இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-
“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம், ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய், மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.
—————–
அவதாரிகை –
பகவத் விஷயத்தில் சுவடு அறிந்தே -நாயகப் பெண் பிள்ளாய் –
மறந்து கிடக்கிறாள் ஒருத்தியை -பேய்ப் பெண்ணே-எழுப்புகிறார்கள் –
ஆறாம் பாட்டில் –
பகவத் விஷயத்தில் புதியவள் ஒருத்தியை எழுப்பிற்று –
இதில்
பழையவளாய் இருந்து வைத்து புதுமை பாவிக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –
சிலரை எழுப்பினால் எழுந்து இருக்கிறவர்களைக் கொண்டு
கிருஷ்ணன் பாடு போகிறோம் -என்னுமவர்கள் அன்று இறே –
எல்லார்க்கும் நன்மை வேண்டும் என்று இருக்குமவர்கள் இறே
பகவத் சம்பந்தம் மெய்யாகில் தன் வயிற்றில் பிறந்த பிரஜையினுடைய ஸம்ருத்திக்கு உகக்குமா போலே எல்லாருடைய ஸம்ருத்திக்கும் உகக்க வேணும் இறே
அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -(2-3-10)–என்றும் –
அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை-(10-9-10) என்றும் சொல்லுகிறபடியே
இக் குழாத்தில் இனிமை யுண்டானால் இறே அங்கும் இனிமை யுண்டாவது –
களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணிமூப்பு இறப்பு அற்று
ஒளிகொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான் இந் நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி
அளிக்கின்ற மாயப் பிரான் அடியார்கள் குழாங்களையே–2-3-10-
வந்துஅவர் எதிர் கொள்ள* மாமணி மண்டபத்து*
அந்தம் இல் பேரின்பத்து* அடியரோடு இருந்தமை*
கொந்து அலர் பொழில்* குருகூர்ச் சடகோபன்* சொல்-
சந்தங்கள் ஆயிரத்து* இவைவல்லார் முனிவரே-10-9-10-
ஆட் கொண்ட வில்லி ஜீயர் எழுந்து அருளா நிற்கச் செய்தே-
நஞ்சீயர் தெண்டன் இட்டு நிற்க –
பகவத் விஷயத்தில் நமக்கு ருசி மெய்யாகப் பிறந்தது இல்லை காணும் -என்று அருளிச் செய்ய –
உம்மைப் போலே ஆச்சர்யவான்கள் யுண்டோ -இங்கனே அருளிச் செய்வான் என் என்ன –
பகவத் விஷயத்திலே மெய்யே ருசி உண்டு என்று இருக்கையாவது –
பாகவதர்களைக் கண்டால் உகக்கும் அன்று காணும் -என்று அருளிச் செய்தார் –
சிலரைச் சிலர் எழுப்பினால் -அவர்களைக் கொண்டு நோன்புக்கு போமவர்கள் அல்லரே இவர்கள் – பிறருடைய நன்மையே தங்களுக்கு பிரயோஜனம் என்று இருக்குமவர்கள் இறே
நாம் -வைஷ்ணவர்கள்-தந்தாமே சில நன்மைகள் சம்பாதித்துக் கொண்டாலும் பொறுக்க மாட்டோமே-
பகவத் சம்பந்தம் மெய்யாகில் தன் வயிற்றில் பிறந்த பிரஜையினுடைய ஸம்ருத்தி
தன்னது என்று இருக்குமா போலே இருக்க வேணும் இறே
நாம் இவ்வர்த்தம் சொல்லுகை பறையர் ஒத்துச் சொல்லுமா போலே இறே
ஆசாரத்திலும் சிறிது உண்டாகா விடில் ஞானம் இல்லை என்னும் அத்தனை
ஆட் கொண்ட வில்லி ஜீயர் அருளிச் செய்த வார்த்தைக்கு நஞ்சீயர் அருளிச் செய்த வார்த்தையை நினைப்பது –
ஸ்ரீ தேவி மங்கலத்திலே (மேல் கோட்டைக்கு அருகில் )கமுகிலே நஞ்சீயர் ஸ்ரீ பாதத்தை யுடைய சிலர் இருப்போரை யடைய அமுது செய்விக்கக் கண்டு
பட்டர் பிடாத்தை (முக்காடு )இட்டுக் கொண்டு ப்ரீதராய்
நம்முடைய கையில் சில மெய்யுண்டாய் அன்று -அடியிலே சில மெய்யர் யுண்டாய்
அவர்களுடைய மெய் இவ்வளவும் வரப் பேசுகிறது -என்று அருளிச் செய்தார் –
அடியார்கள் குழாங்களை– கூடுவது -என்றார்
யதாக்ரது ரஸ்மிந் லோகே புருஷ ததே த ப்ரேத்ய பவதி -என்கிற தத்க்ரது நியாயத்தாலே –
அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை -என்றார்
இங்கே இக் குழாம் இனிதானால் இறே அக் குழாம் ஸித்திப்பது-
கலியர் சோறுடையார் வாசலிலே சென்று கூப்பிடுமா போலே சென்று எழுப்புகிறார்கள்
கீழ் பகவத் விஷயத்தில் புதியவள் ஒருத்தியை எழுப்பிற்று –
இப் பாட்டில் பழையளாய் இருந்து வைத்து புதுமை பாவித்துக் கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறது –
இப் பாட்டில் பகவத் விஷயத்திலும்-பாகவத விஷயம் நன்று என்று அறிந்தும்
மறந்து இருப்பார் ஒருவரை எழுப்புகிறார்கள்
அனந்தரம் -நாயகப் பெண் பிள்ளாய் -என்கையாலே
ஸ்வ ஆச்சார்யனுக்கும் கௌரவன் ஆகையால் அஸ்மத் பரம குருப்யோ -என்னும் படியைச் சொல்லுகிறது –
பகவத் அபிமத க்ரியா கலாபங்களாலே பகவத் போக்யமான வஸ்துவை
விவேகித்து தரிப்பார் படியைக் காட்டி சத்வ பிரதானரை விரோதி நிரசன சமர்த்தனுடைய
திரு நாம சங்கீர்த்தனத்திலே ஸமாஹிதர் ஆக்கும் படி சொல்கிறது –
கலந்து பேசின பேச்சரவம்-
மத்தினால் ஓசைப்படுத்த – –
தயிர் அரவம் –
நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் –
பேய்ப்பெண்ணே நாயகப் பெண் பிள்ளாய்
பகவத் அபிமத க்ரியா கலாபங்களாலே பகவத் போக்யமான வஸ்துவை விவேகித்து
தரிப்பார் படியைக் காட்டி சத்வ பிரதானரை விரோதி நிரசன சமர்த்தனுடைய திரு நாம சங்கீர்த்தனத்திலே ஸமாஹிதராக்கும் படி சொல்லுகிறது
கிருஷ்ண அனுபவத்தை தேசிகையாய் இவ்வனுபவத்தை விஸ்மரித்துக் கிடக்கிறாள்
ஒருத்தியை எழுப்புகிறார்கள்
இத்தால்
பகவத் விஷயமான அர்த்தம் ஒருவனுக்கு விஸ்ம்ருதமானால் தங்கள் பரிவால் –
போதயந்த பரஸ்பரம் -என்கிறபடியே
அறிவிக்கையும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது –
—————-
கீசுகீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்த்து
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய்-7-
வியாக்யானம் –
போது விடிந்தது -எழுந்து இராய் -என்ன –
விடிந்தமைக்கு அடையாளம் -என் -என்ன –
ஆனைச்சாத்தன் கீசுகீசு என்னா நின்றது –
கீசு -கீசுகீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன்-அநஷர ரசமாய் இருக்கை
ஓர் ஆனைச் சாத்தன் பேசும் காட்டில் போது விடிந்ததாக வேணுமோ என்ன –
எங்கும் பேசா நின்றது என்ன –
அவற்றைக் கலக்குகைக்கு நீங்கள் உண்டே -என்ன
எங்களால் அன்று -தாமே உணர்ந்தன -என்ன
அதுக்கு அடையாளம் என் என்ன –
கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ-
கலந்து பேசினபடி அறிந்த படி என் -என்ன
பிரிந்து போனால் பகல் எல்லாம் தரிக்கும்படி கலந்து –
பிரியப் புகா நின்றோம் என்னும் தளர்த்தி தோற்ற பேசுகிற
மிடற்று ஓசை கேட்டிலையோ –
கேளாமைக்கு அங்கே ஆரவாரம் உண்டாயாகாதே செல்லுகிறது
என்று மர்மம் சொல்லுகிறார்கள் -கேட்டிலையோ -என்று –
கீழ்ச் சொன்ன
முனிவர்களும் யோகிகளும் -என்றதோடு –
ஆனைச் சாத்தான் -என்றதோடு –அவர்கள்
ஹரிர்ஹரி -என்றதோடு
இவை கீசு கீசு என்றதோடு வாசி அற எல்லாமே உத்தேச்யமாய் இருக்கிற படி –
கீசு கீசு –
இது அநக்ஷர ரசமாய் இருக்கிற படி –
(பாரத்வாஜர் மூன்று நூறு வருஷங்கள் வேதங்கள் கற்று முடிக்க முடியாமல் வேத சாரம் -சாவித்ரி வித்யை -திருப்பாவை–கற்றார் என்பர்
ப்ரஹ்ம முஹூர்த்தம் -ஆனைச் சாத்தன் ஒலியும் சேர்ந்து
ஆனையை நடத்திச் செல்லும்-walking – காலம்
வலியன் குருவி
கீசு கீசு கிச்சு கிச்சு கிருஷ்ணா கிருஷ்ணா-திருத்தாய் செம்போத்தே -என்று இத்தையே சொன்னதாம்
கீசு சுகீ அஹம் சுகீ -த்வம் சுகீ -மரா மரா –ராம போல் இங்கும்)
குறுகாத மன்னரை கூடு கலக்கி வெம் கானிடை
சிறு கால் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை
அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி
சிறுகாலை பாடும் தென் திரு மால் இரும் சோலையே – 4-2 -8-)திருமாலிருஞ்சோலை வண்டுகளும் ஆயிரம் நாமங்கள் சொல்வதாக பெரியாழ்வார் –
விவஷித்தால் திருநாமம் சொன்னதோடு
அநஷரமான இவற்றின் த்வனியோடு வாசியற உத்தேச்யமாய் இருக்கிறபடி
நாராயணாய என்றத்தோடு
நாராயண என்றத்தோடு வாசியற்று அவனுக்கு உத்தேச்யமாய் இருக்குமா போலே
இரவு எல்லாம் கலந்து மரக்கலம் ஏற்றுமவன் மீண்டு வரும் அளவும்
ஜீவனம் ஏற்றுக் கொண்டு போமா போலே
பகல் முப்பது நாழிகைக்கும் விளை நீர் அடைத்துக் கொண்டு
பிரிவு வருகிறது என்னும் தளர்த்தி தோற்ற பேசுகிற பேச்சு
விடிவுக்கு உடல் அன்றோ என்கிறார்கள் –
கேட்டிலையோ–
இந்த த்வனி கேளாத படியோ -அங்கு ஓடுகிறது என் என்கிறார்கள் –
நிஸ்வனம் சக்ர வாகா நாம் நிஸம்ய புண்டரீக விசாலாக்ஷி –
(கிஷ்கிந்தா -பெருமாள் வார்த்தை -பிராட்டி இந்த ஒலி கேட்டு என்ன பாடு படுவாளோ )என்கிறபடியே –
இவற்றின் த்வனியைக் கேட்டால்-கடுக
கிருஷ்ணன் பக்கல் சென்று நிற்க வேண்டாவோ என்ன
எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து -கீசு கீசு -என்ற பேச்சரவம் கேட்டிலையோ –
சர்வோத்திகமாக அஹங்கார நிவர்த்தகரான மகா பாகவதர்-
நாம் பிரியப் புகா நின்றோமே -என்ற பிரிந்தால்
மறுபடியும் கூடும் தனையும் தரித்து இருக்கைக்காக
பரஸ்பரம் சம்ஸ்லேஷித்-கத்கத ஸ்வரம் ஆகையாலே அநஷர ரசமாக பேசின பேச்சரவம் –
விஸ்லேஷ வ்யசனம் தோற்றும்படியாக பேசின பேச்சின் உடைய த்வனியை
கேட்டிலையோ –
கலந்து பேசுகிற பேச்சு கேட்டிலையோ –
கேளாமைக்கு மற்ற ஆரவாரம் யுண்டோ –
நிஸ்வநம் சக்ரவாகா நாம் –ஸஹ ஸாரினாம் -இத்யாதி -(கிஷ்கிந்தா -ராமன் வருந்தி சொல்வது )
இப் பேச்சுக் கேட்டு வைத்து கிருஷ்ணன் முகத்திலே விழித்துக் கொண்டு நில்லாதே தரிக்க வல்லை யாவதே
சவ்மித்ரே ஸ்ருணு வந்யாநாம் இத்யாதி (அயோத்யா) –
(ராமர் லஷ்மணன் இடம் சித்ர கூடம் புறப்பட நேரம் ஆனதே -காட்டுப் பறவைகள் ஓசை கேட்கிறதே நீ கேட்க வில்லையோ )
விடிவோறே பெருமாள் திரு மாளிகையில் சென்று எழுப்புவாரும்
கவி சொல்லுவாரும் வம்சாவளி ஒதுவாருமாக எழுந்திருக்கக் கடவ
இவர் பக்ஷிகளுக்கு முன்னே உணரும்படியாவதே என்ன தர்ம ஹானி -என்று ஆய்த்தான் அருளிச் செய்வர் –
இரவு எல்லாம் கலந்து இப்போது பிரிக்கிறோம் என்று பகல் எல்லாம் பிரிந்து இருக்கைக்கு
விளை நீர் அடைத்து பிரியப் புகுகிறோம் என்று
தளர்த்தி தோற்ற பேசுகிற பேச்சு கேட்டிலையோ என்ன
மரக்கலம் ஏறுவார் ஆறு மாசத்துக்கு தண்ணீரும் சோறும் ஏற்றுமா போலே இக் கலவை அரவம் கேட்டிலையோ
நிஸ்வநம் சக்ரவாகா நாம் இத்யாதி –
இப்பேச்சுக் கேட்டு வைத்து கிருஷ்ணன் முகத்திலே விழித்துக் கொண்டு நில்லாதே தரிக்க வல்லையாவதே
சவ்மித்ரே ஸ்ருணு வந்யாநாம் வல்கு வ்யாஹரதாம் ஸ்வநம் – இத்யாதி
விடிவோறே பெருமாள் திரு மாளிகையில் சென்று எழுப்புவாரும்
கவி சொல்லுவாரும் வம்சாவளி ஒதுவாருமாக எழுந்திருக்கக் கடவ
அவர்கள் பக்ஷிகளுக்கு முன்னே உணரும்படியாய் –
வேறே சிலரையும் இப்பேச்சும் உன் செவியில் பட்டது இல்லையோ என்று
எழுப்புவதாய்த்தே என்ன தர்ம ஹானி –என்கிறான் ருஷி
பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து இடைச்சியாய் கண்ணுறங்காதே எழுப்பித் திரிகிறாப் போலே இவர்களும்
மாளிகைகளிலே ஏத்தாளிகள் வம்சாவளி சொல்லக் கேட்டு எழுந்து இருக்குமவர்கள்
பக்ஷிகளினுடைய பேச்சுக் கேட்டு எழுந்து இருக்கும் படி யாவதே
இது என்ன தர்ம ஹானி என்று அவள் வெறுத்துக் கிடக்க
———–
பேய்ப் பெண்ணே –
இவர்கள் ஆகில் இப்படி சொல்லுகையே பணி என்று பேசாதே கிடக்க –
அறிந்து வைத்து காற்கடைக் கொள்வாயே -மதி கேடீ என்கிறார்கள் –
இவர்களுக்கு அறிவாகிறது -பகவத் விஷயத்திலும் ததீய விஷயம் நன்று என்று அறிகை-
அத்தை அறிந்து வைத்தே பேசாதே கிடைக்கயாலே சொல்லுகிறார்கள் –
பேய்ப் பெண்ணே –
என்கிறார்கள் –
உன்னுடைய அந்யதா ஞானம் இருந்தபடி என் –
பகவத் சம்ஸ்லேஷம் பாகவத சம்ஸ்லேஷ பர்யந்தம் என்று
அறிந்து வைத்து ஆறி இருப்பதே -என்று க்ஷேபிக்க-
போது விடியாதே இருக்கச் செய்தே-
விடிந்தது என்று சொல்லுகிற நீங்கள் அன்றோ பேய்ப் பெண்கள் என்ன
போது விடியச் செய்தே விடிந்ததில்லை என்று
சொல்லுகிற நீ அன்றோ பேய்ப் பெண் என்ன
பேய்ப் பெண்ணே-
பகவத் விஷயத்திலும் ததீய விஷயம் தன்னேற்றம் என்று அறிந்து வைத்துப் பேசாதே
கிடக்கையாலே சொல்லுகிறார்கள்
என்ன அறிவு தான் –
பேய்ப் பெண்ணே என்றதோடு
நாயகப் பெண் பிள்ளாய் வாசியில்லை -அகவாயில் பாவம் ஒன்றாகையாலே
பின்னையும் எழுப்புகிறார்கள்
தத் விஷயத்திலும் ததீய விஷயம் நன்று என்று அறிந்து வைத்துப் பேசாதே கிடைக்கையாலே சொல்லுகிறார்கள் –
என்ன அறிவு தான் –
மிதுனமாய்க் கலந்தால் அடியேன் என்னிலும் என்பர் –
எதிர் தலையைத் தாழச் சொல்லிலும் சொல்லுவர்
பேய்ப் பெண்ணே என்றதோடு நாயகப் பெண் பிள்ளாய் வாசியில்லை -அகவாயில் பாவம் ஒன்றாகையாலே
இது போதாது
வேறு ஒரு அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் என்ன
———-
என் அறியாமை சொல்லாதே விடிந்தமைக்கு அடையாளம்-சொல்லுங்கோள் என்ன –
தயிர் கடைகிற ஓசை கேட்டிலையோ –
காம்யத்தில் பல ஸ்ரத்தை இல்லையாகில் தவிரலாம் –
நித்ய கர்மம் அவசியம் அனுஷ்டித்தே அற வேணும் –
அனுஷ்டானத்துக்கு பலம் இல்லை -அகரேண ப்ரத்யவாயம் உண்டு –
அப்படியே
ஜாதி உசிதமான நித்ய அனுஷ்டானம் அன்றோ
இவர்களுக்கு தயிர் கடைகை-இது விடிவுக்கு அடையாளம் போராதோ என்கிறார்கள் –
காசும் பிறப்பும் –
அச்சுத் தாலியும் ஆமைத் தாலியும் –
காசும் பிறப்பும் –
அச்சுத் தாலியும்-முளைத் தாலியும்-(இடைச்சிகள் பூணும் ஆபரணம் )
ப்ராஹ்மணர் சந்த்யா வேளையில் பூணூல் இடுமா போலே
தங்கள் அனுஷ்டான வேளையில் இவர்களுக்கு ஆபரணம் பூண வேணும் -என்கை –(ஆபரணம் பூணும் பயனே இந்த ஒலி -என்றவாறு )
கலகலப்ப –
கடைகிற போதை வ்யாபாரத்தாலே-
அரவூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி -என்னுமா போலே
த்வநிக்கை –
கல கலப்ப-
ஆபரண த்வனியும் இவர்களுக்கு உத்தேச்யமாய் இருக்கை –
காசு பிறப்பு – மாதர் அணியும் ஆபரண விசேஷம்.
கல கலப்ப – ஒலிக் குறிப்பு.
கடைய வேண்டிய தயிர் அளவற்றுள்ளமையாலும்,
கடைகின்ற தங்களுடைய ஸௌகுமார்யத்தாலும்,
கிருஷ்ணன் அருகில் வந்திருந்து கொண்டு ‘தயிரை மோராக்க வொட்டேன்’ என்று கடை கயிற்றைப் பற்றி வலிக்கையாலும்
கடைகையிலுள்ள அருமையைக் கூறுவது, கை பேர்த்து என்பது.
கை பேர்த்து –
தயிரின் பெருமையாலும்-
இவர்கள் சௌகுமார்யத்தாலும்-
மலை பேர்த்தாப் போலே கை பேர்க்கப் போகாதபடி –
கிருஷ்ணன் சந்நிதி இல்லாமையாலே கை சோர்ந்தது என்னவுமாம்
அன்றியே
அவன் சந்நிஹிதனாய் நின்று-தயிரை மோராக்க ஒட்டேன் என்று
கையைப் பற்றி நாலுகையாலே-என்றுமாம் –
மோரார் குடமுருட்டி -என்னக் கடவது இறே-
காசும் பிறப்பும் கல கலப்ப கை பேர்த்து –
திருமந்த்ரமும்-த்வய சரம ஸ்லோகங்களும்-ஒன்றோடு ஓன்று சேர்ந்து த்வனிக்க
ஸ்வரூப
உபாய
புருஷார்த்த
ஞானம் தலையெடுத்து –
———–
வாச நறும் குழல் ஆய்ச்சியர்
ஆயாசத்தினாலே-மயிர்முடி நெகிழ்ந்து-பரிமளம் தானே புறப்பட்டு-ப்ரவஹிக்கிற படி
வாச நாறும் குழல்
கடைகிற ஆயாசத்தாலே மயிர் முடி கட்டு நெகிழ்ந்து முடை நாற்றத்தை மறைக்கும் படி யாய்த்து
பரிமளம் வெள்ளம் இடுகின்ற படி –
(சர்வ ரஸ ஸர்வ கந்த வஸ்துவை தங்கள் கொய்சகத்திலே வைக்குமவர்கள் அன்றோ )
தெருவெல்லாம் காவி கமழ் திருக் காட் கரை -என்னக் கடவது இறே
(உருகுமால் செஞ்சம் உயிரின் பரமன்றி,
பெருகுமால் வேட்கையும் எஞ்செய்கேன் தொண்டனேன்,
தெருவெல்லாம் காவி கமழ்திருக் காட்கரை,
மருவிய மாயன்தன் மாயம் நினைதொறே. 6.1)
வாச நறும் குழல் –
தயிர் கடைகைக்கு நியமித்து முடித்துக் கட்டிய மயிர் முடி -கடைந்த ஆயாசத்தாலே குலைந்து
கடைந்த வேர்ப்பாலே அதி பரிமளிதமாய்
முடை நாற்றமும் தோற்றாத படி கிண்ணக வெள்ளம் கரையை உடைத்து பெருகுமா போலே
எங்கும் சுற்று வெள்ளம் இடா நின்றது
பரிமளம் ஊரை உறங்க ஓட்டுகிறது இல்லை
———-
மத்தினால் ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ –
மந்தரத்தாலே கடலைக் கலக்கினாப் போலே-இந்த கோஷமும் செவியில் பட்டது இல்லையோ –
அவன் கண் அழகிலே தோற்று பாடுகிற த்வனியும்-
கடைகிற தயிர் ஓசையும்
ஆபரண ஓசையும்-கிளர்ந்து
ஊர்த்த்வ லோகங்களிலே சென்று கிட்டுவதான ஓசை
உன் செவியில் படாது ஒழிவதே –
ஆய்ச்சியர் –
ஒருத்தி யன்றோ என்று சொல்ல ஒண்ணாத படி இருந்ததே குடியாக –
மத்தினால் ஓசைப் படுத்த தயிர் அரவம்-
மந்திரத்தால் கடலைக் கடைகிற போது -அரவூரு சுலாய் மலை தேய்க்கும் ஒலி-என்றபடி –
ஆறு மலைக்கு எதிர்ந்தோடும் ஒலி —
அரவூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி —
கடல் மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி,
அப்பன் சாறு பட அமுதம் கொண்ட நான்றே
(நான்கு ஒலிகள் -காசு பிறப்பு -கை கலப்பு -கடையும் ஒலி அரவிந்த லோசனா என்று சொல்லும் திருநாம-சங்கீர்த்தனம் -நான்கும் இங்கு
ஆழ்வார் -மூன்று ஒலிகள் பாற் கடல் கடையும் பொழுது)
உத்காய தீனாம் அரவிந்த லோசனம் வ்ரஜாங்க நாநாம் திவமஸ்பர்ச்ச த்வனி
தத் நசச நிர்மந்தந ச சப்த மிஸ்ரிதோ நிரஸ்யதே யேன திஸாம் அமங்களம் –
கிருஷ்ணனுடைய கண் அழகுக்கு தோற்றுப் பாடுகிற இடைப் பெண்களுடைய த்வனி –
தயிர் கடைகிற ஓசையோடு கலசி பரம பதத்தில் சென்று த்வனித்தது-
அப்போது
கிருஷ்ண குணங்கள் பூமியிலே நடையாடா நிற்க –
மலையிலே இருப்பாரைப் போலே உயர இருப்பதே என்று
அவர்களை வசை பாடினால் போலே இருந்ததே
விக்ரீது காமா கில கோப கன்யா முராரி பாதார்ப்பித சித்த வ்ருத்தி –
தத்யாதிகம் மோஹ வசாத் அவோசத் கோவிந்த தாமோதர மாதவேதி-
முரனைக் கொன்ற வீரத்தில் தோற்று கிருஷ்ணன் பக்கலிலே பக்த பாவைகளாக இருக்க
இதனின்றும் இவளை மீட்க்கும் விரகு ஏதோ என்று பார்த்து –
தாயார் பாலையையும் தயிரையும் நெய்யையும் கொடுத்து
இத்தை விற்றுக் கொண்டு வா என்று சொல்ல –
விற்கப் போன இடத்திலும் நினைவு இங்கேயே –
கோவிந்தனைக் கொள்ளுங்கோள் -கிருஷ்ணனைக் கொள்ளுங்கோள் –
ஸ்ரீ யபதியைக் கொள்ளுங்கோள் -என்று கூறிக் கொண்டு திரிந்தாள்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
இது கேளாத படி உள்ளேயும் ஒரு தயிர் உண்டோ கடைகிறது-
கெண்டை இத்யாதி –
தாமோதரா மெய் அறிவன் நானே —
கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி* கீழை அகத்துத் தயிர் கடையக்
கண்டு* ஒல்லை நானும் கடைவன் என்று* கள்ள-விழியை விழித்துப் புக்கு*
வண்டு அமர் பூங்குழல் தாழ்ந்து உலாவ* வாள்முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப*
தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம்* தாமோதரா மெய் அறிவன் நானே –ராஜகுல மஹாத்ம்யம் தோன்ற ஊடுகிறாள்
பண்டு போலேயோ-கிருஷ்ணன் பிறந்த பின்பு
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்களாகையாலே
அறுபது நாழிகையும் கறப்பது கடைவதாய் செல்லுமத்தனை அன்றோ
இது விடிவுக்கு உடலாமோ வென்று அவர்கள் நிருத்தராம் படி சொல்ல
வாச நறும் குழல் இத்யாதி –
மிக்க பரிமளத்தை உடைய-பகவத் விஷய வ்யாமோகத்தை உடைய
அனன்யார்ஹ சேஷபூதரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் சங்கல்ப்பத்தால்
சிஷிதரான சம்சாரி சேதனர் உடைய-
திவ்ய பிரபந்த அனுசந்தான த்வனியை கேட்டிலையோ –
ஆய்ச்சியர்-மத்தினால்-ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
க்ருஹிணிகள் எல்லாரும்
விக்ரேதுகாமா கில கோப கந்யா–கோவிந்த தாமோதர மாதவேதி – -இத்யாதி
(கிருஹணீகள் கடைய கன்னி பெண்கள் விற்க போகும் பொழுது மனசு எல்லாம் இவன் இடமே கொண்டு சொல்வது )
ஊராகக் கிளர்ந்தது -மத்தினால் ஓசைப்படுத்துகிற த்வனியும் –
இவர்கள் சிலம்பின் த்வனியும் –
(கை கங்கணம் கால் சிலம்பு -தயிர் கடைய உட்கார்ந்து பண்ண முடியாதே –
வள்ளல் -பெரிய பானை நின்றே கடைய வேண்டும் )
குழல்களில் வண்டுகளின் த்வனியும் -(மது பானம் அருந்த வண்டுகள் குழல்களில் படிந்து த்வநிக்குமே )
ஆபரணம் தன்னில் கல கல வென்கிற ஒலியும்
கைகளில் வளைகளின் ஒலியும் கிளர்ந்து
பரம பதத்தில் சென்று கிட்டி கிருஷ்ண குணங்களாய் எங்கும் பரப்புகை
கோவிந்த தாமோதர மாதவேதி-போலே
அரவம் கேட்டிலையோ
கெண்டை ஒண் கண்கள் மடவாள் ஒருத்தி இத்யாதிப் படியே -(பெருமாள் -6-2-)
(ராஜ குல மஹாத்ம்யம் தோன்ற ஊடல் )
(புலவர் நெருக்கு உகந்த பெருமாள் )ஆண்களான தேவ ஜாதிக்கு ஓரு கை பற்றுமவன் பெண்களைக் கை விடான் –
இக் கோலாஹலங்கள் அடையக் காண எழுந்திராய் என்கிறார்கள்
விடிந்தமைக்கு அடையாளம் கேட்டிலையோ
மத்தினால் ஓசை படுத்த
ஒரு மந்திரத்தாலே கடலைக் படுத்துமா போலே முழங்கா நின்றது –
உத்காய தீ நா மரவிந்த லோசநம் வ்ரஜாங்க நாநாம்-திவமஸ்ப் ருசத் த்வனி —
தத் நஸ்ச நிர்மந்தந சப்த மிஸ்ரிதோ நிரஸ்யதே யேந திசாம மங்கலம்
அவன் கண் அழகிலே தோற்றுப் பாடுகிற த்வனியும் –
இவர்கள் காலில் சிலம்பின் த்வனியும் –
குழல்களில் வண்டுகளின் த்வனியும் –
ஆபரணங்கள் தன்னில் தான் கல கல வென்கிற ஒலியும் கைகளில் வளைகளின் ஒலியும் கிளர்ந்து
பரமபதத்தில் சென்று கிட்டி கிருஷ்ண குணங்கள் திருவாய்ப்பாடியிலே பரிமாறா நிற்க
இவ்வுயரத்தில் என்ன இருப்பு இருக்கிறிகோள்-என்று
அங்குள்ளாரை வசை பாடுவாரைப் போலே இருக்கிற த்வனியும் கேட்டிலையோ -என்கிறார்கள் –
(பிராட்டிமாரும் கண்ணனைக் காண வைதிக பிள்ளைகளைக் கொண்டு போன வ்ருத்தாந்தம்)
விக்ரேது காமா கில கோப கன்யா முராரி பாதார்ப்பித்த சித்த வ்ருத்தி தத் யாதிகம்
மோஹ வசாத் அவோசத் கோவிந்த தாமோதர மாதவேதி-போலே
எம்பெருமான் பக்கலில் பிச்சேறிக் கிடக்கிற பெண்களை இவர்கள் அந்நிய பரதை தீர வேணும் என்று பார்த்து
தயிரும் பாலும் நெய்யும் விற்று வாருங்கோள்-என்று கொடுத்துவிட
விற்கும் போது நெஞ்சில் நினைப்பது கிருஷ்ணனை யாகையாலே
(கோவிந்த தாமோதர மாதவேதி )கோவிந்தனை கொள்ளுங்கோள் கிருஷ்ணனைக் கொள்ளுங்கோள்
ஸ்ரீயபதியைக் கொள்ளுங்கோள் -என்னா நிற்பார்கள் –
“உத் காயதீநாம அரவிந்த லோசநம் வரஜாங்கநாநாம் திவமஸ்ப்ருசத் த்வநி:-
தத்நச்ச நிர்மந்தந சப்த மிஸ்ரிதோ நிரஸ்யதே யேந திசாம மங்களம்.”
கண்ணபிரானுடைய கண்ணழகுக்குத் தோற்றுப் பாடுகிற ஆயர் மாதருடைய பாட்டினொலி
தயிர் கடைகிற ஓசையோடே கலசிப் பரமபதத்தே செந்றொலித்ததெனப்; புராண நூல் கூறுமாறறிக.
ஆய்ச்சிகள் தயிர் கடையும்போதும் கண்ணபிரானைப் பாடுவார்களோ வென்னில்;
“விக்ரேதுகாமா கில கோப கந்யா முராரி பாதார்ப்பித சித்த வ்ருத்தி:-
தத்யாதிகம் மோஹவசாதவோசத் கோவிந்த தாமோதர மாதவேதி.”
ஓராய்ப்பெண், கண்ணபிரான் முரனை முடித்த வீரத்தில் தோற்று அவன் பக்கல் கருத்தை ஊன்ற வைத்து
வேறு சிந்தையின்றியிருக்க, வீட்டிலுள்ள பெரியோர் ‘இவளை இதினின்றும் மீட்கும் விரகு ஏதோ’ என்று பார்த்து,
பாலையும் தயிரையும் நெய்யையும் தந்து ‘இவற்றை விற்றுவா’ என்றனுப்ப,
அவளும் அங்ஙனமே விற்கச் செல்ல, நினைவு கண்ணபிரான் பக்கலிலாகையாலே,
‘கோவிந்தன் வாங்க வில்லையோ கோவிந்தன், கிருஷ்ணன் வாங்க வில்லையோ க்ருஷ்ணன்,
மாதவன் வாங்கவில்லையோ மாதவன்’ என்று க்ருஷ்ண நாமங்களைக் கூறிக் கொண்டு திரிந்தாள் என்னா நின்றால்,
தயிர் கடையும் போது கண்ணபிரானைப் பாடுவார்களென்னத் தட்டுண்டோ? நிற்க.
வண்டமர் பூங்குழல் தாழ்ந்து உலாவ வாண் முகம் வேர்ப்பச் செவ்வாய் துடிப்ப
தண்டயிர் நீ கடைந்திட்ட வண்ணம் தாமோதரா மெய்யறிவன் நானே -என்று சொல்லும்படி
ஆண்களான தேவ ஜாதிக்கு ஓரு கை பற்றுமவன் பெண்களைக் கை விடான் –
இக் கோலாஹலங்கள் அடையக் காண எழுந்திராய் என்கிறார்கள்
விடிந்தமைக்கு அடையாளம் தயிர் கடைகிற ஓசை கேட்டிலையோ – என்பான் என்
பண்டு போலே பசுக்களும் பால்களும் அளவுபட்டு இருந்ததோ –
கிருஷ்ணன் அவதரித்த பின்பு நல்லடிக் காலமாகையாலே
பசுக்களும் பாலும் பெருத்து கறக்கும் போது அறியாதே கடையும் போது அறியாதே செல்லுகிற ஊரிலே
இது ஒரு அடையாளமாக மாட்டாது –
வேறு அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் -என்று பேசாதே கிடந்தாள்
தயிர் கடைந்த ஓசை என்ன
கிருஷ்ணன் அவதரித்த பின்பு நல்லடிக் காலமாகையாலே எப்போதும் உண்டு என்ன –
———-
இவ் ஊரில் -முப்போதும் கடைந்தீண்டிய வெண்ணெய்-என்று-
இரவும் பகலும் விடாதே தயிர் கடைகை ஸ்வ பாவம் அன்றோ-என்று பேசாதே கிடக்க
நாயகப் பெண் பிள்ளாய் –
இப் பெண்களுக்கு எல்லாம் நிர்வாஹகை யானபடி இதுவோ -என்கிறார்கள் –
சொல்லிற்றுக்கு எல்லாம் மறு மாற்றம் சொல்லிக் கிடக்கிறது-
உன்னுடைய ஐஸ்வர்ய செருக்காலே -என்னவுமாம்
பேய்ப்பெண்ணே என்பதோடு-
நாயகப் பெண் பிள்ளாய் என்பதோடு வாசி இல்லை இறே-
அகவாயில் பாவம் ஒன்றாகையால்-
ஒரு மிதுனமாய் பரிமாறா நின்றால்-
தாழச் சொன்ன போதும்
உயரச் சொன்ன போதுமாய் இறே இருப்பது
நித்ய அபி வாஞ்சித பரஸ்பர நீச பாவை -(ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்)
சேஷ பூதர் சேஷி பக்கல் சொல்வது ஓன்று உண்டோ
இதுக்கு எல்லாம் அழகியதாய் நிர்வாஹகை யானாய் என்று இவர்கள் பேசாது இருக்க –
நாயகப் பெண் பிள்ளாய் –
இது அன்றோ நமக்கு நீ நிர்வாஹைகை ஆனமைக்கு அடையாளம் –
அதாவது சொன்னதுக்கு எல்லாம் மறு மாற்றம் சொல்லி எழுந்து இருக்காமல் இருக்கை-
நாயகப் பெண் பிள்ளாய் –
சேஷ பூதர் சேஷிகளுக்குச் சொல்லுவார் உண்டோ -அழகிதாக நிர்வாஹகை யானாய்-
உனக்கு இது பரம் அன்று ஆகில் எங்களுக்கோ பரம் என்று –
ததோ மவ்நமுபாகமத் (சுக்ரீவன் ராமன் இடம் விபீஷண சரணாகதி -சொல்லி முடித்து பேசாமல் இருந்தானே )-என்கிறபடியே பேசாதே கிடக்க
உங்கள் அடியேனை இங்கனே சொல்லுவதே என்ன
நீ வாய் திறவா விட்டால் நாங்கள் செய்வது என் என்ன
இப் பாட்டில், ஒருகால் ‘பேய்ப்பெண்ணெ!’ என்பது,
மற்றொருகால், ‘நாயகப்பெண்பிள்ளாய்!’ என்பதாய்ச் சொல்லுகிறபடியைக் காண்மின்;
“ஒரு மிதுநமாய்ப் பரிமாற நின்றால் தாழச் சொன்ன
போதும் உயரச் சொன்ன போதுமாயிறே யிருப்பது” என்பர், அழகிய மணவாளப்பெருமாள் நாயனார்;”
‘பேய்ப்பெண்ணே’ என்றத்தோடு ‘நாயகப்பெண்பிள்ளாய்’ என்றத்தோடு வாசி இல்லையிறே
அகவாயில் பாவம் ஒன்றாகையாலே” என்பர், பெரியவாச்சான் பிள்ளை.
நாயகப் பெண்பிள்ளாய்! — இத்திரளுக்கெல்லாம் நீ தலைவியானபடி இதுவோ?
எல்லோரையும் திரட்டிக் கொண்டு போய் உத்தேச்யத்தைப் பெறுகை யன்றோ தலைவியின் காரியம் என ஏசியவாறு.
நான் உங்களுக்கு அடிமை யன்றோ –
திறக்கிறேன் என்ன –
இவள் துணுக் என்று எழுந்து இருந்து கடுகத் திறக்கைக்காக
கேசி வத விருத்தாந்தத்தை ஸ்மரிப்போம் என்று அத்தை பிரசங்கிக்கிறார்கள் –
பெரியாழ்வார் பெண் பிள்ளை யாகையாலே துணுக் என்று உணரும் என்று
நாசகப் பெண் பிள்ளாய் -எதுகை -படி இரண்டாம் அக்ஷரம் சகாரம் -மங்களகரமாக நாயகப் பெண் பிள்ளாய்-கீசு-பேசி-காசு-வாச-ஓசை -நாய -கேச-தேச
——–
என்றவிடத்திலும் வாய் திறவாமையாலே
நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் கேட்டே கிடத்தியோ
நீ எழுந்திருப்புதி என்று நாங்கள் பாட-
அதுவே குறங்குகுத்த கிடந்தது உறங்குகிறாயோ-
நாராயணன் –
முகம் தோற்றாமே நின்று-
வாத்சல்யத்தாலே ரஷிக்கக் கடவ சர்வேஸ்வரன் –
மூர்த்தி –
தன்னுடைய சௌசீல்யத்தாலே பிறந்தது
கேசவன் –
கண்ணுக்கு தோற்ற நின்று-
நம் விரோதிகளை போக்குமவன்
பாடவும் –
வாத்சல்யத்தையும் –
சௌசீல்யத்தையும்-
ஆஸ்ரித விரோதி நிரசனத்தையும்
பேசின விடத்திலும்-பின்னையும் இவர்கள் பேச்சே
தனக்கு தாரகமாக கிடைக்கையாலே
கேட்டே கிடத்தியோ -என்கிறார்கள் –
இவள் துணுக என்று எழுந்து இருக்கைக்காக
நிருபாதிக ஸ்வாமியான சர்வேஸ்வரன்-ஆஸ்ரித வத்சலனனாய் கிருஷ்ணனாய் வந்து
அவதரித்த இடத்தில் கேசி வந்து நலியப் புக-
அவனை கிருஷ்ணன் கொன்றான் காண் என்ன –
அதுக்கும் பேசாதே கிடந்தாள் –
பாடவும் நீ கேட்டே கிடத்தியோ –
அவனுடைய விஜயத்தைக் கேட்டு-கேசி வந்து கழியப் புக்கான் என்ற துணுக்கும் கேட்டு
கர வத அநந்தரம் சக்கரவர்த்தி திருமகனை-ஸ்ரீ ஜனகராஜன் திருமகள்-அணைத்தால் போலே
நீயும் கிருஷ்ணனை அணைக்க-புறப்படுவாயோ -என்று சொன்னோம் –
அதுவும் உனக்கு கிருஷ்ண விரோதி பயம் தீர்ந்து-
மார்பிலே கை வைத்து உறங்கலாம் படி ஆவதே -என்றுமாம் —
நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் –
கண்ணுக்குத் தோற்றாதே நின்று ரஷிக்கும் சர்வேஸ்வரன் –
ஆஸ்ரித வத்சலனாய் இங்கே வந்து அவதீரணன் ஆனான்
அங்கே கேசி வந்து கிட்டினான் காண் என்கிறார்கள்
அது தன்னை விஜயாந்தமாக அனுசந்தித்து பேசாதே கிடந்தாள்
நீ கேட்டே கிடத்தியோ
அழகிதாக உன்னை எழுப்ப வழி பார்த்தோம் –
தொடை குத்தி உறக்கினோம் ஆகாதே
கேசி பட்ட அநந்தரம்-கர வதத்தின் அன்று
பிராட்டி -பர்த்தாராம் பரிஷஸ்வஜே -என்று
பெருமாளை அணைத்தால் போலே கிருஷ்ணனை எழுந்து அணைக்கப் பாராய்-
நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ –
சர்வ ஸ்மாத் பரனான நாராயணன் உடைய அவதாரமாய்
கேசி ஹந்தாவான கிருஷ்ணனை பாடச் செய்தேயும்
கிருஷ்ண விஜயத்தை கேட்டு புறப்பட்டு அவனை அணைக்க கடவ நீ
அதுவே துடைக்குத்தாக பகவத் அபாய பயம் தீர்ந்து-உறங்கக் கடவையோ
நாராயணன் மூர்த்தி-
முகம் தோற்றாதே நின்று வாத்சல்யத்தாலே விடாதே ரஷிக்கக் கடவ சர்வேஸ்வரன்
மூர்த்தி
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக -பரித்ராணாய இத்யாதிப்படியே அவதரிக்கை –
கேசவனைப் –
பின்னும் நம்முடைய விரோதிகளைப் போக்குமவனை –
பாடவும் கேட்டே கிடத்தியோ-தேசமுடையாய் –
உன்னைக் கண்டு நாங்கள் வாழும்படி வாய் திறவாய் என்கிறார்கள் –
பேச்சின் இனிமையைக் கேட்டு இவள் வாய் திறவாதே கிடந்த வாறே
ஜாலக த்வாரத்தாலே பார்த்தார்கள் –
அவனுடைய விஜயத்தை அனுசந்திக்கையாலே வந்த புகரை யடைய வடிவிலே காணும் படி கிடந்தாள்
————
தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய்-
உன்னைக் காணப் பெறாதே-அந்தகாரமாய் கிடக்கிற எங்களுக்கு-
இத்தை திறந்து புறப்பட்டு-உன்னுடைய நிரவதிக தேஜசாலே-
வெளிச் செறிப்பிக்கைகாகவும்-
உன்னுடைய அழகு காண்கைக்காகவும்-
நீயே வந்து திற -தேசமுடையாய் திற –
இவள் பின்னையும் பேசாதே கிடைக்கையாலே-ஜாலக ரந்த்ரத்தாலே பார்த்தார்கள் –
இவளுக்கு கிருஷ்ண விஜய அனுசந்தான அனுபவ ப்ரீதியாலே-
வடிவில் பிறந்த புகரைக் கண்டு-
கிண்ணகத்தை அணை செய்யாதே வெட்டி விடாய்-என்கிறார்கள் ஆகவுமாம்-
தேசமுடையாய் திற-
கிண்ணகத்துக்கு அணை செய்யாதே வெட்டி விடாய் -நாங்கள் வாழ்ந்து போக
எங்களுடைய ஹிருதயத்தில் அந்தகாரம் போகும் படி
உன் வடிவைக் காட்டி எங்களை அனுபவிக்கப் பாராய் –
தேசமுடையாய் திற –
இப்படி சொன்ன இடத்திலும் எழுந்திராமையாலே-ஜாலகரந்தரத்தாலே பார்த்து
பகவத் குண அனுபவத்தால் உண்டான மகா தேஜசை உடையவளே
இத் தேஜஸ் காட்டில் எறிந்த நிலா வாகாமே-நாங்கள் அனுபவிக்கலாம்படி
எங்கள் அஞ்ஞானத்தை நீக்காய் -என்கிறார்கள்-
அவள் துணுக் என்று
புறப்படுகைக்காக கேசி வத வ்ருத்தாந்தத்தைச் சொல்லுகிறார்கள் –
நாராயணன் மூர்த்தி-
முகம் தோற்றாதே நின்று வாத்சல்யத்தாலே விடாதே ரஷிக்கக் கடவ சர்வேஸ்வரன்
மூர்த்தி
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக -பரித்ராணாய இத்யாதிப்படியே அவதரிக்கை –
கேசவனைப் –
கண்ணுக்குத் தோற்றி நின்று பின்னும் நம்முடைய விரோதிகளைப் போக்குமவனை –
அவன் சேஷ்டிதங்கள் சிலரை அச்சம் கெடுக்கும்-(சிலருக்கு அச்சம் கொடுக்கும் -அஸ்தானே பய சங்கை பண்ண வைக்கும் )
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ -தேசமுடையாய்
ஸ்ரோத்ர ஸூகமாய் இருந்தது தானே நீர் வாய்ப்பாக உறங்குகிறாயோ –
கர வதத்தினன்று போலே தழுவப் பாராய்
தம் த்ருஷ்ட்வா -இத்யாதி
தம் த்ருஷ்ட்வா
பண்டு மணக் கோலம் இறே கண்டது –
இப்போது வீரக் கோலத்தோடு காணப் பெற்றாள்
சத்ரு ஹந்தாரம்
தமக்கு ஒரு வாட்டம் இன்றிக்கே எதிரிகளை அழியச் செய்யப் பெற்ற படி
மஹர்ஷீணாம் ஸூகாவஹம்
பிரஜையினுடைய ஆர்த்தி தீர்ந்து ஸூகிக்கக் காண்கை இறே தாய்க்கு ஸூகம் –
பர்த்தாவானவன் பார்யை பக்கல் முகம் பேரா விட்டால் பிரஜையை எடுத்துக் கொண்டு வருமா போலே
பிராட்டி முகம் பெறுகைக்காகப் பச்சையிடும்படி
பபூவ
சரணாகதருடைய ஆர்த்தியாலும் பெருமாளுக்கு என் புகுகிறதோ என்னும் பயத்தாலும் அழிந்த ஸ்வரூபம்
அவர்களும் அவரும் உளராகப் போருகையாலே இப்போது யுண்டாய்த்து –
இரண்டு தலையும் யுண்டாய் இல்லையாகில் இல்லையாமவள் இறே
ஹ்ருஷ்டா
அதுக்கு மேலே நிரதிசய ப்ரீதி யுண்டாயிற்று
வைதேஹீ
அவதாரம் ச பிரயோஜனமாய்த்து
வைதேஹீ
வீர வாசி அறியும் குடியில் பிறந்தவள் –
ஒரு வில் முறிக்க ஐயர் என்றும் உகந்த படிக்கும்
இன்று தனியே பதினாலாயிரம் ராக்ஷஸரைப் பொடி படுத்தி நின்ற பெரிய பராக்ரமம் காணப் பெற்றோம்
பார்த்தாராம் பரிஷஸ்வஜே
பண்டு ஐயர் கொடுத்தார் என்று அந்த மணக் கோலத்தை தர்மத்துக்குத் தழுவினாள்
இப்போது வீரக் கோலம் கண்டு ஆண் என்று தழுவினாள்
அம்புவாய் தெரியாதபடி தனது ஸ்தநோஷ்ம தையாலே வேது கொண்டாள்
இவருக்கு சந்தான கரணியும் விசல்ய கரணியும் அதுவே –
ஜகத்துக்குத் தாயும் தமப்பனும்
கேட்டே கிடத்தியோ
இப் பிரமாதம் தப்பப் பெற்றுக் கிடக்கிறாயோ -என்ன
இவர்கள் பேசின பேச்சிலே ஈடுபட்டுக்
கிடக்கிற பெண் பிள்ளையைத் திரு ஜாலாகத்தாலே
சென்று
எட்டிப் பார்த்து
தேசமுடையாய் திற-என்கிறார்கள்
இவளுடைய நிரவதிக தேஜஸைக் கண்டு
உன்னைக் கண்டு வாழ
தேசமுடையாய் திறவாய் -என்கிறார்கள் –
திற-கதவை சொல்லாமல் -மனக் கதவைத் திறக்க -பாகவத ஸம்ஸ்லேஷ மஹாத்ம்யத்தை அறிந்தும் மறந்தவள் என்பதால் -இங்கு மனத்தைத் திறக்க அருளிச் செய்கிறார்கள்
நாம சங்கீர்த்தன பலத்தால் கீழ் பிள்ளாய் -வெளியே வந்தாள்
ஸத்ஸங்க மஹாத்ம்யத்தால் இந்த பெண் வெளியே வருகிறாள்
————————————————————————————
உபய வேதாந்தம் கலந்து -ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாசம் புராணம் -அருளிச் செயல்கள் -ஆனைச் சாத்தன் -சாரம் எங்கும் கலந்து பேசின பேச்சரவம் –
இதுவே தயிர் -உபநிஷத் பாற் கடல் -த்ரவிடம் புளி -புளியோதரை பிரதானம் –
ஆய்ச்சியர் -பகவத் அனுபவ நிஷ்டர் -வாச நறும் குழல் -ஸாத்ய -பர பக்தி பர ஞானம் பரம பக்தி நிஷ்டர்
கலந்து பேசின பேச்சரவம் :
வதரிவான் வைகுந்தம் பார்த்தன் தேர் முன்னாய்
கதிரொளி மால் கண்ணன் கேசவனன் — றோதிய
மெய்மைப் பெரு வார்த்தை ஒவ்வொன்றும்
மால் மாறன் வாய் மொழிக் குள்ளாதல் கொள்ளு.
—————-
ஸ்வாபதேசம்)–
பேய்ப் பெண் -என்கிறது –
பேயாழ்வாரை -அது எங்கனே என்னில்
திருக் கண்டேன் இத்யாதியாலே நாயகனுடைய வைபவத்தை தர்சிப்பிக்கையாலும்
மற்றும் ஸ்த்ரீத்வாபத்தியால் -வெற்பு என்று வேங்கடம் என்று தொடங்கி
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான் பூண்ட நாள் எல்லாம் புகும் என்கையாலும்
கோவலனாய் ஆ நிரைகள் மேய்த்துக் குழலூதி -என்று கிருஷ்ண சேஷ்டிதங்களைப் பேசுகையாலும்
பின்னைக்காய் எற்று உயிரை அட்டான்-என்று நப்பின்னைப் பிராட்டிக்காக
அவன் எருதுகளின் மேல் வியாபாரித்த படியை பேசுகையாலும்
பேய்ப் பெண்ணே -என்றது பேய் ஆழ்வாரை -என்றபடி –
————
இது; பெரியாழ்வார்க்கு அடுத்த முந்தினவரான குலசேகராழ்வாரை யுணர்த்தும் பாசுரம்,
‘பேய்ப்பெண்ணே!, நாயகப் பெண்பிள்ளாய்?, தேசமுடையாய்!, என்ற மூன்று விளிகளும்
குலசேகராழ்வாரை வற்புறுத்துவன.
பெருமாள் திருமொழியில் மெய்யில் வாழ்க்கையை என்றவொரு பதிகத்தினால்
தம்மைப் பெரும் பேயராகச் சொல்லிக் கொண்டவர் இவ்வாழ்வார்.
ஏர் மலர்ப்பூங்குழல், ஆலை நீள் கரும்பு, மன்னு புகழ்க் கௌசலை தன் என்ற பதிகங்களில்
பல பெண்களின் தன்மையை யடைந்து பேசினாருமிவர்.
“கொல்லி காவலன் கூடல் நாயகன்” என்று அரசரான தன்மை தோற்றப் பேசினராதலால்
நாயகப் பெண் பிள்ளாய் என்றது.
அன்றியும்,
ஒரு ஹாரத்தில் நட்ட நடுவிலுள்ள மணியை ‘நாயகக்கல்’ என்பதுண்டு.
குரு பரம்பரையில் எம்பெருமானாரை நடுநாயகமென்று யதிராஜ ஸப்ததியில் தேசிகன் கூறினர்;
யதிராஜேந நிபத்த நாயக ஸ்ரீ: மஹதீ குரபங்க்தி ஹாசயஷ்டி:” என்கிறார்
அது போலவே ஆழ்வார்களுள் குலசேகரர் நடுநாயகமாக வுள்ளவர்.
பொய்கையார் பூதத்தார் பேயார் மழிசையர் மாறன் என முன்னே ஐவர்;
பட்டநாதன் கோதை தொண்டரடிப்பொடிகள் பாண்பெருமாள் கலியன் எனப்பின்னே ஐவர்;
நடுவே குலசேகரர்.
ஆகவே இதுபற்றயும் நாயகப்பெண் பிள்ளாய் என்ற பிறி நன்கு பொருந்தும்.
(தேசமுடையாய்!)
பகவத் கீதையில் (18-43) (சௌர்யம் தேஜோத்ருதிர் தாக்ஷ்யம் — க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம்.)
என்று தேஜஸ்ஸு க்ஷத்திரிய தர்மமாகச் சொல்லப்பட்டிருப்பதற்கிணங்க இந்த விளி
இவ்வாழ்பாருடைய க்ஷத்திரியத்வத்தைத் தெரிவிக்கும்.
அன்றியும்,
“தேவத்வமும் நிந்தையானவனுக்கு ஒளிவரும் ஜநிகள் போலே ப்ரஹ்மஜன்மமும் இழுக்கென்பார்க்குப்
பண்டை நாளில் பிறவி உண்ணாட்டுத் தேசிறே” என்ற ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸுக்தியின்படியும்,
அதற்கு மூலமான “மண்ணாட்டிலாராகியெவ்விழிவிற்றானாலும்;, ஆழியங்கைப் பேராயற்கு
ஆளாம் பிறப்பு – உண்ணாட்டுத் தேசன்றே” என்ற பெரிய திருவந்தாதிப் பாசுரத்தின்படியும்
பகவத் சேஷத்வத்திற்கு அநுகூலமான பிறப்பே தேஜஸ்ஸென்று நிர்ணயிக்கப்படுகிறது;
அப்படிப்பட்ட பிறப்பை ஊனேறு செல்வத்து என்ற பதிகத்தில் பாசுரந்தோறும் ஓரோ விதமாக விரும்பினவர்
இவ்வாழ்வாரேயாதலால் தேசமுடையார் இவரேயாகத்தகும்.
இப்பாட்டில் “ஆனைச்சாத்தன்” என்ற பதப்பிரயோகம் கவனிக்கத் தக்கது.
இச்சொல் மலையாள பாஷையிலிருந்து திசைச் சொல்லாகத் தமிழில் வழங்குவதென்பர்.
(ஆன சாதம்) என்று மலை நாடர் வலியனென்னும் பறவையை வழங்குவராம்.
இவ்வாழ்வார் மலைநாட்டில் திருவவதாரித்தவராதலால் அத்திசைச்சொல் இங்குட் பரவசமாகவே அமைந்தது போலும்.
காசும் பிறப்பும் என்று ஆபரண விசேஷங்களைப் பற்றின ப்ரஸ்தாவமிருப்பது இவ்வாழ்வாருடைய சரிதையில்
ஆபரண ப்ரஸ்தாவமுள்ளவாற்றை ஒருவாறு நினைப்பூட்டும்.
“ஆரங்கெடப் பரனன்பர் கொள்ளாரென்று அவர்களுக்கே வாரங்கொடு குடப்பாம்பில் கையிட்டவன்” என்ற தனியனும் ஸ்மரிப்பது.
“வாசநறுங் குழ லாய்ச்சியர் மத்தின லோசைபடுத்த தயிரரவம்” என்றது பெருமாள் திருமொழியில்
“கெண்டை யொண்கணை மடவாளொருத்தி கீழையகத்துத் தயிர் கடையக்கண்டு…..
வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ….. தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம்” என்ற பாசுரத்துச் சொற் சுவைகளை நன்கு நினைப்பூட்டும்.
(நாராணயன் மூர்த்தி கேசவனைப் பாடவும்) திருஷ்ணாவதாரத்தில் குதிரை வடிவாக வந்த கேசியென்னு மஸுரணை
வதஞ்செய்ததனால் கேசவனென்றது.
இவ்வாழ்வார் தமது திருமொழியில் முதன் முதலாக இந்த வரலாற்றையே பேசியநுபவித்தார்
மாவினை வாய் பிளந் துகந்தமாலை என்று.
ஸ்வ ப்ரபந்தத்தை “நலந்திகழ் நாரணனடிக் கீழ் நண்ணுவாரே” என்று நாராயணனைப் பாடித் தலைக் காட்டினார்.
(கேட்டே கிடத்தியோ) இவ்வாழ்வார் நாடோறும் அந்தணர்களைக் கொண்டு ஸ்ரீராமாயண பாராயணஞ் செய்வித்துத்
தாம் கேட்டவர்.
கேட்டு, இருந்தவிடத்திலிராமல் படையெடுத்துஞ்சென்றவர்.
——————-
ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —
————————————————————————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply