***– மாலைப் பொழுதில் தென்றல் முதலான பதார்த்தங்கள் தனித்தனியே தனக்கு நலிவை விளைக்கும் படியைச் சொல்லிக் கதறுகிறாள் ஒரு ஆய்ச்சி. (அவளுடைய நிலைமைய யெய்திப் பேசுகிறார் ஆழ்வார்).
மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ
வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ
செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்
ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –9-9-1-
பதவுரை
| மல்லிகை கமழ் தென்றல் |
– |
மல்லிகையின் பரிமளத்தோடு கூடின தென்றலானது |
| ஈரும் ஆல் ஓ |
– |
(வாளாவறுக்குமாபோலே) சின்றது ஐயோ |
| வண் குறிஞ்சி இசை |
– |
செவிக்கினிய குறிஞ்சிப் பண்ணிகையானது |
| செல்கதிர் மாலையும் |
– |
அஸ்தமிக்குமளவிலே யுள்ள ஸீர்யனையுடைய மாலைப் பொழுதும் |
| மயக்கும் ஆல் ஓ |
– |
மோஹிக்கச் செய்யா நின்றது ஐயோ |
| செக்கர் கல் மேகங்கள் |
– |
செந்நிறங்கொண்டு அழகிய மேகங்களானவை |
| சிதைக்கும் ஆல் ஓ |
– |
சரீரத்தைச் செதுக்கா நின்றது ஐயோ |
| அல்லி அம் தாமரை கண்ணன் |
– |
விகஸித்தழகிய தாமரை போன்ற திருக்கண்களை யுடையனாய் |
| எம்மான் |
– |
ஸர்வஸ்வாமியாய் |
| ஆயர்கள் ஏறு |
– |
இடையர்களுள் செருக்கை யுடையனாய் |
| அரி ஏறு |
– |
ஹிம்ஹச்ரேஷ்டம் போன்றவனாய் |
| எம் மாயோன் |
– |
எம்மோடு நீர்மைக் குணத்தைக் காட்டி கலந்து பரிமாறினவனான கண்ணபிரான் |
| புல்லிய |
– |
முன்பு அணைத்த |
| முலைகளும் தோளும் கொண்டு |
– |
முலைகளையும் தோள்களையுங் கொண்டு |
| தமியம் புகல் இடம் அறிகிலம் ஆல் ஓ |
– |
பிரிந்து வருந்திக்கிடக்கிற நாம் ஒதுங்கி உய்யுமிடம் அறிகின்றிலோம் ஐயோ |
மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ–தன்கொடு துணையின்றிக்கே யிருந்தாலும் தானே ஏகாகியாய் நின்று நவியக்கடதான தென்றல் மல்லிகை மலரின் பரிமளத்தையும் துணை கொண்டால் நலியும் விதம் சொல்லாகுமோ? கூடியிருக்குங் காலத்தில் துயத்தை விளைக்கு மென்னுமிடம் ப்ரஸித்தம்.
ஸ்ரீராமாயணத்தில் சிஷ்கிந்தா காண்டம் முதல் ஸர்க்கத்தில் பல ச்லோகங்கள் இத்திருவாய் மொழியிற் பாசுரங்களோடொக்கும். சில ச்லோகங்கள் காணீர்;– *யாரி ஸ்ம ரமணீயாநி தயா ஸஹ பவந்தி மே தாந்யே வாரமணீயாநி ஜீவதோ மே தயா விநா * ஸதா ஸுகமஹம் மந்யே யம் புரா ஸஹ ஸீ தயர், மாருதஸ் ஸ விநா ஸீதாம் சோகஸஞ்ஜநகோ மம
வண் குறிஞ்சியிசை தவரும்–குறிஞ்சி, மருள், காமரம், கந்தாரம் என்று பண்களுக்குப் பெயர்; தோடி, ஸாவேரி, பைரவி, சங்கராபரணம் என்று ஸங்கீதப் புலவர்கள் ராகங்களுக்குப் பெயர் வழங்குமாபோலே வண்டு குயில் முதலானவற்றின் பண்கள் குறிஞ்சி மருள் காமரம் கந்தாரம் முதலான சொற்களால் வழங்கப் படுவதைத் திவ்வியப் பிரபந்தங்களிற் காண்கிறோம்.
மல்லிகை கமழ் தென்றல் ஈர்ந்து பொகட்ட புண்ணின் மேலே வண்குறிஞ்சியிசை துளைத்துப் பொகடா நின்ற தென்கை. தென்றல் மேலெழு நவியா நின்றது; இசை செவிவழியே உள்ளே புகுந்து நலியா நின்றது.
செல்கதிர் மாலையும் மயக்கும்=பகற்போதாயிருந்தால் கண்ட வஸ்துக்களையும் பார்த்துக் கொண்டும் கண்டாரோடும் பேசிக் கொண்டும் ஒருவாறு போதைப்போக்கலாம்; அதற்கு அவகாசமில்லாதபடி ஸுரியன் மறையும்படியான மாலைப் பொழுது வந்து மயக்கா நின்றது.
செக்கர் நன் மேகங்கள் சிதைக்குமாலோ=ஸந்த்யாராகத்தையும் சாமமான நிறத்தையு முடைய மேகங்கள் அவனுடைய அவயவ சோபைக்கும் வடிவுக்கும் ஸ்மாரகங்களாய்க் கொண்டு கொலைபுரியா நின்றன.
இப்படிப்பட்ட நிலைமையில் பண்டு அவனோடு ஸம்ச்லேஷித்த அவயவங்களைக் கொண்டு எங்ஙனே யாறியிருக்கும்படி?
————-
***– பல படிகளாலும் ரக்ஷிக்குமெம்பெருமான் வருகின்றிலன்; பாதக பதார்த்தங்கள் தனித்னியே யன்றியே திரள்திரளாகவும் தோன்றி நலிகின்றன; தப்பிப் பிழைக்கும் வழி தெரிய வில்லையே யென்கிறாள்.
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ
புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ
பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்
இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-
பதவுரை
| தமியம் புகலிடம் அறிகிலம் ஆல் ஓ |
– |
தனிப்பட்ட நாம் ஒதுங்கியுய்யுமிடம் அறிகின்றிலோம் ஐயோ |
| புலம்புறு மணி |
– |
(சேக்களின் கழுத்தில்) ஒலிக்கின்ற மணியும் |
| தென்றல் |
– |
தென்றற் காற்றும் |
| ஆம்பல் |
– |
இலைக்குழலும் |
| ஆல் ஓ |
– |
ஈர்கின்றவிதம் சொல்லத் தெரியவில்லையே |
| பகல் அடு மாலை |
– |
பசுரபோதை முடித்து வந்து தோற்றுகின்ற மாலைப்போதும் |
| வண் சாந்தம் |
– |
அழகிய சந்தனமும் |
| பஞ்சமம் |
– |
பஞ்சமராசமும் |
| முல்லை |
– |
முல்லை மாலையும் |
| தண் வாடை |
– |
குளிர்ந்த வாடைக்காற்றும் |
| ஆல் ஓ |
– |
நலிகின்றவிதம் சொல்லத் தெரியவில்லையே |
| அகல் இடம் |
– |
பரந்த பூமண்டலத்தை |
| படைத்து |
– |
உண்டாக்கியும் |
| இடந்து உண்டு உமிழிந்து அளந்து |
– |
(ஸமய விசேஷங்களில்) இடத்தல் உண்ணுதல் உமிழ்தல் அளத்தல் ஆகிய காரியங்களைச் செய்தும் |
| எங்கும் அளிக்கின்ற |
– |
எல்லாப் படிகளாலும் சக்ஷணத்தைச் செய்து போருகின்றவனாய் |
| இகல் இடத்து அசுரர்கள் கூற்றம் |
– |
யுத்த பூமியில் அசுரர்களுக்கு மிருத்யுவாய் |
| மாயோன் ஆயன் |
– |
ஆச்சர்யபூதனான கோபாலகிருஷ்ணன் |
| வாரான் |
– |
(இத்துன்பங்களைத் தொலைக்க) வருகின்றவன் |
| இனி |
– |
இப்படியான பின்பு |
| இருந்து |
– |
ஸத்தையோடேயிருந்து |
| என் உயிர் காக்கும் ஆறு என் |
– |
என்னுயிரை ரக்ஷித்துக் கொள்ளும் விதம் என்னோ? |
“பகலிடமறிகிலம் தமியமாலோ” என்கிறது–கீழ்ப்பாட்டிற் சொன்ன கஷ்டங்களுக்காகவுமாம்: இப்பாட்டிற் சொல்லப்போகிற கஷ்டங்களுக்காகவுமாம். புலம்புறுமணி=நாகுகளைத் தொடருகின்ற கேக்களின் கழுத்தில் கட்டின மணியினோசை விரஹிகளுக்கு உத்தீபகமென்க.
ஆம்பல் என்று ஊதுகுழலுக்குப்பெயர்; அதன் ஓசையைச் சொன்னபடி யிங்கு. பகலடுமாலை–ஆச்வாஸகரமான பகற்போதை முடித்துக் கொண்டு வந்து தோற்றின மாலைப்போது.
பஞ்சமம்–* பிக: கூஜதி பஞ்சமம்” என்னும்படியான பண். முல்லை யென்றி யாழையுஞ் சொல்லும், முல்லைப் பூவையுஞ் சொல்லும் ; விரஹிகளுக்கு இரண்டும் உத்தீபகமே.
இவை இன்னது செய்கின்றன வென்று சொல்லாமல் விட்டது, ‘புலி புலி’ என்னுமாபோலே ; இவற்றின் பேரைச் சொன்னது தானே இவை செய்யுங் கொடுமையைச் சொன்னபடியாம்.
இவையெல்லாம் முன்பு அனுகூலங்களாயிருந்தவையே; இப்போது பிரதிகூலமாவதற்குக் காரணஞ் சொல்லுவன பின்னடிகள்.
படைத்தல் இடத்தல் உண்டுமிழ்தல் அளத்தல் முதலிய காரியங்களைச் செய்து பலபடியாலும் ரக்ஷிக்கையே தொழிலான ஸர்வேச்வரன் வருகின்றிலன்;
இனி ப்ராணதாரணம்பண்ணும் வகையறியேன் என்கிறளாயிற்று.
—————
***– தென்றல் வாடை முதலான வெளிப்பட்ட பொருள்கள் பாதகமாகை மாத்திர மன்றியே அவனுடைய திவ்யாவயங்களும் உள்ளே தோன்றி நலியாநின்றனவே யென்கிறாள்.
இனி இருந்து என் உயிர் காக்குமாறு என்
இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க
துனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து
துறந்து எம்மை விட்டு அகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம்மாயன் வாரான்
தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பணி இரும் குழல்களும் நான்கு தோளும்
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ–9-9-3
பதவுரை
| இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என் |
– |
இனி என்னுயிரைக் காத்துக் கொள்ளும்வரை யில்லை |
| இணை முலை சமூக |
– |
முலைகள் குழையும்படியாகவும் |
| நுண் இடை அடங்க |
– |
நுட்பமாக இடை தளரும்படியாகவும் |
| துளி இரு கலவி செய்து |
– |
துக்கரமான ஸம்ச்லேஷத்தைப் பண்ணி |
| ஆகம் தோய்ந்து |
– |
என் வடிவிலே கலந்து புஜித்து |
| எம்மை துறந்து இட்டு அகல்கள்வன் |
– |
எம்மைக் கைவிட்டுப் பொகட்டுப் பிரிந்துபோன கள்வனாய் |
| தனி இளசிங்கம் |
– |
ஒப்பற்ற சிங்கக்குட்டியாய் |
| எம்மாயன் கண்ணன் |
– |
விலஷணமான ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையனான கண்ணபிரான் |
| வாரான் |
– |
வந்து சேர்கின்றிலன் |
| தாமரை கண்ணும் |
– |
(அப்பெருமானது) தாமரை போன்ற திருக்கண்களும் |
| செம் வாயும் |
– |
சிவந்த திருப்பவளமும் |
| நீலம் பனி இரு குழல்களும் |
– |
கறுத்துக் குளிர்ந்து பரந்த திருக்குழல்களும் |
| நான்கு தோளும் |
– |
நான்கு திருத்தோள்களும் |
| பாவியேன் மனத்தே நின்று நரும் ஆல் ஓ |
– |
பாலியேனுடைய மனத்திலே ஒருபடிப்பட நின்று ஈலியா நின்றன ஐயோ |
இனி யிருந்து என்னுயிர் காக்குமாறென்?=அவனுடைய வடிவழகுதானே உள்ளே நின்று நவியாநின்றால் இனி உயிரைக் காக்க விரகுண்டோ? இப்போது வராமல் உபேக்ஷிக்குமவன் முன்பு அப்படியெல்லாம் ஸம்ச்லேஷிக்க வேணுமோ? எப்படி ஸம்ச்லேஷித்தான்ன, அது சொல்லுகிறது இணைமுலைநமுக வென்று தொடங்கி,
முலைகள் இரண்டும் குழையவும் நுண்ணிடை தளரவும் பஹுமுகமான ஸங்கத்தைப் பண்ணி என் வடிவிலே அவகாஹித்துநுபவித்து, ஸம்ச்லேஷம் விச்லேஷாந்தமாயல்லதிராமையாலே உடனே பிரிந்து சென்ற கள்வன் மீண்டுவருகின்றலன்.
அன்னவனை நான் மறந்து பிழைக்கலாமே அதற்கு மிடமில்லாதபடி அவனது தாமரைத் தடங்கண்களும் செங்கனிவாயும் மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழுமழகும் தோளழுதும் என்னெஞ்சை விட்டகலாது நலிகின்றனவே! என்றாளாயிற்று.
———————
***– “பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ !” என்று கீழ்ச் சொன்னது தன்னையே அநுபாஷிக்கிறபடி ஈரும் என்பதற்கு எழுவாய் எது வென்னில், கீழ்ச்சொன்ன வடிவழகேயாம். மேலுள்ள வாடை என்பதை எழுவாயாக்கி யுரைப்பர் பன்னீராயிரவுரைகாரர்.
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ
வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ
மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த
எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ
யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4-
பதவுரை
| பாவியேன் மனத்தே நின்று ஊரும் ஆல் ஓ |
– |
பாவியேனுடைய நெஞ்சிலேயே நின்று நலியா நின்றதந்தோ |
| தண் வாடை வாடை |
– |
தண்வாடையென்றே பேர் பெற்றிருந்த வாடைக்காற்றானது |
| வெம் வாடை ஆல் ஓ |
– |
நெருப்பை யுமிழும் வாடையாயிரா நின்ற தந்தோ |
| மேவு தண் மதியம் |
– |
விரும்பிப் பார்க்கப்படுகிற குளிர்ந்த சந்திரனும் |
| வெம் மதியம் ஆல் ஓ |
– |
உஷ்ணகிரணனான சந்திரனானானந்தோ |
| மெல் மலர் பள்ளி |
– |
ம்ருதுவான புஷ்ப சயனமும் |
| வெம் பள்ளி ஆல் ஓ |
– |
நெருப்புப்படுக்கை யாயிற்றந்தோ |
| தூவி அம் புன் உடை |
– |
சிறகுடைய பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்ட |
| தெய்வம் வண்டு |
– |
பரம புருஷனாகிற வண்டு |
| துதைந்த |
– |
அநுபவித்து ஸாரம் கவரப்பெற்ற |
| எம் பெண்மை இது |
– |
எனது பெண்மையானவிது |
| ஆம் பூ ஆல் ஓ |
– |
அழகியப்போலே பரிதாப்பத்தை ஸஹிக்க மாட்டாத தாயிரநின்றதந்தோ |
| வகைகள் |
– |
இவ்வகைகளெல்லாம் |
| அவியின் பரம் அல்ல அந்தோ |
– |
இவ்வாத்மாவுக்குப் பொறுக்கலாவனவல்ல |
வாடை தண்வாடை வெவ்வாடையாலோ=தண்வாடை வெவ்வாடையாலோ என்றால் போதுமே; ‘வாடை தண்வாடை’ என்னவேணுமோ வென்னில் ; மகள் வாடை!; என்று வெறுத்துச் சொன்னாள்; தாய்மார் ‘வெறுப்பானேன்? இது தண்வாடையன்றோ’ என்றார்கள் ; ஐயோ! வெவ்வாடையைத் தண்வாடை யென்பதே! என்கிறாள் மகள்.
மேவுதண்மதியம் வெம்மதியமாலோ=தாபதப்தர்கள் சந்திரனைத் தேடா நிற்பர்கள்; அவன்தானே எனக்கு நெருப்பைச் சொரியா நின்றான் *சந்திரச் சண்டகராயதே* என்பர் வடநூலாரும்.
மென்மலர்ப்பள்ளி வெம்பள்ளியாலோ–தாபம் பொறுக்க மாட்டாமையாலே பூம்படுக்கையிலே படுத்தால் அது நெருப்புப் பள்ளியாய்ச் சுடாநின்றது. இருவராய்ப் படுக்க வேண்டிய படுக்கை ஒருவருக்கு நெருப்பாகச் சொல்லவேணுமோ?
நாண் மடமச்சம் முதலிய குணங்களோடு கூடியிருக்க வேண்டிய பெண்கள் இப்படியும் பேசத்தகுமோ? என்ன; பெண்மை குடிவாங்கிப் போறிறென்கின்றாள் மூன்றாமடியில்.
வண்டானது பூவினுள்ளே புகுந்து படிந்து அங்குள்ள ஸாரத்தைக் கவர்ந்து போயிற்றே யென்கிறாள்.
எம்பெருமானிடத்தே யீடுபட்டவர்களும் பெண்மையைக் காக்க முடியுமோ வென்று கருத்து.
பறவை யேறுபரம்புருடன் வந்து கைக் கொண்டு என் பெண்மையை யழித்துப் போனானென்கை.
ஆவியின் பரமல்ல வகைகளாலோ= அவனுடைய ஸம்ச்லேஷ விச்லேஷப்ரகாரங்கள்,
ஆவியின் பரமல்ல வகைகளாலோ=அவனுடைய ஸம்ச்லேஷ சிலேஷ ப்ரகாரங்கள், பாதக பதார்தங்களின் பாரிப்பு ஆகிய எல்லாம் இங்கு வகைகள் என்று சொல்லாற் சொல்லப்படுகின்றன.
இனை என் ஆத்மா பொறுக்கக் கூடிய அளவிலே யில்லை யென்கை.
யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ–உசாத்துணையான நெஞ்சையு மிழக்கப்பெற்றேனென்கை.
————-
***– அடியார்க்கெளியனென்று பேர் பெற்றவனுடைய இரக்கம் பெறுகை அரிதான பின்பு நம்முயிரைக் காக்கும் விரகுண்டோ வென்கிறாள்.
யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ
ஆ புகு மாலையும் ஆகின்றாலோ
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ
அவுனுடைத் தீங்குழல் ஈருமாலோ
யாமுடைத் துணை என்னும் தோழி மாரும்
எம்மின் முன்னவனுக்குமாய் வராலோ
யாமுடை யார் உயிர் காக்குமாறு என்
அவனுடை யருள் பெறும் போதரிதே–9-9-5-
பதவுரை
| யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆல் ஓ |
– |
எம்முடைய நெஞ்சும் உசாத் துணைகாகின்றதில்லையந்தோ |
| ஆ புகும் மாலையும் ஆகின்று ஆல் ஓ |
– |
பசுக்கள் வந்து புகும் மாலைப் பொழுது மாகின்றதந்தோ |
| யாமுடை ஆயன்தல் மனம் கல் ஆல் ஓ |
– |
எமது கோபாலக்ருஷ்ணனுடைய நெஞ்சு கல்லாய் விட்டதந்தோ |
| அவனுடை |
– |
அப்பெருமானுடைய |
| தீர் குழல் ஈரும் ஆல் ஓ |
– |
இனிதான வேணுகானமும் நலியா நின்றதந்தோ |
| யாமுடை துணை என்னும் தோழிமாரும் |
– |
எமக்குத் துணைவரென்று பேர் பெற்றிருக்கின்ற தோழியரும் |
| எம்மில் முன் |
– |
எனக்கு முன்னே |
| அவனுக்கு மாய் லர் ஆல் ஓ |
– |
அவள் பொருட்டு நோவுபடா நின்றார்களந்தோ |
| அவனுடை அருள் பெறும் போது அரிது |
– |
அவனது அருளைப் பெறுவது அரிதாயிரா நின்றது |
| யாமுடை ஆர் உயிர் எனக்கும் ஆறு என் |
– |
எனது அருமையான வுயிரைக் காக்கும் விதம் என்னோ |
ஆபுகுமாலையுமாகின்றாலோ= பசுக்கள் வந்து புகும் மாலைப் பொழுது வந்துவிட்டதே! இம்மாலைப் பொழுது சிறிது தாமதித்து வந்தாலென்ன? ஐயோ ! இப்போதே அணித்தாயிற்றே ! என்று நோகிறாள்.
மாலைப் பொழுது வந்தால் கண்ணபிரானும் வந்திடுவனென்னுற ஆறியிருக்கலாகாநோவென்ன யாமுடை ஆயன்தன்மனம் கல்லாலோ என்கிறாள். அவனுடைய நெஞ்ச கல்லாயிற்றே! அவனோ வருவானென்கை
“சேவிக்க வாழ்விக்கு மெங்கோன ரங்கன் திருக்கோயில் சூழ், நாவிற் கலந்தாசை தந்தேசினார் நெஞ்சு கல்நெஞ்சமோ?” (திருவாங்கக் கலம்பகம்) என்ற பிள்ளைப் பெருமாளையங்கார் பாசுரம் இங்கு நினைக்கத்தகும்.
அவனுடைய நெஞ்சு கல்லென்று தோன்றினால் கைவாங்கி நிற்க வேண்டாலோ வென்ன, அவனுடைய இனிய குழலோசை கைவாங்க வொட்டுகிறதில்லை யென்கிறாள் அவனுடைத் தீங்குழலீருமாலோ என்று.
இங்கே ஈடு “நான் பகலெல்லாம் பிரிந்தேன், வரவு தாழ்த்தேன், ஆற்றேன், பரதந்த்ரனாயக் கெட்டேன் என்கிற புடைகளிலே சில பாசுரங்களை வைத்திறே குழலுதுவது; அது ‘கல்லென்று கைவாங்காதே கிடாய், நீர்கிடாய்’ என்னா நின்றது. இப்பாசுரங்களாலே அவனுடைய இனிய குழலோசையானது ஈராநின்றது”
நெஞ்சும் துணையன்றிக்கே அவனும் உதவாதபோது துணையான தோழிமாராகிலும் உதவவேண்டுமே;
அந்தோ! அவர்களும் என் வ்யஸனத்தைக் கண்டு எனக்கு முன்னே நோவுபடாநின்றார்களென்கிறது மூன்றமடி.
இத்தனிமையில் ஆத்மா தரிக்கும் விரகு தெரியவில்லையே ; அவனுடைய க்ருமையைப் பெறுகை அரிதாயிருக்கின்றதே !
————–
***– பிராட்டியோடும், அஹங்காரிகளான பிரமன் சிவன் முதலானாரோடும் வாசியற உடம்பு கொடுக்குமவனுடைய சீலகுணம் என்னுயிரை ஈராநின்றதே யென்று குணவிசேஷத்திலீடு பட்டுச் சொல்லுகிறாள்.
அவனுடை யருள் பெறும் போதரிதால்
அவ்வருள் அல்லன வருளும் அல்ல
அவன் அருள் பெருமள வாவி நில்லாது
அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை
சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6-
பதவுரை
| அவனுடைய அருள் பெறும் |
– |
அவனோடு ஸம்ச்லேஷிப்பதாகிற அருளைப் பெறுவது அரிதாயிருக்கின்றது. |
| அவ அருள் அல் லன அருளும் அல்ல |
– |
அவனுடைய அருள் அருளே யல்லது மற்றவை அருளல்ல |
| அவன் அருள் பெறும் அளவு |
– |
அவனது அருளைப்பெறும் வரையில் |
| ஆலி நில்லாது |
– |
என் பிராணன் தரித்திருக்கமாட்டாது |
| அடு பகல் மாலையும் |
– |
பகலை முடிக்கும் மாலைப்பொழுதும் வந்து தோன்றிற்று |
| நெஞ்சும் காணேன் |
– |
(தவரிமைக்கு உதவும்தான்) நெஞ்சையும் கான்கின்றிலேன் |
| சிவனொடு பிரமன் வரை திருமடந்தை சேர் திரு ஆகம் |
– |
சிவனும் பிரமனும் பிராட்டியும் ஒருங்கே சேர்ந்திருக்கப் பெற்ற திருமேனியானது. |
| எம் ஆவி ஈரும் |
– |
என்னாத்மாலை நலிகின்றது |
| இனி புகும் இடம் எவம் |
– |
இனி எனக்கொதுங்குமிடம் எதுவோ! |
| எவம் செய்கோனோ |
– |
யாது செய்வேன் |
| அன்னை மிர்கான் |
– |
தாய்மார்களே |
| ஆருக்கு என் சொல்லுகேன் |
– |
ஆருக்கு என்ன பாசுரமிட்டுச் சொல்லுவேன் |
அவனுடையருள பெறும் போது அரிதால்–என்னருளைக் கொள்வாருய்டோ? என்று தேடியிருந்து ‘என்னருளைக் கொள்வாரில்லையே’ என்று வருந்திக் கிடந்த அவனுடைய அருள் எனக்கு அரிதாயிற்றே யென்கிறாள்.
அவ்வருள் அரிதாகில், அதுவே வேணுமென்று என்ன நிர்ப்பந்தம்? வேறோரருளை நோக்கலாகாதோவென்ன, அவ்வருளல்லன வருளுமல்ல=முதலாய கல்லானருளல்லால் நாமநீர் வையகத்துப் பல்லாரருளும் பழுது என்று பண்டே பொய்கையாழ்வார் ஸித்தாந்தம் செய்து வைத்தாரே.
அவ்வருளே வேணு என்று நிர்ப்பந்தமாகில் அது பெறுமளவும் பொறுத்திருக்க வேண்டியதன்றோவென்ன, அவனருள் பெறுமளவு ஆவி நில்லாது என்கிறாள்.
அவன் ப்ரஸாதம் கிட்டுமளவும் பிராணன் தரிக்கிறதில்லை. க்ரமப்ராப்தியை ஸஹிப்பதொரு பிராணனைப் பெற்றலன்றோ ஆறியிருக்கலாவது.
“அடுபகல் மாலையும் நெஞ்சுங்காணேன்” என்றவிதற்கு இரண்டுபடியாக யோஜகை;
‘அடுபகல் மாலையும்’ என்று தனிவாக்யமாக்கி, மாலைப்பொழுதோ வந்து தோன்றாநின்றது. எல்லாக் காலத்திலும் தரிக்கை உறுப்பான நெஞ்சையோ காண்கின்றிலேன்–என்று ஒரு யோஜனை,
மாலையும் காண்கிறிலேன், நெஞ்சையும் காண்கிறிலேன் என்பதாக மற்றொரு யோஜனை. மேல் வரவிருக்கிற இராப்பொழுதைக் காட்டிலும் மாலைப் பொழுதே ஒருவாறு நன்று–என்பது கருத்து.
சிவனோடு பிரமன் வண்திருமடந்தை சேர் திருவாகம்= பச்யைகாதசமே ருத்ராந் தக்ஷிணம் பார்ச்வமாச்ரிதாந் என்று மோக்ஷதர்மத்திற் சொல்லப்பட்டது.
அன்றியும் தபஸா தோஷிதஸ் தேந விஷ்ணுநா ப்ரபவிஷ்ணுநா, ஸ்வபார்ச்வே தக்ஷிணே சம்போர் நிவாஸ பரிகல்பித என்றொரு வசனமும் ஆசாரியர்கள் எடுத்துக் காட்டுவதுண்டு.
(சிவன் பண்ணின தவத்தினால் திருவுள்ளமுவந்த திருமால் அவனுக்குத் தனது வலவருகிலே வாஸஸ்தானம் அமைத்துக் கொடுத்தருளினன் என்பது இதன் பொருள்).
*எறாளுமிறையோனும் திசைமுகனும் திருமகளும் கூறாளுந்தனியுடம்பன் * என்னும் அக்கும் புலியினதளுமுடையாரவரொரும் பக்கம் நிற்க நின்ற பண்பர் என்றும் ஆழ்வார்கள் அடிக்கடியருளிச் செய்கிறார்களே; சிவன் முதலானார் எப்போதும் எம்பெருமானுடைய திருமேனியைப் பற்றியிருக்கிறார்களோ? என்றொரு சங்கை பிறக்ககூடும்;
இந்த சங்கையும் இதற்குப் பரிஹாரமும் பூர்வர்களின் வியாக்கியானங்களிலேயே உள்ளன; எங்ஙனேயென்னில்;–
“ஸர்வகாலமும் இவர்கள் எம்பெருமானுடைய திருமேனியிலே இருப்பார்களேவென்னில்; ஆபத்துக்களிலே திருமேனியிலே இடங்கொடுத்தருளும் ; அது மஹாகுணமாகையாலே ஆழ்வார்கள் எப்போது மொன்ன அருளிச் செய்துகொண்டு போருவர்கள். ஸாமந்தர்க்குப் புறம்பே நாடுகள் கனவுக்கவுண்டாகிலும் மாளிகைக்குள்ளே செம்பாலே நாழியரிசியைத் தங்களுக்கு வரிசையாக நினைத்திருப்பர்களிறே ; அப்படியே இவர்களும் திருமேனியில் பண்ணி வைக்கும் ப்ராப்திவிடார்களிறே. ஓரோகலஹங்களிலே அடையவளைந்தானுக்குள்ளே குடிவாங்கியிருந்து கலஹம் தெளிந்தவாறே புறம்பே புறப்பட்டாலும் இவ்விடம் இன்னார் பற்று இவ்விடம் இன்னார் பற்று என்று பின்னும் ப்ராப்தி சொல்லிவைக்குமாபோலே ” – என்று.
“காபாலி கந்தற்கெளிதானது திடீர் எனக்கரிதாய்த்து” என்ற ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்க.
————
***– கீழ்ச்சொன்ன பதார்த்தங்களெல்லரீம் திரளவந்து நண்பாராதே நலிகிற படியைச் சொல்லுகிறாள்.
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்
ஆர் உயிரவள் அன்றிக் கூர் தண் வாடை
காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம்
கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே
சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு
பஞ்சமா அம் தண் பசுஞ்சாந்து அணைந்து
போருற்ற வாடை தண் மல்லிகைப் பூப்
புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ–9-9-7-
பதவுரை
| கார் ஓக்கும் மேனி |
– |
காளமேகம் போன்ற திருவுருவத்தை யுடையனான |
| நம் கண்ணன் |
– |
நமது கண்ணபிரான் |
| கள்வம் |
– |
தனது கள்ளக் செயல்களினால் |
| அவர்ந்த |
– |
அபஹரித்துக் கொண்டு போன |
| அத் தனி நெஞ்சம் |
– |
நம்மை விட்டுத் தனியேயான நெஞ்சானது |
| அவன் கணஃது |
– |
அவன் பக்கலிலே யாயிற்று |
| சீ உற்ற அகில் புகை |
– |
பரிமளச் செல்வம்மிக்க அகிற்புகையையும் |
| யாழ் நரம்பு |
– |
யாழின் நரம்பொலியையும் |
| பஞ்சமம் |
– |
பஞ்சமராகத்தையும் |
| தண் பகஞ்சார்ந்து |
– |
குளிர்ந்த சந்தனத்தையும் |
| அணைந்து |
– |
கூட்டிக் கொண்டு |
| போர் உற்றவாடை |
– |
போர் வுரியத் தலைப்பட்ட வாடையானது |
| தண் மல்லிகை பூ |
– |
குளிர்நத மல்லிகைப்பூவினுடைய |
| புது மணம் முகந்து கொண்டு |
– |
செவ்விப் பரிமளத்தை முகந்து கொண்டு |
| எறியும் ஆல் ஓ |
– |
வீசாநின்றதந்தோ |
ஆருக்கு என் சொல்லுகேன்? = என்னைப்போலே நீங்கள் நெஞ்சிழந்தவர்களு மல்லீர்; வாடை முதலான போக்ய பதார்த்தங்களைத் தேடிப்பிடித்து அவைகொண்டு உகப்பவர்களுமாயிருக்கின்றீர்கள்; இப்படிப்பட்டவுங்களுக்கா நான் என்னிலையைச் சொல்லுவது; என்றபடி.
இக்கூர்தண்வாடை ஆருயிரளவன்று=மிகைத்துக் குளிர்ந்து வீசுகின்ற வாடையானது நம்முயிரைக் கொண்டு போமளவன்று என்கிறவிதனால், சித்வதஞ்செய்யப் பார்க்கின்ற தென்றபடி,.
சிரமமின்றி உயிரைக் கொண்டு போனால் நல்லதே; அப்படி கொண்டு போமதன்று; உயிரைக் கொள்ளை கொள்ளாது விட்டிட்டு ஹிம்ஸிக்க நினைத்திராநின்றது போலுமென்றவாறு
“ஆருக்கென் சொல்லுகேன்” என்றவிடத்து– “வடுகர்க்குத் தமிழர் வார்த்தை சொல்லுமாபோலே” என்பது ஈடு.
நெஞ்சம் கண்ணபிரானுடைய கள்வப்பணி மொழிகளிலே யீடுபட்டடொழிந்தது. பின்னடிகளில், மற்றுமுள்ள பாதகப்பொருள்கள் பேசப்பட்டன.
—————
புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ
பொங்கிள வாடை புன் செக்கராலோ
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம்
கண்ணனில் கொடுத்தினியதனிலும்பர்
மது மண மல்லிகை மந்தக் கோவை
வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து
அது மணம் தின்ன அருள் ஆய்ச்சியர்க்கே
ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்-9-9-8-
பதவுரை
| பொங்கு இன வாடை |
– |
என்னை நலிய நலியக் கிளர்ந்து இளகிப் பதிக்கிற வாடைக் காற்றானது |
| புது மணம் முகந்து கொண்டு ஏறியும் ஆல் ஓ |
– |
புதிய பரிமளத்தை முகந்துகொண்டு வீசாநின்றதந்தோ |
| புன் செக்கர் ஆல் ஓ |
– |
புல்லிய செக்கர் வானமும் வந்து நலியா நின்றது |
| அது மணந்து அகன்ற |
– |
அப்படி கலந்து பிரிந்த |
| நம் கண்ணன் |
– |
நமது க்ருஷ்ணனுடைய கள்ளச் செயல்கள் கள்வம் |
| கண்ணனில் |
– |
அவனிற்காட்டிலும் கொடியதாயிரா நின்றது கொடிது |
| இனி அதனில் |
– |
இன்னமும் அதுக்குமேலே உம்பர் |
| மது மணம் மல்லிகை |
– |
மதுவையும் மணத்தையுமுடைத்தான மல்லிகையினுடைய |
| மந்தம் கோவை |
– |
மெல்லிய ஸரமென்ன |
| வண் பசும் சாந்தினில் |
– |
அழகிய குளிர்ந்த சந்த மென்ன இவற்றிலுங்காட்டில் |
| பஞ்சமம் வைத்து |
– |
விலஷணமான ராகத்தை யிட்டு |
| அது மணந்து இன் அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் |
– |
வாசாமகோரமான ஸம்ச்லேஷத்தைப் பண்ணி நல்லருள் செய்யப்பெற்ற ஆய்ச்சிகளுக்கே யூதுகிற |
| அத்தீம்குழற்கே |
– |
அல்லினிய குழலோசைக்கே |
| நான் உய்யேன் |
– |
நான் உயிரைப் பறிகொடப்பவளாயிராநின்றேல் |
***– இங்ஙனே பொங்கிளவாடையானது புது மணத்தை முகந்து கொண்டு எறியா நிற்கச்செய்தே அதன்மேலே புன் செக்கர் வந்து நலியாநின்றது; அதன்மேலே, சொல்ல முடியாதபடியாக என்னுடனே கலந்து அகன்ற கண்ணனுடைய அக்கலவி நினைவுக்கு வந்து அவன்றன்னிலும் கொடிதாய் நின்று என்னை யீராநின்றது?
இனி அதுக்குமேலே மதுமணை மல்லிகை மாலையும் வண்பசுந்சாந்தும் வந்து பாதிக்கின்றது.
அதன்மேலே, நம்மோடே இங்ஙனே குதவை கோத்துக் கலந்து பரிமாறுகைக்குத் தன் பக்கலிலே நான் வருகைக்காக ஆராய்ச்சியரான நமக்கே கேட்கும்படி பஞ்சமராகத்தை வைத்து ஊதுகின்ற அத்தீங்குழ ஆராச்சியரான நமக்கே கேட்கும்படி பஞ்சமராகத்தை வைத்து ஊதுகின்ற அத்தீங்குழலோசை யொன்றே நின்று என்னை முடிக்கினறது அந்தோ! என் செய்வேனென்கிறாள்.
இரண்டாமடியிலும் ஈற்றடியிலும் “அதுமணந்து” என்றது விலக்ஷணப்ரேயகம்; ‘அது அது’ என்னும்படியான கல்வியைச் செய்து–வாசாமகோசரமாக ஸம்ச்லேஷித்து என்றபடி.
—————–
***– நலிவதில் மற்றவையெல்லாம் ஒருதட்டாயும் அவனுடைய வேணுகானம் மாத்திரம் ஒருதட்டாயுமிருத்தலால் “ஊதுமத்தீங்குழற்கே உய்யேன் நான்” என்று மீண்டுஞ் சொல்லுகிறது.
ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம
மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9-
பதவுரை
| இடை இடை அது மொழிந்து |
– |
இடையிடையே அபிப்ராய கர்பங்களான பாசுரங்களையிட்டு |
| ஊதும் அ தீம் குழற்கே உய்யேன் நான் |
– |
ஊதுகிற இனிய அக்குழலோசைக்கே நான் முடிந்து போகின்றேன். |
| தன் செய் கோலம் |
– |
தனக்குத்தானே செய்யப்பட்ட கோலத்தையுடைத்தாய் |
| தூதுசெய் கண்கள் கொண்டு |
– |
தூது போகின்ற கண்களைக் கொண்டு |
| ஒன்று பேசி |
– |
தன் கருத்தை வெளியிட்டு |
| தூமொழி இசைகள் கொண்டு |
– |
இனிய பாசுரங்களையுடைய இசைகளைக் கொண்டு |
| ஒன்று நோக்கி |
– |
சுடாக்ஷித்து |
| பேதுறு முகம் செய்து |
– |
தன்னீடுபாடு தன் முகத்திலே தோன்றும்படி காட்டி |
| நொந்து நொந்து |
– |
அபலைகள் என்படுகிறார்களோ வென்று மிகவும் நொந்து |
| பேதை நெஞ்சறவு அற |
– |
பெண்களினுடைய ஊடல் அறும்படியாக |
| பாடும் பாட்டை |
– |
பாடுகிற பாட்டை |
| ஆதும் ஒன்று அறிகிலம் |
– |
சிறிதும் அறியகில்லோம் |
| அம்ம அம்ம |
– |
ஐயோ |
| மாலையும் வந்தது |
– |
மாலைப்பொழுதும் வந்திட்டது |
| மாயன் வாரான் |
– |
கண்ணன் வந்திலன் |
அதிலும் ஸாதாரணமாகக் குழலூதுகையில்லையே ; ‘பிரிந்தேன், ஆற்றேன்’ என்றாப்போலே சில நிசபாஷணங்களை இடையிடையே சொல்லியாயிற்றுப் பாடுவது. கண்ணாலே காண்பதும் இவைகளாலே பாடுவதும் லௌகிகர் படியாயிருக்க, இவனுடைய படிலோக விலக்ஷணமாயிரா நின்றது !;
கண்களைத் தூதுவிட்டு அவற்றாலே பேசுவதும், தூமொழியிசைகளைக் கொண்டு நோக்குவது மாயிற்று இவன்படி. பேச்சில் என்ன அபிப்ராயம் வெளிவருமோ அது கண்பார்வையிலேயே வெளிவருகின்றதென்றும், கண்ணாலே நோக்கி யீடுபடுத்துமது இசைப்பாட்டுகளினாலேயே யாகின்றதென்றும் சொன்னவாறு,
பேதுறுமுகஞ்செய்து= முதத்தைக் கண்டவாறே பைத்தியம் பிடிக்கும்படியாகச் செய்து என்றபடி. நொந்து நொந்து= நம்மிடத்திலீடுபட்ட அவலைகள் என்ன பாடுபடுவார்களோ! என்று தானும் நோவுபடாமலிருக்க முடியாதே. சைதந்யமுள்ளவிடத்தே இந்த நோவுபாடு. தவிரலொண்ணாதே. பேதை நெஞ்சறவு அற=பேதைகள் ‘இனி அவனோடு கூடுவதில்லை’ என்று ஊடல் கொண்டிருப்பார்களே, அவ்வூடலும் திரும்படியாக வாயிற்று கண்ணன் பாடுவது.
அது நலிகிற நலிவு சொல்லுந்தரமன்று, மாலைப்பொழுதிலே அவன் வந்திடுவனென்று ஒரு நசையிருந்தது; ஆனால், மாலையும் வந்தது மாயன் வாரான் என்றலற்றுகிறாள்.
இங்கு மாயன் என்தன் கருத்தை நம்பிள்ளை விவரித்தருளாகிறார் காணமின்;– “தன்னைப் பிரிந்தார் லஜ்ஜிக்கும்படி தானே இழவாளனாய் வந்து கால் பிடிக்கும் ஆச்சர்ய பூதன்”
—————-
***– வருவதாகக் குறித்துப் போனகாலம் வந்தது, அவன்றான் வருகிறிலன் மாலைவாய்த் தன்னுடைய நாவொழியாதாடுந் தனிமணியின் இன்னிசை யோசையும் வந்தென் செவிதனக்கே, கொன்னவிலு மெஃகில் கொடிதாய் நெடிதாகும். என்னிதனைக் காக்குமா சொல்வீர் (பெரிய திருமடல்) என்கிறபடியே மாட்டின் கழுத்து மணியோசையானது விரஹிகளுக்கு உத்தீபகமாகையாலே அதற்கு நோவுடுகிறபடி சொல்லுகிறது. ஏறுகளும் வாகுகளும் கலந்து பரிமாறிக் கோலாஹலங்கள் வெய்யுமதுவும் உத்தீபகமாம்.
மாலையும் வந்தது மாயன் வாரான்
மா மணி புலம்ப வல்லேறு அணைந்த
கோல நன் நாகுகள் உகளுமாலோ
கொடியன குழல்களும் குழறுமாலோ
வாலொளி வளர் முல்லை கரு முகைகள்
மல்லிகை யலம்பி வண்டாலுமாலோ
வேலையும் விசும்பில் விண்டு அலறுமாலோ
என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே–9-9-10-
பதவுரை
|
மாலையும் வந்தது மாயன் வாரான் |
||
| மா மணி புலம்ப |
– |
பெரிய மணிகள் ஒலிக்கும் படி |
| வல் ஏறு அணைந்த |
– |
வலிய ரிஷபங்களோடு சேர்ந்த |
| கோலம் நல் நாகுகள் உகளும் ஆல் ஓ |
– |
அழகிய பசுக்கள் களித்துத் திரிகின்றன வந்தோ! |
| குழல்களும் |
– |
புல்லாங்குழல்களும் |
| கொடியன |
– |
கொடுமை செய்வனவாகி |
| குழறும் |
– |
இனிய இசையைச் செய்கின்றன |
| கண்டு |
– |
வண்டுகளானவை |
| வால் ஒளி |
– |
வெளுத்த வொளியை யுடைத்தான |
| வளர் முல்லை கரு முகைகள் மல்லிகை அலம்பி |
– |
வளர் முல்லை, கருமுகைப்பூ மல்லிகைப்பூ ஆகிய இவற்றிலே படிந்து |
| ஆலும் ஆலோ |
– |
முரல்கின்றனவந்தோ |
| வேலையும் |
– |
கடலோதமும் |
| விசும்பில்விண்டு |
– |
ஆகாசத்திலே அளாவி |
| அலறும் |
– |
கோஷிக்கின்றது |
| இங்கு |
– |
இந்நிலைமையில் |
| அவனை விட்டு |
– |
அப்பெருமானைப் பிரிந்து |
| என் சொல்லி உய்வன் |
– |
எங்ஙனம் பிழைப்பேன் |
கோடியன குழல்களும் குழறுமாலோ=கீழே ‘அவனுடைத் தீங்குழல்’ என்று ஒருமையாகச் சொல்லிற்று இங்கே ‘குழல்களும்’ என்று பன்மையாகச் சொல்லுகிறது ;
இதன் கருத்தை ஆறாயிரப்படியில் பிள்ளான் விலரித்தருளாகிறார்– “வண்டுவரைப் பெருமாளுடைய திருத்தோழமைரர் குழல்களை யூதிக் கொண்டு வந்து புகுராநின்றனர்” என்று,
இதற்கு மேலே வண்டுகள் பலவப் பூக்களிலும் படிந்து முரல்கின்றதுவும் உத்தீபகம், கடலலை யோசையும் கர்ணகடோரம். இப்படியான பாதகவர்க்கங் களினிடையே அவனுடைய பிரிவை எங்ஙனே யாற்றுலேனென்றலாயிற்று.
————
***– வண்துவரைப் பெருமாளைப் பிரிந்து தரிக்கமாட்டாமல் அந்நியம் போதில் அணியிழையாய்ச்சியர்கள் திரளநின்று கூப்பிட்டாப்போலே ஆழ்வாரும் அவனைப் பிரிந்து தரிக்கமாட்டாமை கூப்பிட்டலற்றின இத்திருவாய்மொழி தொண்டர்களுக்கு உஜ்ஜீவனஸாதன மென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.
அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா
அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி
அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த
ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர்
அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–9-9-11-
பதவுரை
| அவனை விட்டு அகன்று |
– |
கண்ண பிரானை விட்டுப் பிரிந்து |
| உயிர் ஆற்றகில்லா |
– |
உயிர் தரிக்கமாட்டாத |
| அணி இழை ஆராய்ச்சியர் |
– |
அழகிய ஆபரணங்களணிந்த கோபிமார்கள் |
| மாலை பூசல் |
– |
மாலைப் பொழுதிலே பட்ட பாட்டை |
| அவனை விட்டு அவல்வதற்கே இரங்கி |
– |
அப்பெருமானை விட்டு பிரிந்திருக்கை காரணமாக நோவுபட்டு |
| அணி குருகூர் சடகோபன் மாறன் |
– |
ஆழ்வார் |
| அவனி உண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த |
– |
பூமிணை உண்டுமிழ்ந்த அப்பெருமான் விஷயமாக அருளிச் செய்த |
| ஆயிரத்ததுள் இவை பத்தும் கொண்டு |
– |
ஆயிரத்தினுள் இப்பதிகங் கொண்டு |
| தொண்டீர் |
– |
தொண்டர்களே |
| அவனியுள் அலற்றி நின்று |
– |
பூமிக்குள்ளே உகந்து அநுஸந்தித்து |
“இப்பதிகம் தொண்டர்களுக்கு உஜ்ஜீவனத்தைத் தரும்” என்றிங்ஙனே பலக்ருதியாகச் சொல்லாமல் “தொண்டீர் உய்மின்” என்று சொல்லியிருந்தாலும் பயனுரைக்கும் வகைகளிலே இதுவுமொருவகையென்று கொள்க
இப்பாரைத்தைக் கற்பார்க்கு என்னைப் போலே கூப்பிடவேண்டா; ஆசைப்பட்ட பேறுபெறுகையில் கண்ணழிவில்லை என்றவாறு.
————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Related
This entry was posted on November 15, 2022 at 12:15 pm and is filed under திரு வாய் மொழி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply