***– பெரிய பிராட்டியாரோடும் திவ்யாயுதங்களோடுஞ் சேர்ந்த சேர்த்தியைக் காண்பதற்குத் தமது கண்கள் விடாய்த்திருக்கிறபடியைப் பேசுகிறாரிதில். *** வைகுண்டே து பரே லோசே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதிய ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர்பாகவதைஸ் ஸஹ என்றோதப்பட்ட நிலைமையைக் கண்டு களிக்க வேணுமென்கிறாராயிற்று.
மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-
பதவுரை
| மை ஆர் கருகண்ணி |
– |
மையணிக் கருங்கண்களையுடையவளும் |
| கமலம் மலர் மேல் |
– |
தாமரைப் பூவின் மேலிருப்பவளுமான |
| செய்யாள் |
– |
சிவந்த நிறமுடைய பிராட்டி |
| திருமார்வினில் சேர் |
– |
திருமார்பிலே சேரப்பெற்ற |
| திருமாலே |
– |
ச்ரிய பதியே |
| வெய்யார் |
– |
ம்மை விஞ்சின |
| சுடர் ஆழி |
– |
ஒளிமிக்க திருவாழியையும் |
| அரி சங்கம் |
– |
அழகிய ஸ்ரீபாஞ்ச ஸந்யத்தையும் |
| பந்தும்கையா |
– |
ஏந்தின திருக்கைகளையுடையவனே |
| என் கண் |
– |
எனது கண்களானவை |
| உன்னை காண கருதும் |
– |
உன்னைக் காண விரும்பாநின்றன. |
மையார்கருங்கண்ணி = ஆச்ரயணகாலமென்றும் அநுபவகால மென்றும் இரண்டு மையங்களுண்டு; ஆக்ரயண காலத்தில் பிராட்டியைப் புருஷகாரமாகக் கொள்ளவேணும் அநுபவ காலத்தில் அவளும் அவனுமான சேர்த்தியிலே அடிமை செய்ய வேணும்.
ஆக இரண்டு தசையிலும் பிராட்டியின் ஸம்பந்தம் அவர்ஜநீயமாயிருக்கையாலே மையத்திற்கு தகுந்தபடி உபயோகப்படுவதற்காகப் பிராட்டி நித்யோக முடையளாயிருப்பன்.
ஆச்ரயண காலத்தில் சேதநர்களைக் குற்றங்கண்டு சீறாமல் அங்கீகரிக்கச் செய்வதற்காக முதலிலே எம்பெருமானுக்கு உபதேசங்கள் செய்வள். அந்த வுபதேசங்கள் பவிக்கமாற் போமளவில் தன்னழகைக் காட்டி அதிலே அவனை யீடுபடுத்தித் தன்சொற்படி உடக்கச் செய்வேன்.
இவ்விஷயத்தை ஸ்ரீவசக பூஷணத்திலருளிச் செய்யுமிடத்து “உபதேசத்தாலே மீளாதபோது … ஊச்வரனை அழகாலே திருத்தும்” என்கிறார் பிள்ளை லோகாச் சாரியர்.
அவ்விடத்து வியாக்கியானத்தில் மணவாள மாமுனிகள்–”ஈச்வரனை அழகாலே திருத்துகையவது–ஒங்ராண்போ, உனக்குப் பணியன்றோவிது” என்று உபதேசத்தை யுதறினவாறே கண்ணைப் பாட்டுதல் கச்சை நெகிழ்தல் செய்து தன்னழகாலே அவனைப் பிச்சேற்றித் தான் சொன்னபடி செய்ய நல்லது நிற்கமாட்டாதபடி பண்ணி அங்கீகாரோந் முகனாக்குகை என்றருளிச் செய்கிறார்.
ஆகவே நம்முடைய வாழ்ச்சிக்குப் பிராட்டியில் திருக் கண்களே மூலகாரணமாதலால் அக் கண்ணழகை முந்துறப் பேசுகிறார்.
ஸ்ரீராமாயணத்தில் ‘அஸிதேக்ஷணு’ என்று பவகானுஞ் சொல்லுகிறபடியே பிராட்டி இயற்கையாகவே கருங்கண்ணி மையிட்டுக் கருமை ஸம்பாதிக்க வேண்டியதில்லை. ஆயினும் மங்கள ஈர்த்தமாகவே மையிடுகிறபடி.
கமல மலர்மேல் செய்யாள்– – பந்மே ஸ்திதாம் பத்மவர்ணாம் என்கிற ஸ்ரீஸூந்த வாக்யத்தை அப்படியே மொழி பெயர்த்தபடி காண்மின் தாமரைப் பூவிலிருந்தவள்
பாதாருந்துதமேவ பஞ்கஜாஜ என்று ஸ்ரீ குணரத்க கோசத்திலே பட்டர் அருளிச் செய்தபடியே அத்தாமரைப் பூவில் துகள் திருவடிக்கு உறுத்தினவாறே அதைவிட்டு எம்பெருமானுடைய திருமார்விலே சேரப் பெற்றாள். அது சொல்லுகிறது திருமார்வினில் சேர் என்று,
திருமாலே–மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை என்று ஆண்டாளருளிச் செய்த படியே, பிராட்டியாலே தான் பிச்சேறி, தான் அவளைப் பிசெற்றுமவனென்கை. இவ்வழகை யெல்லாங்காண ஆழ்வார் ஆசைப்படுகிறபடி.
கீழே பெரிய பிராட்டியாருடைய சேர்த்தியைச் சொன்னவுடனே திருவாழி திருச் சங்குகளின் சேர்த்தியை முன்றாமடியினாற் சொல்லுகையாலே
இதிலிருந்து கண்ட ஒரு ரஸ விசேஷத்தை நம்பிள்ளை யருளிச் செய்கிறார் காண்மின்–”இவள் கையில் லீலாரவிந்தம் அவனுக்கு போக்யமாயிருக்குமா போலே போயிற்று அவன் கையில் திவ்யாயுதங்கள் இவளுக்கு இனிதாயிருக்கும்படி” என்று,
இத்தால், பிராட்டி பூவேந்தி யிருக்குமாபோலே எம்பெருமான் ஆயுதவிசேவர்களை ஏந்தியிருக்கிறபடி என்றதாயிற்று.
ஏந்துங்கையா ! என்கையாலே வெறுந்திருக்கைகளை வெறுந் திவ்யாயுதங்களை மன்றிக்கே இரண்டுஞ் சேர்ந்த சேர்த்தியையே தாம் காண பட்டிருப்பது செரிவிக்கப்படதாயிற்று.
உன்னைக்காண–லசஷ்மீ ஸம்பந்தத்தோடு திவ்யாயு தங்களோடும் திவ்ய விக்ரஹத்தோடுங் கூடியிருக்கிற வுன்னைக் காண என்றபடி.
காண நானாசைப்படுகிறே வென்னாமல் என் கண் காணக்கருதும் என்றது – என்பசி கிடக்கட்டும் ப்ரஜையின் பசியைப் போக்குவாய் தாயே! என்று இரப்பாளர் சொல்லுமடையிலே அமைந்துள்ளது.
————-
***– கீழ்ப்பாட்டில் தம்முடைய கண்களுக்குண்டான நசையைப் பேசினார். இப்பாட்டில் தமக்கும் தம்முடைய நெஞ்சுக்குமுண்டான சாபலத்தைச் சொல்லுகிறார்.
கண்ணே உன்னைக் காணக் கருதி என்நெஞ்சம்
எண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே – -9-4-2-
பதவுரை
| கண்ணே |
– |
எனக்குக் கண்ணாளவனே |
| என் நெஞ்சம் |
– |
எனது நெஞ்சானது |
| உன்னைகாண கருதி |
– |
உன்னையே காண வாசைப்பட்டு |
| எண்ணே கொண்ட சிந்தையது ஆய் என்று |
– |
பல பல மநோரதங்களைப் பண்ணி நின்று |
| இயம்பும் |
– |
அலற்றா நிற்கும் |
| நான் |
– |
நானோ வென்னில் |
| விண்ணோர் |
– |
தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் முனிவர்க்கு |
| என்றும் காண்பு |
– |
என்றும் காணவரியளன உன்னை அரியாயை |
| கண்ணா தொழியேன் என்று அழைப்பன் |
– |
கிட்டாமல் விடுவதில்லை யென்று உறுதி கொண்டு கூப்பிடா நின்றேன். |
எம்பெருமானைக் கண்ணே! யென்று விளக்கிறார். •••• தேவாநாமுத மர்த்யாநாம் என்று கருதியும் எம்பெருமானைக் கண்ணாகச் சொல்லிற்று. எல்லாவற்றையுங் காண்பதற்குக் கண் ஸரதனமாயிருப்பதுபோல அவனைக் காண்பதற்கும் அவனே ஸாதனமாயிருத்தலால், அவனைக் கண்ணெனத் தனும். கண்ணிழந்தவர்கள் எதையும் காண மாட்டாததுபோல எம்பெருமானை யிழந்தவர்களும் எதையும் காணமாட்டாமையு முணர்க.
“என்னெஞ்சம் என்னைக் காணக் கருதி” என்று, தம்முடைய நெஞ்சு அவனைக் காணக் கருவதாகக் கூறுகிறார். மநஸ் ஸஹகாரமுடைய கண்காண்பதையே இங்ஙனம் கூறினாரென்க.
தாம் மனத்தை ஓரிடத்தே வைத்துவிட்டுக் கண்ணை மற்றோரிடத்தே செலுத்தினால் அக் கண்ணுக்கு ஒன்றும் புலப்படாதென்பது அநுபவஸித்தம். காண்கைக்குக் கண் கருவியானாலும் நெஞ்சுதான் முக்கியமான கருவியென்பது இதனால் பெறப்பட்டது.
ஸம்ஸாரிகளுடைய நெஞ்சும் கண்ணும் விஷயாந்தரங்களிலே பரகுபாகென்று பரந்திருக்கும்.
ஆழ்வாருடைய நெஞ்சும் கண்ணும் •••• –யஸ்யாம் ஸாசரதி பூதாநி ஸா நிசர பச்யதோ முநே என்று கீதையிலே சொன்ன கணக்கிலே வகுத்த விஷயமோன்றிலேயே ஏகாக்ரமாயிருக்கும்.
•••• சசணீச்ச த்ரஷ்டவ்யஞ்ச நாராயண, ச்ரோத்ரஞ்ச ச்ரோதவ்யஞ்ச நாராயண: என்ற உபநிஷத்து ஆழ்வார் பக்கலிலேயே ஸமந்வயம் பெறுமென்க.
எண்ணேகோண்ட சிந்தையதாய் நின்று– ‘எண்கொண்ட’ என்றது–பல எண்ணிக்கைகளைக் கொண்ட என்றபடி, ‘ருணவாந்’ என்றால் பல குணங்களையுடையவனென்றும், ‘தநவாந்’ என்றால் பல தனங்களையுடையவனென்றும் பொருள்படுவதொக்கும். பலபல மனோரதங்களைப் பண்ணாநின்றதென்றபடி.
ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் ••••”சுதாஅஹம்” என்று தொடங்கி” – •••ஆசாம் வர்த்தயித்வ” என்னுமளவும் அருளிச் செய்யப்பட்டுள்ள மநோரத ப்ரகாரங்களை நினைப்பது.
நின்று இயம்பும்–நிரந்தமாகக் கதறாநின்ற தென்றபடி ஆக நெஞ்சு ஒன்றே கண்ணின் செயலையும் வாக்கின் செயலையும் ஏறிட்டுக் கொண்டமை சொல்லிற்றாயிற்று.
இனி தம்முடைய செயலைச் சொல்லுகிறார் விண்ணோர் என்று தொடங்கி. பிரமன் முதலிய தேவர்கட்கும் ஸநக ஸநந்தநாதி மஹர்ஷிகளுக்குங்கூட நீ துர்லபனென்பதை நானறிவேன்.
அவர்களுக்கு துர்லபனானால் எனக்கும் துர்லபனாக வேணுமென்று நிர்ப்பந்தமில்லையே. மயர்வற மதிநலமருளப்பெற்ற ஏற்றம் எனக்குண்டே
ஆகவே நான் உன்னைக் கிட்டா தொழியேன், கிட்டியே தீருவேன் என்று திடமான அத்யவஸாயங் கொண்டு கூப்பிடா நின்றேன் என்றாராயிற்று.
———————
*** – கீழ்ப்பாட்டிற்படியே கூப்பிடச் செய்தேயும் அவன் வந்தருளக் காணாமையாலே, ஆர்த்தியே செப்பேடாக வந்து ரக்ஷிக்குமவனான உன்னுடைய திருவருளுக்கு நான் புறம்பானேனோ? என்கிறார்
அழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாலால்
குழைக்கின்றது போல் என் உள்ளம் குழையும்
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே–9-4-3-
பதவுரை
| அழைக்கின்ற அடி நாயேன் என் உள்ளம் |
– |
கூப்பிடா நின்றுள்ளவனாய்த் திருவடிவாரத்தில் விழுந்து கிடக்கும் நீசனாள என்னுடைய உள்ளமானது. |
| என் கூழை லாலால் குழைக்கின்றது போல குழையும் |
– |
நாயானது குட்டை வாலையசைத்து தன்னினைவைக் காட்டுமாபோலே காட்டா நின்றது. |
| அன்று |
– |
முன்பொரு காலத்தில் |
| மழைக்கு குன்றம் எடுத்து |
– |
பெருமழையைத் தடுக்கக் கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்து |
| ஆ நிரை காலத்தாய் |
– |
பசுக் கூட்டங்களை ரக்ஷித்தவனே! |
| அருள் பிழைக்கின்றது என்று |
– |
உன்னருள் (என்பக்கலிலே) தடுமாறிப் போகின்றதேயென்று |
| பேது உறுவன் |
– |
கலங்கா நின்றேன். |
அழைக்கின்ற அடிநாயேன் = என்னுடைய தன்மையை நான் நன்கறிந்துள்ளேன்; ஊருண்கேணியிலே கள்ளியை வெட்டியெறிந்தால் அது எப்படி அவத்யமடையுமோ, அப்படியே நான் உன்னைக் கிட்டினால் உனக்கு அவத்யமாகுமென்பதை அறியாதிருக்கின்றேனல்லேன், நன்கறிந்தே யிருக்கின்றேன். ஆனாலும் ருசி வெநுமனிருக்க வொட்டாமையாலே ஆர்த்தியாலே கூப்பிடாநின்றேன்.
உலகில் நாயானது தன்னுடைய தலைவனுக்குத் தன் ஆவலைத் தெரிவிப்பது தன் வாலினாலன்றோ; அந்த வால் குட்டையானால், தெரிவிக்கை அரிதாம் ; ஐயோ தெரிவிக்க முடியவில்லையே யென்று நோவு பட்டுக் கிடக்கும் ; அதுபோல என்னுள்ளமும் நோவுபட்டுக் கிடவா நின்றது என்கிறார்.
இங்குக் காட்டின த்ருஷ்டாந்தத்தினால் இரண்டு வகையான கருத்துத் தேறும் ; ஆழ்வாருடைய திருவுள்ளத்திலோடுகிற கிலேசம் வாய்விட்டுத் தெரிவிக்க முடியாதது என்பதொன்று; நாய் ஸா தனமில்லாமல் கிலேசப்படுவதுபோல, தாமும் ஸாதனமில்லாமல் கிலேசப்படுவதாகச் சொல்லுதல் மற்றொன்று.
இப்படி சொல்லக்கேட்ட எம்பெருமான் ‘கைம் முதலில்லையென்று தெரிந்து கொண்ட நீர் என்னை வடிம்பிடுவதேன்?’ என்ன ; பின்னடிகளால் அதற்கு மறுமாற்ற முரைக்கின்றார் ;
இந்திரன் பசிக்கோபத்தினால் ஏழுநாள் விடாமழை பெய்வித்த போது குன்றமேந்திக் குளிர் மழை காத்த மஹா குணத்தையும் மஹா கருணையையும் நம்பியன்றோ நாங்களிருப்பது. அத்திருவருள் பசுக்களுக்குத் தான் என்று ஒரு நியதி யுண்டோ?
என்போல்வாரிடத்தில் அது ப்ரஸரிக்கக் கூடியதுதானே! அக்குணத்திற்கு நான் புறம்பாகிறேனோவென்று கலங்காநின்றேனென்கிறார்.
—————–
உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண்
பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே–9-4-4-
பதவுரை
| வானவர் தானவர்க்கு |
– |
அதுஉலர்க்கும் பிரதி கூலர்க்கும் வாசியற |
| என்றும் அறிவது அரிய |
– |
எப்போதும் அறிய வொண்ணாத |
| அரிய ஆய அம்மானே |
– |
நரஸிம்ஹ மூர்த்தியே |
| இனி உறுவது என்று |
– |
‘இதுதான் ஸ்வரூபா நுரூபம்’ என்றறுதி யிட்டு |
| உனக்கு ஆள்பட்டு |
– |
உனக்கு சேஷ பூதனாகி |
| நின் கண் பெறுவது எது கொல் என்று |
– |
உன் பக்கலில் நான் பெறக் கூடிய பேறு எதுவோவென்று [நித்ய கைங்கரியமோ அல்லது ஸம்ஸார்க்த்தானோ வென்று] |
| பேதையேன் நெஞ்சம் |
– |
அறிவிலியான என்னுடைய நெஞ்சானது |
| மறுகல் செய்யும் |
– |
கலங்கா நின்றது |
**– தமக்குண்டான வொரு கலக்கத்தை விண்ணப்பஞ் செய்கிறார்.
‘எம்பெருமானுக்கு ஆட்படுவது தான் ஸ்வரூபா நுரூபம்’ என்று துணிந்து அவனுக்கு ஆட்பட்ட பின்வு கலங்குவதற்கு நியாயமில்லை;
அப்பெருமான் நமக்குநன்மையே செய்தருள்வான்; என்கிற துணிவோ, அல்லது ‘அவன் நமக்கு எது செய்தாலும் அது நமக்கு ப்ராப்யமே’ என்கிற துணிவோ, இரண்டத்தொன்று இருந்து தீரவேண்டும்
செய்த்தலை யெழு நாற்றுப்போல் அவன் செய்வன செய்து கொள்ள என்று துணிந்து கவலையற்றிருக்க வேண்டியது ப்ராப்தமாயிருக்க, அந்தத்துணிவு நமக்கு உண்டாகாமல் ‘நித்ய கைங்கர்யம் நேருமோ? அல்லது ஸம்ஸாரத்தில் இன்னமும் கிடந்துழல்வதேயாகுமோ?’ என்கிற கலக்கமே உண்டாகியிருப்பதாக விண்ணப்பஞ் செய்கிறார்.
உறுவது இதுவென்று–மேலே ‘ஆட்பட்டு’ என்றிருக்கையாலே இதுவென்பதற்குப் பொருள் ஆட்படுகையேயாம்.
‘உண்டியே உடையே உகந்தோடுவது நமக்கு உற்றதன்று; எம்பிரானுக்கு ஆட்படுகைதான் உற்றதாகும்’ என்று கொண்டு=என்றபடி,.
உனக்கு ஆட்பட்டு–அவ்வுறுதி கொண்டவளவோடு நில்லாமல் அவ்வுறுதியை அநுஷ்டான பர்யந்தமாக்கி யென்றபடி.
விழிக்குங்கண்ணிலேன் நின்கண்மற்றல்லால் வேறொருவரோ டென்மனம் பற்றாது என்றும், உனக்குப்பணி செய்திருக்குந் தவமுடையேன் இனிப்போயொருவன் தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின்சாயை யழிவுகண்டாய் என்றும், எற்றைக்கும் மேழேழ்பிறவிக்கு முன்றன்னோடுற்றோமேயாவோம் உனக்கே நாமாட் செய்வோம் என்றும் கொண்டிருந்து என்றபடி.
இப்போது இதுசொல்லுகிறது எதற்காக வென்னில் ; “நின்கண்பெறுவ தெதுகொலென்று பேதையேன்னெஞ்சம் மறுகல்செய்யும்” என்று மேலே சொல்லப்படுகிற விஷயம் இவ்வுறுதிக்குத் தகுந்ததாக இல்லையே! என்பதற்காகச் சொல்லுகிறது.
இவ்வுறுதி எனக்கு உண்டாகாமலிருந்தால் நான் கவலைப்படலாம் ; இவ்வுறுதியைப் பெற்றுவைத்தும் நான்கலைப்படுறிது தகுதியன்றோ; தகாதது நேர்ந்திருக்கிறதே ! என்று கிலேசிக்கிறார்.
நிண்கண் பெறுவது எதுகொல் என்று – செய்கிறோம் செய்கிறோமென்று தலைதுலுக்கிக் கொண்டிருந்து இன்னமும் மாறிமாறிப் பலபிறப்பும் பிறக்க வைக்கிறாயோ அல்லது என்னாற்றாமையையறிந்து விரைந்து வந்து முகங்காட்டுகிறாயோவென்று நெஞ்சு தளும்பா நின்றதாம்.
இதுகேட்ட எம்பெருமான் ‘ஆழ்வீர்! நீரிப்படி கலங்குவதற்குக் காரணன்?’ என்று கேட்க, அக்காரணமுரைக்கும் முகத்தால் எம்பெருமானை விளிக்கிறார்
வானவர் தானவர்க்கென்று மறிவதரிய அரியாயவம்மானே ! என்று பிரதிகூலர்களான தானவர்க்குப் போல அநுகூலர்களான வானவர்க்கும் அறியவொண்ணாதவனாயிருந்தாயே, என்னையும் அவர்கள் கோடியிலே யாக்குகிறாயோ வென்று கலங்கா நின்றேனென்றபடி.
அரியாயவம்மமோ என்று நரஸிம்ஹனையுங்கூடச் சேர்த்துச் சொன்னதனால் ஒரு சிறுக்கனுக்கு (ப்ரஹலாதனுக்கு) உன்னை உள்ளபடி அறியலாயிற்றே; அவனுடைய கோடியில் தான் என்னைச் சேர்க்கிறாயோ? என்று கேட்பதாகவும் தெரிகிறது.
—————–
***– ஆழ்வார்தாம் தம்முடைய கலக்கத்தைக் கீழ்ப்பாட்டில் வெளியிட்டவாறே எம்பெருமான்
ஆழ்வீர்! நாம் சிலர்க்கு அருமைப்பட்டிருக்கிறோமென்பது கிடக்கட்டும் ; பத்துடையடியவர்க்கு எளிவன் என்பதை நீர் ஆதியிலேயே அறிந்து பேசினவரல்லீரோ? நான் பிறர்க்கு அரியனாயிருப்பது கொண்டு உமக்கென்ன வருத்தம்? உமக்கு எளியனே காணும் உமக்கு வேண்டுவதென்ன? அதைச்சொல்லும் என்றருளிச்செய்ய காண்கைதான் வேணுமென்கிறார்.
அரியாய அம்மானை அமரர் பிரானைப்
பெரியானைப் பிரமனை முன் படைத்தானை
வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற
கரியான் கழல் காணக் கருதும் கருத்தே–9-4-5-
பதவுரை
| அரி ஆய அம்மானை |
– |
விரோதி நிஸந சீலனான ஸ்வாமியாய் |
| அமரர் பிரானை |
– |
நித்ய ஸுரிகளுக்கு அநுபாவ்யனாய் |
| பெரியாணை |
– |
அந்த நித்ய ஸுரிகளுக்கும் பரிச்சேதிக்க வொண்ணாதபெருமையை யுடையவனாய் |
| முன் பிரமனை படைத்தானை |
– |
முன்னம் நான்முகளை (உந்திக்கமலத்தில்) தோற்றுவித்தவனாய் |
| வரிவாள் அரவு இன் அணை பள்ளி கொள்கின்ற |
– |
அழகிய ஆதிசேக்ஷனாகிற பரமபோக்ய சயனத்திலே திருக்கண் வளர்ந்தருள்பவனான |
| கரியான் |
– |
கரிய பிரானுடைய |
| சுழல் காண |
– |
திருவடிகளைக் காண்பதற்கு |
| கருத்து கருதும் |
– |
என்னுள்ளம் கருதா நின்றது. |
அரியாய–ஹரியாய என்றபடி. •••• ஹரிர் ஹரதி பாபாநி துஷ்டசித்தைரபி ஸ்ம்ருத: என்கிறபடியே நினைத்த வளவிலே ஸகல பாபங்களையும் உரிக்கவல்லவைன.
அன்றியே, நாஹரியாய்த் தோன்றிச்சுறுக்கனுக்கு அருள் செய்தவனை அமரர் பிரானை–நித்யஸுரிகளுக்குத் தன்னைக் காட்டிக் கொடுத்து அநுபவிப்பிக்கும் உபகாரகன்.
பெரியானை–அந்த நித்யஸுரிகளுக்கு மெல்லைகாணவொண்ணாத பெருமை படைத்தவன்.
பிரமனை முன் படைத்தானை–நித்யவிபூதிநாதனாயிருக்கச் செய்தேயும் லீலாவிபூதிக்கும் மவிதைவிதைத்தவன்.
வரிவாளரவினணைப் பள்ளி கொள்கிநன்.லீலா வீபூதியைப் படைத்தது. மாத்திரமன்றிக்கே தத்ரக்ஷணத்திலும் தீக்ஷிதனாய் அரவணைமேல் உறங்குவான் போல் யோகுசெய்த பெருமானாயிருப்பவன் கரியான்–
••• ஏஷ நாராயண: ஸ்ரீமாந் க்ஷீரார்ணவ நிகேதந: நாகபர்யங்கமுத்ளருஜ்ய ஹயாகதோ மதுராம் பரீம் என்கிறபடியே அவ்வரவணையை விட்டு வடமதுரையிலே வந்து கண்ணனென்னுங் கருந்தெய்வமாய்ப் பிறந்தவன்
அன்றியே, வெளுத்த நிறத்தையுடைய திருவனந்தாழ்வான் மேலே ஒரு காளமேகம் அன்றியே, வெளுத்த நிறத்தையுடைய திருவனந்தாழ்வான் மேலே ஒரு காளமேகம் அன்றியே, வெளுத்த நிறத்தையுடைய திருவனந்தாழ்வான் மேலே ஒரு காளமேகம் சாய்ந்தாற்போன்று பரபாகசோபை விளங்கக் கண்வளர்ந்தருளுமவன் என்னவுமாம்
ஆக இப்படிப்பட்ட எம்பெருமானுடைய கழலைக் காணக்கருதுங் கருத்தே. படுக்கைக்குப் பாபாகமான வடிவையும், வடிவுக்குப் பாபாகமான திருவடிகளையும் காண்கையிலுண்டான விருப்பத்தை வெளியிட்டாராற்று.
—————-
***– கீழ் ஐந்து பாட்டுக்களாலும் ஆழ்வார் வெளியிட்ட ஆர்த்தியைக் கண்ட எம்பெருமான் ஒருவாறு இவருடைய ஆர்த்தியைத் தீர்ப்போமென்று திருவுள்ளம் பற்றி ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே வந்து புகுந்தான்; அவ்வளவிலே தம்முடைய நெஞ்சு உகந்து அநுபவிக்கிறபடியைப் பேசுகிறாரிதில்,
கருத்தே உன்னைக் காண கருதி என் நெஞ்சத்து
இருத்தாக இருத்தினேன் தேவர்கட்கு எல்லாம்
விருத்தா விளங்கும் சுடர் சோதி உயரத்து
ஒருத்தா உன்னை உள்ளும் என் உள்ளம் உகந்தே –9-4-6-
பதவுரை
| கருத்தே |
– |
என் கருத்தாக வுள்ள பெருமானே! |
| உன்னை காணகருதி |
– |
உன்னைக் கண்டநுபவிக்க வேணுமென்று மநோரதங் கொண்டு |
| என் நெஞ்சத்து |
– |
எழுந்திராத ஸ்திரப்ரதிஷ்டையாக |
| இருத்தினேன் |
– |
இருத்திக் கொண்டேன் |
| தேவர்கட்கு எல்லாம் விருத்தா |
– |
உயர்ந்தவர்களுக் கெல்லாம் உயர்ந்தவனே |
| விளங்கும் சுடர் சோதி உயரத்து |
– |
அளவு கடந்த தேஜோமயமான உயர்ந்த நிலத்திலே(பரம பதத்திலே) |
| ஒருத்தா |
– |
அத்விதீயனாய் எழுந்தருளியிருப்பவனே |
| என் உள்ளம் |
– |
எனது நெஞ்சானது |
| உன்னை உகந்து உள்ளும் |
– |
உன்னை ப்ரேமத்தோடு சிந்தனை செய்யா நின்றது. |
எம்பெருமானைக் கருத்தே! என்று விளிக்கிறார்; நான் தளராதபடி எனக்கு வலிமையையூட்டிக் கொண்டு நடத்திக் கொண்டு போருமவனே! என்றபடி, “எனக்கு மிடுக்கானவனே!” என்பது வியாக்கியானம்.
உன்னைக் காணக்கருதி என்றது– கரணவாசைப்பட்டவளவிலே யென்றபடி. அப்போதே நீ என்னெஞ்சிலே வந்து சேர்ந்த படியாலே யென்று கூட்டிக் கொள்வது. என்னெஞ்சத்து இருத்தாகவிருத்தினேன்–இனியொரு காலும் போகாதபடி ஸ்தாவர ப்ரசிஷ்டையாக என்னெஞ்சிலே யிருத்தினேன்.
நீ ஸாமான்யமாக என்னெஞ்சிலே வந்திருக்கத் தக்கவனல்லையே, நீ பராத்பரனல்லையோ வென்கிறார் இரண்டு விளிகளால்.
தேவர்கட்கெல்லாம் விருத்தா– ‘இவர்களுக்குமேல் உயர்ந்தவர்களில்லை’ என்னும் படியாக வுயர்ந்தவர்களுக்கெல்லாம் மேம்பட்டவனே! (•••) என்கிற வடசொல் விருத்தனென்றாகி அது விளியுருபு ஏற்றுக் கிடக்கிறது.
விளங்குஞ்சுடர்ச்சோதியுயரத்து ஒருத்தா–பரமபதமானது “சுடரொளியாய் நின்ற தன்னுடைச் சோதி” என்னும்படியான விடமாகையாலே விளங்குஞ் சுடர்ச்சோதியென்றே அத்திருநாட்டை நிர்தேசிக்கிறபடி. உயரத்து–உயர்ந்த நிலத்திலே யென்கை. ஒருத்தன்–அத்விதீயன்; இணையில்லாதவன்.
என்னுள்ளம் உன்னை உகந்து உள்ளும்–நீ பரமபதத்திலே யெழுந்தருளியிருந்து விண்ணாட்டவர் மூதுவர்களை அநுபவிப்பிக்குமாபோலே என்னை யநுபவிப்பிக்கையாலே என்னெஞ்சு மகிழ்ச்சியின் எல்லையிலே நிற்கின்றது என்படி.
—————-
***– ஒரு கால் தூணிலே வந்து தோன்றி ப்ரஹலாதாழ்வானுடைய ஆர்த்தியைத் தீர்த்தாப்போலே தம்முடைய ஆர்த்தியைத் தீர்த்தருவினதாக நினைத்து ஏத்துகிறார். “என்னுள்ளம் உன்னை உகந்தேயுள்ளும்” என்று கீழ்ப்பாட்டிற் பேசினவதுவே இப்பாட்டிலும் முக்கியமாகப் பேசப்படுகிறது.
அநுபவசாஸ்த்ரத்தில் புநருக்தி தோஷம் சங்கிக்க வொண்ணாதே. ஆனந்தாநுபவத்தின் உறைப்பு இருக்கிறபடி.
இங்கு ஈடு–பிரிந்து க்லேசத்தோடே தலைக்கட்டு முகப்பன்றிக்கே ஏகரூபமாக வுன்னை யநுபவிக்கும்படி என்று.
இதற்குப் பிறகு பிரிவாற்றாமை யுண்டாகிற தில்லையோவென்று சங்கிக்கலாகாது. இப்போதைய ஆனந்தம் எதிர்கால வருத்தத்தைக் கணிசிக்கமாட்டாதன்றோ.
நெஞ்சில் அவகாசமுள்ள விடமெங்கும் தானே யாம்படி நிறைந்த ஒளியுருவனே! உன்னை இல்லை செய்தது மாத்திரமன்றிக்கே உன் உயிர் நிலையிலே (ப்ரஹலாதனளவிலே) நலிவுசெய்த செருக்கனுடைய அகன்ற மார்வானது இரண்டு கூறாம்படி பண்ணவல்ல திருவுகிர்களையுடையவனே என்று சொன்ன விதனால், அடியார் ப்ரதிஜ்ஞை செய்த அந்த க்ஷணத்திலேயே வந்து தோற்றினாப்போலே வந்து தோற்றி என்னெஞ்சு நிறையப் புகுந்து என்னை யநுபவிப்பத்தருளினாய் என்றதாயிற்று.
உகந்தே யுன்னை உள்ளும் என்னுள்ளத்து அகம்பால்
அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட வமலா
மிகுந்தானவன் மார்வகலம் இரு கூறா
நகந்தாய் நரசிங்கமதாய வுருவே–9-4-7-
பதவுரை
| அகம் நான் ஏமர்ந்து |
– |
உள்ளே பொருந்தி |
| இடம் கொண்ட அமலா |
– |
இடங்கொண்டிருக்கின்ற அமலனே |
| மிரும் தானவன் மார்வு அகலம் |
– |
மிடுக்குமிக்க இரணியாசுரனுடைய அகன்ற மார்வை |
| இருகூறு ஆ |
– |
இருபிளவாக்கவல்ல |
| நகந்தாய் |
– |
நகத்தை யுடையவனே |
| நரசிங்கம் அது ஆய உருவே |
– |
நரசிங்க மூர்த்தியானவனே |
| என் உள்ளத்து அகம்பால் |
– |
எனது ஹருதயத்தின் மர்ம ஸ்தானமானது |
| உன்னை உகந்தே உள்ளும் |
– |
உன்னைப் பரமப்ரீதியோடு அநுபவிக்கின்றது. |
உகந்தே யுன்னையுள்ளுமென்று வினைமுற்றாக்கி விடாமல், உள்ளும் என்பதை என் என்பதிலே சிசேஷணமாக அந்வயித்து, உகந்தே உன்னை உள்ளுகின்ற (சிந்திக்கின்ற) என்னுடைய அகம்பாலகந்தான் அமர்ந்தே யிடங்கொண்டவமலா! என்று முன்னடிகளிரண்டையுஞ் சேர்த்து விளியாகக் கொள்வதும் பொருந்தும்.
அப்போது பாட்டு முழுவதும் விளியாக நிற்கும். வினைமுற்று கீழ்ப்பாட்டிலிருந்து கொண்டு கூட்டத்தக்கது.
ஈற்றடிபயின் முதலில், நகத்தாய்! என்றிருக்க வேண்டுவது எதுகையின்பம் நோக்கி ‘நகந்தாய்’ என்று கிடப்பதாக நம்பிள்ளை திருவுள்ளம். “வல்லெற்றை மெல்லொற்றாக்கிக் கிடக்கிறது” என்பது வியாக்கியானம். பன்னீராயிரவுரைகாரர், “நகம்–நகத்தை, தாய்–தாவும்படி பண்ணின” என்றுரைத்தனர்.
—————
உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்
அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம்
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே–9-4-8-
பதவுரை
| உரு ஆகிய |
– |
மேலெழுந்த பார்வையில் ஒன்று போலே தோற்றுகிற |
| ஆறு சமயங்கட்கு |
– |
புறமதங்களான அறு சமயங்களுக்கும் எல்லாம் |
| பொரு ஆகி நின்றான் அவன் |
– |
தடையாகி நிற்பவனும் |
| எல்லா பொருட்கும் அரு ஆகிய ஆகியை |
– |
ஸகல பதார்த்தங்களுக்கும் உயிர் நிலையாய்க் கொண்டு முதல்வனும் |
| தேவர்கட்கு எல்லாம் கரு ஆகிய |
– |
எல்லாத் தேவர்களுக்கும் காரண பூதனாமான |
| கண்ணனை |
– |
கண்ணபிரானை |
| கண்டு கொண்டேன் |
– |
கண்டு அநுபவிக்கப் பெற்றேன். |
*** – கீழிரண்டு பாட்டுக்களிலுண்டான களிப்பே இப்பாட்டிலும் தொடர்ந்து செல்லுகின்றது.
ஆறுசமயங்கட் கெல்லாம் பொருவாகிநின்றா னென்றதின் கருத்தை ஆறாயிரப் படியில் விவரித்தருளுகிறார்–”வேதபாஹயமான ஷட்ஸமயங்களில் நான் புகாதபடி பரி ஹரித்து” என்று.
அந்த பாஹயமதங்களினால் தன்னை இல்லைசெய்ய வொண்ணாதபடி நிற்பவன் என்பது நம்பிள்ளை காட்டின கருத்து.
பாஹயஸமயங்களினால் அசைக்க வொண்ணாதவ னென்றதாயிற்று.
சார்வாக, பௌத்த, க்ஷபணக, வைசேஷிக, ஸாங்க்ய, பாசுபதங்களென்னுமிவை அறுசமயங்களெனப்படும். அறுசமயச் செடியதனையடியறுத்தான் வாழியே என்றதுங்காண்க.
“உருவாகிய” என்ற விசேஷணத்தின் கருத்தாவது=ஒரு மதமென்று சொல்லக் கூடிய நிலையில்லாதிருக்கச் செய்தேயும் மேலெழுந்த பார்வையில் ஒரு மதம் போலே தோன்ற நிற்கிறவென்பதாம்.
இங்கு ஈட்டு ஸ்ரீஸீக்கி=ஆபாதப்ரதீதியில் ஒன்றுபோலேயிருக்க, சிலவற்றைவிதிப்பது சிலவற்றை நிஷேதிப்பது, நிஷித்தபரி ஹாரத்தைச் சொல்லுவதாய்க் கொண்டு உபதேசிப்பாரும் கேட்பாருமாய்ப் போருகிற பஹய மையங்களெல்லாவற்றாலும்” என்று.
பொருவாகிநின்றான்=பொருவென்று தடைக்குப் பெயர்: அவற்றுக்கு ப்ரதி படனென்றபடி. அவற்றல் தனக்கு ஒரு ஹானியும் நேரப்பெறாதவனென்கை
அருவாகிய–ரூபியான பொருளை உருவென்றும் அரூபியான பொருளை அருவென்றும் சொல்லக்கடவது, கண்ணுக்குப் புலப்படாததுவே அருவெனப்படும். தேஹம் புலப்படும் பொருளாய், ஆத்மா புலப்படாத பொருளாயிருக்கையாலே அருவென்று ஆத்மாவைச் சொன்னதாக முடிந்தது.
ஸகலபதார்த்தங்களுக்கும் அந்தராத்மாவா யிருப்பவனென்றதாயிற்று. இங்கு ஆதியை என்றது–உள்ளேயிருந்து நியாமகனாயிருப்பதனாலான முதன்மையைப் பற்றவென்க.
கருவாகிய–கருவென்று கர்ப்பம். காரணபூதனென்றபடி, காரணத்வத்தைச் சொன்னவுடனே கண்ணனை யென்கையாலே, இப்படி தான் ஸர்வகாரணபூதனாயிருக்கச் செய்தேயும் கார்யவஸ்துக்களிலே யொன்றுக்குத் தான் கார்யபூதனாயிருப்பவனென்கிற ஆச்சரியம் காட்டப்பட்டதாகும்.
இது அவனுடைய ஸங்கல்ப விசேஷப்ரயுக்தம். ஆக இப்படிப்பட்ட எம்பெருமானைக் கண்டு கொண்டேன்.
ஆழ்வார் க்ருஷ்ணாவதாரத்திற்குப் பிற்பட்டவராயிருக்க “கண்ணனைக் கண்டு கொண்டேனே” என்னக்கூடுமோ வென்கிற சங்கைக்கு நம்பிள்ளை பரிஹாரமருளிச் செய்கிறார் காண்மின்= “ப்ரேமார்த்ர சித்தர்க்கு என்றுங் காணலாம்; அவதாரஸமகாலத்திலும் காணவொண்ணாது சிசுபாலாதிகளுக்கு”
————-
***– தரம் அநுபவித்து ஆனந்திப்பதிற்காட்டிலும் பிறரையும் அநுபவிப்பித்து ஆனந்திருப்பது ஒப்புயர்வற்ற
ஆனந்தமாதலால் அவ்வானந்தமும் தமக்கு ப்ராப்தமானபடியை இப்பாட்டிலருளிச் செய்கிறார்.
கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9-
பதவுரை
| எண்கண் இணை ஆர கண்டு கொண்டு |
– |
என் கண்களிரண்டும் வயிறு நிறையும் படி கண்டு கொண்டு |
| களித்து |
– |
ஆனந்தித்து |
| பண்டை வினை ஆயின |
– |
அநாதி விரோதிகளான எல்லாவற்றையும் |
| பற்றோடு அறுத்து |
– |
வாஸனையோடே போக்கி |
| அண்டத்து அமரர் பெருமான் அடியேன் |
– |
நித்யஸுரி நாதனுக்கு அடியேனான நான் |
| தொண்டர்க்கு அமுது உண்ண |
– |
பக்தாம்ருதமாக |
| சொல் மாலைகள் சொன்னேன் |
– |
இத்திருவாய்மொழியை விண்ணப்பஞ் செய்யப்பெற்றேன். |
“தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்” என்ற மூன்றாமடி இப்பாட்டுக்கு உயிராயிருக்கும். நாம் கண்ணிணையாரக் கண்டு கொண்டு களித்ததும், பண்டை வினைகளையெல்லாம் பற்றோடறுத்ததும் ஒருபெரிய ஆனந்தமன்று திருவாய்மொழி பாடினமுகத்தாலே ஸ்ரீவைஷ்ணவர்களுக்கெல்லாம் உபகாரராகப் பெற்ற விதுவன்றோ பிறர்க்குப் பெறவரிதான ஆனந்தம்.
இவ்வுலகில் கவிபாடினவர்கள் மற்றும்பலருமுண்டாகிலும், இப்படி “தொண்டர்க் கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்” என்று பெருங்களிச்சியாகப் பேசினவர் பிறராருமிலர்.
தம்முடைய திருவாய்மொழி திருப்புளியாழ்வாரடியிலே சுவறிப் போகாமல் காருள்ளளவும் கடல்நிருள்ளளவும் வேதமுள்ளளவும் தேவகீதனுள்ளளவும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அமுதமாய்ப் பரமபோக்யமாய் விளங்கப்போகிற தென்பதை ஆழ்வார்கண்டறிந்து அருளிச்செய்தது அதிசயிக்கத்தக்கது.
திருவாய்மொழிக்குத் தனியனிடத்தொடங்கின ஸ்ரீமந்நாதமுனிகள் தொடங்கும்போதே பக்தாம்ருதம் என்றருளிச்செய்தது இந்தப் பாசுரத்தை யுட் கொண்டேயாம்.
முதலிலேயே (1–5–11) பாலேய்தமிழரிசைகாரர் பத்தர் பரவுமாயிரம் என்று அருளிச்செய்திருந்தாலும் தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் என்கிற இப்பாசுரம் இணையற்றது.
கீழ் ஏழாம்பத்தில் என்றைக்குமென்னை யென்கிறபதிகத்தில், இத்திருவாய்மொழி பாடுகையில் தமக்கு அந்வயமில்லையென்றும் எம்பெருமானே தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்னதென்றும் அருளிச்செய்தார்;
மேலே பத்தாம்பத்திலும் பண்ணார்பாடலின் கவிகள்யானாய்த் தன்னைத் தான் பாடி என்று அதனையே வற்புறுத்துகிறார்; இவற்றினிடையே “சொன்மாலைகள் சொன்னேன்” என்று உண்மையை வெளியிட்டுரைத் தவிது நம்போல்வாருடைய பரமபாக்யமேயன்றோ.
————–
அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும்
நெடியானை நிறை புகழ் அம் சிறைப் புள்ளின்
கொடியானைக் குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே–9-4-10-
பதவுரை
| இவன் அடியான் என்று |
– |
இச்சடகோபன் நமக்கு அடிமைப்பட்டவன் என்று கொண்டு |
| எனக்கு ஆர் அருள் செய்யும் செடியானை |
– |
என் விஷயத்தில் பேரருள் புரியும் ஸர்வேச்வரனாய் |
| நிறை புகழ் அம்சிறை புள்ளின் கொடியானை |
– |
நிறைந்த புகழோடுகூடி அழகிய சிறகையுடைய கருடனைக் கொடியாகவுடையனாய் |
| குன்றாமல் உலகம் அளந்த அடியானை |
– |
ஒன்றுவிடாமல் உலகம் முழுவதையுமளந்து கொண்ட திருவடியையுடையனாயிருக்கு மெம்பெருமானை |
| அடியேன் அடைந்து உய்ந்த ஆறே |
– |
அடியேன் கிட்டி உஜ்ஜீவிக்கப் பெற்ற விதம் என்னே! |
***– தாம் உஜ்ஜீவிக்கப்பெற்ற படியைப் பேரானந்தம் பொலியப் பேசுகிறார்
எம்பெருமான் ஆழ்வார் பக்கலிலே செய்த பரமக்ருபை நிர்ஹேதுகமென்று முதலடியில் காட்டப்படுகிறது.
“அடியானிவன் என்று” என்றதனால், உண்மையில் தாம் அடியவரல்லரென்பதும், அடியவரென்று அவன் ஆரோபித்துக் கொண்டானென்பதும் தெரிவிக்கப்பட்டதாகிறது.
‘ஆழ்வார் பக்கலிலே என் அத்தனையருள் செய்தாய்?’ என்று யாரேனும் கேட்டால் ‘அவர் எனக்கு அடியவராயிருந்தபடியினாலே’ என்று அவர்களுக்கு ஒரு மறுமாற்றஞ் சொல்வதற்காக அடியானிவனென்று ஏறிட்டுக் கொண்டு அருள்செய்தானென்கிறார்.
ஸ்தோத்ர ரத்னத்தில் ‘வாயஸஸ்ய ப்ரணத இதி தயாலு’ என்றவிடத்து (இதி) என்றதை ஈண்டு ஒப்புநோக்குக.
எனக்காரருள் செய்யும் நெடியானை=நெடியான் செய்கிறவருள் எப்படியிருக்கு மென்பதை நம்பிள்ளை காடுகிறார் காண்மின்–”கொள்ளுகிற என்னளவன்றிக்கே தன்னளவிலே உபகரித்த ஸர்வேச்வானை” என்று.
இது, சொல் நரம்பைப் பிடித்து ஆழ்ந்து அருளிச் செய்த சீரிய பொருள். உலகிலுள்ள மஹாதனிகர்கள் தானம் பண்ணுவதுண்டே; அவ்யப தேச்யர்கள் வந்து இரந்தால் அவர்களுக்கு அற்பம் கொடுப்பதும், சீரியர் வந்து கேட்டால் அவர்களுக்குச் சிறப்பாகக் கொடுப்பது மியல்வு.
எம்பெருமானோவென்னில், கொள்ளுகிறவர்களின் சிறுமை பெருமைகளில் கண்வையாதே தன் பெருமைக்குத் தக்கவாறு கொடுப்பவனாம், இப்பொருள் “அருள் செய்யும் நெடியானை” என்கிற சொற்சேர்க்கையாற்றலால் கிடைக்கும்.
இப்படியருள் செய்பவனென்பதற்கு இரண்டு உதாஹரணங்கள் காட்டுவார் போன்று இரண்டு விசேஷணங்களிடுகிறார்;
நிறைபுகழஞ்சிறைப் புள்ளின் கொடிணானை– ••• தாஸஸ் ஸகா வாஹநமாஸநம் த்வஜோ யஸ்தே விதாநத் வியஜநம் த்ரயீமய; என்று ஆளவந்தாரருளிச் செய்தபடியே, பெரிய திருவடியை அடியவனாகவும் நண்பனாகவும் ஊர்தியாகவும் ஆஸனமாகவும் கொடியாகவும் விதானமாகவும் விசிறியாகவும் கொள்ளுகைக்குரிய அருள்செய்தவனென்க :
இதுவாயிற்று அவனுக்கு நிறை புகழ். குன்றாமல் உலகமளந்த வடியானை–உறங்குகிற ப்ரஜையைத் தானறிந்த ஸம்பந்தமே காரணமாகத் தாய் அணைத்துக் கொண்டு கிடந்து முலைகொடுத்துக் காக்குமாபோலே செய்த செயலன்றோவிது.
‘எம்பெருமான் திருவடி நம் தலைக்கு அணியாகவேணும்’ என்கிற ப்ரார்த்தனையும், ‘அது நமக்கு ப்ராப்தமாகிறது’ என்கிற எண்ணமு மில்லாதார்கன்றோ இப் பொருள் செய்தது.
ஆக இப்படி எதிர்த்தலையைப் பாராமல் தன்னையே பார்த்து அருள் புரியும் ஸர்வேச்வரனை நான் அடிபணிந்து உஜ்ஜீவித்தவகை மற்றொருவர்க்கு நிலாமோவென்று சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.
————–
ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச்
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே–9-4-11-
பதவுரை
| ஆறாமதம் யானை |
– |
ஒரு நாளும் மாறாத மதத்தையுடைய குவலயாபீட யானையை |
| அடர்த்தவன் தன்னை |
– |
பங்கப்படுத்தின பெருமானைக் குறித்து |
| சேறு ஆர் அயல் குருகூர் சடகோபன் |
– |
சேறு மிக்க வயலை யுடைத்தான தென் குருகூர்க்குத் தலைவரான ஆழ்வார் |
| நூறே சொன்ன |
– |
நூறு நூறாக வருளிச் செய்த |
| ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் |
– |
ஆயிரத்தினுள்ளே இப்பதிகமானது |
| வானவர் தம் இன் உயிர்க்கு ஏறு |
– |
நித்ய ஸுரிகளின் இன்னுயிர்த் தலைவனான எம்பெருமானை |
| தரும் |
– |
கொடுக்கும் (பகவத் ப்ராப்தியைப் பண்ணித்தருமென்றபடி) |
***– இப்பதிகம் வானவர்தமின்னுயிர்க்கு ஏறேதருமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.
இதற்குப் பல படியாகப் பொருளுரைப்பர்; ஏறு என்று இடபத்திற்கு வாசகமாய் “புருஷர்ஷப ; புருஷபுங்கவ :” என்னப்படுகிற ஸர்வேச்வரனைச் சொல்லிற்றாகி, அவனை இப்பதிகம் தரும்–
அதாவது ••• – ப்ரஹமவிதாப்நோதி பரம் என்று உபநிஷத்து ஓதிய பலனைத் தருமென்றபடி,
அன்றியே, ஏறு என்று புண்பாடு ; நித்யஸுரிகளின் ஹிருதயத்தைத் தன்னுடைய ஒப்பற்ற போக்யதையாலே புண்படுத்தும் ; அவர்களை வித்த ராக்குமென்றவாறு, அன்றியே அவர்களினுள்ளத்திலே ஏறி நிற்கு மென்னவுமாம்.
ஆறாமதயானையடத்தவெனன்று இங்குச் சொன்னது–அதுபோலே தமக்கு ப்ரதி பந்தக நிவ்ருத்தியைப் பண்ணிக்கொடுத்தமை சொன்னவாறு,
சேறார்வயல் என்றது–எப்போதும் உழுது நடுவதாகிற வயலின் வளத்தைச் சொன்னபடி. அவ்வூர் ஸம்ஸாரிகளுக்கு அன்னமளிக்குமாபோலே அவ்வூர்த் தலைவரான ஆழ்வார் முமுக்ஷீக்களுக்கு அன்ன மளிக்கிறபடி.
ஆசார்ய ஹருதயத்தில் (215) “நூறே சொன்ன பத்து நூறு ஓராயிர மெனற்தும் ஸாபிப்ராயம்” என்றது இங்கே அநுஸந்நேயம்.
ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு கருத்திருப்பதுபோலவும், ஒவ்வொரு பதிகத்திற்குமொரு கருத்திருப்பதுபோலவும், ஒவ்வொரு நூறுக்கும் ஒவ்வொரு கருத்துண்டாமையாலே “நூறே சொன்ன” என்கிறது.
முதல் நூறுக்குப் பரத்வத்திலே நோக்கு; இரண்டாவது நூறுக்குக் காரணத்வத்திலே நோக்கு; மூன்றாவது நூறுக்கு வ்யாபகத் வத்திலே நோக்கு; நான்காவது நூறுக்கு நியந்த்ருத்வத்திலே நோக்கு; ஐந்தாவது நூறுக்குக் காருணிகத்வத்திலே நோக்கு; ஆறாவது நூறுக்கு சரண்யத் வத்திலே நோக்கு; ஏழாவது நூறுக்கு சக்தத்திலே நோக்கு; எட்டாவது நூறுக்கு ஸத்யகாமத்வத்திலே நோக்கு; ஒன்பதாவது நூறுக்கு ஆபத்ஸகத்வத்திலே நோக்கு; பத்தாம் பத்துக்கு ஆர்த்தி ஹரத்வத்திலேநோக்கு – என்றிப்படி நிதானமறிந்து வகுப்பார்கள் நம் ஆசாரியர்கள்.
————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Related
This entry was posted on November 15, 2022 at 12:01 am and is filed under திரு வாய் மொழி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply