* * * ….. உபய விபூதி நாதனாயிருந்துவைத்துப் பத்துடையடியவர்க் கெளிப்பனான எம்பெருமானுடைய திருவடிகள் பக்தியோக ஸுலபமென்கிறார். “
சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1-
பதவுரை
| கார்மேகம் வண்ணன் |
– |
காளமேக நிறத்தனாய் |
| கமலம் நயனத்தன் |
– |
செந்தாமரைக் கண்ணாய் |
| தமோதரன் |
– |
தம்பாலே கட்டுண்டு அடியவர்க்கெளியனானவனுடைய |
| நீர்வானம் மண் எர் கால் ஆய் நின்ற |
– |
பஞ்பூதஸவரூபியாய் |
| நேமியான் |
– |
திருமொழியை யுடையனாய் |
| தாள்கள் |
– |
திருவடிகளானவை |
| பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையன் |
– |
பெரிய வானவர்களான நத்திய ஸூதிகள் வாய்வெருவும்படியான பெருமையை யுடையனாய் ( இப்படி உபய விபூ நாதனாய் வைத்து) |
| யூவம் நெறிக்கு |
– |
பக்தி மார்க்கத்திற்கு. |
| சார்வே |
– |
எளியனவாம் |
தவநெறிக்குத் தாமோதரன் தாள்கள் .. சார்வே’’ என்று யோஜிப்பது.
ஆதியில் * பத்துடையவர்க் கென்கிற பதிகத்தில் “வணக்குடைத் தவநெறி’’ என்று தவநெறிச் சொல்லால் சொல்லியிருப்பது இங்கே நினைக்கத் தக்கது.
தவநெறியாது பக்தி மார்க்கம்; அதற்கு, தாமோதரன் தள்கள் சார்வே..
யசோதை போல்வார் கையிலே கட்டுண்டு தழும்பு சுமந்ததுவே திருநாமமாகித் தாமோதரனென்று தன் எளிமையைக் காட்டிக் கொண்டிருக்குமவனுடைய திருவடிகள், சார்வாகும்… எளயனவாகும்.
அவன் உரலோடு கட்டுண்டிருந்தானென்று நினைத்தலும் சொல்லுதலும் செய்தவாறே நம்முடைய ஸம்ஸாரக் கட்டுகளெல்லாம் ஒரு நொடியில் ஒழிந்துபோவது போல, அவருடைய ப்ராப்திக்கு விரோதிகளாயுள்ளவையெல்லாம் தொலையுமென்பது பரமதாற்பரியம்.
அவன்றான் எப்படிப்பட்டவனென்ன, மேல் மூன்றடிகளும் அவனை விசேஷிப்பன.
கார்மேகவண்ணன்… நீர்கொண்டெழுந்த காளமேகம் போல விடபாய் தர்க்கும் வடிவுடையவன்! பக்திக்கு இத்தலையால் க்ருஷியாக வேண்டாதபடி
* காதல் கடல்புரைய விளைவித்த காரமர் மேனியன் என்க. கமலநயனத்தன்… வாத்ஸல்யம் முதலிய நீர்மைக் குணங்களையும் பெருமேன்மையையும் காட்டிக் கொடுக்குங் கண்ணழகுபடைத்தவன்.
ஆக இரண்டாமடியால் திவ்யமங்கள விக்ரஹ வைலக்ஷண்யம் சொல்லிற்று -இனி ஸ்வரூபவைலக்ஷண்யஞ் சொல்லுகிறது. ( நீர்வானம் மண்ணெர்காலாய் நின்ற.)
பஞ்சபூதங்களைச் சொன்னது அவற்றாலும் பௌதிகபதார்த்தங்களையும் சொன்னபடியாய் லீலாவிபூதிநாத னென்றதாயிற்று.
நேமியான.. கையுந்திருவாழியுமாக நித்ய விபூதியிருக்கு மிருப்பைச் சொல்லுகிறது.
பேர்வானவர்கள் பிதற்றும் பெருமையன்… இதற்கு இரண்டுபடியாக நிர்வாஹம்;
பேர் என்பதை வானவர்களுக்கு விசேஷணமாக்கி; பெருமைபொருந்திய வானவர்கள்… நிக்யஸூரிகள் என்று கொள்வது.
அன்றிக்கே, ’ வானவர்கள் பேர் பிதற்றும் பெருமையன்’’ என்று யோஜித்து, திருநாமங்களைச் சொல்லிப் பிதற்றுவதாகக் கொள்வது,
ஆக, கார்மேக வண்ணனாய், கமலநயனத்தனாய் நீர்வானம் மண்ணெர்காலாய் நின்ற நேமியானாய் பேர்வானவர்கள் பிதற்றும் பெருமையனாயிருந்து வைத்துத் தாமோதரனானவனுடைள திருவடிகள் தவநெறிக்குச் சார்வே என்றதாயிற்று.
——————-
* * * …கீழ்ப்பாட்டில் தாள்கள் தவநெறிக்குச் சார்வே * என்று பொதுப்படையாக அருளிச் செய்தார்;
அது தம்மளவில் பலித்தபடியை யருளிச்செய்கிறார் இப்பாட்டுத் தொடங்கி.
பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற்
கருமையனே ஆகத் தணை யாதார்க்கு என்றும்
திரு மெய்யுறைகின்ற செங்கண் மால் நாளும்
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே–10-4-2-
பதவுரை
| வனத்து இமையோர்க்கும் பெருமையன் |
– |
மேலுலகங்களிலுள்ள பிரமன் முதலானாரினும் பெருமை பெற்றவனாய் |
| என்றும் திருமெய் உறைகின்ற |
– |
எப்போதும் பிராட்டியானவள் தன் திருமேனியிலேயே வாழப் பெற்ற புண்டழீகாக்ஷன் |
| ஆகத்து அணையாதார்க்கு |
– |
அவன் திருவுள்ளத்திலே கொள்ளப் பெறாதவர்ககு |
| செம் கண் மால் இங்கு இருமைவினை கடிந்து |
– |
இவ்விபதியிலே புண்யபாப ரூப உபய கருமளையும் போக்கி |
| காண்டற்கு அருமையன் |
– |
காண முடியாதிருப்பவனாய் |
| நாளும் என்னை ஆள்கின்றான் |
– |
நாடோறும் என்னை அடிமைகொள்ளா நின்றான் |
வானத்திமையோர்க்கும் பெருமையன்.. பிரமன் முதலான இமையோர்கள் தாங்களும் பெருமை பெறும்படி அநுக்ரஹங் செய்தருளினவன் என்றபடி; * யுககோடி ஸஹஸராணி விஷ்ணுமாராத்ய பத்மபூ, புநஸ்த்ரைலோக்ய தாத்ருத்வம் ப்ராப்தவாநிதி சுச்ரும* என்பது முதலான பிரமாணங்கள் காண்க.
ஆகத்து அணையாதார்க்குக் காண்டற்கருமையன்… ஆகமாவது ஹ்ருதயம்; ஹ்ருதயத்திலணையாதார் என்றது இரண்டுவகையாகப் பொருள்படும்; தங்களுடைய ஹ்ருதயத்திலே எம்பெருமானைக் கொள்ளாதார் என்றபடியாய், தன்னைக் காண வேணுமென்னும் ருசியில்லாதார்க்குத் தான் காணவாயன் என்பதொன்று;
எம்பெருமானுடைய ஹ்ருதயத்திலே அணையப் பெறாதார்க்கு என்றபடியாய், பரகத் ஸ்வீகாரத்திற்கு இலக்காகப் பெறாதவர்களுக்குக் காணவரியன் என்பது மற்றொன்று.
இவ்விரண்டு பொருள்களையும் சேரப்பிடித்து நம்பிள்ளையயருளிச் செய்கிறபடி பாரீர்… “ தானே வந்து மேல்விழா நின்றால் விலக்காமையின்றிக்கே யிருபபார்க்கு’ காணவரியனாயிருக்கும்; ஸம்பந்தம் இன்று தேட வேண்டா பெறவேணுமென்கையும் வேண்டா வென்கையுமிறேயுள்ளது.’’
என்றும் திரு மெய்யுறைகின்ற… சேதநர்களோ குற்றங்களுக்கு’ கொள்கலமானவர்கள்; ஈச்வரனோ குற்றங்களுக்குத் தக்கபடி தண்டனைகளைத் தருமவன்; இவ்விரண்டையும் நோக்கி என்னாகுமோ வென்றஞ்சி. புருஷகாரம்பண்ணிச் சேர்க்கைக்காகப் பிராட்டி இடைவிடாது உறையுந் திருமார்பையுடையவனென்கை.
செங்கண்மால்… அப்பிராட்டியின் நித்ய ஸம்ச்லேஷத்தினாலே நீர்பாய்ந்த பயிர் போலே விலக்ஷணமான செவ்வி பெற்ற திருக்கண்களை உடையனாய், அடியார்கள் பக்கல் வியாமோஹமே வடிவெடுத்திருப்பவனென்க.
ஆக விப்படிப்பட்ட எம்பெருமான், இருமைவினைகடிந்து நாளும் இங்கென்னையாள்கின்றானே… இரும்பு விலங்கு லங்கென்னும்படியான புண்யமென்ன, இவ்விருவகை’ கருமங்களையும் போக்கி, திருநாட்டிலே கொள்ளக்கடவதான அடிமையை நாள்தோறுமிங்கே கொள்ளா நின்றான்.
—————
* * * …. எம்பெருமானுடைய திருவடிகளைச் சென்னிக்கணியாகக் கொண்டு அநுபவிக்கப் பெறேன்; இன ஸம்ஸாரம் மறுவலிடாது; என்னகுறை யுண்டென்கிறார்.
ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே–10-4-3-
பதவுரை
| ஆழியான் ஆழ்கின்றான் |
– |
கையுந் திருவாழியுமான பெருமாள் காத்தருளா நின்றான்; |
| வாள் கெண்டை ஒண் கண் |
– |
ஒளியையுடைய கெண்டை போன்றழகிய கணகளையுடையளாய் |
| பிறவி துயர் கடிந்தோம் (அதனாலே) |
– |
பிறவித் துன்பங்கள் தொலையப் பெற்றோம்; |
| மடம் பின்னை தன் கேள்வன் |
– |
குணவதியான நப்பின்னைக்கு நாயகனானவனுடைய |
| மீள்கின்றது இல்லை |
– |
இன ஸம்ஸார ஸம்பந்தம் மறுவலிடாது; |
| தாள் கண்டு கொண்டு |
– |
திருவடிகளை ஸாக்ஷாத்கர்த்து |
| ஆரால் குறை உடையம் |
– |
இன ஆரைக் கொண்டு காரிய முடையோம். |
| என் தலை மேல் பினைந்தேன் |
– |
( அத் திருவடிகளை) என் தலை மீது அணியப் பெற்றேன். |
ஆள்கின்றானாழியான்… * எப்போதுங் கைகழலாநேமியான் நம்மேல் வினைகடிவான்* ப்ரணதரக்ஷாயாம் விலம்பமஸஹந்நிவ, ஸதா பஞ்சாயுதீம் பிப்ரத் ஸ்ரீரங்கநாயக* என்றும் சொல்லுகிறபடியே எம்பெருமான் எப்போதும் கையுந்திருவாழியுமாயிருந்துது கொண்டு விரோதியைப் போக்கி அடிமைகொண்டருளா நின்றான்;
ஆரால் குறையுடையம்… உபாயாந்தரங்களாலும் உபேயாந்தரங்களாலும் அபேக்ஷையுடையோமல்லோம் என்றறபடி.
* உன்னாலல்லால் யாவராலுமொனறுங் குறைவேண்டேன்* என்றவிடத்துப் பொருளை நினைப்பது. மீள்கின்றதில்லை பிறவித்துயர்கடிந்தோம்…
“ புநரபி ஜநநம் புநரபி மரணம் புநரபி ஜநநீஜடரே சயநம்’ என்னும்படியான நிலைவிர்ந்தோ மென்கை.
இனி மறுவலிடாதபடி ஸம்ஸார துர்தத்தை யோட்டினோம்.
மேல்* முனியே நான்முகனில்* மாயஞ் செய்யேலென்னை உன் திருமார்வத்து மாலை நங்கை வாசஞ்செய் பூங்குழலாள் திருவாணை நின்னாணை கண்டாய்* என்று ஆணையிடுமளவும் அநுவர்த்திக்கின்றற ஸம்ஸாரத்திலிருப்பை இப்போதே கடிந்ததாகச் சொல்லுகிறது நெஞ்சிலுண்டான தெளிவாலே யென்க.
வாள் கெண்டை யொண்கண் மடப்பின்னை தன் கேள்வன் முன்னடிகளிற் சொன்ன பேறு நப்பின்னைப் பிராட்டி யடியாக வுண்டானதென்று காட்டுகிறார்.
ஈச்வரன் நம்முடைய கருமங்களுக்குத் தக்கபடி பலன் தருபவனாயிருந்தாலும் பிராட்டியினுடைய திருக்கண்ணோக்கைப் பின் செல்லுவானாய் அவன் புருவம் நெறித்த விடத்தே குடர்நீவழிக்கக் கடவனா யிருப்பவனே;
அபராதங்கண்டு சேதநர்களை யுபேக்ஷித்தானாகில் பிராட்டிபப்லில் நோக்குப் பெறமாட்டேனே;
* வண்டார் பூ மாமலர்மங்கை மணநோக்கமுண்டானே!* என்று திருமங்கையாழ்வாரருளிச் செய்தபடி எமபெருமானுக்கும் பிராட்டியின் நோக்கமேயன்றோ உணவு;
அவ்வுணவை அவன் இழக்க முடியுமோ? ஆகவே அவளுக்காக அடியார்களைக் கடாக்ஷித்தருள்பவன் என்கைக்காக
“ வாள்கெண்டை யொண்கண்’’ என்கிற விசேஷணமமைந்ததென்க.
ஆக, தன் கண்ணழகாலே துவக்கவல்லளான நப்பின்னைப் பிராட்டிக்கு நாதனானவனுடைய திருவடிகளைத் தலைமேலணிந்து க்ருத்த்ருத்யனானே னென்றாராயிற்று.
—————
* * * … அவன் திருவடிகளை நான் தலைமேல் பிணைந்தபடி கிடக்கட்டும்; அவன்றான் என் ஹ்ருதயத்திஎட்ளளே வந்து புகுகைக்கு க்ருஷி பண்ணின படியையும் அந்த’க்ருஷி பலித்தவாறே அவன் க்ருத’ருத்யனாயிருக்கிறபடியையும் கண்டு நான் களிக்கின்றே னென்கிறார்.
தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே–10-4-4-
பதவுரை
| சரணங்கள் தலை மேல் புனைந்தேன் |
– |
அவன் திருவடிகளை என் தலை மேலணிந்து கொண்டேன்; |
| என் மனத்துள் இருந்தானை |
– |
என்னெஞ்சினுள்ளே புகுந்திருப்பவனுமான எம்பெருமானை |
| ஆலின் இலை மேல் துயின்றான் |
– |
ஆலிலையில் கண் வளர்ந்தவனும், |
| நிலை பேர்க்கல் ஆகாமை |
– |
இந்நிலையில் நின்றும் மாற்ற வொண்ணாமையை |
| இமையோர் வணங்க மலை மேல் தான் நின்று |
– |
நித்யஸூரிகள் வணங்கும்படி திருமலையிலெழுந்தருளி நின்று (ஸமயம் பார்த்து) |
| நிச்சித்திருந்தேன |
– |
திணணமாக வெண்ணியிரா நின்றேன். |
தலைமேல் பினைந்தேன் சரணங்கள்… * ஆழியங்கண்ணா உன் கோலப்பாதம் அடிச்சியோந்தலைமிசை நீயணியாய்* என்று பிரார்த்தித்துப் போகையல்லாமல் திருவடிகளை என் தலை மேலே வைத்துக் கொள்ளப் பெற்றேன்.
அமரர் சென்னிப்பூவான திருவடிகள் என் சென்னிப்பூவாம்படி சூடப் பெற்றேன். இப்பேறு எங்ஙனே வாய்த்ததென்ன, அவன்றன்னுடைய க்ருஷிபலித்தபடி யென்கிறார் மேல். ’இமையோர் வணங்க ஆலினிலைமேல் துயின்றான்; பிறகு மலை மேல் நின்றான். அதன் பிறகு என் மனத்துளிருந்தான்’’ என்கிறார்.
இவ்விடத்து ஈட்டு ஸ்ரீஸூக்திகள் பரமபோக்யம்; அவை வருமாறு; “(ஆலினிலை மேல துயின்றான்.) தன்னைக் கொண்டு காரியமுடையார் சிலரைக் கண்டிலன்; எல்லார்க்கும் ஆராய்ச்சிப் படும்படியான செயலைச் செய்வோமென்று பார்த்தான்; வேண்டாவென்பாரைக் கண்டதில்லை. அது ஸாத்மித்தவாறே நித்யஸூரிகளும் தானுமாகவந்து திருமலையிலே நின்றான்; அதுவும் ஸாந்மித்தவாறே இவருடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்தான்; இங்கு விலக்குவார்ல்லாமையாலே ஸ்தாவர ப்ரதிஷ்டையாக இருந்தான்.* பனிக்கடலில் பள்ளி கோளைப் பழகவிட்டோடி வந்து இவருடிடய மனக்கடலிலே வாழப் பு’கான்.’‘
ஸ்ரீவசநபூக்ஷணத்தில் (171) “ அங்குத்தை வாஸம் ஸாதனம்; இங்குத் தைவாஸம் ஸாத்யம்; * கல்லுங்கனைகடலுமென்கிறபடியே இது ஸித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமாயிருக்கும்; * இளங்கோயில் கைவிடேலென்று இவன் ப்ரார்த்திக்க வேண்டுபடியாயிருக்கும். ப்ராப்யப்ரீதி விஷயத்வத்தாலும் க்ருதஜ்ஞதையாலும் பின்பு அவை அபிமதங்களாயிருக்கும்’’ என்றருளிச் செய்யப்படுகிறது.
அதற்கு இப்பாசுரம் மூலகாரணமானது. அந்த ஸ்ரீஸூக்திகளின் கருத்தாவது. திவ்யதேசங்களிற்காட்டிலும் ஞான்கிளான திருமேனியில் எம்பெருமான் பண்ணும் ஆதரம் அளவற்றது. எம்பெருமான் திவ்ய தேசங்களில் எழுந்தருளியிருப்பதானது தக்க வுபாயங்களாலே சேதநரை அகப்படுத்தி கொள்கைக்காக வாகையாலே அந்த திவ்ய தேசவாஸம் ஸாதனம்;
இந்த சேதநன் திருந்தி இவனுடைய ஹ்தயத்தினுள்ளே தாட்ன வஸிக்கப் பெற்றது அத்திவ்யதேச சாஸமாகிற க்ருஷியின் பயனாகையாலே ஞான களடத்தில் வாஸமே எம்பெருமானுக்குப் பரமப்ரயோஜனம். ஆழ்வார் போல்வாருடைய உள்ளத்தில் எம்பெருமானுக்கு வாஸம் ஸித்தித்து விட்டால் திருப்பாற்கடல் பரமபதம் முதலானவிடங்களில் அவருக்கு ஆதரம் மட்டமாகு மென்பது
* கல்லுங்கனைகடலும் வைகுந்த வானாடும் புல்லெனறோழிந்தன கொல் ஏபாவம்!. வெல்ல நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான், அடியேனதுள்ளத்தகம்* என்ற பெரிய திருவந்தாரிப் பாசுரத்தினால் விளங்கும்.
எம்பெருமான் புராதன திவ்யதேசங்களில் நெடுநாளாகப் பண்ணிக் கொண்டிருந்த ஆதரர்த்தைக் குலைத்துக் கொண்டு இன்று தன் ஹ்ருதயத்திலே அளவு கடந்த ஆதரத்தைப் பண்ணிக் கொண்டிருக்கும்படியைக் காணும் ஞானியானவன்
“ பிரானே! என்னுள்ளத்தினுள் புகுருகைக்கு பாலாலயம் போன்றிருந்த திருப்பாற்கடல் திருலை முதலியவற்றறை உபேஷிக்க’ கூடாது’’ என்று எம்பெருமானை நோக்கிப் பிரார்த்திக்க வேண்டுபடியாகும்;
பரமபதம் திருப்பபாற்கடல் அர்ச்சாவதாரங்கள் முதலிய ஸ்தானங்களிற் காட்டிலும் ஞான்கிளின் ஹ்ருதயமே எம்பெருமான் விட்டுவிட வேண்டாவோ? அப்படி விட்டுவிட்டதாகத் தெரியவில்லையே; அவற்றிலும் உகந்து வர்த்திப்பதாகத் தெரிகிறதே, இதற்கு ஹேதுவென்? என்னில்:
எம்பெருமான் தனக்கு ப்ராப்யபூதரான ஞான்கிள் அந்த ஸ்தலங்களிலே போரவுகப்பு’ கொண்டிருப்பதனாலே அவர்கள் உகந்த ஸ்தலம் நமக்கு முத்தேச்யமாக வேணும் என்கிற எண்ணத்தினாலும், இத்தேசங்களில் நாம் வாஸஞ் செய்தபடியாலன்றோ நமக்கு ஞான்கிளின் ஹ்ருதயத்தில் வாஸமாகிற மஹத்தான லாபம் கிடைத்தது என்கிற நன்றியுணர்ச்சியானாரும் எம்பெருமானுக்கு திவ்ய தேசவாஸமும் அபிமாமாகின்றது என்பதாம்.
ஆக இவ்வர்த்த விசேஷங்கள் ஆழ்வார் ஸ்ரீஸூக்திகள் பலவற்றாலும் கிடைத்தாலும், இங்கு “மலை மேல் தான்னின்று என்மனத்துளிருந்தானை, நிலைபேர்க்கலாகாமை நிச்சித்திருஷந்தேனே’’ என்கிற இப்பாசுரம் தலையான ப்ரமாணமாகும்.
நிலை பேர்க்கலாகாமை நிச்சித்திருந்தேன் – இவ்வளவு விருப்பத்தோடு வந்து சேர்ந்து பேறாப் பேறு பெற்றனாக நினைத்திருக்கிற எம்பெருமான்தான் நிலைபேர மாட்டா னென்பது திண்ணம்; :
இனி நம்மால் நிலைபோர்கலாமோ வென்னில், நாம் ப்ராதிகூல்யம் பண்ணுவது தானே நிலைபேர்த்தலாவது : அதற்கு இடமில்லாதபடி நெஞ்சைக் கொண்டிருக்கையாலே நம்மாலும் நிலைபேர்க்கலாகாது என்றதாயிற்று.
—————-
**** – இப்பாட்டில் “கள்வம் பெரிதுடையன்” என்பது உயிர்நிலையான வாசகமாயிருக்கும். அப்பெருமான் என்திறத்தில் செய்தருள நினைத்திருக்குமவை ஒரு வராலறியப்போமோ? என்கிறார்
நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை
கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையவன்
மெச்சப் படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன்
நச்சப் படும் நமக்கு நாகத்து அணையானே–10-4-5-
பதவுரை
| என நெஞ்சம் கழியாமை |
– |
எனது நெஞ்சைவிட்டு அகலாதபடியான தன்மையை |
| பிறர்க்கு மெச்சப்படான் |
– |
பிறர்க்குத் தனது குணங்களைக் காட்டிக் கொடாதவனாய் |
| நிச்சித்திருந்தேன் |
– |
நிச்சயித்திருந்தேன் |
| கை சக்கரத்து அண்ணல |
– |
திருக்கையிலே திருவாழியைக் கொண்ட ஸ்வாமி |
| மெய் போலும் பொய் வல்லன் |
– |
மெய் செய்வாரைப்போலே பொய் செய்ய வல்வலனாய் |
| கள்வம் பெரிது உடையன் |
– |
நாமறியாதன பலவும் பாரியா நின்றான் |
| நாகத்து அணை யான் நமக்கு நச்சப்படும் |
– |
சேஷசாயியானவன் நமக்கு ப்ராப்யனாவன். |
என நெஞ்சம் கழியாமை நிச்சித்திருந்தேன் – நீர்லே கிடந்தும் மலையுச்சியிலே நின்றும் அவன் தவம் புரிந்து வந்து என்னெஞ்சிலேயிருக்கையாலே இனி யொருகாலமும் விட்டுப் போகானென்று நிச்சயித்திருந்தேன். இது கீழ்ப்பாட்டிற் சொன்னதேயாகிலும் மீண்டுஞ் சொல்லுகிறது திடப்படுத்திச் சொல்லுகிறபடி.
நெஞ்சங் கழியாமைமாத்திரமன்று; இன்னமும் செய்ய நினைத்திருக்குமவை அபாரிமிதமாகவுண்டென்கிறார் இரண்டாமடியால். அவை எவை யென்னில்; அர்ச்சிராதிமார்க்கத்தாலே கொண்டுபோக நினைப்பது, அமாநவ கரஸ்பர்சம் செய்விக்க நினைப்பது, மதிமுகமடந்தையரை வரக்காட்டி எதிரிகொள்ளப்பாரிப்பது ஆக இங்ஙனே அனேகம் என்க.
இந்த எண்ணங்களைக் கள்வம் என்கிற சொல்லாலே சொல்லுவானென்னென்னில்; இவைசெய்யப் போகிறேனென்று வாய்விட்டுச் சொல்லாமே தன்னேஞ்சினுள்ளேயே ஏகாந்தமாகப் பாரிப்பதுபற்றிக் கள்வமென்கிறது.
அப்படி ஏகாந்தமாகப் பார்த்தானாகில் அதை ஆழ்வார் தாமறிந்த படியென்னென்னில். அகத்தை முகத்திலே யறியவல்லவரன்றோ ஆழ்வார். ஆசாரிதரையொருகாலும் கைவிடாதவனென்கைக்காகக் கைச்சக்கரத்தண்ணல் என்றது.
பிறர்க்கு மெச்சப்படான் – நான் தன் குணங்களைச் சொல்லிப் புகழுகிறாப்போலே பிறர் தன் குணங்களைச் சொல்லிப் புகாலாம்படியிராதவன் என்றபடி..
இப்போது இது சொல்லுகிறது எதற்காகவென்னில்; ஆழ்வார் விஷயத்திலே அவன் பாரிப்பது ஸர்வஸாதரணமாகாது என்கைக்காக.
*பத்துடையடியவர்க் கெளியவன் பிறர்களுக்காரிய வித்தகன்* என்றதுங்காண்க.
மெய்போலும் பொய்வல்லன்-மெய்யென்று நினைக்கும்படியான பொய்யிலே வல்லவன் இங்கே ஈடு:- “அர்ஜுநாதிகள் பக்கலிருக்குமா போலேயிறே துர்யோதநாதிகள் பக்கலிலுமிருப்பது; காரியத்தில் வந்தால் மெய்செய்வாரைப் போலே பெயர் செய்து தலைக்கட்டும்” என்று.
அடியார்களுக்கு மெய்யே செய்யுமாபோலே பிறர்க்குப் யொய்யே செய்யவல்லவன் என்பது பரமதாற்பாரியம்.
நச்சப்படும் நமக்கு – நமக்கு நச்சப்படும் என்று அந்வயம்; உகவாதார் விஷயத்தில் செய்வதை நம் பக்கலில் செய்யானென்றபடி.
இதற்கொரு த்ருஷ்டாந்தம் காட்டுகிறார் நாகத்தணையானே யென்று.
நம்மிலே யொருவனான திருந்றுனதாழ்வான்பக்கல் பாரிமாறுகிறபடி கண்டால் அப்பாரிமாற்றம் நமக்கும் ப்ராப்தமாகுமெவன் நம்பியிருக்கத் தட்டுண்டோ வென்றாராயிற்று.
——————-
**** – இன்று வந்து அடிமைபுக்காரையும் “அல்வழக்கொன்று மில்லாவணி கோட்டியர் கோனபிமானதுங்கன் செல்வனைப் போலத் திருமாலே நானுமுனக்குப் பழவடியேன்” என்று சொல்லும்படி நித்யாச்ர்தரைப் போலே விஷயீகாரிக்குமவன் திருவடிகளிலே விழப்பெற்றே னென்கிறார்.
நாகத்து அணையானை நாள்தோறும் ஞானத்தால்
ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை
மாகத்து இளம் மதியம் சேரும் சடையானைப்
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே-10-4-6-
பதவுரை
| நாகம் அணையானை |
– |
சேஷசயன்னாய் |
| மாகத்து இளமதியம் சேரும் சடையானை |
– |
ஆகாசத்திலுள்ள இளம் பிறை தங்குகின்ற சடையையுடைய சிவனை |
| ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு |
– |
பக்தியாக வடிவெடுத்த ஞானத்தினால் நெஞ்சிலே வைத்து அநுபவிக்கும் முமுக்ஷீக்களுக்கு |
| பாகத்து வைத்தான் தன் |
– |
தன் திருமேனியிலொரு பக்கத்திலே வைத்தவனான பகவானுடைய |
| நாள்தோறும் |
– |
எப்போதும் |
| அருள் செய்யும் |
– |
அருள்செய்கின்ற ஸ்வாமியாய் |
| பாதம் பணிந்தேன் |
– |
திருவடிகளை வணங்கப் பெற்றேன் |
நாகத்தணையானை – உகந்தாரைப் படுக்கையாகக் கொள்ளுமவன் என்பது தாற்பாரியம்.
ஞானத்தால் ஆகத்தணைப்பார்க்கு நாடோறும் அருள் செய்யுமம்மானை – “சேமுஷீ பக்திரூபா” என்று ஸ்ரீ பாஷ்யகாரர்அருளிச் செய்தபடியே பக்தியை ஞானமென்கிறது இங்கு. பக்தியாலே ஹ்ருதயத்திலே கொண்டு சேரிப்பார்க்கு நாள்தோறும் அருள்செய்யுமவனென்கை.
*தேஷாம் ஸததயுக்தாநாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம், ததாமி புத்தி கொள்ளத்தக்கது. நாடோறும் என்பதை ஆகத்தணைப்பார்க்கென்பதிலே கூட்டி ‘ஸர்வகாலமும் பக்திசெய்யவல்லவர்களுக்கு அருள் செய்யுமவன்’ என்று பொருள் சொல்லலாமானாலும் அது சுவைக் கேடு;
“இவனால் எப்போதும் நினைக்கப் போகாதே; அக்குறை தீர ஏக ரூபனான தான் நாள்தோறும் அருள் செய்யுமாய்த்துக் என்பது ஈடு.
நாம் செய்யும் நலம் ஸக்ருத்தானலும் அதற்கு அவன் செய்தருளுமது அஸக்ருத்தாயிருக்குமென்க.
மாகத்திளமதியஞ் சேருஞ்சடையானைப் பாகத்துவைத்தானென்று எம்பெருமான்றனது சீலம் சொல்லுகிறது.
மூன்றாமடியினால் சநத்ர மெலீச்வரனென்கிற சிவனது பெயர் விவாரிக்கப்பட்டது. அவனைப் பாகத்து வைத்தான் – அவருக்குத் தன் திருமேனியிலே ஒரு பாத்திலே இடங்கொடுத்தவனென்று சீல குணாநுபவமிருக்கிறபடி.
ஆக இப்படிப்பட்ட எம்பெருமானுடைய பாதம் பணிந்தேன்.
————
**** – நம் விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுமவனான அப்பெருமானை இடைவீடின்றியநுவிக்குமாறு திருவுள்ளத்தை நோக்கி யருளிச் செய்கிறார்.
பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7-
பதவுரை
| மணிநின்ற சோதி | – | நீலரத்னத்தை யொத்த தேஜஸ்ஸை யுடையனாய் |
| பிறவி கெடுத்து ஆளும் | – | நம்பிறவித் துன்பத்தைப் போக்கி அடிமை கொண்டருள்பவன் |
| மதுசூதன் | – | விரோதி நிரஸந சீலனாய் |
| என் அம்மான் | – | அஸ்மத் ஸ்வாமியாய் |
| அணி நின்ற செம்பொன் அடல் ஆழியான் | – | தானே ஆபரணமாகப் போரும்படியாய்ச் சிவந்த பொன்போலே ஸ்ப்ருஹணீயனாய் மிடுக்கையுடையனான திருவாழியாழ்வானைக் கையிலேந்தினவனான பெருமான் |
| பிணி ஒன்றும் சாரா | – | ஸம்ஸாரக்லேசமொன்றும் தட்டாது |
| பரமபரம்பரணை நெஞ்சே நாளும் பணி | – | (ஆன பின்பு) அப்பரமபுருஷனை நெஞ்சமே! நித்யமும் வணங்கி யநுபவி |
நெஞ்சே! பரமபரம்பரனை நாளும்பணி – நெஞ்சே! நல்ல வாய்ப்பாயிருந்தது, நாள்தோறுமநுபவிக்கப் பார்; இந்திரன் முதலானார்க்கு மேற்பட்டவர்களான (பிரமன் முதலானார்க்கும் மேற்பட்டவர்களான) நித்யஸூரிகளுக்குத் தலைவனை நாளுமநுபவிக்கப்பார்.
பிணியென்றும் சாரா – துக்கங்களொன்றும் நம்மை வந்து கிட்டாது. பிறவி கெடுத்து ஆளும் – அந்த துக்கங்களுக்கு அடியான ஜன்மத்தை அடிவேரோடே போக்கி நம்மை நித்திய கைங்காரியம் கொள்ளுபவன்
மணி நின்ற சோதி – துக்கங்களையும் துக்கஹேதுவான ஜன்மத்தையும் போக்குகின்றிலன் என்றே வைத்துக்கொள்வோம்; அப்படியானாலும் விடவொண்ணாத வடிவழகு படைத்தவன்.
நீலமணியினொளியை வடிவாக வகுத்தாற்போலே யிருக்கிற வடிவையுடையவன்.
மதுசூதன் – மதுகைடபர்களைக் கொன்றானென்பது மாத்திரம் இங்கு விவஷிதமன்று கீழ்ச்சொன்ன வடிவழகை யநுபவிப்பார்க்கு வரும் விரோதிகளை மதுகைடபர்களைப் போக்கினாப் போலே தள்ளிக் கொடுக்குமவன் என்று விவஷிதம்.
அணி நின்ற செம்பொனடலாழியானே – கையுந்திருவாழியுமான அழகை நமக்கு அநுபவிக்கக் கொடுப்பானென்று கருத்து.
ஆக இப்படிப்பட்ட எம்பெருமானை நெஞ்சே! நாளும் பணி என்றாராயிற்று.
————–
ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்–10-4-8-
பதவுரை
| ஆழியான் |
– |
சக்ரபாணியாய் |
| ஆழி அமரர்க்கும் அப்பாலான் |
– |
கம்பீரர்களான நித்யஸூரிகளுக்கும் நிலமல்லாத மேன்மையையுடையனாய் |
|
(அப்பசுக்களுக்கு ஆபத்து வந்தபோது) |
||
| பாழிஅம் தோளால் வரை எடுத்தான் |
– |
மிடுக்குடைய அழகிய திருத்தோளாலே மலயை யெடுத்துக் காத்தவனான பெருமானுடைய |
| ஊழியான் |
– |
ப்ரளயகாலத்தில் தானொரு வனெயுளனாய் |
| பாதங்கள் |
– |
திருவடிகளை |
| ஊழிபடைத்தான் |
– |
காலம் முதலிய சகல பதார்த்தங்களையும் ஸங்கல்பித்தவனாய் |
| என் நெஞ்சே மற வாது வாழ் கண்டாய் |
– |
என் மனமே! ஒரு போதும் மறவாமல் நித்யாநுபவம் பண்ணி வாழ்வாயாக. |
| நிரைமேய்த்தான் பசுக்களை ரஷித்தவனாய் |
– |
வாழி இவ்வாழ்ச்சி நித்யமாயிடுக |
**** – கீழ்ப்பாட்டில் “பணி நெஞ்சே! நாளும்” என்றவாறே உகந்திருந்தது நெஞ்சு; அதனைக் கொண்டாடி அவனை இடைவிடாதே அநுபவியென்கிறார்.
————
**** – “ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோஜ்ஞாநஸமாதிபி:, நாராணாம் ஷிணபாபாநாம் க்ருஷ்ணே பக்தி: ப்ரஜாயதே” என்றும்,
“ஒன்றியொன்ற நற்றவஞ்செய்து ஊழியூழிதோறெலாம் நின்று நின்றவன் குணங்களுள்ளி யுள்ளந் தூயராய், சென்று சென்று தேவதேவர் ளும்பரும்பரும்பராய், அன்றி யெங்கள் செங்கண் மாலை யாவர்காண வல்லரே” என்றும் சொல்லுகிறபடியே
நெடுங்காலம் பாரிச்ரமப்பட்டுப் பெறவேண்டுமவனை அவருடைய நிர்ஹேதுக க்ருபையாலே காணப்பெற்றே னென்கிறார்.
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9-
பதவுரை
| தொண்டே செய்து |
– |
பரபக்தி முதலியவற்றைப் பண்ணி |
| கமலம்மலர்பாதம் கண்டேன் |
– |
(அவனன்றனது) பாதாரவிந் தங்களைக்காணப்பெற்றேன் |
| என்று தொழுது வழியெழுக |
– |
நித்ய கைங்காரியத்தைச் செய்து அதுவே யாத்திரையாய்ச் சொல்லும்படி |
| காண்டலுமே |
– |
கண்டபோதே |
| பண்டே |
– |
ஏற்கனவே (கீதாசாரியனானவப் போதே) |
| வினை ஆயின எல்லாம் |
– |
விரோதியேன்று பேர் பெற்றவை யெல்லாம் |
| பரமன் பணித்த பணி வகையே |
– |
ஸர்வேச்வரன் (ஸர்வஸாதாரணமாக) அருளிச் செய்த பாசுலரத்தின்படியே |
| விண்டே ஒழிந்த |
– |
வாஸனையோடே விட்டுப் போயின |
கமல மலரிப்பாதம் கண்டேன் – என்றைக்கும் கேட்டேபோம் விஷயத்தைக் கண்ணாலே ஸாஷாத்காரிக்கப் பெற்றேன். – காண்டலுமே – அப்படி ஸாஸாத்காரித்தவளவிலே, வினையாயினவெல்லாம் விண்டே யொழிந்த – * அஹம் த்வா ஸர்வபா பேப்யோ மோஷயிஷ்யாமி* என்ற அவருடைய ப்ரதிஜ்ஞை பலித்தாயிற்று.
ஒழிந்த என்றது ஒழிந்தன வென்றபடி. துணிச்சாலே, நீயும் வேண்டா நாளும் வேண்டா. அவை தன்னடையே விட்டுப்போம்…” என்ற முமுக்ஷுப்படி ஸ்ரீஸுக்தி இவ்விடத்திற்குச் சார்பாக அநுஸந்திக்கத்தக்கது.
முன்னடிகளிற் சொன்ன விஷயத்திற்குப் பின்னடிகளால் ப்ரமாணங்காட்டியருளுகிறார் ஆழ்வார்தாமே. “பண்டேபரமன் பணித்த பணிவகையே” என்றது சரமச்சோகத்தைக் கணிசித்தே
“பகவன் ஞானவிதி பணிவகை யென்று இவரங்கீகாரத்தாலே அதுக்கு உத்கர்ஷம்” என்ற ஆசாரியஹ்ருதய சூர்ணை இங்கு அநுஸந்தேயம்.
அந்த சரம ச்லோகத்தில் “ஸர்வபாபேப்யோ மோஷயிஷ்யாமி” என்று பாபங்களைப் போக்குவது மாத்திரம் சொல்லப்பட்டுள்ளதேயன்றி ஸ்வரூபாநுரூபமான கைங்கரிய வ்ருத்தியைக் கொடுப்பதாகவும் சொல்லிற்றில்லை;
ஆனாலும் அதுவும் கண்ணபிரானுக்கு விவஷிதமே யென்று அடியறிந்தவிவர் “தொண்டே செய்தென்றுந் தொழுது வழி யொழுக” என்று விளங்க வைத்தருளினர்.
ஸ்வரூபம் நித்யமான பின்பு ஸ்வரூபாநு ரூபமான வ்ருத்தியும் நித்யமாய்ச் செல்ல வேண்டுமன்றோ.
———–
**** – ப்ரயோஜநாந்தர ரர்களோ, உபாயாந்தர நிஷ்டர்களோ, ப்ரபந்தர்களோ யாராயினும் யாவாக்கும் எம்பெருமானே உபாயமென்று தலைக்கட்டுகிறார்.
வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திகை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே–10-4-10-
பதவுரை
| வகையால் மனம் ஒன்றி |
– |
சாஸ்திரங்களிற் சொல்லுகிறபடியே நெஞ்சையொருங்கப் பிடித்து |
| திசை தோறு அமரர்கள் சென்று இறைஞ்சநின்ற |
– |
நின்ற நின்ற திக்குக்கள் தோறும் பிரமன் முதலிய தேவர்கள் வந்து பணியும் படியான, |
| மாதவனை |
– |
திருமாலான தன்னை |
| நாளும் |
– |
காலந்தோறும் |
| தகையான் |
– |
ஸ்வபாவத்தையுடையனான எம்பெருமானுடைய |
| புது புகையால் விளக்கால் மலரால் நீரால் |
– |
விலக்ஷணமான தூப தீப புஷ்ப தீர்த்தங்களாலே |
| சரணம்தமர்கட்கு ஓர் பற்று |
– |
திருவடிகள் பக்தர்களுக்குச் சிறந்த புகலிடம் |
வகையால் என்றது சரமச்லோகத்தில் சொல்லப்பட்ட வகையிலே யென்றபடி. உபாஸந சாஸ்த்ரங்களிலும் ப்ரபத்தி சாஸ்த்ரங்களிலும் சொல்லப்பட்டபடியே யென்றுமாம்.
மனம் ஒன்று – நெஞ்சு ஒருமைப்பட்டு. அந்த கரணத்தை நியமித்து எம்பெருமானொருவனிடத்திலேயே தத்பரமாக்கியென்க.
மாதவனை – புருஷகார க்ருத்யம் பண்ணிக் கூட்டுமவளோடே கூடியிருக்கிறவனை யென்றபடி.
சரம ச்லோகத்தில் லஷ்மீஸம்பந்தம் வ்யக்தமாக இல்லையாகிலும் பூர்வார்த்தத்தில் மாம் என்றதிலோ உத்தரார்த்தத்தில் அஹம் என்றதிலோ அது அநுஸந்தேயமென்று ஆழ்வார்க்குத் திருவுள்ளம்.
ரஹஸ்யத்ரயத்திலே மத்யமரஹஸ்யமான தவயத்திலே வ்யக்தமாகச் சொன்னவிது மற்றையிரண்டு ரஹஸ்யங்களிலும் ஆர்த்தமாக நின்றது.
நாளும் புகையால் விளக்கால் புதுமலரால் நீரால் திசைதோறு அசுரர்கள் சென்றிறைஞ்ச நின்ற தகையான் – கால நியமமில்லாமலும், ஆராதநோபகரணங்களிலும் நியமமில்லாமலும் தங்களுக்குக் கைவந்த பூஜாபாரிகரங்களைக் கொண்டு பிரமன் முதலான தேவர்கள் வந்து பணியும்படியான பெருமையையுடையவன்;
அவருடைய சரணமே தமர்கட்கு ஓர் பற்று – தன் திருவடிகளைப் பற்றினார்க்குப் பின்னையும் புறம்புபோய் ஒருபற்றுத் தேடவேண்டாத திடமான பற்று என்றபடி.
“மாதவனை” என்ற சொல் இப்பாட்டில் செவ்வனே அந்வயிக்க முடியாதபடியுள்ளது. ஏனெனில் (இச்சொல்லில் விவஷிதனான எம்பெருமானே) மேல் “சென்றிறைஞ்ச நின்ற தகையான்’ என்றவிடத்தும் விவஷிதனாயிருக்கையாலே ஏகவாக்யத்தில் ஏகவ்யக்திவிஷயமாக விபக்திபேதம் பொருந்தாது;
ஆகவே, மாதவனையென்றவிடத்துள்ள ஐகாரத்தைச் சார்யையாகத் தள்ளி, … … “அமரர்கள் சென்றிறைஞ்ச நின்ற தகையானான மாதவன் சரணம் தமர்கட்கோர் பற்றே” என்றோ “மாதவனான தகையான் சரணம். “ என்றோ அந்வயிக்கப்ராப்தம்.
———–
**** – இத் திருவாய்மொழியைக் கற்றார்க்கு எம்பெருமான் திருவடிகள் ஸுலபமாமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.
பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–10-4-11-
பதவுரை
| பரம பரம்பரனை |
– |
பராத்பரனையும் |
| தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் |
– |
அந்தாதித் தொடையான ஆயிரத்தினுள் |
| மல் திண் தோள் |
– |
மிடுக்குப் பொருந்திய திருத்தோள்களை யுடையனாயிமிருக்கிற |
| இப் பத்தும் கற்றார்க்கு |
– |
இப்பதிகத்தைப் பயின்றவர்களுக்கு |
| மாலை |
– |
ஸர்வேச்வரனை |
| பற்று என்று பற்றி |
– |
தமக்குப் புகலாக வுறுதி யிட்டு |
| கண்ணன் கழல் இணை ஓர் பற்று |
– |
கண்ணனது உபயபாதங்கள் |
| வழுதி வளநாடன் சொல் |
– |
ஆழ்வார் அருளிச்செய்த |
| ஆகும் |
– |
ஒப்பற்ற ப்ராப்யமாகும். |
பரமபரம்பர னென்பதனால் ஸர்வேச்வரத்வஞ் சொல்லுகிறது; மல்திண்டோன்மா லென்பதனால் விரோதிகளைப் போக்குகைக் கீடான மிடுக்குடைமையும் அடியார் திறத்து வியாமோஹமுடைமையும் சொல்லுகிறது.
————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Related
This entry was posted on November 15, 2022 at 11:58 pm and is filed under திரு வாய் மொழி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply