ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் — தூ மணி மாடத்து—

இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம், ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய், மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

—————–

அவதாரிகை-

ஸ்ரீ கிருஷ்ணன் வந்த போது வருகிறான் -என்று-தன் போக்கையே அநாதரித்துக் கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்-அதாவது
ஸ்வரூபத்தை உணர்ந்து வந்து அனுபவிக்கையும் அவன் கார்யம் இறே
தத் தர்சம் -என்று இருப்பாள் ஒருத்தி -என்கை-

(பேறு தப்பாது என்று துணிந்து உறங்கும் கோபிகை இவள்
ததஸ்த ஸத்ருசம் பவத் -என்று இருப்பவள்
ஆகவே தூக்கம் விரித்து பாதி பாசுரம் -இதில்
பேற்றுக்குத் த்வரிக்கும் கோபிகள் வெளியில்
லோக நாத மாதவ பக்த வத்சலன் -அங்கு
மா மாயன் மாதவன் வைகுந்தன் இங்கு
ஸ்ரீ யபதித்தவமே பரத்வத்துக்கும் ஸுலப்யத்துக்கும் நிதானம்
எங்கனம் சொல்லிலும் இன்பம் பயக்குமே -ஆனந்த மயனான ப்ரஹ்மத்தைச் சொல்வதால் )

பஞ்ச லக்ஷம் குடியில் பெண்கள் எல்லாரும் திரண்டு –
உன்னை ஒழிந்தார் அடங்கலும் இங்கனம் வந்து கிடக்க –
கிடந்து உறங்குவதே என்று பழி இட்டு எழுப்புகிறார்கள்

புறம்பு நிற்கிறவர்கள்
இளைய பெருமாளை போலேயும் –
முமுஷுக்களைப் போலேயும்

உள்ளுக் கிடக்கிறவள் –
நித்ய சித்தரைப் போலேயுமாய் –
மைத்துனமை முறைமை யுடையாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –

(ஞானம் இடக்கை வலக்கை அறியாதவர்கள்
கர்மம் -கார்த்திகை கார்த்திகை மற்றும் குளிப்பார்கள்
ஆகவே கர்ம ஞான பக்தி இல்லாதவர்கள்
ஆனால் விசேஷ பகவத் அபிமானம் பெற்றவர்கள் -அனுபவத்துக்கு வேண்டிய ருசி மிக்கவர்கள் –
பெறுவதற்குத் தகுதியை விட அனுபவத்துக்கு அதிகாரம் வேண்டுமே -)

(தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயநாயா

அநந்ய சாத்யே-வேறே ஒன்றால் கிடைக்க மாட்டானே -அவனே அவனைத் தந்து அனுபவிக்கிறான்
துடிப்பு வேண்டுமே அனுபவிக்க
சித்த உபாயத்திலும் கைங்கர்யத்திலும் இரண்டு வகை என்பதை -8-9-10-மூன்றும் ஒரு கோவை
ப்ராப்யத்தில் இரண்டு வகை 8-9-
ப்ராபகத்தில் இரண்டு வகை 9-10-
ஜ்ரும்பணாஸ்ரமம் அடிபட்டு வெளியில் -மோஹனாஸ்ரமத்தில் அடிபட்டு உள்ளே
சோம்பரை யுகத்தி போலும் -வாழும் சாம்பார்
கூட சென்று கைங்கர்யம் செய்ய துடிப்பு இளைய பெருமாளுக்கு
பிரிந்து இருந்தாலும் பெருமாள் திரு உள்ளம் உகப்புக்காக கைங்கர்யம் பரதன்
கோது காலமுடைய பாவாய் இளைய பெருமாளைப் போல் மாமன் மகள் பரதனைப் போல்
துடிப்பு லஷ்மணன் பரதன் இருவருக்கும் உண்டே –
ஸ்வ கத ஸ்வீகாரம் மாமன் மகள்
பர கத ஸ்வீ காரம் நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற பாவாய் -)

ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதச்சன” (தைத்ரீய உபநிஷத் 2:4:1)
தூ மணி -நாம் சரணாகதி செய்து அவன் ஆனந்த மயன் என்று அறிகிறோம்
ஏஷ ஹ்யா -அவனே நம்மைப் பற்றி ஆனந்தம் ஊட்டுவது அடுத்த பாசுரம் –
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று-மூன்று ஸஹஸ்ர நாமங்கள்
லோக நாத மாதவ பக்த வத்ஸல போல் இவையும்
மேன்மை ஸ்ரீ யபதித்தவம் எளிமை
இங்கு எளிமை முதலில் சொல்லி மேன்மை இறுதியில் சொல்லி இவற்றுக்கு நிதானம் ஸ்ரீயப்பதித்வம்
மணியை வானவர் கண்ணனை தன்னதோர் அணியை -இவையும் ஒரு மூன்று உண்டே-

நாங்கள் நவின்றோம் என்றும் நவின்று மாமீர் நீர் இவளை எழுப்பு என்றுமாம்

தஸ்மிந் த்ருஷ்டே பராவரே இரண்டும் உண்டே -அருளிச் செயல்களில் எளிமை ஸ்வா பாவிகம் -பரத்வம் வந்தேறி)

கீழில் பாட்டில் முக்தர் போல் இருப்பாள் ஒருத்தியை எழுப்பிற்று –
இப் பாட்டில் நித்யர் படியையும்
மைத்துனர் முறைமையையும் உடையாள் ஒருத்தியை எழுப்புகிறது
தொடர்ந்து அடிமை செய்யும் இளைய பெருமாளையும்
இட்டிடத்தே கிடக்கும் ஸ்ரீ பரத ஆழ்வானையும் போலே இருவரும்

(புதிதாக வந்தவர்கள் பரபரப்பாக இருப்பார்கள்
அங்கேயே உள்ளார் ஆறி இருப்பார்கள் அன்றோ –
ஆகவே முக்தர் நித்யர் படி என்கிறார்-இருவரும் ப்ராப்யத்தில் அனுபவத்தில் இருவகை தானே )

உபாய அத்யாவச்ய நிஷ்டரான -அதிகாரியை எழுப்புகிறார்கள்

நாலாம் பாட்டில்
ஞான தீப பிரகாசராய் அத்தாலே உத்துங்கமான பதத்தில் இருக்கும்படியான சம்பந்தம் உடையவர்களையும்
அவனுடைய சர்வ நாம சங்கீர்த்தனத்திலே சங்கதரானார் படி சம்பவித்தானாம் பண்ணும் படி சொல்கிறது

சுற்றும் விளக்கு எரிய–
துயில் அணை மேல் கண் வளரும் மாமான் மகளே —
மாமீர் அவளை எழுப்பீரோ —
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று நாமம் பலவும் நவின்று
ஞான தீப ப்ரகாசராய்
அத்தாலே
உத்துங்கமான பதத்திலே இருக்கும்படியான சம்பந்தம் உடையவர்களையும்
அவனுடைய சர்வ நாம சங்கீர்த்தனத்திலே சங்கதரானபடி சம்விதானம் பண்ணும் படி சொல்லுகிறது

மாமான் மகளே-என்கையாலே
ஓளி புதுவை நகர் வாழும் பேர்கள் தாயான ஆண்டாளுக்கு அண்ணரான
ஸ்ரீ மத் ராமாநுஜாயா-என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
இதுவும் ஆழ்வான் அளவும் அனுசந்தேயம் –

தத் தஸ்ய சத்ருசம் பவத் -என்று
பூர்வார்த்த நிஷ்டராய் இருப்பாரை பகவத் ப்ரேம அதிசயத்தாலே
தத் ஏக போகராய் இருக்குமவர்கள் போகார்த்தமாக ப்ரேரிக்கை-
அவர்களுக்கு ஸ்வரூபம் -என்கிறது –

——————–

தூ மணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயில் அணை மேல் கண் வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ வனந்தலோ
ஏமப்பெரும் துயில் மந்தரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்-9-(தூமம் -தூபம் -மெலித்தல் விகாரம் )

வியாக்யானம் –
தூ மணி மாடத்து –
துவளில் மா மணி மாடம் -என்று குற்றம் எடுத்துக் கழிக்க வேண்டாத-
நன்மையை உடைய மணியாலே செய்த மாடம் –
சம்சார கந்தம் உண்டாய் கழிந்த முக்தருக்கும்
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்யருக்கும் உண்டான வாசி-போந்து இருக்கை –

தூ மணி மாடம்
நிர் தோஷங்களான ரத்னங்களாலே செய்த மாடம் —
இவர்கள் விரஹ தாபம் தீர சுபாஸ்ரயமாக அனுசந்திக்கிறார்கள் –

ஆழ்வான் -ஹிதாம்சத்துக்கு ஒரு வைஷ்ணவனுடைய க்ருஹ யாத்திரையை
அனுசந்திக்க அமையும் -என்றால் போலே
இவர்களும் இவளுடைய மாளிகையின் அழகை அனுபவிக்கிறார்கள்

துவளில் மா மணி மாடம் -என்று எடுத்துக் கழிக்க வேண்டாம் —
அது ஜீவாத்மாவினுடைய அபஹத பாப்மாதிகளைப் போலே –
இது பரமாத்வானுடைய அபஹத பாப்மாதிகளைப் போலே –

(அபஹத பாப்மா
விஜர:
விம்ருத்திஹு
விசோ:
விதி விஸ்ச்ச:
அதி பாஸ:
ஸத்யகாம:
ஸத்ய ஸங்கல்ப:)

அங்கு ப்ரத்வம்ஸா பாவம் –
இங்கு ப்ராக பாவம் –

(ப்ராக் அபாவம் -ப்ரத்வம்ச அபாவம் அத்யந்த அபாயம் அந்யோன்ய அபாவம் -நான்கும் உண்டே )

அபஹத பாப்மாத்வாதிகள் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கு உண்டாய் இருக்கச் செய்தே
ஹேய சம்பந்தார்ஹமாய் இறே இவன் வடிவு இருப்பது –
ஹேய பிரதிபடம் ஆகையால் அநர்ஹமாயே இருக்குமவன் –

இவ்வூரில் கழிந்த ரத்தினங்கள் கொண்டு போலே காணும்
திருத் துலை வில்லி மங்கலத்தில் மாளிகைகள் செய்தது –
ராஜாக்கள் அந்தப்புரத்தில் கழித்தவை கொண்டு இறே தங்களுக்கு மாளிகைகள் செய்வது
ஸ்தந் அந்தபுரத்வாரம் –

மாட மாளிகை சூழ் மதுரைப் பதி நாடி –
உகந்து அருளினை நிலம் எல்லாம் ஒரு குடியிருப்பு உண்டு இவளுக்கு –
மாலாகாரர் அகம் தன்னது இறே –
பிரசாத பரமவ் நாத மம கேஹம் உபாகதவ் –

உபய விபூதி உக்தனாகையாலே ஐஸ்வர்யம் விஞ்சி இருக்கும் –
அத்தையும் மேலிடும்படியாய் இருக்கும் தண்ணளி (பிரசாதம்)-
ஆஸ்ரயம் அதுவாகையாலே கழிக்க உண்ணாமல் கிடக்கிறது நாதத்வம்

தூ மணி மாடம்
துவளில் மா மணி மாடம் -(6-5-1)என்று குந்தமுண்டாய் -குற்றமுண்டாய் -எடுத்துக் கழிக்க வெண்டாதே
எல்லா நன்மையுமுடைய மணிகளால் செய்த மாடம்
அது ஜீவாத்மாவினுடைய அபஹத பாப்மத்வாதிகள் போலே –
இது அவனுடைய அபஹத பாப்மாத்வாதிகள் போலே –

திருத் தொலை வில்லி மங்கலத்துக்கு கழித்தவை கொண்டு செய்தது-ரசிகராய் இருப்பார் –
அந்தப்புரத்துக்கு நல்லது இட்டுச் செய்து அங்கு கழிந்தது இறே தந்தாமுக்கு மாளிகை செய்வது
நிர்தோஷமாய் உள்ளது எல்லாம் தெரியும்படி இருக்கிற ரத்னமயமான மாடத்திலே-

அப்ராக்ருதமாய்
பஞ்ச உபநிஷத்மயமான
திவ்ய மங்கள விக்ரஹத்திலே-

திரு நறையூர் மணி மாடக்கோயில் -திரு நாங்கூர் மணி மாட கோயில் -இவற்றை விட ஸ்ரேஷ்டம் இவள் இருக்கும் தூ மணி மாடம்

———

சுற்றும் விளக்கெரியத் –
மாணிக்கத்தின் ஒளியாலே பகல் விளக்கு பட்டிருக்கச் செய்தே-
மங்களார்த்தமாக விளக்கு எரிகிறது –

சுற்றும் விளக்கெரியத் —
கிருஷ்ணன் வந்தால் தன் கையைப் பிடித்து உலாவும் இடம் அடைய-
படுக்கையும் விளக்கும் ஆக்கி வைத்தபடி –
புறம்பு நிற்கிறவர்களுக்கு உள்ளே விளக்கு எரிந்தது தெரிகிறபடி எங்கனே என்னில்-
மாணிக்கக் குப்பி போலே புறம்பே நிற்க
உள்ளுள்ளது எல்லாம் தோற்றா நிற்கும்-

சுற்றும் விளக்கெரியத்
இது ஒரு சம்பத்தே -ஒரு கோடி விளக்கு இறே புறம்பே நின்று புகைகிறது –
புறம்பு நிற்கிற நம்முடைய ஹிருத்யங்கள் இருண்டு கிடக்க
உள்ளுக்கு விளக்கு எரிகிறது வெறுமனே அன்று இறே
கிருஷ்ணன் சன்னிஹிதனாக வேணும் இறே –
திருச் சித்ர கூட பரிசரத்திலே-பிராட்டியைக் கைப் பிடித்துக் கொண்டு
பெருமாள் உலாவினால் போலே
இவள் கையைப் பிடித்துக் கொண்டு கிருஷ்ணன் உலாவும் இடம் இறே –
அவ்வோபாதி இடம் எங்கும் படுக்கைகளும் விளக்குமாய் கிடக்கிற படி

எரிய
ப்ரகாசாவஹம் அன்று -மங்களாவாஹம்-
இவர்கள் புறம்பே நின்று மணிக் கதவம் தாள் திறவாய் -என்கிறவர்கள்
உள்ளே எரிகிற விளக்கு அறிந்த படி என் என்னில் –
மாணிக்கக் குப்பியில் அகவாயில் உள்ளது நிழலிட்டுத் தோற்றுமா போலே
தூ மணி மாடம் ஆகையால் உள்ளே எரிகிற விளக்கு தோற்றும் இறே

சுற்றும் விளக்கெரியத்
மாணிக்கங்கள் ஒளியாலே பகல் விளக்குப் பட்டிருக்கச் செய்தேயும் –
மங்களார்த்தமாக விளக்கு எரிகிறது

புறம்பே நிற்கிறவர்களுக்கு உள்ளுள்ளது எல்லாம் தெரியும்படி எங்கனே என்ன
மாணிக்கக் குப்பி போலே புறம்பே நிற்க உள்ளுள்ளது எல்லாம் தோற்றா நின்றது என்கை

(மாலே மணி வண்ணா -திரு உள்ளத்தில் அபிநிவேசம் நீரோட்டம் போல் தெரியுமே_

சுற்றும்
என்கிறது -இதஸ் தத -கிருஷ்ணன் கையைப் பிடித்துக் கொண்டு உலாவும் இடம் எல்லாம் எரிகை

(தானாக நடந்து போகும் விளக்கு போல் -சேர்த்திக்கு மட்டும் விளக்கு -சர விளக்கு தொங்கும் விளக்குகள் போல் அல்லவே இங்கு)

எரிய
என்கிறது -எங்கள் அகங்கள் இருட்டிக் கிடக்க இங்கு
விளக்கு எரிகிறது வெறுமனே அன்று -என்கை
புறம்புள்ள விளக்குகள் புகையா நிற்க உள்ளுள்ள விளக்கு எரியா நின்றது என்கை –

சர்வதோ முகமாக ஜ்ஞான தீபம் பிரகாசிக்க-

———-

தூபம் கமழத் –
புகை காண ஒண்ணாதே
பரிமளம் வெள்ளமிட-சீருற்ற அகிற்புகை -இத்யாதியில் சொல்லுகிறபடியே-
எங்களுக்கு அசஹ்யமான பரிமளம் உனக்கு சஹ்யமான படி எங்கனே -என்கை-

(தூமம் -தூபம் -மெலித்தல் விகாரம்)

தூபம் கமழத்
பரிமளம் ஸஹித்து இருந்தது வெறுமனே அன்று இறே –
விரஹ தாபம் இல்லாதார்க்கு பரிமளம் பொறுக்கும் ஆகாதே –
சீரூற்ற அகில் புகை(திருவாய் -9-9 ) -என்னும் படி இறே இவர்கள் தசை –

கமழ
கண்ணுக்கு புகை இன்றிக்கே பரிமளமேயாய் இருக்கிறபடி

கமழ -கண் வளரும் –
பரிமளம் சிறிது குறையில் கண் உறங்காது ஆகாதே

தூபம் கமழத்
உணர்ந்த போதைக்குக் கண்ணுக்கு இலக்கு அன்றியே
க்ராண இந்த்ரியத்தாலே அனுபவிக்கும்படி இருக்கிற புகை

கமழ
பரிமளம் ஸஹ்யமான படி எங்கனே தான் இவளுக்கு –
சீருற்ற வகில் புகை -இத்யாதிப்படியே இறே அவர்களுக்குச் செல்லுகிறது

ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் ஆர் உயிரவள் அன்றிக் கூர் தண் வாடை
காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம் கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே
சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு பஞ்சமா அம் தண் பசுஞ்சாந்து அணைந்து
போருற்ற வாடை தண் மல்லிகைப் பூப் புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ–9-9-7-மாலைப்பூசல்

கமழ
புகை யுள்ளிட்டன வன்றிக்கே கந்தமே கமழ –

ஞானம் பரிமளிக்க-ஞானம் பரிமளிக்கையாவது-அனுஷ்டான சேஷமாய் இருக்கை-

——–

துயில் அணை மேல் கண் வளரும் –
கிருஷ்ண விரஹத்தையும் ஆற்றவற்றான படுக்கையிலே-
உறங்குகிற-எங்களுக்கு மென்மலர்ப்பள்ளி-வெம்பள்ளியாய் இருக்க-
உனக்கு படுக்கை பொருந்தி கண் உறங்குவதே !-

துயில் அணை மேல் கண் வளரும்
நம்முடைய நெருப்பு சிலர்க்குப் படுக்கை யாவதே –
மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி -(திருவாய்-9-9-4)
இருவருக்குப் படுத்த படுக்கையில் ஒருத்திக்குப் பொருந்தும் போது அவனும் அங்கே உண்டாக வேணும் இறே

துயில் அணை
படுக்கை தான் விரஹார்த்தரையும் உறக்க வற்றாய் இருக்கை –
நஞ்சரவில் துயில் அமர்ந்த(திருநெடும் -12 )என்னுமா போலே

கண் வளரும் –
இளைய பெருமாளைப் போலே உறங்காமைக்கு நாங்களும்-

அபிமத லாபம் அவனால் செய்யலாகில்-இவள் பதறுகிறது என் என்று இருந்தாள் அவள் –
உபேயம் அவனே யாகில் இவள் கிடந்து உறங்குகிறது என் என்று இருந்தார்கள் இவர்கள் –

கண் வளரும்
உறங்குவார்க்கு பாத சம்வாஹிநிகள் வேண்டாவோ –
உள்ளுக்குப் புக்காலும் இதாகாதே செய்யப் பார்க்கிறது
ஆத்மாவுக்கு ஞானானந்தங்கள் அன்று நிரூபகம் சேஷத்வமே –

கண் வளரும் –
பகவத் விஷயத்தில் அவகாஹித்தால் கௌரவதை தோற்றச் சொல்ல வேணும் இறே
பட்டருக்கு சிலர் -தொண்டனூர் நம்பி திருவடி சார்ந்தார் என்று விண்ணப்பம் செய்ய –
அவர் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமை செய்து போந்த படிக்கு –
திரு நாட்டுக்கு நடந்தார் என்று சொல்ல வேண்டாவோ -என்று அருளிச் செய்தார் –
நம்பி ஏறு திரு உடையார் தாசர் இடையாட்டமாகவும் நஞ்சீயர் இப்படியே அருளிச் செய்தார்-

துயில் அணை மேல்
கிருஷ்ண விரஹத்தையும் மாற்றவற்றான படுக்கையிலே –
கிருஷ்ணன் வரிலும் இடம் பொரும்படியான படுக்கை
மென் மலர்ப் பள்ளி வெம்புள்ளியாய் இறே இவர்களுக்கு இருக்கிறது –
இருவருக்குப் படுத்த படுக்கையிலே ஒருவருக்கு படுக்க -உறங்க -போமோ
ப்ரஹ்மசாரி படுக்கையில் உறங்க மாட்டார்களே

பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4-

கண் வளரும்
இளைய பெருமாளைப் போலே உறங்காமைக்குத் தாங்களும் உறங்குகைக்கும் நீயுமாயிற்றே -என்கிறார்கள்-
ஆர் தொடை குத்த உறங்குகிறது –
அங்குத்தைக்குத் தங்கள் ஒலியல் கொண்டு பரிசர்யை (மேல் உத்தரீயம் விசிறி போல் பரிமாறுதல் )பண்ண ஆசைப்படுகிறார்கள்

கண் வளரும்
இங்கனே யாகாதே ஸ்ரீ வைஷ்ணவர்கள் சொல்லுவது
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்கு – இத்யாதிப்படியே தமப்பனார் பகவத் விஷயத்தில்
சொல்லுவது எல்லாம் ததீய விஷயத்திலே சொல்லுகிறாள்-

தொண்டனூர் நம்பி திருவடிச் சார்ந்தார் என்று பட்டருக்கு விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அவர் அடிமை செய்து போந்த படியாலே
திரு நாட்டுக்கு நடந்தார் (திரு நாட்டை அலங்கரித்தார் )என்னுங்கோள் -என்றால் போலே
நஞ்சீயர் பிள்ளை ஏறு திருவுடையார் தாசரையும் அப்படியே அருளிச் செய்து அருளினார் –

நித்ராப்ரதமான சயனத்திலே கண் வளருகிற
அதாவது
ஸ்வ பிரயத்ன சாமான்ய நிவ்ருத்தி பூர்வகமான பகவத் ஏக உபாய அத்யவச்யத்தாலே நிஷ்டனாய் இருக்கை —

————-

மாமன் மகளே –
ஸ்வாமிநியாயும்-தோழி யாயும்-அனுபவித்தது ஒழிய-
பிரகிருதி சம்பந்தத்தாலும் ஆண்டாள் அனுபவிக்கிறாள் –

மாமன் மகளே -என்று-
இட்டீடு கொள்ளுகைக்கு விட ஒண்ணாத உறவு சொல்லுகிறாள்
திருவாய்ப் பாடியிலே ஒரு பிரகிருதி சம்பந்தம் தனக்கு-உஜ்ஜீவனம் என்று இருக்கிறாள் –
பகவத் சம்பந்தங்களுக்கு எல்லாம் அடிக் கழஞ்சு பெற்று இருக்கிறபடி-

மாமன் மகளே
ஸ்வாமிநியாயும் –
தோழியாயும் -அனுபவித்தது ஒழிய
ப்ரக்ருதி சம்பந்த்தாலும் அனுபவிக்கிறார்கள்

மாமன் மகளே -என்று
இட்டீடு கொள்ளுகைக்கு விட ஒண்ணாத முறை கட்டிக் கொண்டு சொல்கிறார்கள் –
திருவாய்ப்பாடியிலே ஒரு பிரகிருதி சம்பந்தம் தனக்கு உஜ்ஜீவன ஹேதுவாக ஆண்டாள் ஆசைப்பட்ட படி –
பகவத் சம்பந்திகளுக்கு எல்லாம் அடிக் கழஞ்சு பெற்று இருக்கிற படி

(பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பை விட இந்த உறவில் ஆசை கொள்வது
தனக்கு உஜ்ஜீவன ஹேது என்பதாலேயே )

அது தானும் ஹே கிருஷ்ண ஹே யாதவ ஹே ஸகா என்று
பொறுப்பேத்திக் கொள்வதொரு சம்பந்தம் ஆக வேணும் –
(கண்ணன் அர்ஜுனன் விஷயத்தில் கண்டோமே இந்த உறவின் ஏற்றம் )

நீங்கள் ஆர்த்தைகளாய் பதறி வருவுதி கோள் என்னும் இடம் அறிந்து
எந்திரத்தாலே திறக்கலாம் படி பண்ணிக் கொண்டு கிடந்தேன்
திறந்து கொண்டு புகுருங்கோள் என்ன

மாமன் மகளே –
ஸ்வாமினியாயும்
தோழியாயும் அனுபவித்தது ஒழிய
இட்டீடு கொள்ளுகைக்கு விட ஒண்ணாத உறவை சம்பாதிக்கிறான்

பெரியாழ்வார் பெண் பிள்ளை திருவாய்ப்பாடியில் தனக்கு உஜ்ஜீவனமாக
ஒரு பிராகிருத சம்பந்தமும் உண்டாக்கிக் கொள்ளுகிறாள்

மாமான்
வைஷ்ணவர்களோடு எல்லா உறவும் ஸ்லாக்யமாய் இருக்கிறபடி
மாட மாளிகை சூழ் மதுரைப்பதி நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு (4-5)-என்று
ஸ்ரீ மதுரையிலே ஓர் உறவும் ஒரு மாளிகையும் சம்பாதித்தாள் இறே

அங்குத்தைக்கு உறவு ஸ்ரீ மாலா காரர் –
தானும் ஒரு மாலா காரர் மகள் இறே
கிருஷ்ண ராமவ் முத்தா யுக்தவ் மாலா கார க்ருஹம் கதவ்

(ப்ரஸாத பரமவ் நாதவ் மம கேஹவ் உபாகதவ் —
மாலாகார: க்ருபாகார: கோகிலஸ்வரபூஷண: I … மஹாதே’வி வஸேத்தஸ்ய க்ருஹே ஸதா)

மாமன் மகளே
தங்கள் சம்பந்தம் சொல்லாதே தங்கள் ப்ராதான்யத்தைச் சொல்லி இவளைச்  சேவிக்கிறார்கள் –
ஹே கிருஷ்ண ஹே யாதவ ஹே சகேதி-என்னுமா போலே
அர்ஜுனனுக்கு கிருஷ்ணனோட்டை மைத்துனமை போலே இவர்களுக்கு மைத்துனமை

அகப்படச் சொன்னவாறே உணர்ந்து -நீங்களே திறந்து புகுருங்கோள் என்ன
அது மாணிக்கக் கதவு காண் -அப்பியாசம் இல்லாதார்க்குத் தெரியாது காண் -என்று இவர்கள் சொல்ல

மாமன் என்றும் அம்மான் என்றும் இரண்டும் பர்யாயம் ஆகையாலே
ஸ்வாமியான எம்பெருமானாலே புத்ரத்வேன அபிமதராய்-அனந்யார்ஹரான பாகவதரே-

—————

மணிக் கதவம் தாள் திறவாய் –
நீங்களே திறந்து கொண்டு புகுரும் கோள் என்ன –
மாணிக்கங்களின் ஒளியினாலே
தாள் தெரிகிறது இல்லை-நீயே திறவாய் -என்கிறார்கள் –

அவர்கள் அழையா நிற்க நீ பேசாதே கிடக்கிறது என்-என்று தாயார் கேட்க-
புறம்பு நின்றவர்கள் அது கேட்டவாறே-
மாமீர் அவளை எழுப்பீரோ -என்கிறார்கள் –

மணிக் கதவம் தாள் திறவாய்
மணி மாட மாளிகை யாகையாலும் –
மணிக் கதவாகையாலும்-
சுவருக்கும் கதவுக்கு வாசி தெரிகிறது இல்லை –
நீயே திறவாய் என்கிறார்கள்
இவர்கள் தான் திறந்து நின்றாலும் சிலர் புகுர இடவல்லது புகுரார்கள் காணும்

மணிக் கதவம் தாள் திறவாய் –
துரியோதனன் நீருக்கும் ஸ்படிக மண்டபத்துக்கு வாசி அறியாதே தடுமாற
திரௌபதி சிரித்தால் போலே மைத்துனமை கொண்டாடி சிரிக்க ஒண்ணாது –

புறம்பு உள்ளார்க்கு உள்ளுக்கு உள்ளவை பிரகாசிப்பது போலே
உள் உள்ளார்க்கு புறம்புள்ளார் ஆர்த்தி தெரியாமை இல்லை இறே
இவர்கள் ஆர்த்திகளாய் வாசலில் நின்று துவள –
இவள் வாய் பேசாதே கிடந்து உறங்குவதே -என்று ஹிருதயத்தில் இரக்கம் முகத்திலே தோற்றும்படியாய்
நீ ஸ்வ பிரயோஜன பரையாய்க் கிடப்பதே என்று மகளை சொல்ல உபக்ரமித்தமை தோற்ற இருந்தாள் தாயார் –

மணிக் கதவம் -தாள் திறவாய்-
துரியோதனன் நீருக்கும் பளிங்கு மண்டபத்துக்கு வாசி அறியாதே அகப்பட்டால் போலே அகப்பட ஒண்ணாது
எங்களைச் சிரிக்கவோ பார்க்கிறது –
எங்களுக்கு கதவும் சுவரும் தெரிகிறது இல்லை -நீயே திற -என்கிறார்கள்
தேசிகர்க்கு அல்லது தாள் திறக்கத் தெரியாது என்கை –

மணிக் கதவம் தாள் திறவாய்-
மணி மாடத்தினுடைய மணிக் கதைவையும் மணித் தாள் திறவாய் –
அதாவது
த்வத் அனுபவ விரோதியான
தேஹாத்மாக்கள் இரண்டிலும் உண்டான மமகாரத்தைப்
தவிர்ப்பாய் -என்றபடி –

அன்றிக்கே
த்வத் அனுபவ விரோதியான
பகவத் சௌந்தர்யத்திலும்
பகவத் பக்தியிலும்
மம காரத்தைத் தவிர்ப்பியாய் என்கிறார்கள் —

————

மாமீர் –
அவளுடைய திருத்தாயார் என்று-அவள் உறவாலே சொல்லுகிறார்கள் –

மாமீர்-
என்கிறார்கள் –
அவள் திருத் தாயார் என்று சம்பந்தி சம்பந்திகளும் இவர்களுக்கு உத்தேச்யராய் இருக்கிற படி –
உள்ளுக் கிடக்கிறவள் உகப்பு தாயார் அளவும் சென்றபடி —

அடிகளையே நினையும் அடியவர்கள் தம் அடியான்(பெரிய திருமொழி ) -என்றும்
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன்(திருவாய்) என்றும் –
சொன்னபடியே
அன்னையும் அத்தனும்-(பெரிய திருமொழி -3-7 -கள்வன் கொல் )என்று இறே இவள் இருப்பது –

அவளை எழுப்பீரோ
எங்கள் ஆர்த்திக்கு உணராதவன்
உம்முடைய இரப்புக்கோ உணரப் புகுகிறது –
இவ்வளவிலும் உணரக் காணாமையாலே -சிவிட்கிட்டு

உன் மகள் தான்
என்கிறார்கள் –
பிராட்டி பிரணய கோபம் சக்கரவர்த்தி அளவும் மேலிட்டு பிது நிவேசம் என்றால் போலே
அவள் பக்கல் சீற்றம் இவ்வளவும் வர அசலிட்டு-
உன் மகள் -என்கிறார்கள் –

(பிது நிவேசம் -அப்பா ஆணை நிறைவேற்றி திரும்பி அப்பா போல் அழகிய பெண்களை மணம் புரிந்து வாழட்டும் –
என்று ப்ரணய கோபத்தால் திருவடி இடம் – மாமனார் என்று சொல்லாமல் -பிரித்து அருளிச் செய்தது போல் )

இப்படிச் சொல்லவும் இவள் பேசாதே கிடந்தவாறே
இவள் திருத் தாயார் இக்காலத்தில் (சிற்றம் சிறு காலை )வந்த பெண் பிள்ளைகளுக்கு
இவள் வாய் திறவாதே கிடப்பதே என்று நொந்தமை தோற்ற
அவள் உணர்ந்தமையை அறிந்த பெண் பிள்ளைகள்
மாமீர் அவளை எழுப்பீரோ
என்கிறார்கள் –

அடியார் தம் அடியார்
தொண்டர் தொண்டர் -என்று ஆழ்வாருடைய பாகவத சேஷத்வத்தில் எல்லை போலே
இவர்களும்-
ஒரு மாதுலனும் ஒரு மாமியாரும் -என்று –
சிற்றம் சிறு காலை  சம்பந்த சம்பந்தம் – சொல்லுகிறார்கள் –
அவள் தம் படி -அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்று இலள்-என்று பொகட்டுப் போவள் –

(அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள்
பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணினளால்
மின்னியும் வஞ்சியையும் வென்றிலங்கும் இடையாள் நடந்து
புன்னையும் அன்னமும் சூழ் புனலாலி புகுவர் கொலோ ?–3-7-7-)

(பிள்ளையைக் கை தொழும் -அடியேனாய் இருக்கும் என்னை )தாய் என்று பழியிட்டு போக வேணுமோ
அடியேனாய் இருக்கிற என்னை என்னும் திருமங்கை ஆழ்வாரை வெட்டிமையர் என்றும்
எம்பெருமானாரை கோயில் அண்ணன் என்றும் ஆண்டாள் அருளிச் செய்யும்(கூரத்தாழ்வான் தர்மபத்னி இவ்வாறே எம்பெருமானைக் கூப்பிட )
அத்தை எம்பெருமானார் கேட்டருளி நான் அடியேன் அல்லேனோ –
என்னை இப்படி அருளிச் செய்வதே -என்றால் போலே இத்திருவாய்ப்பாடியும்

(அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால் வாழ்கின்ற அடியேனை அண்ணன் என்று உறவு கொண்டாடி தள்ளி வைப்பதே-நான் அடியேன் அல்லேனோ -என்னை இப்படி அருளிச் செய்வதே என்றால் போலே)

அவளை எழுப்பீரோ
இவர்கள் தன் வாசலிலே நின்று அழைத்து நோவுபட இவள் பேசாதே கிடப்பதே என்று இவள்
நெஞ்சில் கிடக்கிறது முகத்திலே தோற்றின படியைக் கண்டு
நீராகிலும் அவளை எழுப்பீரோ என்கிறார்கள் –

அவளை இவர்களுக்குத் தோற்றமோ என்னில் மாளிகையிலே தெளிவாலே தோற்றும்
தாயார் தான் எழுப்பினாலோ என்னில் பாவஞ்ஜை யாகையாலே எழுப்பாள் –
இவர்கள் ஆற்றாமைக்கு உணராத இவள் இவளுடைய ஆந்ரு சம்ஸ்யத்துக்கு உணருமோ
ஆர்த்த த்வனி கேளாதவள் மத்யஸ்தர் வார்த்தையோ கேட்கப் புகுகிறாள் -என்னவுமாம் –
பின்னையும் உணரக் காணாமையாலே
ஆகையால் சிவிட்கென்று

இவர்கள் இப்படி சொன்ன இடத்திலும் இவ் வதிகாரி பேசாதே கிடைக்கையாலே
இவ்வதிகாரிக்கு ஜனகையாய் இருக்கிற
அநந்ய உபாயத்வ ஞானம் ஆகிற -திருத் தாயார் –
அவர்கள் இப்படி அழைக்க நீ பேசாதே கிடப்பதே -என்ன —

——

பின்னையும் உணரக் காணாமையாலே –
சிவிட்கென்று –
உன் மகள் தான் ஊமையோ என்கிறார்கள்-
வ்யவஹார யோக்யை அன்றோ -என்கிறார்கள்

ஊமையோ
வாக்ய வ்யவஹார யோக்யதை இல்லையோ –
ஆர்த்தரை ஐயோ -என்ன ஒண்ணாத படியோ செல்லுகிறது

உன் மகள் தான்-ஊமையோ –
என்கிறார்கள் -வ்யவஹார யோக்யை அன்றோ என்றபடி

மறுமாற்றம் சொல்ல வல்லள் அல்லளோ-என்றபடி –
இவளைப்பேச ஒட்டாதே வாயை மூடினார் உண்டோ -என்று பாவார்த்தம் –

————-

அன்றிச் செவிடோ-
ஊமைக்கும் கேட்டு வந்து திறக்கலாம்-
அதுக்கு மேலே செவியில் துளை இல்லையோ –
எங்கள் வார்த்தையை கேளாதபடி அந்ய பரையோ –

அன்றிச் செவிடோ
ஊமைக்கும் கேட்டு வந்து திறக்கலாம் –
அதுக்கு மேலே செவியில் துளை இல்லையோ
ஆர்த்தைகளான எங்களுடைய சொல் கேளாத படி அந்நிய பரையோ-
அதுக்கும் அங்கேயோ விஷயம் –

(காதுக்கும் வாயுக்கும் -ராமன் பின்னே போனதே சக்ரவர்த்தி கண்கள் அதே போல் )

நாங்கள் சொன்ன வார்த்தை கேளாதபடி அந்நிய பரையானாளோ

ஊமையான மாதரம் அன்றிக்கே நம் வார்த்தை கேளாதபடி செவிடோ –
நம் பேச்சு கேளாதபடி அங்கே ஆரவாரம் உண்டோ என்று பாவார்த்தம் –

“ஊமையோ? செவிடோ? என்ற வினாக்களுக்கு உட்கருத்து :-
ஆர்த்தர் விஷயத்தில் இரக்கமுற்று ‘ஐயோ !’ என்றொரு வாய்ச் சொல் சொல்வதற்கும்
அவகாசமில்லையோ உன் மகளுக்கு?
ஆர்த்தரான எங்களுடைய கூக்குரல் செவிப்பட வொண்ணாதபடி உன் மகள் உள்ளே செய்யுங் காரியம் என்னோ?

———-

வனந்தலோ-
நெடும் காலம் கிருஷ்ண அனுபவம் பண்ணி-
படுக்கையில் சாய்ந்தது இப்போதோ –

வனந்தலோ
கிருஷ்ணனுக்கு நெடும் போது ஆடல் கொடுத்து படுக்கையிலே சாய்ந்தது இப்போதோ –
நெஞ்சுக்கும் விஷயம் அங்கேயோ –

இரவு எல்லாம் கிருஷ்ணனுக்கு ஆடல் கொடுத்து இப்போதோ உறங்குகிறது

வனந்தலோ-
சோம்பலோ -என்றபடி –
நெடும் போது நாயகனோடு கூடி இருந்து படுக்கையிலே சாய்ந்தது இப்போதோ -என்று பாவார்த்தம்

தனித் தனியே வாக்யாதி இந்திரியங்கள்
பகவத் விஷயத்தில் ப்ரவணங்கள் ஆகையாலே
ஒரு கார்யத்திலும் சக்தி அல்லள் -என்றுமாம் –

கண்ண பிரானோடு நெடும் போதாக் கூடிக் களித்துப் படுக்கையில் இப்போது தான் சாய்ந்தனளோ?

———-

ஏமப் பெரும் துயில் மந்தரப் பட்டாளோ –
ஏமம் -என்பது காவல் –
எழுந்தி ராமைக்கு காவலிட்டார் உண்டோ –
நெடும் காலம் உறங்கும்படி மந்த்ரவாதம் பண்ணினார் உண்டோ –
மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ –என்று-
அம்மான்பொடி தூவினார் உண்டோ -என்கை-

ஏமப் பெரும் துயில் மந்தரப் பட்டாளோ
எங்களை உறங்காத படி பண்ணினால் போலே இவளையும் உணராத படி காவல் இட்டார் உண்டோ —
நாங்கள் புக்கு உணர்த்த ஒட்டாத வேளையிலே நெடும் போது உறங்கும் படி மந்த்ர பத்தை யானாளோ-
உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ(2-4) என்று
அவனுடைய அம்மான் பொடி பிரசித்தம் இறே –

ஆர்த்த நாதம் கேளாதபடி காவலிட்டுக் கொண்டு -உணராதபடி உறங்குகைக்கு யாரேனும் சவித்தார் உண்டோ
மந்த்ரம் இவளுக்கு பிரசித்தம் இறே
உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ-என்று மாயப் பொடி தூவினார் உண்டோ -என்கை

ஏமப் பெரும் துயில் மந்தரப் பட்டாளோ-
காவல் இடப் பட்டாளோ –
மகா நித்தரை உண்டாம்படி மந்திர வாதம் பண்ணப் பட்டாளோ –
ஸ்வ பிரவ்ருத்தி சாமான்யமும் உபாய விரோதி யாகையாலே
இதில் அந்வயியாதபடி
தடுத்து வைத்தார்கள் உண்டோ –
அதாவது -மனஸ் தடுத்தோ -என்றபடி –
உபாய வைலஷண்யம் பிரவ்ருத்யந்தரத்தில்
அந்வயியாதபடி மோஹிப்பித்ததோ -என்றபடி –

“பெய்யுமாமுகில் போல்வண்ணா! உன்றன் பேச்சுஞ் செய்கையும், எங்களை மையலேற்றி மயக்க
உன் முகம் மாய மந்திரந்தான் கொலோ?” என்ற நாச்சியார் திருமொழியை இங்கு அநுஸந்திக்க.

ஏமம் – இரா, இன்பம், உன்மத்தம், கலக்கம், களிப்பு, காவல், சேமம், திரைச்சீலை, புதையல், பொன், மயக்கம், விபூதி.

ஏமம் சிறை -இரவு -அதிரடி இன்பம் பைத்தியம் கலக்கம் மயக்கம் –
பெரும் துயில் -ஒரே வார்த்தையில் பல கேள்வி
விஞ்சை வினை செய்தான் -மந்த்ரம் போட்டு அரக்கிகளைத் தூங்க வைத்த -கம்பர் -இப்பாசுரமே பிரமாணம்

——–

அவள் உணரும்படி திருநாமங்களைச் சொல்லுங்கோள் -என்று -திருத் தாயார் சொல்ல
நாங்கள் சொன்ன திரு நாமங்கள் அநேகம் அன்றோ -என்கிறார்கள் –
அவை தான் எவை என்ன -சொல்லுகிறார்கள் –

நீங்கள் இவள் பிரகிருதி அறிந்தால் இங்கண் அல்ல காணும் கோள் உணர்த்துவது
தென்றலும் சிறு துளியும் போலே இவளுக்கு திரு நாமங்கள் சொல்லி கோள் -என்று
திருத் தாயார் சொல்ல

(தீர்ப்பாரை -வண் துவாரபதி மன்னனை ஏத்துமின் –
ஏத்தாமலே எழுந்தாள் அன்றோ -அந்த சப்தம் காதில் விழுந்ததும் )

பல் பன்னிரண்டும் காட்டினோம் காண் என்கிறார்கள் –
நீங்கள் சொன்ன திரு நாமங்கள் எவை என்ன –

திருத் தாயார் நீங்கள் இவளை எழுப்பும்படி அறிந்திலிகோள் -திரு நாமத்தை சொல்லுங்கோள் உணரும்படி என்ன

(வண் துவாரபதி மன்னனை ஏத்துமின் ஏத்தலும் தொழுது ஆடுமே போலேயும்
முளைக் கதிரை -கிளி பாட உணர்ந்தால் போலேயும்)

நாங்கள் சொல்லாத ஸ்ரீ சஹஸ்ர நாமம் உண்டோ என்கிறார்கள்

———-

மா மாயன் –
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களாலே-அபலைகளான பெண்களை எழுதிக் கொண்டவன் –

மா மாயன்
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களாலே அபலைகளான பெண்களை எழுதிக் கொண்டு
அவர்களுக்கு இஷ்ட விநியோக அர்ஹமாம் படி பவ்யனாய் இருக்குமவன்-

பெண்களுக்கு காணாச் சிறையாய்க் கிடக்குமவன்

———–

மாதவன் –
அதுக்கடியான ஸ்ரீ ய பதி-
அந்த சௌலப்யத்துக்கு குருகுல வாஸம் பண்ணின இடம்

மாதவன்
அந்த ஸுலப்யத்துக்கு குருகுல வசம் பண்ணின இடம்

(சுவையன் திருவின் மணாளன் –
அவள் இடம் கற்ற சுவை ராஸிக்யம் -குருகுல வாஸம் )

அதுக்கு குருகுல வாசம் பண்ணினவிடம் -லஷ்மீ பதி

(இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-குருகுல வாசம் பண்ணினவிடம் -லஷ்மீ பதி)

———–

வைகுந்தன் –
ஸ்ரீ ய பதித்வத்தால் வந்த மேன்மைக்கு தகுதியான-தேச விசேஷத்தை உடையவன்
அப் பெரிய மேன்மையை உடைய ஸ்ரீ ய பதியானவன் கிடீர்-பெண்களுக்கு எளியனானவன் -என்கை

வைகுந்தன்
பெண்களையே அன்றிக்கே ஆண்களையும் அடிமை கொண்டு ஒரு நாட்டுக்காக கையாளாய் இருக்குமவன்
ஸ்ரீ யபதித்தவத்தால் வந்த மேன்மைக்குத் தகுதியான தேச விசேஷத்தை உடையவன் –

ஸ்ரீ வைகுண்டத்தை கலவிருக்கையாக உடையவனாய் –
பெரிய பிராட்டியாருக்கு வல்லபனாய் இருந்து வைத்து

பெண்களோடு ஓக்க ஆண்களை அடிமை கொள்ளுமவன்-
அப் பெரிய மேன்மை யுடையனாய்
ஸ்ரீ யபதியாய் இருக்குமவன் கிடீர் பெண்களுக்கு எளியனாய் இருக்கிறான்

—–

மேன்மைக்கு அடியான திரு நாமங்களும்-
நீர்மைக்கு அடியான திரு நாமங்களும்
இரண்டுக்கும் நிதானமான ஸ்ரீ ய பதித்வத்துக்கு வாசகமான-திரு நாமங்களுமாக
ஒரு ஸ்ரீ சஹஸ்ர நாமத்துக்கு போரும் திருநாமங்களை சொல்லிற்று -என்கிறார்கள்

நாமம் பல நவின்று –மாமீர் அவளை எழுப்பீரோ-என்று அந்வயம் ஆகவுமாம் –

ரெம்பாவாய்-

என்றென்று
மேன்மைக்கும்
நீர்மைக்கும் –
இரண்டுக்கும் நிதானமான ஸ்ரீ யபதித்வத்துக்கும் வாசகங்களான
திருநாமங்களை ஒருக்கால் இருக்காலோ சொல்லிற்று

நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்-
சஹஸ்ர நாமம் உட்படச் சொன்னோம் –

நாமம் பலவும் நவின்று மாமீர் அவளை எழுப்பீரோ என்றுமாம் –

என்றென்று-நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்–
மேன்மைக்கும்
நீர்மைக்கும்
ஸ்ரீ யபதித்வத்துக்கும் ஏகாந்தமான திரு நாமங்களை அநேகம் சொன்னோம் -என்கிறார்கள்

எழுந்திராதாரை எங்களால் செய்யலாவது உண்டோ என்கிறார்கள்
உணராதாரை நீரைச் சொரிந்து உணர்த்துங்கோள் என்னுமா போலே

நாமம் பலவும் நவின்று மாமீர் அவளை எழுப்பீரோ -என்று கிரியை யாகவுமாம் –

மாமாயன் மாதவன் வைகுந்தன்
மாமாயன் –
அத்யந்த சுலபன்
மாதவன்
இதுக்கு குருகுல வாஸம் பண்ணின இடம்
வைகுந்தன்
இந்த சௌலப்யம் குணமாகைக்கு ஈடான பரத்வம் உடையவன் –

என்றென்று நாமம் பலவும் நவின்று-மாமீர் அவளை எழுப்பீரோ –
ஸ்வார்த்த பிரவ்ருத்தி சாமான்யமும் உபாய விரோதி –
பரார்த்த பிரவ்ருத்தி சாமான்யமும் உபாய பலமாயும்
உபாய அனுகூலமாயும் இருக்கும் என்று அறிவித்து

அவளை –
உபாய அத்யாவசாய நிஷ்டரை -எழுப்பீரோ -என்று அந்வயம்-

மஹா மாயன் -172-
மாதவன் -73
வைகுண்ட 406

சரக ஸம்ஹிதை -ஆயுர்வேதம் மஹிமை கூடுவது -ஸஹஸ்ரநாமம் சொல்ல உடலுக்கும் ஆத்மாவுக்கும் உள்ள வியாதிகள் போகும் -முதல் ஆறு அடிகளில் திருநாமம் இல்லை -கண்ணாடி மாளிகைக்குள் ஒலி போகாதே -அடுத்த அடியிலே பகவத் திருநாமம் சொல்ல உள்ளே புகுந்து எழுப்பிற்றே –

கீழ்ப் பாசுரத்தில் நாராயணன் மூர்த்தி கேசவன்-(நாராயணனின் அவதாரமான கேசவன் )–அடுத்து -அவனே மாவாய் பிளந்தான் மல்லரை மாட்டிய தேவாதி தேவன் இங்கு அவனே மாமாயன் மாதவன் வைகுந்தன்

——————-

பாகவத ஸம்பந்தம் ஸ்வதந்திரோபாயம்:
இருகால் விலங்கு இறகுடை பட்சி
ஒருகால் திருமால் அடியார் — அருள் நோக்
கிலக்கதேல் ஞான மநுட்டான மில்லா
நிலையரேனும் சேரும்மால் வீடு.

மாமான் மகளே :உனக்கே நாம் ஆட்செய்வோம் என்று தொடங்கி
உனக்கும் உனதடிய ராவார் — தமக்குமாய்பின்
மாலே! உனதடியார் பாலேயாய் கோலுமது
ஏலுவதும் என் கொல் குறிப்பு?

ஆசார்ய ருசி பரிகிருஹீத பகவத் சேஷத்வத்திலே இழிந்தவாரே பகவத் பாகவத கைங்கர்யமாகிற
ஈர் அரசு படுதல் தேட்டமேலும் அதுக்கு எல்லை நிலமான ததீயத்வேக சேஷனாகை எம் பிரார்க்கு இனியவாறே.

————————-

(ஸ்வாபதேசம்).

நாலாம் பாட்டில் –
இவர்களுக்கு அநந்தரத்திலானவரை-திரு மழிசை ஆழ்வாரை
மாமன் மகளே -என்கிறது -அது எங்கனே என்னில் –

தாத்ரா துலிதா லகுர் மஹீ -என்றும் –
உலகு தன்னை வைத்து எடுத்த பக்கத்தும் மா நீர் மழிசையே வைத்து எடுத்த பக்கம் வலிது-என்னும்படி
மஹீ சார க்ஷேத்ரமான திரு மழிசையில் –

பார்க்கவோ தீர்க்க சத்ரேண வா ஸூ தேவம் ஸநாதனம் அபி பூஜ்ய யதா நியாயம் –என்கிறபடியே
ஸ்ரீ ஜெகந்நாதனை உத்தேசித்து யஜித்துக் கொண்டு இருக்கிற காலத்தில் –
பார்க்கவனுடைய பத்னி கர்ப்பிணியாய்
திரு மழிசைப் பிரானை திரு வயிறு வாய்த்ததாலே –
பார்க்க விலோக ஜநநீ-என்னும்படியான பிராட்டியோடே உடன் பிறந்த பார்க்க புத்திரர் ஆகையாலும்

காட்டில் வேங்கடம் இத்யாதி கூடுமாகில் நீ கூடிடு கூடிலே-என்கிறபடியே –
அழைப்பன் திரு வேங்கடத்தானைக் காண இழைப்பன்
திருக் கூடல் கூட -என்று ஸ்த்ரீத்வ பாவனையாகப் பேசுகையாலும் –

தூ மணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய-என்கிற ஞான தீப பிரகாசத்தை –
என் மதிக்கு விண் எல்லாம் உண்டோ விலை-என்றும்
ஞானமாகி நாயிறாகி-என்று பேசுகையாலும் —

ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் -என்றும்
அடிச்சகடம் சாடி இத்யாதி வடிப்ப வளவாய்ப் பின்னை தோளிக்காய் வல் ஏற்று எருத்து இறுத்து -என்றும் –
ஆயனாகி ஆயர் மங்கை வேயர் தோள் விரும்பினாய் -என்றும்
பின்னை கேள்வ நின்னோடும் பூட்டி வைத்த வென்னை நின்னுள் நீக்கேல் என்றும்
ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்களையும் நப்பின்னை பிராட்டி புருஷகார வைபவத்தையும் சொல்லி

இதில் மா மாயன் மாதவன் வைகுந்தன் -என்றதை –
மாதவனை -என்றும் -வைகுந்தச் செல்வனார் என்றும் -பேசுகையாலே –

மாமன் மகளே என்கிறது திரு மழிசை பிரானை -என்றபடி –

பார்க்கவனும் பார்க்கவியும் பிருகுவுக்கு கியாதீயின் இடத்திலே ஸஹோதரராக சம்பவிக்கையாலும் –
லோக மாதாவுடன் பிறந்தவன் லோகத்துக்கு மாமனாக தட்டில்லை இறே-
அந்த பார்க்கவ புத்ரன் ஆகையால் இவரை மாமன் மகள் என்னைக் குறை இல்லை –

அன்றிக்கே
யசோதைப் பிராட்டிக்கு பின் பிறந்த ஸ்ரீ கும்பர் குமாரத்தியான நப்பின்னை பிராட்டி தரத்தை யுடையார்
ஒருவர் ஆகையால் மாமன் மகள் என்று சொல்லுகிறது ஆகவுமாம்

———————

நம்மாழ்வாருக்கு அடுத்த முந்தினவரான திருமழிசைப் பிரானை யுணர்த்தும் பாசுரமிது.
இதில் மாமான் மகளே! என்ற விளி ஒருவகையான தேஹ ஸம்பந்த்தில் நோக்குடையது.
ஆண்டாளுக்கும் திருமழிசை யாழ்வார்க்கும் ஒரு வகையான தேஹ ஸம்பந்தமுண்டு :
அதாவது – ஸ்ரீதேசிகன் கோதாஸ்துதியில்
“கமலாமிவாந்யாம் கோதாம்” என்றும்
“ஸந்த : பயோதி துஹிதுஸ் ஸஹஜாம் விதுல் த்வாம்” என்றும் அருளிச் செய்தபடியே
ஆண்டாள் ஸாக்ஷாத் ஸ்ரீமஹாலக்ஷ்மியாவள்

“பார்க்கவீ லோகஜநநீ க்ஷ்ரஸாகரஸம்பவா” என்ற அமரகோசத்தின் படியும் இதிஹாஸ புராண வரலாற்றின் படியும்
லக்ஷ்மி (ஆண்டாள்) ப்ருகு குலத்தில் தோன்றியவள்.
திருமழிசைப்பிரானும் ப்ருகு குலத்தில் தோன்றியவரென்பது சரித்திர ஸித்தம்.
இத்தகைய ஸமாந குலஸம்பந்தம் இங்கு நோக்கத்தக்கது.
ரிஷி குலத்திலே பிறந்து பிரம்பன் குடியிலேயானார் அவர்.
ப்ராஹமண குலத்திலே பிறந்து கோபாலர் குலத்திலேயானாள் இவள். இதுவும் ஒற்றுமை நயம்.

(தூமணி மாடத்து) சிறந்த மாணிக்கக் குப்பியினுள்ளேயுள்ளது வெளியில் நிழலிட்டுத் தோன்றும்.
திருமழிசைப்பிரான் “உட்கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்டிடே” என்று வேண்டிக் கொண்டபடியே
உள்ளிருந்த திருமால் அப்படியே வெளியிற் பொசிந்து காட்சி தந்தமையால்
இவர் தூமணிமாட மென்னத் தகுதியுடையார்.

(சுற்றும் விளக்கெரிய) விளக்காவது ஞானவொளி.
“சாக்கியங் கற்றோஞ் சமண்கற்றோம் சங்கரனாராக்கிய ஆகமநூல் ஆராய்ந்தோம்,” என்றபடி
இவ்வாழ்வார் ஸகல மதங்களிலும் புக்கு ஸர்வதோமுகமான ஞான விளக்கம் பெற்றவராதலால்
சுற்றும் விளக்கெரிதல் இவர்க்கு அஸாதாரணம்.

“யானறிந்தவாறு – ஆரறிவார்” என்றும்
“என் மதிக்கு விண்ணெல்லாமுண்டோ விலை” என்றும் இவரது பாசுரங்களினாலும் இது ஸித்தம்.

(தூபம் கமழ) சிறந்த ஞானமிருத்தல் மாத்திரம் பயன்படாது; அது நன்கு பரிமளிக்க வேண்டும்.
எம்பெருமானையன்றி வேறொரு தெய்வத்தைத் தொழாதிருத்தலே ஞானத்திற்குப் பரிமளம்.
“மறந்தும் புறந்தொழா மாந்தர்” என்பது இவ்வாழ்வாருடைய திருவாக்காகும்.

(துயிலணை மேல் கண்வளரும்) இவ்வாழ்வாருடைய திருக்கண் செல்வது
சயனத் திருக்கோலமான எம்பெருமான்களின் மீது தான்.
கச்சி வெஃகாவிலும் திருக்குடந்தையிலுமே பெரும்பாலும் இவர் காலம் கழித்தது.
சயனத் திருப்பதிகளையே ஒரு கோர்வையாக வெடுத்துப் பாசுரம் பாடினவரும் இவ்வாழ்வார்;
நாகத்தணைக் குடந்தை வெஃகாத் திருவெவ்வுள் நாகத்தணையரங்கம் பேர் அன்பில் –
நாகத்தணைப் பாற்கடல் கிடக்கு மாதி நெடுமால், அணைப்பார் கருத்தனவான்” என்றது காண்க.

(துயிலணை மேல் கண்வளரும் மாமானுடைய மகளே!)
மகள் என்றதனால் விதேயத்வம் சொன்னபடி.
மகள் சொற்படி தந்தை கேட்பதும் தந்தை சொற்படி மகள் கேட்பதும் வழக்கம்.
மாமான் என்றது மஹா மஹான் என்றபடி.
துயிலணை மேல் கண்வளரும் மாமான் யதோக்தகாரி யெம்பெருமான்;
அப்பெருமாள் இவ்வாழ்வார் சொற்படி கேட்டவர்;
‘கணி கண்ணன் போகின்றான் – நீயுமுயன்றன் பைந் நாகப் பாய் சுருட்டிக்கொள்’ என்ற போது
அப்படியே சுருட்டிக்கொண்டு புறப்பட்டார்;
“உன்றன் பைந்நாகப்பாய் விரித்துக்கொள்” என்ற போதும் அப்படியே.

இனி, துயிலணைமேற் கண்வளரும் மாமான் – ஆராவமுதன்;
அப்பெருமாளும் “எழுந்திருந்து பேசுவாழி கேசனே” என்ற
இவ்வாழ்வாரது வேண்டுகோளின்படி எழுந்திருந்தவர் என்பது ப்ரஸித்தம்.

(உன் மகள் தான் ஊமையோ)
வாய் திறவாமலே ஹஸ்த சேஷ்டை முதலியவற்றால் காரியம் செய்வது ஊமைகளின் பணி.
இவ்வாழ்வாரும் யாத்திரை யடைவில் பெரும்புலியூரென்னும் கிராமத்தில் ஒரு வேதியன் வீட்டு வாசல்
திண்ணையில் சிறிது பொழுது எழுந்தருளியிருக்க அங்கு வேதமோதிக்கொண்டிருந்த அந்தணர்கள்
நீறுபூத்த நெறுப்புப்போலுள்ள ஆழ்வாருடைய மஹிமையைத் தெரிந்து கொள்ளாமல்
அவரைக் கீழ்ச்சாதியராக வெண்ணி வேதாத்யயனம் அவருடைய காதிற்படலாகாது என்று கருதி ஓத்துத் தவிர்ந்திருக்க,
அக்குறிப்பை யறிந்த ஆழ்வார் அவ்விடத்தை விட்டுத் தூரத்திற் சென்று வேறோரகத்து மேடையில் வீற்றிருக்கையில்
அந்த வேதியர்கள் மீண்டும் வேதமோதத் தொடங்கி, விட்ட வாக்கியம் தோன்றாது மயங்கி நிற்க,
ஆழ்வார் அது கண்டு கறுப்பு தெற்களைக் கையுகிராலே இடந்துபோட,
அப்பொருளுள்ள வேதவாக்கியம் அவர்கட்குத்தோன்றிற்று:
அதாவது – “க்ருஷ்ணானாம் வ்ரித்றீணாம் நகநிர்பிந்நம்” என்பது.

உடனே அவர்கள் ப்ரதக்ஷ்ண ப்ரணாமாதிகளால் இவரை உபசரித்து க்ரதார்த்தராயினர் என்பது சரித்திர வரலாறு.
இங்ஙனமாக வாய் திறவாமலே, இங்கிதத்தினால் காட்டினது பற்றி ஊமையோ என்றது.
சொன்ன சொற்களைச் செவி யேற்காதவர் செவிடர்: அந்தச் செவிடும் இவரது சரிதையில ப்ரஸித்தம்:
முன் சொன்ன பெரும்புலியூரில் அந்தணரடிகள் யாகஞ் செய்து கொண்டிருந்த விடத்தில்
இவ்வாழ்வாரை எழுந்தருள்வித்துக் கொண்டு போய்ச் சில மஹான்கள் இவர்க்கு அக்ர மொழிகளை வர்ஷிக்க,
அவற்றை இவ்வாழ்வார் செவியேற்காதிருந்தனர் என்ற வரலாறு காண்க.

(அனந்தலோ) தூக்கமோ என்றபடி, பரமைகாந்திகட்குத் தூக்கமாவது பாஹ்ய விஷயங்களிற் சிறிதும்
நெஞ்சு செல்லாதிருக்கப் பெறுதலே.
“உன்னைத் தெரித்தெழுதி வர்சித்துங் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினென் போது” என்றும்
“தொழிலெனக்குத் தொல்லைமால் தன்னாமமேத்தப் பொழுதெனக்கு மற்றதுவே போதும்” என்று மருளிச்
செய்யு மிவ்வாழ்வார்க்கு இந்த நிலைமையே அனந்தலாகும்.

(ஏமப்பெருந்துயில் மந்திரப் பட்டாளோ)
மற்றையாழ்வார்களிற் காட்டிலும் இவ்வாழ்வாருடைய பரமைகாந்தித்வம் மிக விலக்ஷணம் என்பது இங்கு அறியத்தக்கது.
“பிதிரு மனமிலேன் பிஞ்ஞகன்றன்னோடெதிர்வன், அவனெனக்கு நேரான்” என்னும் படியான
திரு நாவீறு இவர்க்கே அஸாதாரணமன்றோ!
இது தான் பெருந்துயில்,
எம்பெருமானை யொழிந்த மற்றையோரைக் கண்கொண்டு பாராமையிற் பெருமை.

(மாமாயன்)
“மாயமென்ன மாயமே” என்றும்,
“மாயமாய மாக்கிகனாய் உன்மாயமுற்று மாயமே” என்றும்
பலகாலும் எம்பெருமானது மாமாயங்களைப் பேசுகிறவர் இவ்வாழ்வார்.

(மாதவன்) “மாதவனை ஏத்தாதார் ஈனவரே” என்றவரும் இவ்வாழ்வாரே,
“திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு” என்றதுங் காணலாம்.

(வைகுந்தன்)
“வைகுந்தச் செல்வனார் சேவடிமேல் பாட்டு” என்றவர் இவ்வாழ்வாரே.
வைகுந்தனது சேவடிமேல் தாம் பாசுரம் பாடினவராகச் சொல்லிக்கொண்டார்.

ஆகவே, மாமாயன், மாதவன், வைகுந்தனென்ற திருநாமங்கள்
இவ்வாழ்வார்க்குப் பரம போக்யங்களென்பது ஸூசிதம்.

———————————————————————————————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading