அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –9-8-1-
பதவுரை
| அவனை |
– |
பரமபோக்யனான ஸர்வேச்வானானவனை |
| ஆகத்து |
– |
தங்கள் உள்ளத்திலே |
| சிறுத்தும் மனத்து ஒன்றிய |
– |
நிலைநிறுத்தி வைத்துக்கொள்ள வேணுமென்கிற கருத்திலே ஒருமைப்பாடுடைய |
| சிந்தையினார்க்கு |
– |
மநோரதத்தையுடைய பக்தர்களுக்கு |
| வினை ஆயின அறுக்கும் |
– |
அநுபவ விரோதிகளையெல்லாம் போக்கக் கடலதாய் |
| வெறி தண் மலர் |
– |
ஈறு மணம்மிக்குக் குளிர்ந்த புஷ்பங்களை கொண்ட |
| சோலைகள் சூழ் |
– |
சோலைகளாலே சூழப்பட்டதான |
| திருநாவாய் |
– |
திருநாவாயென்னும் திருப்பதியானது |
| கொடியேற்கு |
– |
கொடியேனான வெனக்கு |
| குறுக்கும் வகை உண்டு கொல் ஓ |
– |
கிட்டும் வகையுண்டோ? |
***– திருநாவாய்த் திருப்பதி எனக்கு ஸமீபஸ்தாகைக்கு உபாயமுண்டோவென்கிறார்
அறுக்கும் விளையாயின=வினை அறுக்கும் என்னாமல வினையாயின அறுக்கும் என்றது–விரோதியென்று பேர்பெற்றவை யடங்கலும் போக்கும் என்றபடி.
ஸ்வரூப விரோதியென்றும் உபாய விரோயென்றும் உபேய விரோதியென்றும் மூன்று விரோதிகள் திருமந்த் தார்த்த நிர்வாத்தில் தெரிவதுண்டே. இவ்வளவுயுமன்றே விரோதிகள்;
இப்போதுள்ள தேஹத்தளவிலே முடியாமல் ப்ராரப்தசேஷமாய்க் கொண்டு அப்பாலும் செல்லக்கூடிய விரோதிகளுமுண்டே; ஆக எல்லாவன விரோதிகளையுமறுக்குமென்றபடி,.
இப்படி வினைகளை அறுப்பது ஆர்க்குர் என்னில்; அவனை ஆகத்து நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு=ஹருதயத்திலே அவனை நிலைநிறுத்த வேணுமென்னும் அத்யவஸாயத்திலே ஒருமைப்பட்ட மநோகதத்தையுடையவர்களுக்கு.
விரோதிகளைப் போக்குவது மாத்திரமன்றிக்கே பரம போக்யமுமானது என்கிறார் மூன்றாமடியினால்.
விளையைப் போக்காதே வளரச்செய்தாலும் விடவொண்ணாதபடி போக்யதை மிகுந்த திவ்யதேசம் திருநாவாய்.
குறுக்கும் வகையுண்டு கொலோ=திருநாவாய்ப் பதியை ஸமிபஸ்தமாம்படி செய்யுமுபாயமுண்டோ? என்று பொருள் கொள்ளலாமாயினும், திருநாவாய்ப்பதியானது ஸபிக்கும்படியான உபாயமுண்டோ வென்று பொருள் கொள்வது பொருந்தும்.
குறுகும் வகையென்பது குறுக்கும் வகையென்று தேச பாஷைக்குச் சேரக் கிடக்கிறது. எம்பெருமானார் மலைநாட்டுத் திருப்பதி யாத்திரையாக எழுந்தருளாநிற்கையில் திருநாவாய் ஸமீபத்திலே யெழுந்தருளும்போது எதிரே வந்து கொண்டிருந்த மலையாளர்களை நோக்கி ‘திருநாவாய் எவ்வளவுதூரமுண்டு’ என்று கேட்க, அவர்கள் ‘குறுக்கும்’ என்றார்களாம்.
[தமிழ்ப் பாஷையில் குறுகுமென்பது மலையாள பாஷையில் குறுக்குமென்று கிடக்கிறது.
ஸமீபத்தில்தானுள்ளது–என்று பொருள்] எம்பெருமானார் அதுகேட்டு ‘இப்பாஷையாலே அருளிச் செய்வதே ஆழ்வார்’ என்று ஈடு பட்டாராம்.
————–
***– பெரிய பிராட்டியாரோடும் நப்பின்னைப் பிராட்டியாரோடுங் கூட அவன் எழுந்தருளியிருக்கிற திருநாவாயிலே போய்ப்புகுவது என்றைக்கோ வென்கிறார்.
கொடி ஏர் இடைக் கோகன கத்தவள் கேள்வன்
வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன்
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய்
அடியேன் அணுகப் பெரும் நாள் எவை கொலோ–9-8-2–
பதவுரை
| கொடி ஏர் இடை |
– |
கொடிபோலாகிய இடையையுடையனாய் |
| கோகனகத்தவன் |
– |
தாமரையாளான பிராட்டிக்கு |
| கேள்வன் |
– |
வல்லபனாய் |
| வடிவேல் தட கண் மட பின்னை மணாளன் |
– |
உரிய வேல் போன்ற பெரிய எண்களை யுடைய அழகிய கப்பின்னைப் பிராட்டிக்கு மணவாளனாய் |
| நெடியான் |
– |
மஹா புருஷனானவன் |
| உறை |
– |
நித்யவாஸம்பண்ணுகிற |
| சோலைகள் சூழ் திருநாவாய் |
– |
சோலைகளாலேசூழப்பட்ட திருநாவாயை |
| அடியேன் அணுக பெறும் நாள் எவை கொல் |
– |
அடியேன் கிட்டப்பெறுவது என்னைக்கோ |
கொடி போன்றழகிய இடையை யுடையளாய், தாமரைப் பூவிற் பரிமளம் உபாதானமாகப் பிறந்தவனான பிராட்டிக்கு வல்லபன்;
கூரிய வேல் போன்றழகிய கண்ணையுடையளான நப்பிள்ளைப் பிராட்டிக்கு மணவாளன்.
இவ்விரண்டு விசேஷணங்களின் கருத்து–புருஷகாரம் செய்து சேர்ப்பிக்க வல்லவர்கள் அருகேயிருக்கச் செய்தேயும் நான் இழக்கலாமோ என்பதாம்.
————-
***– திருநாவாயில் மஹா கோஷ்டியிலே சென்று சேர்ந்து அநுபவிக்கும் நாள் எதுவோ? அறிகிறிலேன் என்று அலமருகின்றார்.
எவைகோல் அணுகப் பெரும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3-
பதவுரை
| அணுக பெறுநாள் எவை கொள்ல என்று |
– |
கிட்டப்பெறும் நான் எந்நாளோ வென்று |
| எப்போதும் |
– |
எக்காலத்திலும் |
| சுவையில் மனம் இன்றி |
– |
இரட்டைப்பட்ட நெஞ்சின்றிக்கே ஏகாக்ரசித் தனாய் கொண்டு |
| கண் நீர்கள் கலுழ்வன் |
– |
கண்ணநீர் பெருவெள்ளம் நிற்பேன் |
| நவை இல் திரு நாரணன் சேர் |
– |
ஹேயப்ரத்யநீகளான திருமால் வர்த்திக்கிற |
| திருநாவாய் அவையுள் |
– |
திருநாவாய்ப்பதியில் திருவோலக்கத்திலே |
| புகல் ஆவது ஓர் நாள் அறியேன் |
– |
சென்று சேர்வதற்கீடான வொரு நானை அறிகின்றிலேன். |
நான் வந்து கிட்டப்பெறும் நாள் எதுவோ வென்று இதையே எப்போதுஞ் சொல்லிக் கண்ணீர் சோரவிருக்கின்றேன்.
துர்லபத்வம் முதலான தோஷங்களின்றிக்கே திருநாவாயிலே வந்து ஸீலப்னான ஸ்ரீமந் நாராயணன் அங்குப் பெரிய திருவோலக்கமாக இருக்க அத்திரளிலேசென்று கூடப்பெறாமலிக்க என்னாலாகுமோ?
அடியார்கள் குழாங்களை யுடன் கூடுவதென்று கொலோ என்று ஆசைப்பட்ட நான் அத்திரளிலே சென்று கூடப் பெறாதிருப்பது தருமோ? என்றாராயிற்று.
(கவையில் மனமின்றி) கவையிலேயோன மன மின்றிக்கே–இருதலைப்பட்ட நெஞ்சின்றிக்கே யென்றபடி.
ஏகாதரசித்தனாய் கொண்டு என்பது தாற்பரியம்.
இரட்டைப்பட்டிருப்பதற்குச் சுவை யென்று பெயர்; “சுவை நாவரவினனைப் பள்ளியின்மேல்” என்றார் திருமங்கையாழ்வாரும்.
கலுழ்வன்–வெள்ளமிட நிற்பேன் என்றபடி.
————–
***– ஆத்மாவுள்ளவரையில் கைங்கரியம் பண்ணும்படி விஷயீகரிக்கப்பெற்ற நான் திருநாவாயில் நம்பின்னைப் பிராட்டியோடே கூடவிருக்கிற இருப்பிலே அடிமை செய்ப்பெறும் நாள் என்றோ! அறிகிலேன் என்கிறார்.
நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும்
மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன்
நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா –9-8-4-
பதவுரை
| நீள் ஆர் மலர் சோலைகள் சூழ் திருநாவாய் |
– |
ஓங்கி நிறைந்த பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருநாவாயிலே (எழுந்தருளியிருக்கிற) |
| வாள் ஏய் தட கண் |
– |
வாள் போன்ற பெரிய கண்களையுடையளாய் |
| மட பின்னை மணாளா |
– |
நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபனானவனே! |
| நானும் |
– |
அடியேனும் |
| மீளா அடிமை பணி செய்ய புகுந்தேன் |
– |
இடையறாத நித்ய கைங்கரியத்திலே நிரதனானேன். |
| எனக்கு உள்ளன நான் அறியேன் |
– |
அறுக்கு எனக்கு நீ ஸங்கல் பித்துவைத்த நான் அறிகின்றிலேன். |
நாளேலயியே னெனக்குள்ளன=நாள் பிநிந்து துக்கப்பட வேண்டிய நாள் இன்னுமெத்தனை நாளுண்டென்று அறிகின்றிலேன் என்றும், அனுபவிக்கப் பெறும் நாள் என்னைக்கென்று அறிகின்றிலேன் என்றும் இரண்டு வகையும் பொருள் கொள்ளலாம்.
நானும் மீளாவடிமைப் பணி செய்யப் புகுந்தேன்=நித்ய ஸுரிகள் பண்ணும் யாவதாத்மபாவியான கைங்கரித்திலேயன்றோ நானும் அந்வயித்திருப்பது.
நீளார் மலர்ச்சோலைகள் சூழ் திருநாவாய்= கைங்கரியம் பண்ணுகைக்குப் புஷ்பம் முதலிய உபகரணங்களினால் குறையொன்று மின்றிக்கே யிருக்கிற திவ்ய தேச மென்றபடி.
இத்திருவாய்மொழியில் பிராட்டி ஸம்பந்தம் அடிக்கடி அநுஸந்திக்கப்படுகிறது;
அதற்குக் காரணமருளிச் செய்கிறார் நம்பிள்ளை–”தேசாந்தரம்போன ப்ரஜை ஊர் அணித்தானவாறே தாய்மாரைப் பலகால் நினைக்குமாபோலே, ப்ராப்யதேசம் அணித்தானவாறே திரளவும் தனித்தனியும் பிராட்டிமாரை யநுஸந்திக்கிறார்” என்று.
————
***– என் கண்களின் விடாய்தீரத் திருநாவாயைக் கண்டு அநுபவிக்கப்பெறுவது என்றைக்கோ வென்கிறார்.
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்
விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்
கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே–9-8-5-
பதவுரை
| மலர்மங்கைக்கும் |
– |
பெரிய பிராட்டியாருக்கும் |
| மண் மடந்தைக்கும் |
– |
பூமிப் பிராட்டிக்கும் |
| மணாளன் |
– |
மணயாளனாய் |
| உலகத்து உயிர் தேவர் கட்கு எல்லாம் கண்ணாளன் |
– |
மண்ணுலகத்ததவர்க்கும் விண்ணுலகத்தவர்க்கு மெல்லாம் நிர்வாஹகனாய் |
| வீண் ஆளன் |
– |
பரமபதத்திலுள்ளாவைரயும் அடிமை கொள்ளுபவனான ஸர்வேச்வரன் |
| விரும்பி உறையும் திருநாமாய் |
– |
ஆதாரத்தோடு வர்த்திக்கிற திரு நாவாயை |
| கண்ண ஆர கண்டு |
– |
கண்கள் வயிறு நிறையும்படி கண்டு |
| இங்கு களிக்கிறது என்று கொல் |
– |
இங்கே ஆனந்திப்பது என்றைக்கோ? |
மலர் மங்கைக்கும் மண்மடந்தைக்கும் மணாளன்–பெரிய பிராட்டியார்க்கும் பூமிப் பிராட்டியாருக்கும் வல்லபனானாவன்.
ஒருத்தி புருஷகாரத்திலே ஊன்றியிருப்பள் மற்றொருத்தி பொறுமைதானே வடிவெடுத்தவளாயிருப்பன்.
இப்படிப்பட்ட இருவரும் அருகேயிருக்க, நான் இழக்கத் தகுமோ வென்றபடி. உலகத்துயிர் தேவர்கட்கெல்லாம் கண்ணாளன–மண்ணுலகிலுள்ள மனிசர்களென்ன, விண்ணுலகிலுள்ள தேவர்களென்ன ஆகிய அனைவர்க்கும் நிர்வாஹகன்.
உபயவிபூதி நாதனானவனுக்கு நாளொருவான் புறம்புபட்டேனோவென்பது கருத்து.
விணணுளன் விரும்பிறையும் திருநாவாய்=பிராட்டிமாரும் தானும் தனக்குத் தகுதியான பரமபதத்தில் திவ்ய பர்யங்கத்திலேயிருந்து நித்ய *ரிகளை நிர்வஹிக்கிறவன் பெறாப்பேறாக ஆதரித்து வர்த்திக்கிற திவ்ய தேசமன்றோ திருநாவாய்;
இதனைக் காண்கையிலே விடாய்ப்பட்ட கண்கள் வயிறு நிறையக் கண்டு களிப்பது எந்நாளோ? என்கிறார்.
—————-
***– எனக்காகத் திருநாவாயைக் கோயிலாகக் கொண்டு உறைகின்ற கோவலர்கோவே! உன்பக்கலிலே அநந்ய ப்ரயோஜனமான அன்மையுடையேனான வென்னுடைய கண்களின் விடாய் சொல்லத் தரமன்று; என்பசி தீராவிட்டாலும் என் கண்களின் பசி தீர்ந்தால் போதுமேயென்கிறார் ;
கண்டே களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள்
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி
வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே–9-8-6-
பதவுரை
| வண்டு ஆர் சோலைகள் சூழ் மலர் திருநாவாய் |
– |
வண்டுகள் நிறைந்த மலரையுடைய சோலைகள் சூழ்ந்த திருநாவாயை |
| கொண்டு உறைகின்ற |
– |
உகங்தவிடமாகத் திருவுள்ளம்பற்றி வர்த்திக்கிற |
| எம் கோவலர் கோவே |
– |
எம் கோபாலகிருஷ்ணனே! |
| துரிசு இன்றி உனக்கே தொண்டு ஆய் ஒழிந்தேன் |
– |
க்ருத்திமமில்லாமல் உனக்கே தொண்டனாய்விட்டேன் |
| கண்கள் |
– |
எனது கண்களானவை |
| இங்கு கண்டே களிக்கின்றது என்று கொல் |
– |
இத் திருப்பதியிலே கண்டு ஆனந்திக்கப் பெறுவது என்றைக்கோ? |
உலகில் யாசிப்பவர்களே ‘என் பசி கிடக்கட்டும்; என் குழந்தை படுகிறபாடு பாருங்கள் ; அதன் பசியை முன்னம் தீர்த்தால் போதும்’ என்பர்கேள ; அது போலச் சொல்லுகிறபடி.
(துரிசின்றி உனக்கே தொண்டா யொழிந்தேன்) உள்ளே ஒரு எண்ணமும் வெளியே மற்றோரெண்ணமுமாக இருக்கு மிருப்பு துரிசு எனப்படும் ; அதாவது க்ருத்திமம் ; அஃதின்றிக்கே உனக்கே தொண்டா யொழிந்தேனென்கிறார்.
—————–
***– திருநாவாயிலே நித்யவாஸம் பண்ணியருளாநின்ற தேவரீர் அடியேனுடைய அநந்யகதித்வத்தைக் கண்டு அருள் செய்தருளவேணுமென்கிறார்.
கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய்
தேவா சுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ
ஆவா அடியான் இவன் என்று அருளாயே–9-8-7-
பதவுரை
| கே ஆகிய மா வலியை |
– |
பிரபுவாகத் தன்னை யயீமானித்திருந்த மஹாபலிடத்திளின்றும் |
| நிலம் கொண்டாய் |
– |
பூமியை இரந்து பெற்றவளே |
| தேவாசுரம் செற்றவனே |
– |
தேவாஸீர யுத்த்தில் ஒரு தலைக்கு நிர்வாஹகனாயிருந்தவனே |
| திருமாலே |
– |
திருமகள் கொழுநனே |
| நாவாய் உறைகின்ற |
– |
திருநாவாயிலே வர்த்திக்கிற |
| என் நாரணநம்பீ |
– |
எனது நாராயணமூர்த்தியே |
| ஆஆ |
– |
ஐயோ |
| இவன் அடியான் என்று அருளாய் |
– |
இவன் நமக்கு அடியவனன்றோவென்று க்ருபை பண்ணி யருள வேணும் |
(கோவாகியமாவலிமை நிலங்கொண்டாய்) ஸர்வேச்வரன் இந்ததிரனை த்ரிலோகாதிபதியாக்கி வைத்தான்; அவனைத் தள்ளி அந்தப் பதவியைத் தான் கொள்ளை கொண்டு ‘நானே அரசு’ என்றிருந்தானாயிற்று மாவலி.
அவன்றான் ஔதார்யமென்று ஒரு மஹாகுணமுடையவனாயிருந்த படியாலே” அதுவே பற்றாசாகத் தான் இரப்பாளனாய் நின்று வெகு சாதுரியமாகக் காரியத்தை முடித்தானாயிற்று எம்பெருமான் (தேவாசுரஞ் செற்றவனே) தேவாஸீரயுத்தத்திலே பரஸ்பரவதமேயாய்ச் செல்லா நிற்க, அநுகூலரான தேவர்களுக்காக அஸுரரை யழியச் செய்வதவனே! என்றபடி,
(திருமாலே!) விரோதிகளை யழித்து அடியார்களைக் காத்தருள்வதற்கு ஹேது பிராட்டியோ டுண்டான சேர்த்தியென்று தெரிவித்தவாறு.
இப்படிப்பட்ட திருக்குணங்கள் திருநாவாயிலே ப்ரத்யக்ஷிக்கலாம்படி யிருக்கின்றமையைக் காட்டுகின்றது மூன்றாமடி,.
என்னுடைய அநந்ய கதித்வத்தையே நோக்கி க்ருமை செய்தருளவேணுமென்கிறார் ஈற்றடியால்.
————–
***– கீழ்ப்பாட்டில் “ஆவாவடியானிவனென்றருளாயே” என்றவர், இப்பாட்டில், அருளினாலுமருள்க ; அருளாதொழியினுமொழிக என்கிறார்.
அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே –9-8-8-
பதவுரை
| அருளாது ஒழிவாய் |
– |
என்பால் அருள் செய்யாதிருக்கிலுமிரு |
| அடியேனை |
– |
அடியேன் பக்கலில் |
| அருள் செய்த |
– |
க்ருபைபண்ணி |
| பொருள் ஆக்கி |
– |
ஒரு உஸ்துவாக்கி |
| உன்பொன் அடி கீழ் புகவைப்பாள் |
– |
உன் திருவடிகளின் கிழே வைத்துக் கொண்டாலும் கொள். |
| தென் திருநாவாய் என் தேவே |
– |
அழகிய திருநாவாயில் வர்த்திக்கிற எம்பெருமானே |
| மருளே இன்றி |
– |
ஒரு காலும் அஜ்ஞான கந்தமில்லாதபடி |
| உன்னை என் நெஞ்சத்து இருத்தும் தெருளேதரு |
– |
உன்னை என்னுடைய நெஞ்சிலேயிருத்தியநுபவிக்கும்படியான தெளிந்த அறிவைத் தந்தருள வேணும் |
இப்பாட்டின் ஈற்றடியை அந்வயிப்பதில் யோஜநாபேதமுண்டு; தெருளேதரு என்பதை திருநாவாய்த தேவனுக்கு விசேஷணமாக்கி யுரைப்பர் (ஆறாயிரப்படியில்) பிள்ளான். தருஸ்ரீதந்தருவேணும் என்று வினை முற்றாகக் கொண்டு உரைத்தனர்
மற்றையுரே யாசிரியர்கள். தரு என்பதற்கு, தா என்பதன் பொருள்க கொள்ளுமிடத்து, தருகவென்பதன் நடைக்குறையாகக் கொள்ள வடுக்கும்.
ஆறாயிரப்படியருளிச்செயல்–”அஜ்ஞாநகந்தமில்லாத தொரு படி உன்னுடைய ஸ்வரூபரபகுணபிபூதி விஷய திவ்யஜ்ஞானத்தை” உன் க்ருமையாய எனக்குத் தந்தருளி நீ இன்னமும் உன் க்ருயையேல ‘நம்மடியாளிவன்’ என்று விஷயீகரித்தருளி அடியேனை உன் பொன்னடிக்கீழ்ப் புகவைத்தருளுவாய், வைத்தருளாதொழிவாய்; திருவுள்ளமானபடி செய்தருள் என்று கொண்டு எம்பெருமானை இன்னதாகிறார் ;” என்று
“அருளவுமாம், தவிரவுமாம்; அஜ்ஞாநகந்த மில்லாபடி உன்னை என்னெஞ்சிலே யிருத்தும்படி தெளிவைத் தரவேணுமென்கிறார்” என்று மற்றுள்ள வாசிரியர்கள் பணிக்கும்படி.
தெருளைப் பெற்ற பீரான ஆழ்வார் அதைத் தந்தருள வேணுமென்று பிரார்த்திப்பது– பெற்றவனுக்கு விச்சேதமில்லாதபடி அபிவிருத்தியைச் செய்தருளவேணுமென்று பிரார்த்திக்கின்றபடி.
—————–
***– தாம் இப்படிச் சொல்லச் செய்தேயும் ஒரு விசேஷ கடாக்ஷம் செய்தருளாமையாலே ‘நான் இவ்வாசையோடே முடியா நின்றென். என்னுடைய அபிமதத்தைப் பெற்றுக்களிக்கப் போகிற பாக்யவான்கள் யாரோ?’ என்கிறார்.
தேவர் முனிவருக்கு என்றும் காண்டற்கு அரியன்
மூவர் முதல்வன் ஒரு மூ உலகு ஆளி
தேவன் விரும்பி உறையும் திரு நாவாய்
யாவர் அணுகப் பெறுவார் இனி அந்தோ –9-8-9-
பதவுரை
| தேவர் முனிவர்க்கு |
– |
தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் |
| என்றும் காண்டற்கு அரியன் |
– |
(ஸ்வப்ரயத்நத்தினால்) எப்போதும் காணமுடியாதவனாய் |
| மூவர் முதல்வன் |
– |
பிரமன் சிவனிந்திரக்கும் ஸத்தோஹேது பூதனாய் |
| ஒரு மூவுலகு ஆளி |
– |
மூவுலகங்களையும் நீர்யஹிக்கு மாவனான |
| தேவன் |
– |
எம்பெருமான் |
| விரும்பி உறையும் |
– |
ஆதரத்தோடு வர்த்திக்குமிடமான |
| திருநாவாய் |
– |
திருநாவாய்ப்பதியை |
| இனி |
– |
நான் முடிந்தேனானா பின்பு |
| துர்தோ |
– |
ஐயோ! |
(தேவர் முனிவர்க்கு என்றும் காண்டற்கு அரியன்) பிரமன் முதலிய தேவர்களுக்கும், ஸநக ஸநந்தநாதிகளான யோகிகளுக்கும் கூட தாமாகக் காண நினைக்கில் காண வரியனாயிருக்குமவன்.
மூவர் முதல்வன்–அரி அயன் அரன் என்று சொல்லப்படுகிற மூவர்க்குள்ளே முதன்மை பெற்றிருப்பவன் என்றும், பிரமன் சிவனிந்திரன் என்றும் மூவர்க்கும் நிர்வாஹகன் என்று முரைப்பர்.
ஒரு மூவுலகாளி–மூவுலகங்களையும் தன் ஸங்கல்பத்தாலே நிர்வஹிக்குமவன்.
ஆக இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தேவன் ஆச்ரித ரக்ஷணத்திற்குப் பாங்கான தேசமிதுவென்று விரும்பிறையுமிடமான திருநாவாய்ப்தியை நானணுகபெறாதே முடியாநின்றேன். இனிப் பெறுவார் ஆரோ?
திருநாவாயில் சென்று ஸேவிக்க வேணுமென்று ஆழ்வார்க்கு நினைவாகில் இதில் அருமையொன்றுமில்லையே; புறப்பட்டுச் சென்று ஸேவிக்கத் தட்டென்? என்று சிலர் சங்கிக்க்கூடும்.
திருநாவாயை அணுகப் பெறவேணுமென்பதே உத்தேச்யமன்று; அவ்விடத்திதுறையும் பெருமானுக்கு அஸாதாரணமான திருநாடுதான் இங்கு உத்தேசம்.
————
***– உன்னைக் காணப் பெறாமையாலே நெஞ்சழிந்து கூப்பிடா நின்றேன் காணென்கிறார்.
அந்தோ அணுகப் பெரு நாள் என்று எப்போதும்
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்
கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–9-8-10-
பதவுரை
| நொந்து ஆர் |
– |
கொத்தாக நிறைந்துள்ள |
| மலர் சோலைகள் சூழ் |
– |
மலர்களையுடைய சோலைகளாலே சூழப்பட்ட |
| திருநாவாய் |
– |
திருநாவாய்ப்பதியிலே |
| வந்தே உறைகின்ற |
– |
(பரமபதம் முதலான விடங்களையும் விட்) வந்து நித்யவாஸம் பண்ணுகிற |
| எம் மா மணி வண்ணா |
– |
எமக்குப் பரமபோக்யனான நீல மணிவண்ணனே! |
| அந்தோ அணுக பெறும் நாள்என்று |
– |
ஐயோ! உன்னைக்கிட்டிவாழப் பெறுவதுண்டோ வென்று |
| எப்போதும் |
– |
ஸர்வகாலமும் |
| சிந்தை கலங்கி |
– |
நெஞ்ச தளும்பி |
| திருமால் என்று அழைப்பன் |
– |
திருமாலே! யென்று கூப்பிடா நின்றேன். |
தொடங்கும்போதே அந்தோவென்கிறார்– சொல்லத் தொடங்கினது தலைக்கட்ட மாட்டாத பலஹானியாலே. “அணுகப் பெறுநாள் எவைகொல் ” என்ன வேண்டியிருக்க அவ்வளவும் சொல்லமாட்டிற்றிலான்றோ.
(எப்போதும்) ஒருகால் சொல்லத் தொடங்கி இளைத்தால் பின்னைத் தவிரலாமே, ஆசை வாளாவிருக்க வொட்டுகிற தில்லை. எப்போதும் இதுவே யாத்திரையானபடி.
(சிந்தை கலங்கித் திருமாவென்றழைப்பன்)–அத்தலைக்குத் திருவுள்ள மில்லையாகில் நாம் அழைப்பதனால் என்னாகும்? என்கிற தெளிவின்றிக்கே சிந்தை கலங்கியிருக்கப் பெற்றவனாகையாலே திருமாலே யென்று கூப்பிடுகின்றேன்.
திருநாட்டிலே வந்து காணக் கடலவதான வடிவை இங்கே காட்டுவதாகக் கொண்டு திருநாவாயிலே வந்து நித்யவாஸம் பண்ணுமவனெ!
————–
***– இத்திருவாய்மொழி வல்லார் ஐஹிக ஆமுஷ்மிக ஸகலபோகங்களையும் புஜிக்கப் பெறுவர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.
வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே–9-8-11-
பதவுரை
| வண்ணம் மணி மாடம் |
– |
அழகிய மணி மாடங்களை யுடைத்தான |
| நல் நாவாய் உள்ளானை |
– |
விலக்ஷணமான திருநாவாயிவெழுந் தருளியிருக்கும் பெருமானைக் குறித்து |
| திண் அம்மதின் தென் குருகூர் சடகோபன் |
– |
திடமாயழகிய மதிள்களையுடைத்தான திருநகரிக்குத் தலைவரான ஆழ்வாருடையதாய் |
| பண் ஆர் தமிழ் |
– |
பண்ணிறைந்த தமிழான ஆயிரத்தில் ஆயிரத்து |
| இப்பத்தும் வல்லார் |
– |
இப்பத்தையும் ஒதவல்லவர்கள் |
| மண் ஆண்டு |
– |
இவ்விபூதியை நெடுங்காலம் ஆண்டு |
| மல்லிகை மணம் கமழ்வர் |
– |
“ஸர்வகந்த:” என்னப்படுகிற எம்பெரு மானோடே ஸாம்யாபத்தி பெறுவர்கள் |
மண்ணாண்டு என்பதனால் ஐஹிகபோகம் புஜிக்கப் பெறுகை சொல்விற்று. மல்லிகை மணங்கமழ்வர் என்பதனால் ஆமுஷ்மிகபோகம் புஜிக்கப்பெறுகை எங்ஙனே சொல்லிற்றாகிறதென்னில்;
மல்லிகை மணமென்று ஒரு பரிமளத்தை மாத்திரம் சொன்னபடியன்று; இது உபலக்ஷணமாய் ஸகல பரிமளங்களையும் சொன்னபடியாகி, வேதாந்தங்களிலே ஸர்வ கந்த* என்று ஸகல பரிமளங்களும் வடிவெடுத்தவனாகக்ச சொல்லப்படுகிற எம்பெருமானாகப் பெறுவர்–எம்பெருமானோடு ஸாம்பாந்நராவர் என்றபடியாம்
*தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே யொக்க அருள் செய்வர் * என்ற திருமங்கையாழ்வார் பாசுரம் இங்கே நினைக்கத் தக்கது.
“மல்லிகை மணங்கமழ்வர்” என்பதற்குப் பன்னீராயிரவுரைகாரர் “மல்லிகைபோலே பசுத்தமான யகஸ்ஸெளரப்யவிகாஸத்தை யுடையவராவர்” என்றுரைத்தார்.
அவ்வுரை ஆறாயிரப்படி முதலிய வியாக்கியானங்களுக்குப் பொருந்தியதன்று.
————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Related
This entry was posted on November 15, 2022 at 11:58 am and is filed under திரு வாய் மொழி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply