ஸ்ரீ அபங்கம் பிறந்த கதை
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஞானேஸ்வர் மகராஜ் கோயிலில் சுமார் இருபது லட்சம் பேர் கலந்து கொள்ளும்
வாரகரி யாத்திரை ஆண்டுதோறும் நடக்கும். இந்த யாத்திரை தொடங்கிய காலத்தில் இந்த யாத்திரையில்
பங்கேற்ற எளிமையான சாதுக்கள் பாடும் பஜனைப் பாடல்கள் தான் அபங்கம்.
விட்டல் பகவான் குறித்த பாடல்களைப் பாடிய மகான்கள் அபங்கம் என்ற சொல்லுக்கு ஏற்ப மாசற்றவர்கள்.
விட்டல் என்று அறியப்பட்ட, விட்டல் பந்த் குல்கர்னி சிறந்த வேத சாஸ்திரங்களைப் பயின்றவர். திருமணம் ஆனவர்.
இவருக்கு மூன்று மகன்களும் ஒரு பெண்ணும் உண்டு. நிவிர்த்தி, ஞானதேவ், சோபான், முக்தாபாய் என்பது அவர்களுடைய பெயர்கள்.
விட்டலுக்கு சந்நியாசம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டானது.
பண்டிதர்கள் நிறைந்த கிராமத்துக்கு முதலில் சென்றார். சந்நியாசமும் பெற்றார். மணம் முடித்தவர்,
சந்நியாசம் பெற்றதை அவருடைய குருவும் ஊர்ப் பெரியோர்களும் கண்டித்தனர்.
சாஸ்திரத்தில் இதற்கு இடமில்லை என்று சொல்லி, ஊரைவிட்டு அவரைக் குடும்பத்தோடு ஒதுக்கி வைத்தனர். நாட்கள் கடந்தன.
ஊர் மக்களின் ஒத்துழைப்பு இன்றி வாழ முடியாமல் இக்குடும்பம் மிகுந்த துன்பத்தை அனுபவித்தது.
இருந்தாலும், மகன்களும் பெண்ணும் வளர்ந்துவிட்டதால், திருமணம் முடிக்க வேண்டும் என்று
ஊர்ப் பெரியோரிடம் ஒத்துழைப்பு கேட்டார் விட்டல் பந்த் குல்கர்னி.
சந்நியாசி பெற்றவரின் பிள்ளைகள் என்பதால் அவர்கள் மணம் முடிக்கக் கூடாது என்று மக்கள் தடுத்தனர்.
இதைக் கேட்ட குல்கர்னி உடல் நலம் குன்றி இறந்தார். அவரைத் தொடர்ந்து அவருடைய மனைவியும் மறைந்தார்.
அபங் இயற்றிய வாரிசுகள்
சில நாட்கள் கழித்து, சாஸ்திரங்களை அறிந்த பண்டிதர்கள் நிறைந்த கிராமத்துக்குச் சென்று,
இதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா என்பதை அறிந்து வரலாம் என்றும்,
பின்னர் தனது அண்ணா நிவிர்த்திக்கு மணம் முடிக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்தாள் முக்தாபாய்.
சகோதரர்களும் ஒப்புக்கொள்ள அனைவரும் புறப்பட்டார்கள்.
பண்டிதர்கள் திண்ணைதோறும் அமர்ந்து வேதம் சொல்லிக்கொண்டிருந்த ஊருக்கு வந்தார்கள்.
இவர்கள் வருவதைப் பார்த்து, வேதம் சொல்லிக்கொண்டிருந்ததை இடையிலேயே சிலர் நிறுத்திவிட்டார்கள்.
இவர்கள் ஊருக்கு வந்த காரணத்தைக் கேட்டார்கள். நால்வரும் காரணத்தைச் சொல்ல, வேத பண்டிதர்கள் எள்ளி நகையாடினார்கள்.
இதைப் பார்த்து ஆதிபராசக்தி ரூபமான முக்தாபாய் வெகுண்டாள்.
“எனது அண்ணா கூறினால், இதோ இங்கே மேய்ச்சல் முடிந்து கடந்து போகிறதே, அந்த எருமை மாடுகூட வேதம் சொல்லும்” என்றாள்.
“எங்கே சொல்லச் சொல் பார்க்கலாம்” என்றார்கள் அப்பண்டிதர்கள். நிவிர்த்தி கையை அசைக்க எருமை நின்றது,
பண்டிதர்கள் இருக்கும் திசை நோக்கிப் பார்த்தது.
மிக அரிய சாம வேதத்தைக் கானம் செய்தது. இவர்களின் மிக உயர்ந்த பாண்டித்தியத்தைக் கண்டு பண்டிதர்கள் அதிசயித்தார்கள்.
உயர்ந்த ஞானத்தைப் பெற்ற அவர்கள் இப்படியே இருந்துவிடுவதுதான் சமுதாயத்துக்கு நல்லது என்றனர்.
அவர்களும் அப்படியே இருந்து, உயர்ந்த ‘அபங்’ இயற்றிப் பாடி விட்டலைப் போற்றி வந்தனர்.
பொறுமையின் சிகரம்
அபங்கம் பாடியவர்களில் முக்கியமானவர் ஏக்நாத். இவர் மிகுந்த பொறுமைசாலி.
இவரிடம் வரும் விட்டல் பக்தர்களின் சொந்தக் குறைகளைக் கேட்டு அவர்களுக்குச் சமாதானம் கூறுவார்.
அவரது இந்தக் குணத்தை மெச்சி எப்போதும் அவரைச் சுற்றி பக்தர்கள் கூட்டம் இருக்கும்.
இதைக் கண்ட சில பொறாமைக்காரர்கள் அவரைக் கோபம்கொள்ளச் செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டார்கள்.
இதை அறியாத ஏக்நாத் வழக்கம்போல் அன்றும் கோதாவரி ஆற்றில் குளித்துவிட்டு, கரை ஏறி வந்தார்.
அங்கிருந்த பொறாமைக்காரர்கள் இருவரும் அவர் மீது எச்சில் உமிழ்ந்தனர்.
துளியும் கோபப்படாத ஏக்நாத் மீண்டும் கோதாவரியில் இறங்கிக் குளித்தார். இதுபோல 27 முறை நடைபெற்றது.
ஏக்நாத்தும் மீண்டும் மீண்டும் குளித்துவிட்டு வந்தார். அவர் அசரவே இல்லை.
ஆனால், எச்சில் துப்பிய பொறமைக்காரர்களோ அசந்து போனார்கள். “தினமும் காலை மாலை என இருமுறை மட்டுமே குளிப்பேன்.
உங்களால் இன்று 108 முறை குளித்தேன். இல்லாவிட்டால் இந்தச் சிந்தனைகூட எனக்கு வந்திருக்காதே.
உங்களால்தான் இந்தப் புண்ணிய பலன் கிடைத்தது” என்றார் .
விட்டலே செல்வம்
அபங்கம் பாடியவர்களில் பரவலாக அறியப்பட்டவர் பக்த துக்காராம். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்.
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி தன் குரு ராமதாசரிடம் பெரும் மரியாதை கொண்டவர்.
அவர்தான், “உங்கள் பகுதியில் விட்டல் பக்தர் பக்த துக்காராம் இருக்கிறார். அவரைத் தரிசித்தாலே போதுமானது” என்றார் .
நாடு திரும்பிய சிவாஜி தன் தூதர்களை, பக்த துக்காராமின் இருப்பிடத்தையும் நிலைமையையும் அறிந்து வர அனுப்பினார்.
துக்காராம் மிகுந்த ஏழ்மை நிலையில் இருப்பதாகவும், ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படுவதாகவும் கூறினார்கள்.
பெரிய பெரிய தட்டுகளில் நவமணிகளையும், பொன்னையும் பொருளையும், சாசனங்களையும் எடுத்துச் சென்றார்.
அப்போது தனது ஊர்த் திடலில், ஊர் மக்கள் பெரும் திரளாய் அமர்ந்திருக்க,
தன்னை மறந்து ‘அபங்’ பாடிக்கொண்டு இருந்தார் பக்த துக்காராம்.
மன்னர் பரிவாரங்களுடன் வருவதைக் கண்ட மக்கள் அவருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் எழுந்து வழிவிட்டார்கள்.
ஆனால், பீடத்தில் அமர்ந்திருந்த துக்காராம் எழுந்திருக்கவும் இல்லை; வணக்கம் தெரிவிக்கவும் இல்லை.
தொடர்ந்து பஜனை செய்துகொண்டே இருந்தார்.
சத்ரபதி சிவாஜியும் மக்களோடு மக்களாக அமர்ந்து பஜனையில் கலந்துகொண்டார். விட்டல் பஜனை முடிந்தது.
துக்காராமும் எழுந்து கீழே வந்தார். பின்னர், மன்னரை மரியாதை நிமித்தம் வணங்கினார்.
“இறை நாமங்களைக் கொண்ட ‘அபங்’ பாட அமர்ந்துவிட்டால், அது வியாஸ பீடமாகிவிடும்.
வியாஸ பீடத்தில் இருப்பவரே உயர்ந்தவர். அப்பீடத்தில் அமர்ந்திருக்கும் பொழுது வரன்முறைப்படி மன்னரே ஆனாலும்,
மரியாதை செலுத்த முடியாது. எனவே, தற்போது தான் வணக்கம் தெரிவிப்பதாக” கூறினார் துக்காராம்.
பொன், பொருள், தனம், வித்து என்கின்ற சாசனங்கள் தனக்குத் தேவையில்லை என்றும்
அன்றன்றைய உணவைத் தனக்கு அளிப்பவர் விட்டல்தான் என்றும் கூறி துக்காராம் அவற்றைப் பெற மறுத்துவிட்டார்.
சிவாஜியும் தன் குருவின் வார்த்தையை எடுத்துக் கூறி பொருட்களை பெற்றுக்கொள்ளுமாறு கூறினார்.
அதற்கு துக்காராம், சிவாஜியிடம் ஏகாதசி விரதமிருக்குமாறும், துளசி மணிமாலை அணியுமாறும் கூறி,
அதுவே தனக்கு மிகுந்த திருப்தியை அளிக்கும் என்றார்.
அபங்கம் என்றால் குற்றமில்லாதது. பங்கம் இல்லாதது. குற்றமில்லாதது ஆனந்தம்.
சிறு சிறு பாடல்கள் மூலம் இறைவனுடன் பேசுதல் என்றும் இதற்கு பொருள் சொல்லலாம்.
ஒவ்வொரு அபங்கப் பாடலுக்கும் இத்தனை வரிகள்தான் இருக்க வேண்டும் என்று வரைமுறை எதுவும் கிடையாது.
எவ்வளவு நீளமாக வேண்டுமானாலும் இருக்கலாம். சந்தங்கள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும்.
அபங்கங்களை பாடுவதற்கு மிகுந்த சங்கீத ஞானம் வேண்டும் என்பது இல்லை.
மஹாராஷ்டிர மாநிலத்தில் எளிய தொழிலாளிகளும், இந்தப் பாடல்களை பாடித் திளைக்கின்றனர்.
இவர்களுக்கு வேதமோ சாஸ்திரமோ ஏன் சிறிய ஸ்லோகங்களோ கூட தெரியவேண்டாம்.
இந்தப் பாடல்கள் பலவும் அர்ச்சாவதார மூர்த்தியான விட்டல் பற்றியே அமைந்துள்ளன.
நம்மை அவன் வழிநடத்திச் செல்வான் என்ற நம்பிக்கையே இதன் அடிநாதம்.
இந்த பாடல்களை இயற்றியவர்களில் மிகவும் பிரபலமானவர் பக்த துக்காராம்.
இவரைப் போலவே பல சாதுக்கள் அபங்கங்களைப் பாடி இருக்கிறார்கள் என்றாலும் பாண்டுரங்கனின் பக்தர்களின் தலைவர்
எனக் கொண்டாடக் கூடிய உயர்ந்த நிலையில் உள்ளவர் துக்காராம் மஹராஜ்.
இவரது சரித்திரம் ஸ்ரீ பக்த லீலாம்ருதம் என்ற மராட்டிய பக்த விஜய நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவரின் வாழ்க்கை சரிதத்தில் பல சுவாரசியமான சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
அவை அனைத்தையும் அவரது அபங்கங்கள் மூலமாகவே அறிய முடிகிறது.
400 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர் விட்டல் பக்தர் துக்காராம்.
உபதேசம், பிரார்த்தனை, சாதுக்களின் மகிமை மற்றும் நாம பக்தி என்று அபங்கங்கள் நான்கு வகைப்படும்.
இதில் குறிப்பிட்ட தெய்வத்தை மட்டுமே பிரார்த்திக்க வேண்டும் என்ற கட்டளை எதுவும் கிடையாது.
துக்காராம் மஹராஜ் தன் வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் ஆன்மீகக் கருத்துக்களை அபங்கங்களாக எழுதி வைத்துள்ளார்.
சுமார் நான்காயிரம் அபங்கங்கள் எழுதியதாக பக்த லீலாம்ருதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொகுத்து எழுதியவர் மஹீபதி என்ற அறிஞர்.
‘ஆஹீதேணே…..’ என்று தொடங்கும் அபங்கப் பாடலின் கருத்தும்,
அதற்கான சரித்திர நிகழ்வும் துக்காராமை குறித்து அறியச் செய்கிறது.
துக்காராம் மஹராஜ் மிகவும் பிரபலமடைந்த நேரம் அது.
அவரது அபங்கங்களை மக்களெல்லாம் பாடிக்கொண்டு இருந்தார்கள். இவர் சத்ரபதி சிவாஜியின் சமகாலத்தவர்.
சத்ரபதி சிவாஜியின் குரு ராமதாஸர். அவரைக் காண சிவாஜி அவர் வசிக்கும் காட்டிற்குச் செல்வார்.
ஒரே இடத்தில் வசிக்காமல் காட்டில் சுற்றித் திரிந்து கொண்டு இருப்பது ராமதாஸரின் வழக்கம்.
அவரை பார்க்கச் செல்லும் சிவாஜியும் காடுமேடெல்லாம் சுற்றித் திரிந்து ஒரு வழியாகக் கண்டுபிடித்துவிடுவார்.
ஒரு முறை மிகுந்த அலைச்சலுக்குப் பின்னரே அவரால் ராமதாஸரைக் கண்டுபிடிக்க முடிந்தது.
இதையறிந்த அவர் ,‘சாதுக்கள் தரிசனம்தானே வேண்டும். உங்கள் நாட்டிலேயே அதாவது மஹாராஷ்டிரத்திலேயே
துக்காராம் என்று ஒருவர் இருக்கிறார். அவரை கண்டுபிடித்து வணங்கு’ என்றார் ராமதாஸர்.
நாடு திரும்பிய சத்ரபதி சிவாஜி தன் படை வீரர்களையும், ஒற்றர்களையும் அனுப்பி துக்காராம் எங்கு இருக்கிறார்
என்பதைக் கண்டுபிடிக்கச் சொல்கிறார். துக்காராம் புனா அருகில் உள்ள தேஹுவில் இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள்.
நூற்றுக்கணக்கான மக்கள் தேடி வருபவராக இருந்தாலும் துக்காராமின் வறுமை நிலையில் இருப்பதையும் தெரிவிக்கின்றனர்.
இதைக் கேட்ட சிவாஜிக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. ‘ஹரி நாமத்தை ஓயாமல் பாடும் ஒருவர் ஏழ்மையில் இருப்பதா?’ என்று வருந்தினார்.
பதினெட்டு கிராமங்களை துக்காராம் பெயருக்கு சாசனம் எழுதிவைத்தார்.
பொன், பொருள், வைடூரியம் எனக் கூடை, கூடையாக நவமணிகளையும், வண்டி, வண்டியாக நவதான்யங்களையும்,
போக்குவரத்திற்கு குதிரைகளையும், பால் வளத்திற்கு மாடு கன்றுகளையும் சேகரித்துக்கொண்டு
துக்காராமைப் பார்க்கக் கிளம்பி வருகிறார் சத்ரபதி சிவாஜி.
தேஹுவில் துக்காராமின் ஹரி கீர்த்தனம் நடந்துகொண்டு இருக்கிறது.
இந்த இடத்திற்கே சிவாஜி வந்துவிட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுகிறது.
மக்களெல்லாம் அவரைப் பார்த்து எழுந்து நின்று வணங்குகிறார்கள்.
அவருக்கு உரிய மரியாதையைச் செய்த மக்கள், அவர் உள்ளே செல்ல வழிவிட்டு நின்றனர்.
விலகிய கூட்டத்தின் இடையே சென்ற அவர் வியாஸ பீடத்தில் அமர்ந்திருந்த துக்காராமை வணங்கி எதிரே அமர்கிறார்.
மேடையில் அமர்ந்து ஹரி பஜன் செய்தால் அதற்கு வியாஸ பீடம் என்று பெயர்.
துக்காராமோ தன் பீட பெருமையைக் காக்க, ராஜாவை வணங்காமல் தொடர்ந்து ஹரிபஜன் செய்கிறார்.
அந்த நிகழ்வு முடிந்ததும், சிவாஜி அவரை வணங்கி தனது பரிசுகளை ஏற்கும்படி துக்காராமிடம் வேண்டினார்.
“சிவாஜி, நீ கொண்டு வந்த வித்து, தனம், வித்தம் எனப்படும் பதினெட்டு கிராமங்களை எழுதித் தந்த சாசனம் மற்றும்
பொன், பொருள் ஆகியன எதுவும் எனக்கு சந்தோஷத்தைத் தரப் போவதில்லை.
உண்மையில் எனக்கு சந்தோஷத்தை தர வேண்டும் என்று நினைத்தாயானால் துளசி மணிமாலையை அணிந்துகொள்.
ஏகாதசி விரதம் இரு. விட்டல நாம ஜபம் செய்” என்று தன் அபங்கம் மூலம் கூறுகிறார்.
இந்த அபங்கமே சரித்திரச் சான்றாக அமைந்துவிட்டது.
பக்த துக்காராமுக்கு அபங் என்றாலே ஆனந்தம்தான்.
நாம்தேவ் மஹாராஜும், பாண்டுரங்கனும் துகோபாவின் கனவில் வந்து, அபங்கம் பாடும்படி ஆக்ஞாபித்தல்.
நாமதேவே(ம்) கேலே(ம்) ஸ்வப்னாமாஜீ ஜாகே(ம்), ஸவே(ம்) பாண்டுரங்கே(ம்) யேவூனியா(ம்). (௧)
ஸாங்கிதலே(ம்) காம கராவே(ம்) கவித்வ,வாவுகே(ம்) நிமித்ய போலோ(ம்)
நகோ. (த்ரு மாப டாகீ ஸள தரிலீ விட்டலே(ம்),தாபடோனீ கேலே(ம்) ஸாவதான. (௨)
ஸாங்கிதலே(ம்) காம கராவே(ம்) கவித்வ,வாவுகே(ம்) நிமித்ய போலோ(ம்) நகோ. (த்ரு)
ப்ரமாணாசீ ஸங்க்யா ஸாங்கே சத கோடீ,உரலே தே சேவடீ(ம்) லாவீ துகா. (௩)
ஸாங்கிதலே(ம்) காம கராவே(ம்) கவித்வ,வாவுகே(ம்) நிமித்ய போலோ(ம்) நகோ. (த்ரு)
துகாராம் மஹாராஜ் சொல்லுகிறார், “விட்டலன், நாமதேவருடன் எனது கனவில் வந்து, என்னை எழுப்பி,
“அபங்கம் இயற்றும் காரியத்தைச் செய்வாயாக. மற்ற வீணானவற்றைப் பேச வேண்டாம்”, என்று சொன்னான்.
விட்டலன், (இயற்ற வேண்டிய அபங்கத்தின்) எண்ணிக்கையைப் பற்றி என்னை ஜாக்கிரதையாக இருக்கும்படி கவனப்படுத்தினான்.
இயற்ற வேண்டிய நூறு கோடி அபங்கங்களில் (நாம்தேவ் இயற்றியது போக) மீதியை நான் இயற்றி, பூர்த்தி செய்தேன்”.
த்யால டாவ தரீ ராஹேன ஸங்கதீ,ஸந்தா(ம்)சே பங்கதீ பாயா(ம்)பாசீ(ம்). (௧)
ஆவடீசா டாவ ஆலோ(ம்)ஸே(ம்) டாகூன,ஆதா(ம்) உதாஸீன ந தராவே(ம்). (த்ரு)
சேவடீல ஸ்தள நீச மாஜீ வ்ருத்தி,ஆதாரே(ம்) விஸ்ராந்தீ பாவயீன. (௨)
ஆவடீசா டாவ ஆலோ(ம்)ஸே(ம்) டாகூன,ஆதா(ம்) உதாஸீன ந தராவே(ம்). (த்ரு)
நாமதேவாபாயீ(ம்) துக்யா ஸ்வப்னீ(ம்) பேடீ,ப்ரஸாத ஹா போடீ(ம்) ராஹிலாஸே. (௩)
ஆவடீசா டாவ ஆலோ(ம்)ஸே(ம்) டாகூன,ஆதா(ம்) உதாஸீன ந தராவே(ம்). (த்ரு)
துகோபாராய் சொல்லுகிறார்,
“(ஸந்த)ஸங்கத்தில் இருக்க இடம் அருளியதால், உன்னைப் போல ஸந்துக்களின் வரிசையில்,
அவர்களுடைய சரணங்களுக்கு பக்கத்தில் இருப்பேன். நான், எனக்கு இஷ்டமான இடத்தை விட்டுவிட்டு இங்கு வந்திருக்கிறேன்.
இப்போது என்னை உதாஸீனம் செய்யாதே. (ஸமூகத்தில்) எனது இடம் கீழானது, எனது சக்தியும் அல்பமானது.
ஆனால், உனது ஆதாரத்தினால், எனக்கு நிம்மதி உண்டாகும்.
கனவில், நாம்தேவின் சரணங்களைத் தரிசித்ததால் எனக்கு (அபங்கம் இயற்றும்) பிரஸாதம் கிடைத்தது”.
கரூ(ம்) கவித்வ ஆதா(ம்) காய நாஹீ(ம்) லாஜ,மஜ பக்தராஜ ஹா(ம்)ஸதீல. (௧)
ஆதா(ம்) ஆலா ஏகா நிவாட்யாசா திஸ,ஸத்யாவிண ரஸ விரஸலா. (த்ரு)
அனுபவாவிண கோண கரீ பாப,ரிதேசி ஸங்கல்ப லாஜவாவே. (௨)
ஆதா(ம்) ஆலா ஏகா நிவாட்யாசா திஸ,ஸத்யாவிண ரஸ விரஸலா. (த்ரு)
துகா ம்ஹணே ஆதா(ம்) ந தரவே தீர,நவ்ஹே ஜீவ ஸ்திர மாஜா மஜ. (௩)
ஆதா(ம்) ஆலா ஏகா நிவாட்யாசா திஸ,ஸத்யாவிண ரஸ விரஸலா. (த்ரு)
துகாராம் மஹாராஜ் கூறுகிறார்,
“(தேவா! உன்னை அடையும் அனுபூதி இல்லாத) அபங்கங்களைப் பாட ஏன் எனக்கு வெட்கமாக இல்லை?
[நான் அப்படிப்பட்ட அபங்கங்களைப் பாடினால், (ஞானேஸ்வர மாவுலி, நாம்தேவ் ஆகிய)] பக்தராஜர்கள் என்னைப் பரிகசிப்பார்களே.
இப்போது அதற்கு ஒரு முடிவு வரும் நாள் வந்துள்ளது. ஸத்யமில்லாத (தெய்வப்ராப்திக்கான அனுபூதி இல்லாத)
(காவ்ய) ரஸம் விரஸமாகும். அனுபூதி இல்லாத காவியத்தைப் படைக்கும் பாவத்தை யார்தான் செய்வார்கள்?
வியர்த்தமானவற்றைப் படைக்க வெட்கப்பட வேண்டும். இப்போது என்னிடம் அந்தத் தைரியம் இல்லை.
(பகவத் அனுபவம் இல்லாமல்) எனக்கு அப்படிப்பட்ட (கவி புனையும்) மன நிச்சயம் வராது”.
பாவாவே(ம்) ஸந்தோஷ,து(ம்)ஹீ யாஸாடீ(ம்) ஸாயாஸ. (௧)
கரீ(ம்) ஆவடீ வசனே(ம்),பாலடூனீ க்ஷணக்ஷணே(ம்). (த்ரு)
த்யாவே(ம்) அபயதான,பூமீ(ம்) ந படாவே(ம்) வசன. (௨)
கரீ(ம்) ஆவடீ வசனே(ம்),பாலடூனீ க்ஷணக்ஷணே(ம்). (த்ரு)
துகா ம்ஹணே பரஸ்பரே(ம்),கா(ம்)ஹீ(ம்) வாடவீ(ம்) உத்தரே(ம்). (௩)
கரீ(ம்) ஆவடீ வசனே(ம்),பாலடூனீ க்ஷணக்ஷணே(ம்). (த்ரு)
துகோபாராய் கூறுகிறார்,
“தேவா! நீ ஸந்தோஷம் அடையவேண்டும் என்றே நான் (அபங்கம்) பாடும் காரியத்தில் இறங்கியுள்ளேன்.
உனக்குப் பிரியமாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு க்ஷணமும் மாற்றி மாற்றிப் (பல வகையாகப்) பாடுகிறேன்.
(என்னுடைய குரல்) பூமியில் விழாது (வீணாகாது) என்று அபயதானம் அளிப்பாயாக.
(நம்மிடையில்) பரஸ்பரம் ஏதாவது பிரேம ஸம்பாஷணை வளர்ந்து கொண்டே இருக்கட்டும்”.
கா(ம்)ஹீ(ம்)ச ந லகே ஆதி அவஸான,பஹுத கடிண திஸதஸா(ம்). (௧)
அவக்யாச மாஜ்யா வேஞ்சவில்யா சக்தி,ந சலேஸீ யுக்தி ஜாலீ புடே(ம்). (த்ரு)
போலிலே(ம்) வசன ஹாரபலே(ம்) நபீ(ம்),உதரலோ(ம்) தோ(ம்) உபீ(ம்) ஆஹோ(ம்) தைஸீ(ம்). (௨)
அவக்யாச மாஜ்யா வேஞ்சவில்யா சக்தி,ந சலேஸீ யுக்தி ஜாலீ புடே(ம்). (த்ரு)
துகா ம்ஹணே கா(ம்)ஹீ(ம்) ந கராவே(ம்)ஸே(ம்) ஜாலே(ம்),தகிதசி டேலே(ம்) சித்த உகே(ம்). (௩)
அவக்யாச மாஜ்யா வேஞ்சவில்யா சக்தி,ந சலேஸீ யுக்தி ஜாலீ புடே(ம்). (த்ரு)
துகோபா சொல்லுகிறார்,
“தேவா! (உன் மனம் இளகாதா என்று) ஆதிமுதல் அந்தம் வரை முயன்று பார்த்து விட்டேன்.
ஆனால், முடிவு தெரியவில்லை. ஆகையால், நீ மிகவும் கடின சித்தம் உடையவனாகத் தோன்றுகிறாய்.
என் முழு பலமும் தீர்ந்து விட்டது. என்னுடைய எந்த யுக்தியும் உன்னிடம் பலிக்கவில்லை.
இன்றுவரை நான் பேசிய பேச்செல்லாம் ஆகாயத்தில் கரைந்து விட்டது.
நான் மாத்திரம் (உன் முன்னால் கை கூப்பி) முன் போலவே நிற்கிறேன்.
நீ ஒன்றும் செய்யாததினால் (உன் கடின சித்தத்தினால்) என் மனம் ஆச்சரியம் அடைந்து, பேச்சற்றுப் போய்விட்டது”.
கரிதோ(ம்) கவித்வ ம்ஹணால ஹே(ம்) கோணீ,நவ்ஹே மாஜீ வாணீ பதரீ(ம்)சீ. (௧)
மாஜீயே யுக்தீசா நவ்ஹே ஹா ப்ரகார,மஜ விஷ்வம்பர போலவிதோ. (த்ரு)
காய மீ பாமர ஜாணே(ம்) அர்தபேத,வதவீ கோவிந்த தே(ம்)சி வதே(ம்). (௨)
மாஜீயே யுக்தீசா நவ்ஹே ஹா ப்ரகார,மஜ விஷ்வம்பர போலவிதோ. (த்ரு)
நிமித்த மாபாஸீ பைஸவிலோ(ம்) ஆஹே(ம்),மீ தோ(ம்) கா(ம்)ஹீ(ம்) நவ்ஹே ஸ்வாமிஸத்தா. (௩)
மாஜீயே யுக்தீசா நவ்ஹே ஹா ப்ரகார,மஜ விஷ்வம்பர போலவிதோ. (த்ரு)
துகா ம்ஹணே ஆஹே(ம்) பாயீகசி கரா,வாகவிதா முத்ரா நாமாசீ ஹே.
மாஜீயே யுக்தீசா நவ்ஹே ஹா ப்ரகார,மஜ விஷ்வம்பர போலவிதோ. (த்ரு)
துகாராம் மஹாராஜ் சொல்லுகிறார்,
“நான் அபங்கம் இயற்றுவதாக யார் சொன்னார்கள்? இந்த காவ்யவாணி என்னுடையதல்ல.
இது எனது யுக்தியின்படி நிகழ்ந்ததன்று.
என்னை அந்த விஷ்வம்பரனே (விஷ்வம்பரன் = உலகைப் போஷிப்பவன்) சொல்ல வைக்கிறான்.
பாமரனாகிய நான் (சாஸ்த்திரங்களின்) அர்த்த பேதங்களை எவ்வாறு அறிவேன்?
கோவிந்தன் சொல்லும்படிச் சொன்னதைச் சொல்லுகிறேன்.
அபங்கம் எழுதி, எண்ணிக்கையை நிர்ப்புவற்காக என்னை உட்கார வைத்திருக்கிறான்.
அதைப் பற்றி நான் ஒன்றும் அறியேன். ஸர்வமும் ஸ்வாமியின் ஆணையின் பிரகாரமே நடைபெறுகின்றன.
நான் (விட்டலனின்) உண்மையான தாஸனாக இருந்து, அவனது நாம முத்திரையைத் தாங்குகிறேன்”.
நாஹீ(ம்) ஸரோ(ம்) யேத ஜோடில்யா வசனீ(ம்),கவித்வாசீ வாணீ குஷளதா. (௧)
ஸத்யாசா அனுபவ வேதீ ஸத்யபணே(ம்),அனுபவாச்யா குணே(ம்) ருசோ(ம்) யேதே(ம்). (த்ரு)
காய ஆகீபாஷீ(ம்) ஸ்ருங்காரிலே(ம்) சாலே,போடீ(ம்)சே(ம்) உகலே கஸாபாசீ(ம்). (௨)
ஸத்யாசா அனுபவ வேதீ ஸத்யபணே(ம்),அனுபவாச்யா குணே(ம்) ருசோ(ம்) யேதே(ம்). (த்ரு)
துகா ம்ஹணே யேதே(ம்) கராவா உகல,லாகேசி நா போல வாடவூனி.
ஸத்யாசா அனுபவ வேதீ ஸத்யபணே(ம்),அனுபவாச்யா குணே(ம்) ருசோ(ம்) யேதே(ம்). (த்ரு)
துகாராம் மஹாராஜ் சொல்லுகிறார்,
“வெறும் வார்தைகளை மட்டும் கோர்த்து, கவி இயற்றினால், அது பகவானுக்கு ஸந்தோஷத்தை அளிக்காது.
அதனால், ஆன்மீக முன்னேற்றமும் கிடைக்காது. அதில் அனுபவ ஸித்தாந்தங்களின் அனுபூதி நிறைந்திருந்தால்,
அந்த அனுபவத்தின் குணங்கள் (உலகினருக்கு) ருசிக்கும் (பயன்படும்). தங்க முலாம் பூசி அலங்கரிக்கப்பட்ட செப்புக் கம்பியை,
நெருப்பில் காட்டினால், முலாம் அழிந்து, செம்பே தென்படும். அதுபோல அனுபவசாலியின் முன்
மற்றவர்களின் சாயம் வெளுத்துவிடும். உண்மையான அனுபூதி உள்ளவர்களுக்கு,
அதை மற்றவர்களுக்கு காண்பிக்க வேண்டிய அவசியமும் இல்லை”.
பாப மேலா ந களதா(ம்),நவ்ஹதீ ஸம்ஸாராசீ சிந்தா. (௧)
விடோ துஜே(ம்) மாஜே(ம்) ராஜ்ய,நாஹீ(ம்) துஸர்யாசே(ம்) காஜ. (த்ரு)
பாயீல மேலீ முக்த ஜாலீ,தேவே(ம்) மாயா ஸோடவிலீ. (௨)
விடோ துஜே(ம்) மாஜே(ம்) ராஜ்ய,நாஹீ(ம்) துஸர்யாசே(ம்) காஜ. (த்ரு)
போர மேலே(ம்) பரே(ம்) ஜாலே(ம்),தேவே(ம்) மாயாவிரஹித கேலே(ம்). (௩)
விடோ துஜே(ம்) மாஜே(ம்) ராஜ்ய,நாஹீ(ம்) துஸர்யாசே(ம்) காஜ. (த்ரு)
மாதா மேலீ மஜ தேகதா(ம்),துகா ம்ஹணே ஹரலீ சிந்தா. (௪)
விடோ துஜே(ம்) மாஜே(ம்) ராஜ்ய,நாஹீ(ம்) துஸர்யாசே(ம்) காஜ. (த்ரு)
துகாராம் மஹாராஜ் சொல்லுகிறார்,
“எனக்கு உலகத்தைப் பற்றிய சிந்தனை இல்லாத போது (சிறு வயதில்) எனது தந்தை இறந்ததால், அது எனக்குத் தெரியாது.
விட்டலா! இப்போது, உனதும் எனதுமே ராஜ்யம். வேறு வேலை எதுவும் கிடையாது.
பத்னி காலமாகி, விடுதலை அடைந்தாள். பகவான் என்னை மாயையிலிருந்து நீக்கினான். புதல்வன் மரித்தான்.
(ஒரு வகையில்) அதுவும் நல்லதாயிற்று. பகவான் எனக்கு மாயை இல்லாமல் செய்துவிட்டான்.
நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தாயார் காலமானாள். பகவான் என்னுடைய ஸகல கவலைகளையும் போக்கிவிட்டான்”.
(ஸந்துக்கள் துகாராம் மஹாராஜிடம் “உங்களுக்கு வைராக்கியம் எப்படி வந்தது”, என்று கேட்டபோது அவர் அளித்த பதில்).
யாதீ சூத்ர வம்ச கேலா வேவஸாவ,ஆதி தோ ஹா தேவ குளபூஜ்ய. (௧)
நயே போலோ(ம்) பரி பாளிலே(ம்) வசன,கேலியாசா ப்ரச்ன து(ம்)ஹீ(ம்) ஸந்தீ(ம்). (௨)
ஸம்வஸாரே(ம்) ஜாலோ(ம்) அதிது:கே(ம்) து:கீ,மாயபாப ஸேகீ(ம்) க்ரமிலியா. (௩)
துஷ்காளே(ம்) ஆடிலே(ம்) த்ரவ்ய நேலா மான,ஸ்த்ரீ ஏகீ அன்ன அன்ன கரிதா(ம்) மேலீ. (௪)
லஜ்ஜா வாடே ஜீவ த்ராஸலோ(ம்) யா து:கே(ம்),வேவஸாவ தேகே(ம்) துடீ யேதா(ம்). (௫)
தேவாசே(ம்) தேவுள ஹோதே(ம்) ஜே(ம்) பங்கலே(ம்),சித்தாஸீ தே(ம்) ஆலே(ம்) கராவே(ம்)ஸே(ம்). (௬)
ஆரம்பீ(ம்) கீர்தன கரீ(ம்) ஏகாதசீ,நவ்ஹதே(ம்) அப்யாஸீ(ம்) சித்த ஆதீ(ம்). (௭)
காஹீ(ம்) பாட கேலீ(ம்) ஸந்தா(ம்)சீ(ம்) உத்தரே(ம்),விஸ்வாஸே(ம்) ஆதரே(ம்) கரோனியா(ம்). (௮)
காதீ புடே(ம்) த்யா(ம்)சே(ம்) தராவே(ம்) த்ருபத,பாவே(ம்) சித்த சுத்த கரோனியா(ம்). (௯)
ஸந்தா(ம்)சே(ம்) ஸேவிலே(ம்) தீர்த பாயவணீ,லாஜ நஹீ(ம்) மனீ(ம்) யேவூ(ம்) திலீ. (௧0)
டாகலா தோ கா(ம்)ஹீ(ம்) கேலா உபகார,கேலே(ம்) ஹே(ம்) சரீர கஷ்டவூனீ. (௧௧)
வசன மானிலே(ம்) நாஹீ(ம்) ஸுஹ்ருதா(ம்)சே(ம்),ஸமூள ப்ரபஞ்சே(ம்) வீட ஆலா. (௧௨)
ஸத்ய அஸத்யாஸீ மன கேலே(ம்) க்வாஹீ,மானியேலே(ம்) நாஹீ(ம்) பஹுமதா(ம்). (௧௩)
மானியேலா ஸ்வப்னீ(ம்) குரூசா உபதேச,தரிலா விஸ்வாஸ த்ருட நாமீ(ம்). (௧௪)
யாவரீ யா ஜாலீ கவித்வாசீ ஸ்பூர்தி,பாய தரிலே சித்தீ(ம்) விடோபாசே. (௧௫)
நிஷேதாசா கா(ம்)ஹீ(ம்) படிலா ஆகாத,தேணே(ம்) மத்யே(ம்) சித்த து:கவிலே(ம்). (௧௬)
புடவில்யா பஹ்யா பைஸலோ(ம்) தரணே(ம்),கேலே(ம்) நாரயணே(ம்) ஸமாதான. (௧௭)
விஸ்தாரீ(ம்) ஸாங்கதா(ம்) பஹுத ப்ரகார,ஹோயீல உசீர ஆதா(ம்) புரே. (௧௮)
ஆதா(ம்) ஆஹே தைஸா திஸதோ விசார,புடீல ப்ரகார தேவ ஜாணே. (௧௯)
பக்தா(ம்) நாராயண நுபேக்ஷீ ஸர்வதா,க்ருபாவந்த ஐஸா களோ(ம்) ஆலே(ம்). (௨0)
துகா ம்ஹணே மாஜே(ம்) ஸர்வ பாண்டவல,போலவிலே போல பாண்டுரங்கே(ம்). (௨௧)
துகாராம் மஹாராஜ் கூறுகிறார்,
“எனது ஜாதி சூத்திர வம்சம், தொழில் வியாபாரம், முதலிலிருந்தே குலத்திற்குத் தெய்வமாக
இருப்பவனைப் (விட்டலனை) பூஜித்து வருகிறேன். (௧)
நானே என்னுடைய வரலாற்றை யாருக்கும் சொல்லுவதில்லை.
ஸந்துக்களாகிய நீங்கள் கேட்டதால், உங்களுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறேன். (௨)
நான் இப்பிரபஞ்சத்தில், துக்கத்தின் அதிதுக்கத்தை அனுபவித்திருக்கிறேன்.
தாய், தந்தையர் உலகை விட்டுப் போய்விட்டனர். (௩)
பஞ்சத்தினால் செல்வத்தை இழந்தேன். அதனால், மானமும் அழிந்தது.
ஒரு மனைவி “அன்னம், அன்னம்” என்று சொல்லிக்கொண்டே மரித்தாள். (௪)
இந்த துக்கங்களினால் மிகவும் வெட்கம் அடைந்தேன். வாழ்க்கை பயமுள்ளதாயிற்று.
வியாபாரத்தைப் பார்த்தால், படுத்துவிட்டது. (௫)
விட்டலனின் ஆலயம் பழுதடைந்து போய் விட்டது. அதைப் புதுப்பிக்க வேண்டும் என்று மனதில் பட்டது. (௬)
ஆரம்பத்தில், ஒருநாள் கீர்த்தன் செய்தேன். முதலில் பயிற்சியில் மனம் நாடவில்லை. (௭)
ஸந்துக்களின் வசனத்தில் நம்பிக்கை வைத்து, பக்தியுடன் (அவ்வசனங்களைப்) படித்தேன். (௮)
அதன் பின், சித்தத்தைச் சுத்தமாக வைத்துக் கொண்டு, பாவத்துடன் அவர்களின் த்ருபதங்களை (பல்லவிகளை) பாடினேன். (௯)
ஸந்துக்களின் பாத தீர்த்தத்தைப் பருகினேன். அதனால், மனதில் வெட்கம் போய்விட்டது. (௧0)
என் சரீரத்தைக் கஷ்டப் படுத்திக்கொண்டு, ஏதோ (மற்றவர்களுக்கு) உபகாரம் செய்தேன். (௧௧)
நெருங்கியவர்கள் (மற்றவர்களைப் போல இரு என்று) சொன்னதை, நான் மதிக்கவில்லை.
மொத்த பிரபஞ்சத்தின் மீதும் வெறுப்பு வந்தது. (௧௨)
நல்லது எது? கெட்டது எதுவென்ற விஷயத்தில் நான் உலகத்தினரின் அபிப்பிராயத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
என் மனதில் பட்டதையே ஸாக்ஷியாகக் கொண்டேன். (௧௩)
சொப்பனத்தில் குரு செய்த உபதேசத்தை மதித்து, அந்த நாமத்தில் திடமான நம்பிக்கை வைத்தேன். (௧௪)
அதன் பின்னர், கவி புனையும் ஆற்றல் (விட்டோபாவின் அருளினால்) கிடைத்தது.
நான் விடோபாவின் சரணங்களில் மனதை பதித்துக் கொண்டேன். (௧௫)
எனது அபங்கங்கள் நிந்திக்கப் பட்டு, ஆபத்து ஏற்பட்டது. அதனால் மனம் துயருற்றேன். (௧௬)
(நான் இயற்றிய அபங்கங்கள் எழுதப்பட்ட) புஸ்தகங்கள் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டன.
நான் ’தர்ணா’வில் அமர்ந்தேன். (அவற்றை ரக்ஷித்து) நாராயணன் என்னை ஸமாதானப் படுத்தினான். (௧௭)
(இந்த விஷயங்களை) இன்னும் பலபடியாக விஸ்தரித்துக் கூறினாலும், பின்னும் மீதி இருக்கும்.
ஆகையால், இப்போது நிறுத்திக் கொள்வோம். (௧௮)
இப்போதுள்ள நிலமை தெரிகிறது. ஆனால், மேற்கொண்டு நடக்கப் போவதை பகவானே அறிவான். (௧௯)
நாராயணன் தன் பக்தர்களை ஒருபொழுதும் அசட்டை செய்ய மாட்டான்.
அவன் கிருபாவந்தன் என்பதை நான் தெரிந்து கொண்டேன். (௨0)
பாண்டுரங்கனே எனது பொக்கிஷம், அவன் தனது வாக்குகளை என் வாயால் சொல்ல வைக்கிறான். (௨௧)
“துகாராம் மஹாராஜின் ’காதா’ (அபங்கங்களின் தொகுப்பு), அர்த்த புஷ்டியுள்ள, ஒரு மஹோன்னதமான படைப்பாகும்.
அவருடைய இலக்கியப் படைப்புகள் மனித சமுதாயத்தின் முடிவற்ற இலக்கிய தாகத்திற்குக் கிடைத்த
ஒரு நிபுணத்துவம் வாய்ந்த, பாரம்பரிய சொத்தாகும்.
துகாராம் மஹாராஜின் திறமை லௌகீகத்தை, பரமார்த்திகமாக மற்றுவதே ஆகும்.
அவருடைய அபங்கங்களில், முழு உலகமே அர்த்தமுள்ளதாக மாறி விடுகிறது.
அவைகள், மராட்டிய கலாசாரத்தின் மற்றும் மராட்டிய மொழியின் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் இயற்றப்படிருந்தாலும்,
உலகத்தினர் அனைவருக்கும் பொதுவானதாகவும், காலவரையறை இன்றி, மனித இனம் பின்பற்றத் தக்கதாகவும் உள்ளது.
———
பண்டரிபுரம் போகாதீங்க, பூதமிருக்கு அங்கே!
பக்திமான் சந்த் துக்காராமின் இந்த அபங்கம், வஞ்சகப் புகழ்ச்சியில் கண்ணனைப் பாடுகிறது.
விட்டல் உறையும் பண்டரிபுரம் போக வேண்டாம், போக வேண்டாம் என்று சொல்வார்கள்.
ஆம், அங்கே செல்ல வேண்டாம், தயவு செய்து செல்ல வேண்டாம்.
அங்கே பெரியதொரு பூதம் இருக்கிறது.
பண்டரிபுரம் சென்றவர்கள் திரும்பியதே இல்லை. அந்த பூதம் அவர்களை அப்படியே சாப்பிட்டு விடுகிறதாம்!.
துக்காராம், இதையெல்லாம் கேட்பவரா என்ன, அவரது கிருஷ்ண ப்ரேமைதான் அளவிடற்கரியதே!
துக்காராம், துணிந்து பண்டரிபுரம் சென்றார்.
எல்லோரும் பயந்தது போலவே, துக்காராமும் திரும்பவில்லை.
ஆனால், என்ன, துக்காராம் இந்த நிலையில்லா உலகுக்கு திரும்பிடவில்லை.
பாண்டுரங்கன் பதமெனும் உயர்நிலையை அடைந்தபின்,
இந்த உலகும் ஒரு பொருட்டோ?
—————————————————–
பாடல் : பண்டரிசே பூத மோடே
மொழி : மராத்தி
பண்டரி சே பூத மோடே
ஆல்யா கேல்யா தடபி வாடே
பஹூ கேதலிச ராணா
பகஹே வேடே ஹோய மானா
தீதே சவுனகா கோணி
கேலே நஹி ஆலே பரதோணி
துக்கா பண்டரி சே கேலா
புண்ஹ ஜன்ம நஹி ஆலா
————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாண்டுரெங்கன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply