ஸ்ரீ குருஷேத்ர மஹாத்ம்யம் –

தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே சம வேதா யுயுத்சவ
மாமகா பாண்டவஷ் சைவ கிம் குர்வத ஸஞ்சய-

குரு க்ஷேத்ர கமிஷ்யாமி குரு க்ஷேத்ரே வசாம் யஹம்
அப்யகா காசம் ருத் ஸ்ருஜ்ய ஸர்வ பாபே ப்ரமுச்யதே-

ஸ்ரீ குருஷேத்ரத்தை, தர்ம ஷேத்ரம் (புனித இடம்) என்றும் அழைப்பர். இது இந்தியாவில்அரியானா மாநிலத்தில் குருச்சேத்திர மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் சண்டிகரிலிருந்து 80 கிமீ தொலைவிலும், தில்லியிலிருந்து 100 கிமீ தொலைவிலும் உள்ளது.

பாண்டவர் – கௌரவர் படைகளுக்கு இடையே நடந்த குருச்சேத்திரப் போர் இவ்விடத்தில்தான் நடந்தது. மேலும் குருச்சேத்திரப் போர்க்களத்தில் தான் பகவத் கீதை பிறந்தது.

பாண்டவர்கள் – கௌரவர்களுக்கு முன்னோர் ஆன பரத குலத்தில் பிறந்த குரு எனும் அரசன் பெயரால், இவ்விடத்திற்கு குருச்சேத்திரம் என்று பெயர் பெற்றது என புராணங்கள் கூறுகிறது.

குருச்சேத்திரத்தில் அமைந்த தொன்மை வாய்ந்த புனித பிரம்ம சரோவர் குளம் அமைந்துள்ளது

வாமன புராணம் பரத குல அரசன், குரு என்பவன், சரசுவதி மற்றும் திருஷ்டாவதி நதிக்கரையில் கி. மு., 1900-இல் இந்நகரை அமைத்தான் என்று கூறுகிறது.[1] யக்ஞம்தானம்தவம்வாய்மைதியாகம், மன்னித்தல், கருணை, மனத்தூய்மை, மற்றும் பிரம்மச்சர்யம் போன்ற நற்பண்புகள் கொண்ட அரசன் ”குரு”வின் மேன்மையை பாராட்டி, பகவான் விஷ்ணு அளித்த இரண்டு வரங்களின்படி, இவ்விடத்தில் இறப்பவர்கள் வீடுபேறு அடைவர். இவ்விடம், பல்வேறு காலகட்டங்களில் உத்தரவேதி என்றும், பிரம்மவேதி என்றும் இறுதியில் பரத குல அரசன் ‘குரு’வின் காலத்திலிருந்து குருச்சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

  • பிரம்ம சரோவர் குளக்கரையில் உலகின் மிகப்பெரிய இரதம் அமைந்த இடம்
  • கிருஷ்ணா அருங்காட்சியகம், மகாபாரத காட்சிகள் கொண்ட அருங்காட்சியகம் 
  • பீஷ்ம குண்டம், பீஷ்மர் வீடுபேறு அடைந்த இடம்
  • சோதிசர் அருச்சுனனுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதை அருளிய இடம்
  • பிரம்ம குண்டம், அருச்சுனன் பீஷ்மருக்கு தண்ணீர் தாகம் தீர்க்க, தன் அம்பினால் பூமியை துளைத்து தண்ணீர் உண்டாக்கிய குளம்.
  • குருசேத்திர அறிவியல் அருங்காட்சியகம்
  • கல்பனா சாவ்லா நினைவு கோளரங்கம்
  • பிர்லா மந்திர் 

குருச்சேத்திரப் போர் மகாபாரதக் காவியத்தில் (இதிகாசம்) நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இப்போர் அத்தினாபுரம் அரியணைக்காக பங்காளிகளான கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே குருச்சேத்திரம் என்ற இடத்தில் நடைபெற்றது. இவ்விடம் தற்போதைய ஹரியானா மாநிலத்தில் உள்ளது. இப்போரானது 18 நாட்கள் நடைபெற்றது. போரின் இறுதியில் பாண்டவர்கள் வென்றனர்.

ஒரு அக்குரோணி படை என்பது, காலாட் படை வீரர்கள் 1,09,350, குதிரைகள் 65,610, தேர்கள் 21,870, யாணைகள் 21,870 ஆக மொத்தம் 2,18,700 எண்ணிக்கை கொண்டது. இது போன்று கௌரவர்அணியில் 11 அக்ரோணி படைகளும், பாண்டவர் அணியில் 7 அக்ரோணி படைகளும் இருந்தன். இரு அணிகளில் இருந்த 18 அக்குரோணி படைகளின் மொத்த எண்ணிக்கை 39,36,600 ஆகும்.

படை அமைப்புகளின் (வியூகம) பெயர்கள்:

  1. நாரை வியூகம்
  2. முதலை வியூகம்
  3. ஆமை வியூகம்
  4. திரிசூலம் வியூகம்
  5. சக்கர வியூகம்
  6. பூத்த தாமரைமலர் வியூகம் என்ற பத்ம வியூகம்
  7. கருட வியூகம்
  8. கடல் அலைகள் போன்ற வியூகம்
  9. வான் மண்டல வியூகம்
  10. வைரம் அல்லது வஜ்ராயுத (இடிமுழக்க) போன்ற வியூகம்
  11. பெட்டி அல்லது வண்டி போன்ற வியூகம்
  12. அசுர வியூகம்
  13. தேவ வியூகம்
  14. ஊசி போன்ற வியூகம்
  15. வளைந்த கொம்புகள் போன்ற வியூகம்
  16. பிறை சந்திர வடிவ வியூகம்
  17. பூ மாலை போன்ற வியூகம்

 

  1. பாண்டவர்கள் வெற்றி பெற்ற புண்ணிய பூமி.–பகவத் கீதை பிறந்த பெருமையுடைய தலம்.தீர்த்த விசேஷம் உள்ள இடம். இந்தியாவிலேயே பெரிய குளம் / தீர்த்தம் – ‘பிரமசரஸ்’; 11 ஏக்கர் பரப்பில் மிகப் பரந்துள்ளது.இத்தலத்திற்கு தர்மக்ஷேத்ரம், பிரம்ம க்ஷேத்ரம், ஆர்யாவர்த்தம், உத்தரவேதி முதலிய வேறு பெயர்களுண்டு.

    சரஸ்வதி, திருஷத்வதி ஆகிய நதிகளுக்கு இடையில் இத்தலம் உள்ளது.

    மாபெரும் ரிஷிகளும், மகான்களும் இங்குத் தவம் செய்து வாழ்ந்துள்ளனர்.

    வியாசர் பாரதத்தையும், மனு, மனுஸ்மிருதியையும் இங்கிருந்து தான் எழுதியதாகச் சொல்லப்படுகிறது.

    ததீசி முனிவர் தன் முதுகெலும்பை இந்திரனுக்குத் தர, அதைக் கொண்டு இந்திரன் விருத்திராசூரனைக் கொன்றதும்; பரசுராமர் பீஷ்மர் யுத்தம் நடந்ததும் இத்தலத்தில் தான்.

    குந்தி தேவி வழிபட்ட சிவாலயம் இங்குள்ளது. கருவறையில் சிவலிங்கத்தின் பின்னால் குந்தியின் உருவம் உள்ளது.

    கீதோபதேசம் நடைபெற்ற இடத்தில் பெரிய ஆலமரம் உள்ளது. இதனடியில் உபதேசக் காட்சி பளிங்கில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

    அருச்சுனன் தன் அம்பினால் – பாணத்தால் உண்டாக்கிய தீர்த்தக் கிணறு – ‘பாண கங்கா’ உள்ளது.

  2. பீஷ்ம பர்வம்

    குருச்சேத்திரப் போர்

    குருச்சேத்திரப் போரில் முதல் பத்து நாட்கள் கௌரவர்களின் தலைமைப் படைத்தலைவராக இருந்து பீஷ்மர் நடத்திய போர்கள் முதல் அவர் அம்புப் படுக்கையில் விழுந்தது வரை இது விவரிக்கிறது. பீஷ்மரின் ஆணைப்படி, கர்ணன் முதல் பத்துநாள் போரில் கலந்து கொள்ளவில்லை.

    இப்பர்வத்தில் பகவத் கீதை ஸ்ரீகிருஷ்ணரால் அருச்சுனனுக்கு அருளப்பட்டது.

    போர் நாள் 1

    போரில் பாண்டவர் படைகள் அபிமன்யுவால் காக்கப்பட்டும், சாந்தனு– கங்கையின் மகன் பீஷ்மரின் அம்புகளால் பலத்த சேதமடைந்தது. விராடனின் மகன்களான உத்தரனும், சுவேதனும், சல்லியனாலும், பீஷ்மராலும் கொல்லப்படுகின்றனர்.

    போர் நாள் 2

    பாண்டவர் படைகள் முதல் நாள் போரில் படுதோல்வி அடைந்ததை சரிகட்ட, இரண்டாம் நாள் போரில் பரசுராமரின் மாணவரான பீஷ்மரைக் கொல்ல அணி வகுத்தனர். ஆனால் கௌரவர் படைகள் பீஷ்மரைக் காத்து நின்று போரிட்டது. ஆனால் அருச்சுனன் அதையும் மீறி பீஷ்மரைக் கொல்ல கடும் போராட்டம் நடத்தினான். துரோணர், பாண்டவ படைகளின் தலைமைப் படைத் தலைவனான திருட்டத்துயுமனனை அம்புகளால் துளைத்து விட்டார். எனவே வீமன் படுகாயமடைந்த அவனை போர்க் களத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்று விட்டான். வீமனைத் தாக்கிய கலிங்க நாட்டுப் படைகளை வீமன் நசுக்கி விட்டான். பீஷ்மரின் தேரோட்டியை சாத்தியகி கொன்றான். ஆனால் தேர்க் குதிரைகள் பீஷ்மரைப் போர்க்களத்திலிருந்து தனியே அழைத்துச் சென்றது. இரண்டாம் நாள் போரின் இறுதியில் கௌரவர் படைகளுக்குப் பெருத்த இழப்பு ஏற்பட்டது.

    போர் நாள் 3

    பீஷ்மர் தனது படைகளைக் கருட வடிவத்தில் வியூகம் அமைத்தார். பாண்டவர்கள் பிறைச்சந்திர வடிவத்தில் தங்கள் படைகளை வியூகம் அமைத்தனர். அபிமன்யுவும் சாத்தியகியும் சேர்ந்து, சகுனியின் காந்தார நாட்டுப்படைகளைத் தாக்கி வென்றனர். பீமனால் அவன் மகன் கடோற்கஜன்னும் சேர்ந்து துரியோதனனுடன் போரிட்டு, அவனைத் தாக்கியதால் தேரில் பலத்த காயமடைந்து வீழ்ந்தான். அதனால் அவன் போர்களத்திலிருந்து வெளியே சென்றதால், அவன் படைவீரர்கள் சிதறி ஓடினர். சிதறி ஓடிய கௌரவப்படைகளை மீண்டும் பீஷ்மர் ஒன்று சேர்த்து, துரியோதனனுடன் போர்க்களத்திற்கு வந்தார். தோல்வியின் காரணமாக துரியோதனன், பீஷ்மரை மிகவும் கடிந்து கொண்டான். இதனால் கோபம் கொண்ட பீஷ்மர் தன் அம்புகளால், பாண்டவர் படைகளைச் சிதறடித்தார். அருச்சுனன் பீஷ்மருடன் போரிட்டாலும், பாண்டவர் படைகளுக்குப் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டது.

    போர் நாள் 4

    துரியோதனனின் எட்டு சகோதரர்க, பீமனால் கொல்லப்பட்டனர். இதைக் கேட்டு ஆத்திரமுற்ற துரியோதனன், பீஷ்மரிடம் சென்று பாண்டவப் படைகளை எவ்வாறு வெல்லப் போகிறீர்கள் எனக் கடுமையாக கேட்டான். அதற்கு பீஷ்மர், பாண்டவர் பக்கம் தர்மம் இருப்பதால் அவர்களை வெல்ல இயலாது, அதனால் அவர்களுடன் சமாதானம் செய்து கொள் என்று அறிவுறுத்தினார். ஆனால் துரியோதன்ன் அவரது அறிவுரையைப் புறந்தள்ளிச் சென்றான்.

    போர் நாள் 5 முதல் 9 முடிய

    ஐந்தாம் நாள் போரில் பெரும்பாலான பாண்டவப் படைகள் பீஷ்மரின் அம்பு மழையால் அழிந்தன. சாத்தியகியை, துரோணரிடமிருந்து வீமன் காப்பாற்றினான். அருச்சுனன், கௌரவர் படைகளைக் காண்டீபம் எனும் வில்லால் அம்பு மழை பொழிந்து கொன்றான். துரோணர் பாண்டவப் படைகளை சிதறடித்தார். இரண்டு படைகளின் வியூகங்கள் உடைபட்டு போர்வீரர்கள் சிதறினர். அருச்சுனன் மகன் கௌரவர்களால் கொல்லப்பட்டான். துரியோதனனின் எட்டு தம்பியர்கள் வீமனால் கொல்லப்பட்டனர். பீஷ்மரைப் போரில் வெல்ல முடியாத காரணத்தினால், அருச்சுனன் மீது கிருஷ்ணன் கோபம் கொண்டார். எனவே பீஷ்மரைக் கொல்ல சிகண்டியைப், போர்க்களத்தில் பீஷ்மருக்கு எதிராக நிறுத்திப் போரிட கிருஷ்ணன் ஆலோசனை கூறினார்.

    போர் நாள் 10
    அம்புப் படுக்கையில் பீஷ்மர்

    பீஷ்மரின் அம்புகள், பாண்டவப் படைகளுக்குப் பெருத்த அழிவை ஏற்படுத்தின. பீஷ்மர் பெண்களுடனும், ஆண்மையற்றவர்களுடனும் போரிடுவதில்லை என்று சபதம் செய்துள்ளதைச் சாதகமாக பயன்படுத்தி, பீஷ்மரைப் போரில் வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான பாண்டவப்படைகள், கிருஷ்ணரின் ஆலோசனையின்படி சிகண்டியை பீஷ்மருக்கு எதிராகப் போரிட போர்களத்திற்கு அனுப்பினர். பீஷ்மர், போர்க்களத்தில் தனக்கு எதிராக நிற்கும் சிகண்டியை பார்த்த உடன், சிகண்டியுடன் போரிடாது தனது போர்க்கருவிகளை கீழே போட்டு விட்டார். இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சிகண்டியின் பின் இருந்து, அருச்சுனன் தனது அம்புமழையால் பீஷ்மரின் உடலை சல்லடையாக துளைத்தெடுத்து, அம்புப் படுக்கையில் கிடத்தினான்.

    பீஷ்மரின் தந்தை சாந்தனு பீஷ்மருக்கு இச்சை மரணம் (“Ichcha Mrityu” (self wished death) என்ற விரும்பும்போது இறக்கலாம் எனும் வரத்தை அளித்த காரணத்தினால், பீஷ்மர் குருச்சேத்திரப் போர் முடிந்தபின், உத்தராயனம் முதல் நாளில் தன் விருப்பப்படி உயிர் நீத்தார். இறப்பதற்கு முன் அரச நீதி மற்றும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாண்டவர்களுக்கு அருளினார் பீஷ்மர்.

    துரோண பர்வம

    பகதத்தனை அருச்சுனன் வீழ்த்துதல்

    துரோணர் குருச்சேத்திரப்போரில் ஐந்து நாட்கள் கௌரவர்களின் படையின் தலைமைப் படைத்தலைவராக இருந்து போர் தொடர்வதை இப் பர்வம் விவரிக்கின்றது. போரைப் பொறுத்தவரை இதுவே முக்கியமான பர்வமாகும். இரு பக்கங்களையும் சேர்ந்த பெரிய வீரர்கள் பலர் இப் பர்வத்தின் முடிவில் இறந்துவிடுகின்றனர்.

    போர் நாள் 11

    குந்தியின் மகன் கர்ணன் முதன்முதலாக குருச்சேத்திரப் போரில் இறங்குகிறான். தருமனைப் போரில் உயிருடன் போர்க்கைதியாகப் பிடித்து வைத்துக் கொண்டால், பாண்டவர்கள் மீண்டும் அடிமையாகி விடுவார்கள் என்றும், குருச்சேத்திரப் போரும் முடிவுக்கு வந்துவிடும் என்று சகுனி துரியோதனனுக்கு ஆலோசனை கூறினான். தருமரைப் போரில் உயிருடன் பிடிக்கும் இத்திட்டம் துரோணரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே துரோணர் தருமனைக் கடுமையாக எதிர்த்து அவன் வில்லையும் மற்ற ஆயுதங்களையும் அழித்தார். தருமனைக் காக்கவந்த அருச்சுனனையும் அம்பு மழைகளால் துளைத்தெடுத்தார்.

    போர் நாள் 12

    தருமரைக் கையோடு பிடிக்கத் தடையாக இருந்த அருச்சுனனைத் தடுத்து நிறுத்தி போர்செய்ய, கௌரவர் அணியில் இருந்த திரிகர்த்த நாட்டரசன் சுசர்மன், அவன் சகோதரர்கள் மூவர் மற்றும் அவர் மகன்கள் 35 பேர்கள் ஒன்று சேர்ந்து அருச்சுனன் மீது தொடுத்த கடுமையான போரில், அருச்சுனன் அவர்களைத் தனது காண்டீபம் எனும் வில்லைக் கொண்டு அம்புகள் தொடுத்துக் கொன்றான்.

    போர் நாள் 13
    அபிமன்யு சக்கர வியூகத்தை உடைத்து உள் நுழைதல்.

    கௌரவப்படைகளைச் சக்கர வடிவில் அமைத்தார் துரோணர். பகதத்தன் தனது ஆயிரக்கணக்கான வலிமை மிக்க யானைப்படைகளுடன், சுப்ரதீபம் எனும் யானையில் அமர்ந்து அருச்சுனனுடன் கடும் போர் புரிந்து கொண்டிருந்தான்.

    துரோணரின் சக்கர வியூகத்தை அபிமன்யு உடைத்து உட்புகுந்து, கௌரவர் படைகளுக்குப் பெரும் அழிவை உண்டாக்கினான். அபிமன்யு, துரியோதனனின் மகன் இலட்சுமணகுமாரனைப் போரில் கொன்றான். எனவே ஆத்திரமுற்ற துரியோதனன், அபிமன்யுவைக் கொல்ல தனது படைத்தலைவர்களுக்கு ஆணையிட்டான். அதன்படி ஜயத்திரதன்கர்ணன்துச்சாதனன் போன்ற கௌரவப் படைத்தலைவர்கள் ஒரே நேரத்தில் அபிமன்யுவைச் சுற்றி வளைத்து கடும் தாக்குதல் தொடுத்துக் கொன்றனர். அபிமன்யுவின் மரணத்திற்குக் காரணமான ஜயத்திரதனை அடுத்த நாள் போரில் சூரியன் மறைவதற்குள் கொல்வேன் என்றும், அவ்வாறு ஜயத்திரதனைக் கொல்ல இயலவில்லை எனில் தீக்குளித்து இறப்பேன் என அருச்சுனன் சபதம் எடுத்தான்.

    போர் நாள் 14

    அருச்சுனன் ஜயத்திரதனை கொல்தல்

    அருச்சுனனின் கடும் தாக்குதலிருந்து ஜயத்திரதனைப் பாதுகாக்க, ஒரு அக்ரோணி படையணியைத் (1,09,350 படைகள்) துரியோதனன் நிறுத்தி வைத்தான். அருச்சுனன், தன்னை எதிர்த்த பலம் மிக்க கௌரவப் படைத்தலைவர்களுடன் போராடிக் கொண்டே, ஜயத்திரதன் இருக்கும் இடம் அடைந்து, கதிரவன் மறையும் சிறிது நேரத்திற்கு முன்னரே அவனைத் தனது கூரிய அம்புகளால் கொன்று தனது சபதத்தை நிறைவேற்றிக் கொண்டான்.

    கர்ணன் கடோற்கஜனை கொல்தல்

    14-ஆம் நாள் போர் இரவிலும் தொடர்ந்தது. பீமனின் மகன் கடோற்கஜன், இரவுப்போரில் இலட்சக்கணக்கான கௌரவப் படைகளை அழித்தான். கடோற்கஜனின் தாக்குதலிருந்து கௌரவப்படைகளைக் காக்க, கர்ணன் தனக்கு இந்திரன் வழங்கிய சக்தி ஆயுதத்தை கடோற்கஜன் மீது ஏவிக் கொன்றான்.

    போர் நாள் 15

    துரோணர், பாஞ்சால நாட்டரசன் துருபதன் மற்றும் விராட நாட்டரசன் விராடன் ஆகியவர்களைப் போரில் கொன்றார். துரோணரைத் தந்திரமாக கொல்ல முடியுமோ தவிர, அவருடன் போரிட்டு கொல்ல முடியாது என்று உணர்ந்த கிருஷ்ணர், துரோணர் தன் மகன் அசுவத்தாமன் மீது கொண்டுள்ள அளவுகடந்த பாசத்தை மனதில் கொண்டு, பீமனைக் கூப்பிட்டு அசுவத்தாமன் என்ற பெயருடைய யானையைக் கொல்ல என ஆணையிட்டார். பீமனும் அவ்வாறே அசுவத்தாமன் எனும் பெயருடைய ஒரு யானையைக் கொன்றான். கிருஷ்ணர், பின் தருமனிடம், துரோணரின் முன் சென்று அசுவத்தாமன் கொல்லப்பட்டது என்று கூறுமாறு ஆலோசனை கூறினார். முதலில் இதை மறுத்த தருமன் பின் ஏற்றுக் கொண்டு, துரோணர் முன் தனது தேரை நிறுத்தி, அசுவத்தாமன் யானை போரில் இறந்தது விட்டது எனக் கூவினார். ஆனால் ”யானை” என்ற வார்த்தையை மட்டும் தருமர் மிகமெதுவாக கூறியதைத் துரோணர் கேட்கவில்லை. அசுவத்தாமன் போரில் இறந்து விட்டான் என்பதைத் தருமர் மூலம் தவறாக அறிந்த துரோணர் துக்க மேலீட்டால் தனது கை வில்லை கீழே போட்டுவிட்டு, தேரில் அமர்ந்து புத்திர சோகத்தால் புலம்பிக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் திருட்டத்துயும்னன் துரோணர் மீது அம்புகளை மழை போல் செலுத்திக் கொன்றான். 15-ஆம் நாள் போரின் இறுதியில் துரியோதனனின் தம்பிமார்களில் துச்சாதனன் தவிர 98 பேர்கள் வீமனால் கொல்லப்பட்டிருந்தனர்.

    15-ஆம் நாள் போரின் இரவில், குந்தி, கர்ணனை இரகசியமாகச் சந்தித்து அருச்சுனனைத் தவிர மற்ற பாண்டவர்கள் மீது அம்புகள் செலுத்துவதில்லை என்றும், நாகபாணத்தை அருச்சுனன் மீது ஒரு முறைக்கு மேல் செலுத்துவதில்லை என்றும் இரண்டு வரங்களைக் கேட்டுப் பெற்றாள்.

    கர்ண பர்வம்[தொகு]

    போர் நாள் 16

    துரோணரின் மறைவுக்குப் பின் 16-ஆம் போரில் கௌரவர்களின் தலைமைப் படைத்தலைவராக கர்ணன் நியமிக்கப்பட்டான்.[7] கர்ணனின் தேரை சல்லியன் ஓட்டினார். கர்ணன் போரில் இலட்சக்கணக்கான பாண்டவப்படைகளைக் கொன்றான். பாண்டவப்படைகளைக் காக்க, பல படைத்தலைவர்கள் கர்ணனைச் சுற்றி வளைத்து கடுமையாகத் தாக்கினார்கள். ஆனால் கர்ணன் அவர்களைத் திருப்பித் தாக்கி போர்களத்திலிருந்து ஓடஒட விரட்டி அடித்தான். பின் அருச்சுனன் தனது கூர்மையான அம்புகளால் கர்ணனின் தாக்குதலைத் தடுத்து நிறுத்தினான்.

    பீமன், துச்சாதனனின் நெஞ்சை பிளந்து குருதி குடிக்கும் காட்சி

    அதே நாளில், கதாயுதப் போரில் வீமன் துச்சாதனனின் வலது கையை முறித்து, நெஞ்சைப் பிளந்து, குருதியை குடித்து, பின் அவன் நெஞ்சத்து குருதியை கையில் ஏந்தி, திரெளபதியின் முடிக்காத முடியில் தோய்த்து, திரெளபதியின் சபதத்தை நிறைவேற்றினான். தன் தம்பிமார்கள் பலரை வீமன் கதாயுதத்தால் அடித்து கொன்ற போதிலும் துச்சாதனனின் கோரமரணத்தை நினைத்து புலம்பித் தவித்தான் துரியோதனன்.

    போர் நாள் 17

    கர்ணன் – அருச்சுனன் போர்

    கர்ணன், தருமரையும் சகாதேவனையும் போரில் வென்றாலும், தன் தாய் குந்திக்கு வழங்கிய வரத்தின்படி, கொல்லாமல் விட்டு விட்டான். ஆயிரக்கணக்கான பாண்டவப்படைகளைத் தனது கூரிய அம்புகளால் கொன்று பின் அருச்சுனனைக் கொல்ல அம்பு மழை பொழிந்து கடுமையாக போரிட்டான்.

    ஒரு நேரத்தில், அருச்சுனனைக் கொல்ல அவனின் கழுத்தைக் குறி வைத்து நாகபாணத்தை ஏவ முற்படும்போது சல்லியன், அருச்சுனனின் நெஞ்சைக் குறிவைத்து நாகபாணத்தைத் தொடுக்குமாறு கூறினார். ஆனால் சல்லியனின் ஆலோசனையை ஏற்காத கர்ணன், அருச்சுனனின் கழுத்துக்குக் குறிவைத்து நாகபாணத்தை ஏவினான். அப்போது பகவான் கிருஷ்ணர், அருச்சுனனின் தேரை ஒரு அடி கீழே அழுத்தினார். அருச்சனனின் தேர் பூமிக்குக் கீழ் ஒரு அடி இறங்கியது. அதனால் கர்ணன் ஏவிய நாகபாணம், அருச்சுனனின் கழுத்தை தாக்காது, அவனின் தலைக்கவசத்தைத் தாக்கியதால், அருச்சுனனின் தலைக்கவசம் மட்டுமே கீழே விழுந்தது. கிருஷ்ணரின் போர்த் தந்திரத்தால் அருச்சுனன் உயிர் பிழைத்தான்.

    போரின் ஒரு கட்டத்தில் கர்ணனின் தேர்ச்சக்கரம் சகதியில் மாட்டிக் கொண்டது. கர்ணன் தேரைச் சகதியில் இருந்து மீட்கும் நேரத்தில், கிருஷ்ணர் அருச்சுனனை கர்ணன் மீது அம்புகள் ஏவச் சொன்னார். இந்திரன் முன்பே கர்ணனின் கவச குண்டலங்கள் தானமாகப் பெற்றுக் கொண்டபடியால், தெய்வீகக் கவசம் இல்லாத கர்ணன்மீது செலுத்தப்பட்ட அருச்சுனனின் கூரிய அம்புகள் கர்ணனின் நெஞ்சைச் சல்லடையாக துளைத்தன. அதனால் கர்ணன் போரில் மடிந்தான்.

    சல்லிய பர்வம்[தொகு]

    போர் நாள் 18

    பதினெட்டாம் நாள் போரில் கௌரவர் படைத்தலைவராக சல்லியன் தலைமை தாங்கினான்.[8] இப்போரில் சகாதேவன் சகுனியையும் அவன் மகன் உல்லூகனையும் கொன்றான். தருமர் சல்லியனை தன் ஈட்டியால் கொன்றார். பதினெட்டாம்நாள் போர் முற்பகலிலேயே முடிந்தது.

    சௌப்திக பர்வம்[தொகு]

    வீமன் – துரியோதனன் கதாயுதப் போர்

    தன் படையின் தோல்வியை உணர்ந்த துரியோதனன், போர்க்களத்திலிருந்து ஓடி சரசுவதி ஆற்றின் அருகில் இருந்த சமந்தபஞ்சகம் எனும் குளத்தில் மூழ்கி ஒளிந்து கொண்டான். பாண்டவர்கள் துரியோதனனைத் தேடி கண்டுபிடித்தனர். அப்போது தீர்த்த யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த பலராமன் முன்னிலையில் பீமனுக்கும் துரியோதனனுக்கும் இடையே மிகக் கடுமையான கதாயுதப் போர் நடந்தது. போரின் இறுதியில் பீமன் கதாயுதப் போரின் விதிமுறைகளை மீறி துரியோதனனின் இரண்டு தொடைகளிலும் உயிர் போகும்படி கடுமையாகப் பலமுறை அடித்தான். அதனால் துரியோதனன், தொடைகள் ஒடிந்து நசுங்கி குற்றுயிறும் குலையுறுமாக வீழ்ந்து மரணத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தான். பலராமன் வீமனின் கதாயுதப் போர் விதிமீறல்கள் குறித்து கடிந்து கொண்டார்.

    பதினெட்டாம் நாள் போரின் இரவில், துரியோதனனின் உயிர் ஊசாலாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், அசுவத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மன் துரியோதனனைத் தேடி வந்தனர். துரியோதனனின் துயர நிலையைக் கண்டு கண்கலங்கிய அசுவத்தாமன், பாண்டவர்களைக் கொன்று பழி தீர்ப்பேன் என்று சபதமிட்டு, கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியவர்களுடன் அன்றைய நடு இரவில் பாண்டவர்களின் போர்ப் பாசறையில் நுழைந்து, அங்கு உறங்கிக் கொண்டிருந்த உபபாண்டவர்கள் (திரெளபதிக்கும்-ஐந்து பாண்டவர்களுக்கும் பிறந்தவர்கள்), திருட்டத்துயும்னன்சிகண்டி, மற்றும் உதாமன்யு மற்றும் அனைத்துப் படைவீரர்களையும் கொன்றான். இந்த நடுஇரவுப் படுகொலையில் தப்பியவர்கள் பாண்டவர் ஐவர், சாத்தியகியுயுத்சு, மற்றும் கிருஷ்ணர் மட்டுமே.[9]

    குருச்சேத்திரப் போரின் இறுதியில் எஞ்சியவர்கள்[தொகு]

    கௌரவர் தரப்பில் கிருபர்அசுவத்தாமன்கிருதவர்மன்கர்ணனின் மகன் விருச்சகேது ஆகிய நால்வர் மட்டுமே போரின் இறுதியில் உயிருடன் எஞ்சினர்.

    பாண்டவர் தரப்பில் ஐந்து பாண்டவர்கள், ஸ்ரீகிருஷ்ணர்சாத்தியகி மற்றும் யுயுத்சு ஆகிய எட்டு பேர்கள் மட்டும் உயிருடன் எஞ்சினர். போரில் ஈடுபட்ட மற்ற அனைத்து மன்னர்கள், படைத்தலைவர்கள் மற்றும் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.

    குருச்சேத்திரப் போருக்குப் பின்[தொகு]

    அத்தினாபுரத்தை தலைநகராகக் கொண்ட குரு நாடும்இந்திரப்பிரஸ்தமும் ஒன்றிணைக்கப்பட்டது. அத்தினாபுரத்தின் மகுடத்தை தருமன் அணிந்து குரு நாட்டின் மன்னரானர். திருதராஷ்டிரன் மகன் யுயுத்சு, அத்தினாபுரத்திற்கு அடங்கிய இந்திரப்பிரஸ்தம் நாட்டின் மன்னராக நியமிக்கப்பட்டான். கர்ணன் மகன் விருச்சகேது அருச்சுனனின் அரவணைப்பில் இருந்தான்.

    துரோணர் வசமிருந்த பாஞ்சால நாட்டின் பாதிப்பகுதி, மீண்டும் பாஞ்சாலர்களுக்கே திருப்பி வழங்கப்பட்டது.

    அங்க நாடு, சேதி நாடு, காந்தார நாடு, கலிங்க நாடு, ஆந்திர நாடு, கோசல நாடு, மதுரா, மகதம், மத்ஸ்ய நாடு, காஷ்மீரம், பாஞ்சாலம், சிந்து நாடு, திரிகர்த்த நாடு, விராட நாடு மற்றும் இதர நாடுகளின் மன்னர்கள் குருச்சேத்திரப் போரில் வீரமரணம் அடைந்தபடியால், அந்நாடுகளுக்குப் புதிய மன்னர்கள் நியமிக்கப்பட்டனர்.

    திருதராட்டிரன்காந்தாரி மற்றும் குந்தி அத்தினாபுரத்தை விட்டு காடுறை வாழ்வு (வானப்பிரஸ்தம்) மேற்கொண்டனர்.

    தருமன் மற்ற பாண்டவர்களின் துணையுடன் அசுவமேத யாகம் செய்து முடித்தார். அத்தினாபுரத்தை 36 ஆண்டுகள் தருமன் ஆண்ட பின் அருச்சுனன்சுபத்திரை ஆகியவர்களின் பேரனும், அபிமன்யு– உத்தரை இணையரின் மகனுமான பரீட்சித்துவை அத்தினாபுரத்தின் அரசனாக்கினர்.

    பிறகு பாண்டவர்-தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் மற்றும் திரெளபதியுடன் கையிலை நோக்கி தவம் இயற்ற பயணித்தனர். பயணத்தில் தருமன் தவிர மற்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர். தருமனை, எமதர்மராசன் வரவேற்று சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றார்.

    ஹஸ்தினாபுரம் என்பது என்ன. ஹஸ்தி என்றால் எலும்பு, புரம் என்றால் வீடு. எலும்புகளால் கட்டப்பட்ட வீட்டை தான் ஹஸ்தினாபுரம் என்று சொல்லப்படுகிறது.கௌவரவர்களின் அரசனாக துரியோதனனும் அவனின் தம்பிகளையும் மனிதர்களின் மனதில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட துர்குணத்தை குறிக்கிறது. பாண்டவர்கள் ஐந்து பேரையும் அவர்களுக்கு ஒரு மனைவியையும் மனிதனுக்குள் இருக்கும் ஐந்து புலன்களையும் ஒரு சக்தியையும் குறிக்க கூடியது. துர்குணங்கள் ஒரு மனிதனுக்குள் நிறைந்திருக்கும் பொழுது அவனுடைய சக்தி பல வழிகளில் செல்வாகிகொண்டே இருக்குறது. தெய்வ குணங்கள் நோக்கி செல்லும் பொழுது சக்தி பாதுகாக்கிறது. யோகம் செய்யும் பொழுது உடலும் மனமும் ஆடாமலும் அசையாமலும் இருக்க வேண்டும். அப்படி செய்வதற்க்கு பல நிமிடங்கள் முதல் பல மணி நேரம் ஆகும். மனம் நல்ல கருத்துகளை விட தீய கருத்துக்களையும் தீய செயல்களையும் தான் விரும்பும். அந்த மனதை தூய்மை படுத்துவதற்க்கு உடலையும் மனதையும் பழக்க வேண்டும். தவம் செய்யும் பொழுது மனம் தன்னுல் ஆழ்ந்த அனுபவங்களும் சொந்த பந்தங்களும் அவர்களின் நல்ல தீய நினைவலைகள் ஆகிய அனைத்தும் நம்மை தியானம் செய்ய விடாமல் நம்மை எதிர்க்கும். துர்குணம் மீது அதிகம் பற்றிருந்தால் தவம் செய்யும் பொழுது கோபம், காமம், பேராசை போன்ற குணங்களினால் இழுத்து செல்லும்.

மனமே கிருஷ்னன். அவன் உடுத்திய உடைய சற்று ஆய்வு செய்வோம். ஒரு கையில் சங்கும், ஒரு கையில் சக்கரமும், ஒரு கையில் கதையும் மற்றொரு கையில் தாமரையும், வாயில் புல்லாங்குழலையும் வைத்திருப்பார். அவர் உறங்கும் இடம் ஆதிசேசனாகிய சற்பமாகும். மனிதர்களின் ஐந்து புலண்களை பார்ப்போம். கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும், மூக்கால் நுகர்வதும், நாக்கால் சுவைப்பதும் , தோலினால் தொடு உணர்வை அனுபவிப்பது ஆகும். மனம் இந்த ஐந்து புல்ன்-கலால் உள்வாங்கும். சங்கும் காதும் ஒரே மாதிரி இருக்கும். சங்கு ஒலியை குறிப்பிடுகிறது. மூக்கும் கதையும் ஒரேமாதிரி இருக்கும். வாசனையை நுகர்வது. மூக்கிற்க்கும் ஜீவனுக்கும் இடையில் கதாகதம் செய்தால் உள்ளொளி பிறக்கும். சக்கரம் என்பது சுதர்ஷனத்தை குறிப்பதாகும். சுதர்ஷனம் என்பது பார்வை. ஒரே நேரத்தில் தூரத்திலிருக்கும் பொருளையும் அருகிலுள்ள பொருளையும் மிக வேகமாக கண்ணால் உள்வாங்க முடியும். அதனால் சக்கரத்தை ஏவினால் பல தலைகள் ஒரே நேரத்தில் வெட்டிவிடும். இப்படிபட்ட கண்ணை பக்குவபடுத்தவில்லை என்றால் சக்தி நாசமாகி சீக்கிரமாக உடல் அழிந்து விடும். தவம் செய்யும் பொழுது உடல் அழியாது ஆனால் தீவிர தவத்தினால் மனம் உடலின் மீதுள்ள பற்றை விட்டு விடும். சற்பமாகிய ஆதிசேசன் மூச்சுகாற்றை குறிப்பதாகும். அதவாது சுழிமுனையை குறிப்பதாகும். பாம்பு விசத்தை கொடுப்பதா அல்லது அமிர்தத்தை கொடுப்பதா என்பது மனதின் ஆளுமையை பொருத்துள்ளது. தாமரை என்பது ஞானம் அல்லது நெற்றிகண்ணை குறிப்பதாகும். மனதின் மூலம் யோகா செய்யும் முறையை உள்வாங்கி, புலன்-கள்லால் வெளியே செல்லும் மனதை ஜீவன் நோக்கி திருப்பினால் ஞானஒளியை அல்லது உள்ளொளியை பெறலாம்

———————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading