**** – முதலிலே *வீடுமின் முற்றத்தில் “எண் பெருக்கந்நலத்தொண் பொருளீறில வண்புகழ் நாரணன்” என்று பஜனத்திற்கு ஆலம்பனமாகச் சொல்லப்பட்டதான மந்த்ரத்தை *எண்ணுந் திருநாமம் திண்ணம் நாரணமே* என்று காட்டுகிறார்.
கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–10-5-1-
பதவுரை
| கண்ணன் கழல் இணை |
– |
அடியவர்க் கெளியனான பெருமானது திருவடியிணைகளை |
| எண்ணும் திருநாமம் |
– |
(நீங்கள்) சிந்திக்க வேண்டிய திருநாமம் |
| நண்ணும் மனம் உடையீர் |
– |
அடைய வேணுமென்கிற நெஞ்சையுடையவர்களே! |
| நாரணம் ஏ திண்ணம் |
– |
நாராயணமே; மற்றொன்றில்லை யென்பது திடம். |
*கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்!* என்று விளிக்கையாலே *சரத்தைவ காரணம் பும்ஸாம் அஸ்டாஷர பாரிக்ரஹே*என்னுமாபோலே எம்பெருமான் திருவடிகளை யடைய வேணுமென்கிற ருசிக்கு மேற்பட வேறோர் அதிகாரமில்லையென்றும், அந்த ருசியுடையாரெல்லாரும் அதிகாரிகளேயென்றும் காட்டப்பட்டதாயிற்று.
“தோல்புரையே போமதுக்குப் பழுதிலா யோக்யதை வேணும்; மனமுடையீரென்கிற ச்ரத்தையே அமைந்த மர்மஸ்பர்சிக்கு நாளும் நமருமென்னும்படி ஸர்வரு மதிகாரிகள்” என்கிற ஆசாரிய ஹ்ருதய சூர்ணையும் அதன் வியாக்கியானமுமிங்குக் காணத்தக்கன மனமுடையீர்என்றது நிதியுடையீரென்னுமாபோலே யிராநின்றது.
எம்பெருமானது திருவடிகளைச் சேரப் பெறவேணுமென்கிற மனம் ஒருவர்க்குண்டாகில் நிதியுடையரேயவர்.
இங்கே ஈடு;- “இதுக்கு அதிகார ஸம்பத்தி தேடவேண்டா ருசியுடையாரெல்லாரு மதிகாரிகள்; ஸ்வர்க்க பலமானதுக்கு அதிகாரி நியதியும் ப்ராயச்சித்தமும் வேண்டா நின்றது; அபுநராவ்ருத்தி லஷண மோஷத்துக்கு அது வேண்டா தொழிகிறது, ப்ராப்யத்துக்கு அநுரூபமான அதிகாரம் இவனால் ஸம்பாதிக்க முடியாமையாலே” என்று.
உண்மையில் மிகச் சிறந்த புருஷார்த்தமானவிதற்கு அபாரிமிதமான யோக்யதைகள் வேண்டியதுதான்; ஆனால் அதில் ஏகதேசமும் ஒருவராலும் ஸம்பாதித்துக்கொள்ள முடியாமையாலே மனமுடைமைதானே போதுமென்கிறது என்றதாயிற்று.
எம்பெருமான் கழலிணையென்று சொல்லவேண்டுமிடத்து வேறு திருநாமங்களையிடாதே கண்ணனென்ற திருநாமத்தை யிட்டபடியாலே, ஸர்வஸுலபனானவனுடைய திருவடிகாளகையால் பெறுதற்கு எளியவையென்பது காட்டப்பட்டது.
அடியார்கட்காகத் தூதுபோயும் ஸாரத்த்யம் பண்ணியும் ஸர்வாத்மநா ஸௌலப்யத்தைக் காட்டினவனுடைய திருவடிகளன்றோ.
எண்ணுந் திருநாமம் திண்ணம் நாரணமே – முமுக்ஷுக்களான வுங்களுக்கு எப்போது மநுஸந்திக்கப்பட வேண்டிய திருநாமம் நாராயண சப்தமே; இஃதொழிய வெறொன்றுமில்லை.
“எண்ணும் திருமந்த்ரம்” என்னாதே திருநாமமென்றது – இதுக்கு ஓர் அதிகாரி நியமம் அங்க நியமம் வேண்டர் குழந்தை தாய்பேரைச் சொல்லுமாபோலே சொல்லவமையும் என்கைக்காக.
அம்மே யென்கைக்கு எல்லாரு மதிகாரிகளன்றோ. கனத்த பேற்றுக்கு இவ்வளவு போதுமோவென்று சிலர்சங்கிகக்க கூடுமென்று நினைத்துத் திணைமென்கிறார்.
*ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யமுத்த்ருத்ய புஜமுச்யதே* என்னுமாபோலோ. ப்ரணவம் நமஸ்ஸு சதுர்த்தி இவையொழியவும் நாராயண சப்தமாத்ரமே போதுமென்கிறார்.
‘நாராயண’ என்றுகூடச் சொல்லாமல் நாரணம் என்று குறைத்துச் சொல்லியிருப்பதுபற்றி நம்பிள்ளை யருளிச் செய்வது பாரீர்; “நாரணமென்று இல்லாத மகாரத்தைக் கூட்டி உள்ளவற்றைக் குறைத்துச் சொல்லுகையாலே அளத்தில் பட்டதெல்லாம் உப்பாமாப்போலே இத்தோடே கூடினதெல்லாம் உத்தேச்யமென்றும், குறைந்தாலும் அங்கம் தப்பிற்று ஸ்வரம் தப்பிற்றென்று ப்ரஹ்ம ரஷஸ்ஸாய்ப் போகவேண்டுமவற்றிற் காட்டில் இதுக்குண்டானவாசி சொல்லுகிறாதாயிற்று” என்று
————–
**** – “எண்பெருக்கி லெண்ணுந் திருநாமத்தின் சப்தார்த்தங்களைச் சுருக்கி” என்ற ஆசார்ய ஹ்ருதய சூர்ணையின்படி கீழ்ப்பாட்டில் நாரணமென்று சம்பம் சுருக்கப்பட்டது. இப்பாட்டிலும் மேற்பாட்டிலுமாக அர்த்தம் சுருக்கப்படுகிறது.
நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2-
பதவுரை
| நாரணன் எம் மான் |
– |
நாராயணனாய் எமக்கு ஸ்வாமியானவன் (அன்றியும்) |
| பார் அணங்கு ஆளன் |
– |
பூமிப் பிராட்டிக்கு நாயகன் |
| வாரணம் தொலைத்த |
– |
கம்ஸனது மதயானையை முடித்தருளின |
| காரணன் தானே ஜகத்காரணபூதனும் அவனே | ||
ஆழ்வார்களுக்குத் திருமந்தரம் (அல்லது நாராயணத் திருநாமம்) ஸ்ம்ருதி விஷயமானால் உடனே அதன் அர்த்தத்தையும் ஒருபடி அநுஸந்தித்தே தீருவர்கள்.
முன்னே அர்த்தத்தைச் சொல்லிப் பின்னே சப்தத்தைச் சொல்லுவதோ. முன்னே சப்தத்தைச் சொல்லிப் பின்னே அர்த்தத்தைச் சொல்லுவதோ இரண்டந்தொன்று நிகழ்ந்து தீரும்.
இங்கு, முன்னே சப்தாநு ஸந்தானமாயிற்று. இப்போது அர்த்தாநுபவமாகிறது, அர்த்தம் உபந்யஸிப்பபதற்காக மீண்டும் சப்தத்தை உபாதானம் பண்ணுகிறார் நாரணன் என்று. இதற்கு அர்த்தம் – எம்மான் பாரணங்காளன் என்று.
பாரணங்கு – பூமிப்பிராட்டி; (அணங்கு-தெய்வப்பெண், “சூருமணங்கும் தெய்வப்பெண்ணே” என்பது நிகண்டு.) பூமிப்பிராட்டிக்கு வல்லபனென்று சொன்னவிது, பெரிய பிராட்டியர் தொடக்கமான மஹிஷீவர்க்கங்களையெல்லாம் சொன்னபடியாய் நித்யஸூரிகளையும் விவஷித்ததாகி நித்யவிபூதி நாதனென்றபடியாம்.
எம்மானென்று லீலாவிபூதி நாதத்வம் சொன்னதாகக் கொள்க. ஆக, உபயவிபூதி நாதனென்றதாயிற்று.
திருவஷ்டாஷர மஹா மந்த்ரத்தில் லஷ்மீ ஸம்பந்தம் ஸ்பஷ்டமாகச் சொல்லிற்றில்லையாகிலும் “ரஷிக்கும் போது பிராட்டி ஸந்நிதி வேண்டுகையாலே இதிலே ஸ்ரீஸம்பந்த மநுஸந்தேயம்” என்று ஆசாரியர்கள் அருளிச்செய்கிறார்கள்.
*லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேசா தேவ்யா காருண்யரூபயா. ரஷகஸ் ஸர்வஸித்தாந்தே வேதாந்தேபிச கீயதே*
என்று, எம்பெருமான் பிராட்டியோடு கூடியே ரஷகனாகிறானென்று சொல்லுகையாலே லஷ்மீ ஸம்பந்தாது ஸந்தானம் ப்ரதானமென்று தோற்றுவிக்கைக்காகவே ‘நாரணனெம்மான் பாரணங்காளன்’ என்றது.
வாரணம் தொலைத்த-கம்ஸனுடைய குவலயாபீட மதயானையைக் கொன்றொழித்ததைச் சொன்னவிது விரோதி நிரஸநசீலன் என்று காட்டினபடி.
நாராயண மந்த்ரத்தில் ரஷகத்வஞ் சொல்லுவது முக்கியம் இஷ்டங்களைத் தலைக்கட்டிக் கொடுக்கையும் அநிஷ்டங்களைத் தவிர்க்கையுமே ரஷகத்வமாகையாலே விரோதி நிரஸனம் இங்குச் சொல்ல ப்ராப்தமாயிற்றென்க.
ப்ரணவத்தின் முதலெழுத்தான அகாரமானது தாதுசக்தியினால் ரஷகத்வத்தையும் ப்ரக்ருதி சக்தியினால் காரணத்வத்தையும் சொல்லுமதாகையாலே “காரணன் தானே” என்றார்.
————-
****- நாராயண சப்தார்த்தமாகக் கீழப்பாட்டில் ப்ரஸ்துதமான ரஷகத்வம் விவாரிக்கப்படுகிறது இதில்.
தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–10-5-3-
பதவுரை
| தானே | – | நாராயணனை தானே |
| படைத்து இடந்து | – | ஸ்ருஷ்டித்து (பிரளயத்திலே) இடந்தெடுத்து |
| உலகு எல்லாம் | – | ஸகல ஜகத்துக்கும் சரீரியா யுள்ளவன்; |
| தானே உண்டு உமிழ்ந்து | – | ஒருவருடைய அபேஷையு மில்லாதபடி தானே (ஸமயங்களில்) உண்பதும் உமிழ்வதுஞ் செய்து |
| தானே | – | அப்பெருமான் தானே (வேறொரு துணை யின்றியே) |
| தானே ஆள்வான் | – | தானே நிர்வஹிக்குமவன் |
உலகெல்லாம் தானே – ஸர்வம் கலு இதம் ப்ரஹ்ம* என்றதை அதுவதிக்கிறபடி, சாரிராத்ம பாவ நிபந்தனமாக ஜக்ய நிர்வாஹம் பண்ணுவது வேதாந்திகளின் முறைமையாகையாலும், சரீரியானவன் ரீரத்தை சரஷிக்கக் கடமைப்பட்டவானகையாலும் இதுவும் ரஷகத்வம் சொல்லுகையிலே முடிந்து நிற்கும்.
“உலகெல்லாம் தானே” என்றதற்கு நியாமகஞ் சொல்லுகிறது மேலெல்லாம் தானே படைத்திடந்து தானே யுண்டுமிழ்ந்து தானே யாள்வானாகையாலே; உலகெல்லாம் தானேயென்னக் குறையில்லையென்றபடி.
பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவ உத்தர சதகத்திலே *ஸதித்யுத்பத்தி ப்ரவ்ருத்தி க்ரஸநதியமநவ்யாப்நைராத்மநஸ் தே சேஷோ சேஷ: ப்ரபஞ்சோவபுரிதி பவதஸ் தஸ்ய சாபேதவாதா.* என்றருளிச் செய்ததற்கு இப்பாசுரமும் மூலமென்னலாம்.
————-
****- நாராயண மந்த்ரத்தில் சதுர்த்தியின் அர்த்தத்தை யநுஸந்திக்கு மாசாரியர்கள் “அஸ்மை காலம் ஸகலமபி ஸர்வத்ர ஸகலாஸு அவஸ்தாஸு ஆவிஸ்ஸ்யர் மம ஸஹஜகைங்கரிய விதய” (அஷ்டச்லோக-3.) என்று கைங்கரிய ப்ரார்த்தனையைப் பொருளாகக்காட்டுகையாலே, இங்கு ஸம்ஸாரிகளை நோக்கிக் கைங்காரியத்தை வித்தருளுகிறார். ஆள்வான் என்று, கீழே சொன்ன ரஷகத்வத்தை அநுபாஷித்தபடி.
ஆள்வான் ஆழி நீர்க் கோள்வாய் அரவு அணையான்
தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே-10-5-4-
பதவுரை
| ஆழிநீர் |
– |
காரணபூதமான ஏகாரிண வத்தலே |
| ஆள்வான் |
– |
ஆளுமவனான அப்பெருமானுடைய |
| கோள் வாய் அரவு அணையான |
– |
மிடுக்குப் பொருந்திய வாயை யுடையவனான ஆதிசேஷனைப் படுக்கை யாகவுடையனாய்க் கொண்டு தாள்வாய் |
| மலர் இட்டு |
– |
புஷ்பங்களை ஸமரிப்பித்து நாள் வாய் |
| நாடீர் |
– |
ஆசரயியுங்கோள் |
|
திருவடிகளிலே நாடாறும். |
||
ஆழி நீர்ல் கோள்வாயரவணையானாய்க் கொண்டு ஆள்வான் – *ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற்கடல் யோக நித்திரை சிந்தை செய்யுமவனாகையாலே ஆர்த்தர்களின் கூப்பிடு கேட்கைக்காகவே சயனித்திருந்து ஆர்த்தத்வநி செவிப்பட்டவாறே *நாகபரியங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரிம்* என்கிறபடியே ஓடிவந்து ரஷித்தருளுமவன்.
அன்னவனுடைய, தாள்வாய் மலரிட்டு – திருவடிவாரத்திலே கைப்பட்ட பூக்களைப் பணிமாறி, இத்தால் எம்பெருமான் ஆராதனைக் கெளியன் என்று காட்டினபடி.
நாள்வாய் நாடீர் – நாள் தோறும் ஆச்ரயியுங்கள். ஒருகால் ஆச்ரயிப்பது போதுமாயினும், ஸாதநாநுஷ்டானமன்றே; ஸ்வயம் போக்யமான செயலாகையாலே காலஷே மிதுவேயாகுகவென்கை.
“அரவணையானை நாடீரே” என்கையாலே திருவனந்தாழ் வான்பெற்ற பேற்றை நீங்கள் பெறலாமென்று காட்டுகிறபடியாகக் கொள்ளலாம்;
*சென்றார் குடையாமிருந்தால் சிங்காசனமாம் நின்றால்மரவடியாம் நீள்கடலுள், என்றும் புணையாமணி விளக்காம் பூம்பட்டாம் புல்குமணையாம் திருமாற்கு அரவு* என்று சொல்லப்பட்ட பேறு.
—————
****- ஸ்வரூபாநுரூபமான காரியத்தைச் செய்யவே ஸ்வரூபாநுரூபமான புருஷார்த்தத்தைப் பெறலாமென்கிறார்தில்.
நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு
பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே–10-5-5-
பதவுரை
| நாள்தோறும் |
– |
தினந்தோறும் |
| அவன் நாமம் |
– |
அப்பெருமானது திருநாமங்களை |
| வாடா மலர்கொண்டு பாடீர் பாடுங்கள் (இங்ஙனே செய்தக்கால்) |
– |
செவ்வி மாறாத பூக்களைக் கொண்டு |
| நாடீர் பணியுங்கள்; வீடே பெறலாம் |
– |
மோஷமே பெறலாகும் |
வாடாமலர்கொண்டு நாடோறும் நாடீர் – *மார்வமென்பதோர் கோயிலமைத்து மாதவனென்எந் தெய்வத்தைநாட்டி, ஆர்வமென்பதோர் பூவிடவல்லார்க்கு* என்று பெரியாழ்வார் ஆர்வத்தைப் பூவாக அருளிச்செய்திருக்கையாலே இங்கு வாடாமலரென்று ஆர்வத்தைச் சொன்னதாகக் கொள்ளலாம். ஆத்மபுஷ்பத்தைச் சொன்னதாகவுங் கொள்ளலாம்.
*அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம்* என்று தொடங்கி *ஸத்யமஷ்;டவிதம் புஷ்பம் விஷ்ணோ: ப்ரீதிகரம் பவேத்* என்பதளவாகச் சொன்ன அஷ்டவித புஷ்பங்களை ஆழ்வார்கள் *கந்தமாமல ரெட்டுமிட்டு* என்றும் *இனமலரெட்டுமிட்டு* என்றும் அருளிச் செய்வதுண்டாகையாலே இங்கு அவற்றையே வாடாமலராகச் சொல்லிற்றாகவுங் கொள்ளலாம்.
*செண்மக மல்லிகையோடு செங்கழுநீர்ருவாட்சி முதலிய செவ்விப் பூக்களைக் கொண்டு என்கிற பொருள் உள்ளதே.
நாடீர் நாடோறும் என்பதற்கு “பசித்தபோதெல்லா முண்ணுமாபோலே” என்று ஈடு.
“அவன்னாமம் சொல்லீர்” என்னாதே ‘பாடீர்’ என்கையாலே *ஏதத் ஸாம காயத் ஆஸ்தே* என்கிறபடியே மேலே பாடுகையாகிற புருஷார்த்தம் இங்குமாகக் கடவதென்று தோற்றுவிக்கப்படுகின்றதென்க.
இப்பாட்டில், மனமொழி மெய்களாகிற முக்கரணங்களுக்கும் காரியமிடப்பட்டது; நாடீரென்றது – மாநஸவ்யாபாரம்; மலர்கொண்டென்றது காயிகவ்யாபாரம்; பாடீர் என்றது வாசிகவ்யாபாரம்.
————-
****- கீழ்ப்பாட்டில் நாடீரென்றதற்கு இடம் காட்டுகிறாரிப்பாட்டில்.
மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்
பேயார் முலை உண்ட வாயான் மாதவனே–10-5-6-
பதவுரை
| காயா மலர்வண்ணன் |
– |
காயாம் பூப்போன்ற திருமேனி நிறத்தையுடையனாய் |
| திருமால் |
– |
மாதவன் |
| பேயார் முலை உண்ட வாயன் வேங்கடம் மேயான் |
– |
பூதனையின் முலையைச் சுவைத்துண்டு அவளை முடித்தவனான |
|
திருவேங்கட மலையிலுள்ளான் |
||
எம்பெருமாளுக்கு ரூபமில்லையென்றும் அவன் கண்ணுக்குப் புலப்படானென்றும் சாஸ்த்ரங்களிற் சிலவிடங்களிற் சொல்லியிருப்பதுண்டு;
*இச்சாக்ருஹீதாபிமதோரு தேஹ:* என்று அவன் தன்னுடைய ஸங்கல்பத்தினால் பாரிக்ரஹிக்கப்பட்ட பல திருவுருவங்களையுடையவன் என்றும் சொல்லியிருப்பதுண்டு.
இவற்றால், அஸ்மதாதிகளுக்குப் போல கர்ம நிபந்தனமான தேஹமில்லாதவனென்றும் பஞ்சோப நிஷந்மயமான திவ்யமங்கள விக்ரஹங்களை யுடையவனென்றும் விளங்கும். அத்திருமேனியைக் கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான உகந்தருளின நிலங்களிலே அடியார்க்குக் காட்டிக்கொடுத்தருளா நின்றான்.
பண்டு ராமக்ருஷ்ணதிவிபவாவதாரங்களிலும் காட்டிக்கொடுத்தருளினான். அத்திரு மேனியை இப்போது காண இயலாதாயினும் திவ்யதேசத் திருமேனியை நன்கு கண்டு களிக்கலாமேயென்கிறாரிப்பாட்டில்.
பேயார் முலையுண்ட வாயான் மாதவனான காயாமலர்வண்ணனே வேங்கடம்மேயான்; அவ்விடத்தே நாடீர் நாடோறும் வாடாமலர்கொண்டு, பாடீரவன்னமம் வீடே பெறலாமே – என்று கீழப்பாட்டையுங் கூட்டிக்கொண்டு பொருள்கொள்வது.
வேங்கடம் மேயான் – ஸம்ஸாரிகளான வுங்களைத் திருவடி பணிவித்துக் கொள்வதற்காகவே திருமலையிலே பொருந்திவார்த்திக்கிறவன்.
*அடிக்கீழமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மினென்றென்றருள் கொடுக்கும் பெருமானன்றோ அவன்.
“காயா மலர்வண்ணன்” என்பதற்கு ஈட்டு ஸ்ரீஸுக்தி காண்மின், – ‘துரும்புமெழுந்தாடி அடிமையிலே மூண்டல்லது நிற்கவொண்ணாதபடியான வடிவுபடைத்தவன்” என்று.
வடிவழகின் வீறு கண்டால் அசேதநவர்க்கமுங்கூட அடிமைசெய்ய ஆசைப்பட வேண்டும்படியா யிருக்குமென்றதாயிற்று.
பேயார் முலையுண்டவாயான் – அவ்வடிவுகண்டால் பின்பு நம்முடைய விரோதிவர்க்கமெல்லாம் பூதனைபட்டது படுமென்றவாறு.
“பேய்முலை” “பேய்ச்சிமுலை” என்ன வேண்டுமிடத்துப் பேயார் முலையென்றது சீற்றத்தினாலாயது.
மாதவனே – நம்முடைய குற்றங்குறைகளைச் சிறிதும் பாராதே குற்றங்களையே நற்றமாக வுபபாதித்துச் சேரிப்பிக்கவல்ல பிராட்டியாகும் அருகேயுண்டு என்கிறது.
—————
**** – வாடாமலர்கொண்டு நாடோறும் நாடமுடியாமலும், வேங்கடம்மே யானை அடிபணிய முடியாமலுமிருப்பார்க்கும் ஒருவழியருளிச் செய்கிறாரிப்பாட்டில்.
மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே-10-5-7-
பதவுரை
| மாதவன் என்றென்று ஓத வல்லீரேல் |
– |
த்வயமென்கிற மந்த்ரரத்னத்தை அநுஸந்திக்க வல்லீர்களாகில் |
| தீதொன்று மடையா |
– |
ஏதம் சாராவே மாதவன் என்று என்று ஓத வல்லீர் ஏல் |
| தீது ஒன்றும் அடையா |
– |
அதீத பாபங்களில் ஒன்றும் கிட்டாது |
| ஏதம் சாரா |
– |
மேலுள்ள பாவங்களும் வந்து கூடாது |
மாதவனென்றென்று ஓதவல்லீரேல் – “மாதவனென்று” என்னாமல் “என்றென்று” என்று இரட்டித்துச் சொன்னதனால் லஷ்மீஸம்பந்தத்தை இரண்டு தடவை அநுஸந்திக்க நியமிக்கின்றமை விளங்குகின்றது.
இரண்டு கண்டமாகவுள்ள த்வய மென்னும்மந்த்ரரத்னத்தில் பூர்வ வாக்யத்திலும் உத்தரவாக்யத்திலுமாக இரண்டு தடைவ லஷ்மீஸம்பந்தம் ஸுவ்யக்தமாகவுள்ளதனால் த்வயாநுஸந்தானம் செய்ய நியமிக்கிறாராழ்வார் என்று கொள்ளக்கடவது.
ஆசாரியஹ்ருதயத்திலும் (228) “மாதவனென்று த்வயமாக்கி” என்றருளிச்செய்தது காண்க.
த்வயத்தின் பூர்வவாக்யத்திலும் உத்தரவாக்கியத்திலும் ஸ்ரீமத் பதமுள்ளது. இரண்டிடத்தில் லஷ்மீ ஸம்பந்தம் சொன்னதன் கருத்தை நம் ஆசிரியர்கள் விவாரித்துள்ளார்கள்:-
“இதில் முற்கூற்றல் பெரியபிராட்டியாரை முன்னிட்டு ஈச்வரன் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறது. பிற் கூற்றல் அச்சேர்த்தியில் அடிமை யிரக்கிறது” (122) என்பது முமுக்ஷுப்படி திவ்ய ஸுக்தி.
பூர்வகண்டத்தில் லஷ்மீஸம்பந்தம் சொன்னது புருஷகாரமாக் உத்தரகண்டத்தில் அது சொன்னது பெரிய பிராட்டி யாரும் அவருமான சேர்த்தியிலே கைங்காரியம் செய்கைக்காக என்றதாயிற்று
ஆக ஆச்ரயிக்கும் தசையோடு அநுபவிக்கும் தசையோடு வாசியற இரண்டு தசையிலும் லஷ்மீ ஸம்பந்தம் உத்தேச்யமாயிருக்கையாலே இங்கு “மாதவன் என்றென்று” என்று இரட்டித்தபடி.
இப்பதிகத்தில் முதற்பாட்டிற் சொன்ன நாராயண சப்தத்தோடே மாதவனென்கிற வித்தை இரண்டு தடைவ சேர்த்துக் கொண்டு சொல்ல வல்லீர்களாகில் என்றதாயிற்று
திருவஷ்டாஷர மஹா மந்த்ரத்தின் அநுஸந்தானத்தோடு மாத்திரம் நில்லாமல் த்வயாநுஸந்தானமும் செய்ய வல்லீர்களாகில் என்றதாயிற்று.
ஓதவல்லீரேல் என்றதன் உட்கருத்தைக் கண்டுபிடித்து ஆசாரியர்கள் அருளிச்செய்வது பாரீர் – “பரப்ரோரிதராய்க் கொண்டு சொல்லவல்லிகோளாகில்” என்று. ஆறாயிரப்படியிலுமிங்ஙனே யுள்ளது.
ஒருவர் முன்னே சொல்ல மற்றொருவர் பின்னே சொல்லுகையாகிற அத்யயனத்திற்கு ஒதுகை யென்று பெயராதலால், நீங்கள் தாங்களே ருசிபூர்வமாகச் சொல்லாதொழியினும் ஒருவருடைய ப்ரேரணையினாலாவது சொல்ல நேர்ந்தால் என்றாராயிற்று.
தீதொன்றுமடையா ஏதம் சாராவே – தீது என்றாலும் ஏதமென்றாலும் பரியாயமாகி ஒன்றேயாயிருக்க இரண்டுபோலச் சொன்னது, பூர்வ பாபமென்றும் உத்தர பாபமென்றும் இரண்டாயிருப்பது பற்றி.
*தததிகமே உத்தர பூர்வாகயோரச்லேஷ விநாசௌ தத்வ்யபதேசாத்* என்ற ப்ரஹ்மஸுத்ர மு முணர்க.
ப்ரஹ்மஜ்ஞானம் பிறப்பதற்கு முன்பு செய்யும் பாபங்கள் பூர்வ பாபங்களெனப்படும்; பின்பு நேரும் பாபங்கள் உத்தர பாபங்களெனப்படும்.
“போய பிழையும் புகுதருவானின்றனவும் தீயினில் தூசாகும்” என்ற திருப்பாவையுங் காண்க.
போய பிழைகள் தீயிலிட்ட தூசுபோலே தொலைந்தொழியும்; இனி வரும் பிழைகள் தாமரையிலைத் தண்ணீர் போலே பற்றுதலின்றிக்கே யொழியும் – என்பது உபநிஷத்துக்களின் கொள்கை.
இது தோன்றவே, தீது ஏதம் என்ற இரண்டு சொற்களை யிட்டு ஆழ்வாரருளிச் செய்தபடி.
இப்பாட்டின் முடிவிலே ஈட்டு ஸ்ரீஸீக்தி காண்மின்;- “கீழ்ச்சொன்ன திருமந்த்ரமும் இப்பாட்டில் சொன்ன ஸ்ரீமத் பதமும் தனித்தனியே பேற்றுக்குப் பரியாப்தமான பின்பு இரண்டையும் சேர்த்துச் சொன்னவர்களுக்குப் பேறு சொல்ல வேண்டாவிறே.”
————-
****- “நாராயணத் திருநாமத்தையோ ஸ்ரீமத் பதத்தையோ அநுஸந்திக்க நாங்கள் அதிகாரிகளோ? மிகமிக நீசரான எங்களுக்கு அத்தனையதிகாரமுண்டோ?” என்று சங்கிப்பார்க்குச் சொல்லுகிறது இப்பாட்டு அதிகாரி நியதியில்லை; ஆரேனுமாகத் திருநாமத்தைச் சொல்லலாம். அப்படிச்சொல்லுவார் நித்ய ஸூரிகளோ டொப்பார்கள் என்கிறார்.
சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன்
பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே–10-5-8-
பதவுரை
| “ஏதங்கள் சாரா |
– |
ஒரு பொல்லாங்கும் வந்து கிட்டாது; |
| பேர் ஆர் ஓதுவார் |
– |
திருநாமங்களை ஓதுமவர்கள் யாவ ரோ |
| நீர் ஆர் முகில் வண்ணன் |
– |
நீர் நிரம்பிய மேகம் போன்றவனான எம்பெருமானுடையர் |
| ஆர் ஆ |
– |
அவர்கள் எது பிறப்பு ஏதியல்வாக நின்றவர்களாயினும் |
| அமரர்ஏ |
– |
நித்ய ஸூரிகளோ டொப்பார்கள் |
“ஏதம் சாராவே” என்று கீழே சொல்லியிருக்கச் செய்தேயும் மீண்டும் “சாராவேதங்கள்” என்றது – அந்திகாரிகளான நாம் சொன்னொமென்று ஒரு பொல்லாங்கும் வாராது என்றபடி.
நீரார் முகில்வண்ணன் பேர் ஆர் ஓதுவார் – நீர் கொண்டெழுந்த காளமேகம் போன்ற திருநிறத்தையுடையவனென்று அநுஸந்தித்தவாறே அவனது திருநாமங்களைப் பரவசமாகச் சொல்ல நேருமே; வாய்மூடியிருக்க வொண்ணாதே; தாம்; அதிகாரிகள் அந்திகாரிகள் என்று பார்க்கத் தோன்றுமோ? அப்படிப்பட்டவர்கள். ஆர் ஆர் – ஏதேனும் ஜன்ம வ்ருத்தங்களை யுடையரேயாகிலும் என்றபடி.
அமரரே – நித்யஸூரிகள் எப்படி கைங்காரியமே போது போக்காயிருக்கின்றார்களோ அப்படியேயிருக்கப் பெறுவர்களென்கை.
“ஆராரமரரே” என்றவிடத்து ‘ஆர் ஆர்’ என்று இரண்டு சொல்லாகப் பிரிப்பதே பொருத்தம்.
பன்னீராயிர வுரைசாரர்‘ஆரார்’ என்று முழுச்சொல்லாகக் கொண்டு “த்ருப்தி பிறவாதவளவாய்க் கொண்டு” என்றுரைத்தனர்.
—————
****- இப்பாட்டில் “அமரத் தொழுவார்கட்கு” என்பது உயிரான சொல்; அமரத் தொழுகை யாவதென்னென்னில் ப்ரயோஜநாந்தர மொன்றையுங் கணிசியாமே தொழுகை;
அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே–10-5-9-
பதவுரை
| அமரர்க்கு |
– |
அரி யானை பிரமன் முதலானார்க்கும் அரியனாய் |
| அமர தொழுவார் கட்கு |
– |
பலனென்றும் விரும்பாதே தொழுமவர்களுக்கு |
| தமர்கட்கு எளியானை |
– |
அடியவர்க்கு எளியனாயுள்ள பெருமானை |
| வினைகள் அமரா |
– |
விரோதிகள் வந்து கிட்டாது. |
திருமங்கையாழ்வார் “மிக்க சீர்த்தொண்டர்” என்று ஒரு விலக்ஷண பதப்ரயோகஞ் செய்தருளுகிறார்; க்ஷுத்ர ப்ரயோஜனங்களைக் கணிசிப்பவர்கள் தொண்டர்; அவற்றைத் தள்ளி பரமபுருஷார்த்தமான மோஷத்தையே விரும்புமவர் சீர்த்தொண்டர்;
“நின் புகழில் வைகும் தஞ்சிந்தையிலும் மற்றினிதோ நீ யிவர்க்கு வைகுந்த மென்றருளும் வான்” (பெரியதிருவந்தாதி) என்றருளிச்செய்தபடியே வைகுந்த நாட்டையும் ஒரு பொருளாக மதியாது *எம்மா வீட்டுத்திறமும் செப்பம்* என்றிருப்பார் மிக்க சீர்த்தொண்டர்.
ப்ரயோஜனத்துக் கொருப்ரயோஜன முண்டோ?” என்ற கணக்கிலே, தொழுகைதானே ப்ரயோஜனமாயிருக்க அதற்கொரு ப்ரயோஜனமுண்டோ வென்றிருக்கையே அமரத்தொழுகையாம்;
அப்படித் தொழத் தகுந்தவன் யாவனென்னில்; அமரர்க்கு அரியான்.
தமர்கட்கு எளியான் – அமரர் என்றும் தமர்கள் என்றும் இரண்டுபடப் பேசுகிறார்காண்மின்;
அமரர்கள் தமர்களிற் சேர்ந்தவர்களல்லரோ வென்று கேள்வி பிறக்கும்;
“அமரர்கட்கு இடர்கெட அசுரர்கட்கு இடர்செய்’ என்றார் இவ்வாழ்வார் தாமே.
*முப்பத்து மூவரவமரர்க்கு முன்சென்று கப்பந்தவிர்க்குங்கலியே* என்கிறாள் ஆண்டாள்.
ஆகவே அமரர்கள் தமர்களாயிருக்க இங்கு வேறுபடுத்திச் சொல்லுவதேன்? என்று சங்கை தோன்றும். கேண்மின்;
எம்பெருமான் அர்த்திதார்த்த பாரிதாந தீஷிதனாகையாலே வேண்டுவார்க்குக் காரியஞ்செய்பவனாய் அமரர்வேண்ட அவர்கட்குங் காரியஞ்செய்பவனென்பதில் தட்டில்லை.
அவர்கள் ப்ரயோஜனம் வேண்டும்போது திருவடிகளிலே குனிந்து நிற்பதும், ப்ரயோஜனம் கைப்பட்டவாறே எதிரம்பு கோப்பதுமாயிருப்பவர்களென்பது இதிஹாஸ புராணஸித்தம்;
எம்பெருமானுடைய வடிவழகு முதலியவற்றில் ஈடுபடவுமறியார் அவர்கள்.
திருவிருத்தத்தில் பேணலமில்லாவரக்கர் முந்நீரபெரும்பதிவாய் நீணகர் நீளொரி வைத்தருளாயென்று நின்னை விண்ணோர் தாள்நிலந்தோய்ந்து தொழுவர்* என்றவுடனே
*நின்மூர்த்தி பல் கூற்றிலொன்று காணலுமாங்கொல் என்றே?* என்றருளிச் செய்திருப்பதன் சுவையறிக.
ஆகவே அன்னவர்களைத் தமர்களில் வேறுபட்டவர்களாக ஆழ்வாரருளிச்செய்வது பொருந்தும்.
*நேரே கடிக்கமலத் துள்ளிருந்துங் காண்கிலான் கண்ணனடிக்கமலந்தன்னையயன்* என்று பொய்கை யாழ்வார் பணித்தபடி எம்பெருமான் திருவடி பிரமஎக்கே தெரிந்திலதென்றால் மற்றையமரர்களைப் பற்றிக் கேட்கவேணுமோ?
இங்கு ஆறாயிரப்படியில் “ஆச்ர்தரான தேவாதிகளுக்குங்கூட அரியனாய், ஆச்ர்தர்க்கு எளியனாயிருந்தவனை” என்றருளிச்செய்யப்படுகிறது. இதுவொரு சமத்காரமான ஸ்ரீஸுக்தியாகவுள்ளது.
‘ஆச்ர்தரான’ என்னும் விசேக்ஷணத்தை தேவர்களுக்கும் இட்டுவைத்து, அவர்கட்கும் அரியன் என்று சொல்லி, உடனே ‘ஆச்ர்தர்க்கு எளியன்’ என்கையாலே ஆச்ர்தர் என்கிற சொல்லில் ஒரு வைலஷண்யமிருப்பதாக நன்கு தெரிகின்றதன்றோ.
ஆச்ரயிப்பவர்களெல்லாரும் ஆச்ர்தர்களல்லர்; சில விலக்ஷணவ்யக்திகளே ஆச்ர்தர்களெனப்படுவார் என்று தெரிகின்றது.
அவர்களே தமராவர். அவர்க்கு எளியன்; மற்றையோர்க்கு அரியன்;
அப்படிப்பட்ட பெருமானை அமரத்தொழுவார்கட்கு. அமராவினைகளே – ப்ரயோஜநாந்தரங்களை விரும்புகைக்கடியான பாவங்கள் தொலைந்துபோம் என்றதாயிற்று.
————–
****- இப்பதிகத்தில், முதற்பாட்டில் திருமந்த்ரப்ரஸ்தாவம் செய்தருளினார் ;
ஏழாம்பாட்டில் த்வயப்ரஸ்தாவம் செய்தருளினார்.
அதற்குமேலெல்லாம் பெரும்பாலும் சரமச்லோக ப்ரஸ்தாவமேயாயிருக்கிறது.
*ஸர்வபாபேப்யோ மோஷயிஷ்யாமி* என்பதுதானே சரமச்லோகத்தின் ஸாரம்.
அது இப்பாட்டில் “வினை வல்லிருளென்னும் முனைகள் வெருவிப்போம்” என்று தலைக்கட்டப்படுகிறது.
வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம்
சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே–10-5-10-
–
பதவுரை
| வினை |
– |
கருமங்களென்ன |
| வெருவிப்போம் |
– |
தாமே அஞ்சி அகன்றொழியும் |
| வல் இருள் |
– |
கொடிய அஞ்ஞானமென்ன |
| சுனை நம் மலர்இட்டு |
– |
சுனைகளிலுண்டான நல்ல பூக்களையிட்டு |
| என்னும் முனைகள் |
– |
ஆகவிப்படி சொல்லப்படுகிற இத்திரங்கள் |
| நெடியான் நினைமின் |
– |
ஸர்வேச்வரனைச் சிந்தியுங்கள் |
கருமம், ப்ரபவமான அஜ்ஞானம், அதுக்கடியான தேஹஸம்பந்தம் இயற்கைப்பற்றி வருகிற ருசிவாஸநைகள் ஆகிற இத்திரள்கள்,
வெருவிப்போம் – “நமக்கு இது நிலமன்று” என்று அஞ்சி யோடிப்போம்
முனைகள் – திரள்களென்றபடி. “முனையென்று முகமாய், முகங்கெட்டுப் யோமென்றுமாம்” என்பது ஈடு.
இப்பொருளில், வினைவல்லிருளென்னுமிவை முனைகள் வெருவிப்போ மென்க.
இதற்காகச் செய்யவேண்டுவதென்னென்ன, அது சொல்லுவன பின்னடிகள்.
சுனைநன் மலரிட்டு – ப்ராக்ருத த்ரவ்யம் தேடியோட வேண்டர் அப்ராக்ருத த்ரவ்யங்களையும் விலைதந்து வாங்க வருந்தவேண்டர்
சுனைகளிலே தாமாகத் தோன்றி எளியனவாய்க் கிடைக்கின்ற மலர்களைப் பறித்து இடவமையும்.
நினைமின் நெடியானே – அதுகூடவேண்டர் “சிற்றவேண்டா சிந்திப்பேயமையுங் கண்டீர்களந்தோ” என்று பண்டே சொன்னேனே;
உங்களுக்குப் பாங்கான ஸமயத்திலே ஒருகால் நினையுங்கோள்.
அப்படி ஒருகால் நினைத்தால் போதுமோ? என்று சங்கிப்பார்க்கு அவன்படியை யெடுத்துக் காட்டுகிறார் நெடியான் என்பதனால்.
நாம் ஒருகால் நினைக்க, அதையே பலகால் நினைத்ததாகக் கொண்டு என் செய்வோம்! என் செய்வோம்!! என்று தெகுடாடயிருப்பவனன்றோ நெடியான்.
“அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்” என்றிலானோ?
————
****- இப்பதிகம் வல்லார், தம்மைப்போலே நெடியானருள் சூடும்படியாவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.
நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே–10-5-11-
பதவுரை
| நெடியன் அருள் |
– |
ஸர்வேச்வரனுடைய க்ருபையை, |
| ஆயிரத்து இருபத்து |
– |
ஆயிரத்தினுள் இப்பதிகமானது |
| சூடும் படியான் |
– |
அநுபவிக்கு மியல்வினரான |
| கடகோபன் |
– |
ஆழ்வார் |
| நொடி |
– |
அருளிச் செய்ததான |
| அடியார்க்கு |
– |
பக்தர்களுக்கு |
| அருள் பேறு |
– |
ப்ரஸாத லாபமாயிருக்கும் |
“நெடியானருள் சூடும்படியான் சடகோபன்” என்று தமக்கு நிரூபகமருளிச் செய்கிறார்போலும்.
திருவாய் மொழி தொடங்குபோதே *மயர்வற மதிநல மருளினன்* என்றார்
இடையில் *திருமாலாலருளப்பட்ட சடகோபன்* என்றார்.
இப்போது *நெடியானருள் சூடும்படியான் சடகோபனென்கிறார்.
இதனால் ஸ்ரீராமாயணத்திற் காட்டிலும் ஸ்ரீவிஷ்ணுபுராணத்திற் காட்டிலும் திருவாய்மொழிக்குண்டான ஏற்றம் தெரிவிக்கப்பட்டதாகிறது.
எங்ஙனேயென்னில் ; ஒருநிலையின்றிக்கே வாய்வந்தபடி பிதற்றுமவனான நான்முகனது அருளினால் தோன்றிற்று ஸ்ரீராமாயணம்.
மோஹ சாஹத்ர ப்ரவர்த்தகனாய் ச்மசானஸஞ்சாரியாய் சவபஸ்மத்தை உடம்பெங்கும் பூசி எலும்பு மாலையைப்பூண்டு புலித்தோலுடுத்து அறிவுகேட்டுக்கு எல்லை நிலமான இடபத்தை யூர்தியாகக்கொண்டு காலகூடத்தைக் கழுத்திலே யுடையனான ருத்ரனிடத்தில் உபதேசங் கேட்டவர்களான நால்வாரில் ஒருவனான புலஸ்தியனுடைய அருளினால் தோன்றிற்று ஸ்ரீ விஷ்ணு புராணம்.
அப்படி யன்றிக்கே, திருவுக்குத் திருவாகிய செல்வனாய்ப் பரமஸத்வ நிதியாய்ப் புண்டாரிகாஷனான புருஷோத்தமனுடைய திருவருளடியாகவே தோன்றிற்று திருவாய்மொழி.
இனி மிக விரைவாகவே எம் பெருமானுடைய பேரருளைப் பெறவிருக்கிறாராதலால் அது சொல்லுவித்த சொல் என்னவுமாம்.
*ஆழியானருள் தருவானமைகின்றான் அது நமது விதிவகையே* என்றன்றோ அடுத்த பாசுரமுள்ளது.
நொடியாயிரத்து இப்பத்து – நொடிதல் – சொல்லுதல். சடகோபன் சொன்ன ஆயிரத்தில் இப்பத்தானது.
அடியார்க்கு அருள் பேறே – ஆழ்வார்தாம் ‘நெடியானருள் சூடும்படியான்’ என்று சொல்லிக்கொள்ளும்படியாகப் பெற்ற பேற்றை இப்பத்து பெறுவிக்கு மென்றபடி.
————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Related
This entry was posted on November 16, 2022 at 1:17 am and is filed under திரு வாய் மொழி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply