ஸ்ரீ ப்ரணார்த்தி ஹரா சாரியார் ஸ்வாமிகள் தனியன்- வாழி பாசுரங்கள் –/ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திரு முடி வர்க்கம்–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமியின் தனியன்:

வரதகுரு சரணம் சரணம் வரவரமுநிவர்ய கணக்ருபா பாத்ரம் |
ப்ரவகுண ரத்ண ஜலதிம் ப்ரநமாமி ஸ்ரீநிவாஸ குருவர்யம் ||
தேசிகம் ஸ்ரீநிவாஸாக்யம் தேவராஜகுரோஸ்ஸுதம் |
பூஷிதம் ஸத்குணைர்வந்தே ஜீவிதம் மம ஸர்வதா||

திருநக்ஷத்திரம்: புரட்டாசி (கன்னி) மகம்

தீர்த்தம்: கார்த்திகை சுக்ல பஞ்சமி

அவதார திருத்தலம்: ஸ்ரீ ரங்கம்

ஆசாரியன்: மணவாளமாமுநிகள்

பிரபந்தம் : வரவரமுநி வைபவ விஜயம்

யதிராஜ பாதுகை (எம்பெருமானாரின் திருவடிகள்) என்று போற்றப்பட்ட முதலியாண்டானின் திருவம்சத்தில்
தேவராஜ தோழப்பரின் திருக்குமாரராகவும் , கோயில் கந்தாடை அண்ணனின் திருத்தம்பியாராகவும் ,
கோயில் கந்தாடை அப்பன் அவதரித்தார். பெற்றோர்களால் ஸ்ரீநிவாசன் என்று பெயரிடப்பட்ட இவரே
பிற்காலத்தில் மணவாளமாமுநிகளின் ப்ரிய சிஷ்யரானார்

எறும்பியப்பா மணவாளமாமுநிகளின் அன்றாட வழக்கங்களைக் கொண்டாடும்
தனது பூர்வ தினசர்யையில் கீழ்க்கண்டவாறு மிகவும் அழகாக சாதிக்கிறார் ,

பார்ச்வத: பாணிபத்மாப்யாம் பரிக்ருஹ்ய பவத்ப்ரியௌ
விந்யஸ்யந்தம் சநைர் அங்க்ரீ ம்ருதுலௌ மேதிநீதலே (பூர்வ தினசர்யை 4 )

இந்த சுலோகத்தில் எறும்பியப்பா மணவாளமாமுநிகளை பார்த்து இவ்வாறாகக் கூறுகிறார் ,
“தேவரீரின் அபிமான சிஷ்யர்களை (கோயில் அண்ணன் மற்றும் கோயில் அப்பன் )
இருபுறங்களிலும் தேவரீரின் திருக்கரங்களான தாமரைகளாலே பிடித்து,
தேவரீரின் திருவடித்தாமரைகளை மேதினியில் மெல்ல மெல்ல ஊன்றி எழுந்தருளுகிறீர் “.

தினசர்யைக்கான தனது வியாக்யானத்தில், திருமழிசை அண்ணாவப்பங்கார்,
“இந்த சுலோகத்தில் இரண்டு அபிமான சிஷ்யர்கள் என்று எறும்பியப்பா

கோயில் அண்ணனின் பெருமைகள் எல்லாம் அறிந்த பலர் , அவரிடத்திலே தஞ்சம் அடைய விரும்பினர்.
“காவேரி தாண்டா அண்ணனாய் ” ,கோயில் அண்ணன் எழுந்தருளி இருந்ததால் ,
அவர் தனது திருத்தம்பியாரான கோயில் அப்பனை , பல இடங்களுக்கு சென்று அனைவரையும் திருத்தி பணிகொள்ள நியமித்தார்.
இதனை சிரமேற்கொண்டு கோயில் அப்பன் தானும் திருவரங்கத்திலிருந்து பல இடங்களுக்கு சென்று பலரை பணி கொண்டார்.

————-

திரு முடி வர்க்கம்

1-எம்பெருமானார் -திரு நக்ஷத்ரம் – சித்திரை திருவாதிரை
2-முதலியாண்டான் -திரு நக்ஷத்ரம் – சித்திரை -புனர்வசு –
3-கந்தாடையாண்டான் -திரு நக்ஷத்ரம் -மாசி புனர்வசு –
4-துன்னு புகழ் கந்தாடைத் தோழப்பர்–திரு நக்ஷத்ரம் -ஆடி பூரட்டாதி
5-ஈயான் ராமானுஜாச்சார்யார் -திரு நக்ஷத்ரம் -புரட்டாசி -திருவோணம்
6-திருக்கோபுரத்து நாயனார் -திரு நக்ஷத்ரம் -மாசி -கேட்டை
7-தெய்வங்கள் பெருமாள் -திரு நக்ஷத்ரம் -ஆவணி -திருவோணம்
8-தேவராஜ தோழப்பர் -திரு நக்ஷத்ரம் –சித்திரை- ஹஸ்தம்
9-பெரிய கோயில் கந்தாடை அண்ணன்-திரு நக்ஷத்ரம் -புரட்டாசி -பூரட்டாதி

10-பெரிய கோயில் கந்தாடை அப்பன் -திரு நக்ஷத்ரம் -புரட்டாசி மகம்
தீர்த்தம் -கார்த்திகை சுக்ல பஞ்சமி

11-அப்பு வய்ங்கார் -திரு நக்ஷத்ரம் -வைகாசி -திருவோணம்
தீர்த்தம் -மார்கழி கிருஷ்ணாஷ்டமி
12-அப்பூவின் அண்ணன் வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -சித்திரை – மூலம்
தீர்த்தம் –மாசி -கிருஷ்ண பக்ஷ த்ருதீயை
13-அப்பூவின் அண்ணன் வேங்கடாச்சார்யார்-திரு நக்ஷத்ரம் -சித்திரை -விசாகம் –
14-சாரீரிக தர்ப்பணம் அண்ணன் வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஆனி -ஸ்வாதி –
15-பிரணதார்த்தி ஹராச்சார்யர் –
16-வேங்கடாச்சார்யார் –
17-அப்பூர்ண அப்பங்கார் வேங்கடாச்சார்யார் -திரு நக்ஷத்ரம் -ஆனி -அனுஷம்
18-அப்பூர்ண அப்பங்கார் வரதாச்சார்யர் –
19-பிரணதார்த்தி ஹராச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஸ்வாதி –
20-வரதாச்சார்யர்

22-வேங்கடாச்சார்யார்
23-வரதாச்சார்யர்
24-பிரணதார்த்தி ஹராச்சார்யர்
25-பெரிய அப்பன் வேங்கடாச்சார்யார் -திரு நக்ஷத்ரம் -சித்திரை -கார்த்திகை –
26-பெரிய அப் பூர்ண அப்பயங்கார் வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஆடி -விசாகம்
27-வேங்கடாச்சார்யார் –
28-பிரணதார்த்தி ஹராச்சார்யர் -பங்குனி மகம்
29-பெரிய ஸ்வாமி வேங்கடாச்சார்யார் -ஆனி ரோஹிணி
30-பிரணதார்த்தி ஹராச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஆவணி -உத்திரட்டாதி
தீர்த்தம் -மார்கழி சுக்ல பக்ஷ பிரதமை

31-வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -மாசி -மூலம்
தீர்த்தம் -புரட்டாசி -சிக்கலை பக்ஷ தசமி

32-அப்பன் ராமானுஜாசார்யார்–திரு நக்ஷத்ரம்-மார்கழி மூலம்

அவதார ஸ்லோகம்
ஸ்ரீ மத் கைரவணீ சரோ வரதடே ஸ்ரீ பார்த்த ஸூத உஜ்ஜ்வல
ஸ்ரீ லஷ்ம்யாம் யுவவத்சரே சுப தனுர் மூலே வதீர்ணம் புவி
ஸ்ரீ வாதூல ரமா நிவாஸ ஸூகுரோ ராமாநுஜாக்யம் குணை
ப்ராஜிஷ்ணும் வரதார்ய சத் தனய தாம் பிராப்தம் பஜே சத் குரும்

ஸ்வாமி தனியன் –
வாதூல அந்வய வார்தீந்தும் ராமானுஜ குரோ ஸூதம்
தத் ப்ராப்த உபாய வேதாந்தம் ப்ரணதார்த்தி ஹரம் பஜே

ஸ்ரீ மத் வாதூல வரதார்ய குரோஸ் தனூஜம்
ஸ்ரீ வாஸ ஸூரி பத பங்கஜ ராஜ ஹம்ஸம்
ஸ்ரீ மந் நதார்த்தி ஹாரா தேசிக பவுத்ர ரத்னம்
ராமானுஜம் குரு வரம் சரணம் ப்ரபத்யே

ஸ்வாமி வாழித் திரு நாமம்
சீர் புகழும் பாஷியத்தின் சிறப்புரைப்போன் வாழியே
செய்ய பகவத் கீதை திறன் உரைப்பான் வாழியே
பேர் திகழும் ஈடு நலம் பேசிடுவோன் வாழியே
பெற்ற அணி பூதூருள் பிறங்கிடுவோன் வாழியே
பார் புகழும் எட்டு எழுத்தின் பண்பு உரைத்தோன் வாழியே
பண்பு மிகு மூலச் சீர் பரவ வந்தோன் வாழியே
ஆர்வமுடன் சீடர்க்கே அருள் புரிவோன் வாழியே
அன்பு மிகு ராமானுஜர் அடியிணைகள் வாழியே

ஸ்வாமி நாள் பாட்டு –

பூ மகளின் நாதன் அருள் பொங்கி மிக வளர்ந்திடும் நாள்
பூதூர் எதிராசா முனி போத மொழி பொலிந்திடு நாள்
நேம மிகு சிட்டர் இனம் நேர்த்தியாய்த் திகழ்ந்திடு நாள்
நீள் நிலத்துள் வேத நெறி நீடூழி தழைத்திடு நாள்
பா மனம் சூழ் மாறன் எழில் பாடல் இங்கு முழங்கிடு நாள்
பார் புகழும் வயிணவத்தின் பண்பு நிதம் கொழித்திடு நாள்
சேம மிகு ராமானுஜர் தேசிகர் இவண் உதித்த
செய்ய தனுர் மதி மூலம் சேர்ந்த திரு நன்னாளே —

ஸ்ரீ ஸ்வாமி திருக்குமாரர்கள் மூவர்

———-

33-ஜ்யேஷ்ட திருக்குமாரர் -ஸ்ரீ பிரணதார்த்தி ஹராச்சார்யர் –திரு நக்ஷத்ரம் -மார்கழி -விசாகம் –

ஸ்ரீ ப்ரணார்த்தி ஹரா சாரியார் –நம் வர்த்தமான ஸ்வாமி திரு நக்ஷத்ரம் -மார்கழி விசாகம்

தனியன்
வாதூலான்வய வார் தீந்தும் ராமானுஜ குரோஸ் ஸூதம்
தத் ப்ராப்த உபய வேதாந்தம் ப்ரணதார்த்தி ஹரம் பஜே

மார்கழி விசாகத்தில் வந்து உதித்தான் வாழியே
மா வளரும் பூதூரான் வண் கழல் பணிந்தோன் வாழியே
பேர் திகழும் பேர் அருளாளன் பதம் பணிவோன் வாழியே
மறையோர் தொழும் தக்கானை மனனம் செய்வோன் வாழியே
ஆராமம் சூழ் அரங்க நகர் அப்பன் போற்றுமவன் வாழியே
ஈங்கு வாதூல குலத்து வந்து உதித்தோன் வாழியே
ஆர்வமுடன் அருளிச் செயலை ஆதரிப்போன் வாழியே
ஆர்த்த புகழ் ப்ரணதார்த்தி ஹரர் அடியிணைகள் வாழியே

வண் புதுவை நகர்க்கோதை சீர் அருளைச் சேர்ந்து இருப்பான் வாழியே
பூவார் மனம் கமழும் புல்லாணி தொழுது எழுவோன் வாழியே
கண்ணனூர் கண்ணபுரம் தொழும் மலர்ப்பதத்தோன் வாழியே
தனுர் விசாகத்தில் வந்து உதித்த வள்ளல் வாழியே
தெண்டிரை சூழ் திருவல்லிக்கேணியில் அவதரித்தோன் வாழியே
தான் உகந்த எதிராசன் கழல் தொழுவோன் வாழியே
அண்ணல் அருளாளன் அடி அடைந்தோன் வாழியே
அப்பன் ப்ரணதார்த்தி ஹரர் திருவடிகள் அவனியில் வாழியே

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading