ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள்–மாரி மலை முழஞ்சில்–

இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம், ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

——

ஸ அபராதரைப் போலே சாந்த் வனம்-நல்ல வார்த்தை – பண்ணுமவன் ஆகையாலே
பெண்களை சாந்த் வனம் பண்ணி அருளினான் –

அவ்வளவிலே நாங்கள் வந்த கார்யத்தை கேட்டு அருள வேணும் என்கிறார்கள் –

ஸ்ரீ விபீஷண ஆழ்வானை —
தம் குற்றம் என்று நினைத்து -மதுர பாஷணங்களாலே-சந்தோஷிப்பித்தாப் போலே

சங்கம் இருப்பார் போல் -என்று கீழே பெண்கள் சொன்ன வார்த்தையைக் கேட்டு –
அநந்ய கதிகளாய் வந்தோம் என்று சொல்லுவதே
நப்பின்னை பிராட்டி பரிகரமாய் இருந்து வைத்து என்று
திரு உள்ளத்திலே போரப் புண் பட்டு –

பின்னை நெடும் பணை தோள் மகிழ் பீடுடை (1-7 ) என்று
அவளுடைய சம்பந்தமே நமக்கு ஏற்றமாக நமக்கு நல்லோர்கள் சொல்லா நிற்கச் செய்தே-
அவளோடு ஒரு கோவையாய் இருந்து வைத்து
நம் முன்னே இப்படிச் சொல்லுவதே –
நாம் ஆரானோம் -என்று தன்னை நொந்து கொண்டு

பரம ரிஷிகள் ஆர்த்தராய் வர
தன் காவல் சோர்வை நினைந்து சாபராதர் செய்தவற்றை
நிரபேஷரான பூர்ணர் பொறுக்கும் அத்தனை அன்றோ
கர்ப்ப பூதர் என்று நினைத்து இருக்க
உங்களால் வந்த தன்றே -உங்கள் வியசனத்தை காண்கையாலும்
அதுக்கு அடி நம் குற்றம் ஆகையாலும்
உங்கள் அளவல்ல நமக்கு லஜ்ஜை –

முதலிலே ரக்ஷகன் ஆனவனுக்கு சென்று ரஷிக்க வேணும்
அதிலே ஆர்த்தரை ஐயோ என்று வினவ வேணும் –

இப்படி இருக்க
நோவு படுகிறி கோளும்-
அது வந்து அறிவிப்பு கோளும் நீங்களாம் படி பிற்பாடார் ஆனோமே –
அத்தை நீங்கள் பொறுக்க வேணும் என்று ஷமிப்பித்துக் கொண்டால் போலேயும்

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ராவணன் பின்னே பிறந்த என்னை ஆராயாதே அருள் பாடிடுவதே -என்று
தரையைப் பார்த்து கவிழ்ந்து நிற்க
அவன் இலங்கையில் பட்ட நெருக்கும்
முதலிகளால் வந்த சிலுகும் எல்லாம் நம்மாலே வந்தது அன்றோ –
நீர் இருந்த இடத்திலே வந்து கொண்டு போராதது
நம் குறை யன்றோ என்று சாபராதரரைப் போலே சாந்தனவம் பண்ணினால் போலேயும் –

ஆண்கள் விஷயத்தில் அகப்பட இப்படி இருக்கக் கடவ நாம்
பெண்கள் வந்து எழுப்பப் பார்த்து இருப்போமே-என்று பெண்களுக்கு இனிதாகச் சொல்லி
உங்கள் கார்யம் அழகிதாகச் செய்து தரக் கடவோம் –
செய்ய வேண்டுவது என் சொல்லுங்கோள் என்ன-

இங்கண் குன்னங்குறிச்சியாகக் கேட்டு அருள ஒண்ணாது –
பேர் ஓலக்கமாக இருந்து கேட்டருள வேணும் என்று
ஆஸ்தானத்திலே புறப்பாடு
இருக்கும் க்ரமத்தை
பாசுர பரப்பு அறக் கையோலை செய்து கொடுக்கிறார்கள்-

(கிடாம்பி)ஆச்சான் -அகதிம் சரணாகதம் -என்று விண்ணப்பம் செய்ய
நம் இராமானுசனை யுடையாய் இருந்து வைத்து நம் முன்னே இப்படி சொல்லப் பெறாய்-என்றார் அழகர் –

அபராத ஸஹஸ்ர பாஜநம் பதிதம் பீமபவார்ணவோதரே |
அகதிம் ஶரணாகதம் ஹரே! க்ருபயா கேவலமாத்ஸமாத் குரு ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —-48

(ஐந்து வித நடை அழகு நம்பெருமாள் புறப்பாட்டில் –
ஸிம்ஹம் -நர ஸிம்ஹம் -ராகவ ஸிம்ஹம் -யாதவ ஸிம்ஹம் -முன் யுகங்களில் –
பின்னானார் வணங்கும் சோதி ரெங்கேந்த்ர ஸிம்ஹம் -அர்ச்சா ப்ரதாநம் -வேர் பற்று -)

(கீழ் கடாக்ஷம் பிரார்த்தனை -வாய் பேசப்புக
படுக்கை அறை கடாக்ஷமும் பேச்சும் வேண்டாம் -சீரிய ஸிம்ஹாஸனம் வரை நடந்து அழகைக் காட்டப் பிரார்த்தனை
கிடந்ததோர் கிடக்கை மட்டும் போதாதே
ஸ்ரீ ரெங்கம் நடை அழகு காஞ்சி குடை அழகு -உத்சவங்கள் ஒலி ஓவா திவ்ய தேசங்கள்
யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் -கார்யம் சொல்லக் கூடாத சமயத்தில் சொல்லக் கூடாதே
அத்தை சிற்றம் சிறு காலைக்கு -29 பாசுரத்தில் வைத்தார்கள்)

பெண்காள் உங்கள் கார்யம் அழகிதாகச் செய்து தருகிறோம் -உங்களுக்குச் செய்ய வேண்டுவது என் என்னச்
செய்யும்படியை (பாசுரத்தை சுருங்க  விட்டு-ஆராய்ந்து அருள் என்ற பதிலைசுருங்க  விட்டு   )உள் வரியிட்டு (விவரமாக )செய்து கொடுக்கிறார்கள்
சங்கம் இருப்பார் போல் -22-என்ற வார்த்தையைக் கேட்டு
நீங்கள் அநந்ய கதிகள் என்பதே நப்பின்னைப் பிராட்டி பரிக்ரஹமாய் இருந்து வைத்து
என்று திரு உள்ளம் புண்பட்டு – உங்களுக்குச் செய்ய வேண்டுவது என் என்ன
இங்கனே குன்னங்குறிச்சியாகக் (சிறுபிள்ளை வார்த்தை -அமுக்கியமாக )கேட்டருள ஒண்ணாது –
பேர் ஓலக்கமாய் இருந்து நீ கேட்டருளுமா போலே கேட்டருள வேணும் -என்கிறார்கள்
புருஷகாரம் –
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை அமரர் முழு முதலானே -1-7-8(புருஷகாரம் உண்டு என்பதுக்கு பிரமாணம் )

(என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே –1-7-8- -புருஷகார பலம் -நப்பின்னை பிராட்டியைப் பற்றிய பலம் ))

அழகர் கிடாம்பியாச்சானை அருளப் பாடிட்டு நீ ஓன்று சொல் என்ன –
அபராத சஹஸ்ர பாஜநம் என்று தொடங்கி -அகதிம் -என்ன
நம் இராமானுசனை யுடையையாய் இருந்து வைத்து அகதி என்னப் பெறாய் என்று அருளிச் செய்தாராம்

(இன்றும் அருளப்பாடு நம் ராமானுஜம் உடையார் என்றே உண்டே
ராமானுசனை நமக்கு உடையவராகக் கொடுத்து அருளிய பின்பு நாம் அகதி இல்லையே
இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் என்று அன்றோ சொல்ல வேண்டும் )

(அபராத ஸஹஸ்ர பாஜநம்
பதிதம் பீமபவார்ணவோதரே |
அகதிம் ஶரணாகதம் ஹரே!
க்ருபயா கேவலமாத்ஸமாத் குரு ||–ஶ்லோகம் 48 –

துன்பங்களைப் போக்கி என்னை ரக்ஷிப்பவனே! கணக்கில்லாத அபராதங்களுக்கு இருப்பிடம் நான்;
இப்பொழுது இந்த ஸம்ஸாரம் என்கிற க்ரூரமான கடலில் முழுகியுள்ளேன்; எனக்கு வேறு புகல் இல்லை;
உன்னிடத்திலே சரணடைந்துள்ளேன்; உன்னுடைய கருணையினாலே என்னை உன்னுடையவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.)

அனந்தாழ்வான் -அமரியாத என்கிற ஸ்லோகத்தை ஆளவந்தார் அருளிச் செய்தார் என்னக் கேட்டு
எனக்கு அது சொல்ல வேண்டா என்றான் அவர் சம்பந்தத்தால் –

(அமர்யாத: க்ஷுத்ரஶ் சலமதிர் அஸூயா ப்ரஸவபூ:
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மரபரவஶோ வஞ்சநபர: |
ந்ருஶம்ஸ: பாபிஷ்ட: கதம் அஹமிதோ து:க்க ஜலதே:
அபாராதுத்தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ: ||ஶ்லோகம் 62 –நாம் அனுசந்திக்க வேண்டி 10 விஷயங்கள் அருளிச் செய்து காட்டி அருளுகிறார்

நான் சாஸ்த்ர மர்யாதைகளை மதிக்காமல் கடந்தவன், தாழ்ந்த விஷயங்களில் ஆசை உள்ளவன்,
நிலை இல்லாத மனதை உடையவன், பொறாமையின் பிறப்பிடம், எனக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீங்கிழைப்பவன்,
கைவிடவேண்டிய கர்வத்தை உடையவன், காமத்துக்கு வசப்பட்டவன், ஏமாற்றுபவன், க்ரூரமான செயல்களில் ஈடுபட்டவன்
மற்றும் பாபங்களில் மூழ்கியுள்ளவன். நான் எப்படி இந்த எல்லையில்லாத பாபக் கடலின் கரையை அடைந்து
உன்னுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வேன்?)

வசசா சாந்த்வயித்வை நம் -என்று அருளி
சாபராதன் அன்றோ சாந்த்வனம் பண்ணுவான் -என்று அருளிச் செய்தால் போலே
நீங்கள் சொல்லிற்று எல்லாம் நம் குறையால் வந்தது -என்று அருளிச் செய்து
பெண்களை சாந்த்வனம் பண்ணி அருளினான் –

(அபய பிரதானம் -விபீஷணன் திரு உள்ளம் என்ன பாடு பட்டு இருக்கும் இவ்வளவு நேரம் காக்க வைத்ததுக்கு என்று
வாக்காலே ஆசுவாசம் படுத்தி கண்களால் நீரைப் பருகுவார் போல் பெருமாள் பருகினார் அன்றோ
அதே போல் பெண்காள் உங்களைக் காக்க வைத்தது எனது குறை என்றானாம் -)

(சீரிய சிங்கம்-சிற்றாயர் சிங்கம் -யாதவ ஸிம்ஹம் -ரெங்கேந்திர ஸிம்ஹம் -ராகவ சிம்மம் -ராஜ ஸிம்ஹம்
வேரி மயிர் பொங்க–பரிமளம் மிக்க பிடரி மயிர் சிலிர்த்து
மூரி நிமிர்ந்து-உடல் ஒன்றாகும் படி நிமிர்ந்து
பூவைப் பூ வண்ணா-காயாம்பூ வண்ணா -மென்மையான திருமேனி -சேராச் சேர்க்கை –
கதிர் மதியம் போல் -திங்களும் ஆதித்ய எழுந்ததால் போல் -கீழே பார்த்தோம் –
போந்தருளி-நடந்து அருளி -திருக் கைத்தலை சேவை -கார்த்திகை அன்று சேவை -உள்ளே எழுந்து அருளுவார்
கோப்பு -அழகு மேன்மை –
இருந்து -வீற்று இருந்து
வந்த
கார்யம் ஆராய்ந்து-மநோ ரதம் -சிற்றம் சிறு காலைக்கு வைத்து அருளுகிறாள்
கடாக்ஷம் பிரார்த்தனை கீழ் -அது படுக்கை அறையில் இருந்து கூடாது -இப்படி ஆக வேண்டும் -என்கிறாள் -)

கர்ம பரதந்த்ரராய் இருந்துள்ள பிரயோஜனந்த்ர பரரில் காட்டிலும்
அநந்ய ப்ரயோஜனராய்
சாதனாந்தர நிஷ்டராய் இருக்குமவர்களில் காட்டிலும்
சித்த சாதனம் பண்ணினார்
குற்றம் போகத் தன் கைம்முதல் இல்லாமையால் ஈஸ்வரனே ப்ரபுத்தனாய்க் கொண்டு
சம்விதானம் பண்ண வேணும் என்று அபேக்ஷிக்க அவ் வதிகாரத்தைச் சொல்லுகிறது

அர்த்திகள் ஆஸ்தானத்தில் இருக்கிற ஸ்ரீயபதிக்கு
ஸ்வரூப அனுரூப குண விருத்தியை விண்ணப்பம் செய்ய வேணும் என்கிறது –

இச்சா, க்ருபா ப்ரபாவம்.
பெண்களை ஸாந்த்வநம் பண்ணி யருளினான்;
அவ்வளவிலே, ‘நாங்கள் வந்த காரியத்தைக் கேட்டருள வேணும்’ என்கிறார்கள்.

—————

மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப் பூ வண்ணா வுன்
கோயில் நின்று இங்கனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்

மாரி மலை முழஞ்சில்-
வர்ஷா காலம் ராஜாக்கள் படை வீடு விட்டு
புறப்படதாப் போலே
சிம்ஹமும் வர்ஷாகாலம் முழைஞ்சு விட்டுப் புறப்படாது –

பெருமாள் வர்ஷா காலம் மால்யவானில் எழுந்தருளினாப் போலே –
விஸ்லேஷித்தார் கூடும் காலமுமாய்
கூடி இருந்தார் போக ரசமும் அனுபவிக்கும் காலமுமாய் இருக்க
நாங்கள் உன் வாசலிலே நின்று துவளக் கடவமோ -என்கை –

மாரி
வைரம் கொள்ளும் மார்க்கங்களும்-
சலிலே நஸமீக்ருதா-என்னும் படி
தேசம் அடைய ஒரு நீர்க் கோப்பாக வர்ஷம் பெய்து
வழிகள் எல்லாம் தூறு எழுந்து சஞ்சார யோக்யதை இன்றியிலே ஒழிகையாலே

ராஜாக்களும் தம் தாம் சத்ருக்கள் பக்கல் த்வேஷங்களையும் மறந்து
எடுத்து விடுகையும் தவிர்ந்து
கை கழியப் போனவர்களும் வர்ஷாவாகப் புகா நின்றது என்று
தம் தாம் வீடுகளைக் குறித்து வந்து நின்று
நாலு மாசமும் உகந்த விஷயங்களோடு கூடி இருக்கும் படியாய் இறே இருப்பது

மஹாராஜரும் தாரை யுடைய ஸ்தநோஷ்மாவைப் பற்றிக் கிடந்து
பெருமாளோடே பண்ணின சமயத்தையும் மறந்த படியால் பெருமாளும் சீறி –
ச பாந்தவமாக அறுக்கக் கடவோம் என்று இளைய பெருமாளுக்கு அருளிச் செய்து விட

அவரும் கிஷ்கிந்தை வாசலிலே சீரிய நாண் எரிய
நின்ற திருவடியைப் பார்த்து போக்கடி சொல் என்ன –
அவனும் தீரக் கழிய அபராதம் பண்ணின உனக்கு ஓர் அஞ்சலி நேராமல் போகாது என்ன

தான் சாபராதன் ஆகையால் நேர் கொடு நேர் புறப்பட மாட்டாமையாலே
தாரையைப் புறப்பட விட

அவளும் உமக்கு கோபம் காரணம் என் –
உமக்கு கோபத்துக்கு போரு வாரும் உண்டோ என்று பொறுப்பித்துக் கொள்ளும் படி
பண்ணும் காலம் இறே வர்ஷா வாகிறது

பெருமாள் தானும் மால்ய வானிலே எழுந்து இருந்து

சலீலாதி பாரத்தை வஹித்துக் கொண்டு ரண உத்யு க்த்ங்களான யானைகள் போலே கிளம்பி
நீர்க் கனத்தாலே மலைக் கொடு முடிகளில் படிந்து

சோபன பங்க்திகள் படுத்தால் போலே கிடக்கிற கிடையைக் கண்டு

அர்ச்சிராதி கதியாலே பரம பத த்துக்கு ஏறுவாரைப் போலே
இவற்றிலே அடி இட்டு ஆகாசத்தில் ஏறி பறித்துக் கொள்ள வேண்டாத படி
நினைத்த படி அள்ளிப் பரிமாறலாம் படி இருக்கிற
இக் காலத்துக்கு அடைத்த பூக்களைக் கொண்டு

ஆதித்ய அந்தர் விருத்தியான
பெரிய பெருமாளை சமாராதனம் பண்ணலாய் இருந்தது –

எடுத்துக் கை நீட்டுவார் இல்லை யாயிற்றே என்கிற
இழவோடே வர்ஷா காலத்தில் இருக்கும் படிகள் எல்லாம் அருளிச் செய்தார் இறே

மாரி
பிரிந்தார் கூடும் காலம் –
கூடினார் போக ரசம் அனுபவிக்கும் காலம் –
புஜிக்கிறவர்கள் கை நெகிழில் உடம்பு வெளுத்து அணையும் காலம்

மாரி
பெண்களோடு மேகம் அறையிடும் காலம் –
பிரிந்தார் கொடுமை குழறும் காலம் –
கலந்தார் வர எதிர் கொள்ளும் காலம் -(திருவிருத்தம் )
பெண் நீர்மை ஈடு அழிக்கும் காலம் (நாச்சியார் -8- )

மாரி
சிம்ஹங்களும் எதிரிகளான யானைகளின் வாசலில் நின்று பிளிறவும்-
அது செவிப் படாதே தனக்கு ஒரு விரோதி இல்லை என்று
பர்வத குகைகளில் பற்றிக் கிடந்து உறங்கும் காலம்

இனி இவர்களுக்கு ஊராரும் இசைந்து
அவர்கள் ஒரோ இடங்களிலே அடங்கவும் பெற்று
இவர்களுக்கு பலம் கொடுக்கிற கிருஷ்ணனும் நப்பின்னை பிராட்டி கட்டிலிலே உறங்கி
இவர்கள் சென்று எழுப்ப வேண்டும் படியான காலம் இறே

மலை முழஞ்சில்
ஸிம்ஹம் தான் மலைக்கு ஆபரணமாய் இறே இருப்பது –
இவனும் நப்பின்னையினுடைய துங்க ஸ்தன கிரிதடியில் ஸ்தன ஆபரணம் போலே தங்குகிறான் இறே

மாரி மலை முழஞ்சில் –
பெருமாள் மால்யவானிலே எழுந்து அருளி இருந்தாப் போலே
வர்ஷம் பெய்து வழிகள் எல்லாம் தூறு எழுந்து ராஜாக்கள் படை வீட்டிலே இருந்து
வினை யுண்டானாலும் புறப்படாதாப் போலே –
ஸிம்ஹங்கள் கிரி குஹைகளிலே கிடந்தது உறங்கும் காலம் –
விஸ்லேஷித்தார் கூடும் காலம் –
கூடியிருந்தார் சம்போகம் அனுபவிக்கும் காலம் -என்றுமாம் –
நீ எங்கள் வாசலிலே வர ப்ராப்தமாய் இருக்க நாங்கள் உன் வாசலிலே நிற்கும் காலம் -என்றுமாம் –

(கிஷ்கிந்தை -ப்ரஸ்ரவணா கிரி -துங்க பத்ரா நதி கரையில் -ரகுநாத மந்திர் –
சூடாமணி வாங்கிக் கொள்ளும் திருக்கோலம் -ஐந்து மலைகள் -அழகு ததும்பும் )

(ப்ராப்ய த்வரை மிக்கு -ஆகவே பெரியாழ்வாரை ஸ்ரீ ரெங்கம் கூட்டி வரச் சொல்லி
திருக் கல்யாணம் செய்து கொண்டான் அரங்கன்)

மலை முழஞ்சில்
ஸிம்ஹம் தான் மலைக்கு ஆபரணமாய் இறே இருப்பது –
இவனும் நப்பின்னையினுடைய துங்க ஸ்தன கிரிதடியில் ஸ்தன ஆபரணம் போலே தங்குகிறான் இறே

இங்கு
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா -என்று
நப்பின்னைப் பிராட்டிக்கு ஒரு ஆபரணம் என்னலாம் படி இறே
முலையோடே பொருந்திக் கிடக்கிற படி –

—————

மன்னிக் கிடந்து –
மிடுக்காலே ஒருவருக்கும் அஞ்ச வேண்டாமையாலே
குவடு போலே பொருந்தி
வீசுவில் விட்டு எழுப்பினாலும்
எழுப்பப் போகாது இருக்கை –

மன்னிக் கிடந்து -உறங்கும் –
தன் பேடையோடே ஏக வஸ்து என்னலாம்படி
பொருந்திக் கிடக்கிற -என்னவுமாம் –

இங்கு
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா -என்று
நப்பின்னைப் பிராட்டிக்கு ஒரு ஆபரணம் என்னலாம் படி இறே
முலையோடே பொருந்திக் கிடக்கிற படி –

உறங்கும் –
சம்சாரிகள் உறக்கம் போலே
தமோபிபூதியால் அன்றே இவன் உறக்கம் –
வ்யதிரேகத்தில் ஆற்றாதார் வரும் அளவும்
ஆகையால் -அவ் உறக்கத்திற்கு ஸ்மாரகமாய் இருக்கை –

மன்னிக் கிடந்து-
மிடுக்காலே ஒருவர்க்கு அஞ்ச வேண்டாமையாலே
மலைக் குவடு போலே பொருந்தி வீசு வில் இட்டு எழுப்பினாலும் கிளப்பப் போகாத படி
ஒட்டிக் கொண்டு கிடக்கை –
அன்றிக்கே –
தன் பெடையோடே ஏக வஸ்து என்னலாம் படி பொருந்திக் கிடக்கும் என்றுமாம் –

வைத்துக் கிடந்த மலர் மார்பா -என்னும் படி இறே கிடக்கிறது –
அடங்க வஞ்சிறை கோலி என்னுமா போலே

கிடந்து உறங்கும்
ஸ்பர்ச ஸூகம் மயக்கின படி ஒழிய
தமோ குண அபீபூதமாய் உறங்குகிறது அன்றே இவன் உறக்கம்

தன்னால் அல்லது செல்லாதே வியதிரேகத்தில்
ஆற்றாதார் வரும் அளவும் குறு விழி கொள்ளுகை இறே –

மன்னிக்
யாருக்கு அஞ்சுமது-மலைக் குவடு போலே இருக்கை –
தன் பேடையோடே ஏக வஸ்து என்னலாம் படி பொருந்திக் கிடக்கிறது -என்றுமாம்(சதேவ ஏக மேவ அத்விதீயம் -அன்றோ )
இங்கு -நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பன் இறே
ஹார விசேஷம் -(பெரிய பவள மாலை பார்த்தாலே நாச்சியார் திருக்கோலம் -ஹாரம் போல் அரங்கனுக்கு அவளுக்கு )
ஸ்ரீ ஸ்தந ஆபரணம் தேஜ -(பட்டர் )
இது முலை -அது மலை –
ஆஷாடே-(ஆடி மாதத்தில் )

கிடந்து உறங்கும் சீரிய சிங்கம்
ஒருத்தர் முடி சூட்ட வேண்டாதே பிறப்பே ம்ருகேந்த்ரனாகையும்-
நிரங்குச (அடங்குவார் இல்லா)வைபவம் உண்டாகையும்
ச மயா போதித ஸ்ரீ மான் பரந்தப -(கிடந்ததோர் கிடக்கை )
ஷூத்ர மிருகங்கள் மண் உண்ணும்படி இருக்கை
அபித பாவ கோபமம் (ஆரண்ய -99-23 )-அனுகூலரான தம்பிக்கும் அகப்பட அணுக ஒண்ணாத படி இருக்கை

(மந்தாகினி நதிக்கரையில் -சிறு காக்கை முலை தீண்ட –
சயன திருக்கோலம் ஸ்ரீ வில்லிபுத்தூரில் இன்றும் சேவிக்கிறோம் இத்தை நினைவூட்டவே
நெருப்பு போல் -பரதாழ்வானுக்கும் கிட்ட முடியாத படி பெருமாள் இருந்த கோலம் )

(சீரிய சிங்கம் இது சிற்றாயர் சிங்கம் இவன்)

———

சீரிய சிங்கம் –
உறக்கத்திலும் ஷூத்திர மிருகங்கள் மண் உண்ணும்படி
வீர ஸ்ரீ யை உடைத்தாய் இருக்கை –
ஸ்மாரகமாய் இருக்கை –

உறங்கும் சீரிய சிங்கம்
உறங்கா நிற்கச் செய்தே கிட்ட மாட்டாதே
ஷூத்ர மிருகங்கள் கண்ட காட்சியில் மண் உண்ணும் படி வீர ஸ்ரீ யை யுடைத்தான ஸிம்ஹம்

ஸூக ஸூப்தி பண்ணா நிற்கச் செய்தே எதிரிகள் தப்பிக்கும் படி கிடக்கையாலே
உணர்த்திக் கொள்ளும் காலத்திலும் உறக்கமே நன்றாய் இருக்க
ஏன் யுணர்த்தினோம் என்னும் படி
மடி கொடுத்தார் துடிக்கும் படி இறே இவன் உறக்கம் இருப்பது

சீரிய சிங்கம்
ம்ருகேந்த்ரன் என்றும்
மிருக ராஜன் என்றும்
ஒருத்தர் முடி சூட்ட வேண்டாதே பிறப்பே நிரங்குசமான வைபவம் யுண்டாகை

சீரிய சிங்கம்
நர ஸிம்ஹம் போலே கலந்து கட்டியாய் சீர்மை கெட்டு இராதே
சிற்றாயர் சிங்கத்துக்கு(பெரியாழ்வார் – 3-3)
“சிற்றாயர் சிங்கம்” “எசோதை யிளஞ்சிங்கம்” என்றபடி
பூர்ண ஸிம்ஹமாயிருத்தலால், சீரிய என்னு மடைமொழி

சீரிய சிங்கம் என்றதோடு –
அறிவுற்று என்றதோடு –
தீ விழித்து -என்றதோடு –
வாசி அற
இவை எல்லாம் போக்யமாய் இருக்கிறபடி –

உன்னுடைய மேன்மை அந்யாயத்தம் அன்று என்கைக்காகவும்-
ஸ்வா பாவிகமான
ஸுர்யத்துக்கும்
காம்பீர்யத்துக்கும்
ஸிம்ஹத்தை த்ருஷ்டாந்தமாகச் சொன்னோம் அத்தனை அல்லது
ஸிம்ஹம் போலே என்றோமோ என்ன
ஹிரண்ய ராவணாதிகள் முன்னே நிற்குமா போலே நிற்கவோ தேடுகிறது பிரானே

சீரிய சிங்காசனம்
ஓர் அணு சென்று அடியிடிலும்
கிருஷ்ணனோடு ஸாம்யா பத்தியைக் கொடுக்கும் ஆசனம் –

கிடந்தமை கண்டாலும்
நடந்தமை கண்டாலும்
கண்களின் விடாய் கெட்டு குளிராது –
கண்ணிணை குளிர புது மலர் ராகத்தைப் பருக இருந்திடாய்-

சீரிய சிங்காசனத்து இருந்து
நாங்கள் சுற்றும் ஓலக்கம் இருக்க நீ சிம்ஹாசனத்தில் இருந்தால் அன்றோ –
பல்லாயிரம் பெரும் தேவிமாருடனே –எல்லாரும் சூழ
சிங்காசனத்தே இருந்தானைக் கண்டவர்கள் உண்டு என்கிற பிரசித்தி உனக்கு படைத்தாலாவது

————–

அறிவுற்றுத் –
பூ அலர்ந்தாப் போலே காலம் உணர்த்த உணருகை –
சம்சாரிகள் காலம் உணர்த்த உணருவர்கள்
இவன் ஆஸ்ரிதர் ஆர்த்தி உணர்த்த உணரும் –

அறிவுற்றுத்
மேலிட வல்லது ஓன்று இல்லை –
கிட்டி எழுப்புவார் இல்லை –
காலம் உணர்த்த உணரும் அத்தனை இறே –

அறிவுற்று
அறிவு இல்லாத தொரு பதார்த்தத்துக்கு அறிவு புகுந்து நடை யாடினால் போலே இருக்கை –
ஆஸ்ரித அர்த்தமாக உணர்ந்த போது இறே இவன் அறிவுடையவன் ஆவது –
பூ அலர்ந்தால் போலே காலம் உணர்த்த உணர்ந்த படி –

அறிவுற்றுத்
பூ அலர்ந்தால் போலே காலத்திலே உணருகை –
சம்சாரி உறங்கும் போது தமோ அபி பூதனாய் -உணர்ந்தால் பராக் அர்த்த அனுபவமாய் இருக்கும்

இவன் உறக்கம் வ்யதிரேகத்தில் ஆற்றாதார் வருமளவும்(ஜகத் சிந்தனை -யோக நித்திரை -உறங்குவான் போல் யோகு செய்து )

(மன்னிக் கிடந்து உறங்கும் -பிரளயம் -அறிவுற்று -பஹஸ்யாம் சங்கல்பம் -உள் வரி இட்டுக் கொடுத்தல்)

(பவ அடாவி வர்ணம் -சம்சார காடு ஆர்ணவம்
ப்ரத்யக் அர்த்தம் ஜீவ பர அனுபவம் -மற்றவை பராக் அனுபவம்
அறிவை தமோ குணம் மூட -மனஸ் மட்டும் -ஆழ் நிலை உறக்கம் மனஸ்ஸும் வேலை செய்யாதே –
அறிவுறுதல்-ப்ரஹ்ம ஞானம் )

————-

தீ விழித்து-
பிரதம கடாஷ சன்னி பாதத்திலே
பேடைக்கும் அருகு நிற்க ஒண்ணாது இருக்கை –
ஐஸ்வர்யமான தேஜஸ் முன் ஒருவர்க்கும் நிற்க ஒண்ணாது இருக்கை –

தீ விழித்து
நம் எல்லைக்குள் புகுந்தார் ஆர் என்னுமா போலே
பார்க்கும் பார்வையில் உள்ள வெம்மை –
பிரதம கடாக்ஷ சந்நிபாதத்தில்
சர்வ காலமும் அணையும் பேடைக்கும் குட்டிகளுக்கும் அணைய ஒண்ணாது இருக்கை –

பூங்கோதையாள் வெருவ —
வானோர் கலங்கி ஓட (பெரிய திருமொழி -1-7 )-என்னும் படி இறே
கோபித்து விழித்தால் எரி வட்டக் கண்களாலே (நான்முகன் )
ஐஸ்வர்யமான தேஜஸ்ஸூ பிரவஹிக்கும் படி –

இவையா பிலவாய் திறந்து எரி கான்ற
இவையா வெரிவட்டக் கண்கள் -இவையா
வெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கிக் காட்டும் அழகு–(நான்முகன்-21)

ஐந்தலைப் பாம்போடு விளையாடுகிறவனார்
பாண்டவ சாரதி க்ருத்தனானால் பிழைக்கிறவனார் என்று
சிவக்கப் பார்த்தால்
ப்ரஹ்ம ருத்ராதிகளாலும் நோக்க ஒண்ணாத படியாய் இறே இருப்பது

தீ விழித்து
இவனைக் கொண்டு வேறு ஒரு பிரயோஜனம் கொள்ளுமவர்கள் அன்றிக்கே
இவன் இருந்த படியே உத்தேச்யம் என்று இருக்குமவர்கள் ஆகையாலும்
கொண்ட சீற்றம் -என்று
ஆஸ்ரித அர்த்தமான சீற்றைத்தை நிதி யுண்டு என்று நினைத்து இருக்குமவர்கள் ஆகையாலும்
ஏதேனுமாக இவன் செய்கை இவர்களை நைவிக்கையாலும் –

சீரிய சிங்கம் என்றதோடு –
அறிவுற்று என்றதோடு –
தீ விழித்து -என்றதோடு –
வாசி அற
இவை எல்லாம் போக்யமாய் இருக்கிறபடி –

இவையா இவையா என்று
தனித் தனியே ஆகர்ஷகம் இறே

தீ விழித்து
பிரதம அஷி சந்நிபாதத்திலே (முதல் பார்வையிலேயே )பேடைக்கும் அருகே நிற்க ஒண்ணாதது என்கை -(பைங்கண்ணார் ஆளரியாய் வெருவ நோக்கி )

———–

வேரி மயிர் பொங்க –
வேரி -பரிமளம்
ஜாதி உசிதமான கந்தம் -உளை மயிர் பொங்க -சிலும்ப
ஸ்மா ரகமாய் இருக்கை –

வேரி மயிர் பொங்க
பரிமளத்தை யுடைத்தான உளை மயிர்களானவை சிலும்ப

வேரி மயிர்
சிம்மத்துக்கு ஜாதி உசிதமான கந்தம் –
சர்வ கந்த என்கிற விஷயம் ஆகையால்
உபமேயத்தில் உள்ளது எல்லாம் உபமானத்திலே இட்டுச் சொல்லக் கடவது இறே –
தண் துழாய் விரை நாறக் கடவது இறே

வேரி மயிர் பொங்க
உளை மயிர் சிலும்ப -வேரி-ஜாதி உசிதமான கந்தம் –
அவனுக்கு ஆகில் சர்வ கந்த

————

எப்பாடும் பேர்ந்துதறி –
ஒரு கார்யப் பாடு இல்லாமையாலே
நாலுபாடும் போருகிறபடி –

உதறி –
அவயவங்களைத் தனித் தனியே உதறின படி –

வெப்பாடும் பேர்ந்து
அறிவு கலந்து நடையாடச் செய்தேயும்
நித்ர பாரவசயத்தாலே வந்த கலக்கத்தாலே ஒரு கார்யப் பாடு அற நாலு பாடும் பேருகிற படி

உதறி
உறங்கும் போது அவயவங்களை சேர இட்டுக் கிடைக்கையாலே வந்த
திமிர்ப்பு போம்படி அவயவங்களைத் தனித் தனியே உதறி

எப்பாடும் பேர்ந்துதறி
ஒரு கார்யப் பாடு இல்லாமையாலே நாலு பாடும் பேருகிற படி

(ஸ்ருஷ்ட்டி சங்கல்பத்தாலேயே ஆகுமே -காரியப்பாடு இல்லையே
ஆழ்வார் போல்வார் மடல் எடுக்க -கஜேந்திரன் கூப்பிட ஓடுவான்)

உதறி
அவயவங்களைத் தனித் தனியே உதறின படி(சிலிர்த்து -சேதன அர்த்தன ஸ்ருஷ்டிக்கு )

———

மூரி நிமிர்ந்து –
உடல் ஒன்றாக நிமிர்ந்தபடி –

மூரி நிமிர்ந்து
உலாவுகைக்கு சரீரம் விதேயமாகைக்காக அவயவியான உடலை ஒன்றாக நிமிர்த்து

மூரி நிமிர்ந்து
உடம்பு ஒன்றாய் நிமிர்ந்த படி(தண்டாகாரம் கால்களை அகற்றி -பிண்டாகாரம் -முதுகு வயிறு அசைந்து )

———

முழங்கிப் –
ஸ்வ வ்யதிரிக்த மிருகங்கள் முழுக் காயாக அவிந்து கிடக்கும் படி –
பெண்காள் வந்தி கோளோ-வென்கை-

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு போதருமா போலே நீ போதர வேணும்
சிம்ஹமோ நமக்குத் திருஷ்டாந்தம் என்ன

முழங்கி
இதர துஷ்ட மிருகங்கள் கிடந்த இடத்திலே முழுக்காயாக அவிந்து கிடக்கும் படி

முழங்கி
மேகம் போன்ற கிருஷ்ணனுடைய முழக்கம் எதிரிகளை மண் உண்ணும் படி பண்ணி
பெண்கள் வந்து எதிர் கொள்ளக் கடவதாய் இருக்கும் –

புறப்பட்டு-போதருமா போலே
கிரி குஹரத்தில் நின்றும் இப்படிப் பட்டதொரு ஸிம்ஹம் புறப்பட்டு
ஸ்வைர சஞ்சாரம் பண்ணுமா போலே
இங்கனே போர வேணும் என்கிறார்கள்

பெண்காள் -நம்மை ஸிம்ஹம் புறப்படுமா போலே புறப்படவோ சொல்லுகிறது –
ராகவ ஸிம்ஹமாய் புறப்படவோ
நர ஸிம்ஹமாய் புறப்படவோ -என்ன –

உன்னுடைய மேன்மை அந்யாயத்தம் அன்று என்கைக்காகவும்-
ஸ்வா பாவிகமான
ஸுர்யத்துக்கும்
காம்பீர்யத்துக்கும்
ஸிம்ஹத்தை த்ருஷ்டாந்தமாகச் சொன்னோம் அத்தனை அல்லது
ஸிம்ஹம் போலே என்றோமோ என்ன
ஹிரண்ய ராவணாதிகள் முன்னே நிற்குமா போலே நிற்கவோ தேடுகிறது பிரானே

முழங்கிப்
மான் உள்ளிட்ட மிருகங்கள் முழுக் காயாகப் அவிந்து கிடக்கும் படி -முழங்கி

முழங்கிப் புறப்பட்டு-போதருமா போலே
கிரி கஹ்வரத்தில் நின்றும் இப்படிப்பட்ட சிம்மம் புறப்பட்டுப் போமா போலே போர வேணும் -என்ன

பெண்காள் நரஸிம்ஹம் போருமா போலே போர வேணுமோ -என்ன

———

நீ பூவைப் பூ வண்ணா –
காம்பீர்யத்துக்கு திருஷ்டாந்தமாக ஒன்றைச் சொன்னோம் அத்தனை –
வடிவு அழகையும் நிறத்தையும் உன்னைப் போலே பண்ணப் போமோ –
பூவைப் பூவின் நிறம் உனக்கு திருடாந்தமான வன்று இறே
சிம்ஹம் உனக்கு த்ர்ஷ்டாந்தம் ஆவது -என்னவுமாம் –

நீ பூவைப் பூ வண்ணா
உன்னை நீ அறிய வேண்டாவோ –
எதிரிகளான சிசுபாலாதிகள் முன்னே நிற்கிலும் இவ் வழகு குலையாமே நிற்குமவன் அல்லையோ நீ

சிம்ஹத்தால் உன்னுடைய
வடிவு அழகையும்
குளிர்த்தியையும்
ஸுகுமார்யத்தையும் ஏறிட்டுக் கொள்ளப் போமோ

உன் வடிவுக்குப் பூவை பூவை ஓர் ஆகாரத்துக்கு த்ருஷ்டாந்தம் இடுகிற மாத்ரம்
ஸுர்யாதிகளுக்கு ஒரு போலி சொன்னோம் அத்தனை அன்றோ
பிரிந்தார்க்குப் பிழைக்க ஒண்ணாத படி வடிவு படைத்ததோ அது –

பூவைப் பூ வண்ணா
வண்டு அறாப் பூவை தான் கண்ணனார் வடிவுக்கு ஸ்மாரகமாய் இறே இருப்பது -(பெரிய திருவந்தாதி 49)

கொண்டல் தான் மால் வரை தான் மா கடல் தான் கூரிருள் தான்
வண்டு அறாப் பூவை தான் மற்றுத் தான் -கண்ட நாள்
காருருவம் காண்டோறும் நெஞ்சு ஓடும் கண்ணனார்
பேருருவம் என்று எம்மைப் பிரிந்து –49-

வடிவைக் கொண்டாட நின்றி கோள்
உங்களுக்கு அனுபவிக்க ஆசையாகில் உள்ளே புகுருங்கோள் என்றான்

நீ பூவைப் பூ வண்ணா –
காம்பீர்யத்துக்கு ஒன்றைச் சொன்னாமாகில் நீ போருமா போலே போர வேணும் -என்கை
வடிவையும் நிறத்தையும் உன்னைப் போலே பண்ண ஒண்ணுமோ என்கை
இவனை ஸிம்ஹத்தைப் போலே வருகையாகிற இது நாச்சியார் விழி விழிக்கையாய் இருக்கை

(ராஜாதி ராஜன் ஸர்வேஸ்வரேஸ்வரன் நம்பெருமாள் பக்கலில் நாம் இன்றும் பார்க்கிறோம் 
சிம்ம அவலோக நியாயம்
இல் பொருள் உவமை -தேஜஸ்ஸுக்கு ஸிம்ஹம் -மென்மைக்கு பூ –
தேவரீருக்கு உவமை சொல்லப் போகாதே -)

நீ பூவைப் பூ வண்ணா
உன்னை நீ அறிய வேண்டாவோ –
எதிரிகளான சிசுபாலாதிகள் முன்னே நிற்கிலும் இவ் வழகு குலையாமே நிற்குமவன் அல்லையோ நீ

சிம்ஹத்தால் உன்னுடைய
வடிவு அழகையும்
குளிர்த்தியையும்
ஸுகுமார்யத்தையும் ஏறிட்டுக் கொள்ளப் போமோ

உன் வடிவுக்குப் பூவை பூவை ஓர் ஆகாரத்துக்கு த்ருஷ்டாந்தம் இடுகிற மாத்ரம்
ஸுர்யாதிகளுக்கு ஒரு போலி சொன்னோம் அத்தனை அன்றோ
பிரிந்தார்க்குப் பிழைக்க ஒண்ணாத படி வடிவு படைத்ததோ அது –

————

வுன் கோயில் நின்று இங்கனே போந்தருளிக்

பிராட்டி மங்களா சாசனம் பண்ண சுமந்த்ரனோடே-புறப்பட்டாப் போலே காண வேணும் –
போந்தருளி-
சதுர்க்கதி இறே
நடையிலே
ரிஷபத்தின் உடைய வீறும்
மத்த கஜத்தின் உடைய மதிப்பும்
புலியினுடைய சிவிட்கும்
சிம்ஹத்தின் உடைய பராபிபவன சாமர்த்தியமும்-தோற்றி இருக்கை

நமக்கு இவை எல்லாம்
நம்பெருமாள் நடை அழகிலே காணலாம் –

இங்கனே போந்தருளி –
படுக்கையில் வார்த்தையாய்ப் போகாமே
தனி மண்டபத்திலே வார்த்தை யாக வேணும் –

வுன்-கோயில் நின்று இங்கனே
எங்களை உள்ளே அழையாதே நீ தான் உள்ளில் நின்றும் புறப்பட்டாலோ –
படுக்கைத் தலையிலே எடுத்துக் கை நீட்டுவித்துக் கொள்ளும் அளவன்று
எங்களை அழகு ஓலக்கத்தே அடிமை கொண்டு அருள வேணும் –

பூவைப் பூ வண்ணா நின் கோயில் நின்று
இவ் வடிவு அழகை எல்லாம் இட்டளத்தில் வெள்ளம் ஆக்குகிறது என்

உன் கோயில்
நந்தகோபனுடைய கோயில் -என்றார்கள் கீழ் –
இங்கே உன் கோயில் என்கிறார்கள் –
வாச பூமி ஒன்றாய் -அது இருவருக்கும் பொதுவாய்த்து இருப்பது –
இவன் வர்த்திக்கும் கோயிலுக்கு சேஷ சேஷிகளுடைய ப்ராதான்யம் கொள்ளக் கடவது இறே –
பிரணவம் போலவும் –
ஹ்ருதயக் கமலம் போலவும்
திருவரங்கம் நம்மூர் -(திருநெடும் தாண்டகம் )
எம்பெருமான் கோயில் என்றேற்க்கு இது வென்றோ எழில் ஆலி-(திருநெடும் தாண்டகம் )-என்னக் கடவது இறே –

(உபய பிரதானம்
அர்ஜுனன் தேர் தட்டு
ராச மண்டலம்
ஆழ்வார் தேவநாதன் தேவஸ்தானம் போல் )

இங்கனே போந்து அருளி-
பெருமாள் திரு மாளிகையில் நின்றும் ஸூமந்த்ரனைக் கையைப் பிடித்துக் கொண்டு
பிராட்டி பின் தொடரப் புறப்பட்டால் போலே –
ஞாலத்தூடே நடக்க ஒண்ணாது (திருவாய் -6-9-3 )

என்கொல் அம்மான் திருஅருள்கள்?* உலகும் உயிரும் தானேயாய்*
நன்கு என் உடலம் கைவிடான்* ஞாலத்தூடே நடந்து உழக்கி*
தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற* திருமாலிருஞ்சோலை*
நங்கள் குன்றம் கைவிடான்* நண்ணா அசுரர் நலியவே.

இங்கனே –
எங்கள் முன்னே நடக்க வேணும் –
எங்களுக்குத் தனியே சில நிர்பந்தம் உண்டு காண் –
கண் வளர்ந்து அருளின படி கண்டு வாழ்ந்தோம்
இனி நடை அழகு கண்டு வாழ வேணும் –
நடைச் சக்கரவத்து பிடிக்கலாம் படி இறே இந்நாலு அடியும் இருப்பது

கிருஷ்ணனுடைய லளித கதியை அநு கரித்து தரிக்கத் தேடுகிறவர்கள்
தாங்கள் உட்பட
கண்ணுடையார் அடங்கலும் கண்டு வாழுங்கோள் என்னும் படி இறே இருப்பது –

கானகம் படி யுலாவி யுலாவி (பெரிய திருமொழி 3-6)-என்று
கிருஷ்ணன் நடக்கும் போது ஆடல் பாடல் மறக்கக் கடவது இறே (பெரியாழ்வார் 3-3 )
அப்சரஸ்ஸூக்கள் உட்பட ஆடுமது கண்டு
கை தொழ வீதி வருவான் -காலும் நடையும் கண்டு கை எடுப்பார் மடல் எடுப்பார் அவர்கள் இறே பெண்கள் –

போந்தருளி
சதுர்க்கதி இறே –
ரிஷபத்தினுடைய செருக்கும் –
மத்த கஜத்தினுடைய திமிர்ப்பால் வந்த பிசுகுதலும்-
புலியினுடைய சிவிடகுடைமையால் வந்த உறட்டுதலும் –
ஸிம்ஹத்தினுடைய மேனானிப்பால் வந்த பராபிபவனமும் –

(ராகவ ஸிம்ஹம்
யாதவ ஸிம்ஹம்
ரெங்கேந்திர ஸிம்ஹம்
கர்ப்ப க்ருஹம் எழுந்து அருளும் பொழுது நம்பெருமாள் இடம் ஸர்ப்ப கதியும் உண்டே )

ஆயர் பாடி கவர்ந்து உண்ணும் கார் ஏறு –(நாச்சியார் )
வாரணம் -(1-8) பைய நின்று
சிற்றாயர் சிங்கம் (பெரியாழ்வார் 1-3 )-என்கிற கிருஷ்ணனுக்குச் சொல்ல வேணுமோ

புருஷ ரிஷப –
ராம சார்த்தூலம் –
மத்த மாதங்க காமி நம் —
பத்மதள பத்ராக்ஷம் -சிம்ம விக்ராந்தகாமி நம் -என்று சக்கரவர்த்தி பிள்ளை உட்பட விருது பிடியா நிற்க –
(இங்கும் இரண்டும் உண்டே )
இவை எல்லாம் நமக்கு நம் பெருமாள் நடை அழகிலே காணலாம்

போந்து கேட்க்கும் அத்தனை அன்றோ கார்யம் வேண்டுவது என்றான்

வுன் கோயில் நின்று இங்கனே போந்தருளிக்
பிராட்டியோடே இறே கண் வளர்ந்து அருளுவது –
அவள் எங்களைத் தனித் தனியே நோக்கி அருளும்படி
நப்பின்னைப் பிராட்டி திருக் கையை ஊன்றிக் கொடு திருப் பள்ளி அறையில் நின்றும்
பெரிய திரு மண்டபத்து ஏறப் புறப்பட்டு அருள வேணும்

(பெரிய பெருமாளை எழுந்து அருளி சேவை சாதிக்க ஆண்டாள் பிரார்த்திக்க
செய்து காட்டி அவளுக்கு அருளி இருப்பானே
அந்த சேவை ஸ்வாமி கண்டு அனுபவித்து வியாக்யானம் )

பூர்வாம் திஸம் (அயோத்யா 16 )
(இந்திரன் கிழக்கே – யமன் மேற்கே -வருணன் தெற்கே குபேரன் வடக்கே ரக்ஷிக்கட்டும் )
இத்யாதிப் படியே பிராட்டி மங்களா சாசனம் பண்ணப் புறப்பட்டு அருளினால் போலே

பர்வதாதிவ நிஷ்க்ரம்ய ஸிம்ஹோ கிரி குஹாசயா -லஷ்மணம் த்வாரி சோ அபஸ்யத்
ப்ரஹ் வாஞ்ஜலி புடம் ஸ்திதம் -என்னக் கடவது இறே

இங்கனே போந்தருளிக்
கண் வளர்ந்து அருளின அழகு காணப் பெற்றோம்
இனி நடை அழகும் –
இருப்பின் அழகையும் கண்டு வாழ வேணும் என்கிறார்கள்
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ உலகும் தொழ எழுந்து அருளாய் (9-2-3-)-என்கிறார்கள் –
இப்படி இருந்து அருள வேணும்

(கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-)

(புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய்சிவப்ப நீ காண வாராயே–9-2-4-)

(நின்ற வாறு மிருந்தவாறும் கிடந்த வாறும் நினைப்பரியன
ஒன்றலா உருவாய் அருவாயநின் மாயங்கள்
நின்றுநின்று நினைகின்றேன் உனைஎங்ஙனம் நினைகிற்பன்? பாவியேற்கு
ஒன்றுநன் குரையாய் உலகமுண்ட ஒண்சுடரே!-5-10-6)

(நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெஃகணைக் கிடந்தது என் இலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே )

போந்தருளிக்
சதுர்க் கதி (ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் )இறே
கஜ சிம்ஹ கதீ வீரவ்-சார் தூல வ்ருஷ போபமவ் -புண்டரீக விசாலாக்ஷவ் கட்க தூணீ தநுர் தரவ் -இத்யாதிப் படி இறே
நடை அழகில் ருஷபத்தினுடைய செருக்கும் –
மத்த கஜத்தினுடைய திமிர்ப்பும் –
புலியினுடைய உறட்டும்-
சிம்மத்தினுடைய பராபி பாவன சாமர்த்தியமும் தோன்றி இருக்கும்
இது எல்லாம் நம்பெருமாள் நடை அழகிலே காணலாம்(ஸிம்ஹ ரிஷப வியாக்ர கஜ சர்ப்ப ஹம்ஸ கருட மஸ்தக -நடை அழகுகள் )

(மஸ்தக கதி வைகுண்ட ஏகாதசியில் மணல் வெளியில் ஒய் சாவதானம் சொல்லி அனைவருக்கும் சேவை)

(மத்த மாதங்க காமினி ஹம்சா -தாயாருக்கு)

உன் கோயில்
நந்தகோபனுடைய கோயில் -என்றார்கள் கீழ் –
இங்கே உன் கோயில் என்கிறார்கள் –
வாச பூமி ஒன்றாய் -அது இருவருக்கும் பொதுவாய்த்து இருப்பது –
இவன் வர்த்திக்கும் கோயிலுக்கு சேஷ சேஷிகளுடைய ப்ராதான்யம் கொள்ளக் கடவது இறே –
பிரணவம் போலவும் –
ஹ்ருதயக் கமலம் போலவும்
திருவரங்கம் நம்மூர் -(திருநெடும் தாண்டகம் )
எம்பெருமான் கோயில் என்றேற்க்கு இது வென்றோ எழில் ஆலி-(திருநெடும் தாண்டகம் )-என்னக் கடவது இறே –

(உபய பிரதானம்
அர்ஜுனன் தேர் தட்டு
ராச மண்டலம்
ஆழ்வார் தேவநாதன் தேவஸ்தானம் போல் )

போந்தருளி
சதுர்க்கதி இறே –
ரிஷபத்தினுடைய வீறும் செருக்கும் –
மத்த கஜத்தினுடைய திமிர்ப்பால் வந்த பிசுகுதலும்-மதிப்பும்
புலியினுடைய சிவிடகுடைமையால் வந்த உறட்டுதலும் –
ஸிம்ஹத்தினுடைய மேனானிப்பால் வந்த பராபிபவனமும் –

நமக்கு இவை எல்லாம்
நம்பெருமாள் நடை அழகிலே காணலாம் –

ஞாலத்துள்ளே நடந்தும் நின்றும் –
ஈட்டில் வடநாட்டு வித்வானுக்கு -திருக்கைத்தலம் -நடந்து அருளிக் காட்டிய ஐதிக்யம்

ஆயர் பாடி கவர்ந்து உண்ணும் கார் ஏறு –(நாச்சியார் )
வாரணம் -(1-8) பைய நின்று
சிற்றாயர் சிங்கம் (பெரியாழ்வார் 1-3 )-என்கிற கிருஷ்ணனுக்குச் சொல்ல வேணுமோ

புருஷ ரிஷப –
ராம சார்த்தூலம் –
மத்த மாதங்க காமி நம் —
பத்மதள பத்ராக்ஷம் -சிம்ம விக்ராந்தகாமி நம் -என்று சக்கரவர்த்தி பிள்ளை

கண் வளருகிற போதை அழகும் –
உலாவுகிற போதை அழகும் –
கண்டால் -இருக்கும் போதை அழகும் காண வேணும் இறே

இருப்பில் வேண்டற்பாட்டையும் காண வேணும் –
வந்த கார்யத்தை -சிற்றம் சிறு காலைக்கு-வைக்கிறார் –
இப்போது சொல்லாதே -அதுக்கு அடி என் என்னில் –
அவசரத்தில் சொல்ல வேணும் என்று நினைத்து –

———————–

கோப்புடைய –
சராசரங்களை அடைய தொழிலாக வகுப்புண்டிருக்கை –
உபய விபூதியும் தொழிலாக வகுப்புண்டிருக்கை -என்னவுமாம்
தர்ம ஜ்ஞானாதிகளாலும்
அதர்ம அஜ்ஞானாதிகளாலும்
கோப்புடைய சிம்ஹாசனம் -என்றுமாம் –

சீரிய சிங்காசனத்து –
இந்த சிம்ஹாசனத்தில் இருந்து நினைப்பிட்டது என்றால்
அறுதியாய் இருக்கை –
கடல் கரையில் வார்த்தை என்னுமா போலேயும்
தேர்த் தட்டில் வார்த்தை என்னுமா போலேயும்
பெண்களும் கிருஷ்ணனுமாய் இருந்து சொல்லிலும்
அமோகமாய் இருக்கை –

அணுவாகிலும் கிருஷ்ணனோடு ஒத்த வரிசையைக் கொடுக்க வற்றான
சிம்ஹாசனம் என்றுமாம் –

இருந்து –
நடை அழகு போலே
இருப்பில் வேண்டற்ப்பாட்டையும் காண வேணும் -என்கை –

கண்ணினைக் குளிரப் புது மல ராகத்தைப் பருக -இருந்திடாய் -என்னுமா போலே
உன்னைக் காண விடாய்த்த கண்களின் விடாய் கெட்டு அனுபவிக்கலாம் படி இருந்து –

கோப்புடைய சீரிய சிங்காசனத்து இருந்து
படுக்கையில் வார்த்தையாக ஒண்ணாது

கோப்புடைய
உபய விபூதியில் உண்டான சராசர பதார்த்தங்களை அடங்கலும் தொழிலாக வகுப்புண்டு இருக்கை

சீரிய சிங்காசனம்
சீரிய சிங்கத்துக்கு சத்ருசமான ஆசனம்

சீரிய
பெண்களுக்கு பொய் குறிக்கும் கிருஷ்ணனே யாகிலும்
இவ்வாசனத்திலே இருந்தால் பொய் சொல்ல ஒண்ணாதே –
சொன்னது அமோகமாய் இருக்கை –

ஆசனத்துக்கு சீர்மையாவது –
கடல் கரை வெளியிலே வானர சஹாசத்திலே வார்த்தை போலேயும் –
பூசல் களரியிலே தேர்த் தட்டில் வார்த்தை போலேயும்
பெண்கள் திரளில் திவ்ய சிம்ஹாசனத்தில் இருந்து பொய் நம்பியான கிருஷ்ணன் சொன்னதே யாகிலும்
ஆசன விசேஷத்தாலே பழுது போகாத படி யாய் இருக்கும் –

தர்ம ஆசனத்தில் இருந்தால் தோற்றிற்றுச் சொல்ல ஒண்ணாது இறே –
இது தான் தர்மாதி பீடம் இ றே –
ராஜாக்கள் மெய்க்காட்டுக்கு இன்ன மண்டபத்திலே இன்ன ஆசனத்தில் இருந்து நினைப்பிட்டது
என்றால் தப்பாதால் போலே

உன் கோயில் நின்று இத்யாதி
நம்பெருமாள் கோயில் ஆழ்வாரில் நின்றும் புறப்பட்டு அருளி
பெரிய திரு மண்டபத்திலே சேர பாண்டியனிலே (முத்துப் பத்துப்பந்தலின் கீழே )
நாய்ச்சிமாரோடு கூடி இருந்து நினைப்பிட்டது என்றால் தப்பாதால் போலே

சீரிய சிங்காசனம்
ஓர் அணு சென்று அடியிடிலும்
கிருஷ்ணனோடு ஸாம்யா பத்தியைக் கொடுக்கும் ஆசனம் –

இருந்தால் சிங்காசனமாம் -என்கிற
ஆசனத்தில் ஏறல் இறே தங்களுக்கு கணிசம்

கண் வளருகிற போதை அழகும் –
உலாவுகிற போதை அழகும் –
கண்டால் -இருக்கும் போதை அழகும் காண வேணும் இறே

இருந்தமை காட்டினீர் (திருவாய் 6-5-5 )-என்று இறே உத்தேச்யம்

குழையும் வாள் முகத்து ஏழையைத்* தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,*
இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண்பிரான்* இருந்தமை காட்டினீர்,*
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு* அன்று தொட்டும் மையாந்து,* இவள்
நுழையும் சிந்தையள் அன்னைமீர்!* தொழும் அத் திசை உற்று நோக்கியே.

தடம் கொள் தாமரைக் கண் விழித்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ உலகும் தொழ இருந்து அருளாய் திருப் புளிங்குடி கிடந்தானே-

கிடந்தமை கண்டாலும்
நடந்தமை கண்டாலும்
கண்களின் விடாய் கெட்டு குளிராது –
கண்ணிணை குளிர புது மலர் ராகத்தைப் பருக இருந்திடாய்-

சீரிய சிங்காசனத்து இருந்து
நாங்கள் சுற்றும் ஓலக்கம் இருக்க நீ சிம்ஹாசனத்தில் இருந்தால் அன்றோ –
பல்லாயிரம் பெரும் தேவிமாருடனே –எல்லாரும் சூழ
சிங்காசனத்தே இருந்தானைக் கண்டவர்கள் உண்டு என்கிற பிரசித்தி உனக்கு படைத்தாலாவது

இருந்து
காவலும் கட்டுமாய் நில் என்பார் இன்றிக்கே
நினைத்தபடி அனுபவிக்கலாம் படி இருந்த இருப்பு இறே

கோப்புடைய
உபய விபூதியும் தொழிலாக வகுப்புண்டு இருக்கை

சீரிய சிங்காசனத்து இருந்து
ராஜாக்கள் இன்ன மண்டபத்திலே இன்ன ஸிம்ஹாஸனத்திலே இருந்தால் போலே
இங்கு கடற்கரையிலே வார்த்தையும்
திருத் தேர்த் தட்டில் வார்த்தையும் என்னுமா போலே
ஸிம்ஹாஸனத்திலே இருந்து நினைப்பிட்டது என்றால்
பெண்களுக்கு பொய் சொல்லும் கிருஷ்ணனே யாகிலும் அமோகமாய்த் தவிர ஒண்ணாது இருக்கை
தர்மாசனம் போலே தர்மாதி பீடம் இறே

சீரிய சிங்கத்துக்கு தகுதியான ஆசனம்
சீரிய சிங்காசனம் ஓர் அணுவாகிலும் கிருஷ்ணனோடு ஒத்த வரிசையைக் கொடுக்க வற்றான
ஸிம்ஹாஸனம் என்றுமாம்

———-

யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்
அநந்ய பிரயோஜனைகளான நாங்கள்
வந்த கார்யம் ஆராய்ந்து அருள வேணும் –

தண்ட காரன்யத்தில் ரிஷிகளின் உடைய துக்க நிவ்ருத்திக்கு
நாம் முற்பாடராக
பெற்றிலோமே என்று வெறுத்தாப் போலே
பெண்கள் நோவு பட பார்த்து இருந்தோம் ஆகாதே -என்று வெறுத்து –
அவர்களை அழைத்து
உங்களுக்கு செய்ய வேண்டுவது என் -என்ன

இங்கனே சொல்ல ஒண்ணாது
பேர் ஓலக்கமாய் இருந்து கேட்டருள வேணும் -என்கிறார்கள் –

நப்பின்னைப் பிராட்டி பரிகிரமாய் இருக்க-
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம் -என்று
அநந்ய கதிகளாக சொல்லுவதே -என்று பொருது இலள்

அழகர் கிடாம்பி ஆச்சானை அருள் பாடிட்டு
ஓன்று சொல்லிக் காண் என்ன –
நம் இராமானுசனை உடையையாய் இருந்து வைத்து
அகதிம்-என்னப் பெறாய் -என்று அருளிச் செய்தார் –

ஆகையால் இருப்பில் வேண்டற்பாட்டையும் காண வேணும் –
வந்த கார்யத்தை -சிற்றம் சிறு காலைக்கு-வைக்கிறார் –
இப்போது சொல்லாதே -அதுக்கு அடி என் என்னில் –
அவசரத்தில் சொல்ல வேணும் என்று நினைத்து –

அதாவது –
அவர்களோடு ஆர்த்தியையும் காட்டி திருவடிகளிலே சென்று விழ
இரங்குவர் காண் என்று நினைத்து வந்த ஸ்ரீ பரத ஆழ்வானுக்கும்
அவன் நினைத்து வந்ததுக்கு அங்கு அவசரம் இல்லாமையாலே
அனபியவ நீயர் ஆனார்
ஆனால் அவசரத்திலே சொல்லக் கடவோம் என்று இருந்தார்கள் –

ஆராய்ந்து அருள் –
நீங்கள் என் பட்டி கோள்-
என் செய்தி கோள் -என்கை

அதாவது
பெண்களை எழுப்புவது –
வாசல் காப்பானை எழுப்புவது –
ஸ்ரீ நந்த கோபர் உள்ளிட்டாரை எழுப்புவது –
நம்மை எழுப்புவதாய்
போர வ்யசனப்பட்டி கோள் ஆகாதே -என்கை –

எதிர் சூழல் புக்குத் திரியுமவனுக்கு
இவை எல்லாம் தன் குறையாகத் தோற்றும் இறே –

யாம் வந்த
எங்களை அறிவுதி இறே –
நீ வர இருக்குமவர்கள் அன்றோ நாங்கள்

வந்த
விரஹ துர்பல்யத்தாலே கால் நடை தாராத நாங்கள் அன்றோ வந்தோம்

கார்யம்
கார்யம் இன்னது என்னா விடுகிறது -அவசரத்தில் சொல்ல வேணும் என்று நினைத்து –
ஸ்ரீ பரத ஆழ்வான் தம்மோடு ஒத்த ஆர்த்தரானார் எல்லாரையும் திரட்டிக் கொண்டு சென்று
திருவடிகளில் விழ இரங்குவர் என்று வர
அவன் நினைத்து வந்தததுக்கு அவசரம் இல்லாமையால்
அணுக ஒண்ணாத படி இருந்து திருவடி நிலைகளைக் கொடுத்து விடும் ஸ்வ தந்த்ரன் ஆகையால்
இப்போது சொல்லுவோம் அல்லோம் –

இன்னம் இரண்டு அடி புகுர நின்ற வாறே –
உற்றோமே யாவோம் -என்கிறோம் என்று
கார்யம் இன்னது என்னும் இடத்தை
கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-சிற்றம் சிறு காலைக்கு வைக்கிறார்கள்

(சரணாகதி கறவை யிலும்
அதற்குப் பின்பே கார்யம் கைங்கர்ய பிராப்தி )

காரியம்
ஸ்வ ஸ்வரூபா பத்தி அளவும் இறே விதிக்கு விஷயம் உள்ளது –
அவ்வருகு பரிமாற்றத்தால் வருமவை எல்லாம் பிரமாண விஷயமாய்
பேச்சுக்கு நிலமாய் இராதே
அது தானும் காரிய வறுதி பிறந்தால் இறே சொல்லுவது

ஆராய்ந்து அருள்
நாம் போம் இடம் தேடிக் காலம் பார்த்து எதிர் சூழல் புக்கு புருஷகாரமாகப் பற்றி
நாம் படுவது எல்லாம் நீங்கள் படுவதே
நீங்கள் என் செய்திகோள்-
என் பட்டி கோள் -என்று ஆராய வேணும் –

பெண்காள் –
ஒருவரை ஒருவர் எழுப்பி –
எல்லாரும் திரண்டு
நம் வாசல் காக்குமவனை எழுப்பி –
ஐயரை எழுப்பி
ஆய்ச்சியை எழுப்பி
நம்மை எழுப்பி
அண்ணரை எழுப்பி
மீளவும் நம்மை எழுப்பி போர வியசனப் பட்டி கோளே-என்று
திரு உள்ளம் பற்றி கிருபை பண்ணி அருள வேணும் –

(வடநாட்டு ஹிந்துஸ்தான் வித்வான் -வந்து பாடி –
அரையர் சம்பாவனை பிரார்த்திக்க –
திருக் கைத்தலை சேவை மூன்று அர்ச்சகர்கள் சேர்ந்து –
நடந்து சேவை சாதித்து 700 காதம் நடந்த அவனுக்கு ஏழு அடி நடந்த ஐதிக்யம் உண்டே

ஒருநாள் புறப்பாடு காணா விடில் மாய்ந்தே போவார்கள் பூர்வர்கள் – )

யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-
இப்போது சொல்லார் –
சிற்றம் சிறு காலைக்கு -29-வைக்கிறார்கள்

ஆராய்ந்து அருள்
நீங்கள் என்பட்டீர்கள் என் செய்தீர்கள் என்கை –
அதாகிறது
பெண்களை எழுப்புவது –
வாசல் காப்பானை எழுப்புவது –
ஸ்ரீ நந்தகோபர் உள்ளிட்டாரை எழுப்புவது –
நம்மை எழுப்புவதாய்ப்-
போர வ்யஸனப் பட்டு வந்திகோளாகாதே-என்கை –

பிரஜை கிணற்றில் விழுந்தால் தாய் அன்றோ நோக்காதே பரியவிட்டாள் என்பார்கள்
அவன் எதிர் சூழல் புக்குத் திரிந்தால்
இன்று இறே இவன் ஒழிவில் காலம் என்பது –

(இந்த வார்த்தை இவன் வாயில் வாங்க அவன் செய்த க்ருஷி -சம்பந்த நெருக்கம் சொல்லிற்று)

(வடக்கு திசையில் இருந்து வந்த வித்வானுக்கு கைத்தல சேவை -நடந்து காட்டி சம்மணம் செய்து அருளிய விருத்தாந்தம்)

———————————

ஜகத் சிருஷ்டியில் உத்யோகித்து
தன்னோடு அவிபக்த நாம ரூபங்களாய்-ஸ்வா வயங்களான சேதனாசேதனங்களை
விபக்த நாம ரூபங்கள் ஆம்படி பண்ணி
இப்படி ஸ்வா வயவ விசிஷ்டனான தான் தண்டாகாரமாய் நீண்டு பிண்டாகாரமாய் நிமிர்ந்து
மகா சம்ப்ரமத்துடனே மகதாதி ரூபேண பிரகிருதியில் நின்றும் வேறு பட்டு வருமா போலே-

———-

கோயில் திருமலை பெருமாள் கோயில் திருநாராயணபுரம்–நடை –வடை –கொடை –குடை -20 ஜான் குடை -வைர முடி
நடை அழகை பிரார்த்திக்கிறார்கள் இதில் கடாஷம் பெற்றதும்–தென் அத்தியூர் கழல் இணைக் கீழ் பூண்ட அன்பாளன் ராமானுசன் –
தேவ பெருமாள் -2 மாதம் நாலாயிரமும் -சேவை நித்ய அனுசந்தானம்–அருளிச் செயலில் மயக்கி அரங்கன் –
ஆழியான் அத்தி ஊரான் –நாகத்தின் மேல் துயில்வான் -எங்கள் பிரான்–இரண்டையும் பாடி அரையர் –
வேண்டியது எல்லாம் கொடுத்தோம்–நம் இராமானுசனை தந்து அருள வேணும்

ஆழி மழைக்கு அண்ணா ஓன்று நீ கை கரவேல்
பூவை பூ அண்ணா உன் கோயில் இங்கும் –

ஆராய்ச்சி மாலை–சாற்றி அருளுகிறாள்
யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள்
எட்டாம் பாட்டில் ஆராய்ந்து அருள் -தேவாதி தேவனை நான் சென்று சேவித்தால்
அவன் ஆராய்ந்து ஆவா வென்று அருளுவன் என்றது அங்கு
இங்கும் அருள வேணும்
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே -என்றும் –
அம்மா மலர்க்கண் வளர்கின்றானே என் நான் செய்கேன் -என்றும்
அரவணையே ஆயர் ஏறே துயில் எழாயே -என்றும்
திருப்பள்ளி உணர்த்த -புறப்பட்டு அருளும் அழகு -வீற்று இருக்கும் அழகு -பிரார்த்தித்துப் பெற்றார்கள் இதில்

வலிமிக்க சீயம் –
கோயில் நின்று இங்கனே போந்தருளி -ஸ்ரீ பெரும் பூதூரில் இருந்து திருக் காஞ்சி திருமலை திரு அரங்கம் திரு நாராயண புரம் திவ்ய தேசங்கள் தோறும்
சிங்கா சனம்
சீரிய சிங்கா சனம்
கோப்புடைய சீரிய சிங்கா சனம் -பேத அபேத கடக ஸ்ருதிகள் மூன்றும்-
ராமானுஜ சிம்மம்
வலி மிக்க சீயம் -கலி மிக்க செந்நெல் -ஒலி மிக பாடலை உண்டு தன் உள்ளம் தடித்து –
ராமானுச முனி வேழம் -மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதம் விண்டிட –

வேரி மயிர் -காஷாய சோபி சிகாயவேஷம்
எப்பாடும் பேர்ந்து உதறி
ஸ்ரீ ரெங்கம் கரிசைலம் அஞ்சனகிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ
ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமஞ்ச பத்ரி நாராயணம் நைமிசம்
ஸ்ரீ மத் த்வாராபதி ப்ரயாகா மதுரா அயோத்யா கயாபுஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே ராமானுஜோயம் முனிம்-

உன் கோயில் ஸ்ரீ பெரும் புதூர் -காஞ்சிபுரம் திருபுட்குளி விந்த்யாசலம் காஞ்சி திருமலை இங்கனே போந்து அருளி
சிங்காசனம்
சீரிய சிங்காசனம்
கோப்புடைய சீரிய சிங்காசனம்
பேத அபேத கடக சுருதி –
ஒன்றே ஒன்றால் ஒன்றேயாம் -பல வென்று உரைக்கில் பலவேயாம் -அந்தர்யாமித்வம் ஆத்மா சரீர-ஆராய்ந்து அருள் –

—————

23. சீரிய சிங்காசனத்து இருந்து :
நடுவிலாச்சிக் கீத்த படுக்கை அறை வார்த்தை
காடேற வாயித்தால் கண்ணா! — அடிசியோம்
காண நடந்து அரி ஆசனத்தே வீற்றிருந்து
வேணுமவை ஆய்ந்து அருள்.

ஸவ்யம் பாதம் பிரசரித துரித ஹரம் தக்ஷிணம் குஞ்சையித்வா
ஜாநூன் ஆதாய ஸ்வே இதர புஜம் நாக போகே நிதாய
பஸ்சாத் பாகுத்துவயேன பிரதிபட ஸமநே தாரயந் சங்கசக்ரே
தேவி பூஷாது ஜூஷ்டோ விதரது ஜகதாம் சர்ம வைகுண்ட நாத :-என்று பரமபதத்திலான அமருகை காண
அங்குற்றோம் அல்லோம்

வைதேஹி ஸகிதம் ஸுரத்ரு முதலே ஹைமே மஹா மன்டபே
அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி பற்ற
விரைசெறி குழலி ஓங்க வெண்ணையூர் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி.–என்று பட்டாபி ராமனாய் இருந்தமை
அப்போதுற்றோம் அல்லோம்
எனவே இப்போது எமக்காக நாலெட்டு நடை நடந்து வந்து உன் நடை அழகையும்
சீரிய சிங்காசனத்தில் வீற்றிருக்கும் அழகையும்
நம்பெருமாள் நமக்கு திருமாமணி மண்டபத்தில் சேர-பாண்டியன் ஒலகத்தில்
அமர்ந்தமை காட்டி, யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள் என்கிறார்கள்.

—————————

திருவரங்கம் அனுபவம் -ஸூ சகம்-உன் கோயில் நின்று இங்கனே –
கோயில் -திருவரங்கம் -ஞாலத்தூடே நடந்தும் நின்றும்
நடை அழகை நம் பெருமாள் பக்கல் காணலாம்-

ஆழி மழைக்கு அண்ணா ஓன்று நீ கை கரவேல்
பூவை பூ அண்ணா உன் கோயில் இங்கும் –
மலை -பரத்வாஜர் மூன்று வேதம் மூன்று மலை
வலிமிக்க சீயம் –கலி மிக்க செந்நெல் -ஒலி மிக பாடலை உண்டு தன் உள்ளம் தடித்து –

மனைவி இல்லா தூக்கம் தூக்கமே இல்லையே
காண்டீபம் வில் நழுவிற்றே முதலிலே -இப்பொழுது பிடித்தால் ஏதோ நடுவில் நடந்து இருக்க வேண்டுமே –
கண்ணன் கொடுத்த சக்தியால் -will power கொண்டவன்

ராமன் -ஆண் சிங்கம் பெண் சிங்கம் பாதுகா தேவி குட்டி சிங்கம் பரதன் -குகை அயோத்தியை
சீதா தேவியே ஸ்ரீ பாதுகா தேவி -கல் முள் குத்தாமல் நான் அக்ரே போவேன் –
பூமியே பாதுகை கொஞ்சும் -தனு மத்திய இடை சிறுத்து –

ஒன்பது செயல்கள் இதில் -நவ நரஸிம்ஹம் -இதனாலே -அஹோபிலம்

கராலம்ப ஸ்தோத்ரம் ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹர் –
கை கொடுத்து ரக்ஷணம் ஸ்தோத்ரம் -16-கரங்களுடன் தோன்றி

அழகிய சிம்மர் -அழகியான் தானே அரி உருவம் தானே –
சுந்தர ராமன் ஆஞ்சநேயர் இருப்பதால் -பந்தர் ஹிந்தியில் ஆஞ்சநேயர் –
அழகிய சிங்கர் -நரசிம்மருக்கு மட்டுமே -சக்கரையும் பாலும் போலே
சந்தாதா -சேராதவரை சேர்ப்பவன் -சந்திமான் -கூட்டங்களை சேர்த்து விடுபவன்

பூவைப்பூ -காயாம்பூ -december-நிறம் -வாசனை யுடன் இருக்கும் –
சேராதவற்றை சேர்ப்பிக்குமவன் -விருத்த விபூதிமான் –

ஹிரண்ய கசிபு -ஒழித்த பின்பு -நரஸிம்ஹர் தானே உட்க்கார்ந்து பின்பு பிரகலாதனுக்கு பட்டாபிஷேகம் –
ஆகவே ஸிம்ஹாஸனம் பெயர் வந்தது

வேரி மயிர் பொங்க-சர்வ கந்த -சர்வ ரஸ–இவர்களுக்கு அபிமதமான வாசனை –
ஸிம்ஹம் -முழங்கும் -கர்ஜனை சமஸ்க்ருத வார்த்தை -புலி -உறுமும் -யானை -பிளிறும் கழுத்தை கத்தும் -நரி -ஊளை இடும்

ஐஸ்வர்யம் கோயிலிலே காணலாம் ராஜாதி ராஜ ஸர்வேஸ்வரேஸ்வரன் –
ஸுவ்ந்தர்யம் ஸுவ்சீல்யம் திருக் குடந்தையிலே காணலாம் –
இங்கு உள்ள ஸ்ரீ பாதம் தாங்கிகளை கொண்டு சென்றாலும் எங்கும் கிடைக்காதே –
நம்பெருமாள் ஸ்ரீ பாதுகை வேண்டுமே –

மந்த்ராஸனம் இத்யாதி ஆறு ஆசனங்கள் திருவாராதனம் திருப்பாவையில் உண்டே — –
போஜ்யாசானம் கூடாரை -மாலே -அலங்காராசனம்

உறுதியுடன் கிடந்து -பஸ்ஸூக்காக தவம் கிடந்தேன் போலே
கிடந்த கோலம் -சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன்-என்று
ஒரு திருக்கரத்தால் கிரீடம் காட்டி -ஒரு திருக்கரத்தால் திருவடியில் சரண் அடைய உணர்த்தி 
கிடந்ததோர் கிடக்கை கண்டு எங்கனம் மறப்பேன்
கிடந்த நம்பி –ஏரார் கோலம் திகழக் கிடந்து –இவர்கள் அனைவரும் முடிவுடன் உறுதியாக கிடக்கிறார்கள்

கோயில் நின்று இங்கனே போந்தருளி -ஸ்ரீ பெரும் பூதூரில் இருந்து
திருக் காஞ்சி திருமலை திரு அரங்கம் திரு நாராயண புரம் திவ்ய தேசங்கள் தோறும்-
பூவைப் பூ வண்ணா –
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு -பூவைப் பூ வண்ணா

ஸ்ரீ பாஷ்யாதி சிங்கம் போலே முழங்கி
பூவைப்பூ -அருளிச் செயல் ஈடுபாடு
அண்ணா -விழிச் சொல் -அக்கார வடிசில் சமர்ப்பித்து –

ராமானுஜர்-அருள் மழையில் நனைந்தார் -வரதராஜர் பெரும் தேவி தாயார் -சாலைக் கிணறு கைங்கர்யம்

சிங்காசனம்
சீரிய சிங்காசனம்
கோப்புடைய சீரிய சிங்காசனம்
பேத அபேத கடக சுருதி –ஸ்ருதிகள் மூன்றும்-

சீரிய சிங்கம் ராமானுஜர்–அறிவுற்று ஆராய்ந்து -அவதார பிரயோஜனம்
தீ விளித்து -புத்திர் மதி -பிரஞ்ஞா தீமா புத்திமான் -சாஸ்த்ரங்களில் செலுத்தி
வேரி மயிர் -காஷாய சோபி சிகாயவேஷம்
எப்பாடும் பேர்ந்து உதறி
ஸ்ரீ ரெங்கம் கரிசைலம் அஞ்சனகிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ
ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமஞ்ச பத்ரி நாராயணம் நைமிசம்
ஸ்ரீ மத் த்வாராபதி ப்ரயாகா மதுரா அயோத்யா கயாபுஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே ராமானுஜோயம் முனிம்-

உத்தாரக ஆச்சார்யர் -நந்தகோபலன்-ராமானுஜர்-காப்பான் ஒரே கிரியை அங்கு-சம்பந்தம் ஏற்றுக் கொள்பவர் -சம்பந்தம் ஏற்படுத்திக் கொடுக்கும் நம் ஆச்சார்யர் – உன் கோயில் இங்கு -உபகாரக ஆச்சார்யர் – பஞ்ச சம்ஸ்காரம் தீ விழித்து முழங்கி ராமானுஜர் தாஸ்ய நாமம் -அறிவுறுத்தல் ரஹஸ்யத்ரயம் அர்த்தபஞ்சகம் -போதருமா போல் நிற்றல் கிடத்தல் திருவாராதனம் -இருக்கும் நாள் செய்ய வேண்டியவற்றை உபதேசிப்பவர்

—————————————————–

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading