இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-
“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம் கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம், ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய், மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.
——
அவதாரிகை –
தங்கள் அபேஷித்த படியே செய்தருளக் கண்டு
வந்த கார்யத்தை மறந்து
அத் திருப்பள்ளி யறையில் நின்றும்
திவ்ய சிம்ஹாசனத்தளவும் நடக்கிற போதை
நடை அழகுக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் –
காணும் அளவு இறே -அது வேணும் இது வேணும் -என்பது
கண்டால் அவனுக்கு பரியும் இத்தனை இறே-
ஒரு நாள் அர்ஜுனன் உபய சேனைக்கும் நடுவே தேரை நிறுத்து என்று சொல்ல –
அப்படியே செய்தவன் –
இத்தனை பெண்களும் திரண்டு
இங்கனே போந்து அருள் என்றால்
அது செய்யாது இருக்க மாட்டான் இறே –
தாங்கள் அபேக்ஷித்தபடியே
திருப் பள்ளி அறையின் நின்றும்
திவ்ய சிம்ஹாசனத்து அளவும் நடந்து போரத் தொடங்கினான் –
பிராட்டி கட்டு வாசல் அளவும் தொடர்ந்து மங்களா சாசனம் பண்ணினால் போலே
நப்பின்னைப் பிராட்டியும் தொடர்ந்து ஏத்தும் இறே –
அவனைக் காணும் அளவும் இறே
இங்கனே போர வேணும்
எழுந்து அருளி இருக்க வேணும் –
வந்த கார்யம் ஆராய்ந்து அருள வேணும்
அது வேணும்
இது வேணும் என்று பல தேவைகளை சொல்லி அலைக்கலாவது
தண்ட காரண்யத்தில் ரிஷிகள் கண்டவாறே
ராக்ஷஸ பரிபவங்களை மறந்து
மங்களா சாசனத்தில் மண்டினார்கள் இறே
அப்படியே
இவர்களும் பெரியாழ்வார் படியாய் யாய்த்து –
இங்கனே போந்து அருளுகிற போது
பின்னே நின்று
நடந்த நடை அழகைக் கண்டு
மாறி இட்ட அடி தோறும் மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு
வந்து திவ்ய சிம்ஹாசனத்திலே இருந்த
அனந்தரம்
பறை -என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு
இங்குத்தை மங்களங்களை ஆஸாஸித்து மங்களா சாசனம் பரம பிரயோஜனமாக
வந்தவர்கள் அன்றோ நாங்கள் -என்கிறார்கள் –
இங்கனே போந்து அருளி என்று தாங்கள் சொல்ல
தங்களுக்காக நப்பின்னை பிராட்டியோடே சீரிய சிங்காசனத்தில்
இருந்த அளவிலே
ஆல வட்டக் காற்றிலே அத்தவாளந்தலை மேல் பறக்க
பாத பீடத்தில் நீட்டி அருளின திருவடிகளையும்
மடித்து இட்ட திருவடிகளையும் கண்டு
திரு முலைத் தடங்களிலும் திருக் கண்களிலும் ஒற்றிக் கொண்டு
தங்கள் கர ஸ்பர்சம் பொறாதே கன்றும்படியான மார்த்தவத்தைக் கண்டு
இப்படி ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு இங்கனே நடக்கச் சொல்லுவோமே
திருவடிகளை வாங்கி இடுகிற போது
திரு யுலகு அளந்து அருளின படிக்கு ஸ்மாரகமாய் இருந்தது
அன்று அளக்கப் பண்ணினவர்களோடு ஓத்தோம் இறே இன்று நடக்கப் பண்ணின நாங்களும்
நடந்த கால்கள் நொந்தவோ (திருச்சந்த )-என்று பிடித்து
நாங்கள் சொல்லும் அளவில் புறப்பட்டு உலாவி அருளின படி
திரு யுலகு அளந்து அருளின ஆயாசத்தோ பாதி போருமே என்று
அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி-என்கிறார்கள் –
(பஞ்சுத்திருவடியால் நடக்க வைத்தோமோ -என்று பல்லாண்டு –
திருக்கால் ஆண்ட பல அபதானங்களை அனுசந்தித்து பொங்கும் பிரிவால் மங்களா சாசனம் –
பெரியாழ்வார் பெண் பிள்ளை அன்றோ –
பாரதந்த்ர நிஷ்டை -பரதாழ்வான் போல் –
அன்று நான் பிறந்திலேன் -பிறந்த பின் மறந்திலேன்-விஞ்சி நிற்கும் தன்மையாள் -அன்றோ இவள்
ஒரே பாசுரத்தால் ஆறு முறை பல்லாண்டு -ஷட் ரஸம் -ஆத்ம லாபத்துக்கு –
தேனும் பாலும் கன்னலும் அமுதமும் ஓத்தே எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் –
அன்று -முன் காலம் -ஆங்குமுன் தேசம் -இழந்தே போனோம் –
இரக்கமே உபாயம் -இனிமையே புருஷார்த்தம் ப்ராப்யம் –இச்சையே அதிகாரம்
மூன்று அவதாரங்கள் – அன்று –அக்காலம் பல்லாண்டு பாடாத குறைக்கு இன்று பாடுகிறம்
நாம் நமக்கே பிறர் நன் பொருளை அபஹரித்த அன்று-இருந்த இடத்தில் இருந்தே அளந்து -அடி போற்றி
நடந்து போன பெருமாள் -திறல் போற்றி
பிறந்து ஏழே மாதத்தில் பால் வரவு தாமதம் திருக் கால் உதைக்க சகடாசுரனை புகழ் போற்றி -கழல் போற்றி -குணம் போற்றி இவனுக்கு)
அவனைக் காணும் அளவு தானே அது வேண்டும் இது வேண்டும் என்பது
கண்ட பின்பு பரிவதே இவர்கள் கர்தவ்
நப்பின்னைப் பிராட்டியோடே கூடி திவ்ய ஸிம்ஹாஸனத்திலே இருந்த இருப்பிலே
சாத்தி அருளின அத்தவாளந்தலை மேலே பறக்க-சடகோபனைக் கோத்துக் கொண்டு –(சமாக்ய பத்ததியில் சடகோபர் ஸ்ரீ பாதுகா தேவி )
(திருவடிகளைக் கொண்டு) அத் திருவடிகளைத் திரு முலைத் தடங்களிலும் திருக் கண்களிலும் ஒற்றிக் கொண்டு
உன் சேவடி செவ்வி திருக் காப்பு –
நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு -என்கிறார்கள் -(நப்பின்னை கூட வருகிறாள் அன்றோ இங்கும் )
இங்கனே போர வேணும் என்ன நடந்த திருவடிகளுக்குப் பல்லாண்டு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் என்றுமாம்
(நடக்க பிரார்த்தனை கீழ் – இதில் போற்றி -நடுவில் நடந்த வ்ருத்தாந்தம் ஆச்சார்யர்கள் காட்ட நாம் அனுபவிக்கிறோம்)
தங்கள் மநோ ரதங்களை மறந்து தண்ட காரண்ய வாசிகள் போலே-அயோத்யாவாசிகள் தேவதைகள் உட்பட பிராத்தித்தால் போலேயும்
சக்கரவர்த்தி பரசுராமன் இடம் பிரார்த்தித்தால் போலேயும்-ஸ்ரீ கௌ சல்யையார் மங்களா சாசனம் செய்தால் போலேயும்
வசுதேவர் தேவகி கண்ணன் சங்கு சக்கரங்களை மறைக்க வேண்டினால் போலேயும்–வஸ்துவில் உள்ள ஆதாராதிசயம் தூண்ட-மங்களா சாசனம்
மங்களா சாசனத்தின் மற்று உள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்து அளவு தானன்றி பொங்கும்
பரிவாலே வில்லி புத்தூர் பட்டர் பிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர்
ஆதலால் அபயம் என்று -பொழுததத்தே அபய தானம் ஈதலே கடப்பாடு கம்பர் பட்டர் சிஷ்யர்
இயம்பினார் என் மேல் வைத்த காதலால் —பிரேமத்தால் ஆஷேபித்தீர்கள் –
ஆங்கு ஆராவாரம் அது கேட்டு –அழல் உமிழும் பூம் கார அரவணையான் -ஹாவு ஹாவு ஹாவு -சாம கானம் கேட்டு-
——————-
அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்– (ஐந்து தாய் வைத்து அருளிச் செய்த பாசுரம் )
வியாக்யானம் –
அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி —
அன்று –
தன் விபூதியை மகாபலி அபஹரிக்க நோவு பட்டு இருக்கிற அன்று-
தன்னைப் பிரிந்து நாங்கள் ஆர்த்தியால் நோவு பட்ட இன்று –
ஜகத்தை மகா பலி யினுடைய அபிமானத்தின் நின்றும் மீட்ட அன்று-
எங்களுடைய ஸ்த்ரீத்வ அபிமானத்தின் நின்றும் மீட்ட இன்று –
நாட்டுக்கு எல்லாம் தன் திருவடிகளை தூளிதானம் பண்ணின அன்று-
அழகையும் சீலத்தையும் எங்களுக்கு தூளிதானம் பண்ணின இன்று-
இது இறே ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் வாமனனுக்கும் சாம்யம்
இவ் வுலகம் அளந்தாய்-
பிராட்டிமார் பூ தொடுமா போலே கூசிப் பிடிக்கும்
திருவடிகளைக் கொண்டு-காடும் ஓடையும் அகப்பட அளப்பதே -என்கை –
அன்று எல்லை நடந்து மகாபலி பக்கல் நின்றும்-பூமியை மீட்டுக் கொண்டால் போலே
நடை அழகைக் காட்டி விஸ்லேஷத்தின் நின்றும்-மீட்டுக் கொண்டான் -என்கை –
யடி போற்றி-
தாங்கள் சொல்லும் அளவில் புறப்பட்டு
சுகுமாரமான திருவடிகளைக் கொண்டு
உலாவி அருளின படி –
திரு உலகு அளந்து அருளின ஆயாசம் போரும் என்று மங்களா சாசனம்
பண்ணுகிறார்கள்
திரு உலகு அளந்து அருளின போது இரண்டடி இறே இட்டது –
இப்போது எங்களுக்காக பத்து எட்டு அடி இடுவதே –
திரு உலகு அளந்து அருளின அன்று
இந்த்ரன் பிரயோஜனத்தை கொண்டு போனான்
மகா பலி ஔதார்யம் பெற்றுப் போனான்
தாங்கள் அன்று உதவப் பெறாத இழவு தீர
திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் என்றுமாம் –
அடி போற்றி –
உன் சேவடி செவ்வி திருக் காப்பு -என்னுமவர்கள் இறே-
அன்று இவ்வுலகம் அளந்தாய் –இன்று யாம் வந்தோம்
அன்றும் இன்றும் காணும் இவர்களுக்கு வயிறு எரிச்சல் –
இவர்களுக்கு இரண்டு காலமும் ஒரே காலமாய் தோற்றுகையாலே-
அன்று -இன்று -என்கிறார்கள்
அன்று
ஆர் நோன்பு நோற்கத் தான் இச் செயல் செய்தது –
நோற்றுக் கூடுவாரையும் விலக்குமவர்கள் தலையிலே இறே திருவடிகளை வைக்கிறது
அன்று
தன்னதான விபூதியை அஸூரனான மஹாபலி நெருக்கி தன்னைத் தாக்க
(இந்திரன்)நோவு பட்ட அன்று
அவன் அபிமானத்தில் நின்றும் மீட்டு
தன் கால் கீழ் இட்டுக் கொண்ட அன்று –
எங்கள் பந்துக்களும் எங்களை உன்னோடே சேர்க்க ஒட்டாதே –
நாங்களும் ஆர்த்தைகளாய்
அபிமானம் கால் கட்டி வாராது இருக்க
எங்களுடைய ஸ்த்ரீத்வ அபிமானத்தையும் பஃனமாக்கி உன் கால் கீழ் இட்டு கொண்டு
உன் வடிவு அழகையும் சீலத்தையும் எங்களுக்கு தூளி தானம் பண்ணின அன்று
இவ் வுலகம்
திருவடிகளின் மார்த்வத்தையும்
காடு மோடையுமான பூமியினுடைய காடின்யத்தையும்
இங்கு வர்த்திக்கிறவர்களுடைய வன்மையையும் அனுசந்தித்து இவ்வுலகம் என்கிறார்கள் –
சீல வயோ வ்ருத்தாதிகளால் துல்யர் என்று கவி பாட்டுண்டார் கடக்க நிற்க வேண்டும் படி
வடிவுக்கு இணை இல்லாத பெரிய பிராட்டியாரும்
எடுத்துக் கழிக்கைக்கும் ஒப்பு இல்லாத ஸ்ரீ பூமிப பிராட்டியும்
நாம் பிடுக்கை சாஹசம் என்னும் படியாய் பூத் தொடுமா போலே கூசிப் பிடிக்கும்
மெல்லடிகளைக் கொண்டு இவ்வெவ்விய நிலத்திலே வியாபாரிப்பதே
அளந்தாய்
பிரமாணித்தார் பெற்ற பேறு-என்று உபகார சுருதி பண்ணாத அளவு அன்றிக்கே
யுகக்கவும் அறியாத பூமியை திருவடிகளின் கீழே இட்டுக் கொள்வதே
அடி போற்றி
அக் காலத்திலே சிலர் இழவோடே போனார்கள் –
சிலர் அப்பன் அறிந்திலேன் என்று ஆணை இடத் தொடங்கினார்கள்
சிலர் பிரயோஜனம் கொண்டு போனார்கள் –
அப்போது பரிந்து காப்பிட்டார் இல்லை என்கிற இழவு தீருகிறார்கள்
அடி போற்றி
திசை வாழி எழ -என்கிற அப்போதே பல்லாண்டு இசைக்கை –
போற்றி என்று ஏற்றி எழுவாரைப் போலே( 9-1 )ப்ரயோஜனாந்தர பரர்கள்
அநந்ய ப்ரயோஜனர் அன்றோ நாங்கள்
அடி போற்றி
மன்னன் தேவிமார் கூத்து கண்டு மகிழ்ந்து போனார்கள் -(பெரியாழ்வார் -2-5-9-)
கோட்டங்கை வாமனனாய் செய்த கூத்துக்கள் அன்றோ
(மாயக்கூத்து என்று மகிழ்ந்து போனார்கள் 8-5 )
செவ்வடி செவ்வித் திருக் காப்பு என்னும் குடிப் பிறப்பால் அடி போற்றி என்கிறார்கள்
அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி-
இவ் வழகிய திருவடிகளைக் கொண்டே காடும் மலையும் அளந்து கொண்டது
பிராட்டிமார்களும் பூ தொடுமாறு போல் கூசிப் பிடிக்கும் படி
இவ் உலகம் -காடும் மேடும்
மலர்மகள் பிடிக்கும் மெல்லடி (9-2-10)இறே
(வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2–ஈஸ்வரோஹம் -இதுவே வன்மை )
(கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-)
அடி போற்றி
உன் சேவடி செவ்வி திருக் காப்பு
(திருப்பல்லாண்டில் -திருவடிகளுக்கே பிரதம மங்களா சாசனம் –
அடி -2- பாசுரம் தொடங்கி பலகாலாலும் -இங்கும் -29-இறுதியிலும் )
கொண்ட கோல குறள் உருவாய் –பண்டு கொண்ட முன் -மூன்று சப்தங்கள்-கொண்ட கோலம் –
இவனே நினைத்தாலும் கொள்ள முடியாத கோலம் யாசிக்க நினைத்த பொழுதே திருமேனி சுருங்கி-கொள்ள வேணும் என்று
அவனே நினைத்தாலும் அப்படி கொள்ள முடியாத அழகு–
திரு உலகு அளந்து அருளின போது இரண்டடி இ றே இட்டது —இப்போது எங்களுக்காக பத்து எட்டு அடி இடுவதே –
திரு உலகு அளந்து அருளின அன்று–இந்த்ரன் பிரயோஜனத்தை கொண்டு போனான்
மகா பலி ஔதார்யம் பெற்றுப் போனான்–தாங்கள் அன்று உதவப் பெறாத இழவு தீர–திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் என்றுமாம் –
பிரகிருதி சம்பந்த நிபந்தனமான அஹங்காரம்
ஜகத்தை ஆக்ரமித்த அன்று –
அஹங்கார க்ரச்தமான இந்த லோகத்தை
அஹங்காரத்தின் நின்றும் மீட்டு
தன் திருவடிகளாலே அளந்து
தனக்காக்கிக் கொண்டவனே –
உன் திருவடிகளுக்கு மங்களா சாசனம் –
—————–
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
அழகுக்கு இலக்கு ஆகாதாரை
அம்புக்கு இலக்கு ஆக்கின படி –
சென்றங்கு –
புலி கிடந்த தூற்றிலே செல்லுமா போலே
பிராட்டியைப் பிரித்த பையல் இடத்தே செல்லுவதே –
சென்று –
வழிப் போக்கிலே -கர கபந்த விராதாதிகளை
அழியச் செய்தபடி -என்றுமாம் –
அங்கு –
நின்ற விடத்தே நின்று
பூ அலர்ந்தாப் போலே அனாயாசேன அளந்த
அளவன்றிக்கே
கானகம்படி உலாவி உலாவி -என்னுமா போலே
கொடிய காட்டிலே அந்த திருவடிகளைக் கொண்டு நடப்பதே -என்கை
எவ்வாறு நடந்தனை -என்று வயிறு பிடிக்கை
இவர்களுக்கு குடிப் பிறப்பு –
தென்னிலங்கை
அழகியதான கோட்டையையும் அரணையும் உடைத்தாய்
குழவிக் கூடு கொண்டாப் போலே
ஹிம்சிகர் சேர்ந்த தேசம் –
செற்றாய் –
ஆஸ்ரித விரோதிகள் தனக்கு சத்ருக்கள் -என்கை
திறல் போற்றி
மதிளுக்கு மதிள் இடுமா போலே
மிடுக்கைக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள்
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -என்னும்
அவர்கள் ஆகையாலே
குடிப் பிறப்பாலே வந்தது –
இலங்கை பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதும் -என்னுமவர்கள் இறே-
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி-
திரு வுலகு அளந்து அருளின இடத்தில் சிவந்த தன் கை அனைத்துமார
சென்னி மேல் ஏறக் கழுவினான் என்று ப்ரஹ்ம ருத்ராதிகள்
அனுவர்த்திக்கும் படி ஐஸ்வர்யமான செயல்களை செய்த அவதாரம் ஆகையாலும்
அங்கே நின்று (திருவாய் -5-10-9 )-
(ஒரு கால் நிற்ப -திருநெடும் தாண்டகம் )என்னும் படி
நின்று இரண்டாம் அடியிலே தாவடி இட்டு
வருத்தம் அற செய்ததாகையாலும்
அத்தனை வயிறு எரிதல் இல்லை இறே –
ராமாவதாரத்தில் தேவத்வம் கலசாத படி
ப்ரஹ்ம ருத்ரர்கள் நாராயணன் என்றாலும் மனிச்சுக்கு இசையும் இடம் ஆகையாலும் –
(கீழே தேவனாகவே அவதாரம் )
கானமருங் கல்லதர் போய் என்னும் படி (அங்கு போல் நின்று அல்ல இங்கு போய் )
துஷ்ட சத்வ பூயிஷ்டமான வெங்கானத்தூடே சஸ்த்ர அஸ்திரங்கள் பட வியாபரித்த இடமாகையாலும்
ராமாவதாரத்தில் செய்த செயலுக்கு வயிறு எரிகிறார்கள்
சென்று
இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற -என்று ஒரு செல்லுகை உண்டு இறே –
அவ்விடம் அழகால் நெஞ்சு உருக்கலாம் இறே
அழகுக்கு இலக்காகாத தீ மனத்து அரக்கரை
அம்புக்கு இலக்காக்கின பராபிபவன சாமர்த்யத்துக்கு பரிகிறார்கள்
சென்று அங்குத்
அங்கே சென்று –
நின்ற இடத்திலே நின்று பூ அலர்ந்தால் போலே இரண்டு அடியாக இட மாட்டாது –
கொடிய காட்டிலே
பரல் பாய மெல்லடிகள் குருதி சோர நடப்பதே(பெருமாள் திருமொழி ) என்று வயிறு பிடிக்கிறார்கள்
எவ்வாறு நடந்தனை எம்மிராமா ஓ என்று சக்கரவர்த்தி உள் பட நின்று கூப்பிட்டான் -(பெருமாள் திருமொழி )
சென்று அங்கு
புலி கிடந்த தூற்றிலே சென்று தட்டி எழுப்பிக் கொல்லுவாரைப் போலே
லங்கைக்கு அரணாக வைத்த கர தூஷண கபந்த விரரதாதிகள்
ஜல துர்க்கமாக வைத்த கடல் காடுகள் மலைகள் தொடக்கமானவை எல்லாம்
நடவா நிற்கச் செய்தே
மணல் கொட்டகம் போலே
கால் கீழே அழித்துக் கொண்டு நடந்த படியை நினைத்து –
அங்கு சென்று -என்கிறார்கள்
தென்னிலங்கை செற்றாய்
எல்லாவற்றிலும் ஊர் அரண் விஞ்சின படியால்
இலங்கை செற்றவனே-என்கிறது –
திறல்
அரண்கள் ஒன்றும் வேண்டாத படி எத்தனையேனும் தரமுடைய தேவ ஜாதி
தம்தாமுடைய வருத்தங்களாலே சாதித்த அஸ்திரங்களை எல்லாம்
ஒரு மிடறாக நின்று ஒருக்காலே ஓர் இலக்காக விட்டால்
அவர்களுக்கு தப்ப ஒண்ணாது என்று விட
நாலடி பிற்காலித்து விடாதே
நெஞ்சு கலங்காதே
நிலையும் பேராதே
மஹிஷிகளும் தானும் கூட ஜலக்ரீடை பண்ணும் போது
அவர்கள் பூவை இட்டு தன் மேல் எறிந்தால் பிறக்கும் விகாரம் பிறவாதபடி இருக்குமவன்
நான் கடவேன் என்று நோக்குமவனூராய்-
அழகிதான அரணை யுடைத்தாய் குளவிக் கூடு கொண்டால் போலே
ஹிம்ஸிகர் அடையத் திரண்ட நிலமாய் இருந்த லங்கையை
அரண் சிதற அடை மதிள் படுத்தி
சதுரங்க பலத்தையும் துவள வென்று –
சேனைத் தொகையைச் சாடி (பெரிய திருமொழி -6-5)
ப்ராத்ரு புத்ராதிகளை தலை அழித்து
தான் சிலரை ஆஸ்ரயித்து கதிர் பெறுக்கி (பொருக்கி) கூடினவை அல்லாத அம்புகளைக் கொண்டு
இடி ஏறு உண்டிடச் சுற்றும் வேமா போலே
பையலைப் பக்க வேர் அறுத்து
நெஞ்சு அழிந்து
நிலை தள்ளும்படி பண்ணி
சத்தை அழிந்து
பட்டு விழும் போதும்
வில் பிடித்த பிடி நெகிழாதே விழக் கடவ அவனை
எதிரி வீரம் அறியாதே கோழையாய்ப பட்டான் என்று தரக் கேடான் ஆகாதே
வீரன் என்று விருது பிடிக்கும் படி வில்லைப் பொகடுவித்து
(சசால சாபஞ்ச விமோச வீர -வில்லை க்கைவிட்ட வீரன் )
ஸ்த்ரீ பிராயனாக்கிக் கொன்று வென்றி கொண்ட
பராபி பவன சாமர்த்தியத்தை எல்லாம் நினைத்து –
திறல் -என்கிறார்கள் –
திறல் போற்றி
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே -என்று
இம் மிடுக்கு தங்கள் துக்க நிவ்ருத்திக்கு உடல் இன்றிக்கே
அரணுக்கு அரண் இடுவாரைப் போலே திறலுக்குப் பரிகிறார்கள் –
இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்கு-என்று பரியுமது ஜென்ம சித்தம் இறே –
உலகு அளந்த பொன்னடிக்கு காப்பிட்டவோபாதி
காடுறைந்த பொன்னடிக்கு காப்பிடத் தேடுகிறவர்களுக்கு
அஞ்சாமைக்கு திறலைக் காட்டினான்
அத் திறல் தனக்கு
அஞ்சத் தொடங்கினார்கள் –
தோளில் அழகுக்கு காப்பிடப் புக
மல்லடர்த்த திண்மையைக் காட்ட
அது தனக்கு வயிறு எரிந்தால் போலே
(மல்லாண்ட திண் தோள் காட்ட அதுக்கும் பல்லாண்டு பாடினார் அன்றோ )
திறல் போற்றி
கல்லாதவர் இலங்கை கட்டழித்த–(நான்முகன் )
தேவனே தேவன் ஆவான் (திருமாலை )-என்று
மண்டோதரி உள்ளிட்டாரைப் போலே தத்வ நிர்ணயம் பண்ணுதல் –
தன் வில் அங்கை வைத்தான் -(முதல் -59)
என் தன் தனிச் சரண் -3-10-
கூர் அம்பன் அல்லால் –(நான்முகன் )
மற்றிலேன் தஞ்சமாகவே (2-6 )-என்று ரக்ஷகத்வ புத்தி நடத்தல் –
தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கு –(11-3)
என்னையும் உளள் என்மின்களே– -என்று
போக்யதா புத்தி நடையாடி இழவு சொல்லி விடுதல் செய்யாதே
தங்கள் ரக்ஷகராக பரிவார்கள்
சக்கரவர்த்தி திருமகன் தசரதனிலும் விஞ்சும் படி
பால்ய அவஸ்தையில் ஆயுத சிரமம் பண்ணி –
விச்வாமித்திராதிகளோடே சஸ்த்ர அஸ்திர மந்த்ரங்கள் சிஷித்து
சமைய வளர்ந்த பின்பு செய்த செயல் இறே
லங்கையை அழியச் செய்த செயல் –
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
அழகுக்கு இலக்காகாதவரை அன்புக்கு இலக்கு ஆக்கின படி
கீழ் நமுசி பிரக்ருதிகள் இறே இருந்தது -பிராட்டியைப் பிரித்த ராவணன் இருந்த இடத்தே நடந்து கொல்லுவதே-
கொடுமையில் கடு விசை அரக்கன் –
கால் நடை நடப்பித்த கைகேயியை நோக்கினார்கள்
புலி இருந்த தூற்றிலே சென்று கொல்லுமா போலே
தென்னிலங்கை யரண் சிதறி அவுணன் மாளச் சென்று-திருநெடும் தாண்டகம் -28-
இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு -என்றவர் மகள் இறே
சென்று
வழிப் போக்கில் கர கபந்தம் விராதன் அடைய மணல் கொட்டகம் இடருமா போல் இடறிக்கொண்டு போய்
தேர் ஒழிந்து மா ஒழிந்து களிறு ஒழிந்து –
ராவணனை கால் நடையாக நின்று பொருவதே
திறல் போற்றி
என்ன குடிப்பிறப்பு -மங்களா ஸாஸன -பொங்கும் பரிவு -நித்யம் -காதாசித்கம் அல்லவே
இன்றும் அரையர் கைத்தலைச்சேவை நித்யம் பல்லாண்டு
அஸ்தானே பய சங்கை -பய நிவர்த்தகங்களுக்கு பயப்படுகை –
மதிளுக்கு மதிள் இடுகிறார்கள்
திறல் -இதுக்கும் போற்றி –
ஐந்து குடிக்கு ஒரு சந்ததி அன்றோ
இலங்கை ஆள் பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு என்றவர் மக்கள் இறே-தென் இலங்கை -ஆரியர் இகழ்ந்த தேசம்
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி-
இந்த லோகத்தை அஹங்காரத்தின் நின்றும் மீட்ட அளவு அன்றிக்கே
அந்த அஹங்காரத்துக்கு பிறப்பிடமான இடத்தே சென்று –
தர்ச நீயமான பிரகிருதி சம்பந்த நிர்வாஹகமான
அஹங்காரத்தை அழித்தவனே-
உன்னுடைய பராவி பவன சாமர்த்தியத்துக்கு பல்லாண்டு –
————-
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி-
ராவணனைப் போலே -விரோதி என்று –இறாய்க்க ஒண்ணாத அபாயம்-
பொன்ற
மாரீசனைப் போலே குற்று உயிர் ஆக்கி மேல்
அநர்த்தம் விளைக்க வையாதே -முடிக்கப் பெற்ற படி –
புகழ் போற்றி –
தாயும் கூட உதவாத தசையிலே
அனாயாசேன திருவடிகளாலே சகடாசுரனை அழித்த புகழ் –
போற்றி –
ராமாவதாரத்தில் காட்டில் மங்களா சாசனம் பண்ண வேண்டி இருக்கை –
ராமாவதாரத்துக்கு
பிதா -சம்பராந்தகன் –
ஊர் -திரு அயோத்யை
புரோஹிதர் -மந்த்ரவாதிகளான வசிஷ்டாதிகள் –
பிள்ளைகள் -ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்தவர்கள் –
குணவான்களும் பிள்ளைகள் –
பிறந்த ஏழு திங்களில் என்கிறபடியே
பிறந்து
மறு பத்துக் கழிந்த அளவிலே
எதிரிகள் உண்டு என்று அறிகைக்கு உடலான ஞானமும் இன்றிக்கே
ஆயுதமும் பிடிக்கவும் அறியாத தொட்டில் பருவத்திலே செய்த செயல் இறே
சகட பங்கம் –
ராவணன் நேரே சத்ருவாய் தோற்றான் இறே
அப்படி அன்றிக்கே
பிரசன்ன (மறைந்த) சத்ரு வாகையாலே –
கள்ளச் சகடம் என்றத்தை
அறிந்து முற்பட்ட படிக்கு வயிறு எரிந்து பரிகிறார்கள்
பொன்றச் சகடம் உதைத்தாய்
சகடம் பொன்ற –
முடிய –
சூர்ப்பணகையும் மாரீசனையும் போலே குற்றுயிரோடே விட்ட பின்பு
அனர்த்தம் விளையும் படி இளிம்பு படாதே
தோற்ற அரவிலே சகடாசூரனை முடித்து விட்ட படி
உதைத்தாய்-
முலை வரவு தாழ்த்து தொட்டிலை உதைத்த திருவடிகளுக்கு
இலக்காய் முடியும் படி பண்ணின அனாயாசம்
உதைத்தாய்-
பெருமாள் கைக்கு வில் பிடித்த தழும்பு போலே
கிருஷ்ணன் திரு வடிகளுக்கு சாடுதைத்த தழும்பு –
தழும்பு இருந்த -இத்யாதி-
தழும்பிருந்த சார்ங்க நாண் தோய்ந்த மங்கை,
தழும்பிருந்த தாள் சகடம் சாடி, – தழும்பிருந்த
பூங்கோதையாள் வெருவப் பொன் பெயரோன் மார்ப்பிடந்த,
வீங்கோத வண்ணர் விரல்.
புகழ்-
பெற்ற தாயும் கூட உதவாத சமயத்தில் பெரும் படையாண்டு செய்த செயல்களை
கால் கூறாக்கி விட்ட படி –
திருக் காலாண்ட பெருமானே -என்கிறபடியே
புகழ் போற்றி-
நின் சிறுச் சேவகமும் (திருவாய் 5-10 )-என்று
காரை மூரிருகிக் (மூரி திருகினக்) கன்னிப் போருக்கு காப்பிட வேணும் இறே –
அருளின் பெரு நசையால் -என்று ஆண் பிள்ளை என்று ஆசைப்படுவர்
என்னை நிறை கொண்டான் (திருவாய் 5-3 )-என்று அடக்கம் கெட்டு மடல் எடுக்கத் தேடுவர் –
உறக்கில் நிமிர்த்தீர் (பெரிய திருமொழி 10-8 )-என்று ஊடுதலாய்ப் போனார்கள் பெண்கள்
இவர்கள் செயலுக்கு வயிறு எரிந்து பரிகிறார்கள் –
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
ஒருத்தரோடும் விசாரியாதே முடித்த படி-ராவணனைப் போல் -நினையாமல்
அங்கு பருவம் மிக்கு -38 திரு நக்ஷத்ரம் லீலா ரசம் -விளையாட்டாக
இங்கு கண்ணன் விளையாட -சண்டையாகி விட்டது –
லீலையில் நுழையும் பருவம் அன்றே
மாரீசனைப் போலே குற்றுயிராக்கி மேலே அனர்த்தத்தை விளைக்க வையாதே முடித்த படி
(பங்குனி ரோகிணி -பிறந்த ஏழு திங்களில் -மாச திரு நக்ஷத்ரம் -உதைத்ததும் மொத்தமாக முடித்த படி )
புகழ் போற்றி(தாய் ரஷிக்காத திசையிலும் திருவடி அவனை ரக்ஷித்ததே புகழ்)
ஸ்ரீ பிருந்தா வனத்தில் முளைத்த பூண்டு அகப்பட ராக்ஷஸராகை
(எழும் புல் பூண்டு எல்லாம் அசுராவேசம் அன்றோ இங்கு
செடி கொடிகள் ராமனை பிரிந்து அழும் -கண்டு அகால காலத்திலும் பூக்குமே அங்கு
மங்களா சாஸனம் காவல் -கதே ஜலம் சேது பந்தனம் )
புகழ் போற்றி
ராமாவதாரத்தில் பிதா தசரதன் -சம்பராந்தகன் -அயோத்தி ஊர்-அபராஜிதா வெல்ல முடியாதது – -தம்பிமார் கல் மதிள்
மந்திரவாதிகள் வசிஷ்டாதிகள் -அஷ்ட -மந்திரவாதிகள் த்ரஷ்டா ரிஷி -கண்டு கொண்டு கொடுத்தவர்கள்
சுமந்த்ராதிகள் மந்திரிகள் -நாடு அடைய காவல் -இச்சா மஹா என்னும் படி கிழவன் ஓடு -குணம் உடையவன் அஞ்ச வேண்டாம்
இங்கு -மாதா பிதாக்கள் இடையர்கள் -சாது -இடைச்சேரி ஊர் -புத்தி சொல்லும் மந்திரிகளும் இடையர் -சம்சாரிகள்
கறவை மாடு வழி காட்டப் போகுமவர்கள் –
கம்சாதிகள் எதிரிகள் -பிருந்தாவனத்தில் எழுந்த பூண்டுகள் அனைத்தும் அஸூரா வேஷ ராக்ஷசர்கள்
நம்பி மூத்த பிரான் -தமையன் தீர்த்த யாத்திரை போனார்
ஒரு க்ஷணம் கூட இல்லா அன்று பாம்பின் வாயில் விழுவான் -காளிய -வாயில் விழும் தீம்பால்
பூதநாதிகள் -வந்த அபாயம் இருக்க மங்களா சாசனம் ஒன்றே காவல்
தாயும் உதவாத தசையில் திருவடி உதவினதே புகழ் ஆவது
செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறுச் சேவகமும் -பிறந்தவாறும் பதிகம்
காலை நிமிர்த்த கன்னிப் போர் என்பதால் பல்லாண்டு பாடுகிறார்-கன்னி சேஷ்டித்ததுக்கு பல்லாண்டு பாடுகிறார்கள் –
பெய்யும் பூங்குழல் பேய்முலை யுண்டபிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின்சிறுச் சேவகமும்
நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல்கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்கப்
பையவே நிலையும்வந்து என்நெஞ்சை உருக்குங்களே.–5-10-3-
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி-
காம குரோதங்களை-ஸ்வரூபேண நசிக்கும்படி -உன் திருவடிகளாலே உதைத்தவனே –
உன்னுடைய யசஸ் ஸுக்கு பல்லாண்டு –
——————
இங்கு
மாதாபிதாக்கள் -சாது இடையர்
ஊர் இடைச்சேரி
கம்சாதிகள் எதிரிகள்
ஸ்ரீ பிருந்தாவனத்திலே முளைத்து எழும் பூண்டுகள் அடைய ராஷசர்கள்
தமையன் ஒரு ஷணம் தப்பில் பாம்பின் வாயிலே விழும் தீம்பன் –
பூதனாதிகளாலே பிறந்த அபாயங்களுக்கு ஒரு அவதி இல்லை
ஆன பின்பு இனி மங்களா சாசனம் ஒழிய காவல் இல்லை –
கன்று -இத்யாதி –
சத்ருவை இட்டு சத்ருவை எறிந்தால்
சங்கேதித்து வந்து இருவரும் இருவரும் ஒக்க மேல் விழுந்தார்கள் ஆகில் என் செய்யக் கடவோம்-
என்று வயிறு பிடிக்கிறார்கள் –
குஞ்சித்த-மடித்த – திருவடிகளுக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் –
கன்று குணிலா –
கன்றை எறிதடியாக
குணில் -எறிதடி
கரம் போற்றி என்னாமல் அடி விடாதவர்கள் ஆகையாலே கழல் போற்றி என்கிறார்கள் –
பசலைத் தனத்தில் செய்த செயல் என்று விடலாம் அது –
பருவம் நிரம்பி செய்த செயலோ தான்
கணக்கு வழக்கு பட்டு இருக்கிறது என்று அதுக்கு வயிறு எரிகிறார்கள்
கன்று குணிலா வெறிந்தாய் –
சகடாசூர நிராசனம் பண்ணின வயிறு எரிதல் அல்ல கிடாய் –
கன்றாய் நின்ற அசுரனை கொன்ற தீம்பு பூமி எல்லாம்
பிரகாசிக்கும் படி செய்தாய் என்று வயிறு எறியும் செயல் இறே
வழக்கு அன்று கண்டாய் வலி சகடம் செற்றாய் –
குழக் கன்று தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை
திருமாலே பார் விளங்கச் செய்தாய் பழி
மார்பில் இருக்கிறவர்களோடு (திருமாலே விளங்க)
மண்ணில் கிடக்கிறவர்களோடு (பார் விளங்க)
வாசியற
பழி கேடன் என்று சொல்லும் படி இறே
செய்த தீம்பும் (பெரிய திருமொழி 8-6 )-சகடாசூர பங்கம் பண்ணிச் செய்த தீம்பு –
திரி கால் சகடம் சினம் அழித்து கன்றால் விளங்காய் எறிந்தான் –
ஓர் அசுரன் விளாவாய் நிற்க ஒரு அசுரன் கன்றாய் நிற்க
சத்ருவை இட்டு சத்ருவை எறிந்தால் சங்கேதித்து இருவரும் ஓக்க
மேல் விழுந்தார்கள் ஆகில் என் படக் கட வோம் என்று வயிறு பிடிக்கிறார்கள்
என்றும் என் பிள்ளைக்கு தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்கள் -என்று
தாயார் உட்பட வயிறு பிடிக்குமது இறே
குணில் -எறி கருவி
குணிலா எறிந்தாய்-
எதிரிகளை இட்டு எதிரிகளை முடித்த படி
கழல் போற்றி
விளாவை இலக்காகக் குறித்துக் கன்றை எறி கருவியாகக் கொண்டு
எறிவதாக இச்சித்து நடந்த போதைக்
குஞ்சித்த திருவடிகளில் வீரக் கழலுக்கும்
அக வாயில் சிகப்பையும் கண்டு காப்பிடுகிறார்கள்
கழல் போற்றி
கன்றினால் வீழ்த்தவனே என்று பக்தி பண்ணுதல் –
காயுதிர்த்தாய் தாள் பணிந்தோம் என்று விரோதி நிவர்த்தகமாகப் பற்றுதல்
கனை கழல் காண்பதற்கு என்று யம வஸ்யத்தைக்கு நிவர்த்தகம் என்று இருத்தல் செய்யாதே
மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –
அடி போற்றி -கழல் போற்றி
நீட்டின திருவடிகளுக்கும் குஞ்சித்த திருவடிகளுக்கும்
சூழ்ந்து இருந்து பரிவாரைப் போலே பரிகிறார்கள்
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
சத்ருவை இட்டு சத்ருவை நிரசித்தால் அவர்கள் இருவரும் சங்கேதித்தால் என் செய்வோம்
தெய்வாதீனம் -எந்த தெய்வம் –
அடி போற்றி -கீழ்-மேல் உள்ள கறுத்த கழல் போற்றி -குஞ்சித பாதம் -உள் சிவந்த திருவடி
குணிலா –எறி தடி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி-
லோபத்தை எறிதடியாக எறிந்து நசிப்பித்தவனே –
உன்னுடைய குஞ்சிதமான திருவடிகளுக்கு பல்லாண்டு –
இவ்வளவில் பிரதிகூலர் விஷயத்தில் செய்யும் அம்சத்தைச் சொல்லிற்று –
இனி அனுகூலர் பிரதி கூலித்தால் செய்யும் அம்சத்தைச் சொல்லுகிறது –
————
குன்று இத்யாதி –
இதுக்கு முன்பு இந்தரனுக்காக செய்த செயல் –
இப்போது அவன் தான் பகையானபடி –
மலையைக் குடையாக எடுத்து
பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த ஆபத்தைப் போக்கின்படி –
அனுகூலன் பிரதி கூலித்தால் செய்யலாவது இல்லை இ றே-
குணம் போற்றி –
பசிக்ராஹத்தாலே கை ஓயும் தனையும் வர்ஷிக்க
மலை எடுத்துக் கொண்டு நின்ற ஆன்ரு சம்சய குணத்துக்கு
மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –
விரோதி நிரசனம் பண்ணித் தன்னை நோக்குகைக்கு அடைவு கெட்டு இருந்தால்
அனுகூலர் விரோதிகளாக ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணுமதோ சால அடைவுண்டாய் இருக்கிறது
என்று அதுக்குப் பரிகிறார்கள்
(விஷ்ணு பக்தி உள்ளார் தேவர் -அனுகூலர் )
குன்று குடையா வெடுத்தாய்
விரோதிகளுக்கு கன்று எடுத்த மாத்ரம் போலே காணும் கன்று நோக்குகைக்கு குன்று எடுத்தது –
கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆ நிரைக்கு அழிவு என்று
மா மழை நின்று காத்து உகந்தான் (பெரிய திருமொழி -9-10-)-என்னக் கடவது இறே
கீழ் எல்லாம் இந்திரனுக்கு சத்ருவானவர்கள் நலிந்த நலிவு பரிஹரித்த படிக்கு வயிறு எரிந்தார்கள்-
இப்போது அவன் தான் நலிந்த நலிவு பரிஹரித்த படிக்கு வயிறு எரிகிறார்கள் –
அசூரர்களோடு தேவர்களோடு வாசி இல்லை இறே
பகவத் சேஷமான வஸ்துவை தங்களதாக நினைத்து இருக்கைக்கு –
சர்வ யஞ்ஞ போக்தாவாக தன்னை அருளிச் செய்தானே
(சர்வ யஞ்ஞ போக்தா ச பிரபுரேவ ச கீதை )
தனக்கு இட்ட சோற்றை அமுது செய்தால் ஸ்வ தந்த்ர புத்தி பண்ணி பண்டு புஜித்த இடம் உள்பட
ஆத்ம அபஹாரத்தோடு ஒவ்வா நிற்க
ததீய புத்தி பண்ணாதே ஸ்வ தந்த்ர புத்தி பண்ணி நலியத் தேட
மலையைக் குடையாக எடுத்து
பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த ஆபத்தை பரிஹரித்த படி
குணம்
அனுகூலனானவனுக்கு பிராமாதிகமாகப் புகுந்தது அன்றோ –
அநந்தரத்திலே வந்து கோவிந்த அபிஷேகம் பண்ண வன்றோ புகுகிறான் –
பெரும் பசியால் வந்த கோபத்தால் வர்ஷித்தான் ஆகில்
கை நொந்தவாறே விடுகிறான் –
பெரும் பசியாலே இவனை நலிந்தால்
நாமே யுண்பது கொண்டார் உயிர் கொண்டு தலையை அறுக்கவோ
அவன் கை சலிக்கும் தனையும் கடக்கிட்டுக் காப்போம் என்று
அவனை தலை அழியாதே
மலையை எடுத்து ரஷித்தது ஆன்ரு சம்சயத்தாலே –
அந்த குணத்துக்குப் போற்றி –
(கடக்கிட்டுக் காப்போம்-கையாலே குடை பிடித்து
நமது கை கொண்டு கார்யம் செய்யும் தனையும் ரக்ஷிக்காமல்
அஞ்சலி செய்யவே ரக்ஷிப்பானே )
பாயும் பனி மறுத்த பண்பாளா –
சீர் கற்பன் வைகல் -என்று
அறிவுடையார் நாள் தோறும் கற்பதொரு குணம் இறே
(பண்பு சீர் அங்கு குணம் இங்கு )
குணம் போற்றி
கொடி ஏறு செந்தாமரைக் கை விரல்கள் கோலம் அழிந்ததோ வாடிற்றோ(3-5 ) என்று பார்த்துப்
பரியத் தேட
அவ்வளவு போக ஒட்டிற்று இல்லை மழை எடுத்த குணம் தான்
(அடி போற்றி கழல் போற்றி அங்கு பரிந்தது போல்
விரல் போற்றி இல்லையே –
குணம் தடுத்து பாடப் பண்ணிற்று )
குணம் போற்றி
என் தனக்கொரு துணையாளான் ஆகாயே-என்று
நொய்ய தொரு மலையைப் பொகடுவித்து (தூக்காமல் இருந்தாய் ஆகில் )
கனவிது இரண்டு மலையைக் கையிலே கொடாதே (பொன் முலைகள் பொன் அரும்ப )
மலையை எடுத்த ஷமா குணத்துக்குக் காப்பிடுகிறார்கள் –
(வாளாய கண் பணிப்ப–பொன் முலைகள் பொன் அரும்ப –நின் நினைந்து நைவேற்கு –
ஓ மண் அளந்த எடுத்த தாளாளா -வரை எடுத்த தோளாளா
அளந்து எடுத்து காட்ட வேண்டா -தாள் தோள் காற்றா அமையும் தோடு இட்ட காது எடுத்தாலும் தெரியுமே
என் தனக்கு ஓர் துணையாளன் ஆகாதே
துணையாளன் ஆனமை காட்டிய குணம் )
வர்ஷம் விட்டவாறே மலையைப் பொகட்டு வேலை பிடிக்கும் அத்தனை இறே –
கிருஷ்ணன் பசுக்களின் பின்னே திரியா நின்றால்
ஸிம்ஹம் வந்தாலும் வேலாலே குத்தி எடுத்துப் போக்கும் அத்தனை இறே –
அதுக்கு எடுத்த வேலுக்கு பரிகிறார்கள்
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
கீழ் நாலும் வியக்த விரோதிகள்-(இந்திரனுக்கு விரோதிகள்-மகாபலி இடம் மீட்டதும் ராவணன் இந்திரஜித் அழித்ததும் )
இங்கு அனுகூலம் –
இப்போது இந்திரனும் பகையானபடி
அனுகூலர் பிரதிகூலமானால் தலை அறுக்க ஒண்ணாதே
ஆன்ரு சம்சயத்தால் மலை எடுத்தது –
ஆந்ரு சம்சய குணத்துக்குப் பல்லாண்டு
பெரும் பசியால் அவனை நலிந்தோம்- கை நொந்து போகும் வரையில் வர்ஷிக்கிறான் –
ஆன்ரு சம்சய குணத்துக்கு மங்களா ஸாஸனம்
சபலைக் குழந்தை தன்னைக் கிள்ளப் புக்கால்-கை நொந்தால் விடும் என்று உடம்பைக் கொடுத்து இருக்கும் தாய் போல்
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி-
இந்த்ரன் சிலா வர்ஷம் வர்ஷித்த போது
பர்வதத்தை குடையாக கொண்டு
கோ கோப ரஷணம் பண்ணினாப் போலே –
அஞ்ஞான கார்யமான அஹங்காரம்–இவ் வதிகாரிக்கு விஷய ப்ராவண்யத்தை உண்டாக்குவதற்கு-பிரதி கிரியையாக வைதிகமாய் கைங்கர்ய ரூபமான–விஷய ப்ராவண்யத்தை உண்டாக்கி–ஸ்வ பிரபன்ன ஜன ரஷகனாம்படியைச் சொல்லுகிறது –
ஆக இப்படி ஆஸ்ரித ரஷகன் ஆனவனே–உன்னுடைய சீல குணத்துக்கு பல்லாண்டு –
அனுகூலர்-அனந்தரம் கோவிந்த அபிஷேகம்-பெரும் பசியால்-உண்பது கொண்டால் உயிர் கொண்டு தலை அறுக்கவோ
கை சலிக்கும் வரையில் தடுப்போம்-தலை அழிக்காதே புகழ்-சபலை குழந்தைக்கு முதுகைக் கொடுக்கும் மாதா போலே
இன்று வந்த ஆயர் –மது சூதனன் எடுத்த-கருணை குணம் போற்றி –பனி மறுத்த பண்பாளா
கோலம் அழியாமல் வாடாமல்-கைக்கு மங்களா சாசனம்-நின்ற திருவடிக்கு-என்தனக்கு குன்று எடுத்த மலையாளா –ஷமை குணம்
—————-
வென்று பகை கெடுக்கும் இத்யாதி –
இவன் பக்கல் பரிவாலே -இவன் மிடுக்கைக் கண்டு கண் எச்சில் படுவார் என்று பயப்பட்டு
அத்தை விட்டு -இவ் வேல் அன்றோ இவ் வியாபாரம் எல்லாம் பண்ணிற்று -என்கிறார்கள் –
மிடுக்கு இல்லாமையால் நான் மெலிந்தேன் -என்று இறே இவர்கள் படி –
சக்கரவர்த்தி வில் பிடிக்க பெருமாளும் வில் பிடித்தால் போலே
கூர் வேல் கொடும் தொழிலன் -என்னுமவர் மகன் ஆகையாலே
வேலே ஆயுதம் –
வென்று பகை கெடுக்கும் –
ஆஸ்ரித விரோதிகளான பிரதி பஷத்தை அறச் செய்து மாயக்கை –
நின் கையில் வேல் போற்றி –
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டி இருக்க
அதுக்கு மேலே வேலைப் பிடிப்பதே -என்று
திரு வேல் பிடித்த திருக் கைக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் –
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு -என்று
திவ்ய ஆயுதங்களுக்கும் மங்களா சாசனம் பண்ணினார் இறே தமப்பனாரும்-
தேஜஸே சேது பந்தம் -தமப்பனாருக்கும் மகளுக்கும் பணி –
என்று சீயர் அருளிச் செய்வர் –
எல்லா குணங்களையும் ஒரு வியக்தியில் சொன்னால் கண் ஏறாம் என்று
வேலிலே அசலிட்டுச் சொல்கிறார்கள் வெற்றியை –
வென்று பகை கெடுக்கும்
சத்ருக்களை வென்று ஓட்டக் கடவதாய் இருக்கும்
நின் கையில் வேல் போற்றி
சக்கரவர்த்தியும் வில் பிடித்து
பரிகரமும் வில் பிடித்து
பிள்ளைகளும் வில் பிடித்தால் போலே
ஸ்ரீ நந்த கோபரும்
இடையரும்
பிள்ளைகளும் வேல் பிடித்தாய்த்து திரிவது –
கூர் வேல் கொடும் தொழிலன் –
வேலைப் பிடித்து என்னைமார்கள் (நாச்சியார் )
நின் கையில் வேல்
வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டி இருக்க
அவ் வழகுக்கு மேலே வேலைப் பிடித்த அழகு
கையில் வேல்
எதிரிகள் மேல் பட வேண்டா —
பிடித்த பிடியில் யுகவாதாரை முடிக்கும்
நின் கையில் வேல்
தன்னை உணராதே அசத்திய ப்ரதிஞ்ஞனாய் சீறின போது காணும்
ஜன்மாந்தரம் மேல் இட்டு திரு வாழியை எடுப்பது –
(வேல் எப்போதும் கையில் உண்டு –
திருவாழி எப்போதாவாது எடுப்பார் -இந்த அவதாரத்தில் )
வேல் போற்றி
ஈஸ்வரனைக் காணில் இறே ஆழியும் பல்லாண்டு என்பது
பெருமாளைக் காணில் இறே சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை பல்லாண்டு என்பது
நின் கையில் வேல் போற்றி
வெற்புடைய நெடும் கடலுள் தனி வேல் உய்த்த வேள் முதலாக வென்றவன் கையில் வேல் இறே -(திரு நெடும் தாண்டகம் -7)
ஆகையால் பரிகிறார்கள்
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
ஒரு வியக்தியிலே எல்லா அபதானங்களையும் சொன்னால் த்ருஷ்ட்டி தோஷமாம் என்று
பிடித்த வேலுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள்
சக்ரவர்த்தி வில் பிடிக்க பிள்ளைகள் வில் பிடித்தால் போலே கூர் வேல் கொடும் தொழிலன் மகன் இறே –
பசுக்களின் பின் பேச திரியா நின்றால் ஸிம்ஹம் வாரா நின்றாலும் வேலாலே குத்திப் பொகட்டுப் போம் அத்தனை
(வேள் முதலா வென்றானூர் -திரு நெடும் தாண்டகம்)
நின் கையில் வேல் போற்றி
வெறும் புறமே ஆலத்தி வழிக்க வேண்டியிருக்க அவ்வழகுக்கு மேல் வில்லைப் பிடித்த அழகு
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு -என்று
திவ்ய ஆயுதங்களுக்கும் மங்களா சாசனம் பண்ணினார் இ றே தமப்பனாரும்—தேஜஸே சேது பந்தம் -தமப்பனாருக்கும் மகளுக்கும் பணி –
என்று சீயர் அருளிச் செய்வர் –
அஹங்காரத்தை ஜெயித்து–தத் விஷய வைமுக்யத்தை மாற்றும்–நின் திருக் கையில் திரு வாழி யாழ்வானுக்கு-பல்லாண்டு –
———–
என்று என்று –
இது தானே பிரயோஜனம் என்கை –
சம்சாரிகள் புறம்பும் கொள்ளுவார்கள் -இவன் பக்கலிலும் கொள்ளுவார்கள் –
இவர்கள் புறம்பும் கொள்ளார்கள் -இவன் பக்கலிலும் கொள்ளார்கள்
ஓன்று நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் -என்று
அவனுக்கும் தான் கொடுத்து
ஆந்தனையும் கை காட்டி -என்று புறம்பும் தானே கொடுக்கும் என்கை –
என்று என்றும்
பிரயோஜனம் பெரும் அளவும் சொல்லி பின்னை அது மாறுகிறது அன்றே –
பிரயோஜனத்துக்கு பிரயோஜனம் வேணுமோ -என்று
இது தானே பலமாக இருக்குமவர்கள் இறே –
என்று என்று
பல்லாண்டு என்றால் பின்னையும் பல்லாண்டு என்னும் அத்தனை இறே –
போற்றி என்று ப்ரேமம் அடியாக வந்த கலக்கத்துக்குத் தெளிவு யுண்டாகில் இறே
இச் சொல்லு மாறுவது –
அங்கு போனாலும் சூழ்ந்து இருந்து இறே –
வெம்மா பிளந்தான் தன்னை போற்றி (திருவாய் 4-5-வீற்று இருந்து ) என்னக் கடவது இறே –
அடி போற்றி –
திறல் போற்றி
புகழ் போற்றி
கழல் போற்றி –
குணம் போற்றி –
வேல் போற்றி -என்று இவர்கள் நாக்குக்கு இடும் ஷட்ரசம் இருக்கிறபடி –
என்று என்றும்
பிரயோஜனம் பெறும் அளவும் சொல்லி -பின்னை
தேஹி மே ததாமி தே -என்னுமவர்கள் அன்று -இது தானே பிரயோஜனமாய் இருக்கும்
சம்சாரிகள் புறம்பும் கொள்ளுவர்கள் -அவன் பக்கலிலும் கொள்ளுவர்கள்
இவள் புறம்பும் கொள்ளாள்-இவன் பக்கலிலும் கொள்ளாள்
ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் —
ஆந்தனையும் கை காட்டி புறம்புத்தைக்கும் தானே கொடுக்கும் அத்தனை-
(ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டுபவர்கள் அன்றோ )
(அம்பரீஷன் இடம் பெருமாளே இந்திர வேஷம் கொண்டு வந்த வ்ருத்தாந்தம்)
என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இப்படி பல்லாண்டு பாடுகையே யாத்ரையாய் உன் உடைய
வீர சரிதத்தையே ஏத்தி
புருஷார்த்தத்தை லபிக்கைக்காக
சத்வம் தலை எடுத்த இன்று
உன் கை பார்த்து இருக்கும் நாங்கள்
வந்தோம்
நீ கிருபை செய்து அருள வேணும் –
ஏத்திப் பறை கொள்வான் -என்கிற இடத்தில்
யேத்துகைக்கு அநந்தரம் புருஷார்த்தம் லாபம் ஆகையாலும்
ஏத்தாத போது புருஷார்த்த லாபம் இல்லாமையாலும்
யேத்துகையே புருஷார்த்தம் -என்கிறது –
—————
உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் –
உன்னுடைய வீர சரித்ரமே ஏத்தி -உன்னை அனுபவிக்கைக்காக –
உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம்
என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன் –
என்னுமவர்கள் இறே –
உன் சேவகமே
வீர குணத்துக்கு போலே காணும் இவர்கள் தோற்பது –
பந்து நிரோதத்தால் தளர்ந்த அபலைகளுக்கு அவனுடைய விஜயம் இறே பல ஹேது
என்று என்றும் உன் சேவகமே
உன்னுடைய விக்ரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் -என்னும் படியே
உன் சேவகமே ஏத்திப்
வேறு ஒருவருடைய சேவகம் கலந்து ஓதோம்-
திரு விக்ரமனையும் பெருமாளையும் கலந்து அன்றோ ஏத்திற்று
அது அவதாராந்த்ரத்தின் செயல் என்று இருக்கிறார்கள் –
இவன் பால்யத்தில் செய்ததோபாதி பூர்வ அவஸ்தையும் என்று இருப்பார்கள்
சிலை ஓன்று இறுத்தாய் திரு விக்ரமா திரு வாயர்பாடிப் பிரானே -என்றும் –
வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே -காகுத்த நம்பீ வருக இங்கே -என்று
தாயார் உட்பட கிருஷ்ணனை அழைப்பது -இப்படியே இறே
இவனுக்கு நாள் ஸ்ரீ வாமனன் பிறந்த நாள் ஆக்கினாள் -(திருவோணத்தான் உலகு ஆளும் என்பர்களே )
எட்டு மாசம் வயிற்றிலே இருந்த இவனை பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட -என்றாள்-
என் மகன் பால்யத்தை மஹாபலி பக்கலிலே சென்று கேட்டுக் கொள் என்கிறாள் –
சார்ங்க பாணி தளர் நடை நடவானோ -என்றாள்
மாணிக் குறளனே தாலேலோ வையம் அளந்தானே என்று தாலாட்டினாள்-
இவர்கள் ஓங்கி உலகளந்த என்கிறார்கள் -(திருப்பாவை -3)
சார்ங்கம் உதைத்த (திருப்பாவை -4)என்கிறார்கள் –
அனந்தரம்
ஆயர் குலத்தினில் தோன்றும் (திருப்பாவை 5 ) என்றார்கள் –
போற்றப் பறை தரும் புண்ணியன் (திருப்பாவை )என்றார்கள்
எழுப்புகிற போது உலகு அளந்த உம்பர் கோமானே (திருப்பாவை )-என்றார்கள் –
அவன் தான் பிறந்த போதே மூன்று பிறவி யுண்டே –
உங்களுக்கு பிறக்கிறது என் என்றான்
வில் பிடித்தாரில் சக்கரவர்த்தி பிள்ளை நான் என்றான் -(கீதை -10 )
ஆகையால் அவதாராந்தரம் என்று இருப்பார் ஒருவரும் இல்லை
ஏத்திப் பறை கொள்வான்
எங்கள் பலம் முன்னாக –(ஏத்துதலே எங்கள் பலம் )
நாட்டார் பலம் பெறுவதாக –பலம் ஏத்துகை-
பின்பு அபிமதம் ஊரார் ஸம்ருத்தி –
உத்தேச்ய பலமும் ஆனு ஷங்கிக பலமும்
உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
உன்னுடைய விக்ரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் என்னுடைய நெஞ்சகம் பால் சுவர்
வழி எழுதிக் கொண்டேன் -என்னுமவர் மகள் இறே(போகத்தில் வழுவாத புதுவையர் கோன் )
————-
இன்று –
இசைவு பிறந்த இன்று -என்னுதல்-
நீ உறங்க -நாங்கள் உறங்காத இன்று -என்னுதல்
நென்நேற்று வந்தோமோ –
ஊராக இசைந்த இன்று -என்றுமாம் –
யாம் –
பந்துக்களாலே நெடும் காலம் நலிவு பட்ட நாங்கள் –
வந்தோம் –
வ்ருத்தைகள் உறங்க -நாங்கள் ஆற்றாமையாலே வந்தோம்
எங்கள் இழவுகள் எல்லாம் உன்னாலே தீரும் –
யாம் வந்தோம் –
எங்கள் வரவு உனக்கு புண்ணாய் இருக்க
நாங்கள் ஆற்றாமையாலே வந்தோம் –
இரங்கு –
எல்லாம் பட்டாலும் அவன் இரங்கினால் அல்லது கார்ய கரம் ஆகாமை –
அத்தலைக்கு இரங்குகை ஸ்வரூபம் –
அவனுக்கு என் வருகிறதோ என்று இருக்கை-இத்தலைக்கு ஸ்வரூபம்
தாங்கள் பண்ணின மங்களா சாசனம் சாதனம் அன்று -என்று இருக்கிறார்கள்-
இன்று
இசைவு பிறந்த இன்று –
நென்னேற்று வந்தோமோ –
நாளைக்கு இங்கே நிற்க ஓட்டுவார்களோ –
யாம்
பெரு மிடுக்கரான வ்ருத்தைகள் எல்லாம் கிடந்து உறங்க
குளிர் பொறாத பாலைகளான நாங்கள்
வந்தோம்
நீ வர ப்ராப்தமாய் இருக்க
விரஹ துர்பலயத்தாலே ஆற்றாமை இழுக்க வந்தோம்
யாம் வந்தோம்
நாங்களும் எங்களை அறியாமல் செய்தோம் –
நீயும் உன்னை அறியாமல் செய்வது உண்டாய்த்து இறே
இரங்கேலோ ரெம்பாவாய்
எல்லா வியசனங்களையும் பட்டாலும் கீழ் பிரவர்தித்தித்தது எல்லாம் பேற்றுக்கு உடல் அன்று –
அவன் இரக்கமே கார்ய கரமாவது
அவனுக்கு என் வருகிறதோ என்று இரங்கி மங்களா சாசனம் பண்ணுகை இவர்களுக்கு ஸ்வரூபம் –
இத் தலைக்கு இரங்குகை அவனுக்கு ஸ்வரூபம்
வந்தோம் இரங்கு
இரங்காமைக்கு வேண்டுவது செய்தோமே யாகிலும் இரங்க வேணும் –
இத் தலையில் பர பக்தியும் பேற்றுக்கு உடல் அன்று
அவனுடைய இரக்கமே அவ்யவஹித உபாயம் என்று இருக்கிறார்கள் –
அன்று இவ்வுலகம் அளந்தாய் -இன்று யாம் வந்தோம்
நீ எங்களைத் தேடி எல்லா உலகும் தட வந்தாய் -அன்று –
இன்று உன்னைத் தேடி நாங்கள் வந்தோம் –
யாம் வந்தோம் –
வையம் தாய மலர் அடிக் கீழ் முந்தி வந்து நீ நிற்க நாங்கள் பெற்றோம் -(திருவாய் 8-5 )
அளந்தாய் –
தென்னிலங்கை செற்றாய் –
சகடம் உதைத்தாய்-
யாம் வந்தோம்
மண் அளந்த கண் பெரிய செவ்வாய் என் கார் ஏறு வாரானால் -(திருவாய் -5-4 )
காகுத்தன் வாரானால் -கண்ணனும் வாரானால் -என்று
இருந்த உன்னுடைய பிரதான மஹிஷிகளில் (பராங்குச நாயகி )
எங்களுக்கு உண்டான வாசி பாராய்
அன்று இவ்வுலகம் அளந்தாய் இரங்கு
உவந்த உள்ளத்தனாய் எங்களோடு அணைந்திலை யாகிலும்
சத்தா ப்ரயுக்தமான கிருபையை யாகிலும் பண்ணு
அளந்தாய் -இரங்கு
நீர் ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே என்று அன்றோ நாங்கள் இருப்பது
தென்னிலங்கை செற்றாய் –இரங்கு
சிறிது தாழ்க்கில் இரக்கம் எழீர்-என்று உன்னை வசை பாடுவார்கள் கிடாய் என்று
தாய்கள் சொல்லும் அளவேயோ (ஆழி எழ தாயார் பதிகம் )
இரக்கம் ஒன்றும் இலாதாய் (நாச்சியார் )-என்று நாங்கள் தான் சொல்லோமோ
சகடமுதைத்தாய் -இரங்கு
உருளும் சகடம் உதைத்த பெருமானார் அருளின் பெரு நசையால் அன்றோ நாங்கள் வந்தது -(திருவாய் 2-1 )
குன்று குடையாய் எடுத்தாய் –இரங்கு
குன்று குடையாக ஆ காத்த கோவலனார் ஒன்றும் இரங்கார் என்னாம் இரங்கு -(பெரிய திருவந்தாதி )
இன்று
இசைவு பிறந்த இன்று
நீ உறங்க நாங்கள் உறங்காதே இருந்த இன்று
வ்ருத்தைகள் உறங்க நாங்கள் வந்தோம்
நென்னேற்று வந்தோமோ -ஊரார் இசைந்த இன்று வந்தோம் -என்றுமாம் –
யாம்
பந்துக்களாலே நெடும் காலம் நலிவு பட்ட நாங்கள்
யாம் வந்தோம்
நீ வர ப்ராப்தமாய் இருக்க எங்கள் ஆற்றாமையால் வந்தோம் என்றுமாம்
வந்தோம்
எங்கள் ஆற்றாமையால் வந்த இழவு எல்லாம் தீர வந்தோம்
இரங்கேலோ ரெம்பாவாய்-
எல்லாம் பட்டு வந்தாலும் அவன் இரங்கி அல்லது கார்யமாகாது
வ்யபிசாரம் இல்லாத உபாயம் இதுவே என்கை
இரங்கு
இது ஒன்றே பேறு கொடுக்கும்–என் வருகிறதோ மங்களா சாசனம் செய்தது ஸ்வரூபம்
இத்தலைக்கு இரங்குகை அவன் ஸ்வரூபம்-இரங்காமைக்கு பல செய்தாலும் நீ இரங்க வேண்டும்
போற்றி என்றோம்–வந்தோம்–சு பிரவ்ருத்தி பகவத் பிரவ்ருத்தி க்கு விரோதி–பர பக்தி யாதிகள் பேற்றுக்கு உபாயம் இல்லை
அன்று நீ தேடி–வையம் தாவி நீ–காரேறு வாரானால்–கண்ணானு ம் வாரானால்–பிரதான மகிஷி போலே இல்லை
நாங்கள் வந்தோம் வேறுபாடு பாராய்–சத்தா பிரயுக்தமான கிருபை யாவது செய்து அருள்
அளந்தாய் இரங்கு–நீரேற்ற பிரான் அருளாது போமோ–வசை பாடுவார் படி–இலங்கை அழித்த பிரான் —
இரங்கு ஓன்று ஒன்றுக்கும் அன்வயித்து வியாக்யானம்
குன்று கொடையாக -ஒன்றும் இரங்காதார் உருக்காட்டார் -பாசுரங்கள் கொண்டே வியாக்யானம் –
இத் தலைக்கு இரங்குகை அவனுக்கு ஸ்வரூபம்
அவனுக்கு என் வருகிறதோ என்று இரங்குகை இத் தலைக்கு ஸ்வரூபம் –
நீ கிருபை செய்து அருள வேணும் –ஏத்திப் பறை கொள்வான் -என்கிற இடத்தில்-யேத்துகைக்கு அநந்தரம் புருஷார்த்தம் லாபம் ஆகையாலும்
ஏத்தாத போது புருஷார்த்த லாபம் இல்லாமையாலும்-யேத்துகையே புருஷார்த்தம் -என்கிறது –இரங்கு -என்று-கிருபையே சாதனம் என்கையாலே-வந்தோம் -என்றுm ருசி காரித்தைச் சொல்லுகிறது –
யாம் வந்தோம் இரங்கு–பரகத ச்வீகாரமே ஸ்வரூபம்–ஸ்வகத ச்வீகாரம் ஸ்வரூப விருத்தம்-என்று துணிந்து இருக்கும் நாங்கள்
ஆற்றாமை மிக்கு வந்தோம்–பொறுத்து அருள்
————————————————————
சரணாகதிக்கு ஐந்து அங்கங்கள் -ஓரு அங்கி – கார்ப்பண்ய அனுசந்தானம் – கை முதல் இல்லாமை பிராதி கூல்ய வர்ஜனம் – அனுகூல்ய சங்கல்பம் – மஹாவிஸ்வாசம் – கோப்த்ருத்வ வரணம்- அங்கி சரணாகதி தானே ஆகும்
ஞான பல ஐஸ்வர்யா வீர்ய சக்தி தேஜஸ் என்கிற ஆறு குணங்களும் ஆகவுமாம் —
பாஞ்ச ராத்ரம் -லஷ்மி தந்திரம் -அஹிர்புத்ய சம்ஹிதை திரு வாராதனம் -ஆறு ஆசனங்கள் சொல்லும்
இதனாலேயே ஆறு போற்றி -என்றும் சொல்வர்-
இரக்க மாலை–சாற்றி அருளுகிறாள்
இன்று யாம் வந்தோம் இரங்கு
நாப்படைத்த பிரயோஜனம் பிரார்த்தனை
நிர்ஹேதுக கிருபை
அடியேன் இடரைக் களையாயே
நெடியாய் அடியேன் இடரை நீக்கி
அடியேற்கு ஒரு நாள் இரங்காயே
தாமரைக் கண்களால் நோக்காய்
இவன் அர்த்திக்க வேண்டுமோ -சர்வஞ்ஞன்இவன் நினைவு அறியானோ என்னில் இவன் பாசுரம் கேட்டவாறே திரு உள்ளம் உகக்கும் -முமுஷூப்படி -163-
அதுவும் அவனது இன்னருளே
ஆச்சார்யா பரமாக உபதேசித்து அருள வேணும் -என்றதாயிற்று
பரம போக்யமான பள்ளி கோளைப் பங்கப் படுத்தினோம் -இக்குற்றத்தை ஷமித்து அருள வேணும்
பிராட்டிமாரும் கூசிப் பிடிக்கும் ஸூ குமாரமான திருவடிகளைக் கொண்டு நடக்கப் பண்ணினோமே -ஷமிக்க வேண்டும்
ரஷய்த்வ ஸ்வரூபத்துக்கு மாறாக பல்லாண்டு பாடினோமே ஷமிக்க வேண்டும்
இன்று யாம் வந்தோம்
இன்றி யாம் வந்தோம் கைம்முதல் இல்லாமல் வந்தோம் -என்றுமாம்
இரக்கத்துக்கு தண்ணீர் துரும்பாக ஒன்றும் இல்லை –
வேல் போற்றி திரிதண்டம்
சப்ததி-விஷ்வக் சேனோ எதிபதிர் ஆபூத் வேத்ரசாரஸ் த்ரிதண்ட -திருப்பிரம்பே த்ரிதண்டம் -உபய விபூதி நிர்வாக நிபுணம்
முக்கோலுக்கு மங்களா சாசனம்–தாடி பஞ்சகம் –
—————-
24. அஞ்சும் குடி :
அன்புடை ஆழ்வார்கள் போற்றி என ஏற்றி
நன்குடனே நாளும் வழுத்துலும் — இன்னும்
பெரியாழ்வார் அஞ்சாமைக் காட்டியதுக் கஞ்சும்
பெருமை ஆண்டாளுக்கும் உண்டு.
பிறர் நன்பொருளான ஆத்மபகரம் திருட்டு. பொருள் சரீம். நன்பொருள் ஆத்மா. பிறர் நன் பொருள் பகவானுடைய சொத்தான ஆத்மா.
இந்திரனுடைய சொத்தான மூன்று லோகங்களை மஹாபலி தன் சொந்தமாக்கினான். அதை மீட்க அன்று
திருவிக்கிரமனாய் மூன்றடி மண் கேட்டு, இரண்டடியால் அளந்து கொண்டதோடு, மூன்றாவது அடியால்
துரபிமானகள் தலையில் கால் வைத்து அவர்களையும் தனதாக்கிக் கொண்டு
தளிர் புரையும் திருவடி என் தலைமேலவே என்று அபிமானம் களைந்தான்.
அடிபாடி என்று தொடங்கி, அடிபோற்றி என்று இடையில் இந்த பாசுரமும்,
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் என்று முடிவிலுமாய் ஆண்டாள் மங்களாசாசனம்.
அளந்து தன்னதாக்கிக் கொண்டதால் ஸ்வாமித்வம் பிரகாசிக்கிறது. ஸ்வம் = சொத்து.
தளிர் புரையும் திருவடி தலை மேலவே என்றதால் சேஷித்வம் பிரகாசிக்கிறது.
உலகமளத்த பொன்னடியே அடந்துய்ந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே என்றதால் சரண்யத்வம் பிரகாசிக்கிறது.
உழலை இன்ப பேய்ச்சி முலையூடவள் உயிருண்டவன் கழல்கள் அவையே சரணாகக் கொண்ட என்றும்
நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் என்று நாடொறும் ஏக சிந்தையனாகி என்றும்
தன்னைத் தவிர்ந்த வேறு ஒன்றையும் சகியாத நிரபேட்சோபாயத்வம் சொல்லிற்று.
தாவி வையம் கொண்ட தடந்தாமரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ? என்று ஆர்த்தித்தவம் பிரகாசிக்கிறது.
தடந்தாமரை தாள் என்று சொல்லாமல் தடந்தாமரைகட்கே என்று உபமானத்தை சொல்லி
உபமேயத்தை சொல்லாமல் விட்டது முற்றுவமை என்கிற ஸ்வாரஸ்யம் இங்கு நோக்கத் தக்கது.
சதுமுகன் கையில் சதுப்புஜன் தாளில் சங்கரன் சாடையினில் தங்கி வருகிற – விஷ்ணு பாதோதகமாகிற
கங்கை கங்கை என்ற வாசகம் கொண்டு கடுவினை காளையலாமே –
கண்டமென்னும் கடிநகர்-தேவபிரயாகை பாசுரம் இதில் பாவனத்வம் பிரகாசிக்கிறது.
உன்வையம் தாய மலரடிக்கீழ் முந்தி வந்து முகப்பே கூவிப் பணிகொள்ளாய் என்று பரிச்சர்யம் பிரார்த்திக்கிறது .
தாளால் அளந்த அசைவேகொல் ? பின்னும் தன்வாய் திறவான் நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்
ஐந்தலைவாய் நாகத் தணை – என்று சிரமிஸித திருவடிகளை ஆஸ்வாஸ படுத்த அலை அடிப்பதாக ஆழ்வார்.
தீர்த்தன் உலகளந்த சேவடிமேல் பூதாமம் சேர்த்து அவையே சிவன் முடிமேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்ததொழிந்த பைந்துழாயான் பெருமை – என்று பரத்வ சூசகம் .
மாமுதல் அடிப்போது ஒன்று கவிழ்த்தலர்த்தி மண்முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடிப்போது ஒன்று
விண்செலீஇ நான்முகப் புத்தேள் நாடு வியந்துவப்ப வானவர் முறை முறை வழிபட நெறீஇ தாமரை காடு
மலர்க்கண்னொடு மலர்க் கனிவாய் உடையது போல் இரு ஞாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன
கற்பக காவு பற்பல வன்ன முடிதோள் ஆயிரம் தழைத்த நெடியோர்க்கல்லதும் அடியதோ உலகே? – என்கிற மாதுர்யம், அழகு பேசப்பட்டது.
இப்படியான உன் விக்கிரமங்களுக்கு அன்று பல்லாண்டு பாடாத குறை தீர, இன்று யாம் வந்தோம்.
அறுசுவை அபதானங்களுக்கு ஆறு முறை போற்றி சொல்லி வந்த எங்களுக்கு நீ இரங்க வேண்டும் என்கிறார்கள்.
அதவா
அவனுடைய இரக்கத்துக்கு விருத்தமாய்
உறங்குமவனை எச்சரப் படுத்துவது,
நாலடி நடக்கும் படியாய் விக்ஞாபிப்பது–இத்யாதி காரியங்கள் – அதிபிரவ்ருத்தியாய் முடியாது இருக்க, ’இரங்கு’ என்கிறார்கள்,
————————————————————–
ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —
————————————————————————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply