*** – அவன் நாராயணனாகையாலே நம் அபேக்ஷிதம் செய்து தலைக்கட்டுமை நிஸ்ஸந்தேஹமென்று தம்முள் தாமே அநுஸந்தித்துக் கொள்ளுகிறார்.
ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே–9-3-1-
பதவுரை
| ஓர் ஆயிரம் ஆய் |
– |
ஒரு திருநாமமே ஆயிரம் திருநாமமாய்க் கொண்டு |
| உலகு எழ் அளிக்கும் |
– |
ஏழுலகங்களையும் ரக்ஷிக்கும் படியான் |
| ஆயிரம் பேர் கொடது ஓர்பீடு உடையன் |
– |
ஆயிரந் திருநாமங்களை யுடையனாயிரு க்கையாகிற விலக்ஷணமான பெருமையை யுடையனும் |
| நாளம் கார் ஆயின |
– |
காளமேகம்போலே சாமளமான |
| நல்மேனியினன் |
– |
அழகிய திருமேனியையுடையனுமான |
| நாராயணன் அவனே நாங்கள் பிரான் |
– |
நாராயணனே நமக்கு உபகாரகண் |
’ஒரு திரு நாமமே ஆயிரந் திருநாமங்களின் காரியஞ் செய்ய வல்லது’ என்னும்படியான பெருமை பொருந்திய திருநாமங்கள் ஆயிரமுண்டு எம்பெருமானுக்கு.
இங்கு ஆயிரமென்று, குறிப்பிட்ட வொருலக்கத்தைச் சொல்லுமதன்று ; எண்யிறந்தவை என்பதற்குப் ப்ரியாயமத்தனை.
வடமொழியில் *தோவே நாமஸஹஸ்ரவாந்* இத்யாதிகளிலுள்ள ஸஹஸ்ர சப்தமும் இப் பொருளதே.
போர்வீரர்கள் பலரைக் காட்டி ‘இவர்களுள் ஒவ்வொருவரும் ஆயிரக் கணக்கான சுரர்களை வெல்லவல்லவர்’ என்னுமாபோலே சொல்லுகிறதிங்கு.
ஒரு திருநாமம் செய்யக் கூடிய காரியத்தை மற்றொரு திருநாமம் செய்யக் கடுமோவென்று சங்கிக்க வேண்டா திருநாமத்திற்குப் பொருளான எம்பெருமான் செய்யுமத்தையே திருநாமம் செய்வதாகச் சொல்லுகிறபடியாலும், அப்பெருமான் தான் ஸகல பலப்ரதாந் ஸமர்த்தனாகையாலும் அஸம்பாவிதமொன்றுமில்லை யென்க.
பேராயிரங்கொணட தோர் டுடையான் = இப்படிப்பட்ட அதிசயம் வாய்ந்த பலபல திருநமாங்களை யுடையனாயிருக்கையாகிற பெருமை பொருந்தியவன் என்றபடி.
இவ்விடத்து ஈட்டில் “கோயிலாத்தான் புத்ரவியோத்திலே பட்டர் ஸ்ரீபாதத்திலே வந்து தன் சோகமெல்லாம் தோற்ற விழுந்து கிடக்க, அவரருளிச் செய்த வார்த்தையை நினைப்பது” என்றுள்ளது.
அதாவது கோயிலாத்தானென்பவர் பட்டரையே தெய்வமாக நினைத்திருந்தவர்.
அவர் தமக்குப் பிறந்த பிள்ளைக்கு பட்டரென்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.
அந்தப்பிள்ளை தெய்வாதீனமாக ஆசாரியன் திருவடிசார, தந்தை பட்டர் பக்கலிலே வந்து கதறியழுதவளவிலே “நீ நம்முடைய திருநாமமிடப்பெற்ற பிள்ளை போனான் என்றன்றோ துக்கப்படுவது அந்தத் திருநாமமுடைய நாமிருக்க துக்கப்படுவானேன்?” என்று பட்டரருளிச் செய்தாராம்.
திருநாமமுடைய எம்பெருமான் நிலை நின்றிருந்து நம்மைக் காத்தருள்பவன் என்பதை வற்புருத்தும் இந்த ஸம்வாதம்.
கரைகட்டாக் காவேரிபோலே பரந்திருக்கிற திருநாமங்களை ஒருமுகஞ்செய்து அநுபவிக்கப் பாங்காக திவ்ய மங்கள விக்ரஹம் அமைந்த்தே யென்கிற ஆனந்தம் தோற்ற அருளிச் செய்கிறார். காராயின காளநன்மேனியினன் என்று,
காளம் என்று இடையிலுள்ளதைக் காரோடே கூட்டியந்வயிப்பது. காளமேகமே யென்னலாம் படியான நன்மேனியை யுடையவன் என்க.
இவன்தான் யாவனென்ன, நாராயணன் நங்கள் பிரானவனே யென்று திருநாமத்தை முக்த கண்டாமகச் சொல்லி முடிக்கிறார்.
இப்பதிகத்திற்கு இட்ட அவதாரிகையில் இரண்டு நிர்வாணம் காட்டப்பட்டுள்ளது.
முதல் நிர்வாஹத்திற்கு இங்கு நாராயண னென்றது அர்த்ததில் நோக்குடையதாகும்
இரண்டாம் நிர்வாஹத்திற்கு சப்தத்தில் நோக்காகும்.
—————
***– கீழ்ப்பாட்டில் நாராயண சப்தம் ப்ரஸ்துதமாகையாலே அதன் பொருளைப் பன்னி யுரைக்கிறாரிதில்,
அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2-
பதவுரை
| அகல் ஞாலம் படைத்து இடந்தான் அவனே |
– |
விபுலமான ஜகத்தைப் படைத்ததும் (வராஹ மூர்த்தியாகி) இடந்ததும் அப்பெருமானே |
| அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான் அவனே |
– |
அந்த ஜகத்தை உண்டதும் உமிழ்ந்ததும் அளந்ததும் அவனே |
| அவனும் அவனும் அவனும் அவனே |
– |
பிரமனும் சிவனும இந்திரனும் அவனே |
| மற்று எல்லோமும் அவனே |
– |
மற்றுள்ள ஸகல சேதநாசேதங்களும் அவனே (என்னு மில்லிஷயத்தை) |
| அறிந்தனம் |
– |
(அவன் தந்த ஞானத்தாலே) அறிந்து கொண்டோம் |
அவனே அகல்ஞாலம் படைத்திடந்தான் = மிக விசாலமா பூமண்டலத்தை யுண்டாக்கினானுமவனே அதனை ஹிரண்யாசணனென்னுமசுரன் பாயாகச் சுருட்டி கொண்டுபோக மஹாவராமாமி இடந்தெடுத்தானும் அவனே. இத்தால் காரணத்வமும் ரக்ஷகத்வமும் சொல்லப்பட்டன. ‘அவனே’ என்கிற ஏகாரத்தினால் ஸஹகாரியொன்றையும் அவேஷியாத பெருமை தெரிவிக்கப்பட்டது.
அவனே அஃது உண்டுமிழ்ந்தான் அளந்தான் = பிரளயங் கொள்ளாதபடி பூமியையெடுத்து வயிற்றிலே வைத்திருந்து, பிறகு வெளிநாடுகாண உமிழ்ந்த, மற்றொருகால் மஹாபுவியாலே அபஹரிக்கப்பட்டதாக எல்லை நடந்து மீட்டுக் கொண்டாலும் அவனே.
இனி, பின்னடிகளின் கருத்து–பிரமன் சிவன் இந்திரன் முதலானாருடைய ஸ்வரூபஸ்திதி ப்ரவருத்திகளும் அவனிட்ட வழக்கென்கிறது.
பிரமன் சிவன் இந்திரன் முதலானாருடைய பெயர்கள் ஒன்றும் பசுரத்தில் இல்லையே யென்று சங்கிக்கவேண்டா; அவனும் அவனும் அவனும் என்று சுட்டப் பெயர்களாவே இங்கெடுத்திருப்பது உபநிஷச்சாயை நாராயணாநுவாகத்தில் ஸ •••• ப்ரஹமா ஸ சிவஸ் ஸேந்த்ரஸ்ஸோசஷா பரமஸ்ஸ்வராட் என்று ஸ: ஸ: ஸ: என்று நிர்தேசித்திருப்பவற்றையே உட்கொண்டு “அவனுமவனுமவனும்” என்றருளிச் செய்தபடி,.
மற்றெல்லாமும் அவனே அறிந்தனமே = பிரமன் சிவனிந்திரமனென்று பிரித்துச் சொல்ல வேணுமோ? ப்ரதாகர் அப்ரதாகர் என்கிற வாசியின்றிக்கே ஸகல சேதநாசேதங்களும் அவனிட்ட வழக்கே ன்னுமில்லிஷயத்தை எம்பெருமானே உணர்த்த உணர்ந்தேனென்றபடி
மயர்வற மதிநலமருளப் பெற்றவரிறே இவர்தாம்.
————
***– வேதங்களாலும் வேத வித்துக்களாலும் அறியப்போகாத பெருமானை நான் அவனது நிர்ஹேதுக கடாக்ஷத்தாலே உள்ளபடி அறியப்பெற்றேனென்கிறார்.
அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3-
பதவுரை
| அறிந்தன வேதம் அரு பொருள் நூல்கள் |
– |
தத்துவத்தை யறிந்தலையாயிருக்கிற வேதங்களினுடைய அரிய பொருள்களை யுறுதியிட வல்ல இதிஹாஸ புராணாதி நூல்களானவை |
| அருபொருள் ஆதல் அறிந்தன கொள்க |
– |
எம்பெருமான் அறிவதற்கரிய பொருள் என்றில்வளவே அறிந்ததாகக் கொள்ளத்தகும் |
| அறிந்தனர் எல்லாம் |
– |
ஞானிகளான யாவரும் |
| அரியை வணங்கி |
– |
ஸர்வேச்வரணை ஆச்ரயித்த |
| நோய்கள் அறுக்கும் மருந்து |
– |
தங்களுடைய ஸம்ஸார வியாதிகளை போக்க வல்ல மருந்தாக |
| அறிந்தனர் |
– |
அவனைத் தெரிந்து கொண்டார்கள் (இவ்வளவேயல்லது அவனுடைய யீடுபட்டிலர் என்றவாறு) |
“அறிந்தன வத வரும் பொருள் நூல்கள்” என்கிற முதலடிக்கு இரண்டுபடியாகப் பொருள் கூறுவர்
‘அரும்பொருள் அறிந்தன வேத நூல்கள்’ என்று அந்வயம் கொண்டால்–ப்ரத்யக்ஷத்தாலும் அநுமாநத்தாலும் அறியவொண்ணாத அர்த்தங்களை அறிந்தவையாயிருக்கின்ற வேதங்களாகிற சாஸ்த்ரங்கள் என்று பொருள்படும்.
அன்றியே பாசுரமுள்ளபடியே அந்வயித்தால்–அறிந்தவையாயிருக்கிற வேதங்களில் அறிந்து கொள்ள முடியாத அர்த்தங்களை நிஷ்கர்ஷித்துக் தரவல்ல ப்ரஹமஸீத்ரம் இதிஹாஸ புராணம் முதலிய நூல்கள் என்று பொருள்படும்.
ஆக இப்படிப்பட்ட சாஸ்த்ரங்களெல்லாம், அரும்பொருளாதல் அறிந்தன கோள்க– ‘எம்பெருமான் அறிய முடியாத பொருள்’ என்றிவ்வளவே அறிந்து கொண்டதாக நாம் கொள்ள வேணும் என்றபடி. –
••• வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம் என்று எம்பெருமானை அறிந்துவிட்டதாக அவை சொல்லிக் கொண்டாலும் உண்மையில் என்ன அறிந்தன? அறிய முடியாதவனவன் எனறே யறிந்தன.
வேதங்கள் கிடக்கட்டும்; பரஹம விந்துக்களாக் குலாவப்படுகின்ற வ்யாஸ பராசர வால்மீகி ப்ரப்ருதிகளான மஹர்ஷகள் தாமும் அறிந்த விதம் கேண்மின்; அரியை வணங்கி நோய்களறுக்கும் மருந்தே அறிந்தனர் = எம்பெருமானுடைய திருநாமங்களில் ஹரி யென்கிறவொரு திருநாமத்தையே பற்றிக் கொண்டு “ ••• –ஹரணா தேவ துஃக்காநாம் உரிரித்யபதீயதே” என்கிறபடியே ஸாம்ஸாரிகதுக்களைப் போக்குமவன் என்றிவ்வளவு தெரிந்து கொண்டார்களே யல்லது அவனுடைய பரம போய்கதையையாவது, அவனே நிரபேக்ஷ உபாய பூதன் என்பதையாவது தெரிந்து கொண்டார்களல்லர் ‘நோய்களறுக்கும் மருந்து’ என்றிவ்வளவே தெரிந்து கொண்டார்கள்.
பாசுரத்தில் இவ்வளவே யிருந்தாலும், கீழ்ப்பாட்டின் முடிவில் அறிந்தவனே என்றுள்ளதே இங்கும் ஆகர்ஷித்துக் கொள்ள வேணும் ஆறாயிரப்படி முதலான ஸகல வியாக்கியானங்களும் இது உடன்பாடு.
—————–
***– நித்ய ஸுரிகளுக்குப் பேரம போக்யனாயிருந்து வைத்து அங்கு நின்றும் போந்து க்ருஷ்ணனாயவதரித்து
நம்மையும் நித்யஸுரிகள் நடுவே கொண்டு வைக்குமவனாயிருக்கிற எம்பெருமானை ஒருவாறு கிட்டப்பெற்றோம்,
நெஞ்சே அவனை விடாதேகொள் என்று தம்திருவுள்ளத்தை நோக்கி யருளிச்செய்கிற பாசுரமிது.
மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–9-3-4-
பதவுரை
| நங்கள் போகம் மகிழ்ச்சிக்கு மருந்தே என்று |
– |
உன்னுடைய அநுபவத்தாலே எங்களுக்கு வரும் ஆனந்தத்தை ஸாத்மிப்பிக்கும் மருந்தானவனே என்று |
| பெருந்தேவர் குழாங்கள் |
– |
நித்பஸுரிகணங்கள் |
| பிதற்றும்பிரான் |
– |
வாய்வெருவும்படியான ஸ்வாமியாய் |
| கருதேவன் |
– |
கரிய திருமேனியை யுடையனாய் |
| எல்லாம் கண்ணன் |
– |
எமக்கு ஸ்வாமியான க்ருஷ்ணனாய் |
| விண் உலகம் தருமதேவனை |
– |
பரமபத போகத்தைத் தரவானான பெருமானை |
| மனனே சோரேல் கண்டாய் |
– |
நெஞ்சே நழுவவிடாதே கொள் |
நாங்கள் போகமகிழ்ச்சிக்கு மருந்தேயென்று பெருந்தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான் என்கிறவிதற்கு–பகவத்விஷய ப்ரஸ்தாநத்தில் ஒருவகையான அர்த்தமும் ரஹஸ்ய ப்ரஸ்நத்தில் மற்றொரு வகையான அர்த்தமும் ஸம்ப்ரதாயஸித்தம்
“உன்னழகாலே எங்கள் போகத்துக்கு வத்த கனானவனேயென்று பெருந்தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்” என்பது ஆறாயிரப்படியருளிச்செயல்.
உன்னுடைய அநுபத்தால் எங்களுக்கு வருமானந்தத்துக்கு வர்த்த கனானவனே என்பது ஈடு முதலிய வியாக்கியானங்களிலருளிச் செயல்.
இனி, முமுக்ஷப்படியில் பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்யுமது கேண்மின்; அதில் த்வயார்த்ததை விவரித்தருளுமிடத்து (த்வயப்ரகரணத்தின் முடிவில்) நமஸ்ஸீக்குப் பொருளருளிச் செய்கையில் (180) “நம: –கைகங்கர்யத்தில் களையறுக்கிறது; களையாவது தனக்கென்னப்பண்ணுமது” என்றருளிச் செய்தார்.
அதாவது, பகவந்முகவிகாஸத்திற்கு ஹேதுவாகையாலே இது நமக்கு ஆதரணீயம் என்கிற ப்ரதிபத்தியில்லாமல் தன்னுடைய ஸந்தோஷத்தையே ப்ரயோஜனமாக நினைத்துச் செய்வது புருஷார்த்த விரோதியென்றும். அந்த விரோதியைக் கழிக்கிறது நமஸ்ஸென்றும் ரஹஸ்யாத்தமுள்ளது.
கைங்கர்யம் வாய்க்க வேணுமென்றும் நித்யப்ரார்த்தனை நடக்கவேணுமென்று அருளிச் செய்து, இந்த ப்ராத்தனை இந்நிலத்தில் மாத்திரமன்று, திருநாட்டிலுமண்டு என்றுமருளிச் செய்து, அதற்கு ப்ராமாணமாக ‘மருந்தேநங்கள் போகமகிழ்ச்சிக்கு’ என்னுமிப்பாசுரத்தை யெடுத்துக் காட்டியுள்ளார் பிள்ளைலோகாசார்யர் (187) “மருந்தேநங்கள் போகமகிழ்ச்சிக்கு என்னாநின்றதிறே” என்கிறத விதுவே த்வயப்ரகரணத்தின் முடிவுசுர்ணை.
அவ்விடத்து மணவாளமாமுனிகளின் வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் வருமாரு;.– கந்தல்கழிந்த அந்நலத்திலும் ஸ்வபோகத்க்ருக வோதய முண்டாமோவென்ன அருளிச்செய்கிறார் (மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிககென்னா நின்றதிறே) என்று.
அதாவது, உன்னுடைய அநுபத்தாலே எங்களுக்கு வரும் ஆனந்தத்துககு ஸ்வபோக்த்ருத்வபுத்தியை விளைவித்து ஸ்வரூபத்தையழியாதபடி ஸாத்மிப்பிக்கும் பேஷஜமானவனே யென்று நித்யஸுரிகள் பேசும்பாசுரமாகச் சொல்லாநின்றதிறேய்னக என்று.
இப்படி பிள்ளைலோகாசார்யரும் மணவாளமாமுனி களுமருளி செய்த ரீதியில் பாசுரத்தில் பொருள் காணுமளவில், நாங்கள் போகமகிழ்ச்சிக்கு மருந்தே!–உன்யைநுபவித்து அத்தாலே எங்களுக்கு உண்டாகுமானந்தத்தை ஸ்வரூபவிருத்தமாக்கமல் ஸ்வரூபாநுருப்மாகச் செய்யவல்ல மருந்தாயிருக்குமவனே! என்பதாகப் பொருள் காணவேணும்.
ஸ்வரூப் விருத்தமான ஆனந்தமாவது என்ன? ஸ்வரூபாநுரூபமான ஆனந்தமாவது என்ன என்னில்: ‘நானநுபவிக்கிறேன், என்னுடைய அநுபவமிது’ என்று கொண்டு உண்டாகிற ஆனந்தம் ஸ்வரூப விருத்தமானது. ‘அவன் வஸ்துவை அவன் அநுபவிக்கிறான். அவன் ஆனந்ததப்படுகிறான்’ என்றுகொண்டு அவனது ஆனந்தத்தைக் கண்டு உண்டாகிற ஆனந்தம் ஸ்வரூபாநுரூபமானது.
ஸாரமாகக் கேண்மின்; சேதநனாகையாலே ஆனந்தப்படாமலிருக்க முடியாது ; அவர்ஜநீயமாய் ஆனந்தம்பிளையும் ; தன்னையநுபவித்து அவனுக்குண்டாகிற முகமலத்தியைக் கண்டு ஆனந்திப்பதேயுள்ளது. வேறு ஸ்வந்த்ரமான ஆனந்தம் உண்டாகக் கூடாதென்றும் அது ஸ்வரூபவிருத்தமென்றும் அநுஸந்தானம் செல்லவேணும், இவ்வநு ஸந்தானம், இங்கிருக்கிற காலத்தோடு ப்ராப்யபூமியில் சென்று சேர்ந்தகாலத்தோடு வாசியற் எப்போதும் நடந்துசெல்லும் என்பதே.
இதற்கு ப்ரமாணமாகவுள்ள பாசுரம் “மருந்தே நங்கள் போகமகிழ்ச்சிக்கு” என்கிறவிது. ஆறாயிரப்படி முதலிய வியாக்கியானங்களில் இவ்வர்த்த விசேஷத்தை வெளியிட்டருளாதது குஹயதமென்பது பற்றியேயென்க,
உலகில் “பிணிக்குமருந்து, பசிக்குமருந்து” என்கிற பிரயோகங்கள் காண்கின்றன. பிணிக்குமருந்தென்றபோது, பிணியைத் தீர்க்கும் மருந்து என்று பொருள்படுகிறது. பசிக்கு மருந்தென்றபோது, பிணியைத் தீர்க்கும் மருந்து என்று பொருள்படுகிறது. பசிக்கு மருந்தென்றபோது பசியையுண்டாக்கும் மருந்தென்று பொருள் படுகிறது. அப்படியே, நங்கள் போக மகிழ்ச்சிக்கு மருந்தென்ற இவ்விடத்திலும் இரண்டு பொருளும் அமையத் தட்டில்லை ; போகத்தில் எங்களுக்கென்று உண்டாகும். மகிழ்ச்சியை யெடக்குபவனே! என்கிற பொருள் ரஹஸ்யப்ரஸ்தானத்தில் கொள்ளப்பட்டது. போகத்தினால் நாங்கள் மிக மகிழும்படி செய்பவனே! என்கிறபொருள் பகவத் விஷயப்ரஸ்தானத்தில் கொள்ளப்பட்டது (இது ஸாமாந்ய புத்திகளுக்கு நிலமல்லாத விஷயம்)
பட்டரருளிச் செய்த அஷ்டச்லோகியில் (2) *மந்த்ர ப்ரஹமணி மத்யமேந நமஸா* என்னும் க்லோகத்தில் (திருமந்த்ரத்திலுள்ள) நமஸ்ஸீக்கு, முன்னும் பின்னும் ஸ்வஸ்தானத்திலும் யோசனை காட்டி மூன்றுவகையாக அத்த சிசைஷ பண்ணப்பட்டிருக்கின்றது. அதுவும் பெரியோர் பாடே கேட்டுணரத்தக்கது.
சுருந்தேவன்=காளமேகச்யாமளமாய் திவ்யமான வடிவையுடையவன். எம்மான் அவ்வடிவக் காட்டி எனை யீடுபடுத்திக் கொண்டவன் பெருந்தேவர் குழாங்களுக்குப் படிவிடும் வடிலையன்றோ எனக்கு உபகரித்தானென்று ஆனந்தம் பொங்கிச் சொல்லுகிறபடி.
கண்ணன்–அவதாரமுகத்தாலும் உபகாரம் செய்தவன்.
விண்ணுலகம் தரும் தேவன்–பரமபதத்தைத் தருவானாயிருக்கிற ஸர்வேச்வரன்.
ஆக இப்படிப்பட்ட எம் பெருமானை, மனமே சோரேல் கண்டாய்–அவன் நம்மைப் பெறுவதற்கு எவ்வளவோ க்ருஷி பண்ணினான் காண்;
அந்த க்ருஷி ஒருவாருபவித்திருக்கிறன்ற திப்போது; அதை விபலமாக்கிவிடாதேகொள் நெஞ்சே! என்கிறார்.
———–
*** – கீழ்ப்பாட்டில் சொன்னதையே வற்புறுத்திச் சொல்லுகிறாரிதில், உலகில் ஒருவர் ஒரு விஷயஞ்சொன்னால் அதனை ஸாமான்யமென்று கருதி உபேக்ஷித்திருப்பாருமுண்டே. அப்படி உபேக்ஷிக்கத்தக்க வார்த்தையன்றிது. அவசியம் கைக்கொள்ளத் தக்கது என்று ருசிப்பிக்கிறபடி.
மனமே யுன்னை வல்வினையேன் இரந்து
கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய்
புனமேவிய பூந்தண் துழாய் அலங்கல்
இனமேதும் இலானை அடைவதுமே–9-3-5-
பதவுரை
| மனமே |
– |
நெஞ்சே ! |
| வல் வீனையேன் |
– |
வல்லினையேனான நான் |
| உன்னை இரந்து |
– |
உன்னை வேண்டிக் கொண்டு |
| கனமே சொல்லினேன் |
– |
திடமாகவொன்று சொல்லுகிறேன். |
| இது சோரேல்கண்டாய் |
– |
இதனை நழுவவிடாதே கொள் |
|
(அதாவதென்னென்னில்) |
||
| புனம் மேலிய பூ பூதண் அழாய் அலங்கல் |
– |
தன்னிலத்தில் வளர்ந்த செல்லித் திருத்துழாய் மாலையையுடையனாய் |
| எதும் இனம் இலானை |
– |
(அவ்வழக்கு) ஒரு விதத்திலும் ஒப்பில்லாதவனான பெருமானை |
| அடைவதும் |
– |
கிட்டவேணு மென்கிறலிதான் |
மனமே! வல்லனையேன் உன்னையிரந்து இது கனமே சொல்லினேன்–பால் குடிக்கக் கால்பிடிப்பாரில்லையுலகில். நானோ உன்னைப் பால் குடிக்கக் கால்பிடிக்கிறேன்காண்
நெஞ்சே! * முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே!* என்று நான் முன்பேசொல்லி வைக்கும்படி நல்லதிலே முற்பட்டு ஈடுபட்டிருக்கிறவுனக்கு எம்பெருமானிடத்தில் ப்ராவண்யம் இயற்கையாயிருக்க உனக்கு நான் சொல்லவேண்டுவதொன்றில்லை
என் செல்லாமையாலே சொல்லுகிறேனித்தனை காண்.
என்கிற வடசொல் கனமெனத்திரிந்தது திடமாக வென்றபடி. கனகம் என்ற வடசொல் கனமெனச் சிதைந்ததென்றுங் கொள்ளலாம்.
பொன் போன்ற பரமாத்தத்தை யென்றபடி. இது சோரேல்–இந்த வார்த்தையை உபேக்ஷியாதேகொள். எந்தவார்த்தையை யென்ன, பின்னடிகளால் அதனை விவரிக்கிறார்.
[புனமேவிய பூந்தண்டுழாயலங்கலினமேது மிலானை யடைவதுமே] பரமபோக்யனான அவனை ஆச்ரயித்திருக்கை யென்னுமிவ்வர்த்தமே. தன்னிலத்திலே வளர்ந்து அழகிதான திருத்துழாய் மாலையை பணிந்து
“தோளிணைமேலும் நன்மார்பின்மேலும் சுடர்முடிமேலும் நாளிணைமேலும் புளைந்த தண்ணந்துழாயுடையம்மான்” என்று வாய்நிறையப் பேசும் படியான போக்யதை வாய்ந்த ஸர்வாதிகளை விட்டு பிரியாமையாக்கிற இவ்வர்த்தத்தையே திடமாகச் சொன்னாராயிற்று.
——————
*** – கீழ்ப்பாட்டில் தம் திருவுள்ளத்தை வேண்டினாரே; வேண்டுகோள் பலித்து அது நினைந்து நைந்து உள் கரைந்துருகுகிறபடியைப் பேசுகிறாரிதில்.
அடைவதும் அணியார் மலர் மங்கை தோள்
மிடைவதும் அசுரர்க்கு வெம்போர்களே
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம்
உடைவதும் அவற்கே யொருங்காகவே–9-3-6-
பதவுரை
| மலர் மங்கை அணி தோள் |
– |
பெரிய பிராட்டியாருடைய ஆபரணங்கள் பொருந்திய திருத்தோள்களையே |
| அடைவதும் |
– |
ஸம்க்லேஷிப்பதும் |
| அசுரர்க்கு வெம்போர்களே |
– |
ஆஸுரப்ரக்ருதிகளோடு வெவ்விய போர்களை செய்வதே நெஞ்சினால் நினைப்பதும் |
| கடல் அமுதம் |
– |
கடலிலுள்ள அமுதத்தையே கடைந்து கொடுப்பதும் |
| அவற்கே |
– |
அப்பெருமானுக்கே |
| எம் மனம் ஒருங்காகவே உடைவதும் |
– |
என்னெஞ்ச ஒருபடிப்பட சிதிலமாவதும். |
அடைவதும் மிடைவதும் கடைவதுமென்று ஆழ்வார் சொல்லுகிறவையல்ல; இவற்றைத் தம்திருவுள்ளம் சிந்திக்கிறப்படியைத் தாம் ஒரு கரணமாக நின்று சொல்லுகிறாராயிற்று.
எம்பெருமான் பெரிய பிராட்டியாரது திருத்தோளோடே ஸம்ச்லேஷிக்கிறபடியை நினைந்து உடைகின்றதாம் நெஞ்சு;
அவன் ஆச்ரிதவிரோதிகளான அசுரர்களைப் போர்க்களத்தில் முடித்து •••• = தம் த்ருஷ்ட்லா சத்ருஹந்தாரம் மஉறர்ஷீணும் ஸீகாவலும், பபூவ ஹருஷ்டா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே என்ன நின்ற ஸந்நிவேசத்தைத் திருவுள்ளம் சிந்தித்து உடைகின்றதாம்.
ப்ரயோஜநாந்தா பரர்களான தேவர்களுக்கும் உடம்பு நோவக் கடல்கடைந்து அமுதமளித்த ஆற்றலைச் சிந்தித்து உடைகின்றதாம் நெஞ்சு.
இப்பாட்டில் நான்கு அடிகளும் தனித்தனி நான்கு வாக்கியங்கள் போல் தோன்ற நின்றாலும் பாட்டு முழுவதும் ஒரே வாக்கியமாகவே கொள்ளத்தகும்.
அணியார் மலர்மங்கை தோளடைவது பற்றியும்,. அசுரர்க்கு வெம்போர்கள் மிடைவது பற்றியும், கடலுளமுதம் கடைவது பற்றியும் அவற்கேயொருங்காக என்மனமுடைவது என்று ஏகவாக்யமாகத் தாற்பரியங்கொள்ளக்கடவது.
“கடைவதும் கடலுளமுதம்” என்ற மூன்றாமடிக்கு நம்பிள்ளையீடு இன்சுவை மிக்கது.
அவ்விடத்து ஸ்ரீஸூக்திகள் வருமாறு – அவன் பனிக் கடலைக்கடைய இவர் மனக்கடல் உடையப்புக்கது. விரகராயிருப்பார் கோழைகளாயிருப்பார் பக்கலில் தாவ்யம் வாங்க நினைத்தால், முந்துறமிடுக்கராயிருப்பாரை நெருக்கிலாங்கவே இவர்கள் தாங்களே கொடு சென்று கொடுப்பர்களிறே; (அது போல) அவனும் மஹத்தத்வமான கடலை உலக்கைவிடு நகமிட்டு நெருங்கி அதன் நல்லுயிரை வாங்க இவருடைய திருவுள்ளமுடையத் தொடங்கிற்று என்று.
இத்தால், ஆழ்வார்திருவுள்ள முருகுவதற்காகவே எம்பெருமான் கடல்கடைந்தனென்றதாயிற்று.
————-
***– எம்பெருமான் இவ்விடத்தே செய்த சேஷ்டிதங்களை யநுஸந்தித்து உருகின நெஞ்சு
அன்னவனுறையும் திருநாட்டைச் சென்று காணவிழைகின்ற தென்கிறாரிப்பாட்டில்
ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை
மாகவைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே–9-3-7-
பதவுரை
| ஆகம்சேர் |
– |
ஒரு வடிவிலே பொருந்தின |
| நரசிங்கம் அது ஆகி |
– |
மதுஷ்யமூர்த்தியும், ஸிம்ஹ மூர்த்தி யுமுடையனாகி |
| ஓர் ஆகம் |
– |
(இரணியனது) ஓரு உவகை |
| பிளந்தான் உறை |
– |
பிளந்தவனான எம்பெருமான் |
| மாகம் வைகுந்தம் |
– |
பரமாகாசமான ஸ்ரீவைகுண்டத்தை |
| காண்பதற்கு |
– |
காண்கைக்கு |
| இரா பகல் இன்றியே |
– |
இரவென்றும் பகலென்றும் வாசியின்றிக்கே |
| என் மனம் ஏகம் எண்ணும் |
– |
என்மனம் ஒரே விதமாக எண்ணுகின்றது |
(ஆகஞ்சேர் நரசிங்கமதாகி) மநுஷ்யசரீரத்தில் ஸிம்ஹசரீரம்கலகாது ஸிம்ஹ சரீரத்தில் மநுஷ்யசரீரம் கலகாது இங்ஙனே உலகவியல் பாயிருக்க, ஓராகத்திலே நாமும் சிங்கமும் சேர்ந்தாயிற்று அவனுடைய விலக்ஷணஸங்கல்பத்தாலே ••• விருத்தே வையக்ரீஸுகடிதஸமாநாதிகாணே ந்ருஸிம்ஹத்வே பிப்ரத் (ஸ்ரீரங்கராஜஸ்தவம்) என்று பட்டரருளிச் செய்தது இங்கே அநுஸந்தேயம்
“ஆகம்சேர்” என்பதற்கு–ஒரு வடிவிலே பொருந்திச் சேர்ந்த என்று இங்ஙசே பொருள் கொள்வதிற்காட்டிலும் மற்றொரு வகையான பொருள் மிகச் சிறக்கும்
ஆகம் என்று நம்முடைய திருவுள்ளத்தைச் சொன்னபடியார், தமது நெஞ்சிலே மறக்க வொண்ணாதபடி சேர்ந்த நரசிங்கம்–என்று சிறுத்தனைக்காகவும் செருக்கனை முடிக்கவும் ஒருகால் தோன்றி மறைந்த திருவுருவமாயிலும் அது ஆழ்வார்போன்ற பரமபக்தர்களின் உள்ளத்திலே ஸ்தாவரப்ரதிஷ்டையாயிருக்குமே.
ஓராகம் வள்ளுகிரால் பிளந்தான்–இரணியனுடைய முரட்டுடம்பைத் தநது வாயால் சொல்லக்கூசி ‘ஓராகம்’ என்கிறார்.
அதனைக் கூரியவுகிரால் ஆயாஸமின்றிப் பிளந்த பெருமான் நித்யாவாஸம்பண்ணுகிற மாகவைகுந்தம் (மஹகம்) என்கிற வடசொல் மாகமெனத் திரிந்தது. “பரமே வ்யோமந்” என்று வேதத்தில் சொல்லுகிறபடி வைகுந்தம் பரமாகாச சப்தவாச்யமாதலால் மாகம் என்றது.
மாகம் என்று ஒரு தமிழ்ச் கொல் உண்டென்றும், அது பெருமைக்கு வாசகமென்றும் சொல்லுவர் சிலல் அப்போது பெருமை தங்கிய வைகுற்தமென்றதாகும். அதனைக் காண்பதற்கு, எம்மனம் இராப்பகலின்றியே ஏகமெண்ணும் – என்னுடைய ஹருதயமானது எப்போதும் மநோரதியாநின்றது. இராப்பலவின்றியேன்றது–இரவென்றும் பகலென்றும் வாசியல்லாதபடி யென்றவாறு.
ஸம்ஸாரிகளுக்கு இரவொருகாரியமும் பகலொரு காரியமுமாயிருக்கும் ஆழ்வார்க்கு எப்போதும் ஒரே காரியமேயுள்ளது. ஏகம்–வடசொல்.
—————
இன்றிப் போக இருவினையும் கெடுத்து
ஒன்றி யாக்கை புகாமை உய்யக் கொள்வான்
நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளத்து
சென்று தேவர்கள் கை தொழுவார்களே–9-3-8-
பதவுரை
| இருவினையும் |
– |
புண்ணியம் பாவம் என்கிற இரண்டு கருமங்களையும் |
| இன்றிபோக கெடுத்து |
– |
ஸத்தையழிந்து போம்படி தொலைத்து |
| ஆக்கை ஒன்றி புகாமை |
– |
(ஆத்மா) சரீரத்தோடே சரீரமாகக் கலந்துபோகாதபடி |
| உய்யக் கொள்வான் |
– |
உஜ்ஜீவனப்படுத்து மெம்பெருமான் |
| நின்ற |
– |
(அடியார்களை யெதிர்பார்த்து) நிற்கிற |
| வேங்கடம் |
– |
திருவேங்கடமலை |
| நீள் நிலத்து உள்ளது |
– |
பரந்த இவ்வுலகத்தே யுள்ள தொன்றாம் |
| சென்று |
– |
(அங்கே) சென்று சிட்டி |
| கை தொழுவார்கள் |
– |
கை தொழுமலர்கள் |
| தேவர்களே |
– |
(மநுஷ்யான்றிக்கே) தேவர்களேயாவர். |
***– மாசுவைகுந்தம் காண்பதற்கு மனோரதங்கொண்ட ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ஆழ்வீர் ! சரீரஸம்பந்த மற்ற பின்பு போய் அநுபவிக்கும் பரமபதத்தையா விரும்புகிறீர்; இந்த சரீரத்தோடேயநுபவிக்கும் திருமாலை இந்நிலத்தேயுள்ளதன்றோ; இதை விட்டு மாகவைகுந்தங்காண வாசைப்படுவதில் என்ன விசேஷம்? என்ன;
இது வாஸ்தவமே; திருவேங்கடமலை இந்நிலத்தேயுள்ளது தான். அதனாலெனக்கென்ன? காலாழும் நெஞ்சழியும் கண்சுழலுமென்றிருக்கிற நான் திருமலையில் சென்று அநுபவிக்க பாக்யஹீநனன்றோ தேவர்களேயன்றோ அங்குச் சென்று தொழுவார்; ஆகவே திருமலையோடு பரமபதத்தோடு வாசியில்லையே யெனக்கு என்கிறார்.
இருவினையும் அன்றிப்போகக் கெடுத்து–புண்ணிய மென்றும் பாவமென்றும் இரு வகைப்பட்ட கருமங்களரனவை வாஸகையோடேபோம்படி பண்ணியென்றபடி பாவம் போலே புண்யமும் கழியவேணும். பாவம் கரகத்திலே கொண்டு சேர்க்கும் புண்யம் ஸ்வர்க்கத்திலே கொண்டு சேர்க்கும். முமுக்ஷுக்களுக்கு ஸ்வர்ககத்தோடு நரகத்தோடு வாசியற்றிருக்கையோலே பாம்போலே புண்யமும் ஹேயுமாகிறது.
*** –ததா வித்வாக் புண்யபாபே விதூயக என்று உபநிஷத்தும் ஓதிற்று. அநுபவித்தே அறவேண்டிய இவ்விருவினைகளை எம்பெருமான் க்ருபாவிசேஷத்தாலே அறுத்தொழிப்பது சில அதிகாரி விசேஷங்களிலே யென்க.
ஒன்றி ஆக்கை புகாமை = அவ்விருவினைகளில் பின்னையும் ருசி வாஸநைகள் கிடக்குமாகில் யாதாணுமோராக்கையில் புக்கு அங்காப்புண்டு தடுமாற வேண்டிவருமே; அதற்கு ப்ரஸக்தியில்லாத படி செய்து உய்யக்கொள்வான் நின்ற வேங்கடம் = இப்படியாக உஜ்ஜீவிப்பத்தருளுமெம்பெருமான் அளஸரமெதிர்பார்த்து நிற்குமிடமான திருமலையானது நீணிலத்துள்ளது – சிறந்த இந்நிலவுலகத்தில் தானுள்ளது. இது நாம் அறியாததன்று அறிந்தே யிருக்கிறோம். ஆனாலும் அங்குச் சென்று அநுபவிக்கும் பாக்கியமில்லாமையே பற்றியே கரைய வேண்டிற்றாகிறது. காலுமெழா கண்ணநீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி யென்னும்படி யிருப்பார்க்குத் திருமலைகொண்டு காரியமென்? சென்று தேவர்களின் கை தொழுவார்களே = அங்குச் சென்று கை தொழுமலர்கள் மநுஷ்யர்களாக இருக்க முடியாதே; தேவர்களாகவன்றோ இருக்க வேண்டும்.
‘உய்யக் கொள்வான்’ என்பதற்கு – உய்யக் கொள்ளாகைக்காக என்றும் பொருள் கொள்ளலாம்
———-
***– கீழ்ப்பாட்டில் திருவேங்கடம் சென்று தேவர்கள் கைதொழுவார்களே என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்
ஆழ்வீர்! திருவேங்கடன் சென்று கை தொழுவது அத்தனை யருமையன்று காணம் மதுஷயர்களெல்லாருஞ் சென்று
கை தொழுமிடமேயது நீரும் வந்து கை தொழுது க்ருதாருத்யகலமே என்று கூற, அதற்கு விடையளிக்கிற தீப்பாசுரம்.
தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
எழுது மென்னுமிது மிகை யாதலில்
பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய்
தழுவுமாறு அறியேன் உன தாள்களே–9-3-9-
பதவுரை
| மாமலர் |
– |
சிறந்த புஷ்பங்களையும் |
| நீர் சுடர் தூபம் |
– |
தீர்த்தம் தீபம் தூபூம் இளைகளையும் |
| கொண்டு |
– |
எந்திக் கொண்டு |
| சொழுது எழுதும் என்னுமிது |
– |
அடிமனை செய்து மென்றால் இது |
| பழுது இல்தொல் புகழ் |
– |
(ஆரா திக்கைக்கு அரியன்) என்கிற அலத்யமின்றிக்கே இயற்கையான புகழையுடைய |
| உன தாள்கள் |
– |
உனது திருவடிகளை |
| தழுவும் ஆறு அறியேன் |
– |
கிட்டும் விரகு அறிகின்றறேன் |
தெழிகுலளித் திருவேங்கடத் தெழில் கொள்சோதி யெந்தைதந்தை தந்தைக்கு ஒழிவில் காலமெல்லா முடனாய் பள்ளி வழுவிலாவடிமை செய்ய வேண்டு நாம் என்று அவ்விடத்தே வந்து கைங்கள் செய்து வாழ வேணுமென்று ஏற்கனவே நான் பாரித்திருத்துமுண்டு,
ஆலோசித்தும் பார்க்குமிடத்தில், தூபதீப புஷ்பாதிகளைக் கொண்டு அடிமை செய்வோமென்றால் அதுவும் பீகை என்னும்படியன்றோ உன் ஸ்வபாவமிருப்பது நான் என்ன அடிமை செய்து என்று தடுமாறுகிறார்.
••• பூயிஷ்டாம் தே நமஉக்திம் விதெம என்கிற கருதி வாக்யத்திற்கு–அதிகமான நம உக்தியை உனக்கு செய்வோம் என்று சிலர் பொருள் கூறுவர்; பூயிஷ்டாம் நமஉக்திம் தே விதேம் என்று அந்வயங்கொண்டு அங்ஙனே பொருள் கூறுகின்றார்கள்.
நம் ஆசாரியர்கள் அருளிச் செய்யும் பொருள் அதுவன்று; ‘தே பூயிஷ்டாம் நமஉக்திம் விதேம’ என்று அந்வயித்து தேவரீருடைய திருவுள்ளத்தாலே மிகையான நமஉக்தியைப் பண்ணக் கடவோம் என்று இங்ஙனே பொருளுரைப்பார்.
நம: என்று சொல்வதையும் எம் பெருமான் மிகையாக நினைப்பவனாம். தே என்பதற்கு ‘உன்னுடைய கருத்தாலே’ என்கிற பொருள் ஸம்பவிக்குமோ லென்னில்; “நையாயிகஸ்ய வாயு அப்ரத்யக்ஷ” என்றால் “நையாயிகஸ்ய மதே“ என்று பொருளாகவில்லையோ.
“லோபச் சாகல்யஸ்ய” என்பது ஒரு வியாகரண ஸீத்ரம். சாகல்ய முனிவர்க்கு லோபம் என்பதாக இதற்குப் பொருளன்றே; ‘சாசல்ய முனிவருடைய கருத்தாலே லோபம்’ என்றுதானே பொருள். அப்படியே ‘தே பூயிஷ்டாம்’ என்றது உன் கருத்தாலே பூயிஷ்டமான என்று பொருள் படக் குறையில்லை.
ஆக பூயிஷ்டாம் தே நமக்திம் விதேம என்கிற ச்ருதிவாக்யத்திற்கு நம் ஆசாரியர்கள் இங்ஙனே பொருள் திருவுள்ளம் பற்றுவதற்கு நிதாநம் இப்பாசுரமேயாகும். அந்த ச்ருவாக்யத்திற்கு ஆழ்வார் இங்ஙனே பொருள் கொண்டாரென்பது இப்பாசுரத்தினால் நன்கு விளங்கும்.
மாமலர் நீர்சுடர் தூபங்கொண்டு தொழுதேழுது மென்னுமிது மிக=செண்பக மல்லிகையோடு செங்கழுநீரிருவாட்சி முதலிய நன் மலர்களைக் கொண்டும், அர்க்ய பாத்ய ஆசமநீயாதிகளுக்குரிய தீர்த்ததைக் கொண்டும், மற்றும் தீபம் தூபம் முதலிய உபகரங்களை கொண்டும் தொழுது [அடிமை செய்து] உஜ்ஜீவிப் போமென்றால் இதையும் மிகையாக நினைப்பவனன்றோ நீ என்றபடி.
ஆதலில் உனதாள்கள் தழுவுமாறு அறியேன் = ஆகவே உன்னுடைய திருவடிகளைக் கிட்டும் விரகு அறிகின்றிலேன். நாம் செய்யும் ஸ்வல்பகிஞ்சிக் காரத்தையும் பஹீவாக நினைக்கு முன்னுடைய சீலத்தை நினைத்தவாறே என்று கூட்டிக் கொள்வது.
பழுதில் தொல்புகழ் என்றது–ஆராதனைக் கெளியன் என்கிற புகழ் மிக்கவனென்றபடி.
பாம்பணைப்பள்ளியாய் என்றது–சென்றால் குடையாமிருந்தால் சிங்காசனமாம். திருமாற்கு அரவு என்கிறபடியே ஸநலவித கைங்கரியங்களும் செய்ய பாக்கியம் படைத்த திருவனந்தாழ்வான் போல் வாரனறோ உனக்கு அடிமை செய்து வாழ்வார் அந்த பாக்கியம் என்போல்வார்க்கு உண்டோ? என்ற குறையைக் காட்டுகிறபடி
—————
***– ப்ரயோஜநாந்தர பார்களாய் அடிமைச் சுவடு அறியாதவர்களான பிரமன் முதலிய தேவர்களுக்கும்
முகங்கொடுக்குமவனான உன்னுடைய சீலகுணம் என் வாக்குக்கு நிலமன்றோ யென்கிறார்.
தாள தாமரையான் உனதுந்தியான்
வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தான்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள்
நாளும் என் புகழ் கோ உனசீலமே–9-3-10-
பதவுரை
| தாள தாமரையான் |
– |
காளையுடைய தாமரையிற் பிறந்த பிரான் |
| உனது உந்தியான் |
– |
உன்னுடைய உந்தையைப் பற்றினவன் |
| வாள் கொள் நின் மழு ஆளி |
– |
ஒளி பொருந்திய நீண்ட மழுப்படையை யுடைய ருத்தன் |
| உன் ஆகத்தான் |
– |
உனது திருமேனியில் ஒரு பந்தத்தைப் பற்றினவன் |
| ஆளர் ஆய் தொழுவாரும் அமரர்கள் |
– |
அடியார்களாய்ப் பணிகின்றவர்களும் தேவர்கள் |
| உன் சீலம் |
– |
உன்னுடைய சீல குணத்தை |
| நாளும் என் புகழ்கோ |
– |
காலமெல்லாம் புகழ்ந்தாலும் என்னவென்று புகழ்வேன் |
தாளதாமரையான் உனதுந்தியான்– தாமரைப் பூவைப் பிறப்பிடமான வுடையனான பிரமன் உனது திருநாபியைப் பற்றியிராநின்றான். தாமரையிற் பிறந்தோ மென்று துர்மான முடையவனான அவனுக்கு உடம்பு கொடுத்தது என்னே என்று வியக்கிற படி.
வாள்கொள்நீள்மழுவாளி உன்னாகத்தான்– தொடையொத்த துளபமுங் குடையும் பொலிந்து தோன்றியதோள் தொண்டரப்பொடி என்னுமாபோலே சேஷத்வலக்ஷணம் பொலிந்திருக்கையன்றிக்கே கொலைக் கருவியான மழுவையுடைய வொருவன் உன்திருமேனியிலேக தேசத்தைப் பற்றி யிரா நின்றான். அந்த துர்மானிக்கு முட்பட உடம்பு கொடுத்த நீலம் என்னே! என்று வியக்கிறபடி.
ஆளராய்த் தொழுவாரு மமரர்கள்–அமரர் என்கிற பெயர் நித்யஸுரிகளுக்கே உரித்தாயிருக்க, ப்ரயோஜநாந்தரபார்களான தேவர்களும் அப்பெயரைப் பூண்டு கொண்டு உனக்கு ஆட்பட்டவர்களாகத் தம்மைச் சொல்லிக் கொண்டு திரிவதும் அவர்களுக்குங்கூட முகங்கொடுப்பதும் என்னே! என்று வியக்கிறபடி.
உலாசீலம் நாளும் என் புகழ்கோ= காலதத்வமெல்லாங்கூடினாலும் உன்னுடைய சிலத்தை எத்தைச் சொல்லிப் புகழ்வேன்!
————
***– இப்பதிகம் கற்பார் திருநாடு செல்லுகை ஆச்சரியமன்று, ப்ராப்தமே என்கிறார்.
சீலம் எல்லை இலான் அடிமேல் அணி
கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே–9-3-11
பதவுரை
| சீலம் எல்லை இலான் அடிமேல் |
– |
எல்லையற்ற சீல குணத்தையுடைய பெருமான் திருவடிகளைப் பற்றி |
| அணி கோலம் நீள் கருகூர் சடகோபன் |
– |
மிகவழகிய திருக்குருசடரியைதரித்த ஆழ்வாருடைய |
| சொல் மாலை |
– |
சொற்களினாலான மாலையநயிருக்கிற |
| ஆயிரத்துள் |
– |
ஆயிரத்தினுள்ளே |
| இவை பத்தினின் |
– |
இப்பதிகத்திலே அந்வயித்தவர்கள் பாலர் |
| வைகுந்தம் ஏறுதல் பான்மை |
– |
பரமபதத்தில் ஏறப்பெறுவது இயல்லாம் |
இத்திருவாய் மொழியால் பேசப்பட்டது எம்பெருமானுடைய சீலாதிக்ய மாதலால் சீலமெல்லையிலானடிமேல் என்கிறார். –
••• மஹதோமந்தைஸ் ஸஹ சீரந்த்ரேண ஸம்த்லேஷ: சீலம் என்று சொல்லுவர்களாகிலும், நெஞ்சையருக்கும் படியான குணங்களெல்லாவற்றிற்கும் சீலமென்பது பொதுப் பெயருமாகும்.
அது வல்லை கடந்து விளங்குபவனான எம்பெருமானது திருவடிகளைப் பற்றிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன ஆயிரத்துள் இப்பதிகத்தின் அருகேயுள்ளவர்கள்
(அதாவது) இப்பதிகத்தோடு ஏதேனுமொருபடியாக ஸம்பந்தம் பெறுமவர்கள், உரிய காலத்திலே பரமபதம் சென்று சேர ப்ராப்தம்.
இப்பாசுரங்களைக் கண்டபாடமாக்கிகச் சொல்லுவதோ, அர்த்தாநுஸந்த்ரணம் பண்ணுவதோ, பிறர் அநுஸந்திக்கக் கேட்டிருப்பதோ, திருவாய்மொழி ஸேவிக்குமிடத்தில் இருந்து உறங்குவதோ இப்படிப்பட்டவற்றில் ஏதேனுமொன்றைச் செய்யுமவர்களும் இளை பத்தினின் பாலர் என்றதற்குப் பொருளாவரென்க.
“வைகுந்த மேறுதல் பான்மையே” என்ற சப்தஸ்வாரஸ்யத்தில் கிடைத்த பொருளை நம்பிள்ளை விவரிக்குமழகு காண்மின்– “பித்ருதனம், புத்ரனக்கு தாய்ப்ராப்தமாயிருக்கிறே” என்று.
————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Related
This entry was posted on November 14, 2022 at 11:17 pm and is filed under திரு வாய் மொழி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply