ஸ்ரீ திருவல்லிக்கேணி ஸ்ரீ சீதா ராம சந்த்ர ப்ரஹ்மோத்சவம் அனுபவம் -ஸ்ரீ யதுகிரி ஸ்ரீ ராம் ஸ்வாமிகள் —

ஸ்ரீ ராகவம் தசரதாத்மஜம் அப்ரமேயம் ஸீதாபதிம் ரகுகுலான்வய ரத்னதீபம்
ஆஜானுபாஹும் அரவிந்த தளாயதாக்ஷம் ராமம் நிசாசர விநாஸகரம் நமாமி … 🙏

நாரத மஹர்ஷி, ப்ரஹ்மாவின் நியமனத்தினால்
வால்மீகி ஆஸ்ரமத்திற்கு வந்து சேர, அந்த நாரதமுனிவரை‌ வால்மீகி வணங்கி வழிபட்டு
*கோநு அஸ்மின்
ஸாம்ப்ரதம் லோகே* குணவாந் கச்ச வீர்யவான்.. என்று தொடங்கி
ஒரு பதினாறு திருக்குணங்களைச் சொல்லி இத்திருக்குணங்கள் அமைந்த ஒரு மனிதன்
இப்போது இப்பூவுலகில் உளனாயின் எனக்கு சொல்லியருளவேணும் என்று விண்ணப்பம் செய்கிறார்…

அதற்கு அந்த நாரதமுனி மிக மகிழ்ந்து ,
இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்து ஸ்ரீராமன் என்ற திருநாமம் பெற்றவன் ஒருவன் உளன்
;அவன் உலகம் நிறைந்த புகழாளன்; அளவற்ற சக்தி வாய்ந்தவர்;
அவனது திருக்குணங்கள் என்னால் எடுத்துரைக்க முடியாது..
அவனே கோசலராஜன் திருமகளான கௌசல்யா தேவியின் வயிற்றில் பிறந்த தசரத புத்திரன்……
;கடல் போல் மஹாகம்பீரன்;
மாவீரன்; மிக்க பொறுமையாளன்;
*ஸத்ய சீலன் என்றுரைத்து ஸ்ரீராமனுடைய சரிதையையும் சுருக்கமாக உபதேசித்து முடிக்கிறார் … 🙏

வால்மீகி கேட்ட அத்திருக்குணங்கள் எண்ணிக்கையில் பதினாறாக அமைந்திருப்பதால்,
ஸ்ரீராமசந்த்ரன் என்று சந்த்ரனாகக் கூறப்படுகிறவனுடைய பதினாறு கலைகளோ இவை
என்னலாம்படியுள்ளன அத்திருக்குணங்கள்:🙏
பகவான் இராமனாக இவ்வுலகில் திருவவதாரம் செய்தது தன்னுடைய திருக்குணங்களை
வெளியிடுவதற்காகவே யென்றும் ராவணஸம்ஹாரம் முதலியவை வ்யாஜமாத்ரமான ப்ரயோஜனமென்றும் தத்வமுள்ளது.
பட்டரும் தம் ஸ்ரீஸூக்தியில் குணபரீவாஹாத்மனாம் ஜந்மனாம் என்று
வெளியிட்டருளினார்🙏

முதல் வினா….
1. கோ குணவாந்?

குணவான் என்பதற்கு
சீலகுணவாந் என்பதே பொருள் எனலாம்….அதுவே
சௌசீல்யம் என்று பூர்வாசார்யர்கள் திருவுள்ளம் தன் மேன்மை பாராமல் தாழ்ந்தவர்களோடும்
புரையறக்கலந்து பரிமாறும் சீலகுணத்திற்கே சௌசீல்யம் என்று பொருள்
இத்திருக்குணத்திற்குச் சேர ஸ்ரீராமசரிதத்தை அநுஸந்திக்கவேணும்..
அவதாரமே சீலகுணத்தை விளக்குகிறது.. 🙏

ஸ்ரீ கூரத்தாழ்வான் அதிமாநுஷ ஸ்தவத்தில்
சீல: க ஏஷ தவ ஹந்த என்கிறார். அந்த குணத்தை விளக்குகையில்
அத்ராவதீர்ய நநு லோசன கோசரோபூ: என்று அசுரர் அரக்கன் மனிசரிடையே வந்து அவதரித்தது…
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாதிரங்கி என்று குஹனோடு கூடி ….
குஹனொடும் ஐவரானோம் என்று கம்பனும்
குஹனொடு சீரணிந்த தோழமை கொண்டதுமோர் அடையாளம் என்று பெரியாழ்வாரும்……
தயாசஸதக ஸ்ரீஸூக்தியின்படி நிஷாதாநாம் நேதா கபிகுலபதி: காபி சபரி என்று சபரியையும் எடுத்துக் காட்டியுள்ளபடி….
சபர்யா பூஜிதஸ் ஸம்யக் என்றபடி……
சசால சாபஞ்ச முமோச வீர: என்று நிலைகலங்கி நின்ற ராவணனை இன்று போய் நாளை வா என்றதும்…
பிள்ளை லோகாச்சார்யர் திருவாக்குப்படி சீலவத்தையாகிறது அபிஷேகவிக்னம் பிறந்ததென்று வெறுப்பின்றியே
*வனவாசோ மஹோதய என்று காடேறப்புறப்பட்டது….

கம்பனும்
.திருமுகச்செவ்வி நோக்கின் அப்போதலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா..என்றலும்….
இனி ரிஷிகள் பக்கலிலே சென்று தாழநின்ற சீலம்..தான் சென்று குசலம் விசாரிக்க வேண்டியிருக்க
அவர்கள் முற்பட்டு வந்து தம் தம் குறைகளை விண்ணப்பித்தது கண்டு தான் பொறை வேண்டிநின்றதும்….
அஹம் வேத்மி மஹாத்மாநம் ராமம் ஸத்யபராக்ரமம் என்ற விஸ்வாமித்ரரிடம்
இமௌ ஸ்ம முநிசார்த்தூல! கிங்கரௌ ஸமுபஸ்திதௌ ஆக்ஞாபய யதேஷ்டம் வை சாஸநம் கரவாவ கிம் என்று
தன்னையும் தம்பியையும் வேலையாட்களாக விண்ணப்பித்துக்கொண்டதும் ஒப்புயர்வற்ற மஹாகுணமன்றோ!!!!🙏🙏🙏🙏🙏

*வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தஸரதாத்மஜே/
வேத:ப்ராசேத ஸாதஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா//🙏

சக்ரவர்த்தித் திருமகனான ஸ்ரீராமசந்த்ரனின் திருக்குணங்களைப்
பற்றிய வால்மீகி மமஹர்ஷியின் இரண்டாவது வினா..

க : வீர்யவான்..
வீர்யமுடையவன் யாவன்?….

பகவானுடைய திருக்குணங்களில்
வீர்யம் சௌர்யம் பராக்ரமம் இம்மூன்றும் ஒருசேர அநுஸந்திக்கப்படுகிறது…
மூன்றுக்கும் வாசியில்லாதாப்போல் தோன்றினாலும் வாசியுண்டு..
1.எதிரிகள் சேனையைக்கண்டு அஞ்சாமை,
2.அந்தச்சேனையிலேயே புகுந்து எதிரிகளை அநாயாசமாக கொன்று விடுவது,
3. தனக்குச் சிறிதும் பங்கம் நேராதபடி ஸகலவித பங்கங்களும் எதிரிகளுக்கே சாரநிற்றல்….
இங்கு வீர்யமொன்றுமே சொல்லப்பட்டிருந்தாலும் மற்றையிரண்டுக்கும் இது உபலக்ஷணமேயாம்.

இதனை அடுத்த வினாவாக வைத்தது, சௌலப்யத்தை நினைத்து உருகுமவர்கள்
ஈடுமெடுப்புமில்லாத மேன்மையை யநுஸந்தித்து ஒருவாறு தரிக்கைக்காக வென்று
ஆசார்யர்களின் அருமருந்தான அருளிச் செயல்..

ரகுவீரகத்யத்தில் *ஜய ஜய மாவீர! என்று தேசிகர்.

சென்று கொன்று வென்றிகொண்ட வீரனே
இலங்கை நீறுசெய்துவென்றிகொண்ட வீரனார்
என்று திருமழிசை ஆழ்வார்…

வீரராகவனென்றே ஒரு திவ்யதேசத்தில் திருநாமம்…
இராவணனே வியந்து போற்றும் வீர்யம்….
விக்ரமை: ரஞ்சநீயஸ்ய என்று….
மூலம் திரட்டப்பட்டு இராமனுடைய அதிமாநுஷப் போர் வல்லமையை வால்மீகி…
சிந்நம் பிந்நம் சரைர் தக்தம் ப்ரபக்னம் சஸ்த்ரபீடிதம்.பலம் ராமேண தத்ருசுர் ந ராமம் சீக்ரகாரிணம் என்று
இராமனால் பலவாறு தகர்ப்புண்ட சேனைகளைக்கண்டார்களொழிய
பம்பரமாகச் சுழன்ற ராமனை ஒருவரும் காணமாட்டிற்றிலர்…என்கிறார்….

தேது ராமஸஹஸ்ராணி ரணே பஸ்யந்தி ராக்ஷஸா: என்றும்
மன: பஸ்யந்தி காகுத்ஸ்தம் ஏகமேவ மஹாஹவே என்றும்…..
இராமனைக்காணவேயில்லையென்றும்,ஆயிரம் ராமர்களைக்கண்டார்களென்றும்,
ஒரேயொரு இராமனையே கண்டார்களென்றும் ஒன்றுக்கொன்று சேராத படி பேசும்
வண்ணம் பெருமாள் விசித்ரமாகப்போர் செய்தானென்கை…

ஓருவரிருவரோர் மூவரென நின்று உருவுகரந்து–
உருக்கெட வாளிபொழிந்தவொருவன் என்று ஆழ்வார் பாசுரம்…

பொல்லாவரக்கனைக் கிள்ளிக்களைந்தானை என்று ஆண்டாளும்,
இலங்கைக்கிறைவன் தலைபத்துதிரவோட்டி ஓர் வெங்கணைவுய்த்தவன் என்று திருப்பாணாழ்வாரும்…

ஒரே அம்பினால் வாலியை முடித்தமையும்…
கார்த்தவீர்யார்ஜுனனைப் பங்கப்படுத்திய பரசுராமனைப் படுத்தியபாட்டையும்போலல்லாமல்..
எப்படியாவது ராவணன் உடன்பட்டு வழிபட்டு உஜ்ஜீவிக்கைக்கு ப்ராப்தமாமோ! என்கிற நசையிருந்தபடியால்
ஸம்ஹரிக்கைக்குக் காலதாமதம்…..

சூர்ப்பணகை விஷயமாய் கரன் தலையும் துண்டித்து
அவனனுப்பின பதினாலாயிரம் சேவைகளையும் ஏகாகியாய் கொன்று வென்றி..
அஸஹாய சூர! என்று ரகுவீரகத்யத்தில்.. 🙏

யுத்தகாண்டத்தில்…
மரணாந்தாநி வைராணி நிர்வ்ருத்தம் ந: ப்ரயோஜனம் க்ரியதாம் அஸ்ய ஸம்ஸ்காரோ மமாப்யேஷ யதாதவ… என்கிற இதில்…..
இதுவரை ராவணனே பெருமாள் மீது பகைபாராட்டினானன்றி,
பெருமாள் இவனுக்கு நன்மையே செய்யக்கருதியிருந்தாரென்பது….

யதி வா ராவணஸ் ஸ்வயம் என்றாரிறே….
நாம் செய்யும் நன்மையை விலக்காதொழியுமது இவனிடம் பெறப்பெற்றிலோம்..இனி ஸித்திக்கப் பெற்றோமிறே…. என்று….
ப்ராதிகூல்ய வர்ஜனமும் அப்ரதிஷேதமுமே வேண்டுவது… 🙏

ஆழ்வானும் ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில்
யத்ப்ரஹ்மகல்பநியுதாது பவேபி என்கிற ஸ்லோகத்தில் க்ஷாம்யஸ்யஹோ ததபிஸந்தி விராம மாத்ராத் என்று
சேதநன் ஸுக்ருதவிஷயங்களைச் செய்யாமற் போனாலும்
துஷ்க்ருதமாவதொன்றும் செய்யாமலிருந்தால் அதையே பற்றாசாகக்கொண்டு அருள்புரிந்து தீருகிறான்… 🙏

கச்சாநுஜாநாமி என்ற பெருமாள் நியமனத்தைப்பற்றி மறுநாள் போருக்கு வாராதிருந்திருந்தால்
ராவணனை இலங்கைக்கரசனாக்கி வைத்தருள்வானே..
அப்பேற்றுக்கவகாசம் கொடுத்திலனே….

ராமம் ஸத்யபராக்ரமம் என்ற விஸ்வாமித்ரவாக்யம்..
எதிரியை சோர்வு பார்த்து வதைத்திடாதே ஆந்தனையும் ஆபிமுக்யம் கொள்ளப்பார்த்து
கைகூடாதே கொன்றொழிப்பதே ஸத்யபராக்ரமமுடைமை…. 🙏

வீர்யமாவது ஏதென்பதை பட்டர்
ம்ருகநாபிகந்த இவ யத் ஸகலார்த்தாந் நிஜஸந்நிதே ரவிக்ருதோ விக்ருணோஷி ப்ரியரங்க!
*வீர்யமிதி தத் து வதந்தே… கஸ்தூரி பரிமளம் தான் விகாரமடையாமல் பிறர் மனங்களை
விகாரமடையச்செய்கிறாப்போல் பகவான் தான் விகாரமடையாமல்
சேதந அசேதந வாசியற ஸகலபதார்த்தங்களையும் விகாரப்படுத்துகையாகிற குணம் என்று
மனனஞ்செய்து வால்மீகி
க: வீர்யவாந்? என்று வினவினார் .
(ஸ்ரீ காஞ்சி ஸ்வாமி)
🙏🙏🙏
வாசக தோஷ:க்ஷந்தவ்ய:🙏

——–

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாயா:பதயே நம: 🙏🙏

சக்ரவர்த்தித் திருமகனைக் குறித்து வால்மீகியின் மூன்றாம் வினா..

க: தர்மஜ்ஞ: ??
தர்மஜ்ஞ: என்பதற்கு தர்மமறிந்தவன் என்று பொருள்..

ஆண்டாள் தர்மமறியாக்குறும்பனை (நா.தி) என்று கண்ணபிரானைக் குறிப்பிடுகிறாள்….
அவ்வியல்புக்கு மாறாக தர்மமறிந்தவனெனப்படுகிறான் இராமபிரான்…
சாஸ்த்ரங்களில் பலவகைத்தர்மங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் இராமன் அறிந்ததாக் கொள்ளும் தர்மம் எதுவெனில்
ஆந்ருஸம்ஸ்யம் ப்ரோ தர்ம:த்வத்த ஏவ மயா ச்ருத: என்ற
பிராட்டியின் வாக்குப்படி இராமன் இரக்கமறிந்தவன்,இரக்கமுடையவன்…..

ஸ்வாமி தேசிகனும்
கருணா காகுத்ஸ்த: என்றாரிறே..

அமரகோசத்தில் காருண்யம் கருணா க்ருணா க்ருபா தயா அநுகம்பா ஸ்யாத் அநுக்ரோசோபி.. என்று
கருணைக்குப் பர்யாய பதங்கள்…
இதில் அநுகம்பா பிறர் துக்கப்படுகை கண்டு தான் துக்கப்படுகையும்
அநுக்ரோசம் என்பது பிறர் துக்கத்தில் அழுகையில் தான் அழுகையும்…

அயோத்தி ப்ரஜைகள் தசரதனிடம் இராமனுடைய திருக்குணங்களைச் சொல்லுமளவில்
வ்யஸநேஷு மநுஷ்யாணாம் ப்ருசம் பவதி து:க்கித: உத்ஸவேஷு ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி என்று
பிறர் துயருறக்கண்டால் தான் அபரிமிதமாய் துக்கப்படுவதும்
பிறர்க்கொரு மகிழ்ச்சி யுண்டானால் தான் மிக மகிழ்பவன்…..என்று
ஸ்வார்த்த து:க்கத்தைக் காட்டிலும் பரார்த்த து:க்கமே (பரதுக்க துக்கித்வம்) மிகச்சிறந்தது..

ஸ்ரீ பட்டரும் ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் விகர்த்தா என்கிற திருநாமத்திற்குப்
பரதுக்க துக்கித்வ திருக்குணத்தைக் கொண்டாடுகிறார்…

கண்ணனும் த்ரௌபதியின் துயரைத் தீர்த்திருக்கச் செய்தேயும் ,நேரிலே வந்து உதவாதது குறித்துத்
திருவுள்ளம் வருந்தி
கோவிந்தேதி யதாக்ரந்தத் க்ருஷ்ணா மாம் தூரவாஸிநம் ருணம் ப்ரவ்ருத்த மிவ மே ஹ்ருதயாத் நாபஸர்ப்பதி என்றானிறே..

மடுவின் கரையிலே முதலை தன்னால் அடர்ப்புண்ட ஸ்ரீ கஜேந்த்ராழ்வானின் துயரம் தீர்த்த பின்னும்…
ஆழ்வானும் பட்டரும் கெட்டேன்! கெட்டேன்! என்று நொந்துகொண்டே
எம்பெருமான் அரைகுலைய தலைகுலைய ஓடிவந்தானென்று உருகினவர்களே யன்றோ…

ஸுக்ரீவனுக்காக வாலியைக் கொன்றபின் ஸுக்ரீவனைவிட அபரிமித துக்கமடைந்தானென்றும்
ஸஜ்ஞாத பாஷ்ப: என்றும்
முஹூர்த்தம் விமநா: பபூவ என்றும் சொல்கிறபடி…..
ஸமான ஸோக: காகுத்ஸ்த என்று வாலியின் மரணத்தால் தாரைக்கும் அங்கதனுக்கும்
ஸமமான துக்கத்தில் இராமன் இருந்தானென்று…..

பிராட்டியும் இராவணனுக்கு ஹிதோபதேசம் பண்ணும்போது
விதிதஸ் ஸ ஹி தர்மஜ்ஞஸ் சரணாகத வத்ஸல: தர்மஜ்ஞரென்று சொல்லி
உடனே அதன் விவரணமாக சரணாகத வத்ஸலன் என்கிறாள்…

தேசிகனும் தசாவதாரஸ்தோத்ரத்தில்
ஸம்ரக்ஷணைகவ்ரதி தர்மோ விக்ரஹவாந் என்கிறார்….

மேலும் பிராட்டி அருகிலிருக்க, எப்படிப்பட்ட அபராதிகளுக்கும் விநாசம் ப்ராப்தமாகிறதில்லை..
பிராட்டியைப் பிரிந்திருந்த காலத்தில் தான்
வாலி வதம்,
கரதூஷணாதிகள் வதம்,
விராதவதம்,
மாரீச வதம் எல்லாம்…. …..

கம்பனும்
தேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை என்றாரிறே..

ஸ்ரீ ஜனகராஜன் ஸீதையைக் கன்யாதானம் செய்யுங்காலத்தில்
இயம் ஸீதா மம ஸுதா ஸஹதர்மசரீ தவ
“இராமா!நீ அனுட்டிக்கும் தர்மத்திற்குத் துணைவியாமவள் இந்த ஸீதை” என்கிறார்…

ஆக,பிராட்டி இராவணனுக்கு உபதேசித்த ஹிதவசனத்தில்
தர்மஜ்ஞ: சரணாகத வத்சல: என்று கூறியதையும் ஸீதா விவாஹகாலத்தில் மம ஸுதா ஸஹதர்மசரீ தவ என்று
ஜனக சக்ரவர்த்தி சொல்லியிருந்ததையும் இணக்கி,தேறின ஸாரப்பொருளாம் இந்த காருண்யம் என்கிற
திருக்கல்யாண குணத்தையுடையவன் ஸ்ரீராமன் என்று….🙏🙏

(ஸ்ரீ காஞ்சி ஸ்வாமி)🙏
வாசகதோஷ: க்ஷந்தவ்ய:🙏

பெரிய திருவடியாம்
பக்ஷிராஜனை ஆரோஹித்துத் திருவீதி புறப்பாடு கண்டருளுகிறார்
சக்ரவர்த்தித் திருமகன்🙏🙏

——-

வைதேஹி ஸஹிதம் ஸுரத்ருமதலே ஹைமே மஹாமண்டபே
மத்யே புஷ்பகமாஸநே மணிமயே வீராஸனே ஸுஸ்திதம்
அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜன ஸுதே தத்வம் முநிப்ய: பரம்
வ்யாக்யாந்தம் பரதாதிபி: பரிவ்ருதம் ராமம் பஜே ஶ்யாமலம்
🙏🙏
வால்மீகி நாரத ஸம்வாதத்தில் இதுவரை குணவாந் வீர்யவாந் தர்மஜ்ஞன் என்று
இராமனின் திருக்கல்யாணகுணங்களை விவரித்துச்சொல்லியபிறகு நான்காவது வினா…
க: க்ருதஜ்ஞ:??

க்ருதம் ஜாநாதி இதி க்ருதஜ்ஞ: என்ற வ்யுத்பத்தியின்படி
செய்கிற காரியங்களை உணருபவன் என்று பொருள்…….

மனிதர்களுக்கு உரிய குணங்களுள் மிக முக்கியமான குணம்
செய்ந்நன்றி மறவாத க்ருதஜ்ஞதை.
என்னும் குணம்…

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு என்று திருவள்ளுவர்..
வடமொழி அறநூல்களும் க்ருதக்னே நாஸ்தி நிஷ்க்ருதி என்றே அறைகின்றன.

எல்லாப் பாவங்களுக்கும் ப்ராயச்சித்தங்களினால் போக்கடியுண்டு.செய்ந்நன்றி மறந்தார்க்கு-
கொன்றார்க்கு மாத்ரம் ப்ராயச்சித்தம் ஒரு சாஸ்த்ரத்திலும் காணக்கிடைக்காதென்றே
வடநூலாரும் தமிழ்நூலாரும் ஒரு மிடறாகக்கூறியுள்ளார்கள்…

ஸங்கல்ப ஸூர்யோதய த்தில் வேதாந்த தேசிகர்
ப்ரதிதம் பாதகிவர்க்கம் க்ருதக்ந ஏகோ ஹி க்ருத்ஸ்னமதிசேதே,தமிமம் க்ரியமாணக்ந: தமபி துராத்மா கரிஷ்யமாணக்ந:
பிறர்செய்த உபகாரங்களை மறக்குமளவன்றிக்கே ப்ரதியாக அபகாரம் செய்பவன் க்ருதக்னன் எனப்படுவான்
பஞ்சமஹாபாதகிகளிலும் மேம்பட்டவன்.

க்ருதஜ்ஞதை என்னும் குணம் வாய்ப்பதரிது…
இப்பெருங்குணம் அஃறிணைப் பொருட்களிடத்துக் காணமுடியுமேயன்றி
உயர்திணைப் பொருள்களிடத்துக்காண்பது மிகவும் அரிது..

ஒரு பெரியாரும் நின்று தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால்
இத்தகைய க்ருதஜ்ஞதாகுணம் உலகில் சில வ்யக்திகளிடத்தில்தான் காணமுடியும்.இராமபிரானிடத்துக்காணும்
இக்குணம் லோகோத்தரமானது..

ஸ்ரீராமாயணத்தில்
(அயோத்யாகாண்டம்)
கதஞ்சிதுபகாரேண க்ருதேநைகேந துஷ்யதி,ந ஸ்மரத்யபகாராணாம் சதமபி ஆத்மவத்தயா
தனக்கு எவரேனும் உபகாரம் செய்யவேணுமென்கிற எண்ணத்தோடு செய்கையன்றியே
அபுத்திபூர்வகமாகச் செய்ததாயிருந்தாலும்,
அதையும் பேருதவியாகக் கொண்டு மகிழ்பவனாம் இராமன்..
நெஞ்சாரவே நூற்றுக்கணக்கான தீங்குகள் செய்யினும் அவற்றை நெஞ்சில் கொள்ளானாம்…

வெறிதேயருள் செய்வர் என்ற ஆழ்வார் வாக்குப்படி
ஒன்றும் செய்யாதவர்க்குங்கூட மிகச்சிறந்த அருள்செய்யுமியல்வினன் அன்றோ!!.

விபீஷணனுக்கும் ஸுக்ரீவனுக்கும் இராமபிரான் காட்டியருளின திருவருள் வாயால் சொல்ல வொண்ணாது..
நெஞ்சாலும் நினைப்பதரிது..
இதற்கீடாக அவர்கள் செய்ததென்னென்னில்
வீபீஷணனாவது சரணாகதி செய்தானென்னக்கொள்ளலாம்..
ஸர்வலோக சரண்யாய ராகவாய மஹாத்மநே என்றபடி…

குலபாம்ஸநம் என்றே இராவணனால் அழைக்கப்பட்ட விபீஷணனை
நின்னொடும் எழுவரானோம் என்றல்லவா தோழமை கொண்டான்..
திருமங்கையாழ்வாரும் செல்வ விபீடணற்கு வேறாக நல்லான் என்றாரிறே..

இதற்கு மாறாக ஸுக்ரீவனிடம் இராமனே சரணாகதி செய்ததாய்க்காண்கிறோம்..
லோகநாத:புரா பூத்வா ஸுக்ரீவம் நாதமிச்சதி என்றும்
ஸுக்ரீவம் ஸரணம் கத: என்றும் ப்ரமாணம்…..

பம்பாதீரே ஹனுமதா ஸங்கதோ வானரேண ஹ
என்று ஸுக்ரீவன் கட்டளையாகவே ஹனுமான் இராமனிடம் வந்து சேர்ந்ததையே பேருதவி என்று கொண்டான்..

பொதுவாக நாம் செய்யும் காரியங்கள் இருவகை..
ஸுக்ருதம் துஷ்க்ருதம்
நல்வினை,தீவினை…
ஸுக்ருதம் இருவகை..

ஜ்ஞாத ஸுக்ருதம்…
மனப்பூர்வமாகத் தெரிந்து செய்யும் நன்மைகள்.. “இது செய்யக்கடவோம்”
என்று ஸங்கல்பித்துக் கொண்டு
பேராயிரம் ஓதுமின்கள் என்கிறபடி நாமஸங்கீர்த்தனம், திருவிளக்கெரிக்கை,திருமாலையெடுக்கை போன்றவை..

அஜ்ஞாத ஸுக்ருதம்..
நமக்கும் தெரியாமல் விளையும் நன்மைகள்..
யாத்ருச்சிக, ஆனுஷங்கிக, ப்ராஸங்கிக வழிகளில் நம்மையுமறியால் செய்யும் ஸுக்ருதங்கள்..
இவைகளை எம்பெருமான் தானாக அறிந்து நம்மை விஷயீகரிப்பதற்கு ஹேதுவாகவோ
வ்யாஜமாகவோ கொள்வதைப் பற்றியே அவனுக்கு *க்ருதஜ்ஞன் என்னும் புகழ் ஏற்பட்டது.

ஆளவந்தாரும் தமது ஸ்தோத்ரரத்னத்தில் வசீ வதாந்ய: என்று
எம்பெருமானின் திருக்குணங்களைக்கூறி வருகையில்
க்ருதி க்ருதஜ்ஞ: என்று இக்குணத்தையும் கூட்டிக் கூறியுள்ளார்.

இத்தகைய குணம் இராமனுக்கு உண்டென அறிந்து….
வீபீஷணனுக்கு அபயம் அளிக்கவேண்டாவென அறிவித்த ஸுக்ரீவனின் பாதங்களைக் கண்டித்து
“விபீஷணனுக்குத் திருவுள்ளம் பற்றியே தீருவேன்,அவனை நீயே அழைத்து வா” என்று
ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட! தத்தமஸ்யாபயம் மாயா என்று கூறி
மேலும் விபீஷணோ வா ஸுக்ரீவ! யதிவா ராவண ஸ்வயம்! என்றாரிரே!🙏🙏🙏

(ஸ்ரீ காஞ்சி ஸ்வாமி)

வாசகதோஷ: க்ஷந்தவ்ய:🙏🙏

பட்டாபிஷேக திருக்கோலத்தில்
சக்ரவர்த்தித் திருமகன் திருவீதி புறப்பாடு கண்டருளுகிறார் 🙏🙏

———–

வான்மீகி நாரத ஸம்வாதத்தில் ஐந்தாவது வினா…
க: ஸத்யவாக்ய: ??
ஸத்யவாக்யன் யாவன்??.

பகவத்கீதையில் 10வது அத்யாயத்தில் 4வது ஸ்லோகத்தில்
க்ஷமா ஸத்யம் தமச் சம: என்னுமிடத்தில் .. தான் கண்டபடியே சொல்வது ஸத்யம் என்று ஸ்ரீ ராமானுஜ பாஷ்யம்….

வ்யாஸஸ்ம்ருதியில்
ஸத்யம்பூதஹிதம்ப்ரோக்தம்….ப்ராணிகளுக்கு ஹிதமாயிருப்பதொன்றே ஸத்யமென்றும்
அஹிதமானால் ஸத்யமன்று அஸத்யமே.. என்று….

மேலும் ஸத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் ஸத்யம் அப்ரியம்..
என்று ஒரு வசனம்….

ஒருவன் சொல்கிற வசனத்தினால் அனர்த்தம் விளையுமாயின் அது ஸத்யவசனமாகாது..
அஸத்யவசனமாகவே கொள்ளத்தகும்…

மஹாபாரதத்தில் வீதஹவ்யனென்னும் க்ஷத்திரியனுடைய கதையில் ,அரசன் தன் நூறு புதல்வர்களையும்
சத்ருவிடம் பறிகொடுத்துவிட்டு தான் ப்ருகுமஹர்ஷியின் ஆஸ்ரமத்தில் தஞ்சமடைகையில்
சத்ரு அரசன் இவனைத் தேடி வந்து மஹர்ஷியிடம் வினவ,
முனிவன் நேஹாஸ்தி க்ஷத்ரிய: கச்சித் ஸர்வே ஹீ மே த்விஜாயத: என்று
க்ஷத்ரியர் ஒருவருமில்லை அந்தணர்களே உள்ளோம் என்றார்..

தர்மஸ்ய தத்த்வம் நிஹிதம் குஹாயாம்என்று மஹாபாரதத்திலும் ஸூக்ஷ்ம: பரமதுர்ஜ்ஞேயஸ் ஸதாம் தர்ம: ப்லவங்கம! என்று
ஸ்ரீராமாயணத்திலும் கூறப்பட்டுள்ளபடி.

தர்மஸூக்ஷ்மங்கள் அல்ப ச்ருதர்கட்கு அறிவரிது…..

ராமோ த்விர் நாபி பாஷதே என்று ஸ்ரீராமனே கைகேயியிடத்திலும்
அந்ருதம் நோக்த பூர்வம் மே ந ச வக்ஷ்யே கதாசன
ஏதத்தே ப்ரதிஜாநாமி ஸத்யேநைவச தே சபே என்று ஸுக்ரீவனிடத்திலும் சொன்னானாயிற்று.

ஸ்ரீக்ருஷ்ணாவதாரத்தில் யசோதை ததிபாண்டனிடம் *என் மகன் இங்கு வந்தானா?”என்ன,
ததிபாண்டன்”அவன் இங்கு வரவில்லை அவனை நான் அறியேன்”என்று சொல்லி
தயிர்த்தாழிக்குமுட்பட மோக்ஷம் பெற்றுப்போனான்….

ஆனால் தசரதன் கைகேயிக்குக் கொடுத்தவரமோவென்னில்
ராமோ விக்ரஹவாந் தர்ம: என்கிற ஸித்த தர்மத்தை இழக்கைக்குறுப்பாயிற்று…

மேலும் தசரதன் கைகேயியிடம் இராமனைப் பற்றி எடுத்துரைக்கையில்
ஸத்யேந லோகாந் ஜயதி என்கிற ப்ரஸித்த ஸ்லோகரத்னத்தைக்கூறுகிறான்…..
இது நம்பிள்ளை வைபவத்தில் ப்ரஸித்தமாய்க்கூறப்பட்டுள்ளது..

பட்டர் ஸந்ததியில் மஹாவித்வானான நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர் ஒருமுறை ராஜஸபைக்குச்சென்றிருந்தார்.
அரசன், இராமன் நாராயணத்வப்ரயுக்தமான பெருமையை மறைத்துக்கொண்டு
அஜ்ஞரைப்போலவும் அசக்தரைப்போலவும்இருந்துகொண்டு
மயா த்வம் ஸமநுஜ்ஞாதோ கச்ச லோகாந் அநுத்தமாந் என்றது எப்படிப் பொருந்தும் என்ன..

நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர் சொல்வதறியாது திகைக்க,

அச்சமயம் அரசன் சிறுபோது அந்யபரராயிருக்க,

அச்சபையில் யாத்ருச்சிகமாய் நம்பிள்ளையின் பழுத்த சிஷ்யரைக் காணநேரிட அவரிடம்
“நம்பிள்ளை இதனை எப்படி நிரவஹிப்பர்”என்று வினவ

அவரும் ஸத்யேன லோகாந் ஜயதி என்ற ஸ்ரீஸூக்தி கொண்டு நிர்வஹிப்பர் என்று சொல்ல,

அரசனும் திரும்பிவந்து மீண்டும் பட்டரை வினவ, தசரதன் வாக்குப்படி ஸத்யத்தினாலேயே
லோகங்களை வென்றாராதலால் ஸாத்யமாயிற்று என்று கூற அபரிமித ஸன்மானங்களோடு கௌரவித்தான்.

பட்டரும் நம்பிள்ளையின் பெருமையுணர்ந்து நேரே அவரிடம் தெண்டனிட்டு
*தேவரீருடைய ஸ்ரீஸூக்திகளில் சிந்திப்போம் ஒரு சொல்லு பெற்ற ஸத்காரமிது” என்று
ஸமர்ப்பித்தாரென்பது ஐதீஹ்யங்களினின்று தெரியவருகிறது..

மேலும்…
தசரதன் இராமனுக்கு மகுடாபிஷேகஞ் செய்ய நிச்சயித்த ஸமயத்தில் கைகேயியின் வாக்குக்குக் கட்டுப்பட்டு,
காட்டுக்கு போகச்சொன்ன போது இராமனுக்கு வருத்தமேயில்லையென்றும்
வநவாஸோ மஹோதய என்று இராமனும் வநவாசம் மகிழ்ச்சியே என்றான்.

கம்பனும் அவன் திருமுகச்செவ்வி அப்போதலர்ந்த தாமரையை வென்றதம்மா! என்கிறார்…

ஆனால் ஸ்ரீ ராமனை அஸத்யவாதியென்கிற பூர்வபக்ஷம்…
எங்ஙனமென்னில்
இராமன் பஞ்சவடியில் ஸீதையைப் பிரிந்த வருத்தத்தில்
ராஜ்யாத் ப்ரம்சோவநேவாசோ நஷ்டா ஸீதா ஹதோ த்விஜ: ஈத்ருசீயம் மமாலக்ஷ்மி: நிர்தஹேபி பாவகம் என்று
“கிடைக்கவேண்டிய ராஜ்யம் அந்தோ!கிடைக்காமல் போயிற்று;காட்டில் வந்து திண்டாட வேண்டியதாயிற்று”.. என்று
பெருந்துயராக அடிவயிற்றில் உள்ளபடியால் வநவாஸோ மஹோதய என்பது அஸத்யமே….
என்கிற ஸங்கைக்குப்பரிஹாரமாவது….

ராஜ்யாத் ப்ரம்சோ வநேவாஸ: என்று பரிதபித்துச்சொன்னது,
எதனால் எந்த ஸமயத்தில் என்றால் பிராட்டியையும்பிரிந்து,
பரமபாகவதோத்தமரான ஜடாயுமஹாராஜரையுமிழந்த பரிதாபம் பொறுக்கொணாதிருந்த ஸமயத்திலேயாதல்
தன் திருவுள்ளம் உடைகுலைப்படவேயாதலால்…
எந்த விருப்பத்தினால் முதலில் குதூஹலம்உண்டாயிற்றோ
அந்த விருப்பம் முட்டுப்பட்டால் முன்னிருந்த குதூஹலம் மாறுபடும் இது உலகநீதியேயாம்.
இதனால் வநவாஸோ மஹோதய என்கிற வசனம் பொய்யாக நினைக்கவொண்ணாததே….. 🙏🙏
(ஸ்ரீ காஞ்சி ஸ்வாமி)

வாசக தோஷ: க்ஷந்தவ்ய:🙏🙏

ஸத்யவாக்யனான
சக்ரவர்த்தித் திருமகன் இன்று நாச்சியார் திருக்கோலத்தில்
திருவீதி புறப்பாடு கண்டருளுகிறார் 🙏🙏🙏🙏

———-

ராம்:கமலபத்ராக்ஷ:ஸர்வஸத்த்வ மனோகர: ரூபதாக்ஷிண்ய ஸம்பந்ந: ப்ரசூதோ ஜனகாத்மஜே🙏

வான்மீகி நாரத ஸம்வாதத்தில் ஆறாவது வினா…..
கோ த்ருடவ்ரத:?
ஒரு கார்யத்தைச்செய்து முடிக்க வேண்டுமென்கிற திடமான ஸங்கல்பத்தில்
சிறிதும் தளராமல் திடமாக இருக்கப்பெறுவதே
திடமான விரதமுடையவன்
(த்ருடவ்ரதன்)……
இராமனின் திடமான விரதம் சரணாகத பரித்ராணம்🙏

பிராட்டி இராவணனுக்கு உபதேசிக்கையில்., விதிதஸ் ஸஹி தர்மஜ்ஞ: சரணாகத வத்ஸல: என்று……
அடைக்கலம் புகுந்தவர்களுக்கு அஞ்சேல் என்று அபயமளித்து
இஷ்டப்ராப்தியையும் அநிஷ்டநிவ்ருத்தியையும் செய்து காத்தருள்வதே இவ்வவதாரப்ரயோஜனம் ….என்றாளிறே..

ஸ்ரீவேதாந்ததேசிகனும்
நமஸ்தஸ்மை கஸ்மைசந பவது நிஷ்கிஞ்சன ஜநஸ்வயம் ரக்ஷா தீக்ஷா ஸமதிக ஸமிந்தாநயசஸே
என்று அகிஞ்சநர்களான ப்ரபந்நர்களைத்
தம் பேறாகக் காத்தருள்வதில் தீக்ஷைகொண்ட பெரும்புகழாளன் என்று அபயப்ரதானஸாரத்திலும்…

ஸர்வாவஸ்த ஸக்ருத் ப்ரபந்ந ஜநதா ஸம்ரக்ஷணைகவ்ரதீ என்று
தசாவதார ஸ்தோத்ரத்தில் அடியார்களைக்காப்பதில் திடமானவுறுதியையுடையவன் என்றும்
ஸ்ரீ ஸூக்தி……

ஸ்ரீராமாயணத்தில் ஆரண்யகாண்டத்தில்
சரபங்கமுனி ஆஸ்ரமத்தில் அங்குள்ள முனிவர்கள்,”சரபங்கமுனிவரை அனுக்ரஹித்த
கீர்த்தியையும் விராதனைக்கொன்றவீரமுமுடைய ராமா!!!
அந்தணர்களான நாங்களனைவரும் அநாதர்களாக,
தேஹம் முழுவதும் அரக்கர்களால் அடியுண்டு காயங்களுடன் பொறுத்திருக்கவும் பரிஹரிக்கவும் வல்லமையற்றிருக்கிறோம்..
உன்னை சரணடைகிறோம் என்று சொல்ல,

இராமன்
“முனிவர்காள்! நீங்கள் எனக்கு கட்டளையிவேண்டுமன்றி இங்ஙனம் வேண்டலாகாது.
தந்தைசொல்
பேணுதலென்னும் வ்யாஜத்தினால் உங்கள் கார்யத்தை நிறைவேற்றவே வந்துள்ளேன்.
இன்னல் விளைக்கும் அரக்கர்களை வதஞ்செய்தொழிப்பது திண்ணம்”
என்று அவர்கட்கு அபயம் அளித்துச் சென்றான்….

ஆனால் பிராட்டி அதை மறுக்கும் விதமாக “ராமா!, உலகில் மிகக்கொடியனவென்று சொல்லப்பட்ட
மூன்று தீயசெயல்களுள் முதல் இரண்டாகிய பொய் சொல்லுதலும் பிறர் மனைவியை வேட்டலும்
நீர் நெஞ்சாலும் நினைக்கமாட்டீரென்பதை நன்கறிவேன்..
ஆனால் மூன்றாவதான பகையின்றிப் பரஹிம்சை செய்தல் என்பது க்ஷத்திரிய வ்ருத்தியைவிட்டுத்
தாபஸ வ்ருத்தியைக் கைப்பற்றியிருக்கும் உமக்குத் தர்மமெனக்கொள்ளகில்லேன்..
ஆழி சூழ் உலகமெல்லாம் பரதனேயாள நீ போய்த் தாழிருஞ்சடைகள் தாங்கித் தாங்கருந்தவ மேற்கொண்டு
பூழிவெங்கான நண்ணிப் புண்ணிய புனல்களாடிவா! என்று நியமிக்கப்பட்டுக்
கானகம் வந்த நீர் ஆயுதமேந்துதல் தகாத தொன்று… என்று விண்ணப்பித்தாள்….

பிராட்டிக்கு மறுமாற்றமுரைத்த இராமன்,
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம்வா ஸீதே ஸலக்ஷ்மணாம் ந து ப்ரதிஜ்ஞாம் ஸம்ச்ருத்ய ப்ராஹ்மணேப்யோ விசேஷத:
இதன் பொருள்….
ஸீதே! நான் என்னுயிரைவிட்டாலும் விடுவேன்.உன்னையும் இலக்குமணனையும் விட்டாலும் விடுவேன்..
கொடுத்த ப்ரதிஜ்ஞையை அதிலும் ப்ராஹ்மணர்களுக்குக் கொடுத்த ப்ரதிஜ்ஞையை எள்ளளவும் தவறமாட்டேன் என்பதாம்…..

மேலும்…
ஸத்ருசஞ் சாநுரூபஞ்ச குலஸ்ய தவ சாத்மந: ஸதர்மசாரிணீ மே த்வம் ப்ராணாப்யோபிகரீயஸீ…
இதன்பொருள்…
ஸீதே! நான் செய்ய நினைக்கும் தர்மத்தையே நீயும் ஸங்கல்பிக்கவேண்டும்.
நீ என் வழியொழுகுவதே உற்றது… என்பதே என்றான்…….

விபீஷணன் தன்னோடொத்த நால்வருடன் கிளம்பி வந்து வானத்திலே நின்று இராமபிரான் தன்னை
அங்கீகரிக்குமாறு செய்யவேண்டும் என்று வானர
முதலிகளை வேண்ட, சுக்ரீவன் முதலானோர் விபீஷணன் சேர்த்துக் கொள்ள தகுதியற்றவனென்று ஆக்ஷேபிக்க,
அப்போது இராகவன்
சரணாகதனைக் கைவிடுதல் தகுதியன்று என்று தனக்குள்ள ஆச்ரிதரக்ஷண பக்ஷபாதத்தையும்
*அதில் திடமான வ்ரதத்தையும் எடுத்துரைத்தானாயிற்று….

இக்கருத்தைக் கபோதோபாக்கியானத்திலும்….
வ்யாக்ர வாநர ஸம்வாதத்திலும்
கண்டுகொள்க…..

இப் ப்ரகரணத்தில் இராமனுடைய அமுதமொழியாக வால்மீகி
காட்டியுள்ள ஸ்லோகங்களில் இரண்டு ஸ்லோகங்கள் உயிரான வை…….
மித்ரபாவேன ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் ஸதா மேததகர்ஹிதம்…

ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே
அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம….
என்னுமிவையிரண்டும் ஸ்ரீராமசரமஸ்லோகங்களென்றே குலாவப்படும்..

முதல் ஸ்லோகத்தில்
ந த்யஜேயம் கதஞ்சன என்பதும் இரண்டாம் ஸ்லோகத்தில்
ஏதத் வ்ரதம் மம என்பதும்
உயிரான வார்த்தைகள்…

ஆக, இராமபிரான் அடைக்கலம் புகுந்தவரைக் காத்தருள்வதில் திடவ்ரதன் என்பதை
அவனுடைய திருமுகப் பாசுரங்களினாலும் அவரது சரிதைகளினாலும் தெரியவருகிறது.

(ஸ்ரீ காஞ்சி ஸ்வாமி)

வாசக தோஷ: க்ஷந்தவ்ய:
🙏🙏🙏🙏

ஒரு தனி அரந்தையை ஒரு நால் இரு நீர் மடுவுள் தீர்த்தனை என்னும்படி…..
சக்ரவர்த்தித் திருமகன் இன்று
யானை வாகனத்தில்
திருவீதி புறப்பாடு கண்டருளுகிறார் 🙏

———

கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆரூஹ்ய கவிதாஸாகாம் வந்தே வால்மீகி கோகிலம்🙏

வான்மீகி நாரத ஸம்வாதத்தில் இராமனின் திருக்குணங்கள் பற்றிய வினாக்களில் அடுத்து ஏழாவது வினா….
சாரித்ரேண ச கோ யுக்த:…??

சாரித்ரமாவது நன்னடத்தை,நல்லொழுக்கம்..இவையிரண்டும் உள்ளவன் யாவன்??
நல்லொழுக்கமென்பது பொதுப்பெயர்…
பெரியார்களைப் பணிதல்
தந்தை தாய் பேணுதல்
சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கருமங்களை வழுவறச்செய்தல்
தெய்வபக்தியுடைமை
பிறரை நலியாமை
பிறர் பொருள் தாரம் என்றிவற்றைக்கவர நெஞ்சாலும் நினையாமை என்று
இனைய வொழுக்கங்களுக்குப் பொதுப்படையான பெயர்.

பெரியார்களைப் பணிதல்
மனிதர்களுக்கு தன்னோடொத்தவர, தன்னிலும் பெரியோர்,தன்னைவிடத்தாழ்ந்தவரென்று
மூன்று வகுப்பினர் உண்டாயினும் இராமன் ஒத்தார் மிக்கார் இலையாய மாமாயா வென்னும் பரத்வமுடையவனாயினும்..
ஆத்மாநம் மானுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம்

———————

தர்மாத்மா சத்யசந்தஸ்ச ராமோ தாசரதிர் யதி |

பௌருஷே சாப்ரதித்வந்த்வ: ஶரைனம் ஜஹி ராவணிம் ||🙏

வான்மீகி நாரத ஸம்வாதத்தில் எட்டாவது வினா….
ஸர்வபூதேஷுகோ ஹித:?
இனிமையாயிருப்பது ப்ரிய மென்றும்
இனிதாகவல்லாமல்
வெறுக்கத்தக்கதாயிருந்தாலும் பிற்காலத்தில் மிக்க நன்மை பயக்கக்கூடியதாக இருப்பது
எதுவோ அது ஹித மெனப்படும்…

உலகில் தாயாரை ப்ரியபரையென்றும் தகப்பனாரை ஹிதபரரென்றும் சொல்வர்….
மேலாத் தாய்தந்தையும் அவரேயினி யாவாரே என்றும்
தஞ்சமாகிய தந்தைதாயொடு தானுமாய் என்றும்
தாயாய்த்ந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்என்றும் ஆழ்வார்களருளிச் செய்தபடி
தாயாயுமுளன் தந்தையாயுமுளன்.

உபநிஷத்துக்களும் .. மாதா பிதா ப்ராதா நிவாஸச்சரணம் ஸுஹ்ருத் கதிர் நாராயண:.. என்று..
அப்ரியமான ஹிதங்களைச்
செய்வதுபற்றியே
ஸர்வபூதேஷு கோ ஹித: என்னும் வினா விளைந்தது…

குலசேகராழ்வாரும்
தான் நோக்காது எத்துயரம் செய்திடினும் தார்வேந்தன் கோல்நோக்கி வாழுங் குடிபோன்றிருந்தேனே என்றும்
வாளாலறுத்துச்சுடினும் மருத்துவன்பால் மாளாதகாதல் நோயாளன்போல் என்றும்
த்ருஷ்டாந்தங்கள் குறிக்கொள்ளத்தக்கவை…

ஹரிர் துக்கானி பக்தேப்யோ ஹிதபுத்த்யா கரோதிவை சஸ்த்ரக்ஷாராக்நி கர்மாணி ஹிதபுத்த்யா யதா பிஷக் என்று
வடமொழிப் புலவர்களும் மேற்கூறிய அரசனும் மருத்துவரும் போலே
பகவானும் பக்தர்களுக்கு ஹிதபுத்தியினாலேயே துக்கங்களை விளைவிக்கிறான்..

தத்வத்ரய ரஹஸ்யத்தில் பிள்ளை லோகாச்சார்யர்யர்….
சிலரை ஸுகிகளாகவும் சிலரை துக்கிகளாகவும் ஸ்ருஷ்டித்தால் ஈஸ்வரனுக்கு
வைஷம்ய நைர்க்ருண்யங்கள்வாராதோ வென்னில்*
*கர்மமடியாகச் செய்கையாலும் மண்தின்றப்ரஜையை
*நாக்கிலே குறியிட்டு அஞ்சப்பண்ணும் மாதாவைப்போலே* *ஹிதபரனாய்ச் செய்கையாலும்
வாராது* என்று ஸ்ரீ ஸூக்தி🙏

ஸ்ரீராமாயணத்தில் , மழைக்காலம் வந்தவளவிலும் முன்பே சொன்னபடி சுக்ரீவன் சேனைகளுடன்
வந்திலனென்று திருவுள்ளத்தில் மிக்க சீற்றம் பிறந்து இலக்குவனையழைத்து
வெம்புகண்டகர் விண்புக வேரறுத்து இம்பர் நல்லறஞ்செய்ய எடுத்தவில்
கொம்புமுண்டு அருங்கூற்றமுமுண்டு உங்களம்புமுண்டென்று சொல்லு நம்மாணையே……
துஷ்டநிக்ரக்ஹஞ்செய்து இவ்வுலகில் தர்மத்தை நிலைநாட்டுதற்பொருட்டு
நாம் கையிலேந்திய வில் வாலியோடு தொலைந்திலது இன்னமுமுளது.
யமதர்மராஜனுமுளன்வானரவீரர்களாகிய உங்களையும் கொல்லவல்ல அம்பும் நம்மிடமுண்டு.
என்றிங்ஙனம் நமது கட்டளையாக சுக்ரீவனுடன் சொல்லுக என்றும்
வாரலிராவெனின் வானரப்பேரும் மாளுமெனும் பொருள் பேசுவாய் என்று வராமற்போனால்
வானரமென்கிற பேரும் உலகத்தில் இல்லாதொழியுமென்கிற உண்மையை நீ சென்று தெரிவிப்பாயாக என்று
சொல்லியனுப்புகிறார் பெருமாள்… என்று கம்பன் கூற்று..

வால்மீகி இராமாயணத்திலும் கிஷ்கிந்தா காண்டத்தில் இராமன்,
“லக்ஷ்மணா சுக்ரீவன் செய்ந்நன்றி மறந்து இன்னம் வாராதிருக்கிறான்.
வாலி சென்ற வழி அவனுக்கும் திறந்திருக்கறதென்பதையும்,
சுற்றத்தோடு யமபுரம் அனுப்ப நான் சித்தமாயிருப்பதையும் தெரிவிப்பாயாக” என்று சொன்னான்.

கதஞ்சிதூபகாரேண க்ருதேநைகேன துஷ்யதி ந ஸ்மரத்யபகாராணாம் சதமபி ஆத்மவத்தயா என்று
நூற்றுக்கணக்கான தீங்குகள் செய்யினும் அவற்றை நெஞ்சில் கொள்ளாதே,
புத்தி பூர்வமாகவோ அபுத்திபூர்வமாகவோ சிறு உதவி செய்தாலும் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறான் என்று சொல்லியிருக்க,
அக்னிசாக்ஷியாகக் கொள்ளப்பட்ட உயிர் நண்பன் சுக்ரீவனிடத்தில் த்ரோஹசிந்தனை கொள்வது ஏதென்னில்
ப்ரியஞ்செய்வதிற்போலேயே ஹிதஞ்செய்வதிலும் ஊற்றமுடையவன் என்றபடி ஹிதவகுப்பில் சேர்க்கத்தக்கதே…..

இராவணவதம் ஆனபிறகு பிராட்டி அக்னிப்ரவேசம் செய்வதற்குறுப்பாகப்
பெருமாள் சொன்ன கடுஞ்சொற்களும் ஹிதவகுப்பிலே சேர்க்கத்தக்கதே…

நாரதமுனிவரை நோக்கி, கோ ஹித: என்று இவ்வளவே கேளாமல் வால்மீகி,
ஸர்வபூதேஷு கோ ஹித: என்று கேட்டிருத்தலால் ஸர்வபூதங்களிடத்தும் ஹிதபரனாக இருப்பவன் என்று
ஸர்வேஸ்வரன் தன்மையை நெஞ்சில் கொண்டே கேட்டதாக விளங்குகிறது..
ஹரிர் துக்கானி பக்தேப்யோ ஹிதபுத்த்யா கரோதி வை என்று சாஸ்த்ரமும் சொல்லிவைத்ததன்றோ…!!🙏

(ஸ்ரீ காஞ்சி ஸ்வாமி)
வாசக:தோஷ: க்ஷந்தவ்ய:
🙏🙏🙏🙏

இன்று திருத்தேரில்
ஆரோஹித்து திருவீதி புறப்பாடு கண்டருளும்,
ஸீதா லக்ஷ்மண ஹனுமத் ஸமேத
ஸ்ரீ ராமச்சந்த்ரப்ரபு

————-

ஜயத்யதிபலோ ராமோ லக்ஷ்மணஸ்ச மஹாபல:/
தாஸோஹம் கோசலேந்த்ரஸ்ய ராமஸ்ய அக்லிஷ்ட கர்மண://🙏

வான்மீகி நாரத ஸம்வாதத்தில் ஒன்பதாவது வினா…
க:வித்வாந் ??
அநேக சாஸ்த்ரங்களை விசேஷமாக அறிந்தவர்களையே வித்வானென்று வழங்குவர்…

நாரதர்
வேதவேதாங்க தத்வஜ்ஞ: தநுர்வேதேச நிஷ்டித:
ஸர்வசாஸ்த்ரார்த்த தத்வஜ்ஞ: ஸ்ம்ருதிமாந் ப்ரதிபாநவாந் என்று
வேத,வேதாங்கங்கள் தத்வங்கள்,தநுர்வேதம் சாஸ்த்ரார்த்தங்கள் மற்றும் ஜ்ஞாபக,ப்ரதிபா ஸக்தியுடையவன்
இராமபிரானென்று அவன் வித்வத் தன்மையை தெரிவிக்கிறார்…
பகவதம்சமாகையாலே ஸ்வத: ஸர்வஜ்ஞனாயிருக்கச்செய்தேயும் வசிஷ்டரிஷி பக்கலில் சிஷ்யவ்ருத்தி செய்து
ஸகலசாஸ்த்ரங்களையும் வரியடைவே ஓதியுணர்ந்து இளமையிலேயே வித்வாந் என்று பெயர் பெற்றவன்….

விராதனும்
வேதங்களறைகின்ற உலகெங்கும் விரிந்தனவுன்
பாதங்களிவையென்னில் படிவங்களெப்படியோ?
ஓதங்கொள் கடலன்றி யொன்றினோடொன்றொவ்வாப்
பூதங்கள் தொறுமுறைந்தால் அவையுன்னைப் பொறுக்குமோ? என்றும்,

கவந்தனும்
ஆதிப்பிரமனுநீ ஆதிப்பரமநுநீ
ஓதியுறுபொருளுக் கப்பாலுண்டாயினுநீ
சோதிச்சுடர்ப்பிழம்பு நீயென்று சொல்லுகின்ற
வேதமுரைசெய்தால் வெள்காரோ வேறுள்ளார் என்று இராமனை வேதவேத்யனாகவே சொல்லித்துதிக்கின்றனர்…

ஸ்ரீராமாயணத்தநியனும்
வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தஸரதாத்மஜே என்று ப்ரஸித்தி…

வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம்
என்று புருஷஸூக்தத்தையுட்கொண்டே
விஸ்வாமித்ரமுனிவனும்
அஹம் வேத்மி மஹாத்மாநம் ராமம் ஸத்யபராக்ரமம் வசிஷ்டோபி மஹாதேஜா யேசேமே தபஸி ஸ்திதா: என்று
தசரதனிடம் சொல்லப்பட்டதாக வ்யாக்யானங்கள்….

ஆக, வேதமுதற்பொருளாய்
ஸகலசாஸ்த்ரப்பொருளாய் தன்னைப்பற்றி தோன்றிய சாஸ்த்ரங்களைத்
தாமே கற்பனோ?வசிஷ்டமுனிவர் தாம் கற்பிப்பரோ? யென்னில்……

தசரதமன்னவன் புத்ரகாமனாய் வேள்வியியற்றும்போது அங்கு வந்த தேவர்கள்
இராவணனது நலிவுகளைக்கூறி வருந்துகையில்
ஏதஸ்மிந்நந்தரே விஷ்ணுரூபயாதோ மஹாத்யுதி: என்று
ஸ்ரீமஹாவிஷ்ணு அவ்விடம் வந்து தோன்றி அபயமளித்து மறைந்ததாகச்சொல்லிற்று….

மேல் அயோத்யா காண்டம் முதல் ஸர்க்கத்தில்
ஸஹிதேவைருதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி: அர்த்திதோ மாநுஷே லோகே ‌ஜஜ்ஞே விஷ்ணுஸ்ஸநாதந: என்று
கொழுத்துத் திரியுமவனான இராவணனது வதத்தை விரும்பின தேவர்களால் ப்ரார்த்திக்கப்பட்ட
ஸ்ரீமஹாவிஷ்ணு மாநிடவுலகில் வந்து பிறந்தானென்று…….

இதெல்லாம் ஒரு புறமிருக்க…..
யுத்த காண்டத்தில் பிராட்டி அக்னிப்ரவேசம் செய்யும் ப்ரகரணத்தில் ஸகலதேவர்களும்,
கர்த்தா ஸர்வஸ்ய லோகஸ்ய ச்ரேஷ்டோ ஜ்ஞானவதாம் வர:
உபேக்ஷேஸ கதம் ஸீதாம் பதந்தீம் ஹவ்யவாஹனே கதம் *தேவகணஸ்ரேஷ்டம்
ஆத்மாநம் நாவபுத்யஸே*
“இராமா!! ஸர்வேஸ்வரன் என்பதை அறியகில்லாயோ? என்று……..

அதற்கு இராமன்
ஆத்மாநம் மானுஷம் மந்யே என்று நாராயணனாயினும் மானிடவேடம்பூண்டு வந்திருக்கிறேன் என்று…..
வேதங்களையும் வேதாங்கங்களையும் வேதாந்தங்களையும் ஓதினானென்பதையும்,
ஸஹபத்ந்யா விசாலாக்ஷ்யா நாராயணமுபாகமத் என்று ஸ்ரீமஹாவிஷ்ணுவுக்கு ஆராதனமான
யஜ்ஞங்களை நடத்தினானென்பதையும் வைத்து வித்வான் என்று பெயர் பெற்றதில் யாதொரு குறையுமில்லை…

வித்வாந் என்பதற்கு ஸர்வஜ்ஞன் என்றபடி…
பகவான் என்பது ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் ஆகிய குணங்களுடைமை…

இதில் ஞானத்தைப் பற்றி பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவ உத்தர சதகத்தில்…
யுகபதநிசமக்ஷை:ஸ்வைஸ் ஸ்வதோவாக்ஷகாரயே நியமம் அநியமம் வா ப்ராப்ய ரங்காதி ராஜ
கரதலவதசேஷம் பச்யஸி ஸ்வப்ரகாசம் ததவரணமமோகம் ஜ்ஞானமாம்நாஸிஷுஸ்தே என்று
ப்ரத்யக்ஷம் பரோக்க்ஷம் என்கிற வாசியின்றிக்கே
அனைத்தையும் கையிலங்கு நெல்லிக்கனி போல் காணவல்லர் என்று…..

உபநிஷத்துக்களிலும்
பச்யதி அசக்ஷுஸ்(கண்கிடையாது;காணாத தில்லை)
ஸ ஸ்ருணோதி அகர்ண: (காதுகிடையாது;கேளாத தில்லை)
அபாணிபாதோ ஜவநோ க்ரஹீதா(கால் கிடையாது; ஆனால் எங்கும் விரைந்து செல்கிறான்)என்று…..

உள்ளுவாருள்ளிற்றெல்லாம் உடனிருந்தறிதி என்று தொண்டரடிப்பொடியாழ்வாரும் …..
கருதரியவுயிர்க்குயிராய்க் கரந்தெங்கும் பரந்துறையுமொரு தனி நாயகமென்றால் உன் பெருமைக்களவாமோ? என்று
பிள்ளைப்பெருமாளையங்கார் பணித்தபடி
எங்கும் நிறைந்துறையும் பரம்பொருளான பெருமான் அறியாததொன்றுண்டோ??

காளிதாஸமஹாகவி
ரகுவம்சத்தில் கார்த்தவீர்யார்ஜுனனுடைய பெருமையை எடுத்துரைக்குமிடத்தில்
அகார்யசிந்தா ஸமகாலமேவ ப்ராதுர்ப்பவந் சாபதர:புரஸ்தாத்
யாரேனுமொருவன் தப்புக்கார்யத்தை நெஞ்சால் நினைத்தாலும் அப்பொழுதே
இவ்வரசன் வில்லுங்கையுமாய் நின்று சிக்ஷிக்குமவன் என்று…….

அற்பனான ஓர் அரசனது பெருமையிதுவானால் உபநிஷத்துக்களில் அற்புதமான ஞானசக்திகள் வாய்ந்த
பகவானது பெருமை யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித்;பரா அஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே என்று புகழப்பட்டுள்ளது….

கஜேந்த்ராழ்வான் முதலைதன்னால் அடர்ப்புண்டபோது
பரமாபதமாபந்நோ மனஸா அசிந்தயத் ஹரிம் என்று நெஞ்சால் நினைத்தவளவிலும்
அதேக்ஷணத்தில் அதையறிந்து திருநாட்டிலிருந்து அரைகுலையத் நிலைகுலைய ஓடிவந்து
காத்தருளின பெருமானது அறிவின் கனம் யாரே அறிகிற்பார்???

வித்வாந் என்பதற்கு
தோஷங்களையறியுமவன் வித்வாந் விபச்சித் தோஷஜ்ஞ: என்று அமரகோசம்….
ஆனால் லோகவிலக்ஷணனான இராமபிரான் குணஜ்ஞனான வித்வாநன்றி தோஷஜ்ஞனான வித்வாநல்லன்…..

விபீஷண சரணாகதி யில் *துஷ்டனாகையாலே கொள்ளலாகாதென்று சுக்ரீவபக்ஷம்..
யோக்யனாகையாலே கொள்ளலாமென்பது மாருதி பக்ஷம்..
மூன்றாம் பக்ஷமாக பெருமாள் துஷ்டனாகையாலே கொள்ளவேண்டும் என்றாரென்று தேசிகர் திருவுள்ளம் பற்றுகிறார்…

ஸ்ரீராமாயணத்தில் தோஷோயத்யபி தஸ்ய ஸ்யாத் ஸதா மேததகர்ஹிதம்
என்று ஸ்லோகம்…
யத்யபி என்பதை
வெறும் வாக்யாலங்காரமாகத் தள்ளிவிட்டு தோஷ: தஸ்ய ஸ்யாத் ..தோஷம் அவனுக்கு இருக்க வேணும்
என்பதாகப் பொருள் காட்டுகிறார்.

குன்றனைய குற்றஞ்செய்யினும் குணங்கொள்ளும் என்று பொய்கையாழ்வார் பாசுரத்தின் படி
குணங்கொள்ளும் இயல்வினனான இராமன் குற்றங்களை நெஞ்சில் கொள்ளான்… என்றபடி..

ஆக,இவ்விஷயங்களெல்லாம் க:வித்வாந்? என்கிற கேள்வியில் அடங்கியுள்ளன
என்றுணர்க…. 🙏
(ஸ்ரீ காஞ்சி ஸ்வாமி)

வாசகதோஷ:
க்ஷந்தவ்ய:🙏.

ஏஷ ஸர்வஸ்ய பூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத மயா காலமிமம் ப்ராப்ய தத் தஸ் தஸ்ய மஹாத்மந ….. 🙏
பெருமாள் திருவடிக்கு கொடுத்த பரிஷ் வங்கம்🙏
இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த

ஹனுமந்த வாகனத்தை
ஆரோஹித்த
ஸ்ரீ ராமபிரான்
திருவீதி புறப்பாடு கண்டருளுகிறார் 🙏

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading