***– வடதளசயனனான மஹோபகாரகன் திருவடிகளிலே ப்ரேமத்தோடு பணிந்து அநவாத கைங்கரியம் பண்ணுங்கோளென்று, இத்திருவாய்மொழியிற் சொல்லுகிற ஆச்ரயணத்தைச் சுருக்கமாகவருளிச் செய்கிறார்.
மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-
பதவுரை
| வேலை மோதும் மதில் சூழ் |
– |
கடலலை மோதப் பெற்ற மதிளாலே சூழப்பட்ட |
| திருக்கண்ணபுரத்து |
– |
திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருப்பவனும் |
| ஆலின் மேல் |
– |
ஜலத்தின் மீது |
| ஆல் அமர்ந்தான் |
– |
ஆலிலையில் கண் வள்ர்ந்தவமான |
| மாலை |
– |
ஸர்வேச்வரனை |
| கண்ணி |
– |
கிட்டி |
| அடி இணைகள் |
– |
அவனது உபயபாதங்களையும் |
| காலை மாலை |
– |
இரவும் பகலும் |
| கமலம் மலர் இட்டு |
– |
தாமரைப்பூக்களை ஸமர்ப்பித்து |
| நீர் |
– |
(அன்பர்களே!) நீங்கள் |
| வினை கெட |
– |
(உங்களுடைய) பாவம் தொலையும்படி |
| தொழுது எழுமின் |
– |
வணங்கி உஜ்ஜீவியுங்கள் |
மாலை நண்ணி யென்றதற்கு இரண்டுபடியாகப் பொருளருளிச் செய்வர்; மாலென்று திருமாலைச் சொன்னபடியாய் அப்பெருமானை கிட்டியாச்ரயித்து உஜ்ஜீவிக்கப் பாருங்கள் என்றும் ;
மால் என்று அன்புக்குப்பேராய், அன்பையுற்று–பக்தியுக்தராகி என்றும், வினைகெட என்றதற்கும் இருவகைப் பொருள்;
பகவத்ப்ராப்தி விரோதி வர்க்கமெல்லாம் கெடும்படி யென்றும், கீழ் மல்லிகைகமழ் தென்றலில் நான்பட்ட கிலேசம் உங்களுக்கும் நேராதபடி யென்றும்,
காலை மாலை கமலமலரிட்டுத் தொழுதெழுமின்=காலை யொருமுறையும் மாலையொரு முறையும் தொழுதெழுமின் என்கிறதன்று; பகலுமிரவும் என்றபடி.
ஆச்ரபணத்திற்குக் கால நியதியில்லை யென்கை.
கமல மலரிட்டு என்று ஒரு புஷ்பவிசேஷத்தை நிர்ப்பந்திக்கிறபடியன்று; அவனுக்கு ஆகாத புஷ்பமில்லை.
“கள்ளார் துழாயும் கணவலரும் கூபினையும் முள்ளார் முவரியும் ஆம்பலுமுன் கண்டக்கால் புள்ளாயோரேனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கென்று, உள்ளாதாருள்ளத்தை உள்ளமாகக் கொள்ளோமே” என்ற திருமங்கையார் பாசுரம் இங்கே அநுஸந்திக்கவுரியது.
“எண்டிசையுமுள்ள பூக்கொண்டு” என்றாரே இவ்வாழ்வார்தாமே. ஆக, கமலமலரென்றவிது அல்லாத புஷ்பங்களுக்கும் பலசூண மென்றதாயிற்று.
வேலை மோதும் மதிள்சூழ் திருக்கண்ணபுரம்= திருக்கண்ணபுரத்துத் திருமதிளிலே கடலலை மோதுவதாகச் சொல்லுகிறவிது இப்போது கண்டதில்லையாகிலும் முற்காலத்திருந்திருக்கக் கூடும்;
நாளடைவில் ஸமுத்ரம் ஒதுங்கிப் போயிருக்கக் கூடும் என்பர் பெரியார்
“ஸமுத்ரம் அணித்தாகையாலே திரைகள் வந்து மோதா நின்றுள் மதினாலே சூழப்பட்டிருந்துள்ள திருக்கண்ணபுரத்திலே” என்பது ஈடு.
“கலங்கல் முந்நீர்க்கண்ணபுரம்” என்றார் திருமங்கையாழ்வாரும்.
—————
***– “கள்ளவிழும் மலரிட்டு இறைஞ்சுமின் “என்று அருளிச் செய்கையாலே இன்ன மலரென்று ஒரு நிர்ப்பந்தமில்லை யென்பது காட்டப்படும். கீழ்ப்பாட்டில் “கமல மலரிட்டு ” என்றது– கமல மலரேயாக வேணுமென்றும் அதுபோன் சிறந்த மலரேயாக வேணுமென்றும் காட்டினபடியன்று என்பதை இப்பாட்டில் தெளியவைத்தாராயிற்று.
கள் அவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டீரே–9-10-2-
பதவுரை
| தொண்டரே |
– |
எம்பெருமானிடத்து ஆசையுள்ளவர்களே |
| நீர் |
– |
நீங்கள் |
| கள் அவிழும் மலர் |
– |
தேனொழுகுகின்ற புஷ்பங்களைப் பணிமாறி |
| இறைஞ்சுமின் |
– |
வணங்குங்கள் |
| நள்ளி சேரும் |
– |
பெண் நண்டுகள் களித்த வாழப்பெற்ற கழனிகள் சூழ்ந்த |
| வயல் சூழ் கிடங்கின் |
– |
அகழ்களைப் பக்கங்களிலே யுடையதும்புடை |
| வெள்ளி ஏய்ந்த மதின் சூழ் |
– |
சுக்கிரனைத் தொட்டுக் கொண்டிருக்கிற மதிள்களாலே சூழப்பட்டதமான |
| திரு கண்ணபுரம் |
– |
திருக்கண்ணபுரத்தை |
| உள்ளி |
– |
சிந்தனை செய்து கொண்டு |
| நாளும் |
– |
நாடோறும் |
| தொழுது எழுமின் |
– |
வணங்கி உஜ்ஜீவியுங்கள் |
வாடிவதங்கிப் போன மலரன்றிக்கே அப்போதலர்ந்த மலரென்கிறது கள்ளவிழும் என்ற அடைமொழியினால்.
“அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம் புஷ்பமிந்த்ரிய நிக்ரஹ; ஸர்வபூததயா புஷ்பம் க்ஷமா புஷ்பம் விசேஷத ; த்யாநம் புஷ்பம் தப ; புஷ்பம் ஜ்ஞாநம் புஷ்பம் தவைத ச, ஸத்யமஷ்டவிதம் புஷ்பம் விஷ்னோ ; ப்ரீதிகரம் பவேத் ” என்று பகவச்சரஸ்த்ரங்களிற் சொல்லப்பட்ட அஷ்டவித புஷ்பங்களைச் சொன்னபடியாகவுமாம்.
(வெள்ளியேய்ந்த மதிள்சூழ்) இதற்குப் பலவகையாகப் பொருள் கூறுவர்
(1) வெள்ளியென்று சுக்ரனுக்குப் பேராகையாலே சுக்ரனைச் சொன்னது நக்ஷத்ரஸாமான்யத்தைச் சொன்னபடியாய் நக்ஷத்ரமண்டலத்தளவும் ஒங்கின மதிளையுடைத்தான திருக்கண்ணபுரம்
(2) வெள்ளியாலே (ரஜதத்தாலே) சமைந்த மதிள் என்றுமாம்
(3) வெள்ளிபோலே சுப்ரமாயிருக்கின்ற மதிள் என்றுமாம்.
நக்ஷத்ரபதத்தளவுமோங்கின மதிளென்றோ, வெள்ளியாலே சமைக்கப்பட்ட மதிளென்றோ சொல்லும் பக்ஷத்தில் இது பொய்யுரையாகாதோவென்று சிலர் சங்கிக்கக் கூடும்.
இத்தகைய ப்ராசாரஸம்ருத்தியுண்டாக வேணுமென்று ஆசம் ஸித்தருளிச் செய்கிதாகையாலே குறையொன்றுமில்லை யென்க.
————
***– திருக்கண்ணபுரத்திலே நின்றருளினவன் உபயவிபூதி நாதனாயிற்று; தொண்டர்களே உங்கள் துக்கங்கெட அநந்யப்ரயோஜநராய்க் கொண்டு ஆச்ரயியுங்கோளென்கிறார்
தொண்டீர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே–9-10-3-
பதவுரை
| தொண்டர் |
– |
தொண்டர்களே |
| வண்டு பாடும் பொழிழ் சூழ் |
– |
வண்டுகள் பாடுமிடமான் சோலைகளாலே சூழப்பட்ட |
| திரு கண்ணபுரத்து |
– |
திருக் கண்ணபுரத்தி வெழுந்தருளியிருக்கிற |
| அண்டம் வாணன் அமரர் பெருமானை |
– |
அகிலாண்ட கோடி ப்ரஹ மாண்டநாயகனான எம்பெருமானை |
| தும் தம் துயர் போக |
– |
உங்களுடைய துக்கம் தொலையும்படி |
| நீர் ஏகம் ஆய் |
– |
நீங்கள் அநந்ய ப்ரயோஜநர்களாய் |
| விண்டு வாடா மலர் இட்டு |
– |
மலர்ந்து வாடாத (அப்போதலர்ந்த) பூக்களைப் பணிமாறி |
| நீர் இறைஞ்சுமீன் |
– |
நீங்களே தொழுங்கள் |
தொண்டர்=இது அண்மைவிளி; தொண்டர்களே! என்றபடி. இளைய பெருமாளைப்போலே ஸகலவித கைங்கரியங்களையுஞ் செய்யப் பாரித்திருக்குமலர்களே யென்கை.
நுந்தம் துயர்போக=துயர் ல்லார்க்கும் ஒரே வகையாயிராது; “ஸம்ஸாரிகளுக்கு விரோதி சத்ருபீடாதிகள்; முமுக்ஷீக்களுக்கு விரோதி தேஹஸம்பந்தம்; முக்தர்க்கும் நித்யர்க்கும் விரோதி கைங்கர்யஹானி ” என்று முமுக்ஷீப்படியிலருளிச் செய்த கட்டளையிலே தந்தாமுடைய விரோதிகள் தொலையும்படியாக வென்கை.
நீர் ஏகமாய்=நீங்களெல்லாரும் லகீபவித்தவர்களாய்க் கொண்டு; (அல்லது) நீங்கள் பலவகைப் பலன்களைக் கணிசியாதே பகவத் கைங்கரியமொன்றையே கணிசித்தவர்களாய்க் கொண்டு என்றுமாம்.
விண்டுவாடாமலரிட்டு இறைஞ்சுமின்=செவ்விப் பூவைக் கொண்டு ஆச்சயியுங்கோள். நீர் என்பது முதலடியிலும் இரண்டாமடியிலுமுள்ளது; இரட்டிப்பு–உங்கள் ஸ்வரூபத்தை நோக்க வேணுமென்று ஞாபம் செய்கிறபடி.
வண்டுபாடும் போழில்சூழ் = வண்டுகளைப் போலே ஸாரக்ராஹிகளான வர்த்திக்கிற தேசமென்றபடி. அண்டவாணன் அமரர்பெருமான்=உபயவிபூதிநாதனென்கிறது. அண்டவாணன் என்பதனால் லீலாவிபூதி நிர்வாஹகத்வம் சொல்லுகிறது.
————-
***– ஆச்ரயிக்குமளவில் நப்பின்னைப்பிராட்டி புருஷகாரமாக ஆச்ரயியுங்கொள்; அவளுடைய புருணகாரபலத்தாலே பேறு தப்பாதென்கிறார்.
மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வனைத்
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வானை உந்தும் மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே–9-10-4-
பதவுரை
| மானை நோக்கி மட பின்னை தன் கேள்வனை |
– |
மானை யொத்த கண்பார்வையை யுடையளான நப்பின்னைப்பிராட்டிக்கு நாதனும் |
| கேணை |
– |
தேன்போல் இனியனுமான எம்பெருமானை |
| வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சமின் |
– |
அப்போதலர்ந்த செவ்விப் பூக்களையிட்டு நீங்கள் தொழுங்கள் |
| வானை உந்தும் மதிள் சூழ் |
– |
ஆகாசத்தை யளாவியிருக்கின்ற மதிகளாலே சூழப்பட்ட |
| திருக்கண்ணபுரம் |
– |
திருக்கண்ணபுரத்தை |
| நயந்த பெருமான் தான் |
– |
விரும்பியிருக்கின்ற சௌரிப்பெருமானே |
| சரண் ஆகும் |
– |
ரக்ஷகராவர் |
மானைநோக்கி= மான்நை நோக்கி என்று பதம் பிரித்து மானானது நையும் படியான (தோற்கும்படியான) நோக்கையுடைய நப்பின்னைப் பிராட்டியென்று பொருளுரைப்பர்.
தேனைவாடா மலரிட்டு= தேனை என்று தனியே பிரித்து தடுத்து, தேன் போன்ற (பரம போல் நானான) எம்பெருமானை என்று பொருளுரைப்பர்கள்.
ஆசார்ய ஹருதயத்தில் “அதில் துர்ப்பல புத்திகளுக்கு மல்லாண்ணி காலை மலையிண்டு தேனை வாடா மலரிட்டு நுண்பாரம் ஸாங்கபக்தி” என்றருளிச் செய்திருக்கையாலே தேனை வாடா மலரென்று ஒருசொல்லாகக் கொள்ளுகிற யோருகையும் உண்டென்று தெரிய வருகின்றது,
தேனையுடைத்தாய் வாடாத மலரையிட்டு என்று கொள்க.
வானையுந்து மதிள்சூழ் திருக்கண்ணபுரம்=ஆகாத்தோடே ஸபர்த்தை பண்ணி அத்தைத் தள்ளுமா போலேயிருக்கிற மதிலாலே
—————
***– கீழ்ச்சொன்னபடி பக்தி யோகத்தால் அவனை யாம்யிக்க அதிகாரிகளல்லாமல் தன் திருவடிகளையே உபாயமாகப் பற்றினவர்களுக்கு எம்பெருமான் எல்லாப்படியானும் தக்ஷகனாய் தேஹாவஸானத்திலே அவர்களை இந்த ப்ரக்ருதியில் நின்றும் விடுவித்துத் திருநாட்டிலே கொண்டுபோய் வைத்தருள்லனென்கிறார்.
சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-
பதவுரை
| தனதாள் அடை ந்தார்க்கு |
– |
தனது திருவடிகளை உடைந்தவர்களுக்கு |
| சரணம் எல்லாம் ஆகும் |
– |
ஸகலவித ரக்ஷசனுமாய் |
| மாணம் ஆனால் |
– |
இந்த தேஹம் விட்டு நீங்கினவுடனே |
| வைகுந்தம் கொடுக்கும் |
– |
பரமபதமளிக்கும் பெருமானுமாய்பிரான் |
| திருக்கண்ணபுரம் |
– |
திருக்கண்ணபுரமாகிற |
| காண் |
– |
ஷேத்திரத்தை |
| ஆளன் |
– |
ஆள்பவனுமான எம்பெருமான் |
| அன்பு ஆகும் |
– |
அன்புதானே வடிவெடுத்தவனாயிருப்பன் |
இப்பதிகத்திற்கு இப்பாட்டே உயிராயிருக்கும்;
“ஆழ்வீர்! உமக்கு மரணமாகும் வைகுந்தம் கொடுக்கடவேன்” என்று எம்பெருமானருளிச் செய்ததையே “மரணமானால் வைகுந்தங் கொடுக்கும் பிரான்” என்கிற சொல்நயத்தாலே வெளியிட்டருளுகிறார்
இவ்வுடன் முடியுந்தனையும் பொறுத்திரும் ; முடிந்தவுடன் ப்ராப்த மருமங்கள் முடிந்தளனமாக கொண்டு, ஸஞ்சிதாருமங்களை க்ஷமைக்கு விஷயமாக்கி இவ்வளவோடே ஜன்ம பரம்பரையை முடித்து விட்டு பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா வொழுக்குமழுக்குடம்பும் இந்நின்ற நீர்மை இனியாமுறாமை என்று நீர் முலடியிலே பிரார்த்தித்தபடியே செய்து தலைக்கட்டுவேன் என்று ஆழ்வாரை நோக்கி எம்பெருமானருளிச் செய்தது இங்கு அநுபாஷிக்கப்பட்டதாயிற்று.
“மரணமாக்கி வைகுந்தங் கொடுக்கும் பிரான்” என்று ஆழ்வாரருளிச் செய்திருந்தாரென்றும், அது அச்லீலமாயிருக்கிறதென்று கருதிய ஸ்ரீமந்நாதமுனிகள் போல்லார் அப்பாடத்தைமாற்றி “மரணமானால்” என்று ப்ரவசனம் செய்தருளின ரென்றும் சிலர் சொல்லிவருவது ஆதாரமற்ற அஸம்பத்தமான ஐதிஹயம்.
வியாக்கியான ரீதிக்கு அது நெஞ்சாலும் நினைக்கத்தக்கதன்று “மரணமாக்கி” என்று பாடமிருந்தால் அது “அருளுடையவன் தாளணைவிக்கும் முடித்தே” என்ற பாசுரத்தோடொக்குமாதலால் அறை மாற்ற வேண்டிய அவச்யமேயில்லையா மென்று தெளிக.
“அரண் அமைந்த மதிள்சூழ்” என்ற விசேஷணத்தினால் ஆழ்வார் தம்முடைய அச்சத்தைத் தீர்த்துக் கொள்ளுகிறார்;
நித்யஸுரிகள் பரியவிருக்கின்றவன் இங்கே நின்றானே ! இவனுக்கு என் வருகிறதோவென்று அஞ்சவேண்டாதிருக்கை.
தரணியாளன்–தரணியென்று பூமிக்குப்பெயராய், பூமியிலுள்ள ஸம்ஸாரிகளை ஆட்கொள்ளுபவன் என்றதாம்.
தனதன்பர்க்கு அன்பாகும்= ‘தம்மையுகப்பாரைத் தாமுகப்பர்’ என்றபடி.
‘அன்பர்க்கு அன்பனாகும்’ என்ன வேண்டுமிடத்து அன்பாகும் என் கையாலே எம்பெருமான் அன்பையிட்டே நிரூபிக்க வேண்டும்படி யாவன் என்பது பெறப்படும்.
—————
***– தன தாளடைந்தார்க்கெல்லாம் அன்பனாகும்= “அநாலோசித விசேஷாசேஷ லோகசரண்ய!” என்று எம்பெருமானாரருளிச் செய்வதை இங்கு அநுஸந்திப்பது. தனது திருவடிகளையுடைந்தாரில் இன்னாரினையாசென்று வாசி பாராதே வஸிஷ்ட சண்டாள விபாகமற எல்லார்க்குமொக்க ஸ்நேஹிக்குமவன் எம்பெருமான்.
ஸ்ரீவைகுண்ட ஸ்தலத்தில் *ய: சக்கி தேவ யதி சிஞ்சந ஹந்த ஜந்து பவ்யோ பஜேத பகவந்த மநந்யசேதா, தம் ஸோயமீத்ருச இயாநிதி வாப்யஜாநந் ஹை வைநதேயஸமமபி உரரீகரோஷி* என்று ஆழ்வானருளிச் செய்தது இங்கே அநுஸந்தேயம்.
அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டான்
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
அன்பன் நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே–9-10-6-
பதவுரை
| தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் |
– |
தனது திருவடிகளைப்பற்றினாரெல்லார்க்கும் |
| அன்பன் ஆகும் |
– |
அன்பு செய்பவனாய் |
| செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கிண்டவன் |
– |
சிவந்த பொன்போன்ற அடம்பையுடைய இரணியாசுரனது உடைலைக் கீண்டவனாய் |
| நான் பொன் எய்ந்த மதிள் சூழ் |
– |
நல்ல பொன்னாலே யமைத்த மதிளாலே சூழப்பட்ட |
| திரு கண்ணபுரத்து அன்பன் |
– |
திருக்கண்ணபுரத்திலே விருப்பமுடையவனான எம்பெருமான் |
| தன மெய்யர்க்கு |
– |
தன் திறத்திலே உண்மையாக ஸ்நேஹிக்குமவர்களுக்கு |
| நாளும் மெய்யன் |
– |
எப்போதும் உண்மையான ஸ்நேஹமுடையவன் |
செம்பொனாகத்தவுணனுடல் கீணடவன்=ப்ரஹலாதாழ்வான் அஸுரயோனியிலே பிறந்திருக்கச் செய்தேயும் அவனது அன்பையே கணிசித்து அவனை விரோதி நிரஸக புர்வகமாக அநுக்ரஹித்தவன்; அவ்வண்ணமாக எல்லோரையும் அநுக்ரஹிக்க வல்லவன் என்று காட்டினபடி.
அப்படிப்பட்ட மஹாகுணம் விளங்கத் திருக்கண்ண புரத்திலே வர்த்திக்கின்ற பெருமான், தன மெய்யர்க்கு நாளும் மெய்யன்=தன் பக்கவில் பாரமார்த்திக ப்ரயோஜந புத்தியுடையார்க்குத் தானும் அவர்கள் பக்கலிலே பாரமார்த்திக ப்ரயோஜந புத்தியையுடையனாயிருப்பன்.
ஆகவே அப்பெருமான் பக்கலில் பாரமார்த்திக ப்ரயோஜந புத்தியைப் பண்ணி ஆச்ரயிங்கோ ளென்றாராயிற்று.
————–
மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
பொய்யானாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்
செய்யல் வாளை உகளும் திருக் கண்ணபுரத்து
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே-9-10-7-
பதவுரை
| விரும்பி தொழு வார்க்கு எல்லாம் |
– |
தன்னையே புருஷார்த்தமாக ஆசைப்பட்டு தொழுமவர்களெல்லார்க்கும் |
| மெய்யன் ஆகும் |
– |
மெய்யன்பனாய் |
| புறமே தொழுவார்க்கு எல்லாம் |
– |
பிரயோஜநாந்தாங்களுக்காக மேலெழுத் தொழுமவர்களுக்கெல்லாம் |
| பொய்யன் ஆகும் |
– |
தன்னை உள்ளபடி காட்டமாட்டாதவனாய் |
| செய்யில்வாளை உகளும் திரு கண்ணபுரத்து ஐயன் |
– |
கழனிகளில் வாளை மீன்கள் துள்ளி விளையாடப் பெற்ற திருக்கண்ண புரத்திலே யெழுந்தருளி யிருப்பவனான எம்பெருமான் |
| ஆகத்து அணைப் பார்கட்கு |
– |
தங்கள் மனத்தில் ஊன்றவைத்துக் கொள்பவர்களுக்கு |
***– விரும்பித் தொழுவார்க்கு மெய்யனாகும்= ப்ரயோஜநாந்தரங்களான க்ஷுத்ர பலன்களைக் கணிசியாதே தன்னையே பரமப்ரயோஜநமாகப் பற்றினார் ஆரேனாமாகிலுமாம்; அவர்களெல்லார்க்கும் [மெய்யனாகும்] தன்னுடைய ஸ்வரூபரூபகுண விபூதிகளை உள்ளது உள்ளபடியே காட்டிக் கொடுப்பன் என்றபடி.
புறமே தொழுவார்க்கெல்லாம் பொய்யனாகும்=புறம்பே சில க்ஷுத்ர ப்ரயோஜனங்களைக் கணிசித்து அதற்காக ஆச்ரயிப்பார்க்கு அந்த அற்பபலன்களைக் கொடுத்துத் தன்னை மறையாநிற்பனென்கை.
இப்படி மெய்யர்க்கே மெய்யனாயும் பொய்யர்க்கே பொய்யனாயுமிருக்கு மிருப்பைத் திருக்கண்ணபுரத்திலே காட்டிக் கொண்டு வர்த்திக்கும் பெருமான், ஆகத்து அணைப்பார்கட்கு அணியன் தன்னை ஹருதயத்திலே வைப்பார்க்குக் கையாளாயிருப்பன்.
*இமேளஸ்ம முநிசார்தூல சிகரௌ ஸமுபஸ்திதொள, ஆஜ்ஞாபய யதேஷ்டம் வை சாஸநம் க்ரவாவ கிம்* என்று விச்வாமித்ரமுனிவனை நோக்கிச் சொன்னதை அநுஷ்டாந பர்யந்தமாக்குவனென்கை.
————–
அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்கட்கு எல்லாம்
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே–9-10-8-
பதவுரை
| தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் |
– |
தன் திருவடிகளைப் பணிந்தவர் களெல்லார்க்கும் |
| அணியன் ஆகும் |
– |
அந்தரங்கனா யிருப்பன் |
| பிணியும் சாரா |
– |
வியாதி முதலானவைகளும் அணுகமாட்டா |
| பிறவி கெடுத்து ஆளும் |
– |
ஸம்ஸார ஸங்கத்தை யறுத்து அடிமை கொள்வன் |
| மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் |
– |
ரத்னங்களும் பொன்களும் பொருந்தின மதிளாலே சூழப்பட்ட |
| திருக்கண்ணபுரம் |
– |
திருக்கண்ணபுரத்தி யெழுந்தருளிளிருக்கிற |
| பரமேட்டி தன் பாதம் |
– |
பரம புருஷனுடைய திருவடிகளை |
* * * .– தனதாளடைந்தார்க்கு எல்லாம் அணியனாம்=எம்பெருமான் திருவடிகளையடைவது இரண்டுவிதம்;
வேறொரு பலனை யுத்தேசித்து அதற்கு ஸாதனமாக இவன் திருவடிகளை யாச்ரயிருத்தல் ஒருவிதம் ;
அப்படியன்றிக்கே, பலனும் இதுவே, அதற்கு உபாயமும் இதுவே என்று கொண்டு ஆச்ரயித்தல் மற்றொரு விதம்.
இவ்விதமான ஆச்ரயிப்பவர்களே இங்குத் தனதாளடைந்தார் என்பதனால் விவக்ஷிக்கப்படுகிறார்ள்.
“தன் திருவடிகளையே ப்ராப்யம் என்று பற்றினாரெல்லாருடையவும்” என்பது ஆறாயிரப்படியருளிச்செயல்.
அன்னவர்கட்கு [அணியனாகும்] ஸுலபனாவன் என்றபடி. ஸுலபனாகிச் செய்வது என்னவெனில்; பிணியும் சாரா பிறவிகெடுத்தாளும்= துக்கங்களையும் துக்கஹேதுவான ஸம்ஸாரத்தையும் போக்கி அடிமைகொள்வான்.
ஆகவே, மணியும் பொன்னுமிழக்கப் பெற்ற மதிலாளே சூழப்பட்ட திருக்கண்ணபுரத்திலே, திருநாட்டிலிருக்கும் படியில் ஒன்றுங்குறையாதே யெழுந் தருளியிருக்கும் சௌரிப் பெருமாளுடைய திருவடிகளையே உபாயமும் உபேயமுமாகப் பற்றுங்கள் என்றாராயிற்று.
—————-
***– பிறர்க்கு உபதேசஞ்செய்வது கிடக்க, தாம் முன்னம் அவனையாச்ரயித்துக் குறை தீர்ந்தபடியைப் பேசிக்களிக்கிறார்.
பாதம் நாளும் பணியத் தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே–9-10-9-
பதவுரை
| வேதம் நாவர் விரும்பும் |
– |
வைதிகர்கள் விரும்பி வர்த்திக்குமிடமான |
| திருக்கண்ணபுரத்து |
– |
திருக்கண்ணபுரத்தி லெழுந்ததருளியிருக்கிற |
| ஆதியானை |
– |
முழுமுதற்கடவுளான எம்பெருமானை |
| அடைந்தார்க்கு |
– |
ஆச்ரயித்தவர்களுக்கு |
| அல்லல் இல்லை |
– |
துக்கமொன்று மில்லையாகும் |
| நாளும் பாதம் பணிய |
– |
(அப்பெருமானுடைய) திருவடிகளை எப்போதும் ஸேவிக்கு மளவில் |
| பிணி தணியும் |
– |
நோய்கள் அறும் |
| ஏகம்சாரா |
– |
பாவங்கள் சேரமாட்டா |
| இனி |
– |
இப்படியான பின்பு |
| என் குறை |
– |
என்ன குறையுண்டு? |
|
(ஒரு குறையுமில்லை) |
||
அவனது திருவடிகளை யாச்ரயிக்கவே அநாதி காலமாகத் திரட்டின பாவங்களெல்லாம் தொலையும் ; இனிமேல் பாவம் வந்து புகாது. இது என்னுடைய அநுபவத்தாலே; நான் குறை தீர்ந்தேனாகையாலே நீங்களும் குறை தீரப்பெ வேணுமென்று சொல்லுகிறேன்.
வேதமறிந்த வைதிகர்கள் திரும்பி வர்த்திக்கிற திருக்கண்ணபுரத்திலே, ஸந்நிதி பண்ணியிருக்கிற ஜகத்காரண பூதனையடைந்தார்க்கு அல்லல் இருக்குமோ? தாய்மடியிலே சாய்ந்தார்க்கு கிலேசமில்லை யென்னுமிடம் சொல்லவேணமோ?
————
***– பத்தியையோ ப்ரபத்திலேயோ அனுஷ்டிக்க சக்தரல்லாதவர்கள் திருக்கண்ணபுரமென்று சொன்னவளவிலே ஸமஸ்ததுக்கங்களும் போமென்கிறார்.
இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே –9-10-10-
பதவுரை
| அல்லல் இல்லை |
– |
துக்கங்கள் தொலையும் எனக்கு இனி என் குறை |
| அல்லி மாதர் அமரும் திருமார்ப்பவன் |
– |
தாரையாளான பெரிய பிராட்டியாரு ருதையும் திருமார்பையுடைய பெருமான் |
| நல்லில் ஏய்ந்த மதிள் சூழ் |
– |
கற்பணிமிக்க மதிளாலே சூழப்பட்ட |
| திரு கண்ணபுரம் சொல்ல |
– |
திருக்கண்ணபுரம் என்று சொன்ன வளவில் |
| நாளும் |
– |
ஒரு நாளும் |
| துயர்பாடு சாரா |
– |
துக்கம் அணுகாது |
“எனக்கேலினி யென் குறை” என்று கீழ்ப்பாட்டிலருளிச் செய்திருக்கச் செய்தேயும் உகப்பின் மிகுதியாலே மீண்டுனருளிச் செய்கிறார்.
எம்பெருமானை யநுபவிப்பதற்கு இடையூறானவை யெல்லாம் தொலைந்தபின்பு இனியொரு தேசவிசேஷம் தேடிப்போக வேண்டியருந்ததோவென்கை.
பெரியபிராட்டியார் நித்யவாஸம் பண்ணுகிற திருமார்பை யுடையவனாகையாலே ஆச்ரயகைக்கு ருசியே வேண்டுவது, காலம் பார்க்க வேண்டா.
அப்படிப்பட்டவன் வர்த்திக்கிற திருக்கண்ணபுரமென்று வாயாலே சொல்லவே துக்கங்களென்று பேர்பெற்றவையெல்லாம் தாதவழி யகலும்.
————–
பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே–9-10-11-
பதவுரை
| வினை பற்று |
– |
துக்க ஸம்பந்தம் |
| பாடு சாரா |
– |
அருகில் கிட்டாதபடி |
| அற வேண்டுவீர் |
– |
அது கொலையவேணு மென்றிருப்பவர்களே |
| மாடம் நீடு குருகூர் |
– |
மாடமாளிகைகள் உயர்ந்த திருநகரியிலே அவதிர்த்த |
| சடகோபன் |
– |
ஆழ்வார் |
| சொல் |
– |
அருளிச்செய்த |
|
தமிழ் பாடல் ஆன ஆயிரத்துள் இப் பத்தும் – |
||
| பாடி |
– |
வாயாரப்பாடி |
| ஆடி |
– |
அதற்குச் சேர நர்த்தன்ம் பண்ணி |
| அவன் தாள்களே பணிமின் |
– |
அப்பெருமானுடைய திருவடிகளையே தொழுங்கள் |
***– பலனுரைத்துத் தலைக்கட்டவேண்டிய இப்பாசுரத்தில் “இப்பத்தும் பாடி பணிமிளவன்தாள்களே” என்று உபநெசரூபமாகவே யருளிச்செய்தாரெனினும் இதுவும் பயனுரைப்பதாகவே தலைக்கட்டும்.
இப்பத்தும் பாடியாடுவார்க்கு அவன் தாள்களையே பணிதலாகிற பேறு ஸித்திக்குமென்பதே பரமதாற்பரியம்.
வினைகள் உங்களருகிலும் வந்து கிட்டாதபடி அவற்றை வேர்ப்பற்றோடே போக்க வேண்டியருந்திகோளாகில், குருகூர்ச் சடகோபன் இசையோடே கூடப்பாடின தமிழாயிரத்துள் சௌரிப் பெருமான் விஷயமான இப்பதிகத்தை ப்ரீதியோடே பாடி இருந்த விடத்திவியதேயாடி அவன் திருவடிகளிலே விழுங்கோன் என்றுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று.
————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Related
This entry was posted on November 15, 2022 at 12:40 pm and is filed under திரு வாய் மொழி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply