ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் — கீழ்வானம் வெள்ளென்று—

இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீ காநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம் பராம் கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம், ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய், மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

—————–

அவதாரிகை –
எல்லாரும் வந்து அழைக்கும் படி-கிருஷ்ணனாலே வேண்டற்பாடு உடையாள் ஒருத்தியை-எழுப்புகிறார்கள்- மிக்குள்ள பிள்ளைகளும் கோதுகலமுடைய பாவையை எழுப்புகிறார்கள் 

இதுக்கு முன்பு உணர்ந்த பெண்கள் எல்லாம் திரண்டு தங்கள்
அபிமத லாபம் யாவள் ஒருத்தி முன்னாகப் பெறலாய் இருக்கிறது –
அதுக்கு ஈடாகக் கிருஷ்ணன் கொண்டாடும் படி செல்வக் கிடப்புடையாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –

இப்பாட்டில் பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வம்-உடையாள் ஆகையாலே-
பகவத அபிமதமானவரை-எழுப்புகிறார்கள் –

இதுக்கு முன்பு சென்ற காலங்களுக்கு எல்லாம் தப்பிக் கிழக்கு வெளுத்தது கிடாய் -என்று
(பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் என்று )உணர்ந்த பெண் பிள்ளைகளில்
எல்லாரிலும் கொண்டாட்டமுடையாள் ஒரு பெண் பிள்ளை வாசலிலே சென்று எழுப்புகிறார்கள் –

(இது உங்களது விபரீத ஞானம் அந்யதா ஞானம் என்று உள்ளே இருந்தவள் –
பொருளையே மாத்தி விபரீத ஞானம்
பொருளின் தன்மையை மாற்றிச் சொல்வது அந்யதா ஞானம்)

(ஆத்மாவையே தேகம் என்று விபரீத ஞானம் –
சேஷத்வம் அறியாமல் ஸ்வ தந்த்ரன் என்று நினைப்பது அந்யதா ஞானம்)

கோதுகலம் – கௌதூஹலம் என்ற வடசொல் விகாரம்; ஆசை என்பது அதன் பொருள்;
கண்ணபிரானுடைய ஆசையைத் தன்னிடத்துப் பெற்றுள்ள என்றபடி.

கீழ் வானம் வெள்ளென்று –
கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய் –
மல்லரை மாட்டிய தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் –
சங்கீர்த்தனத்துக்கு அடுத்த சத்வ உத்தர காலத்தை முன்னிட்டு
சத்துக்களால் குதூஹலிக்கப்படும் விஷயரானவர்களை
சகல விரோதி நிவாகரனுடைய சங்கீர்த்தனத்திலே சங்கதராக்கி ஸமாஹிதராக்கும் படியைச் சொல்லுகிறது

கிருஷ்ணனால் கொண்டாடப் படும் ஏற்றமுடையவளை எழுப்புகிறார்கள் –
இத்தால்
பகவத் அனுபவத்தில் பிரத்யா சன்னராய் இருப்பார் இடத்தில் சாபேஷாராய் இருக்கையும் –
அவர்களை முன்னிட்டு ஈஸ்வரனைக் கிட்டுகையும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் -என்கிறது

சங்கீர்த்தனத்துக்கு அடுத்த சத்வ உத்தர காலத்தை முன்னிட்டு சத்துக்களால் குதூகலிக்கப் படும் விஷயரானவர்களை சகல விரோதி நிவாரகனுடைய சங்கீர்த்தனத்திலே சங்கதராக்கி ஸமாஹிதர் ஆகும் படி சொல்கிறது

பகவத் அனுபவத்தில் ப்ரத்யா சன்னராய் இருப்பார் திறத்தில்
சாபேஷாராய் இருக்கையும்
அவர்களை முன்னிட்டு ஈஸ்வரனைக் கிட்டுகையும்-
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது –

————–

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்து -உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-8-

வியாக்யானம் –

கீழ்வானம் வெள்ளென்று –
கிழக்கு வெளுத்தாலும் கிடந்தது உறங்கும் இத்தனையோ -எழுந்திராய் என்கிறார்கள் —
உம் -சகாரத்தாலே -கிழக்கு வெளுத்தது அன்று –
உங்களில் யாரேனும் அத் திக்கைப் பார்க்கையாலே-உங்கள் முகத்தில்
ஒளி பிரதிபலிக்கையாலே கிழக்கு வெளுத்ததாய் இருக்கிறது-
இவர்கள் தான் திங்கள் திரு முகத்து சேயிழையார் இறே-
அது அந்யதா ஜ்ஞானம்-மற்று அடையாளம் உண்டோ என்ன –

சம்சாரிகளில் ராத்திரியில்
பர ஹிம்சாதி சிந்தனமும்-
நரக அவஹமான விஷய அனுபவமும்
தமோ குண அபிபவத்தால் வந்த நித்ரையுமாய்ச் செல்லுகையாலே
ராத்திரி தண்ணியது என்று புருஷார்த்த உபயோகியான பகல் விருப்பத்துக்கு உடலாய் இருக்கும்

இவர்கள் கிருஷ்ண அனுபவம் பண்ணப் பெறுகையாலே
ராத்திரி அடிக் கழஞ்சு
பெற்று விடியில் கோப வ்ருத்தர்கள் விரோதிப்பார்கள் என்று
விடியப் புகா நின்றது என்று பயப்பட்டு
கிருஷ்ணனையும் நம்மையும் சேர ஒட்டாதவர்கள் உணரும் காலம் வந்து தோற்றச் செய்தே
நீ கிடந்து உறங்குகையாவது என் என்ன

அவள் உள்ளே கிடந்து அக்காலம் வருகை யாவது என் என்ன –

கீழ்வானம் வெள்ளென்று–
இதுக்கு முன்பு விடிவுக்கு உடலாகச் சொன்னது போல் அன்று –
கிழக்கு வெளுத்தது காண் -என்கிறார்கள் –

அஞ்சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால் (திருவாய் -5-4-9) -என்று
போது புக்க போதே பிடித்து கீழைத் திக்கை பார்த்துக் கொண்டு இருப்புதிகோள் –

(வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண்துளியாய்,
அஞ்சுடர வெய் யோன் அணிநெடுந்தேர் தோன்றாதால்,
செஞ்சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால்,
நெஞ்சிடர்தீர்ப் பாரினியார்? நின்றுருகு கின்றேனே.
இங்கு கோதுகலம் -கிருஷ்ண அனுபவம் இருக்கும் பொழுது இரவு
அந்த பாசுரத்தில் -இரவு வந்ததே கண்ணனும் வாரானால் காகுத்தனும் வாரானால் துன்புற்று இருக்க
அந்த துன்பம் பார்க்க சகியாமல் ஆதித்யனும் வரவில்லை )

திங்கள் திரு முகத்து சேயிழையாரான உங்களுடைய முகத்து தேஜஸ்
கீழைத் திக்கில் சென்று தட்டி உங்கள் முகத்திலே வந்து
ப்ரதி பிம்பிக்கையாலே கிழக்கு வெளுத்தது போல் தோற்றுகிறது அத்தனை –
கிழக்கு வெளுத்தது அன்று –
இது உங்களுடைய அந்யதா ஞானம்-
இத்தை ஒழிய விடிவுக்கு வேறு அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் என்ன

வெள்ளென்று -என்றது வெள் என்றது -என்றபடி-
அசேதனத்துக்கும் சைதன்யம் உண்டாம் படி-சத்வோத்தரமான காலம் ஆயிற்று –

எழுந்திராய் -என்ன –
அசேதனத்துக்கும் சைதன்யம் உண்டாய்த்து-சத்வோத்தரமான கால க்ருதமல்ல –
மரங்களும் இரங்கும் வகை -என்று
உங்களுக்கு ஸ்வ அநுமான க்ருதம் –
வேறு அடையாளம் உண்டோ -என்ன –

கீழ்வானம் வெள்ளென்று –
கிழக்கு வெளுத்தது எழுந்திராய் -என்கிறார்கள் –
ஆண்களும் வ்ருத்தர்களும் உணர்த்துவதற்கு முன்னே எழுந்திராய் என்கிறார்கள்

அநன்யா ராகவேண பாஸ்கரேண ப்ரபாயதா-
திங்கள் திருமுகத்து சேயிழையார் -என்கிறபடியே
(ஸூர்ய ஒளி சீதாப்பிராட்டிக்கு -சந்த்ர ஒளி இவர்களது -சந்த்ர வம்சம் அன்றோ )

வெண்ணிறத்தோய் தயிர் -என்று தயிர் வெளுக்கத் தோய்ந்தவாறே விடிந்தது என்று
அறிகையாலே உறங்காதே பல கால் தயிரைப் பாரா நிற்பர்கள் –
(இடக்கை வலக்கை அறியாமல் பாலையையும் தயிரையும் பார்த்தே காலத்தை உணருமவர்கள் )அத்தாலே கிழக்கு வெளுத்தது -என்ன

நீங்கள் எல்லாம் கிழக்கு நோக்கி -விடிந்தது இல்லையோ -என்று பார்க்க –
உங்கள் முகத்தின் ஒளி கீழ் திக்கில் சென்று தாக்கி உங்கள் முகத்திலே வந்து பிரதிபலிக்கையாலே
கிழக்கு வெளுத்ததாய் இருக்கிறது அத்தனை –
இது அந்யதா ஞானம் -மற்ற அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள்-என்ன

(முத்து சிப்பி வெள்ளி -கயிறு பாம்பு -சங்க பீத போல் -பண்பை மாற்றி -அந்யதா ஞானம்
விபரீத ஞானம் பொருள் மாறாட்டம்
தேஹாத்ம அபிமானம் -விபரீத ஞானம்
ஆத்மாவின் பண்பை மாறாடி -சேஷத்வ பாரதந்தர்யம் மாற்றி ஸ்வதந்த்ரன் -நினைவு அந்யதா ஞானம் )

அலர்ந்த வம்புயத்து இருந்து தேன் அருந்தி இன் அகல் அல்குலார் அசைந்து அடைந்த நடை கொளாதது என் மெனோ
நலம் தவிர்த்ததால் என் கொல் நாவின் வீறு இழந்ததால் நா அணங்கு நாதர் தந்த நாவின் வீறு இழந்தது என்
சலம் தவிர்ந்து வாது செய்து சாடி மூண்ட மிண்டரைச் சரிவிலேன் எனக் கனத்து உரைத்த வேதிராசர் தம்
வலம் தரு கை நாயனார் வளைக்கு இசைந்த கீர்த்தியால் வாரி பாலது ஆம் அது என்றும் மாசில் வாழி வாழியே –ஸ்ரீ அமிருதாசுவாதினி–33- எம்பெருமானார் புகழ் -இருவர் வினா விடை –

அலர்ந்த வம்புயத்து இருந்து தேன் அருந்தி -ஹம்சம் மலர்ந்த தாமரைப் பூவில் உட்க்கார்ந்து அதில் உள்ள தேனைப் பருகி
இன் அகல் அல்குலார் அசைந்து அடைந்த நடை கொளாதது என் மெனோ-அழகிய அகன்ற அல்குலையுடைய ஸ்த்ரீகள் அசைந்து நடக்கும் நடையை
கொள்ளாமல் வருந்தி வாடிக் கிடைப்பதால் காரணம் என்ன
என்று கேட்க -மற்றவர்
நலம் தவிர்த்ததால் -தன பெருமையை அது இழந்து விட்டதால் -என்று சொல்ல
ஒருவர் அது என் கொல் என்று கேட்க-மற்றவர்
நாவின் வீறு இழந்ததால் –தன் நாவிற்கு உள்ள பாலையும் நீரையும் பிரிக்கும் சக்தியை இழந்து விட்டதால் -என்ன
நா அணங்கு நாதர் தந்த நாவின் வீறு இழந்தது என் –வாக்குக்குத் தேவதையாகிய சரஸ்வதியின் கணவனான ப்ரஹ்மாவால் கொடுக்கப்பட்ட
நாவின் அந்த சக்தியை ஏன் இழந்தது -என்ன -மற்றவர்
சலம் தவிர்ந்து வாது செய்து சாடி மூண்ட மிண்டரைச் சரிவிலேன் எனக் கனத்து உரைத்த –குற்றம் இல்லாது வாது செய்து ஜெயித்து
இன்னம் யாவர் வாதம் புரிய வந்தாலும் தளர மாட்டேன் என்று கர்ஜித்துக் கூறிய
வேதிராசர் தம் வலம் தரு கை நாயனார் வளைக்கு இசைந்த கீர்த்தியால் –ஸ்ரீ பாஷ்யகாரருடையதும் அடைந்தவர்களுக்குப் பலத்தை தரும்
திருக் கையையும் யுடைய எம்பெருமானுடைய சங்கம் போன்றதுமான கீர்த்தி உலகம் எங்கும் பரவியதால்
வாரி பாலது ஆம் அது என்றும் மாசில் வாழி வாழியே –ஜலம் முழுவதும் பாலாகி விட்டதாம் –எல்லாப் பொருள்களும் வெண்மையான படியால் —
எக்காலத்திலும் குறைவு படாத அந்த புகழ் வாழக் கடவது

———-

எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண் –
பனிப்புல் மேய-அகாலத்திலே விட்டு -வயல்கள் எல்லாம் பரந்தன-
ஸ்ரீ நந்த கோபர்க்கு முத் திறமும்  உண்டே -ஆட்டுத் திறம்-மாட்டுத் திறம்- எருமைத் திறம்-
அவற்றின் பின்னே கிருஷ்ணன் போம்-பின்னை ஆரைக் காண்பது -எழுந்திராய் -என்ன –
உங்கள் முகத்தில் ஒளியைக் கண்டு இருள் திரிந்து போகிறது இத்தனை-

அது உங்களுடைய விபரீத ஜ்ஞானம் இருக்கிற படி-
சத்வ நிஷ்டர் சந்நிதியில் அந்தகாரம் நில்லாது இறே-
பெரியாழ்வார் பெண் பிள்ளை அக்நி ஹூத்ர அனுஷ்டானம் அறிகை ஒழிய-
சிறுவீடு வாசி அறிகையான மெய்ப்பாடு
அருணோதயத்துக்கு அஞ்சி இருள் சிதறி சிதறிப் போகிறது என்னவுமாம்

மேட்டிளமேதிகள் தளைவிடும் ஆயர்கள் -என்று
இவள் தகப்பனார் எம்பெருமானை எழுப்பினார்-
இவள் இவர்களை எழுப்புகிறாள்-
நாங்கள் பிரமித்தோமாய் ஆயிடுக -நீ விடிந்தது இல்லை என்று அறிந்தபடி எங்கனே -என்ன-
பஞ்ச லஷம் குடியில் பெண்களில் உங்களை ஒழிய அல்லாதார்-உணராமையால் -என்ன

எருமை சிறுவீடு-
எருமைகள் பனிப் புல் மேய்க்கைக்காக வயல் எங்கும் பரந்தன-
இது விடிவுக்கு அடையாளம் அன்றோ என்கிறார்கள் –

மேட்டிள மேதிகள் தளை விடுமாயர் (திருப்பள்ளி எழுச்சி -4)-என்று
(விஷ்ணு சித்தர் போல் – துளஸீ ப்ருத்தர் -இவரும் புஷ்ப கைங்கர்யம் )
பெரிய பெருமாளை இவள் தமப்பன்மாரில் ஒருவர் எழுப்பினார் –
இவர்கள் இவளை எழுப்புகிறார்கள் –
இதில் ஆழ்வார்களும் இவளுக்கும் வாசி –

(விஸ்வாமித்திரர்- விஷ்ணு சித்ரர் துளஸீ ப்ருத்யர்கள் திருப்பள்ளி எழுச்சி கைங்கர்ய ஸாம்யம்
புஷ்ப கைங்கர்யத்தாலும் ஸாம்யம் உண்டே)

சிறு வீடு -மேய்வான்-
பெரியாழ்வார் மகளாய் அக்னி ஹோத்ர ஹோமங்களுக்கு
உள் மானம் புற மானம் ஆராய்க்கை தவிர்ந்து
இடைச்சியாய் எருமையினுடைய சிறு வீடு பெரு வீடு என்னும்
இவற்றில் வாசி அறிகை யாத்ரையான படி

பரந்தன காண்-
பட அடிப் பட்டாலும் உறங்கும் அத்தனையோ –
நம்முடைய உத்தேச்ய வஸ்து அவற்றின் பின் கை கழியப் போனால் என் படக் கடவோம்

ஸ்ரீ நந்த கோபருக்கு முத்திறமும் -ஆடு பசு எருமை -கிருஷ்ணன் அவற்றின் பின்னே போம் –
(வாரணம் ஆயிரம் யானையும் உண்டு வஸூ தேவர் சொத்தும் கண்ணனுக்கு உண்டே )
பின்னை நாம் ஆரைக் காணப் போகிறது –
கெடுவாய் எழுந்திராய் –

எருமை பனிப்புல் மேய்க்கைக்கு வயல் எங்கும் பரந்தன வென்று சொன்ன இது
விடிவுக்கு அடையாளம் அன்றோ என்ன

உங்களுடைய முக ஜ்யோதிஸ் யோஜனையாலே சிதறிப் போகிற இருள் அத்தனை இவை –
அல்லது எருமைகள் அன்று –
இது உங்களுடைய விபரீத ஞானம் இருக்கிற படி -விடிவுக்கு உடல் அல்ல என்ன –

கீழ்ச் சொன்னவை எங்களுடைய அந்யதா ஞானமும் விபரீத ஞானமும் ஆகிறது –
விடிந்தது இல்லை என்கைக்கு அடையாளம் நீ சொல்லாய் என்ன

அஞ்சு லக்ஷம் குடியில் உள்ள பெண்களுக்கு எல்லாம் அவதி இல்லை –
இங்கு எல்லாமாக ஆயிரம் பேர் போராது காண் வந்தது –
அல்லாதாரும் உணர்ந்து வர வேண்டாவோ –
அவர்கள் உணர்ந்து வாராது ஒழிந்தது விடியாததுக்கு அடையாளம் என்ன

எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண் –
அஞ்ஞானமானது சத்த்வோதய காலத்திலே விடப்பட்டு-
தனக்கு அபாஸ்ரயம் தேடித் போகா நின்றது காண் -என்ன –
அதுவும் உங்கள் சந்நிதியாலே-சந்நிஹித சேதன அஞ்ஞானம் போம்-
உங்களைப் பிரிந்தவாறே பழைய படியே உண்டாம்-
அது சத்வ குண க்ருதம் அன்று -என்ன-

ஆனால் விடியாமைக்கு அடையாளம் என் சொல்லுகிறாய் -என்ன-
உங்களை ஒழிந்த பகவத் பிரவணர் உணராமை என்ன –

எருமை சிறுவீடு-மேய்வான் பரந்தன காண் –
சிறுவீடு -பனிப் புல்லு மேய்ச்சலுக்கு காலமே விட்டு அவை மேய்க்கைக்காக எங்கும் பரந்தன காண்
ஸ்ரீ நந்தகோபார்க்கு முத்திறமுண்டு-(பசு எருமை ஆடு -மூன்றும் உண்டே )

(பத்தர் முக்தர் நித்யர் -த்ரிவித சேதன -திருத்தவும் -வரவேற்கவும் கைங்கர்யம் கொள்ளவும் மூவரையும் –
ஐஸ்வர்யார்த்தி -கைவல்யார்த்தி -பகவத் லாபார்த்தி மூவரும் உண்டே -கதி த்ரய மூலத்வம் 
க்ருதக-பூ புவ சுவ -நைமித்திக பிரளயம் அழியும்
க்ருத அக்ருதக -மகர் லோகம் -அழியாது -மேலே போவார்
அக்ருதக -மேல் உள்ளவை -ஜன தப சத்யம் –
பர பக்தி பர ஞானி பரம பக்தர் -ஞான தர்சன பிராப்தி தசை
மனம் மொழி மெய்
பகவத் -பாகவத -ஆச்சார்யர் நிஷ்டை -)

அவற்றின் பின்னே கிருஷ்ணனும் போம் –
பின்னை யாரைக் காண்பது – எழுந்திராய் என்ன

உங்கள் முகத்தில் ஒளியைக் கண்டு இருள் திரண்டு போகிறது அத்தனை -என்ன
விடிந்தது இல்லை என்று உன்னால் சொல்லலாவது உண்டோ என்ன
பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களுக்காக நீங்கள் இத்தனை பேரோ யுள்ளது –
அல்லாதார் உணராமையாலே விடிந்தது இல்லை என்ன

———

மிக்குள்ள பிள்ளைகளும் –
உன்னை ஒழிந்தார் எல்லாரும் ஆற்றாமையாலே போந்தார்கள்-
நீயே எழுப்பக் கிடந்தாய்

மிக்குள்ள பிள்ளைகளும்-
உன்னை ஒழிந்தார் அடைய போனார் காண் என்ன

அவர்கள் ஓத வந்தவர்கள் மறுத்து ஓதுகிறார்கள்
அவர்கள் என்னை அழையாதே போனார்கள் என்ன –

பெரும் திரள் ஆகையால் நீ போய்த்த்தில்லை என்று அறியாமையாலும்
போகிறவர்கள் உடன் கூடப் போகை தானும் பிரயோஜனம் ஆகையாலும் போனார்கள் அத்தனை
உன்னை ஆராயாதே போனார்கள் அல்ல என்ன –

என்ன கார்யத்துக்குத் தான் அவர் போய்த்து என்ன

———-

போவான் போகின்றாரை-அர்ச்சிராதி கதி அக்ரூர யாநம் திருவேங்கட யாத்ரை போலே-
போகையே பிரயோஜனமாக போகா நின்றார்கள்-

நான் இனி எங்கே போக
அவர்கள் போனார்கள் ஆகில் -என்ன

போகாமல் காத்து —
செய்யாதன செய்தோம் -என்று
அடியில் நம்முடைய வ்யவஸ்த்தையை உணர்த்தி
நீ வந்ததில்லை என்று அவர்கள் போகாதபடி தடுத்து –

போவான் போகின்றாரை-
வழி போக்கையே உத்தேச்யமாகப் போனார்கள்
தேச பிராப்தியிலும் அர்ச்சிராதி மார்க்கமே போக ரூபமாய் இருக்கக் கடவது இறே

கை கழியப் போனார்கள் ஆகில் இனி நான் என் –
என்னை ஒழியவும் போக வல்லார்கள் ஆனார்கள் என்ன

அது செய்த படி கேட்டிலையோ –
நீ வாராமை அறிந்தவாறே இன்னாள் வந்திலள் -என்றோம் –
பின்னை போக மாட்டிற்று இலர்கள்

போகாமல் காத்து –
அவர்களைத் தலைக் காவலிட்டோ செய்தது –

திருவாணை நின்னாணை (10-10-2 )-என்று ஆணை இட வேணுமோ
நீ போந்திலை என்று ஒரு வார்த்தை சொல்லும் காட்டில் திடுக்கிட்டாரைப் போலே கால் நடை தாராமல் நின்றார்கள் –
போவாருக்கு காலை ஒழிய போகப் போமோ

(மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-இருபதாவது இனி இது -சரம பர்வ நிஷ்டர்களுக்கு இது வேண்டாவே )

வளைத்துவைத்தேன் இனிப்போகலொட்டேன்* உன்தன் இந்திரஞாலங்களால்*
ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய்* நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை*
அளித்தெங்கும் நாடும்நகரமும்* தம்முடைத் தீவினைதீர்க்கலுற்று*
தெளித்துவலஞ்செய்யும் தீர்த்தமுடைத்* திருமாலிருஞ்சோலை எந்தாய்!–பெரியாழ்வார்

அவர்களை அங்கே நிறுத்தினீ கோள் ஆகில் –
நீங்கள் இங்கே வந்தது என் என்ன –

போவான் போகின்றாரை போகாமல் காத்து –
பகவத் சந்நிதிக்கு போகையே பிரயோஜனமாக போகுமவர்களை
பாகவதரை முன்னிட்டு அல்லது திருவடி தொழக் கடவோம் அல்லோம்
என்கிற நியமத்தை உணர்த்தி போகாமல் தடுத்து –

உன்னைக் கூவுவான் வந்து நின்றோம் –
உன்னை எழுப்பினோம் என்கிற அதிசபம் பெறுகைக்காக
உன் வாசலிலே வந்து நின்றோம் –

————-

உன்னைக் கூவுவான் –
உன் வாசலிலே வந்து எழுப்பினோம் என்னும் தரம் பெறுகைக்கு

உன்னைக்-கூவுவான்-
போகை தானே உத்தேச்யமாகப் போனால் போலே
உன்னைக் கூவுகை தானே பிரயோஜனமாக வந்தோம்-

———

வந்து –
தேச பிராப்தியே பிரயோஜனம் போலே -வந்து

நின்றோம் –
நிலை பெற்று நின்றோம் –
எல்லார்க்கும் கிருஷ்ணனோட்டை சம்பந்தம் ஒத்து இருக்க-
நீங்கள் என் பக்கலில் சாபேஷராய் வந்தோம்-என்று சொல்லக் கடவீர்களோ -என்ன

வந்து நின்றோம் –
உத்தரம் தீர மாஸாத்ய கஸ்த ஏவ வ்யதிஷ்டித்த -என்னும் படியே
உன் பக்கலிலே வந்து
நின்றோம் –
கால்கள் தரையிலே பாவி நிற்கப் பெற்றோம்

ராவண பவனத்தை விட்டு பெருமாள் எல்லையில் புகுந்த பின்பு இறே
அவன் தரித்து நின்றது

நீ போந்திலை என்ற போதை துணுக்குத் தீர
உன் வாசலிலே வந்து நல் தரிக்கப் பெற்றோம் –

அப்பெண்கள் திரள் எல்லாம் கிடக்க என் வாசலிலே வந்து கால் பாவுகைக்கு
ஏற்றம் என் என்ன

நீங்கள் என்னை ஒழிய தரியாது இருக்க –
நான் உங்களுக்கு புறப்பட்டு முகம் காட்டாது இருந்தேன் என்று போர வெறுத்தி கோள் இறே என்ன

வந்து –
உத்தரம் தீரமா ஸாத்ய-யுத்த –
(விபீஷணன் வருவதை பார்த்து -வடக்கு திக்கில் வந்து கரை அடைந்து -ஆகாசத்தில் நின்றான் –
பொறுமையுடன் நின்றானே முதலிகள் புருஷகாரத்துக்கு -வந்து நின்றோம் இரண்டுக்கும் பிரமாணம் )

நின்றோம்
கஸ்த ஏவ வ்யதிஷ்டத
கோதுகலமுடைய-பாவாய் எழுந்திராய்
எங்கள் திறத்தாரோ மிகுத் தள்ளுண்டார்

—————

கோதுகலமுடைய –
உன்னை முன்னிட்டுக் கொண்டு செல்ல கிருஷ்ண விஷயீ காரம் உண்டு என்னும்படி
அவனாலே கொண்டாடப் படுமவள் இறே-
பத்நீத்வம் அவிஷ்டமானாலும் கிருஷ்ண வல்லபை நீ அன்றோ-
நாங்கள் அவனுக்கு நல்லோம்-நீ அவனோட்டை சம்பந்தத்தால் எங்களுக்கு நல்லாய் இருப்புதீ-
ஆகையால் அவனிலும் ததீயரை உகக்கும் என்னுமிடம் வேண்டற்பாடு உடையை நீ -அன்றோ

கோதுகலமுடைய-பாவாய் எழுந்திராய்
எங்கள் திறத்தாரோ மிகுத் தள்ளுண்டார்
புள்ளுவம் பேசாதே போகு நம்பி
கழக மேறேல் நம்பி என்னும் இங்குத்தைக்கு எங்களோடு அவனோடு வாசி என்

(நம்பி நம்மாழ்வாரும் குலசேகரப்பெருமாளும் -குண பூர்த்தி இல்லாதவனே

அவனைக் கதைவடைத்து தள்ளினால் போல் எங்களையும் பண்ணுகிறாயே )

பாவாய் —
நாரீனாம்-என்றபடி நிருபாதிக ஸ்த்ரீத்வம் உண்டாளாகை
பார தந்திர பரா காஷ்டை உடையவள் அன்றோ என்கை –

கோதுகலமுடைய-பாவாய் –
உன் வாசலிலே புகுந்து போகவே கிருஷ்ணன் பக்கல் முகம் பெறலாம் படி அன்றோ உன் மதிப்பு –
எங்களுக்கு வெறுப்பு என்
உன் வாசலிலே வந்து உன் பேரைச் சொல்லி அழைக்கைக்கு மேற்பட்ட ஏற்றம் உண்டோ எங்களுக்கு –
அவனாலும் சிரஸா வஹிக்கப் படுபவளாய் –
எங்களுக்கு உன்னை ஒழியச் செல்லாத படி இருப்பாயாய்
எங்களுக்கு கிருஷ்ணன் பக்கல் புருஷகார பூதையாய் இருப்பாள் ஒருத்தி அன்றோ –

பாவாய்
நிருபாதிகமான ஸ்த்ரீத்வத்தை யுடையவளுக்கு எங்கள் ஆற்றாமை தெரியாமை இல்லை இறே
பெண்ணின் வருத்தம் அறியாதவன் படி யாகவோ நீயும் –
முலை எழுந்தார் படி மோவாய் எழுந்தார்க்கு தெரியாது இறே -என்று பட்டர் –
ஒரு பிறவி பிறந்து அறிய வேணுமே அதுக்கு
(மணிவல்லிப் பேச்சு வந்தேறி அல்ல என்று சொல்லி
சமாதானம் கொள்ள வேண்டாத படி ஸ்த்ரீத்வம் ஜென்ம சித்தம் )

பகவத அபிமான விஷயீ பூதராய்-அனன்யார்ஹரான ஸ்வாமி நீ –

———–

எழுந்திராய் –
எழுந்திருக்கும் போதை பரிஸ்பந்தம் காண்கைக்காக-
நாங்கள் உணர்த்த -உணர்ந்தாய் -என்ற ஏற்றத்தை எங்களுக்கு தாராய்-
எழுந்திருந்து செய்வது என் என்ன –

எழுந்திராய்
புறப்பட்டு எங்கள் திரளில் வந்து கலக்க வேண்டா
அங்க ப்ரத் யங்கங்களினுடைய பரிஸ் புரணங்களே அமையும்

எழுந்திராய் –
நாங்கள் உன் வாசலிலே வந்து எழுப்ப நீ எழுந்து இருந்தாய் என்னும் ஏற்றம்
எங்களுக்குத் தாராய்

எழுந்து இருந்து நாம் எல்லாம் கூடி பெறப் புகுகிற பிரயோஜனம் என் என்ன

எழுந்திராய்
நாங்கள் உன்னை உணர்த்த உணர்ந்தாயாகிற பெரிய தரத்தை எங்களுக்குத் தாராய்
(ஆடுக செங்கீரை -யசோதை ஆட்டுவித்தாள் என்று பட்டம் பெற்றால் போல் )

ஆத்மாநம் பூஜயந் ராம -இத்யாதி
(சர்வஞ்ஞனான நீ ராமா எங்கள் இடமும் அபிப்ராயம் கேட்டு உன்னை உயர்த்திக் கொண்டாயே –
எங்களுக்கும் இப்படி பட்டம் கொடுக்கவே கேட்டாயே -வானர முதலிகள் -)

பட்டர் விடியும் தனையும் கண் வளர்ந்து அருள
சிஷ்யர்கள் எல்லாரும் திரு வாசலிலே வந்திருக்குமா போலே

கோதுகலமுடைய பாவாய எழுந்திராய் -என்றதுமே வெளியில் உள்ளார் கார்யம் தலைக்கட்டி எழுந்து இருந்து இவர்கள் கைங்கர்யம் பெற்று உகந்தாள் -அவனது கோதுகலத்துக்கு இவளே காரணம் என்றதுமே மகிழ்ந்து செய்த கார்யம் –

————

பாடிப் பறை கொண்டு –
இதுக்கு முன்பு நாம் பெற்ற ஐஸ்வர்யம் போலேயோ-
இப்பொழுது நாம் பெற புகுகிற ஐஸ்வர்யம்-
முன்பு கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் என்று நாட்டாருக்கு தெரியாதபடி
நெஞ்சால் கிருஷ்ணனை அனுபவித்து-
அவ் வனுபவ ஜனித ப்ரீதியானது -புறம்பு ஒசியாதபடி அடங்கிப் போந்தோம்-
இப்போது நாட்டார் தாங்களே அனுமதி பண்ணுகையாலே-வாய்க்கால் வெட்டி நெஞ்சிலே கங்கும் கரையும்-
அறப் பெருகுகிற கிருஷ்ண அனுபவ ப்ரீதிக்கு போக்கு-அணை வெட்டிவிட்டு கிருஷ்ண குணங்களை
நாம் வாயார நினைத்த படி பாடக் கடவோம் –

பறை கொள்ளுகையாவது –
நாட்டாருக்கு நோன்பு-
தங்களுக்கு சேவிக்கையே பலம் –

பாடிப்-
கிருஷ்ணன் பெண்கள் கிருஷ்ணன் -என்று வாய்க் காவல் இட்டுக் கிடக்கிற வூரிலே
இவ்விரண்டு நாளும் கழிந்தால் அவனை நமக்குத் பாடக் கிடைக்குமோ

ஆஸூர ப்ரக்ருதிகளான ஹிரண்யாதிகள் படை வீடுகள் போலே
திரு நாமம் சொல்லப் பொறார்கள் யாய்த்து
பெண்கள் பிரசங்கத்தில் மோஹிப்பர்கள் என்று அவ் விழவு தீர
கிருஷ்ண நாம புன புன என்கிறபடி வாயாரத் திரு நாமத்தைப் பாடி

பறை கொண்டு
நாட்டுக்குப் பறை –
தங்களுக்கு கைங்கர்யம் -கிட்டின வாறே -உன் தன்னோடு உற்றோமே ஆவோம் என்னக் கடவர்கள் இறே
இவை பின்னை அவன் நமக்குத் தரப் புகா நின்றானோ என்ன

பாடுகையாகிற புருஷார்த்தத்தை லபித்து-

———-

பாடுவது எத்தை என்ன –

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய –
கிருஷ்ணனுடைய வீர சரித்ரங்களைப் பாடி-
மாவாய் பிளந்தானை-
நமக்காக கேசியைப் பிளந்து-நம்மையும் தன்னையும் உண்டாக்கித் தந்தவனை –
தன்னை நாம் கிட்டு அனுபவிக்கைக்கு ஈடாக-
இடையிலே வன்னியம் அறுத்த ஆண் பிள்ளையைப் பாடக் கடவோம்

(கைம்மா யானைக்கு -இங்கு மா துரங்கம் கேசி -கீழேயும் நாராயணன் மூர்த்தி கேசவ -கேசி வ்ருத்தாந்தம்)

மல்லரை மாட்டிய –
அவ் ஊரில் பெண்களுக்கு உதவினபடியே-
அது தங்களுக்கு உதவிற்று என்று இருக்கும் படி

தேவாதி தேவனைச் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருக்கிறவனை –
பெரிய மேன்மையாய் உடையவனாய் இருக்கிறவன்-
ஸ்ரீ மதுரையிலே போய் குவாலயாபீட சானூர முஷ்டிகர்களை அழியச் செய்து-
படை வீட்டில் பெண்களோட்டை பழக்கத்தாலே
பெரிய விதக்னனாவன் -சமர்தனானவன் –
இடக்கையும் வலக்கையும் அறியாத நம் பக்கலிலே வரக் கூடுமோ -என்ன –

மாவாய் பிளந்தானை
நம் விரோதிகளை போக்கி நம் அச்சம் தவிர்த்த உபகாரகன் அன்றோ தாரானோ

மாவாய் –
ஸ்ரீ நாரத பகவான் நாம் முடிந்தோம் என்று கதறிக் கொண்டு வந்து விழும் படி இறே வந்து தோன்றின படி –
நமக்காக கேசியைக் கொன்று
திருவாய்ப்பாடியிலும் ஸ்ரீ ப்ருந்தாவனத்திலும் உண்டான வன்னியம் அறுத்து
பெண்ணும் பேதையும் சகடச் சாத்தாகப் போம்படி பண்ணினவன்
நம் கார்யம் செய்யானோ

அது பண்டு இறே –
இப்போது அவன் அல்லனே –
மதுராம் ப்ராப்ய கோவிந்த கதம் கோகுல மேஷ்யதி நகர ஸ்த்ரீ கலா லாப மது ஸ்ரோத்ரேண பாஸ்யதி-என்கிறபடியே
பெரிய நாகரீகனாய் படை வீட்டிலே ஏறி
நகர ஸ்த்ரீகளும் தானுமாய் போனவன் நம்மைப் பார்க்குமோ –
நம் கார்யம் செய்யுமோ என்ன

மல்லரை மாட்டிய
அங்கும் ந சமம் யுத்தம் இத்யாஹு-
அங்கு போயும் நம்மோட்டை பெண்கள் கார்யம் அன்றோ செய்தது –
அதுவும் நேம் பேறு அன்றோ என்ன –

ஸக்ய பஸ்யத -என்கிறபடியே
அவ் வூரில் பெண்களுக்கு உதவின இது தங்களுக்கும் உதவிற்று என்கிறார்கள்

தேவாதி தேவனைச்-
இப்போது அவனை ப்ராஹ்மணர் சர்வேஸ்வரன் என்று காணும் சொல்வது –

தேவாதி தேவனை –
விது கிருஷ்ணம் சர்வ தேவ தேவகீ புத்ர ஏவ —கிருஷ்ண ஏவஹீ என்றும் –
யதோவா இமானி -இத்யாதிகளின் படியே
காரண பூதன் என்று உபாஸ்யனாகக் காணும் சொல்கிறது
அப்படி பெருமை யுடையவன் அபலைகளான நம்மைப் பார்க்குமோ என்ன –

ஜாதோசி தேவ தேவேச –
ஸோஹம் தே தேவதேவேச –
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே –

மல்லரை மாட்டிய-தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
அவன் பண்டு அன்றோ காணாச் சிறையாய்க் கிடந்தது (கோகுலத்தில் அந்தர்யாமி போல் )அவன் இப்போது பெரியவனாய் –
மதுராம் ப்ராப்ய கோவிந்த -இத்யாதி படியே
நாகரிகனாய் நமக்கு வினைக் கொம்பாய் போனான் –
நம் கிருஷ்ணனை இப்போது ப்ராஹ்மணர் அடைய சர்வேஸ்வரன் தேவதேவன் என்று காணும் சொல்லுகிறது என்ன

மல்லரை மாட்டிய
அங்குப் போயும் நம் கார்யம் அன்றோ செய்தது
ஸக்ய பஸ்யத -என்கிறபடியே அவ் வூரில் பெண்களுக்கு உதவின இது தங்களுக்கும் உதவிற்று என்கிறார்கள்

தேவாதி தேவனை
ஜாதோசி தேவ தேவேச சங்கு சக்ர கதாதர –
ஸோஹம் தே தேவதேவேச -(அர்ச்சனை பண்ண அறியோம் கிருபா மாத்ரத்தால் அருளாய் )
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே –
அவன் வேண்டப்பாட்டோடு இருக்கிலோ -என்னில்

அது நம் பேறு அன்றோ
அவன் இருந்தபடியே உத்தேச்யன் அன்றோ நமக்கு –
நாம் போய் சேவிக்கிறோம் –

நாராயணன் மூர்த்தி கேசவன் கீழே -அதன் விவரணம் இங்கு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனை-

———

சென்று –
விரஹம் தின்று குறைக் கொள்ளியான நம் சரீரத்தை அவன் கண்டு புண் படும்படி
அவன் இருந்த விடத்தே செல்லக் கடவோம்-
அவன் வேண்டற்பாட்டிலே இருக்கிலோ என்னில்

சென்று –
அவன் வர பிராப்தமாய் இருக்க நாம் சென்று –
இவர்கள் நம -சொல்லுகையும் அத்தலைக்கு மிகுதியாய் இறே இருப்பது –

நாம் சேவித்தால் –
அத்தலை இத்தலை ஆனால் –

நாம்
ஏஹி பஸ்ய சரீராணி -என்று விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறோம்
மாசுடை யுடம்போடு தலை யுலறி
உபவாச கிருஸாம் தீ நாம்

(மாசுடை யுடம்பொடு தலையுலறி வாய்ப்புறம் வெளுத்தொரு போதுமுண்டு
தேசுடை திறலுடைக் காமதேவா நோற்கின்ற நோன்பினைக் குறிக்கோள்கண்டாய்
பேசுவ தொன்றுண்டிங் கெம்பெருமான் பெண்மையைத் தலையுடைத் தாக்கும்வண்ணம்
கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள் என்னுமிப் பேறெனக் கருளுகண்டாய்)

சென்று நாம் சேவித்தால்-
அத்தலை இத்தலையாய் –
அவன் வருகையும் சேவிக்கையும் தவிர்த்தால்
நாம் சென்று சேவிக்கை அத்தனை அன்றோ
அப்படி செய்தால் நம் கார்யம் செய்யாது ஒழியுமோ –

செய்திலன் ஆகில் ஸ்ரீ பரத ஆழ்வான் பட்டது படுகிறோம் -(படுத்தின பாடு படுத்துவோம் என்றபடி )
சிரஸா யா சதஸ் தஸ்ய வசனம் நக்ருதம் மயா-என்னும் படியே
அவன் நெஞ்சில் புண் படுத்துகிறோம் –

ஏபிச்ச சசிவைஸ் சார்த்தம் -கீழ்ச் சொன்னவை எல்லாம்
நமக்கு இல்லையே யாகிலும் (சிஷ்யன் தாசன் பிராதா மூன்றுமே நமக்கு இல்லையே )
ஆர்த்தி கண்டால் காகத்துக்கு இரங்கின மாத்திரம் நமக்கு இரங்கானோ

சிரஸா யாசதஸ் தஸ்ய வசனம் ண க்ருதம் மயா–என்னப் பண்ணுகிறோம்
ஏபிஸ் ச சசிவைஸ் சார்த்தம் -பெருமாள் இரங்குகைக்கு ஆர்த்தர் பலரையும் திரட்டிக் கொண்டு போனபடி
அவர்களுக்கு கைகேயீ சம்பந்தம் இல்லையே -இரங்கவுமாமே
சிரஸா யாசிதோ மயா -பசியாற வயிற்றைக் காட்டுமா போலே
திருவடிகளில் அடிமை செய்யப் பெறாமையால் உறாவின தலையைக் காட்டுகிறார்

யாவந் ந சரணவ்
ப்ராது
உம்முடைய தம்பி அல்லேனோ
சிஷ்யஸ்ய
உம்மோடே யன்றோ நாம் மந்த்ரங்கள் கேட்டது
தாஸஸ்ய –
உமக்கு விற்கவும் ஒத்தி வைக்கவும் அடியேன் அல்லேனோ
பிரசாதம் கர்த்தும் அர்ஹஸி
கீழ்ச் சொன்னவை ஒன்றுமே இல்லாவிடில் ஆபத்துக்கு கண்டால்
காகத்துக்கு இரங்கினால் போலே ஆகிலும் இரங்க வேண்டாவோ
ப்ரணயித்வம் போனாலும் பொதுவான ஆர்த்த ரக்ஷணம் விடுமோ

சென்று நாம் சேவித்தால்
பத்ப் யாமபி க மாச்சைவ -என்றும்
விபீஷணம் உபஸ்திதம்-என்றும்
உபஸ் தேயை ருபஸ்தித-(தண்டகாரண்ய -நான் கிட்ட வேண்டி நீங்கள் வந்தீர்களே வெட்க்கி )என்றும்
அவன் நெஞ்சு புண்படுகைக்கு உடலாக
அவன் இருந்த இடத்தே சென்று அவன் செய்வதை நாம் செய்து விடுகிறோம்

(நாம் சென்று சொல்லாமல் -சென்று நாம் -சென்றது நாம் -நாம் முக்கியம் –
அவன் வந்து இருக்க வண்டி -காத்து இருக்க வேண்டிய நாமே சென்று )

சென்று
பத்ப் யாமபி க மாச்சைவ -என்றும்
விபீஷணம் உபஸ்திதம்-என்றும்
உபஸ்தே யை ருபஸ்தித-(தண்டகாரண்ய -நான் கிட்ட வேண்டி நீங்கள் வந்தீர்களே வெட்க்கி )என்றும் –
ஸம் ப்ராப்தம் என்றும்
அவன் நெஞ்சு புண்படுகைக்கு உடலாக
அவன் இருந்த இடத்தே சென்று அவன் செய்வதை நாம் செய்து விடுகிறோம்

நாம்
ஏஹி பஸ்ய சரீராணி -என்று விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறோம்
ப்ராது சிஷ்யஸ்ய தாஸஸ்ய —
ப்ரணயித்வம் போனாலும் பொதுவான ஆர்த்த ரக்ஷணம் விடுமோ

நாம்
ஏஹி பஸ்ய சரீராணி -என்று விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறோம்
மாசுடை யுடம்போடு தலை யுலறி
உபவாச கிருஸாம் தீ நாம்

ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோ –
நம்மாலே பேறு என்று நாம் வரப் பார்த்து இருக்குமவர்கள்-
நாம் இருந்த இடத்தே வந்தது இவர்கள் செல்லாமை இறே-என்று இரங்கி நமக்கும் உகந்து அருளும் காண் –
பிரணயித்வம் போனாலும் ஆர்த்த ரஷணம் தவிருமோ-அனுஷ்டியாது ஒழியுமோ
ஆன பின்பு அவன் அருளுக்கு ஹேது பூதையான நீ எழுந்து இராய்-

நாம் சேவித்தால்
அத்தலை இத்தலையானால் -ஆர்க்கு அழகு –
அவன் ப்ரணயித்தவம் போனாலும் பொதுவான ஆர்த்த ரக்ஷணம் போமோ

ஆவா வென்று ஆராய்ந்து அருளும்
ப்ரணயித்தவம் குடி போனாலும் சத்தா ப்ரயுக்தமான ஆர்த்த ரக்ஷணம் போமோ
ஆந்ரு ஸம்ஸ்யம் பரோ தர்ம என்று சொல்லி வைத்து அனுஷ்டியாதே பேசாது இருக்குமோ
அவன் பக்கல் ஒரு தட்டில்லை –
நம் குறையே புறப்பட்டுக் கொள் -என்கிறார்கள் –

ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-

கிருபயா பர்ய பாலயத் என்று உகவாதார் பெறுவது உகந்தார்க்குக் கிடையாதோ –
முறை கெட நாம் சென்று சேவித்தால்
வந்தேறியான பிரணயித்தவம் அன்றோ போகலாவது –
ஆர்த்தர் பக்கல் பண்ணும் கிருபையும் போமோ
தான் உளன் ஆனால் உண்டானது போமோ

பாடிப் பறை கொள்கிறோம் -போய் சேவிக்கிறோம் –
அத்தலைக்கு பிரியமாக கைங்கர்யம் பண்ணுகிறோம்
இப்படிகளாலே அத்தலையை உகப்பிக்கை இறே ஸ்வரூபம் –
ப்ரகர்ஷயிஷ்யாமியிலே இறே அந்வயம்
பிரியதே சததம் ராம -பலம் கொடுக்க அவசரம் பெறான் என்கிறது –
ஆன பின்பு எழுந்திராய் என்கிறார்கள் –

(அக்ருத்ரிம த்வச் சரணார விந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதி மாத்மவந்தம்
பிதாமஹம் நாத முநிம் விலோக்ய
ப்ரஸீத மத் வ்ருத்தம சிந்தயித்வா–65-

மத் வ்ருத்தம் –என்னுடைய நடவடிக்கையை
அசிந்தயித்வா–கணிசியாமல்
அக்ருத்ரிம த்வச் சரணார விந்த ப்ரேம ப்ரகர்ஷ அவதிதம் -உனது திருவடித் தாமரையில் உண்மையாக
உண்டான பரம பக்திக்கு எல்லை நிலமாய் இருப்பவரும்
ஆத்மவந்தம்–ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி உணர்ந்தவரும் -ஜிதேந்த்ரியர் -சத்தை பெற்றவர்
பிதாமஹம் நாத முநிம் -எனக்குப் பாட்டனாருமாகிய ஸ்ரீ மந் நாத முனிகளை–
ஸ்ரீ ஈஸ்வர பட்டரது திருக்குமாரர் நம் ஆளவந்தார்
விலோக்ய–கடாக்ஷித்து
ப்ரஸீத –அடியேனை அனுக்ரஹித்து அருளாய்)

————

மாவாய் பிளந்தானை
அஹங்கார நிராசகனை

மல்லரை மாட்டிய
காம க்ரோத நிவர்தகனை

தேவ தேவனை
நித்ய ஸூரி நிர்வாஹகனை

சென்று
பிராப்ய த்வரையாலே சென்று

நாம் –
அவன் வரக்கடவ -நாம்

சேவித்தால் –
அத்தலை இத்தலையானால்

ஆவா வென்று கிருபை பண்ணி
ஆராய்ந்து அருள் -விசாரிக்கும் –

ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-
ஆந்ரு ஸம்ஸ்யம் பரோ தர்ம -என்று சொல்லி வைத்தும் அது அனுஷ்டியாதே இருக்குமோ
அவன் பக்கல் ஒரு தட்டில்லை-
நம் குறை அத்தனை –
கடுகப் புறப்பட வமையும்-என்கிறார்கள் –

மூன்று அடையாளங்கள் -நமக்கு மூன்று கர்தவ்யங்கள் -அவனுக்கும் மூன்று கர்த்தவ்யங்கள்-ஆ ஆ என்பான் -ஆராய்வான் -அருள்வான்

——-

ஆவா வென்று ஆராய்ந்து அருளும்-கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய்-என்று அந்வயம்

——————-

வந்து நின்றோம் :
காசை இழந்தவன் பொன்னை இழந்தவன்
ஆசை மணியை இழந்தவன் — பேச நின்ற
மால் நிற்க பத்தர் பரவுவார், வீடணன் போல்
கோல் கொழுந்த தற்றே அவர்.

——————

(ஸ்வாபதேசம்)

மூன்றாம் பாட்டில் –
கோதுகலமுடைய பாவாய் -என்கிறது பூதத் தாழ்வாரை –
அது எங்கனே என்னில் –
ஸ்த்ரீத்வாபத்திக்கு உடலாக -அன்பே தகளியாக -இத்யாதியாலே பக்தியைப் பேசி –

பெரும் தமிழன் அல்லேன் பெரிது என்ற
அநந்தரம்

பெருகு மத வேழம் -என்று
அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதத்தையும் ஜாதி யுசித தர்மத்தையும் பேசியும்

ஏறின் பெருத்த எருத்தம் கோடு ஓசியப் பெண் நசையின் பின் போய் எறுத்து இருத்த நல்லாயர் ஏறு – என்று
நப்பின்னைப் பிராட்டியைப் பெறுகைக்கு எருதுகளின் மேலே அவன் வியாபாரித்த வியாபாரத்தைப் பேசியும்

இதில் தேவாதி தேவன் என்னப்படுவான்
முன்னொரு நாள் மாவாய் பிளந்த மகன் –என்றும்

மாலே நெடியோனே கண்ணனே விண்ணவர்க்கு மேலா வியான் துழாய்க் கண்ணியனே மேலா விளவின் காய் கன்றினால்
வீழ்த்தவனே என் தன் அளவன்றால் யானுடைய அன்பு என்று அருளிச் செய்கையாலும்

கோதுகலமுடையாய் பாவாய் என்றது பூதத் ஆழ்வாரை -என்றபடி –

மாதவன் பூதம் என்கிறது -கோதுகலமிறே –
ஆகையாலும் மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு -என்றவர் இறே –

ஆக மூவரும் –
ஞான -தர்சன-ப்ராப்த்திய அவஸ்தைகளோடே கூடி யாயிற்று இருப்பது –

—————————

குலசேகரர்க்கு அடுத்த முந்தினவரான நம்மாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
கோதுகலமுடைய பாவாய்! என்ற விளி நம்மாழ்வாரை வற்புறுத்தும்.
கோதுகுலமுடைய என்று வழங்கிவரும் பாடம் பரம க்ருபையுடன் மறக்கத் தக்கது.
அப்பாடம் நெடுநாளாகவே நாடெங்கும் பரவியதனாலாய அநர்த்தம் பெரிதுமுண்டு.
ஸ்ரீ பரகாலஸ்வாமி வியாக்கியானம் செய்தருளுமிடத்து குலம் குலமாக வுனக்குப் பரிசர்யை பண்ணும்படி என்றுரைத்திட்டார்.
அது, கோதுகலமுடைய என்கிற (தவறுதலான) பாடத்தில் அபிநிவேசத்தினால் போலும்.
வஸ்துதஸ்து, வடமொழியில் கௌதூஹலம் என்ற சொல் தமிழில் கோதுகலமெனத் திரீந்தது.
இதில் குகரம் நுழைய ப்ரஸக்தியில்லை.
கோதுகலம் உடைக்குட்டனேயோ என்றார் பெரியாழ்வாரும்.)

கோதுகலமாவது ஆசை; ஆசையை யுடைய என்றது.-எம்பெருமானிடத்தில் ஆசையை யுடைய,
அல்லது எம்பெருமானுடைய ஆசையைத் தன்னிடத்திலே கொண்டுள்ள என்று இரு வகையாகவும் பொருள்படும்.

பட்டர் நம்மாழ்வாரைப் பற்றிப் பேசும்போது ரீஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வமிவோதிதம் என்று
க்ருஷ்ண குதூஹலமே நம்மாழ்வாராக வடிவெடுத்தது என்றார்.
க்ருஷ்ண த்ருஷ்ணா என்றதும் க்ருஷ்ணனிடத்தில் த்ருஷ்ணை, க்ருஷ்ணனுடைய த்ருஷ்ணை என இருவகையாகவும் விரியும்.
இதனால் தேறின பொருளை
கைம்மா துன்பொழித்தாயென்று கைதலை பூசலிட்டே, மெய்மால யொழிந்தேன் எம்பிரானுமென்மேலானே
என்ற பாசுரத்தினால் நம்மாழ்வார்; தாமே வெளியிட்டருளினர்.
ப்ரியோ ஹி ஜ்ஞாநிதோத்யர்த்தம் அஹம் ஸ ச மம ப்ரிய: என்றபடி.
நானும் எம்பெருமானிடத்துக் குதூகலங் கொண்டேன்,
அவனும் என்னிடத்துக் குதூஹலங் கொண்டான் என்றருளிச் செய்தவர் நம்மாழ்வார்.

பாவாய்! என்ற விளியும் இவர்க்குப் பொருந்தும்.
திருவாய் மொழியில் சூழ்வினை யாட்டியேன் பாவையே என்றும்
என்பாவை போயினித் தண்பழனத் திருக்கோளுர்க்கே என்றும்
பலவிடங்களில் தம்மைப் பாவையாகச் சொல்லிக்கொண்டவர் இவ்வாழ்வார்.

எழுந்திராய் என்ற சொல்லாற்றல் நன்கு நோக்கத்தக்கது;
உட்கார்ந்திருப்பவரையன்றோ எழுந்திரா யென்பது.
மற்றையாழ்வார்களெல்லாரும் அர்ச்சையில் நின்ற திருக் கோலமாகவேயுள்ளார்;
நம்மாழ்வாரொருவரே வீற்றிருந்த திருக்கோலம்.
புத்மாஸநோபவிஷ்டம் என்கிற பூர்வாசார்ய ச்லோக ரத்னமும் இங்கு அநுஸந்தேயம்.

(கீழ்வானம் வெள்ளென்று.) உதய காலத்தில் கிழக்கு வெளுக்கும்.
இங்கும் வகுளுபூஷண பாஸ்கரோதய மாதலாலும்,
அதுதானும் கலி யுகத்தின் உதயகாலத்திலாதலாலும் கிழக்கு வெறுத்ததாகச் சொல்லிற்று.

கீழ் வானமென்றபோதே மேல் வானம் நினைவுக்கு வரும்.
நித்தியவிபூதி மேல் வானமாகும். லீலாவிபூதியானது நம்மாழ்வாருடைய திருவாய்மொழி யவதாரத்தாலே
வையம் மன்னிவீற்றிருந்து விண்ணுமாள்வர் மண்ணூடே இத்யாதிப்படியே தானே பரமபதமாயிற்று.
ஆகவே கீழ்வானமான இவ்விபூதி வெள்ளென்றது.

(எருமை சிறுவீடு மேய்வான்) வீடு என்று மோக்ஷம்; சிறு வீடு என்று கைவல்ய மோக்ஷம்.
இந்த ஸங்கேதமிட்டருளினவர் நம்மாழ்வார்;
திருவாய்மொழியில் (4-1-10) குறுக மிகவுணர்வத்தொடு நோக்கி என்ற பாசுரத்தின் பொருள் கொண்டு இஃது அறியத்தக்கது.

எருமையென்பது தாமஸ ப்ரக்ருதிகளை.
நம்மாழ்வார் திருவவதாரம் செய்தருள்வதற்கு முன்னே பலரும் தாமஸ ப்ரக்ருதிகளாய் நல்வீடு செல்லாது
சிறுவீடு முதலியவற்றிற் சென்று பாழாயினர் என்பது இங்கு ஸுசிதம்.

(மிக்குள்ள பிள்ளைகளுமித்யாதி.) மற்றைப் பிள்ளைகளையும் போகவொட்டாமல் தடுத்து
இப்பிள்ளை வாசலில் வந்துதுவள்வதனால் இவருக்குண்டான விலக்ஷணமான ஏற்றம் தோற்றுவது போல,
மற்றை யாழ்வார்களிற் காட்டில் நம்மாழ்வார்க்குண்டான ப்ரபந்நஜந கூடல்தத்வமாகிற ஏற்றம் தோற்றுவிக்கப் பட்டது.

போவான் போகின்றாரை என்ற பிரயோகம் வெகு ஆச்சரியமானது.
போவதற்காகப் போகிறவர்கள் என்று சொல்லுவதுண்டோ? இல்லை. அப்படியிருக்க ஏன் சொல்லிற்று?
போவதுதானே ஸ்வயம் ப்ரயோஜனமென்று காட்டுவதற்காகவே சொல்லிற்று.
இத்தகைய பிரயோகம் முதன் முதலாக நம்மாழ்வார் திருவாக்கில் தான் வந்தது;
திருவிருத்தத்தில் போவான் வழிக்கொண்ட மேகங்களே! என்றார்.

(உன்னைக் கூவுவான் வந்துநின்றோம்.) கூவிக்கொள்ளும் காலமின்னங் குறுகாதோ
என்னைக் கூவியருளாய் கண்ணனே கூவிக்கொள்ளாய் வந்தந்தோ என்று
பலகாலும் விரும்பினபடியே கூவுவான் வந்து நின்றோமென்கிறாள்,

(மாவாய் பிளந்த தேவாதி தேவனை) இப்போது ஆண்டாள் நோற்பதுபோல
நம்மாழ்வாரும் ஒரு திருவாய் மொழியில் நோன்பு நோற்றார்;
வீற்றிருந்தேழுலகும் என்ற திருவாய் மொழியில் ஏற்ற நோற்றேற்கு என்று முதலிலும்
வண்டமிழ் நூற்க நோற்றேன் என்று முடிவிலும் வருவது காண்க.
அங்ஙனம் நோற்ற திருவாய்மொழியில் தேவாதி தேவனை அநுபவிக்கின்ற ஆழ்வார்
மாவாய் பிளந்தானென்ற விசேஷணத்தையே முதற்பாட்டில் இட்டருளினர்;
வெம்மா பிறந்தான் தன்னை என்றது காண்க.

ப்ரதமப்ரபந்தத்தில் இமையோர் தலைவா! என்றும்;
சரம ப்ரபந்தத்தில் அயர்வறுமமரர்களதிபதி என்றும்
தேவாதி தேவனையே முந்துற முன்னம் சேவித்தாராழ்வார்.

(சென்று நாம் சேவித்தால்) வான நாயகனே! அடியேன் தொழ வந்தருளே என்று
தேவாதி தேவனை நீர் உம்மிடம் வருமாறு அழைத்தீர்;
அங்ஙனமல்லாமல் அவனிடம் நாம் சென்று சேவிக்கலாம் வாரும் என்றழைக்கிறாள் போலும்.

(ஆவா வென்று) ஆவாவென விரங்கார் அந்தோவலிதே கொல், மாவாய் பிளந்தார் மனம் என்றும்;,
அடியேற்கு ஆவா வென்னாயே என்றும்
நீர் விரும்பினபடியே மாவாய்பிளந்த பெருமான் உமக்கு ஆவாவென்பன் என்று காட்டுகிறபடி

(ஆராய்ந்து) ஆரென்னை யாராய்வார் என்ற உம்முடைய குறையும் தீரும் என்று காட்டியபடி.

——————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading