ஸ்ரீ ராமாநுஜ திவ்ய ஆஜ்ஜை -ஸ்ரீ திருமலை திவ்ய தேச கைங்கர்யங்கள் —

ஸ்ரீ ஸூப்ரபாத சேவை

முதலில் திருப்பள்ளி எழுச்சி வருஷம் முழுவதும் இருந்தது
மா முனிகள் -பிரதிவாதி பயங்கர அண்ணன் ஸ்வாமிகள் அருளிச் செய்தவற்றை எல்லா மாதங்களிலும்
மார்கழி மாதத்தில் திருப்பள்ளி எழுச்சி யும் அனுசந்திக்கப் படுகிறது

நித்ய தோமாலா ஸேவை
காலையில் திருப்பள்ளி எழுச்சி திருப்பாவை அனுசந்தானம் -சாற்றுமுறை

மாலையில் தோமாலா ஸேவை -திருப்பல்லாண்டு -பூச்சூடல் -காப்பிடல் -சென்னியோங்கி -பெரியாழ்வார் அருளிச் செயல்களும்
வெண்ணீல மேலாப்பு -நாச்சியார் திருமொழி அருளிச் செயல்களும்
தாயே தந்தை -வடமருதிடை -ஏழை ஏதலன் -திருமங்கை ஆழ்வார் அருளிச் செயல்களும்
ஒழிவில் காலம் -உலகமுண்ட பெரு வாயா -கங்குலும் பகலும் -ஆழி எழ -திருவாய் மொழிகளும்
அமலனாதி பிரான் -திருப்பாணாழ்வார் அருளிச் செயலையும்
கண்ணி நுண் சிறுத்தாம்பு -மதுர கவி ஆழ்வார் அருளிச் செயல்களும்
ஆக 15 பதிகங்களும் அனுசந்திக்கப் படுகின்றன –

பூலங்கி ஸேவை
வட மருதிடை–ஊன்வாட உண்ணாது -திருமங்கை ஆழ்வார் அருளிச் செயல்கள் அனுசந்தானம்

வெள்ளிக்கிழமை மூலவர் திருமஞ்சனம்
வெண்ணெய் அளைந்த -பின்னை மணாளனை –
நாச்சியார் திருமொழி
சிறிய திருமடல் –

வெள்ளிக்கிழமை மட்டும் மூன்று தோ மாலை சேவைகள் உண்டு

கல்யாண உத்சவம் –
வாரணமாயிரம் அனுசந்தானம்

மாதம் தோறும் ரோஹிணி
கண்ணன் வீதிப்புறப்பாடு
பெரியாழ்வார் திருமொழி அனுசந்தானம்

மாதம் தோறும் திருவாதிரை
ராமானுஜ நூற்றந்தாதி
அத்யயன காலத்தில் உபதேச ரத்னமாலை அனுசந்தானம்

மாதம் தோறும் புனர்வஸூ -சக்ரவர்த்தி திருமகன் -புறப்பாடு
பெருமாள் திருமொழி அனுசந்தானம்

மாதம் தோறும் ஸ்ரவணம் -மலையப்ப ஸ்வாமி புறப்பாடு
முதல் திருவந்தாதி அனுசந்தானம்

நித்ய உத்சவம்
உகாதி தொடங்கி 40 நாள்களுக்கு மலையப்ப ஸ்வாமி புறப்பாடு
சிறிய திருமடல் அனுசந்தானம்

ஸ்ரீ ஜெயந்தி உத்சவம்
இரவில் உக்ர ஸ்ரீனிவாச மூர்த்திக்கு துவாதச ஆராதனம்
கண்ணனுக்கு திருமஞ்சனம் -பெரியாழ்வார் திருமொழி அனுசந்தானம்

வஸந்த உத்சவம்
மலையப்ப ஸ்வாமியின் மூன்றாம் நாள் வஸந்த உத்சவத்தில்
ஸ்ரீ வராஹ பெருமாள் அத்யயயன உத்சவமும் நடைபெறும்
சாற்று முறை ராமானுஜர் சந்நிதியில் நடை பெரும்

பவித்ர உத்ஸவம் -மூன்று நாள்கள்
நாச்சியார் திருமொழி -முதல் ஆழ்வார்கள் திருவந்தாதிகள் அனுசந்திக்கப்படும்

திருக் கார்த்திகை உத்சவம் -நாச்சியார் முதல் ஆழ்வார்கள் திருவந்தாதிகள் அனுசந்திக்கப்படும்
சாற்றுமுறை முடிவில் உபதேச ரத்னமாலையும் திருவாய் மொழி நூற்றந்தாதியும் அனுசந்திக்கப்படும் –

மார்கழி மாதம் காலை தோ மாலை சேவையில் திருவாய் மொழி நூற்றந்தாதியும்
வெள்ளிக்கிழமை திருமஞ்சனம் பொழுது உபதேச ரத்னமாலையும் அனுசந்திக்கப்படும்

வருடாந்தர திரு நக்ஷத்திரங்களில்
அழகிய சிங்கர் -மேயான் வேங்கடவன் -வராஹ பெருமாள் –
திருப்பல்லாண்டு -கண்ணி நுண் சிறுத்தாம்பு -கோயில் திருவாய் மொழி ராமானுஜ நூற்றந்தாதி -உபதேச ரத்னமாலை அனுசந்திக்கப்படும் –

புரட்டாசி ப்ரஹ்மோத்சவம்

முதல் நாள் காலை -த்வஜ ஆரோஹணம் –
மாலை -சேஷ வாஹநம் -முதல் திருவந்தாதி அனுசந்தேயம்

இரண்டாம் நாள் காலை -சின்ன சேஷ வாஹநம் -இரண்டாம் திருவந்தாதி அனுசந்தேயம்
மாலை -ஹம்ஸ வாஹநம் -இரண்டாம் திருவந்தாதி அனுசந்தேயம்

மூன்றாம் நாள் காலை -ஹம்ஸ வாஹநம் -மூன்றாம் திருவந்தாதி அனுசந்தேயம்
மாலை -முத்துப்பந்தல் வாஹநம் -மூன்றாம் திருவந்தாதி அனுசந்தேயம்

நான்காம் நாள் காலை -கற்பக வ்ருஷ வாஹநம் வாஹநம் -நான்முகன் திருவந்தாதி அனுசந்தேயம்
மாலை -ஸர்வ பூ பால வாஹநம் -நான்முகன் திருவந்தாதி அனுசந்தேயம்

ஐந்தாம் நாள் காலை -பல்லக்கு வாஹநம்–நாச்சியார் திருக்கோலம் – -திரு விருத்தம் அனுசந்தேயம்
மாலை -கருட வாஹநம் – திரு விருத்தம் அனுசந்தேயம்

ஆறாம் நாள் காலை -ஹனுமந்த வாஹநம் -பெரிய திருவந்தாதி அனுசந்தேயம்
மாலை -வஸதோத்சவம் –

ஆறு நாள்களிலும் பெரியாழ்வார் திருமொழியும் அனுசந்தேயம்

ஐந்தாம் நாள் காலை -பல்லக்கு வாஹநம்–நாச்சியார் திருக்கோலம் – -திரு விருத்தம் அனுசந்தேயம்
மாலை -கருட வாஹநம் – திரு விருத்தம் அனுசந்தேயம்
ஆறாம் நாள் காலை -ஹனுமந்த வாஹநம் -பெரிய திருவந்தாதி அனுசந்தேயம்
மாலை -வஸதோத்சவம் -மாலை -கஜ வாஹநம் -பெரிய திருவந்தாதி அனுசந்தேயம்

ஆறு நாள்களிலும் பெரியாழ்வார் திருமொழியும் அனுசந்தேயம்

ஏழாம் நாள் காலை -ஸூர்ய ப்ரபை வாஹநம்–பெரிய திருமொழி அனுசந்தேயம்
மாலை -சந்த்ர ப்ரபை வாஹநம் – பெரிய திருமொழி அனுசந்தேயம்

எட்டாம் நாள் காலை -ரதோத்ஸவம் -பெரிய திருவந்தாதி அனுசந்தேயம் -பெரியாழ்வார் திருமொழி பெரிய திருமொழி சாற்றுமுறை -சிறிய திருமடல் பெரிய திருமடல் -அனுசந்தேயம்
மாலை -குதிரை வாஹனம்-நாச்சியார் திருமொழி அனுசந்தேயம்
மாலை -கஜ வாஹநம் -பெரிய திருவந்தாதி அனுசந்தேயம்

ஒன்பதாம் நாள் காலை -பல்லக்கு வாஹனம் -பெருமாள் திருமொழி அனுசந்தேயம்
சூர்ணாபிஷேகம் -திருச்சந்த விருத்தம் கண்ணி நுண் சிறுத்தாம்பு அனுசந்தேயம்
இரவில் த்வஜ அவரோஹணம் -ராமானுஜ நூற்றந்தாதி உபதேச ரத்னமாலை அனுசந்தேயம்
சக்கர ஸ்நானம் -திரு நெடும் தாண்டகம் அனுசந்தேயம்

பத்தாம் நாள் துவாதச ஆரசாதனம் -திருவாய் மொழி அனுசந்தேயம்

எல்லா நாள்களிலும் சாத்து முறை திருக்கோயில் வாசலில் நடந்து இயல்சாத்தும் வாழி திருநாமப்பாசுரங்கள் அனுசந்தானமும் ஸ்ரீ ராமானுஜர் சந்நிதியில் நடை பெறும்

ஸ்ரவண தீர்த்தவாரி அன்று இரவில் ஸ்ரீ வாரி பெருமாள் ராமானுஜரை நோக்கி துவாரபாலகர் அருகில் உள்ள கண்ணாடி அறையில் சேவை சாதிப்பார்
மாதம் தோறும் ஸ்ரவணத்துக்கும் இதே போல் மலையப்ப ஸ்வாமி உபய நாச்சிமார்களுடன் ராமானுஜர் சந்நிதியை நோக்கி சேவை உண்டு

திருமலையில் -அத்யயன உத்சவம்
வைகுண்ட ஏகாதசிக்கு முன் வரும் அம்மாவாசை இரவு தொடங்கி -23- நாள்கள் நடை பெறும்
மலையப்ப ஸ்வாமி உபய நாச்சியார் உடன் கிழக்கு நோக்கி திவ்ய ஸிம்ஹாஸனத்தில் சேவை சாதிக்க –
ஸேனாபதி ஆழ்வார் -நம்மாழ்வார் ஸ்தானத்திலும் ராமானுஜரும் தெற்கு நோக்கி பார்ஸ்வத்திலே ஸேவை சாதிக்க –
நிவேதனத்துக்குப் பின் ஒவ்வொரு அருளிச் செயலின் முதல் பாசுரமும் நிகமன பாசுரமும் -முதல் திருவந்தாதி தொடங்கி -திரு விருத்தம் வரை
ஜீயர் ஸ்வாமியும் அத்யாபக ஸ்வாமிகளும் அனுசந்திப்பார்கள்

பகல் பத்து
முதல் நாள் -காலை இயற்பா முக்குவதும்
இரவில் திருப்பல்லாண்டு தொடங்கி பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் நாள் -காலையிலும் இரவிலும் பெரியாழ்வார் திருமொழி
மூன்றாம் நாள் -பெரியாழ்வார் திருமொழி -நாச்சியார் திருமொழி விண்ணீல மேலாப்பு
நான்காம் நாள் -திருப்பாவை -நாச்சியார் திருமொழி -பெருமாள் திருமொழி -ஊனேறு செல்வத்து
ஐந்தாம் நாள் -பெருமாள் திருமொழி -கண்ணி நுண் சிறுத்தாம்பு -பெரிய திருமொழி -வாடினேன் வாடி தொடங்கி -தாயே தந்தை
ஆறாம் நாள் -பெரிய திருமொழி
ஏழாம் நாள் -பெரிய திருமொழி
எட்டாம் நாள் பெரிய திருமொழி
ஒன்பதாம் நாள் -பெரிய திருமொழி
பத்தாம் நாள் -பெரிய திருமொழி -திருக்குறும் தாண்டகம் -திரு நெடும் தாண்டகம்
சாத்துமுறையில் -பெரியாழ்வார் திருமொழி -பெரிய திரு மொழி -திரு நெடும் தாண்டகம்

பத்தாம் நாள் இரவில் இராப்பத்து தொடக்கம் –
திருப்பல்லாண்டு தொடங்கி ஒவ்வொடு நாளும் பத்து திருவாய் மொழிகள்
அடுத்த நாள் இரவு சாத்துமுறை
அடுத்த நாள் கண்ணி நுண் சிறுத்தாம்பு
அடுத்த நாள் ராமானுஜ நூற்றந்தாதி -உபதேச ரத்னமாலை இயல் சாத்து -வாழி திரு நாம பாசுரங்கள்
ஆக இப்படி 23 நாள்கள் அத்யயன உத்சவம்
அடுத்த நாள் வராஹ ஸ்வாமி அத்யயன உத்சவம் -கோயில் திருவாய் மொழி -ராமானுஜ நூற்றந்தாதி
ராமானுஜர் திரு மா மணி மண்டபம் வளம் வந்து மூலவரை நோக்கி கருட மண்டபத்தில் த்வாரபாலகர் அருகில் எழுந்து அருளப் பண்ணி
திருப் பரிவட்டம் திரு மாலை திரு சேஷ வஸ்திர பிரசாதம் திருச்சடாரி சாதிக்கப் பட்டு
ஜீயர் ஸ்வாமிகள் –
குன்றம் ஏந்தி –
அகல கில்லேன் –
ஒழிவில் காலம்
பல்லாண்டு
அடியோமோடும்
முதல் சூர்ணிகை கத்ய த்ரயம்
தனியன்
வாழி திரு நாம பாசுரங்கள் -அனுசந்திப்பார்

ராமானுஜர் திரு நக்ஷத்ர உத்சவம்
பத்து நாள்களுக்கும் நடக்கும்
ஸ்தோத்ர ரத்னம் -தாடீ பஞ்சகம் -யதிராஜ விம்சதி -பத்து நாள்களிலும் அனுசந்தேயம்
சந்நிதி தீர்த்தம் -அனந்தாழ்வான் -கோஷ்ட்டிக்கு சாதிப்பார்

————————————————-

 

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading