ஸ்ரீ பாஷ்யம்-மங்கள ஸ்லோஹம்-
இஷ்ட தேவதா ஸ்தோத்திரம் மங்களம். மங்கள ஆஸி – நமஸ்காரம் .
இதர தேவதா மங்கள ஸ்லோகம் ; சமுசித தேவதா தியானமாகும்.
சங்கீதத்துக்கு ஸரஸ்வதி , ஆயர்வேதத்துக்கு தன்வந்திரி .
இஷ்ட தேவதையே சமுசித்த தேவதையாகும் போது , சமுசித்திஷ்ட தேவதா தியானமாகும்.
அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||
இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.
———-
பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–
பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சாராக்நி விதீபன வியபகத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
பகுமதிம் வியாஸாத தூரஸ்திதாம் (5)
அநீதாந்து நிஜாக்ஷரைஹி மனஸோ பௌமாஸ்து பிபந்வஹம் ||
——–
'*வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி''-வேதங்களிலும் மேம்பட்ட சாஸ்த்ரம் ஒன்றுமில்லை, இவை பகவானாலேயே வெளி வந்தவை, மதி மயக்கம், வஞ்சகம், ஆய்வின்மை, ஆற்ற லின்மை ஆகிய இழிவுகள் அற்றவை,
இந்த பாஷ்யத்தின் கம்பீரமான உரை நடை, ஸூத்ரங்களை ஆராயும் செம்மை, தேர்வை வெளி யிடும் நுண்மை, தர்க்கமுறை போல்வன வற்றாத பேரின் பலம் நல்க வல்லன.
ப்ரஹ்ம ஸுத்ரம்; சேதன அசேதனங்களைத் தனக்குச் சரீரமாக உடைய பகவானைப் பற்றியது. இவன் சரீரி. இவனைப் பற்றிய சாஸ்த்ரம், தர்க்க முறைப்படி அமைந்துள்ளது? ஆதலால் -இது சாரீரக மீமாம்ஸை எனப் பெபறும், (சாரீரகம்-:சரீரியான பகவானைப் பற்றியது).
விசிஷ்டாத்வைத மதத்திற்கு உயிர் நாடியாக விளங்குவது ஸ்ரீ ராமாநுஜம் அருளிய ஸ்ரீபாஷ்யம்) இந்த ஸ்ரீபாஷ்யம் ஸரஸ்வதி தேவியால் புகழப் பெற்றது. இவள் ஸ்ரீ ராமாநுஜருக்கு அளித்த விருது ஸ்ரீபாஷ்யகாரர் என்பது
உலகம் முழுதும் பகவானுக்குச் சரீரம் என்று ஸ்ரீ ராமாநுஜர் வெளியிட்டிருக்கிறார். “சேதன அசேதனங்கள் யாவும் இவனுக்கு உடைமைப் பொருள், இவனுக்கு விசேஷணமாக (அடைமொழியாக) விளங்குகின்றன. இவன் ப்ரகாரி; விசேஷ்யம்--விசேஷணத்தால் அறியப்படுவோன். இவன் சேஷி, ஜீவர்கள் இவனுக்கு சேஷ பூதர்; இவன் நியந்தா, இவர்கள் இவனால் நியமிக்கப் பெறுவோர்; இவன் ஆதாரம், இவர்கள் இவனால் தரிக்கப் பெறுவோர்; இவன் நம்மை உடையவன் நாராயணன். நமக்கும் இவனுக்கும் உள்ள தொடர்பு இயல்பானது; இத் தொடர்பு எக் காரணத்தாலும் குலையாது'” என்று இவர் வெளியிட்டிருக்கிறார். “இத் தொடர்பாலே இவன் நமக்கு எல்லா உறவுமானவன், நம்மிடம் கருணை மிக்கவன்; நம்மைக் காப்பதே தனது பேறாக நினைப்பவன்” என்பது ஸ்ரீ ராமாநுஜரது மதத்தின் சாரம். இது “எம்பெருமானார் தரிசனம்'” என்று பாராட்டப் பெற்றுள்ளது. --------------
இந்த நான்கு அத்யாயங்களின் சுருக்கம்; (1) பகவாளைப் பற்றி அறிந்துகொள்ள வேத வாக்கியங்களே ப்ரமாணம்--சான்றாவன; (2) பகவானே உலகுக்குக் கரரணம் என்பதற்கு மாறான கருத்துக்கள் ஏற்பதற்கில (3) பசுவானை ஆராதிப்பவன் பக்தியினாலே மோக்ஷம் பெறக் கூடும்; (4) இந்த பக்தியின் பலன் மோக்ஷத்தின் பேரானந்த அனுபவம். ----------------
முதல் அத்யாயம் பாதம் 1: சேதன ௮சேதனங்களைக் காட்டிலும் பகவான் மாறுபட்டவன். இவன் உலகுக்குக் காரணம், -தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவன். பாதம் 2: இவன் உலகைக் காரியமாக உடையவன். பாதம் 3: இவனே யாவர்க்கும் யாவற்றிற்கும் ஆத்மா. பாதம் 4: இவனால் படைக்கப்படாதன, இவனுக்குச் சரீரமல்லாதன இல. இரண்டாம் அத்யாயம் பாதம் 1: கபில ஸ்ம்ருதி போன்றவை ஆதரிக்கத். தக்கனவல்ல,. பாதம் & : பிற மதங்களின் குறைபாடுகள். பாதம் 3: சேதன அசேதனங்கள் யாவும் பகவானின் காரியம், பகவானால் நியமிக்கப்படுவன. பாதம் 4: இந்த்ரியங்கள் முதலியவற்றின் செயல் பற்றியது. மூன்றாம் அத்யாயம் பாதம் 1 : ஜீவர்களின் தோஷங்கள். பாதம் 2: பகவானின் குணங்கள். பாதம் 3: குணங்களை உபாஸநம் செய்யும் வகை: பாதம் 4: உபாஸனத்திற்கான கார்மாவைப் பற்றி. நான்காம் அத்யாயம் பாதம் 1 உபாஸந அநுஷ்டானம். பாதம் 2: அர்ச்சிராதி மார்கம்--தொடக்கம். பாதம் 3: அர்ச்சிராதி மார்கம். பாதம் 4: மோக்ஷ பலம். ----------------
முதல் அத்யாயம் . முதற் பாதம் வேதத்தின் பூர்வ பாகம், உத்தர பாகம் இவற்றை நன்கு பயில்பவன் கர்ம காண்டத்தில் விவரிக்கப்படும் தர்மங்கள் அற்பம், நிலையான பலனைத் தரமாட்டா என்று தேறுகின்றான். புண்ணிய கர்மாக்களால் “பெறும் பலன்களும் அழியும் இயல்புடையன, ஆதலால் இவற்றால் மோக்ஷம் பெற இயலாது. பகவானை நன்கு அறிபவன் கார்மாக்களுக்கு வசமாகமாட்டான்? ஸம்ஸாரத்தில் உழன்று துன்புறமாட்டான். பகவானைப் பற்றிய ஞானம் நிலையான நற்பயனை அளிக்கும் என்று ஒருவாறாக இவன் அறித்து கொள்கிறான். உறுதியான ஞானம் பெறுவதற்கு வேதாந்த வாக்கியங்களை ஆராயக் கருதுகிறான். பகவானைப் பற்றிச் சரியான கருத்து எவர்க்கும் ஏற்படாதென 'சிலர் கருத, இத்தகைய கருத்துடன் பகவானைப் பற்றிய ஆய்வு தொடங்குகிறது. இது முதல் அத்யாயம்; ஸமந்வயாத்யாயம் எனப்படும்.
1. 1. பகவானைப் பற்றி அறிய அவா எதிர்ப்பவர்களது கருத்து: பகவானைக் கண்களால் காண்பதற்கில்லை; இவனைப் பற்றி அனுமானத்தைக் கொண்டு அறியவும் இயலாது. ஆதலால் சொற்களின் மூலம் (வேதங்களைக் கொண்டு) அறிய வேண்டும். காரிய வாக்கியங்களாலேயே அறிவு நிகழ்கின்றது. ஒன்றும் அறியாத குழந்தைக்கு முன்,“பசுவைக் கொண்டு வா”, “பசுவைக் கட்டு” என்றால், அது பசு என்பதை அறிகின்றது. கொண்டு வருவது, கட்டுவது என்ற செயல்களையும் தெரிந்து கொள்கிறது. உலகிலுள்ள பொருள்களைப் பற்றி அறிய இவ்வாறான வாக்கியங்களே வேண்டுவன. பகவான் ஸித்தமானவன்; காரிய வாக்கியத்தால் அறிவதற்கில்லை. ஆதலால் இவனைப் பற்றி வேத வாக்கியங்களைக் கொண்டு ஆய்வதற்கில்லை, விளக்கம் : அறிவு பெறுவதற்குச் செயல்கள் பற்றிய வாக்கியங்கள் அவசியமில்லை. குழந்தையிடம், **இது மாமன் *இது பாட்டி” என்றால் மாமன், பாட்டி யார் யார் என்று இது எளிதில் புரிந்து கொள்கின்றது. ஆதலால் ஸித்தமான பகவானைப் பற்றி வேதாந்த வாக்கியங்களால் தெரிந்து கொள்ளக்கூடும்.
முதல் ஸூத்ரம்: அத அத: ப்ரஹ்ம-ஜிஜ்ஞாஸா- கர்மங்கள் பற்றி ஆய்ந்தறிந்த பின், இவற்றின் பலன் அற்பம் என்று தேறுவதால், பகவானை அறிய வேண்டமென்ற ஆவல் ஏற்றதே என்பது இதன் பொருள், -ஆதலால் பகவானைப் பற்றிய ஆய்வு துவங்குகின்றது. (2) பகவானின் லக்ஷணம்: ஓரு பொருளைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பினால், அதன் லக்ஷணம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். கண்ணால் காணக் கூடாத பகவானைப் பற்றி லகணம் எங்ஙனம் கூற முடியும்? இது எதிர்ப்போர்களது ஆஷேபம். இந்த எதிர்ப்புக்கு விடை அளிக்கும் ஸுித்ரம், ஜந்மாதி அஸ்ய யத:-- கண்ணாற் காணப்படும் சேதன் அசேதனங்களின் சிருஷ்டி, ஸ்திதி, லயம் இவை எவனிட மிருந்து நிகழ்கின்றனவோ (அவனே பகவான்). ௮ஸ்ய- இந்த "உலகுக்கு. * தைத்திரீயத்தில் ப்ருகுவல்லியில் வந்துள்ள கருத்து: எதனிடமிருந்து இவ்வுலகங்கள் உண்டாகின்றனவோ, பிறந்தவை எதனால் வாழ்கின்றனவோ, வாழ்வன எதை ப்ரளயத்தில் அடைகின்றனவோ அதை அறிவாயாக; அதுவே ப்ரஹ்மம் என்பது. இதுதான் மேலுள்ள ஸுூத்ரத்தின், விளக்கம். இதனால் பகவானின் இலக்கணம் கூறியாயிற்று. எதிர்ப்பு: இந்த வாக்கியத்தைக் கொண்டு பகவானை அறிவதற்கில்லை. ஒரு பொருளின் லக்ஷண்த்தை இரண்டு வகைகளில் வெளியிடலாம்: ஒன்று அடைமொழியாக. *'தொங்கும் கரமுடையது யானை”:, மற்றது உப லக்ஷணமாக: “*மரம் வாசலில் நிற்கும் வீடு என்னுடையது. '* தொங்கும் கரத்தைக் கொண்டு யானையை அறிகிறோம்; மரத்தைக் கொண்டு வீட்டை அறிகிறோம். ஜந்மாதி அஸ்ய யத: என்ற வாக்கியத்தில் படைப்புக்குக் காரணம், ஸ்திதிக்குக் காரணம், லயத்திற்குச் காரணம் மூவகைக் கருத்துக்கள் உள்ளன. “முழுக் கொம்பும் அரைக் கொம்பும் கொம்பில்லாததும்”” என்று பசுவைச் சொன்னால் பசுக்கள் மூன்று என்பதே தேறும். இதே போல் படைக்கும் பகவான், காக்கும் பகவான், அழிக்கும் பகவான் என்று பகவான் மூவர் என்றே கருதப்படுவர். ஆதலால் இங்குக் கூறிய இலக்கணம் சரியன்று. இது எதிர்ப்பவர் வாதம். மறுப்பு: கேசவன் கறுத்த நிறமுடையவன், இளைஞன், சிவந்த கண்ணினன் என்றால் இவை யாவும் ஒருவனையே குறிப்பன, இது போல் படைக்கும் பரம் பொருளே காப்பவனும் அழிப்பவனுமாவான் என்பது தேறுமன்றோ? விசேஷண முறையில் பகவானைப் பற்றிய விவரணம் இது. தேர்வு : புருஷ ஸுக்தத்தில் “*ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச் ௪ த்ந்பெள””. பூதேவி, ஸ்ரீதேவி இவர்கள் உன் பத்நிகள் என்பது காண்கிறோம். இது உபலஷணமாக பகவானை அறிந்து கொள்ளலாம். ஆக, படைப்பிற்குக் காரணம், ஸ்திதிக்குக் காரணம், லயத்திற்குக் காரணம் இவை மூன்றும் தனித்தனி யாகவோ, சேர்ந்தோ பகவானுக்கு லஷணம் என்றா யிற்று. படைப்பிற்குக் காரணம் நான்மூகன் அல்லன்; அழிப்புக்குக் காரணம் பரம சிவன் அல்லன் என்பதும் தேறுகின்றன. (3) சாஸ்த்ரம் ஆதாரம்: ப்ரஹ்மத்தை அநுமானத்தாலேயே அறிந்து கொள்ளலாம். குடத்திற்குக் கர்த்தா ஒருவன் இருப்பது போல பூமிக்கும் கர்த்தா ஒருவன் இருக்க வேண்டும் என்று அனுமானத்தால் தேறலாகும், ஆதலால் முன்பு கூறிய வேத வாக்கியம் அவசியமில்லை, சான்றாகாது--இது ஒரு கருத்து. மறுப்பு 2: ஆற்றல் மிக்க பகவானே உலகைப் படைக்கிறான் என்பது ஏற்பதற்கன்று. விசுவாமித்ர முனிவன் தனது தவத்தாலே ஓருலகைப் படைத்தான். ஆதலால் பேராற்றல் வாய்ந்த சிலர் படைக்கக்கூடும் என்பது ஊகிக்கலாம். ஆதலால் அனுமானத்தால் இக் கருத்து நிறுவ இயலாது. வேறு எந்தச் சான்றாலும் அறிய இயலாத போது சாஸ்த்ரமே ப்ரமாணம் என்று அறக் கற்றோர் வெளியிட்டுள்ளனர். இக் கருத்துடைய ஸூத்ரம் சாஸ்த்ர யோநித்வாத்-- சாஸ்த்ரம் ப்ரமாணமாகத் தேர்வதாலே பகவானைப் பற்றிய ஆய்வு செய்யத் தகும் என்பது. (4) பரம புருஷார்த்தம் : புருஷார்த்தம் என்பது நாம் பெற விரும்புவது. ஒரு பொருளைப் பற்றி அறியும் போது அதைப் பெறுவதற்கு விருப்பம் வேண்டும். இந்த விருப்பம் எவ்வாறு பெறுகிறோம் எனில், அனு கூலமாக நினைப்பன கை கூடும், ப்ரதிகூலங்கள் அகலும் 'என்ற கருத்தாலே. இதனாலேயே அப்பொருளைப் பெற மூயற்சி செய்கிறோம். பகவானைப் பற்றி அறியாததால் முயற்சிக்கு வாய்ப்பில்லை என்பது எதிர்ப்பவர்களது கருத்து, மறுப்பு : வேதாந்தங்கள் பரம் பொருளான பகவான் எல்லை யற்ற ஆனந்த ஸ்வரூபன் என்கின்றன. இத்தகைய பகவானைப் பெறுவது தான் பரம புருஷார்த்தமாகும். தெடுங் காலமாகசக் காணாமற் போன தன் மகனைது தகப்பன் கண்டும், அவன் மிகச் சிறந்தவனாக அறிந்தும் பரமானந்தங் கொள்கிறான். இங்கு விருப்பம் முயற்சி போல்வன இல; பெறுவது ஆனந்தம். இது போன்றதே பகவானே புருஷார்த்தம் என்று அறிவது. “தத் து ஸமந்வயாத்' என்பது ஸுத்ரம். இதன் பொருள் : பசுவான் சாஸ்த்ரத்தால் புருஷார்த்தம் என்று தெளிவாகச் சொல்லப் படுவதால், சாஸ்த்ரம் ப்ரமாணமாகக் கூடும். இந்த நான்கு ஸுத்ரங்களும் சேர்ந்து சதுஸ் ஸுத்ரி என்ற பகுதி, பகவானைப் பற்றி ஆராயக் கூடும் என்ற கருத்துடையது,. ஆதலால் ஆய்வு தொடங்குகின்றது. 1. 2. ஸங்கல்பித்தது யார்? பகவானே உலகுக்குக் காரணம் என்ற பொருள் முதலில் விளக்கப் படுகின்றது: “*காரணந் து த்யேய?” என்பதனால் காரணம் ஆராயப் படுகின்றது. மூல ப்ரக்ருதியே காரணம், ஜீவர்கள் காரணம் என்ற வாதங்கள் ஆராயப்பட்டு விலக்கப் பெறுகின்றன இந்த அத்யாயதின் நான்கு பாதங்களிலும். முன்பு விளக்கப்பெற்றது; ஜகத் காரணமான ப்ரஹ்மமே புருஷார்த்தமென்று. சாந்தோக்யத்தில் ஸத்வித்யையில் அறிவற்ற மூலப்ரக்ருதியே உலகுக்குக் காரணம் என வந்துள்ளது. மூலப்ரக்ருதியோ அறிவில்லாதது, தோஷங்களுக்கு இருப்பிடம். இது எவ்வாறு காரணமாகக் கூடும் என்பது ஸத்வித்யையிலுள்ள வாக்கியங்களைக் கொண்டு ஆய்வு நிகழ்கின்றது. மூலப்ரக்ருதியே காரணம் என்று வாதஞ் செய்வோர் கூறுவது : “தத் தேஜ ஐக்ஷ்த''--அந்த அக்நி ஸங்கல்பித்தது என்று தொடங்கி, நெருப்பு, நீர் போல்வன: ஸங்கல்பித்தன என்ற வாக்கியங்கள் வருகின்றன. இவ்வாறு உயிரில்லாத தேஜஸ் முதலாவன ஸங்கல்பித்தன என்பது முக்கியமான கருத்து கொள்வதன்று என்றே கருத வேண்டும். இதே போல் *'தத் ஐக்ஷத”” என்ற வாக்கியத்திலும். அன்றியும் இவ் வுலகம் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற குண மயமானது; இம் மூன்றும். கொண்டது மூல ப்ரக்ருதியே. மேலும் இந்த ஸத் வித்யையில் முதலில் கூறியுள்ளது: ஐகத் காரணமான ஸத்தை அறிந்தால் யாவும் அறிந்தன வாகும் என்பது, உதாரணமாக: மண்ணிலிருந்து குடமும், பொன்னிலிருந்து கிரீடமும் உண்டாகின்றன. இந்த அனுமானத்தால் ப்ரஹ்மம் அறியப்படாதது?: சாஸ்த்ரம் ஒன்றாலேயே ப்ரஹ்மம் அறியப்படும் என்பதால் அனுமானத்தால் அறிய இயலாது என்று தேறுகின்றது. ஆதலால் அனுமானத்தால் அறியப்படும் மூல ப்ரக்ருதியே உலகுக்குக் காரணமாகும். மறுப்பு: ஜகத் காரணப் பொருளுக்கு ஸங்கல்பம். கூறுவதால் அது அறிவில்லாத மூல ப்ரக்ருதி யாகாது. சாஸ்த்ரங்கள் வெளியிட்டுள்ளது: நுண்ணிய நிலையிலுள்ள சேதன அசேதனங்களைத் தனக்குச் சரீரமாகக் கொள்ளும் பகவானே காரணம்; ஸ்தூல நிலையில் இவற்றைச் சரீரமாகக் கொள்ளும் இவனே காரியம். இவ்வாறு ஆய்ந்தால் காரண காரிய ஓற்றுமை வெளிப் படுகின்றது. ஆதலால் ஜகத் காரணம் பரம புருஷனே.. நெருப்பு ஸங்கல்பித்தது என்பது போன்ற வாக்கியங்களில் பகவானே அந்தர்யாமியாக ஸங்கல்பித்தான் என்று தேறலாம். '*ஐதத் ஆத்ம்யகம் இதம் ஸர்வம்'”-- இவை ஸத்தை ஆத்மாவாகக் கொள்வன என்பது இங்குச் சான்று. ஆதலால் பகவானே ஸத்வித்யையில் போற்றப் படும் ஜகத் காரணப் பொருளாவான். தேர்வு 1. முமுக்ஷாவான ச்வேதகேது பெற்ற உபதேசம் : ஐகத் காரணமான ஸத்தை உபாஸித்தால் சரீர முடிவில் அதனைப் பெறுவதே மோக்ஷம் என்று. மூல ப்ரக்ருதியை உபாஸித்து இதையே மோக்ஷமாகமப் பெறுவது எவ்வாறு? அன்றியும் ஒருவன் எதை உபாஸிக்கின்றானோ, அப்படியே இறந்த பின் ஆகிறான் என்பதும் கூறப்படுகிறது. ஆதலால் ஸத் என்பது மூல ப்ரக்ருதி எனில் அறிவற்ற இதை உபாஸித்து அறிவற்றவனே ஆக வேண்டும். இதனாலும் விளங்குவது பகவானே உபாதாந காரணம் என்பது. தேர்வு 2: மூல ப்ரக்ருதியோ மோக்ஷ விரோதி; இதனால் இதன் இழிவு வெளிப்படை. மோக்ஷ காரணம் என்பது ஏற்றமேயாகும்; இழிவாகாது, ஆதலால் ஸத் என்பது மூலப்ரகிருதி யாகாது. தேர்வு 3: ஜகத் காரணம் அறிந்தால் யாவும் அறியலாம் என்பது முக்கியமான கருத்தாகும். அறிவற்ற மூல ப்ரகிருதியை அறிந்தால், இது காரணம் என்றால், காரியப் பொருளான ஜீவனும் அறிவற்றவன் என்பதே தேறும். தேர்வு 4: ஒருவன் தூங்கும்போது ஜீவன் தனக்குக் காரணமான ஸத்தில் ஓடுங்குகிறான் என்பது ஒரு வேத. வாக்கியம், ப்ரதானமே ஸத் எனில் இந்தக் கருத்து ஏற்றதாகாது. _ தேர்வு 5: பல உபதிஷத்துக்களின் கருத்து : எவன்: எல்லாப் பொருள்களின் ஸ்வ -ஸ்வரூப ஸ்வபாவங்களை அறிகிறானோ, அவனிடமிருந்தே இந்த மூல ப்ரக்ருதி ஜீவர்கள் உண்டாகின்றது; இவை யாவும் பரம புருஷனே; அப்பரம புருஷ னிடமிருந்தேதே அண்டம் உண்டாயிற்று. நாராயணன் ஒருவனே மூதவில் இருந்தான். இவ்வாறான வாக்கியங்கள் ஒரூமூகமாக பகவானே உலகுக்குக் காரணம் என்று முழங்குகின்றன தேர்வு 6: இதே உபதிஷத்தில் ஓரிடத்தில் வந்துள்ளது; ஆத்மாவிடமிகுத்து ப்ராணன், ஆகாசம் உண்டாகின்றன; உலகம் யாவும் பரமாத்மாவிடமிருந்தே உண்டாகின்றது என்பது. இவ்வகைகளில் ஆராய்ந்தால் யாவும் அறிந்த பரம் பொருளே உலகுக்கு உபாதான காரணம் என்பது தேறுகின்றது. 1. 3. ஆனந்த மயன் - யார்? மூலப்ரக்ருதிக்கு ஸங்கல்பம் நேராது, ஆதலால் அது உலகுக்குக் காரணமாகாது என்று விளக்கப்பட்டது. ஜீவனுக்கு முக்ய ஸங்கல்பம் கூடும், ஆதலால் இவன் காரணமாகலாம் என்பது ஆராயப்படுகின்றது. ஜீவன் காரணமாகலாம் என்பதற்கு விளக்கம்: தைத்திரீயத்தில் ஜகத் ஸ்ருஷ்டியைப் பற்றி விளக்கத் தொடங்கிப் பின்வரும் விவரங்கள் உள்ளன ; அன்னத்தால் வளர்வது சரீரம்; சரீரத்தை தரிப்பது ஐம்பால் ப்ராணன்; ப்ராணனில் நுண்ணியது புத்தி, இவ்வாறு படிப்படியாகக் கூறி இவற்றைத் தரிப்பது ஜீவன் ஆனந்த மயன் என்பது. விஜ்ஞான மயன் என்ற புத்தியைக் காட்டிலும் வேறுபட்டது நுண்ணியதான ஆனந்தமயன் ஆத்மா என்றும் வந்துள்ளது. இந்த விஜ்ஞான மயமான புத்திக்குச் சரீரத் தொடர்புள்ளது ஆத்மா என்பதால் இது ஜீவாத்மாக வேண்டும். ஆதலால் ஜீவன் ஆனந்த மயன் என்பது தேறுகின்றது. மறுப்பு: இதே பகுதியில் விஜ்ஞானம் என்ற சொல் பல இடங்களில் ஜீவனைப் பற்றியே வருகிறது. அறிவே இயல்பாகவும் குணமாகவும் உள்ள ஜீவன் ஜ்ஞானமாகவும் ஜ்ஞான மயமாகவும் சொல்லக்கூடும். இவனினும்: நுண்ணியதாய், இவனை தரிப்பவன் பரமாத்மாவான: ஆனந்த மயன். அன்றியும் ஆனந்தத்தை அளவிடும்போது மனுஷ்ய ஆனந்தத்தை அளவுகோலாக் கொண்டு, இதைப் போல் நூறுநூறு மடங்காக அடுக்கிக்கொண்டு அளவு காணாத தால் சொற்கள் மீண்டன. '*யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ”. இவ்வாறான பேரானந்தம் உலக வாழ்க்கையில் உழலும் ஜீவனுக்கு இல்லை? பகவானுக்கே உண்டு. **சாரீர ஆத்மா” என்று சரீர ஸம் பந்தம் கூறும் பகவானுக்கே இத்தகைய ஆனந்தம் பொருந்தும். பூமி, ஆத்மாக்கள் யாவும் பகவானுக்குச் சரீரமாகக் கூறப்படுகின்றன. தேர்வு 1: '*ஸத்யம் ஜ்ஞாநம் அதந்தம் ப்ரஹ்ம” என்ற விவரத்தால் ப்ரஹ்மம் ஆனந்தமயம் என்று சொல்லப்படுகிறது. இந்த ப்ரஹ்மத்தை அறிபவன் மேம்பட்ட பலமான பரப்ரஹ்மத்தை அடைகிறான் என்பதும் அறிவோம். ஜீவன் அடைவது இந்த ப்ரஹ்மம். ஆதலால் இவனைக் காட்டிலும் சிறப்புடைய பகவானே ஆனந்த மயனாக வேண்டும். தேர்வு 2: படைக்கும்போது பகவான், :நான் பலவாறாகக் கடவேன்” என்று ஸங்கல்பிக்கிறான். சரீரமில்லாமல் ஜீவன் ஒன்றையும் படைக்க இயலாது, ஆதலால் உலகைப் படைக்கும் ஆனத்தமயன் ஜீவனாக முடியாது. தேர்வு 3: தைத்திரீயத்தில் ஜீவன் ரஸஸ்வரூபியை அடைந்து ஆனந்த மூடையவனாகிறான் என்று வந்துள்ளது. ஆதலால் ஆநந்தமயன் ஜீவனைக் காட்டிலும் வேறுபட்டவன். ஆனந்தமயன் என்பதன் கருத்து; வேறு எதுவும் கலவாது முற்றிலும் ஆனந்தமாகவே இருத்தல். இது: ஸர்வேச்வரனுக்கே உரியது, 1. 4. ஆதித்ய புருஷன் யார்? சாதாரணமான ஜீவர்களுக்கு ஐகக் காரணமாயிருப்பது கூடாதெனில், விசேஷ சக்தி வாய்ந்தவர்களுக்கு இது கூடும் என்ற சங்கையினால் ஆதித்ய புருஷன், அக்ஷிபுருஷன் இவர்களைப் பற்றி இங்கு ஆராய்வு நிகழ்கின்றது. ஆதித்யனுக்குள் பொன் மயமான புருஷன் இருக்கிறான்; இவனுக்கு மீசை பொன் மயம், கேசம், நகம் பொன் மயம்; கண்கள் தாமரை போல்வன என்று சாந்தோக்யத்தில் வந்துள்ளது. மீசை, சேசம், நகம் போல்வன சரீரம் உள்ள ஜீவார்களுக்கே உள்ளன. ஆதலால் இங்கு விவரிக்கப் பெறுவது சக்தி மிகுந்த ஒரு ஜீவன்; இவனே உலகப் படைப்பு செய்ய வல்லவன், இது ஒரு கருத்து. மறுப்பு: உபநிஷத்துக்கள் விளக்கியுள்ளது; ஆதித்ய புருஷன் பாவங்களுக் கப்பாற்பட்டவன்? இவனுக்குப் பாடகர்கள் ரிக்வேதம், ஸாம வேதம். கண்ணிலிருப்பவன் ரிக் வேத மாவான். ஸாம வேத மாவான், ஆதலால் இப்புருஷன் ஜீவனாக முடியாது. அன்றியும் வேத வாக் யங்கள் மூலமாகவும் &தை மூலமாகவும் அறிவது: திவ்ய மங்கள விக்ரஹம் பரமாத்மாவுக்கே உண்டு. ஆதலால் ஆதித்யனிலும் அக்ஷிகளிலும் உள்ளே இருப்பவன் பரமாத்மாவே. அன்றியும் ஆதித்யன் முதலான தேவர்கள் யாவரும் பகவானுக்குச் சரீரம், பகவான் இவர்களுக்கு ஆத்மா என்று வேதங்கள் ஓலிக்கன்றன, ஆதலால் ஆதித்யனிலுள்ள புருஷன் இவர்களைக் காட்டிலும் வேறுபட்ட பகவானே. 1. 5. ஆகாசம் ஜகத் காரணமா? சாந்தோக்யத்தில் (1-9-1) பூதங்கள் யாவும் ஆகாசத்திலிருந்து உண்டாகின்றன, விளக்கம் பின்வரும் உபநிஷத் வாக்கியங்களை ஆராய்வோம். இவ்வுலகம் ஆத்மாவாகவே இருந்தது? ஆத்மாவிலிருந்து ஆகாசம் உண்டாயிற்று; நாராயணன் ஒருவனே இருந்தான்; பிரமனும் இல்லை, சிவனும் இவ்லை. நாராயணனிடமிருந்து பிரமன் உண்டானான். இவை யாவும் நாராயணனே ஐகத் காரணம் என்று காட்டுகின்றன. அசேதனமான ஆகாசம் காரணமாக முடியாது. ஆகாசம் என்பதன் பொருள்; *ஆ ஸமந்தாத்ீ காசதேத'”- எங்கும் ப்ராசிக்கிறது, ஆதலால் ஆகாசம் என்பது. இதனால் ஆகாசம் என்ற சொல் எங்கும் விளங்கும் நாராயணனைக் குறிக்கும். ஆதலால் பகவானான நாராயணனே ஜகத் காரணம். 1. 6. வாயு ஜகத் காரணமா? சாந்தோக்யத்தில் ஒரு வாக்கியம்: பூதங்கள்" யாவும் ப்ராணனில் லயிக்கின்றன, ப்ராணனிடமிருத்து வெளிக் கிளம்புகின்றன. ப்ராணன் என்பது ஜீவராசிகள் வாழ்வதற்குக் காரணமான வாயுவே ஆகும். ஆதலால் ஆகாசத்தைக் காட்டிலும் ஐகத் காரணமாகத் தகுதி பெறுவது இந்த வாயுவே. இது சிலர் கருத்து, தேர்வு : ப்ராணனால் வாழ்வு பெறுவது சரீரமே? ப்ராணனாலே தான் இது செயல்படுகின்றது. ஆனால் நாராயணனே யாவற்றிற்கும் காரணம் என்கின்றன வேத வாக்கியங்கள். ஆதலால் இவனே ப்ராணன் என்பதுவே தேறும். 1. 7. அக்நி ஜகத் காரணமாகுமா? “*வாயோரக்நி.'”' *வாயுவிலிருந்து தோன்றியது ௮க்னி- மூன்றாவது பூதம். இதுதான் ஜகத் காரணம் என்பது ஓரு கருத்து. இதன் விளக்கம்: வியஷ்டி பதார்த்தங்கள் (பகுத்துப் படைக்கப்பட்டவை), ஸமஷ்டி. பதார்தங்கள் (ஒட்டு மொத்தமாகப் படைக்கப்பட்டவை) இவற்றுக்கும் அப்பால் மேலே பரமபதம். இதற்கும் மேலே மிகச் சிறந்த உலோகங்களிலே ஒளி பரப்பும் சோதி இலங்குகின்றது. அதுவே இம்மனிதனுள் விளங்குஞ் சோதி - ஜாடராக்தியோடு ஒன்றாகும். இது சாந்தோக்ய வாக்கியம். ஜாடராக்நியோடு ஒன்றெனக் கூறுவதால் இது பஞ்ச பூதங்களுள் ஒன்றான அக்நி, சூரியன் போன்ற அசேதனங்களான சோதிகளுள் ஓன்று என்பதே தெளிவு. மறுப்பு: இதே பகுதியிலே காணும் வாக்கியம்: இப் பரம் பொருளுக்கு பூதங்கள் யாவும் ஒரு பாதம்? மற்றைய மூன்றும் பரமபதத்தில் உள்ளன என்பது. இங்குக் கூறும் சோதி, இவ்வுலகில் காணும் பூதங்கள் யாவற்றையும் ஒரு பாதமாகக் கொண்டுள்ளது என்பதால் இது நாராயணனைப் பற்றியேயாகும். மேலும் பகவானது திருமேனி சூரியனைப் போலே ஒளியுடையது மின்னற்கொடி போன்றது; ஆயிரம் ஆதித்யர்களது ஓளி ஒரே காலத்தில் நேரும் எனில், அது அம் மஹா புருஷனின் திருமேனி ஒளிக்கு ஒப்பாகும் என்ற வாக்யங்கள் உள்ளன. திருமேனி சோதி மயமானதாலே சோதிகளுக்கெல்லாம் ஒளியை அளிக்கும் பரஞ்சோதி என்பது பொருந்தும். இப்பரஞ்சோதி ஸர்வேச்வரனே. பகவான் ஜாடராக்நி ஸ்வரூபன் என்பதன் கருத்து: இவன் இதற்கு அந்தர்யாமி என்பதே. கீதையில் பகவான், **நானே ஜாடராக்நியாகி ப்ராணிகளின் உடலிலே இருக்கிறேன்” என்றது ஒப்பு நோக்கு. ஆதலால் சோதி என்பது பரஞ்சோதியான நாராயணனே. 1. 8. இந்திரன் ஜகத் காரணமா? சூர்யன், அக்நி போல்வாருக்குத் தலைவனான. இந்திரன் ஜகத் காரணமா என்ற விஷயம் இப்போது. ஆராயப்படுகின்றது. தனக்கு. உபதேசிக்க வேண்டும் என்று கேட்ட ஒருவனுக்கு. இத்திரன் கூறியது: என்னையே உபாஸிப்பாய்; அறிவு ரூபமான ஆத்மாவாக இருக்கும் நானே ப்ராணன்? ப்ராணனான என்னை ஆயுளாகவும் அம்ருதமாகவும் உபாஸிக்கக் கடவாய் என்று. ஆதலால் மோக்ஷ ஸாதனதிற்கு உபாயமாகச் சொல்லும் இந்திரனே ஜகதி, காரணம். இது ஒரு கருத்து. விளக்கம் இப்பகுதியில் முதலிலும் நடுவிலும் முடிவிலும் பரமாத்மாவின் பெருமையே அதிகமாக விளக்கப் படுகின்றது. ரத சக்கரத்தின் ஆரங்கள் போல சேதன. அசேதனங்கள் ப்ராணன் எனப்பெறும் பரமாத்மாவிடம் கோர்க்கப் பட்டுள்ளன. ப்ராணனுக்கு ஆதாரம் பரமாத்மா. இப்பரமாத்மா நம்மை மேலுலகங்களுக்குக் கொண்டு செல்ல விரும்புகிறான்; நற்செயல்கள் செய்விக்கிறான் என்றும் வந்துள்ளது. இவ் விவரங்கள் பிறப்பு, இறப்பு இவையுடைய இந்திரனைப் பற்றி அல்ல. **ஸேந்த்ர:'' என்று பகவான் இந்திரனுக்கு அந்தர்யாமி யாகப் புருஷ ஸூக்தத்தில் காண்கிறோம். ஆகையால் இங்கு இந்திரன் எனப் பெறுவோன் ஸ்ரீமந் நாரயணனே ஆவான். “மாம் உபாஸ்வ'” என்று இந்திரன் கூறியதன் கருத்து: எனக்கு அந்தர்யாமியான பரமாத்மாவை உபாஸிப்பாய் என்பது. ப்ரஹ்மத்தை உபாஸித்த வாமதேவர், “நானே மனு, நானே ஸர்யன்”” என்றறிந்தார். எவ்வாறெனில், இதன் பொருள்: தமக்கு அந்தர்யாமி யான பகவானே மனுவுக்கும் ஸுர்யனுக்கும் அத்தர்யாமி என்பது. ஈச்வரன் யாவர்க்கும் அந்தர்யாமி ஆதலால் இந்திரன் கூறியது: எனக்கு அந்தர்யாமியான பரமாத்மாவைக் கருதி என்னையே உபாஸிப்பாய் என்பது. பகவானை உபாஸிப்பது மூன்று வகை: அவனது ஸ்வரூபத்தை நேரே அனுஸந்திப்பது, ஜீவ ஸ்வரூபத்திற்கு அந்தர்யாமியாக உபாஸிப்பது,அசேதன ஸ்வரூபத்திற்கு அந்தர்யாமியாக உபாஸிப்பது, இந்திரன் வெளி யிட்டது: இந்திரனுக்கு அந்தர்யாமி நிலையையும் ப்ராணனுக்கு அந்தர்யாமி நிலையையும் பற்றி, ஆதலால் ப்ரஹ்ம உபாஸனையே கூறப்படுகிறது. இந்திர ப்ராண சப்தத்தால் தெரிவிப்பது பரமாத்மாவே என்பது. ஸித்தமான பகவான்ப் பற்றி வேத வாக்கியங்களால் அறிந்து கொள்ள இயலும். வேத வாக்கியங்கள் இவனது லஷணங்களை உரைப்பன. இவ்விஷயத்தில் சாஸ்த்ரம் தக்க சான்றாகும். பரம புருஷார்த்தமாகிய பகவானைப் பற்றி சாஸ்த்ரங்கள் அறிவிக்கக்கூடும். ஸத்வித்யையில் சொல்லப்படும் பகவான் உலகுக்குக் காரணமாவான், மூலப்ரக்ருதி யன்று. இவனே ஆனந்த மயன், ஜீவன் அல்லன். ஸுர்யனிலும் கண்ணிலும் இருப்பதாகக் கூறப்படுபவன் இந்த பகவானே. ஆகாசம், ப்ராணன், சோதி இவை ஐகத் காரணமல்ல; பகவானே காரணம். இந்திரனென்றும் ப்ராணனென்றும் பெருமையுடன் கூறப்படுவது பகவானே, இந்திரனு மல்லன், ப்ராணனு மன்று, --------- 2... இரண்டாவது பாதம் முதற், பாதத்தின் பொருள் : ப்ரஹ்மம் சேதன அசேதனங்களைக் காட்டிலும் விலஷணமானது; உலகுக்குத் தனிக் காரணம் விலக்ஷண புருஷன். ஐக்ஷ்த என்ற ஸுத்ரத்தால் இவன் அசேதனங்களைக் காட்டிலும் விலக்ஷணன் என்பதும், ஆனந்தமயன் என்ற ஸுத்ரத்தால் சேதனங்களைக் காட்டிலும் விலக்ஷணன் என்பதும் வெளியிடப்பட்டது. இப்பாதத்தில் இவன் ஐகச் சரீரன் என்பது அறுதியிடப்படுகிறது. 2-1. அனைத்தும் ப்ரஹ்மமே சாந்தோக்யத்தில் ஒரு வாக்கியம் சாண்டில்ய வித்யையைப் பற்றியது: *“ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம -தஜ்ஜலாநிதி சாந்த உபாஸஹீத”” இது எல்லாம். ப்ரஹ்மமே. அதனால் (இவை) தோன்றி, வாழ்ந்து, அதில் மறைவதால். இவ்வாறு சாந்தி யுடையவளாக உபாஸிக்க வேண்டும் என்கிறது இந்த வாக்கியம்.” தன்னுடைய கர்மத்தின் பலனாலே ஜீவனே ப்ரஹ்மா முதல் புல் வரையில் எல்லாப் பொருள்களும் ஆக முடியும். பகவான் தோஷங்களுக்கு எதிர்நிலை: தோஷங்களுக்குக் கொள்கலமான எல்லாப் பொருள்களுமாக, பகவான் ஆகமுடியாது. ஜீவர்களின் கர்ம மடியாகவே, உலகம் தோன்றி, வாழ்ந்து, மறைகின்றது. **தஜ்ஜலாந்:' (தோன்றி வாழ்ந்து மறைவது) என்று சொல் ஜீவனிடம் பொருந்தும். ஆதலால் இந்த வாக்யத்தில் சொல்லப்படுபவன் ஜீவனே... மறுப்பு : தைத்திரீயத்தில் ஒரு வாக்கியம்:**யதோவா இமாநி பூதாறி ஜாயந்தே, யேந ஜாதாநி ஜீவந்தி, ய்த் ப்ரயந்தயபிணம்விசந்தி, தத் விஜிஜ்ஞாஸ்ஸ்வ கத்ப்ரஹ்மேதி'”--எவனிடமிகுந்து பொருள்கள் யாவும் தோன்றுகின்றனவோ. தோன்றியவை எதனால் வாழ்கின்றனவோ, ப்ரளய காலத்தில் எதனுள் ஒடுங்குகின்றனவோ, அதை நீ அறிவாபய் என்பது படைத்துக் காத்து அழிப்பது மூன்றும் பரம் பொருளுக்கே உரியன, ஜீவனுக்கு அல்ல. சங்கை : தோஷமே இல்லாத பரமாத்மா, தோஷங் களுக்கு இருப்பிடமான பொருள்கள் யாவுமாவது: எவ்வாறு ஒட்டும்? விளக்கம் : ப்ரளய காலத்தில் நுண்ணிய நிலையிலும், ஸ்ருஷ்டியில் ஸ்தூலமாகவும் சேதன அசேதனங்கள் உள்ளன. இவற்றை பகவான் சரீரமாகக் கொள்கிறான். தோஷங்கள் சரீரமான சேதனர்களிடமே உள்ளன, சரீரியான பகவானிடம் இவை அணுகவும் மாட்டா. ஆதலால் இவனை எல்லாப் பொருள்களுமாகக் கூறலாம். அன்றியும் ஒரு சரீரத்திலுள்ள ஜீவன் வேறொரு ஜீவனாக ஆகமுடியாது; ஜீவனை யாவுமாகச் சொல்லுவது சரியன்று. ஆதலால் ஐகத் காரணமாகவும் ஸர்வாத்மாவாகவும் சொல்லப்படுவது பகவானே. அன்றியும் பகவானைப் பற்றி ஒரு வாக்கியம்: தூய மனத்தாலேயே அறியத் தக்கவன், ஒளி மயமானவன், எல்லாச் செயல்களையும் ஆற்ற வல்லவன்; இவன் எவனையும் ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை; ஆதலால் எவனிடமும் வாய் பேசாதவன். இவை யாவும் பரமாத்மாவுக்கே பொருந்துவன. மேலும் பகவான் ஜீவனால் அடையப் பெறுபவன் என்றும், ஜீவன் இதற்குக் கர்த்தா என்றும் வேதவாக்யங்கள் உள்ளன, ஆதலால் உபாஸிக்கப்படும் பகவான் உபாஸனம் செய்யும் ஜீவனினும் மாறுபட்ட. பரம்பொருளே. கீதையில் வருவது (15-75) : பரம் பொருளை உபாஸிப்பவன் ஜீவன், பரம புருஷன் ஜீவனின் இதயத்தில் உறைபவன் என்று. உபாஸநம் செய்யப்படுவோன் பகவானே. மறுப்பு : கட்டை விரல் பருமனுள்ள இதயத்தில் இருக்கும் ஆத்மா நெல்லை விடக் கோதுமையை விடக் கடுகை விடச் சிறியது என்கிறது உபநிஷத். இதயத்தில் இருக்கும் என்னுடைய ஆத்மா என்று சொல்லுவதால் இது ஜீவனைப் பற்றியதே. பகவானைப் பற்றியது எனில் மிகச் சிறிய இவன் எவ்வாறு எங்கும் வியாபிக்க இயலும்? விளக்கம் : பரமாத்மாவை உபாஸிப்பதற்காகவே இதயத்தில் ஏறிய நிலையை வெளியிட்டது. இவன் பூமியை விடப் பெரியவன், அந்தரிக்ஷ்த்தை விடப் பெரியவன், தேவலோகத்தை விடப் பெரியவன் என்று இவ்வாறு வாக்யங்கள் கூறுகின்றன. இந்தக் காரணத்தாலும் இந்த வித்யையில் சொல்லப்படுபவன் ஜீவனாக முடியாது; பரமபுருஷனே என்பது திண்ணம். மறுப்பு : பகவான் இதயத்தில் உறைவதால் இவன் அவனைப் பேரலவே இன்ப துன்பங்கள் அனுபவிக்க நேரிடும். ஆதலால் இவ் வித்யையில் சொல்லப்படுபவன் ஜீவனே என்று கருத வேண்டும். விளக்கம் : பகவான் இழிவுகளுக்கெல்லாம் எதிர்த் தலை; கல்யாண குணங்கள் பலபல வாய்ந்தவன்; கர்மத்திற்கு வசப்படாதவன்; தனது இச்சையாலே சரீரத்தில் உறைகின்றான் என்று வாக்யங்கள் கூறுகின்றன. இவன் ஜீவனோடு இணைந்திருந்தும் கர்ம பலத்தைப் புசிப்பவன் ஜீவனே, இவனல்லன் என்று மேலும் கூறுகின்றன, ஆதலால் எல்லாம் ப்ரஹ்மமே என்ற வாக்கியத்தில் கருதப்படுவது பகவானே. 2. 2. உண்பவன் : கடவல்லியில் [7-2 45) **யஸ்ய பிரஹ்ம ச க்ஷத்ரம்.௪. உயே பவத ஓதத: மருத்து? யஸ்யோப 'ஸேசதம்''-- எவனுக்கு ப்ராஹ்மணரும் க்ஷ்த்ரியர்களும் உணவாகின்றனரோ, : எவனுக்கு எமன்: ஊறுகாயோ என்று உண்பவன் ஒருவனாக வெளியிடப்பட்டுள்ளது. கர்ம பலனுடைய ஜீவனே உணவு போன்றவற்றை உண்ண இயலும். ஆதலால் இங்குச் சொல்லப்படுபவன். ஜீவனே என்பது ஒரு கருத்து. விளக்கம் : ஸம்ஹார காலத்தில் பகவான் செய்வது' இங்குக் கூறப்படும் பொருள். ஸம்ஹாரம் செய்வோன் பகவான்; ப்ராண்மணர், க்ஷத்ரியர் என்பன உபலக்ஷணத்தால் உலகங்களைக் காட்டுவன. ஊறுகாயைக் கொண்டு. உணவு உண்பது போல பகவான் யமனைத் துணையாகக் கொண்டு அழிக்கிறான். உலகங்களை உண்பது என்பது ஜீவனால் இயலாதது; ஆதலால் "இங்குக் கூறப்படுவது பகவானே..' இதய குகையில் இருவர் . ருதம் பிபந்தெதெனெ ஸுஹ்ருதஸ்ய லோகே குஹாம் ப்ரவிஷ்டென''(கடவல்லி 71-53-1312 கர்ம பலத்தைப் பருகுவோர் இருவர்; புண்ய லோகமான இவ்வுலகில் இதய குகையில் நுழைந்திருப்பவர்கள் இவ்விருவர் என்ற வாக்கியத்தில் கர்ம பலத்தைப் பருகுவோர் இருவர் யார் யார்? இவர்கள் ஜீவனும் ப்ராணனும், அல்லது ஜீவனும் புத்தியும் என்பது ஒரு கருத்து. விளக்கம் : ஜீவனும் பகவானுமே இதயத்தில் இருப்பவர்கள் என்பதே வேத வாக்கியங்களில் கூறப்படுகிறது. ஆத்ம ஞானத்தாலே அறிபவனும், எங்கும் வியாபித்திருப்பவனும் இன்ப துன்பங்கள் இல்லாதவனுமான பகவான் இதயத்தில் இருக்கிறான் என்றும், காம பலத்தை அனுபவிக்கும் ஜீவன் ப்ராணனோடு இதில்வாழ்கின்றான் என்றும் வேத வாக்கியங்கள் கூறுன்றன: கர்ம பலன் அனுபவிப்பது ஜீவன்; பகவானும் அனுபவிக்கிறான் என்பது எவ்வாறு? பகவான் ஜீவனை அனுபவிக்கச் செய்கிறான்; செய்விப்பவனையும் செய்வதாகச் சொல்லுவதுண்டு. ஆதலால் உலகை உண்பவனாக ஓதப்படுவோன் பரமாத்மாவே என்பது தேறுகின்றது. அன்றியும் இதே பகுதியில் வரும் விஷயம் ஒன்று; பகவான் மிக மிகப் பெரியவன்; இவன் வரிக்கும் ஜீவனே இவனை அடையத் தக்கவன். ஜீவன் உபாஸிப்பவன், பகவான் உபாஸிக்கப்படுபவன்? ஜீவன் பகவானை அடைபவன் என்பது. ஆதலால் சராசரங்களை உண்பவன் பரமாத்மாவே என்பது தேறுகின்றது. 2. 3. கண்ணிலே காணப்படுவோன் சாந்தோக்யத்தில் (2-75-1) வருவது: யாவனொரு புருஷன் கண்ணிலே காணப்படுகிறானோ, இவனே ஆத்மா, அம்ருதம், அபயம், ப்ரஹ்மம் என்பது, -இவன்”* என்று .. சாந்தோக்யத்தில் (2-75-1) வருவது: யாவரும் அறிந்ததாக ஓதியிருப்பதால், இது ஜீவன் அல்லது எதிரே நிற்பவரது ப்ரதிபிம்பம், அல்லது கண்ணுக்கு அபிமான தேவதை. இது ஒரு கருத்து, விளக்கம்: இதே பகுதியில் (4-75-3) வருவது* இவனே அனைவர்க்கும் ஆத்மா, ஆராவமுது, பயமற்றவன், ப்ரஹ்மம், அழகான யாவும் நிரம்பப் பெற்றவன், நல்லன யாவும் வாய்ந்திருப்பவன்; இவனே அடியார்க்கு நல்லன தருபவன்; ஆதலால் இவனே மிகச் சிறந்து விளங்குபவன். இவ்வாறான பெருமை பரமாத்மாவுக்கே பொருந்தும்; ஜீவனுக்கும் ப்ரதி பிம்பத்திற்கும் அபிமான தேவதைக்கும் பொருந்தாது. பரமாத்மாவை யோகிகள் தமது கண்ணில் தேக்க வல்லவார். இதனாலும் பகவான் கண்ணில் இருப்பதாகக் கொள்ளலாகும். * பகவான் சுகத்தோடு கூடியவன் என்று வேத வாக்கியங்கள் சொல்லுகின்றன. இவனை உபாஸிக்க வேண்டிய ஸ்தானத்தை ய ஏஷோசக்ஷிணி'' என்பதால், கண்ணில் உள்ள இவன் பரமாத்மாவே ஆகவேண்டும், மற்றவர் அல்லர். பரம புருஷனை உபாஸிப்பவர்களுக்கு அர்ச்சிராதி மார்கம் உண்டு. அஷி புருஷனை அறிந்த உபகோஸலனுக்கு அர்ச்சிராதி உபதேசிக்கப்படுகிறது. ஆதலால் அஷி புருஷன் பரம புருஷனே. தேர்வு 1: சாந்தோக்யத்தில் ஓரிடத்தில் வரும் விஷயம்: “ கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம”'- சுகமுள்ளது ப்ரஹ்மம், மிகப் பெரியது ப்ரஹ்மம். இதனை உபாஸிக்கும் ஸ்தானம் கண் என்பது. ஆதலால் இவன் பரமாத்மாவே; சுகமே காணாத மற்றையோர் அல்லர். தேர்வு 2: இந்த்ரியங்கள் யாவற்றிற்கும் வேர்ப்பற்றான ஜீவன் இதயத்திலேயே இருக்கிறான்; ஆதலால் கண்ணில் இருப்பதற்கல்லை. எதிரில் இருப்பவரது ப்ரதிபிம்பம் எப்போதுமே கண்ணில் இருக்க இயலாது? எதிரில் இருக்கும்போதுதான் ப்ரதிபிம்பம் காணமுடியும் * வெகு தொலைவிலுள்ள ஆதித்யன் கண்ணில் இருப்பதாகக் கூறவில்லை; கிரணங்களாலே கண்ணில் இருப்பதாகக் கருதப்படுகிறது. ஆதலால் இம்மூன்றும் குறிக்கும் படவில்லை. அக்ஷி புருஷன் பரமாத்மாவே. 2.4. அந்தர்யாமி பரம புருஷன் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில்: எவன் பூமியில் நிற்கிறானோ, பூமிக்குள் இருக்கிறானோ, எவனை பூமி ௮றியாதோ, எவனுக்கு பூமி சரீரமோ, எவன் பூமியுள் நுழைந்து நியமிக்கின்றானோ அவனே உனக்கு ஆத்மா என்றறிவாய்; அவன் மரணமில்லாத அந்தர்யாமி என்று தொடங்கி, நீர், நெருப்பு, அந்தரிக்ஷம், வாயு, தயு வோகம், ஆதித்யன், திசைகள், சந்த்ர தாரகைகள், ஆகாசம், _தமஸ், தேஜஸ் இவற்றிற்கு அந்தர்யாமியாகச் சொல்லப்பட்டுள்ளது. பின்பு ப்ராணன், வாக்கு, கண், காது, மனம், தோல், விஜ்ஞானம், ரேதஸ் இவற்றிற்கும் அத்தர்யாமியாவான் என்றும் குறிப்பிட்டுள்ள . அன்றியும் இந்த அந்தர்யாமி காண்பவன், கேட்பவன் என்பதும், அன்றியும் இவனைக் காட்டிலும் காண்பவன் கேட்பவன் வேறு எவனுமிலன் என்றும் விளக்கப் பெற்றுள்ளது. அந்தர்யாமி என்று கூறிய பிறகு, இந்தரியங்களால் வரும் அறிவுடையவனாகக் கூறுவதால் இவன் ஜீவன் என்பதே தகும். இது ஒரு கருத்து. தீர்வு : இங்கு விவரிக்கப்பெறும் பண்புகள் யாவும் பரம்பொருளான நாராயணனுக்கே ஏற்றவை. **ஏஷ ஸர்வ பூதாத்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண;, அந்தர்பஹிச்ச தத் ஸர்வம் வயாப்ய நாராயணஸ் ஸ்தித::” என்பன இதற்கு ஆதாரமாவன. காண்பவன், கேட்பவன் என்பன பற்றி, “இவன் கண் இல்லாமலே காண்கிறான், காதில்லாமலே கேட்கிறான்”? என்று உபதிஷத் இவனையே கூறுகிறது: “இவனைத் தவிரக் காண்பவன் வேறிலன்'' என்றதும் இவனைப் பற்றியே. மேலும் இப்பகுதியில் பகவானைப் பற்றி இயற்கையாகவே மரணமில்லாதவன், யாவற்றுக்கும் ஆத்மா, யாவற்றையும் நியமிப்பவன் என்று அந்தர்யாமியாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பண்புகள் ஜீவர்களுக்கும் பொருத்த மாட்டா. அன்றியும், “எவன் ஆத்மாவில் நிற்கிறானோ, எவனை ஆத்மா அறியாதோ, எவனுக்கு ஆத்மா சரீரமோ அவனே ஆத்மா, அந்தர்யாமி” என்று காட்டப் பெறுவதால், நாராயணனே எல்லா பூதங்களுக்கும் அந்தர்யாமி என்பது தெற்றென விளங்குகிறது. 2-5. காணப்படாதவன் முன்பு கூறியது, யாவும் காண்பவனான அந்தர்யாமி பரமாத்மா என்று. இங்குக் காணப்படாததாகச் சொல்லப்படும் தத்வம் ஒன்றை முண்டகோபதிஷத் வெளியிட்டதைப் பற்றி ஆராயப்படுகின்றது. பூதயோனி யான அக்ஷரத்திற்குப் பண்புகள்: காணப்படாமை அறியப்படாமை, கோத்ரமின்மை, வர்ணமில்லாமை, கண் காது கை கால்கள் இல்லாமை, எங்கும் வியாபித்து இருப்பது, தலைமை பெற்றது, அழிவின்மை, நுண்ணிய தாக இருப்பது, பூதங்களுக்குக் காரணமாயிருப்பது.” அடுத்து: வரும் கருத்து: மேலான அக்ஷரத்தைக் காட்டிலும் மேலானவன் என்பது. முதலில் அக்ஷரம்: என்று சொல்லி, அக்ஷரத்திற்கு மேம்பட்டது என வந்துள்ளது. இவ்வாறான தத்வங்கள் ப்ரகருதியும் புருஷனுமாக வேண்டும் என்பது ஒரு கருத்து. (பூதயோநி அக்ஷரம்--தங்களுக்குக் காரணமாய் அழிவில்லாதது). மறுப்பு: இதே உபநிஷத்தில் குறிப்பிடப்படுவது* யஸ் ஸர்வஜ்ஞ: ஸர்வவித்''--எவன் எல்லாப் பொருள்களின் ஸ்வரூப ஸ்வபாவங்களை அறிவானோ. இதை ஆராய்ந்தால் மேலே கூறியுள்ளது மூலப்ரக்ருதியாக முடியாது. “அக்ஷராத் பரத: பர: மூலப்ரக்குதி' அழியாதது; இதைக் காட்டிலும் மேலானது பரமாத்மாவுக்கே ஓக்கும். “ததாகஷராத் ஸம்பவதீஹ விச்வம்'” இந்த அக்ஷரத்திலிருந்து சேதன அசேதனங்கள் உண்டாகின்றன என்பதாலும் இது மூலப்ரக்ருதி ஆகாது; பரமாத்மாவே யாகவேண்டும். மேலும் இந்த உபநிஷத்தில் வெளியிட்டிருப்பது* இவனுக்கு அக்நி எனப்பெறும் த்யுலோகம் தலை, சூர்யர்கள் கண்கள், இசைகள் காதுகள், வேதங்கள் மூச்சு, வாயு ப்ராணன், உலகங்கள் இதயம், பூமி கால்கள்? இவன் எல்லஈ. பூதங்களிலும் அந்தராத்மாவாக இருப்பவன்: இந்த விவரங்கள் யாவும் பரமாத்மாவுக்கே ஏற்றவை. ஆதலால் காணப்படாமை போன்ற பண்பு களால் ஒதுவது பூதயோநி எனப்பெறும் பரமாத் மாவையே 2. 8... வைச்வாநரன்' முன்பு விளக்கியவாறு மூவுலகங்களும் சரீரமாகக் கொள்ளும் மேன்மை பசுவானுக்கே, வேறு எதற்குமில்லை என்பது இங்கு நிருபிக்கப்படுகிறது. வைச்வாநர உபாஸனத்தைப் பற்றிக் கூறுமிடத்தில் வைச்வாநரனைப் பற்றி வரும் விவரம்: எங்குமிருப்பவன்,, எல்லா லோகங்களிலுமுள்ள எல்லா ஆத்மாக்களிலும். அன்னத்தை உண்பவன் என்று, வைச்வாநரன் என்ற சொல் ஜாடராக்நியாகவும், பஞ்சபூதங்களுள் ஒன்றான அக்நியாகவும், ஒரு தேவதையாகவும், பரமாத்மாவாகவும் குறிப்பிடப் பெற்றுள்ளது. ஆதலால் வைச்வாநரம் என்பது பரமாத்மாவே என்று தீர்மானிக்க இயவாது. (இது ஒரு கருத்து.) “மறுப்பு: இந்தப் பகுதியில் முதலில் சொல்லப் படுவது: ப்ரஹ்மம் என்ற தத்வம் யாவர்க்கும் ஆத்மா' என்று. பின்பு இதனையே வைச்வாநரம் என்றே காட்டி யுள்ளது. பல இடங்களிலும் இவ்வாறே கூறப்படுகிறது. ஆதலால் வைச்வாநரம் என்பது பகவானையே. அன்றியும் மூதலிலே காட்டியுள்ள பகுதியில் வரும் விவரங்கள் யாவும் பகவானைப் பற்றியே வேறோர் உபநிஷத்தில் வந்துள்ளன. சங்கை: வைச்வாநரம் என்பது கார்ஷஹ்பத்யம் முதலான மூவகை அக்நிகளாகச் சொல்லப்படுகிறது.. அன்றியும் முதலில் செய்யும் ஆஹுதி *ப்ராணாய ஸ்வாஹா”” என்பது ஜாடராக்நியைப் பற்றியே. ஜாட ராக்நி புருஷசரீரத்தில் இருப்பது. ஆதலால் இது. பர மாத்மா என்று தீர்மானிப்பதற்கில்லை. விளக்கம் : இப்பகுதியில் உபாஸனத்தைப் பற்றிக் கூறி இருப்பது: இது ஜாடராக்நியைச் சரீரமாகக் கொள்ளும் பரமாத்மாவை என்பது. வைச்வாநராத்மா” புருஷன் என்றும், இவனே **ஸஹஸ்ர சீர்ஷா புருஷ:”: என்று சொல்லப்படுபவன் என்றும், புருஷ சப்தம் இயல்பாக வாஸுதேவனிடமே நிலைநிற்பதெதன்றும் வந்துள்ளது. ஆதலால் இங்குக் குறிப்பது ஜாடராக்நியைச் சரீரமாகவுள்ள பரம புருஷனையே. தேர்வு 1: முதலில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் மூன்றாவது பூதமான அக்நிக்கு ஒவ்வா. ஆதலால் வைச்வாநரன் பரமாத்மாவே. தேர்வு 2: இப்பகுதியில் வைச்வாநரனைப் பற்றி இவன் த்யுலோகம் முதல் பூமி வரையில் (பூமியிலும்) எல்லாப் பொருள்களிலும், ஜீவர்களது அவயவங்களிலும் உறைவதாக வேதத்தில் வந்துள்ளது. இவ்வாறு விவரம் பெற்றுள்ளவன் பரம புருஷனே. தேர்வு 3: அக்நி;, வைச்வாநர: என்ற சொற்களின் பொருள்: அக்ரம் நயதீத்யக்நி: உயர்நிலைக்கு அழைத்து செல்பவன் அக்நி. “*விச்வேஷாம் நராணாம் நேதா வைச்வாதர:--நரர்கள் யாவரையும் அழைத்துச் செல்பவன் வைச்வாதரன். இவை நாராயணனையே குறிப்பன. *“ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம” என்று யாவும் ப்ரஹ்மமே. சராசரங்களை உண்பவனாகக் கூறப்பட்டவனும், கண்ணில் நிற்பவன் என்பவனும், அந்தர்யாமி யாகக் கூறப்பட்டவனும், அக்ஷரம் என்ற மூலப்ரக்ருதியைக் காட்டிலும் மேலானவன் என்பவனும் வைச்வாநர: என்பவனும் பரமாத்மாவே. ----------- 3. மூன்றாம் பாதம் பகவானுக்கு சேதனங்கள், அசேதனங்கள் விட விலக்ஷணன் என்று நிறுவும்போது முதல் பாதத்தில் தெளி வின்மையே 'மிக்குள்ள வேத வாக்கியங்களை வ்யாசர் ஆராய்ந்தார்; இரண்டாம் பாதத்தில் தெளிவின்மை யுள்ள வாக்கியங்களை ஆராய்ந்தார். இந்த அடையாளங்கள் தெளிவாக உள்ள இடங்கள் இப்பாதத்தில் ஆய்வுக்குப் பயன்படுகின்றன. 3.1. தேவலோகம், பூமி யாருக்குச் சரீரம்? தேவலோகம், பூமி இவற்றைச் சரீரமாகக் கொள்ளும் வைச்வாநரன் பரமாத்மா என்று விளக்கப்பட்டது. தேவலோகம் சரீரமாகக் கொள்பவன் யார் என்று இப்போது ஆய்வு. முண்டக உபநிஷத்தில், எவனிடம் தேவலோகம்,பூமி, அந்தரிஷம், மனம், இந்த்ரியங்கள் யாவும் சேர்ந்துள்ளனவோ, அந்த ஆத்மா ஒருவனையே ஆதரிப்பீர் என்று வந்துள்ளது. மனம் முதலான இந்த்ரியங்கள் இவனுடன் இணைந்துள்ளன; பலவிதமாகப் பிறக்கும் இவன் சரீரத்தினுள் திரிகிறான். தேரின் நாபியிலுள்ள ஆரங்கள் போல் இவனிடம் நாடிகள் சேர்ந்துள்ளன என்று மேலும் விவரம் காண்கிறோம். மனம் முதலான இந்த்ரியங்கள் இவனிடம் சேர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவை யாவும் ஜீவனுக்கே பொருந்துவன என்பது ஒரு கருத்து. மறுப்பு : இப்பகுதியில் இந்த விவரங்கள் யாவும் பரமாத்மாவையே பற்றியவை. இவனைப் பற்றி மேலும் கூறுவது. : இவன் மோக்ஷத்திற்கு ஸாதனம். இவனை அறிபவனே முக்தனாகிறான், மோக்ஷத்திற்கு வேறு வழி யில்லை. மேலும் நாராயண வல்லியில், “தாமரை மலர் போன்ற இதயத்தின் நடுவில் நுட்பமான துவாரம் ஒன்றுள்ளது; இதில் நாராயணன் இருச்கிறான் என்று வர்ணிக்கப்படுகிறது. கீதையிலும், “*பிறப்பில்லாத பரம புருஷன் பலபடியாகப் பிறக்கிறான்'' என வந்துள்ளது. நம் மனம் முதலியவற்றிற்கு தாராயணனே ஆதாரம்: என்றறிகிறோம். ஆதலால் தேவலோகம் முதலான வற்றிற்கு ஆதாரமானவன் பசுவானே. தேர்வு 1: ஆகாசம், பூமி இவை இருப்பிடமாக உடையவன், பொன் நிறமானவன், உலகைப் படைப்பவன், நியமிப்பவன்; உலகுக்குக் காரணமானவன்.இதனால் தேறுவது: பகவானே எங்கும் இருப்பிடமாக , பகவான் உடையவன் என்பது. தேர்வு 2: முண்டகோபநிஷத்தில், ஜீவனும் பகவானுமான இரண்டு பறவைகள் இணைந்து ஒரே மரத்தில் அமர்ந்துள்ளன; ஒன்று கர்மமாகிய இனிய பழத்தைக் தின்கின்றது, மற்றது இதைத் தின்னாமல் சிறப்புடன் விளங்குகிறது என்றுள்ளது. கர்ம பலன் இல்லாதவனும், ஸா்வஜ்ஞனும், மோக்ஷத்திற்கு உபாயமானவனும் ஆகாசம், பூமி போன்றவற்றை இருப்பிடமாக உடையவன் பசுவானே என்பது தேறுகின்றது. -பூமா “பூமா” பெருமை உடையது என்ற தத்வத்தை அறிய நாரதர் ஸநத்குமாரரிடம் சென்றார். ஸநத்குமாரர் மூதலில் நாமம் பெரியது என்றார். இதனிலும் பெரியது வாக்கு என்றார். இவ்வாறு படிப்படியாக உபதேதசித்து ஜீவன்தான் ப்ரஹ்மம் என்று உபதேசித்தார். ப்ராணனோடு சேர்ந்திருப்பதாலே ப்ராணன் எனப்படும் ஜீவனே ப்ரஹ்மம் என்றார். இதற்கு மேல் பல. கண்டங்கள் வரையில் இது பற்றி யாதும் சொன்னதாகக் கூற வில்லை. ஆதலால் பூமா என்பது ப்ராணன் எனப்படும் ஜீவனே, இது ஒரு கருத்து. மறுப்பு: இதே பகுதியில் ஒரு கண்டத்திற்குப் பின், *ஸத்யம் என்ற ப்ரஹ்ம வித்யையில் ஸத்யம் என்பது பூமா” என்று விளக்கம் பெற்றுள்ளது. ஸத்யம் என்பது பகவான்; இதுவே, சுகமாகும், மிகச் சிறந்ததாகும் என்று புகழ் பெற்றுள்ளது. ப்ராணனைப் பற்றிய பேச்சு இந்த பிரகரணத்தில் இல்லை; முன்னமே முடிந்து விட்டது. ஒரு ஸூத்ரத்தில் பூமா என்பது ஜீவனைக் காட்டிலும் மேலானது என வந்துள்ளது. அன்றியும், “ஆத்மா வினிடமிருந்து ப்ராணன் உண்டாகின்றது” என்று தொடங்கி, ஸர்வ காரணமாக இருப்பது பூமா என்பதாலே என்று முடிகின்றது. இவ்விதம் விவரித்தனயாவும் பரமாத்மாவையே பற்றியவை. ஆதலால் பூமா என்றது பரமாத்மாவையே. ஆகாசம் அக்ஷ்ரத்தை ௮ண்டியிருக்கிறது என்றார் யாஜ்ஞவல்கீயர். அக்ஷரம் என்பது பருமனல்லாதது, அணுவல்லாதது, சிவப்பில்லாதது, பசையில்லாதது, நிழலற்றது என்று விவரிக்கப்படுகிறது. இங்கு ஆகாசத்திற்கு ஆதாரமாக இருப்பது மூலப்ரக்ருதி என்பது ஒரு கருத்து. விளக்கம் : ஆகாசம் பற்றிய விளக்கம் ஒன்று. தேவலோகத்திற்கு மேலும், பூமிக்குக் சீழும், இடையிலுள்ள உலகங்களிலும் உள்ள பொருள்கள் யாவும் ஆகாசத்தையே அண்டி உள்ளன. இதனால் ஆகாசம் என்பது அம்பரம் எனப்படுவதற்கும் காரணமான மூலப்ரக்ருதியேயாகும், இதற்கு ஆதாரமாவது பரமாத்மாவே. ஆதலால் அக்ஷரம் என்பது பரமாத்மாவையே. சங்கை : **யஸ்ய அக்ஷரம் சரீரம்''! மூதலான வாக் கியங்களில் ஜீவனைப் பற்றியே அக்ஷர சப்தம் உள்ளது. ஆதலால் ஜீவன் அக்ஷரமாகக் கூடும். விளக்கம்: இந்த அஷரத்தின் மேலான நியமனத்தாலே சூர்ய சந்திரர் தரித்து திற்கிள்றனர் என்பதுவும் நாம் அறிவோம். இவ்வாறு நியமிப்பது ஜீவனுக்குப் பொருந்தாது; பரமாத்மாவுக்கே உரியது. தேர்வு : அக்ஷரத்தைப் பற்றி விளக்கப்பட்டுள்ளது வேறொன்றால் காணப்படாதது, யாவற்றையும் காண்பது; வேறொன்றால் கேட்கப்படாதது, யாவற்றையும் கேட்பது என்று காண முடியாததும் கேட்க முடியாததுமான ௮சேதனம் அக்ஷரமாவதற் கில்லை. ஜீவன் காண் முடியாதவன், பரமாத்மாவால் எப்போதும் காணப்படுபவன். ஆதலால் இவனும் அக்ஷரமாக முடியாது. ஆதலால் தனது நியமனத்தாலேயே யாவற்றையும் தரிக்கும் பரம புருஷனே அக்ஷர புருஷன் என்பது நிச்சயம். 3. 4, காணப்படுபவன் ;: மூன்று மாத்திரையோடு: ப்ரணவத்தை உபாஸிப்பவன் அந்தரிக்ஷத்திற்கும் மேலான ப்ரஹ்மலோகம் அடைகிறான் என்று ப்ரச்நோ பநிஷத்தில் உள்ளது. இவன் தேஹ இந்த்ரியங்கனைக் காட்டிலும் மேலான ஜீவனைக் காட்டிலும் மேலான ஹ்ருதய வாஸியான புருஷனை அடைகிறான் என்பதும் காண்கிறோம். ப்ரஹ்ம லோகம் என்பது சதுர்முகனுடைய உலகம் என்பது ஒரு கருத்து. விளக்கம் : இதே ,பகுதியில் வந்துள்ளது; ஹ்ருதய வாஸி புருஷன் ஸம்ஸாரி ஜீவார்களைக் காட்டிலும் மேலான நித்ய முக்தரைக் காட்டிலும் மேலானவன் என்று குறித்துள்ளது, அன்றியும் பசி, தாகம் முதலான இல்லாதது; ஜரா மரண மில்லாதது, யாவரிலும் மேம் பட்டது என்றும் காண்கிறோம். இவ் விவரம் கர்மத்திற்கு வசப்பட்ட சதுர்முகனுக்குப் பொருந்தாது? பரமாத்மாவுக்கே பொருந்தும். ப்ரஹ்மலோகம் என்பது ப்ரஹ்மத்தின் லோகம், பரம பதம்; ப்ரஹ்மாவின் லோகமன்று, **தத் விஷ்ணோ: பரமம் பதம்” என்று பாராட்டப்பட்டது. அந்தரிஷத்திற்கு மேற்பட்ட லோகம் நான்முகனின் லோகம் என்பதும் சரியன்று, ஆதலால் காணப்படுவது ஸாவேச்வரனாகிய ஸ்ரீமந் நாராயணனே. 3. 5. தஹராகாசம் ஓர் உபநிஷத்தில் ஒரு வாக்கியம், இதயத்தில் வஸிப்பவன் ஆகாசம் என்கிறது. பரமன் உறையுமிடமான உடலில் தாமரை போன்ற சிறிய இடம் உள்ளது; இது ப்ரஹ்மத்தின் இருப்பிடம், இதனுள் நுண்ணிய நிலையில் ஆகாசம் இருக்கிறது; இதற்குள் இருப்பது தேடத்தக்கது, அறியத் தக்கது என்றும், இது தஹராகாசம் என்றும் குறித்துள்ளது. இது பஞ்சபூதங்களுள் ஒன்றான ஆகாசம் என்பது ஒரு கருத்து. மறுப்பு: மேல் வாக்கியத்தில் வந்துள்ள கருத்து; இதயத்தில் வஸிப்பவன் எங்கும் வியாபித்திருப்பவன், பாவ மற்றவன், மூப்பு மரண மில்லாதவன், சோக மற்றவன், பசி தாக மில்லாதவன், தடைபடாத விருப்பமும் ஸங்கல்பமும் வாய்ந்தவன் என்பது. ஆதலால் தஹரா காசம் பரமாத்மாவே. தஹராகாசத்தினுள் இருப்பதை உபாஸிக்கும்போது இங்கு விவரிக்கப்படும் கல்யாண குணங்களை உபாஸிக்க வேண்டும் என்றும் வந்துள்ளது. அன்றியும் பூதாகாசம் போல் இதயத்திலுள்ள ஆகாசம் பெரியது என்றும் விளங்குகிறது. ஆதலால் தஹராகாசம் பூதாகாசத்தைக் காட்டிலும் மாறுபட்ட பரமாத்மாவே, தேர்வு 1 :: சேதனர் தூங்குகின்ற போது தஹராகாசத்தை அடைகின்றனர். இது ப்ரஹ்ம லோகம் என்பது வேதத்தில் ஒரு கருத்து. ப்ரஹ்ம லோகம் அறியப்படும் - ப்ரஹ்மத்தைச் சொல்லும். '*'லோக்யதே இதி லோக: அறியப்படுவதால் லோகம் எனப்பெறும். ப்ரஹ்மம் என்று வழங்குவது ஸதி என்று பரமாத்மாவையே, சேதனர் தூங்கும் போது அடைவது பூதாகாசத்தை யன்று. ஆதலால் தஹராகாசம் பரமாத்மாவே. தேர்வு 2: தஹராகாசம் பற்றி உபநிஷத் வெனி யிடுவது: இவ்வாத்மா உலகங்கள் ஒன்றோடொன்று கலவாமல் அணையைப் போலே பிரித்து தரித்து நிற்கிறான்; இவனே ஸர்வேச்வரன்: இவனே ஜீவரா்களுக்கு அதிபதி; ஜீவராசிகளைக் காப்பாற்றுவோன் என்று. இக் காரணத்தாலும் ஸ்ரீமந் நாராயணனே தஹராகாசம் என்று நிச்சயிக்கலாம். தேர்வு 3: சாந்தோக்யத்தில் ஒருவாக்கியம் (7-9-1)பூதங்கள் எல்லாம் ஆகாசம் என்ற பரமாத்மாவிடமிருந்தே உண்டாகின்றன என்பது. பரமாத்மாவைப் பற்றி ஆகாசம் என்ற சொல் பயன்படுகிறது. ஆதலால் தஹராகாசம் பரமாத்மாவே. ஒரு சங்கை: தஹராகாசம் சிறியதாக இருப்பதால் அணுவான ஜீவன் தான் இதில் பொருந்தக் கூடும். விபுவான பரமாத்மா இதில் இருக்க இயலாது. விளக்கம் : முக்தனான ஜீவாத்மா பரமாத்மாவோடு ஸாம்யம் பெறுகிறான்; இது அநுகாரம். இதனாலேயே மூக்தி தசையில் பகவானுக்குள்ள குணங்கள் இவனும் பெறுகிறான். தஹராகாசம் அநுகாரத்தால் இந்த குணங்கள் படைக்கவில்லை; இயற்கையாகவே பெற்றுள்ளது. ஆதலால் அநுகரிக்கும் ஜீவனில் வேறுபட்டது; ௮னுகரிக்கப்படுவதான தஹராகாசம் பரமாத்மாவாக வேண்டும். தேர்வு 4: கீதையிலும், “பரமாத்மாவை ௨பாஸிப்பதால் ஜீவன் பரமாத்மாவை: அனுகரிக்கிறான்'' என்றுள்ளது (1484-2), ஆதலால் தெற்றென விளங்குவது; அனுகரிக்கப்படும் தஹராகாசம் அனுகரிக்கும் ஜீவனைக் காட்டிலும் வேறான பரமாத்மாவே என்பது, 3. 6, ப்ரமிதன். ப்ரமித: கட்டைவிரலளவுள்ளவன். அங்குஷ்டம்-- கட்டைவிரல். கட்டைவிரல் அளவுள்ள புருஷன் என்று தொடங்கும் ரிக்குக்களில் கூறியுள்ளது: அங்குஷ்ட மாத்ரம் அளவுள்ள ஜீவன் ப்ராணனை நியமிப்பவன், தனது கர்மங்களால் கட்டுண்டவன்; கட்டை விரல் அளவுள்ளவன் சஞ்சரிக்கிறான் என்று. இங்குக் குறிப்பது ஜீவனே என்பது ஒரு கருத்து, இவை யாவும் ஜீவனுக்குப். பொருந்துவன. விளக்கம்: இதே பகுதியில் இந்தப் புருஷன் 'முக் காலத்திலும் எல்லாப் புருஷர்களுக்குங் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆதலால் அங்குஷ்ட மாத்ரன் பரமாத்மாவே. சங்கை : அளவே காண முடியாத பரமாத்மா எப்படிக் கட்டைவிரல் அளவுள்ளவனாகக் கூடும்?' விளக்கம் : உபாஸகர்களை அநுக்ரஹிப்பதற்காக பரமாத்மா இவர்களது இதயத்தில் கட்டைவிரல் அள விற்கு அமைந்திருக்கிறான். சங்கை: குதிரை முதலானவற்றிற்குக் கட்டை விரலே இல்லையே; இவற்றின் இதயத்தில் கட்டை வீரல் அளவுக்கு இவன் உறைகிறான் என்பது எப்படிப் பொருந்தும்? விளக்கம் : மனிதர்கள் உபாஸிப்பதற்காகக் கூறுவதாலே கட்டைவிரல் அளவு என்று குறிப்பிட்டுள்ளது. அங்குஷ்ட மாத்ரனைப் பற்றி மேலும் சில விவரங்கள்: 'இவனிடம் யாவரும் நடுங்குகின்றனர். இவனிடம் பயத்தால் அக்நி சுடுகிறது; ஸூர்யன் காய்கிறான் இந்தரன், வாயு, யமன் தங்கள் தங்கள் செயல்களைச் செய்கின்றனர். இத்தகைய இயல்புடையவன் பரமாத்மாவாக வேண்டும். மேலும் இந்தப் புருஷனின் ஒளியாலே எல்லா ஒளிகளும் விளங்குகின்றன என்றும் கூறுவதால், இத்தகைய மேன்மை யுடையவன் ஸ்ரீமந் நாராயணனே என்பது தெளிவு. 3. 7. ஆகாசம் பரமாத்மாவே. சாந்தோக்யதக்தில் தஹர வித்யையில் கடைசியில் வரூ வது: நாம ரூபங்களை நிர்வஹிப்பது ஆகாசமே. இவை! இல்லாமலிருப்பது எதுவோ அதுவே ப்ரஹ்மமாகவும்.. அம்ருதமாகவும், ஆத்மாவாகவும் இருப்பது. ஆகாச மெனப்படுபவன் முக்தி யடைந்த ஜீவன் என்பது ஒரு, கருத்து. ஆதரவான விளக்கம் : முக்த ஜீவன் உலக வாழ்விலிருந்து விடுதலை பெறுவது, குதிரை தனது உடலிலுள்ளஉரோமங்களை உதிர்ப்பது போல், சந்திரன் ராகுவின் வாயிலிருந்து விடுதலை பெறுவதுபோல் என்று சாந்தோக்யம் வரைகன்றது. இந்த விவரங்கள் முக்த ஜீவ னுக்கு நன்கு பொருந்துவன. நாம ரூபம் வஹிப்பது: என்பது இவனுக்கே பொருந்தும். மறுப்பு : ஜீவன் நாம ரூபம் பெறுவது தனது கர்மத்தாலே, நாம ரூபங்களை நிர்வஹிப்பவனுக்கு நாமரூபங்- கள் இல்லை என்பதால், இவன் ஜீவனினும் சதாம் பரமாத்மாவே, இதற்கு முன்னமேயே தஹராகாசமான பரமாத்மாவைப் பற்றிக் கூறியிருக்கிறது. இதனை உபா ஸிப்பவனது ஸ்வரூபம் இங்குச் சொல்லப்படுகிறது. நாம ரூப நிர்வாஹம் புருஷனுக்குப் பொருந்தாது. ஆதலால் புருஷ ஸக்தம் போன்றவற்றில் நாம ரூப திர்வஹகனாகக் கூறப்படும் நாராயணனே இவ்விடத்தில் சொல்லும் ஆகாசம் என்பது தெள்ளத் தெளிவு. ஒரு சங்கை : **தத்வமஸி'', “அஹம் ப்ரஹ்மாஸ்மி”” போன்ற வாக்கியங்களில் ஜீவன் ப்ரஹ்மத்தினின்றும் வேறுபடாதவன் என்று காட்டியுள்ளது. ஆதலால் முக்தி நிலையிலுள்ள ஜீவனே பரமாத்மா என்று தேறுகின்றது . இதனாலும் ஆகாசம் என்பது ஜீவன் என்று கருதுவதே. ஏற்றது. விளக்கம் : தூங்கும்போது ஜீவனைப் பேரறிவாளனான பரமாத்மா அணைத்துக் கொள்வதால் ஜீவன் எதையும் அறிவதில்லை. இதேபோல் மரணத்தின்போது பரமாத்மாவோடு ஒரு வகைச் சேர்த்தி ஏற்படுகிறது, பரமாத்மாவால் அணைக்கப்பட்டு ஜீவன் சரீரத்தை விடுகின்றான் என்பது வேதத்தில் வருவது. தன்னைத் தானே தழுவிக்கொள்வதும், தன்னோடே தான் சேர்த்தி பெறுவதும் நிகழமாட்டா. தூக்க நிலையிலும் மரண நிலையிலும்.ஜீவன் பரமாத்மாவைவிட வேறு. ஆதலால் ஜீவனைக் காட்டிலும் பரம புருஷன் வேறு என்பது தேறுகின்றது. ஆதலால் ஆகாசம் எனப் பெறுவோன் ஜீவனைக் காட்டிலும். வேறுபட்ட பரமாத்மாவே. மேலும் “ஸர்வஸ்ய: அதிப்தி:””, “ஸர்வஸ்ய *வ€*”) “ஸர்வஸ்ய ஈசாந:'” என்று இவ்விடத்தில் வருவதால் இவன் ஜீவனைக் காட்டிலும் வேறுபட்டவன் என்பது தெளிவு. ஆதலால் இப்பகுதியில் கூறப்படுவது பர்மாத்மாவே. 3, 8, ப்ரஹ்மாதிகளின் உபாஸனம் நிலை 'ஒரு கருத்து; தேவர்களுக்குச் சரீரம் இருப்பதாக ப்ரமாணம் எதுவுமில்லை. தேஹ மிருந்தால்கான் உபாஸநம் செய்ய இயலும். சரீரத்தின் தொடர்பால் நிகழும் இன்ப துன்பங்கள் இவர்களுக்கு நேரமாட்டா. ஆதலால் இவற்றிலிருந்து விடுதலை. பெற விருப்ப்மும் இராது. ஆதலால் இவார்கள் உபாஸநம் செய்வதில்லை. இது ஒரு கருத்து. விளக்கம் : இவர்களுக்குச் சரீரம் உண்டு, எவ்வாறெனில்: பகவான் யாவர்க்கும் நாம சூபங்கள் அளிப்பதாக ஸங்கல்பித்தான். தேஹ இந்தரியங்களைச் செய்வதே நாம ரூபம் என்பது. அன்றியும் இந்திரன், விரோசனன் இவர்கள் தங்கள் கையில் ஸமித்தை ஏற்றுக் கொண்டே சதுர்முகனை அடைந்தனர் என்பது ஒரு வரலாற்றில் காண்கிறோம். ஆதலால் தேவர்களுக்கு அதிகாரம் உண்டு, உபாஸநம் செய்யத் தகுதியும் உண்டு. ஒரு சங்கை : யாகம் செய்யும்போது தேவர்களை ஹவிஸ் ஏற்பதற்காக அழைக்கிறோம். யாகம் பல இடங்களில் நிகழலாம். அப்போது ஒரே சரீரத்துடன் எவ்வாறு சொல்லமுடியும்? ஆதலால் சரீரம் இல்லை என்பதே ஏற்கத் தக்க கருத்து. விளக்கம் : ஸெளபரி முனிவர் ஒரே காலத்தில் பல சரீரங்களோடு இன்பம் துய்த்தார். இதுபோல் தேவர்களும் பல சரீரங்கள் ஏற்கக் கூடியவர்களே. வேறொரு சங்கை : இவர்களுக்குச் சரீரம் உண்டெனில் உற்பத்தி விநாசங்கள் உள்ளன. விநாசம் ஏற்படும் போது இவர்களது பேர்களும் மறைந்துபோம். இப் பேர்கள் இந்த்ரன், வருணன் போன்றவை வேதங்களில் வருவன. ஆதலால் வேத சப்தங்களும் நிலைநிற்க மாட்டா--ஆதலால் இவ்வாறு ஆராய்ந்தால் இவர்களுக்குச் சரீரம் இல்லை என்றுதான் ஊகிக்கவேண்டும். விளக்கம்: “*'வேதேத ரூபே வ்யாசுரோத் ப்ரஹ்மா”” வேதத்தைக் கொண்டே நான்முகன் படைத்தான் என்பது வேத் வாக்கியம். “ஸூர்ய சந்த்ரமளெள தாதா யதா பூர்வ மகல்பயத்'' என்பது தைத்திரீய வாக்யம்.. படைப்பின்போது நான்முகன் பூர்வ கல்பத்தில் இருந்தவாறே வேதத்தின் மூலமாகப் படைக்கின்றான், வேத சப்தங்களைக். கொண்டே தனித்தனியாகவும் படைக்கின்றான். ஆதலால் இந்த்ரன், வாயு, அக்நி போன்ற பூதங்கள் எப்போது முள்ளவையே. வேறொரு சங்கை: மது வித்யை போல்வன வற்றில் வஸூக்கள், ஆதித்யர் போன்ற தேவர்களை உபாஸனம். செய்து வஸு பதவி, ஆதித்ய பதவி பெறக்கூடும் என்று கூறியிருக்கறது. ஏற்கனவே இப்பதவியிலுள்ள தேவர்கள் உபாஸநம் எவ்வாறு செய்யக் கூடும்? விளக்கம் : இத்தகைய தேவர்கள் பரமாத்மாவைப் பெறுவதற்கு உபாஸநம் செய்யலாம். அன்றியும் இந்தப் பதம் எப்போதும் நிலைப்பதற்காகவும் உபாஸநம் செய்யக் கூடும். ஆதலால் தேவர்கள் நம்மைப் போல் இறைஞ்சித் தமது பதம் நிலைக்கப் பெறுகின்றனர்; பகவானையும் பெறுகின்றனர். தெளிவான வேத வாக்கியங்களைக் 'கொண்டு பகவான் எங்கும் உறைபவன் என்று விவரிக்கப்படுகின்றது. த்யுலோகம், பூமி போல்வனவற்றிற்கு இருப்பிடம் பகவான். பூமா எனப்படுவது ஸத்யம் என்ற பரமாத்மா. மூலப்ரக்ருதிக்கும் ஆதாரமான அஷரமும் பகவானே, ஞானிகளால் காணப்படுவோன் பசுவானே. தஹராகாசமும் பகவான், கட்டை விரல் அளவிற்கு இதயத்தில் உறைபவன் பகவான். நாமரூபங்களைச் செய்யும் ஆகாசம் எனப் பெறுவோனும் பகவானே. தேவர்களும் ௨பாஸநஞ் செய்யத் தக்கவர்களே. ---------------- 4. நாலாம் பாதம். மிகத் தெளிவான வேத வாக்கியங்களைக் கொண்டு பகவான் சேதன அசேதனங்களைச் சரீரமாகக் கொள்பவன் என்று நிலைநாட்டுவதோடு இவனிலும் வேறு பட்ட ஒருவன் இல்லை யென்பது இந்தப் பாதத்தில் விவரிக்கப்படுகிறது. 4. 1, ஸாங்க்யர் கொள்கை. கடோபநிஷத்தில் (1-7-53-1-7-11) வந்துள்ள விஷயம்: இந்த்ரியங்களுக்கு மேற்பட்டவை அர்த்தங்கள்; அர்த்தங்களுக்கு மேற்பட்டது மனம்; மனத்திலும் மேலானது அறிவு; அறிவைக் காட்டிலும் பெரியது ஆத்மாவான மஹான்; இதைக் காட்டிலும் மேலானது அவயக்தம்; இதனிலும் புருஷன் பெரியவன்; புருஷனைக் காட்டிலும் பெரியவன் எவனுமிலன்; இப்புருஷனே எல்லை நிலம், மேலான கதியு மாவான். ஸாங்க்யார்களது கொள்கை இதனையே ஒட்டி யுள்ளது. இக்கருத்தின்படி இருபத்தைந்தாவது தத்வமான புரூஷனைக் காட்டிலும் மேலான தத்வம் இல்லை. ஆதலால் ஈச்வர தத்வம் இல்லை. அவ்யக்தம், ப்ரதானம், ஆனுமாநிதம் எனப் பெறும் மூலப்ரக்ருதியே உலகுக்குக் காரணம் என்கின்றனர் நிரீச்வர ஸாங்க்யர். மறுப்பு: கடோப நிஷத்தில் இதே பகுதியில் (1-8-10,12) பகவானை அடைய விரும்பும் உபாஸகன் தேரில் ஏறிச் செல்வதாக உருவகப் படுத்தியுள்ளது. ஜீவன் ரதி (ரதத்தில் ஊர்பவன்). இவனது சரீரம் தேர்? புத்தி தேர்ப் பாகன்; மனம் கடிவாளம்; இந்த்ரியங்கள் குதிரைகள்; சிற்றின்ப. விஷயங்கள் இக்குதிரைகள் செல் லும் வழி. இந்தத் தேர் மூதலானவற்றை வசப்படுத்திக் கொள்வோன் ஸம்ஸார வழியின் அக்கரையான பரம பதத்தை அடைகிறான் என்பதும் வந்துள்ளது. இவ்விவரங்களை ஆராய்ந்தால் மனம், இந்த்ரியங்கள் இவற்றோடு கூடிய சரீரத்தைக் தன் வசப்படுத்திக் கொண்டு இப்புருஷன் சேர்வது பரம புருஷனை என்பது தெளிவு இதே கருத்து கடவல்லியில் (7-3-73)ல் உள்ளது? அறிவாளியானவன் வாக்கு முதலான இந்தீரியங்களை மனத்தில் அடக்கவேண்டும், இந்த மனத்தை ஆத்மா விலுள்ள அறிவில் அடக்கவேண்டும்; இந்த அறிவைப் பெரியவனான ஜீவாத்மாவில் அடக்கவேண்டும்; இந்த ஜீவாத்மா தாழ்வுகள் இல்லாத பரமாத்மாவிடம் அடங்க வேண்டும் என்று, இங்கு உபகாரஞ் செய்யும் பரம் பரையே உள்ளது; காரண பரம்பரை யன்று; ஆதலால் அவ்யக்தம் என்று சொல்லால் மூலப்ரக்ருதியைச் சொல்ல வில்லை; சரீரத்தையே சொல்லுகின்றது. தேர்வு 1: வ்யக்தம் என்ற ஸ்தூலமான உலகம், அவ்யக்தம் என்ற மூலப்ரக்ருதி, புருஷன் இம்மூன்றையும் அறிவது மோக்ஷம் என்கின்றனர் ஸாங்கயர், இவ்வாறு “வேதத்தில் கூறப்படவில்லை. ஆதலால் ஸாங்க்ய தத்வம் கூறவில்லை. ஸாங்க்யர்களது மறுப்பு : ஒரு மந்த்ரம்: சப்தம், ஸ்பர் சம், ரஸம், ரூபம், கந்தம் இல்லாததும், அழிவில்லாததும், ஆதியந்த மில்லாததும், மஹானுக்கு மேற்பட்டதும், நிலையானதுமான தத்வத்தை த்யானஞ் செய்து ஸம்ஸாரத்திலிருந்து ஜீவன் விடுதலை பெறுகிறான் என்பது, மஹத: பரம்- மஹானளைக் காட்டிலும் பெரியது என்பதால் இது மூலப்ரக்ருதியே. விளக்கம்; இப்பகுதியிலேயே இரண்டு மந்தரங்கள் உள்ளன. ஒன்று கூறுவது: அறிவு சாரதியாகவும், மனம் கடிவாளமாகவும் கொள்ளும் மனிதன் உலக வாழ்க்கையை நீத்து விஷ்ணுவின் பதத்தை அடைகிறான் என்பது. மற்றது: எல்லாப் பொருள்களிலும் மறைந்துறையும் இந்தப் பரமாத்மா மேலான நுண்ணறிவினாலேயே காணப்பெறுகிறான் என்பது, ஆதலால் முமுஷு அறியத் தக்கது மூலப்ரக்ருதி ஆகாது; தீர்வு : நூகேதஸ் என்ற ரிஷி குமாரனுக்கு யமன் ப்ரஹ்ம ஸ்வரூபத்தையும், ஜீவ ஸ்வரூபத்தையும், செய்ய வேண்டிய உபாஸனத்தையும் உபதேசித்தான். ஆத்மா இது என்று .விளக்க, இது சேர்வது “*“தத் விஷ்ணோ: பரமம் பதம்” என்று உபாஸனத்தால் பெறும் விஷ்ணுவின் பதமாகிய மோக்ஷம் என்றும் வெளியிட்டான். இங்கு அவ்யக்தம் என்ற சொல்லால் மூல ப்ரக்ரூதி சொல்லவில்லை. 4, 2. அஜா என்னும் மந்த்ரம். ச்வேதாச்வதர உபநிஷத்தில் அஜாம் என்று தொடங்கும் மந்த்ரம்: சிவப்பு, வெளுப்பு, கறுப்பு என்ற நிறங்கள் உடையதாய், தன்னைப் போன்ற ப்ரஜைகள் பல உற்பத்தி செய்வதாய், பிறப்பற்றதான ஒன்றோடு ஒருவன் உகந்து கூடியிருக்கிறான். அனுபவிக்கும் இதைப் பிறப்பற்ற மற்றொருவன் விட்டுச் செல்லுகிறான். ஸாங்க்: யரின் கருத்து; அஜா (பிறப்பற்றது); என்பது மூலப்ரக்ரதி; பல பொருள் இது உற்பத்தி செய்வதாகக் கூறி யிருக்கிறது. ஆதலால் ப்ரஹ்மாதீமகம் அல்லாத ஸ்வ தந்த்ரமான ப்ரக்ருதியே காரணம் என்பது விளங்கும். மறுப்பு : அஜாம் என்ற இம்மந்த்ரத்தில் மூலப்ரக்ருதி' ப்ரஹ்மாத்மகம் அன்று என்பது கூறப்பெறவில்லை... ”பஹ்வீ; ப்ரஜா; ஸ்ருஜமாநாம்'' என்ற இடத்திலும் மஹான் முதலிய தத்வங்களை ப்ரக்ருதி படைக்கிறது என்பதே உள்ளது; ஸ்வதந்த்ரமாகப் படைக்கிறது என்று கூறவில்லை. ஆதலால் ப்ரம்ஹத்தின் தொடர்பற்ற மூல பரக்ருதி ஸ்வதந்த்ரமாகப் படைக்கிறது என்று ஏற்பதற்கில்லை.' தேர்வு: தைத்திரீயத்தில் பரமாத்மா அணுவைக் காட்டிலும் அணு, பெரியதைக் காட்டிலும் பெரியவன் என்று தொடங்கிக் கடல்கள், மலைகள் இவனிடமிருந்து தோன்றின என்று கூறுகின்றது. இம்மந்த்ரங்களினிடையே **அஜாமேகாம்”'”' என்ற மந்த்ரமும் அமைந்துள்ளது.. ஆதலால் மூலப்ரக்ருதி பகவானை ஆத்மாவாகவும் காரணமாகவும் கொண்டது என்பது வெளிப்படை. சங்கை: பகவான் இவ்வுலகைப் படைத்தான் என்ற வாக்கியத்தால் மூலப்ரகிருதியைப் படைத்தான். என்பது தேறுகின்றது, “*“அஜாமேகாம்'' என்று மூல ப்ரக்ருதி பிறப்பற்றது என்று வந்துள்ளது. இவை எவ்வாறு பொருந்தும்? விளக்கம் : ப்ரளய காலத்தில் நாம ரூப மில்லாமல்: மூலப்ரக்ருதி என்ற அசேதனப் பொருள் பகவானுக்கு சரீரமாக உள்ளது. அப்போது மஹான் முதவியன பரிணாமம் பெறவில்லை. ஆதலால் ௮ஜா எனப்படுகிறது. ஸ்ருஷ்டி காலத்தில் அதே மூலப்ரக்ருதி தன்மாத்திரைகள் இந்த்ரியங்கள், ஐந்து பூதங்களாக நாம ரூபம் பெறுகிறது. ப்ரளய காலத்தில் சூர்யன் உதய ௮ஸ்தமனங்கள் பெறுவதில்லை; ஸ்ருஷ்டி காலத்தில் கார்ய நிலையில் ஸ்தூலமாகி தேவர்களுக்கு போக்யமான மது என்ற நிலையில் இருக்கிறான். இதேபோல் மூலப்ரக்ருதிக்குப் பிறப்பும் பிறப்பற்ற நிலையும். 4, 3. தத்வங்கள் இருபத்தைந்து. *“யஸ்மிந் பஞ்ச பஞ்சஜநா : ஆகாசச் ச ப்ரதிஷ்டித:-தமேவ மந்ய ஆத்மாநம் வித்வாந் ப்ரஹ்மாம்ருதோ? ம்ர௬ுதம்''-- ஐயைந்து தத் வங்களும் ஆகாசமும் எந்த ஆத்மாவிடம் நிலை நிற்கின்றனவோ, பெரியதாய் அழிவற்றதாய் விளங்கும் அந்த ஆத்மாவை இவ்வாறு அறியும் மனிதன் முக்தி பெறுகிறான் என்பது ஒரு மந்த்ரம்.. ஸாங்கயா்களது கருத்து; ஐயைந்து என்பது இருபத்தைத்து. இவை; (1) பூதங்கள் ஐந்து, (4) தன்மாத்ரைகள் ஐந்து, (3) ஜ்ஞானேந்த்ரியங்கள் ஐந்து, (4) கர்மேந்தரியங்கள் ஐந்து, (5) மீதி ஐந்து ப்ரக்ருதி மஹான், அஹங்காரம், மனம், ஆத்மா. பூதங்கள் ஐந்தில்: ஆகாசம் சொல்லப்படவில்லை. இந்த மந்த்ரம் ப்ரஹ்மத்தை ஆத்மாவாகக் கொள்ளாத ஸாங்க்ய தத்வங்களைக் கூறுகின்றது. மறுப்பு : ஸாங்க்யர் ப்ரஹ்மாத்மகமில்லாத இருபத்தைந்து தத்வங்களை ஓத்துக்கொள்கின்றனர். அஜாம் என்ற மந்தரத்தில் இனவ பரமாத்மாவை அண்டியுள்ளன என்று விளங்குகிறது. “*யஸ்மிந் பஞ்ச பஞ்சஜநா:;:* என்ற இடத்தில், ''யஸ்மிந்'* என்று குறிப்பிடும் தத்வம் ஒன்றும், விட்டுப்போன ஆகாசமும் சேர்ந்து இருபத்தேழ தத்வங்கள் என்பது தேறுகிறது. இது ஸாங்க்யர்களது கொள்கைக்குப் புறம்பானது, ஆதலால் ''பஞ்ச பஞ்சஜநா:'' என்பதன் பொருள் பஞ்ச ஜநங்கள் என்ற பேருடைய ஐந்து பொருள்கள் என்பதே தகும். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்துமே பஞ்சஜநங்கள்' எனப் பெறுகின்றன, இவை பகவானால் ஸத்தைப் பெறுவனவாக விவரம் பெறுவதால், 4, 4, ஐகத்துக்குக் காரணம். *ஸதேவஸோம்யே தமக்ரஆஸீத்'*, **அஸதேதவ இத் மக்ர ஆஸித்'',*அஸத்வா இதமக்ர ஆஸீத்''என்ற வாக்கியங்கள் வெளியிடுவது: ஜகத் காரணமானது ஸத் (நித்யமான இயல்புடையது); முதலில் இது அஸத்தாகவே இருந்தது. ஆதலால் ஐகத் காரணம் பரிணாமமுடையது- *-*தத்தேதேதம் தர்ஹ்யவ்யாக்குத மாஸீத்'' அப்படிப்பட்ட இது அவ்யாக்ருதமாக இருந்தது என்றுள்ளது. அவ்யாக் ருதம்: நாமரூபம் என்ற லக்ஷணம் கொள்ளாதது. அவ் யாக்ருதம் என்பது யாவரும் அறிந்த ப்ரக்ருதியின் பெயராகும். நித்யமாயிருக்கும் தன்மையும் பரிணாமமுடைய தாக (அஸத்தாக) இருப்பதும் பகவானிடம் சேர்ந்திருக்க முடியாது. ஆதலால் நித்யமான இயல்புடையதாயும், படைப்பின்போது பரிணாமத்தை உடையதுமான மூலப்ரக்ருதயே ஜகத் காரணமாகக் கொள்ள வேண்டும். அவ்யாக்ருதம் என்று ப்ரஸித்து பெற்றது மூலப்ரக்ருதியே. இது ஸாங்கீயர் கருத்து. மறுப்பு: தைத்திரீயத்தில் வருவது: பகவான், '*ஸத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம” என்றவாறு வேறுபாடில்லாதவன்; தானே ப்ரகாசிப்பவன்; தேச கால வஸ்துக்களாலே அளவுபடாதவன் என்பதும், ஸர்வஜ்ஞனான ப்ரஹ்மத்தோடே கூடி முக்தன் அனுபவிக்கிறான் என்பதும். இதற்கு மேல் இந்தப் பரமாத்மாவிடமிருந்து ஆகாசம் உண்டாயிற்று என்று கூறி அதையே அஸத் என்று குறிப்பிட்டது. இந்த ஜகத் காரணப் பொருளையே ஸத் என்றும் அஸத் என்றும் விவரித்தது- 7*ஐந்மாத்யஸ்ய யத:*” என்றும் அறிவோம். பகவான் ஆகாசம் முதலான யாவற்றிற்கும் காரணமாக வேதங்கள் முழக்குகின்றன. ஆதலால் இவனே ஜகத் ஏக காரணம் அன்று தேறுகின்றது. தீர்வு: அஸத் என்று தைத்திரீயத்தில் வந்துள்ள சொல்லுக்குப் பொருளாக ப்ருஹதாரண்யத்தில் அவ்யாக்ருதம் என்பது காண்கிறோம். ““ஸ ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆநகாக்ரேப்ய்:'” அப்படிப்பட்டவனே நகத்தின் நுனி முதல் முழுவதும் வியாபிகிறான். அஸத் என்றும், அவ்யாக்ருதம் என்றும் நாமருபமில்லாத மூலப்ரக்ருதியை சரீரமாகக் கொண்ட பகவானையே இங்குக் கூறு வதா்கக் கொள்ளவேண்டும். மூலப்ரக்ருதி ஐகத் காரணமாவதற்கு ஆதாரம் ஒன்றுமில்லை, 4. 5. ஐகத் கர்த்தா. கெளஷீதச என்ற உபநிஷத்தில் உபதேசிக்கப் படுவது: “*“யோவை பாலாகே! ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா, யஸ்ய வை தத் கர்ம ஸலவை வேதிதவ்ய:.- பாலகியே! இப்புருஷர்களுக்கு எவன் கர்த்தாவோ, எவனுக்கு இந்தப் புண்ய பாப கர்மம் உள்ளதோ அவனே அறியத் தக்கவன் என்பது. கர்ம ஸம்பந்தம் கூறப்படுவதால், கர்மத்தின் மூலம் இவ்வுலகுக்குக் காரணமாக இருக்கும் ஜீவனே குறிப்பு. அவனால் அதிஷ்டிக்கப்பட்ட ப்ரதானமே ஜகத் காரணம். இது ஸாங்க்ய மதம். மறுப்பு : இப்பகுதியில் தொடக்கத்திலிருந்தே ப்ரஹ் மத்தைப் பற்றியே உபதேசம். பாலாக, “*ஆதித்யன் முதலானோர் ஜகத் காரணம்''என்றான்.இதற்கு அஜாத சத்ரு கூறியது: பாலாகியே! எவன் ஆதித்யன் முதலான கர்ம ஸம்பந்தமுள்ள புருஷார்களைப் படைக்கிறானோ, எவனுக்கு இவ்வுலகம் முழுதும் கார்யமோ அவனே அறியத் தக்கவன் என்பது, ஆதலால் இவ்விடத்தில் கர்ம ஸம்பந்தம் குறிப்பன்று, “*க்ரியதே இதி கர்ம'”- செய்யப் படுவது; இது உலகம். ஜீவனது கர்மம் ஜகத் ஸ்ருஷ்டிக்குக் காரணம் என்பது ஏற்பதற்கான கருத்தன்று. ஆகையால் இவ்வுலகம் தனது காரியப் பொருள் என விளங்கும் நாராயணனே அறியத் தக்கவன் என்பது தேறுகின்றது.. அஜாதசத்ரு பாலாகிக்கு உபதேசஞ் செய்வதற்தாகத் தூங்கும் ஒருவனிடம் அழைத்துச் சென்றான். அவனைப் பலவாகப் பேர் சொல்லி அழைத்தும் அவன் எழுந்திருக்கவில்லை. அவனைத் தடியால் அடித்து எழுந்திருக்கச் செய்தான், அஜாதசத்ரு பாலாகியை மூன்று கேள்விகள் கேட்டான்; ஜீவன் கனவு காணும்போது எங்கிருக்கிறான்? தூங்கும்போது எங்கிருக்கிறான்? விழிக்கும்போது எங்கிருக்கறான்? பாலாகி விடை சொல்ல வில்லை. ஆதலால் அஜாதசத்ரு வெளியிட்ட விடை: முதற் கேள்விக்கு விடை : நாடிகளில் இருக்கிறான்7 இரண்டாவதற்கு விடை; ப்ராண சரீரமான ப்ரஹ்மத்தில் இருக்கிறான்; மூன்றாவதற்கு விடை: ப்ரஹ்மத்தி லிருந்து கிளம்புகிறான். ஜீவனைக் காட்டிலும் வேறுபட்ட பகவாளைப் பற்றி அறிவிப்பதற்காகவே இந்தக் கேள்விகள் கேட்கப் பட்டன. வேறொரு சாகையில் இதே போன்ற கேள்விக்கு விடையாக வந்துள்ளது: தூங்குகிறவன் தனது இதயத்திலுள்ள ஆகாச மென்னும் பரமாத்மாவிடம் படுத்திருக்கிறான் என்பது. ஆதலால் தூங்கும் நிலையில் ஆதாரமாக இருப்பவன் பகவானே என்பது வெளிப்படை. இன்னும் பல இடங்களில் ஆகாச சப்தம் பரமாத்மாவைக் குறிக்கின்றது. ஆதலால் இங்கு ஜீவளைப் பற்றி வெளியிட்டிருப்பது இவனிலும் வேறுபட்ட பரமாத்மாவை அறிவிப்பதற்காகவே, இவ்வாறு இப்பகுதி முழுதும் ஆராய்ந்தால், பரமாத்மாவே அறியத் தக்கவனாகவும், ஜகத் காரணமாகவும் கூறப்படுகிறான் என்பது தேறுகிறது. புருஷன் எனப்பெறும் ஜீவன் அறியத் தக்கவன் என்றும், இவனால் அதிஷ்டிக்கப்பட்ட ப்ரதானம் ஜகத் காரணம் என்றும் சொல்லவில்லை. 4. 6. த்ரஷ்டவ்ய:--யார்? ஜீவன் ப்ரதானத்தோடு இணைந்து ஜகத் காரணமாகமாட்டான் என்பது விவரம் பெறுகின்றது. “ஆத்மாவா அரே த்ரஷ்டவ்ய: சீரோதவ்ய: மந்த வய:--இந்த ஆத்மா காணத் தக்கது, கேட்கத் தக்கது, நினைக்கத் தக்கது. நேரில் காண்பது போல் த்யானஞ் செய்யத் தக்கது என்ற வாக்கியத்தில் ஆத்மா என்பது ஜிவன். இந்தப்' புருஷனோடு கூடிய மூலப்ரக்ருதியே ஜகத் காரணம். இது ஸாங்க்யரது மதம். இவர்கள் அளிக்கும் விவரம்: இதே பகுதியில் முதலில் வருவது: பதியின் காமத்திற்குப் பதி ப்ரியனாவதில்லை, ஆத்மாவின் காமத்திற்காகவே ப்ரியனாகிறான் என்று தொடங்கி, பதி என்ற இடத்தில் மனைவி, புத்ரர், பொருள், பசுக்கள், ப்ராஹ்மணார், க்ஷத்ரியர், லோகங்கள், தேவர்கள், வேதங்கள், பூதங்கள், ஸர்வம் என்று விவரித்த பின்பு ''ஆத்மாவா அரே'' என்று வந்துள்ளது. இப்பகுதியில் முழுதும் ஜீவனைப் பற்றியே; பகவானைப் பற்றி அன்று. ஆத்மா ஒருவனைப் பற்றியதாயினும் இது ஜீவ சமூகம் என்பது தேறும். ஒரு புருஷனே சொல்லப்படுவதால் இவனோடு கூடிய மூலப்ரக்ருதியே ஜகத் காரணம் என்பது தேதறும். மறுப்பு : பதி முதலானோரார் தங்கள் தங்கள் விருப்பம் நிறை வேறும் பொருட்டு இனியவார்கள் ஆவதில்லை. ஆத்மாவின் விருப்பத்தின் பொருட்டே என்று கூறியிருப்பதால் ஜீவனைக் காட்டிலும் வேறுபட்ட பரமாத்மாவைப் பற்றியே கூறப்படுகிறது. மோக்ஷ உபாயத்தைப் பற்றியதே இப்பகுதி. ஆகையாலே இங்குச் சொல்லப்படுவது பகாவானே காணத்தக்கவன் என்று. 4, 7, பகவான் உபாதான காரணம், பகவான் உலகுக்கு நிமித்த காரணமே ஆவான்; உபாதான காரணமாக முடியாது என்பது ஒரு கருத்து, இது ஸேச்வர ஸாங்க்யர் மதக் கொள்கை. இதற்கு விளக்கம் : உலகில் காண்பது, குடம் முதலியவற்றிற்கு மண் முதலியன உபாதான காரணம், குலாலன் முதலானோர் நிமித்த காரணம். நிமித்த காரணமும் உபாதான காரணமும் வேறுபட்டவை. “அஸ்மாந் மாயி ஸ்ருலதே விச்வமேதத்''--இந்த ப்ரக்ருதியைக் கொண்டே மாயப்பிரான் இவ்வுலகைப் படைக்கிறான் என்பது போன்ற வாக்கியங்களில் உபாதானமாகும் மூலப்ரக்ருதிக்கும் நிமித்த காரணமான பகவானுக்கும் வேறுபாடு சொல்லப்படுகிறது. ப்ரஹ்மமே விகார மடைந்து உலகுக்கு உபாதான காரணமாகிறது: என்பதிற்கில்லை? ஏனெனில் ப்ரஹ்மம் விகாரமற்றது என்பதால். ஆதலால் மூல ப்ரக்ருதியே உபாகான காரணம் என்பதே பொருந்தும். மறுப்பு: ப்ரஹ்மம் ஒன்றை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்ததாகும் என்பது வேத வாக்கியம். உதாரணமாக: மண் கட்டியை அறிந்தால், மண்ணாலான பானைகள் யாவற்றையும் அறிந்ததாகும். இதனால் தேர்வது: சட்டி பானைகளுக்கு மண் உபாதான காரணமாவது போல் பகவானும் உலகுக்கு உபாதான காரணம் - என்பது. பகவான் விசித்திரமான சக்தி வாய்ந்தவன் -இவனது சக்தி போல் வேறு எங்கும் காணமுடியாது. ஆதலால் இவன் நிமித்த காரணமும் உபாதான காரணமுமாவான். ப்ரளயத்தின்போது இவன் நுண்ணிய சேதன அசேதனங்களைச் சரீரமாகவுடையவன்; படைப்பின்போது இவனே ஸ்தால சேதன அசேதனங்களாகிறான். உபாதான காரணமானால் சேதன அசேதனங்களின் தோஷம் இவனிடம் சேருமே என்பதில்லை. இதனாலேதான் இவன் ''மாயீ'' எனப் பெறுகிறான். தேர்வு: நான் பலவாகக் கடவேன் என்று பகவான் ஸங்கல்பித்ததாலே இவனே உபாதான காரணம், நிமித்த காரணமும். தேர்வு 2: யஜுர் வேதத்தில் வாக்கியங்கள்? **புவாநாநி தாரயந்''. நிமித்த காரணம், ''ப்ரஹ்ம ஸவ் ருக்க ஆஸீத் - உபாதான காரணம். ஆகையால் பகவான் இருவகைக் காரணமுமாவான். தேர்வு 3: ஓர் உபநிஷத் வாக்கியம்: . சிலந்தி தான் வெளியிடும் நூலைத் தானே இழுத்துக் கொள்கிறது? பூமியிலிருந்து பலவகைப் பயிர்கள் உண்டாகின்றன: உயிருடனிருக்கும் புருஷனிடம் உரோமங்கள் உண்டாகின்றன; இதுபோல் பரம்பொருளிடமிருத்து ' உலக மனைத்தும் உண்டாகின்றது. ஆதலால் பகவான் நிமித்த காரணமும் உபாதான காரணமுமாவான் என்று நிர்ணயிக்கப்படுகிறது. 4.8. இதர தேவதைகள் காரணமாக முடியாது. சிவனே ஜகத் காரணம் என்பது ஒரு கருத்து.இதற்கு ஆதாரங்கள்: (1) ச்வேதாச்வதரோபநிஷத்தில், “*யதா தமஸ் தந் ந திவா ந ராத்ரி” என்ற ஸ்லோகத்தின் கருத்து: எப்போது தமஸ் மாத்திரம் இருந்தது, பகல், இரவு, ஸத், அஸத் ஒன்றுமில்லையோ, சிவன் மட்டும் இருந்தானோ அந்தப் பரவஸ்துவே அழிவில்லாதது. (2) முதலில் தமஸ் ஒன்றே இருந்தது; அப்போது ஸத்து மில்லை, அஸத்து மில்லை; தமஸ்ஸைச் சரீரமாசுக் கொண்ட ப்ரஜாபதி ஒருவரே இருந்தார். இங்கு ப்ரஜாபதி என்பது சிவனைக் குறிக்கின்றது. இவற்றில் சிவனே ஆகத் காரணமாகக் கூறப்படுகின்றான். மறுப்பு : வேத வாக்கியங்கள் பல நாராயணனே காரணம் என்று முழக்குகின்றன. “ஸத்: என்பதன் கருத்து வெளிப்படையாகச் சொல்லவில்லை. இதை விளக்கும் வாக்கியங்கள்; ஏகோஹவை நாராயண ஆஸீத், ந ப்ரஹ்மா, ந ஈசாத:- நாராயணன் ஒருவனே முதலில் இருந்தான்; 'ப்ரஹ்மாவும் இல்லை, சிவனுமில்லை; ,நாராயணன் மனத்தால் ஸங்கல்பித்தான்; 'நாராயணமிட மிருந்து தோன்றிய அண்டத்தில் பிரமன் பிறந்தான்; அவனிடம் இருந்து மூன்று கண்கள் உடையவனும், சூலம் கையில் ஏந்தியவனுமான புருஷன் உண்டானான், நாராயணமிட மிருந்து எல்லாம் உண்டாகின்றன; இவனிடமே எல்லாம் லயிக்கின்றன. அதலால் சிவன் காரணமாக மாட்டான். தேர்வு : உபநிஷத்துக்களில் வந்துள்ள கருத்துக்கள்: (1) பரப்ரஹ்மம் ஒன்றே ஈஸ்வரர் பலர் இருக்க முடியாது . நாராயணன் படைப்பவன்; சிவன் முதலோர் படைக்கப் பட்டவர் . (2) உபதிஷத்துக்களில் ஹரி, விஷ்ணு,அச்யுதன், புருஷன், மஹாபுருஷன், சிவன், சம்பு, ,குத்ரன் போன்ற ,சொற்கள் வருகின்றன. ஐகத் காரணமசக வரும் இடங்களில் சிவன், ருத்ரன் போன்ற பதங்கள் நரராயணனாகக் கொள்ள வேண்டும். காரணத்வம் நாராயணனுச்கே யாவதால். (4) நாராயணன் என்று சப்தம் சிவனுக்குச் சேராது என்பது பாணினி ஸூத்ரத்தால் வெளிப்படை. நாராயணனைப் பற்றிய திரு நாமங்கள் விஷ்ணுவையே சார்வன; வேறு தெய்வங்களைச் சாரா; இவனுக்கே என்று வாமன புராணம் வெளியிட்டுள்ளது. சாச்வதம் சிவம் அச்யுதம், ஸர்வ: சர்வ; சிவ: ஸ்தாணு:, அக்ஷரம் பரமம் ப்ரபும், ஸூர்ய மண்டலத்தில் உறைபவன், **தத் ஸவிதுர் வரேண்யம்” என்து பாராட்டப் பெறுவோன் ஸ்ரீமந் நாராயணனே. ஆதலால் நிச்சயிப்பது பகவான் நாராயணனே யாவகைக் காரணமும், மற்றைய தேவர்கள் அல்லர் என்பதே. அவ்யக்தம் என்ற சொல்லால் குறிப்பது சரீரம். ஆதலால் ஜகத்துக்கு மூலப்ரக்ருதி காரணமன்று. அஜா சப்தத்தாற் சொல்லப்படுவது, ப்ரஹ்மம் அத்தர்யாமியாகவுள்ள மூலப்ரக்குதி, இந்த்ரியங்கள், ஆகாசம் முதலியவை பகவானை அந்தார்யாமியாகக் 'கொண்ட ப்ரஹ்மம் ஒன்றையே காரணமாக வேத வாக்யங்கள் கூறுகின்றன. இவனே அடையத் தக்கவனாகவும் கூறப் படுகிறான், காணத் தக்கவனாகவும் கூறப் படுகிறான் .. பகவான் உவகுக்கு நிமித்த காரணமாகவும் மட்டும் இன்றி உபாதான காரணமுமாகிறான். உலகுக்குக் காரணம், ஆனவனே உபாசிக்கப்படுமவனும் ஆவான் எனவே உபாசிக்கப்படும் தெய்வம் நாராயணனே -வேறு தெய்வமில்லை. முதற் பாதத்தில் சொல்லிய காரணத்வம் முதலியன நாராயணனுக்கே, வேறு எதற்குமில்லை என்று நிலை நிறுத்துவது நாலாம் பாதம். ------------------------ இரண்டாம் அத்யாயம் முதல் அத்யாயத்தில் பகவானது மேன்மை விவரிக்கப் பட்டது. இவன் சேதன அசேதனங்களைக் காட்டிலும் வேறுபட்டவன்; உலகுக்குக் காரணம்; சக்தி வாய்ந்தவன் ; ஆனந்த மயன். இவனே மூவகைக் காரணங்களும் ஆவான் என்பது இரண்டாம் அத்யாயத்தில் ஸ்தாபிக்கப்படுகிறது . முதற் பாதத்தில் இதற்கு மாறுபடக் கூறும் கருத்துக்களை ஆராய்ந்து வ்யாஸர் இவற்றை ஸ்தாபிக்கப்படுகிறார். தர்க்கமே ஆதாரமாக, பகவான் ஜகத் காரண மில்லை என்ற பிற மதத்தினரது கொள்கைகளை வெளியிட்டு நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதற்கு இல்லை என்கிறார் இந்தப் பாதத்தில். மூன்றாம் பாதத்தில் சேதன அசேதனங்கள் பசுவானின் கார்யம் என்றும், நாலம் பாதத்தில் ஜீவனுக்கு உபகரணங்களான ப்ராணன்,இந்திரியங்கள் யாவையும் பகவானால் படைக்கப்பட்டவை என்றும் தெள்ளத் தெளிவாக விளக்குகிறார் வ்யாஸ பகவான். . 1. முதற் பாதம் உபாதான காரணம்". உலகுக்குக் '' காரணம்' மூலப்ரக்ருதியே'. அதாவது ப்ரதானமே என்பது ஸாங்க்யர்களது கொள்கை, இதற்கு ஆதாரமாக இவர்கள் கபில ஸ்ம்ருதி, யோக ஸ்ம்ருதி இவற்றையும் தர்க்க வகைகளையும் பயன்படுத்தி வாதஞ் செய்கின்றனர்: இக். கொள்கையை எதிர்த்து பகவானே மூவகைக் காரணம்' என்பதை வ்யாஸர் நிலைநிறுத்துகிறார்.. இந்தப் பாதம் ஸ்ம்ருதி பாதம் எனப்பெறும். (1) கபிலர்: உபநிஷத்துக்களால் புகழப் பெற்றவர்” ஆப்தர். இவரது ஸ்ம்ருதி ஜகத் காரணப் பொருளைப் பற்றியே விளக்குகின்றது. இவர் ப்ரதானமே ஜகத் காரணம் என்று அறுதியிட்டுள்ளார். சதுர்முகன் வேதங்களை ஓதி, யரவர்க்கும் ஓதுவித்த தனிப் பெருமை வாய்ந்தவன்; இவன் வெளியிட்ட யோக ஸ்ம்ருதி ப்ரதானமே ஜகத் காரணம் என்று கூறுகின்றது. ஆதலால் பகவான் உலகங்களுக்கு உபாதான காரணமாக மாட்டான் என்கின்றனர் ஸாங்கீயர். மறுப்பு : மனு, வ்யாளர் போன்றவர்கள் பலர் வேதாந்த வல்லுநர், புகம் பெற்றவர்கள். இவர்களது கருத்து: பகவானே உபாதான காரணம் என்பது? இதையே தான் ஆதரிக்கவேண்டும். இவர்கள் வேதக் கருத்துக்களை உள்ளபடி உரைப்பவர்கள் என்றும், இவர்களது வார்த்தைகள் சிறப்புடையன என்றும் வெளியிடப் பெற்றுள்ளது. சதுர்முகன் எப்போதும் ஸத்வ குணம் வாய்ந்தவனல்லன்;கல்பங்களில் ராஜஸ தாமஸ குணங்கள் மேலிடப் பெற்றவன். ஆதலால் இவன் வெளியிட்ட யோக ஸ்ம்ருதியின் கருத்து மதி மயக்கத்தாலேயே வேதக் கருத்துக்கு விபரீதம். ஆதலால் இவரது கருத்து அங்கீகரிப்பதற்கில்லை, (2) 'தர்க்கம் (வாக்குவாத முறை) " பகவான் ஆனந்தமயன், பேரறிவாளன், இன்ப துன்பங்கள் இல்லாதவன். இந்த நிலைக்கு மாறுபட்டது உலகின் நிலை. இவன் உலகுக்கு உபாதான காரணம் ஆனால் இந்தக் குறைகள் இவனிடம் இருக்க வேண்டும், காரியமான பானையும் காரணமான் மண்ணும்! மண்ணுருவாக இருப்பது போல். ஆதலால் பகவான். உபாதான காரணமாக மாட்டான் என்பது ஒரு கருத்து. ,. மறுப்பு : சாஸ்த்ரங்களின் மூலம் தெளிவது: காரண நிலையில் சேதன அசேதனங்கள் பகவானோடு ஒன்றி விடுகின்றன; இது நுண்ணிய நிலை. பின்பு படைப்பின் போது இவை ஸ்தூல நிலையில் நாம ரூபங்கள் பெறுகின்றன. இவ்விரண்டு நிலைகளிலும் வேறுபாடு இல்வை. மனிதனுக்குப் பிள்ளைமை, இளமை, முதுமை என்ற நிலைகள் போல் இவ்விரண்டு நிலைகளும். ஆத்லால் இந்த தர்க்கம் நிலை நிற்காது. (3) பிற மதத்தினரது முடிவு. வெறும் தர்க்கத்தையே கொண்டு. வாதஞ் செய்வோர் பலர், அணுகாரண வாதிகள் கணாதருடைய வைசேஷிக மதம், அஷய பாதருடைய நையாயிக மதம்: சமண மதம், பரமசிவன் வெளியிட்ட சைவ மதம் இவை ஒரே கருத்தை வெளியிட்டுள்ளன ப்ரதானமே உலகுக்குக் காரணம் என்று. இவை பல: ஓரே கருத்தைச் சொல்லுவதால் இக்கருத்தையே ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆதலால் பகவான்: . உபாதன காரணமல்லன் என்கின்றனர் ஸாங்கியர். மறுப்பு : இம்மதங்களை வெளியிட்டவர்களது தர்க்கம் ஒருவகைப் பட்டதன்று; ஏற்றவாறு இயங்கவில்லை? இவர்கள் பரமாணுக்களைப் பற்றி ஆராயவில்லை. சிலர் இவை சூன்யம் என்கின்றனர்; ஒரே நிலையில்லாமல் இக் கீழே விழுவோரது கருத்துக்களை ஏற்பது எவ்வாறு இயலும்? உலகைச் சரீரமாக பகவான் கொண்டுள்ளான் என்று சாஸ்த்ரங்கள் மூலம் கூறுகின்றனர்;. இவ்வாறு கருதினால்' சரீரத்தில் இருக்கும் அவனைப் போவவே பகவானும் இன்ப துன்பங்களை அனுபவிக்க நேரிடும், இதனால் ஜீவனுக்கும் பகவ௱னுக்கும் வாசி ஒன்றுமில்லை-இந்த தோஷத்தால் ப்ரஹ்ம காரண வாதம் சரியன்று என்றனர் ஸாங்க்யர். மறுப்பு : ஜீவன் இன்ப துன்பங்களை அனுபவிப்பது சரீரத்தோடு இருப்பதால் மாத்திரம் அன்று; முக்யமாகாகக் கர்மத்தாலேயே. ஜீவன் முக்தனான பின், விருப்பப்படி சரீரங்கள் ஏற்றுக்கொண்டு பரமாத்மாவை அனுபவிக்கிறான் ; உண்பது, விளையாடுவது, இன்புறுவது போன்ற போகங்களையும் பரமாத்மாவிடமே பெறுகிறான். சாதாரண முக்தனுக்கே இப்பெருமை எனின், பகவானது பெருமையைச் சொல்லவேண்டுமோ? பகவானுக்கு ஜீவர்கள் சரீரமாக இருப்பதால் ஜீவர்கள்! ஸந்தோஷம் இவனுக்கு நேராது, ஆதலால் இவனுக்கும் ஜீவனுக்கும் வாசி யில்லை என்பது தகாது. அரசனது ஆணைப்படி இன்புறுகின்றனர்; மாறி நடப்பவர் தண்டனை பெறுகின்றனர். இத்த ஆணையால் அரசனுக்கு இன்ப துன்பங்கள் இல, இதுபோல் பகவான் உலகை நியமிப்பவன் ; உலக அனுபவங்கள் இவனைக் கிட்டாதே , இவன் எவராலும் நிய மிக்கப்படாதவன்; இன்ப துன்பங்கள் இல்லாதவன், ஆதலால் இவன் உபாதான காரணமாவதற்கு ஆஷேபம் எதுவுமில்லை. (5) தர்க்க வாதம் ஒன்று. உலகில் காரணப் பொருளுக்கும் காரியப் பொருளுக்கும் காரணமான மண்ணுக்கும் வேறுபாடுகள் உள்ளன. காரணமான மண்ணுக்கும் காரியமான குடத்திற்கும் வேறுபாடுகள் உள: நிலையால் (மண், குடம்), பெயரால், வடிவால், பயனால் (குடம் செய்ய, நீர் முகக்க]). இதுபோல் காரணமான பகவானுக்கும் காரியமான உலகுக்கும் மாறுபாடுகள் உள்ளன. ஆதலால் பகவானை உபாதான காரணமாகக் கொள்ள இயலாது. இதுவும் சாங்க்யர்களது கருத்து. மறுப்பு : '*வாசாரம்பணம்'' என்ற உபநிஷத் வாக்கியத்தில் இதே கருத்து வந்துள்ளது, இவ் விடத்தில்**ம்ருத்திகா இதி ஏவ ஸத்யம்'”-- காரியமான குடம் மண் என்பதே உண்மை என்று காண்கிறோம். ஆதலால், மண், குடம் இவற்றிற்கு வேற்றுமை காண்பதற்கில்லை. அன்றியும், *-இவ் வுலகம் ஸத் என்ற ப்ரஹ்மமாகவே இருந்தது'* என்பது போன்ற வாக்கியங்கள் வெளியிடும் கருத்து? காரணமான மண்ணும் காரியமான குடமும் மண்ணாக விளங்குவதுபோல், காரணமான பகவானே காரியமான உலகமாக இலங்குகிறான் என்று. மண்ணுக்கும் குடத்துக்கும் வேறுபாடுகள் நிலையினாலேயே. ஓரே மனிதன் குழந்தை , இளைஞன், கிழவன் போன்ற நிலைகளை அடைகிறான். இதுபோலே இங்கும் கொள்ளவேண்டும். இது போல் பகவானின் நிலையும் ஆய்ந்து அறியலாம். நாம ரூபங்கள் இல்லாமல் ஸூஷ்ம நிலையிலுள்ள சேதன அசேதனங்களைச் சரீரமாகக் கொண்டிருப்பதே காரண நிலை; படைப்பித்குப் பின் ஸ்தூல 'நிலையில் நாம ரூபங்கள் கொண்டுள்ள சேதன அசேதனங்கள் சரீரமாகதக் கொண்டிருப்பது க௱ரிய நிலை. இவ்வாறு இயங்குவதான் சேதன அசேதனங்களின் தோஷங்கள் பகவானை அணுக” மாட்டா. 1. 2. நிமித்த காரணம். பகவான் நிமித்த காரணமாகிறான் என்பது வேதாந்திகள் பக்ஷம், “*ததி த்வமஸி'', “*அயமாத்மா ப்ரஹ்ம”. போன்ற வாக்கியங்களில் ஜீவனைக் காட்டிலும் வேறுபட்டவனாகத் தோன்றும் பகவானும் ஜீவனும் ஒன்று என்று இவர்கள் ஒப்புக் கொள்கின்றனர். பகவான் ஸர்வஞ்ஞன் , பல நற்குணங்கள் வாய்ந்தவன் என்றும் ஒப்புக் கொள்கின்றனர், உலகமோ ஜீவர்களுக்கு கர்மங்களையே விளைவிப்பது. பகவானே ஜீவனாகில் ஜீவனுடைய துன்பங்கள் இவனைச் சேரும். ஆதலால் இவன் தனக்குத் தானே தீமை தேடிக் கொள்ள மாட்டான். தனக்கே விபரீதமான உலகை பகவான் படைக்க மாட்டான்; அதாவது நிமித்த காரண மாகமாட்டான். இது ஒரு கருத்து. ் விளக்கம் : உபநிஷத்துக்கள் வெளியிட்டுள்ளது; பரமன், ஜீவன் இவர்களுள் பரமன் யாவும் அறிந்தவன், யாவையும் நியமிப்பவன்; ஜீவன் அறியாதவன், நியமியாதவன். பரமன் ஆத்மாவினுள் உறைகின்றான், ஆத்மா இவனுக்குச் சரீரம்; ஆதீமா இவனை அறிய மாட்டாது. ஆத்மாவையும் இவனை நியமிக்கும் பரம் பொருளையும் வேறாக அறிந்து, அப் பரம்பொருளின் அருளால் இவன் மோஷ்மடைகிறான். இந்த,வாக்கியங்களால் தேறுவது: ஜீவாத்மா பகவானைக் காட்டிலும் வேறுபட்டவன் என்பது, ஆனால், '**தத்த்வமஸி'* போன்ற வாக்கியங்களில் இருவரையும் ஓன்றென்று சொல்லுவது எவ்வாறு? இவ் வாக்கயங்கள் ரூபத்தின் ஒற்றுமை சொல்லவில்லை; ஸ்வரூப பேதம் சொல்லுகின்றன. ஜீவனது கர்மங்களின்படியே துன்பங்கள்: விளைகின்றன; பகவானுக்குக் கர்மங்கள் இல்லை . ஆதலால் உலகைப் படைத்து பகவான் தனக்கு துன்பம் விளைவித்துக் கொள்கிறான் எள்ற கருத்து சரியன்று. ஆதலால் பகவான் உலகத்திற்கு நிமித்த காரணமாவான். கல்,கட்டை போல்வன அசேதனப் பொருள்கள். இவை பகவானாக முடியாது என்பது ஒவ்வாது இதுபோல் அற்ப ஞானம் வாய்ந்து அற்ப சக்தி வுடையவனாய்த் துன்பம் அனுபவிக்கும் ஆத்மா பகவானாக முடியாது. இங்ஙனம் ஆராய்ந்தால் பகவான் நாராயணனே உலகுக்கு நிமித்த காரணம் என்று தேறலாகும். 1. 3. பகவானுக்கு உபகரணங்கள் தேவையா? மண்ணிலிருந்து குடம் செய்யும்போது செய்பவன் ஆற்றல் மிக்கவனாக இருந்தாலும், சக்கரம், தண்டம். (கோல்) இவை யில்லாமல் ஓன்றுஞ் செய்ய இயலாது. இதுபோல் பகவான் ஸர்வ சக்தனாக இருந்தாலும் உபகரணங்களின் உதவியின்றி உலகைப் படைக்க இயலாது என்பது ஒரு கருத்து. தீர்வு: உபகரணங்கள் இல்லாமலே படைப்பு நேரக் கூடும். பாலைக் கரய்ச்சிச் சிறிது மோரைச் சேர்த்தால் பால் தயிராகின்றது; மோரின் உதவி யில்லாமலும் திரிந்து மாறிவிடுகிறது; மோர் சேர்ப்பது விரைவில் தயிர் பெறுவதற்காக. பகவான் எல்லை கடந்த சக்தி வாய்ந்தவன்; ஆதலால் உபகரணம் வேண்டியதில்லை . இவன் படைத்த தேவர்களும், பிரமன், சிவன் போல்வார்களும் தங்களது விருப்பப்படி படைக்க வல்லவர், ஆதலால். பகவானது ஆற்றலைப் பற்றி சங்கை கொள்வதற்கில்லை. 1. 4. விசித்திரமான சக்தி. ப்ரஹ்மம் செயலற்றது, அவயவமற்றது என்கின்றதும் -பரஹ்மம் வேராக இருந்தது!என்றும் சொல்லுகின்றன, ஆதலால், ஒரு சங்கை --அவயவமில்லாத பகவான் பரிணமித்தால் ஒரே பொருளாகத் தான் மாற வேண்டும்; இவன் காரியப் பொருள்களுக்குக் காரணமாகக் கருத இயலாது. தன்னோடு ஒன்றிய அசேதனத்தோடு இயங்குவதாகக் கொண்டாலும், தனக்குக் காரியமான ஓரே பொருளாவான் , ஒரே பொருளுக்கே சரீரமாக இருக்க முடியும். விளக்கம் : உலகில் காணும் பொருள்கள் போலன்று ப்ரஹ்மம். இதைப்பற்றி நேரில் கண்டோ, அனுமானத்தாலோ தெரிந்து கொள்ள இயலாது; சாஸ்த்ரங்களைக் கொண்டே அறிய வேண்டும். வேதங்கள் வெளியிட்டுள்ளது: ப்ரஹ்மம் விகாரமில்லாதது,விசித்திரமான। சக்தி வாய்ந்தது. இத்தகைய சக்தி இதற்கே உள்ளது. நீருக்கே உள்ள குளிர்ச்சி போலவும், நெருப்புக்கே உள்ள வெப்பம் போலவும், இத்தகைய சக்தியாலே இவன் அந்தார்யாமி ஆகிறான், அவயவ மில்லாமை, எல்லாம் பொருள்களுமாகப் பரிணமிப்பது இவை பகவானுக்கே அசாதாரணம் ப்ரஹ்மம் காரிய நிலையில் சேதனங்களாகவும் அசேதனங்களாகவும் மாறுவது தோஷ மில்லையோ எனில், இல்லை. இவன் யாதொரு லிகாரமும் இல்லாதவன்; தோஷங்கள் இவனை அணுகவும் மாட்டா. 1. 5. உலகைப் படைப்பதன் பயன். ஒரு சங்கை : பகவான் நலன்கள் யாவும் பூர்ணமாக வாய்ந்தவன்; தனக்கென எதுவும் நாடாதவன், இவன் இவ் வுலகைப் படைப்பதன் பயன் என்ன? பயன் எதுவும் இல்லாததால், இவன் இதைப் படைப்பதில்லை என்று தேறுகன்றது. தீர்வு : சாஸ்த்ரங்கள் வெளியிடுவது: பரிபூர்ணனான ஸர்வேஸ்வரன் இவ்வுலகைப் படைப்பது அப்போ தப்போது அனுபவிக்கும் லீலைக்காகவே இத்தகைய வீலை இவனுக்கு ஏத்தலைய பலனை எதிர்பார்த்து இல்லை என்பதற்கு ஆசார்யர்கள் வெளியிட்டுள்ள விளக்கம்; உயிர்கள் உய்வதற்காசு இவன் எவ்வளவு முயற்சிகள் , செய்தும், உலகில் பிறந்து இவர்கன் இவ்வாறு துன்புறுவதே என்று அனுதாபத்துடன் நோக்குகிறான் என்பதே வேறொரு சங்கை: பகவான் உலகத்திற்குக் காரணம் எனில் ஏற்றத் தாழ்வுடன் ஏன் படைக்கவேண்டும்? இவ்வாறு படைப்பதால் பஷபாதம் என்ற தோஷமும், கருணை யின்மை என்ற குற்றமும் நேராவோ? தீர்வு: உலகம் படைக்கும்போது ஜீவர்கள் முன்னமேய செய்த புண்ய பாவ கார்மங்களைப் பற்றியே! தான் படைப்பு நிகழ்கிறது. இதனாலேதான் ஏற்றத். தாழ்வுகள். வேறொரு சங்கை: படைப்பிற்கு முன் ப்ரஹ்மமே தான் இருந்தது என்று வேதங்கள் வெளியிடுகின்றன. அப்போது ஜீவர்கள் இல்லை எனில், இவர்களது கர்மங்களைப் பற்றியே படைப்பு என்பது எவ்வாறு பொருந்தும் ? ஏற்றத் தாழ்வுகள் நினைப்பதற்கே இல்லையே... தீர்வு : ப்ரஹ்மமே இருந்தது என்பதன் கருத்து: ஜீவர்கள் நுண்ணிய நிலையில் நாம ரூபங்கள் இல்லாமல் ப்ரஹ்மத்தோடு ஒன்றியிருந்தனர் என்பதே, இவர்சுள் அநாதி;இவர்களது கர்மங்களும் அநாதி; இவர்களோடே இணைந்திருப்பன. இந்தக் கர்மங்களின் தராதரத்திற்கு ஏற்கவே பிறப்பின் தாரதம்யமும் ஆக் ப்ரஹ்மத்திற்கு யாதொரு தோஷமும் இல்லை. இவ் வகையில் ஆராய்ந்தால் ப்ரஹ்மமே' உலகைப் படைக்கின்றது என்பது திண்ணம். ஆதலால்: இப்பாதத்தின் கருத்து, பகவானே மூவகைக் காரணமும் ஆகிறான் என்பதே . , இதுவே ஸ்ருதி ஸ்ம்ருதி சித்தம் . அணு காரண வாதிகள் பெரும்பாலோர் ப்ரதானமே உபாதான சாரணம் என்கின்றனர். இவர்களது தா்க ரீதியில் குறைகள் உள்ளன. இவர்களது கருத்தும் ஏற்பதற்கில்லை. உபாதான காரணமாவதற்குக் காரணப் பொகுள்: காரியப் பொருள் இவை சமமான இயல்பு பெற வேண்டியதில்லை. உதாரணம்: சாணத்திலிருந்து தேள் தோன்றுகிற து. ஜீவர்கள் பகவானுக்குச் சரீரம். ஆதலால் ஜீவர்களது தோஷங்கள் பகவானைச் சேருமெனில், கர்ம வசப் படாத பகவானுக்கு தோஷங்கள் இல்லையே . காரணமான. பக வானும் கார்யமான உலகும் வேறுபடாதவை. ' பகவான் நிமித்த காரணம் எனில், துன்பமே இயல்பான் ஜீவர்களைப் படைப்பதால், சரீரியான தான் தனக்கு தீமை தேடிக்கொள்வது ஓவ்வாதே வேறொரு துணையும் எதிர்பாராமல் பகவான் உலகைப் படைக்கின்றான். அவயவமற்ற பகவான் பல பொருள்களுக்கு உபாதான காரணமாக மாட்டான் என்பதை எதிர்த்து பகவான் விசித்திரமான சக்தி உள்ளவன் என்று நிர்வகிக்கப்படுகிறது. உலகைப் படைப்பது பகவானுக்கு லீலையே; வேறே பயன் எதுவுமில்லை. --------------- 2, இரண்டாம் பாதம் பகவான் உலகுக்குக் காரணமல்லன்? ப்ரதானமே என்ற பிற மதத்தினர்களது வாதங்களை மறுத்து வ்யாஸ பகவான் தமத: மதத்தை இது வரையில்: 'நிலை நிறுத்தி அருளிச் செய்தார் - இவர்களது மதக் கோட்பாடுகளை ஆராய்ந்து- இவை ஏற்பதற்கில்லை என்பதைத் தர்க்கத்தின் மூலம் வெளியிடுகிறார்; ஆதலால் இந்தப் பாதம் தர்க்க பாதம் 'எனப் பெற்றது. 2. 1. ஸாங்க்ய மதம். பகவானது நிலை இல்லாமலே ப்ரதானமே உலகுக்குக் காரணம் என்பது ஸாங்க்யர் மதம். இம் மதத்தின் படி ப்ரதானம் என்பது ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய பொருள்களாக அமைந்துள்ளது; இவை குணங்கள் அல்ல. இவை இயல்பாகச் சமநிலையில் உள்ளன. அறிவுடைய புருஷனது முன்னிலையில் ப்ரதானம் விகார மடைகிறது (மாறுதல் பெறுகிறது). புருஷ தத்வமோ குணமில்லாதது, அறிவு வடிவமானது, நித்யமானது, எங்கு மிருப்பது, செயலற்றது; சரீரங்களில் வெவ்வேறாக இருப்பது. இது கார்த்தாவாகவும், போக்தாவாகவும் இருக்க முடியாது. ப்ரக்ருதி புருஷர் அணுகியிருப்பதால், ப்ரக்ருதிக்கு அறிவும், புருஷனுக்கு கர்க்ருத்வமும் (செயல்படுவதும்) நிகழ்கின்றன. தான் கர்த்தா, போக்தா என்று நினைப்பதால் ஸம்ஸாரம்; முன்பு கூறிய ஞானத்தால் மோக்ஷம். மறுப்பு : ஸத்வம், ரஜஸ், தமஸ் இவை குணங்கள் என்றே வேதங்கள் வெளியிட்டுள்ளன. ஆதலால் இவை பிரதானமாக மாட்டா. மரத்தால் தேரும், கல்லால் கட்டிட்மும் நிருமிப்பதற்கு வேண்டிய உபகரணங்கள் இருந்தாலும் செய்வோர் வேண்டும். ஆதலால் ப்ரக்குதி புருஷர் அணுகியிருந்தும் யாதொரு பயனுமில்லை. செய்பவன் ஒருவன் வேண்டும். ஸாங்க்யர் அளிக்கும் சமாதானங்கள், (1) ஒருவனது உதவியே யில்லாமல் பால் தயிராகிறது; (2) மேகத்திலிருந்து விழும் நீர் இளநீராகிறது; மாம்பழத்தின் ரசமாகிறது; (4) பசு புல்லை மேய்ந்து பால் சுரக்கின்றது; (4) காந்தக்கல்லின் அருகில் உள்ள இரும்பு இயங்குகிறது (5) தொண்டி, குருடவின் தோள் மேல் ஏறிக் கொண்டு வழி நடக்க இயலுகின்றது ஆதலால் சேதனன் ஒருவனது உதவி இல்லாமலே உலகப் படைப்பு இயலும். விளக்கம் : மண் குடமாவதும், மரம் ரதமாவதும் ஓகு சேதனனது முயற்சியாலேயே. இதை உதாரணமாகக் கொண்டு ப்ரக்ருதி மாறுபடுவது யாவும் பரம சேதனனாலே என்று அனுமானித்து அறியலாகும் . பால் தவிராக மாறுவதும்,மழைநீர் இள நீராவதும்,மாம் பழ ரசமாக மாறுவதும் அப் பரம சேதனனாலே என்பது அனுமானம். ஆதலால் பகவானது சங்கல்பமின்றி. ப்ரக்ருதி பரிணமிக்க இயலாது. இரும்பு காந்தக் கல்வின் அருகில் இருந்தால் தான் இயங்கும் ; அதை அருகில் வைப்பவன் ஒருவன் வேண்டும், நொண்டி வழி தடப்பது தன்னுடைய முயற்சியாலும், குருடனுடைய உதவியாலும். குறைபாடுகள் : ஸாங்க்ய மதத்தில் வெளியிட்டு காட்டப்பட்டன ; ப்ரதான நிலையில் ஸத்வம், ரஜஸ், தமஸ் இவை சமமாக உள்ளன; இவற்றில் ஏற்றத் தாழ்வால் படைப்பு நிகழ்கின்றது என்பது, இவ்வாறான ஏற்றத் தாழ்வு எங்கனம் ஏற்படுகிறது என்பதை விளக்கவில்லை. ஆதலால், ஸர்வஜ்ஞனாகிய ஸா்வேச்வரனோடு தொடர்பு இருந்தால் தான் ப்ரக்குதி ஜகத்துக்குக் காரணமாகும். ஸாங்கயரின் கொள்கைப்படி புருஷன் மாறுபாடில்லாதவன். இவனுக்கு போகம் ப்ரக்ருதியைக் காண்பது; மோக்ஷம் ப்ரக்ருதியிலிருந்து விடுதலை பெறுவது. விகார மற்ற புருஷனுக்கு போகமும் மோக்ஷமும் எவ்வாறு ஒட்டும்? ப்ரக்ருதியின் பரிணாமத்தால் சு௧ துக்க ரூபமான போகம் எனில், சேதனன் ப்ரக்ருதி ஸந்நிதியில் இருப்பதாலும், ப்ரக்ருதி நித்யமாதலாலும் இவனது போகம் எப்போதுமே நிகழும்; மோஷம் வாய்ப்பதில்லை . புருஷன் எப்போதும் ப்ரக்ருதியின் அருகிலேயே இருக்கிறான்; இதனாலே படைப்பு என்கின்றனர் சாங்க்யர் . நித்யமான புருஷன் அருகில் இருப்பதால் ஸம்யோகம் எப்போதும் படைப்பே நடக்கும். மோக்ஷம் எவ்வாறு நடக்கும்? இவ்வாறான முரண்பாடுகள் பல. ஆதலால் ஸாங்க்ய மதம் எவ் வகையிலும் பொருந்தாது. 2. 2. அணு காரண வாதம். நையாயிகரும் வைசேஷிகரும் பகவானை அதிஷ்டாதாவாக ஒப்புக் கொண்டு பரமாணுக்களே ஐகத்திற்குக் ' காரணம் என்கின்றனர். (அதிஷ்டாதா: தலைவனாக தியமிப்பவன் ). பரமாணுக்களின் தன்மை என்ன? இவை நுண்ணியன, நித்யமாவன, அவயவமற்றவை. இவை பல சேர்ந்து அவயவி ஆகின்றன. இந்த அவயவியை அவயவங்களாகப் பிரித்துக் கொண்டே யிருந்தால், பிரிக்க இயலாத நிலை திகழும். இந்த நிலையில் காண்பது பரமாணு, பரமாணுக்கள் இரண்டிரண்டாகவும், இந்த இரட்டைகள் மூன்றாகவும் இவ்வாறே பெருகுகின்றன. காற்று, தீ , தீர், நிலம் இவற்றிற்குத் தனித் தனியாகப் பரமாணுக்கள் உள; இப் பரமாணுக்கள் அந்த அந்த பூதத்தின் குணங்கள் வாய்ந்தவை. விளக்கம்! பரமாணுக்களுக்குப் பரிணாமமே இல்லை- இவை இரண்டாகவும், இந்த இரட்டைகள் மூன்றாகவும், இவ்வாறு இணைந்தாலும் பரிமாணம் இராது; பரிமாணம் இருத்தால் அடிப்படையான பரமாணு கொள்கை நிலைக்காது. இவர்களது மதத்தின்படி உலகம் எவ்வாறு உண்டாகின்றது? உலகம் உண்டாவதற்கு ஆதாரமாக வுள்ளது பரமாணுக்களின் முதற் செயல்-- அத்ருஷ்டம் என்பது? இது புண்ய பாவத்தால் ஏற்படும். இந்த முதற் செயல் இயல்பான செயல்; நெருப்பு மேல் தோக்கி எரிவது. போன்ற இயற்கைப் பண்பு. மறுப்பு _இம்மதத்தினர் கூறும் அத்ருஷ்டம் பரமா ணுக்களைச் சார்ந்ததா? ஜீவனைச் சார்ந்ததா? பரமாணுக்களுக்குப் புண்ய பாவங்கள் இல, ஆதலால் ஜீவனைச் சார்ந்ததாக வேண்டும். ஜீவன் எப்போதும் ப்ரக்ருதிக்கு. அருகில் இருப்பதால், ஜீவன் நித்யமாதலால் படைப்பு எப்போதும் நிகழ்ந்து கொண்டே யிருக்க வேண்டும். ஆதலால் ஸா்வேச்வரனே உபாதான காரணம் என்பது. தெளிவு அன்றியும் காற்று, தீ , நீர், நிலம் இவற்றுக்கான குணங்கள் இவற்றுக்குக் காரணமான பரமாணுக்களில் உள்ளன என்பது இம் மதத்தினரது கொள்கை. காரணப் பொருளில் இருந்தால் தான் காரியப் பொகுளில் குணங்கள் இருக்கும் என்கிறார்கள் இவா்சுள். இந்த முறையில் ஆய்ந்தால், குடம் முதலியவற்றின் பண்புகள் நிலை யின்மை, அவயவத்தோடு இருத்தல், பருமன் போல்வன பரமாணுக்களுக்கும் உள்ளன என்று இவர்கள் ஒப்புக் கொள்ளவேண்டும். இது பரமாணுக்களைப் பற்றிய. பண்புகளோடு மூரண்படும். -ஆதலால் இம் மதம் ஆதரிப்பதற்கில்லை. 2. 3. வெளி உலகின் நிலை. , பரமாணுக்களே உலகுக்கு உபாதான காரணம். என்ற மதக் கொள்கை முற்றிலும் மறுக்கப்பட்டது. அணு காரண வாதத்தில் பெளத்தர்களுக்கும் ஒரளவு பங்குண்டு. இவர்களுள் வைபாஷிகன், ஸெளத்சாந்தி கன் இவர்களது மதம் வருமாறு; காற்று, தீ , நீர், நிலம் இவற்றிற்குக் காரணம் அத்த அந்த பூதத்தின் பரமாணுக்கள். இந்த நான்கு பூதங்கள் இணைவதால் உடல்,. ஸ்பர்சாதிகள் சத இந்த்ரியங்கள், வெளிப் பொருள்கள் உண்டாகின்றன. சரீரத்திற்கு உள்ளே இருப்பது ஆத்மா; இது **நான்:* என்ற அறிவுக்கு விஷயமாகும். வெளிப் பொருள்கள் யாவும் க்ஷணம் மாத்ரமாகவே உள்ளன. இவை நிலையுள்ளன என்ற அறிவால் உலக நடவடிக்கைகள் 'நிகழ்கின் றன. 'ஆதலால் உல்க உற்பத்திக்கும் தடவடிக்கைகளுக்கும் வேறு எதுவும் காரணமாக ஒப்புக்கொள்ள வேண்டியாது இல்லை. ஒவ்வொரு ஷணந்தோறும் தோன்றும் ஞானத்தின் தொடர்பு தான் ஆத்மா. தேர்வு 1 : பூதங்கள் இணைந்து உலகமும் உலகப் பொருள்களும் ' உண்டாக வேண்டும்; இவை க்ஷணிகம் எனில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை; ஆதலால் உற்பத்தி இல்லை. இம் மதத்தின்படி பிறவி எப்படி நிகழ்கிறது? க்ஷணிகமான யொருள்கள் நிலையாவன என்று நினைப்பது அறிவின்மை. அறிவின்மையால் பிறவி; பின்பு சரீரத்திற்கு வேண்டிய வீர்யம், ஸ்ம்ருதி, ப்ரீதி போல்வன பெற்று, பூமி முதலான தாதுக்கள் பெற்று, இந்த்ரியங்கள், ப்ராணன்கள் உருவாகி யாவும் சேர்ந்த சமுதாயம் உடம்பாகிறது. மறுபடியும் அவித்யையாலே இவை உருவாகிப் பிறவிகள் சுழன்று சுழன்று வருகின்றன. தேர்வு 2: அறிவு க்ஷணிகம் என்பதாலே விபரீதமான அறிவு எவ்வாறு நிகழும்? அறிவின்மை வாய்ந்தவனின் நிலைதான் என்ன? ஆக இந்தக் கருத்து ஆதரிப்பதற் கன்று. தேர்வு 3: காலத்தையும் பற்றி ஆராய்ந்தால், இது ஷணிகம் என்பதால் ஒரு ஷணத்தில் காணும் பொருள் அடுத்த க்ஷணத்தில் இருக்க முடியாது. ஒரு குடத்தைக் காணும்போது அது ஓவ்வொரு ஷணமூம் புதிதாகவே இருக்கவேண்டும். நாம் குடம் இல்லை என்று சொல்லும் போது குடம் என்ற வடிவம் இல்லை, அல்லது உடைந்து போயிற்று என்ற கருத்தே நிலவுகின்றது. இது, ஷணிகம் என்பதற்கு வேறுபட்டது. ஆதலால் ஷூணிகம் என்ற கருத்து உலக தடவடிக்கைக்கு முரணானது. தேர்வு 4: காரியப் பொருளான குடம் மண் மய மானது; பொன் நகை பொன் மயமானது, காரணமான மண், பொன் இவை சூன்யமாகக் கொண்டால், குடம், நகை இவை உருவம் பெறுவது எவ்வாறு? ... தேர்வு 5: இம் மதக் கொள்கைக்கு மாறாக நாம் பூமியை நேரில் காண்கிறோம்; ஆகாசம் காண்பதற் இல்லை எனினும், பருந்து பறக்கிறது'” என்பது போன்ற அறிவால் இது உண்டு என்று அறிகிறோம் நேரில் காண்பன சூன்யம் என்ற கருத்து அபத்தமானது ... தேர்வு6: ஒரு பொருள் க்ஷ்ணிகம் எனில் இதைப் பற்றிய அறிவும் ஷணிகமாக வேண்டும். இம்மதத்தினர் கூறும் சமாதானம்: அறிவுக்குக் காரணமாவது, அறிவை உண்டாக்கும் பொருள். ஆதலால் அப் பொருளைக் காணும்போது அறிவை உண்டாக்கி அது அழிந்து போகின்றது என்பது. அன்றியும் பொருள்களின் பண்பு நீலம், மஞ்சள், கறுப்பு போன்றவற்றை மனத்தில் தேக்கிக் கொண்டு பின்பு அனுமானத்தால் அறியக்கூடும் என்கின்றனர் இவர்கள். இது உலகில் நிகழ்வனவற்றுக்கு மாறுபாடானது. ஒரு பொருள் அழிந்த பிறகு அதன் அழிந்த வடிவையோ பண்பையோ வேறே ஓன்றில் காண்பது என்பது நிகழாதது. தேர்வு 7: வருங் காலத்திற்கான சில நன்மைகளைக் கருதி நாம் பல செய்கிறோம். காலம் க்ஷணிகம் என்று கருதினால் முயற்சிகள் பயனற்றவையாகும். ஆதலால் பலவகையாலும் இம் மதத்தின் கொள்கைகள் அனுபவத்திற்குப் புறம்பாக வுள்ளன. 2.4. அறிவின் நிலை. யோகாசாரர்களது மதம்: அறிவு ஒன்றே அடிப் படை; இது ஷணிகம். வெளிப் பொருள்கள் க்ஷணிகங் கூட இல்லை; இவை பற்றி அறிய வேண்டியதில்லை. அறியப்படும் பொருளின் வடிவத்தை அறிவினுடைய. தாகவே கருதினால் போதும்; வெளிப் பொருள்களை ஸ்மரிக்க வேண்டியதில்லை. அறிவினுள் இருக்கும் வடிவம், வெளியிலிருப்பது போல் தோன்றுவது மயக்கத்தினால். அறிவும் அறியப்படும் பொருளும் எப்போதும் சேர்ந்தே. அறியப்படுகின்றன; ஆதலால் அறியப்படும் பொருள் அறிவைக் காட்டிலும் வேறன்று. வெளிப் பொருள்கள் உள்ளன என்று கொண்டால், அந்த அந்தப் பொருளின் வடிவம் அறிவில் உள்ளதாகக் கொள்ளவேண்டும்; இல்லாவிடில் கடத்தைப் பற்றிய அறிவு, படத்தைப் பற்றிய அறிவு என்று பல வகையான தனித் தனியான அறிவுகளை நிருபிக்க இயலாது. வெளிப் பொருள்களை அறிவிக்கும் அறிவை மாத்திரஙம் கொண்டு இவை உள்ளன என்பதற்கில்லை. காணும்போது நேரும் அறிவு மாத்திரம் கொண்டால், முத்துச்சிப்பி வெள்ளியே என்றும், பழுதை பாம்புதான் என்றும் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும். ஆதலால் விழிப்பு நிலையில் காணப்படும் அறிவுகள், உள்ள பொருள்களைப் பற்றி யல்ல; கனவில் காணும் பொகுள்களைப் போல் இவை இல்பொருள்களே என்று கொள்வது தான் பொருத்த முடையது. மறுப்பு: குடம் ஒன்றைப் பார்க்கும்போது, பார்ப்பது நாம், பார்க்கப்படுவது குடம்; இது அறிவினாவே. அறிவு ஒன்றே உள்ளது என்று ஒப்புக்கொண்டால் நாமும் இல்லை, குடமும் இல்லை என்பதுதானே தேறும்? ஆதலால் இக் கொள்கை ஏளனத்திற்காகும். தேர்வு 1: இரண்டு பொருள்கள் சேர்ந்து அனுப விக்கப்படுகின்றன என்றால், இவை வெவ்வேறானவை என்பதுதானே தேறும். இவ்விரண்டில் ஒன்று தான் உள்ளது என்பது எப்படிப் பொகுந்தும்? தேர்வு 2. நாம் பார்க்கும் குடம் அறிவினாலே மாத்திரம் இருக்கிறது என்பது சிறிதும் பொருந்தாது .. ஆக்கப்' பொருளான மண் வேண்டும்; ஆக்கும் திறமை உபகரணங்கள் வேண்டும். குடம், படம் போல்வனவற்றை அறிவிப்பதாக அறிவு உள்ளது; அறிவு தவிர்ந்த இவை இல என்பது எவ்வாறு சொல்லக் கூடும் தேர்வு 3: விழிப்பிற் காணும் பொருள்களுக்கும் கனவிற் காணும் பொருள்களுக்கும் வித்தியாசமுண்டு. விழிப்பில் காண்பன பொய்யாக மாட்டா; கனவிற் காண்பன விழித்தவுடன் மறைந்து விடுகன்றன. ஆத லால் விழிப்பிற் காண்பவை இல்பொருள்களாக அனுமானித்தால், உள்ளனவற்றை 'இல்லனவாகச் சொல்லும் தோஷம் தவிர்க்க முடியாது. தேர்வு 4: அறிவு எங்கும் நிலவுவது. அறி பவன், அறியப்படும் பொருள்கள் இவை இல்லாத அறிவு எங்குமில்லை, ஆதலால் எங்கும் காணப்படும் பொருள்களைப் பற்றி விளங்காத அறிவு ஏற்பதற்கில்லை. இவ்வாறு பல வகைகளிலும் ஆராய்ந்தால் தேறுவது: இந்த மதம் உலக நடவடிக்கைகளுக்கு முற்றிலும் மாறானது என்பது. 2. 5. யாவும் சூன்யம் மாத்யமிகனது மதம் ப்ரமாண்ம் (அறிவதற்குச் சான்று), ப்ரமாதா (அறிபவன்), ப்ரமேயம் (அறியப் படுவது) என்பது மதி மயக்கத்தாலே. யாவும் சூன்யம்; இந்தச் சூன்யத்தைச் சூன்யமென்று அறிவதே மோக்ஷம். அறிவும், அறிவால் காணும் வெளிப் பொருள்களும் இல்பொருள்களே; யாவும் சூன்யம் என்பதே உண்மையான நிலை. காண்பனவாகத் தோன்றுவன யாவும் பொய். இத்தகைய தோற்றம் அழிவதே மோக்ஷம். மாத்யமிகன் சூன்யவா தி, இவனது விளக்கம் - ஒரு பொருள்' உண்டெனில் இதற்குச் சான்று தேவை;- இல்லைலை யெனில் 'இது வேண்டியதில்லை. மேலும் ஒரு பொருள் உண்டு எனில் எப்படி உண்டாகிறது? உள்ள பொருள்களில் இருந்தா , இல்லாத பொருள்களிலிருந்தா என்று தெளிய வேண்டும். உள்ள பொருள் களில் இருந்தே என்று கருதினால், 'குடமாக அமையும் போது காரணப் பொருளான மண் இல்லை; ஆதலால். இந்த மண் அழிந்து விடுகிறது. ஆதலால் தேறுவது; இல்லாத பொருள்களிலிருந்தே பண்டங்கள் அமைகின்றன என்பது. இல்லாத பொருள்களிலிருந்து பண்டங்கள். உண்டாக் மாட்டா; ஆதலால் யாவும் சூன்யம் என்பதே தேறும்.' தீர்வு : குடம் இருப்பதாகச் சொல்லும் போது குடம் 'என்ற அமைப்புடன் இருக்கிறது என்பது தான் தேறும்; இல்லை எனில் ஒட்டின் அமைப்பில் இருக்கிறது என்பதே வெளிப்படை. . ஒரு நிலையில் உள்ள் பொருள் வேறொரு நிலையில் அமைவதே இல்லை என்ற சொல்லுக்குப் பொருளாகக் காண்கிறோம். மண் கட்டியின் நிலையின் அழிவே” ' குடத்தின் உற்பத்தி ' எனக் கொள்ள வேண்டும். கட்டி நிலையில் உள்ள மண் என்ற் திரவியம் காரணப் பொருளாகவும், குட நிலையில் இருக்கும் அந்த மண்ணே காரியமா்கவும்'' கொள்கிறோம். ஆதலால் சூன்யமான் ஒரு பொருளிலிருந்து' ஓரு பொருள் உண்டாவதில்லை. ் யாவும் சூன்யம் என்பதை ஒரு சான்றின் மூலமே நிலை நிறுத்த வேண்டும்; அந்தச்' சான்று. 'உண்மையே என்று ஒப்புக் கொள்ள வேண்டும்." “இவ்வாறு ஒப்புக் கொண்டால் இந்தச் சான்று" 'உண்மையாகின்ற்து:" ஆதலால் “சூன்யம்” என்ற கருத்து 'இல்லை.' ' இத்தால் பொய் என்றால் எல்லாம் சூன்யம் என்றும் சான்றும்' பொய்யாகும் ஆகவே இவை உண்மை: என்பதே தேறும், பல வகையில் ஆராய்ந்தால் 'யாவையும் 'சூன்யம் என்ற கொள்கை பொருந்தாது என்பது வெளிப்படை 2. 6, ஜைநர். மதம். இவர்கள் . ஒப்புக் கொள்ளும் தத்வங்கள் ஜீவன்; தர்மம், அதர்மம், காலம், ஆகாசம் என்பன, காலம் அணுவான ஒரு திரவ்யம்; ஆகாசம் அளவற்ற: வெளியிடம். 'இவை யாவும் ஸப்த பங்கி நியாயத்திற்கு உட்பட்டவை. பொருள்கள் யாவும் இவ்வாறே. இந்த தியாயமாவது: பொருள்களின் நிலை, (1) உள்ளது... (2) இல்லது, (3) உள்ளதும் இல்லதும், (4) உள்ளது, இல்லது என்றே சொல்லமுடியாது, (5) இல்லது, உள் னது என்றே சொல்ல முடியாது, (6) இல்லது, உள்ள தென்றோ இல்லதென்றோ சொல்ல முடியாமல் இருக்க லாம், (7). உள்ளதும்.இல்லதும், உள்ளதென்றோ இல்லது . என்றோ சொல்ல முடியாமல் இருக்கலாம். . , மறுப்பு; இது தர்க்க முறைக்கே ஒவ்வாதது; பொருள்கள் உள்ளனவாகவும் இல்லனவாகவும், நித்ய மாகவும் அநித்யமாகவும், பின்னமாகவும் முழூவனவாகவும் ஒருபடிப்பட்டு இருக்கமாட்டாத முரணான தன்மைகள். ஒரே காலத்தில் ஓரே பொருளில் அமைவதற்கில்லை, சர்க்கரையின் தித்திப்பும் உப்பின் உவர்ப்பும் ஒன்றி எவ்வாறு அமையும்? இம் மதத்தினர் ஆத்மாவைப் பற்றி விசித்திரமான கஞத்து கொண்டுள்ளனர். ஒரு சரீரத்துலுள்ள ஆத்மாவின் பரிமாணம் அந்த சரீரத்தின் அளவைப் பற்றியது, இந்தக் கருத்தின்படி யானையின் ஆத்மா மறு பிறவியில் பூனையின்.சரீரத்தில் புக இயலாது; பூனையின் ஆத்மா பானையாகப் பிறந்தால், பானையின் உடலில் சிறிதளவு தான் ஏற்கும், முழுதும் வியாபித்து அனுபவிப்பதற்கு இல்லை, இவ்வாறு ஆத்மா குறுகுவதும் விரிவதும் நேர்ந்தால், இது மாறுபாடுடையது என்ற தோஷம் நிகழும் இதனால் நிலையில்லை என்ற தோஷமும் காணலாம். ஆத்மாவுக்கு முக்தி நிலையில் உள்ள பரிமாணமே நிலையானது, இயல்பானது, முக்தி திலையில் வேறு சரீரம் இல்லை, ஆதலால் ஆத்மாவுக்கு இயல்பான பரி மாணத்தையே ஒத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஆராய்ந்தால் ஜைந மதக் கோட்பாடுகள் ஏற்கத் தக்கனவல்ல என்பது தேறும். 2.7. பாசுபத மதம். பாசுபதர் சைவ ஆகமத்தை ஆதரிப்பவர், இவர்களது மதக் கொள்கை ஈசனை அனுமானத்தின் மூலம் அறியவேண்டும், உபநிஷத்துக்களால் இல்லை. . இவன் உலகுக்கு நிமித்த காரணம்; ப்ரக்ருதிதான் உபாதான காரணம், குலாலன் மண்ணைக் கொண்டு குடம் செய்வது போல் இவன் உலகைப் படைக்கிறான். இவன் சரீரம் இல்லாதவன். மறுப்பு: இம் மதம் வேதத்திற்குப் புறம்பானது; வேதங்கள் நாராயணனே மூவகைக் காரணமுமாவான், இவனை மனனஞ் செய்வதே மோக்ஷத்திற்குக் காரணம் என்கின்றன. சிவன் நிமித்த காரணன் என்றால் சரீரம் கொண்டல்லவோ படைக்க வேண்டும்? இவன் படைப்பவன் என்று அனுமானத்தால் ஓத்துக் கொள்ள வேண்டும். சரீரமில்லாத ஜீவன் இந்த்ரியங்களை இயக்குவது போல் சிவனும் இயக்குகிறான் எனக் கொண்டால், ஜீவனுக்கு இந்த நிலை புண்ய பாவ கர்மாவினால் ஏற்பட்டுள்ளது போல் இவனுக்கும் ஏற்படும் என்பது தேறும். இது சரியன்று ஆதலால் சாஸ்த்ரங்களாலே பகவானை ஏற்றுக் கொள்வது தான் குறையேது மில்லாதது, 2. 8. பாஞ்சராத்ர ஆகமம். பாஞ்சராத்ர சாஸ்த்ரத்தின் சிறப்பை விவரிப்பது இப்பகுதி, இது பகவான் நாராயணன் அருளியது; (வேதங்களின் சாரமாக பக்தர்களுக்கு இரங்கி வெளி விடப்பட்டது. மஹாபாரதத்தில் மோஷ தர்மம் ஞான காண்டத்தில் வெளியிட்டுள்ளது; தயிரிலிகுந்து வெண்ணெய் எடுப்பது போல் மஹா பாரதமான கடலை மத்தால் கடைந்து இந்த சாஸ்த்ரம் எடுக்கப் பட்டது; மாந்தருள் அந்தணர் போலும், வேதங்களில் ஆரண்யகம் போலும், ஓஷதகளில் அமுதம் போலும் சாரமாக விளங்குவது இந்த ஆகமம். இதைப் பதரிகாச்ர மத்தில் நாராயணன் நாரதருக்கு வெளியிட்டான். இதில் இரண்டு குறைகள் கூறுவார் சிலர், கருத்துக்களை ஏற்றவாறு ஆராமையாலே. இந்த சாஸ்த்ரத்தில் வாஸுதேவனிடமிருந்து ஸ்ங்கர்ஷணன் என்னும் ஜீவனும், ஸங்கர்ஷணனிடமிருந்து ப்ரத்யும்நன் என்ற மனமும், ப்ரத்யும்நனிடமிருந்து அநிருத்தன் என்ற அஹங்காரமும் உண்டாவதாகக் கூறியிருக்கிறது. ஜீவனுக்கு உற்பத்தி கூறுவது வேத வாக்கியங்களுக்கு முரண்பாடாகும். இது பற்றிய தீர்வு: பகவான் தன். அடியார்களை அநுக்ரஹிப்பதற்காக இந்த வடிவங்களைத் தனது விருப்பத்தால் ஏற்றுக் கொள்கிறான்; இவ்வாறு ஏற்றுக் கொள்வது அவதாரம் போன்றது, மனம் பரமாத்மாவிட மிருந்து உண்டாவதாக சாஸ்த்ரங்கள் சொல்லுகின்றன; ஸங்கர்ஷணன் இடமிருந்து மனம் என்பது உண்டாகின்றது என்பது முரண்பாடு என்பது இரண்டாவது குறை. பகவானே ஸங்கர்ஷணனாவதால் இக் கருத்து ஏற்றுக் கொள்ளத் தக்கதே, பல இடங்களில் ஸங்கர் ஷணன் முதலானோர் அவதாரமாகவே விவரிக்கப் பெற்றுள்ளது. ஸாங்க்ய மதத் தத்துவங்கள் இருபத்தைந்து, யோகத்தில் சொல்லப்பட்ட அஷ்டாங்க யோக க்ரமம், வேதத்தின் பூர்வ பாகத்தில் விவரிக்கப்பட்ட கர்மங்கள் இவற்றைப் பாஞ்சராத்ரம் ஒத்துக் கொள்கின்றது அஷ்டாங்க யோகம் ப்ரஹ்மத்தின் உபாஸந மூலமாக என்றும், கர்மங்கள் ப்ரஹ்மத்துக்கு ஆராதன ரூபம் என்றும் ஆரண்யகங்கள் கூறுகின்றன. இவை யாவும் பகவானான நாராயணனாலே என்று, பாஞ்சராத்ரம் தெளிவு படுத்துதின்றது. இது வேதத்தை முற்றிலும் ஓட்டியிருப்பதால் மிகச் சிறந்த ப்ரமாணமாகும். சுருக்கம் பிற மதத்தினரது கொள்கைகள். ஸுங்க்யர் பகவானது அதிஷ்டானம் இல்லாமலே அசேதனமான ப்ரதானம் உலகமாக மாறுகிறது. நையாயிகர், வைசேஷிகர் அதிஷ்டிக்கும் ஈச்வரன் இருந்த போதிலும் பரமாணுக்களே காரணமாக உலகம் தோன்றுகின்றது. வைபாஷிகள், ஸெளத்ராந்திகள் : வெளிப் பொருள்களே இல்லை, ஞானம் ஒன்றே உள்ளது: யோகாசாரன்: வெளிப் பொருள்கள் க்ஷணிகம் என்பது கூடப் பொருந்தாது, ஞானமும் க்ஷணிகம். மாத்யமிகன் : ஷணிகமாகக் கூட எப்பொருளும் இல்லை; யாவும் சூன்யம். ஜைனர் : காரிய காரண ரூபத்தால் உலகம் நித்யமாகவும் அநித்யமாயும்,பின்னமாயும் அபின்னமாயும், ஸத்யமாயும் அஸத்யமாயும் இருக்கும். ஆத்மா தனது கர்மாநுகுணமாக ஏற்கும் சரீரத்தனவு உள்ளது. பாசுபதன்। உலகுக்கு உபாதான காரணம் பரமாணுக்கள்; ஆகமத்தால் அறியப்படும் ஈச்வரன் நிமித்த காரணம். ஸம்ஸரரம் ஆகமத்தில் கூறியவாறு கர்மானுஷ்டங்களாலே பசுபதி ஸாரூப்பம், மோக்ஷம். பாஞ்சராத்ரம் வேதத்தை ஒட்டியிருப்பதால் , வேதத்தைப் போல் முற்றிலும் ப்ரமாணமாகும். மற்ற சமய மதங்களிலுள்ள குறைகள் யாதும் இதுக்கு இல்லை . ------------------ 3. மூன்றாம் பாதம் புறச் சமயங்களான ஸாங்கீய மதம், யோக மதம் போல்வன யுக்திக்குப் புறம்பானவை, இவற்றிற்குண்டான் தோஷங்கள் வேதாந்த மதத்தில் இல்லை என்று காட்டுவன மூன்றாம் பாதமும் நாலாம் பாதமும்.. உலகுக் கெல்லாம் காரணமான ப்ரஹ்மத் தின் காரியப் பொருள்களாவன சேதன அசேதனங்கள், இவ்வாறு காரியமாகும் வகை விசாரிக்கப் படுகிறது, ஆகாசம், ஆத்மா, இந்த்ரியங்கள் இவற்றிற்கு இயல்பான விகாரங்களை விளக்க வ்யாஸர் இவை ப்ரஹ்மத்தாலே இயங்குகின்றன என்கிறார் இந்தப் பாதத்தில். இது வியுத் பாதம். 3. 1. ஆகாசம் : ஆகாசம் அவயவ மில்லாதது; அவாயவமில்லாத ஆத்மாவைப் போல் இதுவும் ஒரு காரியப் பொருளாகாது. சாந்தோக்யத்தில், '*'ததைகஷ்தபஹாுஸ் யாம் ப்ரஜாயேய”' (6-8-3) என்ற இடத்தில் படைப்பைச் சொல்லும் போது ஆகாயத்திலிருந்து உற்பத்தி கூறாமல் தேஜஸ் முதலாக உற்பத்தி கூறியிருக்கிறது. அன்றியும் ப்ருஹதாரண்யத்தில், '*வாயுச் ச அந்தரிக்ஷம்: ச ஏததம்ருதம்''--வாயு, ஆகாசம் இரண்டும் விநாசமற்றவை என்று வந்துள்ளது; ஆகாசம் அழிவில்லை எனில் உற்பத்தியும் இல்லை என்பது ஊகிக்கக் கூடும். இது ஒரு கருத்து. விளக்கம் : தைத்ரயத்தில், '*ஆத்மந ஆகாச: ஸம்: பூத (ஆந), ஆகாசம் பரமாத்மாவிடமிருந்து உண்டா” யிற்று என்பது வந்துள்ளது. ஆகாசம் அவயமற்றது என்பதைக் கொண்டு உற்பத்தி இல்லை என்று தீர்மானிப் பதற்கில்லை; ச்ருதி வாக்யமே ஆதாரம். ஆதலால் ஆகாசத்திற்கு உற்பத்தி உண்டு. காரணமான மண் கட்டியைப் பற்றிஅறித்தால் காரியப் பொருள்களைப் பற்றி அறியக்கூடும் என்ற இடத்தில். ப்ரஹ்மத்தை அறிந்தால் அவனது காரியப் பொருளான ஆகாசம் முதலானவற்றை அறிந்து கொள்ளலாம் என்றறிகிறோம். ஆகாசம் காரியப் பொருளுக்கு உறுப்பாக காட்டிலும் முன்பே பகவான் இருக்க வேண்டும், : *அந்தரிஷம் ச அம்ருதம்'” ஆகாசம் (அழிவில்லாதது)என்பதன் கருத்து, நீண்ட காலம் இருப்பது என்பதே. அமரர்கள் என்றால் நெடுங் காலம் வாழ்வு என்பது போலே உற்பத்தி யின்மை பரம்பொருளுக்கே; மற்றவைகளுக்கு ஒருபடியாலும் இது ஒவ்வாது. 3. 2. அக்நி, ஜலம், பூமி. “வாயோ ரக்நி:'”, :*அக்நே ராப:'', '*அத்ப்ய: பருத்வீ'”“--வாயுவிலிருந்து அக்நியும், அக்தியிலிருந்து ஜலமும், ஜலத்திலிருந்து ப்ருத்வீ (பூமி)யும் உண்டாயின என்பன உபதிஷத் வாக்கியங்கள். அன்றியும் பரம்பொருளிலிருந்து ப்ராணன், மனம், இந்த்ரியங்கள், ஆகாசம் வாயு, தீ , நீர் யாவும் உண்டாகின்றன என்றும் வந்துள்ளது. ஆகையால் அக்நி, ஜலம், பூமி இவற்றின் படைப்பு: பரமாத்மாவிடமிருந்து நேராக அல்லாமல் முப்பாட்டன், பாட்டன், அப்பன் என்பது போல் பரம்பரையா வேண்டும் என்பது ஒரு கருத்து. சாந்தோக்யத்தில் (6,2-2,4) "நான் பலவாகக் ௧டவேன்” என்று தேஜஸ்ஸும், நாங்கள் பலவாக ஆகக் கடவோம்'” என்று அப்புகளும் (நீர்) சங்கல்பித்ததாகவும் காண்கிறோம். அசேதனப் பொருள்கள் சங்கல்பிக்க இயலாது. ஆதலால் இவற்றைச் சரீரமாகக் கொள்ளும் பகவானே சங்கல்பித்ததாகக் கருதவேண்டும். **யஸ்ய ப்ரூத்வீ சரீரம்'' என்று தொடங்கிக் காரியப் பொருள்கள் யாவும் பரமாத்மாவுக்குச் சரீரம் என்பதால் இக். கருத்து ஏற்கத்தக்கது. '*ததநுப்ரவிச்ய ஸச்ச தயச்சா பவத்” அதை வியாபித்து ப்ரஹ்மம் சேதனங்களாகவும். அசேதனங்களாகவும்' ஆயிற்று, இது தைத்திரியம் பொருள்கள் இவற்தைச் சொல்லும்'பதங்கள் தேஜஸ், வாயு , அக்நி, போலக் ப்ரகாரியான பகவாளையே குறிப்பன. ஆதலால் ஆகாசம், அக்நி , வாயு, ஜலம், பூமி, யாவும் பகவானாலேயே படைக்கப் பெறுவன. 3, 3. ஜீவ உற்பத்தி உண்டா? ஆகாசம், தேஜஸ் போன்ற ௮சேதனப் பொருள்கள் தங்களது பரிமாணம் மாறும் இயல்புடையன; இவை பகவானாலே படைக்கப்பெறுவன என்பது விளக்கப் பட்டது. இவை தனது போகத்திற்காக ஏற்ற ஜீவாத்மாவும் பகவானுக்குக் காரியப் பொருளா? இதற்கு உத்பத்தி உண்டா? என்பது இப்போது ஆராயப்படுகிறது. “ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத்'" என்ற ச்ருதியில், ப்ரஹ்மம் ஒன்றே முதலில் இருத்தது என்றும், “ தாயேத ஜீவாந் வ்யஸஸர்ஐ பூம்யாம்''--பஞ்ச பூதங்களோடு ஜீவனைப் படைத்தான் என்றும், *“யதோவா இமாநி தாதி ஜாயந்தே''-எவனிடமிருந்து இந்த பூதங்கள் உண்டாகின்றனவோ என்றும் ஜீவனுக்கு. உற்பத்தி கூறப்படுகிறது. ஆதலால் அசேதனங்களைப் போல் ஜீவர்களும் படைக்கப்பட்டவர்களே என்பது ஊூகிக்கலாம்.. இது இந்த சங்கைக்கு ஆதாரம். விளக்கம் : ஜீவர்களைப் பற்றிய ச்ருதி வாக்கியங்கள் ; (ந ஜாயதே ம்ரிய்தே வா விபச்சித்”- அறிவுடைய ஜீவன் பிறப்பதில்லை, இறப்பதில்லை. *அனைத்தும் அறித்த பகவானும் அறிவிலியான ஜீவனும் பிறப்பில்லாதவர்கள்!”, “*நித்யர்களான பல ஜீவர்களுக்கு பகவான் விருப்பங்களை அளிக்கிறான்... . இந்த ஜீவன் சரீரம் அழியும் போது அழிவதில்லை,”” இவை ஜீவனுக்குப் பிறப்பே இல்லை என்பதைத் தெள்ளத் தெளிவாகக்' கூறுகின்றன. _.. ஓரு சங்கை: உற்பத்தியே இல்லாத ஜீவன் பகவானால் எவ்வாறு காரியப் பொருள் ஆவான் விளக்கம் : காரியமாகுந் தன்மை என்பது-ஒரு பொருள் வேறொரு நிலையில் இருப்பது. அசேதனங்கள் காரியமாகும் போது அவற்றின் இயல்பான தன்மை மாறுகிறது. ஜீவனுக்கு 'இயல்பான தன்மைகள் ஞானம், ஆனந்தம் போல்வன மாறுவதில்லை; இவை சுருங்குவதும் விரிவதுமான தன்மையே 'ஏற்படுகிறது. _ ஒரு சங்கை : படைப்பிற்குமுன் பகவான் ஒருவனே இருந்ததாகப் பல இடங்களில் ச்ருதிகள் கூறுகின்றனவே... ஜீவனது நிலை என்ன? சேதன அசேதனங்கள் யாவும். பகவானுக்குச் சரீரம். ப்ரளய காலத்தில் இவை மிகவும் நுண்ணிய நிலையில் உள்ளன? படைப்பிற்குப் பிறகு நாம ரூப முடையனவாக விளங்குகின்றன. ஜீவனுக்கு உற்பத்தியைக் கூறும் ச்ருதிகள், இவனுக்குச் சரீரத்தோடு உண்டாகும் நிலையைப் பிறப்பென்றும், சரீரத்தை விட்டு நீங்குவது இறப்பென்றும் கருத்துக்களாக வெளியிடுகின்றன. ஆதலால் அசேதனப் பொருள்கள் போலே ஜீவனுக்கு உற்பத்தியில்லை; ஜீவன் நித்தியமானவன். 3. 4. ஜீவன்--ஞானம். ஜீவனது ஞானத்தைப் பற்றிச் சிலர் கருதுவன: (1) “விஜ்ஞானம் யஜ்ஞம் தநுதே''-ஞான ஸ்வபாவனான ஜீவன் யாகம் செய்கிறான்; “யோ விஜ்ஞாநே இஷ்ட்டந்"- எவன் ஞான ஸ்வரூபத்தில் நிற்கிறானோ என்று ஞானம் ஆத்மாவுக்கு ஸ்வரூபமாகக் கூறப்படுகிறது; ஆனால் குணமாகக் கூறப் பெறவில்லை. .... (2) தூக்கம், மயக்கம் ஆகிய நிலையில் அறிவு காணப் படுவதில்லை; விழித்திருக்கும்போது அறிவு இத்த்ரியங்களுக்கு வசப்பட்டுள்ளது. ஆதலால் ஜீவ னுக்கு இயற்கையாக அறிவில்லை. (3) உலகில் ஜீவனுக்குக் காரியம் எங்கும் உண்டு. ஆதலால் இவன் எல்லா இடங்களிலும் எல்லாக் காலத்திலும் தோன்ற வேண்டும்: இந்த்ரியங்களையும் பயன் படுத்த வேண்டும். இதனால் குறைகள் நேராதவாறு அவன் கல்லைப் போல் ஜடப்பொருள் என்றும், அறிவு தோன்றி மறையும் இயல்புடையது என்றும் கருத வேண்டும். மறுப்பு : ப்ரச்ந உபநிஷத்தில் (6-5) ஞானஸ்வ ரூபனான ஜீவன் காண்பவன், கேட்பவன், முகர்பவன், சுவைப்பவன், நினைப்பவன், அறிபவன், செய்பவன் என்று விளக்கமாகக் காட்டப்பெற்றுள்ளது. ஆதலால் ஜீவன் ஞானத்தை குணமாக உடையவன் என்பது தேறுகின்றது. ஜீவன் ஜட ஸ்வரூபன் என்பது தவறு. பத்த நிலையிலும் முக்தி நிலையிலும் இவன் அறிய வல்லவன். இவ்வாறு அறிவுடைமையால் இவன் எங்கும் வியாபித்து யாவும் அறிந்துகொள்கிறான். சங்கை 1: ஜீவன் அணு மயம், இவன் சரீரத்தில் ஒரிடத்தில் இருந்து கொண்டு சரீரத்தின் அனுபவங்கள் யாவையும் எப்படிப் பெறமுடியும்? தீர்வு: உடம்பில் ஓரிடத்தில் பூசிக் கொள்ளும் சந்தனம் எங்கும் மணத்தைப் பரப்புகின்றது. இதே போல் ஜீவன் நிலை. இது இதயத்தில் இருந்துகொண்டு சூரியனின் கிரணங்கள் போல் எங்கும் வியாபிக்கும் இயல்புடையது. சங்கை 2: ச்ருதிகளில் ஜ்ஞானம் .ஜீவனுக்கு ஸ்வரூப மாகச் சொல்லப்படுகிறது. இது குணம் என்பது எவ்வாறு? தீர்வு. பூமி மணமுள்ளது; இந்த இயல்பைக் குணமாகக் கருதுகிறோம்; இந்தப் பண்பை பூமியிலிருந்து பிரித்து அறிவதற்காக மணம் என்றே கூறுகிறோம், ஆனந்த மயனான பகவானை ஆநந்த்தன் என்றே சொல்லுகிறோம். ஆதலால் ஜீவனுக்கு அறிவு குணமாகக் கருதப்படும், இதனாலேயே ஜீவனை ஜ்ஞாதா என்கிறோம் . தூக்க நிலையை ஆராய்வோம். இந் நிலையில் ஞானம் வெளியில் தோன்றுவதில்லை; விழித்த பின் 'தோன்றுகிறது. புருஷனுக்கு இயற்கையாக வாய்த்த ஆண்மை முதலியன தக்க பருவத்திலே தான் வெளிப்படுகின்றன. இது போலவே தூக்கத்திலும் விழிப்பிலும் ஞானத்தின் நிலை. எங்கும் எக்காலத்திலும் அறிவு பயன்படாமைக்குக் காரணம் அறிவின் குறைவன்று, இந்த்ரியங்களைக் கொண்டே அறிவு இயங்குகிறது. இவை பயன்படும் காலத்திலும் இடங்களிலும் ஆத்ம ஞானம் பெறும். ஆதலால் ஆத்மா இயல்பான ஞானம் வாய்ந்தது தன்னையும் பகவானையும் அறிய வல்லது, இந்த ஞானம் குணமுமாகும். 3.5. ஜீவன் கர்த்தாவா? .கடவல்லியில் (28-19) ஒரு கருத்து; ஒருவனைத் துன் புறுத்துபவன் உண்மையில் துன்புறுத்துபவன் அல்லன்- துன்பப்படுபவன் துன்பமுறுபவன் அல்லன் என்று ஜீவாத் மாவுக்கு உண்மையில் ஒரு செயலால் செயல்படுவது இல்லை என்று கூறியிருக்கிறது. கீதையில் பகவான் (4.27.]) அஹங்காரத்தால் மறைக்கப்படும் ஆத்ம ஸ்வருபமுடையவன் செய்யப்படும் செயலைக் குறித்து, “நான் செய்பவன்” என்று மயங்குகிறான் என்று கூறியிருக்க இரான், ( 19-20) சரீர இந்த்ரியங்கள் செயல் புரிவதில் ப்ரக்ருதியே காரணம், ஆதலால் செயல்படுவது ஜீவனுக்கு இல்லை, ப்ரக்ருதிக்கே என்பது ஒரு கருத்து. மறுப்பு : துன்புறுத்துபவன் துன்புறுபவன் என்ற சொற்கள் ஆத்மா நித்யம் என்ற கருத்தைக் கூறும் போது வத்துள்ளன. கீதையில் கூறப்பட்ட ச்லோகத்தில் வரும் கருத்து: ஜீவன் செயல்படும் முயற்சிகள் சரீரத்திலுள்ள முக் குணங்களின் சேர்க்கையாலே என்று. கீதையில், 1*அதிஷ்டாநம்'” என்ற ச்லோகத்தில் (18-14), சரீரம், கர்த்தாவான ஜீவன், மனத்துடன் கூடிய இத்த்ரியங்கள், ப்ராணன்கள், பரமாத்மா என்ற ஐந்தும். காரியங்களுக்குக் காரணம் என்று காண்கிறோம். சாஸ்த்ரங்கள் ஜீவனுக்கு உபாஸநம் முதலான செயல்களை விதிக்கின்றன. அரசன் தன் குடிகளுடன் காட்டில் விருப்பப்படி சஞ்சரிப்பது போல் ஜீவன் இந்த்ரியங்களைப் பற்றிக்கொண்டு சரீரத்தில் சஞ்சரிக்கிறான் என்பது ப்ரஹதாரண்யத்தில் வந்துள்ளது (4-4-28]. இனி ப்ரக்ருதி கர்த்தாவாகாது என்பது எளிதில் அறியக்கூடும். ஒரு செயலைச் செய்பவனே அதன் பலனை அனுபவிப்பான் என்பது சாஸ்த்ரம். ப்ரக்ருதி செயல்படுமானால் அது செயலின் பயனை அனுபவிக்குமா?' புத்தியும் கர்த்தாவாகாது. மர வேலைக்காரன் தன்னிடம் வேலைக்கான உபகரணங்கள் வைத்துக் கொண்டிருந்தாலும் தான் விரும்பும் போது தான் வேலை செய்கிறான். இது போல் இந்த்ரியங்கள் உபகரணங்க ளாயினும்,ஜீவன் தான் விரும்பும்போதுதான் செயல்படு கிறான். அசேதனமான புத்தி கர்த்தாவானால் அதற்கு விருப்பம், விரும்பாமை இவை வேண்டும். இவ்வாறு ஆராய்ந்து ஜீவனே செயல்களுக்குக் காரணம், இவற்றின் பயனை இவனே அனுபவிக்கிறான் என்பது தேறுகின்றது. 5. 6. செய்விப்பவன் பரமாத்மா. சாஸ்த்ரங்கள், **இதைச் செய்'*, * இதைச் செய்யாதே” என்று விதிக்கன்றன. இதனால் ஜீவனே செய்பவன் அவனது இச்சைப்படி செய்பவன் என்பது ஒரு கருத்து. சாஸ்த்ரங்களை ஆராய்ந்தால் ஜீவனுக்கு அத்தர்யாமியாகி பகவான் செயல்கள் செய்விக்கிறான் என்று அறியலாகும். இதே கருத்து கீதையில் வந்துள்ளது: தான் அந்தர் யாமியாகி அவரவர்களது குணத்திற்கேற்ப இயங்கச் செய்கிறான் என்று. ஆதலால் ஜீவன் செய்வன யாவும் பகவான் செய்விப்பதாலே. சங்கை : செயல்சுளைச் செய்விப்பவன் பகவானே எனில், யாவரும் நல்ல செயல்களே செய்யுமாறு இவன் ஏன் விரும்பக்கூடாது? தீயன செய்வித்து இவன் ஏன் துன்புறுத்த வேண்டும்? விளக்கம் : கர்மங்களின் பயன் அனுபவித்தே தீரும் என்கின்றன சாஸ்த்ரங்கள். இந்த விதிக்கு லிலக்கே இல்லை. நாம் செய்வன யாவும் முன்னைப் பிறவிகளில் சேர்ந்த கர்ம பலனுக்குக்கு ஏற்கவே, நமக்கென நன்னெறியையும் இவன் அருளியிருக்கிறான். ஆதலால் ஜீவன் கார்மாவைச் செய்யும்போது முதற் கணம் பகவான் இதில் சம்பந்தப்படுவதில்லை. இச் செயல்கள் தொடரும் போது இவன் செய்விக்கிறான். 4. 7, ஜிவன்-- பகவான் தொடர்பு. ஜீவன் செய்வன பகவானுக்கு அதீனமென்று விளக் கப்பட்டது. ஜீவன் பகவானுக்கு அம்சம் என்பது இப்போது நிர்வஹிக்கப் படுகறது' ஜீவன்--ப்ரஹ்மா இவர்களது தொடர்பு பற்றி மூன்று மதத்தினரது கருத்து: (1) த்வைதம்: :*ஜ்ஞாஜ்ஜெள தவாவஜாலீச நீசெள'' (ச்வேதா 7-9): ஈச்வரன் ஸர்வஜ்ஞன், நியமிப் பவன்; ஜீவன் அஜ்ஞன், நியமிக்கப்படுபவன். இதனால் ஜீவன் பகவானைக் காட்டிலும் வேறுபட்டவன். (2) அத்வைதம் : **ததீவமஸி', “அயமாத்மா ப்ரஹ்மா”” என்பன போன்ற ச்ருதிகளால் தேறுவது? ஜீவனும் ப்ரஹ்மமும் ஒன்றே என்பது, (3) பேத--அபேதவாதிகள். ச்ருதிகள் சில ஜீவனுக்கும் பகவானுக்கும் பேதம் சொல்லுகின்றன இவை பேத ச்ருதிகள்; ஒற்றுமை சொல்லுகின்றன; இவை அபேத ச்ருதிகள். அபேத ச்ருதிகளை ஆதாரமாகக் கொண்டு உண்மையான உபாதியினாலே ப்ரஹ்மம் ஜீவர்களாகத் தோன்றுகின்றது என்பது தேறும். உபாதி என்று கருதப்படுவது பேத ச்ருதிகளால் ஒருவாறு தேறும் என்றே கருத வேண்டும். ஆத்மாவைப் பற்றி இவர்கள் கூறுவது: இது பகவா னின் ௮ம்சமாகாது. அவயவம் இல்லாத பகவானைப் பகுதி பகுதிகளாகப் பிரிக்க முடியாது. அன்றியும் இவன் பகவானின் அம்சமானால் இவனது தோஷங்கள் பகவானைச் சேரும். விளக்கம் : “யஸ்ய ஆத்மா சரீரம்'' என்று ச்ருதிகள் சொல்லுகின்றன. சரீரம் என்பது ஆத்மாவுக்கு நிரூபகமான அடைமொழி. இதுபோல், ஜீவன் பகவானை விட்டுப் பிரியாதவனாகி, இத்தகைய அடைமொழியாகி அதன் ௮ம்சமாகிறான். ஜீவர்களுக்கும் பகவானுக்கு முள்ள வித்தியாசங்கள் யாவும் பேத ச்ருதிகளில் விவரம் பெற்றுள்ளன. ஆதலால் ஜீவன் பகவானின் அம்சம். சரீரத்தின் தோஷங்கள் ஆத்மாவைச் சாரா. இதுபோல் ஜீவனின் தோஷம் பகவானிடம் அணுகமாட்டா. ஜீவன் பகவானுக்கு சரீரம்; பகவான் சரீரி, அக்நிக்கு ஒளி போல் பகவானின் சக்தியே இவ்வுலகில் எங்கும் பரவுகின்றது என்று விஷ்ணு புராணம் போன்ற புராணங்கள் முழக்குகின்றன. ஆதலால் சேதன அசேதனங்கள் யாவும் பகவானுக்கு விசேஷணம்--அடை மொழி; ஆதலால் பகவானை விட்டுப் பிரிவதில்லை. சங்கை: ஜீவர்கள் யாவரும் பகவானின் அம்சம் எனில் அந்தணர், அல்லாதார் என்ற வேறுபாடு எதற்கு? விளக்கம் : இப் பாகுபாடு அவரவர்களது நிலையைப் பற்றியது. அந்தணன் வேதம் ஒதுவதால் ' தூயோன்; இதனால் இவனுக்கு ஏற்றம். நெருப்பு ஒன்றேயாயினும் ஓமத்திற்கான நெருப்புக்கும் இடுகாட்டில் இருக்கும். நெருப்புக்கும் வித்தியாசம் போல் இதனையும் கருத வேண்டும். முதற் பாதத்தின் தொடர்பு மூன்றாம் பாதம். முதற்: பாதத்தில் பகவான் மூவகைக் காரணமாவான் என்பது நிரூபிக்கப்பட்டது. இந்தப் பாதத்தில் சேதன அசேதனங்கள் யாவும் பகவானால் படைக்கப் பெறுவன என்பது விளக்கப்படுகின்றது. ஆகாசம், வாயு, அக்நி, ஐலம், பூமி இவை பகவானாலேயே படைக்சுப்படுகின்றன. ஆகாசத்திலிருந்து வாயுவும், வாயுவிலிருந்து அக்நியும், அக்நியிலிருந்து ஜலமும், ஜலத்திலிருந்து பூமியும், இவன் படைத்தவை. காரியப் பொருள்கள் யாவும் பகவானுக்குச் சரீரம் என்கின்றன உபநிஷத்துக்கள். இவற்றைச், சரீரமாகக் கொண்டு இவன் அந்தர்யாமியாகி இவற்றுள் உறைகன்றான் என்கின்றன சில உபநிஷத்துக்கள்., ஆதலால் காரியப் பொருள் யாவும் பரமாத்மாவிட மிருந்தே உண்டாகின்றன. ஜீவன் பரமாத்மாவின் அம்சம்; இதனால் பரமாத்மாவோடு ஒன்றிவிடுகிறான் என்பது தவறு. இவன் வேலைக்காரனைப் போல என்ற கருத்தும் ஏற்பதற் கில்லை. பகவானுக்கு அதீனமான ஞானம் ஜீவனுக்கும் உண்டு; பகவானால் இவன் தன் செயல்களைச் செய்கிறான், இவன் பகவானுக்குச் சரீரம்; நித்யமானவன், இவனிடமுள்ள தோஷங்கள் , பகவானிடம், அணுக மாட்டா- ---------------- 4. நாலாவது பாதம் மூன்றாம் பாதத்தின் சுருக்கம் : மாறுபாடே இயல்பான அசேதனங்கள்,' நித்யமான' சேதனப் பொருள்கள் யாவும் பகவானால் படைக்கப்பட்டன; பகவானா லேயே நியமிக்கப் பெறுவன, ஜீவனுடைய போகத்திற்கான உபகரணங்கள் ப்ராணனும் இந்த்ரியங்களும், இவையும் பகவானாலே படைக்கப் பெறுவன என்பது இந்தப் பாதத்தில் விளக்கம் பெறுகின்றது. முக்ய ப்ராணனைத் தவிர மற்றைய நாலும் இந்த்ரியங்கள். ஆதலால் இந்தப் பாதத்தின் தலைப்பு ப்ராண பாதம் என்பது, 4, 1. இந்த்ரியங்கள். வேத வாக்கியங்கள் வெளியிடுவது: ப்ரளய காலத்தில் பரமாத்மா ஒருவனே இருந்தான் என்று. முண்டக உப திஷத் கூறுவது (2-7-3); பரமாத்மாவிடமிருந்து ப்ராணன், மனம், இந்த்ரியங்கள் யாவும் உண்டாகின்றன. இவை நித்யம் என்று ஒரு வேத வாச்கியமும் இல்லை, அன்றியும் பகவான் உலகைப் படைத்து நாம ரூபங்கள் செய்வதாகக் கருதுகிறோம்; இவனைத் தவிர மற்றைப் பொருள்களைக் குறிக்கும் பெயர்கள் படைப்பிற்குப் பிறகே வழங்குகின்றன, ஆதலால் ப்ராணன், இத்த்ரியங்கள் இவை நித்யமல்ல, ஈச்வரானாலே படைக்கப் பெறுவன. இந்த்ரியங்கள் பதினொன்று: ஐந்து ஞானேந்த்ரியங்கள், ஐந்து கர்மேந்த்ரியங்கள், மனம் என்பன. ஞானேந்த்ரியங்கள்: மெய், வாய், கண், மூக்கு, செவி; கர்மேந்த்ரியங்கள். வாக் (பேசுவதற்கு), கை, கால், பாயு (மல மூத்ரங்கள் கழிவதற்காக), ௨பஸ்தம் (இனம் பெருக்க ) “ப்ராணா வாவ ௬ஷமய:'' என்ற வாக்கியத்தில் ப்ராணா: என்ற பன்மை இந்த்ரியங்களைக் குறிக்கும் என்கின்றனர் இவர். எல்லாம் அழிந்த பின்பு பகவானே இருப்பதால் ப்ராணா: என்ற பதம் குறிப்பது பகவானையே . '“ஸர்வாணி ஹவா இமாநி பூதாதி ப்ராணமே வாழி ஸம் விசந்தி '” (ப்ரளய காலத்தி ல்) பூதங்கள் யாவும் பிராணன் எனப் பெறும் பரமாத்மாவினுள் லயிக்கின்றன. ஆதலால் ஆகாசாதிகள் போலே இத்த்ரியங்களும் பரமாத்மாவிடமிருந்து உண்டாகின்றன என்பது திண்ணம். 4, 2. இந்த்ரியங்களின் பரிமாணம். ஜீவனது மரண தசையில் ப்ராணன்கள் எனப் பெறும் இந்த்ரியங்கள் வெளியேறுகின்றன. ஆதலால் இவை விபுவாக இருக்க முடியாது. இவை அணு பரிமாண முள்ளவை. 4, 3; முக்ய ப்ராணன். ப்ராணன் ஐவகைத் தொழில் புரிகின்றது; இத் தொழில்களுக்கேற்ப இது ப்ராணன், அபானன், வயா னன், உதானன், ஸமானன் என்ற பேர்கள் பெற்றுள்ளது. இதற்கு முகிய ப்ராணன் என்று பெயர். முண்டக உப நிஷத் வாக்கியம் ஒன்று: இந்த பரமாத்மாவிடமிருந்து ப்ராணன், மனம், இந்த்ரியங்கள், ஆகாசம் முதலான ஐந்து பூதங்கள் உண்டாகின்றன என்பது. -ஆதலால் ப்ராணன் வாயுவாகாது. ஜீவனுக்குப் பயன்படுவன கண் முதலான இந்த்ரியங்கள் உபகரணங்களாக, இவற்றுடன். ப்ராணனும் இணைந்து கூறப்படுகின்றது. முக்ய ப்ராணன் சரீரத்தையும் இந்த்ரியங்களையும் தரிக்கின்றது. ஆதலால் இதுவும் கண் முதலியன போலே ஜீவனுக்கு உபகரணமாகும். இதுவும் பகவானாலேயே படைக்கப் பெறுவது, 4, 4. இந்த்ரியங்கள்-- தேவதைகள். உபநிஷத் ஒன்று வெளியிடுவது; அக்நி: தேவதை வாக்கை அதிஷ்டித்து (தலைமை ஏற்று) முகத்தில் துழைகின்றது. வாயு தேவதை முக்ய ப்ராணனை அதிஷ்டிக்கின்றது; மூக்கில் நுழைகின்றது. இவ்வாறு இந்த்ரியங்களை தேவதைகள் : அதிஷ்டிக்கின்றன. இந்த தேவதைகள் இவ்வாறு அதிஷ்டிப்பது - பகவானுடைய “சங்கல்பத்தாலேயே .-எவ்வாறெனில், உபநிஷத்துக்கள் 'கூறுவ்து:' பகவான் அக்நிக்கு உள்ளும் புறமுமாக நிற்கிறான்; இவனுக்கு அக்நி சரீரம்; எனினும் அக்நி இவனை அறிவதில்லை; இவ்வாறே மற்றைய தேவதைகளும். அன்றியும் பகவானிடம் பயந்து வாயு வீசுகின்றான்- சூரியன் உதிக்கின்றான்; அக்நி, இந்த்ரன், யமன் ஆகி யோர் செயல் புரிகின்றனர் என்பது ஓர் உபறிஷத் வாக்கியம், பகவான் இந்த தேவதைகளுக்கு அந்தர்யாமி யாகிறான்; நியமிக்கிறான். ஆதலால் இந்த்ரியங்கள் செயல்படுவதும், தேவதைகள் இவற்றை அதிஷ்டிப்பதும், ஜீவனும் தரித்து நிற்பதும் எல்லாம் பகவானின் சங்கல்பத்தாலே. , பசுவான் உலகைப் படைத்து அதனுள் லகல சேதன அசேதனங்களாகிறான் என்று தைத்திரீயம் ஆநந்தவல்லியில் காண்கிறோம். கீதையிலும் இவன் கூறுவது: இவ்வுலகைத் தான் தாங்குவது தனது சக்தியின் ஓர் ௮ம்சத்தாலே; ஒரு திவலையாலே என்று. இதனாலும் தேறுவது: அக்நி முதலான தேவதைகள் இந்த்ரியங்களை தரித்து நிற்பது பகவானாலே என்று. தூங்கும் நிலையில் கண் முதலியன செயல்படுவன வல்ல. எல்லா நிலையிலும் முக்ய ப்ராணன் சரீரத்தையும் இந்த்ரியங்களையும் தரித்து நிற்கிறது. இவ்வாறு ப்ராணனால் தரிக்கப் படுவதால் இந்த்ரியங்கள் ப்ராணன் எனப்படுகின்றன. 4. 5. வ்யஷ்டி ஸ்ருஷ்டி. இது வரையில் பூதங்கள் ஐந்து, இந்த்ரியங்கள் ப்ராணன் போல்வன பகவானால் படைக்கப் பட்டவை என்று நிர்ணயிக்கப்பட்டது. தேவர், மனிதர் முதலான ஜீவர்கள் யாவரும் பகவானின் காரியப் பொருள்கள் என்பது விளக்கப்படுகன்றது. சாந்தோக்யத்தில் பசுவான் கூறியதாக ஒரு. வாக்கியமுள்ளது: இந்தச் சதுர்முகனைக் கொண்டு உள் நுழைந்து நான் நாம ரூபங்களை அளிக்கக் கடவேன் என்று. ச்ருதி 'வாக்கியம் ஒன்று: (பகவான் சொல்லியதாக) நான் நாம ரூபங்களைச் செய்வேவளாக, இவை எவ்வாறு பொருந்தும்? விளக்கம் : சாந்தோக்யத்தில் (6-8-8) தீ , நீர், பூமி என்ற மூன்று பூதங்களையும் ஒன்று சேர்ப்பதாகிய திரி வ்ருத் கரணம் சொல்லப்படுகிறது. இவ்வாறு செய்யப்பட்ட பூதங்களிலிருந்து அண்டம் உண்டாகிறது. அண்டத்தில் நான்முகன் தோன்றுகிறான். இதுவரையில் ஸமஷ்டி , ஸ்ருஷ்டி--ஒட்டு மொத்தமாகப் படைத்தல். **அநேந ஜீவேந- என்றவாறு தனக்குச் சரீரமான சதுர்முகனைக் கொண்டு பகவான் வ்யஷ்டி ஸ்ருஷ்டியை (பாகுபாடுள்ள படைப்பைச்) செய்கிறான் என்று தேறுகின்றது. அக்நி சங்கல்பித்தது, ஜலம் சங்கல்பித்தது என்ற இடங்களில் இவற்றைச் சரீரமாகக் கொள்ளும் பகவான் சங்கல்பித்ததாக் நிர்ணயம் செய்யப் பெற்றுள்ளது. ஆகையால் உயிர்கள் யாவையும் படைப்பது பகவானே. ஜீவனுக்கு ஞானேந்த்ரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து; இவற்றோடு மனமும் சேர்ந்து இந்த்ரியங்கள் பதினொன்று. இவையும் முக்ய ப்ராணனும் அணுவானவை. இந்த்ரிய ப்ராணன்களை தரித்து நிற்பன அக்நி முதலான தேவதைகள் ; இவர்கள் இவ்வாறு தரிப்பது பகவானுடைய சங்கல்பத்தாலே. தீ , நீர், பூமி இவற்றைப் படைத்து 0 சேர்த்து அண்டத்தைப் படைத்தவன் பகவான். இது ஸ்மஷ்டி ஸ்ருஷ்டி. சதுர்முகனைக் கொண்டு இவனுக்கு அந்தராத்மாவாகி பகவான் சேதன ௮சேதனங்களைப் படைத்தான். ஆதலால் எல்லா வகைப் படைப்பும் ஸா்வேச்வரனது செயல், ----------------- மூன்றாம் அத்யாயம் 1. முதற் பாதம் முதல் இரண்டு: அத்யாயங்களில் விவரித்தவாறு மேன்மை யுள்ள ஸர்வேஸ்வரனைப் பரம பதத்தில் அனுப விப்பதற்குப் பரந்த ஞானம் வேண்டும். இயல்பாக இத்தகைய ஞானம் வாய்ந்த ஆத்மா உடற் பிறவியால் வருந்துகிறது. பகவானது கல்யாண குணங்களை அனுபவிக்க வேட்கை நேர்ந்தால் உலக வாழ்க்கையில் வெறுப்பு ஏற்படும்; இந்த விருப்பின்மை வைராக்யம், உலக வாழ்ககையின் தோஷங்களை அறிந்தால் வைராக்யம் நேரும். இவ்வுலகப் பிறவியில் இழிவு எவ்வாறு எனில், தாய் வயிற்றில் தோன்றி வெளி வருவது,இளமை, மூப்பு, பிணி, இவற்றால் துன்புறுவது, கர்மங்களால் மீண்டும் மீண்டும் பிறப்பது போல்வனவற்றாலே, கர்மங்களின் ்பயனாக ஜீவன் மேல் லோகங்களுக்குச் சென்றால் மீண்டு வரும் போது பலவகையாக இன்னலே அனுபவிக்கிறான். மேலுலகங்களில் வாழ்வு முடிந்த பிறகு ஜீவன் ஆகாசம், மேகம், பூமி இவற்றோடு இணைந்து ௮ன்னமாகி ரேதஸ்ஸாகி ஸ்த்ரீயின் உடலில் சேருகிறான். இந்த விவரங்களை ஆய்ந்துணர்ந்தால் வைராக்யம் ஏற்படும். இந்த வைராக்யத்திற்குக் காரணமாகும் இந்தப் பாதம் வைராக்ய பாதம் எனப்படுகிறது.. புண்யங்களின் பயனாக ஜீவன் தேவலோகம் செல்லும் போதும் மீளும் போதும் பூத ஸூஷ்மங்களான இந்த்ரியங்களுடன் இயங்குகிறான். 1. 1. ஜீவனின் மீட்சி ஜீவன் தேவலோகஞ் சேர்ந்து பின்பு மீளும் போது ஆகாயமாகிய அக்நியில் சேருகிறான் (ஹோமம் செய் யப்படுகிறான்) ஸோம ராஜா என்ற அழகிய சரீரம் பெறுகிறான். பின்பு பர்ஜந்யம் (மேகம்) என்ற இரண்டாவது அக்நியில் ஹோமம் செய்யப்படுகிறான். இதற்குப் பின் மழையாகிறான்; இந்த மழை பூமியாகிய மூன்றாவது அக்நியில் ஹோமம் செய்யப்படுகிறது, ௮மப் போது ஜீவன் அன்னமாகிறான், இந்த அன்னம் புருஷ னாகிய நாலாவது ௮க்நியில் ஹோமம் செய்யப்படுகிறது இது ரேதஸ்ஸாக மாறிப் பெண்பாலிடம் ஐந்தாவது ஆஹுதியாகச் சேருகிறது. இந்த நிலைகள் ஒவ்வொன்றும் ஜீவன் பூத ஸுக்ஷ்மங்களோடு கூடவே பெறுகின்றான். இது பஞ்சாக்நி வித்யையின்படி. ஜீவன் சேரும் ஒவ்வொரு நிலையிலும் இவன் அக்நியிற் செய்யும் ஆஹுதி போல் விளங்குகிறான். இவ்வாறு இவன் ஐந்து திலைகளில் சேருவதை விவரிப்பது பஞ்சாக்நி வித்யை ஆகும். 1. 2. கர்ம பந்தம் யாகம் முதலிய கர்மங்களைச் செய்து ஜீவன் ஸ்வர்கம் போன்ற பலன்களை அனுபவிக்கிறான். அனு பவம் தீர்ந்து விடுகிறது. ஆதலால் இவன் மீளும்போது கர்மம் விஞ்சி யிராது. அதாவது கர்ம பலன் முழுதும் அனுபவிக்கும் வரையில் இவ்வுலகங்களில் இருக்கிறான் என்பது ஓர் அபிப்பிராயம். விளக்கம் : கெளதம தர்ம ஸூத்ரம், ஆபஸ்தம்ப ஸு்த்ரம் இவை வெளியிட்டுள்ள கருத்து: தேவ லோகத் தில் ஜீவன் கர்ம பலன்களை முழுதும் அனுபவிப்பதில்லை. விஞ்சியுள்ன கர்மத்தை அனுபவிப்பதற்காகவே மீண்டு சிறப்புடைய ஜன்மங்கள் பெறுகிறான். இவ்வாறு பல வகைகளிலும் ஆராய்ந்தால் ஜீவன் விஞ்சிய கர்மத்துடன் மீள்கிறான் என்பது அறியலாகும். 1. 3. பாவச் செயல்களின் பலன். விதித்த கர்மங்களைச் செய்யாதவர்களும், செய்யத் தகாதனவற்றைச் செய்பவர்களும் அநிஷ்டகாரிகள் எனப் படுகின்றனார். இவர்கள் சந்த்ர லோகம் அடைவ தில்லை? ஏழு வகையான நரகங்களில் : பாவச் செயல்களின் பயனை அனுபலிக்கிறார்கள். இந்த அனுபவத்திற்குப் பிறகு பூமியில் ஈ, கொசு, புழு போன்ற இழிவான பிறவிகள் பிறக்கின்றனர். இவர்கள் சந்த்ர லோகம் செல்வதில்லை; ஆதலால் முன்பு கூறிய ஐந்தாவது ஆஹாுதி-அதாவது மனைவியின் கா்ப்பத்தில் சேருவது இவர்களுக்கில்லை. 1. 4, ஒவ்வோர் இடத்திலும் ஜீவன் தங்கும் காலம். யாகம் முதலான கர்மங்களின் பயனாக ஜீவன் மேலுலகங்கள் சென்று மீள்கிறான் என்று முன்பு: கூறி யிருக்கிறது. இவன் ஒவ்வொரு நிலையிலும் எவ்வளவு காலம் தங்கியிருப்பான்? பயிர்களோடு இணைந்த நிலையில் ஜீவன் மிகவும் சிரமப்பட்டு வெளியேறுகிறான் என்று அறிகிறோம். ஆதலால் அக்நி, மேகம் இவற்றோடு இணையும் காலம் சொல்பமே என்பது தெளிவு. கர்மாக்களால் ஜீவன் படும் துன்பங்கள் இதுவரையில் விவரம் பெற்றுள்ளன. இவற்றிலிருந்து விடுதலை பெற்று பகவானை அடைவதே புருஷார்த்தம் என்பது வலியுறுத்தப்படுகின்றது. புண்ய கர்மாக்கள் செய்யும் ஜீவன் இவற்றின் பயனாக ஸ்வர்கம் முதலியவற்றை அனுபவித்து எஞ்சிய கர்மாக்களோடு கீழே இறங்குகிறான்; ஐந்து நிலைகளை அடைகிறான்; ஐந்தாவது நிலை பெண்பாலிடம் ரேதஸ்ஸாகச் சேர்வது, இவன் ஒவ்வொரு நிலையிலும்,அதிகம் தங்குவதில்லை; தான்ய நிலையில் தாமதம் நிகழ்கின்றது. பாவம் செய்தவர்கள் சந்த்ரனை அடைவதில்லை? ஏழு வகை நரகங்களில் துன்பம் அனுபவித்த பிறகு இழிவான பிறவி பிறக்கின்றனர். ----------------- 2. இரண்டாம் பாதம். .. கர்மங்களிலிருந்து விடுபடும் ஜீவன் பகவானை அனுபவிக்கின்றது. இந்த பகவானுடைய மேன்மைக்குக் காரணமான பண்புகள் இரண்டு: இவனை இழிவுகள் நாடாமலிருப்பது, இவனுக்கான தனிப்பட்ட குணங்கள், இவை இரட்டைப் பண்பு - உபய லிங்கமாகும். இந்த: இரட்டைப் பண்பு பற்றிய இந்தப் பாதம் உபய லிங்க பாதம் எனப்பெறும். அன்றியும் ஜீவன் கனவு, தூக்கம், மயக்கம் ஆகிய நிலைகளில் படும் துன்பங்கள் விவரிக்கப் படுகின்றன. ஜீவர்களைச் சரீரமாக உடைய பகவானுக்கு இழிவு என்பதே இல்லை; சிறப்புற்ற குணங்கள் வாய்ந்தவன் இவன் என்பதும் விளக்கப்படுகிறது. 2. 1. கனவு: யார் படைப்பு? ப்ருஹதாரண்ய உபநிஷத்தில் (6-3-70) கனவு பற்றிக் கூறியிருப்பது: கனவில் ஜீவன் காண்பன ரதம், குதிரைகள், இவை செல்லும் பாதை, குளங்கள், குட்டைகள், ஆறுகள் போல்வன, இவற்றை இவனே படைக்கிறான். இவ் வுலகம், பர லோகம் இவற்றின் சந்தியில் ஏற்படுவது இந்த மூன்றாவது நிலை. இவற்றைப் படைப்பவன் ஜீவனே என்று வேதமும் ஓதுகின்றது. அன்றியும்: கடவல்லியில் (2-9-8) ஜீவன் கனவில் காணும் பொருள்களைப் படைக்கின்றான் என்றும் குறிப்பிடப் பெற்றுள்ளது. ஆதலால் கனவுகளைப் படைப்பவன் ஜீவனே. இது ஒரு கருத்து. தேர்வு : “கனவில் காண்பன விசித்திரமானவை, காண்: பவனே அனுபவிப்பவை; அருகிலுள்ளோர் அனுபவிமப் பதில்லை. இவ்வாறான விசித்திரங்கள் செய்பவன் பகவானேயாக வேண்டும். கனவு நிலையில் ஞானம் விளக்கம்- பெறுவதில்லை. ஆதலால் ஜீவன் கனவுகளைப் படைக்க இயலாது. கனவில் விரும்பாதவற்றையும் காண்கிறோம். ஜீவன் படைப்பவனானால் விரும்பாதவற்றைப் படைத்து மனம் கலங்க மாட்டான். ஆதலால் கனவுகளுக்குக் காரணம் பகவானே. 2. 2. தூக்க நிலை. தூக்க நிலையைப் பற்றி மூன்று கருத்துக்கள் வேதங் களில் உள்ளன. இந்த்ரியங்கள் யாவும் அடங்கி வெளி விஷயங்களை ௮னுபவிப்பதாகிய கலக்கமில்லாத நிலையில் ஜீவன் சரீரத்திலுள்ள நாடிகளில் நுழைந்து இந்த நாடிகளின் வழியாக இவற்றோடு தொடர்புள்ள இதயத்தில் புரீதத் என்ற மாமிச பிண்டத்தை அடைகிறான்; தூங்கும் நிலையில் ஸத் என்ற ப்ரஹ்மத்தோடு நன்கு இணைந்திருக்கிறான். நாடிகள், புரீதத், ப்ரஹ்மம் "இம்மூன்றும் சேர்ந்தே தூக்கத்தின் நிலை. 2. 3. தூக்கத்திற்குப் பின்பு ஜீவனது நிலை. ஒரு கருத்து : தூக்கத்தில் ஜீவன் தன்னை அறிவ தில்லை, மற்றைப் பொருள்களையும் அறிவதில்லை; தூங்கும்போது ப்ரஹ்மத்தில் ஒடுங்கி விடுகிறான். முக்த னுக்கும் இவனுக்கும் வாசியில்லை. முக்தனுக்குப் பழைய சரீரம், இந்த்ரியங்கள் இவற்றோடு தொடர்பில்லை. இதுபோல் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்திருப்பவன் வேறு ஜீவனாக வேண்டும். தேர்வு : கர்மம், நினைவு, வேத வாக்கியம், மோக்ஷ விதிகள் இவற்றை ஆராய்ந்து பின்வருமாறு முடிவு அளிக் கப்படுகிறது. கர்மம் என்பது தூங்குவோன் தூங்குவதற்கு முன் செய்த புண்ய பாவங்கள். இவை அனுபவித்தே தீரும்; ஆதலால் விழித்து எழுவதற்கு முன் இவன் இவற்றை அனுபவிக்க வேண்டும். இல்லையெனில் ஒருவன் செய்த தோஷத்தின் பலன் வேறொருவன் அனு பவிக்கிறான் என்ற தோஷம் நேரும். நினைவு என்பது? இரவில் தாங்கியவன் எழுந்திருக்கும் போது, '*தான் தூங்கினேன்”? என்ற உணர்வு. ஆதலால் துங்கி எழுந்திருப்பது வேறு ஜீவன் என்ற கருத்து பொருந்தாது. மேலும் சாந்தோக்யத்தில் வரும் கருத்து: ஒரு ஜீவன் தூங்கும் போது எந்த சரீரத்தில் (மனிதன், சிங்கம், புலி போன்ற) தூங்குகிறானோ அதே சரீரத்தில் எழுந்திருக்கிறான் என்பது. தூக்கத்தை முக்தி நிலையோடு ஓப்பிட இயலாது. முக்தன் எல்லா அறிவும் வாய்ந்தவன், யாவும் அறிபவன், போகங்கள் அனுபவிப்பவன். தூக்க நிலையில் இந்த்ரியங்கள் களைப்பாறுகின்றன; ஜீவன் பகவானை அனுபவித்து விஞ்சியுள்ள கர்மங்களை ௮னுபவிக்க எழுந்திருக்கிறான். ஆதலால் விழித் தெழுந்தவன் தூங்குபவனே ஆகிறான். 2. 4, மூர்ச்சை நிலை. மூர்ச்சை அடைந்தவன் நிலை மரணத்தின் பாதி நிலையேயாகும். மூர்ச்சை நிலையில் ஞானமில்லை- ஆனால் இது ஞானமுள்ள விழிப்பு நிலையும் கனவு நிலையும் ஆகாது. தூக்க நிலை என்பது இந்திரியங்கள் களைப்படைவதால் ஏற்படும்; மூர்ச்சை நிலை மனக் கலக்கத்தால் ஏற்படுவது. இது தூக்க நிலையும் ஆகாது. மரண நிலையில் ப்ராணன் அடியோடு இல்லை. ஆதலால் மூர்ச்சை நிலை மரண நிலையின் பாதி என்பது விளங்குகிறது. 2. 5. உபய லிங்கம். ஜீவனுடைய தாழ்வு நிலை விவரிக்கப்பட்டது. ஏற்படுமோ என்ற ஐயம் ஆராயப்படுகிறது. ஜீவனு டைய சரீர சம்பந்தத்தால் பரமாத்மாவுக்குத் தாழ்வு நேராது என்பதற்குக் காரணம் ச்ருதிகள் யாவும் இரண்டு குணங்களைக் குறிக்கின்றன; ஒன்று: இவன் தாழ்வுகளுக் கெல்லாம் எதிர்நிலையாக இருப்பது; மற்றது: இவனுக்கே உரிய தனிப்பட்ட குணங்கள்--கல்யாண குணங்கள். சாந்தோக்யத்தில் (8-7-5) பரம் பொருள் பாவமற்றது, மூப்பில்லாதது, மரணம்,. வருத்தம், பசி, தாகம் போன்றவை அற்றது; விரும்பப்படும் நற்குணங்கள் உடையது; தடையற்ற ஸங்கல்பம் உடையது. விஷ்ணு புராணத்திலும் (46-48) அவன் தேஜஸ், அளவற்ற ஞானம், வீர்யம், சக்தி முதலான ' நற்குணங்களுக்கு இருப்பிடம்; கிலேசம் முதலான எந்த தோஷங்களும் இலன் என வந்துள்ளது. அன்றியும் - சேதன அசேதனங்களின் அந்தர்யாமியாக பகவான் உறைவது தனது விருப்பதாலேயே, இவற்றை நியமிப்பதற்காகவே. இதில் சங்கை : ஜீவன் கர்ம வசப்பட்டவன், ஆதலால் இவன் கொண்டுள்ள சரீரத்தோடு தொடர்பு தாழ்வைத் தரக் கூடும். பகவான் இந்த சரீரத்தில் உறைந்து இந்தத் தொடர்பாலே லீலாரஸம் அனுபவிக்கிறான். முண்டக உபநிஷத்தில் வரும் விளக்கம்: பரமனாகிய பறவையும், ஜீவனாகிய பறவையும் இணைந்து ஓரே மரத்தில் தங்குகின்றன; ஜீவனாகிய பறவை அதன் இனிய பழத்தைப் புசிக்கின்றது; பகவானாகிய மற்றது இதைப் புசியாமல் பெருமையுடன் விளங்குகிறது. இப் பறவைகள் பிரியாமல்: இணைந்திருந்தும் ஜீவனாகிய பறவை தான் துன்பமுறுகிறது. ஆதலால் பகவானுக்கு இழிவே யில்லை என்று தேறுகிறது. ““பெருமையுடன் விளங்குகிறது'' என்பது இதனோடு இணைந்து விளங்கும் கல்யாண குணங்களைக் காட்டுகிறது. பகவான் ஜீவ 'சரீரங்களைத் தன் சரீரமாகக் கொண்டு வியாபிப்பது, அந்த ச்ரீரத்தோடு கூடிய ஜீவர்களையும், அசேதனப் பொருள்களையும் நிர்வஹிப்பதற்கே, பகவானே நாம ரூபங்களைக் கொடுக்கிறான். ஆனால் இந்த நாம ரூபங்களால்' இவன் தீண்டப்படாதவன் என்ற வேத வாக்யங்கள் இக் கருத்தை வலியுறுத்துகின்றன. சங்கை : பகவான் யாவும் ௮றிந்தவன், யாவற்றுக்கும் அந்தராத்மா, ஐகத் காரணம் என்று ஒவ்வொன்றாகக் குணங்களைச் சொல்லி வேத வாக்கியங்கள், “தேதி?” எநேதி'* (இவ்வாறு இல்லை) என்று தள்ளுவ,தால் இவன் இழிவுக்கு எதிர்நிலை என்பது தேறும். கல்யாண குணங்களுக்கு இருப்பிடம் எனபது எவ்வாறு? பகவானது சக்தியோடு இயல்பான .ஞானம், பலம். முதலியனவும் விவரிக்கின்றன வேத வாக்கியங்கள், ஆதலால் உபய லிங்கம் நிலை நிறுத்தப் பெற்றது. சூரியன் நீர் நிலையில் தோன்றுகின்றான், நீரின் குணம் இவன் பெறுவதில்லை; ஆகாசம் குடம் முதலிய வற்றில் அடங்கியுள்ளது, எனினும் குடம் முதலியவற்,றில் விரிவது, சுருங்குவது போன்ற குணம் இதற்கில்லை. இது போல் பகவான் ஜீவனிடம் நுழைவதால், தோஷம் எதுவும் இவனைச் சாராது. “நேதி நேதி: என்பதன் கருந்து: பகவானுக்குச் சில ரூபங்களை விவரித்த உபநிஷத் இவ்வளவேயோ என்று நினைக்கச்கூடும் என்பதற்காக இவ்வளவன்று, இவ்வள்வன்று என்று விளக்கியது. ஆதலால் பகவான் அழிவு 'களுக் கெல்லாம் எதிர்நிலை, கல்யாண குண கணங்கள் எண்ணிறந்தன வாய்ந்தவன் என்பது ஆஷேபமில்லாமல் நிறுவப்பட்டது. 2, 6. ப்ரஹ்மமும் அசேதனங்களும். உருவமுள்ளனவும் உருவமில்லாதனவுமான ௮சேதனப் பொருள்கள் யாவும் ப்ரஹ்ம ஸ்வரூபம் என்று வேதங்கள் வெளியிடுகின்றன. ப்ரஹ்மமும் உலகமும் வேறாவனவையே என்று ஓதுகின்றன சில வேத வர்க்கியங்கள். இக் கருத்துக்கள் ஒன்றுவதற்காக ப்ரஹ்மம். ப்ரளய காலத்தில் உலகைச் சுருக்கிக் கொண்டும் படைப்புக் காலத்தில் விரித்துக் கொண்டும் உள்ளது என்று கருதலாம். அன்றியும் மணியும் அதன் ஒளியும் 'வேறுபட்டிருந்தும் ஓளி யுடைமை என்ற தர்மத்தாலும் ஒளியாலும் ஒன்றுவது போல் அசித்தும் பரமாத்மாவும் என்று கருதத்தகும். ஆகையால் உலகம் ப்ரஹ்ம ரூபமாக இருப்பது ஒளி சூர்ய ரூபமாக இருப்பது போல என்பது பொருத்தும். இது ஒரு சாரார் கருத்து. தேர்வு : ஜீவன் ப்ரஹ்மத்திற்கு அம்சமாகவும், ப்ர 'காரமாகவும், சரீரமாகவும் நிரூபிக்கப்பட்டது. இதே போல அசேதனங்கள் சரீரமாகவும், பகவான் சரீரியாக வும் கொள்வதே சரி. அன்றியும் வேத வாக்கியங்களால் தெளிவது: அசேதனத்தின் தன்மைகள் பகவனுக்கில்லை என்பது. அசேதனங்கள் பகவானின் அம்சமாகவே விளங்குகின்றன. ஆதலால் பகவானோடு ஒன்றியோ, இனம்- பண்பு என்ற முறைப்படியோ இல்லை என்பது தேறலாகும் 2. 7. அணை என்பதன் விளக்கம். வேத வாக்கியங்கள் நான்கு கருத்துக்கள் வெளியிடுகின்றன: (1) பகவான் ௮ணை, (2) நான்கு பாதங்கள் உடையவன், பதினாறு கலைகள் வாய்ந்தவன், (8) மோஷத்தை அடைவிக்கும் அணை, (4) அன்றியும் பெரியவனான பரமாத்மாவை விட மேலான ஒரு பொருள் உண்டு. அணை என்பதால் ஒரு கரையிலிருந்து எதிர்க் கரைக்குப் போகும் சாதனம் என்பதாலே இதுவரையில் கூறிவந்த பெருமையுடைய ப்ரஹ்மத்தைக் காட்டிலும் மேலான தத்வம் ஒன்றுண்டு. இவ்வாறு சிலர் கருதுகின்றனர். மறுப்பு: அணை(ஸேது) என்பதன் பயன் இரண்டு: பக்கங்களிலும் உள்ள பொருள்கள் கலவாது பாதுகாப்பதே. பகவான் ஸேது என்பதை ஒட்டி சாந்தோக்யத்தில் வந்துள்ள கருத்து இதுவேயாகும்: '*ஏஷாம் வோகாநாம். அஸம்பேதாய”' (8-8- 1) ப்ரஹ்மம் நான்கு பாதங்கள் உடையது, பதினாறு கலைகள் உடையது என்று கூறியது எளிதில் மனனஞ் "செய்து உபாஸிப்பதற்கே யாகும். ப்ரஹ்மம் எங்கும் வ்யாபித்துள்ளது, யாவருமாய் யாவுமாக் இருக்கிறது என்று பல வேத வாக்கியங்கள் கூறுவதால், இதைக் காட்டிலும் மேலான தத்வம் ஒன்றுமில்லை என்பது நிச்சயம். ஜகத் காரணமான பகவானே பரம் பொருள் 2. 8. போக மோக்ஷங்கள் . சேதனன் உபாஸநஞ் செய்வதற்காக பகவானது குணங்கள் வெளியிடப்பட்டன. பகவான் தோஷங்களுக்கு எதிர்நிலை; கல்யாண குணங்களுக்குக் கொள்கலம், யாவரையும் காட்டிலும் மேம்பட்டவன். போக மோக்ஷங்களை அருளும் மேன்மை இவனையே சாரும் என்பது இனி விளக்கப் பெறும். ப்ருஹதாரண்யத்தில் பிறப்பிலியான பகவான் அன் னத்தையும் தனத்தையும் அளிப்பவன்; மோஷ ஆனந்தத்தையும் அளிப்பவன் என்று வந்துள்ளது. ் யாகம், தானம், ஹோமம், உபாஸநம். இவற்றிற்கு அத்த அந்த தேவதைகள் பலன் அளிக்கின்றன. இந்த தேவதைகளுக்கு அந்தர்யாமியான பரம புருஷனாலேயே இந்த பலன்கள் கிடைக்கின்றன. இந்தக் கருத்தே வேதங்களிலும் கீதையிலும் வெளியிடப் பட்டுள்ளது. உலகில் குடி மக்கள் பயிர் செய்தல் போன்ற பணிகளாலே பொருள்கள் சேர்த்து அரசனது ஏவலாளர்கள் மூலமாக வரி கட்டி அரசனது உகப்பைப் பெறுவது போல் தேவதைகளை ஆராதிக்கும் வகையால் பகவானைச் சேர்த்து பகவானது அருளைப் பெறுகிறோம். பலன் அளிப்பது பகவான். இவனது அனுபவங்கள் இவன் கனவில் காணும் பொருள்கள் பகவானால் படைக்கப் பெறுவன, இவன் தூங்குமிடம் ஹிதா, புரீதக், பரமாத்மா ஆகிய மூன்று. தூங்கிய ஜீவனே தூக்கத்திலிருந்து விழித்தெழுகிறான்; வேறொருவன் என்பதில்லை. மூர்ச்சை என்பது விழிப்பு, கனவு, தூக்கம், மரணம் ஆகிய நிலைகளைக் காட்டிலும் வேறுபட்டது. பகவானை இரண்டு குணங்களாலே அறியலாம். இழிவுகளுக்கு எதிர்நிலை, கணக்கற்ற கல்யாண குணங் கள் வாய்ந்தவன். இக் கருத்து உபய லிங்கம் எனப் பெறும். உலகம் பகவானுக்கு விசேஷணமாக இருந்து கொண்டு அம்சமுமாகிறது. பகவானைக் காட்டிலும் மேம்பட்ட தாகவோ அடையத் தக்கதாகவோ வேறு எதுவுமில்லை. இவனே எல்லாக் கர்மங்களுக்கும் பலன் அளிப்பவன். ----------------- 3. மூன்றாம் பாதம் 3. 1. வித்யைகள் --ஆய்வு. பகவானை உபாஸநம் செய்யும்போது பயன்படும் வித்யைகளில் பகவானது குணங்கள் பற்றி விசாரிப்பதால் இப்பாதம் குண-உபஸம்ஹார பாதம் எனப் பெறுகின்றது. ப்ரஹ்மத்தை அடைவதற்காக உபாஸதம் செய்ய 'வித்யைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த வித்யைகளுக்கு வேத சாகைகளில் குணங்கள் சில மாறுபட விவரிக்கப்பட்டுள்ளன. ஒரே பெயருள்ள வித்யைகளுக்கு மாறு பாடு கூறப்பட்டால் எப்படி அநுஷ்டிப்பது என்ற சங்கை எழுகின்றது. வேதங்களிலும் உபநிஷத்துக்களிலும் வைச் வாநர வித்யை, தகர வித்யை, அக்ஷர விதியை இவை இதே பெயர்களுடன் வருகன்றன. ஆனால் ப்ரகரண பேதம் உள்ளது. இவைபற்றி ஒன்றில் இல்லாத குணங்களை மற்றதில் ,சேர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய வித்யைகளில் விதி வாக்யம், பலன், உபாஸிக்கும் பரமாத்மா, பெயர் யாவும் ஒறுமைப்பட்டுள்ளன. 3. 4. உத்கீதம். உத்கீத உபாஸநம் இரண்டு வகையாகக் காட்டப் பெற்றுள்ளது. இந்த இரண்டு உபாஸநங்களிலும் வித்யை, பலன், ஆக்யா என்பன மூன்றும் ஒன்றாக இருந்தாலும், உபாஸிக்கும் பொருளான ரூபம் வேறுபட்டிருக்கிறது. ஒன்றில் உத்கீதம் செய்பவனிடம் முக்ய ப்ராணன் என்று எண்ணமும், ஒன்றில் கானம் செய்யும் உத்கீதத்திலேயே முக்ய ப்ராணன் என்ற எண்ணமும் வேண்டும்" என்று 'வரையிட்டிருக்கிறது. இவ்வாறு இன்னும் சில இடங்களில் உள்ளன. ரூபம் வெவ்வேறாக இருப்பதால் வித்யைகளும் வெவ்வேறு என்று காட்டப் பெற்றுள்ளது 3. 3. முக்ய ப்ராணன். முக்ய ப்ராணன் மூத்தது, சிறந்தது; வாக் இந்தரியத்தைச் செல்வமாக உடையது (வஸிஷ்டம்), ' கண்னில் ப்ரதிஷ்டையாக உள்ளது (நிலைநிறுத்தப்பட்டது) காது என்ற இந்தரியத்தில் ஸம்பத்தாவ் உள்ளது என்று வேதங்களால் சிறப்பிக்கப்படுகிறது. இதை' ௨பாஸிக்கும் போது இது முக்ய மென்றே உபாஸிப்பதும் வஸிஷ்டத்வம் போன்ற குணமுடையதாகவும் சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. இவ்வாறு மூன்று உபதிஷத்துக்களில் மூவகை உபாஸநம் கூறப்படுகிறது. எனினும் இந்த வித்யைகள் யாவும் ஒன்றே. ஏனெனில் இவை ப்ராணனின் அபிமான தேவதையாகக் குறிக்கின்றன. 3. 4. பகவானின் குணங்கள். பகவானின் குணங்கள் கணக்கில்லாதவை. இவை எல்லாவற்றையும் வித்யைகளிலே ஓத இயலாது. எவற்றை எல்லா வித்யைகளிலும் ஓதவேண்டும்? பகவானின் குணங்களில் சில இவனது இயல்பை நிரூபிக்கின்றன. இவனைப் பற்றி அறிந்து கொள்ளப் பயன்படுகின்றன-- ஆனந்தம் முதலான குணங்கள்; எல்லா' வித்யைகளிலும் இவை ஓத வேண்டும் -இவை முக்கியமானவை யாகையாலே. முக்கியமான ஐந்து குணங்கள்: ஆனத்தமா யிகுப்பது, வேறுபாடின்றி இருப்பது, ஞானமயமா யிருப்பது 'அளவற்றதா யிருப்பது, தோஷங்கள் இல்லாமல் இருப்பது 3. 5. புண்ய பாவங்கள். - பகவானை உபாஸநம் செய்பவன் பரமபதம் அடையும் சமயத்தில் இவனது புண்ய பாவங்களைப் பற்றி 'இரண்டு கருத்துக்கள் வெளிவந்துள்ளன. ஓன்று: பரமபதம் அடையும் உபாஸகனை விட்டு இவை நீங்குகின்றன. இது ஹாதி; மற்றது. இவை: வேறு சிலரை அடை இன்றன--இது உபாயநம்: அதாவது இவனது உற்றார் அல்லது நண்பர் புண்யங்களை அடைகின்றனர்; விரோதிகள் பாவங்களை அடைகின்றனர். இவை ஒவ்வொன்று ஒவ்வொரு சாகையில் ஆதரிக்கப்படுகிறது--சிந்தனை செய்து. உபாஸதம் செய்வதற்காக. இவற்றுள் ஒன்று அங்கமாகவும், மற்றது அங்கியாகவும் அமைந்ததால் இரண்டையும் சிந்திக்கவேண்டும். சில சாகைகளில் இரண்டு கருத்துக்களும் வந்துள்ளன. இந்தப் புண்ய பாவங்கள் எப்போது நீங்குகின்றன என்பதும் சாஸ்த்ரங்களில் ஆராயப் பெற்றுள்ளது. முக்தன் சரீரத்தை விட்டுக் கிளம்பும்போதே கர்மங்கள் யாவும் அழிந்து விடுகின்றன. ப்ரஹ்மாநுபவத்தை. 'இவனுக்கு அளிப்பதற்காக அர்ச்சிராதியில் ஸூக்ஷ்ம சரீரம் ஏற்படுகிறது, . பயிர் செய்வதற்காகத் தேக்கிய ஏரிநீர், பயிர் விளைந்த பின் குளிப்பது, பருகுவது போன்ற நலன்களுக்கு ஆவது போல் கர்மங்களை அனு பவிப்பதற்கான ஸ்தூல சரீரம், கர்ம அனுபவத்திற்குப் பிறகு ஸூக்ஷ்ம சரீரமகய் அர்சிராதியில் பயன்படுகிறது. வஸிஷ்டர் முதலான அதிகாரி புருஷர்களுக்கு அவரவர்களது பதவி நீங்கும்வரையில் அப்பதவிக்குக் காரண “மான கர்மமும் பதவியும் தொடர்ந்து நிற்கும்; இப்பதவி: மூடியும் வரையில் அர்ச்சிராதிகதி இல்லை. சரீரத்தின் முடிவில் அர்ச்சிராதிகதி ஏற்படுவோர்க்கே கர்ம பலம் அனைத்தும் நீங்கும். 3. 6. வித்யைகள்--அர்ச்சிராதி. அர்ச்சிராதியைப் பற்றியுள்ள வித்யைகளில் உபாஸந வகையில் மாறுபாடு உள்ளது. எல்லா வித்யைகளாலும் பரம்பொருளை அடையக் கூடுமாதலால் அர்ச்சிராதி எல்லா வித்யைகளுக்கும் பொதுவானது. 3. 7. உபாஸகம்- குணங்கள். ஒரு வித்யையில் உபாஸநத்திற்காக அஷர ப்ரஹ்மம் விதிக்கப்பட்டுள்ளது. இத்த ப்ரஹ்மம் மிகவும் நுண்ணியது, எங்கும் பரவியது; இந்த்ரியங்களாலே அறிய இயலாதது; வடிவாலும், தேசத்தாலும், காலத்தாலும் அளவு படாதது என்று நினைக்கவேண்டும் என்று, இது **அஸ்தூலத்வம்”' (ஸ்தூல மின்மை) என்ற குணம். இது எல்லா வித்யைகளிலும் ஓதவேண்டுமா என்பது சங்கை. பகவான் எல்லா குணங்களும் வாய்ந்தவன்; இவை இவனது ஸ்வரூபத்தை அறியப் பயன்படுவன. ஆதலால் குணங்கள் யாவும் மளனஞ் செய்தே உபாஸதம் செய்ய வேண்டும். பகவான் சேதன அசேதனங்களைக் காட்டிலும் வேறுபட்டவன் என்பதை அறிவதற்கான குணங்கள் எல்லா வித்யைகளிலும் ஓதத் தக்கவை. மற்றைய குணங்கள் அந்த அந்த வித்யையில் 'விதித்துள்ளபடி, ௮நுஸத்திக்க வேண்டும். 3. 8. வித்யைகள்: பரமாத்மாவின் ' சூபம். உஷஸ்தார் என்பவர், “நேரே காணப்படும் ப்ரஹ்ம்மாய், அனைத்துயிர்களிலும் அந்தர்யாமியாக இருப்பவன் யார்??” என்று கேட்கப் பின் வருமாறு விடை கூறப்பட்டது: யாவர்க்கும் ப்ராண வாயுவை இயங்கச் செய்பவன்; எல்லா ஜீவர்களுக்கும் அந்தராத்மா என்பது. ககோளர் என்பவர் விடை, பசி, தாகம்...வருத்தம்,மயக்கம் ஆகியவற்றைக், கடந்திருப்பவன்; மகப் பேறு, செல்வப் பேறு, உலக வாழ்க்கை இவற்றில் பாசமற்றவன் என்பது, இவ் விரண்டு வித்யைகளிலும் ரூபம் வேறுபடுகிறது; எனினும் ஜீவாத்மாவைக் காட்டிலும் பரமாத்மா வேறு ' என்ற ஒரே கருத்து இருப்பதால்,. இவற்றிற்குப் பேத மில்லை என்பது தேறுகிறது. 3. 9. உபாஸகம்-- குறிப்பு வேறுபாடு. சாந்தோக்யத்தில் தகர. வித்யை பகவானுக்கு இருப்பிடம் என்ற வித்யையும், ப்ருஹதாரண்யகத்தில் ஆகாசம் இருப்பிடம் என்ற வித்யையும் உள்ளன. இவை வெவ் வேறானவையா? ் பிருஹதாரண்யகத்தில் ஸத்ய ஸங்கல்பத்வம் என்பதன் விசேஷமான வசித்வம் முதலானவை விவரிக்கப் பெற்றுள்ளன; சாந்தோக்யத்தில், வரும் எட்டு குணங்களில் ஒன்றான ஸத்ய ஸங்கல்பத்வத்தின் விசேஷமே இது. அபஹதபாப்மத்வம் போன்ற குணங்கள் இங்கும் காட்டப் பெற்றுள்ளன. ஆக இரண்டு வித்யைகளும் ஒன்றே. 3. 10. தஹர வித்யை, தஹர வித்யையில் பரமாத்மாவையும் அவனது கல்யாண குணங்களையும் உபாஸிக்கலாம் என்பது வந்துள்ளது குணங்களை உபாஸநம் செய்யும் போது தஹரஆகாசமாகிய பரமாத்மாவை மறுபடியும் உபாஸநம் செய்யவேண்டுமா? அபஹதபாப்மத்வம் என்பது குணம்; இத்தகைய குணங்களோடு கூடியவன் பரமாத்மா? குணங்கள் வேறு, .குணங்களை யுடையவன் வேறு, ஆதலால் 'இரண்டும் செய்ய வேண்டியவை . . 3. 11. வித்யைகள் : உபாஸநம் செய்யப்படும் பொருள். நாராயண அனுவாகத்திற்கு முந்திய அனுவாகத்தில் தஹர வித்யை "வந்துள்ளது, இதில் கூறியிருப்பது: பகவானுக்கு இருப்பிடம் உபாஸகனது இதயத்தில் இருக்கும் சிறிய தாமரை. ஆகாசம் போல் அளவிட வொண்ணாததான பரம்பொருள் இதனுள் இருப்பவன்; இவனது குணங்கள் உபாஸிக்க வேண்டுவன. நாராயண அனுவாகத்தில் தாமரையின் விவரம் வந்துள்ளது. தலை கீழான தாமரை போன்ற இதயம் கைபிடி அளவுள்ளது; கழுத்துக்குக் ழே கொப்பூழுக்கு மேலே உள்ளது. இந்த விவரம் தஹர வித்யையே விவரிப்பதா? எல்லா வித்யைகளுக்கும் பொதுவா? பகவான் யாவரினும் மேம்பட்ட வன் என்ற அடையாளமே (லிங்கம்) எல்லா வித்யைகளின் கருத்து; ஆகையால் இவனது குணங்கள் பல ஓதப்படுகின்றன. யாவும் இவனைக் குறிப்பதால் வித்யைகள் சூறிக்கும் பொருள் ஒன்றே என்பதே தேறும், இப்பொருள் நாராயணன். 3. 12. உத்கீதம். உத்கீத உபாஸநம் பற்றிச் சல சாகைகளில் வந்துள் ளது--உத்கீதத்தின் அவயவமான ஓம் என்ற ப்ரணவத்தை உபாஸிக்கவேண்டும் என்று. இந்த உபாஸநம் எல்லா சாகைகளிலும் அந்வயிக்கும். மந்த்ரங்கள் வேறு பட்டிருந்தாலும் யாகம் என்பது எல்லா சாகைகளிலும் ஒன்றே. இதே போல் உத்கீத ௨பாஸநமும். 3. 13. வைச்வாநர வித்யை--உபாஸநம். ஒளபமந்யவர் முதலான ஆறு மஹரிஷிகள் கைகேய தேசத்து அரசனிடம்,''வைச்வாநர ஆத்மாவை உபதேசிக்கவேண்டும்'” என்று கேட்டனர். அவன் உபதேசிப்பது; ஸ்வர்கம் முதல் பூமி ஈறாக உள்ளன தலை, கால் முதலான அவயவங்களாகக் கொண்ட வைச்வாநர ஆத்மாவே உபாஸிக்கத் தக்கவன்; இதன் பலன் ஸர்வாத்மாக்களிலும் இருப்பவனாய் அன்னமான ப்ரஹ்மத்தின் அனுபவமே என்றான். இந்த வித்யையில் உபாஸநம் பூர்ணமான வைச்வாநராத்மாவா? , இந்த இடத்தில் எல்லாம் ஒரே வாக்கியமாக இருப்பதால் பூர்ணமான உபாஸநமே முறை. இந்த வரலாற்றில் மஹ ரிஷிகள் முதலில் உத்தாலகரைக் கேட்டு அவரிடம் அறிய முடியாமல் அரசனை அடைந்தனர் என்பது குறிப்பு. 3. 14. மற்றைய கருத்துக்கள். ப்ரஹ்ம வித்யைகளில் ஏதேனும் ஒன்றை அனுஷ்டித்தால் போதும். உத்கீதம் எப்போதும் யாகத்தில் அங்கமாகும்; இது ப்ரணவத்தோடே கூடியிருப்பதால் இத்த உபாஸநம் கா்மங்களுக்கு அங்கம். ப்ரஹ்மவித்யைகளில் எதை உபாஸநம் செய்தாலும் மோக்ஷ பலன் கிடைக்கும். ப்ரஹ்மத்தை அடைவதற்குப் பயன்படும் கர்மாக்களைப் பற்றிய விவரங்கள் இந்தப் பாதத்தில் ஆராயப்பட்டுன்ளன. வெவ்வேறு சாகைகளில் கூறப்படும் வைச்வாநரவித்யை, தஹர வித்யை போல்வன ஒன்றே. கெளஷீதகி சாந்தோக்யம் இவற்றில் சொல்லப்படும் ப்ராண வித்யையில் வேறுபாடு இல்லை; ஆகையால் இந்த வித்யைகள் ஒன்றே. பகவானுடைய குணங்களுள் அடிப்படையானவை விகாரமற் நிருப்பது, ஞான மயமாவது, அனந்தமாவது, தோஷமற் நிருப்பது, ஆனந்தமா யிருப்பது--எல்லா வித்யைகளிலும் அநுஸந்திக்க வேண்டும். தைத்திரீயம் நாராயணவல்லியில் பதினோராவது அநுவாகம்--நாராயண அநுவாகம் எல்லா வித்யைகளிலும் உபாஸிக்க வேண்டியது. ப்ரஹ்ம உபாஸந வித்யையில் ஸ்வரூபத்தை நிருபிக்கும் அடிப்படை குணங்கள் ஞானம் ஆனந்தம் போல்வன அனுஸந்திக்க வேண்டுவன. -------------- 4. நாலாம் பாதம். ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமான காமத்தைப் பற்றி இப்பாதத்தில் விசாரம் செய்யப்படுகிறது. வைராக்ய பாதத்தில் மோக்ஷத்திற்குப் புறம்பான பலன்களைக் கருதிக் கர்மங்கள் செய்யத் தகாதன என்பது காட்டப் பட்டது. இத்தகைய விருப்ப மில்லாமல் செய்யும் கர்மங்கள் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் என்று நிரூபிக்கப் படுகிறது. இந்தப் பாதம் அங்க பாதம் எனப்படுகிறது. 4. 1. ப்ரஹ்ம வித்யையாலே மோக்ஷம். மோக்ஷ பலன் ப்ரஹ்ம வித்யையாலேயே, கர்மங்களால் அன்று என்பது வ்யாஸரது திருவுள்ளம், இதற்கு மாறான கருத்துகள்: (1) தத்வமஸி என்ற வேத வாக்கியத்தில் கர்மங்கள் செய்யும் கர்த்தாவும் ப்ரஹ்மமும் ஒரே வேற்றுமையில் அமைந்திருப்பதால் கர்த்தாவே ப்ரஹ்மம் எனப்படுகிறான். “ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய:”” என்பதில் இந்த ஜீவாத்மாவின் உண்மை ஸ்வரூபம் அறிய வேண்டும் என்பதால் ப்ரஹ்ம வித்யை அறிவது கர்மத்தால். (2) ஜநகர் முதலானோர் கர்மத்தாலேயே முக்தி அடைந்தனர். (3) வித்யை கர்மத்திற்கு அங்கம் என்று வேத வாக்கியம் கூறுகிறது. (4) வேதங்களை அத்யயநம் செய்த பின்பு இல்லற தர்மம் என்று அறிகிறோம். இல்லறத்தில் இருப்பவனுக்கே கர்மங்கள் உரியன. (5) மனிதன் நூறாண்டு காலம் கர்மங்களைச் செய்து கொண்டே வாழ விரும்ப வேண்டும். (6) பரம லோகம் செல்பவனுடன் வித்யை கர்மம் இவை தொடா்கின்றன; ப்ரஹ்ம ஞானிகள் கர்மமே முக்கியமாகக் கொள்பவர். விளக்கம் : தத்வமஸி என்ற வாக்கியத்தில் பரமாத்மா ஜீவனுக்கு ஆத்மா. ஆதலால் ப்ரஹ்மோபாஸகத்தால் என்றே கருத்து; இது ப்ரஹ்ம வித்யையாலே, கர்மத்தாலன்று. காலஷேயர்களான ரிஷிகள், ''வேதாத்யயநம் ஏன் செய்ய வேண்டும்?”” என்று கேட்டனர். இதன் கருத்து, ப்ரஹ்ம ஞானிகளுக்குக் கர்மம் அவச்யமில்லை, செய்யும் கர்மம மெல்லாம் வித்யையோடே என்றது விரைவில் பயன் கொடுப்பதாக; இத்தகைய வித்யை உத்ததமேயாகும். கர்மங்கள் செய்ய விரும்புவது வேதத்தின் பூர்வ பாகத்தின் அர்த்த ஞானத்தாலே; இது போல் மோக்ஷம் விரும்புவது ப்ரஹ்ம ஞானத்தைப் பற்றி உத்தர பாகத்தின் அர்த்த ஞானத்தாலே. ஜனகர் முதலானோர் கர்மத்தாலே முக்தி பெற்றனர் என்பதன் கருத்து,முக்தி அடையும் வரையில் கர்மம் அனுஷ்டிக்கவேண்டும் என்பதே. கர்மம் ஆயுள் முழுதும் செய்யவேண்டும் என்ற விதி ஸந்யாஸ ஆச்ரமத்திற்கு இல்லை. ஆதலால் மோஷ புருஷார்த்தம் ப்ரஹ்ம வித்யையினாலேதான், கர்மத்தாலன்று. 4, 2. உத்கீதம் - நிலை. உத்கீதம் யாகத்திற்கு அங்கம். உத்கீதத்தை ஸ்துதித்தால் போதுமா? அது யாவற்றிலும் மிக இனிமையானது என்ற கருத்துடன் உபாஸநம் செய்யவேண்டுமா?உபாஸநத்தால் வீர்யமுடைய பலன் ஏற்படுவதற்காகச் சுவை யுடைமை தோக்காகக் கருதி உபாஸநம் செய்ய வேண்டும் 4. 3. உபாக்யானங்கள். ப்ரஹ்ம வித்யை துதிக்கும்போது சில உபாக்யானங்கள் ஓதப்படுகின்றன. *:மநுர்வை வைவஸ்வதோ ராஜா”, **“யமோ வைவவஸ்வத:'', வருண ஆதித்ய:”” என்று தொடங்குவன, இது மாதிரியானவை அந்த அந்த: வித்யையைத் துதிப்பதற்காகவே. 4. 4. ஸந்யாஸிகள்--கர்மாக்கள். ப்ரஹ்ம லித்மையில் ஸந்யாஸிகளுக்கு அதிகாரம் உண்டு; யஜ்ஞம் முதலியன இல்லை. இவர்களுக்கு ஆச்ரமத்திற்குரிய கர்மங்களே ப்ரஹ்ம வித்யையை அனுஷ்டிக்கப் போதும். 4. 5. இல்லறம்-- கர்மாக்கள். இல்லறத்திலுள்ளோர் ஸந்யாஸிகளைப் போலே கர்மங்கள் இல்லாமல் ப்ரஹ்ம வித்யை அநுஷ்டிக்கலாமா? வேதனம் என்ற ஞானம் மோக்ஷ ஸாதனமாக விதிக்கப்பட்டுள்ளது; இது த்யாநம் முதலான சொற்களால் சொல்லப்படும் உபாஸநமே யாகும். இது எம்பெருமானுக்கு உகப்பைத் தரும் யஜ்ஞம் போல்வதால் உண்டாகும். ஆதலால் அந்த அந்த ஆச்ரமத்திற்கான கர்மாக்கள் செய்ய வேண்டும். 4.,6. இல்லறம்: சமதமம். சமதமங்கள் என்பது இந்த்ரியங்களை அடக்குவது. -இந்த்ரியங்களை ஒடுக்குவதால் கர்மங்கள் செய்ய இயலாதே என்பது சங்கை. “தஸ்மாத் ஏவம் வித் சாந்தோ தாந்த: உபரத:'” என்ற வேத வாக்கியத்தில் இந்த்ரியமான மனத்தை அடக்கினால்தான் வெளி இந்த்ரியங்களையும் அடக்கிக் காம்ய கார்மங்களிலிருந்து நீங்கலாகுமே என்று வந்துள்ளது சமம், தமம் இவை மனத்தை ஒருமுகப்படுத்துகன்றன. ஆதலால் இல்லறத்தனனான ப்ரஹ்ம நிஷ்டனுக்கும் சமதமங்கள் ஒடுக்க வேண்டும். 4. 7. அநாச்ரமிகள்--ப்ரஹ்ம வித்யை. ப்ரஹ்மசார்யம், இல்லறம், துறவு, வானப்ரஸ்தம் ஆகிய இந்த நாலு ஆச்ரமங்களிலும் இல்லாதவர்கள் அநாச்ரமிகள் இவர்களுக்கு ப்ரஹ்ம வித்வையில் ௮திகாரம் உண்டா? ரைக்வர், பீஷ்மர் இவர்கள் அநாச்ரமிகளாகவே வாழ்ந்தனர். ரைக்வரா் ப்ரஹ்ம நிஷ்டராக இருந்தார்; பீஷ்மர் வித்யா நிஷ்டராக இருந்தார். ஐபம் முதலானவை அநாச்ரமிகள் விஷயத்தில் அங்கமாகின்றன என்பது சாஸ்த்ரம். "**தபஸா ப்ரஹ்மசர்யேண”* என்ற இடத்தில் பெண்பாலரோடு சேர்க்கை யில்லாத ஜீவாத்மாக்கள் பரமாத்மாவை உபாஸித்து ஆதித்யனை அடைகிறார்கள் என்பது காணலாம். 4, 8. ப்ரஹ்ம வித்யை : அங்கங்கள். ப்ரஹ்ம வித்யைக்கு ஆத்ம குணங்களாகிய சமமும் தமமும் அங்கங்கள் என்று முன்பு கூறப்பட்டது. “அது முநி:*” என்ற இடத்தில் முனிசப்தம் வேறோர் அங்கமாக விதித்துள்ளது. இது மெளனம் என்ற கருத்துடையது. பால்யம், பாண்டித்யம் இவற்றோடு மூன்றாவதஈாகக கூறப்பட்ட இது பகவானுடைய திருமேனியை மனனஞ் செய்வதற்கே. 4. 9, ப்ரஹ்ம வித்யை--உற்பத்தி காலம். ப்ரஹ்ம வித்யைக்குக் காரணம் புண்ய கர்மங்கள். -இக்கர்மங்கள் செய்த உடனே ப்ரஹ்ம வித்யை உண்டாகிறதா? வேறே ஒரு காலத்தில் உண்டாகிறதா? அல்லது நிச்சயமில்லையா? என்பது சங்கை. புண்ய கர்மாக்கள் செய்ததும் வித்யைக்குத் தடை யில்லாவிட்டால் வித்யை உடனே உண்டாகும்; தடை இருந்தால் வேறொரு காலத்தில் வித்யை ஏற்படும். தடைகள் ஏற்படுவது வலி மிக்க பூர்வ கர்மங்களாலே. மோக்ஷத்தைக் குறிப்பாகக் கொண்ட உபாஸனங்கள் விஷயத்திலும் தடை இல்லாமல் இருந்தால்தான் பலனை கைகூடும். யாகம் போன்ற கர்மாக்களோடு செய்யும் பகவத் உபாஸநம் மோக்ஷத்தை அளிக்கும். இவ்வாறு பகவானுக்கு ஆராதனமான கர்மத்தில் இதன் ரஸத்துடன் உபாஸிக்க வேண்டும். ஸத்வித்யைகளில் ச்வேத கேது முதலானோரது கதைகள் அந்த வித்யைகளைப் பு கழ்வத்ற்காக ஏற்பட்டவை. ஸந்யாஸிகள் தங்களது கர்மங்களைச் செய்யவேண்டும், யாகம் போன்றவை வேண்டியதில்லை. இல்லறத்திலிருக்கும் முமுஷுக்கள் தங்கள் ஆச்ரமத்திற்கான தர்மங்களை ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாகச் செய்யவேண்டும். யஜ்ஞம் முதலியன செய்யத் தகுதியள்ளவர்களுக்கு சமம், தமம் இவை உபாஸநத்திற்கு அங்கம். விதுரனுக்கும் (மனைவி யில்லா தவனுக்கும்) ப்ரஹ்ம உபாஸநத்திற்கு தகுதி உண்டு. தங்களது ஆச்ரமத்திலிருந்து நழுவினால் ப்ரஸ்ம உபாஸனத்திற்குத் தகுதி இல்லை. , பசுவானது திவ்ய் மங்களத் திருமேனியைச் சிந்திப்பதற்காக ப்ரஹ்ம உபாஸனத்திற்கு மெளனம் அவசியம் மோக்ஷத்தைக் காட்டிலும் வேறான பலன்களைக் கருதிச் செய்யும் உபாஸனத்திற்குப் பலன் உடனே நேரும் என்பதில்லை. ---------------------- நாலாம் அத்யாயம் 1. முதற் பாதம் பகவானே உலகத்திற்குக் காரணம் என்பது முதல் இரண்டு அத்யாயங்களில் ஐயந் திரிபற நிரூபிக்கப் பட்டது. மூன்றாவது அத்யாயத்தில் விளக்கப்பட்டது:-பகவானைப் பெறுவதற்கு ஸாதனம், வித்யா ரூபமான உபாஸநம் என்பது. ஞானம் மாத்திரம் உபாயமன்று, இது உபாஸநத்திற்கு அங்கம், பக்தி ரூபமானது, பகவானே விஷயமானது. இந்த வித்யையின் இயல்பு, பயன் இவை இந்த அத்யாயத்தில் வரும் விஷயமாகும். இந்த அத்யாயம் ப்ரஹ்ம வித்யையின் பலனை விளக்குகிறது, ஆதலால் பல அத்யாயம் என்பது இதில் முதற் பாதம். கருமம் தீரும் வகையும், இரண்டாம் பாதம் ஸ்தூல சரீரம் தீரும் வகையும், மூன்றாம் பாதம் ஸுக்ம சரீரம் தீரும் வகையும் கூறுவன. நாலாவது பாதம் வெளியிடுவது? பகவானைப் பெற்று இன்பமுறுவது, ஜீவனின் இயல்பான ஸ்வரூபம் முழுதும் ஒளிர்வது, ஜீவன் இவ்வுலகுக்கு மீளாமை. இந்த நான்கு பாதங்கள் முறையே ஆவ்ருத்தி பாதம், உத்கராந்தி பாதம், கதி பாதம், ப்ராப்தி பாதம், ஆவ்ருத்தி பாதத்தில் ப்ரஹ்ம வித்யையானது பலன் கிடைக்கும் வரையில் ஆவ்ருத்தி செய்ய வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் ஆராயப்படுகின்றன. 1. 1. ப்ரஹ்ம வித்யை--இதற்காகும் காலம். உபாஸநதம், வேதனம், த்யானம் இலை ஓரே பொருளுடையன. த்யானம் என்பது எண்ணெயின் தாரை போல இடையறாமல் நிகழவேண்டும். இதுவே ஸ்ம்ருதி எனப்படுவது. இதற்கு அங்கங்கள் யமம், நியமம், ஆஸநம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம். தாரணம். தேரே காணும் நிலை வரையில் உபாஸநம் செய்யவேண்டும். 1, 2. உபாஸிக்கும் வகை. உபாஸநம் செய்யும் முறை, **ப்ரஹ்மம் நானே?” என்று. ஐகத் கர்ரணனான பகவான் தனக்குச் சரீர பூதனான ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவன்: இருளைக் காட்டிலும் ஒளிபோலும், பாபத்தைக் காட்டிலும் புண்யம் போலும், சரீரத்தைக் காட்டிலும் ஆத்மா போலும் இவ்வேறுபாடு. சாஸ்த்ரங்கள் வெளியிட்டுள்ளது. பகவான் ஆத்மாவுக்கு அந்தர்யாமி, ஆத்மாவின் வெளியேயும் உள்ளேயும் வியாபித்திருக்கிறான். ஆத்மாவை நியமிக்கிறான். இவ்வாறு பகவானது குணங்களை நினைத்து இவன் தனக்கு அந்தர்யாமியாக நினைத்து உபாஸிக்கவேண்டும். ஜீவாத்மா சரீரத்திற்கு ஆத்மாவாக இருப்பதாலே '*நான் மனிதன்''என்று கருதுகின்றது. இதுபோல் ஜீவாத்மாவுக்கு ஆத்மாவான பரமாத்மாவை ஜீவாத்மா தான் என்று கருதுவது தகும். ஆதலால் பகவானை ஆத்மா என்று உபாஸிக்கவேண்டும்' 1. 3. ப்ரதீகங்கள்--உபாஸநம், ப்ரஹ்மத்தின் நாமம், மனம் போன்றவை ப்ரதீகங்கள், இவை ப்ரஹ்மத்தைப் போல ௨பாஸகனுக்கு ஆத்மா அல்ல. ப்ரஹ்மம் இவற்றைக் காட்டிலும் உயர்ந்தது, அரசனை வேலைக் காரனனாகக் கருதிப் பேசினால் ஒன்றும் நலம் பெறுவதற்கில்லை--பெறுவது தண்டனையே ஆதலால் ப்ரதீகங்கள் ஆத்மா என்று உபாஸிக்கலாகாது. 1. 4. உத்கீதம், ஆதித்யன். உபநிஷத் வாக்கியங்களில் யாகத்திற்கு அங்கமாக உத்கீத உபாஸநம் சொல்லப்படுகிறது. உத்கீதத்தில் ஆதித்யனை உபாஸிப்பதா? ஆதித்யனில் உத்கீதம் என்று உபாஸிப்பதா? உத்கீதத்தால் ஆதித்யன் முதலான தேவர்களை ஆராதிப்பதால் பலன் கிடைக்கிறது அன்றியும் இவர்கள் உத்தீதத்தை விட உயர்ந்தவர்கள். ஆதலால் உத்கீதத்தில் ஆதித்யன் இருப்பதாக உபாஸநம் செய்யவேண்டும். 1, 5. உபாஸநம்: நிலை. உபாஸநம் பல முறை செய்யவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. உபாஸநம் செய்பவன் உட்கார்ந்தே செய்யவேண்டும். அப்போதுதான் மன ஒருமைப்பாடு தேரக்கூடும்; த்யானம் செய்யமுடியும். நடந்தோ நின்று கொண்டோ செய்தால் ஆயாசம் ஏற்படும்; மன ஒருமைப் பாடு இராது, உபாஸநம் த்யான ரூப மாகையாலே மன ஒருமைப் பாடு இன்றியமையாதது. த்யானம் எண்ணெயின் தாரை போலே இடையறாமல் தொடர்ந்து நிகழவேண்டும்; மன ஒருமைப்பாடின்றி இது சாத்யமாகாது. நினைவு வெள்ளம் த்யானமாகும். த்யானம் செய்யும் போது அசையாமல் இருக்சுவேண்டும். ஆதலால் பரிசுத்தமான இடத்தில் ஏகாந்தமாக உட்கார்ந்து த்யானம் செய்ய வேண்டும். மேடு பள்ளங்கள் உள்ள இடமானானல் உடல் அசைவும், மனக் கலக்கமும் நேரும். 1. 6. உபாஸநம் தேசம், காலம். : மரணம் வரையில் உபாஸநம் தினந்தோறும் நடக்க வேண்டும். சாந்தோக்யதீதில் இவ்வாறே கூறியிருக் கிறது: இவ்வாறு அனுஷ்டித்து, ஜீவன் ப்ரஹ்மலோகம். சேருகிறான், இதினின்று மீட்சி இல்லை. 1. 7. சேர்ந்துள்ள பாவங்கள். தாமரை இலையில் ஜலம் ஒட்டுவதில்லை; இதே போல் ப்ரஹ்ம உயாஸகனிடம் பாப கர்மம் சேர மாட்டா. முன்னமே சேர்ந்துள்ள பாவங்கள் நெருப்பி லிட்ட பஞ்சப்பொதி போல் அழிந்துவிடும். இனி வரும் பாவங்கள் கவனக் குறைவால் நிகழ்வன; அறிந்து செய் வனவல்ல. இவை உபாஸகனிடம் ஒட்டுவதில்லை. இது சாந்தோக்யத்தின் கருத்து. 1. 8. புண்ணியத்தின் பலன். மோஷம் பெறுவதற்குப் புண்ய கர்மாக்களும் தடையாவன; இவற்றின் பயனை அனுபவித்தே மோக்ஷம், ஆதலால் இவையும் பாவச் செயல்கள் போல்வன. சாந் தோக்யத்தில்: ஸர்வே பாப்மாநோ யதோ நிவர்த்தந்தே (8-41) என்ற இடத்தில்: புண்யமும் பாப சப்தத்தால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதலால் முதலில் சேர்ந்துள்ள புண்யங்கள் அழிகின்றன; பின்பு நிகழ்வன ஒட்டாமல் போகின்றன. 1. 9. முன் செய்த புண்ய பாவங்கள். ப்ரஹ்ம வித்யைக்கு முன் நேர்ந்த புண்ய பாவங்கள் அழிகின்றன என்பது முன்பு கூறப்பட்டது. பலன் கொடுக்கத் தொடங்கிய கர்மம்--ப்ராப்த கர்மம் என்பது அழியாது. சாந்தோக்யம் (6-14-4) கூறுவது: உபாஸகனுக்கு ப்ராரப்த கார்மம் மூடியும் சரீரத்தின் இறுதி வரை ப்ரஹ்மத்தை அடையக் காலதாமதம் ஏற்படுகிறது. அதற்குப் பின் ப்ரஹ்ம ப்ராப்தி . புண்ய பாவங்கள் அழிந்தால் சரீரம் இல்லை. ஏனெனில் சரீரம் புண்ய பாவ அனுபவத்திற்கே. ஆதலால் பலன் கொடுக்கத் தொடங்கிய பின் நேரும் புண்ய பாவங்கள் அனுபவித்தே தீரவேண்டும். “நூறு கோடி கல்பமானாலும் பாவம் அனுபவிக்காமல் அழியாது” என்ற வாக்யம் கர்மங்களின் பலனைக் காட்டுவதற்காகவே . ப்ரஹ்ம வித்யை யினால் இவை தாமே அழியும். 1. 10. நித்ய நைமித்திக கர்மாக்கள். ப்ரஹ்ம வித்யைக்குப் பின் நேரும் புண்ய பாவங்கள் ஒட்டாமற் போகின்றன என்று விளக்கப்பட்டது. இவை ஓட்டாவிடில் நித்யமாகச் செய்யும் கர்மாக்களும் நைமித்கிக கர்மாக்களும் செய்யவேண்டியதில்லையே என்பு ஒரு சங்கை. வித்யை உண்டாவதற்காக இவை விடாமற் செய்யவேணடுவன. வேத வாக்கியம் ஓன்று: வேத அத்யனத்தாலும், யஜ்ஞத்தாலும், தானத்தாலும், பலனைக் கோராத தவத்தினாலும் ப்ரஹ்ம ஞானிகள் பரமாத்மாவை உபாஸிக்க விரும்புகிறார்கள் என்று. இவையாவும் வித்யைக்கு அங்கங்கள். வித்யை சரீரம் முடியும் வரையில் செய்யவேண்டியது. இக் கர்மங்கள் செய்யாவிடில் இதனால் விளையும் பாவம் மன நிலையைக் குலைத்து விடும். ஆதலால் மனம் தூயதாவதற்காக நித்ய நைமித்திகக் கர்மாக்களை எப்போதும் செய்ய வேண்டும். 1. 11. ப்ரஹ்ம வித்யைக்குப் பின் சேரும் கர்ம பலன்கள். இவை ப்ராரப்தங்கள் எனப்படும். கர்மாக்களின் பலன் அனுபவித்தே இவை தீரும்; ஆதலால் ஓர் சரீரத்தின் முடிவில் தீரும் என்பதற்கல்லை; எந்த ஜன்மத்தில் அழிகின்றன என்பதும் சொல்ல முடியாது. இதுவரையில் தேறிய கருத்துக்கள்: (1) ப்ரஹ்ம. வித்யைக்கு முன் சேர்ந்த புண்ய பாவங்கள் ஸஞ்சிதம் எனப்படுவன -இவை 'வித்யையின் மகிமையால் அழிகின்றன. (2) ப்ரஹ்ம வித்யைக்குப் பின் : கவனக் குறைவால் தேரும் புண்ய பாவங்கள் பகவானது கோபத்தை விளைவிப்பன அல்ல; ஆகையால் ' இவை ஓட்டுவனவல்ல. (3) ஒரு பலனைக் கருதி உபாஸகன் செய்யும் புண்ய கர்மாக்கள் வலி மிக்க பாவ்ச் செயல்களால் தடைபட்.டால், ப்ராரப்த கர்மங்கள் முடியும்போது இவை நீங் கும். ஸஞ்சித புண்யங்களோடு இவை இவனுடைய அநுகூலரிடம் சேரும். (5) வித்யை உண்டான பின் புத்தி பூர்வமாகச் செய்யும் பாவச் செயல்களின் பயன், எஞ்சி யிருப்பனவாய் முன் சேர்ந்த பாவச் செயல்களின் பலனோடு இவனுடைய விரோதிகளிடம் சேரும் -இவ்வாறு பகவான் சங்கல்பித்தது. மோஷம் பெறுவதற்காகச் செய்யும்' பகவத் உபாஸநம் ஆயுள் வரையில் திரும்பாத திரும்பச் செய்ய வேண்டும். பகவானது ஸ்வரூபம் தனக்கு ஆத்மா என்றே உபாஸிக்க வேண்டும். மனம் முதலான ப்ராக்ருதங்களை விட உயர்ந்தது ப்ரஹ்மம், ஆதலால் ப்ரஹ்ம உபாஸநங்களில் மனம் முதலியவற்றை ஆத்ம: எனக் கருதி உபாஸிக்கக் கூடாது உத்தீதம் முதலானவற்றில் அவற்றின் தேவதைகளை எண்ணி உபாஸநம் செய்ய வேண்டும். உட்கார்த்தே உபாஸநம் செய்யவேண்டும்; -மரணம் வரையில் அனுஷ்டிக்க வேண்டும். _ உபாஸஷநத்தின் பலனாக நேரே காணும் காட்சி போன்ற நிலை அடையும்போது முன்னமே செய்த புண்ய பாவங்கள் அழிந்து விடுகின்றன; பின்பு அறியாமல் செய்யும் பாவங்கள் ஒட்டுவனவல்ல. பலன் கொடுக்கத் தொடங்காத புண்ய பாவங்கள் கிரமமாகத் தாமே அழிந்து விடுகின்றன. -------------------- 2. இரண்டாம் பாதம் ப்ரஹ்ம உபாஸநம் நிறைவடைந்த பின் உபாஸகனது புண்ய பாவங்கள் அழியும் என்று முன் பாதத்தில் விளக்கி யுள்ளது. மரண மடையும் ஜீவன் மோக்ஷம் பெற்ற பின் அர்ச்சிராதி மார்கமாகப் பரமபதம் சேரும் வகை மூன்றாம் பாதத்தில் விவரிக்கப்படுகிதது. ப்ரஹ்ம வித்யையின் பலனாக ஜீவன் ஸுஷும்நா நாடி வழியாகச் சரீரத்திலிருந்து கிளம்பும் வகை (உத்க்ராத்தி) இப் பாதத்தில் ஆராயப்படுகிறது. 2. 1. வாக் இந்த்ரியம். “வாங் மநஸி ஸம்பத்யதே'” என்கிறது ஒரு வேத வாக்கியம். மரணத்தின்போது வாக் இந்த்ரியத்தின் செயல் குலைகிறது; இந்த இந்த்ரியம் மனத்தோடு சேருகின்றது. மனத்தின் செயல் அடங்கவில்லை; ஆதலால் செயல் அடங்கிய வாக்கு இத்துடன் சேருகிறது. வாக்கைப் பின்பற்றி இந்த்ரியங்கள் யாவும் மனத்துடன் சேருகின்றன. 2. 2. மன இந்த்ரியம்., மனம் அன்னமயம், ப்ராணன் ஜலமயம் என்கிறது சாஸ்த்ரம், அதாவது மனம் அன்னத்தாலும், ப்ராணன் ஜலத்தாலும் செயல்படுகின்றன என்பது கருத்து. மனம் ஸாத்விக அஹங்காரத்தின் விகாரம், வாயு ரூபமான ப்ராணன் ஆகாசத்தின் விகாரம், இந்தரியங்களோடு கூடிய மனம் ப்ராணனோரடு சேர்ந்தடைகின்றது. 2. 3. ப்ராணன். இந்தரியங்களுடன் சேர்த்த மனத்துடன் இணைந்த ப்ராணன் இந்த்ரியங்களுக்குத் தலைவனான ஜீவாத்மாவிடம் சேருகின்றது. ப்ராண: தேஜஸி”' என்பது சாந்தோக்ய வசனம். யமூனை கங்கையோடு சேர்ந்ததே கடலை அடைகிறது. எனினும் யமுனை கடலை அடைகிறது என்கிறோம். இதைப் போல இங்குக் கருத்து: ப்ராணன் என்பது மனம் இந்த்ரியங்கள் இவற்றுடனேயே ஜீவாத்மாவைச் சேருகிறது என்பதே. 2. 4. பஞ்ச பூதங்கள். “ப்ராண: தேஜஸி'' என்று முன்பு கூறப்பட்டது. அதாவது ப்ராணன் என்பது மனம், இந்தீரியங்கள் இவற்றுடன் தேஜஸ்ஸைச் சேருகின்றது. தேஜஸ் என்பது பூதங்களின் சேர்க்கையாலே ஏற்படுகிறது என்று சாஸ்த்ரம் கூறுகிறது. தேஹத்திலிருந்து கிளம்பும் ஜீவன் பஞ்சபூத மயம் என ப்ருஹதாரண்யகம் வெளியிட்டுள்ளது (6-4-5) “-ப்ருத்வீமய: ஆயபோமய: தேஜோமய;”” என்று பூமி, ஜலம், தேஜஸ் இவற்றாலானது. அதாவது இவை மூன்றும் சேர்ந்தது தேஜஸ். ஆதலால் ப்ராணன் பூத் ஸுிஷ்மங்களோடு சேருகின்றது என்பது தெளிவு. 2. 5. உத்க்ராந்தி. உத்க்ராந்தி என்பது. சரீரத்திலிருந்து ஜீவன் பிரிந்து செல்லுதல். இது ப்ரஹ்ம ஞானிகளுக்கு இல்லை, மற்றை யோர்க்கே என்பது சிலரது கருத்து. இதன் காரணம்: ப்ரஹ்ம ஞானியின் மனத்திலுள்ள விருப்பங்கள் நீங்குகின்றன. அப்போதே இவனுக்கு மோக்ஷம் என்று சாஸ்த்ரம் கூறுகிறது. இதை ஆராய்ந்தால் இவனிடம் புண்ய பாவங்கள் ஓட்டமட்டா;ஆதலால் இங்கு வாழும்போதே ப்ரஷ்ம அனுபவம் பெறுகிறான் என்பது தேறும். இங்கு இவ்வாறானளோர் வாழும் நிலையே முக்தி என்கிறார்கள் இக்கருத்துடையோர். ஜீவித்தல் முக்தி இவை மாறுபட்ட கருத்துக்கள்; இவை இணைந்து நிகழமாட்டா. ஆதலால் ப்ரஹ்ம ஞானிகளுக்கும் உத்க்ராந்தி உண்டு என்பது தீர்வு. கடவல்லியிலிருந்து தெரிந்துகொள்வது ((2-8-16]); உடலில் பல. நாடிகள். உள்ளன;. இவழ்றுள், ,ஸுஷும்ந. என்று நாடியின் வழியாகச் செல்பவன் (மோக்ஷ மடைகிறான், மற்றை நாடிகள் எம்ணார மார்கங்கள் என்பது. முக்தி அடைபவன் உபாஸகன். ஆதலால் இவனுக்கு உத்கராந்தி உண்டு என்பது தேறுகின்றது. மரண நிலையில் சரீரத்தில் உஷ்ணம் ஒரிடத்திலேயே காணப்படுகிறது; இது ஸுஷ்ம தேஹத்தின் வெப்பம். இது யாவர்க்கும் உண்டு. இதனாலும் உபாஸகனுக்குக் உத்க்ராந்தி உண்டு எள்றறியலாம். அர்ச்சிராதி வழி யாக உபாஸகன் ப்ரஹ்மத்தை அடையும் வரையில் ' ப்ராணன் இவனுடனேயே இயங்குகிறது. ஞானியைப் பற்றிச் சொல்லும்போது இவன் மேன் தோக்கிச் செல்லும் நாடி வழியாக (ஸு ஷும்நா) சூர்ய மண்டலத்தைப் பிளந்து கொண்டு நான்முகனின் உலகம் செல்லுகிறான் என்பதும் சாஸ்த்ரத்தில் உள்ளது. ஆதலால் ஞானிக்கும் உத்க்ராந்தி உண்டு. மூர்த்ந்ய நாடியில் புகுவதற்கு முன் இந்த உத்க்ராந்தி இம்மூவகை யினர்க்கும் உண்டு. 2. 6. பூத ஸுக்ஷூமங்கள். ப்ராணனோடு சேர்ந்த பூத ஸூக்ஷ்மங்கள் எங்குச் செல்கின்றன? ““தேஜ: பரஸ்யாம் தேவதாயாம்'”' என்பது வேத வாக்கியம். இதயத்திற்கு அந்தர்யாமியான பகவானிடம் பூதங்கள் சேருகின்றன என்பது கருத்து. விழிப்பு நிலையில் அனுபவிக்கும் இன்பங்களால் விளையும் களைப்பு ஆறுவதற்கே ஜீவன் தூங்கும் நிலையில் பரமாத்மாவோடு சேருகிறான். ஸ்ருஷ்டியில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களின் களைப்பு ஆறுவதற்கு ப்ரளய காலத்தில் ஜீவன் பசகவானோடு சேருகிறான். மரண காலத்தில் பூத ஸுிஷ்மங்கள் எடுக்கப்படும்போது (நேரும் களைப்பு ஆறுவதற்கு ஜீவன் பரமாத்மாவோடு சேருகிறான். இதுபோல் பூத ஸக்ஷ்மங்கள் இதயத்தி லுள்ள பரமாத்மாவோடு சேருகின்றன. 'இவைகளோடு சேர்ந்த. ஜீவன்!.அந்தர்யரமியான பரமாத்மாவை விட்டுப் பிரிய முடியாதவாறு.சேருகிறான்.. 2. 7. ப்ரஹ்ம ஞானிக்கு உத்க்ராந்தி. ப்ரஹ்மஞானி ' உபாஸநம், செய்யும் போது தான் மூர்தந்யநாடி.வழியாகச் சரீரத்திலிருந்து வெளிக்கிளம்பி அர்ச்சிராதி மார்கத்தாலே: சென்று பரமாத்மாவை அடையப் போவதாக தினந்தோறும் இதையே சிந்தனை செய்வதால் பகவான் இதையே இவனுக்கு அருள்கிறான். இவனது இதயத்தில் இருள் நீங்கி இந்த மூர்தந்ய நாடி யில் ஒளி: சேருகிறது. இந்த ஒளியால் இந்த நாடியின் வ்ழியே ஜீவன் கிளம்புகிறான். . 2. 8. ஜீவன் மேலே செல்லும் விதம். சரீரத்தை விட்டு வெளிக் இளம்பும் ஜீவன் சூர்ய கிரணங்களின் வழியாக மேலே செல்லுகிறான். சூர்ய கிரணங்கள். இரவில் காண்பதில்லை; ஜீவனின் நிலை என்ன? என்ற சங்கை எழுகின்றது. இரவு வேளையிலும் சூரிய கிரணங்கள் உள்ளன; கண்ணுக்குப் புலனாவ தல்ல. இரண்டு கிராமங்களை இணைக்கும் நெடுஞ் சாலை போல் சூரிய கரணங்கள் மேலுலகையும் பூமியையும் இணைக்கின்றன. இவை. நாடிகளிலும் ப்ரகாஸி க்கின்றன. ஆதலால் ப்ரஹ்மஞானி இரவில் மரணமடைந்தாலும் சூரிய கரணங்களின் வெளிச்சத்தாலே மேலே. சென்று பரமாத்மாவை அடைகிறான், 2. 9. இரவில் ஜீவன் மரண மடைந்தால்? மோக்ஷ மடையும் ஞானிக்குச் சரீரத்தோ டிருக்கும் வரையில் கார்மத்தோடு தொடர்புண்டு. சரீரத்திற்குக் காரணமான ப்ராரப்த கர்மம் இரவிலும் முடிவடையும் ; அப்போது மரணம் நேரும். இவ்வாறு மரணம் நேரும் போதே மோக்ஷமும் நேரும். இவனுக்குச் சரீர சம்பந்தத்திற்குக் காரணமில்லை; ஆதலால் இரவில் இறத்தாலும் ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு, 2.10. தஷிணாயனத்தில் மரணம். தஷிணாயனத்தில் மரணமடைந்தால் ஜீவன் சந்த்ரனை அடைகின்றான் என்று சாஸ்த்ரம் கூறுகிறது, சந்த்ரனை அடைந்தால் ஸம்ஸார மண்டலத்திற்கு மீட்சியும். சொல்லப்படுகிறது. பீஷ்மர் தஷிணாயனத்தில் மரண மடைய விரும்பாதவராய் உத்தரர்யணத்தை நோக்கிக் கொண்டிருந்தார். ஆதலால் தக்ஷிணாயனத்தில் மரணமடையும் உபாஸகனின் நிலை என்ன? சந்த்ரனிடம் சேர்ந்து பூமிக்கு மீள்வது என்று சொல்லியது ப்ரஹ்மஞான மில்லாதவனுச்கு: இரவில்: மரணம் ஏற்பட்டால் ப்ரஹ்மஞானி சந்த்ரனை அடைந்து சிறிது தேரம் தங்கி உபசாரங்களைப் பெற்று மேலே செல்லுகிறான் என்பதே ஊகிக்கவேண்டியது. பீஷ்மர் தாம் இஷ்டப்பட்ட காலத்தில் மரண மடையக்கூடும் என்ற வரம் பெற்றிருந்தார். உத்தராயண காலத்தின் சிறப்பைக் காட்டுவதற்கே அவர் இதை அபேஷித்தார். மரண மடையும் ஜீவனுடைய வாக் இந்த்ரியம் மனத்துடன் சேருகின்றது;மனம் ப்ராணனோடு சேருகின்றது. ப்ராணன் ஜீவனோடு சேருகின்றது. ஜீவனோடு கூடிய ப்ராணன் மற்றைய பூதங்களோடு தேஜஸ்ஸோடு சேருகின்றது. யாவும் பரமாத்மாவோடு சேருகின்றன; லயமடையவில்லை. ஜீவன் மூர்தந்ய நாடி வழியாக வெளி வருகின்றான்; இது உத்காந்தி ஆகும். ஜீவன் சூர்யனின் கரணங்களின் வழியாக மேலே செல்லுகிறான். இரவில் மரண மடைந்தாலும், தஷிணாயனத்தில் மரண மடைந்தாலும் உபாஸகனுக்கு ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு. ---------- ப 3. மூன்றாம் பாதம் 3.1. அர்ச்சிராதி. ஜீவன் இதயத்தை விட்டு வெளி வந்ததும் செல்லும் மார்கம் அர்ச்சிராதி என்பது. இந்த வழியில் இவனை அழைத்துச் செல்லும் தேவர்கள் அர்ச்சிஸ் (அக்நி), அஹஸ் (பகல்), சுக்லபக்ஷம், உத்தராயணம், ஸம்வத்ஸரம் (ஆண்டு), ஆதித்யன், சந்த்ரன், வைத்யுதன் (மின்னல்), வருணன், இந்தீரன்,ப்ரஹ்மா. உபதிஷத்துக்களில் சில வேறுபாடுகள் இருந்தாலும் அர்ச்சிராதி மார்கம் ஒன்றே வெவ்வேறல்ல. ஃ. ஆதிவாஹிகர். ப்ரஹ்ம ஞானியை அர்ச்சிராதி கதியில் அழைத்துசி செல்லும் தேவர்கள் ஆதிவாஹிகர். "இவர்கள் தங்கள் தங்கள் ஸ்தானம் வரையில் அழைத்துச் செல்லுகின்றனர். வித்வத் புருஷன் அமாநவன் எனப்படும் தேவன்? இவன் முக்தனை பகவானிட்ம் அழைத்துச் செல்லுகிறான். 3. 9. அர்ச்சிராதி கதியில் செல்வோர் யார்? ப்ரஹ்ம உபாஸநம் செய்தோர் ப்ரஹ்மத்தை அடைகின்றனர் அர்ச்சிராதி வழியாக. கார்ய ப்ரஹ்மமான நான்முகனை உபாஸிப்பவர்கள் ப்ரஹ்ம லோகத்தை அடைகின்றனர். ப்ரஹ்மாவின் ஆயுட்காலம் வரையில் அங்குத் தங்கி அவன் பரமாத்மாவிடம் போகும்போது உடன் செல்லுகின்றனர். இதுபாதரி என்பவரின் கருத்து. தேவதாந்த்ர உபாஸனம் செய்வோர். அல்பமான, தாழ்வான பலனே பெறுவர். கேவலம் அத்மாவையே உபாஸனம் செய்வோர்க்கு நித்யமான பலன் கிடைத்தாலும், இவர்களது இன்பம் அல்பமானது, ஓரளவு உடையது. பஞ்சாக்நி வித்யாநிஷ்டர் ப்ரஹ்மத்தை அத்தர்யாமி யாகக் கருதுவதால் இவர்களுக்கும் அர்ச்சிராதி உண்டு. சுருக்கம் ப்ரஹ்ம வித்யைகளை உபாஸிப்பவர்கள் எந்த வித்யையாயினும் ஒரே அர்ச்சிராதி வழியாலே ஸ்ரீவைகுண்டம் சேருகின்றனர். முக்த் புருஷன் ஸம்வத்ஸரத்தை அடைத்த பின் வாயுவை அடைந்து ஆதித்யனை அடைகிறான்; தடித் என்ற மின்னலுக்குப் பின்பு வருணன், இந்த்ரன், பிரமன் இவர்களை அடைகிறான். அர்ச்சிஸ் முதலான தேவர்கள் முக்த்னை ஆங்காங்கு அழைத்துச் செல்லுகின்றனர்; இவர்கள் ஆதிவாஹிகர். ப்ரஹ்ம உபாஸகர்களையும், தம் ஆத்மாவை உபாஸிக்கும் கேவலர்களையுமே ஆதிவாஹிகர் அழைத்துச் “செல்கின்றனர். -------------- 4, நாலாம் பாதம் 4. 1. ஜீவன்--ஸ்வரூபம். அர்ச்சிராதி கதியில் செல்லும் ஜீவன் பரமாத்மாவை அடைத்து தனது இயல்பான ரூபத்துடன் மின்னுறான் என்று சாந்தோக்யம் கூறுகிறது (8-12-2). ரூபம் என்பதற்குப் புதிதாக ஒரு சரீரம் என்பது கருத்தன்று, -இவனது ஸ்வரூபமும் விரிவடைந்து விளங்குகிறான். இவனுக்கு எப்போதும் நிலையானது பூர்ணமான ஞானம். சரீரத்தோடு இருக்கும்போது இந்த ஞானம் மறைக்கப்படுகிறது. சரீரத்திலிருந்து விடுபட்டதும் இது பூர்ணமாக விளங்குகிறது. ஜீவனது ஸ்வரூபம்? பாவம், மூப்பு, மரணம், வருத்தம், பசி, தாகம் இவை யாவும் அற்றது; தடைபடாத் விருப்பங்களும் சங்கல்பங் களும் வாய்ந்தது. இந்த எட்டு குணங்களும் முக்தி நிலையில் முற்றிலும் விளங்குகின்றன. ரத்னத்திலிருந்து அமுக்கை அகற்றினால் அது நன்றாக ஒனிர்கன்றது; புதிதாக ஓளி கொள்ளவில்லை. கிணற்றிலிருந்து மண்ணை வெளியேற்றினால் தண்ணீர் தோன்றுகிறது; இதுமுன்பு இருந்ததே; புதிதாக ஊறவில்லை. இதுதான் முக்தனுடைய ஸ்வகூபம். 4, 2, முக்தனின் அனுபவம். தத்வமஸீ”'--அந்தப் பொருள் நீ ஆகிறாய், “அய காத்மா ப்ரஹ்மா''-- இந்த ஆத்மா பரஹ்மமே ஆகும்- இவைபோன்ற வாக்கியங்கள் ஜீவனுக்கும் பகவானுக்கும். "ஒற்றுமையை வெளியிடுகின்றன. மேலும் சில வாக்கி யங்கள், பகவானுக்கு ஜீவன் சரீரம், பகவான் ஜீவாத்மா வில்: உள்ளும் புறமாகவும் அடர்ந்திருக்கிறான், இவனை ஜீவாத்மா அறியமாட்டான் என்று வேற்றுமையைக் 'குறிக்கின்றன. பகவானுக்கு உள்ள எட்டு குணங்கள் முக்த ஜீவனுக்கும் உள்ளன என்ற கருத்தும் வந்துள்ளது. இவற்றை ஆராய்ந்தால் தேறுவது: முக்தனது இயல்பு, இவனது குணங்களால் பகவானோடு ஓத்தது என்பதே. இவனும் பகவானும் ஒன்றே என்பது பொருந்தாது. 4. 3. முக்த ஜீவனின் ஸ்வரூபம். முக்தி அடையும் ஜீவனைப் பற்றி சாந்தோக்யம் (4-7-1) வெளியிட்டுள்ளவாறு: பாவ மற்றவன், யாவகை ஆனந்தமும் போன்ற குணங்கள் ஜீவன் பெறுகிறான் என்பதால் இவனது ஞானமும் சொல்லப்படுகிறது. உப்புக்கட்டியானநு உள்ளும் புறமும் நடுவும் ஒரே உவர்ப்பு மயமாக இருப்பது போல் முக்தனது ஞானமும் முழுதாக எங்கும் அடர்ந்துள்ளது. 4. 4. ஜீவன்-- ஸத்ய ஸங்கல்பம். முக்தி நிலையில் ஜீவன் ஸத்ய ஸங்கல்பம் என்ற குண மூடையவன் என்று அறிகிறோம். “£ஸ தத்ர பர்யேதி ஐத் இரீடந் ரமமாண: ஸ்த்ரீ பிர்வா யாநைர் லா ஜ்ஞாதிபிர் வா?” ஜீவன்விளையாடிக்கொண்டு களித்து, ஸ்த்ரீகளோடும், வாகனங்களிலும், உற்றாரோடும் இன்ப முறுகிறான் என்கிறது சாந்தோக்யம் (9-72-22). இவ்வாறு முக்தன் செயல்படுவது தனது ஸங்கல்பத்தா லேயே? வேறு முயற்சி எதுவும் கொள்வதில்லை. சங்கை: முக்தன் ஸ்த்ரீகள் முதலோருடன் களிப்பதாகக் கூறுவதால் இவனுக்குக் கர்மத்தோடு தொடர்பு -திகழக்கூடும். விளக்கம் : ஜீவன் ஸத்ய ஸங்கல்பன் என்பதால் இவன் பகவானைத் தவிர வேறு எதற்கும் வசப்பட்டவன் அல்லன்; ஆதலால் இவனுக்கு விதி, தடை என்பன இல- ஆக இவன் கர்மம் முதலான எதற்கும் வசப்படுவதில்லை- இவன் நிலையாக அனுபவிப்பவை பகவானது ஸெளந்தர்யம், சல்யாண குணங்கள், இருவடிகளில் கைங்கர்யம் செய்வது போல்வன. 4. 5. முக்தன் --சரீரம், இந்த்ரியங்கள். தனது ஸங்கல்பத்தாலே முக்தன் பித்ருக்கள் போல்வாரைப் படைக்கிறான் என்று முன்பு கூறப் பெற்றது. இவ்வாறு படைக்கும்போது இவனுக்குச் சாரீரம் உண்டா என்பது சங்கை. சரீரத்துடன் இருந்தால் இன்ப துன்பங்கள் நீங்க மாட்டா என்பது ஒரு ச்ருதி வாக்யம், அதே இடத்தில் விளக்கம் பெறுவது: இந்தச் சரீரத்திலிருந்து கிளம்பி முக்தாத்மா பரஞ்சோதியான பரம புருஷனை அடைந்து இன்பமுறுகிறான் என்பது. ஆகையால் முக்தனுக்குச் சரீரமில்லை என்பது ஒரு கருத்து.: *ஸ ஏகதா பவதி, த்ரிதா பவதி, பஞ்சதா பவதி”'-- இவன் ஒரு படியாகிறான், மூன்று படியாகிறான், ஐந்துபடி யாகிறான் என்பது சாந்தோக்ய வாக்கியம் ஜீவாத்மா பல பகுதிகளாகப் பிரிய இயலாது. ஆதலால் பல சரீரங்கள் கொள்கின்றது என்பது ஊகிக்கலாம். இவ் விரண்டு கருத்துக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தீர்வு வரையப்பட்டுள்ளது.. ஒரு சங்கை: பரமபதத்தில் முக்தன் பெறுவது பரமாத்மாவை அனுபவிப்பது ஒன்றே. வேறு அனுபவத்திற்காக இவன் சரீரங்களைப் படைக்க எவ்வாறு விரும்புவான்? உலகில் இருக்கும்போது ஜீவன் கனவு நிலையில் தேர், அதில் பூட்டப்பட்ட குதிரைகள், குளங்கள், ததி போன்றவற்றை அனுபவிக்கிறான். இந்தப் படைப்பு: பகவனாலே என்பது தாம் அறிந்ததே, இதுபோல் இவன்து அனுபவத்திற்காக பசுவான் பித்ரு ஸமூகம் முதிய வற்றைப் படைக்கிறான்; இவ்வாறு படைப்பது முக்தனது போக ரஸத்திற்காக என்று ஊகிக்கலாம். வேரு சங்கை : கர்ம வசப்படாத முக்தன் பித்ருக்கள் முதலோரை விரும்புவது எவ்வாறு? விளக்கம் : பகவான் தசரதன், வஸுதேவன் முதலோரைப் படைத்து இவர்களுக்கு மகனாக லீலாரஸம் அனுபவித்தான். இதுபோல் முக்கர் அனுபவிப்பதற்கும் படைக்கிறான். அன்றியும் தமது ஸங்கல்பத்தாலே முக்தர்கள் இவ்வாறு படைக்கின்றனர் லீலா ரஸம் அனுபவிப்பதற்கு. வேதொரு சங்கை : முக்தன் பல சரீரங்கள் ஏற்றுக் கொள்கிறான் எனில் ஒரே ஆத்மா பல சரீரங்களில் எவ்வாறு இயங்கும்? விளக்கம் : முக்தன் அணு பரிமாண முள்ளவனானாலும் தனது அறிவினாலேயே யாவற்றையும் அறிந்து கொள்ளுமாறு பரவுகிறான். ஓரிடத்திலுள்ள விளக்கின் ஒளி எங்கும் பரவுவது போன்றது இது, அன்றியும் ஸெளபரீ பல வடிவங்கள் எடுத்துக்கொண்டு அனுபவித்தார் என்பது அறிவோம். முக்தன் ஓரே சமயத்தில் பல சரீரங்களையும் வியாபித்து எல்லாவற்றையும் அறிந்து நடத்துகிறான் என்று வேதம் வெளியிட்டுள்ளது. 4. 6, முக்தனது ஐச்வர்யம் : தனது அனுபவத்திற்காக முக்தன் சரீரங்களைப் படைக்கக்கூடும் என்பது முன்பு கூறப்பட்டது. உலகங்களைப் படைப்பதும் நியமிப்பதும் ஸார்வேச்வரனுக்கே உரியது என்பது விளக்கப்படுகிறது. உலகங்களைப் படைப்பது முதலான செயல்கள் ஜீவனுக்குக் கூறப்பட வில்லை. பூதங்கள் எல்லாம் பரம்பொருளாலே உண்டாயின, அவனாலே வாழ்கின்றன, அவனிடத்தில் லயமடைகின்றன என்றும், ப்ரஹ்மம் ஒன்றாகவே இருந்தது,தான் பலவாக இயங்கச் சங்கல்பித்தது என்றும், ப்ரளய காலத்தில் நாராயணன் ஒருவனே இருந்தான், பிரமனும் சிவனுமில்லை என்றும், இவன் ஒருவனே யாவற்றையும் நியமிக்கிறான் என்றும் வேத வாக்கியங்கள் கூறுகின்றன. ஆதலால் முக்தனது செல்வம் உலகங்களைப் படைப்பது, நியமிப்பது இவை நீங்கலாகவே. கர்மத்திற்கு வசப்படாத முக்தன் எல்லா உலகங்களிலும் தனது விருப்பத்திற்கேற்ப சஞ்சரிக்கிறான் என்பது வேதத்தில் வந்துள்ளது. இவ்வாறு அனுபவிப்பதால் பெறும் போகம் அற்பமும் நிலையற்றதுமாகும் என்பது சங்கை முக்தன் அனுபவிப்பது வைகுந்தத்திலுள்ள போகங்களே. ப்ராக்ருதங்களான உலகங்களை இவன் பகவானுடைய செல்வம் என்றே நினைத்து அனுபவிக்கக் கூடும்; இது விருப்பத்தால், கர்மத் தாலன்று. உலகைப் படைப்பது,காப்பது, அழிப்பது போல்வன பகவானுக்கே உரியன என்று ச்ருதிகள் கூறுகின்றன. ஒரு சங்கை: பகவான் ஸ்வதந்த்ரன்; இவனது செயல்களைப் பற்றி எவரும் கேட்பற்தற்கில்லை. இவன் ஜீவாத்மாவை இங்குத் திருப்பி ௮னுப்புவானா? விளக்கம்: பகவான் இவ்வாறு அனுப்பமாட்டான் என்பதே சித்தாந்தம், வேதங்கள் வெளியிடுவது: யாவகையான குணங்களும் வாய்ந்த பகவான், “நான் ஒரு சேதனனையாவது பெறமாட்டேனா?'' என்ற ஆவலுடன் அவ்வப்போது உலகைப் படைக்கிறான். தன்னிடம் பக்தி வாய்ந்தவர்களது அஜ்ஞானத்தைப் போக்கித் தன்னை அனுபவிப்பதாகிற ப்ரஹ்மானந்தத்தை அளிக்கிறான், தன்னை விட்டுப் பிரியாமல் செய்து இன்புறுகிறான். கீதையிலேயும் பசுவான் இதையே வெளியிடுகிறான். மேலும் “ந ௪ பரமபுருஷ: ஸத்யஸங்கல்ப:அத்யர்த்த ப்ரியம் ஜ்ஞானிநம் லப்த்வா,சுதர்சிதாவர்த்த யிஷ்பதி” *பரம புருஷனும் ஸத்ய ஸங்கல்பனுமாகிய பகவான் தனக்கு மிகவும் ப்ரியனான ஒரு ஞானியைப் பெற்று ஒருபோதும் மீண்டும் கீழே செல்ல விரும்பவே மாட்டான் என்று சுவைபட வாக்கியம் அமைந்துள்ளது. பஹுூநாம் ஜந்ம நாமந்தே ஜ்ஞாநவாந் மாம்ப்ரபத்யதே! வாஸ தேவஸ் ஸர்வ மிதிஸ மஹாத்மா ஸுதுர்லப:!-- ஞானி மிகச் சிறந்தவன்; இவன் துர்லபன் என்றும் கருதுகிறான். பல பிறவிகளுக்குப் பின் அறிவு முதிரப் பெற்ற ஞானி, வாஸ தேவனே எனக்கு உபாயம், என்னால் பெறப் பெறுபவன், எனக்கு தாரகம், போஷகம், போக்யம்* என்று பகவானைச் சரணமாகப் பற்றுகிறான், இவன் விசாலமான நெஞ்சுடையவன் என்றும், தனக்குக் கிடைத்தற் கரியவன் என்றும் கண்ணன் கூறுகிறான். ஆதலால் பகவான் எவ்வகையாலும் முக்தனை மீண்டும் உலகிற்கு அனுப்பமாட்டான்; இது திண்ணம். முக்தி நிலையில் முக்தன் தனது இயல்பான ஞானம், பாவமின்மை முதலான எட்டு குணங்கள். யாதொரு குறைவுமின்றி முற்றிலும் விளங்கி பகவானை அனுபவிக்கின்றான். இவன் பகவானிடமிருந்து பிரிவதில்லை பகவானின் கைங்கர்யத்தில் தோய்ந்துள்ள முக்தன் தனது சங்கல்பத்தாலேயே தான் விரும்பும் பொருள்களை அடைகிறான். இவன் சில சமயங்களில் சரீரத்தோடு கூடியவனாகவும், சில சமயங்கள் சரீர மில்லாதவனாகவும் அனுபவிக்கிறான். இவனுக்கு உலகைப் படைப்பது போன்ற தொழில்கள் இல; இவை பகவானுக்கே உள. பகவானோடு போகம் அனுபலிப்பதாலேயே இவன் சாம்யம் பெறுகிறான். இவன் எப்போதாயினும் எவ் விதத்திலாயினும் ஸம்ஸாரத்திற்கு மீள மாட்டான். -------------- அருஞ் சொற்கள் - விளக்கம் அங்கம் பிரிவு, உறுப்பு. அங்கை அங்கங்கள் உடையவன் (உடையது. அசேதனம்-- அறிவில்லாப் பொருள், சடப்பொருள். அணுகாரண வாதி -உலகுக்குக் காரணம் பரமாணுக்கள் என்ற கொள்கை உடையவன். அத்வைகம்--லீவனும் பரமனும் ஒன்று என்றகொள்் தை. அத்வைதி-- இக்கொள்கை உடையவன் . அநாச்ரமி.-ப்ரஹ்மசரீயம் முதலிய நான்கு வாழ்க்கை நிலைகளில் ஒன்றிலும் பொருத்தா தவன். அதுகரணம்- முக்தி நிலையில் பகவானைப் போல் குணங்கள் ஜீவன் பெற்று விளங்குவது. அரற்தராத்மா, அந்தர்யாமி-சரீரத்துள் (ஆத்மாவில் உறைழ்துள்ள பகவான். ் அபேத வாக்கியம்- ஜீவனுக்கும் பகவானுக்கும் பேத மின்மையைக் கூறும் வேத வாக்கியம். அமா. நவன்--ஆதிவா ஹிகருள் ஒருவன்; வித்யுத் புருஷன்? -பகவானிடம் முக்தனை அழைத்துச் செல்வோன். அம்பரம் --மேல் ஆகாசம்: அம்ருதம்--அழிவில்லாமை,. அர்ச்சிஸ் -- அக்நி; அர்ச்சிராதி மார்கத்தில் மூதல் தேவதை, அவ்யக்தம் -- படைப்பின்போது பகவானிடமிருந்து தோன்றும் முதல் நிலை; பிரித்து, தெரியாத நிலை. அனுமானம்--இந்தீரியங்கள் மூலம் ஏற்கும் அறிவு ஆதா. சமாக ஊளகித்தறிவது. அனுஷ்டானம் - ஒழுக்கம், பழக்கம். ௮ஸத்-இல்பொருள்; நிலை இல்லாதது. அஹண்.-பகல். அக்ஷரம்-- அழிவில்லாதது. அக்ஷி-சுண்; அ௮க்ஷி புருஷன் -- கண்ணினுள் இருக்கும். தேவதை. அஸ்தாலம்--பருமனில்லாமை (ஸ்தூலம்--பருமன் ), ஆச்ரமம்--ஏற்கும் வாழ்க்கை நிலை; ப்ரஹ்மசர்யம், இல்லம், துறவு, வானப்ரஸ்தம். ஆத்மா. ஜீவன். ஆத்ம குணங்கள் ஆத்மாவுக்கு மேன்மையைக் காட்டும் குணங்கள்; சமம் தமம் போல்வன. ஆதிவாஹிகர் -- முக்தனை அபர்ச்சிராதி மார்கத்தில் அழைத்துச் செல்வோர். ஆதித்ய புருஷன் சூரிய மண்டலத்திலுள்ள தேவதை. ஆனந்த மயன்-- கலப்பில்லாத ஆனந்தமே இயல்பாக உடையவன்; பகவான். ஆனுமானிகம்--அனுமானத்தால் தேறுவது, உத்க்ராந்தி--அத்மா உடலை விட்டு நீங்குவது. உத்ககம்--இசைக்கப்பெறும் மந்த்ரம், ப்ரணவம். உத்தர காண்டம்- வேதத்தின் இரண்டாம் பகுதி. உபகரணம்--௨ தவிப் பொருள், துணைக் கருவி, உபயலிங்கம் -- இரட்டை அடையாளம்; பகவானது இயல்பு, குணங்கள் இவை பற்றியது. உபாரக்யானம்--வேள்வியின்போது படிக்கும் வரலாறு. உபாதானம் -ஆக்கப் பொருள் (பானைக்கு மண்). உபாதான சாரணம்- - பகவானே உபாதானமாகிக் காரணமாவது, உபாஸனை. பகவானை வழிபடும் முறை; உபாஸகன்.- இவ்வாறு வழிபடுவோன். கர்மா கா்மம்--செயல்; கா்ம--பலன் செய்யும் புண்ய பாவங்களின் பயன், கல்யாண குணங்கள்--பகவானுக்கே உரியனவான தனிப் பட்ட சிறந்த பண்புகள். காரணப் பொருள் பண்டம் செய்வதற்குக் காரணமான பொருள் (பானைக்குக் காரணப் பொருள் சுளிமண் காரியப் பொருள்--இவ்வகையால் உருவாகும் பொருள் (குடம் காரியப் பொருள்). கார்ஹபத்யம்-- மூன்று வகை அக்நிகளுள் வீட்டில் வளர்ப்பது. கேவலார் :- வாழ்க்கையிலிருந்து விடுபட்டுத். தமது அத்மாவையே அனுபவிப்பவர். சங்கல்பித்தல்-. எண்ணுவது: எண்ணுவதாலே செயல் நிகழ்தல். சங்கை--ஐயம், சந்தேகம். சரீரம் -உடல்; சரீரி-உடலை இருப்பிடமாக உடையவன். சாதனம் - கருவி; முயற்சியால் பெறுவது. சாரீரகம்- சரீரத் கொடர்புடையது. சேதனன்-- அறிவுடையவன், ஜீவன், ஆத்மா. சேஷபூதன்-- தலைவனுக்கு அடிமையாக உரியவன். சேஷி--தலைவன் (சேஷபூதர்களுக்குர. சூன்யம்-- இல்லாமை? சூன்யவாதி யாவும் சூன்யம் என்ற கருத்துடையவன். ச்ருதி-வேதம். தடித்-- மின்னல். தத்வம்--உண்மை? உள்ளதான நிலை. தஹரம்-- இதயத்தில் உள்ளிடம்; தஹர வித்யை-இதயத்தில் உறையும் பகவானை வழிபடும் வகை, தன்மாத்ரை-- பொறிகள் ஒவ்வொன்றின் மூலம் தாமஸம்--தமோ குணத் தொடர்புடையது, த்யுலோகம்-மேலுலகம், ஆகாசம்: நித்யம்- நிலையாக வுள்ள. நிமித்த காரணம் - -படைப்பைைச் செய்பவன். நியத்தா--ஆணையாளன், நியமிப்பவன், ஆள்பவன். நிர்வஹித்தல்- பொறுப்புடன் மேற்பார்வை யிடு தல். நைமித்திகம்--சறப்பு வழிபாடு. பரமாணு---அணுவின் பகுதி. பரிணாமம் நிலையில் மாறுபாடு. பரிமாணம்- அளவு. பஷ பாதம்-- ஓரம், ஒருபக்கத்தையே ஆதரித்தல். பாதம்--கால் பங்கு பாஷ்ய- விரிவுரை, பாஷ்யகாரர்--ராமா நுஜர். புருஷார்த்தம் -பெற விரும்பும் பொருள். தம் படைப்பில் உண்டானது; நீர், நெருப்பு, வாயு போல, பூத ஸுஷ்மம்--பதத்தின் நுண்ணிய நிலை பூத யோநி-பூதங்களுக்குக் காரணம்; பூத யோநி. அக்ஷரம் -பூதங்களுக்குக் காரணமான பரம்பொருள் (அழிவில்லாத பகவான்]. பூமா-- பெருமை வாய்ந்தது. பேதம்--மாறுபாடு; பேத வாதி-ஜீவனும் பகவானும் : வேறு என்று கருதுவோன்; பேத வாக்கியம்.- இவ்வா றான பேதத்தைக் காட்டும் வேக வாக்கியம், போகம்--இன்ப அனுபவம் போக்தா--அனுபவிப். பவன். ப்ரக்ருதி -(மூல ப்ரக்ருதி)--படைப்பிற்கு மூல காரணமாக இகுப்பது; பராக்ருதம்-ப்ரக்ருதியில் தொடா் புடையது. ப்ரகாரம்--தானே ஆகும் நிலை; ப்ரகாரி இவ்வாறு ப்ரகாரமாகுபவன். ப்ரதிபிம்பம் கண்ணாடியில் (தண்ணிரில் தோன்றுக, நிழல். வு ர ப்ரமாணம் சான்று. ப்ரமாதா- சான்றால் அ௮.றிபவன். ப்ரமிதன்-- கட்டைவிரல் அளவுடையவன். யப்ரமேயம்--சான்றால் அறியப்படுவது. ப்ரளயம்--உலகங்கள் யாவும் பகவானிடம் ஒடுங்கும் நிலை, ப்ரஸ்மம்--தெய்வம், பகவான்; ப்ரஹ்ம ஞானி-பக வானை நன்கறிந்தவன்; ப்ரஹ்ம காரணவாதி-- உல௫ற்குக் காரணம் பகவானே என் கொள்கை யுடையவன். ப்ரஹ்ம வித்யை-- பகவானை வழிபடும் வகை. ப்ரஸித்தி--பரவிய புகழ். ப்ராணன் உயிர்; முக்கியமான வாயு மற்றவை அபா நன், வ்யாதநன், உதாறன், ஸமா நண். வ்ராப்தி- பெறுதல்? ப்ரஹ்ம ப்ராப்தி பகவானைப் பெறுவது. முக்தன்- உலக வாழ்விலிருந்து விடுதலை பெற்றவன்; மூக்தி-.. இவன் பெற்ற விடுதலை. யக்ஞம்--யாகம், வேள்வி. யோகம்--ஒன் றியிருத்தல்;' யோகி--இவ்வா நிருப்பவன். லயம்--ஓன்றுதல். -ராஜஸம் ரஜோ குணத்தின் தன்மை. ரூபம்-- வடிவம், உருவம். விகாரம் - வேறுபாடு. விதா நிஷ்டர்--வித்யையில் ஊன்றி நிற்பவர், விக்யுத்--மின்னல்; விதியுத் புருஷன் -அமாநவன் அிலகஷிணம்- தனிப்பட்ட மேன்மை. விஜ்ஞானம்--ஏறந்த அறிவு. மெய்யறிவு: விஜ்ஞான மயள்--அறிவே வடிவாக இருப்பவன் (பகவான்). வைத்யுதன்--மின்னல் வடிவமான அமான வன். வைச்வாநரன்--அக்நி மயமான தேவதை? வைச்வாதர வித்யை-- இந்த தேவதையை வழிபடும் வகை, வ்யக்தம்- தெளிவாக விளங்குகிற. வ்யஷ்டி ஸ்ருஷ்டி--பலபல வகையாகப் படைத்தல். ஸஞ்௫தம்-- திரண்டு ஒன்று சேர்ந்த. ஸத்-- உண்மைப் பொருள். ஸத்வம்- முக்குணங்களுள் ஒன்று. ஸம்வத்ஸரம்--அர்ச்சிராதி மார்கத்தில் ஒரு நிலை, ஆண்டு என்ற பொருளுடையது. ஸுஷும்நா--ஒரு நாடியின் பெயா்; தலையின் உச்சி வரையில் செல்லும் நாடி. ஸுக்ஷ்மம் - நுண்ணியது. ஸ்வரூபம் --இயல்பு. க்ஷ்ணம் நொடிப் போது. க்ணிகம்--நொடிப் போதுன்ளது. ஜகச்சரீரன்--உலகு தனது சரீரமாக வுடையவள், பக வான். ஐ.டம்--அறிவில்லாதது. ஐடரம்--வயிறு. ஜாடராக்தி--வயிற்றிலுள்ள அக்நி. “ஜீவன்--ஆத்மா. ஸ்ரீ: ஸ்ரீம்தே ராமாநுஜாய நம:
—————————
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply