ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள்–வங்கக் கடல் கடைந்த–

இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம், ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய், மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

————

அவதாரிகை –

நிகமத்தில் –
இப்பிரபந்தம் கற்றார் –
பிராட்டியாலும் எம்பெருமானாலும்
சர்வ காலமும்
விஷயீ கரிக்கப் படுவார்கள் -என்கிறார்கள் –

கற்றாருக்கு
அனுஷ்டித்தாரோபாதியும்
அனுகரித்தாரோபாதியும்
பலம் சித்திக்கும் -என்கை

கன்று இழந்த தலை நாகு
தோற்கன்றுக்கும் இரங்குமா போலே
இப் பாசுரம் கொண்டு புக நமக்கும் பலிக்கும் –
என்று பட்டர் அருளிச் செய்வர்

(1-வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை திங்கள் திருமுகத்து சேயிழையார்
சென்று இறைஞ்சி அங்கு அப்பறை கொண்ட வாற்றை —

2-யணி புதுவை பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

3-சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே இங்கு இப்பரிசு உரைப்பார்

4-ஈரிரண்டு மால் வரைத் தோள் செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

இப்படி நான்கு பகுதிகள்
பிற்பட்ட காலத்திலே அந்த பாவ விருத்தியோடே
வடபெரும் கோயிலுடையானை அபேக்ஷித்து சமகால ரசமாக நடத்தின ஆண்டாள் –

நமக்கு அந்த  பாவ விருத்தி இல்லையேயாகிலும்-
இப் பிரபந்தத்தினுடைய பாட தாரணத்தாலே நாம் பெற்ற பேறு பெறுவார்கள் என்று நிகமிக்கிறாள்-

சம காலத்தில் அனுஷ்ட்டித்தாரோபாதியும்
அனந்தர காலத்தில் அநு கரித்தாளோபாதியும்-
பிற்பட்ட காலத்தில் கற்றார்க்கும் பலிக்கும் என்கை –

திருவாய்ப் பாடியிலே பெண்களுக்கு சம காலம் ஆகையால் சாஷாத்காரம் யுண்டாய்த்து
ஆண்டாள் அநுகார பிரகாரத்தாலே பெற்றாள் –
இவர்களுக்கு யுக்தி மாத்திரமே அமையும் –

1-காலத்தையும் -அதிகரிக்கிற மனிசரையும் விஷய பூதனாய் நின்று
கார்யம் தலைக் கட்டுகிற -கிருஷ்ணனையும் கொண்டாடிக் கொண்டு
சங்கல்ப பூர்வகமாக நோன்பிலே உத்யோகித்து –

2-நோன்புக்கு அங்கமாகச் செய்ய வேண்டுவனவும் தவிர வேண்டுவனவும் இன்னவென்று
கர்த்தவ்ய அகர்தவ்ய விவேகம் பண்ணி

3-நாம் நமக்கு இனிதாக நோற்க இதுக்கு அனுமதி பண்ணி ப்ரீதராய் இருக்கிற நாட்டாருக்கு
ஆனு ஷங்கிகமாக அபிமத சித்தி யுண்டாம் என்று சொல்லி

4-த்ருஷ்ட பலன்களுக்கு ஹேது வ்ருஷடியாகையாலே வர்ஷார்த்தமாக தேவதையை அழைத்து நியமித்து –
அத்தால் தாங்கள் கொள்ளும் பிரயோஜனமும் சொல்லி –

5-தாங்கள் உபக்ரமிக்கிற நோன்புக்கு பிரதிபந்தகமான துஷ்கர்மம் இதிலே
உபக்ரமிக்கவே வசிக்கும் என்று பூர்ண மநோ ரதைகளாய்ப் புறப்பட்டு

பிராதி கூல்ய நிவ்ருத்தி தொடங்கி
பாகவத சகவாசம் ஒழியச் செல்லாத தன்மை யுடையவரான அளவும் செல்ல
நடுவு பட்டார் அடையக் கூட்டிக் கொள்ள வேண்டுகையாலே –

6-அனுபவ ரசத்தில் அபிநவையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்பி

7-ரசத்தை அறிந்து வைத்தே இவர்கள் பேச்சில் இனிமையாலே வித்யையாய்
பார வசியத்தாலே காற்க் கடைக் கொண்டு கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்பி

8-எல்லாரும் திரண்டு தன் வாசலிலே வர வேண்டும் படி கிருஷ்ணனால் யுண்டான கொண்டாடத்தாலே சால வேண்டப்பட்டு உடையாளாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்பி

9-குண வித்யையாய் கிடக்கச் செய்தேயும் ரசாந்தரங்கள் செல்லலாம் படியான முறையை யுடையாள் ஒருத்தியை எழுப்பி

10-கிருஷ்ண அனுபவத்தில் எப்போதும் இச்சை நடக்கும் படி எல்லாரிலும் அவன் நோக்கு உடையாள் ஒருத்தியை எழுப்பி

11-ஊர் ஒரு தட்டும் தான் ஒரு தட்டுமாம் படியான ஆபி ஜாத்யம் யுடையாள் ஒருத்தியை எழுப்பி

12-கிருஷ்ணனைப் பிரியாமையால் யுண்டான சம்பத்தை யுடையான் ஒருவனோடு சம்பந்தம் யுடையாள் ஒருத்தியை எழுப்பி

13-தன் அவயவ சோபையை அனுசந்தித்துக் கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்பி

14-தான் எல்லாரையும் எழுப்புவதாக சொல்லி வைத்து ப்ரதிஞ்ஜையைப் பண்ணி மறந்து கலங்கிக் கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்பி

15-பின்பு எல்லாருடையவும் திரள் காண வேண்டி இருப்பாள் ஒருத்தியை எழுப்பி

16-எல்லாரும் திரண்டு திருவாசல் காக்கும் முதலிய எழுப்பி

17-ஸ்ரீ நந்த கோபர் யசோதை பிராட்டி நம்பி மூத்தபிரான் இவர்களை சொல்லும் க்ரமங்கள் குறையாமல் சொல்லி எழுப்பி

18-19-20-நப்பின்னைப் பிராட்டி யுடைய செருக்கையும்
லீலா ரசங்களையும் –
போக வைபவத்தையும் –
ஸுகுமார்யத்தையும்
ரூப ஸுந்தர்யத்தையும்
பர்த்ரு வால்லப்பயத்தையும்
புருஷகார வைபவத்தையும் சொல்லி எழுப்பி

21-கிருஷ்ணனுடைய ஆபி ஜாத்யாதி குணங்களைச் சொல்லிக் கொண்டு

22-தாங்கள் குண ஜிதைகளாய் வந்த படியையும்
பஃன அபிமானிகளாய் கடாக்ஷ ஏக தாரகைகளாய் வந்த படியையும் அறிவித்து

23-எங்களுக்காகப் புறப்பட்டு ஓர் இருப்பு இருக்க வேணும் என்று

புறப்பட்டு இருந்த அனந்தரம்
24-அவ்விருப்புக்கு மங்களா சாசனம் பண்ணி போந்து

என் என்று அவன் கேட்க
25-உன் பக்கலிலே அர்த்திகளாய் வந்தோம் என்ன –

அபேக்ஷிதம் ஏது என்ன
26-நோன்புக்கு உபகரணங்களை வேண்டிக் கொண்டு –

27-நோற்றால் பெறும் சம்மானங்களையும் அபேக்ஷித்து

28-தங்கள் நினைவில் உள்ளவையும் பலிக்கும் படி
தங்கள் சிறுமையையும்
அவன் பெருமையையும்
அவனோடு உள்ள உறவையும் சொல்லிக் கொண்டு
தப்புகளுக்கு பொறை கொண்டு

29-தங்கள் நினைவையும் இன்னது என்று க்ரமப்பட வெளியிட்டு அபேக்ஷிக்க

அவனும் அப்படியே செய்கிறோம் என்று தலை குலுக்கப் பெற்று
க்ருதார்த்தைகளாய் விட்ட க்ரமத்தை

பிற்பட்ட காலத்திலே அந்த பாவ விருத்தியோடே
வடபெரும் கோயிலுடையானை அபேக்ஷித்து சமகால ரசமாக நடத்தின ஆண்டாள் –

நமக்கு அந்த  பாவ விருத்தி இல்லையேயாகிலும்-
இப் பிரபந்தத்தினுடைய பாட தாரணத்தாலே
நாம் பெற்ற பேறு பெறுவார்கள் என்று நிகமிக்கிறாள்-

சம காலத்தில் அனுஷ்ட்டித்தாரோபாதியும்
அனந்தர காலத்தில் அநு கரித்தாளோபாதியும்-
பிற்பட்ட காலத்தில் கற்றார்க்கும் பலிக்கும் என்கை –

கன்று இழந்த தலை நாகு-தோல் கன்றை மடுக்க-அதுக்கு இயங்குமா போலே –
ஸ்நேஹிகள் சொன்ன இப் பாசுரம் கொண்டு புகவே
அது இல்லாத நமக்கும் பலிக்கும் என்று பட்டர்-

ஸ்ரீ கோபிமாருடைய ஆஸ்ரயணீய விஷயம்
கிருஷ்ணனாய் –
அந்த ஆஸ்ரயணம் பல பர்யந்தமாவது
பிராட்டி சம்பந்தத்தாலேயாய்
அவள் தன்னைப் பெறுகைக்கு அவன் வியாபாரித்த வியாபாரம்
அம்ருத மதனம் ஆகையால்
அத்தைச் சொல்லுகிறார்கள் –

(த்வயம் சொல்லி முடித்தார் கீழே
பிராட்டியாலே தானே பேறு
ஆகவே இங்கு அம்ருத மதனம் -மதில் வரும் பெண்ணமுதம் பெற்ற செயல்
ஊர்க்கார்யம் என்ற பெயராய் தனது கார்யம்
அதே போல் இங்கும் கோபிகள் ஊருக்கு மழை என்று
இவர்களையும் தன்னைப் பெற வைத்து அருளுகிறார் அன்றோ )

(ஸ்ரீ லஷ்மீ கல்யாணம் சொல்லி ஆலத்தி எடுத்து நிகமித்து அருள்கிறாள் -மாதவனான படியால் கேசவனானான் -கேசவனாக இருந்ததால் மாதவனானான் -)

(ஆயனுக்காக ஆய்ச்சி அருளிய சங்கத்தமிழ் மாலை -கீதா உபநிஷத் -கோதா கீதா உபநிஷத் -தானான தன்மையில் நிகமன பாசுரம் –
நால் தோள் அமுது -எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார்)

பெண்காள் நீங்களும் நானும் அனுபவித்தோ -பிற்பாடார் இழக்கும் எத்தனையோ என்ன
அவர்கள் பெறும்படி சொல்லுகிறார்கள் –
இப் பிரபந்தத்தை கற்றார்க்கு இவ் வர்த்தம் அனுஷ்ட்டித்தாரோபாதி பலம் சித்திக்கும் –

கன்று இழந்த தலை நாகு தோல் கன்றை மடுக்க (எடுக்க) அதுக்கு இரங்குமா போலே
இப் பாசுரம் கொண்டு புக நமக்குப் பலிக்கும் -என்று பட்டர் அருளிச் செய்வர் –

விடிவோறே எழுந்த இருந்து முப்பது பாட்டையும் அனுசந்தித்தல் –
அதுவும் மாட்டிற்று இலனாகில்
சிற்றம் சிறு காலை -29-என்கிற ஒரு பாட்டையும் அனுசந்தித்தல்
அதுவும் மாட்டானாகில் –
இன்று நாம் இருந்த இருப்பை நினைப்பது என்று பட்டர் அருளிச் செய்வர்-

உக்தமான அனுஷ்டானம் இல்லாதவர்களுக்கு
அவர்கள் பாசுரமே பேற்றைக் கொடுக்கும் என்று சொல்லி நிகமிக்கிறது –

—————–

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட வாற்றை யணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

வியாக்யானம் –

வங்கக் கடல் கடைந்த
கடல் கடையா நிற்க
மரக்கலம் அலையாதபடி-கடைந்த நொய்ப்பம் –
கடைந்த போது சுழன்று வருகையாலே
கடலடைய மரக்கலமாய் நின்றபடி -என்றுமாம் –
பிரயோஜனாந்த பரருக்கும் உடம்பு நோவ கடல் கடைந்து
அபேஷித சம்விதானம் பண்ணும் சீலவான் என்கை –

கிருஷ்ணனை யாகில் கவி பாடிற்று
ஷீராப்தி மதனம் பண்ணினவனை சொல்லுகை பின்னம் சேருமோ என்னில் –
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுதம் உண்ட எம்பெருமானே -என்று
தேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு
பெரிய பிராட்டியார் ஆகிற பெண் அமுதத்தை பெறுகைக்காக
கடல் கடைந்தபடி –

ஊரார் கார்யத்தை ஒரு வ்யாஜ்யமாக்கி
பெண்களைப் பெறுகைக்காக நோன்பிலே அன்வயிப்பித்த
கிருஷ்ணன் உடைய
ஸ்வ பாவத்தோடு சத்ருசமாய் இருக்கையாலே
சொல்லுகிறார்கள் –

வங்கக் கடல் கடைந்த
தேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு
பெரிய பிராட்டியார் ஆகிற பெண்ணமுதைப் பெற்று
அப்போது உகப்போடே இருந்தால் போலே
ஊரார் காரியத்தை வியாஜ்யமாக்கி-
பெண்களைப் பெற்ற ஹர்ஷத்தோடே கிருஷ்ணன் இருக்கிற இருப்பைக் கண்டவாறே
அன்யார்த்தமான செயலில் அபிமதம் இவனுக்கு இன்றாக வருகிறதோ என்கிறார்கள் –

வங்கக் கடல் கடைந்த
பாற் கடலைக் கடைந்து பிராட்டியைப் பெற்றால் போலே
இங்குத் தயிர் கடைய என்று ஒரு வியாஜ்யமாய்
கன்னிகைகளைப் பெறக் கடவனாய் இறே இருப்பது

ஒல்லை நானும் கடைவன் என்று (பெருமாள் திருமொழி )
திரு மஞ்சனம் செய்து திவ்ய மால்யாம்பரதரையாய்
பூஷண பூஷிதையாய்
சகல தேவதைகளும் பார்த்துக் கொண்டு நிற்க
மார்பிலே சென்று அணைந்த போதைச் செவ்வி
(திகழ்கின்ற திருமார்பில் ஏறி அமர்ந்து )

மார்கழி நீராடி
ஆடை யுடுத்து சம்மாநிதைகளாய் –
பல் கலனும் அணிந்து –
பெண்கள் கூடி இருந்த போது பிரகாசிக்கும் படி இருக்கையாலே
அத்தைச் சொல்லுகிறார்கள்

வங்கக் கடல் கடைந்த
விண்ணவர் அமுதுண்ண என்று
ப்ரயோஜனாந்தர பரருக்கும் அகப்பட உடம்பு நோவக் கடல் கடைந்து
அபேக்ஷித சம்விதானம் பண்ணும் படி சீலவானனான கிருஷ்ணன்
அநந்ய பிரயோஜனம் கார்யம் செய்யச் சொல்ல வேணுமோ

அமரர்க்கு அமுதீந்த்த ஆயர் கொழுந்தை (திருவாய் -1-7 )-என்கிற படியே
கிருஷ்ணன் இறே தேவர்களுக்கு அமுதம் இட்டவன் –
ஷீராப்தி நாதன் கடையில் கடல் தான் அம்ருதம் சுரவாதே –
கண்ணன் கையால் மலக்குண்கையாலே இறே சுரந்தது
(பாலைக் கறந்து பழகினவன் அன்றோ இவன்
வங்கக்கடல் -கப்பலாக ஷீராப்தி நாதன் இருக்க கண்ணன் அன்றோ கடைந்தான் )

வங்கக் கடல் கடைந்த
கீழில் அமிருதம் எல்லாம் மேலே கிளறும்படி
படு திரை விசும்பிடைப் படரும் படி கடையா நிற்க -(பெரிய திருமொழி -5-7 )
மரக் கலம் அசலாத படி கடைந்த நேர்ப்பம் சொல்லுகிறது

வங்கக் கடல்
கடைந்த போது சுழல மலை திரிக்கையாலே கடல் அடங்கலும் மரக்கலமாய் நின்ற படி
வங்கம் விட்டுலவும் கடல் இறே ஷீராப்தி –
வைகுந்தன் என்பதோர் தோணி சேர்ந்த இடம் என்று (பெரியாழ்வார் )
(விஷ்ணு போதம் )
ஆழ் கடலைப் பேணாதே கடைந்தான்

பாற் கடலில் பையத் துயின்ற (2)-என்று
ஷீரார்ணவ சயனத்தைத் தொடங்கி
அதனுடைய மதனத்தைச் சொல்லி நிகமிக்கிறார்கள் –
அதில் கிடந்து முன் கடைந்த -(திருச்சந்த )

வங்கக் கடல் கடைந்த
கீழில் உள்ள பதார்த்தங்கள் மேல் எழக் கடையா நிற்க –
கடலிலே மரக்கலம் அசையாமல் கடைந்த நொய்ப்பம் சொல்லுகிறது
கடைந்த போது சுழன்று வருகையால் கடலடைய மரக்கலமாய் நின்றபடி என்றுமாம்
கிருஷ்ணனே ப்ரயோஜனாந்தர பரர்க்கும் கார்யம் செய்யும் ஸீலவான் என்கை
ஆஸ்ரயணீய தத்வம் ஸ்ரீ லஷ்மீ நாதமாய் இருக்கும் -என்கை –
தாய் முன்பு பிதாவுக்கு பிரஜை செய்த குற்றம் பொறுக்க வேண்டுமா போலே
ஆத்மாவின் குற்றம் பொறுக்கைக்குப் புருஷகாரம் என்கை
அவள் சந்நிதியில் குற்றம் மிக்க காகம் பிழைத்தது
அவள் சந்நிதி இல்லாமை அத்தனை குற்றம் இன்றிக்கே இருக்கச் செய்தே ராவணன் தலை அறுப்புண்டான்

————–

மாதவனை –
ஆஸ்ரயணீயமுமாய் -போக்யமுமாய் -இருக்கும் தத்வம்
லஷ்மீ ஸநாதமாய் இருக்கும் -என்கை –
ஆஸ்ரயித்தார் குற்றத்தை பொறுப்பித்து
அபேஷிதங்களைச் செய்விப்பார் அருகே உண்டு -என்கை –

கடல் கடைந்த மாதவனை –
கடல் கடைந்து பிராட்டியை லபித்தவனை –

கடல் கடைந்த மாதவனை
சாதன அனுஷ்டானம் பண்ணினால் சாத்திய சித்தி யுண்டாம் இறே –
அமுதம் கொண்ட பெருமான் திரு மார்பன் (பெரிய திருமொழி -6-10 )என்று –
அம்ருத லாபம் என்று வியாஜ்யமாய் –
அமுதில் வரும் பெண்ணமுதை இறே கிருஷ்ணன் பெற்றது –

மாதவனை
ஆஸ்ரயணீய வஸ்து லஷ்மீ ஸஹிதனுமாய்
ஆஸ்ரயணம் தானும் லஷ்மீ ச நாதனமுமாய் இறே இருப்பது –

ஆஸ்ரிதர் குற்றம் பொறுப்பித்து
அபேக்ஷிதங்களை செய்விப்பார் அருகே யுண்டாக வேணும் இறே

மாதாவின் முன்பு பிரஜைகள் செய்த குற்றம் பிதாவுக்கு தோற்றதால் போலே
பிராட்டி சந்நிதி யுண்டானால்
சேதனருடைய அபராதங்கள் அவனுக்குத் தோற்றாது என்கை

பிராட்டி புருஷகாரமாகப் பற்றினவர்களுக்கு அரியன செய்து
அபேக்ஷிதங்களை தலைக் கட்டிக் கொடுக்கும் என்பதற்காக –
கடல் கடைந்த மாதவனை -என்கிறது –

——————

கேசவனை –
விரோதி நிரசன ஸ்வ பாவனை –
ஸ்த்ரீத்வ பிரயுக்தமாக ஸ்வாதந்த்ர்யத்தையும்
அந்ய சேஷத்வத்தையும் போக்கினவனை —

மாதவனை கேசவனை –
அலை கடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -என்கிறபடியே
தான் சாஷாத் அம்ருதத்தை உண்டு ப்ரஹ்மாதிகளுக்கு கோதைக் கொடுத்தான் –
என்று பட்டர் அருளிச் செய்வர் –

கேசவனை
வாசம் செய் பூம் குழலாளான பெரிய பிராட்டியார் தான் ஆசைப் படும் படியான
ப்ரஸஸ்தமான மயிர் முடி கட்டி நெகிழ்ந்து அலையா நின்றாய்த்து கடல் கடைந்தது-

கடையப் புக்கார்க்கு எல்லாம் குழல் அலையும் இறே –
வாச நாறும் குழல் ஆய்ச்சியர் –வண்டமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ -என்று
அவனோடு பிறரோடு வாசி இல்லையே குழல் அலைய –

ஆமையான கேசவா -என்று சுமந்து நிற்கிற ஆமைக்கு உட்பட
குழல் அலையா நின்றால்
கடைகிறவனுக்கு சொல்ல வேண்டா விறே –

கேசவனை
பிராட்டியோட்டை கலவிக்கு விரோதிகளை –
பெண்களோட்டை கலவிக்கு விரோதியான கேசியைக் கொன்றால் போலே
போக்க வல்லவன் என்னவுமாம்

மா மாயன் மாதவன் என்றும் –
கேசவனைப் பாடவும் -என்றும் –
மா வாய் பிளந்தானை என்றும் சொன்னவற்றோடே தலைக் கட்ட வேணும் இறே

கேசவனை
அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ண கண்டவனே என்கிறபடியே
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குக் கோது கொடுத்து தன் வைபவம் தோற்ற நின்ற
நிலையைச் சொல்லிற்று ஆகவுமாம் –

த்வயத்தில் பூர்வ கண்டத்தில் படியே ஆஸ்ரயணீய வஸ்துவைச் சொல்கிறது –
1-மாதவனை-என்று ஸ்ரீ மத் சப்தார்த்தமும்-
2-கடல் கடைந்த என்கிறதாலே ப்ரயோஜனாந்த பரருடைய தோஷம் பாராமல் வியாபரித்த வாத்சல்யமும் –
3-அண்ணல் செய்து -என்று ஸ்திரமாம் படி பண்ணப் பட்ட ஸ்வாமித்வமும்
4-அசுரர்களும் தானுமாய்-என்னும் படி நின்ற ஸுசீல்யமும் –
5-பெண்ணாகி அமுதூட்டின ஸுலப்யமும்-
6-ஆழ் கடலைக் கடைந்த துப்பன்-என்னும் படி வேண்டும் உப கரணங்களைத் தேடி வியாபாரித்த ஞான சக்திகளும் தோற்றுகையாலே நாராயண சப்தார்த்தம் ஸூசிதம்

7-கேசவனை என்று பிரசஸ்த கேசவத்தாலே விக்ரஹ யோகத்தை நினைத்து –
சரண சப்தத்தின் அர்த்தம் சொல்லிற்று ஆகிறது

சரண க்ரஹணத்தோடு
கேச க்ரஹணத்தோடு வாசி இல்லையே பிரணயிநி யாகையாலே –
கேசவனைக் கால் பிடிப்பாள் (பெரிய திருமொழி -2-6 )-என்று இறே நிரூபகம்-

பரமனைப் பாடி(2) என்று தொடங்கி
கேசவனை என்று தலைக் கட்டுகையாலே
பாதாதி கேசாந்தமாக கிருஷ்ணனை அனுபவித்தாள் யாய்த்து –

யசோதை முன் சொன்ன திருப் பாத கேசத்தை (பெரியாழ்வார் -1-2-21 )என்று
இடைச்சிகள் அனுபவம் பெரியாழ்வாருக்கு உண்டாகையாலே
அது இவளுக்கு தாய பிராப்தம் இறே –

கேசவனை
விரோதி நிரசன ஸ்வபாவனை(கேஸா பாச அழகன் -ப்ரஹ்மாதிகளுக்கு ஈசன் -கேசி ஹந்தா )

மாதவனைக் கேசவனை
கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே-
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமான் -என்று சொல்லுகிறபடியே
தான் சாஷாத் அம்ருதத்தை உண்டு ப்ரஹ்மாதிகளுக்கு கோதைக் கொடுத்தான் -என்று பட்டர்
மாதவனை என்று தன் வாயைக் காட்டி கேசவனை என்று கோதைப் பொகட்டார் –

(அண்ணல் செய்து அலைகடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண வமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே -6-1-2-)

கேசவனை
ஸ்த்த்ரீத்வ ப்ரயுக்தமான ஸ்வாதந்த்ரத்தையும் அந்நிய சேஷத்வத்தையும் போக்கி அருளிய விரோதி நிரசன ஸ்வபாவனை

—————-

திங்கள் திருமுகத்து-
கிருஷ்ண சம்ஸ்லேஷத்தாலே குளிர்ந்து -மலர்ந்த முகம் –
கதிர் மதியம் போல் முகத்தான் -என்று அநபிபவ நீயத்வமும் உண்டு அங்கு –
அனுகூலர்க்கே ஆன முகம் ஆகையாலே -திங்கள் திரு முகம் -என்கிறார்கள் -இங்கு
இவனை அனுபவிப்பார் முகமும் இப்படி இறே இருப்பது
மதி முக மடந்தையர் இறே –

இனி மேல் ஆஸ்ரயித்த அதிகாரிகள் வை லக்ஷண்யம் சொல்லுகிறது –
திங்கள் திரு முகத்து –
கிருஷ்ண சம்ஸ்லேஷத்தாலே குளிர்ந்து மலர்ந்து செவ்வி பெற்ற
முகத்தை யுடையரானார்கள்

கதிர் மதியம் போல் முகம் -என்று
பிரதாபமும் தண்ணளியும் கலந்த படியால் அநபிபவ நீயத்வம் யுண்டு
அவன் முகத்துக்கு –

இவர்கள் முகத்திலே குளிர்த்தியையே அமைகையாலே
அனுகூலமேயேயாய் இருக்கும்

வங்கக் கடல் கடைந்த என்ற
கடைந்த அமுதில் பிறந்தவள் முகத்தோடு சாதர்ம்யம் பெற்றாய்த்து
இவர்கள் முகம் இருப்பது –

அவள் -துவளும் வெண் மதி போல் திரு முகத்து அரிவை-(பெரிய திருமொழி -2-7)
இவர்கள் -மதி முக மடந்தையர் -(திருவாய் 10-9)

திங்கள் திரு முகம்
சகல கலா பூர்த்தி இவர்கள் முகத்தில் விழித்த போதே தோற்றுமாய்த்து-
ப்ரஹ்ம விதைவ ஸும்ய தே முகம் பாதி –
(கண்ணனையே உள்ளத்தில் கொண்டவர்கள் அன்றோ )

குழையும் வாண் (திருவாய் -6-5-5 ) மிகவும் சொல்லக் கடவது இறே –
முகத்தில் ஆனந்த பூர்த்தி கண்டவர்கள்
இவர்கள் எங்குத்தை மனிச்சர் என்று சந்தேகிக்கும் படி
உபய விபூதி வ்யாவ்ருத்தி தோற்ற இருப்பார்கள் இறே –

வெஞ்சிலை வண் முகத்தீர் (திருவிருத்தம் -75 )
திங்கள் திரு முகத்து
இவர்கள் முகத்தில் விழித்தவாறே
அஹம் மநோ த்பவமான -அழல் ஆறும்படி இருக்கை
(அகங்கார மமகார வெப்பம் போய் இவர்களைப் பார்த்ததுமே போகுமே )

திரு முகம்
உபமானமான சந்த்ர மண்டலம் உபமேயமான முகத்துக்கு நேர் நிற்க மாட்டாமையாலே
திரு முகம் என்கிறது –
முகக் கமலச் சோதி தன்னால் -திங்கள் முகம் பனி படைக்கும் (பெரிய திருமொழி -3-4 )இறே
(ஸூரியனும் கமலமும் சேர்ந்து வரும் உலகில்
சந்திரன் கமலம் சேர்ந்து இங்கு –
சந்த்ர வம்ச கண்ணைப் பார்த்து மலரும் இவர்கள் முகத் தாமாரை )

திங்கள் திருமுகத்து
கிருஷ்ண ஸம்ஸ்லேஷத்தால் குளிர்ந்து மலர்ந்த முகம் -செவ்வி
அங்கு கதிர் மதியம் போல் முகம் (1) என்றது
ஜகத் வியாபார வர்ஜம் (ப்ரஹ்ம ஸூத்ரம் )என்று கொடுப்பார்க்கு இது ஒழிய அல்லாதது எல்லாம் கொடுக்கையாலே
இவர்களுக்கு குளிர்த்தி வேண்டுகையாலே
திங்கள் திரு முகம் -என்கிறது -மதி முக மடந்தையர் இறே

(விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே-10-9-10)

திங்கள் திரு முகம்-திங்கள் முகம் திரு முகம்-குளிர்ந்த சந்திரன் போலவும் லஷ்மீ போலவும் திருமுகம் -செல்வச் சிறுமீர்காள் பேறு பெற்றதையும் அறிவித்து அருளுகிறாள்

—————-

சேயிழையார் –
சூடகமே -இத்யாதியில்
தாங்கள் அபேஷித்த படியே -அவனும் அவளும் கூட இருந்து பூட்டின ஆபரணத்தை உடையவர்கள் –
கிருஷ்ண விஷயீ கார யோக்யதை ஆகிற ஆபரணத்தை உடையவர்கள் —
கிருஷ்ண விஷயீ காரத்தாலே புகுந்த புகராலே ஒரு படி ஆபரணம் பூண்டால் போலே இருப்பவர்கள் –

சேயிழையார்
ஸ்வா பாவிகமான அழகுக்கு மேலே
ஆபரணங்களால் வந்த அழகைச் சொல்லுகிறது –

சேயிழையார்
சூடகமே –பாடகமே –என்று தாங்கள் பிரார்த்தித்த படியே
கிருஷ்ணனும் நப்பின்னை பிராட்டியும் கூட இருந்து பூட்டின ஆபரணத்தை யுடையவர்கள் –

சேயிழையார்
ஸ்வரூப குணங்களாலும்
ப்ரஹ்ம அலங்காரத்தாலும் குறைவற்றவர்கள் –

போதுவீர் போதுமினோ என்ற போதே நேரிழையீர் (1)ஆனார்கள் –
நீராடின அனந்தரம் –
திருவருள் மூழ்கின படியால் (திருவாய் -8-9 )
புனை இழைகள் அணிந்து -சேயிழையார் ஆனார்கள் –

(நேரிழையீர் அது நேர்மை -ஆஸ்ரயணீய தசை
சேயிழையீர் இது செம்மை -இது அனுபவ தசை )

சேயிழையார்
தானும் அவனும் கூட இருந்து பூட்டின ஆபரணத்தை யுடையவர்கள்

————–

சென்று-
இவ் வொப்பனை உடன் வரப் பார்த்து இருக்கும் அளவு அல்லாத த்வரையைச் சொல்லுகிறது –

சென்று
ஆஸ்ரயண விஷயத்தில் ருசி கார்யமான
த்வரையைச் சொல்கிறது –

சென்று
இவ் வொப்பனையோடு நாமே போவோம் என்று
அவன் வரவைப் பார்த்து இருக்கும் அளவுள்ள வாய்த்து த்வரை

கிருஷ்ண விஷயீகார யோக்யதையாலும்
விஷயீ காரத்தாலும் பிறந்த புகர்
நிறம் பெறும் படி சென்று

சென்று
இவ் வொப்பனையோடே வரப் பார்த்திருக்கும் அளவில்லாத த்வரையைச் சொல்லுகிறது

புண்ணியம் யாமுடையோம் -ஸித்த உபாயம் கைப்பட்டு இருந்தாலும் -கைங்கர்யம் பிரார்த்தித்தே பெற வேண்டுமே -அங்கும் இதே போல் சகலவித சகல அவஸ்தா கைங்கர்யங்களுக்கும் பாரித்து இருக்க வேண்டுமே -ஆர்த்தியும் த்வரையும் எப்போதும் நீங்காமல் இருக்க வேண்டுமே

———–

இறைஞ்சி –
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி -என்கிறபடியே
அவனுக்கு மங்களா சாசனம் பண்ணி –

இறைஞ்சி
தூ மலர்கள் தூய்த் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து –
அடி போற்றி என்கிறபடியே போற்றிப் புகழ்ந்து –
சென்று சேவித்து கும்பிடுகை தொடக்கமான செய்வது எல்லாம் செய்து –

இறைஞ்சி
மங்களா சாசனம் பண்ணி

———–

அங்கு –
திருவாய்ப்பாடியிலே –

அங்கு
ஆஸ்ரயணீய ஸ்தலம் இருக்கிறபடி

அங்கு
திருவாய்ப்பாடியிலே
ஸ்ரீ நந்தகோபருடைய கோயிலிலே
நப்பின்னை பிராட்டி கட்டிலிலே
திவ்ய ஆஸ்தானத்திலே
திவ்ய சிம்ஹாசனத்திலே
இருந்த இருப்பில்

————–

அப் பறை கொண்ட வாற்றை-
நாட்டுக்கு பறை -என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு
அடிமை கொண்ட படியை –

அப் பறை
நாட்டுக்குச் சொன்ன பறையைக் கழித்து –
எற்றைக்கும் என்ற பறையை –
அப் பரிமாற்றத்திலே நின்று அவனை
ஸர்வ ஸ்வமும் கொண்ட படியை

கொண்ட
நீ தாராய் என்கிறபடியே
அவன் தரப் பெற்ற படி

ஆற்றை –
கொண்ட பிரகாரத்தை –

தங்கள் வெறுமையையும்
அவன் பூர்த்தியையும்
பந்தத்தையும் முன்னிட்டுத்
தப்புக்கு பொறை கொண்டு
ருசியையும் த்வரையையும் காட்டி
வளைப்பிட்டு
அடிமையை அபேக்ஷித்துக் கொண்ட பிரகாரத்தை –

ஆஸ்ரயணீய பலமும்
பல சித்தி க்ரமும் சொன்ன படி –

அப்பறை கொண்ட வாற்றை
மறந்து நில்லாதே நாட்டுக்குப் பறை என்று அடிமை கொண்ட படியை

———–

யணி புதுவை –
சம்சாரத்துக்கு நாயகக் கல்லான ஸ்ரீ வில்லி புத்தூர் –

யணி புதுவை-
கிருஷ்ணனுக்கு ஸ்ரீ நந்த கோபர் சம்பந்தம் ஏற்றமாய்
அவர் வர்த்திக்கிற வூர் என்று திருவாயர் பாடியை
சீர் மல்கும் ஆய்ப்பாடி என்று ஸ்லாகிக்குமா போலே

தனக்கு
பெரியாழ்வார் சம்பந்தம் உத்தேஸ்யமாய்
அவர் அபிமானித்த தேசம் என்று
ஸ்ரீ வில்லி புத்தூரைக் கொண்டாடுகிறார்கள் –

யணி புதுவை
நந்தகோபனுடைய கோயிலிலே கிருஷ்ணன் மாத்திரமே இறே –
இவ் வூரில் வட பெரும் கோயில் யுடையானும் –

அணி புதுவை
சம்சாரத்துக்கு ஆபரணமான ஸ்ரீ வில்லி புத்தூர் –

பிராட்டிக்கு
ஸ்ரீ மிதிலையும்
திரு அயோத்யையும் போலவும்

நப்பின்னைப் பிராட்டிக்கு
கும்ப குலமும்
திருவாய்ப்பாடியும் போலவும் அன்றிக்கே

ஆண்டாளுக்கு
பிறவியும்
புக்க இடமும் ஓரூரிலே யான ஏற்றம் இவ்வூருக்கே இறே உள்ளது –

பொன்னும் முத்தும் மாணிக்கமும் இட்டு செய்த ஆபரணம் போலே
நாய்ச்சிமாரும் பெரிய ஆழ்வாரும் வட பெரும் கோயில் யுடையானும் ஆகிற
அலங்காரம் உள்ள தேசம் இறே
(அகாரம் உகாரம் மகாரமும் என்றுமாம்
ரெங்க மன்னாரும் ஆண்டாளும் பெரிய திருவடி )

யணி புதுவை
சம்சாரத்துக்கு ஆபரணமான ஸ்ரீ வில்லி புத்தூர்(ஓங்காரமே காட்சி கொடுத்து ஸேவை சாதித்து அருளும் திவ்ய தேசம் )

————-

பைங்கமலத் தண் தெரியல் –
பிராமணருக்கு
தாமரைத் தாரகையாலே சொல்லுகிறது –

பைங்கமலத் தண் தெரியல்
ப்ராஹ்மணர்க்கு தாமரையை தாராக இறே சொல்வது –
திருவில் பொலி மறை வாணன் (பெரியாழ்வார் -4-3-10 ) என்னும் படி
ப்ராஹ்மண அக்ரேஸரான பெரியாழ்வாருக்கு தாமரை தாராகக் கடவது இறே

பைங்கமலத் தண் தெரியல்
பசுத்த கமலத்தினுடைய குளிர்ந்த மாலை –
தண்ணம் துழாய் அழல் போல் (திருவிருத்தம் -3 )-என்று
வட பெரும் கோயில் யுடையானுடைய மாலை போலே கொதித்துக் கிடவாதே
பெரியாழ்வார் கழுத்தில் மாலை –

பிரித்தவன் மாலை போல் அன்றே
சேர்ப்பார் மாலை –

குழற் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும்
நிழற் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண்ணம் துழாய்
அழற்போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
தழற் போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே—-திரு விருத்தம்-3

பைங்கமலத் தண் தெரியல்
ப்ராஹ்மணருக்குத் தாமரைத் தாராகையாலே சொல்லுகிறது

————–

பட்டர்பிரான் கோதை சொன்ன –
ஆண்டாள் அநுகார பிரகரத்தாலே அனுபவித்துச் சொன்ன –
பராசர புத்திரன் -என்று ஆப்திக்கு சொன்னால் போலே
பெரியாழ்வார் மகள் ஆகையாலே
சொன்ன அர்த்தத்தில் அர்த்த வாதம் இல்லை –

பட்டர் பிரான்
ப்ராஹ்மணர்க்கு உபகாரகர் ஆனவர் –
வேதப் பயன் கொள்ள வல்லவர் (பெரியாழ்வார்- 2-8 )ஆகையால்
தாத்பர் யார்த்தத்தை சர்வர்க்கும் உபகரிக்குமவர்
பட்டர்களுக்கு வித்யா பிரதானம் பண்ணின உபகாரகர் –
மறை நான்கு முன்பு ஓதின பட்டனுக்கு கன்யகா தானம் பண்ணின உபகாரகர்

பட்டர் பிரான் கோதை
பாராசர்யனான வியாசன் என்று ஆப்திக்குச் சொன்னால் போலே
பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு இவளுக்கு உத்கர்ஷ ஹேது

ஆற்றப் படைத்தான் மகனே -என்று இறே
ப்ரதிபாத்யனுக்கு ஏற்றம் –

ஆழ்வார் சம்பந்தம்
இவளுக்கு ஏற்றம்

விட்டு சித்தர் தங்கள் தேவரை -என்று
இவருக்கு தேவராய்
வட பெரும் கோயில் யுடையான் நிறம் பெற்றான் –

இவர் மகளாய்
ஆண்டாள் நிறம் பெற்றாள்-

ஒரு மகள் தன்னை யுடையேன் என்று இவள் சம்பந்தம் இறே
தமக்கு உதகர்ஷமாகச் சொல்லுவது –
(வியாசருக்கு ஸூக தாதம் என்று வந்த ஏற்றம் போலே )

சொன்ன
ஆண்டாள் அநுகாரத்தாலே அனுபவித்தது
புற வெள்ளம் விட்டபடி

கோதை சொன்ன
ஸ்ரீ கோபிமார் தசையைப் பிராபித்து-
அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன -என்று
பும்ஸத்வம் மேலிடும்படியான குற்றம் அற்று இருக்கை

சொன்ன
ஸ்ருதி சத சிரஸ் சித்தமான அர்த்தம்
சர்வ உஜ்ஜீவியமாம் படி சொன்ன

மேகம் பெருகின சமுத்ராம்பு போலே இவர் வாயன திரிந்தன (72 )-என்கிறபடியே
இவளுடைய வாக்கின் ஸ்பர்சத்தாலே காணும்
அதிலும் அவா பெற்றது

மேகம் பருகின சமுத்ராம்பு போலே நூற் கடல் சொல் இவர் வாயான வாய்த் திருந்தின வாறே
சர்வதா சர்வோப ஜீவ்யம் ஆமே –
( ஸ்ரீ லஷ்மீ நாதாக்ய சிந்து -சடரி பு ஜலத-ப்ராப்த காருண்ய நீரம் மேகம் பருகின சமுத்ராம்பு )

சொன்ன
தான் தோன்றியான வேதம் போல் அல்ல –
பிறப்பால் யுண்டான ஏற்றமும் உண்டு –

ஷீராப்தி நாதனைப் பற்ற
ஒருத்தி மகனாய் பிறந்தவனுக்கு இறே வரும் ஏற்றம் உள்ளது –

பட்டர் பிரான் கோதை சொன்ன
ஆண்டாள் அநுகார பிரகாரத்தாலே அநுபவித்துச் சொன்ன
ச ஹோவாச வ்யாஸ பராசர்ய -என்றால் போலே பெரியாழ்வார் திரு மகள் சொன்னதில் அர்த்தவாதம் இல்லை
நாம் சொன்ன அர்த்தத்துக்கு பிரமாணம் கேட்டுக் கொள்ளுங்கோள்-என்கிறார்கள்

கோதா -இவளே மாலை – என்றும் பூமியை பிளந்து என்றும் மங்களங்கள் அருளுபவள் என்றும் நல்ல சொற்கள் அருளுபவள் என்றும் ஞானம் அருளுபவள் என்றும் பல அர்த்தங்களுடன் உள்ள திரு நாமம்

———

சங்கத் தமிழ் மாலை –
குழாங்களாய்-என்னுமா போலே
திரள் திரளாக அனுபவிக்க வேண்டும் பிரபந்தம் –
பஞ்ச லஷம் குடியில் பெண்கள் திரள் திரளாக அனுபவித்த பிரபந்தம் இறே

தமிழ் மாலை –
பிராட்டி ஆண்டாள் ஆனால் போலே
உபநிஷத் தமிழ் ஆனபடி –

மாலை –
பாவனமான அளவன்றிக்கே
போக்யமுமாய் இருக்கையும்
தலையாலே சுமக்க வேண்டி இருக்கையும் –

சங்கத் தமிழ் மாலை
சங்கம் இருப்பார் போல் வந்து -என்று
பஞ்ச லக்ஷம் குடியிலே பெண்கள் திரளாக அனுபவித்த அனுபவத்துக்கு
ஆண்டாளும்
தன் திறத்தில் பெண்களுக்குத் திரள இருந்து சொன்ன பாசுரம் ஆகையால் –

குழாங்களாய் -என்னும் படி
திரள் திரளாக அனுபவிக்க வேண்டும் பிரபந்தம் –
சங்க முகத் தமிழ் மாலை (பெரிய திருமொழி -3-4 )-என்னக் கடவது இறே –

தமிழ் மாலை –
யாவர்க்கும் சிந்தைக்கும்-கோசாரம் அல்லாத வஸ்து –
பெற்றம் மேய்த்து உண்ணும் -இடைச் சேரியில் வந்து பிறந்து எளியனால் போலேயும்

உத்தம வர்ணத்தில் பிறப்புடைய ஆண்டாள்
ஆயர் சிறுமியர் திரளில் ஒருத்தியாய் அந்வயித்தால் போலேயும்

அருமறையின் பொருளான உபநிஷத் தமிழாய் வந்து
சர்வ ஸூலபமான படி –

பிரபந்தம் செய்தவளோடு
ப்ரதிபாத்யனோடு
ப்ரபந்தத்தோடு வாசி அறத்
தாழ நின்று நிறம் பெற்ற படி –

மாலை
பாவனமான அளவு அன்றிக்கே
போக போக்யமாய்
தலையால் சுமக்க வேண்டும் படியாய்
ஸீரோ பூஷணமுமாய் இருக்கை –

கோதை சொன்ன மாலை –
மாலையே கட்டின மாலை –
மாலைக் கட்டின மாலை –

அடுத்த பத்தியோடு இரண்டு தலையும்
தாள் பூவும்
நடுவே நாயகமுமாய்
தொடுப்புண்ட மாலை

கோதை சொன்ன மாலை
செவிப் பூவே என்று
இவள் செவிக்கு ஒரு பூ இறே அவன் கொடுத்தது –
ஸ்லாக்யமான மாலை கொடுத்தாள் அவள்
ஆச்சார்யர் ஒரு அர்த்தம் சொல்ல
சிஷ்யர் விரித்து மாலையாக விரிப்பது போல் )

ஸ்ரஜி நிகளிதம்-என்னும் படி
குழலில் மல்லிகை மாலையாலே விலங்கிட்டு
அவனை ஓதுவித்த மாலை இருக்கிற படி

சங்கத் தமிழ் மாலை
குழாங்களாய் (2-3)-என்னுமா போலே பஞ்ச லக்ஷம் குடியில்
பெண்கள் திரளாக அனுபவித்த ப்ரபந்தமாகையாலே பகவத் ப்ரேமம் உடையார்க்கு எல்லாம்
சிரஸா வகிக்க வேண்டும்படி இருக்கை

(குழாங்கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடிக்
குழாங்களாய் அடியீர்! உடன் கூடி நின்று ஆடுமினே–2-3-11-)

தமிழ் மாலை
பிராட்டி ஆண்டாள் ஆனால் போலே உபநிஷத்தும் தமிழான படி

1-பாரோர் புகழ் மாலை –பாரோர் புகழப் படிந்து நீராடப் போதுவீர் போதுமினோ
2-உய்வு மாலை–உய்வுமாறு எண்ணி –
3-செல்வ மாலை –வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம்
4-மகிழ் மாலை-நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து –
5-பிழை மாயும் மாலை –போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்
6-குளிர் மாலை-அரி என்ற பேரரவம் -உள்ளம் புகுந்து குளிர்ந்து
7-தேச மாலை –தேசமுடையாய் -தேசம் -தேஜஸ் இரண்டு பொருளும் விவஷிதம்
8-அருள் மாலை-ஆவா வென்று ஆராய்ந்து அருள் –
9-திரு நாம மாலை –மா மாயன் மாதவன்வைகுந்தன் என்று என்று நாமம் பலவும் நவின்று –
10-தேற்ற மாலை –தேற்றமாய் வந்து திற
11-பொருள் மாலை –எற்றுக்குறங்கும் பொருள் –
12-அறிவு மாலை –அனைத்து இல்லத்தாரும் அறிந்து –
13-கள்ளம் தவிர் மாலை-கள்ளம் தவிர்ந்து கலந்து –
14-பாடல் மாலை –சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் -பங்கயக் கண்ணானைப் பாட –
15-வேறோர் பாடல் மாலை –மாற்றாரை மாற்று அழிக்கும்-
16-நேய மாலை-நேச நிலைக் கதம் நீக்கு
17-உறங்கா மாலை –உம்பியும் நீயும் உறங்கேல்
18-மகிழ்ச்சி மாலை –செந்தாமரைக் கையால் வளை ஒலிப்ப மகிழ்ந்து வந்து திறவாய் –
19-தகவு மாலை –தத்வமஸி க்கு பிறர் கூறும் பொருள் தகுதி அற்றது
20-நீராட்டு மாலை —இப்போதே எம்மை நீராட்டு –
21-புகழ் மாலை-போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து –
22–சாப நிவாரண மாலை –
23-ஆராய்ச்சி மாலை –யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள்
24-இரக்க மாலை –இன்று யாம் வந்து இரங்கு –
25-வருத்தம் தீர் மாலை-வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து –
26-ஆலினிலையான் மாலை –ஆலினிலையாய் அருள் –
27-கூடி இருந்து குளிர் மாலை –
28-பறை தரும் மாலை –இறைவா நீ தாராய்
29-காமங்கள் மாற்று மாலை
30-திருவருள் மாலை-எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்-

———–

முப்பதும் தப்பாமே –
இதில் ஒரு பாட்டும் குறையாமே
விலை இல்லாத ரத்னங்களாலே செய்த ஏகாவலியிலே
ஒரு ரத்னம் குறைந்தாலும் -நெடும் பாழாய்-இருக்கும் இறே –
அப்படியே ஒரு பாட்டு குறையிலும் பேர் இழவாய் இருக்கும் –
இங்கு –
பிற்பட்ட காலத்திலே -என்னுதல்
சம்சாரத்திலே -என்னுதல்

முப்பதும்
திரு மந்த்ரமும்
திருப் பல்லாண்டும் போலே சுருங்கி இருத்தல் –
வேதமும்
திருவாய் மொழியும் போலே விரிந்து இருத்தல் செய்யாமையாலே
வேண்டுமவை எல்லாம் மிகுதிக் குறை யுண்டாய் இருக்கை யன்றிக்கே ஒழிகை

நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று சங்க்ரஹேண சொன்ன
ஸ்வரூப
உபாய
பலன்களை
ஓன்று பத்தாக சொன்ன அத்தனை இறே

முப்பதும் தப்பாமே
இதிலே ஒரு பாட்டும் நழுவாமே –
விலை இல்லாத ரத்னங்களாலே செய்த ஏகாவலியிலே ஒரு ரத்னம் குறைந்தாலும்
நெடும் பாடாய் இருக்கும் இறே
அப்படியே ஒரு பாட்டு குறையிலும் பேர் இழவாய் இருக்கும் –

1-பகவத் ஆபி முக்கியம் பிறக்கிற கால வைலக்ஷண்யம் அறியாது இருத்தல் –
2-தியாஜ்ய உபாதேயங்களில் நழுவ நிற்றல்
3-பர சம்ருத்ய ஏக பிரயோஜனம் இன்றியிலே ஒழிதல்
4-தேவதைகளையும் நியமிக்கும் படியான ஞானிகள் வைபவம் அறியாது ஒழிதல்
5-ஆஸ்ரயண காலத்திலே ஷீண பாபராம் ஏற்றம் அறிதல் செய்யாது ஒழிய ஒண்ணாது

6-பகவத் விஷயத்தில் முதலடி இட்டாரோடு
7-அவகாஹித்தே சிறிது குலைய நிற்பாரோடு
8-ஸ்லாகாப்ரதானராய் இருப்பாரோடு
9-த்யாஜ்யத்தில் அல்ப ஸ்பர்சம் நடையாடுவாரோடு
10-அனுபவமே நிரந்தரமாக நடப்பாரோடு

11-பாகவத குலத்திலே அந்வயித்தாரோடு
12-கைங்கர்ய நிஷ்டரோடே சம்பந்தம் உடையாரோடு
13-ஸ்வரூப ஞானம் யுடையரோடு
14-வை லக்ஷண்ய அனுசந்தானம் பண்ணி நிர்வ்யாபாரராய் இருப்பாரோடு
15-பக்தியால் கலங்கி நடப்பாரோடு
16-பாகவத பாரதந்தர்ய ஏக நிஷ்டரோடு

வாசி அற உத்தேச்யதா புத்தி குலையாமல் இருக்க வேணும் என்று அறிய வேணும் –

17-பகவத் சந்நிதியில் செல்லும் க்ரமங்கள் அறிய வேணும்
18-புருஷகாரத்தினுடைய ஸ்வரூப
19-ஸ்வபாவங்களும்
20-காரியமும் அறிய வேணும்
21-பகவத் குண வித்தராக வேணும்

22-கடாக்ஷ ஏக தாரகராம் படி பஃன அபிமானராக வேணும்
23-ஆபி முக்கிய பிரார்த்தனம் பண்ண வேணும்
24-மங்களா சாசன பரராக வேணும்
25-அர்த்தித்தவம் தோற்றப் பல் காட்ட வேணும்
26-முமுஷூ தசையில் அபேக்ஷிதம் –

27-முக்த தசையில் போகம் இவற்றில் வாஞ்சை நடக்க வேணும்
28-அதுக்குத் தாங்கள் உபாயாந்தர ஸூன்யத்தையை முன்னிட்டு வேணும்
29-நித்ய கைங்கர்யத்தில் நித்ய அபேக்ஷை நடக்க வேணும்
30-இத்தசை விளைந்தார் பாசுரமே போகமாக வேணும் –

ஆகையால்
இம் முப்பத்து பாட்டிலும் நழுவ விடலாவது
ஒரு பாட்டு இல்லை –

முப்பதும் தப்பாமே
இதில் ஒரு பாட்டும் குறையுமே
அல்லாத போது ரத்னம் குறைந்த ஏகாவளி போலே பேர் இழவாய் இருக்கும் என்கை
அப்படியே ஒரு பாட்டுக் குறைந்தாலும் பேர் இழவாய் இருக்கும் -என்கை

————-

இப்பரிசு உரைப்பார்-
இப் பாசுரம் மாத்ரத்தைச் சொல்லுவார்
திருவாய்ப்பாடியிலே பெண்கள் கிருஷ்ண அனுபவம் பண்ணிப் பெற்றார்கள்
ஆண்டாள் அனுகாரத்தாலே பெற்றாள்
ஆகையால் இந்த பிரபந்தம் கற்றார்க்கு இந்தப் பலம் கிடைக்கும் –

இங்கு
பிற்பட்ட காலத்திலே இப் பரிமாற்றத்துக்கு
மேட்டு மடையான இந் நிலத்திலே

இப் பரிசு
இப் பிரகாரம் தப்பாமல்

இப் பரிசு உரைப்பார்
இப் பாவ விருத்தியோடே இப் பாசுரங்களை சொல்லுமவர்கள் –
திருவாய்ப் பாடியிலே பெண்களுக்கு சம காலம் ஆகையால் சாஷாத்காரம் யுண்டாய்த்து
ஆண்டாள் அநுகார பிரகாரத்தாலே பெற்றாள் –
இவர்களுக்கு யுக்தி மாத்திரமே அமையும் –

இவர்கள் அளவு பாராதே பண்டு பாடினவர்களையும்
இச் சொல் வழியாலே நினைத்து கார்யம் செய்யும் விஷயத்தைச் சொல்லுகிறது மேல் –

இங்கு
பிற்பட்ட காலத்திலே

இப் பரிசு உரைப்பார்
இப் பாசுர மாத்ரத்தைச் சொல்லுவார்
திருவாய்ப்பாடியிலே பெண்கள் தாங்களே கிருஷ்ணனோடு கூடி அனுஷ்ட்டிக்கப் போனார்கள்
ஆண்டாள் அநு காரத்தாலே பலம் பெற்றாள் ஆகையாலே இது சொன்னார்க்கும் இங்கே பலம் கிடைக்கும்

————–

ஈரிரண்டு மால் வரைத் தோள்-
இவர்கள் அளவு பாராதே பண்டு பாடினவர்கள் சொல் வழியாலே
அனுசந்திக்கையாலே தோள்கள் பணைக்கும்-
உகவாதார்க்கு தோள்கள் இரண்டாய்த் தோற்றும்
இவர்களுக்கு தோள்கள் நாலாய்த் தோற்றும் இறே –

ஈரிரண்டு மால் வரைத் தோள்-
பெண்களை அணைக்கப் புக்க பின்பு கிருஷ்ணனுக்கு திருத் தோள்கள் பணைத்த படி –
(பெரிய பிராட்டி ஸ்லோகம் கேட்டு அரங்கன் கவசம் வெடித்தது போல் )
வேய் இரும் தடம் தோளினாரோடு-அணைந்த தோள்கள் இறே

ஈரிரண்டு
உகவாதாற்கு இறே தோள் இரண்டாய்த் தோற்றுவது-
ஆசைப்பட்ட பெண்களுக்கு நாலாயத் தோற்றும் இறே
வங்கக் கடல் கடைந்த தோள்கள் நான்கையும் கண்டிடப் பெற்றார்கள் –

மால் வரைத் தோள்
மதுரக் கொழும் சாறு கொண்ட சுந்தரத் தோளாய் இராதே (நாச்சியார் -9-1 )
காத்தூட்ட வல்ல திண்மையைச் சொல்கிறது

மால் வரை
நீண்ட மலைகளும் (பெரிய திருமொழி 2-8 )-என்னும் படி இறே இருப்பது
பெரிய பிராட்டியாருக்கும் -கோபிமார்க்கும் க்ரீடாஸைலமான தோள்கள்

ஈரிரண்டு மால் வரைத் தோள்
இவர்கள் அளவு பாராதே
பண்டு பாடினவர்கள் சொல் வழியால் அனுசந்திக்கையாலே தோள்கள் பணைக்கும்-
அனுபவிக்கத் தோள்கள் பணைத்தால் போலே
ஆண்களுக்கு இரண்டாய்த் தோற்றும் –
இவர்களுக்கு நாலாய் இருக்கும் –

—————-

செங்கண் திரு முகத்து –
அலாப்ய பலத்தாலே சிவந்த கண்கள் –

செங்கண் திரு முகத்து
பெண்களைக் கண்ட பின்பு அலப்ய லாபத்தாலே
திருக் கண்களும் செவ்வி பெற்று
திரு முகமும் குளிர்ந்த படி

இவர்களை பிரிந்த போது இறே
ஜல ஷயத்தில் பத்மம் போலே
முகமும்
விழியும் உறாவுவது

செங்கண் திரு முகம்
கண்ணன் கோள் இழை வாண் முகம் –
அதிலே நீரார் கமலம் போல் செங்கண்-
தோழிமார் பாரி கோள் என்று
ஒருவருக்கு ஒருவர் காட்டி அனுபவித்த
கடாக்ஷமும்
முகமும்

(வாசத்தடம் போல் வருவான் —
நிமிர்ந்து நின்றது போல் புண்டரீகத்தடாகம் )

செங்கண்
கதிர் மதியம் போல் முகத்தான் –
பங்கயக் கண்ணானை –
செங்கண் சிறுச் சிறிதே –
அங்கண் இரண்டும் கொண்டு என்று
முடிய இம் முகமும் கடாக்ஷமும் இறே இவர்கள் நெஞ்சிலே கிடந்தது –

திங்கள் திருமுகம் -என்று ஸ்ரீ கோபிமார் முகத்தையும்
அவர்கட்க்கு அனுபாவ்யனானவன் -செங்கண் திருமுகம் -முகத்தையும்
ஒரு முகப்பட அனுபவிக்கிறார்கள்

இச் செங்கண் திருமுகம் யுடையவன் தான் ஆர் என்னில்
செல்வத் திருமாலால்
என்கிறார்கள் –
கண்ணன் திருமால் திரு முகம் இறே இது

செங்கண் திரு முகத்து –
அலப்ய லாபத்தாலே சிவந்த கண்கள்

—————-

செல்வத் திருமாலால் –
உபய விபூதி உக்தனான ஸ்ரீ ய பதியாலே –
இப்பாட்டில் உபக்ரமத்திலே பிராட்டி சம்பந்தம் சொல்லி
முடிவிலும் சொல்லுகையாலே
த்வயத்தில் சொன்ன படியில் இங்கும் சொல்லிற்று என்கை –

செல்வத் திருமாலால்
உபய விபூதி ஐஸ்வர்யத்தை யுடைய ஸ்ரீ யபதியாலே-

செல்வத் திருமாலால்
திருத் தக்க செல்வமும் -என்றபடி
செல்வத்துக்கு தகுதியானவள்

திருமால் –செல்வம்
திருவுக்கும் திருவாகிய –செல்வு -செல்வச் சிறுமியரைப் பெற்ற பின்பு சிறந்தது

இங்கு
உத்தர வாக்கியத்தில் ஸ்ரீ மத் சப்தார்த்தம் சொல்லுகிறது
ரகஸ்ய த்வயத்திலும் மறைந்து கிடந்த
லஷ்மீ சம்பந்தம்
வாக்ய த்வயத்தாலே வெளியாகிறது –

இப் பாட்டில் உப க்ரமத்திலும் முடிவிலும் பிராட்டி சம்பந்தத்தைச் சொல்லுகையாலே
த்வயத்தில் சொல்லுகிற படியை இங்குச் சொல்லிற்று யாய்த்து –

(மாதவன் -பூர்வ வாக்ய ஸ்ரீ மன்
செல்வத் திருமால் – உத்தர வாக்யம் ஸ்ரீ மதே)

செல்வத் திருமாலால்
உபய விபூதி யுக்தனான ஸ்ரீ யபதி யாலே
இப் பாட்டில் உபக்ரம உப சம்ஹாரங்களில் (மாதவனை கேசவனை –செல்வத் திருமாலால் )த்வயத்தில் போலே பிராட்டி சம்பந்தம் சொல்லிற்று ஆய்த்து

பஞ்ச லக்ஷம் பெண்களைப் பெற்ற பூர்ணனான திருமால் -பேற்றுக்கு உகப்பானும் அவனே அன்றோ

————

எங்கும் திருவருள் பெற்று –
த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டிலும்
பிராட்டியும் தானும் சந்நிஹிதமாம் படி
பிரசாதத்தைப் பெற்று

எங்கும்
த்ருஷ்ட அத்ருஷ்டங்களிலும் –
இங்கு இருக்கும் நாளும்
பரம பதத்தில் போனாலும்

திருமாலால் எங்கும்
இங்கும்
அங்கும்
திருமால் என்று இருக்கை இறே அடுப்பது
(நேர் பட்டாள் இங்கும் அங்கும் திருமாலால்)

திருவருள் பெற்று
இப் பிரபந்தம் கற்றவர்கள் இருந்த இடத்திலே
தானும் பிராட்டியுமாய் நித்ய சந்நிஹிதமாம் படி ப்ரஸாதத்தைப் பெற்று

திருவருள் பெற்று
திருமாலால் அருளப் பட்ட (சடகோபன் இன்ப மாரி )
திரு மா மகளால் அருள் மாரி-என்று
இவளுடைய அருள் பெருக்கை இறே உத்தேச்யம் –
நின் திருவருளும் பங்கயத்தாள் திரு வருளும் கொண்டு(-திருவாய் 9-9 )

திருமால் -திருவருள் பெற்று
நிஸ் சம்சயம் சம்பத்ச்யதே -என்று
இவர்களை வாழ்த்தி கடாக்ஷித்தது பலித்த படி பாராய் -என்று
பெரிய பிராட்டியார் திருக் கையில் காட்டிக் கொடுக்க
பூ வளரும் திரு மகளால் அருள் பெற்று (பெரிய திருமொழி -11-6 )-என்கிறபடியே

அவன் அடியாக இவள் தன்னுடைய அருளை பெற்று
1-உபாய நிஷ்டையும் இவளாலே –
2-ப்ராப்ய விருத்தியும் இவளால் –

1-விரோதி நிவ்ருத்தியும் அவனாலே
2-பல பிராப்தியும் அவனாலே

எங்கும் திருவருள் பெற்று –
இத் திருப் பாவை சொன்னார்கள் இடத்தே எங்கும் தானும் பிராட்டியுமாக ஆதரிக்கும் என்கை
கிடக்கைப் பாயிலே வெள்ளம் கோத்தால் போலே
த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டிலும் -பிராட்டியும் தானும் ஸந்நிஹிதமாம்படி பிரசாதம் பெற்று

—————

இன்புறுவர் எம்பாவாய் –
பகவத் சம்ஸ்லேஷத்தால் வந்த ஆனந்தம் பெறுவார் –
விடிவோரை எழுந்திருந்து முப்பது பாட்டையும் அனுசந்தித்தல்
மாட்டிற்று இலனாகில் -சிற்றம் சிறுகாலே -என்ற பாட்டை அனுசந்தித்தல் –
அதுவும் மாட்டிற்று இலனாகில் -நாம் இருந்த இருப்பை நினைப்பது –
என்று பட்டர் அருளிச் செய்வர்

இன்புறுவர்
ஆனந்த நிர்ப்பரராவார்

எங்கும் இன்புறுவர்
இங்கு இருக்கும் நாள் சம்சாரிகளில் வியாவருத்தராய்-
பிரபந்தத்தினுடையவும் –
ப்ரதிபாத்யனுடையவும் –
ஆண்டாளுடையவும்
சீர்மையையும்
சீலத்தையும்
பாவ விருத்தியையும் அனுசந்தித்து இனியராவார்கள்

அங்குப் போனால் நிரந்தர சம்ஸ்லேஷத்தாலே –
மிக வெல்லை நிகழ்ந்தனம் (திருவாய் 4-5-3)-என்னும் படி
பரம ஆனந்தத்தில் அந்வயிப்பார்கள்

திருமாலால் -இன்புறுவர்
இன்பம் பயக்க விறே அவர்கள் தான் இருப்பது -(திருவாய் 7-10-1)
அந்யோன்ய அனுபவ ஆனந்தம் போல் அன்றே மிதுன அனுபவ ஆனந்தம்
அடியேனுக்கு இன்பாவாய் பொன் பாவை கேள்வா -(நான்முகன் )

எப்படி இன்புறுவர்கள் என்னில்
எம்பாவாய்-இன்புறுவர்
எங்கள் சந்தஸாலே இன்புறுவர் –
நாங்கள் யாதொருபடி இன்புற்றோம் அப்படி இன்புறுவர்கள் –

மாதவனை –சேயிழையார் –சென்று இறைஞ்சி -பறை கொண்டவாற்றை —
கோதை சொன்ன -தமிழ் மாலை -உரைப்பார் -எம்பாவாய் –இன்புறுவர்

பெரிய பிராட்டியார் இன்புற்றால் போலே
இன்புற்றார் ஆவார்கள்
(பாவை பெரிய பிராட்டியார் )

ஸ்ரீ கோபிமார் பாவாய் இன்புற்றோம் நாங்கள் –
(கோபி மார் பா சொல் )

எங்கள் சொல்லை யுரைப்பார்
எங்கள் பாவாய் -இன்புறுவார்கள்
(எங்கள் பா -திருப்பாவை )

சமகாலத்தில் உள்ளாரை –
எம் பாவாய் –
நீராடப் போதுவீர் போதுமினோ -என்று கூட்டிக் கொண்டார்கள் –

பிற்பாடார்க்கும்
எம் பாவாய் பிரபந்த முகத்தால்
எம் பாவாய் இன்புறுவர் என்று தலைக் கட்டுகிறார்கள் –

இன்புறுவர் எம்பாவாய்-
பிராட்டியும் தாமும் ஸந்நிஹிதமாம் படி பிரசாதத்தைப் பெற்று –
பகவத் சம்ச்லேஷத்தால் வந்த ஆனந்தம் பெறுவர் –
நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் –
திருமாலால் அருளப் பட்ட சடகோபன் –
திரு மா மகளால் அருள் மாரி-(8-6)
நிரூபக தர்மம் –
இசலி இசலி இருவரும் பரியக் கடவர் –

(பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு
நின் கோயில் சீய்த்துப் பல்கடிகால் குடி குடி வழி வந்தாட் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே –9-2-1-)

(தெருளும் மருளும் மாய்த்துத் தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன் ஓராயிரத்துள் இப்பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11)

(கரு மா முகில் தோய் நெடு மாடக் கண்ண புரத் தெம்மடிகளைத்
திரு மா மகளால் அருள் மாரிச் செழு நீராலி  வள நாடன்
மருவார் புயல் கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார்
இரு மா நிலத்துக்கு அரசாகி யிமையோர் இறைஞ்ச  வாழ்வாரே –8-6-10-)

இப் பிரபந்தம் கற்றார் -நாய்ச்சியாராலும் ஈஸ்வரனாலும் சர்வ காலமும் உண்டான விசேஷ கடாக்ஷத்தைப் பெற்று
நித்ய ஸூகிகளாகப் பெறுவர் –
இத்தால்
யுக்தமான அனுஷ்டானம் இல்லாதார்க்கும் அவர்களுடைய பாசுரமே அவர்கள்
பெற்ற பேற்றைத் தரும் -என்று
இப் பாசுரத்தில் ஏற்றத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறது –

ஏல் ஓர் எம்பாவாய் -அனைத்திலும் காதாலே கேட்டு அனுஷ்ட்டித்து சொல்லி வழிபட்டு அனுபவம்– இதில் –எம்பாவாய் -அனுபவத்தை ஆனந்தமாக இருப்பதே கர்த்தவ்யம்

———–

ஆக
திருப்பாவையால் சொல்லிற்று யாயிற்று வேதார்த்தம் –
அதாவது
அவதாரமே சர்வ ஸமாச்ரயணீயம் என்றும்
அவதீர்ணனாவனுடைய வடிவு அழகே ருசி ஜனகன் என்றும்
ருசியுடையார் ப்ராப்ய த்வரையாலே-அவனை மேல் விழுந்து அபேக்ஷிக்கை பிராப்தம் -என்றும்
இவ்விஷயத்தில் இழிவார்க்கு ருசியுடையார் அடங்க உத்தேச்யர் என்றும்
ப்ராப்யம் ஆகிறது -அனுபவ ஜனித ப்ரீதி காரியமாய் யாவதாத்மா பாவியான கைங்கர்யம் என்றும்
தத் சாதனமும் அவன் திருவருளே என்றும் சொல்லிற்று யாயிற்று –

வங்கம் -இத்யாதி –
மரக்கலத்துக்கு ஒரு சலனம் பிறவாதபடி
பாற்கடலை
மந்தரத்தை மத்தாக நாட்டி
வாசுகியால் சுற்றி
தன் கையாலே கடைந்து
பிராட்டியை லபித்தால் போலே
சேதனர் பரிக்ரகித்த சரீரத்துக்கு ஒரு வாட்டம் வாராமல்
சம்சாரம் ஆகிற மகா சமுத்ரத்தை
தன் சங்கல்பம் ஆகிற மந்த்ரத்தை நாட்டி
கிருபையாகிற கயிற்றாலே சுற்றி
கடாஷம் ஆகிற கைகளால் கடைந்து
பிராட்டியிலும் பிரேம விஷயமான ஆத்ம வஸ்துவை லபித்தவன் –

கேசவனை
கேசியை நிரசித்தாப் போலே
ஆத்மவஸ்துவை அனுபவிக்கும் போது
அவ்வனுபவ விரோதியாய் இச் சேதனனுக்கு பிறக்கும்
போக்ருத்வாதிகளுக்கு நிவர்தகனாவனை-

திங்கள் -இத்யாதி –
சந்தரனைப் போலே ஆஹ்லாத கரமான
திருமுக மண்டலம் உடையவர்களாய்
தத் ஏக விஷயமான ஞான பக்தி வைராக்ய பூஷிதராய்
அனந்யார்ஹரான பாகவதர்கள்
ஆற்றாமை யாலே அவனிருந்த இடத்தே சென்று
பூஜித்து

த்வாபர யுகத்திலே நாட்டாருக்கு -பறை -என்ற வ்யாஜ மாத்ரமாய்
தங்களுக்கு உத்தேச்யமான கைங்கர்யத்தை பரிக்ரஹித்த பிரகாரத்தை –
பூமிக்கு ஆபரணமான ஸ்ரீ வில்லி புத்தூரிலே எழுந்து அருளி இருக்கிற
விஸ்த்ருதமாய் குளிர்ந்துள்ள தாமரை மணிகளாலே
செய்யப் பட்ட மாலைகளை உடைய
பெரியாழ்வார் திரு மகளாரான சூடிக் கொடுத்த நாச்சியார் அருளிச் செய்த

சங்கா நுபாவ்யமாய் -கூட்டம் கூட்டமாய் இருக்கிறதாய் –
தமிழாலே செய்யப் பட்ட
மாலை போலே போக்யமாய்
சிரசாவாஹ்யமாய்
ஸ்லாக்கியமான இப்பிரபந்தத்தை
ஒரு பாட்டு குறையாதே

பிற்பட்ட காலத்திலே
இப்பிரபந்த ரூபமான பாரத்தை அனுசந்திக்கும் அவர்கள்
இப்பாசுர ஸ்ரவணத்தாலே
பணைத்து-பலிஷ்டமான-பெரிய மலை போலே இருக்கிற நாலு திருத் தோள்களை உடையவனாய்
வாத்சல்யத்தாலே சிவந்த திருக் கண்களை உடையவனாய்
விகசிதமான திரு முக மண்டலத்தை உடையனாய்
உபய விபூதி ஐஸ்வர்ய சம்பன்னனான
ஸ்ரீயபதியாலே

த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டிலும்
பிறந்த ஞானத்துக்கு விச்சேதம் வாராதபடி
கிருபையை லபித்து
ஆனந்த நிர்பரராய் இருப்பார்கள்-

இப் பிரபந்தம் கற்றார் -நாய்ச்சியாராலும் ஈஸ்வரனாலும் சர்வ காலமும் உண்டான விசேஷ கடாக்ஷத்தைப் பெற்று
நித்ய ஸூகிகளாகப் பெறுவர் –
இத்தால்
யுக்தமான அனுஷ்டானம் இல்லாதார்க்கும் அவர்களுடைய பாசுரமே அவர்கள்
பெற்ற பேற்றைத் தரும் -என்று
இப் பாசுரத்தில் ஏற்றத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறது –

———–

ஆக
திருப்பாவையால் சொல்லிற்று யாயிற்று வேதார்த்தம் –
அதாவது
அவதாரமே சர்வ ஸமாச்ரயணீயம் என்றும்
அவதீர்ணனாவனுடைய வடிவு அழகே ருசி ஜனகன் என்றும்
ருசியுடையார் ப்ராப்ய த்வரையாலே-அவனை மேல் விழுந்து அபேக்ஷிக்கை பிராப்தம் -என்றும்
இவ்விஷயத்தில் இழிவார்க்கு ருசியுடையார் அடங்க உத்தேச்யர் என்றும்
ப்ராப்யம் ஆகிறது -அனுபவ ஜனித ப்ரீதி காரியமாய் யாவதாத்மா பாவியான கைங்கர்யம் என்றும்
தத் சாதனமும் அவன் திருவருளே என்றும் சொல்லிற்று யாயிற்று –

(ஸ்ரீ கேசவ நம்பியையைக் கால் பிடித்து
இயம் கோதா –மம ஸூதா –பத்ரம் தே -ஸஹ தர்ம சரீதவ-ஜகத் ரக்ஷண தர்மம்
ஸ்ரீ பட்டருக்கு அபகரித்த ஸ்ரீ பட்டர் பிரான்
நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேணும்
கொம்பினுக்கும் அஃதே
ஸ்ரீ ரெங்க மன்னார் -ஸ்ரீ ஆண்டாள் -தரணியே பாக்யம் -தவம் உடைத்து
பல்லாண்டு பல்லாண்டு என்று ஸ்ரீ ஆண்டாள் சமேத ஸ்ரீ ரெங்க மன்னாருக்குப் பாடிக் கொண்டே கால ஷேபம் செய்வோம் )

ப்ரபந்ந அம்ருதம் -ஆண்டான் 30  நாள்களும் நோன்பு நோற்று -அரங்கனை கனவில் திருக்கல்யாண போகம் அனுபவித்த நாளை -நாமும் திருக் கல்யாணம் சேவித்து இன்றும் அனுபவிக்கிறோம் -திருக் கல்யாணம் பங்குனி உத்தரம் நடந்ததையும் ப்ரபந்ந அம்ருதம் காட்டி அருளும் –

——————————————

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading