ஸ்ரீ நம் ஆழ்வார் தம் திரு வாக்கால் –எட்டாம் பத்தில் ஸ்ரீ திருவாய் மொழி -பற்றி அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூ க்திகள் – –

நிகமத்தில் -இத் திருவாய் மொழியில் சொன்ன அர்த்தத்தை ஸங்க்ரஹேண- சுருக்கமாக சொல்லி
இதனை அப்யசிப்பார்க்கு -கற்கின்றவர்கள் சர்வேஸ்வரனை அடைந்து உஜ்ஜீவிக்கலாம் -என்கிறார்

பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருதிரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11-

பெரிய அப்பனை –
உபய விபூதிகளையும் உடையவனை

பிரமன் அப்பனை –
சதுர்தச புவன -பதினான்கு உலகுக்கும் ஈஸ்வரனான ப்ரஹ்மாவுக்கும் உத்பாதகனானவனே -தந்தை யானவனே

உருத்திரன் அப்பனை –
பிரமன் புத்ரனான உருத்திரனுக்கும் நிர்வாஹகன் ஆனவனே –

நான்முகனை நாராயணன் படைத்தான் நான் முகனும்
தான் முகமாய் சங்கரனைத் தான் படைத்தான் –

மலர் வந்த நான் முகன் திரு மைந்தன் அவன் மைந்தன் மதி சூடி –

முனிவர்க்கு உரிய அப்பனே –
சனகன் முதலிய மகரிஷிகளுக்கு ப்ரஹ்ம பாவனையே ஆகையாலே
முனிவர்க்கு உரிய அப்பனே -என்கிறது
உரிய -என்று
அணுமையைச் சொன்னபடி

அமரர் அப்பனை –
தேவர்களுக்கு உத்பாதகனானவனை -தந்தை யானவனை

உலகிற்கு ஒரு தனி அப்பன் தன்னை
இப்படி பிரித்து சொல்லுகிறது என் –
சகல -எல்லா உலகங்கட்கும் ஏக -ஒரே நிர்வாஹகன் ஆனவனை
பூதா நாம் யோ அவ்யய பிதா -எல்லா பிராணிகட்கும் அழியாத தந்தை என்று அன்றோ இருப்பது
இப்போது இவை சொல்லுகிறது என் என்னில்
பெரிய நிதி எடுத்தவன் இன்னது கண்டேன் இன்னது கண்டேன்
என்னுமா போலே –
ஸ்வரூபத்திலும் குணத்திலும் அதி சங்கை -ஐயம் கொண்ட போது இழந்தாராய்
இருந்தனவற்றைப் பெறுகையாலே இவற்றைப் பிரித்து சொல்லுகிறார்
முனிவர்க்கு உரிய அப்பனை என்றதனால் ஆஸ்ரித -அடியார்க்கு பரதந்த்ரப் பட்டு இருக்கும்
தன்மையை சொல்லுகிறது-

பெரிய வண் குருகூர் –
ரக்ஷகன் -காப்பவன் தாழ்ந்தவாறே ஐயம் கொள்ளுகையும்-உபகார ஸ்ம்ருதியாலே –
செய் நன்றி நினைவாலே ஹ்ருஷ்டராகையும் -உவகையர் ஆகையும் ஆகிற இவற்றுக்கு அடி –
அவ் ஊரில் பிறப்பு என்கை

வண் சடகோபன் –
மானச அனுபவ மாத்ரமாய் விடாதே -பிரபந்தமாக செய்து கொடுத்த ஔதார்யம்

பேணின ஆயிரத்துள்ளும் உரிய சொல் மாலை இவையும் பத்து –
அவனைத் தாம் ஆசைப்பட்ட படியைச் சொன்ன பத்து

உரிய சொல் மாலை
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ -என்று தைத்ரியம் -9-1-
வேத வாக்குகள் எந்த ஆனந்த குணத்தின் நின்றும் சொல்ல மாட்டாது மீண்டனவோ -என்கிறபடி
மீளுகை அன்றிக்கே பகவான் உடைய குணங்களுக்கு நேரே வாசகமாக இருத்தலின் –
உரிய சொல் மாலை -என்கிறது

தொண்டீர் நங்கட்கு இவற்றால் உய்யலாம்
அநாதி காலம் பகவான் இடம் விமுகராய் -விருப்பு இல்லாதவர்களாய் –
விஷயாந்தர ப்ரவணராய் -வேறு விஷயங்களில் ஈடுபட்டவர்களாய் –
அசந்நேவ ஸ பவதி அசத் ப்ரஹ்மேதி வேதசேத்
அசதி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோ விது இதி -தைத்ரியம் -–
அசத் சமராய் -இல்லாதவன் ஆகிறான் என்கிறபடியே
இல்லாதவர்களைப் போலே இருக்கிற நுங்கட்கு –
சந்தமேனம் -இருக்கின்றவனாக அறிகிறார்கள் -என்றபடியே உஜ்ஜீவிக்கலாம்-

இதே போலே –
நங்கட்கு என்பதை நுங்கட்கு அர்த்தமாக
கம்பரும்
செங்கயல் போல் கரும் நெடும் கண் தேமரு தாமரை உறையும்
நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம் என்ன -சூர்பணகை படலம் -119-

————–

நிகமத்தில் ‘இத் திருவாய் மொழி வல்லார் அவித்யாதி சகல தோஷங்களும் –அறிவின்மை முதலிய
எல்லா குற்றங்களும் நீங்கி-இஹ லோக இவ் உலகத்திலும்-பர லோகங்களிலும் மேல் உலகத்திலும்
தாங்களே கிருதக்ருத்யர் ஆவார் -என்கிறார் –

பாத மடைவதன் பாசத்தாலே மற்ற வன் பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையு மோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11-

பாதம் அடைவதன் பாசத்தாலே மற்ற வல் பாசங்கள் முற்ற விட்டு –
திருவடிகளை கிட்டுகையில் உண்டான சங்கத்தாலே -விருப்பத்தாலே புறம்பு உண்டான வலிய பற்றுக்களை
அடியோடே விட்டார்
இது வாயிற்று இத் திருவாய் மொழியில் சொல்லிற்று ஆயிற்று-என்றது
புறம்பு உண்டான பற்றுக்களை அற்று திருவடிகளை ஆசைப் பட்டவர் அல்லர் –
மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -மூன்றாம் திருவந்தாதி -14 என்றபடியே
திருவடிகளின் பற்றாலே -ஓவ்பாதிகமான -ஒரு காரணம் பற்றி வந்த -பாஹ்ய சங்கத்தை -புறம்பு உண்டான
பற்றினைத் தவிர்ந்தவர் -என்றபடி

கோது இல் புகழ் –
திருவடிகளில் சங்கத்துக்கு -பற்றுக்கு காரணம் அவனுடைய கல்யாண குணங்கள் –
குணங்களுக்கு கோதாவது-தன்னை ஒழிய புறம்பேயும் நசை செய்யும்படி இருக்கை

கண்ணன் தன் அடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன –
இப் புகழ்களை உடைய கிருஷ்ணன் திருவடிகளில் ஆயிற்று சொல்லிற்று
பரம உதாரரான ஆழ்வார் அருளிச் செய்த

தீதில் அந்தாதி –
பிரபந்தத்துக்கு தீதாவது கதாந்தர பிரஸ்தாபம் – -வேறு கதைகளை எடுத்து கூறுதல் என்றது
ஸ்ரீ ராம சரிதம் சொல்லப் புக்கு முருகனுடைய பிறப்பு புஷ்பக விமான வர்ணனம் என்னும்
இவை தொடக்க மான வற்றினிலே இழிந்து பேசுதலை தெரிவித்தபடி
இந்த நாராயணன் உடைய சரித்ரத்தை சொல்லப் புகுகின்றேன் -என்று தொடங்கி-
நாராயண கதாம் இமாம் –போரின் வகை முதலானவற்றைச் சொல்லுதல்

ஓர் ஆயிரத்துள் இவையுமோர் பத்திசை யோடும் வல்லார் –
ஒப்பற்றவையான ஆயிரம் திருவாய் மொழியில் இப் பத்தையும் ப்ரீதி பிரகர்ஷத்தாலே –
மிக்க பிரீதியோடே சொல்லுமவர்கள்

ஆதுமோர் தீதிலராகி –
அவித்யாதி தோஷங்களும் -அறிவின்மை முதலான குற்றங்களும் நீங்கப் பெறுவார்
புறம்பு உள்ள நசை அற்று இருக்கச் செய்தே பிரபந்தம் தலைக் கட்டுகைக்காக இருக்குமதுவும்
இவர்களுக்கு இல்லை –

இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் –
இஹ -இவ் உலகத்தோடு பர -மேல் உலகத்தோடு வாசி அற குறை அற்று இருப்பார்கள் -என்றது
கிருதக்ருத்யா ப்ரதீஷ்ந்தே ம்ருத்யும் ப்ரியம் இவாதிதிம் -பாரதம் –-இவ் உலகத்தில் செய்ய வேண்டியதை
செய்து முடித்தவர்கள்-யமனை எதிர் பார்த்து இருக்கிறார்கள் -என்ற படியே
பர -மேல் உலகத்தில் –
பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிசா நுஷூ ரம்ஸ்யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத சவபதஸ் தே – அயோத்யா 31-25
நான் எல்லா அடிமைகளும் செய்வேன் -என்று குறைவு அற்று இருப்பார்கள் –

தாமே-
ஈஸ்வரன் முழங்கை தண்ணீர் வேண்டா
உபய விபூதியிலும் தாங்களே பிரதானர் -முதன்மை பெற்றவர்கள் ஆவார்கள்

————

நிகமத்தில்-இத் திருவாய் மொழி அப்யசிப்பார் -கற்பவர்கள்
அவன் தனிமை கண்டு பயப்படும் சம்சாரத்தில்-பிறவார் -என்கிறார் –

உரையா வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன்
உரையேய் சொல் தொடை ஓராயிரத் துளிப்பத்தும்
நிரையே வல்லார் நீடுலகத்தப் பிறவாரே–8-3-11-

உரையா வெந்நோய் –
வாசா மகோசரமாய் -சொல்லுதற்கு முடியாததாய் -அதி குரூரமான -மிகக் கொடியதான நோய்
தம் அளவில் சாத்மிக்கை -பொறுத்தல் அன்றிக்கே
உபய விபூதி நாதனுக்கு என் வருகிறதோ என்று அஞ்சின நோயே அன்றோ –

தவிர அருள் நீண் முடியானை –
இது போகும்படிக்கு தகுதியாக திருவருள் புரியும் தன்மையனான-உபய விபூதி நாதனை –
இவர் அச்சம் போகும்படி -நீர் அபேக்ஷித்த விரும்பிய காரித்தைச் செய்கிறோம் என்று தலையை
துலுக்கினான் போலே காண் –-என்று அம்மங்கி அம்மாள் அருளிச் செய்வர்
அன்றிக்கே
இவ் ஆழ்வார் உடைய பயம் நீங்கிய பின் பாயிற்று உபய விபூதிக்கும்
ரஷகனாய் சூடிய முடியும் நிலை நின்றதாயிற்று -என்ற படியுமாம்

வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன் –
இவர் அச்சம் நிவ்ருத்தம் -நீங்கின வாறே சம்ருத்தமாய் -நிறைவு பெற்றதுமாய் -ஸ்திரமுமாய் –
நிலை உள்ளதுமாயிற்று திரு நகரியும்

உரையேய் சொல் தொடை ஓராயிரம் –
உக்திகளால் சொற்களால் சேர்ந்த சொல் தொடையை உடைத்தாய்-விலஷணமான ஆயிரம் –

இப் பத்தும் நிரையே வல்லார் –
இப் பத்தை அடைவு தப்பாமல் கற்க வல்லவர்கள்
தமக்கு பிறந்த கலக்கத்தாலே இதில் இழிவாருக்கும் அடைவு பட அனுசந்திக்க -சொல்ல ஒண்ணாது என்று இருக்கிறார்

நீடுலகத்தப் பிறவாரே –
இப் பூமிப் பரப்பை அடைய அனுசந்தித்தால் -நினைத்தால் பரப்பேயாய்
சர்வேஸ்வரன் தனிமைக்கு பரிய ஒருவரைக் கிடைக்காத இத் தேசத்தில் பிறவார்கள்
ஒரு நாடாக மங்களா சாசனம் செய்கிற தேசத்திலே சென்று நித்ய அனுபவம் பண்ணப் பெறுவர்-

————

நிகமத்தில்
இத் திருவாய்மொழியை அப்யசிப்பார்க்கு -கற்றவர்கட்கு இது தானே முதலில்
பரம பதத்து ஏறக் கொடு போய்
பின்பு சம்சாரம் ஆகிய மகா நாடகத்தினை அறுக்கும் -என்கிறார்-

தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துல குண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன் சொன்ன வாயிரத்துள் இப் பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-

தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் –
பய சங்கா ஹேதுக்கள்- இவர் ஐயம் கொண்டு அஞ்சுதற்கு உரிய காரணங்கள் சொல்லப் படுகின்றன
அவனுடைய இனிமை அன்றோ இவரை அஞ்சப் பண்ணுகிறது –
எனக்கு எல்ல வித இனிய பொருள்களும் ஆனவனே
சர்வ ரச -என்னக் கடவது அன்றோ –
மேலே பய நிவ்ருத்தி ஹேதுக்கள் -அச்சம் நீங்குவதற்கு உரிய காரணங்கள் சொல்லப் படுகின்றன –

திருந்துலகுண்ட வம்மானை –
கட்டளைப் பட்ட உலகத்தை பிரளயத்தில் அழியாதபடி
திரு வயிற்றிலே வைத்து பரிஹரித்த பாதுகாத்த பெரியோனே –

வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை –
கொப்பூழ் மலர்ந்த தண்- மலர்மிசை -வான நான்முகனை -படைத்த மாயோனை –
வானிலே இருக்கிற பிரமனை படைப்பிற்கு தகுதியாக
செவ்வியை உடைத்தாய் திரு நாபி கமலத்தில் படைத்த
ஆச்சர்யத்தை உடையவனை –

கோனை –
நிருபாதிக சேஷியை -காரணம் பற்றாத தலைவனை –
மேலே பிரமன் சிவன் இவர்களுக்கு சொன்ன ஐக்யம் ஸ்வரூபத்தால் அன்று –
கார்ய காரண பாவத்தால் சொல்லிற்று என்னும் இடம் இங்கே ஸ்பஷ்டம் -தெளிவாகும் –

ஆபத்துக்கு துணைவனாய்-சஹனாய் -உலகு உண்ட அம்மானாய் –
அழிந்தவற்றை உண்டாக்க வல்லனாய் -மலர்மிசை படைத்த மாயோனாய் –ப்ராப்தனாய் –
சம்பந்தத்தை உடையவனாய் -கோனை –என்கை-

வண் குருகூர் சடகோபன் சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து -பிறவி மா மாயக் கூத்தினையே -முடிக்கும் –
அராஜகம் ஆனால் அரச புத்திரன் தலையிலே முடியை வைத்து விலங்கு வெட்டி விடுமாறு போலே
இப் பத்து தானே முந்துற பரம பதத்தைக் கொடுத்து
பின்பு சம்சாரம் ஆகிற மகா நாடகத்தை அறுக்கும் –

————–

நிகமத்தில்
இத் திருவாய் மொழி வல்லார் தாம் பட்ட துக்கம் படாதே
இஹ -இந்த உலகத்தில்-இப் பிறப்பிலே
அவனைப் பெற்று எப்பொழுதும் இன்பத்தை அனுபவிப்பர் – என்கிறார்

எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே-8-5-11-

எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் –
ஈன் துழாய் அம்மான் தன்னை யான் எங்கே காண்கேன்-
ஐஸ்வர்ய ஸூ சகமான -இறைமை தன்மைக்கு அறிகுறியான திருத் துழாய் மாலை உடைய சர்வேஸ்வரனை
கண்டு தரிக்க மாட்டாதபடி சபலனான ஆசை உடையனான -யான் எங்கே காணக் கடவேன் –

என்று என்று –
பரத்வம் முதலானவற்றை பெறாத நான்
உன்னை நிரந்தரமாக -எக் காலத்திலும் சொல்லி
ஒரு கால் சொல்லி ஆசையை வெளிப்படுத்தினோம் அன்றோ என்று ஆறி இருக்கிறார் அல்லரோ
லாபத்து அளவும் சொல்லும் இத்தனை அன்றே ஆதலின் என்று என்று -என்கிறார் –

அங்கே தாழ்ந்த சொற்களால் –
தோளும் தோள் மாலையிலும் அந்த சேஷித்வத்திலும் -இறைவன் தன்மையில்
ஈடுபட்ட சொற்களாலே –

அந் தண் குருகூர்ச் சடகோபன் –
உபதிஷ்டந்து மாம் சர்வே வியாதய பூர்வ சஞ்சிதா
அன்ருண அஹம் கமிஷ்யாமி தத் விஷ்ணோ பரமம் பதம் -மகா பாரதம்
தனக்கு கிலேசம் உண்டானால் கர்ம பலம் கிருபா பலம் என்றாதல் பிறக்கும் பிரீதியும் -ஸ்ரீ வசன பூஷணம்
சலியாது இருக்கையாலே ஊரும் தழைத்தது
இவ் வாற்றாமைக்கு எல்லாம் ஆடல் கொடுத்த ஆழ்வார் -இடம் கொடுத்த ஆழ்வார் -ஆளவந்தார் நிர்வாஹம்

செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும்
மனம் வாக்கு காயம் என்னும் இம் மூன்றும் ஏக ரூபமாய் -ஒரே தன்மையராய்ச் சொன்ன
ஆயிரத்திலும் இப் பத்தையும் –

வல்லார்கள்-
அப்யஸிக்க -கற்க வல்லவர்கள் –

இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே-
இங்கே விப் பிறப்பே எல்லியும் காலையே காண மகிழ்வர் –
இந்த உலகத்திலே இப் பிறப்பிலே திவா ராத்திரி விபாகம் – பகல் இரவு என்ற வேறுபாடு இன்றிக்கே
பகவத் அனுபவம் பண்ணி மகிழப் பெறுவார்
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்-என்று கூப்பிட வந்து முகம் காட்டாத அவத்யத்தை -தாழ்வினை
இப் பத்தினை கற்று வல்லவர்களோடு கடுக வந்து முகம் காட்டி தீருமாயிற்று ஈஸ்வரன் –
மனைவியோடு வெருப்புண்டானால் அவள் பக்கல்
முகம் பெறுகைக்காக பிரஜைகளை ஸ்லாகிப்பாரை -குழந்தைகளைக் கொண்டாடுவாரைப் போலே —

—————

நிகமத்தில்-இத் திருவாய் மொழி கற்றவர்களை
இது தானே திரு நாட்டில் கொடு போய் விடும் -என்கிறார்

சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோப சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே–8-6-11-

சோலைத் திருக் கடித் தானத்துறை திரு மாலை –
ஸ்ரமஹரமாய் -ஸ்ரமத்தைப் போக்குவதாய்-தர்ச நீயமான -காட்சிக்கு இனியதான
சோலையை உடைய திருக் கடித் தானத்திலே
நித்ய வாசம் செய்கிற ஸ்ரீ யப்பதியை -திருமகள் கேள்வனை –

மதிட் குருகூர்ச் –
சம்சாரம் காரணமாக உண்டாகிற பாப கூட்டங்களுக்கு துரிதங்களுக்கு -புக ஒண்ணாத
அரணை உடைய திருநகரி –

சடகோப சொல் –
ரகுவர சரிதம் முனிப்ரணீதம் -பால -2-43-ஸ்ரீ வால்மீகி முனிவராலே சொல்லப் பட்ட
ஸ்ரீ ராகவனுடைய சரிதை –என்னுமாறு போலே –

பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும் –
பாலோடு அமுதன்ன ஆயிரம் என்னுதல்
பாலோடு அமுதன்ன இப்பத்து என்னுதல்
வாச்சிய வாசகங்களின் சேர்த்தி இருக்கிறபடி –

பால் -என்றது
சோலைத் திருக் கடித் தானத்துறை திருமாலை
அமுது -என்றது
சடகோபன் சொல் வாசகத்தை –
இது ஆளவந்தார் நிர்வாஹம் –

இப் பத்தும் வியந்து மேலை வைகுந்தத்து இருத்தும் –
சம்சாரத்தில் இதனைக் கற்பவன் அப்யசிப்பான் – ஒருவன் உண்டாவதே என்று விஸ்மயப்பட்டு -ஆச்சர்யப் பட்டு-
சர்வாதிகமான -எல்லா உலகங்கட்கும் மேலான பரம பதத்தில் கொடு போய் வைக்கும் -என்றது
மாயக் கூத்தா -என்ற திருவாய் மொழியில் உண்டான விடாய் நடையாடாத தேசத்திலே வைத்து
ஒரு நாளும் பிரியாத அனுபவத்தைக் கொடுக்கும் –

————

நிகமத்தில்
இப் பத்தானது தன்னைக் கற்றவர்கள் உடைய பிறவிக்கு த்ருஷ்ட்டி விஷம் என்கிறார் –

சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே–8-7-11-

கண்ணில் விடமுடைய தொரு பாம்பு போலே திட்டியின் விடமன்ன கற்பின் செல்வியை
விட்டிலையோ இது விதியின் வண்ணமே -கம்பர் கும்பகர்ண வதைப் படலம் -60-

சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திரு மாலை –
இப் பத்தும் கற்றார்க்கு
பிறவி அறுகை அன்றோ பலமாக சொல்லுகிறது
அதனால் சென்று அனுபவிக்கும் பேற்றினைச் சொல்லுகிறது –
பர்யங்க வித்தையில் சொல்லுகிறபடியே
திரு வநந்த ஆழ்வான் மடியிலே
பெரிய பிராட்டியார் உடன் எழுந்தருளி இருக்கக் கண்டு அனுபவிக்கை அன்றோ முக்த ப்ராப்ய போகம் –
முக்தனாலே அடையப் படுகின்ற இன்பம் தான் –

அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன் –
திருவடிகளில் சேருகையே தமக்கு ஸ்வபாவமாக உடைய ஆழ்வார் –
அன்றிக்கே –
அடிச்சேர் வகை முடிப்பான் -என்றுமாம் –
ஞான ஆநந்தங்கள் அன்று இவருக்கு நிரூபகம்
சேஷத்வமே -அடிமையே ஆயிற்று

முடிப்பான் சொன்ன வாயிரத்து –
சம்சார சம்பந்தத்தை அறுக்கைக்காக சொன்ன ஆயிரத்து –
அடிச்சேர் முடிப்பான் என்றுமாம்
தன் கண்கள் சிவந்து நோக்கும் விடம் –
சன்ம மானது விட்டுப் போம்படியாக நோக்கும்
அது செய்யும் இடத்தில்

இப்பத்தும் கண்கள் சிவந்து நோக்கும்
தன் கண்கள் சிவந்து நோக்கும் விடம் –
அதாவது
இப் பிறவிக்கு இப்பத்தும் த்ருஷ்ட்டி விஷம் என்கை-என்றது
இப் பத்துக்கும் பிறவிக்கும் சஹா நவஸ்தா லக்ஷண -ஒரே இடத்தில் இருக்கக் கூடிய
தன்மையில் விரோதம் உண்டு -என்றபடி –

————-

நிகமத்தில்
இப் பத்தும் கற்றாரை-தம்மை விஷயீ -அங்கீகரித்தாப் போலே விஷயீ -அங்கீகரித்து
தன் திருவடிகளின் கீழே வைத்துக் கொள்ளும் -என்கிறார்

தெருளும் மருளும் மாய்த்துத் தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன் ஓரா யிரத்துள் இப் பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11-

தெருளும் மருளும் மாய்த்துத்
ப்ரஹ்மாவின் ராஜசம் அடியாக வந்த குத்ருஷ்டி ஞானமானதும் –
சிவனுடைய தாமச ஞானம் அடியாக வந்த ஆகமம் முதலான பாஹ்ய – புற ஞானம் ஆகிற அஞ்ஞானமும் மாய்த்து –

அன்றிக்கே
ஸ்வ தம்முடைய அனுபவத்துக்கு விரோதியான-ப்ராக்ருத
இவ் வுலக விஷயமான ஞான அஞ்ஞானங்களை வாசனையோடு போக்கி -என்னுதல்

அந்யதா ஞானம் -பிறர் தெய்வங்கட்கு தன்னை அடிமை என்று நினைத்தல்
விபரீத ஞானம் -தனத்து தானே உரியன் என்றும் கைவல்ய அனுபவ புத்தியையும் -இவற்றைப் போக்கி என்னுதல்

தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ் –
ஆஸ்ரிதரை -அடியார்களை வேறு ஒருவர் காலில் குனிய விடாததாய் –ஸ்ப்ருஹணீயமாய் –
விரும்பத் தக்கதாய் –
வீரக் கழலை உடைத்தான-திருவடிக் கீழ்

இப்போதைய வீரக் கழல்
பிராட்டி முன்னாக ஆஸ்ரயித்தாரை அடைந்தாரை அவன் கையிலும் பிறர் கையிலும் காட்டிக் கொடாத வீரக் கழல் –

அருளி இருத்தும் –
கேவல கிருபையாலே இருத்தும் –

அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால் –
பிரமன் சிவன் முதலிய எல்லா ஆத்மாக்களுக்கும் நிர்வாஹகனாய்
சர்வேஸ்வரனான ஸ்ரீ யபதியாலே- திருமகள் கேள்வனாலே-

அருளப் பட்ட சடகோபன் –
மயர்வற மதிநலம் அருளினான் -என்றபடியே அருளுக்கு விஷய பூதரான -பாத்ரமான ஆழ்வார் –
இந்த அருளுக்கு வாய்த்தலை –பிறப்பிடம் -பிராட்டி ஆதலால்-திருமாலால் -என்கிறார் –

ஓராயிரத்துள் இப்பத்தால் அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே –
ஓராயிரத்துள் இப்பத்தால்–நம் அண்ணல் கரு மாணிக்கமே –-அருளி யடிக் கீழ் இருத்தும்-
சர்வ -எல்லா பொருள்கட்கும் நிர்வாஹகனாய்-ஸ்ப்ருஹணீயமான -விரும்பத் தக்க வடிவு அழகையும் குணங்களையும் –
முடிந்து ஆளும் படியும் -உடையவனுமான -சர்வேஸ்வரன் தானே அருள் செய்து
தன் திருவடிக் கீழே சேர்த்துக் கொள்ளும் –
இத் திருவாய் மொழி அப்யசித்தாருக்கு -கற்றார்க்கு தாம் பெற்ற பேறு என்கிறார் –

————–

நிகமத்தில்
இப்பத்தைக் கற்றவர் ஸ்வரூபத்துக்கு அனுரூபமான -தகுதியான கைங்கர்யத்தைச் செய்யப் பெறுவர்

நேர் பட்ட நிறை மூ வுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர் பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர் பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர் பட்டார் அவர் நேர் பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-

நேர் பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் தன் –
குறைவு அற்ற மூன்று உலகங்கட்கும் நேர் பட்ட நாயகன்
த்ரை லோக்யம் அபி நாதேந யேந ஸ்யாந்நாத வத்தரம்
எந்த நாதனால் மூன்று உலகங்களும் நல்ல நாதனை உடையவன ஆகுமோ -என்கிறபடியே
ரஷ்ய வர்க்கத்து -பாது காக்கப் படுகின்ற பொருள்களின் அளவு அன்றிக்கே இருக்கிற-ரக்ஷகத்வ –
பாது காக்கின்ற தன்மையின் துடிப்பு
இதனால் நாயகன் படி சொல்லிற்று –
அனுரூபஸ் ச வை நாத -அந்த இராமன் தகுந்த நாதன் என்னுமா போலே

அடிமை நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் –
இதனால் இவர் படி சொல்கிறது –
அவன் சேஷித்வத்துக்கு இறைவனாம் தன்மைக்கு எல்லை ஆனால் போன்று
இவர் சேஷத்வத்துக்கு -அடிமை யாம் தன்மைக்கு எல்லை யாம்படி –

சொல் நேர் பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும் நேர் பட்டார் –
அந்த வாஸ்யத்துக்குத் தகுதியான நாயகனுக்கு தகுதியான யுக்தி -சொற்கள் வாய்ந்த
தமிழ் தொடை ஆயிரத்திலும் -இத் திருவாய் மொழி நேர் பட்டவர்கள் –

அவர் நேர் பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே –
நெடுமாற்கு அடிமை செய்ய நேர் பட்டார் –
இவர் பாசுரத்தை சொன்னவர்
இவர் செய்ய விரும்பிய வ்ருத்தியிலே -கைங்கர்யத்திலே அந்வயிக்க -சேரப் பெறுவர் –
நேர் படுகை -சொல்லப் படுகை -சொல்லப் பட்டார் -என்றபடி –

ஆக
இப்பாட்டால்
சர்வேஸ்வரனுடைய ஸ்வரூபத்தையும்
ஆத்ம ஸ்வரூபத்தையும்
இவற்றைச் சொல்லுகிற பிரபந்தத்தின் வை லக்ஷண்யத்தையும் -சிறப்பினையும்
இதனைக் கற்றவர்கள் அப்யசித்தார்களுடைய ப்ராப்ய வை லக்ஷண்யத்தையும் -பெரும் பேற்றின் சிறப்பினையும்
சொல்லிற்று ஆயிற்று —

———-

நிகமத்தில்
இத் திருவாய் மொழி வல்லார் இதில் சொன்ன பாகவதர்களுக்கு அடிமைப் பட்டு இருத்தலைப் பெற்று-ச பரிகரமாக –
பெண்டு பிள்ளைகளோடு வாழப் பெறுவர் என்கிறார்

நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11-

நல்ல கோட்பாட்டுலகங்கள்-
இவர் பாகவதர்களுக்கு அடிமைப் பட்டு இருத்தலே-ததீய சேஷத்வமே பரம புருஷார்த்தம் -மிக மேலான பேறு -என்று
நெடுமாற்கு அடிமை -என்னும் திருவாய்மொழி -அருளிச் செய்த பின்பு காணும் உலகம் கட்டளைப் பட்டது –

மூன்றின் உள்ளும் தான் நிறைந்த-
வியாப்தியும் -பரந்து இருக்கும் தன்மையும் தேவை ஆகை அன்றிக்கே புதுக் கணித்தது
அடியார்க்கு அடிமைப் பட்டு இருத்தல் ஆகிய ஞானம் உடையவர்கள் உடைய மனத்தில்
இருக்கையாலே வ்யாப்தியும் தேவையாய் இராதே புதுக் கணித்தது –

அல்லிக் கமலக் கண்ணனை-
இவர் தன்னைப் பற்றினாரைப் பற்றி விரும்ப விரும்ப திருக் கண்களும் சிவந்து புதுக் கணித்தது –

அந்தண் குருகூர்ச் –
ஊரும் தர்ச நீயமாய் -காண்பதற்கு இனியதாய்-ஸ்ரமஹரமாய் – ஸ்ரமத்தை போக்கக் கூடியதாயிற்று –

சடகோபன் சொல்லப்பட்ட வாயிரத்துள்-
வேதம் போல் தான் தோன்றி இன்றிக்கே -இருக்கை
பரத்வம் போலே வேதம்
அவதாரம் போலே திருவாய்மொழி –

இவையும் பத்தும் வல்லார்கள்-
இப் பத்தை அப்யஸிக்க கற்க வல்லவர்கள்

நல்ல பதத்தால் –
நல்ல பதம் ஆகிறது –பாகவத சேஷத்வம் –
பாகவதர்களுக்கு அடிமைப் பட்டு இருத்தல் அன்றோ –
அதனை இத் திருவாய் மொழியிலே இவர் அறுதி இட்ட படியாலே –
அதனோடு கூட -மனை வாழ்வர்-கார்ஹஸ்த்ய -தர்மம் அனுஷ்ட்டிக்கப் பெறுவார் –
இல்லற தர்மத்தில் வாழ்வார்கள்

கொண்ட பெண்டிர் மக்களே-
தாங்கள் ஒன்றனை நினைக்க-பரிகரம்-
தம் மனைவி மக்கள் முதலாயினோர் வேறு ஒன்றை நினைக்கை அன்றிக்கே
ச பரிகரமாக குடும்பத்தோடு பாகவதர்களுக்கு உறுப்பாக வாழப் பெறுவர் –

திருவனந்த புரத்துக்கு சாத்தாகப் -கூட்டமாகப் -போகா நிற்கச் செய்தே
திருக் கோட்டியூரிலே செல்வ நம்பி திரு மாளிகையிலே போய்ப் புக்கார்களாக
நம்பி தாம் வேற்று ஊருக்காக சென்று இருக்க
நங்கையார் நூறு வித்துவக் கோட்டை கிடக்க
அவற்றைக் குத்தி ஸ்ரீ வைஷ்ணவர்களை அமுது செய்யப் பண்ணி விட
பிற்றை நாள் நம்பி வந்து -அவை செய்தது என் என்ன –
பரம பதத்திலே விளைவதாக வித்தினேன் -என்றாராம் –

தொண்டனூர் நம்பி எச்சான் -என்று மகா புருஷர்கள் சிலர் உளர் அன்றோ
பாகவத சேஷத்வமே யாத்ரையாக போந்தவர்கள்
அவர்கள் படியே யாகப் பெறுவர்கள்-

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading