ஸ்ரீ விஶ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம் – ஸ்ரீ ஆதி ஶங்கர பகவத் பாதர் அருளியது – பாகம் 2-திருநாமங்கள்1- -51- வரை –

அத ஸஹஸ்ரநாம

(இனி) சஹஸ்ரநாம உரை தொடங்குகிறது

அத்ர நாமஸஹஸ்ரே இந்த ஆயிரம் திருநாமங்களில் ஆதித்யாதி ஶப்தாநாமர்தாந்தரே ஆதித்ய முதலான நாமங்கள் ப்ரஸித்தானாமாதித்யாத்யர்த்தானாம் சூரியன் போன்ற வேறு பெயர்களில் ப்ரஸித்தி அடைந்திருந்தாலும் தத்விபூதித்வேன அந்த ஒரே பரம்பொருளின் அதிசய சக்தியின் ஒரு வெளிப்பாடு ஆனதாலும் ததபேதாத்  அந்த பரம்பொருளினின்று வேறானதில்லையாதலாலும் (ப்ரஹ்மம் ஒன்றே என்பது அத்வைதக் கொள்கையாகும்எனவேஅந்தப் பரம்பொருளினின்று வேறானது எதுவுமில்லை) தஸ்யைவ ஸ்துதிரிதி ப்ரஸித்தார்த்தக்ரஹனேSபி தத்ஸ்துதித்வம் அந்த திருநாமங்களின் ப்ரஸித்தி பெற்ற அர்த்தங்களை ஏற்கும் பொழுதும் அந்த பரம்பொருளின் பெருமையே போற்றப்படுகிறது |

இந்த ஆயிரம் திருநாமங்களில் ஆதித்ய முதலான நாமங்கள் சூரியன் போன்ற வேறு பெயர்களில் ப்ரஸித்தி அடைந்திருந்தாலும், அவையும் (அந்த சூரியன் முதலானவையும்) அந்த ஒரே பரம்பொருளின் அதிசய சக்தியின் (விபூதியின்) வெளிப்பாடேயாகும். பரம்பொருளுக்கும், இந்த உலகில் நாம் காணும் மற்ற பொருள்களுக்கும் வேறுபாடு எதுவும் இல்லாததால், அந்த (ஆதித்ய முதலான) திருநாமங்களின் (சூரியன் முதலான) ப்ரஸித்தி பெற்ற அர்த்தங்களை ஏற்கும் பொழுதும் அந்த பரம்பொருளின் பெருமையே போற்றப்படுகிறது.

பூதாத்மா சேந்தரியாத்மா ச ப்ரதானாத்மா ததா பவான் | ஆத்மா ச பரமாத்மா ச த்வமேக: பஞ்சதா ஸ்தித: || (விஶ்ணு புராணம் 5.18.50)

ஸ்ரீ விஶ்ணு  புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-பஞ்ச பூதங்கள், இந்த்ரியங்கள், பருப்பொருள், ஜீவாத்மா மற்றும் பரமாத்மா ஆகிய ஐந்து வடிவங்களாகவும் தாங்களே இருக்கிறீர்.

ஜ்யோதீம்ஶி விஶ்ணுர்புவனானி விஶ்ணுர்வனானி விஶ்ணுர்கிரயோ திஶஸ்ச | நத்ய: ஸமுத்ராஸ்ச ஸ ஏவ ஸர்வம் யதஸ்தி யன்னாஸ்தி ச விப்ரவர்ய || (விஶ்ணு புராணம் 2.12.38)

ஸ்ரீ விஶ்ணு  புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-நக்ஷத்திரங்கள் விஶ்ணு, உலகம் விஶ்ணு, வனம், மலைகள், திசைகள், ஆறுகள், கடல்கள் அனைத்தும் விஶ்ணுவேயாகும். ஹே அந்தணரில் சிறந்தோரே! இங்கு உள்ளவை, அல்லவை அனைத்தும் அந்த ஒரே பரம்பொருளே ஆகும்.

இதி விஶ்ணு புராணே இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆதித்யானாம் அஹம் விஶ்ணு: (ஸ்ரீமத் பகவத்கீதை 10.21) ஆதித்தியர்களில் நான் விஶ்ணு

இத்யாரப்ய இது தொடக்கமாக

அதவா பஹுனைதேன கிம் ஞாதேன தவார்ஜுன |-விஶ்டப்யாஹமிதம் க்ருத்ஸ்னமேகாம்ஷேன ஸ்திதோ ஜகத் || (ஸ்ரீமத் பகவத்கீதை 10.42)

அன்றி, இதைப் பலவாறாகத் தெரிவதில் உனக்கு பயன் யாது அர்ஜுனா? எனது கலையொன்றால் இவ்வையகத்தை நிலை நிறுத்தியுள்ளேன்.

இதி பர்யந்தம் கீதாயாம் இது (1௦.42 ஸ்லோகம்) ஈறாக, ஸ்ரீமத் பகவத்கீதையிலும் இவ்வாறே கூறப்பட்டுள்ளது.

ப்ரஹ்மைவேதம் விஶ்வமிதம் வரிஷ்டம் (முண்டக உபநிஶத் 2.2.12) இந்த உலகம் மேலான இந்த ப்ரஹ்மனாகவே உள்ளது.

புருஶ ஏவேதம் விஶ்வம் (முண்டக உபநிஶத் 2.1.10) இந்த உலகம் (புருஶனான) ப்ரஹ்மனாகவே உள்ளது.

இதி ஸ்ருதிஸ்ச இவ்வாறு ஸ்ருதியிலும் (வேதங்களிலும்) கூறப்பட்டுள்ளது.

புனருக்தி தோஷம்: ஸஹஸ்ரநாமம் எனும்போது ஆயிரம் நாமங்களை கூறவேண்டும். ஒரே நாமத்தை ஆயிரம் முறை கூறலாகாது. ஆனால், ஸஹஸ்ரநாமத்தில் சில திருநாமங்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன (உதாரணத்திற்கு விஶ்ணு). அவற்றிற்கு உரை எழுதும் பொழுது அர்த்தத்தில் வேறுபாடு காண்பிக்க வேண்டும். இல்லையேல் அவை தனித்த திருநாமமாக ஏற்றுக்கொள்ள படமாட்டாது (ஆயிரம் எண்ணிக்கையும் வராது). இதை புனருக்தி தோஷம் என்பர். எனவே, இங்கு ஆதிசங்கர பகவத்பாதர், தமது சஹஸ்ரநாம உரையில் அவ்வாறு புனருக்தி தோஷங்கள் இல்லை என்பதை பல்வேறு உதாரணங்கள் மூலம் தெளிவு படுத்துகிறார்.

மேலும், இவ்வாறு பலமுறை வரும் திருநாமங்களுக்கு உரை எழுதுகையில், முதன் முறை வரும்பொழுதே அதன் மற்ற பொருள்களையும் கொடுத்துள்ளார். அந்த பொருட்களில் ஒரு சிலவற்றை அதே திருநாமம் பின்னர் வரும்பொழுது எடுத்தாள்கிறார். இதை புனருக்தி தோஷமாக கருத இயலாது. முதன் முறை வரும் திருநாமத்திற்கு (அவர் கூறியுள்ள பல பொருட்களில்) முதல் பொருளையும், மற்ற பொருள்களை பின்வரும் இடங்களுக்குமாக நாம் கருதவேண்டும். 

விஷ்ண்வாதிஷப்தானாம் புனருக்தானாமபி வ்ருத்திபேதே-நார்த்தபேதான்ன பௌனருக்த்யம் |

விஶ்ணு முதலிய திருநாமங்கள் மீண்டும் மீண்டும் வரும்போதும், அந்த திருநாமத்தின் பொருளில் (ஒவ்வொரு இடத்திலும்) வேறுபாடுகள் உள்ளதால் புனருக்தி தோஷம் இல்லை.

ஸ்ரீபதிர்மாதவ இத்யாதீனாம் வ்ருத்யேகத்வேSபி ஶப்தபேதான்ன பௌனருக்த்யம் |

ஸ்ரீபதி, மாதவ முதலிய திருநாமங்களின் பொருள் ஒன்றை இருப்பினும் அந்த நாமங்கள் வெவ்வேறாய் இருப்பதனால் புனருக்தி தோஷம் இல்லை.

அர்த்தைகத்வேSபி ந பௌனருக்த்யம் தோஷாய, நாம்னாம் ஸஹஸ்ரஸ்ய கிமேகம் தைவதமிதி ப்ருஶ்டேரேக-தைவதவிஶயத்வாத்|

இந்த விஶ்ணு சஹஸ்ரநாமமே, “உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?” என்ற கேள்வியிலிருந்து ஒரே பரம்பொருளின் விஷயமாகப் பிறந்தது. எனவே, பல திருநாமங்களின் பொருள் ஒன்றாய் இருப்பினும் புனருக்தி தோஷம் வருவதில்லை.

யத்ர ஃபுல்லிங்கஶப்தப்ரயோகஸ்தத்ர விஶ்ணுர்விஶேஶ்ய:

(இந்த சஹஸ்ரநாமத்தில்) ஆண்பால் திருநாமங்கள் பரப்ரஹ்மத்தின் விஶ்ணு ஸ்வரூபத்தையும்

யத்ர ஸ்திரீலிங்கஶப்தஸ்தத்ர தேவதா விஶேஶ்யதே

பெண்பால் திருநாமங்கள் மற்ற பரப்ரஹ்மத்தின் மற்ற தேவதை ஸ்வரூபத்தையும்

யத்ர நபும்ஸகலிங்கஶப்தஸ்தத்ர ப்ரஹ்மேதி விஶேஶ்யதே |

(ஆண்பாலும் இல்லாமல் பெண்பாலும் இல்லாமல்) பொதுவான திருநாமங்கள் (நேரடியாக) பரப்ரஹ்மத்தை குறிப்பிடுவதாகக் கொள்ளவேண்டும்.

யத: ஸர்வாணி பூதானி (ஸ்ரீ விஶ்ணு சஹஸ்ரநாமம் 11) எவரிடமிருந்து, கல்பத்தின் தொடக்கத்தில் ஜீவராசிகள் தோன்றினவோ…

இத்யாரப்ய ஜகதுத்பத்தி ஸ்திதிலயகாரணஸ்ய ப்ரஹ்மண ஏக தைவதத்வேனாபிஹிதத்வாதாதாவுபயவிதம் ப்ரஹ்ம விஶ்வஶப்தே-நோச்யதே

(ஸ்ரீ விஶ்ணு சஹஸ்ரநாம ஸ்லோகம் 11) இது தொடக்கமாக இந்த உலகின் தோற்றம், காத்தல் மற்றும் அழிவின் காரணமாய் உள்ள ப்ரஹ்மமே ஒரே முழுமுதற் கடவுளாக (ஸ்ரீ பீஷ்மாச்சார்யரால்) கூறப்பட்டுள்ளது. எனவே (காரண  மற்றும் காரிய) ப்ரஹ்மம் முதலில் “விஶ்வ” எனும் திருநாமத்தால் (ஸ்ரீ பீஷ்மாச்சார்யரால்) அழைக்கப் படுகிறார்.

—————-

1. ஓம் விஶ்வம் விஶ்ணுர்வஷட்காரோ பூதபவ்யபவத்பிரபு: |
பூதக்ருத்பூதப்ருத்பாவோ பூதாத்மா பூதபாவன: || 1 ||

இந்த முதல் ஸ்லோகத்தில் மொத்தம் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன, 

1. விஶ்வம் 2. விஶ்ணு: 3. வஷட்கார: 4. பூதபவ்யபவத்பிரபு: |
5. பூதக்ருத் 6. பூதப்ருத் 7. பாவ: 8. பூதாத்மா 9. பூதபாவன: ||
——–

  1.  பூதாத்மா பரமாத்மா ச முக்தானாம் பரமா கதி:  |அவ்யய: புருஶ: சாக்ஷீ க்ஷேத்ரஞ்யோSக்ஷர ஏவ ச || 2 ||

இந்த இரண்டாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. பூதாத்மா 11. பரமாத்மா 12. முக்தானாம் பரமா கதி😐
  2. அவ்யய: 14.புருஶ: 15.சாக்ஷீ 16. க்ஷேத்ரஞ்ய: 17. அக்ஷர ஏவ ச ||

—————

3.   யோகோ யோகவிதாம் நேதா ப்ரதானபுருஶேஶ்வர: |நாரஸிம்ஹவபு: ஸ்ரீமான் கேஶவ: புருஶோத்தம:  || 3 ||

இந்த ஸ்லோகத்தில் 7 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. யோக: 19.யோகவிதாம் நேதா  20. ப்ரதானபுருஶேஶ்வர: |
  2. நாரஸிம்ஹவபு: 22.ஸ்ரீமான்  23. கேஶவ: 24. புருஶோத்தம: ||

————–

  1. ஸர்வ: ஶர்வ: ஶிவ: ஸ்தாணுர் பூதாதிர் நிதிரவ்யய: |

ஸம்பவோ பாவனோ பர்தா ப்ரபவ: ப்ரபு ரீஶ்வர: ||

இந்த நான்காவது ஸ்லோகத்தில் மொத்தம் 12 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஸர்வ: 26.ஶர்வ: 27. ஶிவ: 28. ஸ்தாணு: 29. பூதாதி: 30. நிதி: அவ்யய: |
  2. ஸம்பவ: 32.பாவன: 33. பர்தா 34. ப்ரபவ: 35. ப்ரபு: 36. ஈஶ்வர: ||

—————

  1. ஸ்வயம்பூ: ஶம்புராதித்ய: புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |
    அனாதிநிதனோ தாதா விதாதா தாதுருத்தம: ||

    இந்த ஐந்தாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

    37. ஸ்வயம்பூ: 38. ஶம்பு: 39. ஆதித்ய: 40. புஷ்கராக்ஷ: 41. மஹாஸ்வன: |
    42. அநாதிநிதன: 43. தாதா 44. விதாதா 45. தாதுருத்தம: |

————————

  1. அப்ரமேயோ ஹ்ருஶீகேஶ: பத்மநாபோS(அ)மரப்ரபு: |விஶ்வகர்மா மனுஸ்த்வஶ்டா ஸ்தவிஶ்ட: ஸ்தவிரோ த்ருவ: ||

இந்த ஆறாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

  1. அப்ரமேய:, 47. ஹ்ருஶீகேஶ:, 48. பத்மநாப:, 49. அமரப்ரபு: |
  2. விஶ்வகர்மா, 51. மனு:, 52. த்வஶ்டா, 53. ஸ்தவிஶ்: 54. ஸ்தவிரோ த்ருவ: ||

——————

1. ஓம் விஶ்வம் விஶ்ணுர்வஷட்காரோ பூதபவ்யபவத்பிரபு: |
பூதக்ருத்பூதப்ருத்பாவோ பூதாத்மா பூதபாவன: || 1 ||

இந்த முதல் ஸ்லோகத்தில் மொத்தம் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன, 

1. விஶ்வம் 2. விஶ்ணு: 3. வஷட்கார: 4. பூதபவ்யபவத்பிரபு: |
5. பூதக்ருத் 6. பூதப்ருத் 7. பாவ: 8. பூதாத்மா 9. பூதபாவன: ||
இவற்றில் விஸ்வம் என்ற முதல் திருநாமத்திற்கு ஆச்சார்யாள் மிகவும் நீண்ட உரையை அளித்துள்ளார். 

ஓம் விஶ்வஸ்மை நம:

விஶ்வம் என்ற இந்த முதல் திருநாமத்திற்கு ஆதிசங்கரர் கீழ்கண்ட 5 விளக்கங்களை அளித்துள்ளார்.

ஜகத: காரணத்வேனவிஶ்வம்இத்யுச்யதே ப்ரஹ்ம |

(விஶ்வம் எனும்) இந்த பிரபஞ்சத்தின் காரணமாய் இருப்பதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

1. விஶ்வஸ்ய ஜகத: காரணத்வேன விஶ்வம் இத்யுச்யதே ப்ரஹ்ம ஆதௌ து விஶ்வமிதி கார்யஶப்தேன காரணக்ரஹனம் கார்யபூத-விரிஞ்ச்யாதிநாமபிரபி உபபன்னா ஸ்துதிர்விஶ்ணோரிதி தர்ஶயிதும்

(விஶ்வம் எனும்) இந்த பிரபஞ்சத்தின் காரணமாய் இருப்பதால் பரப்ரஹ்மமான பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். விஶ்வம் எனும் காரியத்தால் (வினைப்பயனால்), முழுமுதல் காரணத்தை (பிரபஞ்ச உற்பத்தி எனும் வினை புரிபவரை) அறிந்து கொள்ளலாம். இந்த உலகின் உற்பத்திக்கு நேரடி (ப்ரத்யக்ஷ) காரணமாய் இருக்கும் ப்ரஹ்மா முதலிய திருநாமங்களும் பகவான் ஸ்ரீவிஶ்ணுவின் புகழையேப் பாடுகின்றன (ஏனெனில், ப்ரஹ்மாவும் பரப்ரஹ்மமான விஶ்ணுவே)

விஶ்வஸ்ய ஜகத: விஶ்வம் என்று அழைக்கப்படும் இந்த பிரபஞ்சத்தின் காரணத்வேன காரணமாய் இருப்பதால் விஶ்வம் இத்யுச்யதே ப்ரஹ்ம பரப்ரஹ்மத்தை விஶ்வம் என்று அழைக்கின்றனர் |

(விஶ்வம் எனும்) இந்த பிரபஞ்சத்தின் காரணமாய் இருப்பதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆதௌ து முழுமுதல் விஶ்வமிதி கார்யஶப்தேன விஶ்வம் எனும் காரியத்தால் (வினைப்பயனால்காரணக்ரஹனம் காரணத்தை (பிரபஞ்ச உற்பத்தி எனும் வினை புரிபவரை) அறிந்து கொள்ளலாம் கார்யபூத-விரிஞ்ச்யாதிநாமபிரபி இந்த உலகின் உற்பத்திக்கு நேரடி (ப்ரத்யக்ஷ) காரணமாய் இருக்கும் ப்ரஹ்மா முதலிய திருநாமங்களும் உபபன்னா ஸ்துதிர்விஷ்ணோரிதி தர்ஶயிதும் பகவான் ஸ்ரீவிஶ்ணுவின் புகழையேப் பாடுகின்றன |

  1. யத்வாபரஸ்மாத் புருஶான்ன(அ)பின்னமிதம் விஶ்வம்பரமார்த்த தஸ்தேன விஶ்வம் இத்யபிதீயதே ப்ரஹ்ம |

அல்லது, இந்த பிரபஞ்சமானது உண்மையில் பரமபுருஶனான பரமாத்மா பரப்ரஹ்மத்தினிடம் ஒன்றியே (அதனின்று வேறுபடாது) இருப்பதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யத்வா, அல்லது பரஸ்மாத் புருஶான்ன பரமபுருஶனான பரமாத்மா பரப்ரஹ்மத்தினிடம் (அ)பின்னமிதம் ஒன்றியே (அதனின்று வேறுபடாதுவிஶ்வம் இந்த பிரபஞ்சமானது இருப்பதால் பரமார்த்ததஸ்தேன விஶ்வம் இத்யபிதீயதே ப்ரஹ்ம விஶ்வம் என்று பரப்ரஹ்மத்தை அழைக்கின்றனர் |

  1. அதவா விஶதீதி விஶ்வம்ப்ரஹ்ம |

அல்லது, இந்த ப்ரபஞ்சத்தினுள் புகுவதனால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரஹ்மைவேதம் விஷ்வமிதம் வரிஷ்டம் (முண்டக உபநிஶத் 2.2.12)

முண்டக உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த உலகம் மேலான இந்த ப்ரஹ்மனாகவே உள்ளது.

புருஶ ஏவேதம் விஷ்வம் (முண்டக உபநிஶத் 2.1.1௦)

முண்டக உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த உலகம் (புருஶனான) ப்ரஹ்மனாகவே உள்ளது.

இத்யாதி ஸ்ருதிப்யஸ்தத்பின்னம் ந கிஞ்சித் பரமார்த்தத: சதஸ்தி |

இந்த (முண்டகோபனிஷத்) ஸ்ருதி வாக்கியங்களின் மூலம், ப்ரஹ்மத்தைத் தவிர்த்து (இந்த பிரபஞ்சத்தில்) வேறொன்றும் இல்லை என்பது விளங்கும்.

அதவா அல்லது விஶதீதி புகுவதனால் விஶ்வம் இந்த ப்ரபஞ்சத்தினுள் ப்ரஹ்ம பரப்ரஹ்மமான பகவானை “விஶ்வம்” என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.

அல்லது, இந்த ப்ரபஞ்சத்தினுள் புகுவதனால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘தத் ஸ்ருஶ்டா ததேவானுப்ராவிஶத்’ (தைத்ரீய உபநிஶத் 2.6)

தைத்ரீய உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது:​ (பரப்ரஹ்மம்) அவற்றைப் படைத்து அதிலேயே நுழைந்தார்.

இதி ஶ்ருதே இவ்வாறு (தைத்ரீய உபநிஶத்) வாக்கியம் கூறுகின்றது.

  1. கிஞ்ச ஸம்ஹ்ருதௌ விஶந்தி ஸர்வாணி பூதான்யஸ்மின் இதி விஶ்வம்ப்ரஹ்ம |

பிரளய காலத்தில் இந்த பிரபஞ்சமும், அதிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் அந்த ப்ரஹ்மத்தை சென்று லயமடைவதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கிஞ்ச ஸம்ஹ்ருதௌ பிரளய காலத்தில் விஶந்தி சென்று லயமடைவதால் ஸர்வாணி பூதான்யஸ்மின்னிதி இந்த பிரபஞ்சமும், அதிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் விஶ்வம் ப்ரஹ்ம பரப்ரஹ்மமான பகவானை “விஶ்வம்” என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.

‘யத் ப்ரயந்த்யபிஸம்விஶந்தி’ (தைத்ரீய உபநிஶத் 3.1)

தைத்ரீய உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது:​ இறப்பவை அனைத்தும் எதை (எந்த ப்ரஹ்மத்தை) சென்றடைகின்றனவோ…

இதி ஶ்ருதே இவ்வாறு (தைத்ரீய உபநிஶத்) ஸ்ருதி வாக்கியம் கூறுகின்றது.

  1. ததா ஹி ஸகலம் ஜகத்கார்யபூதமேவிஶத்யத்ர ச அகிலம் விஶதீத்யுபயதாபி விஶ்வம் ப்ரஹ்ம இதி |

மேலும், அதனுள் பிரவேசித்து பிரபஞ்சத்தை உருவாக்கியும், பிரளய காலத்தில் அனைத்து பிரபஞ்சத்தையும் தன்னுள்ளே லயமடையச் செய்வதாலும், இவ்வாறு, பல வழிகளாலும் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ததா ஹி ஸகலம் ஜகத் அனைத்து பிரபஞ்சத்தையும் கார்யபூதமே விஶத்யத்ர சாகிலம் அதனுள் பிரவேசித்து பிரபஞ்சத்தை உருவாக்கியும் விஶதீத்யுபயதாபி பிரளய காலத்தில் அனைத்து பிரபஞ்சத்தையும் தன்னுள்ளே லயமடையச் செய்வதாலும் விஶ்வம் ப்ரஹ்ம இதி பரப்ரஹ்மமான பகவானை “விஶ்வம்” என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.

  1. யத்வாபரஸ்மாத் புருஶான்ன(அ)பின்னமிதம்விஶ்வம் பரமார்த்த தஸ்தேன விஶ்வம் இத்யபிதீயதே ப்ரஹ்ம |

அல்லது, இந்த பிரபஞ்சமானது உண்மையில் பரமபுருஶனான பரமாத்மா பரப்ரஹ்மத்தினிடம் ஒன்றியே (அதனின்று வேறுபடாது) இருப்பதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  1. அதவா விஶதீதி விஶ்வம்ப்ரஹ்ம |

அல்லது, இந்த ப்ரபஞ்சத்தினுள் புகுவதனால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  1. கிஞ்ச ஸம்ஹ்ருதௌ விஶந்தி ஸர்வாணி பூதான்யஸ்மின் இதி விஶ்வம்ப்ரஹ்ம |

பிரளய காலத்தில் இந்த பிரபஞ்சமும், அதிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் அந்த ப்ரஹ்மத்தை சென்று லயமடைவதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  1. ததா ஹி ஸகலம் ஜகத்கார்யபூதமேவிஶத்யத்ர ச அகிலம் விஶதீத்யுபயதாபி விஶ்வம் ப்ரஹ்ம இதி |

மேலும், அதனுள் பிரவேசித்து பிரபஞ்சத்தை உருவாக்கியும், பிரளய காலத்தில் அனைத்து பிரபஞ்சத்தையும் தன்னுள்ளே லயமடையச் செய்வதாலும், இவ்வாறு, பல வழிகளாலும் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இனி ஆச்சர்யாள் அளிக்கும் பற்பல மேற்கோள்களிலிருந்து ஒரு சிலவற்றை இன்று காண்போம்.

‘அன்யத்ர தர்மாதன்யத்ராதர்மாத்’ (கடோபநிஶத் 1.2.14) இத்யாரப்ய கடோபநிஷத்தில் (அந்த ப்ரஹ்மானது) தர்மத்திற்கும் வேறான, அதர்மத்திற்கும் வேறான என்று (ப்ரஹ்மத்தை) விவரிக்கத் தொடங்குமிடத்து,

‘ஸர்வே வேதா யத்பதமாமனந்தி

தபாம்ஸி ஸர்வாணி ச யத் வதந்தி |

யதிச்சந்தோ ப்ரஹ்மச்சர்யம் சரந்தி

தத்தே பதம் ஸங்க்ரஹேன ப்ரவீம்யோமித்யேதத்’ || (கடோபநிஶத் 1.2.15)

கடோபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

எல்லா வேதங்களும் எந்த இலக்கைப் பற்றி பேசுகின்றனவோ, எதற்காக அனைத்து தவங்களையும் கூறுகின்றனவோ, எதை அடைவதற்கு ஆசை கொண்டு ஸாதகர்கள் ப்ரஹ்மச்சர்யத்தை அனுஷ்டிக்கிறார்களோ, அந்த இலக்கை உனக்கு சுருக்கமாக உரைக்கிறேன்: அது “ஓம்” என்பதே ஆகும்.

‘ஏதத்த்யேவாக்ஷரம் ப்ரஹ்ம ஏதத்த்யேவாக்ஷரம் பரம் |

ஏதத்த்யேவாக்ஷரம் ஞாத்வா யோ எதிச்சதி தஸ்ய தத்’ || (கடோபநிஶத் 1.2.16)

கடோபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

(ஓம்) என்ற இந்த ஒரு எழுத்தே சகுணப்ரஹ்மம், இந்த எழுத்தே நிர்குண ப்ரஹ்மம். இந்த எழுத்தையே த்யானித்து ஒருவன் எதை விரும்புகிறானோ, அவனுக்கு அது அமைகிறது (கிடைக்கிறது).

இதி காடகே இவ்வாறு கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

‘ஏதத்வை சத்யகாம பரம் சாபரம் ச ப்ரஹ்ம யதோங்கார’ (ப்ரஶ்ன உபநிஶத் 5.2) 

ப்ரஶ்ன உபநிஶத் கூறப்பட்டுள்ளது: ‘ஹே சத்யகாமனே!! இந்த ஓம்காரமே பர (நிர்குண) மற்றும் அபர (ஸகுண) ப்ரஹ்மமாகும்’.

இத்யுபக்ரம்ய இவ்வாறு தொடங்கி,

‘ய: புனரேதம் த்ரிமாத்ரேனோமித்யேதேனைவாக்ஷரேன பரம் புருஶமபித்யாயீத’ (ப்ரஶ்ன உபநிஶத் 5.5)

எவரொருவர் மூன்று மாத்திரை அளவுள்ள இந்த ஓம் எனும் அக்ஷரத்தால் பரம புருஶனை த்யானிக்கின்றனரோ (அவர்கள் முக்தியை அடைகின்றனர்).

இதி ப்ரஶ்னோபநிஶதி இவ்வாறு  ப்ரஶ்னோபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

‘ஒமிதி ப்ரஹ்ம | ஒமிதீதம் ஸர்வம் |’ (தைத்ரீய உபநிஶத் 1.8)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது ‘ஓம் என்ற ப்ரணவமே ப்ரஹ்மமாகும். ஓம் என்ற ப்ரணவமே அனைத்துமாகும்’.

இதி யஜுர்வேதாரண்யகே இவ்வாறு யஜுர் வேத ஆரண்யகத்தில் (தைத்ரீய உபநிஶத்தில்) கூறப்பட்டுள்ளது.

‘தத்யதா ஷங்குனா ஸர்வாணி பர்னாணி ஸந்த்ருண்ணான் யேவமோங்காரேன ஸர்வா வாக் ஸந்த்ருணா | ஓம்கார ஏவேதம் ஸர்வம்’ (சாந்தோக்ய உபநிஶத் 2.23.3)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது ‘எவ்வாறு இலைகள் அதன் மத்தியில் உள்ள காம்பால் தாங்கப்படுகின்றனவோ, அவ்வாறே அனைத்து ஒலிகளும், வார்த்தைகளும் தாங்கப்படுகின்றன. எனவே, இங்கு அனைத்தும் ஓம்காரமே!!’

இதி சாந்தோக்யே இவ்வாறு சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒமித்யேததக்ஷரமிதம் ஸர்வம் (மாண்டுக்ய உபநிஶத் 1)

மாண்டுக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது ‘ஓம் என்கின்ற இந்த எழுத்து இவை அனைத்துமாக உள்ளது’

ஒமித்யேததக்ஷரமிதம் ஸர்வம் (மாண்டுக்ய உபநிஶத் 1)

மாண்டுக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது ‘ஓம் என்கின்ற இந்த எழுத்து இவை அனைத்துமாக உள்ளது’

இத்யுபக்ரம்ய இவ்வாறு தொடங்கி,

‘ப்ரணவோ ஹ்யபரம் ப்ரஹ்ம ப்ரணவச்ச பர: ஸ்ம்ருத: |

அபூர்வோSனந்தரோSபாஹ்யோSநபர: ப்ரணவோSவ்யய’ || (மாண்டுக்ய காரிகா 1 | 26)

மாண்டுக்ய காரிகையில் கூறப்பட்டுள்ளது:

(ஓம் என்னும்) ப்ரணவமே அபர (சகுண) மற்றும் பர (நிர்குண) ப்ரஹ்மம் ஆகும். ஓம் என்ற இந்த ப்ரணவத்திற்கு தொடக்கம் (காரணம்) இல்லை, அது தனித்தன்மை வாய்ந்தது, அதனின்றி வேறொன்றும் இல்லை, எந்த காரண காரியங்களுடனும் தொடர்பு அற்றது.

‘ஸர்வஸ்ய ப்ரணவோ ஹ்யாதிர்மத்யமந்தஸ்தததைவ ச |

ஏவம் ஹி ப்ரணவம் ஞ்யாத்வா வ்யஶ்னுதே ததனந்தரம்’ || (மாண்டுக்ய காரிகா 1 | 27)

மாண்டுக்ய காரிகையில் கூறப்பட்டுள்ளது:

(ஓம் என்னும்) ப்ரணவமே அனைத்தின் தொடக்கம், இடை மற்றும் முடிவுமாகும். இந்த பிரணவத்தை இவ்வாறு அறிபவர் ஐயமின்றி அதையே (அந்த பிரணவமாகிய பரப்ரஹ்மத்தையே) அடைவர்.

‘ப்ரணவம் ஹீஶ்வரம் வித்யாத் ஸர்வஸ்ய ஹ்ருதயே ஸ்திதம் |

ஸர்வவ்யாபினமோங்காரம் மத்வா தீரோ ந ஶோஶதி’ || (மாண்டுக்ய காரிகா 1 | 28)

மாண்டுக்ய காரிகையில் கூறப்பட்டுள்ளது:

(ஓம் என்னும்) ப்ரணவமே அனைவரின் இதயத்தினுள்ளிருக்கும் இறைவனாக அறிவாய். இதை இவ்வாறு உணரும் பகுத்தறிவுடையவர் எக்காலத்திலும் வருத்தமுறுவதில்லை.

‘அமாத்ரோSனந்தமாத்ரஸ்ச த்வைதஸ்யோபஷம: ஶிவ: |

ஒம்காரோ விதிதோ யேன ஸ முனிர்நேதரோ ஜன:’ || (மாண்டுக்ய காரிகா 1 | 29)

மாண்டுக்ய காரிகையில் கூறப்பட்டுள்ளது:

ஒலியற்றதும், அனைத்து ஒலியாக இருப்பதையும், இருமைகள் அற்றதாயும், மங்களகரமானதாயும் (ஓம் என்னும்) இந்த ப்ரணவத்தை அறிபவரே முனிவராவர். மற்றையோர் (முனிவர்) அல்ல.

இத்யந்தா மாண்டூக்யோபநித் இது ஈறாக மண்டுக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

‘ஓம் தத்ப்ரஹ்ம | ஓம் தத்வாயு: | ஓம் ததாத்மா | ஓம் தத்ஸத்யம் | ஓம் தத்ஸர்வம் | (நாராயண உபநிஶத் 68)

நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (ஓம் என்னும்) ப்ரணவமே ப்ரஹ்மம், ப்ரணவமே வாயு (காற்று), ப்ரணவமே ஆத்மா, ப்ரணவமே உண்மைப்பொருள், ப்ரணவமே அனைத்துமாகும்.

இத்யாதி ஶ்ருதிபி: இவ்வாறு ஸ்ருதிகளான வேதத்திலும் கூறப்பட்டுள்ளது.

‘ஒமித்யேகாக்ஷரம் ப்ரஹம வ்யாஹரன் மாமனுஸ்மரன் |

ய: ப்ரயாதி த்யஜன் தேஹம் ஸ யாதி பரமாம் கதிம்’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 8.13)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:

‘ஓம்’ என்ற ப்ரஹ்ம எழுத்து ஒன்றையே ஜபித்துக்கொண்டு என்னை ஸ்மரிப்பவனாய், உடம்பைத் துறப்போன் பரமகதி பெறுகிறான்.

‘யதக்ஷரம் வேதவிதோ வதந்தி விந்தி யத்யதயோ வீதராகா: |

யதிச்சந்தோ ப்ரஹ்மச்சர்யம் சரந்தி தத்தே பதம் ஸங்க்ரஹேன’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 8.11)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:

எந்த நிலையை (ஓம் என்னும் அக்ஷரத்தை) வேதமுணர்ந்தோர் அழிவற்றதென்பர், (மற்ற உலகியல் விஷயங்களில்) விருப்பமற்ற முனிவர் எதனுட் புகுவர், எதை விரும்பி ப்ரஹ்மச்சர்ய விரதம் காக்கப்படும், அந்த நிலையை உனக்குச் சுருக்கமாகச் சொல்லுகிறேன்.

‘ரஸோSஹமப்ஸு கௌந்தேய ப்ரபாஸ்மி ஶஶிஸூர்யயோ: |

ப்ரணவ: ஸர்வவேதேஶு ப்த: கே பௌரும் ந்ருஶு’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 7.8)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:

நான் நீரில் சுவை; குந்தி மகனே, நான் ஞாயிறிலும் திங்களிலும் ஒளி; எல்லா வேதங்களிலும் நான் ப்ரணவம்; வானில் ஒலி நான்; ஆண்களிடத்து நான் ஆண்மை.

‘மஹர்ஶீனாம் ப்ருகுரஹம் கிராமஸ்ம்யேகமக்ஷரம் |

யக்ஞானாம் ஜபயக்ஞோSஸ்மி ஸ்தாவராணாம் ஹிமாலய:’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 10.25)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:

மஹரிஷிகளில் நான் ப்ருகு; வாக்குகளில் நான் ‘ஓம்’ என்ற ஓரெழுத்து; யக்ஞங்களில் நான் ஜபயக்ஞம்; ஸ்தாவரங்களில் நான் ஹிமாலயம்.

‘ஆத்யம் ச த்ரயக்ஷரம் ப்ரஹ்ம த்ரயீ யஸ்மின் ப்ரதிஶ்டிதா |

ஏகாக்ஷரம் பரம் ப்ரஹ்ம ப்ராணாயாம: பரம் தப:’ || (அத்ரி ஸ்ம்ரிதி 1.11)

அத்ரி ஸ்ம்ரிதியில் கூறப்பட்டுள்ளது:

மூன்றெழுத்துடைய ப்ரஹ்மமே (ப்ரணவமாகிய ஓம்காரமே) ஆதியில் இருந்தது; இதில் (இந்த ப்ரணவத்தில்) மூன்று வேதங்களும் நிலைபெற்றிருந்தன. ஓரெழுத்தான ஓம்காரமே பரப்ரஹ்மம், ப்ராணாயாமமே சிறந்த தவமாகும்.

‘ப்ரணவாத்யாஸ்த்ரயோ வேதா: ப்ரணவே பர்யவஸ்திதா: |

வாங்க்மயம் ப்ரணவம் ஸர்வம் தஸ்மாத்ப்ரணவமப்யஸேத்’ || (அத்ரி ஸ்ம்ரிதி 1.9)

அத்ரி ஸ்ம்ரிதியில் கூறப்பட்டுள்ளது:

மூன்று வேதங்களும் ப்ரணவத்தில் தொடங்கி ப்ரணவத்துடனே முடிகின்றன. அனைத்து சொற்களும் ப்ரணவ ரூபமேயாகும், எனவே ப்ரணவத்தையே நாம் உபாசிக்க வேண்டும்.

இத்யாதிஸ்ம்ருதேஶ்ச்ச விஶ்வஶப்தேனோங்காரோSபிதீயதே வாச்யவாசகயோரத்யந்தபேதாபாவாத் விஶ்வமித்யோங்கார ஏவ ப்ரஹ்மோத்யர்த்த: |

இவ்வாறு ஸ்ம்ருதிகளிலிருந்தும் ‘விஶ்வ’ எனும் நாமத்திற்கு ஓம்காரம் என்ற பொருளே நிரூபிக்கப்பட்டுள்ளது. சொல்லும், பொருளும் இணைபிரியாது இருத்தல்லால், விஶ்வம் அல்லது ஓம்காரமே ப்ரஹ்மம் என்பதே இதன் தேர்ந்த கருத்தாகும்.

‘ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலானிதி சாந்த உபாஸீத’ || (சாந்தோக்ய உபநிஶத் 3.14.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

ஐயமின்றி இங்கு அனைத்தும் ப்ரஹ்மமேயாகும்; அனைத்தும் அதனின்றே உருவாகி, அதனுள்ளேயே லயமடைந்து, அதிலேயே செயல்புரிகின்றன, எனவே, அனைத்தும் ப்ரஹ்மமேயாகும். இவ்வாறு, அமைதியான மனத்துடன் ப்ரஹ்மத்தை உபாஸிப்போமாக!!

இதி ஏததுக்தம் பவதி யஸ்மாத் ஸர்வமிதம் விகாரஜாதம் ப்ரஹ்ம தஜ்ஜத்வாத்தல்லயத்வாத்ததனத்வாச்ச | ந ச ஸர்வஸ்யைகாத்-மத்வே ராகாதய: ஸம்பவந்தி | தஸ்மாச்சாந்த உபாசீத இதி ஶ்ருதே: |

இந்த ஸ்ருதி வாக்கியத்திலிருந்து, “இங்குள்ள அனைத்தும் மாற்றங்களும் ப்ரஹ்மத்தில் இருந்தே உருவாவதாலும், ப்ரஹ்மத்திலேயே லயமடைவதாலும், ப்ரஹ்மத்திலேயே அனைத்து செயல்களையும் புரிவதாலும், (இங்குள்ள) அனைத்தும் ப்ரஹ்மமேயாகும். இங்கு அனைத்தும் (இரண்டின்றி) ஒன்றாகவே இருப்பதால், இதில் (ப்ரஹ்மத்தில்) விருப்பு, வெறுப்பாகிய தோஷங்கள் இல்லை. எனவே, அமைதியான உள்ளத்துடன் இந்த ப்ரஹ்மத்தை உபாசிப்பாயாக.” என்ற கருத்து புலனாகிறது.

ஶ்ரூயதாம் தர்மஸர்வஸ்வம் ஶ்ருத்வா சைவாவதார்யதாம் |

ஆத்மன: ப்ரதிகூலானி பரேஶாம் ந ஸமாசரேத்’ || (விஶ்ணுதர்மம் 3.255.44)

விஶ்ணுதர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

அனைவரும் தர்மத்தின் சாரத்தை கேளுங்கள்; கேட்டதை உங்கள் உள்ளத்தில் நன்கு நிலைநிறுத்துங்கள் – எந்த செயல் நமக்கு விரோதமானதோ, எதிரிடையானதோ, அதை (அந்த செயலை) மற்றவருக்கு எதிராக நாம் செய்தல் கூடாது.

‘ஆத்மௌபம்யேன ஸர்வத்ர ஸமம் பஶ்யதி யோSர்ஜுன |

ஸுகம் வா யதி வா துக்கம் ஸ யோகி பரமோ மத:’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 6.32)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:

இன்பமாயினும், துன்பமாயினும் எதிலும் ஆத்மசமத்துவம் பற்றி சம பார்வை செலுத்துவானாயின், அவன் பரம யோகியாகக் கருதப்படுவான்.

‘நிர்குண: பரமாத்மாத்ர தேஹே வ்யாப்ய வ்யவஸ்தித: |

தமஹம் ஞானவிஞ்யேயம் நாவமன்யே ந லங்கயே’ || (மஹாபாரதம் வன பர்வம் 146 | 8)

மஹாபாரதம் வன பர்வத்தில் கூறப்பட்டுள்ளது:

குணங்களற்ற பரமாத்மா உடல் முழுவதிலும் இருக்கிறான். ஞானத்தால் அறியத்தக்க அவனை என்னால் அவமதிக்க இயலாது. எனவே, நான் உன்னைத் தாண்டிச் செல்ல மாட்டேன்.

‘யத்யாகமைர்ன விந்தேயம் தமஹம் பூதபாவனம் |

க்ரமேயம் த்வாம் கிரிம் சேமம் ஹனூமானிவ சாகரம்’ || (மஹாபாரதம் வன பர்வம் 146 | 9)

மஹாபாரதம் வன பர்வத்தில் கூறப்பட்டுள்ளது:

அனைத்து உயிர்களிலும் உறைந்திருக்கும் அவனை (பரமாத்மாவை) நான் அறியாதிருந்தால், கடலைத் தாண்டிய ஹனுமானைப்போல, உன்னையும் இந்த மலையையும் நான் தாண்டி இருப்பேன்.

‘பத்தவைராணி பூதானி த்வேஶம் குர்வந்தி சேத்தத: |

ஶோச்யான்யஹோSதிமோஹேன வ்யாப்தானீதி மநீஶிணாம் ||

ஏதே பின்னத்ருஶா தைத்யா விகல்பா: கதிதா மயா |

க்ருத்வாSப்யுபகமம் தத்ர சக்ஷேப ஶ்ரூயதா மம ||

விஸ்தார: ஸர்வபூதஸ்ய விஶ்ணோ: ஸர்வமிதம் ஜகத் |

த்ரஶ்டவ்யமாத்மவத்தஸ்மாதபேதேன விசக்ஷணை: ||

ஸமுத்ஸ்ருஜ்யாஸுரம் பாவம் தஸ்மாத்யூயம் ததா வயம் |

ததா யத்னம் கரிஶ்யாமோ யதா ப்ராப்ஸ்யாம நிர்வ்ருதிம் ||’  (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.17.82 – 85)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

(ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் ப்ரஹலாதன் அஸுர குழந்தைகளிடம் கூறினான்): பிறருடன் பகைமை பாராட்டி அவரை வெறுக்கும் மனிதரைக்கண்டு அறிஞர்கள் “ஒ!! இவர்கள் இவ்வாறு மோக வசப்பட்டுள்ளனரே!” என்று வருந்துவர். ஹே தைத்யர்களே (அஸுர குழந்தைகளே)! தன்னிலிருந்து பிறரை வேறொன்றாகப் பார்ப்பவரே வெறுப்பையும், பகைமையையும் அடைகின்றனர். எனவே, அவற்றை (வெறுப்பையும், பகைமையையும்) விட்டொழிக்க வேண்டும். நானறிந்த நல்லனவற்றை உங்களுக்குக் கூறுகின்றேன், கேளுங்கள். இந்த உலகம் அனைத்தும் பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் விரிவாக்கமாகும். இங்கு அவரைத்தவிர வேறொன்றும் இல்லை.  அறிவுடையோர் இங்கு அனைத்தையும் தமது ஆத்மாவின் வெளிப்பாடாகவே, வேறுபாடின்றி காண முயல வேண்டும். எனவே, நாம் நமது அஸுர தன்மையை விட்டொழித்து, இவ்வாறு (வேறுபாடின்றி காண்பதற்கு) முயற்சி செய்ய வேண்டும். இதுவே, நமக்கு அமைதியையும் நிம்மதியையும் அளிக்கும்.

ஸர்வத்ர தைத்யா: ஸமதாமுபேத ஸமத்வமாராதனமச்யுதஸ்ய|| (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.17.90)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

(ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் ப்ரஹலாதன் அஸுர குழந்தைகளிடம் கூறினான்): ஹே தைத்யர்களே (அஸுர குழந்தைகளே)!! அனைத்தையும் ஒன்றாகவே (வேறுபாடுகள், வெறுப்புக்கள் இன்றி) பார்க்கப் பழகுங்கள். இதுவே பகவான் ஸ்ரீ அச்யுதருக்கு நாம் செய்யும் ஆராதனையாகும்.

ந மந்த்ராதிக்ருதம் தாத ந ச நைஸர்கிகோ மம |

ப்ரபாவ ஏ ஸாமான்யோ யஸ்ய யஸ்யாச்யுதோ ஹ்ருதி || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.4)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

(ப்ரஹலாதன் தனது தந்தை ஹிரண்யகசிபுவிடம் கூறினான்) தந்தையே!! இது (தன்னைக் கொல்ல தன் தந்தை ஹிரண்யகசிபு எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தது) மந்திர சக்தியினாலும் நிகழவில்லை. இது என்னிடமுள்ள இயற்கையான சக்தியினாலும் அல்ல. பகவான் ஸ்ரீ அச்யுதரிடம் மனதை நிலைநிறுத்தியவருக்கு இவை அனைத்தும் மிக எளிதானதாகும்.

அன்யேஶாம் யோ ந பாபானி சிந்தயத்யாத்மனோ யதா |

தஸ்ய பாபாகமஸ்தாத ஹேத்வபாவான்ன வித்யதே || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.5)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

தன்னைப் போலவே பிறரையும் நேசித்து, அவர்களுக்குக் கேடொன்றும் நினைக்காதவனைப் பாவங்கள் தீண்டுவதில்லை. (துன்பத்தை விளைவிக்கும்) மூல காரணம் இல்லாததால் அவனுக்குத் துன்பங்களும் விளைவதில்லை.

கர்மணா மனஸா வாசா பரபீடாம் கரோதி ய: |

தத்பீஜம் ஜன்ம ஃபலதி ப்ரபூதம் தஸ்ய சாஶுபம் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.6)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

மனதாலும், செயலாலும், வாக்காலும் பிறருக்குத் துன்பம் இழைப்பவன், அந்த பாபமென்னும் விதையின் பயனாய் மறுபிறப்பு மற்றும் பெருந்துன்பன்களைப் பயனாய் (பழமாய்) அடைகிறான்.

சோஹம் ந பாபமிச்சாமி ந கரோமி வதாமி வா |

சிந்தயன்ஸர்வபூதஸ்தமாத்மன்யபி ச கேவம் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.7)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

நான் எவருக்கும் துன்பம் இழைப்பதில்லை. அவ்வாறு பேசுவது கூட கிடையாது. நான் எப்பொழுதும், என் நெஞ்சினுள்ளும் அனைத்துயிர்களுக்குள்ளும்  வீற்றிருக்கும் பகவான் ஸ்ரீ கேசவனைத் த்யானிக்கின்றேன்.

ரீரம் மானஸம் துக்கம் தைவம் பூதபவம் ததா |

ஸர்வத்ர ஸுபசித்தஸ்ய தஸ்ய மே ஜாயேத குத: || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.8)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

இவ்வாறு அனைத்தையும் சமநோக்குடன் பார்க்கும் எனக்கு சரீரம், மனம், வாக்கு ஆகியவற்றுக்கு தெய்வங்களாலோ, இயற்கையாலோ என்ன துன்பம் வரக்கூடும்?

இந்த உலகில் பிறக்கும் அனைவரும் மூவகைத் துன்பங்களுக்கு உட்படுத்தப் படுகிறோம்இவை தாபத் த்ரயங்கள் என்று அழைக்கப்படும்அவையாவன ஆதி தைவிகம் (தேவர்களால் வரும் துன்பங்கள்), ஆதி பௌதிகம் (இயற்கை உபாதைகள்), ஆத்யாத்மிகம் (நமது பூர்வ கர்ம வினைகளால் ஏற்படுவன).

ஏவம் ஸர்வேஶு பூதேஶு பக்திரவ்யபிசாரிணீ |

கர்தவ்யா பண்டிதைர்ஞாத்வா ஸர்வபூதமயம் ஹரிம் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.9)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

இவ்வாறு, பகவான் ஸ்ரீ ஹரியானவர் எவ்வுயிரிலும் நிறைந்துள்ளார் என்பதை உணர்ந்து கற்றறிந்தோர் அனைத்துயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும்.

சாம சோபப்ரதானம் ச பேததண்டௌ ததாபரௌ |

உபாயா: கதிதா: ஸர்வே மித்ராதினாம் ச ஸாதனே || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.35)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

நண்பர்களையும், எதிரிகளையும் அடக்கியாள்வதற்கு (எனது குருமார்கள்) நான்கு உபாயங்களைக் கூறினார்கள். அவையாவன – சாம (நயம்பட பேசுதல்), பேத (இருவரிடையே கலகத்தை உண்டாக்குதல்), தான (பொருள், பணம் முதலியவற்றால் வசப்படுத்துதல்), தண்டம் (வலிமையால் அடக்குதல்).

தானேவாஹம் ந பஶ்யாமி மித்ராதீம்ஸ்தாத மா க்ருத: |

ஸாத்யாபாவே மஹாபாஹோ ஸாதனை: கிம் பிரயோஜனம் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.36)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

ஆனால் தந்தையே, தாங்கள் சினமடையாது கேட்கவேண்டுகிறேன். எனக்கு நண்பர்கள் என்றோ எதிரிகள் என்றோ யாரும் தெரிவதில்லை (எந்த பாகுபாடும் இல்லை என்று பொருள்). ஹே பெருந்தோளுடையோரே!! எப்பொழுது (நண்பனையும்பகைவனையும் அடக்கியாள வேண்டும் என்ற) அடையவேண்டியது ஒன்றும் இல்லையோ, அப்பொழுது அத்தகைய முயற்சியால் என்ன பயன்?

ஸர்வபூதாத்மகே தாத ஜகன்னாதே ஜகன்மயே |

பரமாத்மனி கோவிந்தே மித்ராமித்ரகதா குத: || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.37)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

தந்தையே!! ஜகன்னாதனான பகவான் ஸ்ரீ கோவிந்தன் அனைத்துயிர்களுக்குள்ளும் நீக்கமற நிறைந்தும், இந்த பிரபஞ்சமாகவே வ்யாபித்தும் இருக்கையில், (சிலரை) நண்பனென்றும், (சிலரை) பகைவரென்றும் கருதுவது பயனற்றது.

ஜடானாமவிவேகானாமஸுரானாமபி ப்ரபோ |

பாக்யபோஜ்யானி ராஜ்யானி சந்த்யனீதிமதாமபி ||

தஸ்மாத்யதேத புண்யேஶு ய இச்சேன்மஹதீம் ஶ்ரியம் |

யதிதவ்யம் ஸமத்வே ச நிர்வாணமபி சேச்சதா || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.44-45)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

பிரபுவே (தந்தையே)!!! அரசாளும் பேறு அறிவிலிகளுக்கும், கோழைகளுக்கும், அரசாளத் தகுதியற்றவருக்கும் கூட அவர்களின் முன்ஜென்ம கர்மவினைக்கேற்பக் கிடைக்கக் காண்கிறோம். எனவே, புகழையும், பேற்றையும் விழைபவர்கள் நற்செயல்களைப் புரியவேண்டும். (இந்த சம்ஸாரத் தளையிலிருந்து) முக்தியை விழைபவர்கள் அனைத்துயிர்களையும் (தன்னுயிர்போல) சமநோக்குடன் பார்க்க வேண்டும்.

தேவா மனுஷ்யா: பவ: பக்ஷிவ்ருக்ஷசரீஸ்ருபா:  |

ரூபமேததனந்தஸ்ய விஶ்ணோர்பின்னமிவ ஸ்திதம் ||

ஏதத் விஜானதா ஸர்வம் ஜகத் ஸ்தாவரஜங்கமம் |

       த்ரஶ்டவ்யமாத்மவத் விஶ்ணுர்யதோSயம் விஶ்வரூபத்ருக் ||

ஏவம் ஞாதே ஸ பகவானனாதி: பரமேஶ்வர: |

       ப்ரஸீதத்யச்யுதஸ்தஸ்மின் ப்ரஸன்னே க்லேஶஸம்க்ஷய: ||

(ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.46-48)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

தேவர்கள், மனிதர், மிருகங்கள், பறவைகள் மற்றும் பாம்பு முதலான அனைத்தும் எல்லையற்ற பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் உருவமாகும். அதுவே (அந்த பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் உருவமே) இங்கு வெவ்வேறாகத் தெரிகின்றது என்பதை அறிபவன் இங்குள்ள அசையும், மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தையும் தனக்கு நிகராகவே பார்க்கவேண்டும். ஏனெனில், இவை அனைத்தும் பிரபஞ்சத்தையே தன் உருவமாகக் கொண்டுள்ள பகவான் ஸ்ரீ விஶ்ணுவேயாகும். இவ்வாறு அறிவதன் மூலம் தனக்கொரு தொடக்கம் இல்லாதவரும், அழிவற்றவருமான பரமேஸ்வரன் மனமகிழ்கிறார். அவர் மனமகிழ்ந்தால் நமது அனைத்துத் துன்பங்களும் அழிந்துவிடும்.

பஹூனாம் ஜன்மனாமந்தே ஞானவான் மாம் ப்ரபத்யதே |

       வாஸுதேவ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப: || (ஸ்ரீ பகவத்கீதை 7.19)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:–பல பிறவிகளின் இறுதியில் ஞானவான், ‘எல்லாம் வாசுதேவனே’ என்று கருதி என்னை அடைக்கலமாகப் பற்றுகிறான். அவ்வித மஹாத்மா கிடைத்தற்கரியவன்.

இத்யாதிவசனைச்ச | இத்தகைய வாக்கியங்களால் இதுவே (பகவான் விஶ்வம் என்று அழைக்கப்படுகிறார்) என்பது புலனாகிறது

ஹிம்ஸாதிரஹிதேன ஸ்துதிநமஸ்காராதி கர்தவ்யமிதி தர்யிதும் விஷ்வஶப்தேன ப்ரஹமாபிதீயத இதி வா |

அல்லது, மற்ற உயிர்களுக்குத் துன்பமின்றி விஷ்வமாகிய இந்த பிரபஞ்சத்திற்கு நமது போற்றுதலும், வணக்கங்களும் உரித்தாக வேண்டும். இதைக் குறிப்பதற்காகவே, பரப்ரஹ்மத்தை “விஶ்வம்” என்று அழைக்கின்றனர்.

மத்கர்மக்ருன்மத்பரமோ மத்பக்த: ஸங்கவர்ஜித: |

       நிர்வைர: ஸர்வபூதேஶு ய: ஸ மாமேதி பாண்டவ || (ஸ்ரீ பகவத்கீதை 11.55)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:-என்தொழில் செய்வான், எனைத் தலைக்கொண்டோன், என்னுடைய அடியான், பற்றெலாம் இற்றான், எவ்வுயிரிடத்தும் பகைமை யிலாதான், யாவன், பாண்டவா, அவனென்னை எய்துவான்!!!

இதி | இவ்வாறுக் கூறப்பட்டுள்ளது.

ந சலதி நிஜவர்ணதர்மதோ ய:

ஸமமதிராத்மஸுஹ்ருத்விபக்ஷபக்ஷே |

ந ஹரதி ந ச ஹந்தி கிஞ்சித்துச்சை:

ஸ்திதமனஸம் தமவேஹி விஶ்ணுபக்தம் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 3.7.2௦)

ஸ்ரீ விஶ்ணுபுராணத்தில் கூறப்பட்டுள்ளது:

(யமதர்மராஜன் தனது யமதூதர்களிடம் கூறினார்) எவரொருவர் தமது வர்ணத்தின் கடமைகளிலிருந்து பிறழாதவரோ, எவர் தமது நண்பர் மற்றும் பகைவரிடத்தில் சமனோக்குடையவரோ, எவர் எதையும் (மற்றவரிடமிருந்து களவு வழியில்) பறிக்காமலும், மற்றுயிரைத் துன்புறுத்தாமலும், (இன்பமாயினும், துன்பமாயினும்) எல்லா காலங்களிலும் நிலையான அறிவு படைத்தவரோ, அவரை பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் பக்தனாக அறிவீர்களாக.

விமலமதிராமத்ஸர பிரஶாந்த:

ஸுசிசரிதோSகிலஸத்த்வமித்ரபூத: |

ப்ரியஹிதவசனோSஸ்தமானமாயோ வஸதி

ஸதா ஹ்ருதி தஸ்ய வாஸுதேவ: || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 3.7.24)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-(யமதர்மராஜன் தனது யம தூதர்களிடம் கூறினார்) எவரொருவர் தூய்மையான மனதுடையவரோ, வன்மம் அற்றவரோ, அமைதியான உள்ளம் கொண்டவரோ, அப்பழுக்கற்ற குணமுடையவரோ, அனைத்துயிர்களுக்கும் நண்பரோ, அனைத்துயிர்களுக்கும் இன்பமும், நன்மையையும் தரும் மொழிகளை கூறுபவரோ, அகந்தையும், மமதையும், மாயையும் அற்றவரோ அவரது உள்ளத்தில் பகவான் ஸ்ரீ வாசுதேவர் வசிக்கின்றார்.

வஸதி ஹ்ருதி ஸநாதனே ச தஸ்மின்

பவதி புமாஜ்ஜகதோSஸ்ய ஸௌம்யரூப: |

க்ஷிதிரஸமதிரம்யமாத்மனோSந்த

கதயதி சாருதயைவ சாலபோத || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 3.7.25)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-எவ்வாறு சால மரத்தின் இளமையானது அதனுள்ளே நிரம்பியிருக்கும் சாற்றினை பறைசாற்றுகின்றதோ, அதைப்போலவே அனைவருக்கும் பிரியமான ஒருவர், தனது மனத்தினுள் நித்தியமான பகவான் ஸ்ரீ விஶ்ணு வசிப்பதை பறைசாற்றுகிறார்.

சகலமிதமஹம் ச வாஸுதேவ

பரமபுமான்பரமேஸ்வர: ஸ ஏக |

இதி மதிரசலா பவத்யனந்தே

ஹ்ருதயகதே வ்ரஜ தான்விஹாய தூராத் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 3.7.32)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-எவரொருவர் பரமபுருஶரும், அனைத்தையும் ஆள்பவருமான பகவான் ஸ்ரீ வாசுதேவரே இந்த உலகம் அனைத்துமாக இருப்பதை தமது தூய அறிவால் உணர்ந்து, தமது உள்ளத்தில் பகவான் ஸ்ரீ அனந்தரை நிலைநிறுத்தியவரோ அவரை விட்டு நீங்கள் விலகிச் செல்லுங்கள்.

யமநியமவிதூதகல்மஶானாமனுதினமச்யுதஸக்தமானஸானாம் |

அபகதமதமானமத்ஸரானாம் வ்ரஜ பட தூரதரேன மானவானாம் ||–(ஸ்ரீ விஶ்ணு புராணம் 3.7.26)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-ஒ (யம) தூதர்களே!!! எவரொருவரின் குற்றங்கள் மனம் மற்றும் புலனடக்கத்தின் மூலம் நீங்கிவிட்டனவோ, எவரொருவர் எப்பொழுதும் பகவான் ஸ்ரீ அச்யுதரிடம் மனதை நிலை நிறுத்தியவரோ, எவரொருவர் மமதை, அகந்தை மற்றும் வன்மங்கள் அழியபெற்றவரோ அத்தகைய மனிதரிடமிருந்து விலகியே இருங்கள்.

இத்யாதிவசனைர்வைஷ்ணவலக்ஷணஸ்யைவம்பிரகாரத்வாச்ச ஹிம்ஸாதிரஹிதேன விஶ்ணோ: ஸ்துதிநமஸ்காராதி கர்தவ்யமிதி |

இந்த புராண வாக்கியங்களிலிருந்து, மற்ற உயிர்களுக்குத் துன்பம் விளைவித்தல் போன்ற குற்றங்கள் இல்லாமல் இருத்தலும், பகவான் ஸ்ரீ விஶ்ணுவை போற்றுவது, தொழுவது போன்ற  நற்செயல்களைப் புரிவதுமே ஒரு வைணவனுக்கு (பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் பக்தனுக்கு) அடையாளம் என்பது விளங்கும்.

ஶ்ரத்தயா தேயம் அஶ்ரத்தயா (அ)தேயம் (தைத்ரீய உபநிஶத் 1.11.3)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எந்த ஒரு தானத்தையும் ஈடுபாட்டுடன் கொடுக்கவேண்டும். ஈடுபாடு இல்லாமல் எந்த தானத்தையும் கொடுக்கக்கூடாது.

ஶ்ரத்தயாக்னி ஸமித்த்யதே அர்ப்பணிப்பாலேயே (ஈடுபாட்டாலேயே) நெருப்பானது சுடர்விடுகின்றது

இத்யாதிஸ்ருதேஇது போன்ற வேத வாக்கியங்களாலும்,

ஶ்ரத்தாபூதம் வதான்யஸ்ய ஹதமஶ்ரத்தயேதரத் |

கொடையளிப்பவர் (கொடையளிப்பதில் உள்ள) ஈடுபாட்டாலேயே தூய்மையடைகிறார். ஈடுபாடில்லாமல் (கொடையளித்தால், அதனால் நற்பயன்கள் ஏதும் கிட்டாமல்) நஷ்டமடைகிறார்.

இமம் ஸ்தவமதீயான ஶ்ரத்தா பக்தி ஸமன்வித: (ஸ்ரீ விஶ்ணு சஹஸ்ரநாமம் 132)

ஸ்ரீ விஶ்ணு சஹஸ்ரநாமத்தின் ஃபல ஸ்ருதியில் கூறப்பட்டுள்ளது:

(ஸ்ரீ விஶ்ணு சஹஸ்ரநாமமென்னும்) இந்த துதியை ஈடுபாட்டுடனும், பக்தியுடனும் படிப்பவர் (ஆத்ம சுகம்மன அமைதிதிருமகளின் கருணைதைரியம்வேத அறிவு மற்றும் மேன்மையை அடைகின்றனர்)

ஶ்ரோத்ரியம் ஶ்ராத்தமதீதமவ்ரதமதக்ஷிணம் யஞ்யமன்ரித்விஜாஹுதம் |

ஶ்ரத்தயா தத்தமஸம்ஸ்க்ருதம் ஹவிர்பாகாடேதே தவ தைத்யஸத்தம ||

ஹே அசுரர்களின் தலைவனே!!! தகுந்த வேத மந்திரங்கள் இன்றி நிறைவேற்றப்படும் நீத்தார் கடனும், தவமின்றி கற்கப்படும் கல்வியும், தக்க காணிக்கையின்றி நிறைவேற்றப்படும் வேள்வியும், தகுந்த ரிக் வேத வல்லுனர்கள் இன்றி உண்டாக்கப்படும் வேள்வித்தீயும், ஈடுபாடின்றிக் கொடுக்கப்படும் கொடையும், தூய்மையின்றி வேள்வித்தீயில் அர்ப்பணிக்கப்படும் பொருட்களும், ஆகிய இந்த ஆறும் உன்னைச் சேர்ந்தவையாகும்.

புண்யம் மத்த்வேஶிணா யச்ச மத்பக்தத்வேஶிணாம் ததா |

க்ரயவிக்ரயஸக்தானா புண்ய யச்சாக்னிஹோத்ரிணாம் ||

 ஶரத்தயா ச யத்தான யஜதாம் தததா ததா |

தத்ஸர்வம் தவ தைத்யேந்தர மத்ப்ரஸாதாத்பவிஶ்யதி ||

ஓ அசுரர்களின் தலைவனே!!! என்னையும், எனது பக்தர்களையும் வெறுப்போர் செய்யும் நற்செயல்களின் பலனும், செய்முறையின்றித் தவறுதலாகச் செய்யப்படும் அக்னிஹோத்ரத்தின் பலனும், ஈடுபாடின்றி செய்யப்படும் வேள்வி மற்றும் தானத்தின் பலனும் எனது அருளால் உன்னை வந்து அடையும்.

(மேற்கண்ட மூன்று ஸ்லோகங்களின் தேர்ந்த பொருள்: மேற்கூறிய செயல்கள் யாவும் அசுரத்தன்மை வாய்ந்தவையாகும்இவ்வாறு தவறாகச் செய்வதால் நமக்கு நற்பயன் எதுவும் கிட்டாது)

ஶ்ராத்தயா ஹுதம் தத்தம் தபஸ்தப்த க்ருதம் ச யத் |

அஸதித்யுச்யதே பார்த்த ந ச தத்ப்ரேத்ய நோ இஹ || (ஸ்ரீ பகவத்கீதை 17.28)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:-எவ்வித ஈடுபாடுமின்றி (அசிரத்தையுடன்) செய்யும் வேள்வியும், தானமும், தவமும், கர்மமும், ‘அஸத்’ எனப்படும். பார்த்தா, அவை மறுமையிலும் பயன்படா, இம்மையிலும் பயன்படா.

இத்யாதிஸ்ம்ருதிபிஸ்ச ஶ்ரத்தயா ஸ்துதிநமஸ்காராதி கர்த்தவ்யம் அஶ்ரத்தயா ந கர்த்தவ்யம் |

மேற்கண்ட ஸ்ம்ருதி வாக்கியங்களிலிருந்து (நாம் அறியவேண்டியது என்னவெனில், பகவான் ஸ்ரீ விஶ்ணுவை) போற்றுவதும், தொழுவதும் ஈடுபாட்டுடன் செய்யப்படவேண்டும். ஈடுபாடின்றி செய்வது கூடாது.

ஓம்தத்ஸதிதி நிர்தேஶோ ப்ரஹ்மணஸ்த்ரிவித: ஸ்ம்ருத: | (ஸ்ரீ பகவத்கீதை 17.23)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:

“ஓம் தத் ஸத்” என்ற மும்மைப் பெயர் ப்ரஹ்மத்தைக் குறிப்பதென்பர்.

இதி பகவத்வசனாத் ஸ்துதிநமஸ்காராதிகம் கர்மாஸாத்விகம் விகுநமபி ஶ்ரத்தாபூர்வகம் ப்ரஹ்மனோSபிதானத்ரயப்ரயோகேன ஸகுணம் ஸாத்விகம் ஸம்பாதிதம் பவதி |

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த கீதை ஸ்லோகத்திலிருந்து, “பகவானைப் போற்றுவது, திருவடித்தொழுவது போன்ற செயல்களை தூய்மையற்ற மனதுடனோ, அல்லது குறைபாடுகளுடனோ செய்தாலும், ப்ரஹ்மத்தின் இந்த (ஓம், தத், ஸத் என்ற) மூன்று பெயர்களை ஈடுபாட்டுடன் ஓதுவதன் மூலம் ஒருவர் நற்குணங்களை அடைகிறார்” என்பது புலனாகிறது.

ஆத்மானம் விஶ்ணும் த்யாத்வாS(அ)ர்ச்சன ஸ்துதி நமஸ்காராதி கர்த்தவ்யம் |

பகவான் ஸ்ரீ விஶ்ணுவிற்கு, போற்றுதல்களும், வழிபாடும், திருவடித்தொழுதலும் ஆத்மார்த்தமாகவே (அவரை நமது ஆத்மாவின் உருவமாகவே எண்ணிப்) புரிதல் வேண்டும்.

நாவிஶ்ணு: கீர்த்தயேத்விஶ்ணும் நாவிஶ்ணும் விஶ்ணுமர்ச்சயேத் |

நாவிஶ்ணு: ஸம்ஸ்மரேத் விஶ்ணு நாவிஶ்ணுர்விஶ்ணுமாப்னுயாத் ||–(ஸ்ரீ மஹாபாரதம்)

இதி மஹாபாரதே கர்மகாண்டே |-ஸ்ரீ மஹாபாரதம் கர்மகாண்டத்தில் கூறப்பட்டுள்ளது:

நாம் விஶ்ணுவாக மாறாது (நமக்குள் இருக்கும் ஆத்மா, பரமாத்மாவான விஶ்ணுவே என்று உணராது) பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் புகழ் மாலைகளைப் பாடவேண்டாம், அவருக்கு வழிபாடுகள் செய்யவேண்டாம், நாமே விஶ்ணு என்று உணராது அவரைப் பற்றி நினைக்கவேண்டாம். நாம் விஶ்ணுவாக நம்மை உணராவிடில், நாம் பகவான் ஸ்ரீ விஶ்ணுவை அடைய முடியாது.

ஸர்வான்யேதானி நாமானி பரஸ்ய ப்ரஹ்மனோSநக | (ஸ்ரீ விஶ்ணு தர்மம் 1.123.13)

ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

ஒ தூய்மையானவரே!!! இந்த அனைத்துத் நாமங்களும் பரப்ரஹ்மத்தின் திருநாமங்களே ஆகும்.

யம் யம் காமமபித்யாயேத்தம் தமாப்னோத்யஸம்யம் |

ஸர்வகாமானவாப்னோதி ஸமாராத்ய ஜகத்குரும் || (ஸ்ரீ விஶ்ணு தர்மம்)

ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

ஒரு அடியவர், எந்தெந்தப் பொருளை அடைய விழைகிறாரோ, ஐயமின்றி அப்பொருளையே அடைகிறார். அந்த உலகிற்கு குருவான (பகவான் ஸ்ரீ விஶ்ணுவை) வழிபடுவதன் மூலம் (அடியவரது) அனைத்து விருப்பங்களும் நிறைவேறுகின்றன.

தன்மயத்வேன கோவிந்தமேத்யேதத் தால்ப்ய நான்யதா |

தன்மயோ வாஞ்சிதான் காமான் யதவாப்னோதி மானவ: || (ஸ்ரீ விஶ்ணு தர்மம்)

ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

ஒ தால்ப்யரே!!! (பரமாத்மா) ஸ்ரீ கோவிந்தருடன் ஐக்கியமடைந்து, அவர் மயமாக மாறுவதன் மூலமே ஒருவரால் அவரை அடையமுடியும். எவரொருவர் பரமாத்மாவுடன் ஐக்கியமாகிறாரோ அவரால் அனைத்துப் பொருட்களையும் அடையமுடியும். இதில் மாற்றுக்கருத்து ஒன்றும் இல்லை.

இதி விஶ்ணுதர்மே | இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது,

ஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வமாஸ்தித: |

ஸர்வதா வர்த்தமானோSபி ஸ யோகி மயி வர்த்ததே || (ஸ்ரீமத் பகவத்கீதை 6.31)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:

ஒருமையில் நிலைகொண்டவனாய் எல்லா உயிர்களிடத்திலுமுள்ள என்னைத் தொழுவோன், யாங்கணும் சென்றபோதிலும், அந்த யோகி என்னுள்ளேயே இயலுகிறான்.

இதி பகவத்கீதாயாம் | இவ்வாறு ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது,

அஹம் ஹரி: ஸர்வமிதம் ஜனார்தனோ நான்யத்தத: காரணகார்யஜாதம் |

ஈத்ருங் மனோ யஸ்ய ந தஸ்ய பூயோ பவோத்பவா த்வந்த்வகதா பவந்தி || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.22.87)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

“நானே ஸ்ரீ ஹரியாவேன். இந்த உலகனைத்தும் பகவான் ஜனார்தனரே!! அந்த பரமாத்மாவைத் தவிர்த்து இங்கு எதுவும் செயலோ, காரணமோ இல்லை”. இவ்வாறான அறிவு படைத்தவரை பிறப்பு, இறப்பினால் உண்டாகும் இருமைகள் என்ற நோய் பற்றுவதில்லை.

இதி விஶ்ணுபுராணே | இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது,

குரோர்யத்ர பரீவாதோ நிந்தா வாபி ப்ரவர்த்ததே |

கர்ணௌ தத்ர பிதாதவ்யௌ கந்தவ்யம் வா ததோSன்யத ||

தஸ்மாத் ப்ரஹ்மைவாசார்யஸ்வரூபேணாவதிஷ்டே ||

(ஸ்ரீ விஶ்ணு தர்மம் 3.233.92)

ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

எங்கு குருவின் (ஆசார்யரின்) நிந்தை மற்றும் அவமதிப்பு நிகழ்கிறதோ அங்கு நமது காதுகளை மூடிக்கொள்ளவேண்டும். அல்லது, அங்கிருந்து வெகு தொலைவு சென்றுவிட வேண்டும். ஏனெனில், அங்கு ப்ரஹ்மமே குருவின் (ஆசார்யரின்) வடிவில் இருக்கிறது.

இதி ஸ்ம்ருதே | இவ்வாறு ஸ்ம்ருதிகளில் கூறப்பட்டுள்ளது,

வரம் ஹுதவஹஜ்வாலாபுஞ்சஸ்யாந்தர்வ்யவஸ்திதி: |

ந செளரிசிந்தாவிமுகஜனஸம்வாஸவைஷஸம் ||

எங்கு பகவான் ஸ்ரீ ஹரியை நினைக்காத மக்கள் உள்ளனரோ, அங்கு வசிப்பதைக் காட்டிலும், கொழுந்து விட்டெரியும் தீயின் சுடர்களுக்குள் வசிப்பது மேலானதாகும்.

இதி காத்யாயனவசனாத் ‘யத்ர தேஶே வாஸுதேவநிந்தா தத்ர வாசோ ந கர்தவ்ய: | இந்த காத்யாயனரின் வாக்கின் மூலம், எங்கெங்கெல்லாம் பகவான் ஸ்ரீ வாசுதேவரின் நிந்தனை நடக்கிறதோ, அங்கெங்கெல்லாம் வசிப்பதை தவிர்க்க வேண்டும்.

யஸ்ய தேவே பரா பக்தி: யதா தேவே ததா குரௌ |

தஸ்யைதே கதிதா ஹ்யர்தா: ப்ரகாந்தே மஹாத்மன: ||

எவர் பகவானிடத்திலும், (அந்த பகவானிடம் பக்தி புரிவது போன்றே) தனது குருவினிடத்திலும் பக்தி உடையவரோ, அவருக்கே மேற்கூறிய அர்த்தங்கள் அனைத்தும் தெளிவாகப் புரியும்.

இதி ஶ்வேதாஶ்வதரோபநிஶன்மந்த்ரவர்ணாத் ஹரௌ குரௌ ச பரா பக்தி: கார்யேதி | இந்த ஶ்வேதாஶ்வதரோபநிஶத் வாக்கியத்தின் மூலம், பகவான் ஸ்ரீ ஹரியினிடத்திலும், அந்த பகவானுக்கு சமமாக குருவினிடத்திலும் பக்தி கொள்ளுதல் வேண்டும் (என்று புலனாகிறது).

அவஶேனாபி யன்நாம்னி கீர்த்திதே ஸர்வபாதகை: |

புமான் விமுச்யதே ஸத்ய: ஸிம்ஹத்ரைஸ்தைர்வ்ருகைரிவ||

(ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.8.19)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அவரது திருநாமங்களை (நாம சங்கீர்த்தனம் செய்கிறோம் என்ற நினைவில்லாமலேயே) அனிச்சையாக கூறுபவனுக்குக் கூட அவனது சகல பாவங்களும் அவனைவிட்டு சிங்கத்தைக் கண்டு ஓநாய்கள் பயந்து ஓடுவதைப்போல ஓடிவிடுகின்றன.

ஞானதோ(அஞ்)ஞானதோ வாபி வாஸுதேவஸ்ய கீர்த்தனாத் |

தத் ஸர்வம் விலயம் யாதி தோயஸ்தம் லவணம் யதா ||

எவ்வாறு நீரில் இட்ட உப்பானது (அந்த நீரில்) கரைந்து விடுகின்றதோ, அவ்வாறே, அறிந்தோ அறியாமலோ பகவான் ஸ்ரீ வாசுதேவரை நாம சங்கீர்த்தனம் செய்வதால் அனைத்து பாவங்களும் கரைந்துவிடுகின்றன.

கலிகல்மஶமத்யுக்ரம் நரகார்த்திப்ரதம் ந்ருணாம் |

ப்ரயாதி விலயம் ஸத்ய: ஸக்ருத் க்ருஷ்ணஸ்ய ஸம்ஸ்ம்ருதே || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.8.21)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த கலியுகத்தில் நரகத்தை அடைவிக்கவல்ல எப்பேர்பட்ட கொடிய தோஷங்களும், பகவான் ஸ்ரீ க்ருஷ்ணரை      ஒரு முறை நினைப்பதன் (த்யானிப்பதன்) மூலம் அழிந்துவிடுகின்றன.

ஸக்ருத்ஸ்ம்ருதோSபி கோவிந்தோ ந்ருணாம் ஜன்மதை: க்ருதம் |

பாபராஶிம் தஹத்யாஶு தூலராஶிமிவானல: ||

எவ்வாறு நெருப்பானது பஞ்சுப்பொதிகளை உடனே எரித்து விடுமோ, அவ்வாறே நூற்றுக்கணக்கான ஜன்மங்களாய் சேர்த்துவைத்த பாபக்கூட்டங்கள் பகவான் ஸ்ரீ கோவிந்தனை ஒரு முறை நினைப்பதன் (த்யானிப்பதன்) மூலம் எரிக்கப்படுகின்றன.

சேயம் வதனவல்மீகவாஸினி ரசனோரகீ |

யா ந கோவிந்த கோவிந்த கோவிந்தேதி ப்ரபாஶதே ||

எவரது நாக்கு ‘கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!’ என்று கூறுவதில்லையோ அந்த நாக்கு வாயென்னும் புற்றுக்குள் வாழும் பாம்பாகும்.

பாபவல்லி முகே தஸ்ய ஜிஹ்வாரூபேன திஷ்டதி |

யா ந வக்தி திவா ராத்ரௌ குணான் கோவிந்தஸம்பவான் ||

எந்த நாக்கு பகலும், இரவும் பகவான் ஸ்ரீ கோவிந்தரின் குணங்களைப் போற்றப்பாடவில்லையோ, அது (அந்த) மனிதனின் வாயினுள் நாக்கின் வடிவத்தில் இருக்கும் பாவக்குவியலாகும்.

ஸக்ருதுச்சரிதம் யேன ஹரிரித்யக்ஷரத்வயம் |

பத்த: பரிகரஸ்தேன மோக்ஷாய கமனம் ப்ரதி ||

எவரொருவர் ஒருமுறையேனும் “ஹரி” என்ற இந்த இரு அக்ஷரங்களை (எழுத்துக்களை) உச்சரிக்கின்றாரோ அவர் மோக்ஷத்தை நோக்கி செல்லத் தொடங்கிவிட்டார் என்றே கொள்ளவேண்டும்.

ஏகோSபி க்ருஷ்ணஸ்ய க்ருத: ப்ரணாமோ தசாஶ்வமேதாவப்ருதேன துல்ய: |

தசாஶ்வமேதி புனரேதி ஜன்ம கிருஷ்ணப்ரணாமி ந புனர்பவாய ||

(மஹா பாரதம், ஶாந்தி பர்வம் 47.90)

மஹாபாரதம் ஶாந்திபர்வத்தில் கூறப்பட்டுள்ளது: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை ஒரு முறை வணங்குதல், பத்து அஸ்வமேத யாகங்கள் புரிந்து, முடிவில் (அந்த யாகத்தின் முடிவில் அவப்ருத ஸ்நானமாக) குளிப்பதற்கு சமமானது. அதிலும் பத்து அஸ்வமேத யாகங்களில் (அந்த யாகத்தின் முடிவில் அவப்ருத ஸ்நானமாக) குளிப்பவனுக்குக்கூட மறுஜென்மம் உண்டு; ஸ்ரீ கிருஷ்ணரை வணங்குபவர்களுக்கு மறுஜென்மம் இல்லை.

ஏவமாதிவசனைஶ்ரத்தாபக்த்யோரபாவேSபி நாமஸங்கீர்த்தனம் ஸமஸ்தம் துரிதம் நாசயதீத்யுக்தம் கிமுத ஶ்ராத்தாதிபூர்வகம் ஸஹஸ்ரநாமஸங்கீர்த்தனம் நாசயதீதி |

மேற்கண்ட (இதிஹாஸபுராண) வாக்கியங்களிலிருந்து ஈடுபாடு மற்றும் பக்தி இன்றி செய்யப்படும் நாம சங்கீர்த்தனமே அனைத்துப் பாவங்களையும் ஒழித்துவிடும் என்று புலனாகிறது. எனில், ஈடுபாட்டுடனும், பக்தியுடனும் கூறப்படும் சஹஸ்ரநாமசங்கீர்த்தனம் அவற்றை (அந்தப் பாபக்குவியல்களை) அழித்துவிடும் என்று கூறவும் வேண்டுமா?

மனஸா வா அக்ரே ஸங்கல்ப்யத்யத வாசா வ்யாஹரதி

முதலில் மனதிற்குள் முடிவெடுக்கிறார். பின்னர் வாக்கினால் (அதையே) பேசுகிறார்

யத்தி மனஸா த்யாயதி தத்வாசா வததி

மனம் எதை நினைக்கின்றதோ, வாக்கு அதையே பேசுகின்றது

இதி ஸ்ருதிப்யாம் ஸ்மரணம் த்யானம் ச நாமஸங்கீர்த்தனேSந்தர்பூதம் |

மேற்கண்ட இந்த இரு வேதவாக்கியங்களால் (மனதால்) நினைத்தல், மற்றும் த்யானித்தல் ஆகிய இரண்டும் நாம சங்கீர்த்தனத்திற்குள் அடங்கும் என்பது புலனாகிறது.

யஸ்மின்ன்யஸ்தமதிர்ன யாதி நரகம் ஸ்வர்கோSபி யச்சிந்தனே

விக்னோ யத்ர நிவேஶிதாத்மமனஸோ ப்ராஹ்மோSபி லோகோSல்பக: |

முக்திம் சேதஸி ய: ஸ்திதோSமலதியாம் பும்ஸாம் ததாத்யவ்யய:

கிம் சித்தம் யதகம் ப்ரயாதி விலயம் தத்ராச்யுதே கீர்த்திதே || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.8.56)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

எவரிடம் தங்கள் மனதை லயித்தவர்களுக்கு, நரகவாசம் இல்லையோ, சுவர்க்கத்தைப் பற்றிய நினைவுகளும் (அவர்களது முக்திப்பாதைக்குத்) தடைக்கற்களோ, அந்த ப்ரஹ்மாவின் ஸத்யலோகமும் துச்சமானதோ, எந்த அழிவற்றக் கடவுளானவர் தனது அடியவர்களின் தூய்மையான மனதிற்குள் வசித்து அவர்களுக்கு முக்தியை அளிப்பவரோ, அந்த பகவான் ஸ்ரீ அச்யுதரை நாம சங்கீர்த்தனம் செய்வதால் நமது பாவங்கள் அழிவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? (முக்தியையே அளிக்க வல்லவரால் பாவங்களை அழிக்கப்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை).

இதி விஶ்ணுபுராணாந்தே ஸ்ரீபராஶரேணோபஸம்ஹ்ருதம் |

இவ்வாறு ஸ்ரீவிஶ்ணுபுராணத்தின் முடிவில் ஸ்ரீபராசர மஹரிஷி (அந்தப் புராணத்தின் மூலக்கருத்தாக) முடிவுரையாகக் கூறுகிறார்.

ஆலோட்ய ஸர்வசாஸ்த்ராணி விசார்ய ச புன: புன: |

இதமேகம் ஸுனிஷ்பன்னம் த்யேயோ நாராயண: ஸதா ||

ஸ்ரீ மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது:

அனைத்து சாஸ்திரங்களின் சாரத்தையும் கடைந்தெடுத்து, அதை மீண்டும் மீண்டும் ஆராய்ந்து பார்த்தால் முடிவில் பகவான் ஸ்ரீமன் நாராயணரையே த்யானிக்க வேண்டும் என்பதே (அனைத்து சாஸ்திரங்களின் முடிவான கருத்தாகப்) புலனாகும்.

இதி ஸ்ரீமஹாபாரதாந்தே பகவதா ஸ்ரீவேதவ்யாஸேண உப ஸம்ஹ்ருதம் |

இவ்வாறு ஸ்ரீமஹாபாரதத்தின் முடிவில் ஸ்ரீவேதவ்யாஸர் கூறுகிறார்.

ஹரிரேக: ஸதா த்யேயோ பவத்பி: ஸத்வஸம்ஸ்திதை: |

ஒமித்யேவம் ஸதா விப்ரா: படத த்யாத கேஶவம் || (ஹரிவம்ஶம் 3.89.9)

ஸ்ரீஹரிவம்சத்தில் கூறப்பட்டுள்ளது:

நீங்கள் அனைவரும் ஸத்வ குணத்தில் நிலைநின்று, எப்பொழுதும் பகவான் ஸ்ரீ ஹரியையே த்யானியுங்கள். ஒ அந்தணர்களே!!! ‘ஓம்’ என்று உச்சரித்து, பகவான் ஸ்ரீ கேசவரைத் த்யானிப்பீர்களாக.

கைலாசயாத்ராயாம் ஹரிரேகோ த்யாதவ்ய இத்யுக்தம் மகேஸ்வரேணாபி |

இவ்வாறு ஸ்ரீஹரிவம்சம் கைலாச யாத்திரை பகுதியில் பகவான் சிவனும் ‘பகவான் ஸ்ரீ ஹரி ஒருவரையே த்யானிக்க வேண்டும்’ என்று கூறுகிறார்.

ஏதத்ஸர்வமபிப்ரேத்ய ‘ஏஷ மே ஸர்வ தர்மானாம் தர்மோSதிகதமோ மத:’ இத்யாதிக்யமுக்தம் |

இந்த வாக்கியங்களில் இருந்து “அனைத்து தர்மங்களிலும் பகவான் வாசுதேவரை பக்தியுடன் துதிகளாலும், அர்ச்சனைகளாலும் எப்பொழுதும் தொழுவதையே சிறந்த தர்மம் என்று நான் கருதுகிறேன்” என்பதே (என்னும் பீஷ்மரின் கருத்தே) அனைத்திலும் மேலானதாக கூறப்படுகிறது.

‘கிமேகம் தைவதம் லோகே’ இத்யாரப்ய ‘கிம் ஜபன் முச்யதே ஜந்து:’ இதி ட்ப்ரஶ்னேஶு ‘யத: ஸர்வாணி’ இதி ப்ரஶ்னோத்தராப்யாம் யத்ப்ரஹ்மோக்தம் தத்விஶ்ப்தேனோச்யத இதி வ்யாக்யாதம் |

‘உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?’ என்று தொடங்கி ‘யாரை நாம சங்கீர்த்தனம் செய்யவேண்டும்’ வரைக் (யுதிஷ்டிரனால்) கேட்கப்பட்ட ஆறு கேள்விகளுக்கு விடையாக ‘எவரிடமிருந்து, கல்பத்தின் தொடக்கத்தில் ஜீவராசிகள் தோன்றினவோ’ என்று (பீஷ்மாசார்யார்) எந்த ப்ரஹ்மத்தை பற்றி விவரித்தாரோ அந்த ப்ரஹ்மமே ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தினால் விரித்துரைக்கப்பட்டுள்ளது.

————–

  1. ஓம் விஶ்ணவே நம:

தத்கிமித்யாகாங்க்ஷாயாமாஹ விஶ்ணு:’ இதி |

பிறகு, ‘அந்த விஶ்வம் யார்?’ என்று அறிய முற்படும்பொழுது (அந்த விஶ்வமே) ‘விஶ்ணு’ என்று (பீஷ்மாசார்யார்) கூறுகிறார்.

ததா ச ரிக்வேதே – ரிக் வேதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தமு ஸ்தோதாரபூர்வ்யம் யதாவித ரிதஸ்ய கர்ப்பம் ஜனுஶா பிபர்தன ஆஸ்ய ஜானந்தோ நாம சித்விவக்தன மஹஸ்தே விஶ்ணோ ஸுமதிம் பஜாமஹே

இத்யாதிஶ்ருதிபி: விஶ்ணோ: நாமஸங்கீர்த்தனம் ஸம்யக்ஞானப்ராப்தயே விஹிதம் |

மேற்கண்ட ஸ்ருதி வாக்கியங்களில் பூரண ஞானத்தைப் பெற பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் நாமசங்கீர்த்தனமே வழிமுறையாக கூறப்பட்டுள்ளது.

தமேவ ஸ்தோதாரபுராணம் யதா ஞானேன ஸத்யஸ்ய கர்ப்பம் ஜன்மஸமாப்திம் குருத |

ஒ துதிகள் செய்வோரே!!! உண்மையே உருவமாம் அந்த பழம்பெரும் கடவுளின் (பகவான் ஸ்ரீ விஶ்ணுவின்) உண்மைத் தன்மையை உள்ளவாறு அறிந்து கொண்டு பிறப்பு, இறப்பென்னும் இந்த சம்சார சுழற்சியை முடித்து விடுங்கள் (அதனின்று விடுதலைப் பெறுங்கள்).

ஜானந்தஆஅஸ்ய விஶ்ணோநாமாபி ஆவதத அன்யே வதந்து மா வா ஹே விஶ்ணோ வயம் தே ஸுமதிம் சோபனம் மஹபஜாமஹே இதி ஶ்ருதேர் அபிப்ராய: |

ஒ துதிகள் செய்வோரே!!! இந்த விஶ்ணுவின் நாமங்களை அறிந்துகொண்டு அதை உச்சரிப்பீராக. ஒ விஶ்ணுவே!!! மற்றவர்கள் இதை (இந்த நாமங்களை) ஓதினும், ஒதாவிடினும், நாங்கள் உங்களது அழகு, ஒளி மற்றும் பேரறிவைப் போற்றி பாடுவோம். இதுவே மேற்கண்ட வேத வாக்கியத்தின் உள்ளுறைப் பொருளாகும்.

வேவேஶ்டி வ்யாப்னோதீதி ‘வேவேஷ்டி’ அதாவது எங்கும் பரவியிருப்பவரின் விஶ்ணு: திருநாமம் “விஶ்ணு” வாகும் விஶ்வ்யாப்யத்யபிதாயினோ ‘விஶ்’ என்ற வேர்சொல்லின் பொருள் “எங்கும் பரவியிருத்தலாகும்” நுக்ப்ரத்யயான்தஸ்ய அதனுடன் “நுக்” என்ற விகுதி சேர்ந்து ரூபம் விஶ்ணு ரிதி ‘விஶ்ணு’ என்ற பெயர் உருவாகிறது. |

‘வேவேஶ்டி’ அதாவது எங்கும் பரவியிருப்பதால், பகவான் விஶ்ணு என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தேகாலவஸ்துபரிச்சேத ஶூன்ய இத்யர்த்த: |

இடம், தன்மை, காலம் போன்ற எல்லைகள் இல்லாதவர் என்று பொருள்.

வ்யாப்தே மே ரோதஸி பார்த்த க்ராந்திஸ்சாப்யதிகா ஸ்திதா |

ஒ பார்த்தனே!!! இந்த பூமியும், ஆகாயமும் என்னுள் நிலைபெற்றுள்ளது, அவை எனது விரிவாக்கமாகும்.

க்ரமணாச்சாப்யஹம் பார்த்த விஶ்ணுரித்யபிசம்ஞித: ||

ஒ பார்த்தனே!!! இவ்வாறு பரந்து, விரிந்திருப்பதனால் நான் விஶ்ணு என்று அழைக்கப்படுகிறேன்.

இதி மஹாபாரதே (ஶாந்தி பர்வம் 342.42-43)

இவ்வாறு மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.

யச்ச கிஞ்சித் ஜகத் ஸர்வம் த்ருஷ்யதே ஶ்ரூயதேSபி வா |

அந்தர்பஹிச்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித: ||

நாம் கண்ணால் கண்டும், காதால் கேட்டும் அறிந்து கொள்ள முடிந்த எத்தனை உலகங்களும், பிரபஞ்சங்களும் உள்ளனவோ, அவற்றுள் எல்லாம் பகவான் ஸ்ரீமன் நாராயணர் உள்ளும், புறமும் நீக்கமற பரவியுள்ளார்.

இத்யாதிஶ்ருதேர்ப்ருஹண்நாராயணே (13.1.2) 

இவ்வாறு ப்ருஹண்நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

‘ஸர்வபூதஸ்தமேகம் நாராயணம் காரணபுருஶமகாரணம் பரம் ப்ரஹ்ம சோகமோஹவினிர்முக்தம் விஶ்ணும் த்யாயன்ன ஸீததி’

அனைத்திற்கும் காரணமாகவும், தனக்கு ஒரு காரணமின்றியும், எவ்வித துயரமும், பற்றுதலுமின்றியும், அனைத்து ஜீவராசிகளிலும் நீக்கமற பரந்து, நிறைந்துள்ள பரப்ரஹ்மமான ஸ்ரீமன்நாராயணனாகிய, விஶ்ணுவைத் த்யானிப்பவர் துயருறுவதில்லை.

இத்யாத்மபோதோபநிதி (1)

இவ்வாறு ஆத்மபோத உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

விஶதேர்வா ‘விஶ்’ என்ற வேர்சொல்லின் மற்றொரு பொருள் “உட்புகுதலாகும்” நுக்ப்ரத்யயாந்தஸ்ய அதனுடன் “நுக்” என்ற விகுதி ரூபம் விஶ்ணுர் இதி ‘விஶ்ணு’ என்ற பெயர் உருவாகிறது |

அனைத்துப் பொருட்களிலும் உட்புகுந்து இருப்பதால், பகவான் ‘விஶ்ணு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யஸ்மாத்விஶ்டமிதம் ஸர்வம் தஸ்ய ஶ  க்த்யா மஹாத்மன: |

தஸ்மாதேவோச்யதே விஶ்ணோர்விஶேர்தாதோப்ரவேநாத் || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 3.1.54)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

அந்த பரமாத்மாவின் சக்தியானது இந்த பிரபஞ்சம் அனைத்திலும் உட்புகுந்துள்ளது. ‘விஶ்’ என்ற வேர்சொல்லிற்கு ‘உட்புகுதல்’ என்று பொருள். எனவே, அவர் விஶ்ணு என்று அழைக்கப்படுகிறார்.

இதி ஸ்ரீ விஶ்ணு புராணே | இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

—————–

  1. ஓம் வஶட்காராய நம:

யதுத்தேஶேனாத்வரே எவரைக்குறித்து ஶட் வேள்விகளில் “வஶட்” என்று சொல்லி க்ரியதே ஆகுதி செய்யப்படுகிறதோ ஸ ஶட்கார: அவரே “வஶட்காரர்” ஆவார் |

அனைத்து வேள்விகளிலும் பகவானைக் குறித்தே ‘வஶட்’ என்று சொல்லி ஆகுதி செய்யப்படுகிறது. எனவே, பகவான் ‘வஶட்கார:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யக்ஞ்யோ வை விஶ்ணு: | (தைத்ரிய சம்ஹிதை 1.7.4)-வேள்விகள் விஶ்ணுவேயாகும்.

இதி ஸ்ருதேர்யக்ஞ்யோ வஶட்கார: | இந்த ஸ்ருதி வாக்கியத்தின் படி எந்த வேள்வியில் “வஶட்” என்று சொல்லி ஆகுதி செய்யப்படுகிறதோ அந்த வேள்வியே வஶட்காரமாகும் (வேள்விகள் விஶ்ணுவே என்பதால்விஶ்ணு ஶட்காரர் எனப்படுகிறார்).

யேன வஶட்காராதிமந்த்ராத்மனா வா தேவான்ப்ரீனயதி ஸ வஶட்கார: | தேவதா வா‘ப்ரஜாபதிஸ்ச வஶட்காரஸ்ச’ இதி ஸ்ருதே: |

மேற்கண்ட ஸ்ருதி வாக்கியங்களின்படி, வஶட்கார மந்திர உருவமாக எந்த தெய்வத்தை திருப்தி செய்கிறார்களோ அவர் (அந்த தெய்வமே) வஶட்காரர்.

சதுர்பிஸ்ச சதுர்பிஸ்ச த்வாப்யாம் பஞ்சபிரேவ ச |

ஹூயதே ச புனர்த்வாப்யாம் ஸ மே விஶ்ணு: ப்ரஸீதது ||

நான்கு (ஒஶ்ராவய), நான்கு (அஸ்து ஸ்ரௌஶட்), இரண்டு (யஜ), ஐந்து (யே யஜாமஹே) மற்றும் இரண்டு (வஶட்) எழுத்துக்கள் கொண்ட மந்திரங்களினால் எவரைக் குறித்து வேள்விகள் செய்கின்றோமோ அந்த பகவான் ஸ்ரீ விஶ்ணு என்னிடம் மகிழ்ச்சி அடையட்டும்.

இத்யாதிஸ்ம்ருதேஸ்ச |-இத்தகைய ஸ்ம்ருதி வாக்கியங்களின் படியும் பகவான் ஸ்ரீ விஶ்ணு ‘வஶட்கார’ என்று அழைக்கப்படுகிறார்.

———————-

  1. ஓம் பூதபவ்யபவத்ப்ரபவே நம:

பூதம்  கடந்த காலம் பவ்யம்  எதிர் காலம் பூதபவ்யபவந்தி (நிகழ்காலமும் சேர்ந்து) முக்காலங்களிலும் தேஶாம் ப்ரபுஎவரொருவர் தலைவரோ (ப்ரபுவோ பூதபவ்யபவத்ப்ரபு: அவர் “பூதபவ்யபவத்ப்ரபு” ஆவார்.

முக்காலங்களிலும் ஆட்சி செலுத்துபவராக இருப்பதால் பகவான் “பூதபவ்யபவத்ப்ரபு:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

காலபேதமனாத்ருத்ய ஸன்மாத்ர ப்ரதி யோகிக மைஶ்வர்ய மஸ்யேதி ப்ரபுத்வம் |

(ஏன் அவருக்கு மட்டும் இந்த) ப்ரபுத்வம்? அவர் முக்காலங்களையும் கடந்து, என்று நிரந்தரமாக இருக்கிறார். அதுவே அவரது ஐஸ்வர்யமாகும். எனவே, அவர் முக்காலங்களுக்கும் (முக்காலங்களிலும்) ப்ரபு ஆவார்.

——————

  1. ஓம் பூதக்ருதே நம:

ரஜோகுணம் ஸமாஶ்ரித்ய (அந்த விஶ்ணுவானவர்) ரஜோ குணத்தை ஏற்றுக்கொண்டு விரிஞ்சிரூபேண ப்ரஹ்மாவின் வடிவத்தில் பூதானி அனைத்து உயிர்களையும் கரோதீதி படைப்பதால் பூதக்ருத் ‘பூதக்ருத்’ என்று அழைக்கப்படுகிறார்.||

(அந்த விஶ்ணுவானவர்) ரஜோ குணத்தை ஏற்றுக்கொண்டு (நான்முகக் கடவுள்) ப்ரஹ்மாவின் வடிவத்தில் அனைத்து உயிர்களையும் படைப்பதால் பகவான் ‘பூதக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தமோகுணமாஸ்தாய  (அந்த விஶ்ணுவானவர்) தமோ குணத்தை ஏற்றுக்கொண்டு ருத்ராத்மனா ருத்ரனின் வடிவத்தில் பூதானி அனைத்து உயிர்களையும் க்ருந்ததி அழித்தும் க்ருணோதி கொன்றும் ஹிநஸ்தீதி துன்புறுத்துவதால் பூதக்ருத் ‘பூதக்ருத்’ என்று அழைக்கப்படுகிறார் |

அல்லது, (அந்த விஶ்ணுவானவர்) தமோ குணத்தை ஏற்றுக்கொண்டு (சம்ஹாரக் கடவுள்) ருத்ரனின் வடிவத்தில் அனைத்து உயிர்களையும் (பிரளய காலத்தில்) துன்புறுத்துவதால் பகவான் ‘பூதக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——————-

  1. ஓம் பூதப்ருதே நம:

ஸத்வகுணமதிஷ்டாய ஸத்வ குணத்தை ஏற்றுக்கொண்டு பூதானி அனைத்து உயிர்களையும் பிபர்த்தி வளர்த்துபாலயதி காத்துதாரயதி தாங்கி போஷயதீதி ஊட்டமளிப்பதால் வா பூதப்ருத் ‘பூதப்ருத்’ என்று அழைக்கப்படுகிறார் |

பகவான் ஸ்ரீ விஶ்ணுவானவர் ஸத்வ குணத்தை ஏற்றுக்கொண்டு அனைத்து உயிர்களையும் வளர்த்து, காத்து, தாங்கி, ஊட்டமளிப்பதால் ‘பூதப்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——————-

  1. ஓம் பாவாய நம:

ப்ரபஞ்சரூபேண அனைத்துலகங்களின் வடிவாக பவதீதி வெளிப்படுவதால் கேவலம் முழுவதுமாக பவதீத்யேவ வா ப்ரபஞ்சமாகவே உருவாவதால் பாவ: “பாவ:” என்று அழைக்கப்படுகிறார் | பவனம் வெளிப்படுவது அல்லது உருவாவது பாவ: ‘பாவ:’ என்று அழைக்கப்படுவது (எதனால்) ஸத்தாத்மகோ வா அவரின்றி வேறுதுவுமில்லை என்பதால் |

பகவான் ஸ்ரீ விஶ்ணுவானவர் அனைத்துலகங்களின் வடிவாக, அவரின்றி வேறுதுவுமில்லை என்னும்படி ப்ரபஞ்சமாகவே உருவாவதால் “பாவ:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம் பூதாத்மனே நம:

பூதானாமாத்மாந்தர்யாமீதி அனைத்து ஜீவராசிகளின் உள்ளுறை அந்தராத்மாவாக இருப்பதனால் பூதாத்மா பூதாத்மா” என்று அழைக்கப்படுகிறார் |

பகவான் ஸ்ரீ விஶ்ணுவானவர் அனைத்து ஜீவராசிகளின் உள்ளுறை அந்தராத்மாவாக இருப்பதனால் “பூதாத்மா” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஏஷ தா ஆத்மாந்தர்யாம்யம்ருத:’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 3.7.3-22)

உனக்குள் உள்ளுறைந்திருக்கும் இந்த ஆத்மா அழிவற்றதாகும்.

இதி ஸ்ருதே: | இவ்வாறு வேதங்களில் (உபநிஶத்துக்களில்) கூறப்பட்டுள்ளது.

——————-

  1. ஓம் பூதபாவனாய நம:

பூதானி அனைத்து உயிர்களையும் பாவயதீதி உருவாக்குவதால் ஜனயதி பிறப்பித்து வர்த்தயதீதி வா வளர்ப்பதால் பூதபாவன: “பூதபாவன” என்று அழைக்கப்படுகிறார் |

பகவான் ஸ்ரீ விஶ்ணுவானவர் அனைத்து உயிர்களையும் உருவாக்குவதால், அதாவது பிறப்பித்து, வளர்ப்பதால் “பூதபாவன” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————————-

  1.  பூதாத்மா பரமாத்மா ச முக்தானாம் பரமா கதி:  |அவ்யய: புருஶ: சாக்ஷீ க்ஷேத்ரஞ்யோSக்ஷர ஏவ ச || 2 ||

இந்த இரண்டாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. பூதாத்மா 11. பரமாத்மா 12. முக்தானாம் பரமா கதி😐
  2. அவ்யய: 14.புருஶ: 15.சாக்ஷீ 16. க்ஷேத்ரஞ்ய: 17. அக்ஷர ஏவ ச ||
  1. ஓம் பூதாத்மனே நம:

பூத ஆத்மா யஸ்ய பூதாத்மா கர்மதாராயோ வா 

ரஜோ குணத்தை ஏற்றுக்கொண்டு ஜீவராசிகளைப் படைப்பவர் போன்ற திருநாமங்களைக் கூறும்பொழுது அந்த பரம்பொருளுக்கு முக்குணங்களுக்குக் கீழ்படிந்தவரோ என்ற ஐயத்தை தூய்மையான ஆத்மா (என்ற இந்தத் திருநாமத்தினால் பீஷ்மாச்சார்யார்) போக்குகிறார். பகவான் ஸ்ரீ விஶ்ணு தூய்மையானவர், அனைவருக்கும் உள்ளுறையும் ஆத்மாவானவர்.  அவர் படைப்பது முதலான அனைத்து செயல்களையும் தம் கடமையாகக் கருதிச் செய்கிறார். எந்த குணத்திற்கு வசப்பட்டும் செய்வதில்லை, எனவே அந்த குணங்களினால் வரும் குற்றங்கள் அவரைத் தீண்டுவதில்லை. எனவே, பகவான் ‘பூதாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  1. ஓம் பூதாத்மனே நம:

எட்டாவது திருநாமம் பூதாத்மா (வடமொழியில் வரும் நான்காவது ப, “பாஸ்கரன்” என்ற சொல்லில் வருவது போல உச்சரிக்க வேண்டும்). இந்த திருநாமம் பூதாத்மா (வடமொழியில் வரும் முதல் ப, “பூ” என்ற சொல்லில் வருவது போல உச்சரிக்க வேண்டும்).

பூதக்ருதாதிபிர்குணதந்த்ரத்வம் பூதக்ருத் (ரஜோ குணத்தை ஏற்றுக்கொண்டு ஜீவராசிகளைப் படைப்பவர்) போன்ற திருநாமங்களில் அந்த பரம்பொருளுக்கு முக்குணங்களுக்குக் கீழ்படிந்தவர் ப்ராப்தம் என்ற குற்றம் ஏற்படுமா என்ற ஐயத்தை ப்ரதிஷித்யதே போக்குகிறார் பூதாத்மா இதி தூய்மையான ஆத்மா (என்ற இந்தத் திருநாமத்தினால்).

பூத தூய்மையான ஆத்மா ஆத்மா யஸ்ய யவரோ பூதாத்மா அவரே “பூதாத்மா”கர்மதாராயோ வா (படைப்பது முதலான அனைத்து செயல்களையும்) கடமையாகச் செய்கிறார் (எந்த குணத்திற்கு வசப்பட்டும் செய்வதில்லை, எனவே அந்த குணங்களினால் வரும் குற்றங்கள் அவரைத் தீண்டுவதில்லை).

“கேவலோ நிர்குணஸ்ச” (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.11)

(அவர்) தனிப்பட்டவர், முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவர்.

இதி ஶ்ருதே | இவ்வாறு, ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

குணோபராகச்வேச்சாதபுருஶஸ்யேதி கல்ப்யதே |

அந்த புருஶருக்கு (ஆத்மாவிற்கு), குணங்களுடன் தொடர்பு அவரது இச்சையால் உருவாகிறது என்றே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

——————

  1. ஓம் பரமாத்மனே நம:

பரமஸ்சாஸாவாத்மா சேதி பரமாத்மா  கார்ய காரண விலக்ஷணோ நித்ய சுத்த முக்த ஸ்வபாவ:

அனைத்திற்கும் மேம்பட்ட ஆத்மாவாக இருப்பதனால் பகவான் ‘பரமாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். செயல் மற்றும் விளைவுகளுக்கு அப்பாற்பட்டு எப்பொழுதும் தூய்மையாகவும், அறிவுடையவராகவும், பற்றுதலின்றியும் இருப்பதை தமக்கு இயற்கையாக உடையவர்.

பரமஸ்சாஸாவாத்மா சேதி எவரொருவர் அனைத்திற்கும் மேம்பட்டவரோ மற்றும் ஆத்மாவானவரோ பரமாத்மா அவரே பரமாத்மா. கார்யகாரணவிலக்ஷணோ செயல் மற்றும் விளைவுகளுக்கு அப்பாற்பட்டு நித்ய எப்பொழுதும் சுத்த தூய்மையாகவும் புத்த அறிவுடையவராகவும் முக்த பற்றுதலின்றியும் ஸ்வபாவ: இயற்கையாக உடையவர் |

———–

12-ஓம் முக்தானாம் பரமாகதயே நம:

முக்தானாம் முக்தி அடைந்தவர்களுக்கு பரமா ப்ரக்ருஷ்டா (பரமா என்றால்) மிகவும் மேலான கதிர்கந்த்வ்யா (கதி என்றால்) அடையக்கூடிய இலக்கு தேவதா எந்த தெய்வமோ புனராவ்ருத்த்யசம்பவாத்தத்கதஸ்யேதி எவரை ஒருமுறை சென்று அடைந்தால் மீண்டு வருவதென்பது இல்லையோ முக்தானாம் பரமா கதி: அவரே “முக்தானாம் பரமா கதி” |

எந்த தெய்வம் முக்தி அடைந்தவர்கள் அடையக்கூடிய மிகவும் மேலான இலக்காக இருப்பவரோ எவரை ஒருமுறை சென்று அடைந்தால் பிறப்பு, இறப்பென்னும் இந்த சம்சார சுழற்சிக்கு மீண்டும் வருவதென்பது இல்லையோ அந்த பகவான் (ஸ்ரீ விஶ்ணு) ‘முக்தானாம் பரமா கதி’ (முக்தி அடைபவர்களின் மேலான இலக்கு) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘மாமுபேத்ய து கௌந்தேய புனர்ஜன்ம ந வித்யதே ||’ (ஸ்ரீமத் பகவத்கீதை 8.16)

குந்தி மகனே!!! என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பு இல்லை.

இதி பகவத்வசனம் | இவ்வாறு, பகவான் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறுகிறார்.

—————-

  1. ஓம் அவ்யயாய நம:

ந வ்யேதி நாஸ்ய வ்யயோ விநாஶோ விகாரோ வா வித்யத இதி அவ்யய:

ந வ்யேதி பகவானைப் பகுத்துப் பிரிக்க முடியாததாலும் நாஸ்ய வ்யயோ விநாஷோ விகாரோ அவருக்கு அழிதல், மாற்றங்கள் இல்லாததாலும் வா வித்யத இதி அவ்யய: அவர் அவ்யயர் (அழிவற்றவர்) என்று அழைக்கப்படுகிறார் |

பகவானைப் பகுத்துப் பிரிக்க முடியாததாலும் அவருக்கு அழிதல், மாற்றங்கள் இல்லாததாலும் அவர் அவ்யயர் (அழிவற்றவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘அஜரோSமரோSவ்யய:’–“மூப்பற்றவர், இறவாதவர், அழிவில்லாதவர்”–இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் கூறுகின்றன.

—————

  1. ஓம் புருஶாய நம:

‘புருஶ:’ என்ற இந்த திருநாமத்திற்கு ஆச்சார்யாள் 6 விளக்க உரைகளை அளித்துள்ளார். முன்பே கூறியிருந்தபடி சில திருநாமங்களுக்கு ஆச்சார்யாள் பல விளக்க உரைகளை அளிக்கிறார். அவை மீண்டும் வருமிடத்தில் அந்த பற்பல விளக்கங்களிலிருந்து சிலவற்றை மீண்டும் உரைக்கிறார். இவற்றை “புனருக்தி” தோஷமாக கருத இயலாது.

புரம் ஶரீரம் தஸ்மின் ஶேதே புருஶ:

புரம் ஶரீரம் “புரம்” என்றால் உடல் தஸ்மின் அதற்குள் ஶேதே (அந்தராத்மாவாக) சயனித்திருப்பதால் புருஶ: அவர் ‘புருஶ’ என்று அழைக்கப்படுகிறார் |

பகவான் அனைத்து ஜீவராசிகளின் உடலுக்குள்ளும் அந்தராத்மாவாக சயனித்து இருப்பதால் அவர் “புருஶ:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘நவத்வாரம் புரம் புண்யமேதைர்பாவை: ஸமன்விதம் |

வ்யாப்ய ஶேதே மஹாத்மா யஸ்தஸ்மாத் புருஶ உச்யதே ||’ (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 210|37)

அந்த மஹாத்மாவானவர் ஒன்பது ஓட்டைகளை உடைய இந்த உடலெங்கும் நிறைந்து, சயனித்திருக்கிறார். எனவே, அவர் ‘புருஶ’ என்று அழைக்கப்படுகிறார்.

இதி மஹாபாரதே | இவ்வாறு மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.

யத்வா அஸ்தேவ்யர்த்யஸ்தாக்ஷரயோகாத் ஆஸீத் புரா பூர்வமேவேதி விக்ரஹம் க்ருத்வா வ்யுத்பாதித: புருஶ:

யத்வா அல்லது அஸ்தேவ்யர்த்யஸ்தாக்ஷரயோகாத் அஸ் என்ற வேர் சொல்லை பின்னின்று முன்னாக எடுத்துக்கொண்டு ஆஸீத் இருத்தல் புரா பூர்வமேவேதி ‘புரா’ என்றால் அனைத்திற்கும் முன்னமிருந்தே விக்ரஹம் க்ருத்வா இணைத்துப் பார்த்தால் வ்யுத்பாதித: கிடைக்கும் புருஶ: அவர் ‘புருஶ’ என்று அழைக்கப்படுகிறார் |

அல்லது, அஸ் என்ற வேர் சொல்லை பின்னின்று முன்னாக எடுத்துக்கொண்டு, புரா என்ற சொல்லோடு இணைத்துப் பார்த்தால் ‘புருஶ’ என்ற சொல் கிடைக்கும். இதன் பொருள், அனைத்திற்கும் முன்னமிருந்தே பகவான் இருப்பதனால் அவர் “புருஶ:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘பூர்வமேவாஹமிஹாஸமிதி தத் புருஶஸ்ய புருஶத்வம்’

நான் இங்கு முன்னமிருந்தே இருக்கிறேன். இதுவே, அந்த “புருஶரின்” இயல்பாகும்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் கூறுகின்றன.

அதவா புருஶு பூரிஶு உத்கர்ஶஶாலிஶு ஸத்வேஶு ஸீததீதி புருஶ:

அதவா அல்லது புருஶு புருஶு என்றால் பூரிஶு பல்வேறு உத்கர்ஶஶாலிஶு உயர்ந்த குணமுடைய ஸத்வேஶு ஜீவாத்மாக்களினுள்ளே ஸீததீதி இருப்பதால் புருஶ: பகவான் ‘புருஶ’ என்று அழைக்கப்படுகிறார் |

அல்லது புரு என்றால் பல்வேறு என்று பொருள் கொண்டு, பல்வேறு உயர்ந்த குணமுடைய ஜீவாத்மாக்களினுள்ளே இருப்பதால் பகவான் “புருஶ:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

புரூனி ஃபலானி ஸனோதி ததாதீதி வா புருஶ:

புரூனி புரு என்ற வேர்சொல்லிற்கு ஃபலானி (கேட்பவர்க்குத் தகுந்தபடி) வெவ்வேறு பலன்களை ஸனோதி ததாதீதி சனோதி, அதாவது வாரி வழங்குபவர் வா என்பதால் புருஶ: பகவான் ‘புருஶ’ என்று அழைக்கப்படுகிறார் |

புரூனி + நோதி = புருஶ:

புரு என்றால் பலன்கள் என்ற பொருள் கொண்டு, கேட்பவர்க்குத் தகுந்தபடி வெவ்வேறு பலன்களை வாரி வழங்குவதால் பகவான் “புருஶ:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

புரூனி புவனானி ஸம்ஹாரஸமயே ஸ்யதி அந்தம் க்ரோதீதி வா

புரூனி புரு என்ற வேர்சொல்லிற்கு புவனானி உலகம் ஸம்ஹாரஸமயே (அவற்றை) அழிக்க வேண்டிய காலத்தில் ஸ்யதி அந்தம் க்ரோதீதி வா அவற்றை அழிப்பதால் புருஶ: பகவான் ‘புருஶ’ என்று அழைக்கப்படுகிறார் |

புரூனி + ஸ்யதி = புருஶ:

புரு என்றால் உலகம் என்ற பொருள் கொண்டு, அழிக்க வேண்டிய காலத்தில் அவற்றை அழிப்பதால் பகவான் “புருஶ:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பூர்ணத்வாத் பூரணாத்வா ஸதனாத்வா புருஶ:

பூர்ணத்வாத் தான் (எவ்வித குறையுமின்றி) நிறைவானவராகவும் பூரணாத்வா (அடியவரின் குறைகளை போக்கி அவர்களை) நிறைவுபெறச் செய்வதினாலும் தனாத்வா நிலைத்து நிற்பதனாலும் புருஶ: பகவான் ‘புருஶ’ என்று அழைக்கப்படுகிறார் |

தான் (எவ்வித குறையுமின்றி) நிறைவானவராகவும், (அடியவரின் குறைகளை போக்கி அவர்களை) நிறைவுபெறச் செய்வதினாலும், நிலைத்து நிற்பதனாலும் பகவான் “புருஶ:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘பூரணாத்ஸதனாச்சைவ ததோSஸௌ புருஷோத்தம:’ (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.11)

நிறைவுபெறச் செய்வதினாலும், நிலைத்து நிற்பதனாலும் அவரே புருஷோத்தமராவார்.

இதி பஞ்சமவேதே | இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

———————-

  1. ஓம் ஸாக்ஷிணே நம:

ஸாஷாத் அவ்யவதானேன ஸ்வரூப  போதேன ஈக்ஷதே பஶ்யதி ஸர்வமிதி ஸாக்ஷி 

ஸாக்ஷாதவ்யவதானேன “ஸாக்ஷாத்” என்றால் வேறு எவற்றின் துணையுமின்றி ஸ்வரூப போதேன தன்னுடைய இயற்கையான ஞானத்தால் (அறிவால்) ஈக்ஷதே பஶ்யதி உள்ளதை உள்ளவாறு காண்கிறார் ஸர்வமிதி அனைத்தையும் (அனைவரையும்) ஸாக்ஷி அவர் ‘ஸாக்ஷி’ என்று அழைக்கப்படுகிறார் |

வேறு உபகரணங்களின் துணையுமின்றி தன்னுடைய இயற்கையான ஞானத்தாலேயே (அறிவாலேயே) அனைத்தையும் (அனைவரையும்) உள்ளதை உள்ளவாறு காண்பதால் (அறிவதால்) பகவான் “ஸாக்ஷி” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நமக்கு காண்பதற்கு கண்களின் துணை வேண்டும், கேட்பதற்கு காதுகள் வேண்டும். பகவானுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை. இதனால், அவருக்கு கண்களே இல்லையென்றோ, காதுகளே இல்லையென்றோ பொருள் அல்ல. அவர் ஞானத்தாலேயே அனைத்தையும் அறிவதால் அவருக்கு இவற்றின் துணை கொண்டு தான் காண வேண்டும் என்ற நியதி கிடையாது.

ஸாக்ஷாத்த்ரஶ்டரி ஸம்ஞாயாம்’ (பாணினி சூத்ரம் 5.2.91)

பாணினி சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:

“ஸாக்ஷாத்” என்ற சொல், ஒரு வ்யக்தியைக் குறிக்கும் பொழுது, ‘இணி’ என்ற விகுதியுடன் கூட்டவேண்டும்.

எனவே இந்த திருநாமத்தை நாமாவளியாகக் கூறும்பொழுது “ஓம் சாக்ஷிணே நம:” என்று “இணி” என்ற விகுதியுடன் கூட்டி உச்சரிக்கப்படுகிறது.

——————

  1. ஓம் க்ஷேத்ரஜ்ஞாய நம:

க்ஷேத்ரம் சரீரம் ஜானாதீதி க்ஷேத்ரஜ்ஞ்ய 

க்ஷேத்ரம் சரீரம் “க்ஷேத்ரம்” என்றால் இந்த உடலைக் குறிக்கும் ஜானாதீதி அறிகிறார் க்ஷேத்ரஜ்ஞ்ய அவர் ‘க்ஷேத்ரஜ்ஞ்ய’ என்று அழைக்கப்படுகிறார் |

இந்த உடலை உள்ளபடி அறிவதால் பகவான் “க்ஷேத்ரஜ்ஞ” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஆதோSனுபஸர்கே க:’ (பாணினி சூத்ரம் 3.2.3)

பாணினி சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:

(ஒரு சொல்) அகாரத்தில் / ஆகாரத்தில் முடிந்து, அதற்கு ஒரு வினைச்சொல் முன்னே இல்லாவிடில், “க” என்ற விகுதியுடன் கூட்டவேண்டும்.

க்ஷேத்ர ஜானாதி: இந்த கூட்டலில், இடையில் க விகுதி சேர்வதால்தான் க்ஷேத்ரஞ்ய என்ற சொல் கிடைக்கிறது.

‘க்ஷேத்ரஞம் சாபி மாம் வித்தி’ (ஸ்ரீமத் பகவத் கீதை 13.2)

ஸ்ரீமத் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது:

க்ஷேத்ரஞ்யன் நானே என்றுணர்.

‘க்ஷேத்ராணி ஹி சரீராணி பீஜம் சாபி சுபாசுபம் |

தானி வேத்தி ச யோகாத்மா தத: க்ஷேத்ரஞ்ய உச்யதே ||’ (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 351.6)

மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது:

இந்த உடலே ‘க்ஷேத்ரம்’ என்று அழைக்கப்படுகிறது (இங்கு, உடலை நிலம் என்றும் பொருள் கொள்ளலாம்). நற்செயல் மற்றும் தீச்செயல்கள் இதன் விதைகளாகும். யோகத்தில் நிலைபெற்ற ஆத்மா இதனை உள்ளபடி அறிகிறான், எனவே, அவன் “க்ஷேத்ரஞன்” என்று அறியப்படுகிறான்.

————–

  1. ஓம் அக்ஷராய நம:

ஸ ஏவ ந க்ஷரதி இதி அக்ஷர: பரமாத்மா

ஸ ஏவ ந எவர்க்கு இல்லை க்ஷரதி அழிவு (அல்லது தேய்வு) இதி அவர் அக்ஷர: அக்ஷர: என்று அழைக்கப்படுகிறார் பரமாத்மா அந்த பரமாத்மா |

எவருக்கு, ‘க்ஷரம்’ அதாவது அழிவு (அல்லது தேய்வு) இல்லையோ, அந்த பரமாத்மா “அக்ஷர:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அஷ்னாதேர் “அஷ்” என்ற சொல்லுடன் அஷ்னோதேர் வா அல்லது, “அஷு” என்ற சொல்லுடன் ஸரப்ரத்யய “ஸர” என்ற விகுதி அந்தஸ்ய கடைசியில் சேர்வதன் மூலம் ரூபமஷர இதி “அக்ஷர” என்ற சொல் பிறக்கிறது |

ஏவகாராத் இந்த ஸ்லோகத்தின் முடிவில் வரும் “ஏவ” என்ற சொல் க்ஷேத்ரஞ்யாக்ஷரயோரபேத: க்ஷேத்ரஞன் (பொது வழக்கில் க்ஷேத்ரஞன் என்றால் ஜீவாத்மாவைக் குறிக்கும்) மற்றும் அக்ஷர (பரமாத்மா) இவற்றுள் வேறுபாடுகள் இல்லை என்ற பரமார்த்தத: மிக உயர்ந்த அத்வைத உண்மையைக் குறிக்கிறது.

தத்வமஸி (சாந்தோக்ய உபநிஶத் 6.8)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த ப்ரஹ்மமே நீ.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

சகாராத்வ்யாவஹாரிகோ இந்த ஸ்லோகத்தின் முடிவில் வரும் “சகாரம்” பொது வழக்கில் ஜீவாத்மாவிற்கும், பரமாத்மாவிற்கும் இடையே உள்ள பேதஸ்ச வேறுபாடுகளைக் குறிக்கிறது, ப்ரஸித்தேர் பொதுவழக்கில் பிரபலமாய் இருப்பதால் மட்டுமே அப்ரமாணத்வாத் இது ஆதாரமான உண்மையாகிவிடாது ||

இங்கு சங்கர பகவத்பாதர் “ஏவ ச” என்ற சொற்கள் ஜீவாத்மா, பரமாத்மாவிற்கும் இடையேயான ஒற்றுமை, வேற்றுமைகளைக் குறித்தாலும், முடிவில் அத்வைதமே ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை என்று குறிப்பிடுகிறார்.

————–

3.   யோகோ யோகவிதாம் நேதா ப்ரதானபுருஶேஶ்வர: |நாரஸிம்ஹவபு: ஸ்ரீமான் கேஶவ: புருஶோத்தம:  || 3 ||

இந்த ஸ்லோகத்தில் 7 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. யோக: 19.யோகவிதாம் நேதா  20. ப்ரதானபுருஶேஶ்வர: |
  2. நாரஸிம்ஹவபு: 22.ஸ்ரீமான்  23. கேஶவ: 24. புருஶோத்தம: ||
  1. ஓம் யோகாய நம:

‘ஞானேந்த்ரியாணி ஸர்வாணி நிருத்ய மனஸா ஸஹ |

ஏகத்வபாவனா யோகா: க்ஷேத்ரஞ்யபரமாத்மனோ: ||’

மனம் உட்பட அனைத்து அறிவுப்புலன்களையும் (ஞானேந்த்ரியங்கள்) ஒடுக்கி, க்ஷேத்ரஞ்யான ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்றி இருத்தலே யோகம் எனப்படும்.

தத் இவ்வாறு (மனம், புலன்களை அடக்கி யோகத்தில் ஒன்றுவதன் மூலம்) அவாப்யதயா அடையப்படுவதால் யோக: அவர் ‘யோக:’ என்று அழைக்கப்படுகிறார் |

மனம், மற்றும் அறிவுப்புலன்களை அடக்கி, அவருடன் ஒன்றுபடுதலே யோகமாகும். இத்தகைய யோகத்தால் அடையப்படுவதால், பகவான் “யோக:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——————–

  1. ஓம் யோகவிதாம் நேத்ரே நம:

யோகம் விதந்தி விசாரயந்தி லபந்த இதி வா யோகவிதஸ்தேஶாம் நேதா ஞாநினாம் யோகக்ஷேமவஹனாதிநேதி யோகவிதாம் நேதா |

யோகம் யோகத்தை விதந்தி கற்று விசாரயந்தி ஆராய்ந்து ஜானந்தி அறிந்து லபந்த இதி வா அதை அடைந்த யோகவிதஸ்தேஶாம் யோகத்தை உள்ளபடி உணர்ந்த சிறந்த யோகிகளின் நேதா தலைவர் ஞாநினாம் (அத்தகைய) அறிவிற்சிறந்த யோகிகளின் யோகக்ஷேமவஹனாதிநேதி நன்மை, தீமைகளுக்குப் பொறுப்பேற்று அவற்றை நிர்வகித்து அவர்களை வழிநடத்துவதால் யோகவிதாம் நேதா அவர் “யோகவிதாம் நேதா” என்று அழைக்கப்படுகிறார் |

யோகத்தை கற்று, ஆராய்ந்து, உள்ளபடி உணர்ந்த சிறந்த யோகிகளிக்கு, அவர்களின் நன்மை, தீமைகள் ஆகிய அனைத்திற்கும் பொறுப்பேற்று அவர்களை வழிநடத்துவதால் பகவான் “யோகவிதாம் நேதா” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தேஶாம் நித்யாபியுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 9.22)

ஸ்ரீமத் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது:

அந்த நித்திய யோகிகளின் நன்மை, தீமைகளை நான் பொறுப்பேன்.

இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளார்.

————

  1. ஓம் ப்ரதானபுருஶேஶ்வராய நம:

ப்ரதானம் ப்ரக்ருதிர்மாயா புருஶோ ஜீவஸ் தயோரீஶ்வர: ப்ரதானபுருஶேஶ்வர: |

ப்ரதானம் ‘ப்ரதானம்’ என்றால் ப்ரக்ருதிர்மாயா ‘ப்ரக்ருதி’ அல்லது மாயையைக் குறிக்கும்; புருஶோ ‘புருஶ’ என்றால் ஜீவஸ் ஜீவாத்மாவைக் குறிக்கும் தயோரீஶ்வரஇவை இரண்டையும் தனது ஆளுகைக்குள் வைத்திருப்பதால் ப்ரதானபுருஶேஶ்வர: அவர் ‘ப்ரதானபுருஶேஶ்வர:’ என்று அழைக்கப்படுகிறார் |

ப்ரக்ருதி எனும் ப்ரதானத்தையும், ஜீவாத்மாவாகிய புருஶனையும் தனது ஆளுகைக்குள் வைத்திருப்பதால் (இவை இரண்டிற்கும் ஈஸ்வரனாக இருப்பதால்), பகவான் “ப்ரதானபுருஶேஶ்வர:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உயிரினங்களின் உடல்களும் ப்ரக்ருதி, மஹான், அஹங்காரம், பஞ்ச பூதங்கள், பஞ்ச தன்மாத்திரைகள், ஐந்து அறிவுப்புலன்கள், ஐந்து செயல் புலன்கள், மனம் ஆகிய 24 தத்துவங்களால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த உடலின் உள்ளே உறையும் ஜீவாத்மா 25வது தத்துவமாவார். மனம் உட்பட, முதல் 24 தத்துவங்களும் அசித் (அறிவற்றவை). ஜீவாத்மா மட்டுமே அறிவுடையவர். இந்த சித் (ஜீவாத்மா), மற்றும் அசித் ஆகிய இரண்டிற்கும் ஈஸ்வரன் பகவான்.

————–

  1. ஓம் நாரஸிம்ஹவபுஶேநம:

நரஸ்ய ஸிம்ஹஸ்ய சாவயவா யஸ்மின் லக்ஷ்யந்தே தத்வபுர்யஸ்ய ஸ நாரஸிம்ஹவபு:|

நரஸ்ய மனிதர் ஸிம்ஹஸ்ய சிங்கம் சாவயவா ஆகிய இந்த இரண்டின் உடலுறுப்புகளும் யஸ்மின் எங்கு லக்ஷ்யந்தே சேர்ந்து உள்ளதோ தத்வபுர்யஸ்ய ஸ அத்தகைய உடல் உள்ளவர் நாரஸிம்ஹவபு: ‘நாரஸிம்ஹவபு:’ என்று அழைக்கப்படுகிறார் |

(நரசிம்ம அவதாரத்தின் பொழுது) அவருடைய உடலில் மனிதர் மற்றும் சிங்கத்தின் உறுப்புகள் ஒன்று சேர்ந்து இருப்பதால் பகவான் ‘நாரஸிம்ஹவபு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————–

  1. ஓம் ஸ்ரீமதே நம:

யஸ்ய வக்ஷஸி நித்யம் வஸதி ஸ்ரீ: ஸ ஸ்ரீமான் |யஸ்ய எவருடைய வக்ஷஸி திருமார்பில் நித்யம் எப்பொழுதும் வஸதி வாழ்கின்றாளோ ஸ்ரீ: திருமகள் ஸ அவர் ஸ்ரீமான் ‘ஸ்ரீமான்’ என்று அழைக்கப்படுகிறார் |

பகவானுடைய திருமார்பில் திருமகள் எப்பொழுதும் நிரந்தரமாக வாழ்வதால் அவர் ‘ஸ்ரீமான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மற்றவர்களுக்கு ‘ஸ்ரீமான்’ என்பது ஒரு அடைமொழி மட்டுமே. பகவானுக்குத்தான் அது பொருத்தமான திருநாமமாகும். திருவண்பரிசாரம் என்னும் திவ்யதேசத்தில் பகவான், இந்தத் திருநாமத்தின் தூய தமிழாக்கமான ‘திருவாழ்மார்பர்’ என்ற பெயருடனேயே சேவை சாதிக்கிறார்.

—————

  1. ஓம் கேஶவாய நம:

அபிரூபா: கேஶா யஸ்ய ஸ கேஶவ: |

அபிரூபாமிகவும் அழகியதான கேஶா தலைமுடியுடன் யஸ்ய இருப்பதால்  அவர் கேஶவ: ‘கேசவன்’ என்று அழைக்கப்படுகிறார்|

மிகவும் அழகிய தலைமுடியுடன் இருப்பதால் பகவான் ‘கேசவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘கேஶாத்வோSன்யதரஸ்யாம்’ (பாணினி ஸூத்ரம் 5.2.109)

பாணினி ஸூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:-“கேச” என்ற சொல்லின் பின்னே வரும் “வ:” என்ற விகுதி, புகழ்ச்சியைக் குறிக்கிறது.

யத்வா கஸ்ச அஸ்ச ஈஶஸ்ச த்ரிமூர்த்தய: யத்வஶேன வர்தந்தே ஸ கேஶவ|

யத்வா அல்லது கஸ்ச ‘க’ என்று அழைக்கப்படும் ப்ரஹ்மா அஸ்ச ‘அ’ என்று அழைக்கப்படும் விஶ்ணு ஶஸ்ச ‘ஈசன்’ என்று அழைக்கப்படும் சிவன் த்ரிமூர்த்தய: ஆகிய இந்த மும்மூர்த்திகளும் யத்வஶேன எவருடைய ஆணைக்குட்பட்டு வர்தந்தே இருக்கின்றனரோ  அவர் கேஶவ: கேசவன் என்று அழைக்கப்படுகிறார்.

ப்ரஹ்மா, விஶ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் எவருடைய ஆணைக்குட்பட்டு இருக்கின்றனரோ அந்த பரம்பொருள் ‘கேசவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  1. அத்வைதத்தின்படி மும்மூர்த்திகளும் ஞானமே வடிவான பரப்ரஹ்மத்தின் உருவங்களாகும்.
  2. க+அ+ஈஶ+வ (வஷேன, வர்தந்தே) = கேஶவ:

கேஶிவதாத்வா ‘கேசி’ என்ற அசுரனைக் கொன்றபடியால் கேஶவ: பகவான் கேசவன் என்று அழைக்கப்படுகிறார்.

‘கேசி’ என்ற அசுரனைக் கொன்றபடியால் பகவான் கேசவன் என்று அழைக்கப்படுகிறார்.

கேசி என்பவன் பகவான் கிருஷ்ணரைக் கொல்வதற்காக கம்சனால் ஏவப்பட்ட ஒரு அசுரன். இவன், குதிரை வடிவில் வந்து பிருந்தாவனத்தில் மக்களை துன்புறுத்த, பகவான் தனது கைகளை அவன் வாயினுள் நுழைத்து, கழுத்தை நெரித்துக் கொன்றார்.

யஸ்மாத்வயை துஶ்டாத்மா ஹதகேசீ ஜனார்தன |

தஸ்மாத்கேஶவநாம்னா த்வம் லோகே க்யாதோ பவிஶ்யஸி ||’ (ஸ்ரீ விஶ்ணு புராணம் 5.16.23)

இதி விஶ்ணுபுராணே ஸ்ரீக்ருஶ்ணம் ப்ரதி நாரதவசனம் |

ஸ்ரீ விஶ்ணுபுராணத்தில் நாரத முனிவர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் கூறுகிறார்:

ஒ ஜனார்தனா!!! தங்களுடைய கரங்களால் இந்த தீய எண்ணம் கொண்ட கேசி கொல்லப்பட்டான். எனவே, நீங்கள் உலகில் கேசவன் என்ற திருநாமத்தால் புகழ்பெற்று விளங்குவீர்கள்.

ப்ருஶோதராதித்வாச்சப்தசாதுத்வகல்பனா | (பாணினி சூத்திரம் 6.3.109)

பாணினி சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:

ப்ருஷோதரா வர்க்கத்தை சேர்ந்த சொற்கள் இலக்கணப் புணர்ச்சி விதிகளின்படி பொருந்தாது இருப்பினும், முனிவர்களும், பெரியோர்களும் இந்த பெயரை உச்சரித்திருந்தால் அதை (இலக்கண விதிகளின்படி ஆராயாமல்) அவ்வாறே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

புணர்ச்சி விதிகளின்படி கேசி + வ, கேசவ என்ற சொல்லாக உருவாகாது. எனினும், நாரதர் முதலிய முனிவர்கள் இவ்வாறு கூறியிருப்பதால் இந்த நாமத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த விதிவிலக்கை மேற்கண்ட பாணினி சூத்திரம் நமக்கு அளிக்கிறது.

——————

  1. ஓம் புருஶோத்தமாய நம:

புருஶானாம் உத்தம: புருஶோத்தம: |

புருஶானாம் புருஶர்களில் உத்தமதலைசிறந்தவர் புருஶோத்தம: ‘புருஷோத்தம:’ என்று அழைக்கப்படுகிறார் |

புருஶர்களில் உயர்ந்தவர் என்பதால் பகவான் ‘புருஶோத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த திருநாமத்தில் புருஶ என்ற பெயர்ச்சொல்லும், உத்தம என்ற பெயர்ச்சொல்லும் இணைந்து புருஶோத்தம: என்று உருவாகியுள்ளது. பொதுவாக, ஒரு சமூகத்திலிருந்து ஒன்றை மட்டும் உயர்த்திக் கூறும்பொழுது (புருஶர்களில் உத்தமன்) இவ்வாறு இணைக்கக்கூடாது என்பது பாணினி ஸூத்ரத்தில் உள்ள ஒரு விதியாகும். அந்த விதி இங்கு பொருந்தாது என்று ஆதிசங்கரர் ‘ந நிர்த்தாரணே’ (பாணினி ஸூத்ரம் 2.2.10) என்ற பாணினி ஸூத்திரத்தின் விளக்குகிறார்.

ததா ச இதை விளக்கும் வண்ணம் பகவத் வசனம் ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறியுள்ளார்.

யஸ்மாத்க்ஷரமதீதோSஹமக்ஷராதபி சோத்தம: |

அதோSஸ்மி லோகே வேதே ச ப்ரதிதபுருஶோத்தம: || (ஸ்ரீமத் பகவத்கீதை 15.18)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்:

நான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஶனைக் (ஜீவாத்மாவைக்) காட்டிலும் சிறந்தோனாதலாலும், உலகத்தாராலும், வேதங்களாலும் புருஷோத்தமனென்று கூறப்படுகிறேன்.

இந்த விளக்கத்தின் தேர்ந்த பொருளாவது: பகவான் புருஶர்களைக் காட்டிலும் உயர்ந்தவர், புருஶர்களில் உத்தமர் என்று கூறுவது பிறப்பாலோ, பண்பாலோ அல்லது செயலாலோ அல்ல. அவரது இயற்கையான வல்லமையாலேயே அவர் புருஶர்களுக்குள் உத்தமாராக இருக்கிறார்.

——————————

  1. ஸர்வ: ஶர்வ: ஶிவ: ஸ்தாணுர் பூதாதிர் நிதிரவ்யய: |

ஸம்பவோ பாவனோ பர்தா ப்ரபவ: ப்ரபு ரீஶ்வர: ||

இந்த நான்காவது ஸ்லோகத்தில் மொத்தம் 12 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஸர்வ: 26.ஶர்வ: 27. ஶிவ: 28. ஸ்தாணு: 29. பூதாதி: 30. நிதி: அவ்யய: |
  2. ஸம்பவ: 32.பாவன: 33. பர்தா 34. ப்ரபவ: 35. ப்ரபு: 36. ஈஶ்வர: ||
  1. ஓம் ஸர்வஸ்மை நம:

அஸதஸ்ச ஸதஸ்சைவ ஸர்வஸ்ய ப்ரபவாப்யயாத் |

ஸர்வஸ்ய ஸர்வதா ஞானாத் ஸர்வமேன ப்ரசக்ஷதே || (மஹா பாரதம் உத்தியோக பர்வம் 7.11)

மஹா பாரதம் உத்யோக பர்வத்தில் பகவான் வியாசர் கூறுகிறார்:

அல்லதும், உள்ளதும் ஆகிய அனைத்தின் பிறப்பிடமாகவும், அவை நிலை பெற்றிருக்கும் இடமாகவும், அழியும் காலத்தில் சென்றும் லயமடையும் இடமாக இருப்பதாலும், அனைத்தையும் (அனைவரையும்) அனைத்து காலங்களிலும் உள்ளபடி அறிவதாலும் அவரை ‘ஸர்வ’ என்று அழைக்கின்றனர்.

இதி இந்த பகவத் வ்யாஸ வசனாத் வ்யாஸ பகவானின் கூற்றின்படி ஸர்வ: பகவான் ‘ஸர்வ’ என்று அழைக்கப் படுகிறார் |

மஹா பாரதத்தில் உள்ள இந்த வ்யாஸ பகவானின் கூற்றின் படி, அனைத்தின் பிறப்பிடமாகவும், அனைத்தையும் அறிவதாலும், பகவான் ‘ஸர்வ’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

————–

  1. ஓம் ஶர்வாய நம:

ஶ்ருணாதி ஸம்ஹார ஸமயே ஸம்ஹரதி ஸகலா: ப்ரஜா: இதி ஶர்வ:

ஶ்ருணாதி ‘ஶ்ருணாதி’ என்றால் ஸம்ஹார ஸமயே பிரளய (அழிக்கும்) காலத்தில் ஸம்ஹரதி கொல்வதால் ஸகலாப்ரஜாஅனைத்து உயிர்களையும் இதி ஶர்வ:’ பகவான் ‘ஶர்வ:’ என்று அழைக்கப் படுகிறார்.

பிரளய (அழிக்கும்) காலத்தில் அனைத்து உயிர்களையும் கொல்வதால் பகவான் ‘ஶர்வ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

—————–

  1. ஓம் ஶிவாய நம:

நிஸ் த்ரை குண்ய தயா ஶுத்தத்வாத் ஶிவ:

நிஸ் த்ரை குண்ய தயா முக்குணங்களின் சேர்க்கை இன்றி ஶுத்தத்வாத் தூய்மையானவராக இருப்பதால் ஶிவ: பகவான் ‘ஶிவ:’ என்று அழைக்கப் படுகிறார்.

முக் குணங்களின் சேர்க்கை இன்றி தூய்மையானவராக இருப்பதால் பகவான் ‘ஶிவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

ஶிவ என்றால் தூய்மை என்று ஒரு பொருள் உண்டு

‘ஸ ப்ரஹ்மா ஸ ஶிவ:’ (கைவல்ய உபநிஶத் 8)

கைவல்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:-அவரே ப்ரஹ்மா (நான்முகக்கடவுள்), அவரே சிவன்…

இதி இங்கு அபேத (அனைத்தும் ஒன்றே என்ற) அத்வைத உபதேஶா தத்துவத்தின் படி ஶிவா ‘ஶிவ’ ஆதி முதலிய நாமபிர் நாமங்களாலும் ஹரிரேவ பகவான் ஹரி ஒருவரே ஸ்தூயதே துதிக்கப்படுகிறார் |

கைவல்ய உபநிஶத்தில் சிவபெருமானைப் போற்றிக் கூறும் வாக்கியமே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. சிவனை போற்றும் அனைத்தும் பகவான் ஹரியையே போற்றும் என்பது அத்வைதத் தத்துவம். இதை ஆசார்யர் தொடக்கத்திலேயே விளக்கி யுள்ளார். எனவே, சிவ முதலிய திருநாமங்களும் பகவான் ஹரியையே போற்றுவதாகக் கொள்ள வேண்டும்.

————————

  1. ஓம் ஸ்தாணவே நம:

ஸ்திரத்வாத் ஸ்தாணு:

ஸ்திரத்வாத் (நிரந்தரமாக) நிலையாக இருப்பதால் ஸ்தாணு: பகவான் ‘ஸ்தாணு:’ என்று அழைக்கப் படுகிறார்.

(நிரந்தரமாக) நிலையாக இருப்பதால் பகவான் ‘ஸ்தாணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

————–

  1. ஓம் பூதாதயே நம:

பூதானாம் ஆதி காரணத்வாத் பூதாதி: 

பூதானாம் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதி காரணத்வாத் மூல காரணமாய் இருப்பதால் பூதாதி: பகவான் ‘பூதாதி:’ என்று அழைக்கப் படுகிறார்.

அனைத்து ஜீவ ராசிகளுக்கும் மூல காரணமாய் இருப்பதால் பகவான் ‘பூதாதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

———–

  1. ஓம் நிதயேSவ்யயாய நம:

ப்ரளய காலேஸ்மின் ஸர்வம் நிதீயத இதி நிதி: அவ்யய: அவினஶ்வரோ  நிதிரித்யர்த்த:

ப்ரளய காலேஸ்மின் அழிக்கும் (ப்ரளய) காலத்தில் ஸர்வம் அனைத்தும் நிதீயத (அவருக்குள்) சென்று உள்ளடங்குவதால் இதி அவர் நிதி: ‘நிதி:’ என்று அழைக்கப் படுகிறார்.

‘கர்மண்யதிகரணே ச’ (பாணினி ஸூத்ரம் 3.3.93)

இதி கி ப்ரத்யய:-இந்த பாணினி ஸூத்ரத்தின் படி இங்கு ‘கி’ விகுதி கூட்டப் பட்டுள்ளது.

ஸ ஏவ இப்பொழுது நிதிர்விஶேஶ்யதே ‘நிதி’யை மேலும் ப்ரத்யேகமாக அடையாளப் படுத்திக் காட்டுகிறார்.

அவ்யய: அவினஶ்வரோ எக்காலத்திலும் அழிவே இல்லாத நிதிரித்யர்த்தநிதி என்று இதற்குப் பொருள்.

அழிக்கும் (ப்ரளய) காலத்தில் அனைத்தும் (அவருக்குள்) சென்று உள்ளடங்குவதா லும், எக்காலத்திலும் அழிவே இல்லாததாலும், பகவான் “நிதி: அவ்யய:” என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

————–

  1. ஓம் ஸம்பவாய நம:

ஸ்வேச்சயா ஸமீசீனம் பவனமஸ்யேதி ஸம்பவ:

ஸ்வேச்சயா (கர்மாதீனமாக இல்லாமல்) தனது சுய விருப்பத்தால் ஸமீசீனம் புகழோடு பவனமஸ்யேதி பிறப்பதால் (அவதாரம் எடுப்பதால்) ஸம்பவ: அவர் ‘சம்பவ:’ என்று அழைக்கப் படுகிறார்.

(நம்மை போன்று கர்மாதீனமாக இல்லாமல்) தனது சுய விருப்பத்தால் புகழோடு பிறப்பதால் (அவதாரம் எடுப்பதால்) பகவான் ‘ஸம்பவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

‘தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே’ (ஸ்ரீமத் பகவத்கீதை 4.8)

ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்:…அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.

இதி பகவத் வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத் கீதையில் கூறியுள்ளார்.

அத துஶ்ட விநாஶாய ஸாதூனாம் ரக்ஷணாய ச |

ஸ்வேச்சயா ஸம்பவாம் யேவம் கர்ப துக்க விவர்ஜித: ||’

தீயன செய்வோரை அழிக்கவும், நல்லோரைக் காக்கவும், நான் எனது விருப்பத்தின் படி கர்ப்பமும் அதைச் சார்ந்த துன்பங்களும் இன்றி பிறக்கிறேன்.

இதி  | இவ்வாறு, பகவானின் மற்றொரு வாக்கும் உள்ளது.

மேற்கண்ட ஸ்லோகம் எந்த இதிஹாஸ, புராணத்தில் உள்ளது என்ற குறிப்பு இல்லை. ஆனால், இதன் பொருள் பகவத் கீதையிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ள ஸ்லோகத்தை ஒத்தே உள்ளது.

————–

32-ஓம் பாவனாய நம:

ஸர்வேஶாம் போக்த்ருணாம் ஃபலானி பாவயதீதி பாவன:

ஸர்வேஶாம் அனைத்து போக்த்ருணாம் அனுபவிப்பவர்களுக்கு ஃபலானி (அவர்களின் விருப்பம், மற்றும் கர்மத்திற்குத் தக்கவாறு) பலன்களை பாவயதீதி உருவாக்குவதால் பாவன: அவர் ‘பாவன:’ என்று அழைக்கப்படுகிறார்.

அனைத்து வகையான சுகங்களையும் அனுபவிப்பவர்களுக்கு, (அவர்களின் விருப்பம்மற்றும் கர்மத்திற்குத் தக்கவாறு) பலன்களை உருவாக்குவதால் பகவான் ‘பாவன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

ஸர்வஃபலதாத்ருத்வம் பகவானே அனைத்துப் பலன்களையும் வழங்குகிறார் என்பது,

‘ஃபலமத உபபத்தே:’ (ப்ரஹ்ம ஸூத்ரம் 3.2.38)-அனைத்துப் பலன்களும் ப்ரஹ்மத்தினிடத்தினின்றே தோன்றுகின்றன.

இத்யத்ர ப்ரதிபாதிதம் இதனால் (மேற்கண்ட ப்ரஹ்ம ஸூத்ரத்தினால்) நிரூபிக்கப்பட்டுள்ளது.

—————–

  1. ஓம் பர்த்ரே நம:

ப்ரபஞ்சஸ்ய அதிஶ்டானத்வேன பரணாத் பர்தா

ப்ரபஞ்சஸ்ய இந்த ப்ரபஞ்சத்தை அதிஶ்டானத்வேன தனது சக்தியால் பரணாத் தாங்குவதால் பர்தா பகவான் ‘பர்தா’ என்று அழைக்கப்படுகிறார்.

இந்த ப்ரபஞ்சத்தை தனது சக்தியால் தாங்குவதால் பகவான் ‘பர்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

—————–
34-ஓம் ப்ரபவாய நம:

ப்ரகர்ஶேண மஹாபூதானி அஸ்மாஜ் ஜாயந்த இதி ப்ரபவ:

ப்ரகர்ஶேண மிகச் சிறந்த மஹாபூதானி அனைத்து பொருட்களும்உயிரினங்களும் அஸ்மாஜ் ஜாயந்த எவரிடமிருந்து தோன்றுகின்றனவோ இதி அவர் ப்ரபவ: ‘ப்ரபவ’ என்று அழைக்கப்படுகிறார்.

மிகச்சிறந்த (அல்லது ஆச்சர்யப்படும் வகையில்) அனைத்து பொருட்களும், உயிரினங்களும் அவரிடமிருந்து தோன்றுகின்றபடியால் பகவான் ‘ப்ரபவ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பவோ ஜன்மாஸ்யேதி வா ப்ரபவ: 

ப்ரக்ருஶ்டோ (அல்லது) மிகப் பெருமையான பவோ ஜன்மாஸ்யேதி வா பிறவிகள் (அவதாரங்கள்) எடுப்பதால் அவர் ‘ப்ரபவ’ என்று அழைக்கப் படுகிறார்.

அல்லது, அவரது பிறவிகள் (அவதாரங்கள்) மிகவும் பெருமை பெற்று விளங்குவதால் பகவான் ‘ப்ரபவ’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

————-

  1. ஓம் ப்ரபவே நம:

ஸர்வாஸு க்ரியாஸு ஸாமர்த்த்ய அதிஶயாத் ப்ரபு: 

ஸர்வாஸு அனைத்து க்ரியாஸு செயல்களிலும் ஸாமர்த்த்ய திறமை அதியாத் மிகுந்து இருப்பதால் ப்ரபு: அவர் ‘ப்ரபு’ என்று அழைக்கப்படுகிறார்.

அனைத்து செயல்களிலும் அவரது திறமை மிகுந்து இருப்பதால் பகவான் ‘ப்ரபு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————–

  1. ஓம் ஈஶ்வராய நம:

நிரூபாதிகம் ஐஶ்வர்யம் அஸ்யேதி ஈஶ்வர: 

நிரூபாதிகம் பண்பு, மற்றும் குணங்கள் அற்று இருத்தலை ஶ்வர்யம் தனக்கு செல்வமாக அஸ்யேதி கொண்டிருப்பதால் ஈஶ்வர: அவர் ‘ஈஶ்வர:’ என்று அழைக்கப்படுகிறார்.

(நிர்குண ப்ரஹ்மமாக) பண்பு, மற்றும் குணங்கள் அற்று இருத்தலை தனக்கு செல்வமாக கொண்டிருப்பதால் பகவான் ‘ஈஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. ஓம் ஸ்வயம்புவே நம:

ஸ்வயமேவ பவதீதி ஸ்வயம்பூ: |

ஸ்வயமேவ (தான் மட்டும்) தனியொருவராய் பவதீதி இருப்பதால் ஸ்வயம்பூ: அவர் ‘ஸ்வயம்பூ’ என்று அழைக்கப்படுகிறார்.

(வேறொரு காரணமின்றிதான் மட்டும்) தனியொருவராய் இருப்பதால், பகவான் ‘ஸ்வயம்பூ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸ ஏவ ஸ்வயமுத்பபௌ’ (மனு ஸ்ம்ரிதி 1.7)

மனுஸ்ம்ரிதியில் மனு பகவான் கூறுகிறார்அவர் தானே (தன்னிச்சையாலே) வெளிப்பட்டார்

இதி இவ்வாறு மானவம் வசனம் மனு மனுஸ்ம்ரிதியில் கூறியுள்ளார் |

ஸர்வேஶாமுபரி பவதி ஸ்வயம் பவதீதி வா ஸ்வயம்பூ: |

ஸர்வேஶாமுபரி அனைவருக்கும் மேலே பவதி இருப்பதாலும் ஸ்வயம் பவதீதி வா தன்னிச்சையால் தோன்றுவதாலும் ஸ்வயம்பூ: அவர் ‘ஸ்வயம்பூ’ என்று அழைக்கப்படுகிறார்.

அனைவருக்கும் மேலே இருப்பதாலும், தன்னிச்சையால் தோன்றுவதாலும் பகவான் ‘ஸ்வயம்பூ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யேஶாமுபரி பவதி யஸ்சோபரி பவதி ததுபயாத்மனா ஸ்வயமேவ பவதீதி வா ஸ்வயம்பூ: |

யேஶாமுபரி பவதி எவருக்கு மேலானவரோ (ஜீவாத்மா) யஸ்சோபரி பவதி எவர் மேலானவரோ (பரமாத்மா) ததுபயாத்மனா இப்படி இருவாறாகவும் ஸ்வயமேவ அவரே பவதீதி வா தோன்றுவதால் ஸ்வயம்பூ: அவர் ‘ ஸ்வயம்பூ’ என்று அழைக்கப்படுகிறார்.

எவருக்கு மேலானவரோ (ஜீவாத்மாவும் அவரே), எவர் மேலானவரோ (ஜீவாத்மாவிற்கு மேலானவரும் அவரே), இப்படி இருவாறாகவும் அவரே தோன்றுவதால் பகவான் ‘ஸ்வயம்பூ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரிபூ: ஸ்வயம்பூ: (ஈசாவாஸ்ய உபநிஶத் 8)

ஈசாவாஸ்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளதுஎல்லாமாக இருப்பவர்; தானே தோன்றியவர்.

இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி அதவா அல்லது ஸ்வயம்பூ: ஸ்வயம்பூ என்றால் பரமேஶ்வரஅந்த பரம்பொருள் ஸ்வயமேவ தன்னிச்சையாலே ஸ்வதந்த்ரோ சுதந்திரமாக பவதி இருப்பவர் ந பரதந்த்ர(என்றுமே) பிறருக்கு அடங்கி இருப்பவரல்ல.

‘பராஞ்சி கானி வ்யத்ருணத் ஸ்வயம்பூ:’ (கதோபநிஶத் 2.1.1)

கதோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளதுஈஸ்வரன் இந்த்ரியங்களை வெளிநோக்கு உடையனவாக (படைத்திருப்பதன் மூலம்) நாசப்படுத்திவிட்டார்.

இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படியும் (மேலே கூறப்பட்ட ஈசாவாஸ்ய உபநிஶத் மந்த்ரத்தின் படியும் பகவான் ஸ்வயம்பூ என்று அழைக்கப்படுகிறார்). 

—————–

  1. ஸ்வயம்பூ: ஶம்புராதித்ய: புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |
    அனாதிநிதனோ தாதா விதாதா தாதுருத்தம: ||

    இந்த ஐந்தாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

    37. ஸ்வயம்பூ: 38. ஶம்பு: 39. ஆதித்ய: 40. புஷ்கராக்ஷ: 41. மஹாஸ்வன: |
    42. அநாதிநிதன: 43. தாதா 44. விதாதா 45. தாதுருத்தம: |

38-ஓம் ஶம்பவே நம:

ஶம் ஸுகம் பக்தனாம் பாவயதீதி ஶம்பு: |

ஶம் ‘ஶம்’ என்றால் ஸுகம் சுகம் அல்லது இன்பம் பக்தனாம் தனது அடியவர்களுக்கு பாவயதீதி உருவாக்குவதால் (அளிப்பதால்) ஶம்பு: அவர் ‘ ஶம்பு:’ என்று அழைக்கப்படுகிறார் |

தனது அடியவர்களுக்கு இன்பத்தை அளிப்பதால் (சுகத்தை உருவாக்குவதால்) பகவான் ‘ஶம்பு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம் ஆதித்யாய நம:

ஆதித்யமண்டலாந்த:ஸ்தோ ஹிரண்மய: புருஶ: ஆதித்ய: |

ஆதித்யமண்டலாந்த:ஸ்தோ சூர்யமண்டலத்தின் நடுவே ஹிரண்மயதங்கமயமான புருஶபுருஶராய் வீற்றிருப்பதால் ஆதித்ய: அவர் ‘ஆதித்யன்’ என்று அழைக்கப்படுகிறார் |

சூர்யமண்டலத்தின் நடுவே தங்கமயமான புருஶராய் வீற்றிருப்பதால் பகவான் ‘ஆதித்யன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அன்றாட சந்த்யா வந்தனத்தில் வரும் ஒரு பகுதி: த்யேயஸ்ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தி நாராயண ஸரஸிஜாஸன ஸந்நிவிஷ்ட.

த்வாதஸாதித்யேஶூ விஶ்ணுர்வா ஆதித்ய: |

த்வாதஸாதித்யேஶூ பன்னிரண்டு ஆதித்யர்களுக்குள் விஶ்ணுர்வா ‘விஶ்ணு’ என்ற பெயருடைய ஆதித்யனாக பகவான் இருப்பதால் ஆதித்ய: அவர் ‘ஆதித்யன்’ என்று அழைக்கப்படுகிறார் |

பன்னிரண்டு ஆதித்யர்களுக்குள் விஶ்ணு என்ற பெயருடைய பகவான் இருப்பதால் பகவான் ‘ஆதித்யன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஆதித்யானாமஹம் விஶ்ணு:’ (ஸ்ரீமத் பகவத்கீதை 10.21)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்:

ஆதித்யர்களில் நான் விஶ்ணு.

இத்யுக்தே இவ்வாறு பகவான் கூறியுள்ளார்.

பன்னிரண்டு ஆதித்யர்களின் பெயர்கள்: சக்ர, அர்யமா, தாதா, த்வஷ்டா, பூஶா, விவஸ்வான், சவிதா, மித்ர, வருண, அம்சுமான், பக மற்றும் விஶ்ணு.

அதிதேர் அகண்டிதாயா மஹ்யா அயம் பதிரிதி வா ஆதித்ய: |

அதிதேர் ‘அதிதி’ என்றால் அகண்டிதாயா மஹ்யா பரந்து விரிந்துள்ள இந்த பூமி அயம் அந்த நிலமகளின் பதிரிதி வா கணவன் ஆதலால் ஆதித்ய: அவர் ‘ஆதித்யன்’ என்று அழைக்கப்படுகிறார் |

‘அதிதி’ என்றால் பரந்து விரிந்துள்ள இந்த பூமியைக் குறிக்கும். அந்த நிலமகளின் கணவன் ஆதலால், பகவான் ‘ஆதித்யன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘இயம் வா அதிதி:’ ‘மஹீம் தேவீம் விஶ்ணுபத்னீம்’

‘இது (இந்த பூமி) அதிதி’

‘இந்த பூமிதேவியானவள் விஶ்ணுவின் மனைவியாவாள்’

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

யதா ஆதித்ய ஏக ஏவாநேகேஶூ ஜலபாஜனேஶூ அனேகவத் ப்ரதிபாஸதே ஏவமனேகேஶூ ஶரீரேஶூ ஏக ஏவாத்மானேகவத் ப்ரதிபாஸத இதி ஆதித்ய ஸாதர்ம்யதா ஆதித்ய: |

யதா எவ்வாறு ஆதித்ய சூரியன் ஏக ஏவாநேகேஶூ ஒன்றாக இருப்பினும் ஜலபாஜனேஶூ வெவ்வேறு நீர்நிலைகளில் அனேகவத் பலவாறாக ப்ரதிபாஸதே பிரதிபலிக்கின்றதோ, ஏவமனேகேஶூ தான் ஒருவர் மட்டுமே இருப்பினும் ஶரீரேஶூ பல்வேறு உடல்களில் ஏக ஏவாத்மானேகவத் ஒரே ஆத்மாவானது பல ஆத்மாக்களாக ப்ரதிபாஸத பிரதிபலிப்பதால் இதி ஆதித்ய ஸாதர்ம்யதா இவ்வாறு (பிரதிபலிப்பதில்) சூரியனை ஒத்து இருப்பதால் ஆதித்ய: அவர் ‘ஆதித்யன்’ என்று அழைக்கப்படுகிறார் |

ஒரே சூரியன், பல நீர்நிலைகளில் பலவாக பிரதிபலிக்கிறது. அது போன்றே, ஒரே பரமாத்மா பல்வேறு உடல்களில் பற்பல ஜீவாத்மாக்களாக தோன்றுகிறார். இவ்வாறு, சூரியனைப் போன்ற தன்மை உடையவராதலால் பகவான் ‘ஆதித்யன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————–

  1. ஓம் புஶ்கராக்ஷாய நம:

புஶ்கரேண உபமிதே அக்ஷிணீ யஸ்யேதி புஶ்கராக்ஷ: |

புஶ்கரேண தாமரை இதழ்களை உபமிதே ஒத்த அக்ஷிணீ கண்களை யஸ்யேதி உடையவராதலால் புஶ்கராக்ஷ: அவர் ‘புஷ்கராக்ஷ’ என்று அழைக்கப்படுகிறார் |

தாமரை இதழ்களை ஒத்த கண்களை உடையவராதலால் பகவான் ‘புஷ்கராக்ஷ’ (தாமரைக்கண்ணன்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

  1. ஓம் மஹாஸ்வனாய நம:

மஹான் ஊர்ஜித: ஸ்வனோ நாதோ வா ஶ்ருதிலக்ஷணோ யஸ்ய ஸ மஹாஸ்வன: |

மஹான் ஊர்ஜித‘ மஹத்’ என்றால் மிக உயர்ந்த ஸ்வனோ நாதோ வா ‘ஸ்வனம்’ என்றால் ஒலி ஷ்ருதிலக்ஷணோ வேதங்களாகிய யஸ்ய எவருக்கு உள்ளதோ  மஹாஸ்வன: அவர் ‘ மஹாஸ்வன:’ என்று அழைக்கப்படுகிறார் |

வேதங்களாகிய மிக உயர்ந்த ஒலியை உடையவராதலால் பகவான் ‘மஹாஸ்வன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, மிக உயர்ந்த வேதங்களையே தனக்கு ஒலியாகக் கொண்டிருப்பதால் பகவான் ‘மஹாஸ்வன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸன்மஹத்’ (பாணினி ஸூத்ரம் 2.1.61)

இந்த பாணினி ஸூத்ரத்தின் படி ஸத், மஹத் (மஹான்) போன்ற வார்த்தைகள் தனிப்பட்ட ஒருவரைக் குறிக்கும் பொழுது அவரது மேன்மையை சுட்டிக் காட்டுகிறது.

‘ஆன்மஹத: ஸமானாதிகரணஜாதீயயோ:’ (பாணினி ஸூத்ரம் 6.3.46)

இந்த பாணினி ஸூத்ரத்தின் படி: மஹத் என்ற சொல்லின் பின்னே, ஒன்றை மற்றொண்டுடன் தொடர்பு படுத்தும் சொல் வந்தால், மஹத் என்னும் சொல்லில் உள்ள ‘த’காரம் ‘ஆ’காரமாக மாறுகிறது.

எனவேதான், மஹத்+ஸ்வன: = மகாஸ்வன என்று (த், ஆவாக மாறி) உருவாகிறது.

இத்யாத்வம் | இவ்வாறு, மஹத்+ஸ்வன: = மஹாஸ்வன என்று (த், ஆவாக மாறி) உருவாகிறது.

‘அஸ்ய மஹதோ பூதோ நி:ஸ்வஸிதமேதத் ரிக்வேதோ யஜுர்வேத:’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.4.10)

அந்த பரப்ரஹ்மம் (தனது) மூச்சுக்காற்றை உள்ளிழுத்தல், மற்றும் வெளியிடுதலே ரிக்வேதம் மற்றும் யஜுர்வேதமாகும்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

—————-

  1. ஓம் அநாதிநிதனாய நம:

ஆதிர்ஜன்ம: நிதனம் விநாஶ: தத்த்வயம் யஸ்ய ந வித்யதே ஸ அநாதிநிதன: |

ஆதிர்ஜன்ம‘ஆதி’ என்றால் பிறப்பு நிதனம் விநாஶ‘நிதனம்’ என்றால் அழிவு தத்த்வயம் இந்த இரண்டும் யஸ்ய ந வித்யதே எவருக்கு இல்லையோ  அநாதிநிதன: அவர் ‘அநாதிநிதன’ என்று அழைக்கப்படுகிறார் |

எவருக்கு பிறப்பு மற்றும் இறப்பு இல்லையோ அந்த பகவான் ‘அநாதிநிதன’ (பிறப்பு, இறப்பு அற்றவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஓம் தாத்ரே நம:

ஆனந்தாதிரூபேண விஶ்வம் பிபர்தீதி தாதா |

ஆனந்தாதிரூபேண ஆதிசேஷன் முதலான உருவங்களைக்கொண்டு விஶ்வம் இந்த பிரபஞ்சத்தைத் பிபர்தீதி தாங்குவதால் தாதா அவர் ‘தாதா’ என்று அழைக்கப்படுகிறார்.

ஆதிசேஷன் முதலான உருவங்களைக்கொண்டு இந்த பிரபஞ்சத்தைத் தாங்குவதால் பகவான் ‘தாதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————-

  1. ஓம் விதாத்ரே நம:

கர்மணாம் தத்ஃபலானாம் ச கர்த்தா விதாதா |

கர்மணாம் செயல்களையும் தத்ஃபலானாம் அதன் பலன்களையும் ச கர்த்தா உருவாக்குவதால் விதாதா அவர் ‘விதாதா’ என்று அழைக்கப்படுகிறார் |

செயல்களையும், அவற்றின் பலன்களையும் உருவாக்குவதால் பகவான் ‘விதாதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

  1. ஓம் தாதவ உத்தமாய நம:

அனந்தாதீனாமபி தாரகத்வாத் விஶேஶேண ததாதீதி வா தாதுருத்தம இதி நாமைகம் ஸமானாதிகரண்யேன ஸர்வதாதுப்ய: ப்ருதிவ்யாதிப்ய: உத்க்ருஷ்டஸ்சித்தாதுரித்யர்த்த: |

அனந்தாதீனாமபி ஆதிசேஷன் முதலானவர்களையும் தாரகத்வாத் தாங்குபவர் விஶேஶேண குறிப்பாக, அவர்களுக்குத் தாங்கும் சக்தியைத் ததாதீதி வா தருபவர் தாதுருத்தம இதி ‘தாதுருத்தம’ என்று அழைக்கப்படுகிறார் நாமைகம் இது ஒரே திருநாமமாகும் விஶேஶேணம் பகவானின் தனிப்பட்ட சக்தியால் ஸமானாதிகரண்யேன முன்னர் கூறப்பட்ட (தாதா என்ற) திருநாமத்துடன் தொடர்புடையதாகப் பொருள் கொள்ளவேண்டும்.

ஸர்வதாதுப்ய: (இந்த ப்ரபஞ்சத்தையும், அதிலுள்ளவைகளையும் தாங்கும் ஆதிசேஷன் முதலான) அனைத்துத் தாதுக்களைக் (தாங்குபவர்களைக்) காட்டிலும் ப்ருதிவ்யாதிப்ய: பூமி முதலானவைகளைக் காட்டிலும் உத்க்ருஷ்டஸ்சித்தாதுரித்யர்த்த: சிறந்தவர் என்பதே இந்த திருநாமத்தின் தேர்ந்த பொருளாகும்.

(முன்னர் தாதா என்ற திருநாமத்தில் கூறப்பட்டுள்ள) ஆதிசேஷன் முதலானோருக்கும் (பிரபஞ்சத்தை) தாங்கும் சக்தியை அளித்து, அவர்களையும் (அந்த சக்தியை அளிப்பதன் மூலம்) தாங்குவதால் பகவான் ‘தாதுருத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆதிசேஷன், பூமி முதலானோர் ‘தாதா’; அவர்களையும் தாங்குவதால் பகவான் தாதுக்களில் சிறந்தவர், ‘தாதுருத்தம:’.

தாதுர் விரிஞ்சேருத்க்ருஶ்ட (விரிஞ்சேர் உத்க்ருஶ்ட) (தாதுருத்தம:) இதி வா வையதிகரண்யேன |

தாதுர் அனைத்தையும் படைக்கும் விரிஞ்சேருத்க்ருஶ்ட (விரிஞ்சேர் உத்க்ருஶ்ட) (நான்முகக்கடவுள்) ப்ரஹ்மாவை விட மேலானவர் (தாதுருத்தம:) இதி வா வையதிகரண்யேன இவ்வாறு, மேலே கூறப்பட்ட (தாதா என்ற) திருநாமத்துடன் தொடர்பு கொள்ளாமல், இந்த திருநாமத்திற்கு இவ்வாறும் பொருள் கொள்ளலாம்.

(முன்னர் கூறப்பட்ட தாதா என்ற திருநாமத்துடன் சேர்க்காமல் தனித்துப் பொருள் கொண்டால்): அனைத்தையும் படைக்கும் (இந்த உலகில் உள்ள அனைத்திற்கும் மூல காரணமாய் இருக்கும்) நான்முகக் கடவுளாகிய ப்ரஹ்மாவைக் காட்டிலும் உயர்ந்தவர் என்பதால் பகவான் ‘தாதுருத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நாமத்வயம் வா அல்லது (தாது, உத்தம என்று) இரண்டு திருநாமங்களாகக் கொண்டால்;

கார்யகாரணப்ரபஞ்சதாரணாச்சிதேவ இந்த ப்ரபஞ்சம் அனைத்திற்கும் காரணமாகவும், அதில் நடைபெறும் செயல்களாகவும் உள்ள அறிவாக இருப்பதால் தாது: அவர் தாது (அனைத்திற்கும் காரணம்) என்று அழைக்கப்படுகிறார்.

இந்த ப்ரபஞ்சத்தின் காரணமாகவும் அதில் நடைபெறும் அனைத்துக் காரியங்களாகவும் அறிவின் வடிவாக பகவானே இருப்பதால் அவர் தாது என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அத்வைதத்தின் படி பரப்ரஹ்மம் ஒன்றே தத்துவம். இந்த ப்ரபஞ்சம் அனைத்துமே அந்த ப்ரஹ்மம் மாயையில் பட்டு ப்ரதிபலிப்பதால் உருவாகிறது. இந்த ப்ரஹ்மம் சின்மயமாக (அறிவு வடிவாக) உள்ளது.

உத்தம: ஸர்வேஷாம் அனைத்து உத்கதானாம் சிறப்புடையவர்கள் மற்றும் சிறந்த பதார்த்தங்களைக் காட்டிலும் அதிஶயேனோத்கதத்வாத் மிகச்சிறந்தவரானபடியால் உத்தம: அவர் ‘உத்தமர்’ என்று அழைக்கப்படுகிறார்.

அனைவரையும், அனைத்தையும் காட்டிலும் சிறந்தவரானபடியால் பகவான் ‘ உத்தமர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

  1. அப்ரமேயோ ஹ்ருஶீகேஶ: பத்மநாபோS(அ)மரப்ரபு: |விஶ்வகர்மா மனுஸ்த்வஶ்டா ஸ்தவிஶ்ட: ஸ்தவிரோ த்ருவ: ||

இந்த ஆறாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

  1. அப்ரமேய:, 47. ஹ்ருஶீகேஶ:, 48. பத்மநாப:, 49. அமரப்ரபு: |
  2. விஶ்வகர்மா, 51. மனு:, 52. த்வஶ்டா, 53. ஸ்தவிஶ்: 54. ஸ்தவிரோ த்ருவ: ||

———-

  1. ஓம் அப்ரமேயாய நம:

ஶப்தாதிரஹிதத்வான் ந ப்ரத்யக்ஷ கம்ய: நாப்யனுமானவிஶய: தத்வ்யாப்தலிங்காபவாத் நாப்யுபமான ஸித்த: நிர்பாகத்வேன ஸாத்ருஶ்யாபாவாத் | நாப்யர்தாபத்திக்ராஹ்ய: தத்வினானுபபத்யமானஸ்யா(அ)ஸம்பவாத் | நாப்யபாவகோசரோ பாவத்வேன ஸம்மதத்வாத் | அபாவஸாக்ஷித்வாச்ய ந ஶஶ்டப்ரமாணஸ்ய | நாபி ஸாஸ்த்ரப்ரமாணவேத்ய: ப்ரமாணஜன்யாதிஶயாபாவாத் | யத்யேவம் ஸாஸ்திரயோனித்வம் கதம்? | உச்யதே ப்ரமாணாதிஸாக்ஷித்வேன ப்ரகாஶஸ்வரூபஸ்ய ப்ரமாணா-விஶ்யத்வேSபி அத்யஸ்தாதத்ரூபநிவர்தகத்வேன ஸாஸ்த்ர-ப்ரமாணகத்வமிதி அப்ரமேய: ஸாக்ஷி ரூபத்வாத் வா |

ஶப்தாதி ரஹிதத்வான் ந ப்ரத்யக்ஷ கம்யபரம்பொருள் நம் புலன்களுக்கு அப்பாற்பட்டவர்.  எனவே, ஒலி முதலியவற்றை அறிய உதவும் நமது புலனுறுப்புக்களால் அவரை அறிய இயலாது | நாப்யனுமானவிஶயதத்வ்யாப்த லிங்காபவாத் எவ்வித குறியீடோ, குறிப்பிட்டதொரு உருவமோ இல்லாததால் அவரை அனுமானித்தும் அறிந்துகொள்ள முடியாது (உதாரணமாகநேரடியாக தெரியாவிடினும் புகை இருப்பதன் மூலம் நெருப்பை நாம் அனுமானிக்கலாம்பரம்பொருளை அவ்வாறும் அறிய முடியாது) | நாப்யுபமான ஸித்த:, நிர்பாகத்வேன ஸாத்ருஶ்யாபாவாத் அவரை பிரிக்க (பகுக்க) முடியாது, (அவருக்கு) வேறொரு ஒப்புமை இல்லை. எனவே, எடுத்துக்காட்டின் மூலமும் அவரை அறிய முடியாது | நாப்யர்தாபத்திக்ராஹ்ய: தத்வினானுபபத்யமானஸ்யா(அ)ஸம்பவாத் அவரை சில சூழ்நிலைகளைக் (காரணங்களைக்) கொண்டும் அறிய முடியாது, ஏனெனில், அவரைத் தவிர வேறொன்றைக் கொண்டும் அந்த சூழ்நிலைகளுக்கு விளக்கம் அளிக்க இயலாது (அவரைக் கொண்டே விளக்கம் அளிக்க வேண்டுமெனில், அவற்றால் அவரை எவ்வாறு அறிய முடியும்?) | நாப்யபாவகோசரோ பாவத்வேன ஸம்மதத்வாத் அவர் அனைத்திலும் உள்ளார் என்று ஏற்றுக்கொள்வதால், அவரை (இவை அனைத்துமில்லை) என்ற நீக்க வாதத்தாலும் வர்ணிக்க இயலாது (பரப்ரஹ்மம் இது இல்லை, இது இல்லை என்று அனைத்தையும் நீக்கி, முடிவில் எது உள்ளதோ அதுவே என்று விவரிப்பது நீக்க வாதம்) | அபாவஸாக்ஷித்வாச்ய ந ஶஶ்டப்ரமாணஸ்ய எனவே, அவரை (நாம் காணும், அறியும்) எதுவும் இல்லை என்ற நீக்க வாதத்தை விளக்கும் ஆறு சான்றுகளாலும் விளக்க இயலாது | நாபி ஸாஸ்த்ரப்ரமாணவேத்ய: ப்ரமாணஜன்யாதியாபாவாத் அவரை, சாத்திரங்களைக் கொண்டும் முழுவதுமாகத் தெரிந்துகொள்ள இயலாது. ஏனெனில், அவர் சாத்திர விளக்கங்களுக்கும் அப்பாற்பட்டும், அவற்றிலிருந்து மேம்பட்டும் இருப்பவர் | யத்யேவம் ஸாஸ்திரயோனித்வம் கதம்? உண்மை இவ்வாறிருக்க, அவரை சாத்திரங்களைக் கொண்டே அறிய இயலும் என்று கூறுவது ஏன்? | உச்யதே ப்ரமாணாதிஸாக்ஷித்வேன ப்ரகாஸ்வரூபஸ்ய ப்ரமாணா-விஶ்யத்வேSபி அத்யஸ்தாதத்ரூபநிவர்தகத்வேன ஸாஸ்த்ர-ப்ரமாணகத்வமிதி அப்ரமேய: ஸாக்ஷி ரூபத்வாத் வா ஒளிமயமான அவர் (வேதம் முதலிய) சான்றுகளுக்கு அப்பாற்பட்டு இருப்பினும், (புலன்களுக்கு அறியமுடியாத வகையில்) இந்த உலகனைத்தையும் (அதன் உள்ளிருக்கும் ஆத்மாவாக) கட்டுக்குள் வைத்திருப்பதால், அவர் (மறைமுகமாக) சாத்திரங்களில் (அவரைப்பற்றிக்) கூறியள்ளதற்கு சாட்சியாக இருக்கிறார். எனவே, மற்ற எவ்வகையிலும் அவரை அறிய முடியாது, அத்தகைய சாட்சியாக மட்டுமே அவரை அறியமுடியமாதலால் அவர் ‘அப்ரமேயர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானை நாம் நமது புலன்களைக் கொண்டோ, வேறு எடுத்துக்காட்டுகளைக் கொண்டோ, நாம் காணும் நிகழ்வுகளின் மூலம் ஊகித்து அறிந்து கொள்ளவோ, மற்ற எவற்றின் மூலமோ முழுவதுமாக அறிந்துகொள்ள முடியாது. சாத்திரங்களைக் கொண்டும் அவரை தெரிந்து கொண்டு விடமுடியாது. எனினும், அவர் இந்த உலகனைத்தும் மறைமுகமாக உள்ளுறை ஆன்மாவாக நிறைந்து, அதை தன் கட்டுக்குள் வைத்திருப்பதால், சாத்திரக் கூறுகளுக்கு சாட்சியாக விளங்குகிறார். எனவே, பகவான் ‘அப்ரமேய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——————

  1. ஓம் ஹ்ருஶீகேஶாய நம:

ஹ்ருஶீகாணிந்த்ரியாணி தேஶாம் ஈஶ: ஹ்ருஶீகேஶ:

ஹ்ருஶீகாணிந்த்ரியாணி ‘ஹ்ருஷீகம்’ என்றால் இந்த்ரியங்கள் தேஶாம் : அவற்றை அடக்கி ஆள்கிறார் க்ஷேத்ரஞ ரூபபாக் (அனைத்திலும் உள்ளுறைந்து) அனைத்தையும் உள்ளபடி அறிவதால் ஹ்ருஶீகேஶ: அவர் ‘ஹ்ருஶீகேஶன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உடல்களுக்குள்ளும் உள்ளுறைந்து, அனைத்து உடல்களையும் உள்ளபடி அறிவதால் அவர் புலன்களை ஆள்கிறார். எனவே, பகவான் ‘ஹ்ருஶீகேஶன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யத்வா இந்த்ரியாணி யஸ்ய வஶே வர்த்தந்தே ஸ ஹ்ருஶீகேஶ:

யத்வா அல்லது இந்த்ரியாணி புலன்கள் யஸ்ய எவரின் வஶே கட்டுப்பாட்டுக்குள் வர்த்தந்தே உள்ளதோ ஸ பரமாத்மா அந்தப் பரம்பொருள் ஹ்ருஶீகேஶ:  ‘ஹ்ருஶீகேஶன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, புலன்கள் எவரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோ அந்தப் பரம்பொருள் ‘ஹ்ருஶீகேஶன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யஸ்ய வா ஸூர்யரூபஸ்ய சந்த்ரரூபஸ்ய ச ஜகத்ப்ரீதிகரா ஹ்ருஶ்டா: கேஶா ரஶ்மய:  ஸ ஹ்ருஶீகேஶ:

யஸ்ய வா அல்லது ஸூர்யரூபஸ்ய கதிரவனின் வடிவிலும் சந்த்ரரூபஸ்ய  குளிர்நிலவின் வடிவிலும் ஜகத்ப்ரீதிகரா உலகத்தவருக்கு மகிழ்ச்சியை உண்டாக்குவதால் ஹ்ருஶ்டா: ஹ்ருஷ்டா என்றால் மகிழ்ச்சி கேஶா தனது கிரணங்களால் ரஶ்மய: ‘ரஶ்மி’ என்றால் கிரணங்கள்  அவர் ஹ்ருஶீகேஶ: அவர் ‘ஹ்ருஶீகேஶன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கதிரவனின் வடிவிலும் குளிர்நிலவின் வடிவிலும், தனது கிரணங்களால் உலகத்தவருக்கு மகிழ்ச்சியை உண்டாக்குவதால் பகவான் ‘ஹ்ருஷீகேஷன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸூர்ய ரஸ்மிர் ஹரிகேஶ: புரஸ்தாத்’

கதிரவனின் முன்னே பகவான் ஹரியின் ஒளிக்கிரணங்கள் (கேஶ) உள்ளன.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ப்ருஶோதராதித்வாத்ஸாதுத்வம் | (ஹ்ருஶ்டகேஶம் என்னும் இடத்தில்) ஹ்ருஶீகேஶன் என்ற பெயர் ப்ருஶோதராதி ஸூத்திரத்தின் மூலம் கிடைக்கிறது.

ப்ருஶோதராதி ஸூத்ரம்: எவரேனும் பெரியவர் ஒருவர் ஒரு பெயரையோ, சொல்லையோ குறிப்பிட்ட பொருளில் பயன்படுத்தி இருந்தால், அந்த சொல் இலக்கண முறைப்படி அமையாது இருப்பினும், முன்னோர் கூறிய வடிவிலும், பொருளிலுமேயே நாம் பயன்படுத்த வேண்டும்.

யதோக்தம் மோக்ஷ தர்மே | எவ்வாறு மோக்ஷ தர்மத்தில் முன்பே கூறப்பட்டுள்ளதோ,

ஸூர்யா சந்த்ரமஸௌ சஷ்வதம் ஶுபி: கேஶஸம்ஞிதை: |

போதயன் ஸ்வாபயம்ஸ்சைவ ஜகதுத்திஶ்டதே ப்ருதக் ||-(மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 342.66)

மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது: கதிரவனும், திங்களும் தங்களுடைய “கேஶ” என்னும் கிரணங்களால் இந்த உலக மக்களை துயில் எழுப்பியும், துயிலுறச் செய்தும் (அந்தக் கிரணங்களிலிருந்து) வேறுபட்டு உதிக்கின்றன.

போதனாத்ஸ்வாபனாஸ்சைவ ஜகதோ ஹர்ஶணம் பவேத் |

அக்னிஶோமக்ருதைரேவம் கர்மபி: பாண்டுநந்தன ||

ஹ்ருஶீகேஶோ மஹேஶானோ வரதோ லோகபாவன: ||-(மஹாபாரதம் சாந்தி பர்வம் 342.67)

மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது: மக்களைத் துயிலெழுப்பியும், துயிலுறச்செய்தும் அவர்களை (கதிரவனும், திங்களும்) மகிழச் செய்கின்றனர். ஒ பாண்டுவின் மைந்தனே!!! இவ்வாறு, தீயையும் (இது கதிரவனுக்கு அடைமொழி), திங்களையும் தத்தம் கடமைகளைச் செய்விப்பதால் இந்தப் பிரபஞ்சத்தின் காரணமாய், அனைவருக்கும் வரங்களை வழங்குபவரான அந்த பரம்பொருளை ‘ஹ்ருஷீகேஷன்’ என்று அழைக்கின்றனர்.

இதி | இவ்வாறு (பகவான் ஹ்ருஶீகேஶன் என்று அழைக்கப்படுகிறார்).

—————————

48.ஓம் பத்ம நாபாய நம:

ஸர்வஜகத்காரணம் பத்மம் நாபௌ யஸ்ய ஸ பத்மநாப:

ஸர்வ ஜகத் காரணம் அனைத்துலகின் தோன்றுமிடமாக பத்மம் தாமரை நாபௌ யஸ்ய எவருடைய தொப்புளில் இருக்கிறதோ  பத்மநாப: அவர் ‘பத்மநாபன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்துலகின் பிறப்பிடமாகவும், தோற்றுவாயாகவும் உள்ளத் தாமரை எவருடைய தொப்புளிலிருந்து எழுகிறதோ, அந்த பகவான் ‘பத்மநாபன்’ என்றத் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘அஜஸ்ய நாபாவத்யேகமர்பிதம்’

பிறப்பற்ற (அந்தப் பரம்பொருளின்) தொப்புளில் ஒன்று (ஒரு தாமரை) உள்ளது.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ப்ருஶோதராதித்வாத்ஸாதுத்வம் | (பத்மநாபி என்னும் இடத்தில்) பத்மநாபன் என்ற பெயர் ப்ருஶோதராதி சூத்திரத்தின் மூலம் கிடைக்கிறது.

—————-

49.ஓம் அமரப்ரபவே நம:

அமரானாம் ப்ரபு: அமரப்ரபு:

அமரானாம் தேவர்களின் ப்ரபு: தலைவர் அமர ப்ரபு: பகவான் ‘அமர ப்ரபு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து தேவர்களின் தலைவராக இருப்பதால், பகவான் ‘அமர ப்ரபு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——————————

50.ஓம் விஶ்வ கர்மணே நம:

விஶ்வம் கர்மம் க்ரியா யஸ்ய ஸ விஶ்வகர்மா

விஶ்வம் அனைத்து ஜீவராசிகளும் கர்மம் க்ரியா கர்ம என்றால் செயல் யஸ்ய எவருடையதோ  விஶ்வ கர்மா அந்த பகவான் ‘விஶ்வ கர்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உயிரினங்களும் அந்தப் பரம் பொருளின் செயலினால் உருவாக்கப்பட்டதால், பகவான் ‘விஸ்வ கர்மா’ என்றத் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

க்ரியத இதி ஜகத்கர்ம விஶ்வம் கர்ம யஸ்யேதி  வா விஶ்வகர்மா

க்ரியத இதி ஜகத் கர்ம உருவாக்கப் படுவதால் இந்தப் பிரபஞ்சத்தையே ‘கர்மம்’ என்று கூறலாம் விஶ்வம் கர்ம இந்தப் பிரபஞ்சமெனும் செயல் யஸ்யேதி  எவருடையதோ வா விஶ்வகர்மா அந்த பகவான் ‘விஶ்வகர்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் பிரபஞ்சத்தையே படைத்து உருவாக்குவதால், பகவான் ‘விஸ்வ கர்மா’ என்றத் திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

விசித்ர நிர்மாணஶக்திமத்வாத்வா விஶ்வகர்மா 

விசித்ர ஆச்சரியமான நிர்மாண க்திமத்வாத்வா படைக்கும் வல்லமையைக் கொண்டுள்ளதால் விஶ்வகர்மா பகவான் ‘விஶ்வகர்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆச்சரியமான படைக்கும் வல்லமையைக் கொண்டுள்ளதால் பகவான் ‘விஶ்வகர்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நமக்கு ஆச்சரியமான பலவற்றையும் மிக சாதாரணமாகவே அவர் படைக்கிறார்.

த்வஶ்ட்ரா ஸாத்ருஶ்யாத்வா விஶ்வகர்மா 

த்வஶ்ட்ரா த்வஶ்டா எனப்படும் தேவர்களுக்கு ஸாத்ருஶ்யாத்வா சமானமானவராக இருப்பதால் விஶ்வகர்மா பகவான் ‘விஶ்வகர்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

த்வஶ்ட்ரா எனப்படும் தேவர்களுக்கு சமானமானவராக இருப்பதால் பகவான் ‘விஸ்வகர்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

த்வஶ்டா எனும் தேவர்களை விஸ்வ கர்மா என்றும் அழைப்பதுண்டு.

——————

51.ஓம் மனவே நம:

மனனாத் மனு:

மனனாத் நினைப்பதால் (எண்ணுவதால்) மனு: பகவான் ‘மனு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(அனைத்தையும்) நினைப்பதால் (மனனம் செய்வதால்) பகவான் மனு என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்துமே அந்த பகவான் ஒருவரே (அத்வைத தத்துவம்). அவரின்றி வேறொன்றுமில்லை. எனவே, நினைப்பவரும் அவரே, நினைக்கப்படுபவரும் அவரே.

‘நான்யோSதோSஸ்தி மந்தா’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 3.7.23)-ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:-(பரப்ரஹ்மத்தைத் தவிர) நினைப்பவர் வேறொருவர் இல்லை.

மந்த்ரோ வா மனு:

மந்த்ரோ வா மந்திரங்களின் வடிவில் இருப்பதால் மனு: பகவான் ‘மனு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மந்திரங்களின் வடிவில் இருப்பதால் பகவான் ‘மனு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரஜாபதிர் வா மனு:

ப்ரஜாபதிர் வா (இந்த மனித குலத்தை) நான்முகக் கடவுள் பிரமனின் வடிவில் இருந்துப் படிப்பதால் மனு: பகவான் ‘மனு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மனிதக் குலத்தைப் (நான்முகனின் வடிவில்) படைப்பதால் பகவான் ‘மனு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———————

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading