ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–8-6—எல்லியும் காலையும்—சாரங்கள்-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

சத்யக ஸூ சங்கம் அக்ருதவ் ப்ரீதி சமிதி
திவா ராத்ரி ஹரி மாம் ஆப்து ஸநைக்கி மன
வைகுண்டதோ அதிகதவாம் பஹுமதிம் கொசித்
ஸ்தானே மதி மித்யாம் அவன்யாம்

———-

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

பாதத்வாத் ஸ்ரீ துளசியா ஆஸ்ரித ஹ்ருத சயநாத் ஸ்ரீ வத்சத பாவாத்
ஆச்சர்ய உபக்ரமத்வாத் ஸூர கண பஜானாத் வைரி நிரசன
கோவிந்தத்வாத் அசேஷ அபிமத -விஷய தகா அபீஷ்ட
சச்சித்தகத்வாத் சார்வாகாரத்வாத் கிருஷ்ணம்

1–பாதத்வாத் ஸ்ரீ துளசியா–அல்லி யந்தண்ணந்துழாய் முடி அப்பனூர் செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே

2-ஆஸ்ரித ஹ்ருத சயநாத்–திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும்-ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான் கண்டீர்

3-ஸ்ரீ வத்சத பாவாத்–திருவமர் மார்பன் திருக் கடித் தானத்தை மறவி யுறைகின்ற மாயப்பிரானே

4-ஆச்சர்ய உபக்ரமத்வாத்–தேசத்தமர் திருக் கடித் தானத்தை வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே

5-ஸூர கண பஜானாத்–கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே

6-வைரி நிரசன–கூத்த வம்மான் கொடியேன் இடர் முற்றவும் மாய்த்த வம்மான் மது சூத வம்மான்

7-கோவிந்தத்வாத்–கொண்மின் இடர்கெட உள்ளத்துக் கோவிந்தன்

8–9-அசேஷ அபிமத -விஷய தகா அபீஷ்ட சச்சித்தகத்வாத் -முற்றும் எம் மாயற்கே–ஆனவிடத்தும் என்நெஞ்சம் திருக் கடித்
தான நகரும் தனதாய்ப் பதியே–-என்றும் தேசத்தமரர் திருக்கடித் தானத்துள் ஆயர்க்கதிபதி அற்புதன் தானே

10-சார்வாகாரத்வாத்–அற்புதன் நாரணன் அரி வாமனன் நிற்பது மேவியிருப்பது என்னெஞ்சகம்

கிருஷ்ணம் -ஆயர்கள் அதிபதி –

——-

எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ
நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லி யந்தண்ணந்துழாய் முடி அப்பனூர்
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1-

———-

திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும்
ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான் கண்டீர்
செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை
உருக்கெட வாளி பொழிந்த வொருவனே–8-6-2-

————–

ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று
உருவு கரந்து உள்ளும் தோறும் தித்திப்பான்
திருவமர் மார்பன் திருக் கடித் தானத்தை
மறவி யுறைகின்ற மாயப்பிரானே–8-6-3-

————–

மாயப்பிரான் என் வல்வினை மாய்ந்தற
நேசத்தினால் நெஞ்ச நாடு குடி கொண்டான்
தேசத்தமர் திருக் கடித் தானத்தை
வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே-8-6-4-

———

கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை
கோயில் கொண்டான் அதனோடும் என்நெஞ்சம்
கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ
வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே–8-6-5-

———

கூத்த வம்மான் கொடியேன் இடர் முற்றவும்
மாய்த்த வம்மான் மது சூத வம்மான் உறை
பூத்த பொழில் தண் திருக் கடித் தானத்தை
ஏத்த நில்லா குறிக் கொண்மின் இடரே–8-6-6-

——–

கொண்மின் இடர்கெட உள்ளத்துக் கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து
நண்ணு திருக் கடித் தான நகரே-8-6-7-

———-

தான நகர்கள் தலைச் சிறந்து எங்கும்
வானிந்நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே
ஆனவிடத்தும் என்நெஞ்சம் திருக் கடித்
தான நகரும் தனதாய்ப் பதியே–8-6-8-

———-

தாயப்பதிகள் தலைச் சிறந்து எங்கும் எங்கும்
மாயத்தினால் மன்னி வீற்று இருந்தான் உறை
தேசத்தமரர் திருக்கடித் தானத்துள்
ஆயர்க்கதிபதி அற்புதன் தானே–8-6-9-

———-

அற்புதன் நாரணன் அரி வாமனன்
நிற்பது மேவியிருப்பது என்னெஞ்சகம்
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்
கற்பகச் சோலைத் திருக் கடித்தானமே-8-6-10-

———-

சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோபன் சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே-8-6-11-

——–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -76-பாசுரம்–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 76-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில் இவர் விடாய் தீர் அடுத்து அணித்தாய் வந்திருந்து பின்பு தம்முடனே கலந்தபடி பேசின
ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
இவருடைய பெரு விடாய் கெடும்படி இவரோடு வந்து சம்ச்லேஷிக்கக் கோலி
அடுத்து அணித்தாக ஸ்ரீ திருக் கடித் தானத்திலே வந்திருந்து
தம் பக்கலிலே அத்ய அபி நிவிஷ்டனாய் இருக்கிறபடியை அவன் காட்டிக் கொடுக்க
அத்தை அனுசந்தித்து ஹ்ருஷ்டர் ஆகிற எல்லியும் காலையில் -அர்த்தத்தை
எல்லி பகல் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————–

எல்லி பகல் நடந்த இந்த விடாய் தீருகைக்கு
மெல்ல வந்து தான் கலக்க வேணும் என -நல்லவர்கள்
மன்னு கடித் தானத்தே மாலிருக்கக் மாறன் கண்டு
இந்நிலையைச் சொன்னான் இருந்து–76-

————————————————–

வியாக்யானம்–
எல்லி பகல் நடந்த இந்த விடாய் தீருகைக்கு மெல்ல வந்து தான் கலக்க வேணும் என –
ராத்ரிந்திவம் அனுவர்த்தித்த-ஆர்த்தி சமிக்கைக்கு
மந்த கதியாய் வந்து அனுபவிக்க வேணும் என்று நினைத்து
முந்துற-பரத்வாஜ ஆஸ்ரமம் கத்வா -என்னுமா போலே –

நல்லவர்கள் மன்னு கடித் தானத்தே மாலிருக்கக் மாறன் கண்டு –
நற்புகழ் வேதியர் நான் மறை நின்று எதிர்-கற்பகச் சோலை திருக் கடித் தானம் -என்றும்
செல்வர்கள் வாளும் திருக் கடித் தானம் -என்றும்
தேசத் தமரர் திருக் கடித்தானம் -என்றும்
அங்குற்றைக்கு அனுகூலர் ஆனவர்கள்-நித்ய வாசம் பண்ணும் ஸ்ரீ திருக் கடித் தானத்திலே
தம்மை விஷயீ கரிக்க ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து இருக்க- அவ்விருப்பைக் கண்ட ஸ்ரீ ஆழ்வார் –

இந்நிலையைச் சொன்னான் இருந்து –
அதாவது –
திருக் கடித் தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் -என்றும்
உள்ளம் தோறும் தித்திப்பான் திருவமர் மார்வன்-திருக் கடித்தானைத்தை மருவி உறைகின்ற மாயப் பிரான் -என்றும்
தேசத் தமரர் வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே -என்றும்
நேசத்தினால் நெஞ்சு நாடு குடி கொண்டான் -என்றும்
கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை-கோயில் கொண்டான் அதனோடு என் நெஞ்சகம் -என்றும்
என் நெஞ்சும் திருக் கடித் தான நகரும் தனதாயப்பதியே -என்றும்
அற்புதன் நாராயணன் அரி வாமனன் நிற்பது-கற்பகச் சோலை திருக் கடித் தானம்-மேவி இருப்பது என் நெஞ்சகம் -என்றும்
இப்படி
இங்குற்றை இருப்பு-தம்மை விடாய் கெட விஷயீ கரிக்கைக்காக என்றும்
இஸ் ஸ்வபாவத்தை பொருந்தி இருந்து-அருளிச் செய்தார் -என்கை
அவன் வரவாற்றாலே – மாயக் கூத்தனில் விடாய் தீர்ந்து- பொருந்தி இருந்து அருளிச் செய்தார் -என்கை

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading