ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணண் ஸ்வாமிகள் அருளிச் செய்த செய்ய தாமரைத் தாளிணை வாழியே – பாசுர வியாக்யானம் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம்-ஸ்ரீ உ வே வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் இந்த வியாக்யானத்தை ஓலைச் சுவடியில் இருந்து பதிப்பித்து உபகரித்து அருளினார்-
திருநட்சத்திரம் : ஆடி பூசம்
அவதார ஸ்தலம் : காஞ்சிபுரம் (திருத்தண்கா -தீப பிரகாசர் சந்நிதிக்கு அருகில்)முடும்பை நம்பி திருவம்சத்தின் பரம்பரையில் ஹஸ்திகிரி நாதராகப் பிறந்த இவர், அண்ணா என்றும் அழைக்கப்பட்டு, பிரதிவாதி பயங்கரர் எனப் பிரபலமாக அறியப்பட்டார்.
வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்த போதம்
காந்தோபயந்த்ரு யமிந: கருணைக பாத்ரம்
வத்ஸாந்வவாயமநவத்ய குணைருபேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் -தனியன்:
—
தனியங்கள்-முன்பும் – -திருநாமப் பாடல்கள் -வாழி பாசுரங்கள் -பின்பும் ஓதப் படுகின்றன–முன்பு ஓதப் படுபவை பொதுத் தனியன்கள்-பின்பு ஓதப் படுபவை -உத்தர சாந்தி –ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் -முன்பும் பின்பும் ஓதப்படும் -பஞ்ச பத்யங்கள் முதலிலும் இறுதியில் ஓதப் படுகின்றன
–
ஸர்வ தேச தசா காலேஷ் வவ்யாஹத பராக்ரமா |ராமானுஜார்ய திவ்யாஜ்ஞா வர்த்ததாம் அபிவர்த்ததாம் ||–மா முனிகளே அருளிச் செய்தது
ஸர்வ தேச: எல்லாத் தேசங்களிலும் (இடங்களிலும்),
தசா காலேஷு: எல்லாத் தசைகளிலும், எல்லாக் காலங்களிலும்,
அவ்யாஹத பராக்ரமா: எங்கும் தங்கு தடையுமின்றி எவராலும் தடுக்க முடியாத பராக்ரமத்தை யுடையதும் (வெற்றியைக் கொண்டதும்),
ராமானுஜார்ய திவ்யாஜ்ஞா: எம்பெருமானார் ஸ்ரீராமானுஜரின் திவ்யமான திருவுள்ளக் கட்டளையானது (ஆணையானது),
வர்த்ததாம் அபிவர்த்ததாம்: மேலும் மேலும் ஓங்கி வளர வேண்டும், எங்கும் தழைத்தோங்க வேண்டும்-
ஸ்ரீ ராமானுஜரின் மிகவும் மகத்துவமான உபதேசம், எவ்விதத் தடையுமின்றி, எல்லாக் காலங்களிலும் எல்லா நாடுகளிலும் பெருகிப் பரவட்டும்.–மேலும்-அபிவர்த்ததாம்: அனுஷ்ட்டிக்கப் படட்டும்
(வண்மை ராமானுஜர் ஆணை மாறாது நடத்தும் பெருமாள் -கொண்டாட்டம் இன்றும் உண்டே-)
எம்பெருமானார் தரிசனம் என்றே இதுக்கு
நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார் -அம்புவியோர்
இந்தத் தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த
அந்தச் செயலை அறிகைக்கா —38-
பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சாராக்நி விதீபன வியபகத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
பகுமதிம் வியாஸாத தூரஸ்திதாம் (5)
அநீதாந்து நிஜாக்ஷரைஹி மனஸோ பௌமாஸ்து பிபந்வஹம் ||–பாராசார்யா வசஸ்துதாம்-வியாசர் -அமிருத ரூபமான வாக்கு-மரணம் ஜனனம் இல்லாத -அபாவம் தானே மோஷம்-பிபந்வஹம்-பிபந்து குடிக்க வேண்டும்-விசேஷணங்கள் மேலே சொல்லி1-உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம்-உபநிஷத் ஆகிய சமுத்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது-2-ஸம்சாராக்நி விதீபன வியபகத பிராணாத்ம சஞ்சீவனீம்– ஸம்ஸார அக்னியால் தாக்கப்பட்ட பிரானாகிய பராமாதவிடம் இருந்து பிரிந்து வசிக்கும் ஜீவாத்மாக்களை உஜ்ஜீவிப்பது-3-பகுமதிம் வியாஸாத தூரஸ்திதாம் -பலவிதமான அறிவுத் தடுமாற்றங்களால் அகன்று சென்றது-4-பாதாரயனாரின் ஸ்ரீ ஸூக்திகளால் அருகில் கொண்ட வரப்பட்டன-5- அநீதாந்து நிஜாக்ஷரைஹி மனஸோ பௌமாஸ்து பிபந்வஹம் -இந்த அம்ருதத்தை அறிவுள்ளவர்கள் அன்றாடம் பருகட்டும்
(ஸ்ரீயப்பதித்வம் -அருளிச் செயல்களை வளர்த்த இதத் தாய் -கடக ஸ்ருதிகளைக் கொண்டு பேத அபேத ஸ்ருதிகளை ஒருங்க விட்டமை -ஸ்ரீ ரெங்கத்தில் பத்துக் கொத்து ஏற்படுத்தி வைத்தமை -வேத சார தமனான ரஹஸ்யத்ரய உபதேசம் -74 ஸிம்ஹாசாந பதிகளை ஏற்படுத்தி -அர்ச்சாவதார ஏற்றம்-ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -போன்றவைகள் -திவ்யமான ஆஞ்ஜை)
ராமானுஜார்ய திவ்யாஜ்ஞா ப்ரதிவாஸர முஜ்ஜ்வலா |திகந்தவ்யாபினீ பூயாத் ஸா ஹி லோக ஹிதைஷிணீ ||–கந்தாடை அண்ணன் அருளிச் செய்தது–
ராமானுஜார்ய திவ்யாஜ்ஞா வர்த்ததாம் அபிவர்த்ததாம்: ஸ்ரீ ராமானுஜரின் தெய்வீகக் கட்டளையும் அவர் காட்டிய நெறியும் நாளுக்கு நாள் வளர வேண்டும், மேலும் மேலும் பெருக வேண்டும்.
ராமானுஜார்ய திவ்யாஜ்ஞா ப்ரதிவாஸரமுஜ்ஜ்வலா: அவருடைய அந்த ஆணை ஒவ்வொரு நாளும் சுடர் விட்டுப் பிரகாசிக்க வேண்டும்.
ராமானுஜார்ய திவ்யாஜ்ஞா—திகந்தவ்யாபினீ பூயாத் ஸா ஹி லோக ஹிதைஷிணீ: –திக்குகள் தோறும் வியாபிக்கட்டும்-உலக மக்கள் அனைவருக்கும் நன்மையையே விரும்பும் (லோகம் உய்வடைய வழிகாட்டும்) அவருடைய நெறி, திசைகள் எங்கும் பரவ வேண்டும்.-சேஷத்வ பாரதந்தர்யப்படியே அனைவரும் நடந்து -அவரது ஆணைகளின் படி–அனுஷ்ட்டிக்கட்டும்
(பிரதித்த ஆறு கட்டளைகள் -ஸ்ரீ பாஷ்யம் கற்றும் கற்று வித்தும் -அருளிச் செயல்களைக் கற்றும் கற்று வித்தும்-திவ்ய தேச கைங்கர்யங்கள் அமுதுபடி செய்வதும் -த்வய அனுஷ்டானம் -திருநாராயண புரத்தில் குடில் கட்டி -இப்படி இருப்பார்களுடைய அபிமானத்தில் ஒதுங்கி வர்த்திப்பதும் -)
(ஸ்ரீமதே ரம்யஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மநே |ஸ்ரீமதே லக்ஷ்மணார்யாய திவ்யாஜ்ஞா வர்த்ததாம் அபிவர்த்ததாம் ||)
ஸ்ரீ மன் ஸ்ரீ ரங்கஸ்ரியம் அனுபத்ரவம் அனுதினம் சம்வர்த்தய-ஸ்ரீ மன் ஸ்ரீ ரங்கஸ்ரியம் அனுபத்ரவம் அனுதினம் சம்வர்த்தய-ராமானுஜர் அருளிச் செய்தது–சம்போதகம் –ஸ்ரீ மன்-மிதுனத்தில் விண்ணப்பம் -ஸ்ரீ ரெங்கமாகிய செல்வமும் ஸ்ரீ ரெங்கத்திலுள்ள செல்வமும் மேலும் மேலும் தடை இல்லாமல் -ஓங்கி வளரட்டும்—“செல்வம் நிறைந்த ஸ்ரீரங்கத்தின் திவ்யமான பெருமைகளும், கைங்கர்யங்களும் எந்தவிதமான இடையூறுகளும் இல்லாமல் நாளுக்கு நாள் மேன்மேலும் வளர வேண்டும்–வேரில் தண்ணீர் கொட்ட மரம் வளருவது போல் -அரங்க நகர் வாழ மற்ற எல்லாமும் வாழும்
நம ஸ்ரீஸைலநாதாய குந்தீ நகர ஜந்மநே
ப்ரஸாதலப்த பரம ப்ராப்ய கைங்கர்யசாலிநே–மா முனிகள் அருளிச் செய்தது
மதுரை அருகில் குந்தி நகரம் -ப்ராப்ய கைங்கர்யம் -பகவத் பாகவத ஆச்சார்ய பரம கைங்கர்யங்களும் பெற்றவர் -ஆழ்வார் ப்ரஸாதத்தாலும் ஆச்சார்யர் ப்ரஸாதத்தாலும் பெற்றவர் அன்றோ -பரகத ஸ்வீ கார நிஷ்டை -திருமலை ஆழ்வார் இவர் இயல் பெயர் -பெரிய திருமலை நம்பி -ஸ்ரீ சைல பூர்ணர் -நம்பி
பக்தாம்ருதம் -தொண்டருக்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன்- -என்னும்படியான திருவாய் மொழியில் -ஆழ்ந்து திருவாய் மொழிப் பிள்ளை பட்டப் பெயர் பெற்றவர்–பூ ஸூரர்கள் -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு போக்யமான இதில் அவஹாகித்து -சப்த அர்த்த பாவ ரசங்களை ஆச்சார்யர் மூலம் உபதேசிக்கப் பெற்று -தத் ஏக நிஷ்டராய் -தத் இதர சாஸ்திரங்களை த்ருணவத் நினைத்து -மா முனிகள் இடமும் இத்தையே காலஷேபம் செய்து ஸ்ரீ பாஷ்யம் ஒரு முறை செய்து -என்று உபதேசித்தது அருளினார் -அன்று –திருவாய் மொழி சம்பந்தத்தையே நிரூபகமாகக் கொண்டவர்-60 ஸம்வத்சரம் -48 வர்ஷம் நம்பெருமாள் பிரிந்தது இரண்டாம் ஆபத்து -முதல் ஆபத்து 1311-தொடங்கி 1371 வரை -துலக்க வசமாக எழுந்தருள -நம்பெருமாளும் நம்மாழ்வாரும் -திருக் கணாம்பி -எழுந்தருளிய வாறே -திருக்குருகூர் இன்ன இடம் கோயில் இன்ன இடம் தெரியாமல் மண் மூடி இருக்க- திருவாய் மொழிப் பிள்ளைக்கு திருமுகம் அனுப்ப -நமக்கும் நம் அடியாருக்கும் -மாறன் அடிபணிந்து உய்ந்த இராமானுஜம் படை வீடு கட்டி அருள -காடு வெட்டி நாடு ஆக்கிய -கைங்கர்யம் -அவருக்கு நமஸ்காரங்கள்-
ஶ்ரீஸைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்–நம்பெருமாள் அருளிச் செய்தது–ஸ்ரீ திருமலை ஆழ்வார் கருணைக்குப் பாத்திரரும், ஞானம் பக்தி முதலிய குணங்கள் கடல் போல் நிரம்பியவரும் ஸ்ரீ யதீந்த்ரர் ஸ்ரீ ராமாநுசரை எப்போதும் அனுசரித்திருப்பவருமான ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்.-
திருவாய் மொழிப்பிள்ளையின் மா தகவால் வாழும் -பெரும் கருணையால் பெரிய ஜீயரும் -சேஷ அவதாரம் சம்சாரக்கட்டை அறுத்து விடும் -பிரபந்தங்களையும் தாத்பர்யத்தையும் லபித்து-அனைவருக்கும் வழங்க உத்தியோகித்து இருப்பவரை -எல்லாருக்கும் உள்ளே அரங்கனும் -நம்பெருமாள் -ஆணையின் பேரில் பெரிய திருமண்டபத்தில் நடத்த -ஸ்ரீ சட கோபனை ஊன்று வித்தது -ஸாதிக்க-ஈடு தொடங்கின அன்றும் சாற்று முறைக்கும் எழுந்தருளி -ஆவணி தொடங்கி பவித்ர உத்சவம் -ஆனி திரு மூலம் வரை -உயர்வற உயர் நலம் தொடங்கி -தனியனும் சாதித்து அருள –
இப்படி -நாம் யார் பெரிய திருமண்டபம் யார் நம் பெருமாள் தாமாக நம்மைத் தனித்து அழைத்து -இத்யாதி- ஜீயரும் அருளிச் செய்தது ப்ரஸித்தம் –
ஸ்ரீ சைலேச தயா பாத்ரம்-
நமஸ் ஸ்ரீ சைல நாதாயா குந்தி நகர ஜன்மனே பிரசாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலினே-(2)என்றும்-பரம ப்ராப்ய பராங்குச சரண பங்கஜ விஷய விவித கைங்கர்ய கரண சாதுர்ய துர்ய ஸ்ரீ சைல வர தேசிகாதீச -(3)என்றும்-அநந்தன் திருமலை ஆழ்வார் என அவதரித்து –-என்றும்-அவதார விசேஷமாய் சொல்லப்படுமவராய்-சரம பர்வமான ஆழ்வார் திருவடிகளிலே கைங்கர்யத்தை அவர் அருளாலே லபித்து வாழுமவராய்
அதிலும் அவர் திருவடிகளான எதிராசர் செம் பொற் பாதம் இரவு பகல் மறவாமல் இறைஞ்சி ஏத்தும் எழிலை உடைய–திருவாய்மொழிப் பிள்ளை சீர் அருளுக்கு (ஆர்த்தி -21)ஏற்ற கலமாய் உள்ளவரை(திருப்பாவை -21)-பவ்ய ஸ்ரீ சைல நாதார்ய பரிபூர்ண க்ருபா ஜூஷே-(4)என்னக் கடவது இறே
திருமலை ஆழ்வார் திருவாய்மொழிப் பிள்ளை சீர் அருளால்
தரு மதி கொண்டவர் தம்மை உத்தாரகராக எண்ணி
இரு மனமே! அவர்க்கா எதிராசர் எமைக் கடுகப்
பரமபதம் தன்னில் ஏற்றுவர் என்ன பயம் நமக்கே?–21--நெஞ்சே நமக்கு என்று வகுத்த ஆச்சார்யர் திருவாய் மொழிப்பிள்ளை ஆவார் -அவரது திருவருளால் பெற்ற ஞானத்தைக் கொண்டு அவருடைய அபிமானமே உத்தாரகம் என்று நீ அத்யவசாயம் கொண்டு இரு – அவருக்காக எம்பெருமானார் பேறு தந்து அருளுவர் என்று நாம் கவலையற்று ம் இருக்கப் ப்ராப்தம் என்கிறார் ஆயிற்று –
ஸ்ரீ சைல பூர்ணர் கிருபையாலும்–ஸ்ரீ சைல தேசிகர் தயை யாலும்-இராமாயணம் என்னும் பக்தி வெள்ளமும்-(37)-தீர்த்தங்கள் ஆயிரமுமான திருவாய்மொழியும்-(7-10-11) யதீந்திர தத் ப்ரவணர் இடங்களிலே குடி கொண்டு தேங்கிற்று-
இவரும் தன் பக்தி என்னும் வீட்டின் கண் வைத்த பின்பு இறே (29) பெருகி வெள்ளம் யிட்டு விளைந்தது –
ஸ்ரீ இராமாயண துக்த சிந்து –(1)
பாலோடு அமுது அன்ன வாயிரம் –(8-6-11)
இராமானுசன் இறே இவரும்-(உம்மைத் தொகை –அவர் இராம அனுஜ லஷ்மணன் -இவர் இராமானுஜ புனராவதாரம்)
(ஸ்ரீ ராமாயணம் தங்கி சரணாகதி சாஸ்த்ரங்களாக பெருகி கத்ய த்ரயம் -தீர்க்க சரணாகதி திருவாய் மொழி ஈட்டுப் பெருக்கர் -இரண்டு மதில்கள் நம்மைக் காத்து இருக்குமே–காலஷேபம் -செய்து -மாறன் விளங்கிய சீர் -வியாக்யானம் தூண்டி -ப்ரஹ்ம ஸூத்ரங்களை இவை கொண்டே ஒருங்க வைத்தருளினார் –இரண்டும் கடல் என்பதற்கு இரண்டு பிரமாணங்கள் காட்டி அருளுகிறார் -)
——-
தீ பக்தியாதி குணார்ணவம் –-மதி -நலங்கள் இவருக்கு பிள்ளை அருளால் உண்டாயிற்று –
ப்ரக்ருஷ்ட விஜ்ஞான பலைக தாமநி (2)-(ஸ்தோத்திர ரத்நம்-.)என்றும்
லஷ்மணஸ்ய ச தீ மத -(3) (ஸூந்தர 16-4–மிகவும் அறிவுள்ள இளைய பெருமாள் )என்றும்
ந தேவ லோகா க்ரமணம் -(4) என்று தொடங்கி-த்வயா விநா ந காமயே-(5)என்றும் இறே ஏதத் பூர்வ அவதாரங்களிலும் ஜ்ஞாந பக்திகள் பூரணமாய் இருப்பது –
ஆராவன்பு இளையவன்(பெரிய -8 -5-) இறே –
அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹாதிகள் உண்டு இறே இங்கே
——–
தயா ஸஹ ஆஸிநம் அநந்த போகிநி ப்ரக் ருஷ்ட விஜ்ஞாந பல ஏக தாமநி
பணாமணி வ்ராத மயூக மண்டல ப்ரகாசமா நோதர திவ்ய தாமநி.-(ஸ்தோத்திர ரத்நம்.)
அறமுயல் ஆழிப்படை-ஸர்வேஸ்வரனிலும் ஆஸ்ரித ரக்ஷணத்தில் முயலா நின்றுள்ள —லஷ்மணஸ்ய ச தீ மத -(ஸூந்தர 16-4–மிகவும் அறிவுள்ள இளைய பெருமாள் )என்றும்
ந தேவ லோகா க்ரமணம் -இது இளைய பெருமாள் உடைய -ஏறாளும் இறையோன்
ந ஹி மே ஜீவிதே நாரத்த -இது பிராட்டியினுடைய ஏறாளும் இறையோன்
பகவத் கைங்கர்யத்துக்கு உறுப்பு அல்லாதது முமுஷுக்களுக்கு த்யாஜ்யம் என்னும் சாஸ்த்ரார்த்தம் –
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னை கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்து என் அழலை தீர்வேனே போலே –
ந கதஞ்சந ஸா கார்யா கரிஹீத தநுஷா த்வயா.
புத்திர் வைரஂ விநா ஹந்துஂ ராக்ஷஸாந் தண்டகாஷ்ரிதாந்৷৷
அபராதஂ விநா ஹந்துஂ லோகாந்வீர ந காமயே.– ஆரண்ய -3.9.26৷৷
பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி ஆராவன்பு இளையவனோடு அரும் கானம் அடைந்தவன் – 8 -5
——–
அவ்வவதாரத்தில் குறைகளும் தீர்க்க அவதரித்த இடத்திலும் (விஸ்மாமித்ரர் சான்தீபிநீ -ஆச்சார்யர் குறைகள் தீர)பெரிய பெருமாள் விஷயத்துக்கு அனுரூபமாக பெரிய ஜீயருடைய அந்த ப்ரேமாதிகள் இரட்டித்து இறே இருப்பது
நிர்மல குண மணி கண வருணாலய-(6)என்றும்
யதா ரத்நாதி ஜலதே -(7)என்றும்
குணா நாமா கரா -(8) என்றும் சொல்லக் கடவது இறே
சௌமித்ரிர் மே ஸ கலு பகவான் சௌம்ய ஜாமாத்ரு யோகீ-(9)என்றும்
யதிவர புநர் அவதார -(10)என்றும் சொல்லக் கடவது இறே-
இனி நம் பெருமாள் இடத்தில் பிராவண்யம் எல்லையான எம்பெருமானார் அளவும் வர்த்தித்த படி சொல்லுகிறது –சாத்ய விவிருத்தியாய்க் கொண்டு சரம பர்வம் வரக் கடவதாய் இருக்கும்
யதீந்திர பிரணவம்-
அந்த பிராவண்யம் தான் –யதீந்திர ப்ரவணாய அஸ்மத் குரவே குண சாலினே –(11)என்று
விசேஷ்ஞ்ஞரான வேதாந்தாச்சார்யாரும் விக்ருதராய்ப் பேசி அனுபவிக்கும் படியாய் இருக்கும் –
இவர் தாம் நிஜ தேசிக சந்தர்சித சம்ய மிதுரந்தர நிஹித சகல நிஜ பரவர வரமுனிவர் (12)இறே –
அவர் பராங்குச பாத பக்தர் –(இராமானுஜரும் திருவாய் மொழிப்பிள்ளையும் பராங்குச பாத பக்தர்கள்)
இவர் யதீந்திர ப்ரவணர் –
அந்த ப்ராவண்யம் இறே இவரை அனைவரையும் கால் கட்டுகிறது
———-
வந்தே ரம்யாஜா மாதரம் முநிம்–
வந்தே முகுந்த பிரியாம் -(13) என்கிறது எல்லாம் இவருக்கு இவ்விஷயத்திலே யாயிற்று
ஸ்ரீ மதே ரம்யா ஜாமாத்ரு முனயே விததே நம -(14) என்னுமா போலே திரு நாமத்தை அனுசந்தித்து திருவடிகளில் விழுகிறார் –இவருடைய அனுசந்தான விஷயமான மந்த்ரமும் ஸ்துதி பிரணாமமும் இருக்கும் படி இதுவாயிற்று –
(அஷ்டாக்ஷரம் பத்ரியில் மட்டுமே-இது அங்கும் பிராணவாராக விமானம் உள்ள அரங்கத்திலும்)
வந்தே நியதோ முநிம் -(15)என்கிறபடி -சேஷ சேஷிகள் உடைய சத்தா சம்ருதிகள் இவர் சங்கல்ப அதீனைகளாய் இருக்கும்படியைப் பற்ற முனி என்கிறது-
ஸ்ரீமத் ரங்கம் ஜயது பரமம் தாம தேஜோ நிதாநம் |
பூமா தஸ்மிந் பவது குசலீ கோபி பூமா ஸஹாய: ||
திவ்யம் தஸ்மை திசது பகவந் தேசிகோ தேசிகாநாம் |
காலே காலே வரவரமுநி: கல்பயந் மங்களானி || -ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் –8-
(பெரிய ஜீயர் நியமங்கள் மாறாது இருக்கும் பெருமாள் ஆதிநாதர் அன்றோ -)
இப்படிகளால் ஏற்றம் உடைய இவர் ஸ்துதி ரூபமான இவர் தனியன் தான்-யத் வேதாதௌ ஸ்வர ப்ரக்தௌ வேதாந்தேச ப்ரதிஷ்டித -(16) என்று வேதத்துக்கு ஓம் என்னுமா போலே (உப -19)-திராவிட வேத -தத் அங்க -உபாங்கள் என்ன-ஏதத் வியாக்யான விசேஷங்கள் என்ன-ஏதத் சார பூதமான ரஹஸ்யங்கள் என்ன-இவற்றின் உடைய ஆதி அந்தங்களிலே-அகில திவ்ய தேச விலஷணராலும் அனுசந்திக்கப் படுமதாய் இருக்கும் –
இவருடைய சகல திவ்ய பிரபந்த பிரவர்த்தகத்வம் பண்டு பல இடங்களிலே கண்டு கொள்வது-அதுக்கு மேலே உபய பிரதான பிரணவமான உறை கோயிலிலே இறே (ஆசா -3) இவர் உதித்து அருளிற்று –-இவருக்கு இவ் வைபவம் ஜன்ம சித்தம் –
இது பிரணவ அர்த்தம் ஆகிறது –பிதா புத்ர -ரஷ்ய ரஷக -சேஷ சேஷி சம்பந்த த்ரயமும் இவர் இடத்திலே தர்சிக்கையாய் இருக்கையாலே
அகாரஸ் சித் ஸ்வரூபஸ்ய விஷ்ணோர் வாசக இஷ்யதே
உகாரஸ் சித் ஸ்வரூபாய ஸ்ரியோ வாசீ ததா விது
மகாரஸ்து தயோர் தாஸ இதி பிரணவ லஷணம்-(1)என்கையாலே
அகாரம் பகவத் வாசகமாயும் -மகாரம் சேதன வாசகமாயும் உகாரம் உபய சம்பந்த பிரகாசிகையையும் சொல்லும் –
அவ்வானவர்க்கு மவ்வானவர் எல்லாம் உவ்வாவனவர் அடிமை என்று உரைத்தார் –என்னக் கடவது இறே – விளக்குப் பொன் போலே நடு நிலைத் தீபம் இறே —மங்கள தீப ரேகாம்(2-ஸ்ரீ குண ரத்னகோசம்)-ஸ்ரியோ கடக பாவத -(3)ஸ்ரிய கடிகயா-(4)என்று ஏதத் சாபேஷமாய் இறே இருப்பது –
ஜகதோ ஹித சிந்தையை ஜாக்ரதஸ் சேஷ சாயின அவதாரேஷ் வன்ய தமம் வித்தி சௌம்ய வரம் முநிம் -(5)என்றும்-ஆத்மா சேஷி பவசி பகவன் நாந்தரஸ் ஸாசிதா த்வம்-(6)என்றும்-தேவீ லஷ்மீ பவசி தயயா வத்சலத்வேன ஸ த்வம் -(7) என்றும் –சௌமித்ரிர் மே ஸ கலு பகவான் சௌம்ய ஜாமாத்ரு யோகீ -(7)என்னக் கடவது இறே-இப்படி முப்புரி யூட்டி இறே இவர் அவதார வைபவம் இருப்பது
இன்னம் இஸ் ஸ்லோகத்தில் பதங்கள் தோறும் இவ்வர்த்தம் (சேஷ சேஷி பாவம்
)காணலாய் இறே இருப்பது -எங்கனே என்னில்
ஸ்ரீ சைலேச -என்கையாலே அகார வாச்யனான சர்வேஸ்வரனைச் சொல்லி
தயா பாத்ரம் என்கையாலே -பகவத் அனன்யார்ஹ சேஷ பூதனான சேதனன் அவன் கிருபைக்கு பாத்ரம் என்னுமத்தை சொல்லுகிறது
அடியில் பதத்தில் ஆசார்யனை அவன் தானாக சொல்கிறது விசேஷ அதிஷ்டானத்தாலே —தத் குண சாரத்வாத் தத் வ்யபதேசம் போலே -(9) –அஜ்ஞ்ஞானத் வாந்தரோதாத் -(10)இத்யாதி ஆச்சார்யஸ் ஸ ஹரிஸ் சாஷாத் -(11)
தீ பக்த்யாதி குணார்ணவம் -என்கிற இப்பதத் தாலும்
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -(முதல் -67-)என்றும்
ஆதியாம் சோதிக்கே ஆராத காதல் -(2-1-11)என்றும்
உன்னித்து மற்று ஓர் தெய்வம் தொழாள் -(4-6-10)என்றும் சொல்லுகிறபடியே ஜ்ஞான பக்தி வைராக்யங்களை பிரதிபாதிக்கையாலே -அகாரோதித பகவத் சேஷத்வத்தை பக்தியாலே சொல்லுகிறது –
ஸ்வரூபமும் உன் இணைத் தாமரைகட்கு அன்புருகி நிற்கும் அது இறே (7-1-10) –அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வ அனுபபத்தே -(12)
ஜ்ஞானம் ஆவது –தத் ஜ்ஞானம் இறே (13) -பகவத் ஏக அவலம்பியாய் இறே ஜ்ஞானம் இருப்பது
வைராக்கியம் ஆவது -தேவதாந்திர த்யாக பிரதானமாய் இறே இருப்பது-
யதீந்திர பிரவணம்
யதீந்த்ரர் ஆகையாவது (யத்னம் கரோதி யதி -அவர்களில் தலைவர் )ஸ்வ ஸ்வரூபத்தை அனுசந்தித்து துரும்பு நறுக்காது இருக்குமவர்களைத் திருத்தி -திருமகள் கேள்வனுக்கு ஆக்கி அடிமை செய்விக்கை -(78)-தம் அளவிலும் யதி சப்தம் அவிஸிஷ்டம் ஆகையாலே தத் இந்த்ரராகையைப் பற்ற பிரவணர் ஆகிறார்–பகவத் அனன்யார்ஹ சேஷத்வம் ததீய பர்யந்தம் இறே
அன்றிக்கே
யதீந்திர பிரவணம்
அசாதாரணமான ராமானுஜ சப்த பர்யாய வாசகமாய் இறே இத்திரு நாமம் இருப்பது -அதுவும் பிரணவார்த்தம்-(பவான் நாராயணோ தேவ)
ராம சப்தத்தாலே அகாரார்த்தமும்
அனுஜ சப்தத்தாலே தச் சந்த அனுவர்த்தியாய் இருக்கிற ஆத்ம ஸ்வரூபம் இறே சொல்லுகிறது
ராமானுஜம் யதி பதிம் ப்ரணமாமி மூர்த்தன (1)-என்று இறே ப்ராவண்யம் இருப்பது
ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவா
பிரேம ஆவிசாஸய பராங்குஸ பாத பக்தம்
காமாதி தோஷ ஹர ஆத்ம பத ஆஸ்ரிதாநாம்
ராமாநுஜம் யதி பதிம் ப்ரணமாமி மூர்த்நா —-1-ராமானுஜம் ந சேத் ராமாநுஜேத் ஏஷா சதுரா சதுர் அக்ஷரீ -காமவஸ்யாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஸா–என்று அறிவுடையார் ஈடுபடும்படி மோக்ஷ ஹேதுவான திரு நாமத்தை உடையவர் என்கை –யதி பதிம் ஜிதேந்த்ரியரான சன்யாசிகளுக்குத் தலைவர் ஆனவர் என்கை –-இத்தால் கீழ்ச் சொன்ன ஆச்ரித தோஷ நிவர்த்தகத்துக்கு அடியான குண யோகம் சொல்லுகிறது-ப்ரணமாமி -என்கிற மாத்திரமே அமைந்து இருக்க-ப்ரணமாமி மூர்த்நா என்கிறது விஷய வைபவத்தை அனுசந்தித்து மாநஸமான பிரணவ மாத்திரத்தில் நிற்கை அன்றிக்கே தம்முடைய ஆதார அதிசயத்தாலே நிர்மமராய் திருவடிகளில் தலையை மடுக்கிறார் என்னும் இடம் தோற்றவே-
வந்தே ரம்யஜா மாதரம் முநிம் –
இத்தாலும் உக்தார்த்தமே சொல்கிறது
ரம்யஜாமாத்ரு சப்தத்தாலே அகார வாச்யனைச் சொல்லி
முனி சப்தத்தாலே தத் அனன்யார்ஹ சேஷத்வ ஜ்ஞானத்தை உடைய பரம சேதனனைச் சொல்கிறது
ரம்ய ஜாமாதுர் மனனம் கரோ தீதி -ரம்ய ஜாமாத்ரு முனி(2)-ஆக இவை எல்லாவற்றாலும் பிரணவ அனுசந்திக்கத் தட்டில்லை-
அயோத்யா மதுரா மாயா -(3)என்றும் –வடதிசை மதுரை –அயோத்தி -(பெரியாழ்வார்4-7-9-)என்றும் -அவதார ஸ்தலத்தை சொல்லுகிறபடியே-கோயிலுக்கு வடக்காய் இருக்கிற வடதிருவேங்கட நாட்டில் ஏரார் பெரும் பூதூரிலே-(உப-33)எம்பெருமானார் வட மொழியையும் தென் மொழியையும் வெளியிட அவதரித்து அருளினார் —நாரணனைக் காட்டிய வேதங்கள் களிப்புற்றது தென் குருகை வள்ளல் வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது (54)-என்னக் கடவது இறே
அரங்க நகரும் மேவு திருநகரியும் வாழ வந்த மணவாள மா முனி -என்கிறபடியே-தென்னாட்டுத் திலதமான தென் குருகூரிலே (10-6-7)பெரிய ஜீயர் தென் மொழியை வெளியிடவே அவதரித்து அருளினார் – விரவு தமிழ் மறை மொழியும் வட மொழியும் வெளியாய்ச் செல்லும் விசித்ர வியாக்யான சேஷன்-என்னக் கடவது இறே —ஆர்யாச் ஸ்ரீ சைல நாதாத் –(4)இவருக்கும் இரண்டின் உடைய ப்ரவர்த்தகம் உண்டே யாகிலும் ஊற்றத்தைப் பற்ற ஒன்றிலே ஓதுகிறது
உடையவருடைய அவதார விசேஷம் ஆகையாலும்-மற்றும் சர்வதா சாம்யத்தாலும் யதிவர புநர் அவதாரம் ஆகையாலும் (5)தீர்க்க சரணாகதியை ஈன்ற முதல் தாயினுடைய மாதா பிதா போலே யோ நித்யமும் ஸ்ரீ சைலேசமும் நடந்து செல்கிறது-
இவரும் ஜன்ம பூமியை விட்டு வந்து –காவிரி நடுவு பாட்டிலே கருமணியைக் கண்டு (திருமாலை -23)-தன் மத்யஸ்தராய்- வைஷ்ணவ ஸ்ரீ யோடு வாழ்ந்து கொண்டு இருந்து ஸ்ரீ ரெங்க ஸ்ரீயையும் ஸ்ருதி சாகரத்தையும் திராவிட வேத சாகரத்தையும் பெருகப் பண்ணி பெருமாளை நோக்கிப் போந்தார் –
அவர் எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தார்(91)-இவர் பல்லுயிர்க்கும் விண்ணின் தலை நின்றும் வீடு அளிப்பான் (95)அனைத்துலகும் வாழப் பிறந்த எதிராச மா முனிவன் (ஆர்த்தி -41)என்னும் அர்த்தத்தை அருள் சுரந்தார் ––ஜீயர் அவதரித்து வெளியிடா போது கண்ணோந்தாரகமாய் இறே உடையவர் வைபவம் இருப்பது-இராமானுச முனி செய்ய குன்றில் ஏற்றிய தீபம் இறே இவர்
நர நாராயண அவதாரம் போலே இறே இவர்களுடைய அவதாரமும்
நாராயணம் நமஸ்க்ருத்ய நரஞ்சைவ நரோத்தமம் -(1)என்றும்
சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்த மயீம் தநும் -(2)என்றும்
யோ அத்யாபி சாஸ்தே-(3)என்றும்
தஸ்யாம் ஹி ஜாகர்தி -(4)என்றும் இரண்டுக்கும் உண்டான தர்ம ஐக்யமும் அப்படியே -சம்பந்தமும் அப்படியே–அவர் நாராயண வைபவ பிரகாசகர்–இவர் ராமானுஜ வைபவ பிரகாசகர்
அவ்வதாரத்திலும் இவ்வவதாரத்துக்கு ஏற்றம் உண்டு
பிறப்பாய் ஒளி வரு(1-3-2)
நாராயண-ராமானுஜ-என்று இறே சதுரஷரிகளின் வாசி இருப்பது–இவர் சதுரரிலே தலை யாகையாலே சரம சதுர அஷரியிலே நிலை நின்றார்—ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரை சாத்தி இருப்பார் தவம் –(நான் -18)
தஸ்மான் மத் பக்த பக்தாஸ்ஸ பூஜா நியா விசேஷத -(5)என்றும்
அடியேன் சதிர்த்தேன் இன்று -(5)என்றும்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே (11)-என்றும் –
ஆழ்வாருக்கு மதுர கவிகளிலும் சரமமான திரு அடிகள் ராமானுஜன் ஆனால் போலே
அந்த ராமானுஜனான இவர்க்கும் (பல ராமானுஜ ரான இவருக்கும் )ஸ்ரீ வத்சாங்க ஆச்சார்யரிலும் (கூரத்தாழ்வானை விட )சரமமான சரணங்கள் யதீந்திர பிரவணர் இறே-ஆகையால் சரம பர்வமான ஜீயர் விஷயமான இத் தனியனும் சகல வேத சாரமான பிரபத்தி போலே நிரந்தர அனுசந்தேயமாகக் கடவது–
—
வாழி திருவாய் மொழிப் பிள்ளை மா தகவால்
வாழும் மணவாள மா முனிவன்-வாழி யவன்
மாறன் திருவாய் மொழிப் பொருளை மா நிலத்தோர்
தேறும்படி உரைக்கும் சீர்-மடத்துப் பிள்ளை அருளிச் செய்தது
அவனுடைய சீர் வாழியே –
சீர் எது என்றால் -திருவாய் மொழியின் பொருளைக் அனைவரும் புரிந்து அனுஷ்ட்டிக்கும் படி விசத வாக் சிரோமணி —அறிந்து அறிந்து தேறித்தேறும் படி உரைக்கும் சீர்
மா நிலத்தோர் -அனைவர்க்கும் –இரண்டுதடவை -வாழ்த்துகிறார் -கல்யாண குணங்களும் அவரும் வாழ வேண்டும்-ஆச்சார்யர் அருளே விளை நீராக வளர்த்த வள்ளல் தன்மை என்னும் சீர் -வாழ வேண்டும் – பரார்த்த சிந்தனைக்கு மங்களா சாசனம் –
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் – திருவாய் மொழிப்பிள்ளை அருளாலே –
எந்தை திருவாய் மொழிப்பிள்ளை இன்னருளால் -தாமே நிர்ஹேதுகமாக அருளியதால் இன்னருள் -சீர் அருளாலே -ஸ்ரீ சைல நாதனின் கருணா பரிவாஹம் –
உபதேசிக்கப்பெற்ற அர்த்தங்களை அனைவருக்கும் வழங்கிய சீர்மை –
ஸூகுமாரராய் இருப்பார்க்கு பிடி தோறும் நெய் போல் -அர்ச்சா வதாரம் திருமங்கை ஆழ்வாருக்கு போல் –ஆ மூல சூடும் -ஆச்சார்யர் அருளே -இவருக்கு –அருளாலே மன்னி இருக்கும் படி-மா தகவு -பெரும் கருணை -பரம காருணிகர் –
திருவாய்மொழிப் பிள்ளை தீவினையோம் தம்மை
குருவாகி வந்து உய்யக் கொண்டு பொருவில்
மதி தான் அளித்தருளும் வாழ்வன்றோ? நெஞ்சே!
எதிராசர்க்கு ஆளானோம் யாம்–46-பகவானோடு உண்டான உறவை அறிவதில் காட்டிலும் ஆச்சார்ய சம்பந்தத்தை அறிவதே சிறந்தது -ஆச்சார்யர் என்கிற சொல்லுக்கு எம்பெருமானார் தான் இலக்கு – அப்பரமாச்சார்யாரோடு நமக்கு உண்டான யுறவை அறிவித்த மஹா உபகாரகர் திருவாய் மொழிப்பிள்ளை என்று ஸ்வ ஆச்சார்யர் பக்கலிலே பெரு நன்றி பாராட்டினார் ஆயிற்று-
தகவு -உபாயம் -ப்ராபகம்
வாழ்வு -உபேயம் ப்ராப்யம்
உபகார ஆச்சார்யர் இன்னருளால் உத்தாரக ஆச்சார்யர் திருவடி பேறு பெறுவோம்
இரக்கம் உபாயம் -இனிமை உபேயம் –தேசிக தயையினால் வாழுமவர் இன்னார் என்கிறது
இவர் மா தகவுக்கு இலக்காகி மா முனிவர் ஆனார் -பெரிய ஜீயர் ப்ரஸித்தம் —அழகிய மணவாள ஜீயர் -அழகிய மணவாளன் தகவுக்கு இலக்கான வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரின் வியாவ்ருத்தி –
தெருள் தருமா தேசிகரான திருமலை ஆழ்வார் -அருள் அதிகமாய் -ஆதிக்யத்தையும் உண்டாக்கி-ஏவம் வித நிரவதிக கருணைக்கு பாத்திரமான இவர் வாழ வேண்டும் –
தாமும் தம்முடைய இரக்கும் கருணையால் -பொருள் -ஈடு –நிகரற்ற அர்த்தங்களை -உலகோர் அறியும் படி பிரஸாதித்த அருள் -இதுவும் வாழ வேண்டும் -குரல் எப்போதும் ரீங்கரிக்க வேண்டும்
அவரோ பாதி அவர் குணங்களும் வாழ வேண்டும்-பெரு மதிப்பரில் நல்லார் -செல்வம் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் -நாமும் பெற்று உய்ய வேண்டும் – தர்மாதி புருஷார்த்தங்கள் வேண்டாமே -கேட்டு ஆரார் வானவர்களும் -அன்றோ –
ஸ்ரீ மத்தான பெரிய மண்டபத்து பேர் அழகு என்றும் -வரவர முனியான ஸ்வாமிக்கும் -ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் எழுந்து அருளி கேட்க்கும் படியும்-திருச்செவி சாத்தும் படியும் கால ஷேப மண்டலத்தில் சிஷ்யருக்கும் உபதேசித்த -அர்த்த பஞ்சக அர்த்த பிரதிபாதிகமான ஐந்து வியாக்யானங்களையும் -ப்ரஸாதித்தும் -கிருபை –வண்மை யாகிய சீர் வாழ வேண்டும்
—
செய்ய தாமரை தாளிணை வாழியே சேலை வாழி திரு நாபி வாழி
துய்ய மார்பும் புரி நூலும் வாழியே சுந்தரத் திருத் தோளிணை வாழியே
கையும் ஏந்திய முக்கோலும் வாழியே கருணை பொங்கிய கண்ணினை வாழியே
பொய்யிலாத மணவாள மா முனி புந்தி வாழி புகழ் வாழி வாழியே
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ -கடல் சூழ்ந்த
மன்னுலகம் வாழ மணவாள மா முனியே
இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும் –
—————
இதில் ஸ்ரீ கூரத்தாழ்வானைப் பற்றிய ஐதிக்யமும்
ஸ்ரீ அண்ணராய சக்ரவர்தியைப் பற்றிய இதிஹாசமும் உண்டு
செய்ய தாமரை பாடிய சீர் அண்ணன் -என்றே ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணண் ஸ்வாமிகளுக்கு நிரூபகம் –அவர் அருளிச் செய்த மா முனிகள் பாதகாதி கேசாந்த மாலையில் இருந்து பல மேற்கோள்களும் இதில் உண்டு
சாடூக்திகள் -நயவுரைகள் பலவும் இதில் இடம் பெற்றுள்ளன
கால்வாசியிலே நில்லாமல் அரை வாசி தேடுமவர் இறே
இக்கை கண்ட இவரைக் கை விட்டு இருக்க மாட்டாரே
கண் காணக் கை விட்டார்
இவர் கண் இறே எல்லாருக்கும் களை கண் -போன்ற சாடூக்திகள் இதிலே உண்டே –
சீர் ஆரும் செங்கமலத் திருவடிகள் வாழியே
வந்தருளி என்னை எடுத்த மலர்த்தாள்கள் வாழியே
முந்தை மறைத் தமிழ் விளக்கும் முத்திரைக் கை வாழியே
கார் போலும் செங்கை யுரை முக்கோலும் வாழியே
கருணை குடி கொண்டு அருளும் கண்ணினை வாழியே
வார் காதும் திருநாம மணி நுதலும் வாழியே
நீள் புவியில் தன் புகழை நிறுத்துமவன் வாழியே
கலி கண்டித்த திறல் வாழியே –வாழித் திரு நாமாந்தர பாசுரத்தில் பல அடிகள் மேற்கோளாகக் காட்டப் பட்டுள்ளன –
—————-
இதில் ஆச்சார்யன் அருளே விளை நீராக ஜீவனமாய் வாழுமவர்க்கும் அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழின் (கண்ணி நுண் சிறுத்தாம்பு -9-அர்த்தத்தை இப் படியில் யுண்டான அடியார்க்கு அருள் செய்யும் ஓவ்தார்ய குணத்துக்கு மங்களா ஸாஸனம் பண்ணுகிறது –
வாழி திருவாய் மொழிப் பிள்ளை மா தகவால்
வாழும் மணவாள மா முனிவன்-வாழி யவன்
மாறன் திருவாய் மொழிப் பொருளை மா நிலத்தோர்
தேறும்படி உரைக்கும் சீர்-
திருவாய் மொழிப் பிள்ளை மா தகவால் வாழும் மணவாள மா முனிவன்-வாழி
அதாவது
எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால் -உபதேச -1- என்றும்
திருமலை ஆழ்வார் திருவாய் மொழிப்பிள்ளை சீர் அருளால் -ஆர்த்தி பிரபந்தம் -21-என்றும்
ஸ்ரீ சைல நாத கருணா பரிணா மதத்தாம் –யதிராஜ விம்சதி -19- என்றும்
இவர் ஸ்ரீ சைல தயா பாத்ரராய் இருக்கும் படி என்கை
ஸூ குமாரராய் இருப்பார் பிடி தோறும் நெய் ஒழியச் செல்லாதாப் போலே
இவரும் ஆமூல சூடம் அருளால் மன்னி இருக்கும் படி
மா தகவு –
பெரிய தகவு
பெரும் கருணை
திருவாய் மொழிப்பிள்ளை தீ வினையேன் தன்னை குருவாகி வந்து உய்யக் கொண்டு -ஆர்த்தி பிரபந்தம் -46- என்று குருவானவருடைய குருவான நிர்ஹேதுக கிருபையாலே வாழுமவராய்த்து இவர் தாம் ஸ்வ யத் நத்தாலே பெரு பெறுமவர் அல்லரே இறே
தகவு -உபாயம்
வாழ்வு -உபேயம்
ஆச்சார்யன் அருளாக இறே ப்ராப்ய லாபம் உண்டாவது
இரக்கம் உபாயம் இனிமை உபேயம்-(இச்சை அதிகாரி விசேஷணம்)நஞ்சீயர் -என்னக் கடவது இறே
இப்படியே தேசிக தயையாலே வாழுமவர் இன்னார் என்கிறது -மணவாள மா முனிவன் -என்று
இவர் மா தகவுக்கு இலக்கு ஆகையாலே மா முனி யானார் பெரிய ஜீயர் என்று இறே ப்ரஸித்தி –மணவாள மா முனிவன்-அழகிய மணவாள ஜீயர்
வாழி திருவாய் மொழிப்பிள்ளை மா தகவால் வாழும் மணவாள மா முனிவன் என்கையாலே
அழகிய மணவாளன் சீர் அருளுக்கு இலக்கான வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயரில் வ்யாவ்ருத்தி–தெருள் தரு மா தேசிகரான திருமலை யாழ்வார் அருள் அதிகமாய்–ஆதிக்யத்தையும் உண்டாக்கும் –
ஏவம் வித நிரவதிக தயா பாத்ரரானவர் நித்தியமாக வாழ்ந்து அருள வேணும் என்கிறது –தாமும் தம்முடைய இரங்கும் கருணையாலே எல்லாருக்கும் திருவாய் மொழியின் ஈட்டை ப்ரஸாதித்துக் கொண்டு இங்கே வாழ்ந்து அருள வேணும் என்கிறது –
அவரோபாதி அவர் குணங்களும் ஆஸாஸ்யம் -விரும்பத் தக்கவை – என்கிறது –அவன் மாறன் மறைப் பொருளை மா நிலத்தோர் தேறும்படி உரைக்கும் படி சீர் என்று
அதாவது-ஆச்சார்ய ப்ரஸாதத்தாலே பெரு மதிப்பை யுடையவராக ஆனார் இந்நல்லார் -அவருடைய திராவிட வேதார்த்தத்தை மஹா ப்ருத்வீயில் உண்டானவர்கள் எல்லாருக்கும் வியாக்யானம் செய்து அருளும் ஸம்பத்தும் ஒவ்தார்யாதி குணங்களும் வாழ வேணும்
சீர்
ஸம்பத்து -என்னுதல்
குணம் -என்னுதல்
ஸ்ரீ மதி ஸ்ரீ பதி ஸ்வாமின் –என்றும்
பெரிய திரு மண்டபத்துப் பேர் அழகு -என்றும்
அத ஸ்ரீ சைல நாதாய நாம்நி ஸ்ரீ மதி மண்டபே -பூர்வ தினசர்யா -என்றும்
சொல்லுகிற வைபவத்தை யுடைய திரு மண்டபங்களிலே ஸ பரிவாரான வர வர நாமாவான ஸ்வ ஸ்வாமிக்கும்
வர வர ப்ருத்யரான ஸ்வ ஸிஷ்யர்களுக்கும்
அர்த்த பஞ்சக ப்ரதிபாதகமான திருவாய் மொழிக்கு ஈட்டோடே ஐந்து வியாக்யானங்களைக் கேட்பித்தும்-ப்ரஸாதித்தும் போருகிற வைபவமும்
அத்தை அவர்களுக்கு உடன் உரைத்து ப்ரஸாதித்து அருளும் ஒவ் தார்ய கிருபா வாத்சல்யாதி குணங்களும்-உண்டாய் இறே இருப்பது-அத்தை இங்கே சீர் என்கிறது –
ஸோயம் பூய: ஸ்வயமுபகதோ தேஷிகைஸ் ஸம்ஸதம் தே|
ஷ்ருத்வா கூடம் ஷடரிபு கிராமர்த்த தத்வம் த்வ துக்தம் ||
ஆகோபாலம் ப்ரதயதி தராமத்விதீயம் த்விதீயம்|
வாசாம் தூரம் வரவரமுநே வைபவம் ஷேஷஷாயீ || -ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் –14||(அப்படிப்பட்ட இந்த அரவணைப் பள்ளியான் மறுபடி உம்மை ஆசார்யராக அடைந்து உம்மால் கூறப்பட்ட ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளின் உண்மைப் பொருளை ரஹஸ்யத்தில் கேட்டு நிகரில்லாத வாக்குக்கு எட்டாத உமது வைபவத்தை மூடரும் அறியப் பரவச் செய்கிறார்.) என்று இறே ஜீயருடைய வாசா மகோசர வைபவம் இருப்பது
ஊரும்-பேரும் -செல்வமான திருவாய் மொழி அடியாக வந்த செல்வமும் வாழ வேணும் என்று மங்களா ஸாஸனம் பண்ணுகிறது
திருவாய் மொழிப் பொருளை மா நிலத்தோர் தேறும்படி உரைக்கும் சீர் என்ற இத்தால்
இத் தனியன் தான் திருவாய் மொழியின் ஈடு நித்யம் அநு சந்தித்துச் சாற்றும் போது அநு சந்திக்க வேணும் என்று ஸூ வ்யக்தமாய் இருக்கிறது–அத ஏவ-அருளிச் செயல்கள் எல்லாத்தினுடையவும் அநு ஸந்தான அநந்தரம் அநு சந்திக்குமதாய் இருக்கும் இறே-
—————-
ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ரு முநயே விததே நம
யத் ஸ்ம்ருதிஸ் ஸர்வ ஸித்தீ நாம் அந்தராய நிவாரிணீ –-யாவர் ஒருவரைப் பற்றிய நினைவு எல்லா வெற்றிகளுக்கும் இடையூறுகளை நீக்கி விடுமோ அந்த ஸ்ரீமன் மணவாள மா முனிகளை வணங்குகிறேன்
ஸ்ரீ சைல தயா பாத்ரம் -( தீ பக்த்யாதி குணார்ணவம் யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜா மாதரம் முநிம் )
என்று தொடங்கி அருளிச் செய்த சேனை முதலியார் நாயனார் (சேனை முதலியாருக்கு நாயனார் ஸ்வாமி -நம்பெருமாள் ) ஜீயருடைய கல்யாண குணங்களிலே தோற்று அடிமை புக்க படியைப் பிரகாசிப்பிக்கிறராய் நின்றார்-அவர் தம் அடியரான இவரும் அக் குணங்களுக்கும் ஸுந்தர்யாதி களுக்கும் ஆஸ்ரயமான திவ்ய மங்கள விக்ரஹத்திலே ஈடுபட்டு பாதாதி கேஸ அந்தமாக அனுபவித்துத் தம்முடைய பரிவின் மிகுதியாலே மங்களா ஸாஸனம் பண்ணின படியை அடைவே அருளிச் செய்கிறார் இதில்
செய்ய தாமரை பாடின சீர் அண்ணன் -என்று இறே இவர்க்கு நிரூபகம்-இப்படி மங்களா சாசனம் பண்ணுகிறவர்-தம்முடைய சேஷத்வ அனுகுணமாக-உன் பொன்னடி வாழ்க -என்னுமாப் போலே (பாத இலச்சினை வைத்தார்– பண்டு அன்று பட்டினம் காப்பே –பெரியாழ்வார் -5-2-8-) பொன்னடியாம் செங்கமலப் போதுகளுக்கு முந்துற மங்களா சாசனம் பண்ணுகையிலே ப்ரவ்ருத்தராகிறார் –
செய்ய தாமரை தாளிணை வாழியே சேலை வாழி திரு நாபி வாழி
துய்ய மார்பும் புரி நூலும் வாழியே சுந்தரத் திருத் தோளிணை வாழியே
கையும் ஏந்திய முக்கோலும் வாழியே கருணை பொங்கிய கண்ணினை வாழியே
பொய்யிலாத மணவாள மா முனி புந்தி வாழி புகழ் வாழி வாழியே
செய்ய தாமரை தாளிணை வாழியே-பிரஜை முலையில் வாய் வைக்கும்-நாண் மலராம் அடித் தாமரை -திருவாய் -3-3-9-இவை யாய்த்து –உன் இணைத் தாமரைகட்கு அன்புருகி நிற்குமது -திருவாய் -7-1-10- என்கிறபடியே-இதுவும் ஸ்வரூபமாய் இருக்கும்-இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி -பெருமாள் திருமொழி -2-4-5-என்கிறபடியே வாழ்த்துகை இறே நிலை நின்ற ஸ்வரூபம்
செய்ய தாமரை தாளிணை வாழியே
இவர் அடியைத் தொடரும்படி (ராமானுஜ நூற்றந்தாதி -63)-ராக ஸுவ் மனஸ்ய பத ஸுப் ராத்ரங்கள் உண்டாயிற்று (ராகம் – சிவப்பு -அன்பு –பதம் -அடி -சொற்கள் –ஸுப்ராத்ரம் -சேர்த்தி )
அதாவது-அழகியதாய்ச் சிவந்த செவ்வித் தாமாரைப் பூப் போலே தர்ச நீயமுமாய் போக்யமுமாய்த் தாமரைப் பூவை நிறைத்து வைத்தால் போலே சேர்த்தி அழகையும் யுடைத்தாய் உபாய பூர்த்தியையும் யுடைத்தாய்த்துத் திருவடிகள் இருப்பது
உன் மீலத் பத்ம கர்பேத்யாதி -உத்தர தினசர்யா –5-என்றும்
உந்மீலத் பத்மகர்ப்பத்யுதிதலமுபரி க்ஷீரசங்காதகௌரம்
ராகாசந்த்ர ப்ரகாசப்ரசுர நகமணித்யோத வித்யோதமாநம் |
அங்குள்யக்ரேஷு கிஞ்சிந்நதமதிம்ருதுளம் ரம்யஜாமாத்ருயோகீ
திவ்யம் தத்பாதயுக்மம் திசது சிரசி மே தேசிகேந்த்ரோ தயாளு: || 6–மலர்ந்து கொண்டேயிருக்கிற தாமரைமலரின் உட்புறத்தின்-சிவந்த) காந்தி போன்ற காந்தியையுடைய அடிப் பகுதியை (உள்ளங்காலை)யுடையதும்,-உபரிமேற்பகுதியில், பாலின் திரட்சி போல் வெளுத்ததும், பௌர்ணமீ சந்த்ரனுடைய காந்தி போன்ற (வெளுத்த) காந்தியால் நிறைந்த அழகிய நகங்களின் காந்தியினால் விளங்காநிற்பதும் நகங்களின் நுனிப்பகுதிகளில், – சிறிது வளையையுடையதும்,- மிகவும் மெத்தென்றிருப்பதும்,அப்ராக்ருதமானதும், மிகச் சிறந்ததுமான,- (தமது) திருவடியிணையை, அடியேனுடைய தலையில், வைத்தருளவேணும்.
போதச் சிவந்து பரிமளம் வீசிப் புதுக்கணித்த சீதக் கமலத்தை நீரற வோட்டி -பாதாதி கேச மாலை -1-என்றும்-சீராரும் செங்கமலத் திருவடிகள் வாழியே -என்றும் இறே அடி அறிவார் வார்த்தை-இப்படி-இதனுடைய ஸுந்தர்யத்தையும் போக்யதா ப்ரகர்ஷத்தையும் அனுபவித்த இவர் மங்களா ஸாஸனம் பண்ணி யல்லது நிற்க மாட்டாரே –உன் சேவடி செவ்வித் திருக்காப்பு –திருப் பல்லாண்டு -1- என்னுமா போலே
அன்றியே
செய்ய –என்கிற இத்தால்-(சிவந்த என்ற பொருள் கொள்ளாமல் – செம்மை என்றும் பொருள் கொண்டு )
திருவடிகளுடைய செவ்வியைச் சொல்லிற்றாய் ஆஸ்ரிதர் அளவும் வந்து செல்லுகிற வாத்சல்யத்தை யுடைத்து என்கை-இது அண்ணராய சக்ரவர்த்திக்குப் ப்ரத்யக்ஷம்
( மா முனிகள் சரம தசையில் எழுந்து அருளி இருந்த போது அண்ணராய சக்ரவர்த்தி என்பவர் ஸேவித்து நிற்க மடங்கிக் கிடந்த மா முனிகளின் திருவடிகள் தாமே நீண்டு அவர் தலையிலே வைத்து அருள் புரிந்தமை இங்கு நினைக்கத் தக்கது )-வந்தருளி என்னை எடுத்த மலர்த்தாள்கள் வாழியே -என்கிறபடியே தம்மையும் முந்துற வந்து விஷயீ கரித்தது திருவடிகளாயிற்று
திருக்கமல பாதம் வந்து -அமலனாதி பிரான் -1-என்றும்
அடியேனை அங்கே வந்து தாங்கு தாமரை யன்ன பொன்னாரடி -பெரிய திருமொழி -7-3-5-என்றும் சொல்லக் கடவது இறே
இவர் இப்படித் தம்மை விஷயீ கரித்த செய்ய தாமரைத் தாள்களைக் கொண்டு சென்னித் தரிக்குமது -அளவாய் இருக்கிற பொற் காலானது தன் சென்னித் திடரிலே ஏறும்படி அருளாலே வைத்து அருளுவதே என்று அவற்றினுடைய பாவனத்வ போக்யத்வங்களை அனுபவித்து அவற்றுக்குத் தம்மோட்டை ஸம்பந்தத்தாலே ஓர் அவத்யமும் வாராது ஒழிய வேணும் என்று மங்களா ஸாஸனம் பண்ணுறார் ஆகவுமாம்
ஆகையால் இவருக்குப் ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் அடி தானே யாய் இருக்கை
—
இனித் திருவடிகளுக்கு இவ்வருகு கந்தவ்ய பூமி இல்லாமையாலே
மேலே – திருவரையோடே சேர்ந்து சிவந்து நிற்பதான திருப்பரி யட்டத்தில் அழகிலே சென்று
அச்சேர்த்திக்கு மங்களத்தை ஆசாசிக்கிறார் -சேலை வாழி -என்று-கால் வாசியிலே நில்லாமல் அரை வாசி தேடுமவர் இறே—திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி -என்று திருவரையில் உடை அழகும் பரபாகமாய் இறே இருப்பது —சந்த்ரனைச் சூழ்ந்த பரி வேஷம் (ஒளி வெள்ளம் )போலே யாயிற்றுத் திருவரைக்குத் திருப் பரியட்டத்தோடே சேர்த்தி–
ஸூதா நிதி மிவ ஸ்வைர ஸ்வீ க்ருதோ தக்ர விக்ரஹம் ப்ரஸன்னார்க்க ப்ரதீகாஸ பரி வேஷ்டிதம் -பூர்வ தினசர்யா -3- (தேவரீருடைய இச்சையால் எடுத்துக் கொள்ளப் பட்ட அழகான தேவரீருடைய திருமேனி அமுதக்கடல் போல் குளிர்ந்த பிரகாசத்தை யுடைய ஸூர்யனுடைய ஒளியுடன் கொடியது போல் உள்ளது -) என்னக் கடவது இறே
ஈனமிலாத இள நாயிறாகும் எழிலும் செக்கர் வானமும் ஒத்த துவராடையும் -பாதாதி கேச மாலை –3-என்றும்-ஆதாம்ர விமலாம் பரம் -பூர்வ தினசர்யா -5- ( சிவந்துள்ள ஆடையுடன் கூடியவர் ) என்றும்
அத்யாச்சர்யமாய் இறே இருப்பது -இத்தால்-பீதக வாடைப்பிரானார் பிரம குருவாகி -பெரியாழ்வார் -5-2-8-வந்தமை தோற்றுகிறது
—
அதுக்கு மேலே
கண்டவர்களைக் கால் தாழப் பண்ண வற்றான திரு நாபி அழகிலே போந்து அவ்வழகுக்குப் போற்றி என்கிறார் – திரு நாபி வாழி -என்று–திருப்பரி யட்டத்துடனே சேர்ந்து இறே திரு நாபி இருப்பது—அந்தி போல் நிறத்தாடை -என்ற அநந்தரம்-உந்தி மேலது அன்றோ (அமலனாதி -5 )-என்று அருளிச் செய்கிறார்
அது தான் அல்லாத அவயவங்கள் காட்டில் அழகியதாய்-அழகு ஆற்றில் திகழ் சுழி போலே இறே (பாதாதி கேச மாலை)உந்திச் சுழி இருப்பது-ஸுந்தர்ய சாகரம் இட்டளப் பட்டு சுழித்தால் போலே இருக்கிற இதினுடைய வை லக்ஷண்யம் கண்ட இவருக்கு வாழ்த்தி அல்லது நிற்கப் போகாதே-இது தான் மடவார் உந்தித் சுழியிலே சுழலுகிற மனஸ்ஸை மீட்டுத் தன்னிடத்திலே ஆழங்கால் படுத்த வற்றாயும் இருக்கும் –
—
அநந்தரம்
திரு நாபிக்கு மேலாய் விசாலமாய் விமலமாய் ஸூ ந்தரமாய் இருக்கிற திரு மார்பையும்-அத்தோடே சேர்ந்த திரு யஜ்ஜோ பவீதத்தையும் கண்டு காப்பிடுகிறார் —துய்ய மார்வும் புரி நூலும் -என்று–மார்வுக்குத் தூய்மை யாவது-ஹ்ருதயேந உத்வஹன் ஹரிம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-12-( மார்வில் ஹரியைத் தாங்கிக் கொண்டு ) என்று நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமானை -மூன்றாம் திருவந்தாதி -81-உடைத்தாகை–அத்தாலே-அவர்கள் ஹ்ருதயம் சவும்ய ரூபமாய் இருக்கும்
அவ்வளவும் அன்றியிலே
மார்வம் என்பதோர் கோயிலிலே மாதவன் என்னும் தெய்வம் -பெரியாழ்வார் -4-5-3-என்கிறபடியே
இவர் திரு உள்ளத்தைக் (ஜங்கம ஸ்ரீ விமானம் அன்றோ )கோயிலாகக் கொண்டு-அரவிந்தப் பாவையும் தானுமான -பெரியாழ்வார் -5-2-10- சேர்த்தி யுடனே யாய்த்து அவன் எழுந்து அருளி இருப்பது – -விசேஷித்து –வக்ஷஸ்தலம் மாதவ ஸ்தானம் ஆகையாலே (பன்னிரு திருமண் காப்புகளில் மார்வில் அணியும் திரு மண் காப்புக்குத் திரு நாமம் மாதவன் ஆகையால் ) உள்ளொடு புறம்போடே வாசியற மாதவன் உறையும் இடமாய்த்து
மங்களம் மாதவ ஆராம மனஸ் பத்மாய மங்களம் -என்றும்
ஸ்ரீ மத் ஸூந்தர ஜாமாத்ரு முனி மானஸ வாஸிநே ஸ்ரீ நிவாஸாய -ஸ்ரீ வெங்கடேச மங்கள ஸ்தோத்ரம் -என்றும் சொல்லக் கடவது இறே–அவன் தான் அநந்ய ப்ரயோஜனருடைய ஹ்ருதயங்களிலும் ஆசார்ய பரதந்திரருடைய ஹ்ருதயங்களி மாய்த்து அத்யாதரத்துடனே எழுந்து அருளி இருப்பது –
விண்ணாட்டில் சால விரும்புமே வேறே ஒன்றை எண்ணாதார் நெஞ்சத்து இருப்பு -ஞான ஸாரம் -9-என்றும்–தன்னாரியன் பொருட்டாச் ஸங்கல்பம் செய்பவர் நெஞ்சு எந்நாளும் மாலுக்கு இடம் -ஞான ஸாரம் -37-என்றும் சொல்லக் கடவது இறே
அந்த
1- அநந்ய ப்ரயோஜ நதையையும்
2- ஆச்சார்ய பரதந்த்ரதையையும் ஆய்த்து இங்குத் தூய்மையாகச் சொல்லுகிறது –
அதுக்கும் மேலே
அழகாரும் எதிராசர்க்கு அன்பு உடையான் -என்னும்படி-இவர் திரு உள்ளம் யதீந்த்ர ப்ராவண்யத்தை யுடைத்தாய் இருக்கையாலே-இன்று இவன் வந்து இருப்பிடம் என் தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே -ராமானுஜ நூற்றந்தாதி -106-என்கிறபடியே பரம ஹம்ஸரான எம்பெருமானார் எழுந்து அருளி இருக்கிற மானஸ பத்ம ஆஸனத்தை உடையதாயும் இருக்கும் –-ராகாதி தூஷிதமான சித்தத்தில் அவன் அநாஸ் பதியாய் இருக்குமா போலே-அங்க ராக ரஞ்சிதமான இவருடைய ஹ்ருதயத்திலும் ஆஸ்பதியாய் அன்றி இரானாய்த்து-இப்படி இவன் எழுந்து அருளி இருக்கையாலே சவும்ய ஜாமாத்ரு முனியுடைய ஹ்ருதயம் அத்யந்த சவும்ய ரூபமாய் இருக்கும் என்கை
ஆகையால்
நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு -திருப்பல்லாண்டு -2- என்கிறபடியே
இவரும் இருவருமாக சேர்த்திக்கு இருப்பிடமான திரு மார்வைத்-துய்ய மார்வும் புரி நூலும் வாழி -என்று மங்களா ஸாஸனம் பண்ணுகிறார் ஆகவுமாம்–
இவர் மானஸ வாஸியாய் இருக்கிறவனும்-புலம் புரி நூலவன் -பெரிய திருமொழி -9-9-9-இறே
அலர் மேல் மங்கை யுறை மார்பன் –திருவாய் -6-10-10- என்கையாலே-அம் மா ஒருத்திக்கு இடமுடையாய்த்து அம்மார்வு-இம் மார்வு இருவருக்கும் இடமுடைத்தாய் இருக்கும்
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையா மணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும் அணையாம் திரு மாற்கு அரவு -முதல் திருவந்தாதி -53-
மங்களம் பன்ன கேந்த்ராய என்றும்
அநந்தனாம் அவரே மணவாள மா முனி -என்றும் சொல்லக் கடவது இறே
அதவா
துய்ய மார்வும்
ஸூபேந மனஸா த்யாதம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-6-28-நல்ல மனத்தினால் நினைக்கப்பட்டு -என்கிறபடியே ஆஸ்ரிதருடைய அபராதங்களைப் பொறுத்து அவர்களுக்கு எப்போதும் ஓக்க நன்மையைச் சிந்திக்கிற ஸுஹார்தத்தை யுடைத்தாகை
உரஸா தாராயாமாஸ-பாரதம் -அர்ஜுனன் மீது விடப்பட்ட பாணங்களைத் தன் மார்வில் கண்ணன் ஏற்றான் -என்றும்-நன் நெஞ்ச வன்னம் -பெரிய திருமொழி -7-2-7-என்றும் சொல்லுகிறபடியே
தீமையைத் தவிப்பதற்கும் நன்மையை உண்டாக்குவதற்கும் -இவை இரண்டுக்கும் – தானேயாய் இருக்கை-
துய்ய மார்பும்
ஏராரும் செய்ய வடிவு -ஆர்த்தி பிரபந்தம் -30-என்னுமா போலே-இங்கும் யாவத் போகத்தைப் பற்றிச் சொல்லவுமாம்
மந்தர கிரி மதித மஹார்ணவ உத்கீர்ண பேந பிண்ட பாண்டர ஸூ ந்தர ஸூ குமார திவ்ய விக்ரஹ—
மந்தர மலையாலே கடையப்பட்ட கடலில் இருந்து யுண்டான நுரையினுடைய வெண்மையின் அழகுடன் கூடிய மென்மையான திரு மேனி என்று இறே இருப்பது
ஆக-இவற்றால் சொல்லிற்றாய்த்து-பாஹ்ய ஆப் யந்த்ர ஸூசி என்கை-
—
இனித் திரு மார்வோடே சேர்ந்து இறே திரு யஜ்ஜோ பவீதம் இருப்பது–தாமரைத் தார் இடம் கொண்ட மார்வும் வண் புரி நூலும் -பாதாதி கேச மாலை -5-துஷார கரகர நிகர விஸத தர விமலோ பவீத பரி ஸோபித விசால வக்ஷஸ்தல-சந்திரனுடைய கிரணங்களைப் போலே வெண்மையான பரி ஸூத்தமான முப்புரி நூலினால் ப்ரகாசிக்கின்ற விசாலமான மார்பு -என்கிறபடியே சந்திரனுக்கு கிரணங்கள் தேஜஸ் கரம் ஆனால் போலே யாய்த்து திரு மார்வுக்குத் திரு யஜ்ஜோ பவீதம் இருப்பது –
ஸோபிதம் யஜ்ஞ ஸூத்ரேண -பூர்வ தினசர்யா -வெண் புரி நூலினால் அழகு பெற்று விளங்குகின்றவர் -என்னக் கடவது இறே-அன்றிக்கே-இம் முந் நூலான மெய்ந் நூலாலே இறே பொய்ந் நூல்களையும் கள்ள நூல்களையும் கருமம் (உண்மை) அன்று என்று கழிப்பது—வகுள தர தவள மாலா வக்ஷஸ்தலம் வேத பாஹ்ய ப்ரவர ஸமய வாதச் சேதநம் —வெண்மையான மகிழ் மாலையை அணிந்த திரு மார்வை உடையவர் -வேதத்துக்குப் புறம்பான சமயத்தைச் சேர்ந்தவர்களை அழிப்பவர் -என்னக் கடவது இறே-தம்முடைய ப்ரஹ்ம ஸூத்ரத்தாலே இறே இவனுடைய காம ஸூத்ரங்களைக் கழிப்பது
ராஜேந்திர சோழனிலே பாஹ்யருடைய சங்கத்தாலே ஸிகா யஜ்ஜோ பவீதங்களைக் கழித்த ப்ராஹ்மண புத்ரன் ஆழ்வானைக் கண்டு மீண்டும் அவற்றைத் தரித்து வர அவன் பிதாவானவன் ஆழ்வானைக் கண்டாய் யாகாதே -என்றான் இறே-பெரிய திருமொழி -8-1-வியாக்யானத்தில் பெரியவாச்சான் பிள்ளை காட்டி அருகிலும் ஐதிக்யம் இது-இது போல் அன்றோ மா முனிகளும் தம்மை சேவித்தவர்களைப் பவித்ரர்களாக்கி அருளுகிறார் என்றவாறு –
(ராஜேந்திர சோழனில் ஒரு பிராமணன் மகன் புத்தரோடு சம்ப்ரதாயம் உண்டாய் பூண நூலையும் குடுமியையும் அறுத்துப் பொகட்டான் – கூரத் தாழ்வான் அங்கே நடந்த அளவிலே சிகா யஞ்ஞா பவீதங்களைத் தரித்துக் கொண்டு வந்து புகுந்தான் –பிதாவானவன் ஸ்ரீ கூரத்தாழ்வானைச் சந்தித்தாயோ என்று கேட்க புறம்பு உள்ளார் -நீ அறிந்த படி எங்கனே -என்று கேட்க ஸ்ரீ ஆழ்வான் சந்நிதியில் தமோபி பூதரும் சத்வஸ்தர் ஆவார்கள் காண் -என்கின்றான் –)
—
இனித் திரு மார்வோடு சேர்ந்த திருத்தோள்களுக்கு அரண் செய்கிறார் –
திருத் தோளிணை வாழியே-மல்லாண்ட திண் தோளுக்குப் பல்லாண்டு -திருப்பல்லாண்டு -1-என்னுமா போலே–ஸூந்தரத் திருத் தோளிணை–புஜ த்வய வித்ருத விசத தர சங்க சக்ர –சங்கு சக்ர சிஹ்னங்கள் விளங்கும் திருத் தோள்கள் என்றபடி லாஞ்சனங்களை உடைத்தாய்த்துத் திருத் தோள்கள் இருப்பது
தோளார் சுடர்த் திகிரி சங்குடைய சுந்தரன் -ஞான சாரம் -7-இறே அவன் தான்
சிங்கார மாலைத் திருத் தோள்களும் அதிலே திகழும் சங்கு ஆழியும் –பாதாதி கேச மாலை -7- என்று அனுபாவ்யமாய் இறே இருப்பது-
தோளிணை
எப்போதும் கை கழலா நேமியான் -பெரிய திருவந்தாதி -87-என்கிறபடியே
இவருக்குத் திருத் தோள்களானவை எப்பொழுதும் சங்கு ஆழி இலங்கு புயமாய் இருக்கையாலே
வலத்துறையும் சுடர் ஆழியும் பாஞ்ச சன்னியமும் -திருப்பல்லாண்டு -2- இங்கும் உண்டாய் இருக்கை
அன்றிக்கே
திருத்தோள்கள் தான் பகவ லாஞ்சனத்திலே ப்ரமாணமுமாய் அபவித்ரரை ஸூபவித்ரராக்கியும்
துர் வ்ருத்தரை வ்ருத்த வான்கள் ஆக்கியும் போருமதாய் இருக்கும் –
—
அநந்தரம்
திருத்தோள்களில் ஏக தேசமான திருக்கையையும்-அதிலே தரித்த த்ரி தண்டத்தையும் கண்டு
அதுக்குத் தாம் கடகாக நிற்கிறார் —கையும் ஏந்திய முக்கோலும் வாழியே–வெறும் கை தானே போருமாய்த்து ஆகர்ஷிக்கைக்கு-அதிலே த்ரி தண்டமுமானால் அழகு இரட்டிக்கச் சொல்ல வேண்டா விறே –
அங்கைத் தலத்திடை ஆழி கொண்டான் -நாச்சியார் -12-4- என்னுமா போலே
காரும் சுரபியும் போலே விளங்கு கைத் தாமரையிலே சேர்ந்து இருந்த தண்டும் -பாதாதி கேச மாலை -5-என்று இறே சேர்த்தி இருப்பது
இக் கை கண்ட இவரைக் கை விட்டு இருக்க மாட்டாரே –
அன்றிக்கே
முந்தை மறைத் தமிழ் விளக்கும் முத்திரைக் கை வாழியே -என்கிறபடியே-தனது தொண்டக் குலம் சூழ இருக்க அவர்களுக்குத் தமிழ் வேதமான திரு வாய் மொழியினுடைய அர்த்தத்தை ஹஸ்த முத்ரையால் உபதேசிப்பது அருளுவதும் அநுபாவ்யமாய் இறே இருக்கும் இவருக்கு–உந் நித்ர பத்ம ஸூ பகாம் உபதேஸ முத்ராம் -யதிராஜ சப்தாதி -25-அப்பொழுது அலர்ந்த தாமரையின் அழகுடைய ஞான முத்ரை என்றும்-எழில் ஞான முத்திரை வாழியே -ஆர்த்தி பிரபந்தம் -20- என்றும் சொல்லக் கடவது இறே –
ஏந்திய
பூ ஏந்தினால் போல் இருக்கை–கையும் ஏந்திய முக் கோலும் வாழியே–நின் கையில் வேல் போற்றி என்று நாச்சியார் கையில் ஏந்திய வேலுக்கு மங்களா ஸாஸனம் -செய்தால் போலே இவரும் மா முனிகள் கையில் ஏந்திய முக்கோலுக்கு மங்களா ஸாஸனம் செய்கிறார்
அன்றிக்கே
கமல கர தல வித்ருத த்ரி தண்ட தர்சன த்ருத ஸமஸ்த பாஷண்ட ஸூ தூர பரிஹ்ருத நிஜா வசத-
தாமரை போன்ற திருக்கையில் தரித்த த்ரி தண்டத்தைக் கண்ட பாஷண்டிகள் அனைவரும் வெகு தூரம் ஓடும்படியான இருப்பிடத்தை யுடையவர் என்று ஒருக்கோலார் தொடக்கமானவரை எல்லாம் ஓட்டுமதாய் இருக்கும்-
—
கருணை பொங்கிய கண்ணினை வாழியே
கண் காணக் கை விட்டார்
கண்ணால் கண்டு கொண்டு இருக்கும் போதே கை விட்டார் என்றும் கண்ணைக் கண்டவுடன் கையை விட்டு விட்டார் என்று சாடூக்தி -நயவுரை
கார் போலும் செங்கை யுறை முக்கோலும் வாழியே
கருணை குடி கொண்டு அருளும் கண்ணினை வாழியே –என்று திருக் கைக்கு அனந்தர பாவியாய்ப் பேசுவது திருக் கண்களை இறே–திருக் கைகளினாலே ஸ்பர்சித்து அருளின பின்பு இறே திருக் கண்களால் கடாக்ஷித்து ரக்ஷித்து அருளுவது
கருணை பொங்கிய கண்ணினை
கருணைக் கடலான இவருடைய கிருபை பெருகும் ஆனைத் தாள்கள் (மதகு) இருக்கிற படி
நிரந்தர கருணாம்ருத தரங்கிணீ பிர் ஆர்த்தரித அபாங்கைர் அநுகூலம் அபி ஷிஞ்ச —
எப்பொழுதும் அமுதம் அன்ன கருணை யானது பெருகுகின்ற உமது கடைக் கண் பார்வையாலே அனுகூலனான என்னை நனைக்க வேண்டும் என்றார் இறே
இவரைப் போல் கண்ணுடையார் ஒருவரும் இல்லையே –இவர் கண் இறே எல்லாருக்கும் களை கண்-
கண் அருளாலே இறே எல்லாரையும் ரக்ஷித்து அருளுவது –
கண்ணினை
அலர்ந்த செவ்வித் தாமாரைப் பூவிலே இரண்டு வண்டுகள் படிந்து இருக்குமா போலே யாய்த்து
திருக் கண்களானவை திரு முக மண்டலத்துக்கும் கண் காட்டிகளாய் இருக்கிற படி—ஸ்மயமாந முகாம்போஜம் தயமாந த்ருகஞ்சலம்–பூர்வ தினசர்யா -10-புன் முறுவலுடன் விளங்கும் தாமரை போன்ற திரு முகமும் —திரு உள்ளத்தில் பொங்கும் கருணையை வெளிப் படுத்துகின்ற திருக் கண்களும்-என்று அன்றோ இவற்றின் சேர்த்தி இருப்பது –திருக் கண்களை அருளிச் செய்தது உத்தம அங்கத்தில் அழகுக்கு எல்லாம் உப லக்ஷணம்
வாழி செவ்வாய் –பாதாதி கேசவ மாலை -10-என்றும்
வார் காதும் திருநாமம் அணி நுதலும் வாழியே -என்றும்-அவற்றையும் திருநாமாந்தரங்களிலே காணலாய் இருக்கும்–அத்தாலே அவை இரண்டையும் -கண்ணினை -மங்களா சாசனம் பண்ணி அருளினார்-இவர் ஜீயர் திருக்கண் மலரிலே யாய்த்து ஜிதம் என்று தம்மை எழுதிக் கொடுத்தது –
—
இவ்வளவும் ஸூரூப வை லக்ஷண்யத்தை அனுபவித்து-மங்களா ஸாஸனம் பண்ணின இவர்-இனி ஸ்வரூப குணமான ஞான வை லக்ஷண்யத்தையும் அனுபவித்து மங்களா ஸாஸனம் பண்ணுவாராக அதிலே இழிகிறார்—கட் கண் என்றும் உட் கண் என்றும் -பெரிய திருவந்தாதி -28-
நேத்ரேண ஞாநேந -என்றும் ஞான சஷுஸ்ஸூக்கள் இரண்டுக்கும் தர்ச நத்வம் ஒத்து இருக்கையாலே ஒரு சேர்த்தி யுண்டு இறே அத்தாலே —பொய்யிலாத மணவாள மா முனி புந்தி -என்று ஞானத்தைப் பேசுகிறார் —
புந்தி -புலன் -புத்தி -ஞானம் —பொய்யிலாத-இவர் விஷயத்தில் சொன்ன ஏற்றம் எல்லாம் யதார்த்தமாக யுண்டு என்கை-இனிச் சொல்ல மாட்டாதார் குறையே யுள்ளது-அன்றிக்கே-ஆஸ்ரிதரானவர்களுக்கு அஸத்வாதி தோஷங்கள் வராமல் நோக்கிப் போருகிறவர் என்னவுமாம்
காமாதி தோஷ தரம் ஆத்ம பதாஸ்ரிதாநாம் -யதிராஜ விம்சதி -1-என்கிறபடியே
செறிந்தவர் தமேதத்தை மாற்றுபவராய் இருப்பர் -பாதாதி கேச மாலை
மணவாள மா முனி
ரக்ஷகர் அன்றிக்கே ஒழிந்தாலும் வடிவில் போக்யதையாலும் திரு நாம வைலக்ஷண்யத்தாலும் விட ஒண்ணாது இருக்கை
பொய்யிலாமை புந்திக்கு விசேஷணம் ஆகவுமாம்
அப்போது
இராமானுசன் மெய்ம் மதிக் கடலே -இராமானுச நூற்றந்தாதி -58 என்கிறபடியே-உண்மை நன் ஞானமான யதார்த்த ஞானத்தை யுடையவர் என்கை-(ஸர்வம் ஞானம் ஸத்யம் -நம் ஸித்தாந்தம் -முத்துச் சிப்பியை வெள்ளி என்று பிரமிப்பதும் கிஞ்சித் ஸாம்யம் இருப்பதாலேயே அன்றோ )அதாவது
மெய் ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி -திருவாய் -3-2-7-என்கிறபடியே-ஸம்ஸார ஆர்ணவ மக்நரானவர்களை ஞானக் கையாலே -திருவாய் -2-9-2-உத்தரித்துப் போருமவர் என்கை –
சேதனர் படும் ஆபத்தைக் கண்டால்-கையாலும் காலாலும் இறே இவர் எடுத்து ரக்ஷித்து அருளுவது –
ஞானக்கை தந்து வந்தருளி எடுத்த புந்தி வாழியே-ஞானப் ப்ரதானர்களாய் இறே இவர்கள் இருப்பது –
தீ பக்த்யாதி குணார்ணவம் -தனியன் -என்றும்
புந்தி வாழி -என்றும் அருளிச் செய்து போருகையாலே-ஞானம் சார பூத குணமாகையாலே அத்தைப் ப்ரதானமாகச் சொல்லக் கடவது ––தத்ர ஸத்வம் நிர்மலத்வாத் ப்ரகாசகம் -என்கிறபடியே–ஸூத்த ஸத்வ மயமான விக்ரஹமாகையாலே உள்ளில் பிரகாசித்வம் என்ன -உள்ளுள் உள்ள வற்றை பிரகாசிப்பிக்க -என்னக் கடவது இறே
புந்தி என்று-ஞான மாத்ரத்தையும் சொன்னது பக்த்யாதிகளுக்கும் உப லக்ஷணம்-மங்களம் நிர்மலா ஞான பக்தி வைராக்ய ராஸயே -என்னக் கடவது இறே
வாழி
மங்களா ஸாஸனம் பண்ணி அருளினார்
ஞான பக்த்யாதிகள் இறே ஆத்ம அலங்காரம் என்பது
ஞான பக்த்யாதி பூஷிதம் –என்னுமா போலே
அன்றிக்கே
ஆச்சார்யனுக்கு அடையாளம் அறிவும் அனுஷ்டானமும் என்றும்
ஞானம் அனுஷ்டானம் இவை நன்றாகவே யுடையனான குரு -உபதேச -61-என்றும் இறே ஆச்சார்ய லக்ஷணம் அருளிச் செய்தது-ஆகையால் ஆஸ்ரிதருடைய அஞ்ஞானத்தைப் போக்கி ஸம்பந்த ஞானத்தை விளைவித்து கைங்கர்ய பர்யந்தமாக நடத்திக் கொண்டு போருவது எல்லாம் தம்முடைய ஞான அனுஷ்டானங்களாலே என்கை
மணவாள மா முனி புந்தி -என்கையாலே
இவருடைய ஞானம் அல்லாதாருடைய ஞானத்தில் காட்டில் அத்யந்த விலக்ஷணமாய்
தத்வ த்ரயங்களையும் அலகலகாகக் காண வல்லதாய்
தாமாரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –முதல் திருவந்தாதி -67-என்கிறபடியே
ஸ்ரீ யபதியை விஷயமாக யுடைத்தாய்-அது தான்-ததீய சேஷத்வம் ஆகிற சரம அவதியான எல்லை நிலத்திலே நிலை நின்று போருமதாய் இருக்கும்-
தத்வ த்ரயங்களோடு ஸ்ரீ வசன பூஷணம் கண்ட ஸகல ஸாஸ்த்ர ஆச்சார்யர் என்னக் கடவது இறே
ஆக
இவை எல்லா வற்றாலும் கீதையை அருளிய கண்ணன் என்கோ -திருவாய் -3-4-6- என்னும்படி
நிறை ஞானத்து ஒரு மூர்த்தியான -திருவாய் -6-8-6- கீதா உபநிஷத் ஆச்சார்யனோடே விகல்பிக்கலாம் படி ஞான நிதியாய் இருக்கிற இவருடைய ஞானமானது-கலி தோஷம் தட்டாமல் நித்ய மங்களமாய்ச் செல்ல வேணும் என்று வாழ்த்தி அருளினார் என்கை -கலி தோஷத்தாலே இறே சேதனருடைய ஞானம் அல்பீ பவித்துப் போருவது
இவர் பல்லவராயருக்கே கலி கண்டித்த திறல் வாழியே –என்னக் கடவது இறே
கலி கன்றியான் -திருமங்கை ஆழ்வார் என்றும் நம்பிள்ளை என்றும் கொள்ளலாம் -அருளாலே உயர்ந்தவர் இறே இவர் தான்-இனி-இவர் இப்படித் தம்முடைய ஞான அனுஷ்டானங்களாலே ஞான விபாகமற–ஸகல சேதனரையும் ரஷித்துக் கொண்டு போருகையாலே வந்த புகழைச் சொல்லுகிறது –
ஞாலம் யுண்ட புகழ் போல் இருப்பதொரு புகழாய்த்து இது-தன் புகழ் நயவாருடைய புகழ் போற்றி இருக்கிற படி-அதாவது ஞான வைபவத்தாலே வந்த புகழானது
தொல் புகழ் சுடர் மிக்கு எழுந்தது -இராமானுச நூற்று அந்தாதி -61-என்கிறபடியே நிரவதிக தேஜோ ரூபமாய் அப்ரதிஹதமாய் வாழ வேணும் என்கை
புகழ் வாழி -என்ற அநந்தரம் வாழி என்று இரட்டிப்பாய் இருக்கிறதுக்கு பிரயோஜனம் பல்லாண்டு பல்லாண்டு என்கிறார் ஆகவுமாம்
அன்றிக்கே–நீள் புவியில் தன் புகழை நிறுத்துமவன் வாழியே -பாதாதி கேச மாலை -10–என்கிறபடியே
கீழ்ச் சொன்ன யஸஸூக்கு ஆதாரமாய் அனுக்தமான ஆத்ம ஸ்வரூப வை லக்ஷண்யமும் அனவரத பாவியாய்ச் செல்ல வேணும் என்று ஆசாசிக்கிறார் ஆகவுமாம் —அடியே தொடங்கி இதுவே இறே இவருக்கு யாத்திரை –
இத்தால் சரம பர்வமான ஜீயர் விஷயத்தில் மங்களா சாஸனமே அனுகூலரானவர்க்கு அனவரத கர்த்தவ்யம் என்று-அருளிச் செய்து தலைக்கட்டி அருளினார் ஆயிற்று
வாழி செந்தாமரைத் தாள் துவராடை மருங்கு கொப்பூழ்
வாழி முன்னூலுறை மார்பு முக்கோல் அங்கை வாழி திண் தோள்
வாழி செவ்வாய் விழி வாழ் பொன் நாமம் மருவு நுதல்
வாழி பொற் கோயில் மணவாள மா முனி வாழ் முடியே –பாதாதி கேச மாலை நிகமன பாசுரம் –
—————–
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ -கடல் சூழ்ந்த
மன்னுலகம் வாழ மணவாள மா முனியே
இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும் –
அடியார்கள் வாழ
அணி யரங்கன் திரு முற்றத்து அடியார் -பெருமாள் திருமொழி -1-10-என்றும்
அரங்கன் மெய்யடியார் -பெருமாள் திருமொழி -2-1- என்றும்
திருமால் அடியார் -திருவாய் -5-6-11- என்றும் சொல்லப்படுகிற-ஸ்ரீ வைஷ்ணவர்கள் நாள் தோறும் அபி வ்ருத்தமாய் வாழும்படிக்கு இவர் தான்
பொலிக பொலிக பொலிக -திருவாய் -5-2-1- என்றாய்த்து ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களா ஸாஸனம் பண்ணுவது –
அரங்க நகர் வாழ
அடியாருக்கு ஆவாஸ -இருப்பிடமான -அரங்க நகர் —அடியார் நிலாகின்ற வைகுந்தம் -திரு விருத்தம் -75- என்னும்படி இருக்கை—நல்லோர்கள் வாழும் நளிர் அரங்கம் -நாச்சியார் -11-5-இறே–அந்த ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யுடனே கோயில் வாழும்படிக்கும் கோயில் மணவாள மா முனியான இவர் தாம்-ஸ்ரீ மத் ஸ்ரீ ரெங்க ஸ்ரீயம் அநு பத்ரவாம் அநு தினம் ஸம் வர்த்தய –ஸ்ரீ ரெங்கச் செல்வமானது தடை ஏதும் இல்லாமல் நாளும் வளரட்டும் -என்றும்
ஸ்ரீமத் ரங்கம் ஜயது பரமம் தாம தேஜோ நிதாநம் |
பூமா தஸ்மிந் பவது குசலீ கோபி பூமா ஸஹாய: ||
திவ்யம் தஸ்மை திசது பகவந் தேசிகோ தேசிகாநாம் |
காலே காலே வரவரமுநி: கல்பயந் மங்களானி || -ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் –8-
(மங்களா ஸாஸன ஸ்லோகம் இது
பூமா – உபநிஷத் சொல்லும் – அதிசய ஆனந்த குணக் கடல்
பூமா ஸஹாயா -ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமா தேவிமார்கள் உடன் –
அடியார்கள் வாழ அருளிச் செயல் வாழ குரவர் வாழ -வியாக்யானம் வாழ -அரங்க நகர் வாழ -மணவாள மா முனியே -நீர் நூற்று ஆண்டு இரும்–ஒளிக்கு நிதி போன்ற சிறந்த தலமான செல்வமுள்ள ஸ்ரீரங்க நகரம் விளங்க வேண்டும்.–அதில் ஒளிகளுக்கெல்லாம் ஒளி(யான எம்பெருமான்) க்ஷேமமாக வாழ வேண்டும்.–ஆசார்யர்களுக்கு ஆசார்யரான மணவாள மாமுனிகள் காலந்தோறும் மங்களங்களைச் செய்து கொண்டு அவருக்கு ஓர் ஒளியை அளிக்க வேண்டும்.-என்று இறே மங்களா ஸாஸனம் பண்ணி அருளிற்று )
செல்வம் சிறக்கப் பெற்றதாய் பரம பதத்தில் உள்ள ஒளி போன்ற ஒளிக்கு இருப்பிடமானதாய் இதற்கு மேல் இல்லை என்னும்படி உயர்ந்த முதல் திவ்ய தேசமான ஸ்ரீ ரெங்க க்ஷேத்ரமானது தீது ஏதும் இன்றிச் சிறந்து விளங்கிடுக அந்த ஸ்ரீ ரெங்கத்தில் மண் மகளுக்கும் மலர் மகளுக்கும் மணவாளனாய் -அளவிடற்கு அரிய ஆனந்தத்தை உடையவனாக மனம் மொழிக்கு எட்டாத ஒரு பரம புருஷன் க்ஷேமம் யுடையவனாக எழுந்து அருளுக-அழகிய மணவாளனை உள்ளிட்ட பல ஆச்சார்யர்கட்க்கு ஆச்சார்யரான மணவாள மா முனிகள் எல்லாக் காலத்திலும் மங்களங்களை வேண்டுகின்றவராய் அப் பரம புருஷனுக்கு பரம பதத்தில் உள்ளது போன்ற ஐஸ்வர்யத்தைத் தந்து அருள்க என்றும் கூறியுள்ள படி மணவாள மா முனிகள் மங்களா சாசனம் செய்து அருளினார் ––பெரியோர்களோடும் பெரிய பெருமாளோடும் பெரிய கோயில் ஆழ்வார் வேணும் என்றாய்த்து பெரிய ஜீயர் மங்களா ஸாஸனம் பண்ணும் படி –-அத்தாலே இறே அபி விருத்தமாய்ச் செல்லுகிறது-அது தான் திருமால் கோயிலான திருவாளன் திருப்பதி -பெரியாழ்வார் -4-8-10-இறே
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ –
தொண்டர்க்கு அமுதாய் -திருவாய் -9-4-9-
திருமாலவன் கவியான -திரு விருத்தம் -48-திருவாய் மொழியை-அஞ்சு வியாக்யானத்துடனே வளர்த்துப் போருமவராகையாலே திருவாய் மொழி வாழும்படிக்கும்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரமும் -திருவாய் -7-2-11-என்னும்படி
பெரிய பெருமாள் விஷயமான திருவாய் மொழிப் பெருக்கத்தோடே வாழ வேணும் என்று-சடகோபன் இட்டத் தமிழ் பா இசை வாழியே-இயல் சாற்று – -என்றாய்த்து திருவாய் மொழியை வாழ்த்துவது –
கவிப்பா அமுதின் கறியின் சுவையொடு கண்ணன் உண்ணக் குவிப்பான் சடகோபன் -சட கோபர் அந்தாதி -7–பண் இசைகளாகிய கறியுடன் -மிகுதியாகப் பரிமாறி -என்றும்
வகுள பூஷண வாக் அம்ருத அஸநம் -என்றும் சொல்லுகையாலே-இருவருக்கும்-எம்பெருமானுக்கும் அவன் அடியார்களுக்கும் – ஜீவனமாய் இருக்கும் -தொண்டர்க்கு அமுது அன்றோ–இப்படி-ஸ்வ -பர -ஜீவன மானத்தை வர்த்திப்பிக்க வேணும் இறே இவருக்கு–திருமால் அடியார்களைத் திருவாய் மொழியை முன்னிட்டு இறே பூசிப்பது-இப்படி பூசிக்கப் பட்ட மாதவன் பூதங்களான ஸ்ரீ வைஷ்ணவர்கள் மண் மேல் பண் தான் பாடி நின்று ஆடப் பரந்து திரிகையாலே -திருவாய் -5-2-2–பாத தூளி படுதலால் இவ் வுலகம் பாக்யம் செய்ததே –பெரியாழ்வார் -4-1-6-என்று-பாத ஸஞ்சார பூதமாய் யாய்த்து அவர்களை யுஜ்ஜீவிப்பது –
மணவாள மா முனியே
லோகத்துக்கு எல்லாம் மா லோகம் போலே இருக்கிற அழகிய மணவாள ஜீயரே-அடியார் குல விளக்காய் அரங்க மங்கள தீபமாய் இராமானுச முனி செய்ய குன்றில் ஏற்றிய தீபமாய் அத்தாலே தமிழ் வேதம் துலங்கப் பண்ணினவராகையாலே
இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
பல்லாண்டு பல்லாண்டு -என்றபடி
நூற்றாண்டு என்று மனுஷ்ய ஆயுஸ்ஸை இட்டு உப லஷித்து
ஜீவேம சரதஸ் சதம் -நூற்று ஆண்டுகள் வாழ்வேனாக – என்றும்
பர சதம் சமா -பல நூற்று ஆண்டுகள் -என்றும்
கால தத்வம் உள்ளதனையும் வாழ்ந்து அருள வேணும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறது
அகல்பதத் பவது –அஸ்மத் குருர் வர வர ப்ரவரோ முனீ நாம் அந்தஸ் தமஸ் சமய தந்தத்வஸாம் யதீய த்யான பங்கஜ தளாரிண பாத யுக்மம் -என்னக் கடவது இறே
அடியார்கள் வாழ
செய்ய தாமரைத் தாளிணை வாழியே -என்று தேவரீரை சூழ்ந்து இருந்து ஏத்துமவர்களாய்
பரி ஜநைஸ் ஸஹ வாஸிநம் -அடியார்களுடன் கூடி இருக்க வேணும் -என்று தேவர் விரும்பிப் போரும் வர வர முனி ப்ருத்யர்கள் வாழ்வாராக
அரங்க நகர் வாழ
திருவரங்கம் திருப்பதியை இருப்பாகப் பெற்றோம் -ஆர்த்தி பிரபந்தம் -55-என்றார் அன்றோ
ரங்கே தாமநி ஸூகா ஸீநம் -பூர்வ தினசரி 1-என்னும்படியாக–தேவர் இனிதாக எழுந்து அருளி இருக்கும் அரங்க நகரானதும் வாழ்வதாக
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ்க
மாறன் கலை உணவாகப் பெற்றோம் –ஆர்த்தி பிரபந்தம் -55-என்றபடி-தேவரீருக்குப் போக்யமாய்
வேத நூல் என்னும்படியான திருவாய் மொழி வைதிக பரிக்ரஹத்தோடே வாழ்வதாக
கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ
மண்ணுலகில் மனிசர் உய்ய -பெருமாள் திரு மொழி -1-10—பார் உலகைப் பொன் உலகு ஆக்க வல்லோம் என்று பூதலம் எங்கும் பொன்னுலகு ஆக்கின படி வாழ்வதாக
அடியார்கள் நடுவும்
ஆழ்வார்கள் நடுவும்
திருவாய் மொழியின் இன்னிசை மன்னும் இடம் தொறும் எழுந்து அருளி இருக்கிற மணவாள மா முனியே—இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்–எனையோர்-என்னைப் போன்றவர்கள் – உஜ்ஜீவிக்கவுமாம்
ஜயது யஸஸா துங்கம் ரங்கம் ஜக த்ரய மங்களம்
ஜயது ஸூ சிரம் தஸ்மிந் பூமா ரமா மணி பூஷணம்
வரத குருணா சார்த்தம் தஸ்மை ஸூபாந் யபி வர்த்தயன்
வர வர முநி ஸ்ரீ மான் ராமானுஜோ ஜயது ஷிதவ் –ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் –104-
உயர்ந்த கீர்த்தியை யுடைய மூவுலகங்களுக்கு மங்களகரமான ஸ்ரீரங்க திவ்ய தேசம் ஜய சீலமாக இருக்கட்டும்.–வெகு காலமாக அங்கே பூ தேவி ஸ்ரீ தேவிகளுக்கு ஆபரணம் போன்ற பெருமாளும் ஜய சீலமாக இருக்கட்டும். -வரத குருவுடன் அங்கே சுபங்களை வ்ருத்தி செய்து கொண்டு ஸ்ரீமானான ராமாநுஜ முநியும் மணவாள மாமுநியும் வாழட்டும்.
கீர்த்தியினால் உயர்ந்து உலகம் மூன்றுக்கும் மங்களம் தரும் அணியான ஸ்ரீ ரெங்க நகரம் குறை ஏதும் இன்றி விளங்கிடுக–அந்த திவ்ய நகரத்தில் ஸ்ரீ மஹா லஷ்மிக்கு ரத்ன ஆபரணமாய் மிகப் பெருமை படைத்த ஸ்ரீ ரெங்க நாதப்பெருமாள் வெகுகாலம் குறை ஒன்றும் இல்லாமல் விளங்கிடுக-அத்தகைய பெருமாளுக்கு அநேக மங்களங்களை கோயில் அண்ணனோடே கூடி ஆசா சனம் செய்து வளர்த்துக் கொண்டு மங்களா ஸாஸனம் என்கிற செல்வத்தை மிகப் படைத்த ராமானுஜரோடே அபின்னரான -வேறு படாத -மணவாள மா முனிகள் பூமியில் இறையும் குறையின்றி வாழ்ந்திடுக–என்றாய்த்து தேசமும் தேசிகர்களும் வாழ்த்திப் போருவைத்து —
——————–———————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணண் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply