ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் —புள்ளும் சிலம்பின காண் —

இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம், ஸுக்ல பக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய், மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——–

அவதாரிகை –
முதல் பாட்டில் –
பகவத் சம்ஸ்லேஷமே பிராப்யம் -அநந்ய சாத்தியமான இதுக்கு சாதனமும் அவனே –
அந்த சாதனத்தில் அன்வயிக்கைக்கு அதிகாரிகளும் அந்த பிராப்யத்தில் இச்சை உடையவர்களே -என்று சாத்ய ஸ்வரூபத்தையும்-சாதன ஸ்வரூபத்தையும்-அதிகாரி ஸ்வரூபத்தையும் சாதித்து —

இரண்டாம் பாட்டில் –
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் ஈஸ்வரனே என்று இருக்கும்-இச்சா திகாரிகளுக்கு சம்பாவிதமாய் குர்வத் ரூபமான கரணங்களுக்கு-வகுத்த வ்யாபாரங்களைக் காட்டிக் கொடுக்க வேண்டிய படியாலும்- கால ஷேபத்துக்காகவும்-ராக ப்ரேரிதமாக அனுஷ்டேயமான கர்தவ்யாம்சத்தை சொல்லிற்று-

மூன்றாம் பாட்டில் –
பகவத் அனுபவ சஹகாரிகள் பக்கல் உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலே-
அவர்களுக்கு யாவை யாவை சில அபேஷிதங்கள்-அந்த சம்ருதிகள் அடைய அபேஷிக்கக் கடவது -என்றது-

நாலாம் பாட்டில்-
தேவதாந்தர ஸ்பர்ச ரஹிதராய்-இப்படி அநந்ய பிரயோஜனராய்-பகவத் ஏக பிரவணராய்-
பகவத் அனுபவ உபகரணமானவற்றிலே இழிந்தவர்களுக்கு
அந்த தேவதாந்தரங்களும் ஏவல் செய்யும் என்னும் இடம் சொல்லிற்று-

ஐந்தாம் பாட்டில்
இப்படியே பகவத் அனுபவத்தில் இழிந்தவருக்கு வரும் அனுபவ விரோதிகளை
அவ் வநுபவம் தானே நிரோதிக்கும் என்னும் இடம் சொல்லிற்று-

ஆக-இப்படி கீழ் ஐஞ்சு பாட்டாலே –
பிராப்யமான கிருஷ்ண அனுபவத்துக்கு-ஏகாந்தமான உபகரணங்களைச் சொல்லி

அநந்தரம் –
மேல் பத்து பாட்டாலே-
அந்த உபகரணங்களைக் கொண்டு-அனுபவிக்குமவர்களை-எழுப்புகிறது-

தம்தாமுக்கே அவ்வனுபவத்துக்கு பிரதான உபகரணமான ப்ரேமமும்-
கர்தவ்யதயா உக்தமான உபகரணங்களும்-
அனுபாவ்யனான கிருஷ்ணனும்-
அதுக்கு ஏகாந்தமான காலமும்-
ஊரிலே கோப வ்ருத்தர் உடைய இசைவும் உண்டான பின்பு-
தனித்தனியே அனுபவிக்க அமைந்து இருக்க-
ஒருவரை ஒருவர் எழுப்ப வேண்டுகிறது என் என்னில்-

பெருக்காற்றில் இழிவாருக்கு துணை தேட்டமாம் போலே
காலாலும் நெஞ்சழியும் கண் சுழலும் -என்றும் –
உயிர் காத்து ஆட் செய்யுமின் -என்றும்
ஆழியொடு பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்றும்-
இழிந்தாரை குமிழி நீரூட்டக் கடவதான விஷயத்தில் இழிகிறவர்கள் ஆகையாலே
துணை தேட்டமாய் ஒருவரை ஒருவர் எழுப்புகிறார்கள் –

அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று சொல்லுகிறபடியே
பர அவஸ்தையிலே புருஷோத்தமனை அனுபவிக்கும் போதும்
விஸ்ருங்கல ஜ்ஞான பலங்களை உடையரான நித்ய ஸூரிகளுக்கும் துணை தேட்டமாய் இருக்க –
இமையோர் தமக்கும் செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால்
வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல் -என்று
1-அந்த நித்ய ஸூரிகளுக்கும் அனுபவிக்க ஒண்ணாத படி
மேன்மைக்கும்
நீர்மைக்கும்
அழகுக்கும்
நிரவதிக ஆகாரமான கிருஷ்ணனை அனுபவிக்கும் இடத்தில்-
இடக்கையும் வலக்கையும் அறியாத இடைச்சிகளுக்கு-துணைத் தேட்டம் என்னுமிடம் சொல்ல வேணுமோ-

அதுக்கு மேலே
2-நிரதிசய போக்யமான அவ்விஷயத்தை தனியே-
அனுபவிக்க மாட்டாத-பிரக்ருதிகள் ஆகையாலும் எழுப்புகிறார்கள் –

அதுக்கு மேலே
3-இவ் வஸ்துவை அனுபவிக்கைக்கு ருசி உடையராய் இருக்குமவர்கள் இழக்க ஒண்ணாது
என்னும் நினைவாலும் எழுப்புகிறார்கள் –

அதுக்கு மேலே
4-பகவத் விஷயத்தை அனுபவிக்கும் போது ததீயரை முன்னிட்டு அல்லது
அனுபவிக்க மாட்டாதவர்கள் ஆகையாலும் எழுப்பு கிறார்கள் –

5-விஷயம் தனியே அனுபவிக்க அரியது ஆகையாலும்-
6-இவர்கள் தனி அனுபவிக்கும் பிரக்ருதிகள் அல்லாமையாலும் –
7-ருசி உடையார் இழக்கை நெடும் தட்டு என்று இருக்கையாலும் –
8-ததீயரை ஒழிய அனுபவிக்க மாட்டாமையாலும் ‘-
முந்துற உணர்ந்தவர்கள் உறங்குகிறவர்களை எழுப்பத் தட்டில்லை –

எல்லாருக்கும் ஒக்க கிருஷ்ண அனுபவத்தில் கௌதுகம்-அவிசிஷ்டமாய் இருக்கையாலும்-
சிலர் எழுப்ப
சிலர் உறங்குகை கௌதுகத்துக்கு குறை யன்றோ என்னில்-

அனுபாவ்யமான கிருஷ்ண குணங்கள்-நஞ்சுண்டாரைப் போலே சிலரை மயங்கப் பண்ணுகையாலும்-
சிலரை இருந்த இடத்தில் இருக்க ஒட்டாதே துடிக்கப் பண்ணுகையாலும்-
அவர்கள் கௌதுகத்துக்கு குறை இல்லாமையாலே
சிலரை சிலர் எழுப்பத் தட்டில்லை –

இதில்-இப் பாட்டுக்கு வாக்யார்த்தம்-
பகவத் விஷயத்தில் புதியவள் ஆகையாலே இந் நோன்பின் சுவடு அறியாதாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்-

செய்யாதன செய்யோம் -என்று அடியிலே பண்ணின ப்ரதிஞ்ஜையைத் தலைக் கட்டுகிறார்கள் –பெருமாள் நத்யஜேயம் என்ற ப்ரதிஞ்ஜையை –ஏதத் விரதம் மம -என்று தலைக் கட்டினால் போலேயும்-அர்ஜுனன் பண்ணின ப்ரதிஞ்ஜையை கிருஷ்ணன் செய்து தலைக் கட்டினால் போலேயும்

பஞ்ச லக்ஷம் குடியில் பெண்கள் வந்து திரண்டு நாம் நீராடவே நம் விரோதிகளும் போம் -என்று புறப்பட
சிலர் வாராது ஒழிய போக மாட்டிற்று இலர்-

உறங்குகிறவர்களை எழுப்பிக் கொண்டு போகவே
1-அத் தலைக்கும் நமக்கும் புருஷகாரம் ஆவார்கள் என்றும்
2-போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்காகவும்
3-இவர்கள் இழவு பொறுக்க மாட்டாமையாலும்
4-ஏகஸ் ஸ்வாது ந புஞ்சீத-என்கிறபடியே ஒருவரை ஒழிய ஒருவர் புஜிக்க மாட்டாமையாலும் 
5-கிருஷ்ணரைக் காட்டிலும் இவர்கள் உத்தேசியர் ஆகையாலும் –
6-தனி அனுபவிக்கும் விஷயம் இல்லாமையாலும்
உணராதவர்களை உணர்ந்தவர்கள் எழுப்புகிறார்களாகச் செல்லுகிறது-

பரம பதத்துக்கு அகப்பட அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ
என்று கூட்டுத் தேடா நின்றது
கிருஷ்ண அனுபவத்துக்கு கூட்டுத் தேட சொல்ல வேணுமோ-

இமையோர் தமக்கும் -செவ்வே நெஞ்சால் நினைப்பு அரிதால் வெண்ணெய் யூண் என்னும் ஈனச் சொல் -என்று
நித்ய ஸூரிகளுடைய எத்திறம் இருக்கும் படி
இத்தை அனுபவித்த ஆழ்வார் எத்திறம் என்கிறார் –
தன்னையும் ஜென்ம கர்ம ச மே திவ்யம் -என்னப் பண்ணிற்று இறே-

ஒரு விடாய் ஆற்றி இருக்க வேண்டும் மனுசர் போரத் திரண்டு இவ்வூருக்காக
கிருஷ்ண சம்ஸ்லேஷத்தில் புதியவள் ஒருத்தியை –
போது விடிந்தது காண்-என்று எழுப்புவார்கள் –
உத்திஷ்ட நரசார்த்தூல-என்று விச்வாமித்ரன் போது விடிந்தது என்று எழுப்பினால் போலே-

(விடை ஆற்றி உத்சவம் திருவரங்கத்தில் இல்லை
ப்ரஹ்ம உஸ்தவங்களே மீண்டும் மீண்டும் வருவதால் இருக்கலாம் )

முதல் பாட்டில் பிராப்ய ஸ்வரூபத்தையும் பிராபக ஸ்வரூபத்தையும் அதிகாரி ஸ்வரூபத்தையும்-சங்க்ரஹேன அருளிச் செய்து
இரண்டாம்பாட்டில் -அவ்வதிகாரிக்கு சம்பாவிதமான ஸ்வரூப தர்மங்களை அருளிச் செய்து 
மூன்றாம் பாட்டில் -அவ்வதிகாரிகள் அனுஷ்டானத்தாலே அவர்கள் இருக்கும் நாட்டில் பிறக்கும் சம்ருத்தியைச் சொல்லி –
நாலாம் பாட்டில் -அவ்வதிகாரிகளுக்கு பகவத் அனுகூலரானவர்கள் கிஞ்சித் கரிக்கும் படியைச் சொல்லி-
அஞ்சாம் பாட்டில் -அவ்வதிகாரிகளுக்கு பூர்வாக உத்தராகங்கள்-சித்தோ உபாய பலத்தாலே-நெருப்பில் இட்ட பஞ்சு போலே தன்னடையே நசித்துப் போம்படியைச் சொல்லி 

இனி மேல் பத்துப் பாட்டாலே
பகவத அனுபவ சஹகாரிகளை எழுப்புகிற படியை சொல்லுகிறது –

அதில் இப்பாட்டில் –
நூதனமாக பகவத் சம்பந்தம் பெற்ற அதிகாரியை எழுப்புகிறார்கள் –

உணர்ந்தவர்கள் அடையச் சென்று உணராதவர்களை எழுப்புகிறார்கள் –
இதில் பகவத் விஷயத்தில் புதியவள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –

1-செய்யாதன செய்யோம் -அனைவரையும் கூட்டியே செல்வோம் –
2-பகவத் அனுபவம் -இனியது தனியாக அனுபவிக்கக் கூடாதே –
3–கூடி இருந்து அனுபவத்தில் போதயந்த பரஸ்பரம் -ஆனந்தம் பெருகும்
4-நதி ஆழம் -கூட துணை வேணுமே -இவனோ கடல்
5-அடியாருக்கு அடியாராக இருந்தால் மிகவும் விரும்பி -போக்கு காட்டாமல் காட்டியே தீருவான்
6-பாகவதர்கள் ப்ராப்யம் -கடைசி நிலை -இதனாலும் கைங்கர்யம் செய்ய வேண்டுமே –
இப்படி பல காரணங்கள் உண்டே –
விஞ்சி பாகவத உத்தமர்களுக்கு திருப்பள்ளி எழுச்சி –

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிய வேண்டுமே
கீழே ஐந்து பாசுரங்களால் வேதம்
வேதம் வல்லார்கள் -இது முதல் 10 பாசுரங்கள் (6-15)-கடகர்கள் -(வைகல் பூம் கழிவாய் –6-1-)பத்து ஆச்சார்ய லக்ஷணங்கள் இவற்றால் அருளிச் செய்கிறார் –
விண்ணோர்கள் ஸ்தானம் -அடுத்த ஐந்தும் -(16-20)–அலர் மேல் மங்கை -பற்றி
பின்பே நேராக பற்றுவது -உறை மார்பனைப் பற்றுவது -(21-30 )
கொள் கொம்பு மூலம் பற்றுவது போல் –
புள்ளும் -உம்மைத் தொகைக்கும் வியாக்யானம் உண்டே
பத்து பாசுரங்களில் ஐந்தில் விடிந்தமைக்கு அடையாளம் உண்டு ஐந்தில் இல்லை )

1-பிள்ளாய் –
2-பேய்ப்பெண்ணே -(நாயகப் பெண் பிள்ளாய்)(தேசம் உடையாய்)
3-கோது கலமுடைய பாவாய்
4-மாமான் மகளே –
5-(ஆற்ற அனந்தல் யுடையாய் )அரும் கலமே-
6-புன மயிலே –
7-நற் செல்வன் தங்காய் –
8-போதரிக் கண்ணினாய் -(பாவாய் )-
9-(நங்காய் ) (நாணாதாய்) நாவுடையாய்
10-இளங்கிளியே)

ஒரு விடாயாற்றிக்கு வேண்டும் பெண்கள் திரண்டு சிலர் இழக்கச்
சிலர் புசிக்க மாட்டாமையாலும் –
எம்பெருமானிலும் இவர்கள் உத்தேச்யராய் இருக்கையாலும்-
இவ் விஷயம் தனி அனுபவிக்க ஒண்ணாதே திரளாக அனுபவிக்க வேண்டும் விஷயமாகையாலும்
மேல் பத்துப் பட்டாலும் ஒருவரை ஒருவர் எழுப்புகிறார்கள் –

இவ் வனுபவம் ஆண்டாள் இங்கே இருந்து அனுபவித்தல் –
பரம பதத்தில் உள்ளார் அங்கே இருந்து அனுபவித்தல் செய்யும் அத்தனை –
சம்சாரிகளுக்கு நிலம் அல்ல –

சம்சாரிகள் உறங்குகைக்கு ஹேதுவும் வேறே –
உணர்ந்தால் அனுபவிக்கைக்கு விஷயமும் வேறே –
தமஸ்ஸூ அபீபவிக்க உறங்கிக் காலம் உணர்த்த உணர்ந்து விஷய ப்ரவணராவர்கள் –

எம்பெருமானுடைய உறக்கமும் உணர்ச்சியும் வேறுபட்டு இருக்கும் எங்கனே என்னில்
ஆஸ்ரித சம்ரக்ஷண உபாய சிந்தை பண்ணுகை உறக்கம் –
உணருகையாவது அவர்களுடைய ஆர்த்த நாதம் பொறுக்க மாட்டாமை-
உணர்ந்தால் அவர்கள் விரோதியைப் போக்கி அவர்களோடே கலக்கை போகமாய் இருக்கும்

இவர்களுக்கு
1-உறங்கப் பண்ணுவதும்
2-உணரப் பண்ணுவதும்
3-உணர்ந்தால் மறக்கப் பண்ணுவதும் –
4-போய் அனுபவிக்கப் பண்ணுவதும்
கிருஷ்ண குணங்களே

சின்னம் பின்னம் -இத்யாதிப்படியே
ஜ்ரும்பணாஸ்திரம்-
மோஹனாஸ்திரம்-
சில மோஹிக்கப் பண்ண சில துடிக்கப் பண்ணுமா போலே –

மநோ ரதம் முடிந்து ஓலக்கம் கிளம்பின போதே தொடங்கி-ஒருவரை ஒருவர் எழுப்பத் தொடங்கினார்கள் –
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானும் ஆஸூர ப்ரக்ருதிகள் ஆபத்து கண்டு பொறுக்க மாட்டாமே திருத்தப் பார்த்தான் –
இவர்கள் ராவண ஆபத்து கண்டு பொறுக்க மாட்டாமே திருத்தப் பார்க்குமவர்கள் –
தந்தாம் ஆபத்து பொறுக்க வல்லவர்களோ –

செய்யாதன செய்யோம் -என்று இவர்களுடைய ப்ரதிஜ்ஜை தான்
ததியர் முன்னிலையாக எம்பெருமான் பாடே செல்லுகையும் –
கூட அனுபவிக்கையும் –
இது ஸ்வரூபம் ஆகையாலும் அவஸ்யம் ஒருவரை ஒருவர் எழுப்ப வேணும் –
பர தசைக்கு அகப்பட அனுபவிக்கக் குழாங்கள் வேண்டா நின்றது
திருவாய்ப்பாடி வ்ருத்தாந்தத்தில் தனி இழியப் போமோ –
வர்ஷாயுதைரித்யாதி –
சதுர்முகாயுரித்யாதி –(வராஹ புராண ஸ்லோகம் -சதுர் முக ஆயுஸ் கிடைத்து கோடி வாயும் இருந்து புத்தியும் தெளிந்தாலும் குணம் ஒன்றைக் கூடப் பேசி முடிக்க முடியாதே )

இமையோர் தமக்கும் நெஞ்சால் நினைப்பு அரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே -என்கிறபடியே
நித்ய ஸூரிகளும் எத்திறம் என்னும் அத்தனை –
மயர்வற மதிநலம் அருளப் பெற்றாரும் எத்திறம் என்னும் அத்தனை —
தான் தன்னை அனுசந்தித்தாலும் ஜென்ம கர்ம ச மே திவ்யம் என்று எத்திறம் என்னும் அத்தனை –

நாராயணனே நமக்கே பறை தருவான் என்று -என்று முதலிலே திருமந்திரத்தை எடுத்தாள்-
திருமந்த்ரத்தினுடைய மூன்று பதத்தாலும் மூன்று அர்த்தம் சொல்லுகிறது
முதல் பதம் ஆத்மாவினுடைய ஸ்வபாவிக சேஷத்வத்தைச் சொல்லுகிறது
இரண்டாம் பதம் அதுக்கு எதிர்த்தட்டான அந்நிய சேஷத்வமும் ஸ்வ ஸ்வா தந்தர்யமும் அஸஹ்யமாம் படி சொல்லுகிறது
மூன்றாம் பதம் அந்த சேஷத்வத்தினுடைய சீமையாவது ததீய சேஷத்வ பர்யந்தமாய் இருக்கை -என்கிறது

முதல் பதத்தில் சொன்ன அர்த்தத்துக்கு த்ருஷ்டாந்த பூதர் இளைய பெருமாள்
மத்யம பதத்தில் சொன்ன அர்த்தத்துக்கு த்ருஷ்டாந்த பூதர் ஸ்ரீ பரத ஆழ்வான்
மூன்றாம் பதத்தில் சொன்ன அர்த்தத்துக்கு த்ருஷ்டாந்த பூதர் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் -அவன் படி இவர்களது

உற்றதும் உன்னடியார்க்கு அடிமை நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் கண்ண புரத்துறை யம்மானே
அவன் அடியார் நனிமாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க -என்னுமவர்களுடைய பெண் பிள்ளை இறே

தனி மாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-

ஆகையால் ஒருவரை ஒழிய ஒருவர்க்குச் செல்லாமை –
உணர்ந்தவர்கள் அடையச் சென்று உணராதார் வாசல்களைப் பற்றி எழுப்புகிறார்கள்

பகவத் ஏக போகரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அநந்ய ப்ரயோஜனராய்
இவ்விஷயத்தில் தேசிகர் இன்றிக்கே இருப்பாரை
அவர்கள் பக்கல் பரிவாலே தேசிகராக்குகை ஸ்வபாவம் என்னுமத்தைச் சொல்லுகிறது –

புள்ளும் சிலம்பின் —வெள்ளை விளி சங்கின் பேரரவம் –அரி என்ற பேரரவம் –பிள்ளாய் எழுந்திராய்-பரி ஸூ த்தராய் வ்ருத்த்யாபாசத்தை யுடையவர்களுடைய சப்த பிரமாணத்தை முன்னிட்டு சத்வ குண நிஷ்டரை சாத்விக சமாசார நிதர்சன பூர்வக பகவான் நாம சங்கீர்த்தனத்திலே ஸமாஹிதராக்கும் படி சொல்லுகிறது

கிருஷ்ண அனுபவத்தில் புதியளாய் இருப்பாள் பெண்ணை எழுப்புகிறார்கள்

இத்தால்
பகவத் ஏக போக்யாரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அநந்ய ப்ரயோஜனராய்
இவ்விஷயத்தில் தேசிகர் இன்றிக்கே இருப்பாரை
அவர்கள் பக்கல் பரிவாலே தேசிகர் ஆக்குகை தங்களுக்கு க்ருத்யம் என்று இருக்கை
ஸ்ரீ வைஷ்ணத்வம் என்கிற ஸ்வபாவத்தைச் சொல்லிற்று –

பிள்ளாய் எழுந்திராய் -என்கையாலே
அபி நவமாக மூட்டும் அஸ்மத் குருப்யோ நம -என்னும் படி சொல்லுகிறது –

———–——

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்–6-

வியாக்யானம் –
புள்ளும் சிலம்பின காண் –
இப் பெண்கள் –போதோடே வாசலில் சென்று உணர்த்தக் கடவதாக சங்கல்பித்து
போது விடியச் செய்தே கிடந்தது உறங்குவதே -என்று சிஷ்ட கர்ஹை பண்ணினவாறே –
போது விடிய வேண்டாவோ எழுந்திருக்க -என்ன –

போது விடிந்தது எழுந்திராய் -என்ன –

விடிந்தமைக்கு அடையாளம் என்ன என்று கேட்க –

நாங்கள் உணர்ந்து வந்தது போதாதோ என்ன –

உறங்கினார் உணரில் அன்றோ விடிந்தமைக்கு அடையாளம் ஆவது –
உண்டோ கண்கள் துஞ்சுதல் -என்கிறபடியே-உங்களுக்கு உறக்கம் உண்டோ
உங்கள் உணர்த்தி விடிந்தமைக்கு அடையாளம் அன்று
வேறு அடையாளம் உண்டோ -என்ன –

புள்ளும் சிலம்பின காண் —
போது விடிந்தது-பஷிகள் அகப்படக் கிளம்பி இரை தேடித் போகா நின்றன — காண் -என்ன-
அது விடிந்தமைக்கு அடையாளமோ -என்ன
ஏன் அல்லாவோ என்ன –
ஓம் அல்லவீ என்ன –
ஆவது என் என்ன –
நீங்கள் அவற்றை உறங்க ஒட்டாதே கிளப்பின வாறே கிளம்பிற்றன
அல்லது விடிந்தமைக்கு அடையாளமோ -என்ன –

இவ்விடத்தில் பிள்ளைப் பிள்ளை யாழ்வான்-பகவத் சமாஸ்ரயணத்துக்கு அனுகூலமான காலத்தை ஸூசிப்பிக்கிற
பஷிகளின் நாதம் அல்லது-இவ்வாத்மாவுக்கு உத்தேச்யம் இல்லை என்று பணிக்கும் —என்று அருளிச் செய்வர்

நீங்கள் பிறந்த ஊரில் பஷிகளுக்கு உறக்கம் உண்டோ –
காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்-மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ -என்று அன்றோ இருப்பது –
வேறு அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் -என்று கிடந்தாள் –

புள்ளும் சிலம்பின காண்–
மார்கழி நீராட வேணும் என்னும் த்வரையும் இன்றிக்கே-
வைகி (காலம் தாழ்ந்து )எழுந்து இருக்கில் ப்ரத்யவாயமும் இன்றிக்கே
காலம் உணர்த்த உணருமவை அன்றோ புட்கள் –

நாழிகை வட்டில் நீர் நிரம்பினவாறே கீழே விழுமா போலே
இரை யறுதியிலே உணரும் திர்யக்குகளும் கூட உணர்ந்தன

மின்னலே இடித்தாப் போலே உனக்கு முன்னே உணர்ந்தன கிடாய் -என்றுமாம்

சிலம்பின் காண்-
தலையிலே இடி விழுந்ததும் அறியாமே உறங்கும் அத்தனையோ என்ன -உங்கள் உணர்த்தி 
விடிவுக்கு அடையாளம் இல்லாதா போலே
நீங்கள் இருந்த வூரில் பக்ஷிகள் உணர்த்தியும் விடிவுக்கு உடல் அன்று –

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே என்று –
காலை எழுந்து இருந்து (9-8 )-ப்ரஹ்ம முஹூர்த்தத்தில் எழுந்து இருந்து
கரிய குருவிக் கணங்கள் – கிருஷ்ணனுடைய வடிவை ஸ்மரிக்குமவை
மாலின் வரவு சொல்லி -அவன் வியாமுக்தனாய் வரும் படியைச் சொல்லி –
மருள் (இந்தளம் என்னும் பண் ) பாடக் கடவதாம் படி இறே-பண்ணி வைப்பது –

பஷினோ அபிப்பிராயா சந்தோ (பக்ஷிகளும் பிரார்தித்தனவே பெருமாளை )–என்று
நீங்கள் இருந்த வூரில் பக்ஷிகளுடைய உணர்த்தியும் விடிவுக்கு உடல் அன்று
மற்றை அடையாளங்கள் உண்டாகில் சொல்லுங்கோள் என்று கிடந்தாள் –

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே –
மரங்களும் இரங்கும் வகை –
பஷினோபி பிரயாசைந்தே சர்வ பூதாநுகம்பிநம் –
மம த்வஸ்வா நிவ்ருத்தஸ்யசுமந்திரன் வார்த்தை குதிரைகளும் திரும்பாமல்
விஷய தே மஹாராஜ
ராமோ ராமோ ராம இதி
காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
ஆண்டாள் பிறந்த ஊரில் பக்ஷிகளுக்குத் தான் உறக்கம் உண்டோ -என்று ஆச்சான் பிள்ளை 

இப்போது இவள் புள் என்கிறது -சேர்ப்பாரையில் சொல்லுகிறபடியே
ஞான அனுஷ்டங்களாலே-பகவத் சம்பந்தம் கடகரான பாகவதர்களை ஆகையால்
சத்வோத்தரமான காலம் ஆனவாறே சாத்விகரான பாகவதர்கள் –
பகவத் குண அனுசந்தான பூர்வகமாக பகவத் கைங்கர்ய ரூபங்களாய்-
தத் தத் வர்ண ஆஸ்ரம உசிதங்களான காலிக கர்மங்களை அனுஷ்டிக்கைகாக
சர்வவோதிக்கமாக எழுந்து இருந்து புறப்பட்டார்கள் –

பிள்ளாய் எழுந்திராய் –
பகவத் ஆராதன காலம் ஆயத்து -எழுந்திராய் -என்ன –
அவர்களும் -உங்கள் ஆரவாரம் கண்டு எழுந்து இருந்தார்கள்-வேறு அடையாளம் உண்டோ என்ன –

————-

புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
அது கிடக் கிடாய் -இதுவும் உன் செவிப் பட்டது இல்லையோ –
புள்ளுக்கு நிர்வாஹகனான பெரிய திருவடி உண்டு –
அவனுடைய கோ உண்டு -சர்வேஸ்வரன்
அவனுடைய இல் -என்னுதல்-
புள் -என்று பஷியாய்-அத்தாலே பெரிய திருவடியாய் –
அவனுக்கு நிர்வாஹகனானவனுடைய கோயில் -என்னுதல் –
திருப் பள்ளி எழுச்சியில் சங்கத் த்வனி கேட்டிலையோ –

கிருஷ்ணன் திரு வவதரித்து திரு வாய்ப்பாடியிலே இருந்ததே குடியாக-
அவன் அழகிலே பக்த பாவராய்ச் செல்லுகிற காலத்திலே-
கொண்டாடுகைக்கு ஒரு திரு முற்றம் உண்டோ என்னில் –

சக்கரவர்த்தி திருமகன் திருவவதாரம் பண்ணி-இருந்ததே குடியாக அவன் அழகிலே ஈடுபட்டு செல்லா நிற்க –
சஹா பத்ன்யா விசாலாஷி நாராயண -என்று-
அவர் பெரிய பெருமாளை ஆஸ்ரயிக்குமா போலே-
கிருஷ்ணனையும் கும்பிடு கொள்கைக்கு ஒரு திரு முற்றம் உண்டு –

(பரத்வாதி ஐந்து நிலைகளும் எப்பொழுதுமே உண்டே –
சர்வான் தேவான் நமஸ்யந்தி ராமஸ்யார்த்தே யசஸ்வினி
திருநாராயணன் பெருமாளும் ஆய்ப்பாடியில் இருந்த பெருமாள் தானே )

ராமோ ராமோ ராம இதி பிரஜா நாம பவான் கதா -என்றும் –
பாலா அபிகிரீடா மானா-(அயோத்யா –6 )என்றும்
ஒரு தோளே -தோள் மாலையே -ஒரு வளப்பமே- ஒரு முறுவலே- ஒரு நோக்கே- என்றால் போலே
சக்கரவர்த்தி திருமகன் பக்கலில் -சிறு பிரஜைகளும் அகப்பட பெருமாளுடைய குணங்களில் தோற்றுச் செல்லா நிற்கச் செய்தே-
திரு அயோத்யையில் –
ஸஹ பத்நயா விசாலாஷா நாராயணம் உபாகமத் -என்று
பெருமாள் பிராட்டியோடே கூட பெரிய பெருமாளை உபாசிப்பர் என்றது இறே –
அப்படியிலே திருவாய்ப்பாடியிலும் ஒரு திரு முற்றம் உண்டு போலே—கிருஷ்ணனையும் கும்பீடு கொள்வான் ஒரு எம்பெருமான் உண்டு

(ராமபிரான் இங்கே ஆய்ப்பாடியில் இருந்து நம்பி மூத்த பிரான் மேல் கோட்டையில் ப்ரதிஷ்டை செய்து யாதவ கிரி ஆனதே)

(நூனம் ச கால மிருக ரூபம் -காலரூபத்தால் மாரீசன் வர —
ராமானுஜம் லஷ்மண பூர்வஜ-சேஷியை இட்டே சேஷனையும் சேஷனை இட்டே சேஷியையும் )

புள்ளரையன்
அவனுக்கு நிரூபக தர்மம்
ராமானுஜம் லஷ்மணம் பூர்வஜம் ச(சீதா பிராட்டி -இருவரையும் மாய மான் பின் அனுப்பிய பின் )
அகஸ்திய ப்ராதரம்-
நாராயணன் (நாரங்களை வைத்தே இவனுக்கும் )என்னுமா போலே
வழியே இழியுமவர்கள் ஆகையால் பெரிய திருவடியை முன்னிடுகிறார்கள்
அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே (திரு விருத்தம் -3-)-என்னக் கடவது இறே

புள்ளரையன் –
பெரிய திருவடியை நிரூபகமாக உடையவன் –
ஆஸ்ரிதர் தனக்கு நிரூபகம் ஆம்படி இறே இவர்களுக்கு கொடுத்த ஐஸ்வர்யம் –
பகவத் விஷயத்தில் வழியே இழியுமவர்கள் ஆகையாலே-பெரிய திருவடியை முன்னிடுகிறார்கள் –

புள் அரையன் –
லஷ்மண பூர்வஜம் -என்று இளைய பெருமாளை இட்டு பெருமாளை நிரூபிக்குமா போலே –
திருவடியை நிரூபகமாக யுடையவன் –
அவர்களை இட்டுத் தன்னை நிரூபிக்க வேண்டு
தங்கள் இருந்த இடத்தே கொடு வருமவன் ஆகையால் -புள்ளரையன்-என்றதாகவுமாம் –
புள்ளின் பின் போன தனி நெஞ்சமே (திரு விருத்தம் -3-)-என்று இருக்குமவர்கள் இறே-

புள் அரையன் –
என்று கிருஷ்ணனைச் சொல்லிற்று ஆகவுமாம்

புள்ளரையன் கோ -பெரியாழ்வார் ஸூ சகம் -ஆயர்பாடியில் ராம பிரியன் கோயில் –
விரோசனன் திருடிய வைரக் கிரீடம் -கருடன் மூலம் பெற்று கண்ணனுக்கு சாத்தி

யசோதை ராமபிரானுக்கு சாத்தி -திவ்ய ஆபரணங்கள் நித்ய ஸூரிகள் ஏற்ற வடிவு கொள்வார்களே
யாதவ கிரி பேர் பெற்றதே மேலக்கோட்டை -திரு நாராயண புரம் -இதனாலேயே திருப்பாவை ஜீயர் ஈடுபட்டு செல்வப்பிள்ளை –

———–

வெள்ளை விளி சங்கு –
சங்கு வெளுத்து இருக்குமது விடிந்தமைக்கு அடையாளமோ-
இது வ்யர்த்த விசேஷணம்

(வெளுப்பான சங்கு சொல்வதால் விடிந்தமைக்கு அடையாளம் ஆகுமோ –
இதுவும் வெட்டிப் பேச உறுப்பானதே -வெள்ளை -நிறத்தைச் சொல்லவரா வில்லை -சத்வ குணம் வளர்க்கும் – )

விளி சங்கு –
சாமங்கள் தோறும் முறை உடையோரை அழைக்கிறார்கள் ஆகில்-போது விடிய வேணுமோ -அங்கன் அல்ல

(அனைவரையும் ஓர் இடத்தில் அழைக்க சங்கம் ஒலிப்பது உண்டே –
இது விடிந்ததும் அடையாளம் இல்லை )

வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் -என்றும்
பூம் கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கு ஒலியும்-என்றும் உண்டு இறே

பேரரவம் –
விடிந்தமைக்கு அடையாளம் அன்றோ -ஸ்ரீ பாஞ்ச ஜன்ய த்வநியிலும் இது அதிகமாக வன்றோ த்வநிக்கிறது –
நீயும் உணருகைக்கு போரும் துவனி

இவர்கள் சங்கின் வெளுப்பு சொல்லுவான் என் என்னில் –
சங்கத் த்வனி வழியே ஊதும் போதை முக முத்ரையும்-
சங்கின் வெளுப்பும் உத்தேச்யம் ஆகையாலே-

விளி சங்கு -அழைக்கை –
கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன் என்னக் கடவது இறே-கையாலே அழைக்கை என்றபடி-
சத்வ உத்தரமான காலத்தில் அடிமை செய்ய வாருங்கோள்-என்று அழைக்கிறபடி-

பேர் அரவம் -ஏகார்த்த அபி லாஷை யுண்டு
எனக்கும் ஒக்கக் கேளாமையாலே அப்ரஸித்தம் -ஆகையால்
போது விடிவுக்கு அடையாளம் அன்று என்கிறாள்
வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட விமலன் (நாச்சியார் )-என்று
உங்கள் பாவனா பிரகர்ஷத்தாலே சொல்லுகிறி கோள்-
இது போது விடிவுக்கு உடல் அல்ல என்ன

பேரரவம் கேட்டிலையோ-
இந்த த்வனி கேளாத படி உள்ளூச் செய்கிற அந்நிய பரத்தை ஏதோ

பேரரவம் கேட்டிலையோ
நாங்கள் சொல்லுகிற இவற்றுக்கு அனுபவத்தி சொல்லுகிற உனக்கும் அகப்பட
கேட்க்கும் படி அன்றோ த்வனியின் பெருமை –

பேர் அரவம்
நீயும் உணருகைக்கு போரும் சங்கின் த்வனி
மஹா ராஜர் வாசலிலே சென்று இளைய பெருமாள் சிறு நாண் ஏற்றி எறிந்தார் என்ன
அனந்தாழ்வான் -தாரையினுடைய ஸ்தநோஷ் மாவைப் பற்றிக் கிடந்த மஹா ராஜர்
ஆந்த்யமும் (காம மயக்கமும் )தீருகைக்குப் போரும் த்வனி என்றான் –

————–

கேட்டிலையோ –
இது கேட்க பாக்கியம் இன்றிக்கே ஒழிவதே –
இவர்கள் இப்படிச் சொல்ல பின்பு நிருத்தரையாய் கிடந்தாள் –

கேட்டிலையோ
இதுவும் கேளாதபடியோ அங்குத்தை அந்நிய பரதை -என்று பழி இடுகிறார்கள் –
இவள் அது கேட்டு துணுக் என்று எழுந்து இருக்கைக்கு –
போது விடிந்து சங்கு ஊதுகிறார்கள் அல்லர் -பணிக்குக் கடவர்களை அழைக்கிறார்கள் என்ன
தூஷணங்கள் தேடிச் சொல்லிப் போது விடியப் பார்த்து இருப்பதே என்று இவர்கள் சொல்ல
அந்தியம் போதே உணர வேணுமோ -அவர்கள் போது அறியாதே சங்கூதினார் அத்தனை -என்ன

புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ –
புள்ளுக்கு -பெரிய திருவடிக்கு
அரையன் -அரையனான எம்பெருமானுக்கு ப்ரதிபாதகத்வேன

கோயிலான திரு மந்த்ரத்தில் உகாரத்தை மத்யத்திலே உடைத்தாகையாலே பரி சுத்தமாய் –
அகில ஆத்ம வர்க்கத்துக்கும் பகவத் கைங்கர்ய உபாய உக்தமாய்
பகவத் சம்பந்த ஜ்ஞாபகமாய் –
தஷிணாவர்த்த சங்க துல்யமான பிரணவத்தின்
மகா த்வநியைக் கேட்டிலையோ

—————

பிள்ளாய் எழுந்திராய் –
பகவத் விஷயத்தில் புதியை இறே-பாகவத சம்ச்லேஷத்தில் இனிமை அறியாய் இறே
அனுபாவ்யங்களில் காஷ்டா பூமியான பாகவத சம்ச்லேஷ ரசம் பிறக்கும் அளவும்
பகவத் விஷயத்தில் அவஹாகிக்கப் பெற்றிலையே-

பிள்ளாய் எழுந்திராய்
பகவத் விஷயத்தில் அவகாஹிக்கை யாவது பாகவத சம்ச்லேஷ பர்யந்தமாகை-
அவ்வளவு அன்றிக்கே
கிருஷ்ண சம்ஸ்லேஷத்து அளவிலே பர்யவசிக்கிறது உன்னுடைய முஃத்யம் இறே என்ன

கிருஷ்ண சம்ஸ்லேஷ அளவிலேயோ நான் நிற்கிறது
உங்களுடைய பேச்சே தாரகமாக கேட்டுக் கிடக்கிற என்னை
பிள்ளாய் -என்கிற நீங்கள் அன்றோ பிள்ளைகள் என்ன –

பேச்சுக்கு கேட்டுக் கிடக்க அமையுமோ
அடியார்கள் தம் ஈட்டம் கண்டிட கூடுமேல்(பெருமாள் ) என்றும் –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ(திருவாய் -2-3-) என்றும்
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன்(பெரிய திருமொழி -7-4-) என்றும்
அன்றோ நம்முடைய பூர்வர்கள் வார்த்தை –
அப்படியே உன் வடிவை நாங்கள் கண்டு -எங்கள் வடிவை நீ கண்டு அனுபவிக்க ஆசைப்படாதே இருக்கிற நீ அன்றோ பிள்ளை
நாங்கள் சொல்லிற்றை எல்லாம் அழிக்கைக்கு அடி உன் பால்யம் இறே

பிள்ளாய் எழுந்திராய் –
இந் நோன்புக்கு புதியையாய் இறே நீ உறங்குகிறது –
உனக்கு இன்னம் இளமை இறே –
அந்தியம் போது தான் இக் கோஷ்டி உத்தேச்யம் அன்றோ
பகவத் சம்ஸ்லேஷத்துக்கும் பாகவத சம்ஸ்லேஷத்துக்கும் வாசி அறியாயீ என்ன

(ஸம்ஸார துக்கம் இருள் -பகல் கண்டேன் -முக்தன் -ப்ரஹ்ம முஹூர்த்தம் முமுஷுவுக்கு உத்தேச்யம்)

பட்டர் திருவாய்ப்பாடியில் உள்ளாரில் சிந்தையந்தியோபாதி கிருஷ்ண சம்ச்லேஷித்தில் புதியார் இல்லை -என்று
அருளிச் செய்வார் -என் செய்ய என்னில்
குரு தர்சனம் பண்ணக் கண் உண்டாய்த்தே-
தச்சித்த விமலாஹ்லாத-இத்யாதி –
யயவ் ச காசித் ப்ரேமாந்தா என்று
ஒருத்திக்கு ப்ரேமமானது இருளை பண்ணுகையாலே காவல் கிடந்தாரைக் காணாமைக்கு உடலாய்த்து –
அது தான் வழி போகைக்கு உடலாய்த்து
குரவ கிங்கரிஷ்யந்தி–குருக்கள் கிடாய் என்ன -அவர்கள் விரஹ அக்நிக்கு ஒரு குட நீர் சொரிய வல்லார்களோ
அன்றியே வழித் துணை ஆவார்களோ என்றார்கள் –

(ஒருத்தி-திருக்கோளூருக்கு போன பராங்குச நாயகி தீர்க்க சிந்தயந்தி )

அவளுக்கு இவர்கள் பேச்சே அமையா நின்றது –
இவர்களுக்கு அவள் வடிவு காண வேண்டா நின்றது

இன்பமே நாளும் வாய்க்க –

(அவன் அடியார் நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-)

ஒருக்காலும் பிரிகிலேனே என்கிற இது ஆண்டாளுக்கு முதலிலே பிறந்து பிரக்ருதியாய் இருக்கிறது

(தாராளும் வரை மார்பன் தண் சேறை  எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே–7-4-4-)

இது காண்கைக்கு மேலே அவனோடே அனுபவிக்க வேண்டாவோ என்ன
மாறி மாறி இரண்டும் உத்தேச்யமாகக் கடவது

பிள்ளாய்
எல்லாரும் -குரவ கிம் கரிஷ்யந்தி என்று போகா நிற்க
சிந்தயந்தி குரு தர்சனம் பண்ண
பிரணயித்வத்தில் புதியவள் என்றால் போலே இங்கும் இவளை பிள்ளை என்கிறது –

நீங்கள் சொன்ன படியே நானே பிள்ளை யாகிறேன் –
உங்கள் உணர்த்திக்கு அடி ஏது என்ன

நானோ புதியை-நீங்கள் அன்றோ –
காலம் அறியாதே எழுப்பினிகோள்-உங்களை உணர்த்தினார் யார் -என்ன
தங்களை உணர்த்தினவர்களைச் சொல்லுகிறார்கள்

எழுந்து இராய்
இருப்பு -சத்தை பெற வேண்டுமே -அதற்காக எழுந்திராய்

———

தாங்கள் உணர்ந்தமைக்கு ஹேது சொல்கிறார்கள்

நாங்கள் உன்னைக் காண ஆசைப்பட்டவோபாதி-
நீயும் எங்களைக் காண ஆசைப்பட வேண்டாவோ –
அறிந்து இருக்கிற உங்களை எழுப்பினார் ஆர் என்ன –

பேய் முலை இத்யாதி –
பேய் முலை நஞ்சுண்டு –
பெற்ற தாயும் உதவாத தனிமையிலே பாதிக்க வந்த பூதனையை முடித்து-
இத்தலையை முடிக்க வந்தவள் தன்னோடே போம்படி பண்ணி –

பேய் முலை நஞ்சுண்டு
போது விடிந்தது பெண்ணே எழுந்திரு என்ன இவள் துணுக் என்று புறப்படுகைக்காக
புகுந்த அபாயம் கேட்டிலையோ
பெரியாழ்வாரோடு குடல் துவக்குடையார்க்கு உறங்க விரகு உண்டோ -என்கிறார்கள்
பெற்ற தாயும் உதவாத தனிமையிலே பாதிக்க வந்த பூதனையை முடித்து-

(பேய் முலை நஞ்சு இது வெளியில் உள்ளார் வார்த்தை –
உண்டு-இது உள்ளே இருப்பவள் வார்த்தை )

சர்வேஸ்வரனை துக்க நிவர்த்தகன் என்று இருப்பார் அல்லாதார் இறே -பெரியாழ்வார் சம்பந்திகள்
அங்குத்தைக்கு என் புகுகிறதோ என்று வயிறு பிடிக்குமவர்கள் இறே
அவள் பய நிவ்ருத்தி அளவும் அனுசந்தித்து பயம் கெட்டுக் கிடக்கிறாள்

பேய் இத்யாதி –
பேய் உண்டு -பிரகிருதி
முலை உண்டு -அஹங்கார மமகாரங்கள்
நஞ்சுண்டு -அவைகள் ஆகிற விஷம்
உண்டு -அனுபவித்து –
அதாவது
பிரகிருதி சம்பந்த நிபந்தமாய் சேதனருக்கு வரும் அஹங்கார மமகாரங்களைப் போக்கி -என்றபடி –

பேய் பால் உண்டான் என்று அனுசந்திக்க தாய் பால் குடிக்க பிறக்க வேண்டாமே-

————

கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி –
பேயாகில் ஆராய்ந்து கொள்ளலாம்-
தாயே ரஷையாக வைத்த சகடம் –
அசூர ஆவேசத்தால் பிறந்த அபாயம் ஆகையாலே -கள்ளச் சகடம் -என்கிறது –

கலக்கழிய காலோச்சி —
சகடமானது கலக்கழியும் படி திருவடிகளை ஓச்சி -முலை வரவு தாழ்ந்தது என்று-
மூரி நிமிர்த்த திருவடிகள் பட்டு முறிந்தது –

இப்பொழுது இவ்வபதானங்கள் சொல்லுகிறது-
பிறந்த அபாயங்கள் கேட்டு துணுக என்று எழுந்து இருக்கைக்காக-

கள்ளச் சகடம்
கிருத்ரிம சகடம் ஆனது

கலக்கழிய காலோச்சி
கட்டு அழிந்து சிதறும்படியாக திருவடிகளை நிமிர்த்து

(இங்கும் கள்ளச் சகடம் வெளியில் உள்ளார் வார்த்தை –
கலக்கழிய காலோச்சி உள்ளே இருப்பவள் வார்த்தை )

கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
காவலாக வைத்த சகடம் அஸூரா வேசத்தாலே தன் மேலே ஊரப் புக அது கட்டு அழிந்து
சிதறும் படியாக திருவடிகளாலே உதைத்து( திருக் கால் ஆண்ட பெருமான் -ஊர்ந்த சகடத்தை உதைத்த பாதத்தான் )

கள்ளச் சகடம்
நம்மை முடிக்க வந்த சகடம் -பூதனை தாய் வடிவு கொண்டாகிலும் வந்தாள்-
அப்படி அன்றிக்கே காவலாக வைத்த சகடம் தானே
அஸூரா வேசத்தாலே தன் மேலே ஊரப் புக-தன் நினைவு இன்றிக்கே முலை வரவு தாழ்த்து
ஸ்தன்யார்த்தியாயத் தொட்டிலை உதைத்த திருவடிகள் புறப்பட்டு முடித்த அத்தனை இறே –

(அஸ்மான் ஹந்தும் -சுக்ரீவன் சொன்னது போல் இங்கு நம்மைக் கொல்ல வந்தான் )

ஊர்ந்த சகடமுதைத்த பாதத்தன் ( 5-3-3 ) -ப்ரேமத்தாலே பயப்படுகைக்கு உடலாய் அச்சம் கெடுகைக்கும் உடலாய் இருக்கும்
பாதத்தன் -இவன் முஃயத்தாலே உறங்கத் திருவடிகளாலே பெற்றோம் -(திண் கழல் இறே )
அவனுடைய ஆபத்துக்கும் சேஷ பூதனுடைய ஆபத்துக்கும் ரக்ஷகமான திருவடிகள் –
திருக் காலாண்ட பெருமான் (6-9-)
ராமாவதாரத்துக்கு இளைய பெருமாளைப் போல

கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
காம குரோதங்களையும் நிவர்ப்பித்து

————

வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை –
இவ் அபாய பிரசங்கம் இல்லாத இடத்தில்-
பரிவனான திரு அநந்த ஆழ்வான் மேலே சாயப் பெற்றதே -என்று ஹ்ருஷ்டைகள் ஆகிறார்கள் –

வெள்ளம்
சௌகுமார்யத்துக்கு சேர குளிர்ச்சி உண்டான படி –

அரவு
ப்ரக்ருஷ்ட விஞ்ஞாந பலைக தாமநி- (ஸ்தோத்ர ரத்னம் )
ஞானம் இருவரையும் அறிகை-
விஞ்ஞானம் எல்லாக் கைங்கர்யமும் பண்ணுகை –
ப்ரக்ருஷ்டம் -தன்னை மறைக்கை –
பலம் -பெரிய பிராட்டியாரும் தானும் துகைக்கைக்கு பாங்கான சக்தி –

அமர்ந்த
பிராட்டியார் திரு முலைத் தடத்தாலே நெருக்கிலும் உணராமை

அரவில் –
அந் நீர் உறுத்தாமைக்கு படுத்த படுக்கை –
மென்மை குளிர்த்தி நாற்றங்கள் -பிரக்ருதியான திரு வநந்த ஆழ்வான் மேலே –
இவன் மூச்சு பட்டு மது கைடபர்கள் பொடி பட்டுப் போகையாலே பயப்படவும் வேண்டா -என்கை –
வெவ்வுயிர்ப்ப வாய்ந்த மது கைடபரும் வயிறு உருகி மாண்டார் -என்னக் கடவது இறே  –

துயில்
ஜகத் ரஷண சிந்தனை -பனிக் கடலில் பள்ளிக் கோளைப் பலகை விட்டு ஓடி வந்து
என் மனக் கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பி -என்று
ஓர் ஆஸ்ரிதனுடைய ஹிருதயத்தை கணிசித்துக் கிடக்குமவன் என்னவுமாம்

அமர்ந்த –
பிராட்டிமார் திரு முலைத் தடத்தால் நெருக்கினாலும் உணராமை –

வித்தினை –
திருவவதாரத்துக்கு நாற்றங்கால்-
பிறந்த பிறவிகள் போராமை திரியப் பிறக்கைக்கு அடி இட்ட படி —

வெள்ளத் தரவில் –
விரோதி பிரசங்கம் இல்லாத தொரு தேசமும் ஒரு பரிவனையும் பெறுவதே –
நீர் உறுத்தாத படி -நாற்றம் மென்மை குளிர்த்தி தொடக்கமான ஸ்வபாவங்களை யுடைய திரு வனந்த ஆழ்வான் மேலே –

துயில் அமர்ந்த –
பிராட்டிமார் திரு முலைத் தடத்தாலும் நெருக்கி எழுப்பினாலும் கிளம்பாத படியாய் இருக்கை

வித்தினை
(ஜகத்துக்குக் காரணமானவனை )
கிருஷிகர் விரையை நீரிலே சேர்க்குமா போலே –
பிறந்தது நினையாது இருக்கையும் –
பிறந்தது எல்லாம் கிடக்க இன்னமும் பிறக்கைக்கு அடியாய் இருக்கையும் –
இவ் வருகு உண்டான கார்ய வர்க்கத்துக்கு எல்லாம் காரணமாய் இருக்கிறவனை

வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
பரப்பை யுடைத்தான திருப் பாற் கடலிலே அக்கடல் போலேயாய்-
சர்ப்ப ஜாதிக்கு அசாதாரணமான சைத்திய சவ் காந்திய சவ் குமார்ய பிரசுரமான
திருவனந்த ஆழ்வான் மேலே ஜகத் ரக்ஷண சித்தாத்மகமான யோக நித்திரையில் மிகவும் அவகாஹித்து
ராம கிருஷ்ணாத் யவதார கந்தமாய் அநிருத்த ரூபியாய்க் கண் வளர்ந்து அருளுகிற எம்பெருமானை –

வித்தினை
வித்தை விதைக்கைக்கு நீரிலே சேர்த்தால் போலே
காரணம் இருக்கக் கார்யம் உண்டாகச் சொல்ல வேணுமோ –

(வித்தை நீரில் இட்டு வைக்குமா போல் பாற் கடல் -குட மூக்கும் இதே போல் உண்டே)

க்ஷீர ஸாகர தரங்க ஶீகர ஆஸாரதாரகித சாரு மூர்தயே | போகி போக ஶயனீய ஶாயினே மாதவாய மது வித் விஷே நம꞉-முகுந்த மாலை -பாற் கடல் பெருமாளை த்யானித்துக் கொண்டே உறங்கவும் எழவும் வேண்டுமே 

கஜேந்திர ஆபத்தை ஹரிபரியாகப் போக்குவித்த ஹரி-பரத்வாதிகள் பஞ்ச-கஜேந்திர மோக்ஷம் ஆகிய -ஆறு விஷயங்களையும் ஆறாம் பாட்டில் –

ஜகத் த்ராணம் மறந்து கஜத் த்ராணம் பண்ண வந்த ஜகன் நாதன் -ஹரி திரு நாமம் கொண்டவன் -ஹரி நாமம் சொல்லவே ஜெயம் கிட்டும்

——–

உள்ளத்துக் கொண்டு –
அரவத் தமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும்
அகம்படி வந்து புகுந்து -என்கிறபடியே
திருப் பாற் கடலோடும் திரு வநந்த ஆழ்வானோடும் நாய்ச்சிமாரோடும் கூட தங்கள் நெஞ்சிலே கொண்டு –

உள்ளத்துக் கொண்டு
திருப் பாற் கடலிலே திரு அனந்த ஆழ்வான் மேலே அவதார கந்தமாய்
அநிருத்த ரூபியாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகிறவனை
அரவத் தமளியினோடும் (பெரியாழ்வார் )-என்கிறபடியே
தங்கள் நெஞ்சு ஆகிற நாடுகளிலே ( 8-6-4)-குடி கொள்ளும் படி பண்ணி

உள்ளத்துக் கொண்டு
மது கைடபாதிகள் இல்லாத இடம்
பனிக் கடலிலே நீராடி உண்ட விடாய் தீர -மனக் கடலிலே கொண்டு -(பெரியாழ்வார் 5-4-9)

———

முனிவர்களும் யோகிகளும் –
யோக அப்யாசம் பண்ணுகிறவர்களும்-மனன சிலரும் -அவர்கள் ஆகிறார்கள் –
வ்ருத்தி நிஷ்டரும்-குண நிஷ்டரும் -இங்கு உறங்குகிறவர்களையும் எழுப்பு கிறவர்களையும் போலே இருக்கிறவர்கள் –

முனிவர்களும் யோகிகளும்
ஒரு பிரவ்ருத்திக்கு ஷமர் இன்றிக்கே இருக்கிற குண நிஷ்டரும் -கைங்கர்ய நிஷ்டரும் –
லஷ்மண பரதர்களைப் போலே இருக்குமவர்கள் –
பரமபதத்திலும் வைகுந்தத்து அமரரும் முனிவரும் -என்று இரண்டு கோடியாய் இறே இருப்பது

திருவாய்ப்பாடியில் அவர்கள் உண்டோ என்னில் –
கிருஷ்ணன் இங்கே அவதரிக்கையாலே ஊரில் பசு நிரைக் கொட்டில்களிலே படுகாடு கிடப்பார்கள் –
பாண்டவர்கள் வர்த்திக்கிற பணிக் கொட்டில்களிலும் இடைச் சேரியிலும் கிருஷ்ணன் படுகாடு கிடக்குமா போலே-
(அணைய–பெருமக்கள் பாரித்து –எம்பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆவேனே )

உள்ளத்துக் கொண்டு -முனிவர்களும் யோகிகளும்-
ச பரிகரமாக (அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும்
அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து)அடக்கவற்றான ஹ்ருதயங்களிலே கொண்டு –
பகவத் குணங்கள் ஸ்ம்ருதமானால் ப்ரவ்ருத்தி ஷமர் அன்றிக்கே சிதில அந்த கரணரான முனிவர்களும்
அவனோடு சேர்ந்து கொண்டு அல்லது நிற்க மாட்டாதே க்ஷண மாத்ர விஸ்லேஷத்திலே மாந்துமவரான யோகிகளும் –

———–

மெள்ள எழுந்து –
கர்ப்பிணிகள் பிரஜைகளுக்கு நோவு வாராமே எழுந்து இருக்குமா போலே
வளையம் அலையாமே என்று இறே எழுந்து இருப்பது –

திரு வாய்ப்பாடியிலே முனிவர்களும் யோகிகளும் உண்டோ என்னில்
கிருஷ்ணன் வந்து திருவவதரித்த பின்பு இடையர் உடைய-பசு நிரைக் கொட்டில்களிலே வந்து அவர்கள் படுகாடு கிடப்பார்கள்-

அரி என்ற –
அரி என்கை யாவது-பகவத் அனுபவ விரோதிகளை போக்கி அருள வேணும் -என்கை

பின்னை இவர்களுக்கு பாபம் ஆவது –
கிருஷ்ணனுக்கு அசுரர்களால் வரும் தீங்கு-
அத்தை அவன் தானே போக்கி தந்து அருள வேணும் என்று-மங்களா சாசனம் பண்ணுகை என்றுமாம்

அவனாலே பயம் கெட்டால் பின்பு அத்தலைக்கு பயப்பட்டு-திருப் பல்லாண்டு பாடும் இத்தனை இறே

பகவத் சம்பந்த ஜ்ஞானம் பிறப்பதற்கு முன்பு இழவு பேறுகள் தன்னளவிலே யாய் இருக்கும்-
சம்பந்த ஜ்ஞானம் பிறந்த பின்பு இழவு பேறுகள் அவன் அளவிலே யாய் இருக்கக் கடவது இறே-

மெள்ள எழுந்து
கர்ப்பிணிகள் பிள்ளைக்கு நோவு வாராத படி மெள்ள எழுந்து இருக்குமா போலே
ஹ்ருதயேந உத்வஹன் ஹரீம்-என்று
ப்ரஹ்லாத ஆழ்வான் தான் மலையில் நின்றும் விழா நிற்கச் செய்தேயும் – மலைமுடிகளினின்று
தள்ளுண்ணம் போது “ஹ்ருதயேநோத்வஹந் ஹரிம்” என்றபடி – ‘பார்த்தருள் பார்த்தருள்” என்று
ஹ்ருதய குஹரவாஸியான ஸர்வேச்வரனைப் பிடித்துக்கொண்டாற் போலவும்-ஹ்ருதயத்தில் இருக்கிற சர்வேஸ்வரன் தளும்பாத படி எழுந்து இருந்து

அரி என்ற
ரக்ஷதுத்வாம் அசேஷாணாம் -என்னுமா போலே
நீயே உன்னை நோக்கிக் கொள்ள வேணும் என்று மங்களா சாசனம் பண்ணின
அத ஸ அபயங்கதோ பவதி-தம் பயம் கெட்டால்-அங்குத்தைக்கு பரிகை இறே உள்ளது

——-

பேரரவம் –
பஞ்ச லஷம் குடியிலும்-இந்த த்வநியாயே இருக்கை
எல்லாரும் ப்ரபுத்தரான காலம் ஆகையாலே ஒருவர் சொல்லும் அளவன்றிக்கே எல்லாரும் சொல்லுகை –

பேரரவம்
ஒருத்தன் அரி என்றது கேட்டு
ஒருவர் இருவராய் ஊராக ஹரி -என்கையாலே ப்ராதேசிகம் அன்றிக்கே
திருவாய்ப்பாடி எல்லாம் இந்த மஹா த்வனியே யாய்த்து –

ஹரி ஹரி என்கை யாவது –
ரக்ஷது த்வாம் அசேஷாணாம்–( ஸ்ரீ விஷ்ணு புராணம் ) என்னும்படியே
உன்னை நீயே காத்துத் தர வேணும் என்று திருப் பல்லாண்டு பாடுகை

அள்ளி அம் பொழில் வாய் இருந்து வாழ் குயில்கள் அரிஅரி என்று அவை அழைப்ப – 4-10-7-நாலாயி:1344/3 -அள்ளி -என்று அல்லியாய்-தாதுக்களை உடைத்தாய் அழகியதாய் இருந்துள்ள பொழில் இடத்தே என்னுதல் அன்றிக்கே அளியை அள்ளி என்னுதல்  -அத்தாலே தண்ணளி யாய் குளிர்ந்து தர்ச நீயமான பொழில் இடத்திலே இருந்து அங்கு உள்ள பலாதிகளை புஜித்து வர்த்திக்கிற குயில்கள் ஆனவை சத்வ நிஷ்டர் ப்ரஹ்ம முகூர்த்தத்திலே எழுந்து இருந்து ஹரி ஹரி என்னுமா போலே திரு நாம  சங்கீர்த்தனம் பண்ணும் ஆய்த்து (மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம் )பிராமணர் உடைய யாத்ரையாய் இருக்கும் ஆய்த்து அங்குத்தை திர்யக்குகளுக்கும் –

——

மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்

அவஹிதராய்க் கொண்டு எழுந்திருந்து ஹரி ஹரி என்று எம்பெருமானும் உணர்ந்து(அரவம்)
கேட்டாராம் வாழும்படி பண்ணின (பேரரவம்)திரு நாம சங்கீர்த்தனம்
உறங்குவாருடைய படுக்கைக்கையிலே வெள்ளம் கோத்தால் போலே
கிருஷ்ண விஸ்லேஷத்தாலே கமர் பிளந்த எங்கள் ஹ்ருதயங்கள் நனைத்து தேறிக் குளிரும்படி வெள்ளமிட்டது –
அது காண் எங்களை எழுப்பிற்று -என்கிறார்கள் –

பேய்முலை நஞ்சுண்டு இத்யாதி –
அவர்கள் பயப்படுகைக்கு சொன்னார்கள் -விரோதி போகப் பெற்றதே என்று இவள் பயம் கெடுகைக்கு உடலாய்த்து

கள்ளச் சகடம்
நம்மை முடிக்க வந்தது என்கை –
பேயை ஆராய்ந்து கொள்ளலாம் -தாய் ரக்ஷகமாக வைத்த சகடம் கிடீர் என்று அஞ்சுகை

கலக்கழிய காலோச்சி
அவன் அகப்பட்டுக் கொண்டு நின்றான் –
முலை தாழ்த்தது என்று மூரி நிமிர்ந்த திருவடிகள் அத்தை முடித்தது என்கை
அவன் ஆபத்துக்கும் நம் ஆபத்துக்கும் ரக்ஷை அவன் திருவடிகள் -ஆகையால் அன்றோ
நம் இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவாரணத்துக்கும் அவற்றையே பற்றுகிறது

வெள்ளத் தரவில் துயிலமர்ந்த
கீழே பிறந்த ஆபத்துக்கு தப்பிப் போய் திருவனந்த ஆழ்வான் மேலே சாயப் பெறுவதே என்கிறார்கள் –

வெள்ளம்
திரு மேனியில் சவ்குமார்யத்துக்குச் சேர குளிர்த்தி யுண்டான படி –

அரவு
ப்ரக்ருஷ்ட விஞ்ஞாந பலை கதாமநி
ஞானம் இருவரையும் அறிகை
விஞ்ஞானம் எல்லாக் கைங்கர்யமும் பண்ணுகை –
எல்லா அடிமை யாகிறது -சென்றால் குடையாம் இத்யாதி

(சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் அணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு –ஸ்ரீ முதல் திருவந்தாதி -53-)

ப்ரக்ருஷ்டம் -தன்னை மறைக்கை
பலம் -பெரிய பிராட்டியாரும் தானும் துகைக்கைக்கு பாங்கான சக்தி
திருமேனிக்கு உறுத்தாமைக்கு படுத்த பரிமளம் படுக்கை –
பாம்புக்கு நாற்றம் குளிர்த்தி மென்மைகள் ஸ்வ பாவம் –
இனி திரு விடையாட்டத்தில் பாம்புக்கு வாசி வைத்துக் கொள்ளும் அத்தனை –
இவன் மூச்சுப் பட்டு மது கைடபர்கள் பொடி பட்டுப் போகையாலே-
இப்படுக்கை யுடையவனுக்கு பயப்பட வேண்டா என்கை –

(தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் ஶ்லோகம் 39 –

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால்
ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–)

அமர்ந்த
பிராட்டியார் திரு முலைத் தடத்தாலே நெருக்கிலும் உணராமை

வித்தினை
வித்தை விதைக்கைக்கு நீரிலே சேர்த்தால் போலே இருக்கை-
காரணம் இருக்கக் கார்யம் உண்டாகச் சொல்ல வேணுமோ -என்கை
இதுக்கு முன்பு பிறந்த பிறவிகள் போராமை இனி பிறக்கைக்கு அடியிட்டு இருக்கிறபடி-

உள்ளத்துக்கு கொண்டு
மதுகைடபாதிகள் இல்லாத இடம்
(பனிக்கடலில் )விடாய் தீர -மனக் கடலில் கொண்டு

முனிவர்களும் யோகிகளும்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் போலே குணவித்தரும் கைங்கர்ய பரரும்-
இளைய பெருமாளும் பரத ஆழ்வானும் போலே இருப்பார்
உறங்குகிறவர்களையும் உணர்த்துகிறவர்களையும் போலே இருப்பார்

திருவாய்ப்பாடியிலே முனிவர்களும் யோகிகளும் உண்டோ என்ன –
அவன் இங்கே வந்து அவதரிக்க-பின்பு இடையர் பசு நிரைக் கொட்டில்களிலே கடுகாடு கிடப்பர்கள் –

மெள்ள எழுந்து
கர்ப்பிணிகளைப் போலே
ஹ்ருதயே நோத் வஹன் ஹ்ரீம்

மெள்ள எழுந்து-

தங்கள் திரு உள்ளத்திலே கண் வளர்ந்து அருளுகிற எம்பெருமானைத் திருப் பள்ளி யுணர்த்துகைக்காக
அவன் அசலாத படி ஸ்தநந்தய பிரஜையை மார்பிலே ஏறிட்டுக் கொண்டு உறங்கும் மாதா
அந்த பிரஜை உணராமல் க்ரமத்தாலே எழுந்திருக்கும் போலேயும்

ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானைப் பெரிய கற்களோடே கட்டி மலையிலே நின்றும் கீழே தள்ளுகிற போது –
அவன் தன்னுடைய நோவு பாராதே
எம்பெருமானுக்கு என் புகுகிறதோ என்னும் பயத்தால் தன் கைகளால் மார்வைப் புதைத்துக் கொண்டு
பார்த்தருளீர் என்றால் போலேயும்

அரி என்ற பேர் அரவம்
ஹரி ஹரி என்கை யாவது -ரக்ஷது த்வாம் அசேஷாணாம் பூதானாம் ஹரி -என்னும்படியே
உன்னை நீயே காத்துத் தர வேணும் என்று திருப் பல்லாண்டு பாடுகை

பேர் அரவம்
பேர் அரவமாவது ஒருவர் ஹரி என்ன
பஞ்ச லக்ஷம் குடியிலும் ஒரு த்வநியாய் எழுகை முந்துற —
அத சோ அபயங்க தோ பவதி என்று இத்தலையில் பயம் கெட்டால் பின்னை
அத் தலைக்கு பயப்பட்டுத் திருப் பல்லாண்டு பாடும் அத்தனை இறே

பண்டு இழவு பேறுகள் தன்னளவில் –
இப்போது பேறு இழவுகள் அவனளவிலே

ரிஷிகளும் –முந்துற நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய–என்று தொடங்கி
கதஸ் ஸ்வம் ஸ்தானம் உத்தமம் என்று பயம் கெடுவர்கள்

ஸ்ரீ பரத்வாஜ பகவான் பெருமாள் எழுந்து அருளும் தனையும்– வவந்தே நியதோ முநிம் -என்று
வயிறு எரிந்த படியே இருந்தான்

உள்ளம் புகுந்து குளிர்ந்து-
படுக்கைக்கு கீழே வெள்ளம் புகுந்தால் போலே இத் திரு நாமம்
செவி வழியே புக்கு உடம்பு வவ்வலிட உணர்ந்தோம் –

உள்ளம் புகுந்து குளிர்ந்து –
படுக்கைக்கு கீழே வெள்ளம் கோத்தாப் போலே-திருநாமம் செவி வழியே புகுந்து வவ்வலிட்டது-
அவன் அவர்கள் நெஞ்சிலே புகுந்து ஆனந்திப்பித்தாப் போலே-
கிருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்து கிடக்கிற நெஞ்சு-பதம் செய்யும்படி-
இவர்கள் உடைய த்வனியும் எங்கள் நெஞ்சிலே புகுந்து எங்களை-ஆனந்திப்பித்தது-
ஆகையால் எழுந்து இரு என்கிறார்கள் —

கிருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்து கிடந்த ஹிருதயமானது ஒரு நீர்ப் பாய்ச்சினால் போலே பதம் செய்து

மறு நீர் பாய்ந்தால் போலே குளிர்ந்தது- அத்தாலே நாங்களும் உணர்ந்தோம் –பிள்ளாய் எழுந்திராய் –

வெள்ளத்து அரவில் –துயில் அமர்ந்த –வித்தினை –
திருப் பாற் கடலிலே–திரு வநந்த ஆழ்வான் மேலே –யோக நித்ரையில் அந்ய பரதை இல்லாமல் அமர்ந்து இருந்த ஜகத் காரண பூதனை –
உள்ளத்துக் கொண்டு –முனிவர்களும் யோகிகளும் –-மெல்ல எழுந்து அரி என்ற-
ஹிருதயத்தில் த்யானித்து–குணானுபவரும் கைங்கர்ய பரரும் –சாவதானமாக–ஜாக ரூகராய்–ஹரிர் ஹரி -என்ற
பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்து
மகா த்வநியானது ஹிருதயத்திலே பிரவேசித்து –
குளிர்ந்தது–எழுந்திராய் -இத் அந்வய —

————————————————————————–———–

பிராட்டியார் -ஸ்ரீ ரெங்க நாயகி -பள்ளி கொள்ளும் இடம் ஸ்ரீ ரெங்கம் -வித்து இவரே -பேர் அரவம் -திரு அத்யயன உபய வேதாந்த ஒலி -இனிய கோஷம்

பிள்ளாய் :
கற்றதன்றி உற்றத வன்னடியார்க் காள் எற்றோ ?
பெற்ற பரமன் நமை உடைத்தாய் — மற்றையார்
விற்கவும் பாற்றென போக்க இசைந்தது
ஏற்கை நம என்பார் சாற்று.

———————-

(ஸ்வாபதேசம்)

பிள்ளாய் எழுந்திராய் -என்று பிள்ளைப் பெண் என்கிறது பொய்கை ஆழ்வாரை –
அது எங்கனே என்னில் –

அரவம் அடல் வேழம்-இத்யாதியாலே
ஸ்ரீ கிருஷ்ண அனுபவத்துக்கு தேசிகர் ஆகையாலும்
சூடிக் கொடுத்த வடிவுக்கு –
வையம் தக்ளி இத்யாதி –
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை -என்றும்
மாலும் கரும் கடலே என்நோற்றாய் இத்யாதியாலே –
அவனுடைய அங்க சங்கத்தை ஆதரித்துப் பேசியும்

மணமருவ மால் விடை ஏழ் செற்று-என்று
நப்பின்னை பிராட்டியை பெறுகைக்கு எருதுகளின் மேல் வியாபாரித்த படியைப் பேசுகையாலும்

இதில்
பேய் முலை நஞ்சுண்டு -என்றத்தை –
பேய் முலை நஞ்சூணாக யுண்டான் -என்றும்

கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி -என்று
கன்னிப் போரான சிறுச் சேவகத்தை -ஓரடியும் சாடுதைத்த -என்றும் –

வெள்ளத் தரவில் துயில் அமர்ந்த வித்தினை -என்றத்தை
வெள்ளத்தில் உள்ளானும் இத்யாதியால் பேசியும்

ஒன்றும் அதனை உணரேன் நான் -என்றும் –
முந்துற முன்னம் பகவத் விஷயத்திலே இழிந்தவர் ஆகையாலும்
பிள்ளைப் பெண் என்கிறது -பொய்கை ஆழ்வாரை —

பிள்ளை -மௌக்த்யம்-என்றவாறு

————

இது பெரியாழ்வாரைத் திருப்பள்ளி யுணர்த்தும் பாசுரம்.
பிள்ளாய்! என்பது இதில் விளி. அறிவில்லாதவனைப் பிள்ளை யென்பது.
எம்பெருமானுடைய ஸர்வ ரக்ஷகத்வம் முதலிய திருக் குணங்களை மறந்தே இவ்வாழ்வார்;
மங்களாசாஸனத்தில் ஒருப்பட்டாராதலால் பள்ளை யென்னத் தகுதியுடையாராயினர்.
“ஜ்ஞாந விபாக கார்யமான அஜ்ஞானத்தாலே வருமவை யெல்லாம் அடிக் கழஞ்சு பெறும்” என்ற
ஸ்ரீவசனபூஷண திவ்ய பூஷ ஸூக்தியும் மங்களாசாஸநத்திற்கு அஜ்ஞானத்தையே மூலமாகக் காட்டிற்று.

இவ்வாழ்வார் பெரும்பாலும் நந்தனவனத்திலேயே போது போக்குவராதலால் அவ்விடத்து அடையாளமாகிய
‘புட்களின் சிலம்புதல்’ முன்னே கூறப்பட்டது.

புள்ளரையன் என்று பெரிய திருவடியின் ப்ரஸ்தாவம் செய்திருப்பதில் இப்பெரியாழ்வார்
பெரிய திருவடியின் அம்சமாகத் திருவவதரித்தவர் என்று குருபரம்பரா ப்ரபாவாதிகளிற் கூறியுள்ள
விஷயம் முத்ராலங்காராPதியில் ஸூசிதமாகிறது,

‘வெள்ளை விளிசங்கு’ என்கிற சொல்தொடர் முதன் முதலாகப் பெரியாழ்வாருடைய திருவாக்கில் தோன்றியது.
வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர் திருச் சக்கரம் ஏந்தும் கையன்
உள்ளவிடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடு உரைக்கேன்
வெள்ளைப் புரவி குரக்கு வெல் கொடிதேர் மிசை முன்பு நின்று
கள்ளப் படை துணையாகி பாரதம் கை செய்யக் கண்டார் உளர் – (பெரியாழ்வார் திருமொழி 4-1-7 காண்க.)
அதனை இங்கு அநுவதித்துக் காட்டுவது ஒருவகையான லிங்கம்.

கோவிலில் -அரண்மனையில் -வல்லப தேவன் பாண்டியன் -சங்க நாதம் -ஈண்டிய சங்கம் எடுத்தூத –

முனிவர் யோகி -கைங்கர்யமும் குண அனுபவமும் -மந்த்ர உபதேசம் -நாரணன் பேர் வைக்க -நீராடல் இத்யாதி -பஞ்ச ஸம்ஸ்கார வியாக்யானம் செய்து அருளினார்

(பேய்முலை நஞ்சுண்டு) பெரியாழ்வார் திருமொழியில் (சீதக் கடலில்) கண்ணபிரானுடைய சரித்திரங்களில்
பேய்முலை நஞ்சுண்ட கதை முதன் முதலாக அநுஸந்திக்கப்பட்டது.
சீதக் கடலுள் அமுதன்ன தேவகி
கோதை குழலாள் அசோதைக்கு போத்தந்த
பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே -1-2-1-

பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை
மறம் கொள் இரணியன் மார்வை முன் கீண்டான்
குறங்குகளை வந்து காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-5-என்றது காண்க.

மறுபடியும் அந்தச் சரித்திரத்தை அநுஸந்திக்கையில் சகடாஸுரபங்கத்தையும் கூட்டி யநுஸந்தித்தார்.
நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்து சகடத்தை சாடிப் போய்
வாள் கொள் வளை எயிறு ஆர் உயிர் வவ்வினான்
தோள்கள் இருந்தவா காணீரே சுரி குழலீர் வந்து காணீரே –1-2-11—என்ற பாசுரங் காண்க.
அதற்குப் பொருந்த இங்கு
“பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடங் கலக்கழியக் காலோச்சி” என்றது.

“வெள்ளத்தரவில்” என்று தொடங்கிப் பெரியாழ்வார்க்குள்ள ‘விஷ்ணுசித்தர்’ என்னுற்திருநாமமும்
அதற்கு விவரணமான “அரவத்தமளியினோடும்”
“பனிக்கடலில் பள்ளிகோளை” என்ற பாசுரங்களின் தாற்ரியமும் நன்கு ஸூசிதம்.

அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும்
அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை
பரவுகின்றான் விட்டு சித்தன் பட்டினம் காவல் பொருட்டே -5 2-10 –

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5 4-9 –

————————————————————————————

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading