ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–8-7——சாரங்கள்-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

மத் விப்ர யோகம் அசகன் ஸ்வயம்சேவ அர்த்தி
முதம் அபாஷத ஸவ்ரி இதி மதி விப்ரமம் கிம்
மாம் அல்ப கைக நிலையம்
பஹு மன்யமாகா நிர்ஹேதுக விஷயீகாரத்வம்

நிர்ஹேதுக விஷயீகாரத்வம் -வெறிதே உகந்து அருள் செய்வார் செய்வார்கட்க்கு

———–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

பவ்யத்வாத் ரக்ஷகத்வாத் த்ரி ஜகத் அதிக காருண்யத்வாத்
கோப பாவாத் நீல அஸ்மா அத்திரி பாவாத் ஸ்வ ஜன க்ருத நிஜ ஆத்ம
பிரதநா பிரபுத்வத்த மூல மந்த்ரத்தை மந்தஸ் ஸ்மிதம்
ஹ்ருதி ஸூ ஹ்ருதி ஸ்வா நாம் சித்தம் அநபாயாத ஸ்வ ஜன ஹ்ருதி ரஸ-

1–பவ்யத்வாத் –பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன் கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே

2–ரக்ஷகத்வாத்–பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்

3-த்ரி ஜகத் அதிக காருண்யத்வாத் -அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான்–அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –

4–கோப பாவாத்–ஆயன் அமரரர்க்கு அரி ஏறு எனதம்மான் தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான்-

5–நீல அஸ்மா அத்திரி பாவாத் –என்னுள் திகழும் மணிக்குன்றம் ஒன்றே ஒத்து நின்றான்

6–ஸ்வ ஜன க்ருத நிஜ ஆத்ம பிரதநா பிரபுத்வத்த — தன்னைக் கொடுக்கும் கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்
திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே–தன்னையே தரும் கற்பகம் –
மூல மந்த்ரத்தை -தம்மையே நல்கும் தனிப் பெரும் பதம் -கம்பர் –

7–மந்தஸ் ஸ்மிதம்–செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே

8–ஹ்ருதி ஸூ ஹ்ருதி–அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார் வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து

9-ஸ்வா நாம் சித்தம் அநபாயாத –மூவுலகும் தம் வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே-

10-ஸ்வ ஜன ஹ்ருதி ரஸ–மெய்த்தேய் திரை மோது தண் பாற் கடலுளால்-பைத்ததேய் சுடர்ப் பாம்பணை நம் பரனையே

———

இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே-8-7-1-

———–

இருந்தான் கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே-8-7-2-

——–

அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3-

——–

மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து
ஆயன் அமரரர்க்கு அரி ஏறு எனதம்மான்
தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான்
தேசந்திகழும் தன் திருவருள் செய்தே-8-7-4-

————

திகழும் தன் திருவருள் செய்து உலகத்தார்
புகழும் புகழ் தானது காட்டித் தந்து என்னுள்
திகழும் மணிக்குன்றம் ஒன்றே ஒத்து நின்றான்
புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே–8-7-5-

————

பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
தருமேல் பின்னை யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்
திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே–8-7-6-

———————

செவ்வாய் யுந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க்கொள்ள
செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த
அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே–8-7-7-

——-

அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார்
வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே–8-7-8–

——-

வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரும் யவரும்
வயிற்றில் கொண்டு நிற்றொரு மூவுலகும் தம்
வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே—8-7-9-

—–

வைத்தேன் மதியால் எனது உள்ளத்தக்கத்தே
எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும்
மெய்த்தேய் திரை மோது தண் பாற் கடலுளால்
பைத்ததேய் சுடர்ப் பாம்பணை நம் பரனையே –8-7-10-

———

சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே–8-7-11-

—-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -77-பாசுரம்–

அவதாரிகை –

இதில்-இவர் கருத்தைத் தான் கைக் கொண்டு இவருடனே கலந்த படியைப் பேசின ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –அது எங்கனே என்னில் –
இவர் -வெள்ளக் கேட்டாலே அழியாதபடி ஸ்ரீ திருக் கடித் தானத்தே இருப்பைக் காட்டி
சம்ஸ்லேஷ ரசத்தை சாத்மிப்பித்த –
அநந்தரம்-
ஸ்வ விஷயத்தில் அர்த்தித்வ பிரமுகரான இவர் மநோ ரதத்தை எல்லாம் தான்
இவர் பக்கலிலே பண்ணிக் கொண்டு-இவரோடு பூர்ண சம்ஸ்லேஷம் பண்ணி
அந்த சம்ச்லேஷ ஜனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே புதுக்கணித்த திவ்ய அவயவங்களையும்
நீல பர்வதம் போலே ஒளி இருக்கிற வடிவையும் இருக்கிறபடியை மண்டி அனுபவித்து
ஹ்ருஷ்டராய் செல்லுகிற -இருத்தும் வியந்தில் அர்த்தத்தை
இருந்தவன் தான் வந்து -இத்யாதியால் அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————–

இருந்தவன் தான் வந்து இங்கு இவர் எண்ணம் எல்லாம்
திருந்த விவர் தம் திறத்தே செய்து -பொருந்தக்
கலந்து இனியனாய் இருக்கக் கண்ட சடகோபர்
கலந்த நெறி கட்டுரைத்தார் கண்டு –77-

———————————————

வியாக்யானம்–

இருந்தவன் தான் வந்து –
ஸ்ரீ திருக் கடித் தானத்திலே இருந்த தான் இவர் இருந்த அளவும் மெல்ல வந்து –

இங்கு இவர் எண்ணம் எல்லாம் திருந்த விவர் தம் திறத்தே செய்து —
இவர் எண்ணம் ஆவது –
என் தன் கருத்தை யுற வீற்று இருந்தான் -என்று-தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -என்ற
ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளக் கருத்தைத் தான் கைக் கொண்டான் -என்கை –
திருந்த விவர் தம் திறத்தே செய்து —
தனக்கு ஆஸ்ரித பாரதந்த்ர்யம் ஸ்வரூபம் ஆகையாலே
நன்றாக இவர் விஷயத்திலே செய்து தன்னை முற்றூட்டாக அனுபவிக்கும் படி செய்து

பொருந்தக் கலந்து –
நாம் ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு அவ்வருகாய் இருப்புதோம் –
இவர் நித்ய சம்சாரிகளுக்கு இவ்வருகாய் எண்ணி இருப்பார் என்ற வாசி வையாமல்
சிறியேனுடைச் சிந்தையுள் -என்றும்
தூய சுடர்ச் சோதி தனது என்னுள் வைத்தான் -என்றும்
என்னும்படி ஒரு நீராகக் கலந்து –

இனியனாய் இருக்கக் கண்ட சடகோபர்
திகழு மணிக் குன்றம் ஒன்றே ஒத்து நின்றான் -என்றும்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்-திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே -என்றும்
செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த அவ்வாய் அன்றி யான் அறியேனே -என்றும்
இப்படி ஆயிற்று-பெறாப் பேறு பெற்றானாய் இனியனாய் இருந்தபடி -என்கை

கண்ட சடகோபர் –
இப்படி அவன் இனியனாய் இருந்த படியைக் கண்டு அனுபவித்த ஸ்ரீ ஆழ்வார் –

கலந்த நெறி கட்டுரைத்தார் கண்டு
அவன் தம்முடனே வந்து கலந்தபடியை திரு உள்ளத்தாலே கண்டு அருளிச் செய்தார் –
கலக்கைக்கு அவன் கிருபையே உபாயம்-இத்தலையில் உள்ளது அனுமதி மாத்ரமே –
கலந்த நெறி கட்டுரைக்கை யாவது –
அந்யோந்யம் அபி வீஷந்தௌ-என்னும்படி
கண்டு கொண்டு –இருந்தான் -என்றும்
தரும் தான் அருள் தான் இனி யான் அறியேன் -என்றும்
கிந்துஸ் யாச்சித்த மோஹயம்-என்னும்படி-மருள் தான் ஏதோ -என்றும்
மாய மயக்கு மயக்கான் -என்றும்
திகழும் தன் திருவருள் செய்தே -என்றும் –
வெறிதே அருள் செய்வர் -என்றும் அருளிச் செய்தவை என்கை-

———

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading