தாங்க்ரி:|

கர்வீகுர்வந் சகர்வம் ஜயதி கவிததேஸ சர்வதந்த்ர ஸ்வதந்த்ரோ

வேதாந்தசார்யவர்யோ விகடித ஜடதீ சங்கடோ வேங்கடேச: ||

 இப்பாடலில் புலவர் செய்யும் வார்த்தைஜாலம் நம்மை வியக்க வைக்கிறது! அவர் பயன்படுத்தியுள்ள மோனை அலங்கார அணி(ALLITERATION) செய்யுளைத் திரும்பத் திரும்பப் படிக்க வைக்கிறது என்பது என்னவோ, உண்மையே!

(கோடீதாடீ=குதிரைப் பந்தய சூதாட்டம், கடோர்=மும்முறம், ஸ்ஃபுட=தீவிரத்தைக் குறைக்க, விகடகதாடோப= சமாளிக்க முடியாத வாதாடுபவர், வாசாட=பேச்சுப் போட்டி,கோடீ=மகுடம்,ராகாடபேடீ=பொருள் வைக்கும் பெட்டி, புடகடிதமணீ= பளபளக்கும்மணி, சங்கசங்கடிட=பிறருடன் மோதுதல், கர்வீகுர்வந்=காயப்படுத்தும் செயலை அகற்றுதல், சகர்வம்=மிகப்படுத்திய தற்பெருமை, கவிததேஸ=எல்லாம் அறிந்த, விகடித=பயமுறுத்தும், ஜடதீ =மந்தம்,முட்டாள்தனம்)

ஶ்ரீவேங்கடேச தவச்சீலரே! தாங்கள் பங்கேற்ற தர்க்க விவாத நிகழ்ச்சிகள் யாவும் குதிரைப் பந்தயத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் பணயம் வைத்து விளையாடுவது போல் நீண்டுப் போய்க் கொண்டிருக்கும், அல்லவா! மும்முறமாய் கடுமையாக வாதம் செய்வோர் பலர் அதிமேதாவிகள், சமாளிக்க முடியாத அளவுக்கு விதண்டா  வாதமிடுபவர்கள், சிலர் மந்தபுத்தியுடையோர், இவர்கள் அனைவரும்  தற்பெருமை எனும் மின்னும் மகுடத்தைத் தங்கள் ”தலைப் பெட்டி” மேல் சூடியிருப்பதாகப் பீற்றிக் கொள்வர். இவர்களை வாதத்தில் வென்று, அவர்கள் அணிந்திருக்கும் செருக்குஎன்ற மகுடத்தை வீழ்த்தி, ஆணவம், ஆடம்பரம் மற்றும் வீண் கர்வத்தை அடக்கியுள்ளீர்! தாங்கள் கவிஞர்களுள் தலை சிறந்தவர். இதை அறிந்துகொள்ளாத இச்சிறியோனை மன்னித்து அருள்வீராக!” — எனக் கூறித் தன் கன்னங்களில் “பளார்பளார்” என்று அறைந்து கொண்டு சுவாமி தேசிகரைத் தண்டனிட்டார். பின்பு கீழ்கண்டவாறு போற்றித் துதித்தார்…..

 த்வி சதுஷ்பத பரிவர்தன

கர்வித கவிஷரப கண்டபேருண்ட: |

கண்டந கண்டந கவிரிஹ

டிண்டிமகவி கண்ட டிண்டிமோ ஜயதி ||

(த்வி சதுஷ்பத=2 அல்லது 4 சொற்களை மட்டும், பரிவர்தன= கையாண்டு, கர்வித கவிஷரப= கர்வமிக்க கவிகுஞ்சரம்,

 கண்டபேருண்ட:=கண்டபேருண்ட விலங்கு*

கண்டந கண்டந=கன்னத்தில் போட்டுக் கொண்டு, கண்ட டிண்டிமோ= மத்தளம் தட்டுவது )

ஸ்வாமி! டிண்டிமா என்கிற இந்தப் புலவன் தன் அடாதசெயலுக்கு வருந்தி, மத்தளத்தைத் தட்டுவது போல் கன்னத்தில் அறைந்துகொண்டு தங்களிடம் மன்னிப்பு கோரு கிறான். நீங்கள் அதிசயக் கண்டபேருண்டா விலங்குப் பறவை(!) போன்றவர். தங்களுக்குத் தெரிந்த இரண்டு (அ) நான்குச் சொற்களை வைத்துக் கொண்டு கவிதையில் வார்த்தை ஜாலம் காட்டித் தங்களைப் பலமிக்கக் குட்டிச் சிங்கம், யானைக்குட்டி என இறுமாப்புடன் சுற்றி வரும் போலி கவிஞர்களின் மமதையை  அடக்கி ஆளுபவர், நீங்கள்! உங்களுக்கு முன் நான் எம்மாத்திரம்?” எனக் கூறி சரணடைகிறான்.

*கண்டபேருண்ட=பயங்கர முகத்தையுடைய மகத்தான மந்திர தந்திரப் பலம் வாய்ந்த இரட்டைத் தலைக் கழுகு. மகேசன் கோபாவேச நரசிம்மரைச் சாந்தப்படுத்த எடுத்த ஷரபேஸ்வரர் வடிவம். தனது கூரிய வளைந்த நகத்தாலும்,அலகாலும் யானையைத் தூக்கிப் பிடித்திருக்கும். சரபேசுவரர் எட்டு கால்களும், இரண்டு முகங்களும், நான்கு கைகளும், மிகக்கூரிய நகங்களும், உடலின் இருபுறங்களில் இறக்கைகளும், சிங்கத் தைப் போல் நீண்ட மயிலிறகு போன்ற முடி கொண்ட வாலும், கருடனைப் போன்ற மூக்கும், யானையைப் போன்ற கண்களும், கோரப்பற்களும், யாளியைப் போன்ற உரு வமும் உடையவராகச் சித்தரிக்கப்படுகிறார்.

ஹோய்சால சாம்ராஜ்ஜியத்தின் அரசு சின்னமாக இருந்துள்ளது.

டிண்டிமா சர்வபௌமா அத்துடன் நிற்காமல் தேசிகர் மீது ஒருமங்கல ஸ்லோகத்தையும் உடனுக்குடன் இயற்றி வணங்கினார். மிகவும் எளிமையான, விரைவில் புரிந்து கொள்ளக் கூடியச் சொற்களையே இங்குப் பயன்படுத்தி யுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.  தினமும் ஶ்ரீவேதாந்த தேசிகர் சஹஸ்ர நாமாவளியைச் சொல்லுகையில் இந்த ஸ்லோகத்தைக் கூறி முடிப்பது ஒவ்வொரு வைணவரின் கடமையில் ஒன்றாக விளங்குகிறது.

வேதே சந்ஜத கேதே முனி ஜன வசனே ப்ராப்த நித்யாவமானே

சங்கீர்ணே சர்வவர்ணே சதி தத அநுகுன்ணே நிஷ்ப்ரமணே  புராணே |

 மாயாவாதே சமோதே கலி கலுச வசத சுன்ய வாதே விவாதே

தர்ம த்ராணாய யோ பூதஸ ஜயதி பகவான் விஷ்ணு கண்டாவதார! ||

கேதே=தளர்வு,நலிவு, அநுகுன்ணே= பரிவர்த்தனை, நிஷ்ப்ரமணே=குழப்ப நிலை,

கலுச=திறமையற்ற, த்ராணாய =ரட்சிக்க, காப்பாற்ற

(எங்கு பார்த்தாலும் கொந்தளிப்பு, கொடுமை,திறமையற்றப் போக்கு என கலிகாலத்து இலட்சணங்கள் தெரிகின்றன.தவறான முறையில் வேதநெறிகள் விளக்கப்படுவதால் அவை தளர்வடைந்து அவதிக்கு உள்ளாகின்றன;அறிஞர்களின் அறிவுரைகள் புறக்க ணிக்கப் படுகின்றன; அனைத்து வகுப்புகளிலும் புனிதமற்றக் கலாச்சார பரிவர்த்தனைக் காணப்படுகிறது; இந்தக் குழப்பமானப் பின்னணியில் நமது  புராண-இதிகாசங் கள் அதன் மகத்துவத்தைச் சிறிது  சிறிதாக இழக்க ஆரம்பிக்கின்றன; வஞ்சகமும், சூழ்ச்சியும் தலைவிரித்து ஆடுகின்றன; ஆன்மிகம், ஒழுக்கநெறிகள் பின்னடைவைச் சந்திக்கின்றன; நாத்திகவாதம் தலைத்தூக்குவதைக் காணமுடிகிறது; இந்த இக்கட்டா னத் தருணத்தில் தான் ஶ்ரீவேதாந்த தேசிகர், தர்மத்தை நிலைநாட்டவும், தர்மசிந்த னையை ரட்சிப்பதற்காகவும் ஶ்ரீமந்நாராயணனின் ஓங்கி நாதமெழுப்பும் கண்டாமணி யின் மறுபதிப்பாய் இப்பூவுலகில் அவதரித்தார்; அதில் அவர் அடையும் வெற்றியின் பிரகாசத்தில்  பிரமாதமாய் ஒளிர்கிறார். அப்படிப்பட்ட அவருக்கு நமது அநேக நமஸ் காரங்கள் உரித்தாகட்டும்! )

டிண்டிமாகவியின் ராகவாப்யுதயம் காவியத்தை விடச்சிறந்த  யாதவாப்யுதயம் காப் பியத்தை நமக்கு அருளிய ஆச்சாரியன் வேதாந்ததேசிகரை வணங்கித் துதிப்போம்.

————

காசினியோர் தாம் வாழும் காஞ்சி நகர் வந்துதித்து
தேசமெல்லாம் பவனி வரும் எங்கள் தேசிகக் கப்பல் இது !!
நாலு வேதங்களும் நங்கூரமாக
நலமுடைய வடகலைக் கொடியொன்றை நாட்டி
திருமொழிகள் முதலான பிரபந்தங்கள் எல்லாம்
திடமான கொடியிலே கயிறாக மாட்டி
ஆழ்வார்கள் பதின்மரும் அதன்மேலே ஏறி
அடைவுடன் வழிதேடி சுக்கான் திரும்ப
காஞ்சி நகர் விட்டு கிளம்பியே கப்பல்க
ஸ்தூரி ரங்கருடை கோவிலைத் தேடி
பரமகுரு எங்களுடை தேசிக கப்பல்
பாலாறு கரை தாண்டி வருகுதய்யா கப்பல்
ஏலேலோ விபுதேஷா கோவிந்தா
ஏலேலோ குருராஜா
கருணை எனும் கடல் நடுவே
ஞானம் எனும் பாய் விரித்து
மறையவர்கள் ஜெய ஜெயவென
மகிழ்ந்து வரும் கப்பல் இது
ஆறு சாஸ்திரங்களும் பீரங்கியாக
ஹயக்ரீவர் அவர்களுக்கு அதிகாரியாக
கப்பலின் மேல்வரும் துரைகளின் பேர்கள்
கணக்குடன் சொல்லுவேன் ஞானமுடன் கேளீர்
திருமலையிலே வாழும் திருவேங்கடத்தான்
திருவலிக்கேணியில் பார்த்தசாரதியும்
திருவள்ளூர் அதிகாரி வீரராகவனும்
திருவிடந்தை மேவு லக்ஷ்மிவராகன்
இத்தனை துரைகளும் இதன்மேலே ஏற
விசையுடன் கப்பலும் இவ்விடம் விட்டு
தெளிவுடை பெண்ணை நதிக் கரைதன்னில் வந்து
திருக்கோவலூர் கண்டு திரும்புதய்யா கப்பல்
ஏலேலோ விபுதேஷா கோவிந்தா
ஏலேலோ குருராஜா
உலகமெலாம் இருள் நீங்க
உடையவர் தம் மதம் விளங்க
அறு சமயக் கொடியறுத்து
அமர்ந்து வரும் கப்பல் இது
தர்மங்கள் ஆனதொரு பலகைகள் சேர்த்து
தர்ப்பங்கள் ஆனதொரு பாய்மரம் நாட்டி
அருமறைகள் ஆனதொரு ஆணிகள் தைத்து
அரங்க மாநகர் தேடி அதிவேகமாக
பதிகள் நூற்றெட்டிலும் முதலான கோயில்
பிரதிவாதியாலே ஒரு பழுதாகாதென்று
திருக்கோவலூர் விட்டு கிளம்பியே கப்பல்
திருச்சோழ் நாட்டை ஓர் நொடியிலே தாண்டி
காவேரிக் கரைதன்னில் உதயத்தில் வந்து
கஸ்தூரி ரங்கருடைக் கோவிலைக் கண்டு
கண்ணாலே ஆனந்த பாஷ்பங்கள் உதிர
கமலங்கள் போல இரு கைகளைக் கூப்பி
அத்தலத்துள்ளோர் அனைவர்களாலே ஆராதனம் நின்ற செய்தியைக் கேட்டு
செழிப்புடைய வடதிருக்காவேரி தாண்டி
ஸ்ரீரங்க நகர் வந்து சேர்ந்ததைய்யா கப்பல்
ஏலேலோ விபுதேஷா கோவிந்தா
ஏலேலோ குருராஜா
பதின்மர்கள் துதிசெய்ய கோவிந்தா
பாம்பணை மேல் பள்ளி கொள்ளும்
ரவிகுலத்தோர் குலதெய்வம் எங்கள் ரங்கருடை சன்னிதிக்கு
இவ்வுலகில் ஒருவரும் ஈடில்லையென்று
எங்கள் குரு தேசிகரை லேசாக எண்ணி
கிருஷ்ணமிஷ்ரன் வந்து கட்சிகள் சொல்ல
கண்டாவதாரரை கண்டித்து மேலும் சாஸ்திரங்களான
பீரங்கியாலே சண்டப்ரசண்டமாய் சண்டைகள் செய்து
எதிரிகள் கவிவாதி சிம்ஹத்தின் முன்னே
எதிரிகள் கவிவாதி சிம்ஹத்தின் முன்னே
எதிர் நிற்க மாட்டாமல் எழுந்திருந்தோட
அப்போது ரங்கருக்கு ஆராதனை செய்ய
அங்குள்ள பேர்களுக்கு ஆக்ஞைகள் பண்ணி
ஸ்ரீரங்க நகர் விட்டு கிளம்பியே கப்பல்
திருப்பேர்நகர் தாண்டி ஆடுதுறை வந்து
கும்பகோணம் வந்து ஒருநாள் இருந்து
கோதண்டபாணியுடை பாதங்கள் கண்டு
திருவாழி திருநகரி சீர்காழி வந்து
திரைகடல் போல் வரும் கொள்ளிடம் தாண்டி
சித்திர கூடம் வந்து ஒருநாள் இருந்து
தேவாதி நாதனை கண்டு கை தொழுது
அழகுடைய கருடநதி கரைதனில் வந்து
அயிந்தை மாநகர் வந்து சேர்ந்ததைய்யா கப்பல்
ஏலேலோ விபுதேஷா கோவிந்தா
ஏலேலோ குருராஜா

புரட்டாசித் திருவோணம் எனும் உத்தமமான நாள்!
வகுளாபரணப் பெருமாள் தமிழின் வாசியறிந்திருநாள்-
திக்கெட்டும் புகழ் ஸ்ரீபாஷ்யத்தைத் தெளிய உரைத்திடுநாள்
தீதாகிய பல மாயக் கலிகளை சிக்கென வென்றிடுநாள்.
பேச்சொன்றுக்குச் சததூஷணியைப் பேசிய தேசிக நாள்
வாதியர் வாழ்வறுத்த கவிதார்க்கிக சிம்மம், பற்பல
கலை வல்ல பாவலன் வேதாந்தார்யன் உதயம் செய்திடுநாள்

நானிலமும் தான் வாழ, நான்மறைகள் தாம் வாழ,
மாநகரில் மாறன் மறை வாழ – ஞானியர்கள்
சென்னி அணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

ஸ்ரீ கவிதார்க்கிக சிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம:

———————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading