***– திருக்காட்கரை யெம்பெருமானுடைய ஆச்சரியமான பரிமாற்றங்களை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சு நீர்ப்பண்டமாகின்றதே யென்கிறார்.
உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1-
பதவுரை
| தெரு எல்லாம் காலி கமழ் |
– |
தெருவுகள் தோறும் செங்கழு நீர்ப்பூ வாஸிக்கப்பெற்ற |
| திருக் காட்கரை |
– |
திருக்காட்கரையென்னுந் திருப்பதியிலே |
| மருவிய |
– |
பொருந்திவர்த்திக்கிற |
| மாயன் தன் மாயம் |
– |
எம்பெருமானுடைய ஆச்சரியமான ஸெளந்தர்யசீலாதிகளை |
| நினைதொறு |
– |
நினைக்கிறபோதெல்லாம் |
| நெஞ்சம் உருகும் |
– |
நெஞ்சு சுட்டுக்குலைந்து உருகாநின்றது |
| உயிரின் பரம் அன்றி |
– |
ஆத்மாவுக்குத் தாங்கக்கூடிய அளவல்லாமல் |
| வேட்கை பெருகும் |
– |
ஆசை கரைபுரண்டு செல்லா நின்றது |
| தொண்டனேன் என் செய்கேன் |
– |
சபலனான நான் என்ன செய்யக் கடவேன்? |
நெஞ்சம் உருகுமால்=அநுபவத் திற்கு முதன்மையான சருவி நெஞ்சன்றோ: அதுவாயிற்று சிதிலமாகின்றது.
அநுபவிக்கைக்கும் அநுபவித்துக் களிக்கைக்கும் முந்துறுமுன்னம் நெஞ்சுவேணுமே; அது சிதில்மா யொழிந்தால் என்ன வுண்டு?
பெருக்காற்றிலே நீஞ்சப் புகுந்தவனுக்கு முதலடியிலேயே தெப்பம் ஒழுகத் தொடங்கினால் என்செய்வது?
ப்ரதாநோபசுரணமான நெஞ்சு அழிகின்றதே வேட்கையும் உயிரின் பரமன்றிப் பெருகுமால்–ஆத்மாவால் தாங்க வொண்ணாதபடி அபிநிவேசம் பெருகுகின்றதே.
ஆற்றுப் பெருக்குப்போலே மேன்மேலும் பெருகி வருகின்ற காதல் அணுபரிமாணமான ஆத்ம வஸ்துவின் அளவதன்றே! அடிதோறும் ஆல்! அல்! என்று விஷாதஸீசனம்.
என் செய்கேன் தோண்டனேன்! = நெஞ்சு உருகாதபடி செய்யவும் வேட்கை பெருகாதபடி செய்யவும் ஒரு பாயமறி கின்றிலேன். அவனுடைய திருக்குணங்களைத் தவித்தாலன்றோ இவை செய்யலாவது. நெஞ்சு உருகைக்கும் வேட்கை பெருகுகைக்கும் ஹேது சொல்லுகிறது மேல்
தெருவெல்லாங் காவிகமழென்று தொடங்கி, குறுந்தெருவோடு நெடுந் தெருவோடு வாசியற எங்கும் நெங்கழுநீரின் நறுமணம் கமழப்பெற்றது திருக்காட்கரை வெளியே இப்பரிமளமானால் உள்ளே *ஸர்வகந்தா* என்னும்படியானவனுடைய பரிமளம் ஸாசாமகோசரம்.
அவனோ மாயன்–ஸெளந்தர்யம் ஸெளசீல்யம் முதலிய குணங்களினால் பிறரைப் பிச்சேற்றவல்லவன்.
அப்படிப் பட்டவனுடைய மாயம்–கிட்டடினபோது தாழநின்று பரிமாறின சீல குணம்; அதனை நிதொறும் உருகுமால் நெஞ்சம்–என்று முதலடியோடே அந்வயிப்பது.
—————-
***– திருக்காட்கரை யெம்பெருமானை நோக்கி ‘உன்னோடு நான் கலந்து பரிமாறின பரிமாற்றத்தை நினைக்க சக்தனாகின்றிலேன்! ‘ என்கிறார்.
நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும்
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனை கொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –9-6-2-
பதவுரை
| நினை தொள் பூ சோலை |
– |
தடாகங்களையுடைய பூஞ்சோலை களையுடைந்தான |
| தென் காட்கரை |
– |
திருக்காட்கரை யிவெழுந்தருளியிருக்கிற |
| என் அப்பா |
– |
எம்பெருமானே |
| வினை கொள் சீர் |
– |
பாபங்களைக் கொள்ளை கொள்ளும்தான் (உனது) திருக்குணங்களை |
| நினைதொறும் |
– |
நினைக்கிற போதெல்லாம் |
| நெஞ்சு இடிந்து |
– |
நெஞ்சானது சிதிலமாகி |
| சொல்லுந் தொறும்உகும் |
– |
(அக்குணங்களைச்) சொல்லாத தொடங்கின போதெல்லாம் (அந்த நெஞ்சானது) நீராயுருநா நின்றது |
| பாடிலும் |
– |
(அக்குணங்களைப்) பாடத்தொடங்கினாலோ |
| எனது ஆர் உயிர் வேம் |
– |
என்னுடைய அருமையான ஆத்ம வஸ்துவானது வேலா நின்றது. |
| நான் |
– |
இப்படியாகப் பெற்ற நான் |
| உனக்கு ஆள் செய்யும் நீர்மை நினைகிலேன் |
– |
உனக்குந் கைங்கரியம்பண்ணும் விதத்தை அறிகின்றிலேன் |
நினைதொறும் நெஞ்சு இடிந்து உகும் = குண சேஷ்டிதங்களை நினைப்பதாகத் தொடங்கினால் அந்நினைவு மாறாதே செல்ல முடியாதபடி. பலஹானி மிகும். ஆனாலும் மறக்கமாட்டார்; மறுபடியும் நினைக்கத் தொடங்குவர். அந்த நினைவும் நெடுகச் சென்று தலைக்கட்டாது. இப்படி எத்தனை காலம் நினைக்கப் புக்கது! எத்தனை காலம் மீண்டது! இது தோன் நினைதொறும் என்கிறார்.
(சொல்லுந்தொறும்) நெஞ்சால் நினைக்கவே முடியாத விஷயம் வாயாற் சொல்லவொண்ணா தென்பது சொல்லவேணுமோ? மநஸ் ஸஹகாரமின்றிக்கே யிருந்தாலும் அஹருதயமாகவே சொல்லிக் கொண்டிருப்பரே ஆழ்வார். (இவர் பேசுகிறாரல்லர்; இவருடைய வாக்கும் பேசிக் கொண்டே யிருக்குமென்க).
அப்படி பேசும்போது அப்பேச்சு செவி வழியாலே உள்ளே புகுந்து ஊற்றிருந்து குணாதிக விஷயமாகையாலே நெஞ்சையழிக்கும்; நெஞ்சு இடிந்து உகும்–நெஞ்சகட்டுக் குலைந்து நீராகா நின்றது.
இங்கே ஈடு–நெருக்காற்றின் கரையிடிந்து பின் நீராய்க் கரைந்து போமாபோலே ஓரவயவியாகக்காண வொண்ணாதபடி உக்குப் போகா நின்றது.
வினைகொள் சீர்பாடிலும் வேம் எனதாருயிர்=’விணைகொள்’ என்பதற்கு இரண்டு படியாகப் பொருள் கொள்வர்;
வினையென்று தீவினைகளைச் சொல்லிற்றாகக் கொண்டு பாபமான கல்யாண குணமென்பது ஒருபொருள்.
வினையென்று பொதுவாகக் காரியத்தைச் சொல்லுகிற சொல்லாகையாலே எம்பெருமானுடைய சேஷ்டிதத்தைச் சொல்லுவதாக இங்குக் கொள்ளலாம்.
குண ஸாமந்யபரமான சீர் என்னுஞ்சொல் இங்கு சீல குணத்தைச் சொல்லுகிறது. சேஷ்டிதத்தைக் கொண்ட சீல குணமாவது–தாழ நின்று பரிமாறிக் காட்டின சீல குணம் என்பது மற்றொரு பொருள்.
அதைப் பாடினாலும் எனதாருயிர் வேம்–அதாஹயுமென்று கீதையில் சொல்லப்பட்ட அத்ம வஸ்துவும் தஹிக்கப்பட்டதாகிறது.
எல்லாவற்றுக்கும் குளிர்ச்சியைப் பண்ணக் கடலதான பனி தாமரையை மாத்திர கருகப்பண்ணு மாபோலே ஸகலர்க்கும் ஆர்த்தி ஹரமான குணங்கள் எனக்கு ஆர்த்தியை விளைவிக்கின்றன என்றாராயிற்று.
ஆகவே நினைகிலேன் நானுனக்காட் செய்யும் நீர்மை–நீ என்னிடம் தாழ நின்று ஆட்செய்து காட்டின சீல குணத்தை நெஞ்சாலும் நினைக்கமாட்டுகின்றிலேன் என்றபடி.
நீயெனக்காட் செய்யும் நீர்மை யென்ன வேண்டு மிடத்து ‘நானுனக்காட் செய்யும் நீர்மையென்றது எம்பெருமானுடைய உக்தியின் அநுகாரமிருக்கிறபடி.
எம்பெருமானே ! நீ என்னிடம் தாழ நின்று ‘நான் உமக்கு ஆட்செய்கிறேன்காணும்’ என்று சொல்லுகிறாயே!
இந்தச் சொல்லும் மருமத்தைப் பிளக்கின்றதே ! என்றாராயிற்று.
————–
***– கீழ்ப்பாட்டின் ஈற்றடிக்கு வியாக்கியானமாயிருக்கிறது இப்பாட்டெல்லாம். அடிமை கொளுவதாக ஒரு வியாஜமிட்டு உள்ளே புகுந்து தன் படிகளைக் காட்டி ஸர்வஸ்வாப ஹாரம் பண்ணின வாற்றை அந்தோ! நினைக்க மாட்டிற்றிலேனென்கிறார்.
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்து என் உயிராய் என் உயிர் உண்டான்
சீர் மல்கு சோலைத் தென் காட் கரை என் அப்பன்
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலன்–9-6-3-
பதவுரை
| நெஞ்சம் வஞ்சித்து புகுந்து |
– |
ஏதோ வஞ்சனையினால் என் நெஞ்சினுள்ளே புகுந்து |
| நீர்மையால் என்னை ஈர்மை செய்து |
– |
முறைகெடப் பரிமாறும் சீல குணத்தினால் என்னை நலிந்து |
| என் உயிர் ஆய் என் உயிர் உண்டான் |
– |
எனக்குத் தாரகனாயிருப்பன் போல என்னை யழித்தவனும் |
| சீர்மல்கு சோலை தென் காட்கரை என் அப்பன் |
– |
அழகு நிரம்பிய சோலைகளால் சூழப்பட்ட திருக்காட்கரையியெழுந்தருளியிருக்கும் பெருமானும் |
| கார்முகில் வண்ணன் தன் |
– |
காளமேக வண்ணனுமானபரம புருஷனுடைய |
| கள்வம் |
– |
க்ருத்ரிமத்தை |
| அறிகிலேன் |
– |
தெரிந்து கொள்ள மாட்டாதவனாயிருக்கிறேன். |
” வஞ்சித்து நெஞ்சம் புகுந்து என்னை நீர்மையால் ஈர்மை செய்து” என்று அந்வயித்துப் பொருள் கொள்வது சுவைமிக்கது.
வஞ்சித்து நெஞ்சம் புகுகையாவது–தான் சேஷியும் நான் சேஷனுமான முறை தவறாது பரிமாறுவதாகவே சொல்லி நெஞ்சை இசையப் பண்ணிப் புருகை முறை கேடாகப் பரிமாறப் போகிறேனென்று முன்னமே சொன்னால் இவர்தான் இசைய மாட்டாரென்று எண்ணி முறை கெடாது பரிமாறுவதாகப் பொய் சொல்லி உள்ளே புகுந்தானாயிற்று.
புகுந்தபின் நிர்மையைக் காட்டத் தொடங்கினான். அதாவது, தான் தாழ நின்று பரிமாறத் தொடங்கினானென்கை. அதனால் நெஞ்சை யீடுபடுத்தினானாயிற்று. ஈர்மை செய்து என்றது ஈருந்தன்மைகளைச் செய்து என்றபடி; இருபிளவாக்கி, ஈடுபடுத்தியென்க. நீராம்படி பண்ணி யென்பது பரமதாற்பரியம்.
என்னுயிராயென்னுயிருண்டான்–எனக்குத் தாரகரைப் போலே புகுந்து என்னையழித்தாரென்கை. எனக்குத் தன்னாலல்லது செல்லாதபடி பண்ணி என்னைப் புஜிப்பதுஞ் செய்தான் என்றுமாம்.
இப்படிச் செய்தவன் யாவனென்ன; சீர்மல்கு சோலைத் தென்காட்கரையென்னப்பன் கார்முகில் வண்ணன்=என்னோடு கலந்து என்னுடைய நீர்மையையும் கொள்ளை கொண்டதனால் கடலைக் கழுத்தளவாகப் பருகின காளமேகம்போலே புகர்படைத்து விளங்குகின்ற திருக்காட்கரையப்பன்.
அவனுடைய கள்வமறிகிலேன்= ஸர்வஸ்மாத்மரனானவன் இங்ஙனே தாழநின்று பரிமாறுகை அஸம்பாவிதம்; நான் மருண்டு பேசுகிறேனோ! என்கிறார்.
—————
***– தான் சேஷியாயும் ஜகத்தெல்லாம் சேஷபூதமாயும் முறைதப்பாமல் எல்லாரோடுங் கலக்கிறவன் நீசனேன் நிறையொன்றுமிலேனென்ன நின்ற அதிக்ஷுத்ரனான என் பக்கவிலே காட்டும் வியோமோஹம் இன்னதென்று என்னால் சொல்ல முடிகிறதில்லையே யென்று தடுமாறுகிறார்.
அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
வெறி கமழ் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
சிறிய என் ஆர் உயிர் உண்ட திரு வருளே–9-6-4-
பதவுரை
| தன் உள் |
– |
தனது ஸங்கல்பத்திலே |
| அனைத்து உலகும் நிற்க |
– |
ஸமஸ்த லோ பதார்த்தங்களும் தரிப்புற்றிருக்க |
| தானும் |
– |
இப்படி அவற்றை யெல்லாம் தரித்திருக்கிற தானும் |
| நெறிமையால் |
– |
சரீராத்மபாவ ஸம்பந்த மடியான சேஷ சேஷி பாவமாகிற முறைமை தவறாமல் |
| அவற்றுள் நிற்கும் பிரான் |
– |
அவற்றுக்குள்ளே நிற்கும் உபகாரகனாய் |
| வெறி கமழ் சோலை |
– |
பரிமளம் மமிக்க சோலைகளையுடைய |
| சிறிய என் |
– |
மிகவும் ஷீத்ரனான என்னுடைய |
| ஆர் உயிர் |
– |
ஆத்ம வஸ்துவை |
| உண்ட |
– |
மேல் விழுந்து அநுபவித்த |
| திரு அருள் |
– |
வியோமோஹத்தை |
| அறிகிலேன் |
– |
அறிகின்றிலேன் |
“சிறிய வென்னாயிருண்ட திருவருளை அறிகிலேன்” என்று அந்வயித்துப் பொருள் அந்வயிப்பது மொருபுடையுண்டு;
“உகப்பாலே செய்தானோ? இவ்வஸ்துவை யழிக்கைக்குச் செய்தானோ? அறிகிறிலேன்” என்பர் நம்பிள்ளை.
இப்படி விலைமுற்றைத் தனியே அந்வயித்து விட்டால் “சிறிய வென்னாயிருண்ட திருவருளே” என்றதற்கு வினை முற்று ஏது? என்னில் ; வினைமுற்று வேண்டாவே ; திருவருளே ! என்று ஈடுபாடாக முடிகிறபடி.
தன்னுள் அனைத்துலகும் நிற்க தானும் நெறியாமையால் அவற்றுள் நிற்கும் பிரான்=உலகங்களெல்லாம் தன்னுடைய ஸங்கல்பத்தைப் பற்றிக்கிடக்க, தான் அவற்றினுள்ளேதன் சேஷித்வமுறை தப்பாதபடி நிற்குமவன்.
இப்படிப்பட்டவன் வெறிகமழ் சோலைத் தென்காட்கரை யென்னப்பனாயிருந்து கொண்டு சிறியேனான என்றுடைய நசீவளைக் கபளீகரித்த விரமோஹம் என்னே!
—————
***– எம்பெருமான் என்னை யடிமை கொள்வான்போலே புகுந்து என் சரீரத்தையும் ஆத்மாவையும் ஒக்க புஜியா நின்றானே! இது என்ன வியாமோஹம்! என்று வியக்கிறார்.
திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்து
உருவமும் ஓர் ஆர் உயிரும் உடனே உண்டான்
திருவளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
கருவளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே–9-6-5-
பதவுரை
| திரு அருள் செய்பவன் போல |
– |
என்னிடமிருந்து அடிமை கொள்ளு கையாகிற திருவருளைச் செய்பவன் போல அவிநயம் காட்டி |
| என் உன் புகுந்து |
– |
என் நெஞ்சிலே புகுந்து |
| உருவமும் ஆர் உயிரும் |
– |
உடலையு முயிரையும் |
| உடனே உண்டான் |
– |
ஹேய உபாதேய விபாக மில்லாதபடி ஏகரீதியாக அனுபவித்தான் |
| திரு வளர் சோலை |
– |
அழகு மிகுந்த சோலைகளையுடைய |
|
தென் காட்கரை என் அப்பன் |
||
| கருவளர்மேனி |
– |
சாமநிறம் விஞ்சின திரு மேனியை யுடையவனாய்க் கொண்டு |
| என் கண்ணன் |
– |
எனக்கு விதேயனாயிருந்த அப்பெருமானுடைய |
| கள்வங்களே |
– |
வஞ்சனை யிருக்கிறபடி என்னே |
திருவருள் செய்பவன்போல என்னுள் புகுந்து–அடிமை கொள்ளுகையையே திருவருள் செய்கையாக ஆழ்வார் திருவுள்ளம் பற்றியிருப்பது.
என்னிடத்தில் கைங்கர்ய வ்ருத்தி கொள்ளுகையாகிற திருவருளைச் செய்பவன்போல உள்ளே புகுந்து அருளைத்தான் செய்கை யன்றிக்கே தான் பெற்றானாயிரா நின்றான்.
*வழுவிலாவடிமை செய்ய வேண்டும் நாம் * என்று நான் பார்த்தவத்தனை;அவன் இங்ஙனே பாரித்துப் பேறு தலைக்கட்டப் பெற்றான். அதாவதென்னென்னில் ; [உருவமும் ஆருயிரும் உடனே யுண்டான்] திருவிருத்த முதற் பாட்டிலே அழுக்குடம்பு ” என்று தாம் வெறுத்ததை அவன் விரும்பப் புகுந்தான்.
இங்கே நம்பிள்ளை வீடு வியக்கத் தக்கது; – “அவனங்கீகாரத்துக்கு முன்பு இவர் தேஹத்தையே விரும்பிப் போந்தார்; அவன் இவரை யங்கீகரித்த பின்பு இவர் தன் தேஹத்தை வெறுக்க அவன் இவருடைய தேஹத்தை விரும்பபப் புக்கான் ; இவர்க்கு அவனோட்டை ஸஹவுஸம் ஸ்வரூப ஜ்ஞானத்துக்கு உடலாய்த்து ; அவனுக் கு இவரோட்டை ஸஹவாஸம் தேஹாத்மாபிமாநத்துக்கு உடாய்து ” என்று.
ஆருயிரும் உடனே யுண்டானென்கையாலே–தேஹமென்று ஹேயதாபுத்தியும் ஆத்மாவென்று உபாதேயதாபுத்தியு மில்லாமல் இரண்டிலும் துல்யமான ப்ரதிபத்யையே கொண்டான்பது விளங்கும்
இப்படி ண்டவன் யாவென்ன, திருவளர்சோலைத் தென்காட்கரை யென்னப்பன் என்கிறது.
ஆழ்வாரை புஜித்து அவன் செழிப்புக் கொண்டமை அவனளவிலே நில்லாமல் அவனுறையு மூரிலுள்ள சோலைகளிலும் ஏறிப்பாய்ந்தது போலும்.
—————-
***– ஒருவனைக் கள்ளனென்றறிந்தால் அவனுடைய ஸஹவாஸத்தை விட்டுவிலகுதல் போல, எம்பெருமானுடைய வஞ்சகங்களை யறிந்த நீர் அவனைவிட்டு அகல வேண்டாவோ னென்ன என் செய்வேன்? அவனைக் கண்டவாறே அவனது வஞ்சனைகளை மெய்யென்று கொள்ளும்படி நேர்ந்து விடுகிறதே யென்கிறார்.
எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது
புன் கண்மை எய்திப் புலம்பி இராப்பகல்
என் கண்ணன் என்று அவன் காட் கரை ஏத்துமே-9-6-6-
பதவுரை
| என் கண்ணன் |
– |
என் பக்கல் பிச்சேறின கண்ணனுடைய |
| கள்வம் |
– |
வஞ்சனைகளானவை |
| செம் ஆய நிற்கும் |
– |
செம்மையாகவே ஆர்ஜவமென்றே தோன்றா விந்கும் |
| அங்கண்ணன் |
– |
அவன் வியாமோஹத்தாலே மிகவும் சபலனாய்க் கொண்டு |
| உண்ட |
– |
பூஜிக்கப்பெற்ற |
| கோது |
– |
(அதனாலே) நிஸ்ஸாரமான |
| என் ஆர் உயிர் இது |
– |
இந்த என்னாத்மாவானது |
| புன்கண்மை எய்தி |
– |
தைன்யத்தையடைந்ததாகி |
| என் கண்ணன் என்று இரா பகல் புலம்பி |
– |
எனக்கு விதேயனானவனே யென்று இரவும் பகலும் கதறியழுது |
| அவன் காட்கரை ஏத்தும் |
– |
அவனுடைய திருக்காட்கரைப் பதியையே சொல்லா நின்றது. |
என் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்–என்னோடு கலக்கிறபோது எனக்கே அற்றுத் தீர்ந்தவனாகக் காணப்படுகின்ற அவனுடைய வஞ்சனங்களானவை எனக்கு ருஜீவாயே தோற்றுநின்றன.
ஒருநாள் அவன் களவிலே யகப்பட்டால் பின்னை மீளமாட்டேன்; அவன் முகத்திலே விழித்தவாறே அவன் செய்யுமவையெல்லாம் மெய்யாகவே தோற்று மெனக்கு.
“எனக்குச் செம்மாய் நிற்குமேன்றத்தை எனக்குச் சேமமாயிருக்கு மென்று ஒரு தமிழன் நிர்வஹித்தான்” என்பது ஈடு.
கீழ்ப்பாட்டின் முடிவு ‘நங்கண்ணன் கள்வங்களே’ என்றிருக்கையாலே இப்பாட்டின் தொடக்கமும் அந்தாதித் தொடைக்குச் சேர அப்படியே யிருக்க வேண்டாவோ வென்று சங்கித்து அதனால் குறையொன்றுமில்லை :
பொருளிசை யந்தாதியியிருக்கும்–என்று ஒரு ஸமாதான மருளிச் செய்து, இரண்டிடங்களிலும் ஒரே பாடமாகவுமாம் என்றுமருளிச் செய்வர் நம்பிள்ளை.
என் ஆருயிர் அங்கண்ணனுண்ட கோது–இந்த என் ஆத்மாவானது வ்யாமோஹத்தினெல்லையிலே நின்ற அவனால் புஜிக்கப்பட்டு நிஸ்ஸாரமாயிற்று என்றபடி.
அங்கண்ணன் என்றதற்கு அதிசபலன் என்று பொருள். “அதிப்ரவணரை அங்கண்ணர் என்னக் கடவதிறே” என்றபர் நம்பிள்ளை.
இப்படி என்னாருயிர் கோதாய்ப்போனாலும் “உள்ளம் புகுந்து என்னை கைவித்து நாளுமுயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்” என்று ஆண்டாளருளிச் செய்த கணக்கிலே பன்னையும் உயிர்க்குச் சிறிது ஸாரங்கொடுத்துப் பரிமாறத் தொடங்கவே, புன்கண்மையெய்தி–தைந்யத்தை யடைந்ததாயிற்று இவ்வாத்மா.
அதனாலே, என் கண்ணனென்று இராப்பகல் புலம்பி அவன் காட்கரை யேத்தும்–முன்பு எனக்கு விதேயனாயிருத்வனென்று சொல்லி இரவும் பகலும் கூப்பிட்டு அவனுறையுமிடமான திருக்காட்கரைத் திருப்பதியைக் கொண்டாடா நின்றது. பசித்தவன் பழங்கணக்குப் பார்க்கிற ரீதிபோலும்.
————–
***– என்னை யடிமை கொள்வாரைப்போலே வந்து புகுந்து என்னுயிரை மானப்புஜித்து, பின்னையும் புஜியாதான் போலே கிடந்து படாநின்றானென்கிறார்.
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-
பதவுரை
| ஆள் கொள்வான் ஒத்து |
– |
அடிமை கொள்வரைப் போலே (புகுந்து) |
| என் உயிர் உண்ட மாயனால் |
– |
என்னாத்மாவைக் கொள்ளை கொண்ட மாயப்பெருமானாலே |
| கோள் உண்டே |
– |
புஜித்துக் கொள்ளப்படச் செய் நேயும் |
| கோள் குறைபட்டது |
– |
போகம் மிச்சப்பட்டிருக்கிற தென்னலாம்படியிருக்கிற |
| என் ஆருயிர் |
– |
என்னாத்மாவானது |
| காட்கரை எத்தும் |
– |
அவனுறையுமிடமான திருகட்கரையைப் புகழா நின்றது. |
| அதனுள் கண்ணா என்னும் |
– |
அத்திருப்பதியிலே நிற்கிற கண்ணா வென்று அழையா நின்றது (அவ்வளவுமன்றிக்கே) |
| வேட்கை நோய் கூர |
– |
காதல் நோய் மிகப்பெற்று |
| நினைந்து கரைந்து உகும் |
– |
(அவனுடைய பரிமாற்றங்களை)நினைத்து உருகி சிதிலமாகா நின்றது. |
காட்கரையேத்தும்–அவனைக் காட்டிலும் அவனிருக்குமூரிலே ஆசை மிகுந்த அவ்வூரையே யேத்தா நின்றது என்னாருயிர்.
ஊருக்கு அவனாலே யேற்றமாய், அவனுக்கு ஊராலே யேற்றமா யிருக்கையாலே ஊரையுஞ் சொல்லி அவனையுஞ் சொல்ல வேண்டி யிருத்தலால் அதனுள் கண்ணாவென்னும்–திருக்காட்கரைப் பெருமானே! என்று அவ்வூரின் ஸம்பந்தத்தை விட்டு அவனையுமேத்தாநின்றது.
பரமபதநாதனென்றால் ஏற்றமில்லையே; அவ்விடத்திலும் இவ்விடத்தில் வாஸத்தாலே ஏற்றம் பெறுவோமென்று வந்து இங்கே நின்று ஏற்றம் பெற்றனனாதலால்.
வேட்கை நோய் கூர நினைந்து உகும். அவ்வூரையும் அவ்வூர்ப் பெருமானையும், நினைத்த மாத்திரத்திலேயே காதல் நோய் அதிகரிக்கும்;
அதனால் த்ரவீபாவமும் சைதில்யமும்ம விளையும். இப்படியெல்லாமாகைக்கு அடியேதென்னில்; பின்னடிகளால் அது சொல்லுகிறது.
“கீழ் திருவருள் என்று மறைத்துச் சொன்னதை வெளியிடுகிறார்” என்பர் நம்பிள்ளை.
அடிமை கொள்வாரைப் போலே புகுந்து என்னை சூன்யமாக்கின ஆச்சர்ய பூதனாலே என்னாருயிர் கோளுண்டே கோள் குறைபட்டது–என்னாத்மா நிசேஷமாக புஜிக்கப்படா நிற்கச் செய்தேயும் இத்தலையிலே சிறிது சேஷித்தது.
இங்ஙனே சொல்லுகைக்குக் கருத்தென்? என்னில் ; இன்னமுமிருந்து கிலேசப்படக் காண்கையாலே சிறிது சேஷமிருந்தாக வேண்டுமே; அது கொண்டு சொல்லுகிறது.
——————
***– எம்பெருமானை யநுபவிக்குமாழ்வார்க்கு “எப்பொழுதும் நாள் திங்களாண்டுழி யூழிதொறும் அப்பொழுதைக்கப் பொழுதென்னாராவமுதமே” என்னும்படி, நித்யா பூர்வமாயிருக்கிறாப்போலே எம்பபெருமான்றனக்கும் ஆழ்வாருடைய அநுபவம் நித்யாபூர்மாயிருக்கும்படி சொல்லுகிறது இப்பாட்டில்.
கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–9-6-8-
பதவுரை
| கோள் உண்டான் அன்றி வந்து |
– |
என்பக்கல் ஒருபகாரம் கொண்டல்லாமல் நிர்ஹேதுகமாக வந்து |
| என் உயிர் தான் உண்டான் |
– |
என்னாத்மாவை யநுபவித்தான் (அவ்வளவேயன்றியே) |
| நாள் நாளும் வந்து |
– |
நாள் தோறும் வந்து |
| என்னை முற்றவும் தான் உண்டான் |
– |
என்னைச் சிறிதும் சேவயொதபடி பூர்த்தியாக புஜித்தான் |
| கர்ணம் நீர் மேகம் |
– |
கறுத்து நீர் கொண்டெழுந்த மேகம் போன்ற வடிவையுடைய |
| தென்காட்கரை அப்பற்கு என் |
– |
திருக்காட்கனா யெம்பெருமானுக்கு |
| ஆள் பட்டது அன்றே |
– |
நான் அடிமைப் பட்டவத்தனையேயன்றோ |
| என் ஆருயிர் பட்டதே |
– |
என்னை இங்ஙனே படுத்த வேணுமோ? |
நாள்தோறும் என்னை புஜியாநின்றாலும் பெறாப் பேறு பெற்றாப்போலே வந்து புஜியாநின்ற இப்பெருமானுடைய குணத்தை என்னென்பேன்! என்கிறார். முதலடிக்கு மூன்று வகையாகப் பொருளருளிச் செய்வர்; [கோளுண்டானன்றி வந்து என்னுயிர் தானுண்டான்]
(1) என்னிடத்தில் ஓர் உபகாரமுங் கொள்ளாமலே நிர்ஹேதுமாக என் ஆத்ம வஸ்துவை யநுபவித்தான்.
(2) இதற்கு முன்பு இப்படிப்பட்டதொரு சரக்குக் கொண்டறியாதவன்போல் என் பக்கலிலே அபிநிவேகங் கொண்டான்
(3) என்னாலே தான் கொள்ளப்படா திருக்க, தான் என்னைக் கைக் கொண்டான்.
இம்மூன்றும் ஒன்றுக் கொன்று வாசியின்றியே மிகச் சிறக்கும்.
இவற்றுள் முதற்பொருளும் மூன்றாம் பொருளும் தாற்பரியத்தில் விசேஷ பேதமின்றி யிருந்தாலும் சப்தார்த்தம் கொள்ளும் வகையில் வாசி பெற்றிருக்கும்.
நாளுநாள் வந்து=ஒருநாள் புஜித்து ‘இது நாம் புஜித்ததேயன்றோ’ என்று பழமை தோன்றி அருசியோடிருப்பானல்லன்.
“அவனுடைய அப்பொழுதைக்கப்பொழுதென்னாராவமுதமிருக்கும்படி” என்பர் ; நம்பிள்ளை.
என்னை முற்றவுந் தானுண்டான்=என்னை என்பது அஹமர்த்தமான ஆத்மவஸ்துவைத்தானே;
அது அணுபரிமாண மாயன்றோ விருப்பது; முற்றவும் என்று சொல்லுவதற்கு விஷயமில்லையே யென்று சங்கித்துக் கொண்டு நம்பிள்ளையருளிச் செய்வது காணீர்–
“அணுபரிமாணமான இவ்வஸ்துவை விபுவான தான் விளாக்குலை கொண்டு அநுபவித்தானென்கிற விது தனக்கு ஏற்ற மாம்படி கௌரவியா நின்றான்” என்று.
இந் ஸ்ரீஸூக்திகளின் வரமதாற்பரிம் யாதெனில்; ஆழ்வாருடைய ஆத்மவஸ்து அணுவாயிருந்தாலுங்கூட அளவு கடந்த பாரிப்புக் கொண்ட ஸர்வேச்வரன் அநுபவிக்குமிடத்து இவ்வணுவஸ்துவையும் பெரியதாக்கிக் கொண்டு அநுபவிப்பதாக ஆழ்வாருடைய திருவுள்ளம் என்பதாம்.
இதற்கு ஒருதாஹரணம் காட்டலாம்; கண்ணபிரான் விதுரர் திரு மாளிக் கெழுந்தருளின போது விதுரர் கண்ணனுக்கு அன்ன மிட்டரென்பதைச் சொன்ன முனிவர் “விதுர: அந்நமுபாஹரத்” என்றார் ;
அந்த அன்னத்தைக் கண்ணனமுது செய்ததைச் சொல்லுமிடத்து அந்த முனிவர்தானே “விதுராந்நாநி புபுஜே சசீநி குணவந்தி ச” என்றார்.
விதுரரிட்ட அன்னத்தை ஏகவசனத்தாலே சொல்லி, கண்ண அமுது செய்த அந்த அன்னத்தையே பஹீவாசகத்தாலே நிர்தேசித்திருப்பதில் ஒரு விசேஷார்த்தம் தோன்றுமே; அதுவே யீண்டு நினைக்கத்தக்கது.
இப்படி யென்னை யநுபவிப்பவனான திருக்காட்கரையப்பனுக்கு, ஆளன்றே பட்டது என்னாருயிர் பட்டதே–அடிமை புக்கதாக நினைத்திருப்தத்தனையே; ஆத்மா படும்பாடு வாசாமகோசரம் என்றபடி.
எம்பெருமானோடு எதிரம்பு கோப்பவர்கள் உடம்மையிழப்பதோ, புண்பட்டதுக்கு மருந்து வைத்து ஆற்றுவதோ இத்தனையே செய்வது; உயிர் நோவுபடுவதென்பது அவர்களுக்கில்லை; இது ஆழ்வார்க்கே. அம்பு படுத்தும் பாட்டுக்கும் திருக்குணம் படுத்தும் பாட்டுக்கும் நெடுவாசியுண்டே.
—————-
***– கீழ்ப்பாட்டில் “ஆளன்றே பட்டது என்னாருயில் பட்டது” என்றார் ; எம்பெருமானுடைய திருக்குணங்களில் ஊடுபட்டவர்களான எல்லார்க்குமே இது ஸஹஜந்தானே ; உமக்கு மாத்திரம் அஸாதாரணமோ ! என்று சில் கேட்பதாகக் கொண்டு நான் பட்டது யாரும் பட்டிலரென்கிறாரிப்பாட்டில்.
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9-
பதவுரை
| பேர் இதழ் தாமரை கண் |
– |
பெரிய விதழை யுடைய தாமரை போன்ற திருக்கண்களையும் |
| கனி வாயது ஓர் |
– |
கனிபோந் சிவந்த வாயையுமுடைத்தா யிருப்பதொரு |
| சார் எழில் மேகம் |
– |
கறுத்தழகிய மேகம் போன்ற வாயையுடையவனாய்க் கொண்டு |
| தென்காட்கரை கோயில்கொள் |
– |
திருக்காட்கரையை உறைவிடமாகக் கொண்ட |
| சீர் எழில் நால் தட தோள் |
– |
அழகுமிக்க நான்கு திருத் தோள்களையுடையனாய் |
| தெயவம் வாரிக்கு |
– |
தெய்வங்களுக்குக் கடல் போன்வனான பெருமானுக்கு |
| எனது உயிர் பட்டது |
– |
என்னாத்மா பட்டபாடு |
| ஆர் உயிர் பட்டது |
– |
வேறு யாருடைய ஆத்மா பட்டது? (நான் பகவத் விஷயத்தில் பட்டபாடு ஒருவரும் படவில்லை யென்கை) |
எனுயிர் பட்டது ஆருயிர் பட்டது?=நான் பட்ட பாட்டை நித்யஸுரிகளிலேதான் பட்டாருண்டோ? குணுநுபவனே யாத்ரையான நித்யஸுரிகளும் இப்பாடு பட்டிலரே.
“இங்கு எனதுயிர் பட்டது அங்கு ஆருயிர் பட்டது” என்று எம்பெருமானாரருளிச் செய்வாராம்.
ஆழ்வாருடைய உயிர்அழிந்தற்கு ஹேதுக்களைச் சொல்லுகிறது மேல்;
[பேரிதழ்த் தாமரைக்கண் கணிவாயதோர்] திருக்கண்களும் திருவதரமும் படுத்தினபாடு [காரெழில்மேகத் தென்காட்கரை கோயில் கொள்] வடிவுபடுத்தின பாடும் கோயில் படுத்தின பாடும்
[சீரெழில் நாற்றடந்தோள்] கற்பகக் காவன நற்பல தோள்கள் படுத்தின பாடு.
தெய்வவாரி–எம்பெருமானுக்கு ஆழ்வாரிட்ட திருநாமங்களுள் இதுவுமொன்று;
வாரி யென்னும் வட சொல் ஜலத்தைச் சொல்லுமதானாலும் ஜலநிதியான கடலைக் குறிக்குமிங்கு.
தைவங்கள் படுங் கடல்; தைவங்களுக்கு உத்பாதகன்றபடி.
“தெய்வவாரிக்கு எனதுயிர் பட்டது ஆருயிர் பட்டது” என்று அந்வயம்.
————-
***– திருவாய்மொழி யாயிரத்தினுள்ளும் இப்பாட்டு உயிரானதென்னலாம்.
ஈச்வர லாபம் சேதநர்களுக்குப் புருஷார்த்தமா? சேதநலாபம் ஈச்வரனுக்குப் புருஷாத்தமா? என்றொரு விசாரம் ஸம்ப்ரதாய ரஸிகர்கள் செய்வதுண்டு; சேதநலாபந்தான் ஈச்வரனுக்குப் புருஷார்த்தம் என்பதே ஸித்தாந்தம்.
எம்பெருமான் ஸ்ருஷ்டியவதாரதிமுகத்தாலே க்ருஷி பண்ணுவதெல்லாம் ஒரு சேதகன் நமக்குக் கிடைப்பனாலென்கிற நப்பாசையினாலன்றோ.
கீதையிலே *ஸ மஹாத்மா ஸூதுர்லப * என்று கண்ணீர் பெருக நின்று சொல்லுகிற வார்த்தையன்றோ.
*வாஸூதேவஸ் ஸர்வ மென்றிருக்கிற மஹாத்மா எனக்குக் கிடைக்க வில்லையே ! என்றன்றோ சொல்லுகிறான். பாடுப்டடத் தேடிப்பாத்தும் கிடையாமையாலே வருந்திச் சொல்லுகிற வார்த்தை இது என்று நன்கு தெரிகிறதன்றோ.
எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யத்தில் *அநாவ்ருத்தி ஸூத்ர பாஷ்யத்தில் (அதாவது ஸ்ரீபாஷ்த்தின் முடிவில்) *நச பரமபுருஷஸ் ஸத்யஸங்கல்ப அத்யர்த்தப்ரியம் ஜ்ஞாநிநம் லப்த்வா சதாசித் ஆவர்த்தயிஷ்யதி * என்பதில் “ஜ்ஞாநிநம் லப்த்வா ” என்கிற அற்புதமான ஸ்ரீஸூக்தியினால் இப்பரமாத்தத்தை ப்ரகாசிப் பித்தருளினார்.
இப்பரமாத்தந்தன்னை ஆழ்வார் ஸ்வாநுபவ முகத்தாலே இப்பாட்டில்தெளியவைத் தருளுகிறார்.
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-
பதவுரை
| உன்னை நானில் |
– |
உன்னைக் காணப் பெறில் |
| வாரிக் கொண்டு விழுங்குவன் என்று |
– |
கபளீகரிப்பேனென்ற |
| ஆர்வு உற்ற |
– |
ஆசைகொண்ட |
| என்னை ஒழிய |
– |
என்னளவன்றியே |
| என்னில் முன்னம் பாரித்து |
– |
(இப்படி செய்யவேணுமென்று) எனக்கு முன்னமே மனோரதித்து |
| தான் என்னைமுற்ற பருகினான் |
– |
என்னை நிச்சேஷமாகக் கபளி கரித் தவனான |
| கார் ஒக்கும் காட்கரை அப்பன் |
– |
காளமேகம் போன்ற திருக்காட்கரையப்பன் |
| கடியன் |
– |
ஸ்வகார்யத்தில் பதற்ற முன்னவன் |
இப்பாட்டில் “என்னில் முன்னம் பாரித்துத் தானென்னை முற்றப் பருகினான் ” என்றது ஸத்ஸம்ப்ரதாய ரஸிகர்களின் நெஞ்சை யுருக்கும் வார்த்தை.
‘உன்னைக்காணில் வாரிக் கொண்டு விழுங்குவேன் ‘ என்று தாம் ஆசைப்பட்டிருந்தாகவும்,
தமக்கு முன்னே நெடுநாளாக எம்பெருமான் தம் விஷயத்தில் இங்ஙனே பாரித்திருந்து தன்னுடைய மனோரதமே தலைக்கட்டப் பெற்றான். என்றருளிச் செய்தவிதனால் ஸ்வகத ஸ்வீகாரத்திலுங்காட்டில் பரகத ஸ்வீகாரமே வலிதென்றும், அதுதான் முற்பட்டதாயிருந்து கார்யகரமாகின்ற தேன்றும் சொவிற்றாயிற்று.
கீழ்ப்பாட்டுக்களில் “என்னுயிருண்ட மாயன் ” என்றும், “என்னுயிர்தானுண்டான் “என்றும், “என்னைமுற்றவுந் தானுண்டான் ” என்றும் எம்பெருமான் உண்டபடியைச் சொன்னார்;
உண்டவனுக்குத் தண்ணீரும் அபேக்ஷிதமாயிருக்குமே ; தண்ணீர் குடித்தபடி சொல்லிற்று இப்பாட்டில்
தானென்னை முற்றப் பருகினான் என்று இவருடைய உண்ணுஞ்சோறு பருகுநீர் அவன் அவனுடைய உண்ணுஞ்சோறு பருகுநீர் இவர்.
—————–
***– இந்தத் திருவாய்மொழி கற்றார்க்குப் பிறவி முடிந்து அதுக்கடியான ஸம்ஸாரமும் நசிக்குமென்று பயனுரைத்துத் தலைகாட்டுகிறார்.
கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11-
பதவுரை
| கடியன் ஆய் கஞ்சனை பிரான் தன்னை |
– |
விரைந்து கம்ஸனைக் கொன்ற கண்ணபிரான் விஷயமாக |
| கொடி மதில் தென் குரு கூர் சடகோபன் சொல் |
– |
ஆழ்வாரளிச் செய்த |
| வடிவுஅமை ஆயிரத்து |
– |
சொற்பொருளழகு பொலிந்த ஆயிரத்தினுள்ளும் |
| இ பத்தினால் |
– |
இப்பதிகத்தினால் |
| எம் சன்மம் முடிவு எய்தி |
– |
நம்முடைய ஜன்ம பரம்பரைகள் முடிவு பெற்று |
| கானல் |
– |
கானலென்னும்படியான ஸம்ஸாரம் |
| நாசம் கண்டீர்கள் |
– |
நாசமடைந்தொழியு மென்பது திண்ணம். |
கீழ்ப்பாட்டின் முடிவில் “காட்கரை யப்பன் கடியனே” என்றார்; இப்பாட்டின் தொடக்கத்தில் “கடியனாய்” என்கிறார்;
சொல் ஒன்றாயிருந்தாலும் பொருள் வேறுபட்டிருக்கும்.
“காட்கரையப்பன் கடியன்” என்ற விடம்–தம்மை யநுபவிப்பதில் விரைவு கொண்டவன் என்றபடி. “காற்றிற் கடியனாய்” என்றதுபோல.
இங்கே, கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரானென்றது–கோபத்தை யேறிட்டுக் கொண்டவனாய்க் கம்ஸனை முடித்வனென்றபடி.
கஞ்சனைக் கொன்ற பிரானென்றவுடனே “கொடிமதின் தென்குருகூர் ” என்கையாலே இந்த ஸமபிவ்யாஹாரத்திற்குச் சேர நம்பிள்ளை யருளிச் செய்வது பாரீர்– “கம்ஸ விஜயத்துக் கொடி கட்டிற்று திநகரியிலேயாய்த்து ஸ்வாமி விஜயத்துக்கு உரியவடியாரிருந்தவிடத்தேயிறே கொடி கட்டுவது ” என்று.
வடிவு அமை ஆயிரம்=எம்பெருமானுடைய ஸ்வரூபரூபகுண விபூதிகள் யாவும் அழகாக அமையப் பெற்றவாயிரம் என்றபடி.
அதில், இப்பத்தினால் சன்மம் முடிவெய்தி=கீதை யில் ஜந்ம கர்மச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத, த்யக்த்வா தேஹம் புநர்ஜன்ம நைதி மாமேதி ஸோர்ஜீ என்று தன்னுடைய அவதார சேஷ்டிகதங்களை யநுஸந்திப்பார்க்குச் சொன்ன பலனைப்பெற்று.
எங்கானல் நாசங்கணடீர்கள். கானலாவது ம்ருகத்ருஷ்ணிகை ஒன்றுமின்றிக்கே வீணாசையைப் பிறப்பிக்குமது கானலெனப்படும்.
அப்படிப்பட்டதான இந்த ஸம்ஸாரத்திற்குக் கானலெனும் பெயர் மிகப் பொருந்தும்.
————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Related
This entry was posted on November 15, 2022 at 2:10 am and is filed under திரு வாய் மொழி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply