* * * …. காலைப் பொழுதானவாறே கண்ணபிரானைப் பிரிய நேர்கின்றதேனென்கிற வருத்தம் செல்லா நிற்க அதற்கு மேலே குயில்மயில் முதலானவைகளின் பாடுதலும் ஆடுதலும் கேட்டும் கண்டும் இன்னமும் வருத்தம் வளர்ந்து செல்லுகிறபடியைச் சொல்லிப் புலம்புகிறாள்.
வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ
தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1-
பதவுரை
| வேய் மருதோள் இணை |
– |
வேய் போன்ற தோள்களிரண்டும் |
| கணம் மயில் அவை கலந்து ஆலும் ஆலோ |
– |
திரளான மயில்கள் கலந்து கேகாரவம் செய்யா நின்றன அந்தோ! |
| ஆல்ஓ |
– |
அந்தோ(அவ்வளவு மன்றிக்கே) |
| மெலியும் பிரிவாற்றாமையினால் தளர்ந்தன; |
– |
மருவு ஆ நிரை இனம் மேய்க்களுன்னோடு மருவுகின்ற பசுக்கூட்டங்களை மேய்க்கைக்காக |
| என் மெலிவும் என் தனிமையும் |
– |
என்னுடல் மெலிவையும் பிரிவாற்றாத என் தனிமையையும் |
| நீ போக்கு ஒரு பகல் |
– |
நீ (காட்டுக்குப்) போகிற ஒரு பகலானது |
| யாதும் நோக்கா |
– |
சிறிதும் நோக்காமல் |
| ஆயிரம் ஊழி ஆலோ |
– |
ஆயிரம் யுகமாகக் கழியா நின்றதந் |
| காமரு குயில்களும் கூவும் |
– |
அழகிய குயில்களும் கூவுகின்றன; ; |
| தாமரை கண்கள் கொண்டு ஈர்தி |
– |
தாமரை போன்ற திருக்கண்களாலே நோக்கி நோவுபடுத்துகின்றாய் |
| ஆலோ |
– |
அநதத் தொனியும் அஸஹ்யமாயிரா நின்ற தந்தேர் |
| கண்ணா நீ தகவு இலை தகவு இலை |
– |
கண்ணா! நீ கருணையுடையை யல்லை, திண்ணம். |
தொடங்கும் போதே வேய்மருதோளிணை மெலியுமாலோ என்கிறவிது ’ வீடு நெருப்புப் பற்றி யெரியா நின்றதே!’ என்கிறாப் போல் உள்ளது. கண்ணபிரானை இடைவிடாது அணைத்துக் கொண்டிருக்கத் தக்க தோள்கள் அவருடைய பிரிவை நினைத்து ’ஐயோ! நாம் நம் இரையை இழந்திருக்க வேண்டிவருகிறதே!’ என்று மெலிகிற படியால் அதனைச் சொல்லி வருந்துகிறாளாயிற்று.
இப்போது கண்ணபிரான் பிரித்தானல்லன்; கூடவேதானிருக்கிறான்; ஆனாலும் அடுத்த க்ஷணத்திலே பிரிவு விளையப் போகிறது திண்ணமாதலால் அப்பிரிவு இப்போதே விளைந்திட்டதாக எண்ணி அலற்றுகிறபடி.
என் மெலிவும் என்தனிமையும் யாதும் நோக்கா காமருகுயில்களும் கூவுமாலோ…. உலகத்தாருடைய மெலிவும் தனிமையும் போலன்றே என்னுடைய மெலிவும் தனிமையும்; அவர்கள் தங்களுடைய அபிமதவிஷயங்களைப் பிரிந்த பிறகு தனிமையை நினைத்து மெலிவர்கள்; நான் அப்படியோ?
தலைவன் கூடியிருக்கச் செய்தேயும் பிரிவை நினைத்துத் தனிமையை நிச்சயித்து மெலிகிறவளன்றோ நான்; இப்படிப் பட்ட என்னுடைய மெலிவையும் தனிமையையும் சிறிதும் கணிசியாமல், காமரு குயில்களும் கூவுமாலோ. அழகிய குயில்களும் பஞ்சமராகத்தைப் பன்னிப்பன்னி என்னுயிரைக் கொள்ளை கொள்கின்றனவே யென்க.
’காமம் தரு’ என்ற இரண்டு சொற்கள் ஒன்று சேர்ந்து காமரு என விகாரப்பட்டதென்க. பரஸ்பரம் காமரஸத்தை யநுபவிக்கிற என்றபடி; காண்பார்க்கு ஆசையை விளைவிக்கிற என்றபடியுமாம்.
கணமயிலவை கலந்து ஆலுமாலோ…. கணமயிலென்றது கூட்டமான மயிலென்றபடி. இணை பிரியாமல் கூடியிருக்கின்ற மயில்கள் தன் கண்ணுக்கு விஷம் போலே யிருக்கையிலே முகத்தை மாறவைத்து அவை என்று பரோக்ஷம் போலே சொல்லுகிறாள்;
கண் கொண்டு காணப்போகாதபடி ஒரு திரளாக இருந்து மயில்கள கூத்தாடுகின்றமை ஸஹிக்கக் கூடிய துக்கமாக இலலையே! என்றபடி.
கண்ணபிரான் அருகேயிருக்கும் போதே இப்படி அலற்றுகையாலேஅவன் அம்மா! நான் கூடவேயிருக்கச் செய்தே ஏனிப்படி வருந்துகிறாய்? நான் கூடவே யிருப்பது உனக்குத் தெரியவில்லையா? பிரித்தேனாக நினைத்தாயோ?வீணாக ப்ரமிக்க வேண்டர் வருந்தாதே என்று சொல்ல;
ஆமருவீன நிரைமேய்க்க நீ போக்கொரு பகல் ஆயிரமுழியாலோ; என்கிறாள் பிரானே! இப்போது நீ கூடியிருக்கிறாயென்பதை அறிந்திலேனல்லேன்; அடுத்த க்ஷணத்திலே பிரியவிருக்கிற நீ இப்போது கூடியிருப்பது ஸம்ச்லேஷமாக எண்ணத்தகுமோ?
ஸ்வர்க்கேபி பாதபீதஸ்ய க்ஷயிஷணோர் நாஸ்தி நிவ்ருதி:* என்பதறியாயோ நீ; நீ பசு மேய்க்கப் போவது தவிரப் போகிறாயோ? அந்தணர்கள் ஸ்நாநஸந்தயாவந்தனங்கள் தவிர்ந்தாலும் நீ பசு மேய்ப்பது தவிர மாட்டாயர் போனால் விரைந்து வருமவனோ நீ?
’ ஒரு பகல் தானே நமக்கு பிரிவு என்பாய் நீ; உன் கருத்தாலே ஒரு பகல்; அது எங்கள் கருத்தாலே ஆயிர மூழியாயன்றோ இருக்கிறது;
* த்ருடி யுகாயதே த்வாமபச்யதாம்* என்று காணிருப்பது… என்று சொல்ல;
அந்தோ! நாம் பிரியாதிருக்கச் செய்தேயும் பிரிவை நிச்சயித்து இங்ஙனே யலற்றுகிறார்களே, இப்படியுமொரு ப்ரேமஸ்வபாவமுண்டோ என்று வியந்து கண்ணாலே குளிர நோக்கினான் கண்ணபிரான்;
அந்த நோக்கும் பாதகமாக, தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தியாலோ! என்கிறான். கண்ணா! என்னை நீ கண்ணாலே உற்று நோக்கிக் கொலை செய்வதிற் காட்டிலும் பிரிந்து போவதே நன்று காண் என்கிறாள் போலும்.
இப்படிச் சொல்லச் செய்தேயும் அவன் நோக்கை மாறவைத்திலனாக, தகவிலை தகவிலையே நீ கண்ணா என்கிறாள்.
* பெண்ணின் வருத்தமறியாத பெருமானாயிருந்தாயே;
* வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பேயாக வளர்த்தாளே! என்னும்படியிருந்தாயே;
* தருமமறியா’ குறும்பனாயிருந்தாயே; இப்படியும் படுகொலையடிப்பாயோ வென்கிறாள்.
—————
* * * …. பிரிவை நினைத்துப் புலம்புகிற படியைக் கண்டு ஒருவாறு வருத்தம் தீரும்படி அடுத்தடுத்து ஆரத் தழுவிக் கொண்டான் கண்ணபிரான்; இது தான் விச்லேஷப்ராகலாவ காலத்து ஸம்ச்லேஷமாகையாலே இது துக்கமாகத் தோற்றுமே யல்லது ஸுகமாகத் தோற்றாதாகையாலே கனாக்கண்டு விழித்தாற்போலே நோவுபட நின்றமையைச் சொல்லிக் கதறுகிறாள்.
தகவிலை தகவிலை யே நீ கண்ணா
தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச்
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச்
சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால்
வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–10-3-2-
பதவுரை
|
(கண்ணா நீ தகவிலை தகவிலையே) |
||
| அகம் உயிர் |
– |
உள்ளீடான பிராணனுடைய |
| தட முலை புணர் தொரும் |
– |
முலைத்தடங்களை நீ ஆலிங்கனம பண்ணுகிற க்ஷணந்தோறும் |
| அகம் அகம் தோறும் |
– |
மர்ம ஸ்தானங்கள் தோறும் |
| புணர்ச்சிக்கு ஆரா |
– |
அந்தப் புணர்ச்சியீனளவல்லாத |
| உள் புக்கு |
– |
உள்ளே பிரவேசித்து |
| சுகம வெள்ளம் |
– |
ஆனந்த ஸாகரமானது |
| விசும்பு இறந்து |
– |
ஆகாசத்தையும் கடந்து |
| ஆவியின் பரம் அல்ல |
– |
ஆத்மாவுக்குப் பொறுக்கு வொண்ணாதபடியா யிரா நின்றது! |
| அறிவை மூழ்க்க சூழ்ந்து |
– |
அறிவு கெடும்படி போய் பெருகினதாகி |
| அந்தோ |
– |
ஐயோ!: |
| அது கனவு என நீங்கி |
– |
(அப்போதே) அது கனவு தானென்னும் படியாகக் கழிந்து |
| இனி மிக மிக உன்னை பிரிவை ஆம் ஆல் |
– |
இனி மேன் மேலும் உன்னைப் பிரியும் படி யாகும் அந்தோ! (ஆதலால்) |
| ஆங்கே |
– |
அந்த நிலைமையிலே |
| வேட்கை |
– |
ஆசையானது |
| நின் பசு நிரை மேய்க்க போக்கு வீவ |
– |
பசுக்களை மேய்க்கைக்காக நீ போவது தவிர வேணும். |
தகவிலை தகவிலையே நீ கண்ணா வென்று மீண்டும் முறையீடுகிறாள்; கண்ணனென்றால் பெண்களுக்கே கைவழிமண்ணா யிருப்பனென்பர்களே; அதெல்லாம் வீணபவாதமாயிற்றே கண்ணா!; பெண்களைக் கண்டால் விஷமாய்விட்டதே யுனக்கு; கருணாகாகுதஸ்த னென்னும் ப்ரஸித்தியை இராமனுக்குத் தந்து நீர்க்ருணக்ருஷ்ணனென்னும் ப்ரஸித்தியை நீ கொண்டாயே யென்கிறாள்.
இதைக் கேட்ட கண்ணன், இப்படியும் என்னை நிந்திக்கலாமோ? நான் பிரிந்தேனல்லேன், பிரிய நினைத்தேனுமல்லேன்;கூடியேயிருக்கிறேனே யென்று சொல்லி இன்னமும் ஆரத்தழுவினாள்; இப்படி அணைக்கிறது பிரிகைக்காகவன்றோ என்றறிந்து அணைத்த கை நெகிழ்த்த விடமெங்கும் இவள் உடம்ப வெளுக்கும்படியானாள்.
அந்தத் துயரத்தை வாய்விட்டுச் சொல்லுகிறாள் தடமுலை புணர்தொறு மென்று தொடங்கி. கண்ணா நீ என்னோடு ஸம்ச்லேஷிக்கிற க்ஷணந்தோறும் விளைகின்ற இன்ப வெள்ளமாகது அபர்ச்சேத்யமான ஆகாசத்தையும் கடந்து என்னுடைய அறிவு கெடும்படி பெருகினாலும், அது தான் கனாக்கண்டது போலேயாய்க் கழிந்து, பெருக்காறு வற்றி அடிசுடுமாபோலே யாயற்றுக் காண்; ஆங்கே… அப்படிப்பட்ட நிலைமையிலே;
அகவுயிர் அகமகந்தோறு முள்புக்கு ஆவியின் பரமல்ல வேட்கை அந்தோ…… ப்ராணஸ்தானமான ஹ்ருதயத்தினுள்ளே யுண்டான அவகாசங்கள் தோறும் வேட்கையானது வியாபித்து ஆவியைக் கொள்ளைகொள்ளுமளவன்றிக்கே இன்னமும் என்னென்னவோ செய்வதாயிரா நின்றது;
(வேட்வக ஆவியின் பரமல்ல) அனுபரிமாணமான ஆத்ம வஸ்துவினளவல்ல அபிநிவேசம்; * என்றனளவன்றால் யானுடைய வன்பு* என்ற பூதத்தாழ்வாரருளிச் செயலின்படியே.
ஆனால் இப்போது நான் செய்ய வேண்டுவதென்? என்று கண்ணபிரான் கேட்க; அதற்கு மறுமாற்றமுரைப்பது ஈற்றடி. மேன்மேலு முன்னைப் பிந்து வருந்தும்படிக் குறுப்பான பசுமேய்க்கப் போக்கை நீ தவிர வேணும் என்றபடி.
(இன வீவ) இதற்கு முன்புள்ள காலமெலலாம் பிரிந்து போனாகிலும் இனிமேலுள்ள காலமாகிலும் தவிர வேணுங்கிடாய் என்கிறாள். வீவுதல்… ஒழிதல்.
ஈற்றடியில் “பிரிவையாமால்’’ என்று லகரவீற்றதாகப் பாடம் வழங்கி வருகின்றது; வியாக்யானங்களை நோக்குமிடத்து அப்பாடம் ஏற்றதாகத் தோன்றவிலலை;
“பிரிகையுண்டாம்படி’’ என்றே வியாக்யானங்கள் காணுதலால் “பிரிவையாமா’’ என்ற ஆகார வீற்றதான பாடமே யுக்தமென்று தோன்றுகிறது.
“பிரிவையாமால்’’ என்ற பாடத்திற்கு ’பிரிவை ஆம் ஆல்’ என்று பிரித்துக் கொள்வது பிரிவு என்னுஞ் சொல்லே பிரிவையென்று கிடக்கிறது.
————-
* * * ….. பசு மேய்க்கப் போவது தவிர வேணுமெனறாள்; அதற்கு அவன் சொன்னதாவது… வர்ணாச்ரம தருமங்கள் தவிரப்போமோ? பசு மேய்ப்ப தென்பது எனக்கு ஜாதிக்கேற்ற தருமமான செயலன்றோ? இதை நான் தவிரத்தகுமோ? என்றான்; அதற்குச் சொல்லுகிறாள்; பிறர்க்கு ஹிம்ஸையாய் முடியுங் காரியம் தருமமாகுமோ? நீ பசு மேய்க்கப் போவது ஸ்த்ரீ வதமா£யன்றோ முடிகிறது; * ஓர் பெண் கொடியை வதை செய்தானென்எஞ் சொல் வையகத்தார் மதியாரே* என்ற பாசுரம் கேட்டிலையோ; ஆண்கொலையிற் காட்டிலும் பெண் கொலை பெரும் பாதகமன்றோ. ராமாவதாரத்திலே தாடகாவதம் பண்ணியும் இவ்வவதாரத்திலே பூதநாவதம் பண்ணியும் சமைந்திருக்கிற நீ பெண் கொலைக்கு அஞ்சுதியோ வென்கிறாள்.
வீவன் நின் பசு நிரை மேக்கப் போக்கு
வெவ் உயிர் கொண்டு எனது ஆவி வேமால்
யாவரும் துணை இல்லை யான் இருந்து உன்
அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால்
பொரு கயல் கண்ணினை நீரும் நில்லா
சாவது இவ் ஆய்க் குலத்துக்கு ஆய்ச்சி யோமாய்
பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே–10-3-3-
பதவுரை
| நின் பசு நிரை மேய்க்க போக்கு |
– |
நீ பசுக்களை மேய்க்கப் போகும் நிமித்தமாக; |
| வீவன் |
– |
நான் முடிந்து போவேன் |
| ஒரு பகல் போவது அன்று |
– |
அந்த ஒரு பகற்போது கழிவதன்று காண்,(ஒரு யுகமாகப் பெருகிச் செல்லா நின்றதென்க) |
| எனது ஆவி வெவ்வுயிர் கொண்டு வேம் |
– |
எனது ஆத்மாவானது நெடு மூச்செறிந்து வெந்து போகின்றது; |
| பொரு கயல் கண் இணை நீரும் நில்லா |
– |
சண்டையிடுமிரண்டு கெண்டைகள் போன்ற கண்களும் நீர் பெருக நின்றன; |
| துணை யாவரும் இல்லை |
– |
துணையாவார் ஒருவருமில்லை (அவ்வளவிலும் ஆசையின் கனத்தாலே) |
| இவ் ஆய்குலத்து ஆய்ச்சி யோம் |
– |
இடைச்சிகளாய்ப் பிறந்த |
| ஆய் பிறந்த |
– |
நீ பிறந்த இடைக்குலத்திலே இடையராய்ப் பிறவாதே |
| யான் இருந்து |
– |
யான் முடியாதிருந்து . |
| உன் அஞ்சனம் மேனியை |
– |
அஞ்சனம் போன்றழகிய உன் திருமேனியினுடைய |
| ஆட்டம் காணேன் ஸஞ்சாரமும் காண்கின்றிலேன்; |
– |
தொழுத்தை யோம் நீசத்தன்மை வாய்ந்த எங்களுடைய |
| நீ அகன்றால் |
– |
நீ பிரிந்து போனால் |
| இதனிமை தானே சாவது |
– |
இப்பிரிவுத் துயரம் தொலைய வேணும். |
கீழ்ப்பாட்டினீற்றடியில் ’வீவ, நின்பசுநிரை’ என்று பதவிபாகம்; இப்பாட்டில் ’வீவன்’ என்று பதவிபாகம். நீ பசு மேய்க்கப் போவது காரணமாக, வீவன் … நான் முடிந்திடுவேன் என்றபடி.முடியும் படி வந்ததென்? என்ன; வெவ்வுயிர்க் கொண்டு எனதாவிவேமால் என்கிறாள்,
என்னிலைமையைப் பார்க்க மாட்டாயோ பிரானே; நீ பசு மேய்க்கப் போகப்போகிறாயென்று நினைத்தவாறே நெடுமூச்செறிந்து உலர்ந்து போன என்னுடைய ஹ்ருதயமானது விரஹாக்னி கொஉத்தி எரியா நின்றமை காணமாட்டாயோ? இதிலே ஒரு குடம் தண்ணீரைச் சொரியமாட்டாயோ வென்கிறாள்.
துணை யாவருமில்லை… துணையாவார் யாருமிலர் என்றபடி. துணைவனென்று பேர்பெற்றிருக்கிற நீயோ போகப் புகா நினறாய்; பிரிவில் துணையாகக் கூடிய தோழிமார்களோ எனக்கு முன்னே வாடி வதங்கிச் சருகாகின்றார்கள்; குயில் மயில் முதலானவையோ கொல்லப் பார்க்கின்றன; இனித் துணையாவார் யாருளர்
(யானிருந்து) பிரிந்தவாறே பிராணன் சடக்கென என்னைவிட்டொழயலாமே; அதுவமில்லை; எல்லாம் பட்டும் நூறே பிராயமாகவன்றோ நானிருக்கிறேன்’’
(உன் அஞ்சன மேனியை ஆட்டங்காணேன்) “ச்ரமஹரமான வடிவைக்கொண்டு என் முன்னே ஸஞ்சரிக்க்க் காணேன்’’ என்பது இருபத்துநாலாயிர ஸ்ரீஸூக்தி.
’ஆட்டங்காணேன்’’ என்றது என்முன்னே நடையாடக் காண்கின்றிலேன் என்றபடி.
இதற்கு மற்றோரு விதமாகவும் பொருளுரைக்கலாம்; * ஆநிரை மேய்க்க நீ போதி அருமருந்தாவதறியாய், கானகமெல்லாந்திரிந்து உன் கரிய திருமேனிவாட* என்று பெரியாழ்வாரருளிச் செய்த கட்டளையிலே, உன் அஞ்சனமேனி கல்லும் முள்ளுமான காட்டிலே நடையாட நான் காணேன்…. ஸஹித்திருக்க மாட்டேன் என்பதாக.
அல்லும் பகலுமெல்லாம் நான் காட்டிலேயா திரியப் போகிறேன்? ஒருபகல் தானே; கண்ணை மூடித் திறப்பதற்குள்ளே பகற்போது போய்விடாதோ? என்று கண்ணன் சொல்ல,
போவதன்றோரு பகல் நீயகன்றால் என்கிறாள். நீ அகன்றால் ஒரு பகல் போவான்று… உன்னோடு கூடியிருக்குங் காலத்தில் பல பல வூழிகளும ஒரு நொடிப் பொகுது போல் கழிந்துபோம்; உன்னைப் பிரிந்தாலோ ஒருபகல் ஒரூழிகாலமாகப் பெருகிச் செல்லுமேயன்றிப் பெயர்ந்து போவதன்று;
பொருகயற்கண்ணிணை நீரும் நில்லா …உன் போக்கு நினைத்துப் பாய்கிற கண்ணீர் என்னால் தகையப் போகிறதில்லை. உன்னைத் தகைந்தாலும் தகையலாம், கண்ணீரைத் தகைய முடியவில்லை காண் என்கிறாள். பிரிவை நினைத்துக் கண்துள்ளுகிறபடிக்கு மீன் துள்ளுகிறபடியைஒபபுச் சொன்னதாகக் கொள்க.
அதற்குச் செய்யவேண்டுவதென்? என்று கண்ணன் கேட்க; அதற்கு மறுமாற்றம் ஈற்றடி.
இவ்வாய்க்குலத்து ஆய்ச்சியோமாய்ப் பிறந்த இத்தொழுததையோம் தனிமை தான் சாவது… நீ போனாலும் பேர் இருந்தாலும் இரு; இதில் விதிநிஷேதமொன்றும் நான் செய்கின்றிலேன், இவ்விடைக்குலத்தில் இடைச்சிகளாய்ப் பிறந்த தண்ணியோமான எங்களுடைய தனிமை யொன்றே தொலையக் கடவது.. என்கிறவிதன் உட்கருத்து ஆழ்ந்து அறியத்தக்கது.
“ஸாவுத்ர்யைப் போலே சொல்லுகிறாள்’’ என்பது ஈடு.
ஸத்யவானுடைய உயிரைக் கொண்டு போகா நின்ற யமன், அவஉடைய மனைவியாகிய ஸாவித்ர் பின் தொடர்ந்து வருவது கண்டும் இனிய பேச்சுகள் பேசுவது கேட்டுப் பெறலாம்’ என்று கூற
அப்போது கணவனுடைய உயிரைக் கேளாமல் ’இவனால் எனக்கு நூறு பிள்ளைகள் பிறக்க வேணும்’ என்று கேட்டாளாம்;
அது போலவே இங்குச் சோல்லுகிறபடி…’ நீ போனால் போ, இருந்தாலிரு’ என்று. அவன் பசு மேய்க்கப் போனால் இவர்களது தனிமை எங்ஙனம் தொலையும்? சி போகாமல் இருந்தே தீரவேணுமென்பதைப் பரியாயமாகச் சொன்னபடி.
“இத்தனிமைதானே சாவது’’ என்றவிதற்கு மற்றொருவகையாகவம் பொருள் கூறுவர்…
எங்களுக்குத் தமையென்றும் மரணமென்றும் இரண்டில்லை, இத்தனிமைதானே மரணம் என்பதாக. இப்பொருளில் சாவது என்பது விநாசமென்னும் பொருளில் வந்த பெயர்ச் சொல்; முந்தின பொருளில் ஒரு வகை வியங்கோள்.
“ பேசும்படி அன்ன பேசியும் போவது’’ என்ற திருவிருத்தப் பாசுரத்தில் போவது என்றது போல.
அன்றிக்கே, தனிமை சாவது… இத்தனிமை மிகவும் பொல்லாது; பொறுக்க வொண்ணாதது என்னவுமாம்.
இவ்வொருதலைக் காமம் தொலையட்டும் என்னவுமாம்.
———-
* * * … “ உங்களை நான விட்டுப் போவேனோ? பிரியேன், பிரியில் தரியேன், என்று நான் சொன்னதெல்லாம் மறந்தீர்களோ? என்னைப் பிரிந்து நீங்கள் படும் பாடெல்லாம் உங்களைப் பிரிந்து நான் படமாட்டேனோ? என் பிரிவை ஒருவாறு நீங்கள் பொறுத்திருந்தாலும் உங்கள் பிரிவு என்னால் பொறுக்குப போமோ!’’ என்றிப்படி
சில வார்த்தைகளைக் கண்ணபிரான் ப்ரணயத்தின் மேலெல்லையில் நின்று சொல்ல; நாயனே! இந்தக் கள்ளப் பணிமொழிகள் தாம் எம்மை நீராயலைந்து கரைய வுருக்குகின்றன வென்கிறார்கள்.
தொழுத்தையோம் தனிமையும் துணை புரிந்தார்
துயரமும் நினைகிலை கோவிந்தா நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி
துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம்
பாவியேன் மனம் அகம் தோறும் உள் புக்கு
அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்–10-3-4-
பதவுரை
| கோவிந்தா தொழுத்தையோம் தனிமையும் |
– |
கண்ணா! அடிச்சிகளான எங்களுடைய தனிமையையும் |
| இன் சாறு வெள்ளம் |
– |
இனிதான ரஸப்ரவாஹமானது |
| துணை பிரிந்தார் துயரமும் |
– |
துணையான வுன்னைப் பிரிந்தார் படுமலமாப்பையும் |
| நினைகிலை |
– |
நினைக்கின்றாயில்லை; |
| பாவியேன் மனம் அகம் தோறும் உள் புக்கு அழுத்த |
– |
பாவியேனுடைய நெஞ்சின் அவகாசந்தோறும் மறக்க வொண்ணாதபடி ஸ்திரமாக |
| நின் செம் கனிவாயின் |
– |
சிவந்த கனி போன்ற திருபபவளத்தினின்று வந்த |
| நின்தோழுதனில் பசுக்களையே விரும்பி உனது |
– |
தொழுலிலுள்ளன பசுக்களையே ஆதரித்து |
| இம்மை துறந்து இட்டு |
– |
எங்களை அநாதரித்து விட்டு |
| கள்வம் பணி மொழி |
– |
க்ருத்ரமமான தாழ்ந்த மொழிகளானவற்றை |
| அவை மேய்க்க போதி |
– |
அவற்டிற மேய்க்கப் போகா நின்றாய் |
|
(அதற்கு மேல்) |
||
| நினைதொறும் |
– |
நினைககும் போதெல்லாம் |
| பழுத்த நல் அமுதின் |
– |
பரிப’வமாய்த் தெளிந்த அம்ருதத்தினுடைய |
| ஆவி வேம் ஆல் |
– |
எங்கள் பிராணன் பர்தபிக்கின்றது அந்தோ! |
தொழுத்தையேயாம்… தொழுத்தையோ மென்றம் அடிச்சியோ மென்றும் பரியாயம்; கண்ணா! உனக்கே அற்றுத் தீர்ந்திருக்குமவத்களான எங்களுடைய தனிமையையும், துணைவனான வுன்னைப் பிரிந்தவர்கள் படும் துடிப்பையும் நீ அறிகின்றாயில்லை; பிரிகிறோம் நாங்களெடன்றும் பிரிகிறது உன்னையென்றும் பார்க்கிறாயல்லை.
கோவிந்தா! நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பி எம்மைத் துறந்திட்டு அவை மேய்க்கப் போதி… நாராயணனென்பது முதலான திருநாமங்களைத் தவிர்ந்து கோபாலனென்றும் கோவிந்தனென்றும் சில திருநாமங்களை ஆசைப்பட்டு வந்தாய்; அத் திருநாமத்திற்கேற்கு எங்களை யுபேக்ஷித்துப் பசு மேய்க்கையையே விரும்பிக் கடிய வெங்கானிடைக் காலடி நோவச் செல்லா நின்றாய்… என்று ஆய்ச்சியர் சொன்னவாறே,
கண்ணன் ’நங்கைமீர் நான் உங்களைவிட்டுப் போவதென்று ஒன்றுண்டோ? போனால் தான் உங்களை மறப்பதுண்டோ? என்னாற்றாமையையும் உங்க ளாற்றாமையும் சீர்தூக்கிப் பார்த்தால் பர்வதபரமாணுவோட்டைவாசி போருமே; மாதாபிதாக்களுக்குப் பரதந்திரனாய் அவர்கள் சொல்லிற்றுச் செய்ய வேண்டுமாகையாலே பசு மேய்க்கப் போகிறேனித்தனையன்றோ. போனாலும் உடல் அங்கும் உயிர் இங்குமாயன்றோ, நானிருப்பது’ என்றப்படி சில நீசபாக்ஷணங்களைப் பண்ணினான்;
ஐயோ! இத்தகைய பேச்சுக்களல்லவோ எங்களை ஈர்கின்றன வென்கிறார்கள் பின்னடிகளால்.
(பழுத்த நல்லமுதின் இத்யாதி) “ நான் போவேனோ? போனாலும் உங்களை மறப்பேனோ?’’ என்றிப்படியாகப் பேசும் பேசசுக்கள்
* ஸம்ச்ரவே மதுரம் வாக்யம்* என்னும்படி யிருக்கையாலே பழுத்த நல்ல அம்ருதத்தினுடைய ரஸப்ரவாஹமே இங்ஙனம் சொற்களாக வடிவெடுத்ததோ! என்னும்படியாக உள்ளது இத்தனையும் கள்ளப்பணிமொழியா யிருக்கையாலே அவற்றை நினைக்க நினைக்க ஆவி வேவா நின்றது என்று துடித்துச் சொல்லுகிறபடி.
———–
* * * …. கண்ணபிரானுடைய கள்வப்பணிமொழிகள் அமன்மேலும் வளருகையாலே மீண்டும் “பணிமொழி நினைதொறமாவி வேமால்’’ என்கிறாள்.
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப்
பெரு மத மாலையும் வந்தன்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது
என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ
அடிச்சியோம் தலை மிசை யணியாய்-10-3-5-
பதவுரை
| பணிமொழி நினைதொறும் ஆவி வேம் ஆல் |
– |
சி ஆச்வாஸகரமாகச் சொல்லுகிற வார்த்தைகளை நினைக்குந்தோறும் நெஞ்சு வேவா நின்றது; |
| மணிமிகு மார்பினில் |
– |
கௌஸ்துப மணிபேரொணி விஞ்சுகிற திருமார்பில் |
| முல்லை போது |
– |
முல்லைப் பூவாலே |
| பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா |
– |
பகலெல்லாம் பசுமேய்க்கப் போன கண்ணனே! |
| என் வன முலை கமழ்வித்து |
– |
அழகிய முலையைப் பரிமளிக்கச் |
| உன் வாய் அமுதம் தந்து |
– |
உன்னுடைய செய்து |
| பிணி அவிழ் மல்லிகை வாடை தூவ |
– |
தட்டவிழ்ந்து அலருகிற மல்லிகைப் பூக்களை வாடையானது தூவ, |
| அணி மிகு தாமரை கையை |
– |
அழகிய தாமரை போன்ற திருக்கையை |
| பெரு மதம் மாலையும் வந்தின்று |
– |
பெரிய செருக்கோடே ( மத்த கஜம் போலே) மாலைப் பொழுதும் வந்தது; |
| அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் |
– |
அடிச்சியோம்£ன எங்களுடைய தலைமேலே நீ வைத்தருள வேணும். |
தேறுதலுண்டாகைக்காக அவன் சொன்னாலும் பிரிவு உண்டாகியே தீருமென்கிற நிச்சயம் இவளுக்கிருக்கையாலே ஆறியிருக்கப் போகிறதில்லை. பகல் நிரைமேய்க்கிய போயகணணா!… மேய்க்கிய வென்றது மேய்ப்பதற்காக வென்றபடி. கண்ணன் இன்னமும் போகாமலிருக்கச் செய்தேம் போய்விட்டதாகவே நிச்சயித்து, போய இன்னமும் போகவிருக்கிற கண்ணனே என்றபடி.
பகற்போதெல்லாம் கழிந்தபிறகு வரக்கடவதான மாலைப்போதும் இப்போதே வந்து விட்டதாக்க் கொண்டு கதறுகின்றமை இரண்டாமடியில் விளங்கும். அ’காலத்தில் தோன்றி நலிய’கூடிய பதார்த்தங்களும் இப்போதே தோன்றி நலிகின்றனவாகச் சொல்லியழுகிறாள்
பிணியவிழ் மல்லிகை வாடை… பிணியவிழ் என்றது விகாஸோந்முகமான என்றபடி. அப்படிப்பட்ட மல்லிகை மலர்களின் மணத்தைக் கொய்து கொண்டு வாடைக்காற்று உலாவுமே; அதனிஎங்கொடிய மிருத்யுவேறுண்டோ? ராவணன் ஸந்நியாஸி வேஷத்தைக் கொண்டு வந்து தோற்றினாப் போலே வாடையானது குளிர்காற்றாய் வந்து நலியா நின்றது’’ என்பது ஈடு.
பெருமித மாலையும் வந்துநின்றாலோ!… பெரிய செருக்கோடே மாலைப்பொழுதும் மத்தகஜம் போலே வந்து நல்கின்றதே; என்றபடி, எப்போதோ வரப்போகிற மாலைப்பொழுதே வந்து விட்டதாகச் சொல்லியலற்றுவதானது ஆற்றாமையின் மிகுதியினாலென்க.
மாலைப்பொழுது வருமாயின் கண்ணஎம் பசுக்களை மேய்த்துவிட்டுக் கானகத்திலிருந்து திரும்பக்கூடுமே; ஆகவே அந்த மாலைப்பொழுதுக்காக அஞ்சவும் வருந்தவும் வேண்டாவே யென்று நம்போல்வார் நினைக்கக்கூடும், வரஹபதியா«லே நெஞ்சழிந்தார்க்கு ஈதொன்றும் தோன்றாதே;
கீழே * மல்லிகை கமழ்தென்றலீருமாலோ* என்கிற பதிகத்தல் பட்டபாடு பின்னாடடுகிறதாயிற்று.
இங்ஙனம் வருந்துகின்ற ஆய்ச்சியை நோக்கிக் கண்ணபிரான் ’ ஆனால் நான் செய்ய வேண்டுவதென்’ என்று கேட்க; அதற்குச் சொல்லுகிறது பின்னடி.
(மணிமிகுமார்பினில் இத்தியாதி.) * குருமாமணிப்பூண் குலாவித் திகழுந் திருமார்பிலே சாத்திய முல்லை மாலையின் பர்மளத்தை என் முலைக்கு ஆக்க வேணும்; ஸம்ச்லேஷரஸம் உந்மஸ்தகமானவாறே வாயமுதம் தரவேணும்; தாமரைக்கையை என் தலை மீது வைத்து ’ நான் பசுமேய்க்கப் போவதில்லை அஞ்சேல்’ என்று சொல்ல வேணும்… இவ்வளவே விரும்புவது என்றாளாயிற்று.
ஆழ்வான் ஸ்ரீவைகுண்ட ஸ்தத்லதில் * மந்மூர்த்நி ஹந்த! கரபல்லவ தல்லஜம் தே குர்வந் கதா க்ருதமநோரதயுஷ்யஸே மாம்* என்றருளிச் செய்தது “ அணிமிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சயோம் தலைமிசை நீயணியாய்’’ என்ற ஈற்றடிக்கு மொழிபெயர்பபாக வென்க. … … … …
————
* * * … கண்ணா! நீ போமிடமெங்கும் உனக்கொரு குறையுல்லை கிடாய்; உனக்குக் காதலிமார்கள் எங்குமுளர்; எங்களையொழியவும் உனக்குச் செல்லுமாபோலே உன்னை யொழியவும் எங்களுக்குச் செல்லுமாகில் நாங்கள் வருந்த வேண்டாவே; நாங்கள் உன்னைப் பிரிந்து தாக்கமாட்டாமையன்றோ கதறுகிறோம்; உன் போக்கு எங்களுக்கு ஸஹ்யமன்று காண் என்கிறாள்.
அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்
ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்
பிடித்து அது நடுவு உனக்கு அரியையரும்
பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம்
வடித்தடம் கண் இணை நீரும் நில்லா
மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே–10-3-6-
பதவுரை
| ஆழி அம் கணணா |
– |
அடல் போன்று விடாய் தீர்க்க வல்ல அழகிய திருக்கண்கடிளயுடிடயவனே! |
| எம் பெண்மை ஆற்றோம் |
– |
( உன் பிரிவில்) எங்களுடைய பெண்மை கொண்டு ஆறியிருக்கமாட்டோம்; |
| அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய் |
– |
அடிச்சியோமான எங்கள் தலைமீது உன் அணி மிகு தாமரைக்கையை வைத்தருள வேணும்; |
| அடி தட கண் இணை நீரும் நில்லா |
– |
கூர்மையாய்ப் பெருத்திருத்துள்ள கண்களின் நீரானது தகைவு பட்டு நிற்கிறதில்லை; |
| நடுவு |
– |
நீ போகிற காரியத்தின் நடுவே |
| மனமும் நில்லா |
– |
நெஞ்சும் ஒரு நிலையில் நிற்கிறதில்லை; |
| அது தன்னாலே |
– |
ஆகையினாலே |
| எமக்கு |
– |
கணப்பொழுதும் பிரிவாற்றகிட்லலாத எங்களுக்கு, |
| உன் கோலம் பாதம் அது பிடித்து உனது அழகிய திருவடிகளைப் பிடித்துநின் பசு நிரை மேய்க்க போக்கு |
– |
நி பசு மேய்க்கப் போவதானது |
| வெடிப்பு |
– |
பரிதாபகரம்; |
| உனக்கு அரிவையரும் பலர் அது நிற்க |
– |
உனக்கு அப்மதைகளாயிருக்கும் பெண்களோ பல்லாயிரவர், அது எப்படியாவது கிடக்கட்டும்; |
| அழல் மெழுகில் ளுக்குவேம் |
– |
நெருப்பில் மெழுகு போலே உருகி வேகின்றது |
| எமது உயிர் |
– |
எங்கள் ஆத்மாவானது |
“ ஆழியங்கண்ணா! உன் கோலப்பாதம் அடிச்சியோந்தலைமிசை நீயணியாய்’’ என்று முதலடியை அந்நவயித்தால், உனது அழகிய திருவடிகளை அடிச்சியோமான எங்கள் தலை மீது வைத்தருள வேணும் என்று பொருள்படும்;
இங்ஙனே அந்வயித்துப் பொருளுரைத்தார் பன்னீராயிரவுரைகாரர்.
ஆறாயிரப்படி முதலான மற்ற வியாக்கியானங்களிலெல்லாம் “ அடிச்சியோந் தலைமிசை நீயணியாய் ஆழியங்கண்ணா’’ என்னுதளவிம் ஒரு வாக்கியமாக்கி, “உன் கோலப்பாதம்’’ என்பதை மேலடியோடே கூட்டியுரைத்தல் உள்ளது.
கீழ்ப்பாட்டின் முடிவில் “ அணிமிகு தாமரைக்கையையந்தோ அடிச்சியோந் தலைமிசை நீயணியாய்’’ என்றிருக்கையாலே அவ்வணிமிகு தாமரைக்கையையே இங்கும் வருவித்துக் கொண்டு உரைசெய்தல் அழகியது.
“ உன்னுடைய அழகிய திருக்கைகளை அடியோங்களுடைய தலையிலே வைத்தருளித்திருக்கண்களாலே குளிரப்பார்த்தருளாயென்று பின்னையுமிங்ஙனே சொல்லுமளவில்’’ என்பது ஆறாயிரப்படியருளிச் செயல்.
“ கடல் போலேயிருக்கிற அழகிய கண்களாலே என்னைக் குளிர நோக்கி என் தலைமேலே கையை வைத்தருள வேணும்’’ என்பது ஒன்பதினாயிரப்பபடியருளிச் செயல். மற்றபடிகளிலுமிங்ஙனேயுள்ளது.
உன் கோலப் பாதமது பிடித்து நடுவு உனக்கு அரிவையரும் பலர் … நீ போனவிடத்திலே உன் திருவடிகளைப் பிடிப்பாராய் உனக்கு அபிமதைகளாவார் பலருண்டு காண் என்றபடி. நடுவு என்றது… நீ போகிற காரியமொழிய நடுவே என்றபடி.
“ ஆழியங்கண்ணா அடிச்சியோந்தலைமிசை நீயணியாய்’’ என்றவாறே, “ உங்கள் கையாலே ஸ்பரிசிக்க வேணுமென்றன்றோ நானிருப்பது; நான் போவதென்பதுண்டோ? போனால் தான் உங்களையொழிய வேறேயும் சிலருண்டோவெனக்கு‘’ என்று கண்ணபிரான் கூற,
அதற்கு மறுமொழி கூறுவது உன்கோலப்பாத மென்று தொடங்கி; பிரானே! உன் செய்திகளறியோமோ நாங்கள்; எங்களு’கோ நீ சொல்லுவது? நீ போமிடமெங்கும் உன் திருவடியைப பற்றியிருப்பார் ஒருவர்ருவரோ? உனக்குப் போனவிடமெங்கும் பெரிய திருநாளன்றோ என்கிறார்கள்.
அரிவையர்…. “ பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை பேர்ளம் பெண்’’ என்ற தமிழர் சங்கேதத்தின்படி ’ அரிவை என்பது ஒரு பருவத்திற் பெண்ணுக்கு வாசகம்; பொதுவாக மாதர்க்கும் வாசகம். “ தங்கள் பருவத்தாலே துவக்கவல்லவர்’’ என்பது ஈடு.
அது நிற்க எம்பெண்மை ஆற்றோம்…. போனவடமெங்கும் உனக்கு’ காதலிமாருளரோ இலரோ, அது கிடக்கட்டும்; அதைப்பற்றி எங்களு’கென்ன? பெண் பிறந்த நாங்கள் உன்னைப் பிரிந்து ஆற்றமாட்டோம் என்றவாறு.
ஆற்றமாட்டாமல் என்ன செய்வீர்களென்ன; பிரிவில் ஸம்பவிக்கக்கூடிய நிலைமையை மூன்றாமடி பேசுகிறது. எங்களை பார்க்கமாட்டாயோ? ஜீவிப்பாருடைய லக்ஷணமுண்டோ எங்களுடம்பில்? நீ பரமபோக்யமென்று கொண்டாடுமெங்கள் கண்ணில் நீர் மாறுகிறதில்லை; தைரியத்தோடிருப்பதற்கு மனமும் வசப்பட்டிருப்பதில்லை; ஆகவே, நன் பசு நிரை மேய்க்கப் போக்கு வெடிப்பு பசு மேய்க்கப் போகிற போக்கு மிக்க பரிதாபம்; எங்களுடைய பிராணனானது நெருப்புலிட்ட மெழுகு போல சிதிலமாகா நின்றது; ஆகவே நீ பசு மேய்க்கப் போகவொண்ணாது.
மெழுகில்… மெழுகு போலே, மெழுகிலுங் காட்டில் என்று இரண்டுவகைப் பொருளுமேற்கும்
——————
* * * … கண்ணா! உன்னைப் பிரிந்து படுகிற துக்கம் மாத்திரமேயன்று காண்; தேனுகன் பிலம்பன் காளியனென்எந் தீப்பப்பூடுகள் நிறைந்த விடங்களிலன்றோ நீ திரியப் போவது; அங்கே கம்ஸனேவின ஆஸுரப்ர’ருதிகள் வந்து கூடினால் என்னாகுமோவென்று அதைப் பற்றின கிலேகமும் அளவற்றது காண் என்கிறாள்.
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு
வெள் வளை மேகலை கழன்று வீழ
தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத்
துணை முலை பயந்து என தோள்கள் வாட
மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண
மென் மலரடி நோவ நீ போய்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு
அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே–10-3-7-
பதவுரை
| மா மணி வண்ணா |
– |
நீலமணி நிறத்தனான கண்ணபிரானே! |
| நீ போய் |
– |
நீ சென்று |
| என் வெள் வளைமேகலை கழன்று வீழ |
– |
எனது கைவளைகளும் அரையில் மேகலைகளும் பொருந்தாமல் கழன்று விழும்படியாகவும், |
| ஆ மகிழ்ந்து உகந்து |
– |
பசுக்களிடத்திலேயே பரம ப்ரிதியை வைத்து |
| தூ மலர் கண் இணை முத்தம் சோர |
– |
செவ்வித்தாமரை போன்ற கண்களினின்று முத்துப் போன்ற நீர்த்தாரை பெருகவும், |
| அவைமேய்க்கின்று |
– |
அவற்றை நீ மேய்க்கிற காலத்தில் |
| உன்னோடு அசுரர்கள் தலைப் பெய்யில் |
– |
உன்னோடு (கம்ஸனேவினை பல) அசுரர்கள் (போர் செய்யக்) கூடினால் |
| துணை முலை பயந்து |
– |
முலைகளிரணடும் விவர்ணமாகி |
| ஆங்கு யவன் கொல் (என்று) |
– |
அங்கு என்னாகுமோ வென்று (அதிசங்கை பண்ணி) |
| தோள்கள் வாட |
– |
தோள்கள் வாடும்படியாகவும் |
| எமது உயிர் |
– |
என் ஆத்மாவானது |
| உன் செங்கமல வண்ணம் மெல் மலர் அடி நோவ |
– |
உனது பரமஸுகமாரமான பாதாரவிந்தங்கள் நோகும் படியாக |
| அழல் மெழுகில் ளுக்குவோம் |
– |
நெருப்பில் மெழுகு போலே உருகி வேவாநின்றது. |
பிரிவில் தங்களுக்குண்டாகும் தரியாமையைச் சொல்வன முன்னடிகள். விரஹாக்தி யாலே கங்களுயிர் வேவ, ஆச்ரயம் முடிகையாலே வளைகளும் மேகலையும் கழன்று வீழ, கண்கள் அருவி சோர்ந்து மலைகள் பசலை பூத்துத் தோள்களும் வாடும்படியாக நீ பசு மேய்க்கப் போக வொண்ணாது; நாங்கள் எங்கள் மெல்லிய கைகளாலே பிடிக்கும் போதும் கூச வேண்டும்படியான உனது ஸுகுமாரமான திருவடிகளைக் கொண்டோ நீ நடந்து போவது; போனாலும் வழியேபோய் வழியே வருமவனல்லையே; பசுக்களை மேய்ப்பதிலுண்டான வியாமோஹத்தினால் அவை போமிடமெல்லாம் போய்த்திரிவாய்; அங்குத் தான் எழும்பூண்டெல்லாம் அசுரப் பூண்டாயிருக்குமே, ஐயோ! என்ன அனர்த்தம் விளையுமோ? என்கிறாள்.
மேய்க்கின்று…. கீழ்ப்பதிகத்தில் “அமரர்கோன் அர்ச்சிக்கின்று” என்றது போன்ற பிரயோகமிது.“பஞ்சிய மெல்லடிப்பிள்ளைகளுண்கின்று’’ என்ற பெரிய திருமொழிப்பிரயோகமுங் காண்க.
—————
* * …. கீழ்ப்பாட்டில் “அசுரர்கள் தலைப்பெய்யில்’’ என்று அஸுர ப்ரஸ்தாவம் வந்ததே; அதுவே மேலும் அநுவர்த்திக்கிறது; இப்பாட்டுத் தொடங்கிப் பதிகம் முடியுமளவும் அஸுர பயமே விஞ்சிச் செல்லுகிறதாயிற்று.
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று
ஆழும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து
கலவியும் நலியும் என் கை கழியேல்
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும்
கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர்
நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-10-3-8-
பதவுரை
| ஆங் அசுரர்கள் தலைப்பெய்யில் யவன் கொல் என்று |
– |
நீ பசு மேய்க்கப் போகிற காட்டிலே அசுரர்கள் வந்து கூடினாலும் என்ன அபாயமாகுமோ வென்று |
| கசிகையும் வேட்கையும் கலவியும் உள் கலந்து நலியும் |
– |
நெஞ்சிலுள்ள ஈடுபாடும் மேன்மேலுமுண்டாகின்ற குதூஹலமும் கலவியும் இவை ஒன்று சேர்ந்து நலியா நிற்கும்; (ஆதலால்) |
| என் ஆருயிர் ஆழும் |
– |
அருமையான எனது உயிர் வருந்தா நின்றது; (ஆதலால்) என் கை கழியேல் என்னைப் பிரிந்து போகாதே; |
| ஆன் பின் போகேல் |
– |
சி பசுக்களின் பின்னே போகாதே; |
| வசி செய் |
– |
கண்டவர்களை வசப்படுத்த வல்ல |
| உஉன் தாமரை கண்ணும் வாயும் கைகளும் |
– |
செந்தாமரை போன்ற உனது கண்களையும் வாயையும் கைகளையும் |
| ஒசி செய் நுண் இடை உகக்கும் நல்லவரொடும் |
– |
ஒசிந்த நுண்ணிடையையுடைய உனது காதலிமார்களுடனே |
| பீதகம் உடையும் காட்டி |
– |
திருப்பீதாம்பர வடிய்ழகையுங் காட்டி, |
| உழிதராய் |
|
திரிந்து கொண்டு இவ்விடத்திலேயே இரு. |
பிரானே! நீ போமிடங்களில் அசுரர்கள் வந்து கிட்டினால் என்விளைகிறதோவென்று நடுங்கா நின்றேன்; ஆதலால் நீ பசு மேய்க்கப் போவது கூடாது; நீ போனால் உன் பக்கலில் வைத்திருக்கிற அன்பும், அவ்வன்பின் எல்லை நிலமான அபிநிவேசமும். இப்போது கலக்கிற கலவியும் மருமத்திரே புகுந்து நலியும்; ஆகவே நான் அணைத்த கைக்குள்ளேயே நீ கிடக்க வேண்டுடே யொழிய. கையை விட்டு அகலக் கூடாது என்று இவள் சொன்னவாறே,
இதற்கு அவன் சொல்லலுற்றான்… ’ நான் இங்கேயிருக்க முடியுமோ? பசு மேய்க்கப் போகவேண்டியதும் ஒள்றண்டு. அதுவன்றியும் பிறம்பேயும் நமக்கு அபிமதவிஷயங்களுண்டே;
* தக்காரி பலர் தேவிமார் சாலவுடையீர்* என்றும்* அழகியார்வ்வுலகு மூன்றுக்கும் தேவிமைதகுவார் பலருளர்* என்றும் அடிக்கடி நீங்களும் சொல்லுவதுண்டே;
* ஆழியங்கண்ணாவுன் கோலப்பாதம்பிடித்தது நடுவுனக்கு அரிவையரும் பலர்* என்று இப்போதே நீங்களும் சொன்னீர்கறே; பசு மேயக்கப் போவதென்றோரு வியாஜங் கொண்டு நமக்கு அபிமதைகளுடனே கலந்து பரிமாறுவதும் உத்தேச்யமன்றோ; அது தவிரப்போமோ? என்று. ( மேல் இவள் சொல்வது கேட்கைக்காக இங்ஙனே சொன்னான் கண்ணபிரான்;
இதற்கு மேல் ஈட்டு ஸ்ரீஸூக்திகள் பரமபோக்யமாயிருக்கையாலே அவையேயீண்டெடுத்துக் காட்டப்படுகின்றன; … “ எங்களுக்கு அந்த நிர்ப்பந்த முண்டோ? நீ கைகழியப் போகாதொழியுமத்தனையன்றோ வேண்டுவது; நீ விரும்பியிருக்குமவர்களோடே எங்கள் கண் வட்டத்தில் மானே பரிமாறப்பார் என்ன; ஆனால் அவர்களை அழைத்துத் தருவார் ஆரென்ன; ( வசிசெயுன் தாமரை’ கண்ணும்) உனக்கு* தூது செய் கண்களுண்டாயிருக்க, புறம்பே பர்கரம் தேடி அழைக்க வேண்டியிருந்ததோ? இனிப் பொருநதோமென்றிருப்பார் நெஞ்சுகளில் மறத்தை மாற்றி அவர்களை வசப்பபடுத்தித் தரவல்ல கண்களும, அந்நோக்கில் கருத்தை ஆவிஷகர்க்கும் வாயும், அந்நோக்கிலும் முறுவலிலும் நேர்விழிக்கமாட்டாதே வ்ரீளையாலே கவிந்தவர்களை யெடுத்து’ கொள்ளும் கைகளும், ஸ்பர்சத்துக்குத் தோற்றவர்களைக் கீழ் போகாதபடியாகத் தன் செல்லாமையாலே மேலே யேறிட்டு’ கொள்ளுகிற திருப்பீதாம்பரமும் காட்டினால் இந்த வலைகளிலே அகப்படாதாருண்டோ? உனக்குப் புறம்பே அழைத்துத் தருவார் வேண்டியிருந்ததோ? பிடாத்தை விழ விட்டு வடிவைக்காட்ட வமையாதோ’’?
(பிடாத்தை வீழ விட்டு என்றது… தனது மேற்போர்வையைத் தள்ளி என்றபடி.)
நீ உகக்கும் நல்லவரான ஒசி செய் நுண்ணிடை இளவாச்சியரோடும் உழிதராயே… என்னை விட்டு வேறொரு மாதரை நீ அபிமானத்தாயாடிகல் அது எனககுப் பொறுக்குவொண்ணாத துக்கமேயானாலும், இனி அதைத் துக்கமாகப் பாவிப்பதில்லை; எப்படியாவது நீ என் கண் வட்டத்திலேயிருப்பது தான் எனக்கு அபிமதம்;
பசு மேய்க்க வென்று கானகமே சென்றால் அங்கு அசுரர்கள் தலைப்பெய்யில் என்னாகுமோவென்கிற அச்சம் அபர்ஹாரியமாயிருக்கையாலே அந்தப் போக்கு ஸஹிக்கத் தக்கதன்று; என் கண் வட்டத்திலேயே யிருந்து நீ யாரோடு கலந்து பழகினாலும் அதில் விசாரமற்றிருக்கக் கடவேன் என்றாளாயிற்று.
————-
* * * … கீழ்ப்பாட்டில் * நீயுக்க்கு நல்லவரோடு முழிதராயே* என்று சொன்னதைக் கேட்ட கண்ணபிரான் “இப்படி நீங்கள் சொல்லுகிறது உண்மையான வார்த்தையாகுமோ? ஏதோ நான் போகாமைக்காகச் சொல்லுகிற வார்த்தையே யொழிய, உங்களருகே நான் வேறு சில மாதரோடே கலந்து பரிமாறினால் அதை நீங்கள் பொறுத்திருப்பர்களோ? கண்ணாலேயே தஹித்து விடமாட்டீர்களோ?’’ என்று சொல்ல, அதற்கு மறுமாற்ற முரைப்பது இப்பாட்டு;
உன்னோடு நாங்கள் கலவி செய்து அதனாலடையுமுகப்பிற்காட்டிலும், நீ உன் உகப்புக்கு இலக்கானாரோடு கூடி நெஞ்சிடர் தீர, அதனால் நாங்களடையுமுகப்பே எங்கட்கு உயர்ந்தது என்கிறது இப்பாட்டில்.
உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன்
திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்
எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு
நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9-
பதவுரை
| எம்பெருமான் உமக்கும் நல்லவரொடும் வழி தந்து |
– |
எமது தலைவனே! நீ உகக்கும்படியான நன்மைமிக்க ஆய்ச்சிகளோடே திரிந்து |
| பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு |
– |
பலவசுரர்கள் (மரூபிகளாகையாலே) வேண்டின வடிவுகளைக் கொண்டு |
| உன்தன் திருவுளம் இடர் கெடும் தோறும் |
– |
உன் திருவுள்ளம் ஆனந்திக்குமளவில் |
| மிக நின்று உழிதருவர் |
– |
மிகவும் திரிவர்கள் |
| நாங்கள் வியக்க இன்புறும் |
– |
அகப்பட்டால் |
| எம் பெண்மை ஆற்றோம் |
– |
பிறரைக் காதலிக்குமளவில் பொறாமைப்படும்படியான பெண்மையை யுடையோமலலோம்; (ஆகவே) |
| அவரொடும் நின்னொடு ஆங்கே |
– |
அவர்களும் நீயுமாகப் பிணக்கிடவே |
| அவத்தங்கள் விளையும் |
– |
ஏதேனும் பொல்லாங்கு விளையும், |
| பசு மேய்க்கப் போகேல் ; |
– |
பசு மேய்க்கப் போகாதே கொள் |
| என் சொல் கொள் |
– |
என் சொல்லைப் பேணியருளாய், |
|
கஞ்சன் ஏவ கம்ஸனுடைய ஏவுதலால் |
||
| அந்தோ! |
– |
பிரிவாற்றகில்லேன். |
உகக்கு நல்லவரொடு முழிதந்து…. எங்களைக் காட்டிலும் நீ மிகவிரும்பும்படியான பா’டிகயவதிகளோடு ரமித்து; அதனால் உன்றறன் திருவுள்ளமடர்கெடுந்தோறும் … ’ நாம் இன்னாளோடு கலக்கப் பெற்றிலோம்’ என்று உன் திருவுள்ளத்தில் இடர் உண்டாகாதபடி ஒரு மகிழ்ச்சி விளையுமாகில்,
நாங்கள் வியக்க இன்புறுதும்= அதுவே எங்களுக்குப் பெறாக நாங்கள் மிக மிக இன்பமெய்துவோம்; இக்குணம் பெண் பிறந்தார்க்கு உண்டாகமாட்டாதேயென்னில்; எம் பெண்மையாற்றோம்= உன் உகப்புக்குப் புறம்பாய்வரும் ஸத்ரீத்வம் நாங்கள் வேண்டோம்; ஸ்வரூபஜ்ஞான மில்லாத பெண்களின் படி எங்களுக்கில்லை என்றப நாங்கள் நீயுகந்தாரை உகப்பவர்களே யன்றி உன்னை உகக்குமவர்களல்லோங்காண்.
ஆசாரியஹ்ருதயம் மூன்றாம் ப்ரகரணத்தில் “ மூன்றில் சுருக்கியவைந்தையும்’’என்று தொடங்கியுள்ள சூர்ணையில் “ எம்மா வொழிவில் நெடு வே யென்கிற “ என்றுள்ள ஸ்ரீ ஸூக்தி இங்கே அநுஸந்திக்கத்தக்கது;
எம்மா வீட்டுத் திறமும் செப்பம்* ஒழிவில் காலமேல்லாம்* நெடுமாற்கடிமை* * வேய்மருதோளினை* ஆகிய நான்கு பதிகங்களும் புருஷார்த்தஸ்வரூபத்தை விசதகரிப்பனவாக அறுதியிடப்பட்டிரா நின்றது.
மற்ற மூன்று பதிகங்களில் பருஷார்த்தஸ்வ ரூபம் நிஷ்ர்ஷிக்கப்பட்டிருப்பது ஸுஸ்பஷ்டம். * வேய்மரு தோளியைபகிற இப்பதிகத்தில் அது எங்கே தெரிகிறதென்று ஆராய்ந்தால் இங்கே தான் தெரிந்து கொள்ளத்தக்கதாகும்;
“ உன்றன் திருவுள்ளமிடர்கெடுந்தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் எம் பெண்மையாற்றோம்’’ என்னுமிதுவே இப்பதிகத்தற்கு உயிர் நிலையயிருக்கும். இந்த மஹார்த்தத்தை வெளியிட வேண்டியே இப்பதிகம் உப’ரமிக்கப்பட்டதென்றும் கொள்ளலாம்.
ஆறாயிரப்படி யருளிச் செயல்;… “ உனக்கு அபிமதைகளாய் விலக்ஷணைகளாயுள்ளவர்களோடு திரிந்து உன்னுடைய திருவுள்ளத்திலிடர் கெடுமளவில் நீ எங்களோடு ஸம்ச்லேஷித்ததிற் காட்டிலும் நாங்கள் மிகவுமினியரவுதோம்; வேறு சிலரோடேஸம்ச்லேஷிக்கப் பொறுக்கு மாட்டாத பெண்மை வேண்டோம் என்று. ( பெண்மை வேண்டாமென்றது அப்படிப்பட்ட தீய இயல்பு எங்களிடமல்லை எனறபடி.)
எம் பெருமான் பசு மேய்க்கப் போகேல்… பசு மேய்க்கப் போவதென்கிற வியாஜத்தினால் நீ பெற நினைத்திருக்கிற பேறு எங்கள் கண்முகப்பே பெறலாமாதலால், பிரானே! பசு மேய்ப்ப தென்றோரு வியாஜமிட்டுக் கொண்டு றீ பிரிந்து போகா வேண்டாவென்கை.
இது கேட்ட கண்ணபிரான் என்னை நீங்கள் காமுகனென்றே அறுதியீட்டுப் பேசா நின்றீர்கள்; உண்மையில் ஜாதிக்கேற்ற தருமமாகப பசு மேய்ப்பதற்கென்றே நான் போகிறேனேயொழிய மாதர்களோடு புணர்வதை நெஞ்சிலும் நினைத்திலேன்; வேறாக நினையதே கொண்மின்; நான் போய்வருகிறேன், என்ன; அதற்குச் சொல்லுகிறது பினனடி;
( மிகப்பலவசுரர்கள் இத்யாதி) நீ காமுகனோ அல்லையோ. அது எப்படியாவது கிடக்கட்டும்; ஏகதாரவ்ரதனான இராமபிரானைக் காட்டிலும் நீ நைஷ்டிகப்ரஹ்மசாரியாகவே இருக்கவுமாம், அதிலொரு விஸம்வாதமல்லை கீடாய்; பலவசுரர்கள் கம்ஸனாலே வசப்பட்டு வேண்டின வடிவுகளைக் கொண்டு ஆங்காங்கு திரிய நிற்பர்கள்; நீயோ வழியேபோய் வழியே வருமவனல்லை; அவர்களோடு பிணங்குவாய்;
* அவ்யவஸ் தொள ஹி த்ருக்யேதே யுத்தே ஜயபராஜயௌ* என்பதறியாயோ? ஏதேனும் அவத்யங்கள் விளையக்கூடும்; என் சொல் கொள்ளாய்; பசு மேய்க்கப் போகேல். அவத்யம் என்னும் வடசொல் அவத்தமெனத் திரிந்தது. …
————–
* * * … “அவத்தங்கள் விளையும்’’ என்றதைக் கேட்ட கண்ணபிரான் * அதிஸ்நேஹ, பாபசங்கீ* என்கிறபடியே உங்களுடைய அளவுகடந்த அன்பினால் இப்படி அதிசங்கை யுண்டாகின்றதே யன்றி, உண்மையில் எனக்கு யாதோரவத்யமும் விளையாது; வணாக அஸ்தாநே அங்ஞச வேண்டர் வாளாவிருங்கள்’’ என்று சொல்ல, அப்படியன்று காண்; உள்ளபடி சொல்லுகிறோம் கேளாய் என்கிறார்கள்.
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ
அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்று உழி தருவர்
தனிமையும் பெரிது உனக்கிராமனையும்
உவத்திலை உடன் திரிகிலையும் என்று என்று
ஊடுற வென்னுடை யாவி வேமால்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே–10-3-10-
பதவுரை
| செம் கனி வாய் எங்கள் ஆயர் தேவே |
– |
சிவந்த கனிபோன்ற அதரத்தையுடைய எங்களாயர் குலக்கொழுந்தே! |
| உடன் திரிகிலையும் என்றெனறு |
– |
அவனோடுங் கூடித் திரியமாட்டாய் நீ யென்று இதைப் பலகாலும் நினைத்து |
| வகையர் அசுரர்கள் |
– |
வலிமை மிக்க அசுரர்கள் |
| கஞ்சன் ஏவ |
– |
கம்ஸனுடைய ஏவுதலால் |
| என்னுடை ஆவி ஊடுறவேம் |
– |
என்னெஞ்சு உள்உற வேவா நின்றது; |
| தவத்தவர் மறுக நின்று –உழிதருவர் |
– |
முனிவர்கள் குடல் குழம்பும்படி திரிவர்கள் |
| அந்தோ என் சொல் கொள் |
– |
நீயோ! என் சொல்லைக் கொள்ளாய்; |
| உனக்கு தனிமையும் பெரிது |
– |
நீயோ மிகவும் துணையற்றிரா நின்றாய்; |
| திவத்திலும் |
– |
திருநாட்டிலிருப்பதிற் காட்டிலும் |
| இராமனையும் உவர்த்தலை |
– |
( உனக்குத் துணைவனான) பலராமனையும் நீ உகவாதவனாய் |
| பசு நிரை மேய்ப்பு உவத்தி |
– |
பகூட்டங்களை மேய்ப்பதையே நீ உகக்கின்றாயே. |
செங்கனிவாயெங்களாயர் தேவே! அவத்தங்கள் விளையும்… உன்னழகுக்குக் கண்ணெச்சில் பட்டுத் தீருங்காண் என்கிறார்கள். அசுரர்கள் வன்கையர்… அசுர ஜாதி இயற்கையாகவே பொல்லாது; அதகு மேலே ( கஞ்சனோ)
* கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் வஞசிப்பதற்கு விடுத்தா னென்பதோர் வார்த்தையு முண்டாகையாலே அந்த கம்ஸப்ரேரணையினால் மிவும் கடியர்: உனக்கு என் வருகிறதோ வென்று தஹர்ஷிகளுங்கூடக் கலங்குவர்;
நம்பி மூத்தபிரானர்வது உன்னைவிட்டுப் பிரியாது உனக்ககுத் துனைவனாயிருந்தால் அவருடைய காவலுண்டென்று ஒருவாறு ஆறியிருப்போம்; நீயோ அவன் கூட விருந்தால் தீம்பு செய்யப் போகாதென்று அவனை விட்டகன்றே திரிவாய்;
* மைந்நம்புவேற்கண்ணல்லாள் முன்னம் பெற்றவளை வண்ண நன்மாமேனித் தன்னம்பு நம்புயுமிங்கு வளர்ந்தது அவனிவை செயதறியான்* என்று இச்சேர்யில் நல்லபேர் பெற்றிருக்கின்ற நம்பிமூத்தபிரானை உடன் கொண்டு திரியமாட்டாய்; அவனோடு நீ பொருந்துவாயல்லை;
* அண்ணற்கு அண்ணாணோர் மகனைப் பெற்ற* என்னும்படி யிராநின்றாய்; இதையெல்லாம் நினைக்க நினைக்க என்னுடைய ஹ்ருதயமானது வேவா நின்றது.-என்று சொன்னவாறே,
கண்ணன் “ நான் போனாலன்றோ இப்படி பயப்பட வேண்டுவது; இதென்ன அன்பு தான்’’ என்று முறுவல் செய்ய,
செங்கனினாயெங்களாயர்தேவே; திவத்திலும் பசுநிரைமேய்ப்பு உவத்தி…
* ஹஸந்நிவ ந்ருபபோ ஹந்தி என்னுமா போலே சிரித்தே எங்கள் குடியைக் கெடுக்கிறாயே; பரமபதத்தி லிருப்யிலுங் காட்டில் உனக்குப் பசு மேய்க்கையிலன்றோ மிக விருப்பமுள்ளது; நீயோ போகாதிருக்கப் போகிறாய்! என்கிறார்கள்.
வன்கையர்… வன்மையை யுடைவர்; வன்கை.. வன்மை. தவத்தவர் மறுக நீன்று என்பதற்கு இரண்டுகடியாகப்பொருள் கொள்ளலாம்!
‘கண்ணபிரானுக்கு என்வருகிறதோ வென்று குடல்மறுக என்பது ஒரு பொருள்;
* ஏ ஹி பச்ய சரீராணி* என்பவர்களாகையாலே தங்களுடலுக்கு; வரும் கேடுகளை நினைத்துக் குடல் மறுக என்பத மற்றொரு பொருள்
“உனக்கென்வருகிறதோவென்று ர்உகளுங் கூட’ கலங்குவர்ககள்’’ என்பது ஆறாயிரப்படியருளிச் செயல்.
மூன்றாமடியின் முதல் சொல், உவத்தலை, உவர்த்தலை என்று இரு வகையாகக் காண்கிறது.
திவத்திலும் பசுநிரைமேய்ப்பு உவத்தி என்றவிடத்து திவத்திலும் என்ப¬‘த ஐந்தாம் வேற்றுமையாகக் கொள்வதும் ஏழாம் வேற்றுமையாகக் கொள்வதுமாக இரண்டு நிர்வாஹங்களுள்ளன.
(1) பரமபதத்திலிருப்பதைக் காட்டிலும் பசுநிரை மேய்ப்பதை உகக்கின்றாய்;
(2) பரமபதத்தில் வஸிக்கும் போதும் பசுமேய்பபதிலேயே உகப்பிடையை; அங்கும் டீயோ டீயோ வென்று வாய்வெருவாநின்றாய் என்கை.
—————
* * * … ஆழ்வார் தாமருளிச் செய்த பதிகங்களுள் எம்பெருமானைப் பசுநிரை மேய்க்கப் போக வேண்டாவென்று நிஷேதித்த பாசுரமான இப்பதிகமும் மற்றைப் பதிகங்ளோடொக்க ஒரு பதிகமே! என்று தாமே விஸ்மிதராகிறார்.
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு
அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர்
வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை
அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன
இவையும் பத்து அவற்றின் சார்வே-10-3-11-
பதவுரை
| செம் கனி வாய் |
– |
செங்கனி போன்ற அதரத்தையுடைய |
| மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை |
– |
ஆயர் மங்கைகள் அநுஸந்தித்த சொல் மாலையாய் |
| எங்கள் ஆயர் தேவு |
– |
எங்களாயர் கொழுந்தாகிய |
| அவனோடும் பிரிவதற்கு இரங்கி |
– |
அவனை விட்டுப் பிரிவதற்கு வருந்தி |
| அத்திருவடி |
– |
அந்த ஸ்வாமியினுடைய |
| அங்கு தையல் |
– |
அததிருவாய்ப் பாடியிலுள்ள ஒரு ஆய்ச்சி |
| திரு அடி மேல் |
– |
திருவடிகளிலே, |
| அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன |
– |
அவன் பசு மேய்க்கப் போவதைத் தவிரிப்பதற்காகச் சொன்ன |
| பொருநல் சங்கணி துறைவன் வண் தென் குரு கூர் வண் சடகோபன் சொல் ஆயிரத்துள் |
– |
தமிரபர்ணியில் திருச்சங்கணி துறையை நிரூபகமாகவுடையரான திருக்குருகூராழ்வார் பணித்த ஆயிரம் பாடலினுள்ளும் |
| இவையும் பத்து |
– |
இப்பதிகமும் |
| அவற்றின் சார்வே |
– |
மற்றைப் பதிகங்களுக்குச் சொன்ன பலனைத் தரும். |
அத்திருவடி திருவடி மேல்… முதலிலுள்ள திருவடியெயன்னும் சொல் :ஸ்வாமியென்னும் பொருளுடையது; அந்த ஸாவஸ்வாமியானவன் திருவடிகளிலே யென்றபடி.
தையல் என்றவிடத்து நம்பிள்ளையீடு:- “ஸபைபோலே எல்லாரும் திரண்டு வார்த்தை சொன்னால் செவிப்படதென்று பார்த்து. அவருக்கு மறுக்குவொண்ணாதபடி நப்பின்னைப் பிராட்டியுடைய தரமுடையாளொருத்தி பசுமேய்க்கப் போகாமே மீட்கைகாகச் சொன்னவை யாய்த்து’. பல ஆய்ச்சிகளுக்கும் பிரதிநிதியாக ஒருத்தி சொன்ன சொல் என்க.
சில பாசுரங்களில்* ஆழும் என்னாருயிர்* என்றும் * என் சொற்கொள்* என்றும் * எனதாவிவேமால்* என்றும் ஒருமையாகவுள்ளது; மற்றுஞ் சில பாசுரங்களில், * அடிச்சியோம்* என்றும்* தொழுத்தையோம் * என்றும் பன்மையாக வுள்ளது;
ஒருத்தியே சொன்னதாகையாலே ஒருமை பொருந்தும்; பலர்க்குமாகச் சொன்னதாகையாலே பன்மையும் பொருந்தும்;
* யாமுறாமை அடியேன் செய்யும் விண்ணப்பமே * என்ற திருவிருத்த முதற்பாசுரத்திலுள்ள ஒருமை பன்மைகள் இங்கு நினைக்கத் தக்கன.
இவையும் பத்து அவற்றின் சார்வே… மற்றைப் பதிகங்களினருகே இதுவுமொரு பதிகமே! என்று ஆச்சரியத்திலேயா’கி ஒரு நிர்வாஹம்;
கீழ்ப்பதிகங்கட்குச் சொன்ன பலனே இதந்கும் பலன் என்பதாக இற்றொரு நிர்வாஹம்;
முதலடியியல் திருவடிகளை ப்ரஸ்தாவிக்கையாலே, “ அவற்றின் சார்வே’’ என்று அத்திருவடிகளைச் சேவிக்கு மென்பதாக மற்றுமொரு நிர்வாஹம்; “
அவற்றின் என்பதனால் * மங்கையராய்ச்சியராய்ந்த மாலையைப் பராமர்சித்ததாகி பசுமேய்க்கப் போக வேண்டா வென்ற அவர்களது சொல்லைக் கேட்டு அவன் போக்குத் தவிர்த்து அவர்களுடனே கூடியேயிருந்தாப்போலே இது கற்றாரும் அவனோடு கூடியிருக்கையையே பலனாகப் பெறுவர் என்பதாக முடிவான நிர்வாஹம்.
————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Related
This entry was posted on November 15, 2022 at 10:32 pm and is filed under திரு வாய் மொழி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply